New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொர்கம் நரகம் தேவர் வானோர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சொர்கம் நரகம் தேவர் வானோர்
Permalink  
 


சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். - - (346)
என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’ என்பது கம்பர் வாக்கு.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. . (58)
(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.)

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)
(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413) செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்ருது புத்தேள் உலகு (234)
என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. - (966)
உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத்துக் குறிப்பாக அமைந்திருக்கிறது.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற - (213)
என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு
நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)
(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

புத்தேளிர் (1)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து - குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தேவர்களே அமரர், ஆன்ருேர், இமையார், தேவர், புத்தேளிர், வானேர், விசும்புளார் என்னும் சொற்களால் கூறுவர் திருவள்ளுவர்.

மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)

என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிருர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.
தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்ருங்
கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)
'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை - குறள் 77:5
துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9

தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள் இல்லறமும் துறவறமும் ஆகும். பிரம்மசரியம், சந்நியாசம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி கூறுகின்றது. வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர். அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது. மேனகை போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும் உண்டு. துருவாசர், விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அம்முனிவர்கள் நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர். தமிழர் பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும் வேறானவை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் 243: அருளுடைமை
மணக்குடவர் உரை:அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். குறள் 168: அழுக்காறாமை
மணக்குடவர் உரை:அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.
சாலமன் பாப்பையா உரை:பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:புலான்மறுத்தல்
மணக்குடவர் உரை:புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. குறள் 835: பேதைமை
மணக்குடவர் உரை:பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். குறள் 346: துறவு
மணக்குடவர் உரை:யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard