இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியதேவரின் பழனி திருக்கோவில் கல்வெட்டு-பழனிமலைபழனி மலைமேல் உள்ளவிடப்பட்ட நிவந்தம்:
பாண்டியப் பேரரசர் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியரின் (1251-1271) தம்பியும்,சோழ,கொங்கு மற்றும் தொண்டை நாடுகளுக்கு ஆளுனராகத் திகழ்ந்தவரும் ஆன இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியரின் (பொ.யு.1253-1275) கல்வெட்டுகள் பழனி ஸுப்ரஹ்மண்யப் பெருமான் திருக்கோவிலில் உள்ளன.
அதில் ஒரு கல்வெட்டு பழனி மலைமேல் உள்ள ஸுப்ரஹ்மண்யப் பிள்ளையாருக்கு இடும்பன்குளம் எனும் குன்றன்வயலான வீரசோழன் மன்னறையின் வடக்கில் உள்ள இருபத்திரண்டு மா அரைக்காணி நிலத்தை வரி நீக்கி நிவந்தமாகக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.கல்வெட்டு வீரபாண்டியரின் 17 அல்லது 20ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
கல்வெட்டு வரிகள்,
"1.ஸ்வஸ்திஶ்ரீ|| திரிபுவனச்சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான் வீரபாண்டியதேவர்க்கு யாண்டு பதினைஞ்சாவதுக்கு எதிர் ….. வைகாவூர் நாட்டு பழனியில் மலையில் ஸுப்ரஹ்மண்யப் பிள்ளையார் கோயிலில் தேவர்கன்மிகளுக்கு இப்பிள்ளையார் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனத்துக்கும் பலபடி நிமிந்தத்துக்கும் பழனியில் இடும்பன்குளமான குன்றன் வயலான வீரசோழன் மன்னறையில் வட
2.கரைக்கு நான்கெல்லையாவது கீழ்ப்பாற்கெல்லை இக்குளத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஊர் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பிள்ளையார் திரும…..க்குக் கிழக்கும் வடபாற்கெல்லை பேய்ச்சிமலைக்குங் காட்டுக்கும் தெற்கும் இந்நான்கெல்லைக்குட்பட்ட நிலம் இருபத்திரண்டு மா அரைக்காணியும் குடுத்து இந்நிலத்துக்கு வருங்குடிமைப் பாட்டங் காத்திகைப்பச்சை அந்தராயம் உள்ளிட்
3.டவையும் மற்றும் எப்பேற்பட்டவனைத்து வற்கமும் கழித்து வரியில்…….. கிலுங் கழிக்க சொன்ன…..டிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு கல்லி………கொள்க இவை பெரிய உடையார் எழுத்து இவை……ர பாண்டியச் சோமிதேவன் எழுத்து 15ஆவதுக்கு எதிராமாண்டு ள்…….311 துல்யம் மண்டபத்து முதலிகள் ரக்ஷை ஶ்ரீருத்திரர் ஶ்ரீமாஹேஶ்வரர் ரக்ஷை."