New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமஸ்கிருதம் மொழி-கி.மு. 1500 viduthalai


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சமஸ்கிருதம் மொழி-கி.மு. 1500 viduthalai
Permalink  
 


முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா?

 
 
 

குறிப்பு : இன்று "இந்தியா" தேசம் என்பதிலும் நமது நாட்டிலும் நடந்து வரும் புரட்டு நீண்ட நாளாகப் பார்ப்பனர் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றிவரும் இமாலயப்புரட்டும் இந்து மதம், மத ஆதார நூல்கள், மதக்கடவுள்கள், சமஸ்கிருதம், இந்திமொழி அவை பற்றிய பெருமைகள் ஆகியவைகளுமாகும். நீண்ட நாளாகவே நமது நாட்டில் இவை பற்றிய உண்மையை உண்மையாய் அறிந்தவர்கள் மிக அருமை. "அறிந்துள்ள சிலரும் கோழைகள் - சுயநலத்திற்கு எதையும் விற்பவர்கள் ஆக இருந்து வருகிறார்கள்.

எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட புரட்டுகள் இத்தனை நாட்கள் நின்றதில்லை. எந்த ஒரு நாட்டு மக்களும் இப்படிக் காட்டுமிராண்டிகள் போல் ஏமாற்றப்பட்டதில்லை.

ஆகையால், இவைகளைப் பற்றி அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இந்த ஏமாற்றத்திலிருந்து மக்களை வெளியாக்க வேண்டியது இன்றைக்கு அவசியமாகும்.

அரசியலையே முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை . முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள்தான் எல்லாத் துறையிலும் ஆதிக்கமும் ஆட்சியும் செலுத்துவார்கள். அதுதான் ஜனநாயகமாகும்.

என்ன சொல்லுகிறீர்கள்?

- ஈ.வெ.ரா.

 



-- Edited by Admin on Wednesday 14th of August 2019 08:51:11 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குறிப்பு : இன்று "இந்தியா" தேசம் என்பதிலும் நமது நாட்டிலும் நடந்து வரும் புரட்டு நீண்ட நாளாகப் பார்ப்பனர் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றிவரும் இமாலயப்புரட்டும் இந்து மதம், மத ஆதார நூல்கள், மதக்கடவுள்கள், சமஸ்கிருதம், இந்திமொழி அவை பற்றிய பெருமைகள் ஆகியவைகளுமாகும். நீண்ட நாளாகவே நமது நாட்டில் இவை பற்றிய உண்மையை உண்மையாய் அறிந்தவர்கள் மிக அருமை. "அறிந்துள்ள சிலரும் கோழைகள் - சுயநலத்திற்கு எதையும் விற்பவர்கள் ஆக இருந்து வருகிறார்கள்.

எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட புரட்டுகள் இத்தனை நாட்கள் நின்றதில்லை. எந்த ஒரு நாட்டு மக்களும் இப்படிக் காட்டுமிராண்டிகள் போல் ஏமாற்றப்பட்டதில்லை.

ஆகையால், இவைகளைப் பற்றி அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இந்த ஏமாற்றத்திலிருந்து மக்களை வெளியாக்க வேண்டியது இன்றைக்கு அவசியமாகும்.

அரசியலையே முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை . முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள்தான் எல்லாத் துறையிலும் ஆதிக்கமும் ஆட்சியும் செலுத்துவார்கள். அதுதான் ஜனநாயகமாகும்.

என்ன சொல்லுகிறீர்கள்?

- ஈ.வெ.ரா.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

புரிந்துகொள்வீர்!

பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசி வந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும். சமஸ்த்த ம் + கிருதம் = சமஸ்கிருதம் சமஸ்த்த ம் = யாவும் கிருதம் - சேர்த்துச் செய்தது என்பது பொருள்.

* பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவ தில்லை.

* அவர்களது லவுகீக வாழ்க்கையில் உலக வழக் கில் எந்த காரியத்திற்கும் அவர்கள் சமஸ்கிருதத்தைக் காரியத்தில் பயன்படுத்துவதும் இல்லை.

* சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்கும், மற்றும் எவர்க்கும் எந்தக் காலத்திலும் தாய்மொழியாக, பேசும் மொழியாக இருந்ததும் இல்லை.

* இப்பார்ப்பனர்களின் மூதாதையர் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசித்தவர்கள் அல்ல; அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஏதாவது ஒரு மொழியையே பேசி வந்தவர்களும் அல்ல.

* அவர்கள் வாழ்ந்த நாடு பல நாடுகள்.

* அவர்கள் பேசிவந்த மொழிகள் பல மொழிகள்.

* இந்த உண்மைகளை ஒரு அளவுக்கு விளக் கவே சமஸ்கிருதம் பற்றிய கட்டுரையில் குறிப்பாகச் சிலவற்றை விளக்குவோம்.

* இதுபோலவேதான் அவர்கள் (பார்ப்பனர்) மத மான இந்துமதமும் ஆதாரமும் அடிப்படையும் இல்லா மல் எதை எதையோ சேர்த்து, கதம்பமாகக் கற்பித்துக் கொண்ட மதமாகும்.

* மற்றும் இது போலவேதான் அவர் (பார்ப்பனர்)களுடைய பல கடவுள்களும் பல நாட்டு மக்கள் காட்டுமிராண்டித் தன்மையில் அவரவர்கள் சவுகரி யத்திற்கு ஏற்ப சமயோசிதம்போல் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளை, தாங்களும் அதே தன்மையில் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டவை ஆகும். இவற்றைப் பற்றிப் பின்னால் விளக்குவோம்.

* பார்ப்பனர்களுக்கு அடிப்படை ஆதாரம் என்பது யாவற்றிற்கும் வேதமாகும். அந்த வேதம் ஒன்றல்ல; பல.

* அவை ஒருவரால் அல்ல; பல பேர்களால் சொல்லப்பட்டவை.

* அந்தப்படிச் சொல்லப்பட்டதும் ஒரு காலத்தில் அல்ல; பல காலங்களில்.

* அவை ஏதாவது ஒரு குறிப்பில் குறித்து வைக்கப்பட்டிருந்தவை அல்ல; வாய்ச் சொல்லில் வாக்கு ரூபமாக இருந்து, அடிக்கடிக் கூட்டியும் குறைத்தும் திருத்தியும் கூறிவந்தவையாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பப் பலரால், சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்பப் பொருள் கூறப்பட்டு வந்தும், பிறகு அப்பொருளுக்கு ஏற்ப மூலம் மாற்றப்பட்டு வந்தும், இன்றைக்கும் விவாதத்திற்கு நிற்காத முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

* வேதத்தின் துவக்கமானது செல்வம், பொருள், சுகபோகம் பற்றிய பேராசை இலட்சியமேயாகும்.

* பிறகு, இந்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை யைப் பார்த்து பொறாமையும் ஆத்திரமும், கொண்டு அவர்களை எதிரிகளாகக் கருதி வசவு கூறிச் சாபம் இடுவதேயாகும்.

* இவைகளுக்கு ஏற்பக் கற்பித்துக் கொண்ட வைதான் வேதத்தில் காணப்படும் தேவர்கள் என்பவர் களுமாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பக் கற்பனையும் முக்கியத்துவமும் கொண்டவைதான்.

இவைகளைப் பற்றியும் பின்னால் விளக்குவோம்.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல;

அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி

அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்ப தாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkse) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீனியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரி யர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந் தனர். முதலாவது கி.மு.1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.

மற்றும், சமஸ்கிருத மொழி இந்தியாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படை யெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டு உள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப் படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவ கப்படுத்தப்பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ் தானியில் சான்ஸ் கி ரிட் என்று உச்சரிக்கப்படு கிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண் டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர். சமஸ்த = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது

- என்பதே இதன் பொருள். "என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா" என்ற ஆங் கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலி யஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

"சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண் டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்" இவர் விளக்கி யுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழி யிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார்.

சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச்சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், "சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டியானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டா ரத்திலோ தோன்றியதல்ல" என்று கருத்து வெளியிட் டிருக்கிறார்.

இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென் பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்த வர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவு படுகிறது.

பிறந்த விதம்

இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற் றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேத கால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத்திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று

எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழியிலிருந்துதான், இந்தியா வின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற்றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந்தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ்விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோ னேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா? - 2

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.8.2019 (செவ்வாய்க்கிழமை) தொடர்ச்சி...

 

ஹிந்துஸ்தானி

இவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம், இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக் கிருதி) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ்வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான இந்தோனேஷியர்களைத் தெற்கில், தக்காணத் துக்கும் கிழக்கில் வங்காளக் குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய - இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.

நார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பர்மீரிய, பாரசீக, கிரேக்க மொழிப்பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ் கிருதமெனப்பட்டது.

இந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழி யென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி, அப்போதிருந்து வந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மொழிகளின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனே ஷிய மொழியிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ் தானி)யும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ்கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும் அப்போ திருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமையிடம் கொண்டன.

சமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருதமும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் சுட்டிக் காட்டுகிறார்.

மற்ற மொழிகளைவிட இந்த சமஸ்கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது; இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.

இன மனித உட்பிரிவுகள்

தென்கிழக்கு ஆசிய மக்களின் இனப்பிரிவைத் திட்ட வட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கியமாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை:-

1. இந்தாஃப்ரிக்கர் (கருப்பர்)

2. துரேனியர் (மஞ்சள் - சிவப்பு)

3. ஆரியர் (மாநிற - வெள்ளை)

இப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து, வசிக்கின்றனர்.

துரேனியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெ ரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர்.

ஆரியர்கள் முக்கியமாக இந்தியாவிலும், ஈரானிலும் (பாரசீகம்), அய்ரோப்பாவிலும், வடக்காஃப்ரிக்காவிலும், தென்னாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர்.

இந்தாஃப்ரிக்கன் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப்பிரிவினையின் அடிப்படையிலே வந்தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்து உள்ளன; அடைந்து வருகின்றன. கெதேயில் குடியேறும் வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேனியர்களும் (துருக்கியர்) (சுமேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட் டைட்சும் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக்கையில் குறைவாகவிருந்ததால், தங்களைவிட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத் தையும் கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் கைக் கொண்டனர்.

நார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டைட்ஸ் மொழியிலிருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப்பட்டன.

நார்டிக்குகளின் படையெடுப்பு

துரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியேறினர். இவ்வட்டார மக்களின் மொழிக்கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச்சாரத்தைப் போன்றதே.

இவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்த போது இவர்களுடைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்த போது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் ஏழு ஆற்று நாட்டில் - (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வரலாற்றுக்கு முக்கியமானதாகிறது.

கி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந் தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்குதல் கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங் களாகி விட்டனர்.

இந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைத்து ஒடுக்கினர்.

வடகிழக்கு ஈரானில் குடியேறியவர்களில், குடியேறிய இந்த நார்டிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆரீ-சோராங்மீ-பாஸியானி ஆகியோர்.

ஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.

ஆரியர் என்ற சமஸ்கிருத மொழியிலிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல்மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.

சிதறிய நார்டிக்குகள்

இந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழு வினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது! தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர், இப்போது வட ஆஃப்கானிஸ்தானத்திலுள்ள பால்க் என்பது.

தொக்காரி, குஷான்கள், எப்தாலைட்ஸ், சாக்கே, சாக்கி யர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக்கொண்டனர். இவர் கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட் ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக்குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியா வுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்பதற்கு பல் வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

அலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப் போதுள்ள சமஸ்கிருதமொழி அப்போது அங்குக் கிடையாது.

இப்போதைய சமஸ்கிருதம்

குஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே.

மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங்களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடியினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றியதெனலாம்.

கி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார்.

இவற்றையெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது? அதன் அடிப்படை மூலம் என்ன? எம்மொழிகளிலிருந்து பிறந்தது? இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது? என்பன, சந்தேக மறத் தெளிவுபடுகின்றன.

இந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்திய சமஸ்கிருத மொழி வரலாறு

இந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருதமென்றும் இருவகைப்படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டி லிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டது என்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணீய இந்தியா காலத் தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப்படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத்திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது.

இந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும்.

இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியா வுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப் படுகிறது.

இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டா ரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களு டைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக் கிறது.

வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளி வாகிறது.

சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய - செல்டிக் - ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளிலுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.

இந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய - ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.

எனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற் காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத் துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது.

ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தியா வில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாகவு மிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி - தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா? - 3

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.8.2019 (வியாழக்கிழமை) தொடர்ச்சி...

பாக்ட்ரியானாவிலிருந்த இந்த வடக்கத்தித் தலைவர்கள் அடிப்படையில் கிரேக்கர்களேயாகையால், இவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது திருத்தப்பட்ட நார்டிக் மொழியை (சமஸ்கிருதம்) இந்தியாவில் நுழைக்க அதிக அக்கறை கொள்ளவில்லை.

கி.மு. 58இல் வட இந்தியாவில் ஆண்ட குஷான் குலத் தினரே இந்த சமஸ்கிருத மொழியை வட இந்தியாவில் பரப்பும் பணியை மேற்கொண்டனர். முதலாவது கனிஷ்கர் வடமேற்கு இந்தியா வட்டாரங்களைப் பிடித்த பின் இந்த சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் கருத்துச் செலுத்தினார்.

இதற்குமுன், நாட்டு மொழிகளுடன் கிரேக்க மொழி தான் ஆட்சித் துறையில் கைக்கொள்ளப்பட்டிருந்தது. கனிஷ்கர் காலத்தில் கிரேக்க மொழி, நாட்டு மொழிகளினி டத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டு அரசாங்க மொழி யாயிற்று.

பாக்ட்ரியானாவுக்கு வருமுன் நார்டிக் - ஆரிய தொக் காரிகளின் மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும், பாக்ட்ரி யானாவில் அந்நாட்டு மக்கள் மொழிகளைத் தழுவி கி.மு. 546-330இல் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக கி.மு. 330-126இல் கிரேக்கர் காலத்தில் அதிக மாறுதல் பெற்று உருமாற்றமடைந்தது, இந்த சமஸ்கிருத மொழி.

எனவே, இப்போது வழங்கப்படும் நவீன சமஸ்கிருதம் அரசுத் துறையில் கி.மு.58ஆம் ஆண்டு வாக்கில்தான் நுழைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. இது ஆட்சி ஆதிக்கம் கொண்ட இனத்தவர்களின் மொழியாகவிருந்த தால் ஆளப்பட்ட இந்நாட்டுப் பழங்குடி இலக்கியப் புலவர் கள் இந்த அயல்மொழியை ஏற்றுக் கொள்ள அதிக காலமாயிற்று.

சமஸ்கிருதம் ஒரு தாய்மொழியல்ல

மேலேயுள்ள வரலாறுகளால் விளக்கமாவது என்ன?

வேதகால சமஸ்கிருத மொழியும், நவீன சமஸ்கிருத மொழியும் மேற்கு இந்தியாவில் அந்நிய நாட்டினரால் நுழைக்கப்பட்டவை என்பதும், இவற்றிலிருந்து இப்போது வழக்கிலுள்ள சமஸ்கிருத மொழி இந்தியாவின் பழங்கால மொழிகளுக்குத் தாய்மை மொழியாக இருக்க முடியாது என்பதும், சமஸ்கிருதம் பிறப்பு வகையிலும், இந்தியாவில் இடம்பெற்ற வகையிலும் அண்மைக்காலத்தினதே என்ப தும், அதாவது அண்மைக்காலத்தில் பிறந்து அண்மைக் கால இந்தியாவில் இடம்பெற்ற மொழியே என்பதும் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) தெளிவுபடுகிறது.

பர்மிரியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், பல புதிய மொழிகளையும் நுழைத்தனர். வடமேற்கில் வழங் கப்படும் ஹிந்தி (இந்துஸ்தானி) மொழியும் இதிலொன்று. இம்மொழி இரானிய (பாரசீக) மொழியிலிருந்து பிறந்தது. மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் படை எடுத்தவர்கள் அண்மைக்காலத்தில் நுழைத்ததே இம்மொழியும். இதுவும் அண்மைக்கால நுழைவு மொழி என்பதற்குப் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

இந்த ஆராய்ச்சியில் அறியக்கிடப்பது என்னவென்றால்:

தற்கால ஆரிய மொழிகள் எல்லாம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் வழங்கிய இந்தோனேஷிய மொழியிலிருந்தே பிறந்தவை என்பதும், திராவிட மொழி களுக்கெல்லாம் பிற்பட்டவை என்பதும், திராவிட மொழிக ளிடையே முன்னணியிலும் பின்னணியிலும் அலைந்து கொண்டிருந்ததென்பதும், படை எடுப்பாளர்களுக்குச் சாதக மாக இருந்ததென்பதும் ஆகும்.

தற்கால புலவர்கள் தீட்டியுள்ள மொழி வரலாற்று நூல்கள் முழு ஆராய்ச்சியின் சித்திரமாக இல்லை. மக்களின் இனம், மொழி, பிறப்பு வளர்ச்சி வரலாறுகளில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தாமலேயே சரித்திரம் தீட்டி விடுகின்றனர். மக்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அந்தந்தக்கால பண்பு கள் கோட்பாடுகள் அவர்கள் பேசிய வெவ்வேறு மொழி களின் அடிப்படை வளர்ச்சி வரலாறுகள் அம்மொழிகள் எங்கெங்கே எவ்வெப்போது பேசப்பட்டன; எங்கெங்கே எவ்வெத் துறைகளில் மாற்றங்களடைந்தன; எதனால் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன முதலிய வரலாறுகளையும் கண்டு தொகுத்திருந்தால், சரித்திர வரலாறுகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இத்துறையில் போது மான ஆதாரங்கள் இன்மையால் இம்மொழி வரலாற்று ரகசியங்களை அறிவது கடினமாகவுள்ளது.

ஆரிய இனமொழி

"ஆரியன்" என்ற பெயர் இரானிய இனமான ஆரியை (Arii) என்பதன் அடிப்படையாக வந்தது; மொழி பழக்க வழக்கங்களும் மேற்படி இனத்தவரதே. இந்த ஆரிய இனமொழியிலிருந்தே சமஸ்கிருதம் வந்தது.

சமஸ்கிருத மொழியின் அடி வரலாற்றைத் திட்டவட்ட மாக அறிய பல்வேறு நார்டிக் மக்கள் ஒன்றாக இருந்த அடிநாளிலிருந்து, பின்னர் பல்வேறு காலங்களில் பல்வேறி டங்களில் பேசிய மொழிகளின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் வழங்கிய இந்தோனேஷிய மொழியை, ஈரானியர் சுலைமான் மலைகள் வழியாக ஈரானிய பீட பூமிக்குக் கொண்டு சென்றனர். இந்தக்காலம் முதல் அம்மக் களின் வாழ்க்கைத் துறைகளிலும் மொழித் துறைகளிலும் பற்பல மாறுதல்கள் ஏற்படலாயின.

கி.மு. 7700-7500 ஆண்டு வாக்கில் நார்டிக்குகள் துரேனியர்களுடன் தொடர்பு கொண்டு வந்துளர்.

மேற்கு துருக்கிஸ்தானத்தில் கி.மு. 7500ஆம் ஆண்டு வாக்கில், சுமேரியர்கள் காலூன்றிய காலத்தில், நார்டிக்குகள் வடமேற்காகப் படர்ந்து தமது தாயகமான கெத்திக் நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அதன்பின் கி.மு. 4300 வரை... அதாவது மேற்கு துருக்கிஸ்தானில் சுமேரியருக்கு பதில் ஹிட்டைட்சுகள் ஆதிக்கம் கொண்டபோது, இரு இனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மொழி பழக்க வழக்கத் தொடர்புகளே அதிகம் கவனிக்க வேண்டிய தாகும். அடுத்து 2000 ஆண்டுகளில் நார்டிக்குகளின் எண் ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவே அவர்கள் தனித் தனிக் குழுவினராகப் பிரிந்து பல திக்குகளிலும் பரவினர்.

தற்கால சமஸ்கிருத மொழியிலுள்ள ஈரானிய, பாரசீக, பாமீரிய, கிரேக்க மொழிக் கலப்படங்களை நீக்கிவிட்டால், இது பழங்கால மாஸாகெட்டே அல்லது தேக்காரி மொழி யாகும். கி.மு. 1000-750இல் வழங்கிய சாக்கிய மொழியும் இவ்வாறே இருக்கும்.

மொழிகளின் தாயகம்

பல்வேறு ஆரிய மொழிகள் பிறந்த அடிப்படைத் தாய் மொழியும், இந்தாஃப்ரிக்கன் மொழிகளும், துரேனியன் மொழிகளும் பிறந்த தாய்மை மொழியும், வங்காளக் குடாக் கடல் கரையோரத்தை அடுத்த வட்டாரங்களிலும் அல்லது இந்தியாவின் உட்பகுதியிலும் பிறந்தனவேயாகும். மற்றும், இப்போது தக்காணத்தில் வசிக்கும் திராவிட மக்களின் மூதாதைகள் பேசிவந்த தொன்மை மொழியிலிருந்தே, இந்த ஆரிய மொழிகளும் மற்ற மொழிகளும் பிறந்தவையாகும்.

கன்னடம், துளு, குடகு, தோடா, கோட்டா, குருக்ஸ், மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி ஆகிய திராவிட மொழிகள் பால்-திணை ஆகியவைகளுக் காக பல்வேறு குறிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளன.

ஜாவா, சுமத்திரா, மலேயா வட்டாரங்களிலும், வங்கக் கடற்கரைப்பகுதியிலும், இன்னும்பல தொன்மை மொழிகள் பேசப்படலாம்.

இந்தாஃபிரிக்க இனத்தார் வடமத்திய இந்தியாவிலும், துரேனியர்கள் பர்மாவிலும் அதற்கு வடகிழக்கு வட்டாரங் களிலும், ஆரியர்கள் வடமேற்கு இந்தியாவிலும் இருப்ப தாகக் கொள்ளலாம். மற்றும் துரேனிய இனத்தார், திபேத்திய பீடபூமியின் கிழக்குச் சரிவுகளிலும், ஆரிய இனத்தார் சுலபமாக மலைகளைக் கடந்து இரானிய பீடபூமியிலும் இண்டஸ் (சிந்து) ஆற்றின் மேல் படுகை வழியாகக் காஷ்மீரிலும், மேற்குத் திபேத்திலும் (இறுதி குடியேற்றம் கி.மு. 6000) அதற்கு அப்பாலும் குடியேறினரெனலாம்.

இந்தாஃப்பிரிக்கா இனத்தார். கிழக்கு முகமாக பசிபிக் தீவுகளுக்கும், மேற்கு முகமாகத் தென் அராபியா, ஆஃப் பிரிக்கா மூலமாகவும், இந்தோனேஷிய ஆரியர்களால் விரட்டப்பட்டனர். இந்தோனேஷிய ஆரியர்களும் பனிக் கடுமையால் வட இந்தியாவிலும், தென்முகமாகத் தக்காணத் திலும் பரவ வேண்டியதாயிற்று. இது கி.மு. 5000 வாக்கில் நடந்தது. எனவே, ஆரிய இனத்தைத்தோற்றுவித்தவர்களும், இப்போது தக்காணத்திலுள்ள திராவிட மக்களின் இந்தோ னேஷியக் கிளை மூலமாக மூதாதைகளே என்கின்றனர். இந்தாஃபிரிக்கர்கள் வெளியேறியதும் இந்தோனேஷியர் சிந்து நதி வட்டாரத்தில் குடியேறினர். சுலைமான் மலையைக் கடந்து திரும்பி வந்த இரானியர் (ஹிந்துக்கள்) வட தக்காண திராவிட மக்களிடையே ஊடுருவினர். இந்த ஆராய்ச்சியில் காணும் முடிவுக் கருத்தாவது:-

1. திராவிடருக்கு முற்பட்ட மக்கள்

ஜாவா, சுமத்ரா, மலேயா, இலங்கை, ரோடியர், பெருகுயீச் சுவா, வங்காளக் கடலின் இருமருங்கு கரையோர வட்டார மக்கள்.

2. தக்காண திராவிடர்

கன்னடம், துளு, குடகு, கோடா, கோட்டா, குருக்ஸ் (குறும்பர்), மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி மொழி பேசுபவர்கள் இவர்கள் நீண்ட தலை மக்கள். இது அடிப்படை முக்கியம்.

3. இந்தோனேஷியர்

இது வடமேற்கில் பரவிய இனம்; திராவிட மொழியில் திருத்தம் செய்து பேசியவர்கள் வங்க மொழியின் அடிப் படையிலும், பசிபிக் தீவிலுள்ள போலினேஷியர் மொழி களின் அடிப்படையிலும் ஒப்பனை காணலாம். இந்தா ஃபிரிக்கன், துரேனிய மொழிகளுடன் இவைகளும் தோன்றி யிருக்கலாம். இவர்களும் நீண்ட தலையுடைய மக்களே.

4. ஈரானியர்கள்

(மத்திய தரைக்கடல் வட்டாரத்தினர் - ஹாமைட்கள், ஹிந்துக்கள்):

மத்தியதரை வட்டாரத்தினர் - மொழி வட்டாரங்கள் - கருங்கடலுக்கு தெற்கே ஈரான், அரேபியா, பழங்கால எகிப்து, கீரீட், மத்தியதரை முகத்துவாரப் பகுதிகள், ஹாமைட்கள் வட்டாரங்கள்: மேற்கு இந்தியா, தென் ஈரான், எத்தோபியா (அபிசினியா) பிற்கால எகிப்து.

ஹிந்து - ஈரானிலும் இந்தியாவிலும் ஹிந்தி மொழிகள் பேசும் வட்டாரங்கள்.

அடிநாளில் இவ்வினத்தவர்களும், இந்தோனேஷியர் களிடமிருந்து தோன்றியவர்களே; இவர்களும் நீண்ட தலை களையுடையவர்களே.

5. செவ்ட்டோ ஸ்லாவ்ஸ்

சிறிய தலையுடையவர்கள்; பாமீரியர், ரஷ்யாவிலுள்ள ஸ்லாவ்கள், பால்கன் முதலிய வட்டார மக்கள், அண்ட் டோலியாஹெலன்கள், கிரீசிலும் சுற்று வட்டாரத்திலும், வசிப்போர், மத்திய அய்ரோப்பிய ஆல்பைன்ஸ் கெல்டல் கள் (இத்தாலி, சய்பீரியன் தீபகற்பம், மத்திய ஃப்ரான்ஸ், கிழக்கு ஃப்ரான்ஸ் ஆகியவைகளில் வசிப்போர் உட்பட) இவர்களும் ஆதி இந்தோனேஷியரிடமிருந்து உற்பத்தி யானவரே.

6. நார்டிக் மக்கள்

உருண்ட தலையர்களான ஆரிய மக்கள், சூவியர் நார்வீ ஜியர், சுவிடன் மக்கள், பிரிசீயர், ஆங்கிலர், சாக்ஸன்கள், துரிங்கியர், ப்வேரியர், செம்னோனிய அல்லது சுவாபியர், அலிமன்னியர், கிம்மேரியர் - மேதியர், சூர்டுகள், தோரியர், அல்பேனியர், மற்றும் வீசர். வெரா ஆறுகளுக்கு மேற்கிலும் உர்டன் பர்க் தன் பேடன், அல்சாசுக்கு வடக்கிலும் மேற்கு ஃப்ரான்சிலும் வடக்கு ஃப்ரான்சிலும் வசிப்போர் (மத்தியதர வட்டார புருனட்டுகளையும், அல்பைன் கெல்டுகளையும் ஆங்கிலோ சக்ச்களைத் தவிர்த்தும்).

கேதே-சுவிடன், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகியவற்றிலுள்ள கோத்கள்.

மாஸ்ஸநேத்தே, வடகிழக்கு ஈரான், தோக்கரி, குஷான் பாக்ட்ரியானா, எப்தாலைட்கள்.

சாக்கே:- சாக்யோனியாவில் வசிக்கும் வூசுன்கள் உட்பட இறுதியில் கூறப்பட்ட இரு இனத்தவரில் இந்தியாவில் சிந்தோ இந்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்களின் சந்ததியாருமுளர். இவர்கள் மொழி சமஸ்கிருதம்.

சார்மேதியரான போலந்தியர், உக்ரேனியர், கிம்மேரியர் கெத்தே இனத்தவர்கள் கலப்பட சந்ததியார்.

இவர்கள் கெல்ட்டோஸ்லாவ் இனத்திலிருந்து உற்பத்தி யானவர்கள். இயற்கை மாறுதல்களால் நாளடைவில், ஏற்பட்ட உட்பிரிவுகளால் இவர்கள் தனித்தனியாயினர். எனவே, அடிநாள் வரலாற்றைக் கொண்டுதான் இவர்களு டைய அடிநாள் உற்பத்தியையும் இனத்தையும் கணிக்க முடியும்.

எனவே, மேற்கண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆரியர்கள் என்பவர்கள் பல இடங்களில் பராரியாகத் திரிந்த பல கூட்டங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிப்போன ஒரு கலப்பு இனக்கூட்டம் என்பதும் இவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியாகவும் மதமொழி யாகவும் பாவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வேத மொழி என்று கூறி ஏமாற்றுப் பிரச்சாரம் செய்யும் சமஸ்கிருத மொழி என்பதானது, பல பிரிவு மக்கள் பல இடங்களில், பல காலங்களில் பேசிவந்த பல்வேறு மொழிகளின் சேர்ப்பு மொழியே தவிர, ஒரு குறிப்பிட்ட கால குறிப்பான மொழி அல்ல என்பதும், இதில் எவ்விதமான உயர்வுத் தன்மையும் கிடையாது என்பதும், பார்ப்பனர் அதைப்பற்றி உயர்வாக பேசுவதும் பிரசாரம் செய்வதும் தங்கள் சமய-மத கோட் பாடுகளை உயர்த்திக் கொள்ளவும் நமது மொழிகளை இழிவுபடுத்தவுமே ஆகும் என்பதும் நன்றாய் அறியப்படு கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியாரவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

 

ஆரியர் இயல்பு

ஆரியர் என்பவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு நாடோ, ஊரோ, குறிப்பிட்ட மொழியோ, கொள்கை கோட்பாடுகளோ கிடையாது. அவர்கள் நாடோடியாக இருந்து பல நாட்டின ரின் கொள்கை. கோட்பாடுகள். மொழிகள் ஆகியவற்றிலி ருந்து தங்கள் சுயநலத்திற்கு ஏற்றவற்றைத் தொகுத்துக் கொண்டு தங்களைத் தனிப் பிறப்பினமாகக் கூறிக்கொள் கின்றனர். இந்த திருட்டுச் சொத்தின் வண்டவாளத்தை பிறர் சந்திக்கு இழுக்காதிருப்பதற்காகத் தெய்வீகம், தெய்வத்தின் அருள் மொழிகள், தெய்வீகத்தின் மக்கள் என்றும் பொய்யா கப் பிரசாரம் செய்து தங்களுக்குச் சிறப்புத் தேடிக்கொண் டனர்.

மற்றும், தாங்களே உயர் சாதியார் - மேல் இனத்தார் என் றும், மற்றவர்கள் எல்லாம் தங்களுடைய அடிமைகள், தாசி புத்திரர்கள், தாசர்கள் என்றும் கூறி அதற்கான ஆதாரங் களை சமஸ்கிருத வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எனப்படும் நூல்களில் எழுதி வைத்துக்கொண்டு பிறமக் களை ஏமாற்றி அதிகாரம் செலுத்திச் சமுதாயத்தின் பெய ரால், மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி சுரண்டிப் பிழைத்து வருகின்றனர்.

அறிவுக்கொவ்வாத இந்தக் கோட்பாடுகளையும், சுரண் டல்களையும் ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்தும், சுரண்டலிலி ருந்தும், அவர்களால் நேர்ந்துள்ள மானக்கேடான நிலைமை யிலிருந்தும் திராவிட மக்கள் மீட்சிபெற்று தன்மான - தன்ன றிவு - தன்னியக்க மக்களாக வாழ்ந்து உயர் நிலைமை பெற வேண்டும் என்பதாக தன்மான இயக்கத் தந்தை பெரியார வர்களும் திராவிடர் கழகத்தினரும் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக திராவிட மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்கள் நல்லறிவு பெற பகுத்தறிவாளர்களாகச் செய்து வருகின்றனர்.

இதைக்கண்டு பார்ப்பனர்கள், பெரியாரவர்கள் செய்து வரும் பிரச்சாரம் வெறும் கற்பனை என்றும், ஆதாரமற்ற தென்றும் எதிர்ப்பிரச்சாரம் செய்து மக்களின் அறிவுக் கண் ணில் மண் தூவ முயற்சித்து வருவதும் அறிந்ததே. அண் மையில் காங்கிரசு ஆட்சி மூலவர்களும்கூட இந்தக் குருட்டுக் கோட்பாடு வேதாந்தப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டு, தங்களுடைய அரசியல் ஆதிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தித் திராவிட மக்களை இழிவுபடுத்தும் ஆரியக் கோட்பாடுகளுக்கும் புராண இதிகாச கட்டுக் கதைகளுக்கும் ஆக்கம் தேட முற்பட்டிருப்பதும் அறிந்ததே.

பெரியார் அவர்களும் மேற்படி கருத்துக்களை, பகுத் தறிவு கொண்டு கணித்தறிந்துதான் கூறி வருகிறார். வேதம், மதம், புராணங்களிலுள்ள மனிதத் தன்மைக்கும், பண்புக்கும், நடைமுறைகளுக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் தகுதி யற்ற கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் கண்டு தான் அவைகளின் தகுதியற்ற தன்மையை அம்பலப்படுத்தி வருகிறார். ஆனால், இது இவர் மாத்திரம் கற்பனை செய்து கூறுவதாக பார்ப்பனர்களும், வைதீகர்களும் செய்து வரும் பிரச்சாரம் முற்றும் பொய்; சுயநலப் பித்தலாட்டம் என்பதற்கு உலக வரலாற்று ஏடுகளில் ஏராளமான ஆதாரங்கள் இருக் கின்றன.

மேனாட்டுப் பேரறிஞர்கள் மாத்திரமின்றி, தமிழ்நாட்டு அறிவாளர்களும் பார்ப்பனப் பிரமுகர்களும் வங்காளத்தில் தினேஷ் சந்திரசென் போன்ற சரித்திர சமுதாய ஆராய்ச்சிப் பேரறிஞர்களும் தக்க ஆதாரங்கள் தந்துள்ளனர்; தந்து வருகின்றனர்.

முன்ஷி குழுவினர் நூல்

முன்னர் டில்லி சர்க்கார் உணவு மந்திரியாக இருந்து, இப்போது அய்க்கிய மாகாணக் கவர்னராக இருப்பவரும் வடமொழிப் புலமையாளரும் சரித்திர ஆராய்ச்சியாளரும், பார்ப்பனருமான திரு.கே.எம். முன்ஷியை தலைவராகவும் மற்றும் பெரும் ஆலை முதலாளியான ஜி.டி.பிர்லாவைத் துணைத் தலைவராகவும், ஆந்திர பார்ப்பனரும் உலகப் புகழ் பெற்ற தத்துவ சாஸ்திரியும் இப்போது இந்திய சர்க்கார் துணை ஜனாதிபதியாகவிருப்பவருமான டாக்டர். ராதா கிருஷ்ணன், சென்னை பார்ப்பனர் மகா சபைத் தலைவரும் சென்னை அட்வகேட் ஜெனரலாக முன்னர் வேலை பார்த்தவருமான திருவாளர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி மற்றும் சில வடக்கத்திக் கலைஞர்கள் ஆகியோரை உறுப் பினர்களாகவும் செயலாளராகவும் கொண்ட பாரத இதிகாச சமீதி என்றொரு கழகம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. சமஸ் கிருத வேதம், பிராமண மதம் ஆகியவற்றிற்கு உயிரளிப்பதே இக்கழகத்தின் குறிக்கோள் என்பது அக்கழக அமைப்பே சுட்டிக்காட்டும்.

இக்கழகத்தார் இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நூல் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். முதல் தொகுப்பு இப்போது வெளிவந்துள்ளது. வேதகாலம் என்ற தலைப்பில் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சிக் கருத்துக்கள், பெரியாரவர்களின் கருத்துக்களை முழு அளவுக்கு ஆதரிப்பதாகவுள்ளன. பார்ப்பனர்களைத் தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் கொண்ட கழகம் பார்ப்பன ஆராய்ச்சி அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களுடைய விருப்பு வெறுப்பு களுக்கு ஏற்ப வடிகட்டியும் திருத்தியும் வெளியிட்டுள்ள நூலில் அதுவும் இந்திய சர்க்காரின் சரித்திர ஆதார ஏடாக மதிப்பும் பெறும் சரித்திர நிகண்டில் (என்சைக்ளோபீடியா) பெரியாரவர்களுடைய கருத்துக்கும் அவர் கூறிவரும் மெய்மைகளுக்கும் சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நூலுக்குத் திரு.கே.எம்.முன்ஷியே முன்னணிச் சிறப்புரையும் தந்திருக்கிறார். சமஸ்கிருத - வேத நூல் காப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களுமான பார்ப்பன பேரறிஞர்கள் தொகுத்துள்ள இந்நூலில் பெரியாரவர்கள் கூறும் மெய்மைகளுக்கு ஆதாரமாகத் தரப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்களை மாத்திரம் தொகுத்தளிக்கிறோம் பகுத்தறிவுலகத்தின் நேர்மை நியாயத்தை பொதுமக்கள் கண்டு தெளிவடைய வேண்டும்.

மேலும், சுயநலக் கும்பல்களின் பித்தலாட்டப் பிரசாரம், சுயநல வேடம் ஆகியவற்றை அறிந்து மெய்யறிவு பெற்று தன்னிறவு தன் சக்தியை பயன்படுத்தி, திராவிட மக்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே நல்வழி வகுத்துக்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால், தெய்வத்தின், சமுதாயத்தின் பெயரால், விதி பிறவியின் பெயரால், கூறப்படும் உயர்வு - தாழ்வு பொய்க்கூற்றுகளை ஒதுக்கித்தள்ளி, எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற உயர்நோக்கத்துடன் தான் இக்கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

புராணங்கள் கற்பனையே

புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது. இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புக்களே என்று திரு. முன்ஷி இந்நூலின் முன்னுரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார் (பக்கம் - 8).

எனவே, வேத - இதிகாச புராணங்கள், இந்தியாவில் வசித்த முற்கால மக்கள் வரலாறு என்பது பொய்யாகிறது. இந்நாட்டு மக்களுக்குரியதல்லாத கற்பனைக் கோட்பாடு முட்டுக்கட்டைகளே வேத புராணங்கள் என்ற மெய்யும் உறுதிப்படுகிறது. வைதீக கோட்பாடுகளுக்கு சரித்திர அடிப்படை இல்லை என்றும் திரு.முன்ஷியார் வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

மற்றும், ஆரியர்கள் அனாதி காலமக்கள் (கடவுள் புத்திரர்) சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று கூறப்படும் கூற்றை இந்நூலுக்கு முன்னுரை தந்துள்ள பேராசிரியர் ஆர்.சி.மஜும்தார் என்பவரே பொய்ப்படுத்துகிறார்.

அதாவது, ஆரியர்கள் சிந்து வெளியில் குடியேறுவதற்கு முன்பா - பின்பா நாகரிக மக்களாயினர் என்று நிர்ணயிப்பது கடினம் என்று கூறி, மாக்கள் நிலையிலும் நாடோடிகளாக வுமிருந்த ஆரியர் சிந்து வெளியில் குடியேறி அங்கிருந்த பழங்குடி மக்களுடன் கலந்து வாழ்ந்தபின் தான் அறிவு வளர்ந்த மக்களாயினர் என்ற உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

உபநிஷத்துக்களும் புராணங்களும்

மற்றும், வேதகாலத்தையும் உபநிஷத்துகள் சூத்திரங்கள் ஆகியவற்றின் காலத்தையும் திட்டமாக நிர்ணயிக்க முடியவில்லை என்கிறார். மற்றும், வேதவித்துகளெனப்படும் உபநிஷத்துக்களுக்கும் பிற்கால புராண இதிகாச கதைக ளுக்கும் தொடர்பு காண இயலவில்லை என்றும், கி.மு. 7ஆவது 8-9ஆவது நூற்றாண்டுகளென சுமாராக அதுவும் யூகத்தால்தான் கணித்து இந்நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தொகுப்பு அன்றென்றும் பலர் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சேர்த்த தொகுப்பென்றும் இந்த முன்னுரையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் நீதிபதிகளின் கூட்டுத் தீர்ப்பு போன்றதேயாகும். அதாவது, மறுக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகிறது. அதுவும், வேதகாப்பாளர் எனப் படும் பார்ப்பன அறிஞர்களின் தீர்ப்பு நகலாகிறது.

மற்றும், இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள கருத்துக் களுக்கு ஆதாரமாக, பேராசிரியர் ராதாகிருஷ்ணனும் (ஆந்திர பார்ப்பனர் - பந்துலு) மற்றும் வட இந்திய - மேனாட்டு ஆராய்ச்சியாளரும் எழுதிய நூல்களும், சர்க்கார் வசமுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி ஏடுகளுமான சுமார் நூற்றைம்பது ஏடுகளின் பெயர்ப் பட்டியலும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

ரிக்வேதம் முதலிய ஆரியமத நூல்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்டவை என்று இந்நூல் கணித்துக் கூறுகிறது.

வேதங்கள்

வேதங்கள் இந்திய நாட்டு அரசியல் வரலாற்றை அறியத் துணையாகவில்லை. மத - கலாசார வரலாறுகளே காணப் படுகின்றன. எனவே, மக்களின் பழைய வரலாறு யூகத்தால் தான் அறியவேண்டியுள்ளது. இந்த யூகக் கருத்துக்களைப் பலர் பலவாறு வெளியிட்டுள்ளனர். அவை பலவகைச் சந்தேகங்களுக்கும் இடமளிக்கின்றன.

பிற்கால சரித்திரக் குறிப்புக்களிலும் புராணங்கள் ஊடு ருவி மெய்வரலாற்றைக் கணித்தறியவியலாது செய்துள்ளன. ஆந்திரர் ஆட்சி முடிவுக்கு முன் 3000 ஆண்டுகளின் நாட்டு வரலாறு, சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டே யூகிக்க வேண்டியுள்ளது. - என்று இந்நூல் கருத் துத் தெரிவிக்கிறது. எனவே, இந்த புராண வரலாறுகளும், வேதக் கூற்றுகளும் பிராமணியக் கருத்துக்களும் சரித்திர ஆதாரமற்றவை என்பதாகிறது.

அதாவது, சாதாரண நாவல்கள், கட்டுக்கதைகள் என்று தான் தீர்மானிக்கச் செய்கிறது. ஆரிய மதக் கூற்றுக்கு ஆதா ரமாக இருந்த சரித்திர ஏடுகள் நாசமாகி விட்டதாகவும் கட லுண்டுவிட்டதாகவும் கூறப்படும் கூற்றுகளும் வெறும் புராணப் புளுகுகளே வாகின்றவென்பது, இந்நூலில் சுமார் 100 பக்கங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் எண்ணச் செய்கிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் விளக்கம்

வேதம் என்றால் அறிவு ஞானம் என்பதே பொருள். இந்த வேதங்கள் சுருதிகளைக் கொண்டவை. சுருதி என்றால் கேட்கக்கூடியது என்றே பொருள்.

(இசைக் கருவிகள் இப்போது இசை சுருதி - (சுதி) கூட்டப்படுவது அறிந்ததே. பிராமண மதப் பிரமாணங்களை (கொள்கைகளை)க் கொண்டதே இது. இந்த வேதம் நான்கு:

1. ரிக் வேதம்

2. யஜுர்வேதம்

3. சாம வேதம்

4. அதர்வணவேதம்

இவைகளில் பல கடவுள்களின் (தேவர்கள்) பெயர் காணப்படுகின்றன.

பிராமணன் என்றால் தலைமைப் பூசாரி. வேதச் சடங்குகளில் தலைமை வகித்துக் கண்காணிப்பது இவர்கள் பொறுப்பு. இவர்களுக்குத் தனி வேதநூல் கிடையாது. மற்ற முப்பிரிவுப் பூசாரிகளின் வேதங்களை அறிந்து அதற்கான நடைமுறைகளைக் கவனிப்பதே இவர்களுக்கு வேலை. பூசாரிகளில் பிராமணர் நான்காம் பிரிவினர். பிராமணர்களே பிரமாணங்களைத் தோற்றுவித்துக் கொண்டனர்.

இந்தப் பிரமாணங்கள் அரண்யகா உபநிஷத்துக்கள் என்ற பிரிவினதாகும். அரண்யகா என்றால் காட்டுக்கு சம்பந்தமான நிகழ்ச்சி முறைகள் என்று அர்த்தம். அதாவது, வனவாசிகள் (சந்தியாசம், துறவு கொண்டவர்கள்) அறிந்து கொள்ளவேண்டிய அல்லது படிக்கவேண்டிய மத நூல்; மதச் சடங்குகளே இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. உபநிஷத்து என்பது தத்துவ நூல். அதாவது, கோட்பாடு விளக்க நூல். இது யூகக் கருத்துக்களையே பெரும்பான்மையாகக் கொண்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

 

22.8.2019 அன்று தொடர்ச்சி...

 

வேத வரிவடிவம்

இந்த வேதங்கள் பிற்காலத்தில்தான் வரிவடிவில் எழுதப்பட்டன. அதற்குமுன் வாய்ப்பாட்டாகவே இருந்து வந்தன. எனவே வாய்ப்பாட்டில், பரம்பரைக்குப் பரம்பரை பற்பல வேறுபாடுகள் ஏற்பட்டன. அந்தந்தக் காலத்தவர் தத்தமது விருப்பு வாய்ப்புக்கேற்ப, பற்பல சுலோகங்களைத் தொகுத்துச் சேர்த்துவிட்டனர்.

இவ்வித இடைச்செருகல்கள் ஒன்றுக்கொன்று வேற்றுமை கொண்டுமுள்ளன. இவைகளுக்கு சகா அல்லது உட்பிரிவு எனப் பெயர் கொடுத்து வேதங்களுடன் சேர்த்து விட்டனர். இந்த இடைச்செருகல் ஒரு காலத்தில் ஏராளமாக இருந்தன. ஆயினும் காலப்போக்கில் இவற்றில் சிலவே உயிர்பெற்று நீடித்திருந்தன. பிற்காலத்தில், வியாகர்ணங்கள் அல்லது விரிவுரைகளும் தோன்றின. எனவே, எது சரியான வேத சாகித்தியம் என்றோ, எது சரியான கருத்து என்றோ பிற்காலத்தவர்கள் அறிய முடியாதபடி குழப்பமடைய வேண்டியதாயிற்று. மற்றும், சடங்குகளின் பெயராலும் பற்பல சாகித்தியங்கள் தோன்றின; வேதமொழிகளும் உருமாற்றமடைந்தன. பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பிரிவுகள் வேதாகமங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டன. சோதிடம், நாட்டியம், இலக்கணம், இசைக்கலை முதலியவை யும் பிற்காலத்து வேதங்களோடு சேர்க்கப்பட்டன.

இந்த நான்கு வேதங்களும் ஒன்றன்பின் ஒன்றாய்க் காலப்போக்கில் தொகுக்கப்பட்டனவென்றே அவற்றின் மொழி நடை நிலவரங்களால் அறியக்கிடக்கிறது. அதாவது இந்நான்கிலும் சொல் - வாசக அமைப்புகள் மாறுபட்டுள்ளன.

சமஸ்கிருத இலக்கியம் பிற்காலத்தில் செய்யப்பட்டதே; இந்த இலக்கியம் எப்போது ஏற்பட்டதென்று திட்டவட்ட மாகத் தெரியவில்லை.

வேதக் கோட்பாடுகளைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்த இலக்கியத் துறை தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பல்வேறு மொழிகளிருந்தனவென்று தெரிகிறது. இம்மொழிகள் சமஸ் கிருத மொழிக்குப் பெரிதும் மாறுபட்டவை.

கவுதம புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமது கோட்பாடுகளைப் பரப்ப மகத (பீகார்) நாட்டு மொழியையே கையாண்டிருக்கிறார். இந்தோ - ஆரியர்கள், பல பிரிவினராக இந்தியாவுக்குள் நுழைந்தபோது இந்தியாவில் ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்ட பல மொழிகள் இருந் திருக்கின்றன.

ஆரிய மொழி ஆதிக்கம் தணிந்ததும் இம்மொழிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வழக்கிற்கு வந்திருக்க வேண்டும்.

இதில் ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும். நாட்டு மொழிகளுக்கு கலை அந்தந்த மொழியில் இலக்கியம் கற்பிக்கப்படுவது உலக நாடுகளில் நடக்கும் வழக்கம். ஆனால், சமஸ்கிருதம் நாட்டு மக்களிடையே இடம் பெற வில்லை. நாட்டுமொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து ஒதுங்கி தனித்து வளம் பெற்றிருந்தன. இதற்குக் காரணம் என்ன வென்றால் புத்தமத காலத்தில்தான் சமஸ்கிருத இலக்கண இலக்கியம் தொகுக்கப்பட்டது என்பதாகும்.

அக்காலத்தில் பவுத்த மதத்தினர் நாட்டு மொழி (பாலி) வளத்திலும் இலக்கியத்திலும் அதிகக் கவனம் செலுத்தி நாட்டு மொழிக்குப் பொது மக்களிடையே அதிக செல் வாக்கும் ஆதரவும் பெறச் செய்தனர். (இவை என்சைக் ளோபீடியா பிரிட்டானிக்காவில் காண்பவை).

ஆதி மனிதர்

ஆரியர்கள், தாங்கள் தான் முதல் முதல் கடவுளிடமிருந்து உற்பத்தியானதாகவும், பிரம்மா தங்கள் மூதாதையென்றும், பிரம்மாவின் அடியாகத்தான் அவருடைய நேர்வழி சந்ததி யாரால் தங்களுக்குப் பிராமணரென்று இனப் பட்டப் பெயர் கிடைத்தது என்றும் உரிமை கொள்கின்றனர், பார்ப்பனர். இந்தக் கூற்றையும் பொய்யாக்குகின்றது முன்ஷி, பிர்லா, ராதாகிருஷ்ணன், வெங்கட்ராம சாஸ்திரியார்களைக் காப் பாளர்களாகக் கொண்ட இந்த பாரதீய இதிகாச சமிதி என்ற பார்ப்பனச் சமூகம் தொகுத்துள்ள இந்த நூல்.

தென்னிந்தியாவின் கீழக்கரை வட்டாரங்களின் சீதோஷ்ண நிலைமையையும், மண்கண்ட வரலாற்றையும், வடமதுரை (ராமனாதபுரம் மாவட்டம்)யில் கிடைத்துள்ள கட்டடம், முதுமக்கள் தாழிப் பொருள்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து, ஆதிமனிதர் தென்னிந்தியா வில்தான் முதல்முதல் தோன்றி, பின்னர் நாளடைவில் (பனியுக முடிவில்) வடக்கு முகமாகப் பஞ்சாப் முதலியவை களுக்குச் சென்றனர் என்று இந்நூல் (பக்கம் 132) கணித்துக் கூறுகிறது;

எனவே, ஆரியப் பார்ப்பனர், கடவுளின் நேர் வாரிசு தாரர்கள் என்பது பொய்யாகிறது. மற்றும், தாங்கள் பிரம்மா வின் தலையிலிருந்து பிறந்ததால் தலைமைச் சிறப்புக்குரிய வரென்றும், மற்றவர்கள் பிரம்மாவின் காலிலும் உடலிலும் இருந்து பிறந்தவர்களாகையால் தங்களைவிடத் தாழ்ந்த பிறவிகளென்றும், பார்ப்பனர்கூறும் கூற்றும் கந்தப் புளு கென்பதும் இதனால் வெட்ட வெளிச்சமாகிறது.

தமிழின் தொன்மை

மொழித்துறையில் இந்நூலாசிரியர்களின் ஆராய்ச்சி ஆழப்பாயவில்லை போலும். அல்லது தங்கள் வடமொழிக்கு சிறப்புத் தர எண்ணினர் போலும். தமிழ் தொன்மை மொழி யல்ல அதாவது தமிழுக்கு எழுத்துருவம் முற்காலத்தில் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் பிரம்மி எழுத்துக்கள்தான் இந்நாட்டில் முதல் வரிவடிவம். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள எழுத்துக்களும், பிற வடக்கத்தி மொழி எழுத்துக்களும் இந்தப் பிரம்மி எழுத்துக் களின் அடிப்படையில் சித்தரித்துக் கொள்ளப்பட்டவை என்று தீட்டியுள்ளார். இக்கூற்றும் ஆதாரமற்றதென்பது, தமிழ்நாட்டிலுள்ள பழைய கல்வெட்டுகளும் புதைபொருள் கண்டுபிடிப்புகளும் தீர்ப்புக்கூறும்.

அசோகர் காலத்தில் மாத்திரமல்ல; புத்தர் காலத்திலும் திராவிட மொழிக்கு எழுத்துருவமுள்ளதென்பதற்குக் கல் வெட்டு ஆதாரங்கள் பற்பல உள்ளன. சிந்துவில் காணப் படும் மொகஞ்சதாரோ கல்வெட்டுகளிலும் ஆதாரமிருக் கின்றது.

பிரம்மி என்பது தமிழ் எழுத்து உருவத்தைத் தழுவிய வடமொழி என்று கூறலாமே தவிர, தமிழ் மொழி வட மொழிகளின் உருவத்தைச் சுவீகரித்துக் கொண்டதென சாதிப்பது, ஒரு சில குழுவினரின் சுயநல வாதமேயாகும். அதாவது தென்னாட்டார் அநாகரீகர்கள்; எழுத்தறிவற்ற வர்கள் என்று சாதிக்கச் செய்யும் மூடுமந்திரமேயாகலாம்.

வட்டெழுத்து

தமிழின் ஆதி எழுத்துக்களை வட்டெழுத்து என்பர். 1837இல் ஓர் ஆங்கிலப் புலவர் இந்திய எழுத்துக்களை ஆராய்ந்து உருவம் நிர்ணயித்ததாகவும் அதன்பின்தான் இந்திய மொழிகளின் உருவம் தீர்மானமாக நிர்ணயிக்கப் பட்டதாகவும் இந்நூலில் காணப்படுகிறது. இதிலிருந்து தமிழுக்கு பிரம்மி எழுத்துச் சார்பான உருவம் தீட்டி ஆதி தமிழுருவமே மறைக்கப்பட்டிருக்கலாமெனவும் எண்ண இடமளிக்கிறது. வள்ளுவர் காலம் சுமார் 2000 ஆண்டு களுக்கு முன்னென்பர். அப்போது வள்ளுவர் ஏடும் எழுத் தாணியும் கொண்டு குறளை எழுதிவைத்தாரென்பது மெய்மை. எனவே, தமிழ்மொழி அசோகர் காலத்தில்தான் வரிவடிவம் பெற்றதென இந்நூல் குறிப்பிடுவது தவறாகும். அசோகர் காலத்திற்குப் பின்போ அல்லது 1837க்கு பின்போ தமிழ் புது உருவம் பெற்றதென்றால் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளப்படலாம். இந்தப் புது உருவமும் தனித் தமிழ் உருவத்திற்கு ஏற்பட்ட மாற்றமல்ல. சில வைஷ்ணவ நூல்கள் எழுதப்பட்டுள்ள கிரந்தமொழி என்பதைத்தான் இவர்கள் தமிழ் என்று கருதிக்கொண்டு, பிரம்மி மொழி யடியாக வந்ததென்று சாதிக்கின்றனர்போலும். இந்தக் கிரந்த எழுத்துக்களே ஓரளவுக்கு வடமொழி உருவிலும் உச்சரிப் பிலுமுள்ளன.

சமஸ்கிருதம் மக்களின் ஆதரவு பெற்ற தொன்மை மொழியல்ல என்பதற்கு இந்நூலே சான்று தருகிறது.

அதாவது குப்தர் ஆட்சிக் காலத்திற்கு முன்னிருந்த கல்வெட்டுகள் 1600 கிடைத்துள்ளன. இவைகளில் எழுதப் பட்டுள்ளவைகளில் 95 சதவிகிதத்திற்கு மேல் பிராக்கிருத மொழியிலுள்ளன. (பிராக்கிருதம் திராவிட மொழியிலிருந்து உண்டானதென்பது சில மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்து) சமஸ்கிருதம் அவ்வளவு காணோம் என்கிறார்.

ஆகவே, குப்தர் ஆட்சியிலேயே சமஸ்கிருதம் செத்த மொழி என்பதும், சமஸ்கிருதமும் வேதங்களும் மதிப்பற்றுப் போயினவென்பதும், இலக்கிய உலகமும் சமஸ்கிருதத்தை மதிக்கவில்லை என்பதும் தெளிவுபடுகிறது.

இதே மூச்சில் மற்றொரு உண்மையையும் இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதாவது, வடஇந்தியாவில் ஆரிய மொழிகளும் நாகரிகமும் அதிகமாக ஆதிக்கம் கொண்டி ருந்தாலும், தென்னிந்தியாவில் ஆரிய நாகரிகமும் மொழியும் அதிகம் பரவவில்லையென்கின்றனர். எனவே, வடமொழியிலிருந்து தென்மொழியுண்டானதாகக் கூறுவதும் ஆதார மற்றதாகிறது.

ஆயினும், வடமொழியாளர்கள் சும்மா இருக்கவில்லை என்றும், தமிழ் மொழியில் சமுதாயத் துறைகளில் பங்கு கொண்டவர்களைப் போல் நடித்து இடையிடையே ஆரியப் பண்புகளையும் வடமொழி இலக்கணங்களையும் கருத்து களையும் தென்னாட்டு மக்களிடையே சமுதாயங்களிடையே மொழி இலக்கியத் துறைகளிலே புகுத்தி விட்டனர் என்பதை இந்நூலாசிரியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அதாவது, தென்னாட்டு - மொழி பழக்க வழக்க கோட்பாடுகள், வடக் கத்தி முறைகளினால் பிற்காலத்தில் பெரும் மாறுதலுற்றன வென்கின்றனர். தென்னாட்டு மொழி வகைகள் ஓரளவுக்கு மாறுதலுற்றுள்ளனவேயன்றி அடியோடு மறைந்துவிட வில்லை என்று இவர்கள் ஒப்புக் கொள்வதிலிருந்து, தமிழ கத்திற்குத் தனிமொழியும் வரிவடிவம் நாகரிகமும் இருத்தல் வேண்டுமென்பதும் உறுதிப்படுகிறது.

வடக்கில் தமிழ்

திராவிடர்கள் ஒரு காலத்தில் மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் மேற்கிந்தியாவிலும் கிழக்கிந்தியாவிலும் ஓரளவுக்குப் பரந்து வாழ்ந்தனர் என்பதற்கு இந்த வட்டாரங் களிலேயே ஆதாரங்களுள்ளன. பலுஜிஸ்தானிலுள்ள பிராச்யீ மொழி திராவிட மொழியே; மற்றும், வடஇந்தியாவில் பல ஊர்களின் பெயர் திராவிடர் பெயர்களாகவுள்ளன. மற்றும், ஆரிய வேதங்களிலும் திராவிடச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன.

எனவே, ஆரிய மொழியும் திராவிட மொழியைத் தழுவி மாற்றமடைந்து திராவிட மொழிகளின் புது அமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் - என்று இந்நூல் சுட்டிக் காட்டு கிறது. (பக்கம் 155) எனவே, சமஸ்கிருதமே திராவிட மொழி யைத் தழுவி உருமாற்றமடைந்தது என்பது ஒப்புக்கொள் ளப்பட்டதாகிறது.

இந்தத் திராவிடப் போர்வை போர்த்த சமஸ்கிருத மொழிப் புலவர்கள்தான், தமிழ் மொழியில், வடமொழிப் பண்புகளை அதிகம் நுழைத்துத் தெலுங்கு, கன்னட, மலையாளம் மொழிகளை உற்பத்தி செய்து திராவிடத் தாய்மொழியைப் பாகப்பிரிவினை செய்துவிட்டனரென்பதும் புலனாகிறது. மற்றும், இப்போதையத் தமிழையும் பிற்கால உற்பத்தி என்றும் காட்ட முயற்சித்துள்ளனர். அதாவது, செந்தமிழ் என்ற பழந்தமிழ் திராவிட மொழியிலிருந்து உண்டானதென்கின்றனர் இந்நூலாசிரியர்கள். ஆனால், அந்தத் தாய்த் திராவிட மொழியென்பது யாது என்பதை இவர்கள் திட்டவட்டமாக அறுதியிட்டுக் காட்டவுமில்லை - காணவுமில்லை.

தமிழ், தாய்மொழியல்லவென்று மாத்திரம் சாதிக்க முற் பட்டுளர் சமஸ்கிருத ஹிந்து காதலர்களான இந்த இதிகாசக் கழகத்தினர்.

தமிழ்மொழி

அடுத்தபடியாகத் தமிழ் என்பது கி.மு. முதல் நூற்றாண் டில் “Damiz” என்றும் அதற்குமுன் “Dramiza” என்றும் இருந்தாக இவர்களே ஒப்புக்கொண்டு, தமிழ் வடமொழிச் சார்பு பிற்கால சிருஷ்டி என்று முற்கூறிய கூற்றை இந் நூலாசிரியர்களே மறுக்கின்றனர். இது பல ஆசிரியர்களின் கட்டுரைத் தொகுப்பாகையால் பல கருத்து வேற்றுமை களிருக்கலாமென முன்னுரையிலும் ஒப்புக் கொண்டுளர்.

“Damawsla” - “Dramida” - “Dravida” என்றும் கிறிஸ்துவ சகாப்தத்திற்கு முன் மாற்றமடைந் திருக் கலாமென்கிறது இந்நூல் (பக்கம் 156) திராவிடர் ஏது, ஆரியர் ஏது என்று வாதிப்பவர்கள் கூற்றை இந்நூலாசிரியர் ஆதா ரங்களுடன் மறுக்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பார்ப்பனீயத்தை ஒழிப்பதே நமது லட்சியம் காங்கிரஸ் மத ஸ்தாபனமான கதை

 

தோழர் அண்ணா துரை விளக்கம்

v6.jpg

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

நாமக்கல்லில் 12.12.1937ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைவர் சென்னை தோழர் சி.என்.அண்ணாத்துரை  அவர்களின் தலைமைப் பிரசங்கம் வருமாறு:-

அன்புள்ள தோழர்களே!

உங்கள் தாலுகா மாநாட்டில் தலைமை வகிக்கும் கவுரவத்தை எனக்கு அளித்ததற்காக நான் மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத் துக் கூட்டப்படும் நமது மகாநாடுகளின் ஜெயபேரிகை, தோழர்களிடையே பெருத்த உற்சாகத்தை உண்டாக்கி யிருக்கிறது. இலட்சியங்களை சடுதியில் அடைவதென் பது எந்த இயக்கத்திலும் சுலபமான காரியமல்ல. அதி லும் நமது இயக்க இலட்சியங்களோவெனின், பல ஆண்டுகள் போர் புரியினும் மேலும் மேலும் போர்க் களமே நமது கண்முன் தெரியும்படியான நிலையைத் தரவல்லது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து வெற்றியோ தோல்வியோ அடைந்து, வெற்றி கண்டால் ஆனந்தத் தாண்டவமாடுவதும், தோல்வி நேரிடின் கொட்டாவி விட்டுத் தூங்கப் போவ தும், அரசியல் கட்சியின் இலட்சணமாக இருக்கிறது. நமது இயக்கமோ அரசியலுடன் நேரடியான சம்பந்தம் வைத்துக் கொள்ளாது சமூக மாற்றத்தையே குறியாகக் கொண்டது. சமூகத்தின் நிலையை மாற்றக்கூடிய நிகழ்ச்சிகள் எது நேரிடினும், அது எக்காரணம் பற்றி நடப்பினும் அதனைச் சமாளிக்க வேண்டியவர்கள் நாம். மற்றைய எந்த இயக்கமும் கொண்டிராத லட்சி யத்தை நாம் கொண்டுள்ளோம்.

இரத்த ஆறுகள் ஓடின!

நாம் சமுதாயத்திலே, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை நிலவ வேண்டுமென ஆசைப்படுகிறோம். பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இந்நிலை இல்லை என்பதைச் சரித்திரம் கூறுகிறது. மக்கள், சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை பெறுவதென்பது சுலபத் திலே தீர்த்து விடக்கூடியதன்று. இந்த இலட்சியங்களின் சாயல்களைப் பெறுவதற்கு, அய்ரோப்பிய நாடுகளில், புரட்சிகள் நடந்து இரத்த ஆறுகள் ஓடியிருக்கின்றன. மக்களிடை சமத்துவம் நிலவுவதென்றால் அதைத் தடைப்படுத்தும் கொள்கைகள் அழிக்கப்பட வேண் டும்; அந்தக் கொள்கைகளைக் கொண்ட இயக்கங் களுடன் போரிடத்தான் வேண்டும். அந்தப் போரின் அவசியத்தை மக்களிடையே எடுத்துக் கூறி, அதில் ஈடுபடக்கூடிய அளவு பக்குவம், பலம் இவைகளைப் பெறும்படியாக மக்கள் தயார் செய்யப்பட வேண்டும். சுருங்கக் கூறின், அப்படை அணிவகுப்பு நமது முதற் பணி. அதில் நாம் ஓரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டோம். நாம் கண்ட வெற்றிக்குப் பிறகு, அது நமக்கு சர்வ சாதாரணமாகத் தோன்றக்கூடும். அலட்சியமாகவும் அதை நோக்கக் கூடும். ஆனால் புராதனத்தையே புனிதமெனக் கருதும் இந்நாட்டிலே புதிய அறிவுப்படை திரட்டப்படுவதென்றால் அது, ஒரு ஒப்பற்ற வெற்றி என்பதை யார் மறுக்க முடியும்?

சுயமரியாதை இயக்கம் தோன்று முன்பு:

நமது சு,ம. இயக்கம் தோன்று முன்பு, நம் நாட்டிலே எத்தனையோ இயக்கங்கள், கிளர்ச்சிகள், கட்சிகள் இருந்து வந்தன, அவைகளிற் பல மாண்டன. சில உரு மாறி விட்டன. மற்றும் சில நாதியற்றுப் போய்விட்டன.

நம் நாட்டில் தோன்றிய கிளர்ச்சிகளிலே சில அரசி யல் போக்குடையன. வேறு பல மத, சமுதாய சீர்திருத் தக் குறி கொண்டவையாகும். ஆனால் எந்த இயக்கமும் அரசியலது அன்றிச் சமுதாயத் துறையினது ஆயினும் அவைகளிடையே ஒரு பொது நோக்குக் காணக் கிடக்கும். அது என்னெனின், பழைமையில் ஆர்வம். அரசியலிலே பெரும் பங்கெடுத்துக் கொண்ட பெசண்ட் இயக்கம், புராதன இந்தியச் சிறப்பையும், புராதன வாழ்க்கையின் மேன்மையுமே போதித்து வந்தது. புராதன மேன்மை, எனின் அது ஆரிய மேன் மை என்பதில் அய்யமில்லை. ஆரிய மேன்மையின் உச்சி, வர்ணாச்சிரமம், கொள்கை இதுவாயின், இந்த இயக்கத் தலைவியாரோ, தேவியின் அம்சம், லோக மாதா என்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனுடைய வேலைத் திட்டத்திலும் பெரிதும் மதச்சடங்குகளே நிலவின. கடைசியில் அரசியல் காரியம் ஓய்ந்து பெசண்ட்டின் இயக்கம் கதம்ப மத இயக்கமாகவே மாறிவிட்டது. அதே நிலைக்குத்தான் காங்கிரசும் வந்துகொண்டிருக்கிறது. அதனைப் பிறகு விளக்கமாகக் கூறுகிறேன். சமுதாயச் சீர்திருத்தங்களுக் கெனத் தோன்றிய சமாஜங்கள், கூடங்கள் யாவும் பெரிதும் மதப்பற்றையே தலையாகக் கொண்டிருந்தன. மதப் போர்வை இருந்தால், மக்கள் தாராளமாகத் தங்கு தடையின்றி அவ்வியக்கங்களில் சேரவும் அவைக ளிலே மட்டற்ற நம்பிக்கை வைக்கவும் ஏதுவாயிற்று. ஆனால் பரந்து விளங்கிய அவ்வியக்கங்கள், சமுதாயத் திலே, பிரமாதமான மாறுதலைச் செய்து காட்டவில்லை. ஏனெனில், பெரிய மாறுதல்களிலே மக்களுக்கு ஆர் வம் எழும். வகையிலே அறிவுச்சுடர் புகவில்லை. மதத் திலே லயித்துள்ள எந்த இயக்கத்தாலும், மாற்றத்தை, மனப் புரட்சியை உண்டாக்க முடியாது. புதிய தத்து வார்த்தங்கள், புதிய குருக்கள், விருத்தியுரைகள் ஏற் படலாம். ஏதாவதொரு மதத்திற்கு சற்றே முரணான திட்டம் ஏற்படினும் அதற்காக, ஏதேனும் ஒரு பழம் ஏட்டை எடுத்து, புதிய அர்த்தம் சொல்ல வேண்டி வந்ததே தவிர சமூகக் கோளாறுகளை ஒழிக்க, முதலில் கோளாறுகளின் காரணங்களைப் பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறும் விதத்திலே அந்த இயக்கங்கள் வரவில்லை.

முதல்தரமான மனப்புரட்சி:

இந்நிலையில்தான், நமது இயக்கம் தோன்றிச் சமூகக் கோளாறுகள் எழும்பிய விதத்தை வலியுறுத்தி, மதத்தின் பேரால் மக்கள் வஞ்சிக்கப்படுவதையும், புராணத்தின் ஆதரவால் மூடச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களின் உடல், பொருள் ஆவியை உறுஞ்சுவதையும், வருணாச்சிரமக் கொடுங்கோன்மை உண்டானதையும், இவைகளின் காரணமாக ஆரிய வகுப்பின ராகிய பிராமணர் எனும் சமூகம் மதத்தின் தரகர்களாகவும் கல்வியிலே ஞானாசிரியர்களாகவும் சமுதாயத்திலே உயர்ந்தோராகவும் அரசியலிலே, ஆக் கவும் அழிக்கவும், வல்லவர்களாகவும் இருப்பதையும் பிராமணீய ஒழிப்புதான், சமுதாய சமத்துவத்திற்கு முதற்படி என்பதையும், சமூகம் புதுப்பிக்கப்படவேண் டுமானால், இந்தப் பழமை அழிக்கப்பட வேண்டுமென் பதையும் அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் காட்டிற்று. இதுவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் மனப்புரட்சி.

பிராமணீயத்தை விரட்டவே

சமுதாயத் துறையிலே, பிராமணீயம் செய்து வைத் துள்ள கேடுகள் அரசியலிலும் ஏற்பட்டன. இதனைக் கண்கூடாக, காங்கிரசிலே கண்ட பிறகே, நமது இயக்கத் தலைவர் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

அரசியலிலே வெள்ளையன் வெடிகுண்டுகள் வைத்துக் கொண்டு நம்மை அடிமைப்படுத்தினான், சமுதாயத்திலே வேதங்களைக் காட்டி, விதிகளைக் கூறி, பிராமணர் மற்றையோரை அடிமை கொண்டுள் ளனர், இத்தகைய அடிமைத் தனத்திலுள்ளவர் தொகையே இங்கு அதிகம். ஆகவே இத்தகையோர் அன்னியரை விரட்ட விடுதலைப் போர் தொடுத்துப் பயனில்லை என்பதைத் தோழர் ஈ. வெ. ரா. எடுத்துக் காட்டினார். வெளிநாட்டு விரோதியை விரட்டி அடிக் கும் சக்தி நமக்கு வேண்டுமானால், இங்கு அடிமைப் படுத்துவோர் இருக்கலாகாது என்றார். வெள்ளையனை ஒட்டிச் சுய ஆட்சி பெற வேண்டுமென்ற ஆவலில் அதிக மக்கள் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டுமானால் அதே விடுதலை ஆர்வம் இங்கு முதலில் எழ வேண்டும் என்றார். இங்கு அக்ரகாரத்தையும் உள்ளடக்கிய ஊர்களிலே வசித்துக்கொண்டு, இங்கு வெளியே செல்ல வேண்டுமானால், பூனைக்கும் பல்லிக்கும் பயந்துகொண்டு, இங்கு விதவையை மணந்து கொண்டால் ஆண்டவன் ஆணையை மீறியதாகும் என்ற மனோபாவத்தை வைத்துக்கொண்டு, எங்கள் ஊரை ஆட்டிவைக்கும் நீங்கள் யார்? போங்கள் இந்த நாட்டை விட்டு என்று நாம் எங்ஙனம் வெள்ளையனைச் சொல்ல முடியும்? சொன்னாலும் அவன் எங்ஙனம் போவான்? பழைய ஏடுகளுக்கே பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்ட நம்மை, சமுதாயத்தில் சிறுபான்மையினர், ஆயுத பலமின்றி, "ஆன்ம பலத்தாலேயே ஆயிரக்கணக்கான வருஷங் களாக அடிமைப்படுத்திய நம்மை, பிறப்பினாலேயே ஒருவன் நமக்கு மேலானவன் - பூசுரன் - என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்ட நம்மை, வெள் ளைக்காரனின் பீரங்கிப் படை அடிமைப்படுத்தியதிலே ஆச்சரியமொன்றுமில்லை. ஆகவே, அடிமை மனப் பான்மையை வளர்க்கும் எதுவாயினும் அதை எதிர்த் துப் போரிட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது. அக்காரணம் பற்றியே நாம் காங்கிரசைக் கண்டித்து வந்தோம். மூடநம்பிக்கை விடுதலைக்குப் பாடுபடும் நாம் தேச விடுதலையில் அக்கறை கொள்ளாதிருப் போமா? நமது இயக்கத் தலைவரும் அன்பர்கள் பல ரும், காங்கிரஸ் ஏற்படுத்திய பல அக்கினிப் பரீட்சை யிலும் தேறியவர்கள்தான். தாமும் மற்றையோரும் உழைப்பினும் கொள்கையின் குற்றத்தினால் நாட்டா ருக்கு ஒருவித பலனும் ஏற்படாது பாழாய்ப் போவதை உணர்ந்தனர்.

பகுத்தறிவே ஆயுதம்

ஆகவே, நாம் பகுத்தறிவையே ஆயுதமாகக் கொண்டு, இந்திய. மத ஏகாதிபத்தியத்துடன் கடின மான போர் துவக்கினோம். நமது எதிரிகள், புராணங் களையும் பழைய பழக்க வழக்கங்களையும் ஆயுதங் களாகக் கொண்டு நம்மைத் தாக்கினர். நாம் மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது என்றோம். அவர்கள் உயர்வு தாழ்வு, மத சாஸ்திர புராண இதிகாச ஆதாரம் பெற்று நெடுநாட்களாக இந்த நாட்டிலே நிலவிச் சக்கரவர்த்தி களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வந்தது என்றனர். அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவை களையே உறுதுணையாகக் கொண்டு சமூக வாழ்வை நடத்த வேண்டுமென்று நாம் கூறினோம். - மனு சொன்னபடி நடப்பதே மதக் கட்டளை என்றனர் அவர் கள். நாம் அடிமை மனப்பான்மையை வளர்க்கும் புராண ஆபாசங்களையும், வகுப்பு எதேச்சதிகாரத்தை வளர்க்கும் சாஸ்திரக் கொடுமையையும் விளக்கினோம். அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதில், மக்கள் மனதில் அதிலும் இளைஞர்கள் மனதில் நமது இயக்கம் நன்கு பதிந்துவிட்டது. எவ்வளவு தீவிரமான கொள் கையாக இருப்பினும், அதை வரவேற்க ஆரம்பித்தது வாலிப -உலகம். சமதர்மத்தைப் போதித்தோம்; வாலிப உலகம் பூரிப்படைந்தது. இந்நிலையிலே, தமிழ்நாட்டு அரசியல் உலகிலே மாற்றங்கள் ஏற்படச் செய்தது.

- விடுதலை, 13.12.1937



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

29.8.2019 அன்று தொடர்ச்சி...

 

வேத மொழிக்கு உதவி

வேத மொழியான சமஸ்கிருதம் வளம்பெற உதவியது திராவிட மொழிச் சொற்கள் என்றும், திராவிட உச்சரிப்புக ளும் வேதங்களில் அதிகமுள்ளன என்றும், ஹிந்து நாகரிகத் திற்குத் திராவிடர் ஏராளமாக உதவியுள்ளரென்றும் இந்நூல் விவரிக்கிறது. எனவே, திராவிடர் அநாகரிகர், காட்டுமிராண்டி கள், ராட்சதர்கள், வானரங்கள், கரடிகள் என்றும் இராமாயண இதிகாசங்களில் வர்ணித்திருப்பது துவேஷத்தால், அதாவது சாதாரணமான மக்கள் தமது எதிராளியைத் திட்டும்போது எவ்விதம் வர்ணிப்பார்களோ, அவ்விதமும், எவ்விதச் சொற்களைக் கையாள்வார்களோ, அதே சொற்களே வேதங் களிலும் புராணங்களிலும் ஆரியர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்கள் விஷயத்தில் கையாண்டிருக்கின்றனர் என் றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆரியரைவிடத் திராவிடர் களே கலையறிவும், சிறந்த பண்புகளும் மிகுதியாகக் கொண் டிருந்தனர் என்றும் தீர்மானிக்கின்றனர் (பக்கம் 156-157).

மொகஞ்சதாரோ, ஹரப்பா வட்டாரங்களில் வாழ்ந்த ஆரியருக்கு முன்னைய மக்கள் அக்கால நாடோடி ஆரியர்களைவிடச் சிறந்த கலாச்சார அறிஞர்கள் என்று இந்நூல் தீர்ப்பளிக்கிறது. மற்றும், திராவிடர்கள் இயற்கைச் சக்தியைத்தான் தாயாக வணங்கினர் என்கிறார். திராவிடர் களுடைய கோட்பாடுகள் உலக வாழ்க்கையைப்பற்றி ஆழ்ந்த நுணுக்கக் கருத்துக் கொண்டிருந்தனவென்றும், ஆரியர்கள் வெறும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்து ஆகாயத்தையே பிரார்த்தித்து அதாவது, ஆகாயத்தினிடம் உதவிகோரி முறையிட்டு வந்தனர் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் (பக்கம் 158).

இதிலிருந்து திராவிட மக்கள் உலக வாழ்க்கை இன்பத் தைத்தான் பெரிதும் விழைந்து, அதற்கான உலக வழிபாடு முறைகளையும் கொள்கைகளையும் கைக்கொண்டு வந்தன ரென்பதும், ஆரியரே வானுலகத்தையும் மோட்ச, நரகத்தை யும் கற்பனை செய்துகொண்டு அந்த வானுலக அருளை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தனரென்பதும் புலனாகிறது. தெளிவுறக் கூறுமிடத்து, திராவிட மக்கள் உலக நல்வாழ்வுக் கோட்பாட்டினராகிய தங்கள் சொந்த உடலுழைப்பில் அறிவுழைப்பில் நம்பிக்கை கொண்டு ஆக்கத்துறைகளில் ஈடுபட்டு, கலைவளம் பெற்றிருந்தனரென்பதும், ஆரியர் உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் விடுத்துக் கற்பனை யில் இன்பத்தையடைய எண்ணி, அதற்கான கோட்பாடு களைக் கற்பித்துக்கொண்டு, பிறர் உழைப்பில் தங்கள் உடல் வளர்ச்சிக்கு வழி செய்து கொண்டாரென்பதும், இவ்விதம் பிறருழைப்பைப் பெற வானுலக் கோட்பாடுகளைப் பரப்பி யும், அச்சுறுத்தும் சொற்கள் பொதிந்த வேத சமஸ்கிருத அடுக்குமொழிகளை ஒப்புவித்தும் வந்தனரென்பதும் தெளிவுபடுகிறது.

Termilai - Trmmili - Dramiza என்று மாற்றங்கள் பெற்ற சொல்லே பிற்காலத்தில் தமிழ் (Tamil) ஆயிற்றென வும் இவர்கள் விரிவுரை காண்கின்றனர் (பக்கம் 1: 8).

கிரேக்கர் படையெடுத்து வந்தபோது, தென்சிந்து வட்டா ரத்தில் அரபிதை (Arabitai) என்ற மக்கள் வசித்தனரென்றும், இவர்கள் கி.மு. 4ஆவது நூற்றாண்டில் வசித்த திராவிட மொழியாளரே என்றும், அரவலு என்று தமிழரைத் தெலுங் கர்கள் குறிப்பிடுவது இதற்கு ஆதாரமாக உள்ளதாகவும் இந்நூலில் விளக்கம் தரப்படுகிறது (பக்கம் 159).

பிற அறிஞர்களின் ஆதாரங்கள்

பிஷப் கால்டுவெல் எழுதியவற்றில் பழந்தமிழர்கள் நாடு நகரங்களில் வசித்துச் சிறந்த படிப்பறிவு மிக்கவர்களாகவும், எழுத்து வடிவம் கற்று, இறகு கொண்டு ஓலையில் எழுதி வந்ததாகவும், நீதிபதிகளும் நியாயவாதிகளுமில்லாமலேயே தங்களுக்குள் மக்களாட்சி நடத்தி வந்ததாகவும் எழுதி யிருக்கிறார்.

திரு.பி.டி.சீனிவாசய்யங்காரும் திராவிட மக்கள் - பழங்காலத் தமிழர்கள் ஆரியருக்கு முன்பே சிறந்த நாகரிகக் கலாச்சார அறிவாளர்களாகத் திகழ்ந்தனர் என்று ஆதாரங் கள் தந்திருக்கிறார்.

பார்ப்பன பூசாரியின் இரகசியம்

ஆரியர்களின் ஆகம, நிகம (வேதம்) கோட்பாடுகளெல் லாம் ஆகாய வணக்கத்துக்கானவையேயாகும். அதாவது, நெருப்புப் புகையின் மூலம் ஆகாயக் கடவுள்களின் அருள் வேண்டி நின்றனர். திராவிடர்கள் நடத்தியதோ பூசைகள்; இது இவ்வுலக வாழ்க்கையைத் தழுவிய வழிபாட்டு முறையே; பூ - அணிதல் - பூசுதல் என்ற அடிப்படையாக வந்ததே பூசை. இம்முறைகள் அறிவுக்கும் நடப்புக்கும் ஒத்தனவாகவிருந்தன. பிற்காலத்தில் ஆரிய திராவிட கோட்பாடுகள் கலப்பட முறையால் ஹிந்து மதம் தோற்று விக்கப்பட்டது. உண்மை ஆரியர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும் கற்றவர்களும் திராவிடர்கள் பூசை முறை களைக் கைப்பற்றித் தமக்கு முழு உரிமையாக்கிக் கொண் டனர். இதற்குமுன் ஆரியர்களிடையே இந்தப் பூசை முறை கிடையாது. பிற்காலத்தில் தான் திராவிட முறைகளைக் கற்றுக் கொண்டு பூசாரிகளாகிப் பிழைப்புக்கு வழி செய்து கொண்டனர். ஆரிய முறைகளான ஹோமம் முதலியன இந்தப் பார்ப்பன - க்ஷத்திரியர் என்பவர்களிடையே பெயர ளவில்தான் இருந்து வருகின்றன.

பூசை முறைகள்

மகாபாரதத்தில் வரும் பகவத் கீதை கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டுமென இந் நூல் ஆராய்ச்சியில் காணக் கிடக்கிறது கீதையில்தான் இந்த பூசையைப் பற்றி முதல் முதல் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 161)

எனவே, பிச்சைக்கு வந்தவர்கள் பெண்ணுக்கு மாப் பிள்ளையான கதைபோல் ஆரியப் பார்ப்பனரும், திராவிடப் பூசை முறைகளை அறிந்து கொள்ள வந்தவர்கள் அந்தப் பூசாரித் தொழிலையே தமக்குப் பரம்பரைப் பாத்தியமாக்கிக் கொண்டு பூசை நடத்தத் தனியிடங்கள், கோவில்கள் அமைக்கச் செய்து அந்த இடத்தை அமைத்துக் கொடுத்த திராவிட மக்களும் அந்த இடத்துக்குள் அண்டாதபடி, கட வுளை அண்டத்தகாதவர்களாகவும், கடவுள் உருவத்தைத் அண்டத்தகாதவர்களாகவும் கடவுள் உருவத்தைத் தீண்டத் தகாதவர்களாகவும் ஆக்கி, சர்வ பாத்தியக் கடவுள் தரகர் களாகிவிட்டனர். ஆரியத் தீப்புகை விளக்க நூலான வேதப் பாடலும், இந்தப் பூசைக்கான பாடலொன்றைச் சமஸ்கிருத மொழியில் தொகுத்து நுழைத்துக் கொண்டு விட்டனர். திராவிடர் அமைத்துத் தந்த சிற்பங்களைக் கடவுளின் உருவங்களாக்கி அவற்றைக் காண அந்தத் திராவிடரிடமே கைக்காசு பெறலாயினர். இதேபோல் மக்கள் வணங்கிய இயற்கைச் சக்திகளுக்கு ஆரியர்கள் சமஸ்கிருத சொற்களில் புனைப் பெயர்கள் அளித்துத் தங்கள் கடவுள்களாக்கிக் கொண்டு பூசை நடத்திப் பிழைக்கலாயினர். முன்னர் அந்தச் சக்திகளை வணங்கி வந்த மக்களும் பார்ப்பனர் கற்பித்த அந்தச் சக்திகளின் உருவங்களை நேரிடையாக அணுகாத படிச் செய்துவிட்டனர். இவ்வகையில் ஆரியர்கள் வழிபாடு முறைகளை ஆக்ரமித்து, தங்களுடைய முழு உரிமைச் சொத்தாக்கிக் கொண்டனர் என்பது இந்நூலில் காணும் ஆராய்ச்சி மெய்மைகளால் அறியக் கிடக்கிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் முக்கால் பங்கு, ஆரியருக்கு முன்னைய மக்களின் கலாச்சாரப் பண்புகளாக இருக்கின்றன. மற்றும் இந்துக்களின் உணவு வகையும், ஆதி ஆரியர்கள் உண்ட உணவுக்கு மாறுபட்டுள்ளது. ஆரியர்கள் கம்பளி உடையணிந்தவர்கள்; இந்தியர்களோ பருத்தியுடையும் வேட்டியும் அணிகின்றனர்.

திராவிடர் முறைகளே

மற்றும், கொள்கை நடைமுறைகளும் பெரும் அளவுக் குத் திராவிட முறைகளைத் தழுவியிருக்கின்றன (பக்கம் 164) என்று இந்நூலில் சுட்டிக் காட்டியிருப்பதால், ஆரியர் திராவிடரை விடச் சிறந்த அறிவாளிகள் என்றோ நாகரிகக் கலாவல்லவர்களென்றோ கூறுவதே ஆதாரமற்றதாகிறது. திராவிடர்க் கலாச்சாரப் பழக்க வழக்க முறைகளைத்தான் ஆரியர் சுவீகரித்துக் கொண்டு தங்கள் கோட்பாடுகளுக் கேற்றபடி மேல் பூச்சு மாற்றங்கள் செய்து தங்களுடைய சொந்தம் ஆக்கிக்கொண்டனர் என்பதே ஆராய்ச்சித் தீர்ப்பாகிறது. பிற்கால சமஸ்கிருதம் பெரும் அளவுக்குத் திராவிட மொழிச் சார்பினதாகவும், வேத மொழிக்கு அதிகம் மாறுபட்டதாகவுமிருப்பதால், இப்போதைய சமஸ்கிருதம் திராவிட மொழியிலிருந்து ஆக்கிக் கொண்ட இருபிறப்பு மொழியேயாகும்; தனித்தாய்மொழி என்றோ ஜீவமொழியே யென்ற பார்ப்பனர் கூறுவதுபோல் தெய்வ மொழி என்றோ கூறுவதற்கில்லை. இந்த சுவீகாரத்தை மறைக்கத்தான் அந்த சமஸ்கிருதத்தைத் திராவிடர்கள் படிக்கக் கூடாதென்றும், படித்தால் தெய்வக் கோபமும் தோஷமும் பாவமும் ஏற்பட்டுவிடுமென்றும் பயமுறுத்தி, அதன் வண்டவாளத்தை மறைத்து வந்தனரெனவும் எண்ணச் செய்கிறது. சிந்துமொழி எழுத்துக்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்த தனிமொழி எழுத்துக்களென்கிறார் திரு. இராமச்சந்திர தீட்சதர். சிந்து மொழியென்பது சிந்து சமவெளியில் ஆரியருக்கு முன் வாழ்ந்த மக்கள் மொழி; ஆரியருக்கு முன் தமிழரே அங்கு வாழ்ந்தாரென்பது மொகஞ்சதாரோ கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது.

எண்ணும் எழுத்தும்

எழுத்து மாத்திரமல்ல, எண்ணும் திராவிட அடிப் படையைக் கொண்டதுதானென இந்நூலாசிரியர் விளக்கு கிறார். எட்டு என்பதை அடிப்படையாகக் கொண்டதே எண். எண் - எண்ணுதல், திராவிட மொழி, இது வடமொழிகளிலும் மற்ற திராவிட மொழிகளிலும் பொதுப்படையாகவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

புராணங்கள் உற்பத்தி ரகசியங்கள்

ஆரியர்களுக்கு முன்னிருந்த ஆஸ்ட்ரிக்குகள், திராவி டர்கள் ஆகியவர்களிடையே வழங்கி வந்த வரலாற்றுக் கதைகளையே ஆரியர்கள் பிற்காலத்தில் கைக்கொண்டு, பல வேறு மாறுபாடுகளுடனும், ஆரியக் கடவுளின் பெயர் களையும், ஊர், நாடுகள் ஆகியவற்றின் பெயர்களையும் கொடுத்து ஆரிய மொழியில் எழுதிக் கொண்டு விட்டனர்.

இவ்விதமாக ஆரியக் கடவுள்கள் முனிவர்கள், அரசர் கள் ஆகியவர்கள் பெயரில் மாற்றியமைக்கப்பட்ட பழைய திராவிடக் கதைகளே புராணங்களில் காணப்படுவன என்று இந்நூலில் காணப்படுகின்றது (பக்கம் 165).

இராமாயணம்

இராமாயணம் வெவ்வேறு மூன்று கதைகளைக் கொண்டு புனையப்பட்ட கதம்பமெனப் புலனாகிறது. இதற்கு சரித்திர அடிப்படை இல்லை. மற்றும், இம்மூன்று கதைகளும் வெவ்வேறு காலங்களில் புனையப்பட்டுப் பின்னர் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அயோத்தியா காண்ட வரலாறு, சீதை கவரப்பட்டதும் மீட்சியும்; கிஷ்கிந்தா காண்ட வரலாறு ஆகியவைகள் தனித்தனி வரலாறுகளெனத் தெரிகிறது. கிழக்கிந்தியாவில், ஆஸ்ட்ரிக் மக்களின் கதை யடிப்படையில் இது புனையப்பட்டு, பின்னர் இந்த நாகரிக விவரங்களுடன் காவியமாக்கப்பட்டதென்கின்றனர்.

மகாபாரதம்

மகாபாரதம் மேற்கு அய்க்கிய மாகாணம், கிழக்குப் பஞ்சாப் வட்டாரத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகிறது. இதில் ஆரிய வரலாறுகளும் ஆரியர், ஆரியரல்லாதார், கலப்பட மக்கள் வரலாறுகளும் காணப்படுகின்றன. ரிஷிகளெனப்படும் வேதியரின் வழி காட்டுதல் மீதே இந்த ஆரியர் - ஆரியர் அல்லாதார் கலப்பட இனவரலாற்றுக் கதையான சமஸ்கிருத பாரதம் புனையப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புராண கதைகள் எல்லாம் ஆரியருக்கு முன்பு இந்நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களான திராவிடர் முதலியவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டும், பழங்கதைகளிலுள்ள சாதா ரண கதாநாயகர்களைத் தெய்வீக புருஷர்களாக சித்தரித்துக் காட்டியும், ஆரிய புராணக் கதைகள் இட்டுக்கட்டப்பட்டன வென்பது தெளிவுபடுகிறது என்று இந்நூலே விளக்குகிறது.

இது பரதர்களின் போர் வரலாறு. இது ஒரே வித அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இதில் பற்பல கதை கள் ஊடுருவியுள்ளன. இக்கதையை வியாசர் தொகுத்த தென்பர். வியாசர் என்றால் தொகுப்பாளர் என்றே பொருள். (கட்டுரைகள் தற்போது வியாசம் என்று பள்ளிக் கூடங்களில் குறிப்பிடப்படுவது அறிந்ததே).

குருகுலத்தார் - பாஞ்சாலர் என்ற இரு அண்டை நாட்டினருக்குள் நிகழ்ந்த போர் வரலாறுகளே இக்கதையாக இருக்கலாம் என்று கருதுகிறார் வாசென் என்பவர். இந்தோ - ஜெர்மானிய காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக (ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்) இருக்கலாமென்கிறார் டாக்டர் எ.ஹால்ட்ஸ்மன் ஆனால், எது உண்மை என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

வியாசர், இந்தப் பாரதக் கதையைப் பாடுவதற்கு முன் குறிப்பிட்ட முகவுரையில் நானும், எனது சீடர்களும் 8800 ஸ்லோகங்களை அறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் அறிந்தபின்னர் அதைத் தொடர்ந்து பரதர்களைப் பற்றிய பாரதம் பாடினார் எனப்படுகிறது. ஆகவே பாரதம் தனிப் புராணம் என்றே எண்ணச் செய்கிறது. இவற்றில் கூறப்பட்டுள்ள வரலாறுகள் பலவும், ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றனவாகவும், தொடர்பற்றனவாகவும், கருத்து வேறுபாடுகள் கொண்டனவாகவுமுள்ளன. ஆகவே இதில் இடைச்செருகல் அதிகம் பிற்காலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று புலனாகிறது.

அதாவது, பிராமணர்கள் தங்கள் தங்கள் இன - சாதி சுயநலக் கருத்தினால், பிற்காலத்தில் அவ்வப்போது பல கதைகளைத் தொகுத்து இந்தப் பாரதத்துடன் சேர்த்து விட்டனர்.

(என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா)

ஆரியன் என்பது ஓரினத்தைக் குறிப்பதல்ல; ஒரு மொழியின் பெயரே என்கிறார் மாக்ஸ்முல்லர். இதிலிருந்து ஆரியர் தாய்ப் (அடிப்படை) பெயரில்லாத குழுவினர் என்பதாகிறது. இந்தியா ஆரியரின் தாயகமல்லவென்றே எல்லாத்துறை ஆராய்ச்சிகளிலும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. ஆரியருக்கு முன் இந்தியா வெங்கும் திராவிட மொழியே வழங்கி வந்ததென்பதற்கு, பலுசிஸ்தானத்தில் ஒரு பகுதியினர் தமிழ் மொழி பேசுவதும் மற்றொரு சான்றாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

-தந்தை பெரியார்

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

3.9.2019 அன்று தொடர்ச்சி...

அசுரர்பற்றிய உண்மை

அசுரர் என்றால் கெட்ட குணங்களைக் கொண்டவர்க ளென ராமாயணம் முதலிய சில புராணங்களில் சித்தரிக்கப் பட்டுள்ளன. இது துவேஷத்தால் கூறப்படுவதேயாகும். தேவர்களைவிட அசுரர்களே நாகரிகத்தில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று ஆரியர் மத நூலான பிராமணங்கள் என்பதில் பலவிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், வேதங்களிலும் பல புராணங்களிலும் தேவர்களின் அண்ணன்மாரே அசுரர் எனக் காணப்படுகிறது.

வேதம் - பாடல் திரட்டு

ரிக் வேதம் வீரர் வரலாறோ, சரித்திர வரலாறோ அல்ல. கடவுளுக்குப் பலியிடும்போது வேதியக் குழுவினர் பாடி வந்த பாடல்களின் தொகுப்பே இந்த ரிக்வேதம் என்பது. சாமவேதமோ வெறும் இசைப்பாடல்; யஜுர்வேதம் மந்திரங் களின் (ஆள் பெயர்) தொகுப்பு; யாகத்தின் போது உச்சரிக்கப் படுவன.

அதர்வண வேதம் சாதாரண மக்கள் கொண்டிருந்த கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் எடுத்துக்காட்டு வது. பிற்காலத்தில் இது பிராமண மதத்தில் சேர்க்கப்பட்ட தாகும். ஆரிய வேத மதம் நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை என்றும், பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பப் பலவித மாறுபாடுகளைக் கொண்டு இறுதியில் இந்து மதத்தில் கலந்துவிட்டதென்றும் தெரிகிறது.

ஆரிய மதப் பிரசாரகர்கள்

ஆரியர்கள் (பார்ப்பனர்) திராவிட மக்களைக்கொண்டே திராவிடர்களை ஒடுக்கும் தந்திரத்தை மேற்கொள்ளுபவர் களென்றும், ஆரியர்களுக்கு உதவியாகவும் ஆரியர் (பார்ப் பனர்) சிறப்புப் பெறத் துணைவர்களாகவும், பார்ப்பனர்களின் தாசானுதாசர்களாகவும், அடியார்க்கு அடியார்களாகவும் இருந்த திராவிடர்களே, ஆழ்வார்களாகவும், நாயன்மார் களாகவும் ஆக்கப்பட்டனர் என்றும் விடுதலையிலும் பெரியாரவர்களும் பன்முறை எடுத்துக்காட்டியிருப்பது நினைவிருக்கலாம். இந்த உண்மையை இந்த நூலாசிரியர் களும் ஆமோதிக்கின்றனர். அதாவது, இராமனும் கிருஷ்ணமும் ஆரிய மதத்தை தென்னாட்டிலும் கிழக்கு வட்டாரங்களிலும் பரப்ப உதவி புரிந்ததால்தான் இவர்கள் பிற்காலத்தில் அவதார புருஷர்களாகப் பார்ப்பனரால் ஆக்கப் பட்டனர் என்கின்றனர். கிருஷ்ணனும் ஒரு அசுரனே (சூத்திரனே) என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அசுரன் (சூத்திரன்) கடவுள் அவதாரமாக்கப்பட்டது ஆரிய மதப் பிரசாரகனானதால்தான் என்பது தெளிவாகிறது. இதேபோல் இராமனும் பார்ப்பான் அல்ல. அரசகுலத் தலைவன். இவனும் ஆரிய மதத்தைத் தென்னாட்டில் பரப்ப ஆரியப் பார்ப்பனரென்ற முனிவர்களுக்கு உதவி புரிந்ததால்தான் அவதார புருஷனாக்கப்பட்டான். பிராமணர்களுக்குதவியாக வும் முன்னணியாகவும் சென்று க்ஷத்திரியர் என்ற ஆரிய அரசகுலத்தார் தென்னாட்டில் வாள் முனையால் ஆரியத் தைப் பரப்பினர். இந்த க்ஷத்திரியரைத் தொடர்ந்து வந்த பார்ப்பன முனிவர், பின்னர் தென்னாட்டில் தங்கி ஆரியக் கலாச்சாரத்தைத் தென்னாட்டு மக்களிடையே பரப்பினார் (பக்கம் 314).

ஆரிய அரசர்களின் ஆதரவும் பாதுகாப்பும் இல்லாதிருந் தால் பிராமணர்களுக்குச் (பிராமணர் மத ஏடுகள்) சக்தியற் றுப் போயிருக்கும். ராமன் போன்றோர்களின் படையெடுப் பினால் தான் பிராமண மதம் தென்னாட்டில் வேர்பற்ற வழி ஏற்பட்டது. ஆரியக் கலாச்சாரத்தை இராமன் தென்னாட்டில் பரப்பி நடத்திய படை எடுப்புப் பற்றிய வரலாறே இராமாய ணம் (பக்கம் 315).

உடன்பிறப்புத் துரோக நாடகம்

தென்னாட்டில் ஆரியக் கலாச்சாரத்தைப் பரப்பவந்த பார்ப்பனர்களில் (முனிவர்) முக்கியமானவர் அகஸ்தியர். இவர் இராமர் படையெடுப்புக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டை அடைந்து, இராமர் படையெடுப் புக்கு வழிகோலியவர் என ஆராய்ச்சி நூல்கள் பகருகின்றன. இராமாயணம் நெடுக உடன் பிறந்தார் துரோக நாடகமாகத்தா னுள்ளது. அதாவது, திராவிட வீரர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணன் தம்பிகளான வாலியையும் சுக்ரீவனையும் மோதவிட்டு, வாலியை ஒழித்துக்கட்டிச் சுக்ரீவனைத் தனக் குத் தாசனாக்கிக் கொண்டான் ஆரியப் பிரசாரகனான இராமன்.

அடுத்தபடி வாலியின் (சுக்ரீவன் ஆக்கிரமித்துக் கொண்ட திராவிட மக்கள்) படையைக்கொண்டே இலங்கை மீது படையெடுப்பு நடந்து, இலங்கையிலும் தம்பி விபீஷண னைத் தனக்குத் துரோகக் கையாக்கிக் கொண்டு இராமன், இராவண மாவீரனை ஒழித்தான். அண்ணனை அயலான் ஒழிக்க உதவி புரிந்ததற்காக அந்த விபீஷணனுக்கு ஆழ் வார் என்ற பட்டமளித்தனர் பார்ப்பன மதத்தரகர்கள். ஆழ் வாரென்றால் என்ன அர்த்தம் என்று தெளிவுபடவில்லை பக்தியில் ஆழ்ந்தவர்களென்கின்றனர் வைஷ்ணவர்கள்; பிராமண மதக்கோட்பாடுகளில் தமிழ்நாட்டை ஆழ்த்தியவர் கள் என்பது ஒருவாறாகப் பொருந்துமெனலாம்.

பாகவதம்

வைஷ்ணவ மதக்காரர்களின் உயிர்நூல் பாகவதம் என்பது இராமாயணமும் பாரதமும் வெறும் சண்டை வரலாறுகளானதுபோல், இந்தப் பாகவதம் நெடுக கிருஷ் ணனின் காதல் விளையாட்டு விவரங்களைக் கொண்ட நூலாகவுள்ளது. உலக நலனுக்காக, மக்கள் முன்னேற்றத் துக்காக இந்த நூலில் என்ன சீர்திருத்தக் கொள்கைகள் உள்ளனவென்பது புலனாகவில்லை. ஆயினும், வேத மதத்தார்களின் துறவுக் கொள்கையைச் செல்லாக் காசாக்கி, இல்லறச் சிறப்பை மக்கள் உணரத் தீட்டப்பட்ட நூல் பாகவ தம் எனின் ஒருவாறாகப் பொருந்தும். இந்தக் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறுகளும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக இல்லை.

துவாரகைக் கிருஷ்ணன் வேறு; பாகவதக் கிருஷ்ணன் வேறு; பாரதக் கிருஷ்ணன் வேறு என்றே ஆராய்ச்சியில் அறியக்கிடக்கிறது. கிருஷ்ணனும் ஒரு அசுரனே; அதாவது ஆரியனல்லாதவன், ஆரியருக்கு முன்குடிகளான மக்களைச் சேர்ந்தவனெனவும் இந்நூலாசிரியர் கருதுகிறார். கிருஷ்ணன் ஆரியப் பார்ப்பான் அல்லன் என்பது தெளிவு. ஏனெனில் அவன் யாதவர் குலத்தினன்.

அவதாரமா?

ஆரியனல்லாத கிருஷ்ணன் ஆரியவேதியரால் எப்படி அவதார புருஷன் ஆக்கப்பட்டான் எனக் கேள்வி எழுகி றது. இவனும் விபீஷணனாகி, ஆரிய மதப் பிரசாரங்களுக்கு ஆரிய வேதக் கோட்பாடுகளை - பிராமண மதக்கொள்கை களை இந்நாட்டில் பரப்பும் போர் நடத்தியதால்தான் இவனும் அவதாரமாக்கப்பட்டான் என்பதும் இந்நூலில் காணக்கிடக்கிறது.

கிருஷ்ணன், துவாரகையையடைந்து இயற்கை வணக்க முறையைப் பரப்பி வந்தான் என்றும் இந்நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது. (பக்கம் 299) இதிலிருந்து இந்தக் கிருஷ் ணன் வேறு, பாரதக் கிருஷ்ணன் வேறு என்று சந்தேகிக்கச் செய்கிறது. பாரதம் நடப்பதற்கு முன்பே கிருஷ்ணன் அவ தாரமாக்கப்பட்டிருப்பதாகவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

பாகவதத்தையும், கிருஷ்ணன் இயற்கை மதப்பிரசாரகன் என்பதையும் கவனிக்குமிடத்து, இந்தத் துவாரகைக் கிருஷ் ணன் பிராமண மத எதிர்ப்பாளனாகவுமிருக்கலாமெனச் சந்தேகிக்கச் செய்கிறது. அப்படியிருக்க இவன் அவதார புருஷனாக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

பிராமண மத எதிர்ப்பாளரான புத்தரை, எப்படி விஷ்ணு வின் அவதாரமென உரிமை கொண்டாடுகிறார்களோ அதேபோலத்தான் இந்தக் கிருஷ்ணனின் அவதார ரகசியமும் இருக்க வேண்டுமென எண்ணச் செய்கிறது.

அப்படியாயின், கீதை யாரால், எப்போது உண்டாயிற் றெனக் கேள்வி பிறக்கலாம்.

கீதையின் முன்னுரையில் (துவக்க அத்தியாயத்தில்) ஒரு முனிவர் தன் சீடனுக்கு இந்த கீதையைச் சொல்வது போல அமைந்துள்ளது. எனவே, இந்த முனிவர் அல்லது வேறொருவர் பிற்காலத்தில் இந்தக் கீதையை எழுதிப் பாரதத்துடன் சேர்த்திருக்க வேண்டுமெனக் கீதையின் முதல் அத்தியாயம் எண்ணச் செய்கிறது.

கண்ணன் திருவிளையாடலும் பொய்

பாகவதத்திலுள்ள தெய்வங்களையும் இந்து முன்ஷியார் ஆராய்ச்சி நூல் பொய்யாக்குகிறது.

அதாவது, சிறு குழந்தையான கிருஷ்ணன், கங்கை ஆற்றிலிருந்த பல தலைகளைக் கொண்ட பாம்புடன் சண்டை போட்டு அடக்கி அதை அதன் குடும்பத்துடன் விரட்டினான் என்கிறது பாகவதக்கதை. வைதீகக் குழுவினரான இக்கழகத்தார் தொகுத்துள்ள இந்த வேதகால ஆராய்ச்சி நூலில், கிருஷ்ணன் பிறந்த சில ஆண்டுகளில் நரிகளின் தொல்லைக்குப் பயந்து யாதவர்கள் கோகுலத்தை விட்டுப் பிருந்தாவனத்திற்குக் குடியேறினர். அங்கிருந்த நாக சாதித் தலைவனான காளிங்கன் என்பவனைக் கிருஷ் ணன் அடக்கி, அக்காளிங்கனையும் அவனுடைய இனத் தாரையும் வேறிடத்துக்குச் செல்லச் செய்து யாதவர்களை அங்குக் குடியேறச் செய்தான். (பக்கம் 280) மற்றும் அங்குள்ள மக்கள் இந்திர யாக முறையைக் கைவிடச் செய்து இயற்கை வணக்க முறையைக் கைக்கொள்ளச் செய்தான் என்றுள்ளது.

கிருஷ்ணனை அவதாரமாக்கியது மகாபாரதத்திற்கு முன்னே நிகழ்ந்திருப்பதாக இந்நூல் கருதுகிறது (பக்கம் 299).

பார்ப்பனர் - அரச மரபினர் சச்சரவு

பார்ப்பனர்களைவிட நாடாளும் குலத்தோர் (க்ஷத்திரியர்) உயர்ந்தவர் எனக் காட்டத்தான் புராணக் கதைகள் தீட்டப் பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், இக்கதைகளைத் தீட்டியோர் முனிவர் என்ற ஆரியப் பார்ப்பன வேதிய குலத்தவராதலின், ஆளும் மரபினர் சிறப்பைக் கூறுவது போல், அச்சிறப்பின் மறைவிலே ஆரியமதக் கோட்பாடு களையும் வேதியர் சிறப்புகளையும் நுழைத்தனர் என்பதே பொருத்தமாகும். ஏனெனில், அரசன் எவ்வழியோ அவ்வழிக் குடிகள் என்ற மெய்மொழிப்படி, அரசர் வரலாறுகள் மூலம் ஆரியக் கொள்கைகளை திராவிட மக்களிடையே பரப்பினர் என்பதே உண்மையாகலாம்.

மற்றும், இம்மகாபாரதம் உண்மை சரித்திர வரலாறா என்பதையும் இந்த நூலாசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். பிற்கால வேத நூல்களில் மகாபாரதம் பற்றிய குறிப்பு இல்லை என்றும், இப்போது கிடைக்கப்பெறும் மகாபாரதம் பிற்காலத் தொகுப்பு என்றும், இவர்களும் ஒப்புக் கொள் கின்றனர். இராமன் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறு யாதாயி னும் ஆரிய கலாச்சாரத்தை இந்தியாவெங்கும் பரப்ப இந்தியாவில் ஆரியர் குடியேற வழிசெய்த, ஆரியப் போர் வீரர்கள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறது இந்நூல் பக்கம் (315).

பரசுராமன்

மேற்குக் கரையோரங்களில் முக்கியமாக பம்பாய், கொங்கணம், மராட்டா, துளுவம், கேரள வட்டாரங்களில் ஆரியத்தைப் பரப்பியவன் பரசுராமன்.

கி.மு. 6ஆவது நூற்றாண்டு வாக்கில் அதாவது பாணினி காத்யாயனா என்ற சமஸ்கிருத இலக்கணப்புலவர்கள் காலத்தில்தான் தென்னாட்டாருடன் தொடர்பு கொண்ட தாகத் தெரிகிறதென்கின்றனர் இந்நூலாசிரியர்கள். எனவே, இராமாயண புராண காலங்களில் இலங்கைவரை ஆரியர் ஆதிக்கம் கொண்டதாக இராமாயணப் புலவர்கள் கூறுவது ஆதாரமற்றதாகிறது. இராமாயணமும் கட்டுக் கதையாகிறது.

ராட்சதர் - அரசர், நைத்தியர், தானவர், நாகர் ஆகிய இனத்தவர் ஆரியப்படையெடுப்பைத் தடுத்துக் கடும்போர் நடத்திய மக்கள் ஆவர். வேதகால ஆரியரும் இவர்களை மனிதர்களாகத்தான் வர்ணித்துள்ளனர். பின்னர், புராணக் கதைகளைப் புனைந்தவர்களே, இனத்துவேஷத்தால் இழிவுதொனிக்கும் முறையிலும், பல்பொருள் சொற்களிலும் வர்ணித்துள்ளனர் என இவ்வாராய்ச்சி நூலில் காணப்படுகிறது.

மந்திரம் என்றால், தேவனைத் துதி செய்யாது அத்தேவ னிடம் வரம் கேட்கும் பாக்கள் என்று யாஸ்கா என்பவர் எழுதியிருக்கிறார். (பக்கம் 34).

ரிக் வேதப் பாக்களைத் தொகுத்தவர்கள் புரோகிதர்களே என்றும், அந்த உரிமையிருந்ததென்றும் இந்நூலில் காண் கிறது. எனவே, வேதங்கள் என்பன புரோகிதர்களின் கைச் சரக்கு - எழுத்துச் சித்திரங்களேயாகின்றன.

மற்றும், வேத ஆரியர்கள் எல்லோரும் ஒரு மாதிரியான மொழி பேசவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

பணம் பறிக்கப் பயமுறுத்தும் பாக்கள்

மந்திரங்கள் என்பன புரோகிதர்கள் பணக்காரர்களிட மிருந்து பணத்தைப் பிடுங்கிப் பார்ப்பனருக்குக் கொடுக்கக் கையாண்ட பயமுறுத்தல் பாடல்கள் என்று இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 342).

இதனால்தான் வேத பாடல்களில் கடுமையான, காரசார மான சொற்கள் புகுத்தப்பட்டுள்ளனவாம்!

இவ்விதம், பணக்காரர்களை அச்சுறுத்திப் பிடுங்கப்படும் பணம் பார்ப்பனர்க்கேயாகும்; ஏழைகளுக்குத் தரப்பட வில்லை என்றும் ஏழைகளிடம் உண்மையான பரிவு, அனு தாபம் காட்டும் பண்புகள் ரிக்வேதத்தில் இல்லை என்றும் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்றும், வேதப் பாடல்கள் எல்லாம் வெறும் சடங்குமுறைப் பாடல் தொகுப் பேயென்கின்றனர்.

தெய்வத்தைப் புகழ்ந்து தலைதடவி அருள்பிச்சை கேட்பதே வேதத்தின் குறிக்கோள்.

யமதர்மராஜனைப் பற்றியோ, மோட்ச நரகத்தைப் பற்றியோ ஆதி வேதத்தில் குறிப்புக் காணோம் என்பதால், இவை பிற்காலத்துப் பார்ப்பன புரோகிதர்களின் பிழைப்புக் காகப் புனையப்பட்ட கட்டுக்கதையாகிறது.

நாலாயிரப் பிரபந்தம் - நாயன்மார் பாடல்கள் ஆகிய வற்றிலுள்ளது போன்றே ரிக் வேதத்திலும் காதல் துறைப் பாடல்களும் கலந்துள்ளன. தெளிவுறக் கூறுமிடத்து மத சம்பந்தமற்ற பாடல்களும் ரிக் வேதத்தில் அதிகமுள்ளன.

ரிக் வேதத்தில் பிறவிச் சாதிப் பிரிவு பற்றி யாதொரு குறிப்பும் காணோம். மனுதர்ம சாஸ்திரம், கீதை முதலியவற் றில் தான் பிறவிச் சாதிச் செய்திகள் காணப்படுகின்றன. எனவே, பிற்கால பிராமண மதத்தினர்களின் கற்பனையே இந்தச் சாதி வேறுபாடு என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆரியர்களும் நரபலிக் கோட்பாட்டினராக இருந்துள்ளனர். ஆயினும், பிற்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்களைப் பலியிட்டனர்.

மற்றும், ஆரியர்கள் ஒரே கடவுள் கொள்கை கொண்ட வர்களல்லர்; ஒவ்வொரு குடும்பமும் தத்தமக்கு ஒவ்வொரு தெய்வத்தைக் கற்பனை செய்து கொண்டும், தத்தமது விருப்பப்படி ஏதோ சந்தப்பாடல்களைப் பாடியும் அந்தத் தெய்வத்திடம் தங்கள் வறுமை நீங்க வரமிருந்து வந்துளர். ரிக்வேதமும் ஒரு தனி முதல் கடவுள் கொள்கை கொண்ட தல்ல.

எது கடவுள்?

ஒவ்வொரு ரிஷி என்பவரும், ஒவ்வொரு தெய்வத்தை உண்டு பண்ணிக் கொண்டனர். ரிஷிகளுக்குள் சச்சரவும் கருத்து வேற்றுமையும் ஏற்படும்போதெல்லாம் ஒவ்வொரு புதுத்தெய்வம் உற்பத்தி செய்யப்பட்டுவிடும். ஒவ்வொரு வரும் மற்றவரின் தெய்வத்தைக் குறைகூறி வசைபாடி இழிவுபடுத்திப் பேசிச் சச்சரவு இட்டுக்கொள்வர். இவ்விதம் ரிஷிகளுக்குள் ஏற்பட்ட சண்டையே தெய்வங்களுக்குள் ஏற்பட்ட சண்டையாகப் புராணங்களில் கற்பனை செய்யப் பட்டுள்ளது. இவற்றால் ரிக் வேதம் உண்டான வரலாறும் எப்படியென்று காணமுடியாதுள்ளது என்று இந்நூல் குறிப்பிடுகிறது. இதிலிருந்து இந்த ரிக் வேதம் ஒரு வேத வியாசராலோ கடவுளாலோ ஆக்கப்பட்டதென பார்ப்பனர் கூறுவது ஆதாரமற்றதாகிறது. பற்பல காலங்களில் பற்பல தலைமுறைகளில் பற்பலர் தத்தமது விருப்புக்கும் அறிவுக்கு மேற்ப ஆக்கிய பிரார்த்தனைப் பாடல்களின் தொகுப்பே இந்த வேதங்கள் என்பது தெளிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

5.9.2019 அன்றைய தொடர்ச்சி...

புரோகிதர்களுக்கே தெரியாது

புரோகிதர் எல்லாக் கடவுள்களையும் (விஸ்வதேவர்களைப்) பிரார்த்திப்பதிலிருந்து இந்தப் புரோகிதருக்குக் கடவுளின் நிலவரம் இன்னதென்பதே தெரியாதென்பது புலனாகிற தென்கிறார் மாக்டனல்டு என்பவர்.

இப்போதைய புரோகிதர்களும் இதே போன்றுதானே ஆயிரம் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அர்ச் சனையும் பூசையும் நடத்துகின்றனர். இதிலிருந்து இவர்கள் தனி முதற் கடவுளில் நம்பிக்கையற்றவர்களாகின்றனர். இவ்வித அவநம்பிக்கைதான் மதச் சண்டைகளுக்கு மூல காரணமாகிறது. மெய்யறிவு பெறாமையே அவநம்பிக் கைக்குக் காரணம்.

அறிஞரல்ல

எனவே, மதச் சண்டை நடத்திய மத ஆச்சாரியர்களும் குருக்களும் பிறரும் மெய்யறிஞர்கள் அல்ல; ஒரு தனிக்கடவுள் கொள்கையினரல்ல; அந்தத் தனிப்பெரும் கடவுளின் அருள் பெற்றவருமல்ல; அந்தக் கடவுளின் தன்மையையும் உணர்ந்தவர்களோ அறிந்தவர்களோ அல்ல என்பது தெளிவாகிறது. இன்னும் தெளிவுறக் கூறுமிடத்து, ஆஸ்திகர் என்று கூறிக்கொண்டு பல தெய்வ வணக்கம் செய்பவர்கள், கடவுளின் உண்மையறியாதவர்கள்; அவர்கள் மொழியின்படி அவர்களே நாஸ்திகர்களாகின்றனர். ஏனெனில், ஒரு தனிக் கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் பல தெய்வங்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அவரவர்களுடைய விருப்பு வெறுப்புப்படிக் கடவுள்களும், அவரவர்கள் வாய் போனபடி மந்திரப் பாட்டுகளும் உற்பத்திப் பெருக்கம் செய்து வந்திருப்பதாலும், ஒருவர் தெய்வத்தில் மற்றவருக்கு நம்பிக்கையில்லாததாலும், இந்த தெய்வம் என்பதே வெறும் கற்பனைப் பித்தலாட்டமாகிறது. மற்றும், மந்திரம் என்று எதனைக் கூறுகிறார்களோ அதில் எந்தவித மகிமையும் கிடையாது. ஒருவரைத் திட்டுவதில் எவ்வளவு தெய்வீக சக்தியுள்ளதோ அவ்வளவு தெய்வீக சக்திதான், இந்த ஆள்மிரட்டல் செய்கின்ற, பணக்காரர்கள் பணத்தைக் கரைக்கச் சொல்லும் சொல்லடுக்குகளில் உள்ளதென்பது வெட்டவெளிச்சமாகிறது.

தலைவர்களே!

மணிச்சுருக்கமாகக் கூறுமிடத்து, இந்த மந்திரமென்பது பணம் பறிப்பதற்கான ஆள்மிரட்டல் அடுக்குச் சொற் களேயாகும். மற்றும், இப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பது போல், படைக்குத் தளபதியிருப்பது போல் இந்தப் பார்ப்பனீய தெய்வங்களும் பல்வேறு பிரிவு - கட்சி - ஆரிய முனிவர்களின் கற்பனைத் தலைவர்களேயாவர். மற்றும், கண்காணும் தலைவரைக் குறிப்பிடாது. கண்காணாத கற்பனைத் தலைவர்களை இவர்கள் குறிப்பிட்டிருப்பதால், இவர்கள் மூடநம்பிக்கையில் முழுக்க முழுக்க மூழ்கியிருந்த அறிவுவளம் பெறாத அநாகரிகர்கள் என்பதும் கண்காணாதவற்றை எண்ணிப் பயப்படும் சிறு பிள்ளை மனப்பான்மையினரென்பதும் புலனாகிறது.

பிள்ளைமனக் கற்பனை

அதாவது, சிறுகுழந்தைகள் பூச்சாண்டியை எண்ணிப் பயப்படுவது போலும், பூச்சாண்டியெனக் கூறி பய முறுத்துவது போலும், இந்த வேத மதத்தினரும் பூச்சாண்டித் தெய்வங்களை கற்பனை செய்து கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் பூச்சாண்டி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் இந்த வேத தெய்வங்களு மென்பதும் தெளிவுபடுகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, இந்த வேதியர்களின் பயங்கொள்ளி மனதிலும் தன்னம்பிக்கையற்ற உள்ளத்திலும், வளம்பெறாத பிள்ளை மதியிலும் கற்பனை செய்யப்பட்டவைகளே தெய்வங்களாகின்றன. எனவே, இந்தத் தெய்வங்கள் என்பனவெல்லாம் வெறும் மாயை மனமயக்கத்தால் கற்பனை செய்து கொண்டவை என்பதே பகுத்தறிவு காணும் தீர்ப்பு.

இந்த ரிக்வேதப்புலவர்களின் கண்முன்னர் எப்போதும் சோமபானமும், சோம மூலிகைச் செடியும் (கஞ்சா போன்றது) இருக்குமாம். சோமயாகம்தான் ஆரியர்களின் முக்கிய யாகம். மதுக்குடித் திருவிழா இந்தச் சோமயாகம் போலும்! ரிக் வேதத்தில் ஒன்பதாவது பகுதி முழுவதும் இந்தச் சோமபான மகிமை உற்பத்தி முறை பற்றிய வர்ணனைப் பாடல்களையே கொண்டிருக்கிறது. சோமரசச் செடியின் மொக்கு, கொழுந்து, கம்பு முலியவற்றை இடித்துச் சாறெ டுத்து வடிகட்டிச் சுத்தமாக்கிப்பாலும் தண்ணீரும் கலந்து இனிப்பாக்கிக் குடிப்பராம்; பாலுடனும், மோருடனும், கஞ்சி யுடனும் கலந்து தினம் மூன்று வேளை தவறாது உண்பராம்.

அமிர்தம்

மூவா மருந்து, சாவா மருந்து, தேவாமிர்தம் என்று சொல்வதெல்லாம் இந்தச் சோமபான (மதுபான)மேயாகும். இது தேவ பானமாம்! தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சாகாத தன்மையையளிப்பதாம்! இதற்கு அமிர்தம், சாவா மருந்து என்றும் பெயர். கவிஞர்களுக்குக் கற்பனைச் சக்தியை வளர்ப்பதும் இதுவே என இந்த முன்ஷியார் நூலிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 375).

இந்தச் சோமபான தேவனுக்கு வனஸ்பதி என்றும் பெயராம்.

மக்கள் பழக்க வழக்கங்களே

ஆரிய தேவ வர்ணனைகளை நுணுகிக் கவனித்தால் மக்களுக்குள்ள கோபம் - தாபம் - அன்பு - அழுகை - பகை - உணவு - குடி பழக்க வழக்கங்கள் ஆகிய பலவும் ஆரிய வேதியர் வேதத்தில் பல்வேறு தேவர்களாக உருவகப் படுத்தப்பட்டிருப்பது புலனாகும்.

இத்துடன் மண், மரம், செடி, கொடி, கல், மலை, காடு, ஆறு, காற்று, தண்ணீர், தீ, அங்கங்கள் ஆகிய யாவும் தேவ கணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

ராட்சதர்கள் எனக் குறிப்பிட்டிருப்பது தஸ்யூகள் - தாசர்கள் எனப்படும் இந்தியப் பழங்குடி மக்களையேயாகும் என்று அந்த முன்ஷி நூலே ஒப்புக்கொள்கிறது. அசுரர்கள் பெயர் ரிக்வேதத்தின் பிற்பகுதியில் காணப்படுகிறதாம்.

உண்மைகள்

ரிக்வேத புராணக் கோட்பாடுகளை நுணுகிப் பார்த்தால் கீழ்க்கண்ட உண்மைகள் அறியக் கிடக்கின்றன.

1. முக்கிய இயற்கைக் கோள்களையே உயிரும் உடலு முள்ளனவாக உருவகப்படுத்திக் கொண்டு ஆரியர்கள் வணங்கி வந்தனர்.

2. மரம், செடி, கொடிகளையும் தெய்வங்களாக வணங்கினர்.

3. இந்திரனைக்காளையாகவும், சூரியனைக் குதிரையாகவும் ஆரியர் வேதம் உருவகப்படுத்தியிருப்பதால் இவர்கள் மிருகங்களை இந்திரன், சந்திரன், சூரியன் எனப் பெயரிட்டுத் தெய்வமாக்கிக் கும்பிட்டனர் என்பதும் தெளிவாகிறது.

4. நாசம் விளைவிக்கும் சூறாவளி, இடி, மின்னல் முதலியவற்றைப் பயங்கர தேவராகக் கருதி, ஆரியர் அருள் வேண்டி வந்தனர்; பாதுகாக்கும்படி மன்றாடியிருக்கின்றனர்.

5. ஆரியர்கள் குறிப்பிடும் வானுலகத் தெய்வம் தேவர் என்பனவெல்லாம் உண்மையில் கிடையாதென்பதும், இவ்வுலகில் காணும் பொருள்களையும், மனிதர் மிருகங் களுக்குள்ள பண்புகளையும், மிருகம், மரம், செடி, கொடிகளையும், மழை, காற்று, வெயில், தண்ணீர், நெருப்பு, மண், மலை, காடு முதலியவற்றையுமே தேவராக ஆரியர்தம் மனத்தில் எண்ணமிட்டுக் கொண்டனரென்பதும் வெள்ளிடைமலையாக விளக்கமாகிறது.

காட்டுமிராண்டித் தெய்வங்கள்

இயற்கைப் பொருள்களுக்கு மனித உடலுருவம் தந்து தேவர்களாக்கியதுடன் விட்டுப்போகவில்லை இந்த ஆரியக் கோட்பாடு. மனிதராக்கப்பட்டால் மனிதர்களுடைய நடவடிக்கைகள் விருப்பு - வெறுப்புப் பண்புகள் ஆகிய எல்லாம் சேர்க்கப்படத்தானே வேண்டும் என்று எண்ணினர் போலும்! இவ்விதமே சேர்த்தனர். ஆனால், இவ்விதச் சேர்க்கையில் சிறப்புப் பண்புகளைவிட, மனிதர்களின் தகாத பண்புகள், இழிகுணங்கள், கேடான நடவடிக்கைகள் ஆகியவைகளையே தேவர்களுக்கு விசேஷ லட்சணமாக்கி யுள்ளனர். இதன் உட்கருத்தும் நோக்கமும் என்ன? தேவர்களை நையாண்டி செய்வதா? தேவர்களே இம்மாதிரி கெட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால், அத் தேவர்களை வணங்கும் அம்மக்களின் ஒழுக்கத்திலும் சந்தேகப்படத்தானே வேண்டும்? ஒழுக்கக்கேடர்களுக்கு ஆதரவு தேட, பாதுகாப்பளிக்க இம்மாதிரிக் கற்பனை செய்தனர் போலும் என்று கருதத்தானே வேண்டியிருக்கிறது? இது ஓரளவுக்கு உண்மையாகலாம். நாடோடி களாகத் திரிந்த அக்கால ஆரிய மக்களின் பழக்கங்கள் அநாகரிகக் காட்டுமிராண்டித் தன்மையில்தான் இருக்கும்; பக்குவப்படாத, பதப்படுத்தப்படாத இயற்கையுருவ முட் செடிகளாகத்தான் தோன்றியிருக்கும். அக்கால ஆரியர்கள் பண்பாட்டுப் பழக்க வழக்க நடைமுறைக் கோட்பாடுகள் உடையவர்களாக இருந்தனர். சிறந்த நாகரிகமுற்றிருந்த திராவிடப் பெருங்குடி மக்கள் அநாகரிக ஆரிய மக்களைக் கண்டு எள்ளி நகையாடியும் இருப்பர்; கண்டித்தும் இருப்பர்; தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தும் இருக்கலாம். இத்தகைய கண்டன - தீண்டப்படாத நிலைமையிலிருந்து தப்பத் தங்கள் தேவர்களைச் சாட்சியாக - ஆதாரமாக ஆக்கி, தங்களுடைய பழக்க வழக்கத் தகாதப் போக்கு களுக்கு ஆதரவு தேட முற்பட்டுமிருக்கலாம் அந்த ஆரியக் குழுவினர். அதாவது தங்களுடைய தேவர்களிடமே இந்தப் பண்புகள் உள்ளனவெனச் சுட்டிக்காட்டி, தங்களுடைய சம்பிரதாயக் கோட்பாடுகளுக்குச் சப்பைக் கட்டுக்கட்ட முற்பட்டனர் போலும்!

இது, ஆரியர் இந்தியாவுக்கு வந்த துவக்கக்காலத்திற்கு ஏற்ற வாதமாகலாம். ஆனால், பிற்காலத்தில் அதுவும் மக்கள் நாகரிகச் சிறப்புற்ற அறிவு பண்பட்ட நிலைமையிலும் இத்தகாத பண்புக் கடவுள்கள் எதற்கு எனக் கேள்வி எழுகிறது.

விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் சோறும்; தண்டு முண்டுக்காரனுக்குத் தயிரும் சோறும் என்று உள்ளதே தமிழ் மக்களிடையே ஒரு பழமொழி. இந்தக் கோட்பாட்டுக்கு இந்த ஆரியக் கடவுள்கள் தகுந்த உதாரணமாக்கப்பட்டுள்ளன. போக்கிரிகளைக் கண்டு அஞ்சித்தானே மக்களும் அடங்குவர்; பணமும் பண்டமும் லஞ்சமாகத் தருவர்; சாதுவைக் கண்டால் யாரும் மதிக்கமாட்டர்களே; ஆதரிக்க மாட்டார்களே; உதவி புரிய மாட்டார்களே; உலகறிந்த

தாயிற்று இது. இந்த உட்கருத்தின் மீதுதான் ஆரிய வேதியரும் பிற்காலத்தில் பிற மக்களை முக்கியமாகத் திராவிட மக்களை வணங்கச் செய்யத் தங்கள் தெய் வங்களுக்கு இந்தப் போக்கிரி இலட்சணங்களைச் சூட்டிக் கொண்டுளர் என்பது விளக்கமாகிறது. இந்தத் துஷ்ட தெய்வங்களின் பெயரை - போக்கிரி நடவடிக்கைகளைச் சொல்லி மக்களை மிரட்டியும் பயப்படச் செய்தும் பணம் கறந்து சுகவாழ்வு வாழ நம்பகமான வழி இதுவெனக் கொண்டனர் என்றும் துலக்கமாகிறது.

தோத்திரங்கள் மூலமும் புகழ் பாடுவதன் மூலமும் பணமும் பண்டமும் பிரசாதமும் காணிக்கைகளாகத் தருவதன் மூலமும்தான் இந்தத் தெய்வங்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியடைந்து கருணை காட்டும் - வரம் அருளும் என்ற கோட்பாட்டைத் தோற்றுவித்தனர். இது உலகறிந்த உண் மையும், யாரும் நம்பக்கூடிய நடப்புச் செயலுமாக உள்ளது.

மக்களிடையே, சுற்றத்தாரிடையே அன்பும் ஆதரவும் கூட்டுறவும் ஏற்படப் பணமும் பண்டமும் தருதல் அறிந்ததே. அரசாங்க அதிகாரிகளை வசப்படுத்தவும் இம்முறை கையாளப்படுகிறதல்லவா? எனவே, மனிதர் தலை யெழுத்தை நிர்ணயிக்கும் - மனிதர்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் தலைமை அதிகாரிகளாக இந்தத் தேவர்களைச் சித்தரித்துக் காட்டிப் பூசைபோடவும், காணிக்கை செலுத்தவும் செய்தனர்.

கல்லிலும், மண்ணிலும், மரத்திலும், செம்பிலுமாகிய இந்தத் தேவ உருவங்கள் உண்ணவா போகின்றன! பணத்தால் தான் என்ன பலன்! அவற்றிற்கு இந்த வேதப் புரோகிதப் பூசாரிகளும் தங்களை, வேதப் பிரதிநிதிகளாகவும் பூதேவர் களாகவும் கற்பித்துக் காட்டித் தேவருக்குச் சமர்ப்பித்த வற்றைத் தமக்காக்கிக் கொண்டனர். தாயும் மகளும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வெவ்வேறு தானே என்று வாதிப்பரே தமிழ் மக்கள் உலகறிவோடு! இந்த வாதத்தை ஆரியப் பூசுரர்கள் பொய்யாக்க முற்பட்டு வெற்றியும் பெற்றனர். தமது வாயும் வயிறுமே தேவர்களின் வாயும் வயிறும் என்று பாமர மக்கள் நம்பும்படிச் செய்தனர். இவ்வித நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் காட்டுக்கரடி உறுமல் குரல் - சமஸ்கிருத மந்திரங்கள் என்ற கரடுமுரடு உச்சரிப்பு - கழுத்தறுபடும் ஆடு அலறுவது போல் ஒலிக்கும் - வெறி பிடித்தவன் கத்துவது போல் குரலெழுப்பும் சொல்லடுக்குப் பாட்டுக்களையும் தொடுத்துக் கொண்டனர். அத்துடன் தெய்வச் சாபம், தெய்வக் கோபம் என்றும் மிரட்டல் வாக்கியங்களைக் கற்பனை செய்து கூறித் தங்கள் கோட்பாடுகளை எதிர்ப்பவர்களையும் வாயடக்கினர். பகுத்தறிவு ஆய்வறிவு விஞ்ஞான அறிவுவளம் பெற்றுள்ள இக்காலத்திலும் இந்த மவுடீகக் கோட்பாடுகளை நம்புவோர் ஏராளமாயிருக்கும்போது, அறிவு வளம் பெறாத இளஞ்செடி நிலவரத்திலிருந்த அக்கால (ஆரிய அடிநாள்) தெய்வ மந்திர மாய மிரட்டுகளை நம்பியதில் ஆச்சரியம் இல்லையே!

தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கான இந்தப் புரோகிதப் பூசாரிக் கங்காணித் தொழிலைத் தங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக்கிக் கொள்ளத்தான் மற்ற மக்களின் தாய்மொழிப் பாட்டுகளை ஒதுக்கி மற்ற மக்கள் அறியாத புரிந்துகொள் ளவும் இயலாதபடித் தடுப்புக் கோட்டைக்குள் வைத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொல்லடுக்குகளைப் பூசை மந்திரங்களாக்கிக் கொண்டனர். திராவிடர் அம்மந்திரங் களை அறிந்தால் பாவம் என்றும், நரக பிராப்தி என்றும் பயமுறுத்தி, பிறர் இந்தச் சொல்லடுக்குகளின் அர்த்தத்தை அறியாதபடிச் செய்து விட்டனர். பிற்காலத்தில் இம்மந்திரங் களைத் திராவிடர்களும் அறிந்து கொண்டனர். திராவிடப் பெருங்குடி மன்னனான இராவணனும் இந்த வேதங்களை அறிந்திருந்தானென இராமாயணத்தில் வால்மீகியே தீட்டி வைத்திருக்கிறார். இவ்விதம் திராவிட மக்கள் அறிந்ததால், வேதியரின் பிழைப்பில் மண் விழுந்தது போலும்! எனவேதான், மனு(அ) தர்ம சாஸ்திரத்தில் சூத்திரர், முக்கியமாகப் பெண்கள் (இவ்விருவரும் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள்) வேதத்தைப் படிக்கக்கூடாது, வேறுபாட்டுக்களைப் பாடக்கூடாதென தடைச்சட்ட விதியைச் சேர்த்துளர்).

இந்தத் தடைச்சட்ட விதிகளை மீறுபவர்களுக்குத் தண்ட னையும் நிர்ணயித்துத் தங்கள் கையாட்களான மன்னர் களைக் கொண்டு தண்டித்து வந்தனர். இந்தத் தண்டனையில் முக்கியமானவை நாக்கறுத்தல், காதிலே கொதிக்கும் உலோகக் குழம்பை வார்த்தல் எனத் தெரிகிறது.

மேலே கூறிய கோட்பாடுகளுக்கு ஆதாரங்கள் முன்ஷி, பிர்லா, ராதாகிருஷ்ணன், வெங்கட்ராம சாஸ்திரி தொகுப்பு நூலான இந்த ஆராய்ச்சி நூலிலும் பார்க்கக் காணப் படுகின்றன..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 குருமூர்த்தி அய்யர் திராவிடரா - சூத்திரரா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம்

சென்னை, அக்.8  "துக்ளக்" ஆசிரியர் திரு வாளர்  குருமூர்த்தி அய்யர்வாள் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் ஒன்றை எழுதியுள்ளார்  "துக்ளக்" ஏட்டில் -  (9.10.2019 - பக்கம் 9, தனியே பெட்டிச் செய்தியாக காணலாம்)

திராவிடர்கள்

யார் திராவிடன்? என்று சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரத்திலிருந்து கேட்டுள் ளார்.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங் கரரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்த அபிநவ சங்கரர் 'திராவிட சிசு' (திராவிடத்தின் குழந்தை ) என்று அழைத்தார். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் திராவிட சிசு என்றால், ஆதிசங்கரர் உள்பட திராவிட தேசத்தில் பிறந்த அனைவரும் திராவிடர்கள்தான். ஆரியர் கள் என்று எந்த பிராமணர்களை கழகங்கள் அழைக்கின்றனவோ, அவர்களே திராவிட பிராமணர்கள் என்றும், கௌட பிராம ணர்கள் என்றும் பிரிக்கப்படுகிறார்கள். விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களைக் கௌட பிராமணர்கள் என்றும், அதற்கு தெற்கே இருப் பவர்களை திராவிட பிராமணர்கள் என்றும் அழைக் கிறார்கள்.

திராவிட தேசத்தில் இருக்கும் பிராமணர்களை ஐந்தாகப் பிரித்து, பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். கௌட தேசத்தில் இருக்கும் ஐந்து வகையான பிராமணர்களை பஞ்ச கௌட பிராம ணர்கள் என்று அழைக்கிறார்கள். தமிழ், கன்னட, தெலுங்கு, கேரள, மகாராஷ்டிர, குஜராத், மார்வாரி, குஜராத்தி பிராமணர்களை, பஞ்ச திராவிடர்கள் என்றும், கௌடா, கன்யக்புஜா, மைதிலி, சரஸ்வதி, உத்கல முதலான ஐந்து வகையான பிராமணர் களை பஞ்ச கௌடர்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த விவரங்கள் ஸ்கந்தபுராணத்தில் இருக்கின்றன.

சம்ஸ்க்ருதப் புலவரான கல்கணன் எழுதிய ராஜதரங்கிணி என்கிற காஷ்மீர் மற்றும் மேற்கிந்திய ராஜ வம்சங்களைப் பற்றிய சரித்திர புத்தகத்திலும் இது இருக்கிறது. கௌடம், திராவிடம் என்று பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப் பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்து. திராவிடன்என்றால் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

துக்ளக் - 9.10.2019

"துக்ளக்" அய்யர் எடுத்துக் காட்டுவதெல்லாம் வரலாற்று ஆதாரங்களையல்ல - புராணங்களைத் தான் - புராணங்கள் வரலாறாகாது என்பது கடுகத் தனைப் புத்தி உள்ளவர்களுக்கும் தெரிந்தது ஒன்று.

சரி... அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் பிராம ணர்கள் - திராவிடர்கள் என்பது உண்மையென்றால் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள தயங்குவது ஏன்? திராவிடர் களைப் பற்றி திராவிடர் கழகம் எடுத்துக் கூறினால் 'கள்' குடித்த மந்திகள் போல உறுமுவது ஏன்?

விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் திராவிடன் என்று கூறி முடிக்கிறார் கட்டுரையில்.

குருமூர்த்தி அய்யர் ஒரு சரியான முட்டுச் சந்தில் வந்து நின்று விட்டார். இப்பொழுது இவர் எழுதிய இந்தக் கருத்து - அவரை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருக்கப் போகிறது. பார்ப் பனர்கள் ஆரியர்கள் அல்லவாம் திராவிடர்கள் தானாம்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கரி லிருந்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகேந்திர சரஸ்வதி உட்பட (தெய்வத்தின் குரல், முதல் பாகம், பக்கம் 267) ஆரியர்  திராவிடர் என்பது கற்பனை, வெள்ளைக்காரனால் கற்பிக்கப் பட்டது. பிரித்தாளும் சூழ்ச்சிக்காக அவ்வாறு கற்பிக்கப்பட்டது என்று சொன்னதெல்லாம் என்னவாயிற்று? கோல்வால்கரால் எழுதப்பட்ட ஆர்.எஸ்.எஸின் வேதநூல் என்று கூறப்படும்  BUNCH OF THOUGHTS என்ன கூறுகிறது?

"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியாது. நாம் தொடக்கம் இல்லாத அநாதிகள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; அறிவுத் திறன் கொண்டவர்கள். ஆன்மாவின் விதிகளை யெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகள், அறிவற்ற மாக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே, தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை மற்றவரிடமிருந்து பிரித்துக் காட்ட நாம் ஆரியர்கள் - அதாவது அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப் பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்" என்கிறார் ஆர்.எஸ்.எஸின் குருநாதர்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் ஆரியர்கள் என்று இங்கு கூறுகிறாரே - அது எப்படி? கோல்வால்கரும் ஒருக்கால் வெள்ளைக்காரர்தானா? அல்லது கலப்பா?

அந்தந்த சந்தர்ப்பத்தில் வசதிக்கேற்ப எதை யாவது புளுகி தப்பித்துக் கொள்வது. அல்லது மேலாதிக்கம் செலுத்துவது என்ற சூதாட்டம்தான் இந்த ஆரியப் பார்ப்பனர்களின் அடிமட்ட புத்தியாகும்.

வெள்ளைக்காரர்களால் கற்பிக்கப்பட்டதுதான் ஆரியர் திராவிடர் என்றால் வரலாற்று ஆசிரி யர்கள் என்று கூறப்படும் சி.எஸ்.சீனிவாசாச்சாரி, எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார்கள் எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஆகிவிடுவார்களே!

"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங் களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும் - தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்."

"இது ஆரியர்கள் திராவிடர் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது - ஏனென்றால் ஆரி யர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்." என்று எழுதியவர்கள் தான் இவர்கள் (இந்திய சரித்திரம் - பக்கங்கள் 16, 17)

சி.எஸ்.சீனிவாசாச்சாரியாரையும், இராமசாமி அய்யங் காரையும் வெள்ளைக்காரர்களின் கைக் கூலிகள் என்று சொல்லப் போகிறார்களா?

ஆரியர் -  திராவிடர் கட்டுக்கதை என்றால் சிந்துச் சமவெளி நாகரிகம்,திராவிட நாகரிகம் என்று சொன்னது வெள்ளைக்கார அரசாங்கமா?

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அன்றைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் முரளி மனோகர் ஜோஷி அரங்கேற்றியது என்ன?

சிந்துச் சமவெளியில் கிடந்த தடயமான காளையை கிராபிக்ஸ் மூலம் குதிரையாக ஆக்கிக் காட்டிய பித்தலாட்டத்தின் உட்பொருள் என்ன?

ஆரியர்களாவது, திராவிடர்களாவது என்று இப்பொழுது குறுக்குச்சால் ஓட்டும் கூட்டம் பதில் சொல்லட்டும். ஆரியர்களும், திராவிடர்கள் என்றால், சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றிக் காட்ட உச்சிக்குடுமியை ஒரு தட்டு தட்டி விட்டு குறுக்கு வழியில் காளையை இருட்டடித்து குதிரை மீது சவாரி செய்ய ஆசைப்படுவது ஏன்? ஏன்?

இன்னொரு முக்கியத் தகவலும் உண்டு - குருமூர்த்தி அய்யர்வாள் 2000 ஆண்டிலும் வாழ்ந்தவர்தானே.

டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் அவரே, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் சூத்திரதாரியும் கூட.

மத்தியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் "திராவிடர் என்சைக்ளோப்பீடியா" என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். அந்நூலை பெற்றுக் கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி திருவாய் மலர்ந்து கொட்டியது என்ன? "திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாம் அன்றோ"  என்பதுதான் - அந்த ஆரியவாளின் ஆர்வம் கொப்பளிக்கும் வார்த்தை! நூலைக் கொடுத்தவர் சாதாரண மானவர் அல்லவே.

திராவிட மொழி ஆய்வின் திராவிடப் பெருங் கடலாயிற்றே, குப்பத்தில் அதற்கான பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உந்து சக்தியாக விளங் கியவர் ஆயிற்றே. திருவனந்தபுரத்தில் உலகளா விய திராவிட மொழியியற் பள்ளி  (INTERNATIONAL SCHOOL  OF  DRAVIDIAN LINGUISTICS) யின் மூலவித்து போன்றவர் டாக்டர் வி.அய். சுப்பிரமணியம்.

பதட்டப்படவில்லை - பளிச்சென்று பதிலடி கொடுத்தார் பக்குவமாக.

"அப்படியா? - இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணிலிருந்து "திராவிடம்" என்ற சொல்லை நீக்கி விடுங்கள், நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன்" என்று சொன்னாரே பார்க்கலாம், சுருங்கி விட்டதே முரளி மனோகரின் முகம். (ஆதாரம் - DLA NEWS - மார்ச்சு 2003)

இதற்கு மேலும் குருமூர்த்தி வகையறாக்கள் ஆரியர் திராவிடர் பற்றி சொல்ல என்ன பரப்புரையை வைத்துள்ளனராம்?

பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப்பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்தாம் - பம் முகிறார் பார்ப்பனருக்கான செய்தித் தொடர்பாள ராக தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

இவர்களுடைய வேதங்களின் மனுதர்மத்தில் கூட ஆரியர், திராவிடர் என்ற வார்த்தைகள் காணப்படுகின்றனவே.

யஜூர்வேதம் (6, 22) என்ன சொல்லுகிறது?

"ஓ இந்திரனே! உயிர் வாழ்க்கைக்கு இன்றி யமை யாதவைகளான பிராண வாயு, ஜலம், அன்னம், முதலியவைகளை ஆரியர்களாகிய எங்களுக்கு அமிர்தமாகவும், எங்களை யார் பகைக்கிறார்களோ, அந்த அனாரியர்களுக்கு விஷமாகவும் ஆக்கிவிடும்" என்கிறதே யஜூர்.

ஆகா,  வேதங்களின் விரிந்த மனப்பான்மைக்கு வேறு என்ன  எடுத்துக்காட்டுதான் தேவை? - அது இருந்து தொலையட்டும் இந்த சுலோகத்தில் இடம் பெறும் "ஆரியர்" என்பது வேதகாலத்திலேயே வெள்ளைக்காரனால் இடைச் செருகல்  செய்யப் பட்டது என்று செப்புவார்களோ!

"பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயநம் முதலிய கர்மலோகத்தினாலும் மேற் சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தவர்கள்" (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம் போசம், யவநம் சகம், பாரதம், பால்ஹீசம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னப்படி சூத்திரர்களாகி விட்டார்கள். (மனுதர்மம், அத்தி யாயம் 10, சுலோகம் 44)

மனுதர்மத்தில் காட்டப்படும் திராவிடம், பிராமணர்கள் என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் விஷம வேலை என்று இந்தப் பார்ப்பன வெள்ளைக்காரர்கள் சொல்லப் போகிறார்களா?

வேதங்களில் சாத்திரங்களில் சொல்லப்படும் சுலோகங்களில் சொன்னபடிதான் வாழ்ந்து, அதன் தன்மையில் குருமூர்த்திகள் இப்பொழுது பூணூல் தரித்துக் கொண்டு இருக்கிறார்களா?

குருமூர்த்தி மற்றும் தங்களைப் பிராமணர்கள் என்று கூறிக் கொண்டு அதன் அடையாளமாகப் பூணூல் தரித்துக் கொண்டுள்ள - ஆண்டாண்டு தோறும் அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி  ஆவணி அவிட்டம் என்று நாமம் சூட்டிக் கொண்டு பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, இவர்கள் வேதத் தர்மப்படி நடந்து கொண்டுதான் பூணூலைத் தரித்துக் கொண்டுள்ளனரா?

இவர்களுக்கு குருநாதராக லோகக் குரு - மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

"பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான், மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்."

"பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு" என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராமண சந்நியாசிகள் அன்று பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகக் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்பொழுது இவன் செய்கின்ற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள், முதற் பகுதி - கலைமகள் - 1957-1958, பக்கம் 28)

கர்மானுஷ்டங்களை அனுசரிக்காத க்ஷத்தி ரியர்கள் சூத்திரகளாகி விட்டனர் என்று கூறும் மனுதர்மப்படி, பிச்சை எடுத்து வாழ வேண்டிய பிராமணர்கள் அதனை கடைப்பிடிக்காமையால் திருவாளர் குருமூர்த்தி அய்யர் உட்பட பூணூல் தரிக்க உரிமை  உடையவர்களா? க்ஷத்திரி யர்கள் சூத்திரர்கள் ஆனது போல, குருமூர்த்தி வகை யறாக்கள் பூணூலை அறுத்து எறிந்து விட்டு "சூத்திரர்கள்" என்று ஒப்புக் கொள்வார்களா?

அ'வாள்'களே வாலைச் சுருட்டிக் கொண்டு கிடப்பதுதான் உத்தமம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்

செவ்வாய், 29 அக்டோபர் 2019 15:36

 

தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்

 

(Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

 

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

 

வெளிவண்ணம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியநாடு முழு மையும் பரவியிருந்த பண்பாடு, நெருங்கிய ஒற்றுமையு டையதாகும். பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படை யான அஃது, இன்னும் முழுமையாகக் கண்டறியப்பட்டிலது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகள் வீழ்ந்து கிடக்குமாயின் அடியிலுள்ளது அறியப்படாது. மேற்பரப்பே பலராலும் அறியப்பட்டுப் பேசப்படுமாறு போன்று நிலைமை உளது. அவ்வடிப்படை நாகரிகம் திராவிட நாகரிகமே என்ப தற்கு எட்டுணையும் அய்யமின்று. சமயம், மெய்ப்பொருள், சடங்குகள், மருத்துவம், நுண்கலை, இலக்கியம் போன்ற ஒவ்வொன்றிலும் சமற்கிருதப்படுத்துதல் (ஷிணீஸீsளீக்ஷீவீtவீக்ஷ்ணீtவீஷீஸீ) என்பது, மேற்பரப்பில் காணப்படும் மாற்றமேயாகும். பிறிதொரு வகையாகக் கூறினால் இவை பேரளவில் மட்டும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எனலாம். பேரளவில் என்பது மிகுதியையும் சுட்டும்; பேர் அளவில் என்று, பெயரளவில், கலைச் சொற்களின் அளவில், பெயர் மாற்றங்களின் அளவில், அவ்வத்துறை சார்ந்த நூல்களை ஆக்கிப் படைத்துக் கொண்ட அளவில் நிகழ்ந்தவற்றையும் சுட்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமயம், நுண்கலைகள், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலதன அடிப்படையின; அவை சமற்கிருத மொழியில் விளக்கப்பட்டுள்ளன-பெயர்த்தெழுதப் பட்டுள்ளன-பாதுகாக்கப்பட்டுள்ளன. அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா. இன்று ஆங்கிலம் போலச் சமற்கிருதம் ஆள்பவரின் மொழியாகவும் அதனால் பொதுமொழி நிலையிலும் செயற்பட்ட கால கட்டங்கள் பலவாகும். எனவே, பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் முதல் தீபாவளித் திருநாள்வரை எந்த ஒரு விளைவுக்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழடிப் படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது வண்ணத்தைக் காட்டுகின்றன.

பெரும்பாலானவற்றில் திராவிட உள்மூலமும் சமற்கிருத வெளிவண்ணமும் உள. ஒரு சொல் முதல் பெரும் புராணங்கள் வரை, சமுதாயக் கலைத்துறைகள் அனைத் திலும் இவ்விருசார்புமிருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்பிலே நின்று, தாம் கண்டதே காட்சி என வீண் வம்பில் காலந்தள்ள இடமேற்படுகிறது.

அறிவாளர் மனநிலை

நம் நாட்டில் கலைஞர்கள், கற்றறிந்தவர்கள், சமய வாதிகள், மருத்துவர்கள் எல்லோரும் தத்தமது கலை, கல்வி, சமய, மருத்துவ நுட்பங்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்துத் தமக்கும் தமக்கு வேண்டியவர்க்கும் மட்டும் உரிய மறைபொருளாக்கி-முதலீடாக்கிக் கொண்டு தமது வாழ்வினை உயர்த்திக் கொள்ளும் மனப்போக்கினராயிருந்தனர். அதற்காகத் தத்தமது அறிவுடைமைகளைப் பிறர் அறியா வண்ணம் முற்றிலும் மறைத்துக் காத்து, வேண்டும்போது மட்டும் வெளிப்படுத்திக் காசாக்கி வாழ்ந்து போயினர். இதனால் பற்பல நுட்பத் திறன்கள், அவ்வத்திற னுடையார் மறைந்தபோது, தாமும் மறைபொருளாயிருந்தே மறைந்தொழிந்தன. இத்தனியுடைமை மனப்போக்கிற்கு முன்பு சமற்கிருதம் கைகொடுத்தது; இப்போது ஆங்கிலம் உதவி செய்கிறது. அம்மொழிகளில் கலைச்சொற்கண்டு, எழுதி வைத்துப் பிறரறியாமல் மறைத்து அல்லது பேணிக் காத்து, வேண்டும்போது வெளியிடுவது, ஒருவர் தாம் திறனுடையவர் எனக் காட்டிக்கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. இதனாலும் இவை அறிவுடையோர் மொழிகளாக-கலைஞர்களின் கருவியாக-திறனுடையார் ஊடகமாக இந்நாட்டில் விளங்கின. இதனால் இவை அறிவுமொழி போலவும் தமிழ் அனைய தாய்மொழிகள் சாதாரணமாக-அன்றாட வாழ்வுக்கு மட்டும் பயன்படும் மொழிகள் போலவும் மொழிச்சாதிகள் உருவாயின. இதனை ஆரியச் சூழ்ச்சி என்பதை விட, அறிவுடையோர் அனைவரின் சூழ்ச்சி என்றால் மிகையாகாது.

கலை இங்கே; விளக்கம் அங்கே

பலவற்றில் நோக்குங்கால் வடிவம் தமிழாக இருக்கும்; வண்ணப்பூச்சு வடமொழியாக இருக்கும். அடித்தளம் திராவிடமாயிருக்கும்; மேற்பரப்பு வடமொழியாக இருக்கும் மேற்பூச்சைக் கண்டதும் எல்லாம் வடமொழியிலிருந்து வந்தன என்று தோன்றும்; மேற்பரப்பைப் பார்த்ததும் சர்வம் சமற்கிருதமயம் என்று கூறவே மனம் முந்தும். பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் தென்னாட்டில் தென்திசை நோக்கி வரவர அக்கலை வளர்ந்த வரலாறும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய உண்மைகள் புலனாகும். தமிழகக் கோயிற் சிற்பங்களில் நூற்று எட்டுக் காரணங்கள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தமிழகத்தே இதற் கெனத் தனி வகுப்பார் இருந்தமை, பொட்டுக் கட்டும் வழக்க மிருந்த அண்மைக்காலம் வரை நாடறிந்த செய்தியாகும். இந் நாட்டியம் எனப்படும் சதுர் தென்னாட்டுக் கலையாகும். தமிழர் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் நாட்டுப்புறவியல் ஆடல் வகைகளில் ஒன்றே அது. சதுர் ஆடுவதற்கென்றே ஒரு விரிப்புண்டு. அதைச் சதுர்ச்சமுக்காளம் என்பது ஒரு வட்டார வழக்கு. முன்பு சதுர் வைக்காமல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதே இல்லை. இறைவனையே ஆடற் கலை வல்லானாகக் கண்ட இக்கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுக்களிலும் சிற்பங்களிலும் குவிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பற்றி அய்ந்து, அறிந்து தொகுத்து, வகுத்துக் காட்டிக் காப்பார் இன்றைக்கு வரை எவருமிலர். ஆயின் இவற்றைக் காத்தருளிய பரதமுனிவர் காலத்திலேயே தமிழ் மூலங்கள் வடமொழிக் காப்புப் பெற்ற முயற்சிகள் தோன்றிவிட்டன. இதனால் அக்கலை வடமொழியிலிருந்து வந்தது என்றோ, வடவர்க்கு உரியது என்றோ விவாதிப்பது அறிவுடைமையாகாது. விந்தியத்திற்கு வடக்கே இக்கலை கால் கொண்டிருந்ததில்லை. காசுமீரத்திலிருந்து பரதர் இதை எழுதினாரெனில், அவர் எழுதிய வரலாறுதான் ஆராயப்பட வேண்டுமே தவிர, அக்கலை பல நூற்றாண்டுகளாக விளங்கி வருமிடத்திற்கு உரிமையு டையதாகாது என எழுதிவிடுதல் கூடாது. சங்க அக இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் ஆய்வேடுகள் பல தோன்றியுள்ளன. சில நூற்றாண்டுகட்குப் பிறகு இவ்வாங்கில ஏடுகளில் புகழ்பெற்ற ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருவர் அகத்திணை மரபு தமிழர் அய்ரோப்பியரிடமிருந்து கடன் பெற்றது என விவாதித்தால் எவ்வாறிருக்குமோ அவ்வாறே இதுவும் உளது. கலை ஓரிடத்தில் காலூன்றியிருக்க, அதற்கு விளக்கம் பிறிதொரு மொழியில் இருக்கு மானால், அவற்றிடையே ஏற்பட்ட உறவிற்குரிய காரணத்தை உண்மை காணும் மனப்போக்குடன் ஆராயவேண்டும். இதனை அறியாமல் ஒருவர் பரதக்கலை தமிழர்களுடை யதன்று என்று ஆய்வுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றுவிட்டால், அதைக்கண்டு நோவது மட்டும் போதாது. எவரேனும் ஒருவர் தம் வாழ்நாளையே இதற்கென ஒப்படைத்து இக்கலையைக் கற்றும், இதனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் தென்னாடு, வடநாடு எங்கும் அலைந்து தொகுத்தும் கல்வெட்டு, சிற்பம், சமூகம் அனைத் தையும் ஊடுருவி ஆராய்ந்தும் உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். இன்றைய டாக்டர் பட்டங்கள் நமக்கு உரிமங்களாக உதவுகின்றன. அது போதாது. பரதக் கலை எங்களுடையதே என உணர்ச்சிவயப்பட்டு வானதிர முழங்கினாலும் போதாது. தமிழுக்கு உயிரைக் கொடுப்பது என்றால் என்ன? இத்தகைய அடிப்படை ஆய்வுகட்கு வாழ்நாட்களையே துறக்கவும் துணியவேண்டும்.

கருதுகோள் யாது ?

தமிழ் வடிவங்கள் பல வடமொழி வண்ணப் புறப்பூச்சைப் பெற்றுள்ளன; தமிழ் மூலங்கள் பல வடமொழியில் வளர்ச்சி பெற்றுள்ளன என மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் காட்டலாம். இக்கருதுகோளை  (Hypothesis) நிறு விடும் அளவு சான்றுகள் இருப்பதால் நாம் உணர்ச்சி வயப்படத் தேவையில்லை. நமக்கு வடமொழியுடன் பகை இல்லை. எல்லாம் வடமொழியே; தமிழில் ஒன்றுமில்லை என்பார் நெஞ்சிற் போய் உறைக்குமளவு நாம் ஆய்வுரைகளை எழுதிக் குவிக்க வேண்டும்; ஆரவார உரைகளால் இனிப் பயனில்லை. உண்மையை இருசாராரும் ஒப்பும் வண்ணம் நம் ஆய்வுகள் காரண காரியத்துடன் அமைய வேண்டும்.

இந்தியப் பொதுப் பண்பாட்டிற்கும் தமிழ்ப் பண் பாட்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் திருக்கார்த்திகை, தீபாவலி (தீப+ஆவலி - விளக்கு வரிசை) என்ற இருபெரு விழாக்களுக் குமிடையே உள்ள ஒற்றுமை இதை மெய்ப்பிக்கும். இவ்விரண்டு விழாக்களும் ஒரு காலத்தில் ஒரே விழாவாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்தன என முடிவு கூறுதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.

விழாக்களின் அடிப்படை என்ன ?

இந்தியநாடு முழுவதும் தீபாவலி கொண்டாடப்படுகிறது. நாம் அதைத் தீபாவளி எனத் தவறாக ஒலிக்கின்றோம். இது வடநாட்டவர்-ஆரியரால் நம்மிடம் புகுத்தப்பட்ட விழா என்றும், நரகாசுரனைத் திருமால் கொன்று உலகைக் காத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றும் கருதப்படுகிறது. இதில் புத்தாடை பூண்டு, மத்தாப்பூக் கொளுத்தி வெடி வெடித்து, இனிப்புண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. வடநாட்டவர்கள் இதனைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கருது கின்றனர். வடநாட்டுத் தொழிலதிபர்கள் தீபாவளி பிறந்ததும் புதுக்கணக்கு எழுதுகின்றனர்.

நாம் இன்று சித்திரை வருடப்பிறப்பில் புதுக்கணக்கு எழுதுவது போன்றது இது. வடநாட்டவர்க்கே உரிய விழாவெனில் தென்னகமெங்கும்-தமிழக முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் இவ்விழா கொண்டாடப்படுவதேன்? ஒரு சமூகத்தின் பண்பாடு-சமயம்-உளவியல் இவற்றோடு தொடர்புடையன திரு விழாக்கள். ஒரு சமூகத்தின் மேல் ஒரு திருவிழாவை எளிதில் நுழைத்துவிட முடியாது. அங்கேயே நடைபெறும் விழாவைப் புறத்தாக்குரவால் சிறிது மாற்றியமைக்கலாம்.

அடிப்படையான சமய மாற்றத்தால் ஒருவர் புதிய விழாக்களை மேற்கொள்ளலாம். சமுதாயம் முழுவதும் கொண்டாடும் விழாவெனில், அது புறத்தேயிருந்து நுழைக்கப்பட்டதா என்பதைச் சற்றே தயங்கி ஆராய்ந்த பிறகுதான் சொல்ல வேண்டும்.

நவராத்திரி விழாவைத் திருமலை நாயக்கர் தமிழகத்தில் புகுத்தினார் எனக் கூறப்படுகிறது. அது முழு உண்மையன்று, முன்பு தொன்றுதொட்டு வழங்கி வந்த விழாவில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையை இவ்வாய்வாளர் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளார். பிறந்தநாள் விழாக் கொண்டாடும் மரபு மிகப் பழமையானது தமிழர்களுக்கு. புறத்திணையில் ஒரு துறையாகக் குறிக்கப் பட்டு பல பாடல்களால் அறியவரும் அதனை, ஒருவர் மேனாட்டார் பிறந்தநாளைக் கொண்டாடும் மரபின் தாக் குரவால் இது வந்ததென எழுதிவிடுவாராயின் அது முழு உண்மையாகி விடுமா? பிறந்த நாளில் கேக்கு வெட்டுவது வேண்டுமானால் நாம் பிறரிடமிருந்து கற்றதாக இருக்கலாம்.

ஒன்று இரண்டானது

திருக்கார்த்திகை விழாதான் தீபாவலி விழாவென்று ஆயிற்று. தீப+ஆவலி என்றால் விளக்கு வரிசை என்றுதான் பொருள். இரண்டும் இந்திய நாடு முழுவதும் ஒரே பண்பாடாயிருந்த தொன்மை மிக்க காலத்தில் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்பு பல்வேறு காரணங் களால் இரண்டு விழாக்களாகப் பிரிந்தன. இவற்றுள் தீபா வலியை மட்டும் வடவர் கொண்டாட, தீபாவலி, திருக் கார்த்திகை இரண்டையும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்; இந்த உண்மையை உணர்த்துவதே இங்குக் கருத்தாகும்.

 

தொன்மை மிக்கது திருக்கார்த்திகை

தென்னாடு முழுவதும், சிறப்பாகத் தமிழகத்திலும் கேரளத்திலும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருமயிலைத் திருப்பதிகத்தில்,

வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மறுகில்

 

துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்

 

தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்

 

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

என்று குறிப்பிடுகிறார். இதில் விளக்கீடு என்பதே வடமொழியில் தீபாவளி எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இது தொல் கார்த்திகைத் திருநாள் எனப்படுமாயின், இது மிகப்பழங்காலந்தொட்டுக் கொண் டாடப்பட்டு வருவதென்பது தெள்ளிதிற் புலனாகும். இளம் பெண்களே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடும் விழாவென்ற குறிப்பும் உணரத்தக்கது.  இது மிகத் தொன்மையான விழா என்பதையும் இதில் விளக்குவரிசையே தீப ஆவலியே-இன்றியமையாச் சிறப்பு என்பதையும் சங்கப் பாடல்களி லேயே அறியலாம். அகநானூற்றில் அவ்வையார்,

இலையில மலர்ந்த முகையில் இலவம்

 

கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

 

அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி

(அகம். 11)

என்று இலவம்பூ வரிசைக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாக்குகிறார். ஆரவாரத்தோடு மகளிர் மிகமகிழ்ந்து நீண்ட வரிசைகளில் விளக்கேற்றுவதை இதிற் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ கார்த்திகை நட்சத்திரத் திற்குரிய கார்த்திகை மாதத்தில் அழகிய நீண்ட விளக்கு வரிசைகளை வைப்பது போலக் கோங்கமலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கற்பனை செய்கிறார் :

அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்

 

செல்சுடர் நெடுங்கொடி போலப்

 

பல்பூங் கோங்கம் அணிந்த காடே

(நற். 202)

கார்த்திகை மாதம் அறஞ்செய் திங்கள் எனப்படுகிறது. அறுமீன்-கார்த்திகை நட்சத்திரம், செல்சுடர் நெடுங்கொடி, அஞ்சுடர் நெடுங்கொடி என்பன நீண்ட விளக்கு வரிசைகள் (கொடி - வரிசை) தீப ஆவலி இதன்மொழி பெயர்ப்பே என்பது வெள்ளிடைமலை. நக்கீரர் இவ்விழா முழுநிலவன்று - பவுர்ணமியில் கொண்டாடப்படும் என்ற கருத்தைத் தருகிறார்.

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard