New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தலித்துக்கள் 74 பேர் வெற்றி?


Guru

Status: Offline
Posts: 25350
Date:
தலித்துக்கள் 74 பேர் வெற்றி?
Permalink  
 


ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.”
என்று விஜயின் இந்த தேர்தல் வெற்றியை மையமாக வைத்து ஒரு பச்சை பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார் நீலம் பண்பாட்டு மையம் தலைவர் திரு ரஞ்சித்…..
அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல ஊடகங்களில் தலித்துக்கள் 74 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் 25 பேர் வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் அனைவருமே பொதுத்தொகுதியில் நின்று TVKவில் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று அடிப்படை ஆதாரமே இல்லாமல் ஒரு அவதூறு பரப்பரையை மேற்கொள்கிறார்கள்… தாவெக்காவில் வெற்றி பெற்ற தலித்துக்களில் 23 பேர் தனித் தொகுதி தான் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஒரே ஒருவர் மட்டும் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார்.. அந்த ஒருவரும் அடிப்படையில் அவருடைய அப்பா தலித் சமூகத்தைச் சார்ந்தவர் அம்மா முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர் அவருடைய மனைவி நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்…
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார்.
தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.
கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும்,
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார்.
அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்.. (குறிப்பாக ஆதரிச்சனா வில்லிவாக்கத்தில் நின்றதற்கு காரணம் அங்கு நாயுடு ரெட்டி ஓட்டு அதிகம்)
திருநெல்வேலி இந்து மறவர் நாங்குநேரி இந்து நாடார்
ராதாபுரம் இந்து கிறிஸ்தவர்
உசிலம்பட்டி பிரமலைக்கள்ளர் திருப்பரங்குன்றம் முக்குலத்தோர்
மதுரை வடக்கு முக்குலத்தோர்
மதுரை கிழக்கு முக்குலத்தோர்
மதுரை மேற்கு முக்குலத்தோர்
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலக தவமாக செயல்படுகிறவர் ரஞ்சித்…கரூரில் கொல்லப்பட்ட 41 பேரில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய மரணம் குறித்து வாயே திறக்காத இந்த ரஞ்சித் ஏன் கள்ள மவுனம் காத்தார்… விஜய்யின் உடைய மெத்தனப்போக்கு மீட்டுமித்தன்மை அநியாயமாக பல தலித்துகளை கரூரில் கொலை செய்திருக்கிறது அது குறித்து வாய் திறக்காத நீங்கள் இப்போது வந்து இது தலித்துகள் ஆட்சி என்று வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது.. அண்ணன் திருமாவை காலி செய்வதற்காக இந்த பகுஜன் பௌத்த கும்பலின் சதி வேலையை நிறுத்துங்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் சரி இப்போது விஜய் காலகட்டத்திலும் சரி தலித் மக்களின் வாக்குகளை இதுபோன்று போலி பிம்பத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த விதமான மேம்பாடும் அடைய விடாமல் பாதுகாக்கும் ஒரு குழு தலித் மக்களுக்குள்ளேயே இருந்து வருகிறது.. இது ஒரு வேதனையான உண்மை..
திமுகவை வீழ்த்தி வெற்றியடைவதற்காக இதே பொய் பரப்புரையை கரூர் சம்பவத்திலிருந்து தொடங்கி பல விடயங்களில் இந்த குழு பரப்பியது இப்போது வெற்றி பெற்றதற்கு பிறகும் இந்த புகை பரப்புரையை மேற்கொள்கிறது நாளை இந்த சமூகத்தில் ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு உரிய பொறுப்பை எடுக்காமல் அதற்கும் ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டி அமைப்பார்கள்…
1.பொன்னேரி - திரு.எம்.எஸ்.ரவி(பறையர்)
2.பூந்தமல்லி - திரு.பிரகாசம் (பறையர்)
3.திரு.வி.க.நகர் திருமதி.எம்.ஆர்.பல்லவி (பறையர்)
4.எழும்பூர் திரு.ராஜ்மோகன் (பறையர்)
5.ஸ்ரீபெரும்புதூர்-திரு.தென்னரசு (பறையர்)
6.குடியாத்தம் திருமதி.சிந்து -(பறையர்)
7.கே.வி.குப்பம் திரு.தென்றல்குமர் (பறையர்)
8.அரக்கோணம் -திரு.காந்திராஜ் (பறையர்)
9.கள்ளக்குறிச்சி -திரு.அருள்விக்னேஷ் (பறையர்)
10.ஊத்தங்கரை -திரு.இளையராஜா (பறையர்)
11.ராசிபுரம் - திரு.லோகேஷ் (அருந்ததியர்)
12.பவானிசாகர் - திருமதி.தமிழ்ச்செல்வி (தே.கு.வேளாளர்)
13.அவினாசி -திருமதி.கமலி (பறையர்)
14.துறையூர் திரு.ரவிசங்கர் (தே.கு.வேளாளர்)
15.பெரம்பலூர் - திரு.சிவக்குமார் (பறையர்)
16.கிருஷ்ணராயபுரம் -திருமதி.சத்யா (தே.கு.வேளாளர்)
17.கந்தர்வக்கோட்டை -திரு.சுப்பிரமணியன் (பறையர்)
18.பெரியகுளம் - திரு.சபரி ஐங்கரன் (பறையர்)
19.சோழவந்தான் -திரு.கருப்பையா (பறையர்)
20.மானாமதுரை -திரு.இளங்கோ (தே.கு.வேளாளர்)
21.திருவில்லிபுத்தூர் - திரு.கார்த்திக் (தே.கு.வேளாளர்)
22.ஓட்டப்பிடாரம் -TVK திரு.மதன்ராஜா (தே.கு.வேளாளர்)
23.நிலக்கோட்டை -TVK திரு.அய்யனார் (தே.கு.வேளாளர்)
பொதுத்தொகுதிகளில் வெற்றி பெற்ற பட்டியலின வேட்பாளர்கள் :
1.மேலூர் - திமுக கூட்டணி
திரு.விஸ்வநாதன் (பறையர்)
2.விருதுநகர் -TVK
திரு.செல்வம் (அப்பா- பறையர்)
அம்மா தேவர்.. மனைவி நாடார்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard