New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும்


Guru

Status: Offline
Posts: 24736
Date:
வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும்
Permalink  
 


வள்ளுவரும் நான்கு வர்ணத்திற்கான அறமும்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். குறள் 559: கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560:
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964: மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952: குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958: குடிமை



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.                   (அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:793)
குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க என்பது இக்குறட்கருத்து.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:794)
நற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல, மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது இக்குறட்கருத்து.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். (அதிகாரம்:குடிமை குறள் எண்:956)
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார். 
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல் (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:453)
மக்களுக்கு உணர்ச்சி மனத்தினாலே உண்டாகும். இவன் இன்னான் என்று உலகத்தினரால் கூறப்படும் சொல் அவன் இணைத்துக் கொண்ட கூட்டம் காரணமாக உண்டாகும். 
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு. (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:454)
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.  ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (அதிகாரம்:குடிமை குறள் எண்:959)
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும் (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:455)
ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.  (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:457)
நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்  
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.  (அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:460)  
நல்லினச் சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; சிற்றினம் சேர்தலினும் கேடு யாதும் இல்லை.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (அதிகாரம்:குடிமை குறள் எண்:954)
 பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் நற்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. 
 ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:462)
 ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409:
கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
Translation:Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6

நாட்டார் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும் -குறள் 826

நண்பரைப் போல பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயனவென்று விரைவில் அறிந்து கொள்ளலாம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்". பெருமை அதிகாரம் குறள் எண் 2

இதன் பொருள், எல்லா உயிர்களும் பிறப்பின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று நிகரானவையே. செய்யும் தொழிலில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் சிறிது ஏற்றத்தாழ்வுகள் உண்டாகலாம். ஆனால், பிறப்பினால் அனைவரும் ஒன்றே என்று கூறுவது வள்ளுவர் கருத்தாகும்.

ஆனால், தொல்காப்பியர் தமிழர் சமுதாயத்தை அரசர், அந்தணர், வைசியர், வேளாளர் என்று நான்காகப் பகிர்ந்து வைத்துள்ளார். மேலும், இவற்றை பிறப்பின் அடிப்படையிலேயே செய்துள்ளார்.

உயர்ந்தோர்க்குரியன ஒத்தினான [அகத்திணை 39]

வழக்கெனப்படுவதுஉயர்ந்தோர் கூற்றே ,நிகழ்ச்சி
அவர் சுட்டு ஆதலும் [ மரபியல் 94]

"இங்கு வழக்கெனப்படுவது உயர்ந்தோர் வழக்கு, இழிந்தோர் வழக்கு வழக்கெனப்படாது" என்று இளம்பூரணார் தெளிவுபடுத்துகிறார். இனி உயர்ந்தோர் என்பவர் யார் என்பதையும் அவரே தெளிவுபடுத்துகிறார்

"அந்தணரும் அவர்போல் அறிவுடையோரும் " [இளம்பூரணார் உரை பக்647 பொருளதிகாரம் சாரதா பதிப்பகம் 3ஆம் பதிப்பு 2006]

"ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேலேன "

அதாவது, கல்விக் கற்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரிந்து வேற்றூர் செல்வதற்கான தகுதி அரசர்க்கும், அந்தணர்க்கும் மட்டுமே உரியது. மற்றவர்களுக்கு அது கிடையாது.

"வைசியன் பெறுமே வணிக வாழ்க்கை"

இதன் பொருள் வணிக குலத்தில் பிறந்தவர்க்கு வணிகத்தைத் தவிர வேறு தொழில் கிடையாது

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"தொல் மரபியல் பக் 607 [தொல்காப்பியம் தெளிவுரை முனைவர் ச. வே. சுப்பிரமணியன் மணிவாசகர் பதிப்பகம் 2006]

அதாவது வேளாளர்க்கு உழுது உண்பதைத் தவிர வேறு தொழில் இல்லை. பிற வகை வாழ்வு இல்லை. அவர்களுக்கு கல்வி பெறும் தகுதியும் இல்லை. அப்படியே கல்வியிருந்தாலும், அது வேதம் ஒழிந்த கல்வியே அன்று வேதத்தைப் படிக்கும் தகுதி வேளாளருக்குக் கிடையாது.

இவ்வாறாக, கல்வி, வேலை ஆகியவற்றை பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்வதை தமிழருக்குரிய இலக்கணமாக செய்து வைத்த தொல்காப்பியர் மகளிருக்கும் அநீதி செய்துள்ளார். மகளிரை ஆணைவிட மிகக்குறைவான சமுக நிலையில் வைத்து பார்க்கும்முறையை தொல்காப்பியர்தான் ஆரம்பித்து வைத்திருப்பார் போலத் தோன்றுகிறது.

மகளிரும் தொல்காப்பியரும்
எ.கா. முந்தீர் வழக்கம் மகடூவோடு இல்லை.
அதாவது கடல் கடந்து செல்லும்போது பெண்களை அழைத்துச் செல்வது என்பது எக்காலத்திலும் இல்லை.[தொல்காப்பியம் தெளிவுரை முனைவர் ச. வே. சுப்பிரமணியன் மணிவாசகர் பதிப்பகம் 2006 பக்கம் 365]

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

ஆய்வு: தொல்காப்பியர் காட்டும் பிரிவொழுக்க முறைகள்

 

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஆண், பெண் ஈர்ப்பு ஒரு மனித வாழ்வியலை உருவாக்கித் தந்துள்ளது. இதன் ஊற்றால் அவர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் குடும்ப வாழ்வைத் தொடங்கி, உற்றார் உறவினர் என்று குடும்பமாகச் சுற்றியிருந்து வாழ்வர். ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு சொரிந்து, பாசம் காட்டி, உதவு கரம் கொடுத்து, அறநிலை நின்று வாழ்வதையே விரும்பினர். அவர்கள் எட்டச் சென்று தனித்து வாழார். இவ்வண்ணம் வாழ்ந்து பழகியவர்கள் ஒரு சில நாட்கள்தானும் பிரிந்து சென்று வாழவிரும்பமாட்டார். இனித் தொல்காப்பியu; காட்டும் பிரிவிற்குரிய நிமித்தங்களையும் காண்போம்.

தொல்காப்பியம்.
இடைச் சங்ககாலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியம் என்ற நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்தனர். அதில் அவர் பிரிவொழுக்க முறைகளையும்,  பிரிவுக்குரிய நிமித்தங்களையும் காட்டியுள்ளார். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் அமைத்துதுத் தந்துள்ளார்.

'ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.' – (பொருள். 27)

மேற் காட்டிய மூவகைப் பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் ஆகிய இரு பிரிதல்களும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாமென்றும் கூறியுள்ளார். குணம், ஒழுக்கம், செல்வம், கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டனர்.

'ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.' – (பொருள். 28)

மன்னன், மக்களைக் காப்பவனென்ற முறையில், பகை காரணமாகப் பிரியுமிடத்துத் தான்மட்டும் போதலும் உண்டு. தன்னொடு கூடிய படையுடன் போதலும் உண்டு. தான் தலைமையேற்றுச் செல்வதை 'பகை தணிவினைப் பிரிவு' எனவும், பிறர் தலைமையின்கீழ்ப் போதல் 'வேந்தர்க்குற்றுழிப் பிரிவு' என்றும் கூறப்படும்.

'தானே சேறலும் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.' -  (பொருள். 29)

 

மேற்காட்டிய சூத்திரங்களில் மூவகைப் பிரிதல் பற்றிக் கண்டோம். மேலும், குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் நிலைகொண்ட தெய்வங்களின் திருவிழாக் காரணமாகவும், இந்நால்வகை நிலங்களில் வாழ்கின்ற மக்களின் அறநெறி குன்றியவிடத்து, அவற்றை நீக்கி அறத்தை நிலைநாட்டுவதற்காகவும், வாழ்வதற்குப் பொருளீட்டுவதற்காகவும் தலைமகன் பிரிவு அமையலாமென்றும் சூத்திரம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்.

'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பpழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.' – (பொருள். 30)


தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களில் அரசரைவிட அந்தணர் முதலிடத்தில் வைக்கப்பட்டு, மதிக்கப்பட்டும் உள்ளனர். தெய்வ வழிபாட்டை நிலைநிறுத்தற் பொருட்டான பிரிவில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையினரும் பங்குபற்றலாமென்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியர்.

'மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.' – (பொருள். 31)

மன்னன் செய்தற்குரிய காவல் தொழிலை அவனுக்கு உறுதுணையாக ஏவல் வழி நின்று வரும் வணிகரும், வேளாளரும் செய்வதற்கு உரிமையுடையோராவர். இதில் அந்தணர் விதிவிலக்குப் பெற்றுள்ளனர். அவர்கள் அறநெறி வாழ்முறைகளில் ஈடுபடுவர்.

'மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.' – (பொருள். 32)

வணிகர், வேளாளர் ஆகிய இருவரில், உயர்ந்தோராகிய வணிகர் கல்வி கற்றல் நிமித்தம் பிரிதலும் உண்டாம் என்றும் சூத்திரம் அமைத்துள்ளார் தொல்காப்பியர்.

'உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான.' – (பொருள். 33)

தூதுபோதல் தொழில் வேந்தனுக்குரியது. ஆனால், வேந்தனால் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் அதற்குரியவராக்கப்படின் அவர்களும் தூது போகலாம் என்று சூத்திரம் கூறுகின்றது. உரியவராக்கப்படல் என்பது அவர்கள் அமைச்சராக்கப்படல் என்பதாகும்.

'வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே.' – (பொருள். 34)

மனித வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது. நாடுவிட்டு நாடுசென்று பொருள் தேடி வருவது அந்நாள் வழக்கம். வணிகரும், வேளாளரும் தம் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து வேறு நாடுகள் சென்று பொருள் தேடி மீண்டும் வருவரென்று தொல்காப்பியம் கூறும்.

'பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே.' – (பொருள். 35)

அந்தணரும் பொருள் தேடல் தொடர்பில் பிரியலாம். ஆனால் அவர்கள் தம் ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி அதிலிருந்து வழுவாது இருத்தல் வேண்டும். ஆசாரமும், கல்வியும் அவர் தேடும் பொருளாகும்.

'உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.' – (பொருள். 36)

களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. இல்வாழ்க்கையில் இணைந்தபின் தலைவன் தலைவியை  விட்டுப் பிரிந்து பரத்தையை நாடிச் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். இனி, அகப்பொருள் நூல்களில்  ஆறு வகைப்பட்ட பிரிவுகள் காட்டப்பட்டுள்ளன.  இறையனார் களவியல் என்னும் நூலில் அவ்வாறு தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

'ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென;(று)
ஆங்க ஆNற அவ்வயிற் பிரிவே.' – (நூற்பா. 35)

1.கல்வியின் பொருட்டும், 2. நாடு காத்தற் பொருட்டும், 3. சமாதானம் செய்யும் பொருட்டும், 4. அரசன் கட்டளைப்படி ஏதாவதொரு நிமித்தத்தின் பொருட்டும், 5. பொருள் ஈட்டுதற் பொருட்டும், 6. பரத்தை காரணமாகப் பிரியும் பொருட்டும் ஆகிய ஆறு நிலைகளிலும் தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் இருந்ததில்லை.

உலகியல் வழுவாகிய பரத்தமை நான்கு இனத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்க்கும் உரித்து என்றும், அவ்வழிப் பிரியும் பிரிவு, நிலம் பெயர்தல் இல்லை என்றும் தொல்காப்பியமும், இறையனார் களவியலும் கூறும்.

'பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்.' -  (பொருள். 220)


'காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே.' – (இறையனார் களவியல்)

மேற்காட்டிய ஆறு வகையான பிரிவுகள் தொடர்பில் தொல்காப்பியர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகக் கால எல்லைகளை வரையறுத்துக் கூறியுள்ளமை போற்றற்குரியதாகும். கல்வி கற்றல் தொடர்பான பிரிதல் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாது அமைய வேண்டுமென்று சூத்திரம் அமைத்தார் தொல்காப்பியர்.

'வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது.’ - (பொருள் 186)

வேந்தன் தொழிலாகிய தூதுபோதல், நாடு காத்தல், பகைதணிவினை ஆகிய பிரிவுகள் ஓராண்டுக்கு உட்பட்டதாய் அமையுமென்று கூறப்பட்டுள்ளது. இன்னும், பொருளீட்டல் தொடர்பான பிரிதலுக்கும் ஓராண்டுக்கு மேற்படாத கால எல்லையே காட்டப்பட்டுள்ளது.

'வேந்துறு தொழிலே யாண்டினது அகமே.' – (பொருள். 187)

'ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்.' – (பொருள். 188)

பரத்தையை நாடிச் சென்றான் தலைவன். தலைவி பூப்பெய்திய செய்தி அறிந்து, அவளை நாடி வந்து, பூப்புத் தோன்றி நிகழும் மூன்று நாளும் அவள் சொற்படி நடந்து, அதன் பின்னான பன்னிரண்டு நாளும் அவளுடன் மருவிக் கூடி நின்று, அவளைப் பிரியாது இன்புற்றிருப்பான். இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் அவளைப் பிரியாதிருப்பான். மறு பதினைந்து நாளும் பரத்தைபாற் பிரியும் வாய்ப்பும் உண்டாம். இச் சூத்திரத்தில் மக்கட்பேற்றின் பெருமை பேசப்படுவதையும் காண்கின்றோம்.

'பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.' -  (பொருள். 185)


தலைவன், தலைவியுடனும் காமக்கிழத்தியுடனும் இல்லாக்கத்தின் புறத்தே சென்று, ஆற்றிலும் குளத்தினும் நீர்குமைந்தாடுதலும், இளமரக்காவிற் சென்று விளையாடுதலும் ஆகிய நிகழ்ச்சிகளால் இன்பம் நுகர்தலும் உண்டென்று சூத்திரம் வடித்துள்ளார் தொல்காப்பியர். தலைவியானவள் மனம் ஒத்து இவ்வாறு காமக்கிழத்தியுடன் சேர்ந்து சென்று இன்பம் அனுபவித்திருப்பhளோ?  என்பது ஒரு நெருடலைத் தருகின்றது.

'யாறுங் குளனும் காவும் ஆடிப்
பதிஇகந்து நுகர்தலும் உரிய என்ப.'  -  (பொருள். 189)


இன்னும், தலைவன் போர் முனைக்குப் போகும் பொழுது தலைவியையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் வழக்கம் அன்று இருக்கவில்லை என்று தொல்காப்பியம் கூறும்.

'எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார்.'  - (பொருள். 173)

ஆனால், போர்முனைப் பாசறையில் தலைவன் புறப்பெண்டிருடன் (பரத்தையர்) பரத்தமையில் ஈடுபடுவதும் உண்டாம் என்கிறார் தொல்காப்பியர்.

'புறத்தோர் ஆங்கண் புணர்வ தாகும்.' -  (பொருள். 174)

வpனை காரணமாகத் தலைவியைப் பிரிந்த சென்ற தலைவன், அவ் வினையை முடித்துத் திரும்பி வரும் பொழுது, நீண்ட வழியாயினும் இடையில் தங்கி இளைப்பாறி வருவதென்பது கிடையாதாம். இதற்கு அவன் உள்ளத்திலும் இடமில்லை. ஏனெனில், அவன் உள்ளம் தலைவிமேல் நிலைத்து நிற்கின்றது. இதற்கேற்றவாறு, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அவன் தேரானது விரைந்து சென்று அவன் உள்ளத்து நினைவை நிறைவேற்றும் என்றவாறு.

'வினைவயிற் பிரிந்தோன் மீண் டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்ளியற் கலிமா உடைமை யான.'  -  (பொருள். 192)

முடிவாக
இதுகாறும், அந்தணர், மன்னர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைக் குலத்தினரும் தெய்வ வழிபாடு, கல்வி கற்றல், தூது போதல், காவல் தொழில், பெருளீட்டல், பகை, பரத்தையிற் பிரிவு ஆகியவை தொடர்பில் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து சென்று வந்துள்ளனர்  என்பதையும், அவற்றிற்கான பிரிவின் கால எல்லைகளை வுகுத்துள்ளதையம் தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து அறிந்து கொண்டோம்.

இதில், தெய்வ வழிபாடு தொடர்பான பிரிதலில் நால்வகைக் குலத்தினரும், கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகரும், தூது போதல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், காவல் தொழில் தொடர்பான பிரிதலில் மன்னர், வணிகள், வேளாளரும், பொருளீட்டல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், அந்தணர் பொருளீட்டல் தொடர்பில் பிரிவதாயின் அது ஆசாரம், கல்வி தொடர்பில் அமையவேண்டுமென்றும், பகை தொடர்பான பிரிதலில் மன்னரும் பங்கேற்றிருந்தனர் என்பதும் தெளிவாகின்றது.

இன்னும், அந்தணருக்குத் தெய்வ வழிபாடு, ஆசாரம், கல்வி போன்றவற்றைக் கொடுத்து அவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகர் மாத்திரம் பங்கேற்கலாமென்பதும், வேளாளருக்குக் கல்வி மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறப்படவில்லை. வேளாண்மைத் தொழில் குன்றி விடுமோ என்ற அச்சத்தால் வேளாளருக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்கலாம்.  இன்று இந்நிலை மாறி யாவரும் கற்கலாம் என்றாகி விட்டது.

மக்களின் சீரும், சிறப்பும், குதூகலமும், இணைப்பும் அமைந்த குடும்பத்தில் பிரிவு ஏற்படுத்த விரும்பாத பண்டைத் தமிழ் ஆன்றோனாகிய தொல்காப்பியர் மேற் காட்டிய வரையறைகளை வகுத்துத் தந்துள்ளதையும், அவர் பின்னவரின் வாழ்வியல் மேலும் சீர்பெற்றமைய வேண்டுமென்ற அவர் வேட்கை உந்தலையும் நினைந்து, நாம் அனைவரும் அகமகிழ்வோமாக!.

wijey@talktalk.net



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

பொருள்:-  ஓதல்  பகையே  தூது  இவை  =  கல்வி  கற்றலும்,  பகை  கடியப் பொருதலும், தம்முள்
பகைத்த  பிறரைப்    பொருத்தற்பொருட்டு  வாயிலாகச்  செல்லுதல்  ஆகிய  இவை; பிரிவே = பிரிதற்கு
நிமித்தமாய்ப் பாலைத் திணையாகும்.
  

குறிப்பு:-     இதில்    ஏகாரமிரண்டும் அசை ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப்
பிரிதல் பகைவயிற்  பிரிதலாவது   தன்னாட்டிற்கும்  தன்னரசற்கும் பகையாவாரோடு போர் கருதிப் பிரிதல்,
தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருத்தற் பொருட்டுப் பிரிதல்.
  

28.   

அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. (28)
 

ஆ. மொ. இல.
  

Amont them higher education and Ambassadorship are
concerned with eminent people (higher intelligentia)
  

பி.இ.நூ.
  

இறை 36
  

அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர்க்குரிய.
  

நம்பி. 69
  

ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும்.
  

இல. வி. அ. 65  - -
  

நம்பி 75
  

வேத மாந்தர் வேந்தர்என் றிருவர்க்கும்
தூது போதல் தொழில்உரித் தாகும்.
  

இல.வி.அக.43, 44
  

மறையோர் மன்னர் வணிகர்வே ளாளருள்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மேன.
எல்லார்க்கும் உரியன இவையல பிறவே.  

218தொல்காப்பியம் - உரைவளம்

பொருள்:-  ஓதல்  பகையே  தூது  இவை  =  கல்வி  கற்றலும்,  பகை  கடியப் பொருதலும், தம்முள்
பகைத்த  பிறரைப்    பொருத்தற்பொருட்டு  வாயிலாகச்  செல்லுதல்  ஆகிய  இவை; பிரிவே = பிரிதற்கு
நிமித்தமாய்ப் பாலைத் திணையாகும்.
  

குறிப்பு:-     இதில்    ஏகாரமிரண்டும் அசை ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப்
பிரிதல் பகைவயிற்  பிரிதலாவது   தன்னாட்டிற்கும்  தன்னரசற்கும் பகையாவாரோடு போர் கருதிப் பிரிதல்,
தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருத்தற் பொருட்டுப் பிரிதல்.
  

28.   

அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. (28)
 

ஆ. மொ. இல.
  

Amont them higher education and Ambassadorship are
concerned with eminent people (higher intelligentia)
  

பி.இ.நூ.
  

இறை 36
  

அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர்க்குரிய.
  

நம்பி. 69
  

ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும்.
  

இல. வி. அ. 65  - -
  

நம்பி 75
  

வேத மாந்தர் வேந்தர்என் றிருவர்க்கும்
தூது போதல் தொழில்உரித் தாகும்.
  

இல.வி.அக.43, 44
  

மறையோர் மன்னர் வணிகர்வே ளாளருள்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மேன.
எல்லார்க்கும் உரியன இவையல பிறவே.  



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

எட்டுத்தொகை புறநானூற்றில் தூதுக் கூறுகள்

 

வ. பாக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113.

 

thoothukal.jpg

 

முன்னுரை

 

வீரம் தமிழரின் உயிர் அவ்வீரத்தைத் தங்கள் கண்ணென போற்றுகின்றனர். விழுப்புண் படாநாளெல்லாம் வீண் நாளாகவே அவர்கள் கருதி வந்தவர்கள். குழந்தை இறந்தால் கூட அதை வாளால் கீறி பின் புதைக்கின்றனர். என புறநானூறு பேசும் அத்தகைய புறநானூற்றில் உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் நாட்டின் பாதுகாக்கும் பொருட்டும், காதல் பொருட்டும் தூது விடப்பட்டுள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

தூது - விளக்கம்

 

இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச் செய்திகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களிடையே தூது அனுப்பும் பழக்கம் உண்டு. தூது என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம், இருவரிடையே சந்து செய்வித்தல், கூழாங்கல், செய்தி, பகை, தானாதிபதி எனப் பல பொருள் தரும், உண்ணும் தாணியங்கள் செரித்தற்காகச் சிறு கற்களை உண்ணும் ஒருவகைப் புறா ‘தூதுணம் புறவு’ எனப்பட்டது. சந்து, தூது, வாயில் ஆகிய மூன்றும் தூதின் பெயர்கள் என நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

சந்து எனும் சொல் சந்தி என்பதிலிருந்து தோன்றியதாகலாம். சந்தி என்னும் சொல், இசைப்பு, கூடுகை, பல தெருக்கூடுமிடம், எழுத்துப் புணர்ச்சி ஆகிய பொருள்களைக் கொண்டதாகும். சேர்த்தல், எதிர்தல், கண்டுகொள்ளுதல் ஆகியன சந்தித்தல் ஆகும் என்கிறார் வே.இரா. மாதவன் அவர்கள்.

 

தூதின் இலக்கணம்

 

பல்வேறு இலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள், தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும் கூறுகின்றன. இலக்கண விளக்கம், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், முத்து வீரியம், பிரபந்த தீபிகை, இரத்தினச்சுருக்கம் முதலிய பாட்டியல் நூல்களில் தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைக் காணமுடிகின்றது. பாட்டியல் நூல்கள் கூறுவது போல, தூது இலக்கியம் பின்வருமாறு அமைகிறது.

 

இலக்கண விளக்கம்

 

''பயிறருங் கலிவெண்பாவினாலே’’ என்ற இலக்கண விளக்கச் சூத்திரத்தின் படி அனைத்துத் தூதிலக்கியங்களும் கலிவெண்பாவினாலேயே இயற்றப்பட்டுள்ளன.

தூது இலக்கணம், கலிப்பாவில் அமைதல் வேண்டும் என்பதை,

"பயில்தரும் கலிவெண்பாபாவினாலே
உயர்திணைப்பொருளையும், அஃறிணைப்பொருளையும்,
சந்தியின்விடுதல்முந்தறுதூதுஎனப்
பாட்டியற்புலவர்நாட்டினர்தெளிந்தே" (இ.விளக்கம் .874)

மொழி பெயர்க்கப்பட்ட மேகதூதும் போன்ற சில நூற்கள் மட்டும் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

 

 

பிரபந்த மரபியல்

 

"எகினமயில் கிள்ளை யெழிலியொரு பூவை
சகிகுயிலெஞ்சந்தென்றல்வண்டு - தொகைபத்தை
வேறுவேறாப்பிரித்து வித்தாரித்து மாலை
கொண்டன்பு ஊறிவா வென்றல் தூது" (பிர.மரபியல்.15)

என்கிறது. அதாவது மயில் முதலாக வண்டு ஈறாக உள்ள பத்துப் பொருட்களில் யாதாயினும் ஒன்றை விடுத்து மாலை வாங்கி வருமாறு கூறல் என்பதாம்.

 

இரத்தினச் சுருக்கம் கூறும் தூதிலக்கணம்

 

“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பழம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுயில்
பேதைநெஞ்சந் தென்றல் பிரமரமி ரைந்துமே
தூதுரைத்து லாங்குந் தொடை” (இரத்தின.சுரு.7)

அன்னம், மயில், கிள்ளை, மேகம், பூவை, பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு எனக் கூறுகிறது.

தூதுப் பொருள் பத்து என்ற வரையறை பிரபந்த மரபியல், இரத்தினச் சுருக்கம் இவற்றில் உரைக்கப்பட்டுள்ளமை கண்டோம். இப்பத்து என்ற வரையறையைத் தாண்டி, பணம், தமிழ், மான், வனசம், சவ்வாது, நெல், புகையிலை, விறவி, துகில், காக்கை, மதங்கி, பொன், கழுதை, பழையது, அன்பு, செருப்பு முதலிய பொருட்களையும், குளளை, சண்பகம், பாரிசாதம், பீச்சி, இருவாட்சி முதலிய மலர்களையும் தூதுப் பொருளாகக் கொண்ட நூற்கள் உள்ளன.

 

தூதின் காலம் - உரிமை

 

"தூதின் பிரிவும் துணைவயின் பிரிவும்
பொருள் வயின் பிரிவும் ஓர் யாண்டு உடைய" (இ.விளக்கம். 458)

இது தூதிற்பிரிவு முதலாகிய மூன்று பிரிவிற்கும் கால வரையறை உணர்த்துகிறது. தூது காரணமாகப் பிரியும் பிரிவும், துணை இடமாகப் பிரியும் பிரிவும், பொருள் காரணமாகப் பிரியும் பிரிவும், ஓர் ஆண்டின் எல்லை ஆகும். என்றவாறு பரத்தையிற் பிரிவுக்கும் காவல் பிரிவுக்கும் கால வரையறைக் கூறார். அவை காடு இடையிட்டும் பிரியப்பாடமையின்.

"வேத மாந்தர் வேந்தர் என்று இருவருக்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும்" (இ.விளக்கம். 443)

இது நிறுத்த முறையானே தூதிற்குப் பிரியும் பிரிவுக்கும் உரியார் இவர். அந்தணரும், அரசரும் என்னும் இருதிறத்தாருக்கும் தூது நிமித்தம் பிரியும் பிரிவு தொழில் உரித்து. இது தூதிற்கு உரிமையைப் பற்றி பேசுகிறது.

"சிறப்புப் பெயர் பெறின் செப்பிய இரண்டும்
உறற்குஉரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும்" (இ.விளக்கம். 444)

அரசனால் சிறப்புப் பெயர் பெற்றாராயின், மேல் கூறிய நாடு காவல் பிரிவும் தூதில் பிரிவும் பொருந்துதற்கு உரிய மரபினவாம், ஏனைய வணிகரும் சூத்திரரும் இருதிறத்தாருக்கும்.

 

 

தூது இலக்கியத்தின் தோற்றம்

 

தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார். அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார். இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன. இந்த நூலின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. இப்போது நாம் ஒரு செய்தியை மனத்தில் கொள்ளவேண்டும். எந்த ஓர் இலக்கியமும் திடீர் என்று தோன்றிவிடாது. ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்கு உரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் காணப்படும் இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

 

தொல்காப்பியத்தில் தூது

 

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைக் கூறும் தொல்காப்பிய நூற்பா,

"ஓதல் பகை தூது இவை பிரிவே" (தொல். அகத்திணை. 27)

தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்குரிய காரணங்களைக் கூறுகின்றார். கல்வி கற்கும் பொருட்டுச் செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர் தொடுத்துச் செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய காரணங்களுக்காகத் தலைவன் செல்வான். அப்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றிய குறிப்பு உள்ளது.

தலைவன் - தலைவியிடத்தும், தலைவி - தலைவனிடத்தும் தூதுவிடும் வழக்கம் மிகவும் தொன்மையான வழக்கம். இதைத் தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிடுகின்றார்.

"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் .கற்பியல் .52)

கற்புக்காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் இவர்களை வாயில்கள் என தொல்காப்பியர் கூறுகின்றார்.

தூது பற்றிய இலக்கியங்கள் பிற்காலத்திலேயேத் தோன்றின. அவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டன. ஆனால், சங்க இலக்கியத்திலேயே நிரம்பக் காணப்படுகின்றன. அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைந்துள்ளன. அவை புறத்தூது, அகத்தூது என இரண்டு வகைகளாக அமைகிறது.

 

 

புறநானூற்றில் தூது

 

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில் புலவர்கள் பாடல்களைப் பாடி உள்ளார்கள். அவை, இரு பெருமன்னர்களுக்கு இடையே நடக்க இருக்கும் போரினை நிறுத்தும் வகையில் உயர்திணை, அஃறிணை தூதுவிடுக்கும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

உயர்திணை, அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன் தலைவியரிடை உண்டு. அது பெரும்பாலும் பிரிவுத்துன்பம் மிகுந்த நிலையில் ஏற்படும். தலைவன் பிரிந்தவிடத்துப் பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில், தன் காதல் மிகுதியையும் ஆற்றாமையையும் அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தூது சென்றுவருமாறு தலைவி வேண்டுவாதாக அமைகின்றன.

 

உயர்திணைத் தூது

 

ஒரு தூதுவன் எவ்வாறு தன்னுடைய பணியை செய்ய வேண்டுமோ அவ்வாறே புலவர் ஔவையார் அவர்கள் செயல்பட்டுள்ளார். தன்னுடைய அரசனுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தொண்டைமானிடம் உன்னுடை படைக்கருவிகள் அனைத்தும் புத்தம் புதிதாக போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் படைக்கருவிகளோ ஓயாது போரில் ஈடுபட்டு நுனி மழுங்கியும், கூர் முறிந்தும் கிடக்கின்றன. செல்வம் உண்டாயின் இல்லாதவர்களுக்கு கொடுத்தும், தன் சுற்றத்தாருடன் கூடிவுண்ணும் தலைமையை உடையவன் எம் வேந்தனுடைய வேல். இங்கு வேல் என்பது கருவியை குறிக்காது வேந்தனுடைய சிறப்பை உணர்த்துகிறது. என்று கூறுவதன் மூலம் அதியனின் பேராற்றலை இகழ்வது போல புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது ‘சிதைந்து கொற்றுறைக் குற்றில’ என்பது பழிப்பது போல புகழ்வது எனும் அணியை பயன்படுத்தியிருப்பது ஔவையாரின் தூது திறத்திற்கு சான்றாக,

"இவ்வே பீலிஅணிந்து மாலை சூட்டி
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றி மாதோ என்றும்
உண்டாயின் பதங் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே" (புறம்: 95)


அதியமான் என்ற மன்னனுக்காக ஔவையார் என்ற புலவர்தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் கருதப்படுகிறது. ஔவையின் தூதை அரண் செய்யும் வகையில் வள்ளுவரின் கூற்று அமைகிறது.

"இறுதி பயப்பினு எஞ்சா இறைவற்கு
உறுதி பயப்பதாந் தூது” (குறள். 690)

இரு வேந்தர்களுக்குமிடையே மூள இருந்த போரை நல்லுரைக் கூறி வலிந்த இளமை கொண்ட பார்ப்பான் ஒருவன் தூதாக சென்று முற்பட்ட வேந்தனையடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய வேந்தனை அடைவதற்குள் அந்நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகுவாராயினர். பகைவர் மதில் கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்மைந்திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு போரைக் கைவிடுவற்கு வேண்டி பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினான். வேந்தன் உடன்பட்டான் தானை வீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். இதன் மூலம் போரை நிறுத்தினான் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது. அது கண்ட வேளாசானுக்கு அப்பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது.

பார்ப்பான் கூறி பின் ஏணியும் சீப்பும், போருக்குத் தயார் நிலையிலிருந்த யானைப்படை அவை அகற்றப்பட்ட செய்தியையும் இப்பாடல் உணர்த்துகிறது.

"வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணி களைந்தனவே" (புறம். 305)

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்" (குறள். 649)

மேலும்,

"தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது" (குறள். 685)

வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்றார் போல் இத்தூதுப் பாடல் அமைந்துள்ளது.

உயர்ந்தோன் தூதாகலின் ‘விழுத்தூது’ என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த ‘நூலரி மாலை’ எனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை ‘ஒருகை யிரும்பிணம்’ என்றார். வாள் திருத்தம் கண்ட மறவன் அஞ்சிப் புறங்கொடுத்தோடக் கண்ட மூதிலாளன், அவன் செயல் மறமுடையார்க்கு இழிவு தருவது பற்றி நாணமுற்று நகைத்தானாகளின், ‘நகும்’ என்றார். இசைப்ப சுடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என செய்ல முடிகிறது. என்பதை கீழ்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

"வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலிற்
றமியன் வந்த மூதி லாளன்
... ... ... ... ... ... நகுமே" (புறம். 284)

பேகன் தன் மனையாளாகிய கண்ணகியை விட்டு முல்லையூரில் பரத்தை இல்லத்தில் பொழுதைக் கழித்தகாலை, பேகனைக் கண்ணகியோடு சேர்த்து வைக்கக் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர்கள் தாமாகவே தூது சென்ற செய்தியைப் புறப்பாடல்கள் கூறுகின்றன. பேகனைக்கான அவன் இல்லம் சென்ற புலவர்களுக்குக் கண்ணகியின் நிலை துயரைத்தர அவன் கூறாமசேயே அவள் துன்பம் கண்டு பொறாராய் தாமே தூது செல்லும் குறிப்பு (143- 146) ஆகிய பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.

அகத்திணையில் ஆற்றாமையே வாயிலாகக் கொண்டு தலைவன் தலைவியைச் சார்தல் போலப் புறத்திணையில் தலைவியின் துயர நிலைக் கண்டு புலவர்கள் தலைவனை நோக்கித் தூதராய்ச் செல்லும் தூதுக் குறிப்பினைக் காணமுடிகிறது.

பகைவர்மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒருதுறை துணைவஞ்சி பகைவருடன் போரிடவந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல் இருபெரு வேந்தர்க்கும் சந்து (தூது) செய்வித்தல் எனவும் கூறப்பெறும் இப்பாட்டில் ‘நெடுமதில் வரைப்பில் இனிதிருந்த வேந்தனொடு மலைத்தல் என்பது நாணத்தக்கது’ என்று கூறிப் போரைத் தடுத்தமையை,

“அடுநை ஆயினும் விடுநை
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மலைத்தனை என்பது நாணுத தகவு உடைத்தே” (புறம்.36)


செறிந்த, பரல்களையுடைய சிலம்பும் நீண்ட கோல் தொழிலமைக்க சிறிய வலையல்களும் அணிந்த பெண்கள் (மகளிர்) குளிர்ந்த பொருனையாற்று மணல் மேட்டிலே பொன்னாலாகிய சுழற்சிக் காய்களைக் கொண்டு வீடு விளையாடுவர். அவர்கள் விளையாடும் வெண்மணற்பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அடிப்பகுதி அகன்ற சுர்மை பெருந்தியதாகவும் நெடிய கைப்பிடியை உடைய கோடாரியைக் கொண்டு நின் வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவர், அதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் பூக்கள் உதிர்ந்து பொலிவழியும், இவ்வாறு சோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையைக் கடந்து அரண்மனையின் இடத்து சென்றொலிக்கும். எனினும் மானமின்ற, இனிதாக அங்கே உரையும் வேந்தனுடன், இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டார் என்பது நாணத்தக்கது.

நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும் அரிசில் கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும் செயல் செவிப்புலனாயிற்று. அவர் அன்பால் அடைந்து அவன் நலம் பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன், அவர் என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று, நீ அருளாமையால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட்பேற்றல் தன் கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேடும் குதிரையும் பூட்டுற்று அவள் மனைக்குச் செல்லுதல் வேண்டும். இதுவே யான் வேண்டும் பரிசில்” என்ற கருத்தமைந்தது இப்பாடல்,

“அன்ன வாகரின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய
வண்புரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே” (புறம். 146)

இத்தூதுப்பாடல் அகம்சார்ந்த செய்தியைத் தாங்கியிருப்பினும் தொல்காப்பியர் விதிப்படி “சுட்டி ஒருவர் பெயர்க்கெனப் பெறர்” இப்பாடல் அகம் என்னும் நிலையிலிருந்து புறத்தைத் தழுவிய நிலையிலிருப்பதைக் காண முடிகிறது.

 

அஃறிணைத் தூது

 

காம மிகுதியால் மனமயக்கம் பெற்று, அஃறிணைப் பொருள்களை முன்னிலைப்படுத்தி உரைப்பதைத் தொல்காப்பியம் வழுவமைதியாகக் கொண்டுள்ளது.

"சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்" (தொல்,பொருள்.2)

என வரும் சூத்திரப் பகுதியில் ‘காமமிக்க கழிபடர் கிளவி’ இன்னது என விளக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். காமப் பொருண்மை பற்றி ஒருசார் நிகழும் பேச்சுக்கள் இவை இவை எனத் தொகுத்துரைக்குமிடத்து இப்பகுதி கூட்டியுரைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு உரையெழுதிய இளம்பூரணர் ‘சொல்லாத மரபினை யுடைவற்றே கெழுமி அவை செய்யாத மரபை ஆண்டுப்படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல் அடக்கியும் என்றவாறு; சொல்லா மரபின ஆவன - புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின செய்யா மரபாவன தூதாச் சேறலும், வருதலும், உளபோலக் கூறும் அவைபோல்வன பிறவும் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி ‘காமமிக்க கழிபடர் கிளவி’ இன்னது எனக் கூறும் விளக்கமாக அமைந்துள்ளது.


ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்து, அவற்றிற்கேற்றபடி அஃறிணைப் பொருள்கள் நடக்கும் உணர்வு பெற்றவை அல்லவேனும், அங்ஙனம் அவற்றை முன்னிலைப்படுத்தி உரைப்பது ஒரு மரபாக இலக்கியவாணர்கள் கொண்டிருந்தனர். ‘இலக்கியம் கண்டதற்கேற்ப இலக்கணம்’ இயம்பப்படுதலின், இங்ஙனம் இலக்கியங்களில் பயின்று வரும் பகுதியைக் ‘காமமிக்க கழிபடர் கிளவி’ என இலக்கணத்துக்கு உட்படுத்தி உரைத்தனர் அறிஞர்.

“அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன் நண்புறு
நன்கலம் நல்குவன் நினக்கே" (புறம் : 67) இந்தப் பாடல் பிசிராந்தையார் என்ற புலவர் பாடியது. அவர், வானத்தில் பறந்து செல்லும் அன்னச் சேவலைப் (ஆண் அன்னத்தை) பார்த்து அன்னச்சேவலே! அன்னச் சேவலே! என்று அழைக்கிறார். அப்பொழுது மாலை நேரம். எப்படிப்பட்ட மாலை நேரம்? நிலவொளி வீசும். துணையைப் பிரிந்த வாழ்வோரை மயங்கச் செய்யும் மாலை நேரம். அன்னச் சேவலானது தெற்குத் திசையில் உள்ள குமரித் துறையில் உள்ள அயிரை என்ற மீன்களைத் தின்றுவிட்டுச் செல்கின்றது. அப்போது பிசிர் ஆந்தையார் அந்த அன்னச் சேவலிடம் தன் செய்தியைக் கூறுகின்றார்.

தூதுவனாக அன்னச் சேவல் அன்னச் சேவலே! நீ வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போகின்றாயா? அவ்வாறு போவாய் ஆயின் இமயமலைக்கும் குமரித் துறைக்கும் இடையில் உறையூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் சோழ நாட்டில் உள்ளது. நீ உறையூருக்குச் சென்றால் அங்கு உள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; அங்கு வாயில் காவலர்கள் இருப்பர்.

ஆகையால், அவர்களுக்கு உணர்த்தாது நீ அரண்மனையின் உள்ளே செல்ல வேண்டும்; அங்கு என் மன்னனாகிய கிள்ளி என்பவன் இருப்பான். அவன் கேட்கும்படி பெரிய பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையின் அடியில் வாழ்வேன் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூறிய உடன் அவன் மனம் நெகிழ்ந்து உன் பெட்டை அன்னம் அணிவதற்கு நல்ல அணிகலன்களாய்த் தருவான் என்று பிசிர் ஆந்தையார் கூறுகின்றார்.

உலக ஒருமைப்பாட்டின் அடித்தளக் காவலர் தூதுவரே. இன்றல்ல வரலாறு காலம் முதலாக அமைந்த நிலையே இது. தூதுவர் இல்லையெனில் ஒருமைப்பாடு ஒழிந்தது என்று பொருள் போரின் முதற்படி தூதுவரை பின்வலித்தல் தானே? இது இன்றைய நடைமுறையில் உலக அரசியல். எனவே, தூதுவர் உலகில் மோதுதல் இன்றிக் காக்கும் காவலராகவே காட்சியளிக்கின்றனர்.

இன்றைய தூதுவர்க்கும் முன்னையத் தூதுவர்க்கும் செயல்பாடுள் ஒற்றுமை வேற்றுமைகள் பல உள. இன்று தூதுவர் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொருவர் நியமனம் பெறுகின்றனர். அந்நாட்டுத் தலைநகரில் அலுவலகம் அமைத்துப் பணித்துணைவர் பலர் சூழப் பணியாற்றுகின்றனர். முன்னைய நிலையோ முற்றிலும் வேறானது உரிய காலையில் தூதுவராய் கோலங் கொண்டு சென்றனர். பொதுத்தன்மை நோக்க, அறிவாற்றல், கூரியமதி, ஆட்சி நிலை தெரிதல், சூட்சித் திறன் மிகுதி இவை தூதுவர்குரிய தன்மைகளாதல் இயல்பு.

தூதுவர் செயலால் நலம் வருதலும் உண்டு. நலிவு உறுதலும் உண்டு. அது அவர்தம் ஆற்றலாலும் அறிவின்மையாலும் முறையே வருவது. தூதுவர் நிலையும் பல்வேறு திறத்தது. கொண்டதைக் கொண்டு கொடுப்பவர் சொன்னதைச் சென்று சொல்பவர், பொருள் தெரிந்து செல்லுமிடத்துச் சூழலும் பிறவும் கண்டு தம் ஆற்றலால் சிறப்பு நல்கிச் செயல்படுவர். என புறநானூற்றின் வாயிலாக அறியமுடிகிறது.

 

பார்வை நூல்கள்

 

1. திவாகர நிகண்டு, திவாகரர்.

2. தமிழில் தூது இலக்கியம், முனைவர் வே.இரா.மாதவன்., அன்னம் பதிப்பகம், தஞ்சை-007.

3. இலக்கண விளக்கம், தஞ்சை சரசுவதிமகால்.

4. பிரபந்த பாட்டியல் (மரபியல்-15), கு.சுந்தரமூர்த்தி, கழக வெளியீடு.

5. தொல்காப்பியம்,(பொருளதிகாரம்), நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு.

6. தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணம், கழக வெளியீடு.

7. புறநானூறு, டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், வெளியீடு,1950.

8. புறநானூறு, ஔவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2015.

9. திருக்குறள், மணிவாசகர் பதிப்பகம், 2007.

10. இரத்தினச் சுருக்கம், கழக வெளியீடு.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 409 கல்லாமை
மணக்குடவர் உரை:கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. குறள் 951: குடிமை
மு. வரதராசன் உரை:நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
மு. கருணாநிதி உரை:விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சாலமன் பாப்பையா உரை:நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2 தெரிந்துதெளிதல்
மு. வரதராசன் உரை:நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
மு. கருணாநிதி உரை:குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9 கல்லாமை
மு. வரதராசன் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
மு. கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3 ஒழுக்கமுடைமை
மு. வரதராசன் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4 ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று
சாலமன் பாப்பையா உரை:பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1 தூது
மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2 பண்புடைமை
மு. வரதராசன் உரை:அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
மு. கருணாநிதி உரை:அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது - குறள் 13:4 அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு. வரதராசன் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை - குறள் 964 மானம்
மு. வரதராசன் உரை:மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

 சாதி என்பது தமிழர்கள் செய்தொழிலால் அமைந்த பிரிவுகளுக்கு வைத்த பெயர். சாதிப்போர் சாதியோர் என்று அவர்கள் மேற்கொண்ட் தொழிலில் சாதிப்போர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல் என்று கூறுகிறார் அயோத்திதாசர்

ஆங்கில சமூகவியல் அறிஞர்கள் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து எடுத்தாளப்பட்ட காஸ்டஸ் என்ற சொல் அடிப்படையில் சமஸ்கிரிதத்தில் ஜாதி என்றழைக்கப்பட்டது வாழும் இடம் சார்ந்ததென்று கருதினர். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பிறந்து கூடி வாழ்ந்த பிரிவினரைக் குறிக்க சேரி என்ற பெயரும் அங்கு வாழ்ந்தவர்களை அடையாளப்படுத்த சாதியையும் குறித்தனர் என்பது சமூகவியலாரின் கருத்து
சாதி தமிழ்ச்சொல்.இலக்கண,இலக்கியங்களில்பயின்றசொல்.தமிழ்ச்சொற்களைச்சங்கதமாக்கச்சிலசித்துவேலைகள்.தானம்-ஸ்தானம்.திரம்-ஸ்திரம்.பெண்சாதிக்குஇணையானசொல்,நல்லசாதிமாடு\ நல்லசாதிமரம்

ஜாதி என்ற சொல் சாதி என்று தமிழில் பழங்காலத்தில் இருந்து உபயோகத்தில் உள்ளது.
வடமொழிகளின் இலக்கியங்களில் ஜாதி என்னும் சொல் பயனாவது போலவே,
அங்கிருந்து தமிழில் தருவிக்கப்பட்டு சாதி (< ஜாதி) என தற்பவமாகப் பயன்படுகிறது.

உ-ம்: இந்தியாவில் மூன்று முதலைச் சாதிகள் உள்ளன.
இடங்கர், கராம் என்பவை - புறநானூறு 37:
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடங்கரும் குட்டத்து உடன்தொக்கு ஓடி
இடங்கர்/விடங்கர் Gharial
கராம் - sea water crocodile (karai = seashore)

மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு - இவற்றில் முதலைகளில் மூவகைச் சாதிகள் என்று
நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். இன்றும் அது இந்தியாவில் முதலைகளுக்குப் பொருத்தம் தான்.
(1) மகரம் - Mugger crocodile living in fresh waters. Mugger (english) < Makara (sanskrit, tamil).
(2) இடங்கர்/விடங்கர் Gharial
(3) கராம் - sea water crocodile (karai = seashore)
groups.google.com/forum/#!topic/houstontamil/lC7RRAFRb7c

தெலுங்கு ஜாதி, கன்னட ஜாதி, பிராமண ஜாதி, வேளாள ஜாதி - பாரதியார் போன்றோர் பயன்படுத்தி உள்ளனர்.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

இக் குறளில் பிறப்பு என்னும் சொல் ஜாதி என்னும் பொருளில் ஆண்டுள்ளார் திருவள்ளுவர்.
மறை ஓதும் பிராமணர் ஜாதிப் பிறப்பு ஆனது ஒழுக்கம் குன்றினால் கெடும் என்கிறார் திருவள்ளுவ தேவர்.

ஜாதி என்ற வடசொல்லை ‘பிறப்பு’ என்று மொழிபெயர்த்தவர் தொல்காப்பியர்.
நால் வருணம் = நாற்பால் என மொழிபெயர்த்தவர் பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் சங்ககால மன்னன்.

பிறப்பே குடிமை - தொல்காப்பியம்
www.tamilvu.org/slet/l0143/l0143ine.jsp?x=274&txt=%F0%A4
”பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த
அந்தணர் முதலிய நாற்குலம். "நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி
விளங்குதல் புலனாகும்.”

சாதி&sup6; cāti, n. < jāti. 1. Family, clan, race; குலம். (பிங்.). 2. Hindu caste. See வருணம். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31, 5). 3. Birth; பிறப்பு. (தொல். பொ. 307, உரை.) 4. Attribute common to a class; ஓரினப்பொருள்களிற் பொதுவாகிய தன்மை. (சி. போ. பா. அவை. பக். 13, சுவாமிநா.) 5. Kind, class, species; இனம். ஆன் சாதிகளே முதல விலங்கு (கூர்மபு. பலவ. 8). 6. That which is superior, genuine; தன்மையிற் சிறந்தது. சாதிமாணிக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 4). 7. Group, multitude; திரள். பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 8. See சாதிமல்லிகை. 9. Ilangilang. See சிறுசண்பகம். 10. Nutmeg. See சாதிக்காய் கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5, 26, உரை). 11. (Mus.) Element of time-measure which specifies the different sub-divisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிரணம் பத்தனுள் ஒன்று. (பரத. தாள. 47.) 12. (Log.) Futile answer; போலியுத்தரம். ஏத்துவாபாச சலம்விளங்குஞ் சாதி (பிரபோத. 42, 5).

சாதி ‘species, Indian caste' < ஜாதி.
சாதித்தல் < ஸாதித்தல் என்னும் வடசொல்.
ஜ, ஸ இரண்டும் ச என்றாகும் தமிழில்.
ஜாதி என்னும் வடமொழிச்சொல்லுக்கான பொருள்கள் மானியர்-வில்லியம்ஸ் வடமொழி அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதைக் கீழே பதிவு செய்கிறேன்.
जाति=மோனியர்-வில்லியம்ஸ் பேரகராதி ஜாதி என்னும் வடசொல்லுக்கு தரும் எல்லாப் பொருள்களிலும் 2000 ஆண்டுக் காலமாக தமிழ் இலக்கியங்களும்
பயன்படுத்துகின்றன. அதாவது, தொல்காப்பியம், திருக்குறளில் இருந்து சிற்சில சான்றுகள் அளித்துள்ளேன்.
பஞ்சமர்கள் பற்றிப் பழைய தமிழில் சொல்லும் முதல் பாடல் என்ன? இவ்விழையில் பார்ப்போம். உபநிஷதத்தில் பஞ்சமர் என்பதைக் குறிக்கும்
சொல்.
நா. கணேசன்

जाति [L=19518]
Jāti, is, f. birth, production; the form of existence, whether as a man or animal, which is fixed by birth; position assigned by birth; rank; family, race, lineage; kind, sort, genus, species, class, tribe, caste; the character or peculiarities of a species, the genuine or true state of anything; reduction of fractions to a common denominator; false generalization; a futile answer, a self-confuting reply; a particular figure of speech in rhetoric; a class of metres; a manner of singing; a fire-place; N. of several plants, = Jasminum Grandiflorum; Emblica Officinalis; mace, nutmeg; [cf. antya-jāti, eka-jāti, dvi-jāti; cf. also Lat. gens; Lith. pri-gentis.]   
tamizhtharakai.wordpress.com/ -- தாரகை

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 793 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் - குறள் 306 வெகுளாமை
மு. வரதராசன் உரை: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை - குறள் 456 சிற்றினஞ்சேராமை
மு. கருணாநிதி உரை:மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் - குறள் 822 கூடாநட்பு
மு. வரதராசன் உரை:இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
மணக்குடவர் உரை: நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது

மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் - குறள் 884 உட்பகை
மு. கருணாநிதி உரை:மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள் 462 தெரிந்துசெயல்வகை
மு. வரதராசன் உரை:ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 452 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 454 சிற்றினஞ்சேராமை
மு. கருணாநிதி உரை:ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு - குறள் 57:8 வெருவந்தசெய்யாமை
சாலமன் பாப்பையா உரை: தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. குறள் 454: சிற்றினஞ்சேராமை
மு. கருணாநிதி உரை:ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 446 பெரியாரைத் துணைக்கோடல்
மணக்குடவர் உரை:தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.
மு. வரதராசன் உரை:தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 458 சிற்றினஞ்சேராமை
சாலமன் பாப்பையா உரை:மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 459 சிற்றினஞ்சேராமை
சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். குறள் 460: சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
மு. கருணாநிதி உரை:நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 698 மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு. வரதராசன் உரை:அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 223 ஈகை
மு. வரதராசன் உரை:யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
மு. கருணாநிதி உரை:தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
மு. வரதராசன் உரை: இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958 குடிமை
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
மு. கருணாநிதி உரை:என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956 குடிமை
மு. வரதராசன் உரை:மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960 குடிமை
மு. வரதராசன் உரை:ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 1019 நாணுடைமை
மு. வரதராசன் உரை:ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

 குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 898 பெரியாரைப் பிழையாமை
சாலமன் பாப்பையா உரை: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் - குறள் 602 மடியின்மை
மு. கருணாநிதி உரை:குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மு. வரதராசன் உரை: மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 793 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 608 மடியின்மை
மு. கருணாநிதி உரை: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 133
மு. வரதராசன் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 953 குடிமை
மு. வரதராசன் உரை: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.

நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
சாலமன் பாப்பையா உரை: பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
மு.வரதராசனார் உரை:நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய
அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே
பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681 தூது
மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி - குறள் 887 உட்பகை
சாலமன் பாப்பையா உரை:செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி - குறள் 888 உட்பகை
சாலமன் பாப்பையா உரை: அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 9922
மு. கருணாநிதி உரை: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்
சாலமன் பாப்பையா உரை:எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

 
Permalink Reply Quote 
More indicator.png

மனிதனின் அறிவு எதற்கு??
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356: மெய்யுணர்தல்
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
தமிழர் மெய்யியல் மரபாக இறைவனை அடைந்து பிறவி இல்லாத மோட்சம் அடைவதே வள்ளுவரே தன் குய்றளின் அடிப்பாஇ என அறன் வலியுறுத்தல் முதல் குறளாய் சொல்லி உள்ளார்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
மணக்குடவர் உரை:முத்தியுந் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
திருக்குறள் பண்டை தமிழ் இலக்கியங்கள் மொழியியல் வளர்ச்சியில் இடைக் காலத்தை சேர்ந்தது எனக் கொள்ள இயலும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் நூல் தொகுப்பான சங்கத் தமிழ்- 1ல் பேராசிரியர் அகத்தியலிங்கம் காட்டுவார். திருக்குறள் யாத்து ஒரு 100 ஆண்டிற்குள் எழுந்த உரையே தமிழ் சமணர் மணக்குடவர் உரை ஆகும்
திருக்குறளின் மீதான பண்டை தமிழ் மரபில் எழுந்த திறனாய்வு பாடல்களே திருவள்ளுவமாலை, இவற்றில் உள்ளவை 10 - 16ம் நூற்றாண்டு இடையே வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை

8. மாமூலனார்.
அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.
விளக்கவுரை : அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை, மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

9. கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி.
விளக்கவுரை : அறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின், அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும், ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

15. கோதமனார்
ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா--ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.
விளக்கவுரை : பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

18.ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.
விளக்கவுரை : எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

23. வெள்ளிவீதியார்
செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்
விளக்கவுரை :ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

24. மாங்குடி மருதனார்
ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
விளக்கவுரை :திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

28. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.
விளக்கவுரை :நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்

30.பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.
விளக்கவுரை : எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.

37.மதுரைப் பெருமருதனார்
அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.
விளக்கவுரை :திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.
42. செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
விளக்கவுரை :திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.

இந்தியாவில் நுழைந்து 9000லட்சம் கோடிகளை கொள்ளை அடித்து, 10 கோடி இந்தியரைக் கொன்று அழித்தது மிஷநரிகள் கீழான கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி. கல்விமுறையை சிதைத்து, காலனிய கிறிஸ்துவ மூடத்தன அடிமைகளை பெரும்பாலௌம் உருவாக்குவதே இன்றைய பல்கலைக் கழகங்களின் தன்மை

இங்கே பலரது பிராமண வெறுப்பு என்பது ..
அவர்களது சுத்தம்.. ஒழுக்கம்.. வாழ்க்கை அழகியல் மீதான பொறாமை குமுறல்களாகவே இருக்கின்றன
கிறிஸ்துவ மோசடி உரை ஓலை சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தேவநேயப் பாவாணர் கூட்டணி வழக்கு



__________________


Guru

Status: Offline
Posts: 24736
Date:
Permalink  
 

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். குறள் 959:குடிமை
மணக்குடவர் உரை: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
மு. வரதராசன் உரை:இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958:குடிமை
மணக்குடவர் உரை: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:குடிமை
மணக்குடவர் உரை:உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். குறள் 956:குடிமை
மணக்குடவர் உரை: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
சாலமன் பாப்பையா உரை: குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். குறள் 954: குடிமை
மணக்குடவர் உரை:பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.
மு. கருணாநிதி உரை: பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. குறள் 953:குடிமை
மணக்குடவர் உரை: முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.
மு. வரதராசன் உரை: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952:குடிமை
மணக்குடவர் உரை: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
மு. வரதராசன் உரை: உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. குறள் 951: குடிமை
மணக்குடவர் உரை: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
மு. வரதராசன் உரை: நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

 

திருக்குறள் மக்களுக்கு வாழ்வியல் வழிகாட்டி நூல், எனவே வள்ளுவர் மக்கள் சமுதாயப் பிரிவுகளான தொழில் பிரிவான அந்தணர்- கல்வி- இறைப்பணீ, அரசர்- நாட்டு நிர்வாகம், பாதுகாத்தல், வணிகர்(உறபத்கியாளர்- உழவர் உட்பட), இந்த மூன்று பிரிவிற்கும் உதவும் சூத்திரர் என்பதை அப்படியே ஏற்றும் உள்ளார், இந்த ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனி தனி அறங்கள் வழிகாட்டலும் தந்தும் உள்ளார்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. குறள் 124: அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு.வரதராசனார் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கல்லாமை
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். பெருமை குறள் 973:
மு.வரதராசனார் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது குறள் 1075: கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். குறள் 1076:கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். குறள் 1078:கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். குறள் 1079 கயமை

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964: மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952: குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958: குடிமை

வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை

வைசிய- வாணிகர்/உழவர் பற்றியதானது

ஷத்திரிய பற்றியதானது
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை
மு.வ உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல்
மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

சூத்திரர் -நான்காவது பற்றியதானது

அந்தணர் பற்றியதானது

மறை குறள் 27
பார்ப்பான், ஓத்து குறள் 134
அந்தணர் நூல் அறம் - குறள் 543
அறுதொழிலார் நூல் - குறள் 560
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:நீத்தார் பெருமை
மணக்குடவர் உரை:நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று. வருங் குற்றங் கூறிற்று.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30: நீத்தார் பெருமை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8: கடவுள் வாழ்த்து

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21:நீத்தார் பெருமை
மணக்குடவர் உரை: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்பு தலைக்கொண்மார்
நசைதர வந்தோர் பலகொல்? புரையில்
நற்பனுவல் நால் வேதத்[து]
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல
புறநானூறு 15— நெட்டிமையார்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard