(1) வேதங்களும் அங்கங்களும் நக்கீரனார் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் , இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களை நாற்பத்கெட்டு ஆண்டுகளிற் கற்றனர் என்பதை அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிப வறனவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல . ( 179-182 ) என்ற அடிகளாற் குறிக்கின்றனர். ஒருவன் உபநயனம் செய்விக்கப்பட்ட பின்னரே வேதங்களைக் கற்க உரியன் ஆவான்; உபநயனமே அவனுக்கு இரண்டாம் பிறப்பு; அப்போது, காயத்ரீ தாய், ஆசிரியன் தந்தை; நான்கு வேதங்களைக் கற்றல் வேண்டும்; இல்லையேல் மூன்று, இரண்டு வேதங்களையேனும், இல்லையேல் ஒன்றையேனுங் கற்றல் வேண்டும் ; ஒவ்வொரு வேதத்தையுங் கற்கப் பன்னிரண்டு ஆண்டே காலம் ; எனத் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன . ( Cf. கௌதமதர் மஸூத்திரம் 1 , 1 , 6 ; 1 , 1 , 9 ; 1,3,51 ; 1 , 3 , 52 )
மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு , அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை , நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுது நூல் . (1-4 ) என்ற அடிகளிற் கூறுகின்றனர் . உலகில் உள்ளனவெல்லாம் கடவுளிடமிருந்தே தோன்றின என்பது ‘ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே என்ற உபநிஷத்து வாக்கியத்திலும் , வேதங்களும் அவரிடமிருந்தே தோன்றின என்பது சாஸ்த்ரயோ நித்வாத் என்ற வ்யாஸஸுத்திரத்திலும் கூறப்பட்டன .
கடுவனிளவெயினனார் பரிபாடல் மூன்றாம் பாடவின்கண் இருபத்தோரு லகமும் , ஆங்குள்ள உயிர்களும் திருமாவிடமிருந்தே தோன்றின என மாயாவாய்மொழியாகிய வேதங் கூறும் என்பதை, மூவே ழுலகமு முலகினுண் மன்பது மாயோய் நின்றவயிற் பரந்தவை யுரைத்தே மாயா வாய்மொழி . ( 9-11 ) என்ற அடிகளிற் கூறினர் . மாயாவாய்மொழி என்றவிடத்து மாயா என்ற அடைமொழி வேதம் நித்தியம் என்பதை அறவித்தலுங் காண்க . அவரே அப்பாடலிற் கடவுளை வேதத்து மறை நீ ( 66 ) என்பதும் , பகவத்கீதையில் ப்ரணவ : ஸர்வ உேவேஷ எனக் கண்ணபிரான் ஏழாவது அத்தியாயத்திற் கூறுவதும் ஒத்திருக்கின்றன . மறை என்பதற்கு உரைகாரர் உபநிடதம் எனப் பொருள் கூறியிருப்பனும் , அதற்குப் பிரணவம் என்ற பொருளுங் கொள்ளலாம் என்பதைப் பகவத்கீதை அறிவிக்கின்றது .
பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர், பா அல் புளிப்பினும் பகலிருளினும் நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்
( 2 ) வர்ணங்களும் ஆச்ரமங்களும் தமிழ்நாட்டு மக்கள் நால்வகைப்பட்டனர் எனவும் , அவர் பார்ப்பனர் , அரசர் , வணிகர் , வேளாளர் எனவும் , அவருள் பார்ப்பனர்க்கு அறுதொழில்களும் , அரசர்க்கு ஐந்து தொழில் களும் , ஏனையோர்க்கு அறுதொழில்களும் உள்ளன எனவுந் தொல்காப்பியனார் பொருளதிகாரத்திற் கூறினர் .
நூலே அந்தணர்க் குரிய ( மர . 71 ) படையும் அரசர்க் குரிய ( மர . 72 ) வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ( மர . 78 ) வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ( மர . 81 ) அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மரபி னேனோர் பக்கமும் ( புறத் . 16 )
ர்ப்பனர்க்குரிய அறுதொழில்கள் ஓதல் வேட்டல் அவற்றைப் பிறர்க்குச் செய்தல் ஈதல் ஏற்றல் என்பன எனப் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 24- ஆவது செய்யுள் 6-8 அடிகளில் உணர்த்தினர் . இவ்வர்ணப்பிரிவுகளையும் அவரவர்க்குரிய தொழில்களையும் கௌதமதர்மஸுத்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன . ஆங்குப் பிராம்பணர்க்கு அறுதொழில்கள் கூறப்பட்டிருப்பினும், ஏற்றலைத் தவிர்த்து ஏனையவற்றை எல்லை கடந்து அவர் செய்யலாம் எனவும் , ஏற்றலை எவ்வளவு குறுக்கலாமோ அவ்வளவு குறுக்கவேண்டும் எனவும்
வால்மீகிராமாயணமும் வ்யாஸமஹாபாரதமுங் கூறும் : ஸ்வகர்மநிரதா : ஸம்யதா : ச ப்ரதி ரஹே ( பா . 6,13 ) பர்திரஹே ஸங்குசிதா ஆரஹஸ்யா: ( அச்வ . 102 , 81 ) ஓதல் ஓதுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கிப் பிராம்மணரைக் கவிஞர் தத்தம் நூல்களிற் பல்வகைச் சொற்களாற் குறித்தனர் : - நான்மறைமுனிவர் (புறநா . 6 ) , நான்மறை முதல்வர் ( புறநா . 26 ; 93 ) , நான்மறையாளர் ( ஆசரரக் . 53 ) , கேள்வியுயர்ந்தோர் ( புறநா . 221 ) அருமறையந்தணர் ( சிறுபாண் . 204 ) , நான்மறையோர் ( பட்டினப் . 202) . அவற்றுடன் வேட்டல் வேட்டுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கி கேள்வி முற்றிய வேள்வியந்தணர் ( புறநா . 361 ) , வேள்வி முடித்த கேள்வியந்தணர் ( பதிற் 64 ) என்ற சொற்களாற் குறித்தனர் . உண்மையைக் கூறுக ( ஸத்யம் வடி ) என்ற மறைவிதி பிராம்மணர்க்கு நியமவிதியாதல்பற்றி மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அவரைப் பொய்யறியா நன்மாந்தர் என்கின்றனர் . அவர் தர்மச்செயலிலே ஈடுபடுதல்பற்றி , பதிற்றுப்பத்தில் அறம்புரியந்தணர் ( 24 ) எனக் கூறப்படுகின்றார் . அவர்க்குள்ள அறுதொழில்களை நோக்கி அவரை அறுதொழிலோர் என்கின்றனர் திருவள்ளுவனார் . ஆசறுகாட்சியவர் எனக் குறிஞ்சிப்பாட்டில் 17 - ஆம் அடியில் அவர் கூறப்படுகின்றனர் . அந்தணராய்ப் பிறத்தலே சிறந்தது என நான்மணிக்கடிகை 33 - ஆம் செய்யுளில் விளம்பி நாகனார் கூறினர் .
தோல்வேலை செய்பவன் இழிபிறப்பாளன் இழிசினன் எனப் புறநானூற்றில் 170 , 82 , 287 செய்யுட்களிற் கூறப்பட்டான் . துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்தால் வரும் அந்நூலில் 335 - ஆம் செய்யுளிற் குறிக்கப்பட்டனர் .
பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் ,
பா அல் புளிப்பினும் பகலிருளினும் நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .
பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார் ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .
வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ்
செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ் செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர் .