பிரும்மா உலகம் தோன்றத் தொடங்கும்போது பிரும்மா முதலில் தோன்றினர் என்பதும் , அவர் தோன்றிய இடம் திருமாலின் கொப்பூழிற் றோன்றிய தாமரைப் பொகுட்டு என்பதும் ,அவர்க்கு முகம் நான்கு என்பதும் , அவரது வாஹனம் அன்னம் என்பதும் பின்னருள்ள அடிகள் கூறுகின்றன :
அவர் கைலாயத்தில் உமாதேவியோடு உல்லாஸமாக இருக்கும்போது , அவரைத் துன்புறுத்த எண்ணி , இராவணன் அம்மலையைத் தூக்க, அப்போது அவர் கால்விரலால் அதனை அழுத்த , அவன் துன்புற்றுக் கதறினன் என்பதை ,
இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன் உமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக ஐயிரு தலையி னரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன் போல . ( 38 ) என்ற கலித்தொகையடிகள் கூறுகின்றன .
இக்கருத்தினையே உத்தரராமாயணத்திலுள்ள பின்வருஞ் செய்யுட்கள் கூறும் :
தலே சிறந்ததோ எனத் தோன்றுகின்றது . இக்காரணம்பற்றியே திருவையாற்றில் ஐயாறப்பன் கோயிலில் முருகன் வில்லோடு இருத்தலைக் காண்க .
பின்வருமாறு அவரது பிறப்பைப்பற்றிப் பரிபாடல் கூறும் : - ஒருபோது சிவபிரானும் உமாதேவியும் உல்லாஸமாய் இருந்தனர் . அப்போது அவர்க்கு ஆண்மகன் பிறப்பின், அவன் உலகிற் சிறந்தானாக விளங்குவான் என்றும் அதனாற் றனக்குத் தீங்கு நேரிடும் என இந்திரன் நினைத்தான் . உடனே தேவர்களுடன் சிவபிரானிடஞ் சென்று தனது விருப்பத்தை அறிவித்தனன் . அவர் அதற்கு உடன்பட்டனர் . ஆயினும் அவரது ரேதஸ் சிறிது கீழே விழ , அப்போது அங்கே வந்த அக்னி அதனைக் கொண்டனன் . அதனை ஹவிஸ்ஸாகக் கொண்டு ஏழு ருஷிகளும் யாகம் செய்தனர் . எஞ்சிய ஹவிஸ்ஸை அருந் ததியைத் தவிர்த்து ஆறு ருஷிபத்னிகளும் உண்டனர் . ஒவ்வொருவர்க்கும் ஒரு குழந்தை பிறந்தது . அவற்றைக் கங்கைக் கரையில் சரவணத்தில் விட்டனர் . பின்னர் ஆகாயமார்க்கமாய்ச் சிவபிரானும் உமாதேவியும் போகும்போது , தேவி அக்
குழந்தைகளைப் பார்த்து அவை யாருடையவை எனக் கேட்க , அவளுடையனவே என அவர் விடையளித்தனர் . உடனே அவ்விருவரும் அங்கே செல்ல , அவள் குழந்தைகளை மடியில் வைக்க ,அவை ஆறுமுகங்களை உடைய ஒரே குழந்தை ஆயிற்று . அக்குழ்ந்தையே முருகன் : அமரர் வேள்விப் பாக முண்ட பைங்கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்த காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி யமைய நெற்றி இமையா நாட்டத் தொருவரங் கொண்டு விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூணவற்குத்தா னீத்த தரிதென மாற்றான் வாய்மைய னாதலின் எரிகனன் மானாக் குடாரிகொண் டவனுருவு திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக் கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக மாதவர் மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பின் சாலார் தானே தரிக்கென வவரவி உடன்பெய் தோரே யழல்வேட் டவ்வவித் தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில் வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள் கடவு ளொருமீன் சாலினி யொழிய அறுவர் மற்றையோரு மந்நிலை பயின்றனர் மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழா அது நிற்சூ லினரே நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற் பெரும்பெயர் முருக ( பரிபா . 5 , 26-50 )
இதனையே மஹாபாரதம் அநுசாஸநபர்வம் ஸைகாபத்யேந தம் தேவா : பூஜயித்வா ஹாலயம் | ஸ விவ்ருலோ மஹாவீர்யோ உேவஸேநாபதி : ப்ரஹு : | ஜவாநாமோவயாய சக்த்யா நாநவம் தாரகம் மஹ: || ( 133 , 28-9 ) என்றவிடத்துக் கூறும் . அவர் ஆயுதம் சக்தி எவ்வாறு என்பது எவ்வாறு மஹாபாரதத்திற் கூறப்பட்டதோ , அவ்வாறே இன்னா நாற்பது முதற்பாட்டிற் கூறப்பட்டது .
அவருடைய கொடியிற் கோழி பொறிக்கப்பட்டது என்பதை
மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ . ( பரிபா . 17 , 48-9 ) என்ற அடிகள் கூறுகின்றன .
போரில் வெற்றிபெற்ற பின்னர் அவர் தேவஸேனையையும் வள்ளியையும் மணந்தனர் என்பது
டை மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண் மணந்த ஞான்று ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண் மணிமழை தலை இயென ( பரிபா . 9 , 8-10 )
என்றவிடத்து உணர்த்தப்பட்டது . அவன் வள்ளியை மணந்ததை மஹாபாரதம் கூறியதாகத் தெரியவில்லை .
என்ற அடிகள் கூறுகின்றன . கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி . மஹாபாரதத்தில் விராடபர்வம்தொடங்குதற்கு முன்னர்த் தர்மபுத்திரனும் , போர் தொடங்குதற்கு முன்னர் அர்ஜுனனும் துர்க்கையைத் துதிக்கின்றனர் :
முற்பிறப்புக்களிற் செய்யப்பட்ட வினைகளின் பயனைப் பின்னர் ஒவ்வொருவரும் அனுபவிப்பர் . அதனை ஊழ் , தெய்வம் , வினை , பால் என்ற சொற்களாற் பெரியோர் குறிப்பர் :
மக்கட்பிறப்பிற் பொருள் இன்பம் இவற்றை அனுபவிக்கப் பெரும்பாலும் உழே காரணமாயினும் , தர்மத்தைச் செய்தற்குத் தன் முயற்சியே சிறந்த காரணம் ஆகும் என்பதை விளக்கவேஆசிரியர் திருவள்ளுவனார் ஊழி என்ற அதிகாரத்தை அறத்துப் பாலின் பின்னரும் பொருட்பாலின் முன்னருங் கூறினர் . ஆயினும் ஒருவர் இன்ப துன்பங்களை நுகர ஊழ் , தன் முயற்சி இரண்டுங் காரணம் ஆகும் என்பதைக் குறிக்க இரண்டையுங் கூறுகின்றனர் :
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (திருக். 380 )
ஒருமைக்கட் பின்கற்ற கல்வி யொருவற்கு எழுமையு மேமாப் புடைத்து (திருக். 396 )
சில வினைகளின் பயனை இம்மையிலேயே அனுபவிப்பதும் உண்டு : இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் திணைமாலை 150 , 123 )
இக்கருத்தினையே ஒரு வடமொழிச் செய்யுளடி கூறும் : -- அத்யுத்கடை : புண்யபாபைர் இஹைவ வலம் அச் நுதே |
( 7 ) ஏனைய செய்திகள்
வால்மீகிராமாயணத்திற் கூறப்பட்ட செய்திகளுள் சில சங்க நூல்களுட் காணப்படுகின்றன 1 ) இராவணன் ஸீதை யைத் தூக்கிப்போம்போது , அவள் கீழே எறிந்த அணிகளைக் குரங்குக்கூட்டம் கண்டது : --
வ்யாஸமஹாபாரதத்திற் கூறப்பட்ட சில செய்திகளுங் காணப்படுகின்றன : பாண்டவரும் கௌரவரும் செய்த போரில் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் உணவு அளித்தனன் ; அப்போரிற் கவுரவர் மாண்டனர் :
பிறப்பிற்குக் காரணம் ஸ்தூலசரீரமாகையாலும் , கல்வி ஸூக்ஷ்ம சரீரத்தைப் பற்றியதாகையாலும் , பிறப்பினுங் கல்வி சிறந்தது எனக் கருதப் பட்டது. அக்காரணம்பற்றியே மேற்பிறப்பிற் பிறந்தவனுங் கீழ்ப்பிறப்பிற் பிறந்தவனிடங் கல்வி கற்கலாம் எனக் கூறப்பட்டது :
வீட்டிற்கு வந்த ஸாதாரணமக்கட்கு உணவு, நீர், இடம், பாய், இன்சொல் இவற்றை வழங்கவேண்டும் : முறுவ லினிதுரை கானீர் மணைபாய் கிடைக்கை யோடிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு ஊணொடு செய்யுஞ் சிறப்பு . ( ஆசார . 46 )
மஹாபாதகங்களுக்குப் பிராயச்சித்தம் இல்லை என்றும் ஏனையவற்றிற்கு உண்டு என்றும் மஹாபாரதம் மஹாபாதகவர்ஜம் து ப்ராயச்சித்தம் வியீயதே ( சாந்தி . 34 , 43 ) என்ற அடியிற் கூறும் .
முக்தி , விதேகமுக்தி ஜீவன் முக்தி என இருவகைப்படும். இவ்வுடலைவிட்டு ஜீவன் பிரும்மலோகத்திற்குச் சென்று பின்னர் அடையும் முக்தி விதேகமுக்தி ஆகும் . பிரும்மலோகத்திலிருப்பதை அபராமுக்தி என்றும் , பிரும்மத்தோடு ஒன்றுபட்ட நிலையைப் பராமுக்தி என்றுங் கூறுவர் . பராமுக்தியும் பிரும்மமும் ஒன்றே ஆகும் .
அபராமுக்தியை ஆசிரியர் திருவள்ளுவனார்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (திருக் . 3 ) என்றவிடத்து நிலம் என்ற சொல்லாற் குறித்தனர் .
இதனை ஒட்டியே சங்கராசாரியர் பிருஹதாரண்ய கோபநிஷத்தில் ஸ்ரஹ்மலோக : ( 4 , 4 , 23 ) என்ற தொகைச்சொல்லை ஸ்ரஹ்மணோ லோக : என்றும் , ஸ்ரஹ்மைவ லோக : என்றும் இருவகையாகப் பிரித்தனர் . முன்னருள்ளது அபராமுக்திக்கும் பின்னருள்ளது பராமுக்திக்கும் பொருந்தும் . சிறப்பு என்ற சொல்லைத் திருக்குறளாசிரியர் முக்தியைக் குறிக்க
சிறப்பு , செல்வம் இவற்றிற்குப் பொருந்திய ச்ரேய :, ப்ரேய : என்ற சொற்கள் ச்ரேயர்ச ப்ரேயாச மநுஷ்யமேத : தௌ ஸம்பரீத்ய விவிநக்தி யீர : | ச்ரோயோ ஹி யீரோ ஹி ப்ரேயஸோ வ்ருணீதே ப்ரேயோ மந்தோ யோ மக்ஷேமாத் வ்ருணீதே || (2,2) என்ற காேபநிஷத்துச்செய்யுளில் வழங்கப்பட்டது காண்க .
அம்முக்தியைப் பெற கடவுளின் ஒழுக்கநெறியில் நிற்க வேண்டும் . அப்போது அஞ்ஞானம் நீங்க மாசற்ற ஞானம் தோன்றும். இவற்றை பொறிவா யிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் ( திருக் . 6) இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு ( திருக் . 352 ) என்றவிடத்து ஆசிரியர் திருவள்ளுவனார் கூறினர் . இக்கருத்துக்களையே பகவத்கீதையில்