New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா
Permalink  
 


 

. இந்து மதத்தில் தீண்டாமை, மனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா ... இதைப் பத்தியெல்லாம் பின்னாடி பாரக்கலாம். அதுக்கு முன்னணி ஒரு குட்டிக் கதை சொல்றேன்.

ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவங்க ஊர் குளத்து தண்ணீரை பத்தி, அதனோட பயன்கள், தீமைகள் முழுக்க தெரிஞ்சிக்க ஆசை. கூட்டம் போட்டு பேசினாங்க...

கூட்டத்தில் முடிவெடுத்தபடி மூணு குழுவா பிரிஞ்சி, குரூப்புக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் கேனோட பக்கத்து டவுனுக்கு போய் அங்க உள்ள அறிவாளிங்க கிட்ட கொடுத்து பரிசோதனை பன்னி அதை பத்தி விபரம் தெரிஞ்சிக்கலாம்னு கிளம்பிட்டாங்க.

முதல் க்ரூப் டவுனுக்குள்ள போயி யாரை கேட்கலாம்னு தெருத்தெருவா அலைஞ்சி கடைசியா ஒரு டாஸ்மாக் பார்ல இருந்த அறிவாளிகள் கிட்ட அவங்க ஊர் தண்ணியை கொடுத்து அதை பத்தி சொல்ல சொன்னாங்க....

அந்த அறிவாளிகளும் அதை வாங்கி முதல்ல பிராந்தி கூட மிக்ஸ் பன்னி குடிச்சாங்க..., போதை ஏறுனது...!

அடுத்து விஸ்கி கூட மிக்ஸ் பன்னி குடிச்சாங்க.... போதை ஏறினது.

தொடர்ந்து ரம், ஜின், வோட்கா கூடவெல்லாம் கலந்து அடிச்சப்பவும் போதை " கிர்ர்ர்." ன்னு ஏறினது.

இதையெல்லாம் வச்சி அவங்க ஒரு ரிப்போர்ட் கொடுத்தாங்க...

அதாவது தண்ணீர் பயங்கரமான போதை பொருள், எதன் கூட கலந்தாலும் அது தன்னோட போதை தன்மையை இழப்பதில்லைன்னு சொன்னாங்க. அதை முதல் டீம் கேட்டுக்கிட்டு வந்து ஊருக்குள் சொன்னது.

இரண்டாவது டீம் ஒரு தற்கொலை முயற்ச்சியில் விஷ பாட்டிலோட இருந்தவனை பார்த்து தண்ணீரை கொடுத்து விவரம் கேட்டது.

அவன் விசத்தோட தண்ணியை கலந்து குடிச்சி, மண்டையை போடறப்ப தண்ணீர் பயங்கரமான விசம், குடிச்சா செத்துடனும்னு சொல்லிட்டு செத்துட்டான். அந்த டீம் கிராமத்துக்கு திரும்பி வந்து தண்ணியை குடிச்சா செத்திடுவாங்கன்னு சொன்னது.

மூனாவது டீம் சோம்பேறி டீம். அது தண்ணியை ஒரு தெருவோரத்தில் ஊத்தியது. ஊத்தின தண்ணி ஓடி ஒரு சாக்கடையில் கலந்தது. சாக்கடையை எட்டி பார்த்த அந்த டீம், தண்ணி கடும் துர்நாற்றத்தோட கருப்பா மாறும், அதில் புழுக்கள், ஈ எல்லாம் உருவாகி சுகாதார கேடாகிடும்னு கிராமத்துக்கு வந்து சொன்னது.

இப்ப கிராமம் ஒண்ணு கூடி, மூணு குழுவோட முடிவுகளையும் கேட்டு தண்ணியால எந்த பிரையோஜனமும் கிடையாது, அது இருந்தா மக்களுக்கு ஆபத்துன்னு முடிவு பன்னி குளத்தை மூடுனாங்க.

சரி, இந்த கதையை ஒரு ஓரமா வச்சிட்டு மெயின் பிரச்சனைக்கு போகலாம்.்

----------------------

. தொப்பி, பாவாடைகள், சொறியாரிஸ்ட்கள் இந்து மதத்தை பத்தி பேசறப்ப உடனே மனு தர்மத்துக்கு போயிடுவாங்க...!

மனு தர்மத்தின் அடிப்படைகளை தெரிஞ்சிக்கறது அவசியம்.

மனு தர்மம்கிறது இந்துக்களுக்கு வேதம் கிடையாது. அது இந்து மக்களுக்கான ஒரு வாழ்க்கை கையேடு.., அவ்வளவு தான். அதை கடைபிடிச்சே ஆகனும்னு யாரும் சொல்லலை.

மனு ஸ்மிருதி ஒரு சமுதாயம் எப்படி கட்டமைக்கப்பட்டு வாழ வேண்னும்னு தான் சொல்லுது.

மக்களுக்கு எளிதில் புரியும்படியா சொன்ன உதாரணம் தான் நால்வகை வர்ணங்கள் பிறப்பு.

தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்ரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன்... இதெல்லாம மக்கள் எளிதில் புரிஞ்சிக்க சொன்ன உவமைகள்.

உவமைகளையே கேனைத்தனமா பிடிச்சி தொங்குற மன நோயாளிகளுக்கு எவனும் பதிலும் சொல்ல முடியாது. சொன்னாலும் புரிஞ்சுக்கற அறிவு கிடையாது. புரிஞ்சாலும் ஒத்துக்கற பகுத்தறிவு கிடையாது.

இது எப்படிப்பட்ட வாதம்னு உதாரணத்தோடயே சொல்லுறேன்.

தமிழர் தந்தை பெரியார்னு சொறியாரிஸ்ட்கள் சொல்றாங்க. இவங்க மனுதர்மத்தை விமர்சிக்கற ஸ்டைலில் இதை சொன்னா....

தமிழர்களுக்கு எல்லாம் அப்பன் ஈரோடு வேங்கட நாயக்கர் மகன் ராமசாமினு சொல்லுற மாதிரியான கேவலமான அர்த்தம் தான் வரும்.

மனுதர்மத்தின் வர்னாசஸ்ரம அடுக்கு முறைகளை இந்த பாணியில் தான் இவங்க அர்த்தம் கற்பிச்சி பிழைப்பு நடத்தறாங்க.

சரி, வர்னாஸ்ரம படித்தரம் பத்தி பார்க்கலாம்.

-----------------------

. வர்ணாஸ்ரமம் சமுதாயத்தை அவங்க செய்யும் தொழில், குணங்களை வைத்து நான்கு நிலைகளாக பிரிக்கிறது.

1. பிராமணர் : 
வேதங்களை கற்றறிந்தவர். புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.

கடமைகள் :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் சத்திரியர் மற்றும் வைசியர்களின் (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது.

2. ஷத்ரியர் :

ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை,எந்நிலையிலும் பொய்யுரையாமை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன்.

சத்திரியர் கடமைகள் :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், வைசிய தர்மத்தைகைக்கொண்டு வாணிபம் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது.

3.வைசியர் : 
வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்.

வைசிய வர்ண கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின்கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.

சூத்திரர் :

சூத்திரர்கள் முதல் மூன்று வர்ணத்தவர்களுக்கும், பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல்.

----------------------

. நாலு வர்ணத்தை பத்தியும் மனுதர்மம் சொல்றது இது தான்.

இப்போ போட்டோ ஷாப்லயே புளுகு மூட்டையை அவுத்து விடற இந்த கும்பல்களுக்கெல்லாம் பாட்டனான ஈரோடு பெரிய வெங்காயம் தான் மனு ஸ்மிருதியை தன் இஸ்டத்திற்கு அர்த்தம் சொல்லி மக்களை பைத்தியமாக்க ஆரம்பிச்சவர்.

ஒரு சமூகம்னா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கன்னு தான் மனு தர்மம் மக்களை பிரிச்சி அவங்களோட இயல்புகள் கடமைகள் எல்லாத்தையும் சொல்லி நெறிப்படுத்தி வைக்குது.

கொஞ்சம் அறிவை உபயோகப்படுத்தி மறுபடியும் இந்த பிரிவுகள், அவங்க கடமைகளை படிச்சி யோசிச்சா ஈரோடு வெங்காயத்தின் கருத்துக்கள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதுன்னு புரியும்.

---------------

. பிராமணர்களின் கடமை வேதம் ஓதுதல், ஓதுவித்தல் அதாவது கல்வி கற்பித்தல், நாட்டை ஆளும் அரசனுக்கு ஆலோசனைகளை கூறி நல்ல நிர்வாகத்தை கொடுக்க வழிகாட்டுதல்.

திராவிட கட்சி அமைச்சர்களுக்கு அறிவே தேவையில்லை, தலைவர்களுக்கு சொம்படிக்கிற தகுதி இருந்தா போதும்கிறது இப்ப உள்ள சொறியார்களின் ஈரோடு ராமசாமி தர்மம்.

அறிவு, நேர்மை இருக்கிறவன் தான் நாட்டை ஆளும் மன்னனுக்கு ஆலோசனை சொல்லனும்கிறது மனு தர்மம்.

--------------

. ஷத்ரியன் நாட்டை காப்பதற்காக நல்ல உடல் வலிமை, ஒளி வீசும் முகம் உள்ளவனா இருக்கனும்னு மனு தர்மம் சொல்லுது.

நாட்டை ஆள நமக்கு நாமேன்னு சொல்லிக்கிட்டு சட்டையை கிழிச்சிக்கற மெண்டலா இருந்தாலும் பரவாயில்லை ஆனா வாரிசா இருக்கனும்கிறது திராவிட தத்துவம்.

இங்கே சின்னதா ஒரு கேள்வி...
வாரிசு எவன் மூஞ்சியிலாவது ஒளி வீசுதா...? இவனுங்க மூஞ்சியை கொஞ்சம் உத்து பாருங்க...., ரேப் பன்னிட்டு உள்ளே போனவங்க மாதிரியே இருக்கும். காலையில் இவனுங்க மூஞ்சியில் முழிச்சிட்டு வெளியே போனா கண்டிப்பா 108 ஆம்புலன்சில் தான் திரும்ப வரனும்.

------------------------

வைசியர் மத்தவனை ஏமாத்தாம வியாபாரம் செய்யனும், விவசாயம் செய்யனும் அதில் வரும் லாபத்தில் நல்ல காரியங்களுக்கு தானம் பன்னனும்.

திராவிட தத்துவப்படி வியாபாரம்கிற பேர்ல மக்களை கொள்ளையடிக்கிறது தான் வைஸ்ய தர்மம். சுமங்கலி கேபிள் இதுக்கு நல்ல உதாரணம்.

-----------------

இந்த மூணு கேட்டகிரியிலும் வராதவனை சூத்திரன்னு மனு தர்மம் சொல்லுது. அவனையும் கேவலமாகவோ, தாழ்த்தியோ சொல்லலை.

மூணுமே பன்ன முடியாதவன் இல்லைன்னா செய்ய தெரியாதவன் தான் சூத்திரன். இவங்களை மேலே உள்ள மூணு வர்ணத்தாருக்கு, கடவுளுக்கு சேவை செஞ்சி பிழைச்சிக்கன்னு தான் சூத்திரனை சொல்லுது.

-------------------

சரி, இப்ப பஞ்சாயத்துக்கு வரலாம்.

எதுவுமே தெரியாத சூத்திரனை வேற என்ன பன்னி பிழைக்க வைக்கலாம்.

கல்வி அறிவு கிடையாது, படையில் சேர்ந்து போரிட தெம்பும் கிடையாது, உட்கார்ந்து வியாபாரம் பன்னவும் துப்பில்லை.

என்ன பன்னலாம் சூத்திரனை...?

இன்னைக்கு கூட எந்த வேலை வெட்டிக்கும் போகாம, அறிவும் இல்லாம ஒவ்வொரு டீக்கடையிலும் உட்கார்ந்து ஊர் நியாயம் பேசறவன் அத்தனை பேரும் மனுதர்மத்தின் படி பார்த்தால் சூத்திரன் தான்.

இந்த வெட்டி முண்டங்களை இந்தியாவின் அறிவியல் ஆலோசகர்களாக ஆக்கிடலாமா...? இல்லைன்னா சுடலை முதலமைச்சர் ஆனதும் அவருக்கு ஆலோசகர்களாக்கிடலாமா...?

நாட்டையும், மக்களையும் காப்பாத்தற மன்னனாக அதாவது முதலைமைச்சராகவும், பிரதமராகவும் இந்த வெட்டி முண்டங்களை உட்கார வைத்து விடலாமா...?

சூத்திரர்களை காப்பாத்த வந்த ஆபந்பாந்தவன், அனாத ரட்சகன் தானே திராவிட கட்சிகள்...? திராவிட தலைவர்கள் இவர்களுக்கு பெண் கொடுத்து ஆட்சியில் உட்கார வைத்து ஷத்ரியர்களாக உயர்த்தினால் நமக்கும் மகிழ்ச்சியே...! கண்டிப்பாக இந்த சமூக புரட்சியை வரவேற்போம்.

---------------------

சரி, பிறகு ஏன் தீண்டாமை வந்தது...?

சனாதன தர்மத்தில் கண்டிப்பாக தீண்டாமை கிடையாது.

பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே என்று கீதை சொல்கிறது. குணத்தாலும், செய்யும் தொழிலாளும் தான் வர்ணம் பிரிக்கப்படுகிறது என பகவத் கீதை பல இடங்களில் தெளிவாக சொல்கிறது.

மனிதர்களில் ஏற்றத்தாழ்வை நான் பார்ப்பதில்லை என்றும் பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்.

சூத்திரன் என்பது வர்ணாஸ்ரமத்தின் ஒரு பகுதி தானே தவிர அது இழிவான ஒரு அடையாளம் கிடையாது.

உயர்வு தாழ்வு, தீண்டாமை உண்டு எனில்...

1. மாடு மேய்ப்பதும் ஒரு சூத்திர தொழில் தான். சூத்திர யாதவ குலத்தில் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்தது தான் பிராமணர்களும் ஓதும் பகவத் கீதை.

2. வேதங்களை கொடுத்த வியாசரும் ஒரு சூத்திரர் தான்.

3. கோவில்களில் இறைவனுக்கு இணையாக சிலை வைத்து பிராமணர்களாலும் வணங்கப்படும் ஆழ்வார்கள், நாயன்மார்களில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் உண்டு.

4. எந்த வர்ணத்தை பிறப்பால் கொண்டவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம்....
பிராமணரான துரோணர் சத்ரியராக ஆயுதமேந்தியது. 
பிறப்பால் பிராமணரான துரோணரும், சத்ரியரான பீஷ்மரும் சூத்திரனான பகவான் கிருஷ்ணரை வணங்கியது.

5. சத்ரியனான அர்ஜீனன் சூத்திரனான கிருஷ்ணரிடம் பிராமணரை போல் உபதேசம் பெற்றது..

...... ஏகப்பட்ட உதாரணங்களை சொல்லலாம்.

சூத்திரன் என்பது இழி சொல் அல்ல. ஆனால் திராவிட பரதேசிகளால் இழிசொல்லாக மக்களிடம் விதைக்கப் பட்டு விட்டது.

----------------------

சரியப்பா, தீண்டாமையே கிடையாதா என எந்த திராவிட மடையனாவது கம்பு சுத்த வரலாம்.

தீண்டாமை உண்டு. ஆனால் அது இந்து மதத்தில் ஆதியில் கிடையாது. வலுக்கட்டாயமாக இந்து மதத்தில் திணிக்கப்பட்டது தான் தீண்டாமை.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்த மண்ணில் தீண்டாமை இல்லை. இந்த நாட்டை ஆள்வதற்கு அவர்களால் விதைக்கப் பட்டது தான் தீண்டாமை. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. அதையும் பார்க்கலாம்.

-----------------------

. ஆங்கிலேயர் வருகைக்கு முன் பல தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் இந்து மன்னர்களிடம் தளபதியாக இருந்துள்ளனர். அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து படை நடத்தி போரும் புரிந்துள்ளனர்.

வீர மங்கை வேலு நாச்சியாரின் படை தளபதியாக குயிலி இருந்தது நமக்கு தெரியும். அவர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என அறியப்படுகிறார். கிழக்கிந்திய கம்மெனி ராணுவத்தை எதிர்த்து தற்கொலைப்படையாக மாறிய ஒப்பற்ற பெண் அவர்.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் படை தளபதி வீரன் சுந்தர லிங்கம் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை வெள்ளையர்களிடமிருந்து காப்பாற்றும் போர் நடவடிக்கையில் மறைந்த மாவீரர் அவர்.

பூலித்தேவனின் படையில் தளபதியாக இருந்து ஆங்கிலேய படைகளை சிதறடித்து மறைந்த ஒண்டி வீரன் ஒரு அருந்ததிய சமூகத்தவர்.

இவர்கள் மட்டுமல்ல வென்னி காலாடி, கந்தன் பகடை, பொட்டி பகடை, கட்டன கருப்பணன் போன்ற தாழ்த்தப்பட்ட சமூக தளபதிகள் இந்து மன்னர்களிடம் பணி புரிந்தனர்.

இதையெல்லாம் விட ஒரு முக்கியமான தகவல்...., மராட்டிய மாவீரன் சிவாஜி முழுமையான இந்து தர்ம மன்னர். அவரின் படையில் பெருமளவில் இருந்தது மாவல்லி எனப்படும் மராட்டிய மலைசாதி படைவீரர்களும், தளபதிகளும் தான். இந்த மாவல்லி தளபதிகள் தான் மொகலாயர்களை ஓட ஓட விரட்டி கதற வைத்து டெல்லியிலேயே முடக்கினர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம். தளபதிக்கு அப்படி என்ன முக்கியத்துவம்..? அதில் என்ன பெருமை என்று.

ஒரு நாட்டில் மன்னனே உயர்ந்த, அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவன். மன்னன் செயல் பட முடியாத நிலையில் அல்லது நாட்டில் இல்லாத நிலையில் அவனது அதிகாரத்தை தலைமை அமைச்சர் செயல்படுத்துவார். ஆனால் போர்க்களம், நாட்டிற்கு எதிரிகளால் ஆபத்து எனில் மன்னர், மகா மந்திரி எனப்படும் தலைமை அமைச்சர் உள்பட அனைவரும் தளபதியின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்பது தான் மரபு.

தீண்டாமை உண்டு எனில் மன்னரையே கட்டுப்பாட்டில் வைக்கும் தளபதி பதவிக்கு எப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை கொண்டு வந்து வைப்பார்கள்....?

சிந்திக்கும் திறனை திராவிட கட்சிகள் மழுங்கடித்த விளைவுதான் திராவிட பித்தலாட்டமான தீண்டாமையை ஹிந்து தர்மம் ஆதரிக்கின்றது என நம்புகின்றனர்.

-------------------

நாட்டை பிடிப்பது, வரலாற்றை மாற்றி எழுதி மக்களை பிரித்து அடிமையாகவே வைத்திருக்க நமது ஹிந்து தர்மத்தின் நூல்களை வசதிப்படி அர்த்தம் கற்பித்து அதை ஈரோடு வெங்காயம் போன்ற கைக்கூலிகளால் விதைத்து விட்டனர்.

வரலாற்றை மாற்றி எழுத கால்டு வெல், மாக்ஸ் முல்லர் போன்ற பாதிரி பரதேசிகளையும் ஏற்பாடு செய்தனர்.

இப்ப இந்த பதிவோட ஆரம்பத்தில் இருக்கிற கதையை மறுபடியும் ஒரு தடவை படிங்க...

தகுதி இல்லாதவன் எழுதின, உளறின விளக்கங்கள் தான் மனு தர்மத்தை பத்தி சொறியாரிஸ்ட்கள் சொல்லுறது.

கூலிக்கு மாரடிக்கும் திராவிட பன்றிகள் அந்த போலி வரலாற்றையும், பொய்யான பொருள் தரும் வேத விளக்கங்களையும் வைத்து மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து பிழைக்கின்றனர் என்பது தான் உண்மை.

---------- Bommaiyah Selvarajan.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Sankara Narayanan G

சிவலிங்கத்தை உடைக்கக் கூறும் பௌத்த நூல்

வஜ்ராயண பௌத்தத்தின் நூலாக ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆர்யமஞ்சு ஸ்ரீமூலகல்பம் பல்வேறு ஆபிசாரிக பயன்களைத் தருவது. இந்த நூலில் சைவ வைஷ்ணவ வடிவங்களை வைத்தும் அவர்தம் மந்த்ரங்களை வைத்தும் கூட இத்தகைய பயன்பாடுகளைச் செய்யும் விளக்கம் தரப்பெற்றுள்ளது. ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள்

அத² வஜ்ரபாணிர்கு³ஹ்யகாதி⁴பதி꞉ ஸர்வம்ʼ தத் பர்ஷன்மண்ட³லமவலோக்ய பூ⁴ய꞉ க்ரோத⁴ராஜஸ்ய கல்பம்ʼ பா⁴ஷதே ஸ்ம। ஶ்ருʼண்வந்து ப⁴வந்தோ தே³வஸங்கா⁴꞉ யே ஸத்த்வதா⁴துனிஸ்ருʼதாஶ்ச ஸர்வே பூ⁴தக³ணா꞉ ஆதௌ³ தாவத் க்ருʼதரக்ஷ꞉ தம்ʼ படம்ʼ க்ரோத⁴ராஜஸ்ய பரிக்³ருʼஹ்ய விவேகே ஸ்தா²னே ஸதித்வா ஏகலிங்கே³ மஹேஶ்வரஸ்யாயதனே தம்ʼ லிங்க³ம்ʼ விஷருதி⁴ரராஜிகாகாஞ்ஜிகேனாப்⁴யஜ்ய பிசுமர்த³பத்ரைரர்சயித்வா மானுஷாந்த்ரனாலிபி⁴ ஆத்மனா யஜ்ஞோபவீதம்ʼ க்ருʼத்வா மானுஷஶிரகபாலேன த³க்ஷிணஹஸ்தேன ஸப்ரஹாரோ பூ⁴த்வா வாமஹஸ்தேன லிங்க³ம்ʼ தர்ஜயமான꞉ பரமக்ரோதா⁴பி⁴பூ⁴த꞉ அவமானிதது³ஷ்டராஜானை꞉ மஹாபரிப⁴வக³தமானஸ꞉ அன்யைர்வா தூ⁴ர்தபுருஷை꞉ மஹாயக்ஷைர்மஹாத⁴னைர்மஹாப்ரசண்டை³꞉ மஹானாயகை꞉ ஶுத்³தா⁴ரம்ʼ பித²யித்வா நக்³னகோ முக்தஶிக²꞉ மஹேஶ்வரலிங்க³ம்ʼ வாமபாதே³னாக்ரம்ய க்ரோத⁴மந்த்ரம்ʼ தாவஜ்ஜபேத் யாவன்மஹேஶ்வரலிங்கோ³ மத்⁴யே ஸ்பு²டித இதி த்³விவித³லீபூ⁴தம்ʼ மஹாம்ʼஶ்ச ஹுங்கார꞉ ஶ்ரூயதே। ததோ ந பே⁴தவ்யம்।

வஜ்ரபாணியான குஹ்யகர்களின் தலைவன் தன் பரிவாரத்தைப் பார்த்து மீண்டும் க்ரோதராஜனின் கல்பத்தைக் கூறினார். நீங்கள் அனைவரும் கேளுங்கள். எல்லா பூதகணங்களும் க்ரோதராஜனின் துணியை எடுத்து விவேக ஸ்தானத்தில் நின்று ஏகலிங்கமான மஹேச்வரனின் கோயிலில் அவருடைய லிங்கத்தை விஷம், குருதி, காடி, பசை போன்றவற்றால் தடவி வேப்ப இலைகளால் பூஜித்து மனிதக் குடலால் பூணூல் அணிவித்து மனிதத் தலை கபாலத்தால் வலதுகையால் அடித்து இடதுகையால் லிங்கத்தைத் தர்ஜனம் செய்து பெரும் சினத்தோடு தன்னை அவமதித்த தீய அரசனை நினைந்து அல்லது மற்றைய தீயவர்களை நினைந்து நிர்வாணமாக தலையை விரித்து சிவலிங்கத்தை இடதுகாலால் சுற்றஇ க்ரோதமந்த்ரத்தை ஜபிக்க வேண்டும். அப்போது சிவலிங்கம் மத்தியில் வீறல் விடும். இரண்டாகி விடும். பெரும் ஓசை கேட்கும். அதைக் கேட்டு பயப்படக்கூடாது. இதனால் அரசன் குடும்பத்தோடு அழிவான்.

இப்படிச் செல்கிறது. இன்னும் தக்ஷிணாமூர்த்தியைவைத்தும் இதுபோல பயன்பாடுகள் உண்டு. கேட்டால் பக்தி இயக்கம் பௌத்தத்தை அழித்தது என்று குமுறல்கள். என்ன சொல்ல.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard