New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாங்குளம் கல்வெட்டுகள்

Guru

Status: Offline
Posts: 24811
Date:
மாங்குளம் கல்வெட்டுகள்
Permalink  
 
மாங்குளம் கல்வெட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
Jump to navigationJump to search
 
மாங்குளம் கல்வெட்டின் மாதிரி
 
தற்கால தமிழில் மாங்குளம் கல்வெட்டின் செய்திகள்
 
மாங்குளம் தமிழ் வெட்டழுத்துக்கள், கல்வெட்டு எண் 2 (மாதிரி)

மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் "பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்" என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.

கல்வெட்டுச் செய்திகள்[தொகு]

பெரும்பாலும் இக் கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன[1].

  • கல்வெட்டு 1
நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை) அமைத்துக் கொடுத்துள்ளார்.
  • கல்வெட்டு 2
நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.
  • கல்வெட்டு 3
வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்னும் ஒரு முத்து வணிகன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது.
  • கல்வெட்டு 4
நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.
  • கல்வெட்டு 5
சந்திரிதன் கொடுபித்தோன்.
  • கல்வெட்டு 6
இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

__________________

Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 
மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள மாங்குளம் என்ற ஊரிலுள்ள கழுகுமலையில் பல பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. மாங்குளம், மீனாக்க்ஷிபுரம் என்றும், அரிட்டாபட்டி என்றும் பல வாறாக அழைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் என்பவரால் பார்வையிடப்பட்டாலும் முதலில் இதனை முயற்சித்துப் படித்தவர் வெங்கோபராவ் ஆவார். இவரால் 1903ல் கீழவளவு என்ற இடத்தில் தமிழ் கல்வெட்டைப் படிக்கத் தொடர்ந்ததை அடுத்து 1906ல் மாங்குளம் கல்வெட்டும் படிக்கப்பட்டது.

மாங்குளத்தில் மொத்தம் 6 கல்வெட்டுக்களும் அரிட்டாப்பட்டியில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. மாங்குளம் அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் இவை அனைத்தும் மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தினால் இவை ஒரே ஊரேயே குறிப்பதாகக் கருதப்பட்டு வந்தது. தற்பொழுது அரிட்டாப்பட்டியிலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் தமிழக வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

செய்தி : பெரும்பாலும் இவை அனைத்துமே இந்தப்பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன. இவ்விதம் அமைத்துக்கொடுப்பதற்கு கல்வெட்டுக்களில் பாளிய் என்ற சொல் பயன்பட்டுள்ளது. பாளிய் என்ற சொல்லிற்கு மேடானப் பகுதி என்றுப்பொருள். ஆனால், இவற்றைப் பல அறிஞர்களும் பிராகிருதச் சொல் எனக்கொண்டுள்ளனர். பின்னர் காலங்களில் ஏற்பட்ட சமண, புத்தப் பள்ளிகளுக்கு இவையே அடிப்படையாகும். பாறையைச் செப்பனிட்டு கொடுக்கும் செயலிற்கு பிணவு, பிளவு, கொட்டுதல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

காலம்: பொ.ஆ.3 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது )

மொழி: தமிழ்

எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)

mankulam.jpg

கல்வெட்டுப் பாடம்

கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்

செய்தி

நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார்.

கல்வெட்டு 2

கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்

செய்தி:

நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.

சிறப்புகள்:

 நெடுஞ்சழியன் என்ற சங்க காலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு.
 புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டிக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மாங்குளம் கல்வெட்டே காலத்தால் முந்தைய பழந்தமிழ் எழுத்தாக்க் கருதப்பெற்றுவந்தது.
 சமணர் குகையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
 கணிய் நந்தஸ்ரீகுவன் என்ற சமணத் துறவிக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்சழியனின் சேவகனும், சகலையும் மற்றும் பல பொது மக்களும் குகையில் இருக்கை அமைத்துக் கொடுத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு 3

கணிய நந்தஸிரிகுவன்
வெள் அறைய் நிகமது
காவிதி கழிதிக அந்தை
அஸீதன் பிணஉ கொடுப்பிதோ

செய்தி

வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் காவிதி என்று பட்டப்பெயர் வழங்குவது தெரிய வருகிறது. காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பது தெளிவு.

கல்வெட்டு 4

கணிய நத்திக் கொடியவன்

செய்தி:

கணிய என்பது சமண முனியைக் குறிக்கும் பிராகிருதச் சொல். நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.

கல்வெட்டு 5

சந்தரிதன் கொடுபிதோன்

செய்தி

சந்திரிதன் கொடுபித்தோன்

கல்வெட்டு 6

வெள்அறை நிகமத்தோர் கொட்டியோர்

செய்தி

நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

இவ்விதம் இந்த 6 கல்வெட்டுக்களையும் தொகுத்துக் காணும்பொழுது இக்கல்வெட்டுக்கள் தமிழக வரலாற்றுப் புனரமைப்பிற்குப் பெரிதும் துணைபுரிவனவாக உள்ளன. முதல் இரண்டு கல்வெட்டுகளும் சங்க காலத்தில் வாழ்ந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் சகலையும், பணியாளும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த பாளிய் குறித்துப் பேசியது. மேலும் நிகமம் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழுக்கள் இருந்தமை தெரியவருகிறது. காவிதிப் போன்ற பட்டங்கள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டமையை அறியமுடிகிறது. சங்க காலத்தில் முத்து வணிகம் சிறப்புற்று இருந்திருப்பதை அறியலாம். பாண்டி நாட்டில் சமணத்திற்கு அரச ஆதரவு இருந்துள்ளமையினையும் அறியலாம்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard