New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு


Guru

Status: Offline
Posts: 24819
Date:
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு
Permalink  
 


திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு: லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு விபரம் இதோ! 

Latest Tamil News
 
 
 
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-+

நமது சிறப்பு நிருபர் ADDED : பிப் 05, 2025 

சென்னை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான பிரச்சனையை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னதாகவே, லண்டன் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

 

முதலில் இந்த வழக்கு மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம், தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோவில் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் தரப்பில் தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழமை நீதிமன்றம் 1923ம் ஆண்டு ஆகஸ்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசு தரப்பும், கோவில் தரப்பும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் கோவில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சரியானது என்பது தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு. திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பிரிவி கவுன்சில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைய பல்வேறு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.

கோவில் தேரோட்டம் நடக்கும் வீதி கிரி வீதி என்று அழைக்கப்படுவதை குறிப்பிட்டும், பல்வேறு ஆவணங்களில் இதை மலை பிரகாரம் என்று குறிப்பிட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கிரிவீதியில் சிறிய கோவில்கள் பலவும் அமைந்துள்ளன. பழங்கால மண்டபங்கள் அல்லது பக்தர்களுக்கான ஓய்வு விடுதிகள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் பழமை வாய்ந்தவை. 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.

இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையில், மலை முழுவதையும் சிவலிங்கமாக பக்தர்கள் வழிபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாடு மதுரையில் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பழைய ஆவணங்கள் பலவற்றில் இந்த மலையை சுவாமிமலை என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24819
Date:
Permalink  
 

கோவில் நிர்வாகத்தினர் நூறாண்டுகளுக்கு மேலாக இந்த மலையை சொந்தம் கொண்டாடும் வகையில், பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேரோட்டம் நடக்கும் கிரி வீதியை அகலப்படுத்த ஒரு வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்கள் 1835ம் ஆண்டு முதல் உள்ளன. 1861ம் ஆண்டு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கான புகார் ஒன்று மதுரை மாவட்ட கலெக்டர் இடம் அளிக்கப்பட்டது.

அப்போது, ' மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் மரங்கள் தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதையும், அதை அவ்வப்போது பராமரித்து சரி செய்வதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பல இடங்களில் சிறு பாலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்தின் உரிமை மற்றும் பொறுப்பில் மலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்று கருதியே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று பிரிவி கவுன்சில் சுட்டிக்காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தான், மதுரை கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள லண்டன் பிரிவி கவுன்சில், கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கோவில் அமைந்துள்ள மலை, எல்லா காலத்திலும் கோவில் நிர்வாகத்தினர் வசமே இருந்துள்ளது என்பதும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிவி கவுன்சில் தெரிவித்துள்ளது. புறம்போக்கு நிலம் என்பது பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் இந்த வழக்கை பொறுத்த வரை, குறிப்பிட்ட அந்த நிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

பிரிவி கவுன்சில் என்பது என்ன?

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் லண்டனில் உருவாக்கப்பட்டது தான் பிரிவி கவுன்சில். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில் தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாக இருந்தது.

 

அதனால் இந்திய நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டன. அப்படித்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24819
Date:
RE: திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு
Permalink  
 


 

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?

1931இல் வெளியான லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு கூறியது என்ன

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் திருப்பரங்குன்றம் கோவிலும், மலையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்

  • எழுதியவர்,சிராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருப்பரங்குன்றம், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம்பெறும் பகுதி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையின் ஒருபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கோவில் மற்றும் தர்கா தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறுவது இது முதல்முறை அல்ல. நூறாண்டுகளுக்கு மேலாக இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துள்ளன, தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, 1931ஆம் ஆண்டில் லண்டனின் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்புதான்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு, லண்டனின் பிரிவி கவுன்சிலில் நடைபெற்றது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது, லண்டனின் பிரிவி கவுன்சிலே இந்தியாவின் உச்சநீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதப்பட்டது.

 

லண்டனின் பிரிவி கவுன்சில்

இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம் 1861-இன் மூலம் (The Indian High Courts Act) கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் ஆகிய இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இன்றைய நவீன இந்திய உயர்நீதிமன்றங்களுக்கு இவையே முன்னோடி.

இந்த மூன்று உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து, லண்டனின் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.

பிறகு, 1935இல் இந்திய அரசுச் சட்டம் (The Government of India Act 1935) மூலம் இந்திய ஃபெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இது மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாண்டது, ஆனால் பிரிவி கவுன்சிலுக்கு வழக்குகளை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் அதிகார வரம்பை ஒழிக்கும் சட்டம் (Abolition of Privy Council Jurisdiction Act 1949), இந்தியாவின் உச்சநீதிமன்றமாக பிரிவி கவுன்சிலின் பங்கை முடிவுக்குக் கொண்டு வந்தது.

கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், (தற்போதைய) இந்திய உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. இருப்பினும், பிரிவி கவுன்சில் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றும் இந்திய சட்ட வழக்குகளில் குறிப்பிடப்படுகின்றன.

அவ்வாறு குறிப்பிடப்படுவதில் முக்கியமானது, 1930இல் பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட 'திருப்பரங்குன்றம் முதலிய, மதுரை தேவஸ்தானம் (மேல்முறையீட்டாளர்)- அலிகான் சாஹிப் மற்றும் பிறர் (பிரதிவாதிகள்)' இடையிலான வழக்கு (P.C. Appeal No. 5/1930).

இது மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஒரு மேல்முறையீட்டு வழக்கு.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?

கல்கத்தா உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம் மூலம் நிறுவப்பட்ட 3 உயர்நீதிமன்றங்களில் கல்கத்தா உயர் நீதிமன்றமும் ஒன்று

கடந்த 1920இல் மதுரையின் விசாரணை நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்குதான் இதன் தொடக்கப்புள்ளி.

சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட சில நிலங்கள் மற்றும் தர்கா இருந்த இடம் தவிர, முழு மலையையும் கோவில் சொத்து என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிவாதிகள், தர்கா அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் பிரதான மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தமானது என வலியுறுத்தினர்.

மற்றொரு பிரதிவாதியான பிரிட்டிஷ் அரசாங்கம், மலையின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் அரசாங்க சொத்து (அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள்) என்று கூறியது.

இந்த வழக்கில், மதுரை விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி 1923 ஆகஸ்ட் 23 அன்று தீர்ப்பளித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கைக்கு எதிராகவும், தேவஸ்தானத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

"மதுரை நீதிமன்றத் தீர்ப்பில் அரசுக்குப் பெரிய அதிருப்தி இல்லை. அதற்குக் காரணம், குன்றின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராதவையாக இருந்திருக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அரசு செயலரோ, தேவஸ்தான நிர்வாகமோ மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்து மேல்முறையீடு செய்தனர்" என பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் (12.5.1931) இந்த வழக்கு தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சார்பாக, மேல்முறையீடு வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1926ஆம் ஆண்டு தொடரப்பட்டது.

அரசின் தலையீடு இருக்க வேண்டுமென்று கருதிய மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசை குறுக்கு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தாமதமாக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதே நாளில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக பிரிவி கவுன்சிலே குறிப்பிட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகள், "மலையின் உரிமை அரசாங்கத்திற்குச் சொந்தமானது எனக் கண்டறிந்ததாக" பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "மெட்ராஸ் உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததோடு, மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது" என்றும் பிரிவி கவுன்சில் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24819
Date:
Permalink  
 

பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு

சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா

பட மூலாதாரம்,Handout

படக்குறிப்பு,மலையின் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்துதான், 1930இல் லண்டனின் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது மதுரை தேவஸ்தானம்.

அந்த வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மதுரை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன் மூலம், நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்பதும், தேவஸ்தானம் உரிமை கோரியவை அனைத்தும் (தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து முழு திருப்பரங்குன்றம் மலை, கிரிவீதி, சன்னதி வீதி) கோவிலுக்கே சொந்தமானது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

லார்ட் அட்கின்சன், லார்ட் தாங்கர்டன், லார்ட் மேக்மில்லன், சர் ஜார்ஜ் லோண்டஸ், சர் தின்ஷா முல்லா ஆகியோர் அடங்கிய குழு இந்தத் தீர்ப்பை 1931 மே மாதம் 12ஆம் தேதி வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் திருப்பரங்குன்றம் கோவிலும், மலையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தக் கோவில்கள் பழமையானவை என்பது தெளிவாகத் தெரிகிறது. அநேகமாக அவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகவோ அல்லது அதற்கு முற்பட்டவையாகவோ இருக்கலாம்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "இந்திய தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலின் அறிக்கையில், இந்த முழு மலையும் இந்து சமூகத்தினரால் ஒரு 'லிங்கமாக' வணங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டு வடிவத்தின் தாயகம் மதுரை என்று நம்புவதற்கு சில காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. கோவில் ஆவணங்களிலும், ஆரம்பக்கால அரசாங்க ஆவணங்கள் சிலவற்றிலும் இந்த மலை சுவாமி மலை அல்லது கடவுளின் மலை என்று குறிப்பிடப்படுகிறது" என்றும் அந்தத் தீர்ப்பு விவரிக்கிறது.

மேலும், கோவில் நிர்வாகிகள் மலையில் பல பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர், நடைபாதைகளை அகலப்படுத்தினர், மரங்களை நட்டனர் மற்றும் மத நோக்கங்களுக்காகவே நிலத்தைப் பயன்படுத்தினர் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக தரிசு அல்லது பொறம்போக்கு நிலங்கள் அரசாங்கத்திற்கே சொந்தமாக இருந்தாலும், நீண்ட காலமாக மலை மற்றும் நிலத்தின் மீது கோவில் தேவஸ்தானம் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததால், இந்த அனுமானம் பொருந்தாது என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பு கூறுகிறது.

ஹஃப்தா தேவஸ்தான நிலங்கள்

திருப்பரங்குன்றம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஏழு பகுதிகளை ஹஃப்தா தேவஸ்தான நிலங்கள் என தனது நூலில் குறிப்பிடுகிறார் ஜே.ஹச் நெல்சன்

மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு (The Madura Country- A manual) எனும் நூல், லண்டனின் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் 4 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஜே.ஹச் நெல்சன் என்பவரால் எழுதப்பட்டு, 1868இல் வெளியான நூல் இது.

அதில், "மதுரைக்கு கிழக்கே 4 மைல்கள் தூரத்தில், சுமார் 500 அடி உயரம் கொண்ட புனித ஸ்கந்த மலை (கந்தர் மலை) உள்ளது. இந்த மலை அதன் புனித நீருக்காகவும், மலையில் உள்ள ஒரு முஸ்லிம் துறவியின் சமாதிக்காகவும் அறியப்படுகிறது.

அதைச் சுற்றி ஒரு சிறிய நினைவு ஆலயம் கட்டப்பட்டுள்ளது (தர்கா). ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அங்கு செல்கிறார்கள்" என்று எழுதியுள்ளார் ஜே.ஹச் நெல்சன்.

இங்கு ஸ்கந்த மலை அல்லது கந்தர் மலை என திருப்பரங்குன்றம் மலையைக் குறிப்பிடும் அவர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஏழு பகுதிகளை ஹஃப்தா (Hafta) தேவஸ்தான நிலங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு

பட மூலாதாரம்,Gyan Publishing House

படக்குறிப்பு,மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு எனும் நூல், லண்டனின் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் 4 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது

இந்த ஏழு பகுதிகள் தேவஸ்தானங்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான காரணம், அங்கு நடைபெறும் மத வழிபாடுகள், சடங்குகள் அப்படியே சிறப்பான முறையில் தொடர வேண்டும் என்பதே என்று ஜே.ஹச் நெல்சன் தனது நூலில் கூறுகிறார்.

  • மீனாக்ஷி (மதுரை)
  • கள்ளழகர்
  • கூடல் அழகர்
  • திருப்பரங்குன்றம்
  • தென்கரை
  • திருவேடகம்
  • குருவித்துறை

இவையே அந்த ஏழு ஹஃப்தா தேவஸ்தான நிலங்கள் என மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்

படக்குறிப்பு,பிரான்மலை, கீழவளவு, விளாப்பாக்கம் போன்ற பல பகுதிகளில் உள்ள மலைகளில் கோவிலும், தர்காக்களும் இணைந்தே இருப்பதாகக் கூறுகிறார் காளிங்கன்

"திருப்பரங்குன்றம் மலை, கோவில்கள் மற்றும் சிக்கந்தர் தர்கா குறித்து சில வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை நமக்குக் கூறுவது ஒன்றுதான், எந்தச் சடங்குகளும் அங்கு புதிதாக மேற்கொள்ளப்படவில்லை. அவை காலம் காலமாக நடப்பவையே" என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்.

பிரான்மலை, கீழவளவு, விளாப்பாக்கம் போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள மலைகளில் கோவிலும், தர்காக்களும் இணைந்தே இருப்பதைக் குறிப்பிடும் காளிங்கன், "தமிழ்நாட்டின் சடங்குகளைத் தன்னுள் அரவணைத்தே இங்கிருக்கும் பல தர்காக்கள் செயல்படுகின்றன" என்று கூறுகிறார்.

"நேர்த்திக் கடனுக்காக ஆடு, கோழிகளைப் பலியிடுவது, மொட்டை அடிப்பது, சமபந்தி விருந்து நடத்துவது, உரூஸ் எனும் கந்தூரி அல்லது சந்தனக்கூடு திருவிழா, பால்குடங்கள் எடுப்பது எனப் பல உதாரணங்களை இதற்குக் கூறலாம்" என்கிறார் அவர்.

"திருப்பரங்குன்றம் மலையில், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இரு சமூகங்களின் சடங்குகளும் அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளன. அவற்றின் நோக்கம் பிற மதங்களின் புனிதத்தைக் களங்கப்படுத்துவது அல்ல. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளன" என்று விவரித்தார் பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்



__________________


Guru

Status: Offline
Posts: 24819
Date:
Permalink  
 

How Privy Council settled the claim of Tirupparankundram temple to its land

At the trial court, the temple claimed the whole hill, except “certain cultivated and assessed lands and the site of the mosque”. In 1923, the Subordinate Judge of Madura decided in favour of the temple, “except in respect of the Nellitope, and the actual site of the mosque with its flagstaff and flight of steps leading up to it”. Privy Council upheld the ruling

Updated - February 05, 2025  D. Suresh Kumar

Tension has simmered at the Tirupparankundram temple, the hill abode of Lord Muruga in Madurai, amid claims of consumption of non-vegetarian food at the nearby Sulthan Sikkandhar Avulia Dargah.

Tension has simmered at the Tirupparankundram temple, the hill abode of Lord Muruga in Madurai, amid claims of consumption of non-vegetarian food at the nearby Sulthan Sikkandhar Avulia Dargah. 

Over the past few weeks, communal and political tension has simmered at the Tirupparankundram temple, the hill abode of Lord Muruga in Madurai, in whose vicinity lies the Sulthan Sikkandhar Avulia Dargah. Amid claims of consumption of non-vegetarian food in the hills, there is also a row over the ownership of the land on which the mosque is situated. Against this backdrop, it would be interesting to see how the Privy Council had in 1931 settled the temple’s claim to the ownership of the barren hill.

 Claim to Nellitope

Originally, the issue was dealt with by the trial court (subordinate judge), where the temple had claimed the whole hill, “with the exception of certain cultivated and assessed lands and the site of the mosque”, as temple property. The Mahomedan (Muslims) defendants asserted their ownership of the particular eminence upon which the mosque stands, and of a portion of the main hill known as Nellitope. The Secretary of the State claimed to be the owner of all the unoccupied portions of the hill as “Government poramboke or waste appertaining to the village of Tirupparankundram”.

In August 1923, the Subordinate Judge of Madura decided in favour of the temple, “except in respect of the Nellitope, and the actual site of the mosque with its flagstaff and flight of steps leading up to it”, which he held to be the property of the Mahomedan defendants.

Appeal in Madras High Court

While the government and the temple accepted the verdict, the Mahomedans appealed against it in the Madras High Court. In 1926, the High Court, after a single day’s hearing, while agreeing that both Hindus and Mohomedans had established certain rights to the hill, did not venture to decide what these rights were. The court, however, held that the ownership of the hill belonged to the government and dismissed the suit.

Challenging this, the temple filed an appeal before the Privy Council. In an elaborate order, the Privy Council traced the history of the temple and reference to its presence in various British-era documents. Citing the temple car procession along the ‘ghiri veedhi’ of the hill, the judges noted that the same was referred to as the ‘malaiprakaram’ (the area around the hill) of the temple in numerous documents dating back to 1844. The ‘ghiri veedhi’ housed smaller shrines and a number of old ‘mandapams’ or rest houses along with tanks and bathing places for pilgrims.

“The temples are evidently of considerable antiquity, probably dating back to the 13th century AD and possibly earlier... It is stated in a report of the Director General of Archaeology in India, which is embodied in an order of the Local Government, that the whole rock is worshipped by the Hindu community as a linga, and there seems to be some reason to believe that Madura is the home of this peculiar form of worship (Nelson’s Manual). The hill itself is frequently referred to in temple documents and also in some of the early Government records as the Swamimalai or God’s Hill,” the Privy Council noted.

Acts of ownership

The judges said that there was clear evidence for the temple authorities to have exercised necessary acts of ownership for the greater part of a century. “They have regularly repaired, and in some cases widened, the ‘ghiri veedhi’ of the passages of the temple car, removing obstructions and taking stone as required from the hill. In one case they bought and took in a house site for this purpose. The record of these works goes back to 1835 and the sums expended were at times considerable,” the Privy Council pointed out. The judges also noted that in 1861, when a claim was made to the sale proceeds of a dead tree in the hills, a complaint was made to the Collector, and the taluk tahsildar was ordered not to interfere with the “avenue of trees surrounding the Tirupparankundram hill” as they belonged to the temple.

The temple authorities had also from time to time carried out works for improving water supply to the bathing tanks, conduits, and culverts, and erected other permanent structures. A number of bridges and a mandapam were built. The Privy Council pointed out that the subordinate judge had, in fact, elaborately dealt with the evidence and concluded that these were “acts of ownership”, openly exercised by the temple authorities.

‘No interference from invaders’

Extensively tracing the temple’s fortunes in the 17th and 18th Centuries, the judges said there was no trace in the historical works to which they have been referred of any interference by the Mahomedan invaders with the sacred hill or the immediate surroundings of the temple. “They and the other predatory forces which established themselves from time to time in Madura, no doubt seized the revenue-producing lands which formed the joint endowment of all the temples, and these must have included the cultivated and assessed lands within the ‘ghiri veedhi’ but there seems to be no suggestion that the Tirupparankundram Temple or any of its adjuncts passed at any time into secular hands. It was probably during some interval of Mahomedan domination that the mosque and some Mahomedan houses were built (though the Mohamedans themselves ascribe the mosque to a much earlier period), but this was an infliction which the Hindu occupants of the hill might well have been forced to put up with; it is, their Lordships think, no evidence of their expropriation from the remainder,” the Privy Council said.

Undisturbed possession

The judges held that evidence showed that the temple was left after 1801 in undisturbed possession “of all that it now claims”. “Their Lordships do not doubt that there is a general presumption that waste lands are the property of the Crown, but they think that it is not applicable to the facts of the present case where the alleged waste is, at all events physically, within a temple enclosure. They see no reason to disagree with the Subordinate Judge’s discussion of the authorities on this question. Nor do they think that any assistance can be derived, under the circumstances of this case, from the provisions of the Madras Land Encroachment Act 3 of 1905, on which the respondent has relied,” the Privy Council said.

Consequently, the Privy Council held that the conclusion of the Subordinate Judge was right and “no ground has been shown for disturbing his decree”.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard