New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அர்த்த சாஸ்த்ர நூலில் bce 4th century


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அர்த்த சாஸ்த்ர நூலில் bce 4th century
Permalink  
 


கௌடல்யரால் (கௌடில்யர் என்பது தவறு) இயற்றப்பெற்ற அர்த்த சாஸ்த்ரம் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதை பொயு மூன்றாம் நூற்றாண்டு வரை இழுத்த கால நிர்ணயத்தை டி. கணபதி சாஸ்த்ரிகள் தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். மேலும் கௌடல்யரே அந்த நூலின் அளவு, அத்யாய எண்ணிக்கை, காரிகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட்டு மேற்கொண்டு பிற்சேர்க்கை இல்லாதிருக்க வழி வகை செய்த பின்னும் அதில் பிற்சேர்க்கையிருப்பதாக வாதிடுவது சரியாகத் தோன்றவில்லை. இந்த அர்த்த சாஸ்த்ர நூலில் பலவகையான கோயில்கள் கூறப்பெற்றிருக்கின்றன. சிவபெருமான், குபேரன், அச்வினி, திருமகள், அபராஜிதா (துர்க்கை), அப்ரதிஹதர் (திருமால்), ஜயந்தன் (முருகன்) வைஜயந்தன் (இந்த்ரன்) என்று பல தெய்வங்களுக்கான கோயில்களை அவர் குறிப்பிடுகிறார். இவை பாணினி முதலிய பண்டைய ஆசிரியர் குறிப்பிடும் தெய்வங்களாக இருக்கும் தன்மையும் இந்த நூலின் பழமையை விளக்குகிறது. இவை மௌர்யர் காலத்திருந்த பல்வேறு கோயில்களைப் பற்றி அறிய சிறந்த கருவிகளாக உள்ளன


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நான்கு வேதங்கள் #தமிழில்

அவரவர் பக்கங்களில் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளவும்.

தேவையானோருக்கு உபயோகம் ஆகட்டும்.
-
ரிக் வேதம்
-
https://drive.google.com/…/1Obp3cgzXHjg4tV0HEHqRNI3uf…/view…
-
யஜுர்வேதம்
-
https://drive.google.com/…/1yw8TJq__euYkCqweXBNyGXbLH…/view…
-
சாம வேதம்
-
https://drive.google.com/…/1BvCwxGkGq_-VUuxHNmS0HO4-H…/view…
-
அதர்வண வேதம்
-
https://drive.google.com/…/1gdl8EHX1hFT0d_ohvBnluQLSG…/view…
-

நன்றி பூவிஸ்ரீ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard