New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்கத்தா குரான் வழக்கு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கல்கத்தா குரான் வழக்கு
Permalink  
 


 கல்கத்தா குரான் வழக்கு

¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
திரு @sp.Chockalingam அவர்களின் சுவரிலிருந்து
மும்மின்களே! மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை கொல்லுங்கள். அவர்கள் மீது போர் தொடுங்கள். அவர்கள் உங்களது கொடூரத்தை உணரவேண்டும். அவர்களிடத்தில் இணக்கம் காட்டாதீர்கள். விடாப்பிடியாக அவர்களிடம் சண்டையிடுங்கள்
…… (குர்ரான் - சுரா 9, அயஹ் 123).
மும்மின்களே நீங்கள் காஃபீர்களிடம் (சிலை வழிபாடு செய்பவர்கள்) சண்டையிடவில்லை என்றால் அல்லா உங்களை கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்துவார், மேலும் அவர் உங்களுக்கு பதிலாக மற்றவர்களை புனிதப்போருக்கு அனுப்புவார்
…… (குர்ரான் - சுரா 9, அயஹ் 39).
புனித மாதம் முடிந்த பிறகு காஃபீர்களைப் பார்க்கும் இடங்களிலெல்லாம் வெட்டி சாயுங்கள். அவர்களை கைது செய்யுங்கள். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். பதுங்கி இருந்து அவர்கள் மீது திடீர் தாக்குதல் புரியுங்கள்.
. …. (குர்ரான் - சுரா 9, அயஹ் 5).
ஹிமான்ஷு குமார் சக்ரவர்த்தி கிழக்கு வங்காளத்தை (பங்களாதேஷ்) சேர்ந்த இந்து. பாரத பிரிவினையின் போது லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதை கண்ணுற்றார். பின்னர் கிழக்கு வங்காளம் பாக்கிஸ்தானிடமிருந்து பிரிந்த போது நடைபெற்ற போரின் போது நடந்த வன்முறைகளிலும் லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைப் பார்த்து வேதனைப்பட்டார், விரக்தியுற்றார். இஸ்லாமியர்களின் வன்முறைகளிலிருந்து தப்பிக்க அவர் கல்கத்தாவில் தஞ்சம் புகுந்தார்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்களில் முஸ்லீம்கள் இந்துக்களின் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள், இந்துக்களை கொலை செய்கிறார்கள், இந்து பெண்களை கற்பழிக்கிறார்கள், அவர்களது சொத்துக்களை சூறையாடுகிறார்கள், முடிவில் அவர்களது வாழ்க்கையையே நிர்மூலமாக்குகிறார்கள்.
முஸ்லீம்களின் இந்த செயல்பாட்டின் பின்னணி என்ன? ஏன் அவர்கள் அதீத வன்முறையில் ஈடுபடுகின்றனர், ஏன் மூர்க்கமாக செயல்படுகின்றனர் என்று ஆராயத் தொடங்கினார் சக்ரவர்த்தி.
சக்ரவர்த்தி குர்ரானை முழுவதுமாக படித்தார். அதில் உள்ள ஹாதித்துக்கள் என்ன சொல்கின்றன என அலசினார். குர்ரானில், மேலே குறிப்பிட்டது போன்ற பல வாசகங்கள் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளது என்ற முடிவிற்கு வந்தார்.
சக்ரவர்த்தி தன்னுடைய முடிவைத் தொடர்ந்து, மேற்கு வங்காள உள்துறை செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இந்திய தண்டனை சட்டம், பிரிவு 153 A மற்றும் 295 ஆம் பரிவுகளின் படி, யாரேனும் ஒருவர் எழுத்தாலோ, வார்த்தையாலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தினாலோ, மற்றவரின் மதத்தை அவதூறு செய்தாலோ, இரு சமூகத்தினரிடையே சண்டை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, மத அடிப்படையில் ஏதேனும் வன்முறையில் ஈடுபட்டாலோ, அவர்கள் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், எந்த ஒரு புத்தகமோ, செய்தித்தாளோ அல்லது ஆவணமோ இந்திய தண்டனை சட்டத்தின் மேற்கூறிய சட்டவிதிகளுக்கு புறம்பாக கருத்துகளை வெளியிட்டால், அரசாங்கம் அந்த வெளியீடுகளின் ஒவ்வொரு பிரதிகளையும் பறிமுதல் செய்ய, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 95 வது பிரிவின்படி அறிவிக்கை -Nணிtடிஞூடிஞிச்tடிணிண வெளியிடலாம் என்ற விதியையும் சுட்டிக்காட்டி, குர்ரானை தடை செய்யவேண்டும் என்று சக்ரவர்த்தி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் சக்ரவர்த்திக்கு வரவில்லை.
சக்ரவர்த்தியை தொடர்ந்து சந்த்மால் சோப்ரா என்பவரும் குர்ரானை பறிமுதல் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை அரசாங்கத்திற்கு விடுத்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சந்த்மால் சோப்ரா விவகாரத்தை விடுவதாக இல்லை. அவர் அடுத்தபடியாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 226 ஆவது பிரிவின் கீழ் ரிட் மனு வழக்கை, 1985 ஆம் வருடம், தாக்கல் செய்தார். அந்த வழக்கில் குர்ரானில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, அவை வன்முறையை தூண்டுகிறது என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும், எனவே அரசாங்கம் குர்ரானின் அனைத்து பிரதிகளையும் பறிமுதல் செய்யவேண்டும் என்றும் பரிகாரம் கேட்டார்.
வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதி பத்மா கஸ்தகீர், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, குர்ரானை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று அரசாங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
நோட்டிஸ் கிடைத்தவுடன் தூங்கிக்கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் அரசாங்கம் விழித்துக்கொண்டது. சந்த்மால் சோப்ரா தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எதிர்வாதம் செய்தது.
குரானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்ட விவரம் அறிந்த இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடலாயினர். காஷ்மீரிலும், பீகாரிலும் ஹர்தால், கடை அடைப்புகள் நடத்தப்பட்டன. காஷ்மீர் முதல்வர் தலைமையில் கண்டன ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஸ்ரீ நகரில் நடைபெற்றன. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட பத்மா கஸ்தகீரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. பாக்கிஸ்தான் அரசு, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு மத சுதந்திரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டது. பங்களாதேஷில் கலவரம் மூண்டது. இதில் பல அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
முஸ்லீம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் மத்திய காங்கிரஸ் அரசு களத்தில் இறங்கியது. இந்துக்களின் சார்பாக எந்த வழக்கிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் அரசும், மார்க்ஸிஸ்ட் அரசும் குரானுக்கு எதிரான வழக்கில் வருந்தி கட்டிக்கொண்டு தங்களது ஆர்வத்தையும், அக்கறையையும் காட்டியது. மத்திய அரசு தன்னையும் இந்த வழக்கில் ஒரு பார்ட்டியாக (கட்சியாக) சேர்த்துக்கொள்ளும்படி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அட்டார்னி ஜெனரல் (இந்திய அரசு தலைமை வழக்கறிஞர்) மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஆஜாராகி ரிட் மனுவை எதிர்த்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா கஸ்தகீர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பிமல் சந்திர பசக் என்பவர் குரான் வழக்கை விசாரித்து, அனைவரும் எதிர்பார்த்தபடி வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிபதி பிமல் சந்திர பசக்கின் தீர்ப்பில் பிசகு இருக்கிறது என்று சந்த்மால் சோப்ரா, மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னாளில் பிமல் சந்திர பசக்கிற்கு நீதித் துறையில் உயர் பதவிகள் கிடைத்தன. ஆனால் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பத்மா கஸ்தகீருக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
இந்த வழக்கின் விவரங்களை ஒரு தொகுப்பாக்கி, அதை “கல்கத்தா குரான் வழக்கு” என்ற பெயரில் சீதாராம் கோயல் புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டதற்காக சந்த்மால் சோப்ராவை மார்க்ஸிஸ்ட் அரசாங்கம் கைது செய்தது. சீதாராம் கோயலை கைது செய்ய முற்பட்ட போது அவர் தப்பி ஓடி தலைமறைவு ஆகிவிட்டார். முடிவில் மதச்சார்பின்மை வென்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது அம்பேத்கரா?
 

திரு @sp.Chockalingam (

) அவர்களின் சுவரிலிருந்து

 

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிக்கும் முதல் நபராக நான் இருப்பேன்

-- அம்பேத்கர்

 

1953 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில், ராஜ்ய சபையில் ஆளுனர்களுக்கு கூடுதலான அதிகாரம் வழங்குதல் குறித்த விவாதம் நடந்த பொழுது.....

 

 

"சார், என்னுடைய நண்பர்கள் சொல்கிறார்கள் நான் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று. ஆனால் நான் கூறுகிறேன் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிக்கும் முதல் நபராக நான் இறுப்பேன். எனக்கு அது தேவையில்லை. அது யாருக்கும் பொருந்தவில்லை.........."
-------பி. ஆர். அம்பேத்கர்.

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு சுமார் 65 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பலர் நினைத்துக்கொண்டிருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது அம்பேத்கர் என்று. ஆனால் உண்மை அதுவன்று.

1940 களில் இந்தியர்களிடம் சுதந்திர வேட்கை கொளுந்துவிட்டு எரிந்தது. இரண்டாம் உலகப்போரும் இங்கிலாந்திற்கு சாதகமாக முடிந்தது. இனிமேல் காலனி ஆதிக்கம் செல்லுபடியாகாது என்று உணர்ந்த ஆங்கிலேய அரசாங்கம், இந்தியாவில் தங்களுடைய 300 ஆண்டுகால ஆட்சியை முடித்துவிட்டு வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

 

சுதந்திரம் கொடுத்த பின், அரசாங்க நிர்வாகத்தை இந்தியர்களிடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் இந்தியர்கள் இந்தியாவை ஆளத் தேவையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கவேண்டும். இதை நிறைவேற்றும் பொருட்டு, இங்கிலாந்து அரசாங்கம் கேபினட் மிஷன் என்ற ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது.

 

ஆங்கிலேய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 17 மாகாணங்கள் இருந்தன. அந்த மாகாணங்களிலெல்லாம் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாகாண ஆட்சியை நிர்வகித்து வந்தனர். முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாகாணங்களில், முஸ்லீம் லீக் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்தப் பகுதிகள்தான் இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ். மற்றையப் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தது.

கேபினட் மிஷனின் பரிசீலனையை ஏற்றுக்கொள்வதில் காங்கிரஸுக்கும், முஸ்லீம் லீக்கிற்கும் பல முரண்பாடுகள் இருந்தன. அதனால் கேபினட் மிஷன், தன் பரிசீலனையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. பின்னர் கேபினட் மிஷன் திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

கேபினட் மிஷன் திட்டத்தின் படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க இந்திய அரசியல் தலைவர்கள் ஆயத்தமானர். அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படவேண்டுமென்றால், அதற்கான அரசியல் நிர்ணய சபையை தோற்றுவிக்கவேண்டும். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களையும் மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆனால் அதற்கு போதுமான அவகாசம் இல்லை. ஏற்கனவே மக்களால் மாகாண உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலமாக அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இந்த சபையில் மொத்தம் 217 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 15 பெண்கள் அடக்கம். மொத்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் 69 சதவீதத்தினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி, யூனியனிஸ்ட் கட்சி மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக்கு நேரடியாக உட்படாத பாரத துணை கண்டத்தைச் சேர்ந்த 554 சுதந்திர இராஜ்ஜியங்களின் பிரதிநிதிகளாக சுமார் 93 உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்துகொண்டனர்.

இந்த அரசியல் நிர்ணய சபையில் அனைத்து தரப்பு மக்களும் இடம்பெற்றிருந்தனர். முதலாளித்துவ கொள்கையுடைய தொழில் அதிபர்களும் இருந்தனர், மாக்சிய பற்றாளர்களும் இருந்தனர். முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களின் நலனைக் காப்பாற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

 

இந்த அரசியல் நிர்ணய சபையே, இந்தியாவின் முதல் பாராளுமன்றமாகவும் செயல்பட்டது. முஸ்லீம் லீக், பாக்கிஸ்தான் என்ற தன்னுடைய தனி நாடு கோரிக்கையை முன்வைத்து, அரசியல் நிர்ணய சபையை விட்டு வெளியேறியது. பின்னர் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் பாகிஸ்தான் நாட்டு அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

 

இந்திய அரசியல் நிர்ணய சபை, தன்னுடைய முதல் கூட்டத்தை 1946ம் வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி கூட்டியது. டாக்டர் இராஜேந்திர பிரசாத், இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். துணை தலைவராக ஹரேந்திர குமார் முக்கர்ஜி பொறுப்பேற்றார். சர் பி. என். ராவ் அரசியல் நிர்ணய சபையின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டார்.

அரசியல் நிர்ணய சபை ஐந்து கட்டங்களாக செயல்பட்டது. முதலில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க தேவையான அடிப்படை சாராம்சங்கள் என்னென்ன என்று முடிவுசெய்யப்படவேண்டும். இதற்காக மற்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். இரண்டாவதாக, அடிப்படை சாராம்சங்கள் முடிவுசெய்யப்பட்ட பிறகு, அதற்கான முன்வரைவை அரசியல் நிர்ணய சபையின் சிறப்பு ஆலோசகரான டாக்டர் பி.என்.ராவ் தயாரிக்கவேண்டும். மூன்றாவதாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா தயார் செய்யப்படவேண்டும். பின்னர் அதை பொது மக்கள் விவாதத்திற்கு உட்படுத்தி விமர்சனங்களைப் பெறவேண்டும். நான்காவதாக அரசியல் சாசன வரைவு மசோதாவில் தேவையான சட்டத் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். ஐந்தாவதாக அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

மேற்சொன்ன கட்டங்களை நிறைவுசெய்ய பல கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கமிட்டிக்கும் ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு,

 

Committee on the Rules of procedure - Rajendra Prasad
Drafting Committee B.R.Ambedkar
Steering Committee Rajendra Prasad
Finance and Staff Committee Rajendra Prasad
Credential Committee Alladi Krishnaswamy Iyer
Languages Committee Moturi Satyanarayana
House Committee B. Pattabhi Sitaramayya
Order of Business Committee K. M.Munshi
Ad hoc Committee on the National Flag Rajendra Prasad
Committee on the Functions of the Constituent Assembly G. V. Mavalankar
States Committee Jawaharlal Nehru
Advisory Committee on Fundamental Rights, Minorities, Tribal
and Thanulinganadar Ex Mpcluded Areas Vallabhbhai Patel
Minorities Sub-Committee Harendra Coomar Mookerjee
Fundamental Rights Sub-Committee J. B. Kripalani
North-East Frontier Tribal Areas and Assam. Excluded & Partially Excluded Areas Sub-Committee Gopinath Bardoloi
Excluded and Partially Excluded Areas (Other than those in Assam) Sub-Committee A.V. Thakkar
Union Powers Committee Jawaharlal Nehru
Union Constitution Committee Jawaharlal Nehru

 

அரசியல் நிர்ணய சபை, சரியாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்களுக்கு செயல்பட்டது. இந்த காலகட்டத்தில், அரசியல் நிர்ணய சபை 165 நாட்களுக்கு 11 முறை கூடியது.

 

நவம்பர் 26 ஆம் தேதி 1949ம் வருடம் அரசியல் நிர்ணய சபை, அரசியலமைப்புச் சட்டத்தின் வடிவத்திற்கு ஒப்புதல் அளித்தது. இவ்வாறாக அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட வடிவமானது, ஜனவரி மாதம் 26 ஆம் தேதி 1950ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தேதியைத் தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1952ம் ஆண்டு, இந்திய ஜனநாயகத்திற்கு முதல் தேர்தல் நடைபெறும் வரை அரசியல் நிர்ணய சபை செயல்பட்டது. பின்னர் அது கலைக்கப்பட்டது.

 

இந்திய அரசியல் நிர்ணய சபைதான் இந்திய தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் தேர்ந்தெடுத்தது. அரசியல் நிர்ணய சபை செயல்பட அரசாங்கம் செலவு செய்த தொகை 64 லட்ச ருபாய் ஆகும்.

 

எனவே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியது அம்பேத்கர் என்று யாரேனும் சொன்னால் அது ஏற்புடையதாகாது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா தயார் செய்த குழுவின் தலைவர், அவ்வளவே.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard