1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும் அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட "Modern Asia and Africa, Readings in World History" பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971. அந்தணர்களைக் குறித்து சேவியர் கூறியதற்கு ஒப்ப மத்திய கால ஐரோப்பாவில் யூதர்கள் குறித்தும் கட்டுக்கதைகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது உண்மையில் யூதர்கள் ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என அறிவார்கள் என்றும் ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவதாகவும் கூறப்பட்டுவந்தது,)
கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிட்டது. "குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து இந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள்
உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. இந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து
துரத்தப்பட்டனர்." என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing House,Bombay,1988.)