New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதங்களும் அங்கங்களும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
வேதங்களும் அங்கங்களும்
Permalink  
 


மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு ,அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை ,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுது நூல் . (புறம் 166:1-4 )

வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் ,
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .

இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :

உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 )
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 )
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 )
அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
அந்தணர் பள்ளியும் ( 468-476 )
அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard