New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத மாற்றம் பற்றி அம்பேத்கர்: நடந்தது என்ன ? கிறுத்துவ முகமதிய மதங்களுக்கு இந்துக்கள அம்பேத்கர


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மத மாற்றம் பற்றி அம்பேத்கர்: நடந்தது என்ன ? கிறுத்துவ முகமதிய மதங்களுக்கு இந்துக்கள அம்பேத்கர
Permalink  
 


மத மாற்றம் பற்றி அம்பேத்கர்: நடந்தது என்ன ?

May 30, 2015 at 10:28 PM https://www.facebook.com/notes/854691517899389/

கிறுத்துவ முகமதிய மதங்களுக்கு இந்துக்கள் மாறினால் அவர்கள் இந்திய தேசியத் தன்மையை இழந்துவிடுவார்கள். எனவே, அவர்கள் அந்த மதங்களுக்கு மாறக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னதாகப் பல இந்துத்துவர்கள் நம்புகிறார்கள். அம்பேத்கர் சொன்னதாக அவர்கள் ஒரு சில வரிகளைச் சொல்கிறார்கள்.

 

                                                                                  

 

முதலில் அம்பேத்கார் சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வரிகளைப் பார்ப்போம்:

 

//What the consequences of conversion will be to the country as a whole is well worth bearing in mind. Conversion to Islam or Christianity will denationalize the Depressed Classes. If they go over to Islam the number of Muslims would be doubled; and the danger of Muslim domination also becomes real. If they go over to Christianity, the numerical strength of the Christians becomes five to six crores. It will help to strengthen the hold of Britain on the country. On the other hand if they embrace Sikhism they will not only not harm the destiny of the country but they will help the destiny of the country. They will not be denationalized.// 

 

இதை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் பலர் பரப்பி வருகிறார்கள். ஆதாரம் கேட்டால், தனஞ்செய் கீரின் புத்தகத்தைச் சுட்டுவார்கள். அந்தப் புத்தகத்தில் தனஞ்செய் கீர் என்ன சொல்லி இருக்கிறார்? 

 

பார்ப்போம். ஒரு முழுமையான பார்வையில்.

 

எம். ஸி. ராஜா என்று ஒரு அற்புதமான மானுடர் ஒருவர் ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்தார். அவர் ஒரு ஹரிஜனர். சுயநலம் அற்றவர். ஒரு முழுமையான ஹிந்து. 

 

அவரை அம்பேத்காருக்குப் பிடிக்காது. ஏனெனில், ஹரிஜனங்கள் ஹிந்துக்கள்தான் என்று எம். ஸி. ராஜா சொல்லி வந்தார். ஹிந்து மதமும், சமூக அமைப்பும் ஹரிஜனங்களுக்கு சம உரிமைகளும், வாய்ப்புகளும் தரும் என்று எம். ஸி. ராஜா பேசி வந்தார். அவை அம்பேத்காருக்கு இனிக்குமா? 

 

கோபமடைந்த அம்பேத்கார் எம்.ஸி. ராஜா அவர்களை மிகக் கேவலமாகத் திட்டினார்.  “காங்கிரஸின் கைக்கூலி” என்று அவர் எம்.ஸி. ராஜாவைக் கீழ்த்தரமாகத் திட்டியது அவர் வைததில் இருப்பதிலேயே நாகரீகமான வசவு. 

 

எம். ஸி. ராஜா மட்டுமல்லாது தேசியவாதிகளாக இருந்த, கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயரை எதிர்த்த அனைவரும் அம்பேத்கரின் எதிரிகள்தான். அவ்வகையில், அம்பேத்காரின் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் வீர சாவர்கரும், அவருடைய ஹிந்து மகாசபை கட்சியினரும். 

 

எம். ஸி. ராஜா அவர்கள் ஹிந்து மகாசபையினரை மிகவும் மதித்தார். ஹிந்து மகாசபையினரின் தலைவரான டாக்டர். மூஞ்சேவுடன் அவருக்கு நல்ல மதிப்பும் தொடர்பும் இருந்தது. 

 

இத்தகைய தொடர்புகளை எல்லம் உடைத்து ஹிந்துக்களை பலவீனமாக்க, அவர்களை கேஸ்டிஸ்டுகளாக மாற்ற காலனியக் கிறுத்துவ ஆங்கில அரசு வட்டமேஜை மாநாட்டை ஏற்பாடு செய்தது. 

 

அதில் ஹரிஜனங்களின் சார்பில் காலனியக் கிறுத்துவ அரசுக்கு ஆதரவான அடிமைகளை அனுப்ப அது ஏற்பாடு செய்தது. கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயருக்கு ஆதரவு தந்த அம்பேத்காருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. 

 

இந்த வாய்ப்பு மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஏனெனில், காலனியக் கிறுத்துவ பிரிட்டிஷாரின் நோக்கத்தை சிதைக்கக் கூடிய வேறு எந்த ஹரிஜனத் தலைவரும் அந்த மாநாட்டில் வந்துவிடக் கூடாதல்லவா?

 

மிக ரகசியமாக, அம்பேத்கார் இங்கிலாந்துக்குப் பயணமானார். மிகுந்த பொருட்செலவு மிக்க முதல் வகுப்பு அவருக்கு அந்தக் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பொருட்செலவை யார் செய்தார்கள் என்பதெல்லாம் இன்றுவரை தெரியாத ரகசியங்களில் ஒன்று. 

 

இங்கிலாந்துக்குப் போன அவர் அங்கே காலனிய அரசாங்கம் இந்துக்களை உடைத்து நொறுக்க பயன்படுத்திய தனித்தொகுதி முறையை ஆதரித்து, இங்கிலாந்து பிரதம மந்திரி உட்படப் பலரைச் சந்தித்துப் பேசினார்.  (முதலில் தனித்தொகுதி கூடாது என்று ஸைமன் கமிஷனிடம் சொன்ன அம்பேத்கார், திடீரென்று பல்டி அடித்ததற்கு காரணம் வேறு ஒரு கதை. இன்னொரு நாளில் அது.) ஹரிஜனங்கள் ஹிந்துக்கள் இல்லை என்பதால் அவர்களுக்கும், முகமதியர்கள் போலவே தனித் தொகுதி வேண்டும் என்றார்.

 

அப்படியே ஐரோப்பாவில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஆரோக்கிய நிலையத்தில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். அந்தச் சூழலில் தனக்குக் கிடைக்கும் பணம் போதவில்லை என்றும் வருந்தினார். 

 

அப்போது, கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டிற்கு, ஹிந்து மகாசபைத் தலைவரான டாக்டர். மூஞ்சேவுடன் உண்மையான ஹரிஜனரான எம். ஸி. ராஜா அவர்களும் வரப்போவதாக அம்பேத்காருக்குத் தகவல் வந்தது. அவரது வயிற்றைக் கலக்கியது அந்த செய்தி.

 

பிழைப்பில் மண்ணைப் போடுகிறாரே என்று கவலை.  எம். ஸி. ராஜா அவர்கள் பாம்பே நகரத்தில் உள்ளே நுழையக்கூட விடாதீர்கள் என்று தன் கட்சிக்காரர்களிடம் அம்பேத்கார் உத்தரவு போட்டார். 

 

தங்கள் கேஸ்ட் தலைவரான அம்பேத்காரின் உத்தரவுப்படி அவரது கட்சிக்காரர்கள் அனைவரும் சேர்ந்து எம். ஸி. ராஜா அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அம்பேத்காரின் மூக்கை உடைக்கும் வண்ணம், எம். ஸி. ராஜா அவர்கள் அதே பாம்பேயில் அனைத்து ஹரிஜனங்களின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். 

 

அம்பேத்காரின் ஜாதியைச் சேர்ந்த மகர்கள் உட்படப் பல ஹரிஜனங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.  இது ஹிந்துக்களின் ஒற்றுமையை உறுதி செய்தது.  எம். ஸி. ராஜா ஒரு சாதாரண மனிதர் இல்லை என்று அம்பேத்காரே ஒப்புக்கொண்டார்.

 

இருப்பினும், எம். ஸி. ராஜா அவர்கள் கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர் ஏற்பாடு செய்த அந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் செய்யப்பட்டது. ஹரிஜனங்களின் பிரதிநிதியாக கிறுத்துவக் காலனிய ஆங்கிலேய அரசின் அல்லைக்கையான அம்பேத்காரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரட்டைமலை ஸ்ரீநிவாசனும் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. ஹிந்துக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சாவர்க்கரின் ஹிந்துமகாசபைத் தலைவரான டாக்டர் மூஞ்சே கலந்துகொண்டார். 

 

முரண்நகையான விஷயம் என்னவென்றால், ஆங்கிலேயரின் மத்திய மந்திரி சபையில் இருந்த ஒரே ஒரு ஹரிஜனப் பிரதிநிதி எம். ஸி. ராஜா அவர்கள் மட்டுமே.  

 

மட்டுமல்ல. அவர்தான், மந்திரி சபையில் இந்தியாவின் முதல் ஹரிஜனப் பிரதிநிதியும்கூட. 

 

ஆனால், அந்த ஒரே பிரதிநிதியும், முதல் பிரதிநிதியுமான எம். ஸி. ராஜா அவர்களை அதே அரசு நடத்திய வட்ட மேஜை மாநாட்டுக்கு ஹரிஜனங்களின் பிரதிநிதியாக ஆங்கிலேயர்கள் அனுமதிக்கவில்லை ! 

 

அம்பேத்காரை அனுப்பி வைத்தார்கள். எதிர்பார்த்தது போல கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர் விரும்பிய படியே தனித்தொகுதி ஹரிஜனங்களுக்குத் தரப்பட்டது. இது ஹிந்து மதத்தில் இருந்து ஹரிஜனங்களைப் பிளக்க மிக வசதியாக ஆனது. 

 

இந்தப் பிளவைத் தடுத்து நிறுத்த எம். ஸி. ராஜா அவர்களும், ஹிந்து மஹாசபைத் தலைவரான மூஞ்சே அவர்களும் ஒரு ஏற்பாடு செய்துகொண்டார்கள். அதன்படி, ஹரிஜனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஹிந்து மஹாசபையின் ஆதரவாக ஹரிஜனங்கள் போட்டியிடுவார்கள் என்று முடிவானது. 

 

தனஞ்செய் கீர் இது பற்றிச் சொல்லும்போது எம்.ஸி. ராஜா பொறாமை காரணமாக இப்படி எல்லாம் செய்தார் என்று சொல்லிப் போகிறார் !  தனித் தொகுதியை முதலில் ஆதரித்து அம்பேத்காருக்கு தந்தி அனுப்பிய எம்.ஸி. ராஜா பொறாமை காரணமாக இப்படிச் செய்தார் என்றும் தனஞ்செய் கீர் கூசாமல் சொல்கிறார். 

 

அத்துடன் நிறுத்தி இருந்தால்கூட பெரிதுபடுத்தத் தேவை இருக்காது. ஆனால், தனித்தொகுதி முறையை வேண்டிய அம்பேத்காரை ரத்னகிரியில் இருக்கும் ஹிந்து மகாசபை பாராட்டியது என்றும், இது ஹிந்து மகாசபைத் தலைவரான வீர சாவர்க்கரின் பாராட்டு என்றும்கூட அவர் சொல்கிறார். வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு எழுதிய தனஞ்செய் கீர் இப்படிச் சொல்லும்போது நம்பத்தான் தோன்றும். இல்லையா?

 

உண்மையில், இந்தத் தனித்தொகுதி முறை பற்றி வீர சாவர்க்கர் என்ன கருத்து வைத்திருந்தார் என்பதைப் பார்ப்போம். 

 

ஹரிஜனங்கள் அனைவரும் இன அடிப்படையில் மற்ற ஹிந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்று அம்பேத்கார் பேசி வந்தார். இனப் பிரச்சினை காரணமாக சுரண்டப்படும் அவர்களுக்குத் தனித்தொகுதி வேண்டும் என்று சொன்னார். 

 

1949ம் ஆண்டு இந்தத் தனித்தொகுதி முறையை ஸர்தார் படேல் ஒழித்தார். அப்போது சாவர்க்கர் அனுப்பிய பாராட்டு தந்தி:

 

I heartily congratulate you and the Constituent Assembly on leading and adopting the resolutions doing away with separate electorates, reservations, and weightages based on invidious “racial” or religious distinctions and on having thus vindicated the genuinely national character of our Bharateeya state. (Savarkar and Joshi 1967: 224)

 

நாம் மதமாற்றம் பற்றிய அம்பேத்காரின் கருத்தாகச் சொல்லப்படும் விஷயத்திற்குத் திரும்புவோம். 

 

எம். ஸி. ராஜா மற்றும் டாக்டர் மூஞ்சே அவர்கள் செய்த உடன்படிக்கையின்படி அந்தத் தேர்தலில் பக்குவமும், நேர்மையும், தேசப்பற்றும் மிக்க ஹரிஜனங்கள் அம்பேத்காருக்கு எதிராகப் போட்டி இட்டனர். (இந்தத் தேர்தல் சூழலில் முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக அம்பேத்கார் செயல்பட்டார். பல்லாயிரக்கணக்கான பங்களாதேஷ் ஹரிஜனங்களின் படுகொலைக்கும் அம்பேத்கார் காரணமாக இருந்தார்.)

 

விளைவு?

 

அம்பேத்கார் மிக மோசமான தோல்வியை அடைந்தார்.

 

ஹரிஜனங்களின் எதிரியான அம்பேத்காருக்கு ஹரிஜனங்கள் ஓட்டுப் போடவில்லை. 

 

(ஆனால், யூட்யூபில் பிபிஸிக்கு அளித்த பேட்டியில் அந்தத் தேர்தலில் தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அம்பேத்கார் ‘உண்மை’ பேசுகிறார் !)

 

மிகுந்த மனவருத்தமும் ஆத்திரமும் அடைந்த அம்பேத்கார், வெற்றி பெற்ற காங்கிரஸையும் காந்தியையும் மிகக் கேவலமாகத் திட்டி புத்தகமே எழுதினார். (அந்த வசவிலக்கியத்திற்காக சாகித்ய அகடமி கொடுக்க வேண்டும் என்று யாராவது சொல்லிவிடப் போகிறார்கள் !) 

 

அந்தப் புத்தகத்தில் “பார்ப்பன - பனியா” மோசடி காரணமாகத் தான் தோற்கடிக்கப்பட்டதாக அம்பேத்கர் சொல்கிறார். 

 

இந்த “பார்ப்பன-பனியா ஆதிக்கம்” என்கிற பதம் முதன்முறையாக இப்படித்தான் இந்திய விரோதிகளின் அகராதிக்குள் நுழைந்தது. இன்றும் இந்த பதத்தை நீங்கள் இந்திய விரோதிகள் உபயோகிப்பதைக் கவனிக்கலாம். அவர்கள் அம்பேத்காருக்குக் கடன்பட்டவர்கள்.

 

இந்தத் தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது செயல்திறன்மீது கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர்கள் சந்தேகம் கொண்டனர். ஹரிஜனங்களிடம் செல்வாக்கு இல்லாத இவரை வைத்துக் கொண்டு ஹரிஜனங்களை ஹிந்துக்களிடமிருந்து பிரிக்க முடியுமா என்று கவலையடைந்தனர். அவர்களுக்குத் தனது செல்வாக்கைக் காட்ட அம்பேத்கார் முடிவு செய்தார். தான் மதம் மாறப்போவதாகக் கூறினார். 

 

தன்னுடன் பல்லாயிரம் ஹரிஜனங்களும் மதம் மாறுவார்கள், அதைவைத்து தனது பலத்தைக் காட்டலாம் என்று அவர் திட்டமிட்டிருக்கலாம். வீர சாவர்க்கர் இந்த மிரட்டலை கீழ்த்தரமானது என்று விமர்சித்தார். இருப்பினும், அவருடன் ஹரிஜனங்கள் கிறுத்துவ அல்லது முகமதிய மதத்துக்கு மதம் மாறினால், அது மானுட நலனுக்கு நல்லதல்ல என்று ஹிந்துமகா சபைத் தலைவர்கள் எண்ணினார்கள். 

 

மதம் மாறுவதாக இருந்தால் ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த மதங்களில் ஒன்றான சீக்கிய மதத்துக்கு மாறலாம் என்று யோசனை தெரிவித்தனர் சில ஹிந்துத் தலைவர்கள். அம்பேத்காரும் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாக அவர்களிடம்  சொன்னார். 

 

அந்த ஹிந்துத் தலைவர்கள் அம்பேத்காரிடம், இந்த மதமாற்றத்தை ஹிந்து மகாசபை ஆதரிக்கும் என்று கருத்துத் தெரிவித்தனர். ஏனெனில், சீக்கியர்களும் ஹிந்துக்கள். எனவே, ஹிந்து மஹாசபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெறுமாறு கூறினார். அதன்படி, அம்பேத்கார் டாக்டர் மூஞ்சேவை அழைத்துப் பேசினார். 

 

டாக்டர் மூஞ்சேவும் இந்த யோசனையை ஆதரித்தார். ஒரு ஹிந்து தரிசனத்தில் இருந்து இன்னொரு ஹிந்து தரிசனத்துக்கு மாறுவதில் எந்தத் தவறும் இல்லையென்று அவர் கருதினார். 

 

தான் சீக்கிய மதத்துக்கு மதம் மாறப் போகிறேன் என்று அம்பேத்கார் தந்த உறுதிமொழியைப் படித்த டாக்டர் மூஞ்சே அந்த உறுதிமொழி வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார். மற்ற ஹிந்து மஹாசபைத் தலைவர்களிடமும் ஆதரவு திரட்ட அவர் சென்றார். 

 

ஹரிஜனங்களின் உண்மையான தலைவரான எம். ஸி. ராஜா அவர்களுக்கும் இது பற்றி டாக்டர் மூஞ்சே ஒரு கடிதம் எழுதினார். இந்த மத மாற்றத்தை எம்.சி. ராஜா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மூஞ்சே கோரி இருந்தார்.

 

அப்படி எழுதிய கடிதத்தில், அம்பேத்கார் தன்னிடம் சொன்னதாக டாக்டர் மூஞ்சே சொன்ன விஷயம்தான் கிறுத்துவ, முகமதிய மதங்களுக்கு ஹிந்துக்கள் சென்றால் அவர்கள் தேசியத்தை இழந்துவிடுவார்கள் என்கிற விஷயம். 

 

அதாவது, இந்த விஷயத்தை அம்பேத்கார் எந்த வெளிப்படையான பொதுமேடைகளில், எழுத்துக்களில் சொல்லவில்லை. அம்பேத்கர் சொன்னதாக டாக்டர் மூஞ்சே சொன்னதுதான் இந்த விஷயம். 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மத மாற்றம் பற்றி அம்பேத்கர்: நடந்தது என்ன ? கிறுத்துவ முகமதிய மதங்களுக்கு இந்துக்கள அம்பேத்க
Permalink  
 


எதற்கும் மீண்டும் அந்த விஷயத்தை இங்கு தருகிறேன்.

 

//What the consequences of conversion will be to the country as a whole is well worth bearing in mind. Conversion to Islam or Christianity will denationalize the Depressed Classes. If they go over to Islam the number of Muslims would be doubled; and the danger of Muslim domination also becomes real. If they go over to Christianity, the numerical strength of the Christians becomes five to six crores. It will help to strengthen the hold of Britain on the country. On the other hand if they embrace Sikhism they will not only not harm the destiny of the country but they will help the destiny of the country. They will not be denationalized.//

 

ஆனால், எம். ஸி. ராஜா அவர்களுக்கு இது குறித்து அவநம்பிக்கை இருந்தது. அம்பேத்காரை நன்கு புரிந்தவராயிற்றே அவர். எனவே, அம்பேத்காரைப் பின்பற்றி ஹரிஜனங்கள் சீக்கிய மதத்துக்கு மாறுவது குறித்து எம். ஸி. ராஜா கவலை கொண்டார். 

 

இது பற்றி தேசியவாதிகளான மஹாத்மா காந்தி ஜி, ராஜகோபாலாச்சாரியார், மற்றும் பண்டித மதன்மோஹன் மாளவியா போன்றவர்களுக்குக் கடிதம் எழுதினார். 

 

ராஜகோபாலாச்சாரியார் ஹரிஜனங்கள் சீக்கிய மதத்துக்கு மாறுவதை எதிர்த்தார். ராஜகோபாலாச்சாரியார் மட்டுமல்ல. எம். ஸி. ராஜாவின் சந்தேகமும் சரியானது என்று நிரூபணம் ஆனது பிற்பாடு. 

 

டாக்டர். மூஞ்சேவுக்கு எழுதிய பதிலில் எம். ஸி. ராஜா அவர்கள் மிகத் தெளிவாக ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், ஹரிஜனங்கள் பிரிந்து அழியக் கூடாது என்றும் சொல்கிறார். 

 

தனஞ்செய் கீரின் புத்தகத்தில் இருந்தே எம். ஸி. ராஜா அவர்கள் எழுதியதைத் தருகிறேன்:

 

// We want to remain as a solid community moving of our own accord in the direct progress and this we can best do by not throwing away our birth-right as Hindus but by remaining within Hinduism and changing it so as to make it more comfortable not only to our community but to other Hindu communities. We do not wish to be pawns in the game of communal conflicts and competition.//

 

எப்பேர்ப்பட்ட உயர்ந்த தீர்க்கதரிசனராக, நாட்டுப்பற்று மிக்கவராக, சுதந்திரமான ஹிந்துவாக எம். ஸி. ராஜா இருந்திருக்கிறார் ! 

 

இந்தப் பிரச்சினையை அவர் communal conflicts என்று சொல்வதைக் கவனியுங்கள். Social conflicts என்று அவர் சொல்லவில்லை. Racial conflicts அல்லது caste conflicts என்று அவர் சொல்லவில்லை. ஏனெனில், ஹிந்து தர்மம் சமத்துவம் போதிப்பது என்பதும், அந்த ஹிந்து தர்மத்தின் மூலாமாக மட்டுமே ஹரிஜனங்கள் நல்வாழ்வு பெற முடியும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இது ஒரு மதவெறிச் சண்டை (communal conflict) என்று மிகத் தெளிவாக அவர் சொல்கிறார்.

 

இந்த விஷயத்தை ராஜகோபாலாச்சாரியர் எதிர்த்தார் என்று பார்த்தோம். ஹரிஜனங்கள் சீக்கிய மதத்துக்கு மாறுவது, பொதுமனதில் சீக்கிய மதம் ஹிந்து தர்மத்துக்கு எதிரானது அதிலிருந்து மாறுபட்டது என்கிற பிம்பத்தை உருவாக்கும் என்று அவர் கருதினார். அவரது புரிதல்தான் எவ்வளவு சரியானதாகிப் போனது !

 

தனித்தொகுதி முறை உட்படப் பல்வேறு மோசடிகளால் ஹிந்துக்களிடம் இருந்து சீக்கியர்களைப் பிரிக்க கிறுத்துவக் காலனிய பிரிட்டிஷாரால் முயற்சிகள் நடந்தன. இந்த மோசடிக்குப் பலியான சில சீக்கியர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்தே பிரிந்துபோக காலிஸ்தான் பயங்கரவாதங்களை நடத்தினார்கள் என்பது வரலாறு சொல்லும். மட்டுமல்ல, எந்த முகமதிய கொடூரத்தை அழிக்கும் விரதமாக முடியை வெட்டுவதில்லை என்று சபதம் எடுத்தார்களோ, அந்த பயங்கரவாத முகமதியர்களின் அல்லக்கைகளாக பல நூறு இந்துக்களைக் கொன்றார்கள் காலிஸ்தானிகள். 

 

இன்றும் மைனாரிட்டி அந்தஸ்து சலுகைகள் காரணமாக தங்களை ஹிந்துக்களாகக் காட்ட சீக்கியர்கள் தயங்குகிறார்கள். 

 

மட்டுமல்ல. இன்று சீக்கியர்களில் இருக்கும் ஹரிஜனங்கள்மீது உயர்த்தப்பட்ட கேஸ்ட் சீக்கியர்கள் நடத்தும் ஆதிக்கமும் சுரண்டலும் மிகக் கேவலமானது. 

 

அம்பேத்காரை நம்பி ஹரிஜனங்கள் சீக்கிய மதத்துக்கு மாறி இருந்தால் ?

 

நல்லவேளையாக அம்பேத்கார் என்பவருக்கு நேர்மையோ, கொடுத்த உறுதிமொழியைக் காக்கவேண்டும் என்கிற அடிப்படை மனசாட்சியோ இல்லை. எனவே, ஹிந்து மதங்களில் ஒன்றான சீக்கிய மதத்துக்கு மாறுவேன் என்று அவர் டாக்டர். மூஞ்சேவுக்குத் தந்த உறுதிமொழியை வழித்தெறிந்துவிட்டுப் போய்விட்டார். 

 

ஆனால், அந்த துரோகம் நடப்பதற்கு முன்பாக அம்பேத்காரின் நேர்மைமேல் சந்தேகம் கொண்டிருந்த எம்.ஸி. ராஜா மஹாத்மா காந்திக்கும் கடிதம் எழுதி இருந்தார் அல்லவா. டாக்டர். முஞ்சே அவர்கள் எம். ஸி. ராஜாவுக்கு எழுதிய அந்தக் கடிதத்தை வெளியிடும்படி மஹாத்மா காந்தி ஜி யோசனை தெரிவித்தாராம். தனஞ்செய் கீர் சொல்கிறார். 

 

அந்த யோசனையின்படி எம். ஸி. ராஜா அவர்கள் டாக்டர் முஞ்சே எழுதிய அந்தக் கடிதத்தை வெளியிட்டார். அப்படி வெளியான கடிதத்தில் இருந்த தகவல்தான் அம்பேத்கார் சொன்னதாக டாக்டர் மூஞ்சே சொன்ன இந்தச் செய்தி. 

 

இந்தச் செய்தி வெளியானதால் கிறுத்துவ, முகமதிய அடிமை மார்க்கெட்டுகளில் அம்பேத்காரின் மதிப்பு மிகவும் சரிந்தது. அம்பேத்கார் ஹிந்து மதங்களில் ஒன்றுக்கு மாறுவார் என்று நம்பிய ஹரிஜனங்கள் மீண்டும் அவர்மீது நம்பிக்கை இழந்தனர். 

 

தனஞ்செய் கீரே சொல்கிறார்: “இந்தக் கடிதத்தை வெளியிட வைத்து கிறுத்துவ, முகமதிய, மற்றும் ஆங்கில அரசாங்கமும் அம்பேத்கார்மேல் நம்பிக்கை இழக்கச் செய்தார் காந்தி”.  எதனால் இந்தப் பட்டியலில் கிறுத்துவ, முகமதியரோடு, ஆங்கில அரசையும் சேர்த்தார் அவர் ? தன்னை அறியாமல் தனஞ்சய் கீர்  உண்மையை போட்டு உடைத்துவிடுகிறார் - அம்பேத்கர் ஆங்கில அரசாங்கத்தின் அல்லக்கை என்பதை. 

 

அத்துடன், தன்னை வளர்த்துவந்த கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புறம் பேசவும் அம்பேத்கர் தயங்குபவர் இல்லை என்பதையும் தன்னையறியாமல் வெளிப்படுத்திவிடுகிறார். (கிறுத்துவக் காலனிய ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்களில் எல்லாம் அம்பேத்கார் தன்னை அவர்களின் விசுவாசி என்றே எழுதி வந்தார்.)

 

சரி. இந்தக் கடிதம் வெளியானபின்னர் அம்பேத்கார் இவ்விஷயம் குறித்து என்ன சொன்னார் என்பதைக் கவனிக்க வேண்டும் அல்லவா? “ஆமாம். நான் அப்படித்தான் சொன்னேன். கிறுத்துவ, முகமதிய மதங்களுக்கு மாறி தேசியத்தன்மை இழக்காதீர்கள்” என்று அம்பேத்கார் சொல்லி இருக்கலாமே. 

 

அப்படிச் சொல்லி இருந்தால், ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் அம்பேத்காரின் இந்தக் கருத்தைப் பரப்புவதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். 

 

ஆனால், நடந்தது என்ன ?

 

இந்தக் கடிதத்தை எம். ஸி. ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது என்று அம்பேத்கார் பொறுமினார். தன் குட்டு வெளியானதில் அவருக்கு மகிழ்ச்சி இருக்க முடியாதுதான். எனவே, டாக்டர். முஞ்சே எழுதிய கடிதத்தை வெளியிட்டது நயமானதல்ல என்றார் அம்பேத்கர். 

 

ஆன்ம நலனுக்காக இந்தக் கடிதத்தை வெளியிட்ட எம். ஸி. ராஜா எதனால் உலகாயாத விஷயமான தனித்தொகுதி போன்ற விஷயங்களில் தலையிடுகிறார் என்று டாக்டர் முஞ்சேவும் எரிச்சலைக் கொட்டினார். 

 

எப்படியோ, எம். ஸி. ராஜா மற்றும் மஹாத்மா காந்தி ஜியின் இந்தச் செயல்பாடுகளால் அம்பேத்கார் கிறுத்துவ, முகமதிய மதங்களுக்கு மாற முடியாமல் போனது. அவரோடு அவர் கேஸ்டைச் சேர்ந்த மகர்களும் மாறுவது தடைப்பட்டது. 

 

இங்கே ஒரு கேள்வி எழலாம். எழ வேண்டும். அம்பேத்கர் மாறுவது தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் தனது கேஸ்டைச் சேர்ந்தவர்கள் அந்த மதங்களுக்கு மாறுங்கள் என்று சொல்லி இருக்கலாமே. அவர் ஏன் சொல்லவில்லை?  இந்தக் கேள்வி பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விதான்.

 

ஏனெனில், அம்பேத்காருக்கு அவருடைய அரசியல் செல்வாக்கின் அடித்தளம் எது என்பது தெரியும். அது அவரது மகர் சாதிக்காரர்கள்தான்.

 

அவருக்கு முந்தைய மகர் சாதித் தலைவர்கள் பூணூல் அணிவித்தல், வேதங்கள் பயிலுதல், வேள்விகள் செய்தல், பூஜை செய்தல் போன்றவற்றை ஆதரித்து அந்த சாதியைச் சேர்ந்த பலருக்கும் அந்த வசதிகளைச் செய்து வந்தார்கள். ஆனால், அம்பேத்கார் தலைவராக ஆனவுடன் ஒரே ஒருமுறை அதைச் செய்து பின்னர் அவற்றை எல்லாம் கீழ்த்தர இந்து வழக்கங்கள் என்று சொல்லி ஹிந்து மதத்தோடு இருக்கும் தொடர்புச் சடங்குகளை, அடையாளங்களை அழித்தார். அதன் மூலம் கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.

 

ஆங்கில அரசாங்கத்தோடு அவருக்கு இருந்த தொடர்பு, மற்றும் அவர் மூலம் அவரது கேஸ்டுக்குக் கிடைத்த எஸ்.ஸி. அடையாளம் உள்ளிட்ட பல பொருளாதார நலன்கள் அவர் கேஸ்ட்டிடம் அவருக்கு நல்ல மதிப்பையும் ஆதரவையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது கைப்பிடுக்குள் அந்த கேஸ்ட் முழுமையாக வந்தது.

 

சாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, சக ஹரிஜனங்களான மாங்குகளை மட்டமாக நடத்துதல், மாங்குகளைக் கோயிலுக்குள் விடாத மகர்களை ஆதரித்தல் போன்றவற்றையும் அவர் கைப்பிடித்தார். இந்தப் போலித்தனங்கள் மூலமாக மகர்களுக்கு சங்கடங்கள் ஏற்படுத்தாமலும் அவர் இருந்தார். இவற்றின் காரணமாகவும், மகர் கேஸ்ட் அவர் கைப்பிடிக்குள் இருந்தது.

 

அதைக் கெடுத்துக்கொள்ள அவர் முட்டாள் இல்லை. அதாவது, தன் சாதிக்காரர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவர்களின் ஆதரவை முற்றிலும் இழக்க அவரொன்றும் பாரதியாரோ, வவேசுவோ, செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரோ இல்லை.

 

அம்பேத்கர் பிழைக்கத் தெரிந்தவர்.  

 

அவர் இறுதிவரை மகர் சாதித் தலைவராகவே வாழ்ந்து மறைந்தார். இறுதிவரை சாதியை ஒழிக்க வேண்டும் என்று கோஷமும் எழுப்பினார்.

 

வேறு எந்த மதத்துக்கு மாறினாலும், அந்த மதத்திற்குள் மகர்கள் உள்ளிழுக்கப்பட்டு, அந்த மதத்தின் தலைவர்களின் கீழ் அவர்கள் வருவார்களே தவிர, அம்பேத்காரின் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லாது போய்விடும். இந்தப் புரிதல் கிறுத்துவர்களாக மாறிய மகர்களிடம் இருந்து அம்பேத்காருக்கு ஏற்பட்டது. கிறுத்துவர்களாக மாறிய மகர்கள் யாரும் அம்பேத்காரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சர்ச்சின் சொல்படிதான் கேட்டு நடந்தார்கள். 

 

 எனவே, எந்த மத அமைப்புத் தன்னை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளுமோ அந்த மதத்திற்கு மாறுவது என்கிற எண்ணத்தில் அவர் இருந்திருக்கலாம். அவரது நெகோஷியேஷன்கள் அதையொட்டியே இருந்தன. கிறுத்துவ, துலுக்க மதங்களில் இதற்கான வாய்ப்புகள் குறைவு. சீக்கிய மதத்தில் வாய்ப்பு இருந்தது.

 

ஆனால், சீக்கிய மதம் பற்றி ஆராயச் சென்ற அவர் சாதிக்காரர்கள் உற்சாக மிகுதியால் அம்பேத்காரைக் கேட்காமல் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டார்கள்.  அவர்களை சீக்கிய மதத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். எனவே, அந்த மதத்திலும் தன்னைவிட மற்றவர்களுக்கும் அதிகாரம் இருக்கும் என்பதும், தன் கேஸ்டைச் சேர்ந்தவர்கள் தன் கைப்பிடியில் இருந்து விலகுவார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது. அதனால் அவர் சீக்கிய மதத்திற்கு மாறும் முடிவை கைகழுவினார்.

 

மூஞ்சேவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். அதற்குப் பதிலாக தனது கைப்பிடியில் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் இருக்கும்படிச் செய்ய அவரே ஒரு மதத்தை உருவாக்கி, அதன் தலைவராக ஆனார். 

 

உண்மையான பௌத்த சம்பிரதாயத்தைச் சேர்ந்த பௌத்த மடாதிபதிகளும் அம்பேத்காரை ஏற்கவில்லை. எனவே, அம்பேத்கார் அவராகவே ஒரு புதிய சம்பிரதாயத்தை உருவாக்கினார். அதுவரை இல்லாத ஒரு புதிய புத்தரையும் உருவாக்கினார்.

 

தன்னுடைய அந்த மதத்துக்கு “நவ்யானம்” என்று அவர் பெயர் வைத்துக் கொண்டார். இந்த “நவ்யானத்துக்கும்” உண்மையான பௌத்தத்துக்கும் பெயர்களைத் தவிர எந்த சம்பந்தமும் இல்லை. 

 

தானே உட்கார்ந்த தானைத் தலைவராக, அவரே உருவாக்கிய பௌத்த மதத்துக்கு அவரே மாறியதாக ஒரு நாடகம் நடத்தினார். 

 

இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த பௌத்த குருமார்கள் அவரது இந்தப் புதிய புரட்டு மதத்தை ஏற்கவில்லை. எனவே, ஸால்வடோர் ஸியோஃபி என்கிற இத்தாலியரை முன்னிறுத்தி பௌத்தத்துக்கு மாறியதாக அறிவித்துக்கொண்டார். (மிகத் தீவிரக் கத்தோலிக்கக் கிறுத்துவக் குடும்பத்தில் பிறந்த ஸால்வடோட் ஸியோஃபிக்கு அமெரிக்காவில் இருக்கும்போது பௌத்த மதத்தின்மேல் ஈடுபாடு ஏற்பட்டது. பர்மா சென்ற அவர் மிகத் தீவிர மதவெறி கொண்ட தேரவாத மார்க்கத்தில் சேர்ந்து துறவியானார். லோகநாத என்று பெயர் வைத்துக் கொண்டார். அந்தக் காலத்தில் பலக் கிறுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேரவாதம் பல திறப்புகளைச் செய்து தந்தது. ஹிந்து தர்மத்தில் இருந்து வேறுபட்டதாக பௌத்தத்தை அவர்கள் கட்டமைத்தார்கள். இலங்கை உட்பட. அவை தனிக்கதை.) 

 

கிறுத்துவ மதத்தின் பத்து கட்டளைகளை ஒட்டி தான் உருவாக்கிய இந்த மறைவுக்கிறுத்துவ மதத்திற்கும் அம்பேத்கார் இருபத்திரண்டு கட்டளைகளை உருவாக்கினார். அவை அனைத்தும் பன்மைத் தன்மைக்கு எதிரானவை. ஆபிரகாமிய மதங்களையொட்டியவை. ஹிந்து தர்மத்திற்கு எந்தக் காலத்திலும் ஹரிஜனங்கள் போய்விடக் கூடாது என்று வலியுறுத்துபவை. 

 

 

அம்பேத்காரின் மதமாற்றம் எதற்காக என்பதை குரு ஜி கோல்வல்கர் சொல்கிறார்.
This so-called 'minority' problem is not one of Muslims only. It is also within the Hindus themselves. For example we have the Jains, we have what is known as the Scheduled Caste people some of whom followed Dr. Ambedkar and became Buddhists and are trying to claim that they are separate. As a minority happens to have certain political privileges in our country, everyone wants to prove that he is a minority and claim those privileges. This cuts the whole country into so many fragments which may well spell our ruin. As a matter of fact we are heading for it.
அதாவது, மைனாரிட்டி சலுகைகள் பெறுவதற்காகவே அம்பேத்கார் மதம் மாறியதாகக் குற்றம் சுமத்துகிறார் குரு ஜி கோல்வல்கர். இங்கனம் அம்பேத்கார் செய்தது இந்தியாவைப் பல துண்டுகளாக உடைத்து அழிக்கவே என்கிறார். அதாவது, அம்பேத்கார் இந்தியாவை உடைக்கும் தீயசக்தி என்று தெளிவாகவே சொல்கிறார்.

 

மகர் கேஸ்ட் தலைவரான அம்பேத்கர் ‘மதம்’ மாறியபோது அவரோடு சேர்ந்து அவர் கேஸ்ட்டைச் சேர்ந்த மகர்கள் பலர் மதம் மாறினர். வேறு கேஸ்ட்களைச் சேர்ந்த ஒரு சிலரும் மதம் மாறினர்.

 

இன்றைய நிலைமை என்ன? எந்த ராமனையும், கிருஷ்ணனையும், சிவனையும் வணங்கக் கூடாது என்று அம்பேத்காரின் முதல் பத்துக் கட்டளைகள் சொல்கின்றனவோ, அந்த ராமனையும் கிருஷ்ணனையும் சிவனையும் மகர்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றனர். 

 

கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயர்கள் ஹரிஜனங்களைக் குறிக்கப் பயன்படுத்திய வார்த்தை “தலித்”. அவர்களின் அல்லக்கையான அம்பேத்கார் அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு அந்த வார்த்தையைப் பெரிதும் பரப்பினார். ஆனால், தற்காலத்து மகர்களோ அந்த வார்த்தை தங்களை இழிவு படுத்துவதாகச் சொல்கிறார்கள். 

 

இப்படி மகர்கள் முன்னேறிய சூழலில் கிறுத்துவக் காலனிய ஆங்கிலேயரின் அல்லக்கையான அம்பேத்காரை ஒரு சீர்திருத்தவாதியாகப் பொய்யுரைப்பது, எத்தகைய மோசமான மனோவியாதி நம் சமூகத்தைப் பீடித்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. 

 

எனவே, இந்தப் பொய்யுரைகளை தூக்கி எறியுங்கள். அம்பேத்கார் என்ன சொன்னார் என்பதை அம்பேத்கார் எழுதிய படைப்புகளில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள். 

 

உதாரணமாக, கிறுத்துவ, முகமதிய மதங்களுக்கு மாறுவது பற்றி அம்பேத்கார் உண்மையில் என்ன சொன்னார் ?

 

//The principle of equality as taught in Christianity and Islam has no concern whatsoever with knowledge, wealth, or dress, as outward aspects. Both these religions consider a sense of humanity as the mean feature of religion. They preach that the sense of humanity should be respected by all; and none should disrespect others, none should treat others as unequals. These teachings are completely wanting in the Hindu religion. What is the use of such a religion, in which man's sense of humanity has no value? And what is the good in clinging to it?//

 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_salvation.html

 

பிற்சேர்க்கை:

//பிரிட்டிஷ் அரசாங்கம் அப்போது ஒரு கொள்கையை தீர்மானித்து இருந்தது. அதாவது சைமன் கமிஷன் உறுப்பினர்களையோ, மத்திய சட்டமன்றக் குழு உறுப்பினர்களையோ வட்டமேசை மாநாட்டுக்கு அனுப்புவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. பெருந்தலைவர் எம்.சி.ராஜா அப்போது மத்திய சட்டமன்றக் குழு உறுப்பினர். எனவே அவர் நியமிக்கப்படவில்லை. (நூல் : பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி : 16, பக்.187)//

 

வட்ட மேஜை மாநாட்டிற்கு ஏன் எம்.சி. ராஜா அனுப்பப்படவில்லை?

 

சைமன் கமிஷனில் பங்கு பெற்றவர்களையும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வட்ட மேஜை மாநாட்டிற்கு அனுப்பவதில்லை என்று ஏதேனும் தீர்மானம் வடிக்கப்பட்டு, அதன் காரணமாக எம். சி. ராஜா வட்ட மேஜை மாநாட்டுக்கு அனுப்பப்படவில்லையாம்.

 

இந்தச் செய்தி உண்மை எனில் அம்பேத்கார் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்க முடியாது. ஏனெனில், 1928ம் ஆண்டு ஸைமன் கமிஷனில் தன்னுடைய அமைப்பான பஹிஷ்க்ரித ஹிதாகாரிணி சபாவின் சார்பில் கிறுத்துவ ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டிற்கு அவர் ஆதரவு தெரிவித்து இருந்தார். அவர் சைமன் கமிஷனோடு தொடர்புகொண்டு தந்த அறிக்கைகள் தனிப்புத்தகமாகவே கிடைக்கிறது.http://www.amazon.in/Dr-Ambedkar-With-Simon-Co…/…/B00QIYMCP8

 

ஸைமன் கமிஷனோடு தொடர்புடையவர்கள் இல்லை, ஸைமன் கமிஷன் “உறுப்பினர்களை” அனுப்பக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருந்தால், அந்த பிரிட்டிஷ் அரசின் அறிவை சந்தேகிக்க வேண்டியதுதான். ஏனெனில், சைமன் கமிஷன் உறுப்பினர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமே.

 

எம். சி. ராஜா மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவரை அனுப்பவில்லை என்கிற தகவலும் உண்மையல்ல.

ஏனெனில், இந்தத் தகவல் உண்மையாக இருக்குமானால் அம்பேத்காரோடு வட்டமேஜை மாநாட்டில் பல இந்தியர்கள் கலந்துகொண்டிருக்கவே முடியாது.

 

உதாரணமாக, இந்துக்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட முகுந்த் ராமராவ் ஜெயகர் 1925ம் ஆண்டு மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடந்தபோது அவர் மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருந்தார்.

 

அதேபோல, மத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டு பிரதிநிதிகள்: டாக்டர் மூஞ்சே (1926 - 1931), தேஜ் பஹதூர் சாப்ரு (1916 -1920), ஆற்காடு ராமசாமி முதலியார் (1920 - 1926), கௌவாசி ஜஹாங்கீர், ஹோமி மோடி, ... இன்ன பிறர்.

 

கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறுத்துவக் காலனிய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள்.

 

அது மட்டுமல்ல. இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடந்தபோது எம். சி. ராஜா மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. 1926வரைதான் எம். சி. ராஜா மத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1926ல் இருந்து 1937வரை அவர் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் அஸெம்ப்ளியின் உறுப்பினர். மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை.

 

எம்.சி. ராஜா இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள முயற்சிகள் செய்ததையும், அதைக் கண்டு அம்பேத்காரும், அவருடைய முதலாளிகளான கிறுத்துவ காலனிய ஆங்கிலேயர்களும் பதறினார்கள் என்பதையும் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு எழுதிய தனஞ்செய் கீர் பதிவு செய்திருக்கிறார்.

 

ஆங்கிலேயர்கள், சைமன் கமிஷன் மற்றும் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை வட்டமேஜை மாநாட்டுக்கு அனுப்புவதில்லை என்று கொள்கை ரீதியாக அறிவித்து இருந்தால், எம். சி. ராஜா அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கமாட்டாரே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தலித்துகளும் ஆரியர்களே!
Permalink  
 


  

H Raja shared a post.
7 hrs · 
 
 
Image may contain: 1 person, cloud, sky, eyeglasses, closeup and outdoor
Image may contain: 1 person, text
Ilango Pichandy is with Balauravu and 6 others.

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் 
தலித்துகளும் ஆரியர்களே!
பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் 
தலித்துகளும் திராவிடர்களே!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று 
டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் 
படியுங்கள்.

டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்:

எனவே எனது முடிவுகள் பின்வருமாறு:-
1) ஆரிய இனம் என்று எந்த ஒரு இனமும் வேதங்களில் 
குறிப்பிடப் படவில்லை.

2) இந்தியாவின் மீது ஆரிய இனத்தவர் படையெடுத்தனர் 
என்பதற்கோ, இந்தியாவின் பூர்வ குடிகளாகக் கருதப்படும் 
தாசர்களையும் தஸ்யூக்களையும் வென்றனர் என்பதற்கோ 
வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

3) ஆரியர்களுக்கும் தாசர்கள்-தஸ்யூக்களுக்கும் இடையிலான 
வேறுபாடு இன ரீதியான வேறுபாடே என்பதற்கு எந்த 
ஆதாரமும் இல்லை.

4) தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து ஆரியர்கள் உடலின்
நிறத்தால் வேறுபட்டவர்கள் என்ற கருத்துக்கு வேதங்களில் 
எந்த ஆதாரமும் இல்லை.

"மானுட உடலளவிடும் இயல்" (anthropometry) என்பது 
மனிதர்களின் இனத்தைத் தீர்மானிப்பதற்கான நம்பத்தகுந்த 
அறிவியல் என்றால், பார்ப்பனர்களும் தீண்டத் தகாதவர்களும் 
ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்று அதன் அளவீடுகள் 
நிறுவுகின்றன.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பார்ப்பனர்கள் 
ஆரியர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் ஆரியர்களே.

பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் 
திராவிடர்களே.

(மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்)

ஆங்கில மூலம் கீழே காண்க.
My conclusions are:

1. The Vedas do not know any such race as the Aryan race.

2. There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race
and it having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.

3. There is no evidence to show that the distinction between Aryans, Dasas and 
Dasyus was a racial distinction.

4. The Vedas do not support the contention that the Aryans were different in colour 
from the Dasas and Dasyus…..If anthropometry is a science which can be depended 
upon to determine the race of a people….. (then its) measurements establish that the 
Brahmins and the Untouchables belong to the same race. From this it follows that 
if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. 
If the Brahmins are Dravidians, the Untouchables are also Dravidians…..’

(B. R. Ambedkar, ‘Writings and Speeches’ [Bombay: Education Department, Government of

Maharashtra, 1986-1990], Vol. 7, p. 85 and 302-303, quoted in Koenraad Elst’s Indigneous
Indians, Agastya to Ambedkar, op. cit., p.410-411).

தமிழில் படிக்க விரும்புவோர் 
டாக்டர் அம்பேத்கார் பேச்சும் எழுத்தும் 
தொகுதி-13, பக்கம் 130-ஐப் படிக்கவும்.

ஆக, ஆரிய திராவிட இனக்கொள்கையானது போலியானது,
பொய்யானது, கற்பனையானது, இந்தியர்களைப் 
பிரித்தாள ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மோசடியான 
கோட்பாடு என்பதை டாக்டர் அம்பேத்கார் ஆணித்தரமாகக்
கூறுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard