New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Doctor karunanithi ஆனது எப்படி?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Doctor karunanithi ஆனது எப்படி?
Permalink  
 


 Karunanithi # Doctor karunanithi ஆனது எப்படி?

http://www.tamilinfo.co.in/2018/08/karunanithi-doctor-karunanithi.html

                                   Related image

கருணாநிதி #டாக்டர்_கருணாநிதி ஆனது எப்படி?

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ #டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது! அந்தகாலத்தில் ஒழுங்கா  படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது நடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?

ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்!  காரணம் அவர் அப்போதைய #முதல்வர். இதற்கான அறிவிப்பு வெளியானதும் பல்கலைக்கழகத்தில் இருந்த #மாணவ_காங்கிரஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட  எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்? என்பது மாணவர் காங்கிரஸ் அமைப்பின் கோஷம்.

                                            Image result for karunanidhi

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான்  கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது. அந்த மாணவர்கள் ஆர்வ கோளாறுடன் கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். இது மட்டுமின்றி பல்கலை கழக மதில் சுவற்றிலும் கழுதை  படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்.

இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் கண்டு கொள்ளாது, #சூடுசுரனையின்றி  மாணவர்களின் எதிர்ப்பினை மீறி  போலீஸ் படை  பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்!

சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் நுழைந்த கருணாநிதி #டாக்டர் கருணாநிதியாக  புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார். போகும் பொழுது காவல் துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்று உத்திரவிட்டார்.

அதற்கு பிறகு மாலை மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்களை ஓட ஓட விரட்டி  அடித்தார்கள். பல மாணவர்களுக்கு மண்டை, கை, கால்கள்  உடைந்தது! மாணவர்களுக்கும் போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும்,, ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா? என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் ஆஹா இது கருணாநிதியின் கைங்கரியம் தான் என்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.

அதை விட பெரிய கொடுமை மறுநாள் பல்கலை கழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் #உதயகுமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள் உறைந்து நின்றார்கள்! போலீஸ் தான் உதயகுமாரை அடித்து குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட ஆரம்பித்தார்கள்.

கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா #பெருமாள்சாமியோ இது என் மகன் இல்லை என்று கூறி விட்டார்! இப்படிக்கும் அவரும் ஒரு வாத்தியார். பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் கருணாநிதியின் ஏவளர்கள் அவரை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.  இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்.

காவல்துறையயோ இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது!

இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலையில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் படை மாலை வரை பல்கலைகழக வளாகத்தில்  இருந்தது ஏன்? திடீரென போலீஸ் மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று விசாரணை கமிஷன் கேட்டார்கள் மாணவர்கள்.

கருணாநிதியோ சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட உதயகுமார் படுகொலை பற்றிய  பிரச்சனையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் என்னைக்  கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் பொய்யை கூறிக்கொண்டே இருந்தார்.

எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் #என்எஸ்ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடைசியில் விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்துக்கும் போலீஸ்தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறி கருணாநிதிக்கு பரிசுத்த சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை!

இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது. அதில் முந்தைய  கருணாநிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் #எம்ஜியார் அவர்களிடம் உதவி கேட்டு ஒரு கடிதம்  அனுப்பியிருந்தார். அந்த கடிதம்  அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.

அந்த கடிதத்தில்  உதயகுமாரின் தம்பி என்ன எழுதியிருந்தார்?
 
கடிதம்:-  

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கொலையுண்ட உதயகுமாரின் தம்பி #கேபிமனோகரன் எழுதிக் கொண்டது.

எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து தீராத பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.

இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் முதல்வர்  #கருணாநிதி அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்து இருந்தார்கள். வீடு கொடுப்பதாக கூறினார்கள். வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமெனச் என் தந்தையை மிரட்டி  பயமுறுத்தி சொல்லச் செய்தார்கள். எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார்கள். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால் நாங்கள் இதுவரை எந்தவித உதவியும் பெறவில்லை! என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ அநாதை பிணம் என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத் திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக் கின்றோம்.

தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இப்படிக்கு..
கே.பி.மனோகரன்.
__________ 
மனோகரன் குடும்பம் மாதிரி எத்தனையோ பேர்  கருணாநிதியாலும் திமுகவாலும் அழிந்து போய் இருக்கிறார்கள்!


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

Justice-K-Chandru
ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் வார்த்தையில் –

இந்தச் சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கருணாநிதிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

ஆனால் போலீசார் உதவியுடன் இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது.  இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குப் பெற்றோருக்கும் அனுமதி உண்டு. எனவே அவர்களும் வந்திருந்தனர்.

பெற்றோருக்கென வைக்கப்பட்டிருந்த உணவைப் போலீசார் உண்டதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கும் கலைந்து ஓடினர். இதில் நெல்லிக்குப்பம் பெருமாள்சாமி என்னும் ஆசிரியரின் மகனான உதயகுமார் என்ற மாணவரின் சடலம் ஏரியில் மிதந்தது.

போலீஸ் தடியடி மூலம் அவர் கொல்லப்பட்ட செய்தி நாளிதழ் ஒன்றின் மூலம் தெரியவந்தது.
எனவே உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி நீதி விசாரணை கோரினோம். கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் தன்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் கூறி இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றார் கருணாநிதி.

ஆனால் மாணவர் அமைப்புகள் இதை விடவில்லை. எனவே வேறுவழியின்றி என்.எஸ். ராமசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

கடலூரில் விசாரணை நடைபெற்றது. எனக்குக் கடலூரில் எந்த லாட்ஜிலும் இடம்தரக் கூடாது. என அரசு எச்சரித்திருந்ததால் நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சென்றேன்.

திமுக விலிருந்து யாரும் சாட்சியாக வரவில்லை. நாங்கள் 21 பேரை சாட்சியாக விசாரித்தோம். எங்களுக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என நாங்கள் கேட்டுக்கொண்டதால் இறுதி விசாரணைக்கு சிதம்பரம் வந்தார். 3 மணி நேரம் சிறப்பாக வாதாடினார்.

தனது தீர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தடியடி நடத்தப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி இறந்தது உதயகுமார் தான் என்று குறிப்பிட்டுவிட்டார்.

 

அதுவரை இறந்தது உதயகுமாரே இல்லை என்று கருணாநிதி கூறிவந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பின் மூலம் இறந்தது உதயகுமார்தான் என்பது உறுதியாகிவிட்டது.

…….

தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களில் நான் பங்குபெற்றதால் (கருணாநிதி) அரசுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கலவரத்திற்கு தீவிரவாத மாணவர்களின் சதியே காரணம் எனக் கூறி அரசு என்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முதலில், கல்கி இதழில் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி –

“ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப்போன கல்லூரி மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் – கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான்.

இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, ” இது என் மகன் இல்லை  என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசாரால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? ”

————————————–
இது குறித்து பொதுவாக வெளிவந்த செய்திகளின் சாராம்சம் – 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான விழா 1971 ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.. கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட மாணவர்கள் எழுப்பிய சர்ச்சை.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ், இந்திய மாணவர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு கருணாநிதியைக் கேலி செய்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித் தொங்கவிட்டதாகச் செய்திகள் பரவின. எனினும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழா காலையில் நடந்துமுடிந்தது.

முதலமைச்சர் கருணாநிதி புறப்பட்டுவிட்டார். அதன்பிறகுதான் அடுத்த சர்ச்சை வெடித்தது. திடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். லத்தி கொண்டு தாக்கியதால் மாணவர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அடிபட்டு, உதைப்பட்டு, ரத்தமும் ரணமுமாகக் கிடந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில் உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதந்துகொண்டிருக்கும் தகவல் மாணவர்களை எட்டியது.
ஏராளமான மாணவர்கள் குளத்தைச் சுற்றித் திரண்டனர்.
காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார் குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக் குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாரா என்ற சர்ச்சை பலமாக எழுந்தது.

காவல்துறை தரப்போ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை –

உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை.

காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே பெற்ற மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள்
என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இதை உறுதிப்படுத்தினார் உதயகுமாரின் தம்பி.

—————————————

இதனைத் தொடர்ந்து – இந்த நிகழ்வின் முழு பின்னணியையும் ஆதாரபூர்வமாக சேகரிக்க முயன்றேன். பெரும் முயற்சிக்குப் பிறகு, பதவி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் பேட்டி ஒன்று காணக் கிடைத்தது.

 

விருப்பு வெறுப்பில்லாமல், முழு விவரங்களையும் சொல்கிறது இந்தப் பேட்டி….. ( மிகவும் நீண்ட இந்த பேட்டியிலிருந்து இந்த நிகழ்வுக்கு தொடர்பான விஷயங்களை மட்டும் தந்துள்ளேன். )



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

No automatic alt text available.

https://www.facebook.com/photo.php?fbid=2187670921446212&set=a.1536797159866928&type=3&theater



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1971-ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் கருணாநிதிக்கு #டாக்டர் பட்டம் தருவதை எதிர்த்து அப்பல்கலை மாணவர்கள் #கழுதைகழுத்தில் 'டாக்டர்' என என எழுதி கேலிச்சித்திரம் வரைந்தார்களாம்.. ஏனென்றால் அந்த காலகட்டத்தில்#உண்மை_ஆய்வாளர்களுக்கே அப்பட்டம் வழங்கப்பட்டதே காரணம்..

" 'மறக்கமுடியுமா' போன்ற #உடன்பிறந்ததமக்கையயே #ஆசைக்கழைத்தகதாபாத்திரத்தை #கதாநாயகன் ஆக்கிய எச்சை படத்திற்கெல்லாம் வசனம் எழுதியும் தாமே #வாங்கித்தந்த மோதிரத்தை தலைவன் கையால் அணிவித்து கொண்டதையும் .. எம்ஜிஆர் என்ற#நிழல்நாயகன் இல்லையென்றால் இந்த நபர் முதல்வரே ஆகியிருக்க முடியாது.. இந்த ஆளுக்கெல்லாம் பாரம்பரியம் மிக்க#அண்ணாமலை_பல்கலையில் பட்டமா? அதுக்குப் பேசாம #ஒரு_கழுதைக்குகுடுத்துட்டு போகலாம்" என்பதுமே அன்றைய அண்ணாமலை பல்கலை மாணவர்களின் #கௌரவ_ஆத்திரம்..

அதனாலேயே #கழுதையின் கழுத்தில் 'டாக்டர்' பட்டத்தை தொங்க விட்டார்களாம்...

அமைதி காத்த அன்றைய முதல்வர் கருணாநிதி, டாக்டர் பட்டம் பெற்ற பின்பு என்னை கழுதை ஆக்கியவர்களை கழுதைபோல கதற விடுங்க.. என உத்தரவிட்டபிறகுதான் காவல்துறை கண்மூடித்தெனமாக அண்ணாமலை பல்கலை மாணவர்களைத் தாக்கியதாம்..

இதில் உயிரிழந்த உதயகுமார் என்ற மாணவர் குளத்தில் வீசப்பட்டார்.. பிறகு#பள்ளி_ஆசிரியரான அந்த மாணவரின்#தந்தையே 'இது என் மகன் இல்லை' என 'சொன்னார்'.. எப்படி தெரியுமா??

அண்ணாதுரை மினிஸ்ட்ரியில் இருந்த கருணாநிதி 'கனிமொழி என் மகளே இல்லை..' என்றாரே... அதே ஸேம் ஃபார்முலாவில் தான்...😂

இப்போதும் கருணாநிதி 'டாக்டர் கலைஞர்' என்றே அழைக்கப் படுகிறார்.. அதைப் பார்க்கும்போதும் கேட்கும் போதெல்லாம்#கழுதை_கருணாநிதி என்றே நான் நகைத்தபடியே கடக்கிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Image may contain: one or more people



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard