தமிழ்நாட்டில் சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சமணர்கள் படைத்த நூல்கள் மீது சைவர்களும் வைணவர்களும் பெரு மதிப்புக் கொண்டிருந்தார்கள். ஜைன அறிஞர்களின் ஒப்புதலையும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு முன்னால் திருநறுங்கொண்டைச் சமணர்களின் ஒப்புதலை வாங்கி வர வேண்டும் என்று திருவரங்கத்து வைணவர்கள் பணித்ததாக விநோத ரச மஞ்சரி கூறுகிறது.
"முன்னோரொழிய பின்னோர் பலரினுள் எந் நூலாரும் நன்னூலாருக்கு இணையோ என்னும் துணிவே மன்னுக" என்று பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் பெருமைப் பற்றி இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகர் பேசுகிறார். "பலகலைக் குரிசில் பவணந்தியென்னும் புலவர் பெருமான் புகழ் போல விளங்கி நிற்றலான்" என்று நன்னூலுக்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாய்ப்புலவர் சொல்கிறார். இருவரும் பழுத்த சைவர்கள்.
'இளங்கௌதமனெனும் வளங்கெழு திருநகர் மதுரையாசிரியன்' என்று சமண ஆசிரியரின் புகழை சித்தன்னவாசல் கல்வெட்டு பாடுகிறது. மதுரை நகரில் புகழ் பெற்ற ஆசிரியராக அவர் இருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.கல்வெட்டு சீமாற சீவல்லபன் என்ற பாண்டியனுடையது. அவன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில். திராவிட, அரைகுறை மார்க்சிய கோமாளிகள், சமணர்களைச் சைவர்கள் கழுவேற்றி அழித்தொழித்து விட்டார்கள் என்று சொல்லப்படும் ஏழாம் நூற்றாண்டிற்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால்.
Raja Sankarசமணமும் பவுத்தமும் சைவம் வைணவம் போன்ற வழிகளே. இப்போது சமணம் பவுத்தமாக சொல்லப்படுவது புராட்டஸ்ண்ட சமணம் புராட்டஸ்ண்ட் பவுத்தம்.
ஆரம்பித்து வைத்து ஆல்காட்டும் அன்னிபெசன்டும். அவர்களுக்கு கொலை கொள்ளையில்லாத ஒரு கிறிஸ்துவம் தேவைப்பட்டது எனவே பவுத்தத்தை காலை கையை வெட்டி மாற்றி கொண்டார்கள்.
இப்போது தர்க்கத்திலேயே சமண தர்க்கம், பவுத்த தர்க்கம் என எழுதுகிறார்கள். வேதத்தை ஏற்கொண்டதா இல்லையா என விவாதம் நடத்துகிறார்கள்.
இந்திய தத்துவங்கள் எதை உண்மையின் அடிப்படையாக ஏற்கிறார்கள் என்றே வகுக்கப்படுகிறது. சமணர்களும் பவுத்தர்களும் பிரத்யஷம், பிரமாணம், அனுமானம் மூன்றையும் ஏற்கிறார்கள். எனவே ஆஸ்திக மதங்களே.
நாஸ்திக மதம் ஒன்றே ஒன்று தான் அது கார்வாகம். அது பிரத்யஷத்தை மட்டுமே ஏற்கும்.
பிரமதேயத்தையும், வெள்ளான் வகை நிலங்களையும் கூறும் சிலப்பதிகாரம்.
இதில் தெளிவாக மறையோர் என பிராமணர்களைக் குறிக்கிறது.
காவிரிப் புதல்வர்(கங்கை குலத்தவர்) என வேளாளர்களைக் குறிக்கிறது.
"வினைஞரும் களமரும் கூடி" என்பதனால் வயலில் ஏவல் நிமித்தம் பணி புரிந்த வினைஞராகிய பள்ளரும் பறையரும் வேறு, களமர் ஆகிய வேளாளர்கள் வேறு எனவும் நிறுவப்பட்டது!
தேவேந்திர குலத்துப் பள்ளர்கள் இனிமேலும் தாங்கள் வேளாளர்கள் எனப் பொய் வரலாறு வேண்டின் இதைப் படித்தேனும் திருத்தம் கொள்வாராக.
களமர் என்பது உழுகுடி வேளாளர் என்று விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த உழுகுடி உழுவித்துண்ணும் குடி என்ற பொருள் விளக்கம் எந்த நூற்றாண்டில் வந்தது?
கருங்கை வினைஞர் என்பதற்கான விளக்கம் எதில் பெறப்பட்டது?
சங்க இலக்கியத்தில் உள்ள வேளாளர் என்ற பதம் யாரை குறிக்கிறது?
நான் கேட்பது விளக்கவுரையைக் கொண்டல்ல. உழுகுடி உழாக் குடி என்றதன் பிரிவு மிகப்பிந்தையது!
தவிர சங்கத்தில் கீழ்க்குடி மக்களென எங்கேயும் களமர் என்ற சொல்பதம் பயன்படுத்தப்படவில்லை.
உங்களின் கருத்தை அதிலேற்ற வேண்டாம். இதைப் பற்றி நாளை முழுவதுமாக தெளிவாக விளக்குகிறேன். சான்றுகளுடன்.
சில இடங்களில் அருகர் என்பது இடத்துக்கு தக்கபடி இருடிகளை குறிக்கவும் செய்கிறது. அப்படி வேளாளர் என்ற குறிப்பு களமர் க்கு இங்கு இருக்கும்.
நிகண்டுகளில் ஆரியர்(உயர்ந்தோர்) என்ற சொல் உயர் குண பிராமணரையும் குறிக்கிறது, மிலேச்சர்களில் வரும் ஆரியர் (ஈரானியர்/பாரசீகர்) எனும் இனத்தாரையும் குறிக்கிறது.
எது எதைக் குறிக்கிறது என்பதை பொதுவழக்கம் அறிந்து தரவுகளின் உதவிகளுடன் தான் சொற்களை பொருள் கொள்ள முடியும்
அயன்மணம் என்பது பிராசாபத்யம் எனும் வகை திருமணத்திற்கு நிகரான தமிழ்ப்பதம். சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ளது.
பெரியாரிய நாசிகளுக்கும் அறிவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் மதங்களுக்குள் நல்லிணக்கம் இருந்தது என்று சொல்லவில்லை. சண்டைகள் நடக்கவில்லை, வன்முறையே இல்லை என்றும் சொல்லவில்லை. அழித்தொழிப்பு என்று சொல்வதுதான் தற்குறித்தனம், மூடத்தனம் என்கிறேன். அது தற்குறித்தனம், மூடத்தனம் என்பதாலேயே பெரியாரிய நாசிகள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்த மறுப்பும் இன்றி ஒப்புக்கொள்கிறேன்.