டிஆர் பாலு முன்னாள் மத்திய அமைச்சர் பற்றிய கருப்பசாமி சண்முகத்தின் முகநூல் பதிவிலிருந்து
#டிஆர்பாலு_திருடன்
இன்றைய நம் வேட்பாளரைப் பற்றி எழுத எவ்வளவோ இருப்பினும், சுருக்கமாக, ஆள் எப்படிப் பட்டவர் என்று ஒரிரு சம்பவங்களை மட்டுமெ கூறிச்செல்லும் வகையில் தான் இங்கு அளவு இருக்கிறது. எழுதும் எனக்கே தலை சுத்துதே... நீங்களே படிச்சுட்டு சொல்லுங்க.
இவருக்கு வயசு அதிகமில்லை மக்களே, அதிகாரபூர்வமாக வெறும் 77 தான். நம்ப முடியுதா? நம்பித்தான் ஆகனும். இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். நாம 77 வயசுல என்னஎன்னவெல்லாம் செய்திருப்போம் என்று யோசிக்கும் முன்பு, பாலு தாத்தா என்ன செய்தார் எனப் பார்ப்போம்.
2009 ஆம் வருடம் தாத்தாவின் சொத்து மதிப்பு அதிகாரபூர்வமாக ஏழு கோடியே எழுபது இலட்சம்.
கிங்ஸ் எஸ்ட்டேட்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன்,கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன், மீனம் ஃபிஷரீஸ் என ஏராளமான அதிகாரபூர்வத் தொழில்கள்.ரேனுகா தேவி, பொற்கொடி என்று இரண்டு மனைவிகள். இருவருக்கும் சேர்த்து வெறும் இரண்டு கிலோ தங்க நகைகள் மட்டுமே.
விஷயத்துக்கு வருவோம்.
திமுகவின் மிக முக்கியப் புள்ளியாகவும், முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அடித்த கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
மத்தியில் இருந்த திமுக அமைச்சர்களாகட்டும், மாநிலத்தில் இருந்த அமைச்சர்களாகட்டும், ஊழல் மற்றும் நில அபகரிப்புப் புகாரில் ஒருவர் பின் ஒருவராக பதவியை இழந்து சட்டத்தின் பிடிக்கு அஞ்சி வாழ்ந்து வரும் நிலையில், எவ்வித புகாருக்கும் ஆளாகாமல், டி.ஆர்.பாலு மட்டும் தப்பியே வந்தார்.
தனது சொந்த நிறுவனமாக கிங் கெமிக்கல்சுக்கு எரிவாயு ஒதுக்கீடு செய்ததாக எழுந்த புகாரைத் தவிர, வேறு எந்தப் புகாரிலும் சிக்கவில்லை பாலு. ஆனால், யுபிஏ 2 அரசாங்கத்தின் அமைச்சரவை அமைக்கப்படும் போது, டி.ஆர்.பாலுவை மட்டும் வேண்டவே வேண்டாம் என்றார் மன்மோகன்.
கருணாநிதிக்கே பாலு மீண்டும் மந்திரியாவதில் விருப்பம் இல்லை. இதற்கு முக்கிய காரணம், டி.ஆர்.பாலு, எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார். அந்த அளவுக்கு “தாராள” மனது படைத்தவர். திமுகவிற்கு தேர்தல் செலவுக்குக் கூட பணம் கொடுக்க மாட்டார்.
இவர் இழவு வீட்டில் திருடிய கதை தான் இன்றைய நமது அறிமுகம்.
கொஞ்சம் நிதானமா படிங்க,
லிபியாவில் கலவரம் மூண்ட போது, அங்கிருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்த இந்தியர்களை ஒரு இடத்துக்கு வரவழைத்து, அங்கிருந்து அவர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் வரவழைக்க திட்டமிடப் பட்டது.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் 22 பிப்ரவரி 2011 முதல் 3 மார்ச் 2011 வரை, 13 நாட்களுக்கு கப்பல்களை வாடகைக்கு எடுத்தது. அவ்வாறு எடுக்கப் பட்ட கப்பல்களுள் ஒன்று, தற்போது தூத்துக்குடி மற்றும் கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக ப்ளெமிங்கோ என்ற நிறுவனம் பயன்படுத்தும் ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல். இந்தக் கப்பலை லிபிய கலவரங்களின் போது, மத்திய அரசு ஒரு நாளைக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் கொடுத்து வாடகைக்கு எடுத்தது.
இந்த ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்த ஐஎஸ்பி என்ற ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த ஐஎஸ்பி நிறுவனத்திடமிருந்து ப்ளெமிங்கோ நிறுவனம் இந்தக் கப்பலை வாடகைக்கு அமர்த்தியே இலங்கைக்கு சவாரி நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ப்ளெமிங்கோ நிறுவனம் ஐஎஸ்பிக்கு கொடுக்கும் வாடகை, ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.
ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுக்கும் 18 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது, இந்திய அரசு ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுத்த 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது ?
சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் வெளி வந்திருந்த வேளையில், நம் மாண்புமிகு இந்திய அரசு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் விதமாக வெட்கம் கெட்ட வகையில் இலங்கைக்கும் தமிழ்கத்துக்கும் ஒரு கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தது ஞ்யாபகம் வருகிறதா? அந்தக் கப்பல் தான் இந்தக் கப்பல். !!!!!!
இவ்வாறு தொடங்கப் பட்ட பயணிகள் கப்பல், சற்றும் முன் அனுபவம் இல்லாத ப்ளெமிங்கோ ட்யூட்டி ப்ரீ ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்டுள்ளது.(நல்லா படிங்க, டியூட்டி ப்ரீ)
இந்த ப்ளெமிங்கோ நிறுவனமே, டிஆர்.பாலுவின் பினாமி நிறுவனம் என்பதுதான் சிறப்பே!!!
ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான தொழில், விமான நிலையங்கள் மற்றும், துறைமுகங்களில் ட்யூட்டி ப்ரீ கடைகளை நடத்துவது.
டி.ஆர்.பாலு தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பிறகுதான், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கிறது. 2006ல், விசாகபட்டினம், ஹல்தியா, கோவா மும்பை என தனது தளத்தை விரிக்கிறது ப்ளெமிங்கோ. இன்று இந்தியாவின் 12 விமான நிலையங்களிலும், 7 துறைமுகங்களிலும் ப்ளெமிங்கோவுக்கு 45 கிளைகள் இருக்கின்றன. ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான இறக்குமதிகள் எல்லாமே, வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின மூலமாக நடக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்றிருக்கும் பணப்பறிமாற்றம் பல கோடிகளை தாண்டுகிறது.
இந்த வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் யார் தெரியுமா? கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி!!!! (எப்பூடீ?)
பெரிய காமடி என்ன தெரியுமா? ப்ளெமிங்கோவின் இயக்குநர்களில் ஒருவரான விரேன் அஹுஜா, பெர்மாகோ எனர்ஜி, ப்ளெமிங்கோ ஜுவல்லரி, ப்ளெமிங்கோ கோவா ரீட்டெயில், டவுன் ட்டவுன் ரீட்டெய்ல, பிடிசி பெர்மாகோ எனர்ஜி, அவினாஷ் போஸ்லே பவர் லிமிட்டெட், ஓலியன்டர் பார்ம்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். இது தவிரவும், முக்கிய தொழில்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷேர்களை வைத்துள்ளார்.
இத்தனை பெரிய ‘தொழில் அதிபர்’ நடத்தும் நிறுவனமான ப்ளெமிங்கோ நிறுவனம், கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு கஸ்டம்ஸில் சிக்கியது சுவையான கதை. 2006ல் கஸ்டம்ஸ் துறையால், 34 பாட்டில்கள் விஸ்கியும், 350 பாக்ஸ் மார்ல்பரோ சிகரெட்டும் கடத்தியதாக கஸ்டம்ஸ் துறையால் தண்டிக்கப் பட்டிருக்கிறது ப்ளெமிங்கோ.
இதற்க்குத்தான் இத்தனை பெரிய ஆர்டர்கள்.
கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து ஆணை வழங்குவதற்கான டெண்டர் விடும் போது, ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு ஆணை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு புதிய விதி சேர்க்கப் பட்டது. இந்த டெண்டரில், கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து நடத்த விரும்பும் நிறுவனங்கள், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதில் முன் அனுபவம் இருத்தல் விரும்பத் தக்கது என்று ஒரு விதி சேர்க்கப் பட்டுள்ளது. பயணிகள் கப்பலை இயக்குவதற்கும், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று நண்பர்கள் யாரேனும் சொல்லிக் கொடுங்களேன்?
இதைத்தவிர இன்னும் சில முக்கிய விஷயங்கள் பாலுதாத்தா வைப் பற்றி எழுத வேண்டி இருப்பதாலும் , மார்க் நமக்கு இவ்வளவு இடம் தான் கொடுத்திருப்பதாலும், இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம்.மக்களுக்குத் தெரியாத உண்மைகளைச் சொல்ல வேண்டும் எனபதே நம் நோக்கம். மறைமுக அஜெண்டா எதாவது இருக்கிறதா என்று கேட்பீர்களேயானால், ஆம் இருக்கிறது.திமுகவும் காங்கிரஸும் ஒன்றுமில்லாமல் போகவேண்டும். இவருடைய சொத்து மதிப்பு ரூ50000| கோடிக்கு மேலாம்.
தஞ்சை மண்டல அரசு ரூ2000 கோடிக்கான சக்கரை ஆலையை 100 கோடியென வாங்கி டிஆர் பாலு மற்றும் கனிமொழி மதுஆலையாக பங்கு போட்டனராம்