New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலக்கியத்தில் ஜோதிடம்


Guru

Status: Online
Posts: 24736
Date:
இலக்கியத்தில் ஜோதிடம்
Permalink  
 


சங்க இலக்கியக் கூற்றின் படி ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே! சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்!
பகுத்தறிவாளர்கள் தமிழன் பண்பாட்டிற்கு ஒவ்வாத ஜோதிடத்தின் பக்கம் போகலாமா என்று கேட்டு இதற்கு எதிராக ‘முழங்கி’ வருவதை எண்ணிப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது! தமிழர்களின் பாரம்பரியத்தின் படி ஜோதிடம் மகத்தான ஒரு இடத்தை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்ததை சங்க இலக்கியம் நன்கு விளக்குகிறது.
%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
 
                       
அஸிரிய, பாபிலோனிய, மாயா, கிரேக்க,எகிப்திய நாகரிகத்தை விடப் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை! தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று! இந்த சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன!
அனைத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஆராயப் புகுந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழ்வை மேம்படுத்தும் சிறந்த ஜோதிடக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம். அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன. சரஸ்வதி மஹால் வெளியிட்ட மிகச் சில நூல்களைத் தவிர பல நூல்கள் அச்சேறாது சுவடி வடிவிலேயே இருக்கும் அவல நிலையும் நம்மிடத்தில் மட்டுமே உண்டு!
தொல்காப்பியம்
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த
       ஒழுக்கம் கிழவோற்கு இல்லை
ஒவ்வொரு பழந்தமிழனும் ஜோதிடத்தைப் பார்ப்பவனே!
நாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஒரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி! களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது. இதனாலேயே களவொழுக்கம் இல்லாத இயல்பான ஒழுக்கம் உடைய தமிழர் நாளும் ஒரையும் பார்த்து வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது இல்லையா!
கணியன் பூங்குன்றனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா
கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிட மேதை!பழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப் படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வான நூல் விற்பன்னர். அதனால் தான் அவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது!) கூறினார்! கணியன் பூங்குன்றனாரை தலை சிறந்த உலகனாகச் சுட்டிக் காட்ட விழையும் பகுத்தறிவாளர்கள் அவர் ஒரு கணியன் என்பதால் ஜோதிடத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அல்லவா?
காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை
-    நற்றிணை (373.6),
“கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே
-    அகநானூறு (151.15)
என்று கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர். இன்றும் கூட நாம் ஜாதகத்தைக் கணித்துத் தாருங்கள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்!
TM-4.jpg
 
மேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்பது, வேங்கை பூ பௌர்ணமியன்று தான் பூக்கும்! அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும். ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது! பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது!தன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்! இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் ‘கணிவாய்ப் பல்லி எனப்பட்டது.
ஜோதிடம் இன்றித் தமிழரின் தொன்மம் இல்லை!
அன்று தமிழரின் வாழ்வில் (ஏன், இன்றும் தான்!) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம்! ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும்!அவ்வளவு தொன்மம் தமிழர் வாழ்வில் ஜோதிடத்துடன் இணைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு உண்மை! நாள்மீனும்  விண்மீனும்
அசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாள்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் நம் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் படுகின்றனவற்றை காணமுடிகின்றது..

அருந்ததியின் சிறப்பு
அருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன், செம்மீன், மீன், சிறுமீன், சாலினி, வானத்து, அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது! சில சங்க வரிகளைக் கீழே காணலாம்.
“வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்”
                                    - கலித்தொகை 221

“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை”
-     புறம் 228-9

“விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி”
-    பதிற்றுப்பத்து 3127-28

கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்
                                               

கார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது!
“அறுமீன் பயந்த”
-     நற்றிணை 202-9

“அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்”
-    அகநானூறு 141-8
“அறுவர் பயந்த ஆலமர் செல்வ”
-    திருமுருகாற்றுப்படை 255
என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்!
 
 
சுக்கிரனும் மழையும்
சுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட -விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர்! அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறது!இதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன!
வராஹமிகிரரின் மகன் ஸ்ரீ பிருதுயஜஸ் என்கிற பூகீர்த்தி என்பவர் ‘ஹோரா சாரம்’ மற்றும் ‘ஹோரா ஷட்பந்நாசிகா’ ஆகிய நூல்களை எழுதினார். கி.பி. 169-ம் நூற்றாண்டில் ‘யவனேஸ்வரர்’ என்பவர் இயற்றிய யவன ஜாதகம் என்ற நூலே மிகப் பழமையானது.
கி.பி. 268-ம் நூற்றாண்டில் ‘ஸ்பூர்ஜித்துவஜன்’ என்பவர் நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ‘யவன ஜாதகம்’ என்ற நூலை இயற்றினார். சாராவளி என்பது மற்றொரு முக்கியமான வடமொழி நூல். இந்த ஜோதிட சாஸ்திர மூலகிரந்தத்தை எழுதி வெளியிட்டவர் கல்யாண வர்மா.
ஜாதக அலங்காரம்
கீரனூர் நடராஜன் என்பவர் கி.பி.1725-ம் ஆண்டுக்கு முன்பு வட மொழியில் உள்ள ஹோரசாரம், சாராவளி, பராசாரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், சம்பு நாதம் போன்ற பல கிரந்தங்களின் சாராம்சத்தைத் திரட்டி ‘சாதகலங்காரம்’ என்ற நூலை விருத்தங்கள் என்னும் செய்யுள் வடிவில் இயற்றினார்.
guru+sisya.jpg
 
இப்படி வடமொழி நூல்களில் பிரசித்தி பெற்ற ஜோதிடம் பண்டைக் காலத்தில் தமிழ் இலக்கியத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் ஜோதிடம்
பண்டைய தமிழ் இலக்கியத்தில் ஜோதிடத்தைப் பற்றிய செய்திகள் நிறைய காணப்படுகின்றன. ஜோதிடர்கள் நிமித்தகன், கணிகன், காலக்கணக்கன், தெய்வக்ஞன் என்று போற்றப்பட்டனர். இவர்களில் ஜோதிடம், இலக்கியம் இரண்டிலும் சிறந்து விளங்கியவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஏன்ற பிரபஞ்ச சமத்துவத்தை மண்ணில் விதைத்த சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார்.
கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால் பிற்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள். சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைசார்த்து செய்திருக்கின்றனர்.
சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை
“விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு 
-     சங்கப் பாடல்
மற்ற கலைகளைப் போல் ஜோதிடக்கலையும் நாம் காணக்கூடிய ஒரு நடைமுறை அறிவியல் கலை (Dilectic Science) என்பதை உணர வேண்டும் என்று அறப்பளீசுர சதகம் கூறுகிறது. வானியல், அறிவியல் உபகரணம் ஏதும் தோன்றாத அந்தக் காலத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் காலங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறியிருந்தது விந்தையிலும் விந்தை.
அங்கம் துடித்தல்
ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
-    தொல்காப்பியம்
தொல்காப்பியத்தில் கூறப்பட்ட தலைவன் வெளியூருக்குச் செல்ல இருக்கின்றான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. எனவே தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை இவ்வரிகள் விளக்குகின்றன. இரவில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. எனவே பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி முதலியன கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலன் கண்டறிந்தனர். இத்தகவலை
 
படை இயங்கு அரவம்
பாக்கத்து விரிச்சி  
தொல்காப்பியம்
ஆண்களுக்கு வலதுபுறமும், பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல நிமித்தங்களாகும்.
                       
பொலந்துடி மருங்குவாய் புருவம் கணிமுதல்
வலந்துடிக்கின்றன வருவது ஒர்கிலேன்
 
என்று கம்பராமாயண சுந்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
public_1029da616a7cf7727b43404642afbc9ce171.jpg
 
 
 
 
 
எதிரிடை நட்சத்திரச் செய்தி
மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் தெரிய, பங்குனியின் 15 நாட்களில் உத்தர நட்சத்திரம் மாசுபட, மூலம் எதிரிடை நட்சத்திரமாக நிற்க, மிருகசீரிடம் அடியில் நிற்க, ஓர் எரி வெள்ளி கிழக்கோ வடக்கோ செல்லாது கீழே விழுந்த நேரம் சேர அரசன் யானைக்கட்சேய் மாந்தேரல் சேரலிரும் பொறை இறந்தான் என்பதை புறநானூறு
ஆடியல் ஆழந்குட்டத்து
ஆரிருள் அரையிருளின்
முடப்பனையைத்து வேர்முதலா
கடைக்குளத்துக் கயம் காயப்
பங்குனி ஆயர் அழுவத்துத்
தலைநாண் மீன் நிலை திரிய
தொன்னாண்மீன் துறைபடியப்
பாசி செல்லாது ஊசி முன்னாது
அளக்கர் தினை விளக்காக..
 
என்ற வரிகள் அறிவிக்கின்றன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard