New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தான்குளம் பள்ளிகள் St Joseph Primary School Sathankulam Sacred Heart Primary School Sathankulam


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சாத்தான்குளம் பள்ளிகள் St Joseph Primary School Sathankulam Sacred Heart Primary School Sathankulam
Permalink  
 


சாத்தான்குளம் பள்ளிகள் கொடுத்துள்ள தகவல்கள்

 

 

சாத்தான்குளம் தூய இருதய தொடக்கப்பள்ளி மற்றும் புனித ஜோசப் பெண்கள் தொடக்கப்பள்ளி ஆகியவைகளிடம் சில தகவல்கள் வேண்டப்பட்டன. பள்ளிகளை நடத்தும் கல்வி முகமையின் பெயர், பள்ளிகளின் நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்கள், பள்ளிகளின் மைனாரிட்டி உரிமை சம்மந்தப்பட்ட ஆவணங்கள், தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் தாளாளர் கண்காணிப்பாளர் விவரம் வேண்டப்பட்டது. இப்பள்ளிகள் மைனாரிட்டி பள்ளிகள் என்ற போர்வையில் செயல்படுவதால் பல ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது. மேலும் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேறொரு நிர்வாகம் வேறொரு மாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை மாற்றி இப்பள்ளிகளில் பதவி உயர்வு கொடுத்து ஊழல் செய்துள்ளனர். ஆவே மரியா தொடுத்த வழக்கு எண்.8491/2009ல் வந்திக்கத் தக்க ஆயர் நீதிமன்றத்தில் கொடுத்த எதிர்வாதவுரையில் பொது முன்னுரிமை பட்டியல் பேணுவதாகவும் பதவி உயர்வு அந்த பொது முன்னுரிமை அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். பிறகு எப்படி மற்றோர் நிர்வாகத்தை சேர்ந்த மற்றோர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இவரது நிர்வகத்திற்கு பதவி உயர்வில் வரமுடியும்? ஆயர் அவர்களே இதெல்லாம் என்னங்க? அப்புறம் பள்ளிகளைப்பற்றி எந்த தகவலும் கேட்கமுடியாதாம். பொதுநலன் இல்லையாம்!!! வந்திக்கத்தக்க ஆயர் இவாம் அம்புரோஸ் எப்போதுமே சின்னப்புள்ள மாதிரிதான் பேசுவார் அவரது பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களையும் அவரைப்போலவே பதில் எழுத வைப்பார். அதாவது The Tuticorin Diocesan Association    என்று பதிவு செய்துவிட்டு  The Roman Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் செயல்படுகிறார்களாம். இப்படி தகவலறியும் மனுவிற்கு தவறான பதிலை எழுதி கொடுப்பதற்கென்றே சிலர் இருக்கின்றனர்.  அவர்கள் ஆசிரியர்கள் என்பதால் குறைகூற இயலவில்லை. ஏனேனில் அவர்கள் ஆயர் இவானின் சொல்படிதானே மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

கண்காணிப்பாளர் இசக்கி, ஒரு ஆசிரியர் இரண்டு  TSR வைத்துள்ளார் அதனால்தான் அவரை  Dismiss செய்தோம்னு  கூறிக் கொண்டு திரிகிறார்.  இப்படி சொல்லிக்கொண்டு திரியும் இசக்கிக்கு ஒரு சொசைட்டியை பதிவு செய்துவிட்டு வேறொரு சொசைட்டியின் பேரில் செயல்படக்கூடாது என்றும் அது தவறு என்றும் தெரியாதாக்கும்? இப்படி சொல்றதுக்கு இவான் அம்புரோஸுக்கும் இசக்கிக்கும் வெட்கமாக இல்லையா? பாவம் தலைமை ஆசிரியர்கள்!!!  தகவலறியும் மனுவிற்கு தலைமை ஆசிரியர்கள் கொடுத்துள்ள பதில்கள் கீழே.

St Joseph Primary School Sathankulam

Sacred Heart Primary School Sathankulam

ஆவே மரியாவின் RTI DESK உரிய நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கனவே இதே நிர்வாகத்தை சேர்ந்த இதே ஊரை சார்ந்த தூய இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் சில தகவல்கள் வேண்டப்பட்டு அது தரப்படாததால் தகவல் ஆணையம் குறிப்புரை வழங்க பள்ளி நிர்கத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்படி தலைமை ஆசிரியரும் பள்ளித் தாளாளரும் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். தவறு செய்திருந்தால் மன்னித்தருளுக என்று ஆணையத்திற்கு தலைமை ஆசிரியரும் தாளாளரும் தெரிவித்துள்ளனர். அதனையும் கீழே பிரசுரித்துள்ளோம்.

Sacred Heart HSS and RTI details



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard