New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான துரோகங்களின் பட்டியல்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான துரோகங்களின் பட்டியல்
Permalink  
 


#கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான துரோகங்களின் பட்டியல்" - என்று வந்த இந்த வாட்ஸ்-அப் மெசேஜ் படிச்சி அப்படியே ஷாக் ஆயிட்டேன்..

இதை ஆதாரபூர்வமாக மறுத்தால், ஒரு பரிசு உண்டாம்... நீங்களும் படியுங்களேன்....

1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்

9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.

16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது 
கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை 
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் 
அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் 
அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் 
கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 
வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, 
பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் 
கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று 
(இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே 
தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் 
கொலைபழியை சுமந்தது கலைஞர்.

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின் 
மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்

76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.

77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .

78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !

79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர் !

80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !

81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !

82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு 
மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !

83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது 
கலைஞர்.

84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை 
அழித்தவர் ஜெயலலிதா)

85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் 
தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் 
படுத்தியவர் கலைஞர் !

86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie 
University)

87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)

90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் 
ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.

91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை 
மற்றும் ஆராய்ச்சி மையம்.

95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், 
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் 
போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின...

96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர் 
ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.

98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் 
சாலைக்கான துவக்கம்.

100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக 
மாற்றிட அனுமதி.

103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய 
குளிர் உருட்டாலை உருவாக்கம்.

108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் 
செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், 
நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..

109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 
கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.

111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில் 
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..

113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன

114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி 
செயல்படுத்தியது கலைஞர்

115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி 
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்

116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், 
நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், 
அண்ணா நூற்றாண்டு நூலகம்.... இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..

117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா.... 
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...

118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய 
நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் 
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...

119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், 
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை 
கொண்டுவந்ததும் திமுகதான்...

120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் 
வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் 
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..

121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை 
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..

122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்... 
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக 
ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு.. 
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு 
முன்னிலை வகிக்கிறது..

123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது 
திமுக ஆட்சியில்..

124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று 
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..

125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் 
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு 
பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..

இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...

உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 
இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...

கலைஞர் & ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை ஆரிய பார்ப்பனீய சக்திகள் தொடர்ச்சியாக எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா, கலைஞரும் திமுகவும் தமிழ் & தமிழ் நாட்டின் வளர்ச்சிகாக பாடுபடுகிறார்கள் என்று.....

திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான் - "திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்வார்கள்... தமிழகம் மீண்டும் வளர்சிப்பாதையில் 
செல்லும், தமிழ் நாடு முதன்மையான மாநிலமாக மாறிவிடும்.. தமிழும் தமிழர்களும் உயர்வு பெறுவார்கள்.... அதனை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும்... தமிழ், தமிழர், தமிழ் 
நாடு எல்லாவகைகளிலும் பின்தங்கவேண்டும்", என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு...

##திருவாரூா்_கிருட்டினமூா்த்தி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த 125 வகையான துரோகங்களின் பட்டியல்
Permalink  
 


*********************************************************************/
****** ஏக மாதா பஹு பிதா சச்சூத்ராய நம : ********/
**********************************************************************/
வாசகர் நச்சரிப்பில் விளைந்த இன்னுமொரு திக கண்டன கட்டுரை.
----------------------------------------------------------------------------/

அடியேன் தமிழை 12 ஆம் வகுப்பு வரையில் தமிழகத்தில் பயின்றேன். அடியேனுக்கு உயிரினும் மேலான பாடம், இந்த தமிழ் தான். பத்தாம் வகுப்பில் கோபால அய்யங்காரிடம் இலக்கணம் பயின்றவன் அடியேன். இருப்பினும் இந்த கேடுகெட்ட திராவிடர் கழக அரசுகள் பள்ளி பாடதிட்டத்தில்(SYLLABUS) ஒரு தமிழ்ப்பாவிற்கு பொருள் கொள்வது எப்படி என்று சொல்லித் தரவேயில்லை. ஆசிரியரும் சொல்லவில்லை. பின்னர் பெங்களூரில் ஸம்ஸ்க்ருத பாரதியில் சேர்ந்து வடமொழி கற்கும்பொழுது பரிசய: , சிக்ஷா, கோவிதா என்னும் வகுப்புக்களில் வடமொழி ஸ்லோகத்தினை எப்படி பொருள்கொள்வது என்று கற்றுத் தரப்பட்டது.

கொடுக்கப்பட்ட பாசுரத்தில் (அ) சொற்றொடரில் வினைச்சொல்லினை முதலில் தேடவேண்டுமாம். பிறகு அந்த வினைச் சொல்லிலிருந்து எந்த காலம், எந்த பால், எந்த திணை, எந்த எண், அது செய்வினையா (அ) செயப்பாட்டு வினையா என்று எல்லாம் தெரியவரும். அதன் பின்னர் அப்பாவினில் பயிலும் சொற்களை எட்டு வேற்றுமை உருபுகளில் பொருந்துமாறு மனதிலேயே அட்டவணைப்படுத்த வேண்டும். அவ்வளவு தான் ஐயா. முதல் வேற்றுமை உருபில் வரும் சொல் கர்த்தாவைக் குறிக்கும். இரண்டாம் வேற்றுமை உருபில் வரும் சொல் கர்மத்தை சுட்டும். மூன்றாம் வேற்றுமை உருபில் வருவது கருவியை குறிக்கும். நான்காம் வேற்றுமை உருபில் பயின்று வரும் சொல் கோளி காரகம். ஐந்தாம் வேற்றுமை உருபில் பயின்று வரும் சொல் அவதி காரகம் என்பர். ஏழாம் வேற்றுமை உருபில் பயின்று வரும் சொல் இடத்தையும் சுட்டும். இது சொற்றொடருக்கும் பாக்களுக்கும் பொதுவான விதியாகும். அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும்.

வடமொழியில் மட்டும் ஒரு வம்பு உண்டு.
யல்லிங்கம் யத்வசநம் யா ச விபக்தி: விஶேஸ்யஸ்ய |
தல்லிங்கம் தத்வசநம் ஸா ச விபக்தி: விஶேஷனஸ்யாபி ||

பொருள்:-அதாவது பண்புபெயராலோ, உரிச்சொல்லாலோ சுட்டப்படும் விஶேஷ்ய பதம் எந்த பால் (ஆண்/பெண்/அலி), எந்த திணை(ஓன்று/இரண்டு/பல), எந்த வேற்றுமை [NONIMATIVE(1),ACCUSATIVE(2), INSTEUMENTAL(3),DATIVE(4), ABLATIVE(5),GENITIVE(6), LOCATIVE(7),VOCATIVE(8)] உருபில் இருக்குமோ அதே பால், அதே திணை, அதே வேற்றுமை உருபில் தான் பண்புப்பெயர் அல்லது உரிச்சொல்லும் வரவேண்டும். (ஐயோ கொல்றாய்ங்க !)
தமிழிலும் வடமொழியிலும் 8 உண்டு. ஜெர்மனியில் 4 தானுண்டு. ஆங்கிலத்தில் 5 என்கின்றனர். அரேபியத்தில் 6 தானுண்டாம்.

தமிழில் “ஐ,ஆல்,கு,இன்,அது,கண்” என்று எளிதாகயிருக்கும். ஜெர்மன் போன்ற சிலமொழிகளில் இந்த வேற்றுமை உருபுகள் ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும், ஒருமை, பன்மைக்கும் மாற்றமடையும். ஆனால் வடமொழியில் 25க்கு மேற்பட்ட கரடுமுரடான அட்டவணைகளுண்டு . அவற்றிற்கு சூத்திரங்களுண்டு. அவற்றையெல்லாம் நீக்கி எளிமைப்படுத்தி, தமிழாக்கினார் அகத்தியர்.

“இந்த பையன் அந்த பையனை அடித்தான்” என்பதற்கு This boy punched that boy என்பர்.
தமிழில் பையன் பெயர்ச்சொல் ஆகும். “இந்த” ,”அந்த” என்னும் சொற்கள் அண்மை, சேய்மை என்னும் பண்புபெயர்கள் ஆவன.
வடமொழியில் பெயர்ச்சொல்லை விஶேஷ்யம் என்பர். பண்புசொற்களை விஶேஷணம் என்பர்.
ஆங்கிலம், ஜெர்மன், ப்ரெஞ்ச் மொழிகளில் பண்புச்சொற்கள் மட்டுமே வேற்றுமை உருபினை ஏற்கும். தமிழ் மொழியில் பெயர்ச்சொற்கள் மட்டுமே வேற்றுமை உருபினை ஏற்கும். ஆனால் வடமொழியில் பெயர்ச்சொல்லும், பண்புச்சொல் ஆகிய அனைத்துமே வேற்றுமை உருபினை ஏற்கும்.

ஒரு குரங்கு அந்த குள்ளமான, கரிய, மிருதுவான, நோய்வாய்ப்பட்ட பையனை அடித்தது. என்னும் சொற்றொடரில் “பையன்” என்னும் பெயர்ச்சொல் மட்டும் “ஐ” என்னும் இரண்டால் வேற்றுமை உருபினை ஏற்றது. இதனை வடமொழியில்
ஏக: மர்க்கட: தம் வாமனம், க்ருஷ்ணம், மார்தவம், வ்யாதிதம் பாலகம் ப்ரஹரதி என்று அனைத்து பண்புச்சொற்களும் இரண்டாம் வேற்றுமையினை ஏற்கவேண்டும்.

சரி இப்பொழுது
ஏக மாதா பஹு பிதா சச்சூத்ராய நம : என்னும் சொற்றொடரை எடுத்துக் கொள்வோம்.

இதில் நம: என்பது வினைச்சொல்லாகும். நம: என்பது வணங்குகிறேன் என்று பொருள் தரும் மந்திர ப்ரயோகச் சொல்லாகும்(ஸ்வாஹா, நமஹா போன்றன). நிகழ்காலம், செய்வினையில் உள்ளது. அடுத்தது
1)ஏக 2)மாதா 3)பஹு 4)பிதா என்னும் 4 சொற்களை காண்போம்.
1)ஏக என்னும் பண்புச்சொல் ஆறாம் வேற்றுமையில் பெண்பாலில் ஒருமையில் வரவேண்டும்.

ஏகஸ்யா: என்பதே சரி.

2) மாதா என்னும் பெயர்ச்சொல் ஆறாம் வேற்றுமையில் பெண்பாலில் ஒருமையில் வரவேண்டும்.

மாது : என்பதே சரி
இரண்டையும் சேர்த்து ஏகஸ்யா : மாது : என்று வரும்.

3)பஹு என்னும் பண்புச்சொல் ஆறாம் வேற்றுமையில் ஆண்பாலில் பன்மையில் வரவேண்டும்.

பஹூநாம் என்பதே சரி

உதாரணமாக நீங்கள் கீதை கற்றிருந்தால் “பஹூநாம் ஜன்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே” என்னும் கீதை ஸ்லோகம் நினைவிற்கு வரலாம்.

தமிழில் “பல ஜென்மங்களுக்கு” என்று ஒரு சொல்லினை சொல்லலாம்.
இங்கே “ஜென்மம்” என்னும் சொல் விஶேஶணம் ஆகும். “பல” என்னும் சொல் விஶேஷ்யம் ஆகும் . இரண்டிற்கும் ஒரே வேற்றுமை உருபு வரவேண்டும்.

எனவே “பஹுநாம் ஜென்மனாம்” என்று கூட்டாக வரும்.

4)பிதா என்னும் பெயர்ச்சொல் ஆறாம் வேற்றுமையில் ஆண்பாலில் பன்மையில் வரவேண்டும்.
பித்ரூணாம் என்பதே சரி (கவனிக்க ! இங்கே நகாரம் ணகாரமாக மாறும்)
இதுவும் வடமொழி எழுத்திலக்கணம். ரகாரத்திற்கும் மகாரத்திற்கும் நகாரம் பயின்று வந்தால் அது ணகாரமாக மாறும். இதனை சுருக்கமாக “ணத்வம்” என்பர். தமிழில் எதற்கு நகாரம் வரும் எதற்கு ணகாரம் வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வடமொழியில் அனைத்திற்கும் இலக்கண சூத்திரம் உண்டு.
அகத்தியர் கடினமான வடமொழியிலிருந்து எளிய தமிழை உருவாக்கினார் என்பது இப்பொழுது புரிந்திருக்குமே.

இரண்டும் ஒன்றாகி பஹூநாம் பித்ரூணாம் என்றாகும்
ஆக

ஏகஸ்யா : மாது : பஹூநாம் பித்ரூணாம் சச்சூத்ராய நம : என்பது தான் இலக்கணப்படி மிகச் சரியான சொற்றொடர் ஆகும்.

ஆயினும் தமிழில் ஐந்திலக்கணம் போன்று வடமொழியில் 18 இலக்கணங்கள் உண்டு (அஷ்டாதஶ வித்யாஸ்தாநாநி). என்னதான் ஒரு தமிழ்ப்பாவினை எழுத்து, சொல் இலக்கண குற்றமின்றி எழுதினாலும் குறிஞ்சித் திணையில் பாடும் பொழுது அதன் கருப்பொருளை மருதம் என்று மாற்றுவது “வழு” ஆகும் [பொருள் இலக்கணப்படி தவறுதானே].

அவ்வாறே இப்பொழுது மீமாம்சை (என்னும் உபாங்கத்திற்கு) வருவோம். ஒரு கர்மா (ஸம்ஸ்காரம்) செய்பவர் யஜமானன் ஆகிறான்.
இக்காலத்தில் ரஜினியும், எம்ஜியாரும் AVM செட்டியாரை எஜமான் என்று அழைக்கலாம். யஜ் என்றால் யாகம், தானம், அத்யயனம், ஸம்ஸ்காரம் => (அந்தணர்), போர் (க்ஷத்ரியர்), வாணிகம் (வைசியர்), தொண்டு (வேளாளர்) என்பவற்றை வர்ணப்படி செய்பவன் யஜ் (வேர்ச்சொல்)+மதுப்(விகுதி) = யஜமானன் ஆகிறார். அந்த யாகத்தினை நடாத்துபவர் யாஜி (அ) உபயாஜி ஆகிறார்.

அந்த கர்மாவினை அவனுக்காக நடாத்துபவர் [ ஹோதா(ரிக்), அத்வர்யு(யஜுஸ்) உத்காதா(ஸாமம்) , ப்ரம்மா(அதர்வணம் என்று நான்கும் ஓதுபவர்) ] சுருக்கமாக இக்கால புரோஹிதர் ஆவார். புரோஹிதர் யஜமானனை நம: என்று வணங்கமாட்டார்.

யஜமானன் தான் புரோஹிதரை பலநாள் முன்னர் அவ்வந்தணர் இல்லத்தில் சென்று அழைக்கும் பொழுது – ஸ்வாமின் ! இன்ன நாளில் இன்ன முகூர்தத்தில் தேவரீர் வந்து நடத்தித் தர வேண்டும் (invitation- ஆஹ்வாநம்) என்று வணங்குவார். தன் இல்லத்தில் நடக்கும் கர்மத்தின் தொடக்கத்திலும், கர்மா முடிந்த பின்னர் இறுதியில் தக்ஷிணை கொடுத்தும் நமஸ்கரிக்கவேண்டும்.


ஆக எப்படி பார்த்தாலும்
“ஏக மாதா பஹு பிதா சச்சூத்ராய நம :” தவறுதான்.

எங்கள் கூட்டு-பொறியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியர் இருந்தார்.
அவர் வகுப்பில் மாணவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள். மிகவும் கோபித்த அவர்களில் ஒருவனை எழுப்பி பின்வருமாறு எச்சரிக்க நினைத்தார் போலும் – ஹெல்லொ ! ஒன்று நான் பேசவேண்டும். இல்லை நீ பேச வேண்டும். நீயும் பேச, நானும் பேச பிறகு யார்தான் பாடம் நடத்துவது ?” என்பதனை ஆங்கிலத்தில்

One I talk !
or you talk !
I talk , you talk who talk ?
என்றாரே பார்க்கலாம்.

அதைப்போன்ற தத்துப்பித்து அச்சுபிச்சு ஸ்ருஷ்டித்த மந்திரம் தான் இது.

ஆக இவனும் “ஒரு தாய்க்கும் பல தந்தையருக்கும் பிறந்த நல்ல சூத்திரனான நான் வணங்குகிறேன்” என்று வருவதாயிருந்தால் அதற்கு
நமாமி என்று வினைச்சொல்லை மாற்ற வேண்டும்.
அஹம் =நான் என்றும் சேர்த்துக் கொள்ளவெண்டும்.

“ஏகஸ்யா: மாது: பஹூநாம் பித்ரூணாம் சச்சூத்ரோஹம் நமாமி”


இதை எழுதியவன் எதனைச் சொல்ல மனதில் எண்ணினானோ தெரியவில்லை.
செய்வினையா, செயப்பாட்டு வினையா, எது எழுவாய், எது பயனிலை என்று ஒன்றும் புரியவில்லை.

தஶரதர் யஜமானர் ஆவார். ரிஷ்யஶ்ருங்கர் யாஜி/புரோஹிதர் ஆவார்.
“ஆசார்யாய நம: ! மம பஶ்சாத் , ராஜ்யம் பர்த்தும் புத்ர நாஸ்தி. பவான் ஏவ மம ராஜ்யே ஆகத்வா புத்ரகாம இஷ்டிம் காரயது !” என்று தஶரதர் (ஏஜமானன்) –“ஆசார்யருக்கு நமஸ்காரம். எனக்கு பின்னால் அரசாள, மகன் இல்லை. எனவே தாங்கள் என் ராஜ்ஜியத்திற்கு வந்து புத்ரகாம் இஷ்டி செய்துவைக்க வேண்டும் என்று ரிஷ்யஶ்ருங்கரை(புரோஹிதர்) வேண்டினார். 
ஆனால் இங்கோ கதை உல்டாவாக உள்ளதே. புரோஹிதர் எதற்கு யஜமானை வணங்கவேண்டும் ?


அவ்வ்வ்வ்வ்வ்


******************************/



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கடவுள் பாதி மிருகம் பாதி

திரு.கருணாநிதி அவர்களின் துரோக வரலாற்றில் ஒரு வரலாறு...//

கோசிமணி அரசியல்...
----------------------------------------------------------------------

இந்த கோ.சி.மணி பெயருக்குப் பின்னால் ஒரு கேவலமான வரலாறு இருக்கிறது.

உண்மையில் மா.கோ.மணி என்பவர் கும்பகோணத்திற்கு அருகில் (அணைக்கரை) உள்ள பகுதியைச் சார்ந்தவர்...

அண்ணாவைத் தவிர யாரையும் 
தன் தலைவனாக ஏற்றுக்கொள்ளாதவர்,
நெடுஞ்செழியன், மதியழகன் அண்ணாத்துரை இவர்களுடன் 
சரிநிகர் தலைவராக இருந்தவர்...
அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்,
பொதுமேடைகளில் அண்ணாவே 
இவரை தத்துவமேதை என்று அறிமுகப்படுத்தும் அளவு சிந்தனையாளர்..
(இதுவரை 18 நூல்கள் எழுதியுள்ளார் எதுவும் அச்சாக்கப்படாமல் கிடக்கிறது) 
கட்சித் தலைமை உட்பட யாரையும் 
எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு மிக்கவர்..

ஒரு பொதுக்கூட்ட மேடையில் 
பேச்சாளர் ஒருவர் கருணாநிதியை
சின்ன அண்ணா என்று விளித்தபோது,
இவர் எழுந்து சின்னஅண்ணா 
பெரியஅண்ணா எல்லாம் கிடையாது 
ஒரே ஒரு அண்ணாதான் என்று மறுத்துப் பேசியவர்.

ஆகையால் அவர்மீது காண்டான
கருணாநிதி
அவரை கட்டம் கட்ட ஆரம்பித்தார்..

அவர் வளர்ந்து விடக்கூடாது என்பது கருணாநிதியின் பல நாள் திட்டம்...

இந்நிலையில் தேர்தல் வருகிறது. 
தொகுதி வேட்பாளராக மா.கோ.மணியை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிடப்படுகிறது..

அந்தப்பட்டியலை மறுநாள் 
முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி 
மா.கோ.மணி என்ற பெயரை மாற்றி 
தனக்கு வேண்டியவரான கோ.சி.மணி என்று எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டதைப்போல அச்சடித்து விட்டார்...

பட்டியலில் பெயர் மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து 
அண்ணாதுரை கேட்டபோது,
தவறுதலாக இப்படி வந்துவிட்டது...
பரவாயில்லை அடுத்த தேர்தலில் 
மா.கோ.மணிக்கு வாய்ப்பு கொடுத்து விடலாம் என்று சமாதானம் சொல்லி இவருக்கு பதவி கிடைக்காமல் செய்துவிட்டார்...

அதோடு விட்டாரா கருணாநிதி..

பிறகு இவர்மேல் ஒரு கொலைக்குற்றம் சுமத்தி வழக்கு போடவைத்து தன்னால் முடிந்த அளவு அவரை நோகடித்தார்...

இப்படி கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களை எல்லாம் திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு.. 
திமுகவை தன் குடும்ப சொத்தாக்கியது திராவிடர் கருணாநிதியின் 
துரோக வரலாறு...

துரோக வரலாறு
தொடரும்...//



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்


 
Save
Share23
 

manush

மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதை குறித்து உருவான விவாதத்தில் என் தரப்பைக் கோரி பல கடிதங்கள். அனைத்திலும் இருந்த எல்லா கேள்விகளுக்குமாக ஒட்டுமொத்தமாக இந்த விளக்கம்.

 

கேரள வெள்ளம் குறித்து குருமூர்த்தி எழுதிய கருத்து பொதுவெளி வெளிப்பாடு என்னும் முறையில் அசட்டுத்தனமானது. ஆனால் மரபான பக்தர்கள் அதைத்தான் சொல்லமுடியும். ஏனென்றால் பக்தியின் அடிப்படையே இயற்கைவிசைகளில் இருந்தும், எதிர்காலத்தின் நிலையின்மையில் இருந்தும், இறப்பிலிருந்தும் உருவாகும் அச்சத்தில் உள்ளது. பக்தி பின்னர் தத்துவத்தையும் மெய்த்தரிசனங்களையும் இணைத்துக்கொண்டு எத்தனை விரிவடைந்தாலும் அந்த ஆதார மனநிலை மாறுவதில்லை. இயற்கைவிசைகளிலிருந்து தன்னை காக்கவேண்டும் என்று கோரும் அதே உள்ளம்தான் இயற்கையின் விசையை இறைவனின் தண்டனை என்றும் எண்ணுகிறது. ஏறத்தாழ இதேபோலவே மோகன் சி லாசரஸ் கேரள வெள்ளம் குறித்து சொல்லியிருக்கிறார். முன்பு உத்தரகண்ட் வெள்ளத்தைப்பற்றி கிறித்தவபோதகரும் அரசதிகாரியுமான  உமாஷங்கரின் கருத்தும் ஏறத்தாழ இத்தகையதே. பகுத்தறிவாளர் என்ன சொன்னாலும் பக்தர்கள் இதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

 

அதைத் தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் கேட்கும் வினா அய்யப்பனை இத்தனை அழிவைச் செய்பவனாகச் சொல்வது எவ்வளவு கொடுமையான கருத்து, குருமூர்த்தியைக் கண்டிக்கவேண்டாமா என்று. தாங்கள் முழுமூச்சாக எதிர்க்கும் ஒன்றைப்பற்றி எத்தனை முழுமையான அறியாமையுடன் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இதேபோன்ற ஒரு விவாதத்திலேனும் கொஞ்சமாவது வரலாற்றுணர்வை, கொஞ்சமாவது தர்க்கபுத்தியை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! இங்கே பகுத்தறிவென்பது அறிவிலாத குதர்க்கம் மட்டுமே என்பதற்கான சான்று இப்பேச்சுக்கள். மார்க்ஸிய நோக்கில் சிந்திப்பவர்கள் என இங்கே எவருமில்லை என்பதற்கும் இதுவே சான்று.

 

உண்மையில் உலகிலுள்ள அத்தனை மதங்களிலும் இறைவன் தண்டிக்கும் சினம் கொண்டவனாகவும் அளவற்ற அருள்கொண்டவனாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விதிவிலக்கு தத்துவ மதங்களான பௌத்தமும் ஜைனமும். அவற்றிலுள்ள இறையுருவகம் ஒரு தத்துவக்கருதுகோள் மட்டுமே. அத்வைதத்தைப் பொறுத்தவரை அழிவு ஆக்கம் என இருமை கடந்த ஒன்றாகவே முடிவிலாத இறை இருக்கவியலும். அருள் -துயர் என உணர்வது மானுடனின் வாழ்க்கையின் சூழலும் அவன் உள்ளத்தின் அளவுக்குட்பட்ட தன்மையும் அளிக்கும் தோற்றங்களே. ஆனால் எங்கும் கருணை மட்டுமே கொண்ட தெய்வ உருவகம் கிடையாது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜரதுஷ்டிர மதம் என அனைத்துமே தண்டிக்கும் இறைவனையே முன்வைப்பவை.

 

மதங்களின் இந்த இருபாற்பட்ட தன்மை பற்றி ஆய்வாளர்கள் பல ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்- குறிப்பாக மார்க்ஸிய அறிஞர்கள். இதை ஒருவகை பிளவாளுமை என்றுகூட வகுத்த ஆய்வாளர்கள் உண்டு. எதையேனும் இங்கு எவரேனும் அறிந்திருக்கிறார்களா? தங்களுக்கு பலி அளிக்கப்படவில்லை, தங்கள் ஆணைகள் மீறப்படுகின்றன என்பதனால் சினம்கொண்டு நகரங்களை முற்றாக அழிக்கும் தெய்வங்களைப்பற்றிய கதைகள் எல்லா தொல்மதங்களிலும் உள்ளன.ஏனென்றால் இந்த அம்சம் பழங்குடி வழிபாடுகளிலிருந்து தொடங்குவது. பழங்குடித் தெய்வங்கள் அனைத்துமே பலிகொள்பவையும் அருள்பவையும்தான்.

 

முதல்நோக்கில் அது மானுடனின் அச்சத்தின் வெளிப்பாடாகத் தோன்றும். ஆனால் அது ஒரு பெரிய தரிசனமும்கூடத்தான். இயற்கையின் அளவிலா ஆற்றலே உணவாகவும் மருந்தாகவும் அழிவாகவும் நோயாகவும் வருகிறது, அவை ஓர் உச்சநிலையில் ஒன்றே என்பது ஒரு தொல்தரிசனம். ஒரு சிறுசுனையின் பேரழகை இயற்கை என ரசிக்கையில் பெருவெள்ளத்தையும் அவ்வாறே எண்ணிக்கடக்க முடியவேண்டும். உண்மையில் இதை சற்றேனும் உள்வாங்கிக்கொள்ளாத ஒருவர் தன் சொந்தவாழ்க்கையின் இழப்புகளைக் கூட கடந்துசெல்லமுடியாது.

 

ஆனால்.இந்தப் பேரழிவின் தருணத்தில் குருமூர்த்தி அதைச் சொன்னது பக்தனின் இயல்பான வெளிப்பாடல்ல. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சொந்த அரசியலை மட்டுமே காணும் சிறுமை. அதை வன்மையாகக் கண்டிப்பது இன்றைய சூழலின் தேவை.

 

*

 

அந்த அரசியல்கூற்றுக்கும், அடிப்படையான சிறுமைக்கும் எதிரான  கண்டனத்தை மனுஷ்யபுத்திரன் முன்வைத்தது இயல்பானதே- இரண்டு வகையில். பகுத்தறிவுத்தரப்பு குருமூர்த்தி போன்றவர்களின் பக்திநோக்கை கண்டிப்பது அவர்களின் தத்துவார்த்தமான எதிர்ப்பை காட்டுகிறது. இரண்டாவதாக, பேரழிவையும் தன் அரசியலுக்கு கருவியாக்கும் குருமூர்த்தியின் கீழ்மையை அரசியல்நோக்கிலும் கண்டிக்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக இவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள் எனும்போது அந்தக் கண்டனம் மேலும் ஆற்றலுடன் எழவேண்டியிருக்கிறது

 

 

மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை இந்து மதத்தை இழிவுசெய்கிறதா? அதை எழுத அவருக்கு உரிமை இல்லையா? அதைப்பற்றி எச்.ராஜா உருவாக்கிய வசைபாடலின் இடம் என்ன?

 

 

முதல் கேள்வியே இந்துமதத்திற்குப் பொறுப்பேற்க இவர்கள் யார் என்றுதான். இவர்களின் சாதியமேட்டிமைத்தன்மையால், அதை பொதுவெளியில் உளறும் பொறுப்பின்மையால்தான் இந்துமதம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய நவீனச் சிந்தனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட ஒரு மெய்யியல்தரப்பாக இந்துமதம் ஆவதை தடுத்து அதை வெறும் நம்பிக்கைவெறியாக, அரசியல்கூப்பாடாக, முச்சந்தி வன்முறையாக ஆக்கும் இவர்களைப்போல இந்துமதத்திற்கு அழிவைக் கொண்டுவருபவர்கள் எவருமில்லை.இந்துமதத்தைக் காப்பாற்றவேண்டியது இவர்களிடமிருந்துதான்.

 

 

இந்துமதம் எவருக்கும் சொந்தமான நிறுவனம் அல்ல. இறுகிப்போன நம்பிக்கைகளின் தொகுப்பும் அல்ல. அது மூவாயிரமாண்டுகளாக இந்த மண்ணில் உருவான ஒரு மாபெரும் மெய்த்தேடல். படிமப்பெருவெளி. அதன்மேல் மானுடகுலம் அனைத்துக்கும் உரிமை உண்டு. அந்த மெய்யியலை தன் தேடலுக்கு வழிகாட்டியாகக் கொள்ள, அப்படிமங்களை தனக்கான அழகியல் கருவியாகக்கொள்ள, பூமியில் வாழும் எவருக்கும் உரிமை உண்டு. அதன்மேல் தங்களுக்கு ஏதோ அதிகாரம் உண்டு என்று நினைக்கும் இந்த கூட்டத்திடம் அவ்வதிகாரத்தைக் கொடுப்பதைப்போல தற்கொலைத்தனம் வேறில்லை. ஆகவே அவர்களின் எதிர்ப்பையே முதலில் கண்டிக்கவேண்டியிருக்கிறது.

 

 

இதையே கிறிஸ்தவ மதம்சார்ந்தும் சொல்வேன். நான் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் கிறிஸ்துவை கதைநாயகனாக்கி பல கதைகளை எழுதியிருக்கிறேன். இன்னமும் கூட எழுதுவேன். ஏதேனும் கிறிஸ்தவர் அதன்பொருட்டு என் மேல் கண்டனம் தெரிவித்தால் அதற்கு நான் எவ்வகையிலும் ஆட்பட முடியாது என்பதே என் பதிலாக இருக்கும். நாம் இன்று காணும் கிறிஸ்தவ ஆன்மிகம் மத அமைப்புக்களால் உருவாக்கப்பட்டது அல்ல, தல்ஸ்தோய் முதலான பேரிலக்கிவாதிகளால் எழுதி உருவாக்கப்பட்டது. அந்த உரிமையை எனக்கு மறுத்து வெறிகொண்ட குறுங்குழுவாக கிறிஸ்தவம் மாறுமென்றால் அதனுடன் எனக்குப் பேச ஏதுமில்லை. இஸ்லாம் இன்று அப்படிப்பட்ட ஒரு மூடுண்ட குறுங்குழு. அவ்வாறு ஒரு குறுங்குழுவாக இந்துமதத்தை மாற்ற முடியாது என்பதே ஓர் இந்துவாக என் நிலைபாடு.

 

 

மனுஷயபுத்திரன் இந்து மெய்யியல் மரபிலுள்ள தேவி என்னும் படிமத்தை எடுத்துக்கொண்டு கவிதையை எழுதியிருக்கிறார். எவ்வகையிலும் இந்து மெய்யியலைச் சிறுமைசெய்வதாக அது இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான கவிதைகள் பக்திமரபுக்குள்ளேயே எழுதப்பட்டுவிட்டன. இங்கே எதிர்ப்பவர்களின் பிரச்சினை அதை எழுதியவர் மனுஷ்யபுத்திரன் என்பது மட்டுமே. அவருடைய இஸ்லாமியப்பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்வதனூடாக அவர்கள் அதையே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை நாம் இக்கும்பலுக்கு அளிப்போம் என்றால் நாளை இதை இவர்கள் அனைவருக்கும் நிபந்தனையாக்குவார்கள். இந்துமெய்யியலின் வலம் இடம் தெரியாத இக்கும்பலிடம் நாம் அனைவரும் சென்று அனுமதிகோரி நிற்கவேண்டியிருக்கும். அதுவே இந்துமதத்தின் அழிவாக இருக்கும்.

 

 

முன்பு எம்.எஃப்.ஹூசேன், எம்.எம்.பஷீர் ஆகியோர் இதேபோல இந்து குறியீடுகளைப் பயன்படுத்தியபோது வந்த எதிர்ப்பைப்பற்றி நான் என்ன சொன்னேனோ அதையே இங்கும் சொல்கிறேன். கலைஞனின் வெளிப்பாட்டுரிமை என்பது இந்தநாட்டின் நீண்ட மரபிலிருந்து உருவானது. இந்த தேசத்தை உருவாக்கிய முன்னோடிகளால் அளிக்கப்பட்டது. அதை எந்த கும்பலும் மிரட்டல்மூலம் தடுப்பதை ஏற்கவியலாது.இந்து மதத்தின் கருத்துக்களையும் படிமங்களையும் இலக்கியத்தின் கருப்பொருளாக்குவதற்கோ விவாதிப்பதற்கோ மறுப்பதற்கோ அனைவருக்கும் உரிமை உண்டு. நான் இந்துமதத்தை நம்புகிறேன், ஆகவே நான் பார்க்கும் கோணத்திலேயே அனைவரும் இந்துமதத்தை அணுகவேண்டும், இல்லையேல் மனம் புண்படுவேன் என்று ஒருவர் சொல்வாரென்றால் அவர் வாழ்வது இந்நூற்றாண்டில் அல்ல.

 

மனுஷ்யபுத்திரன் கவிதைமேல் ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாகாதா? கண்டிப்பாக இருக்கலாம். அதை கடுமையாக மறுத்து, நார்நாராகக் கிழித்து எழுதிக்குவிக்கலாம். ஆனால் இங்கே செய்யப்படுவது எழுத்தாளனின் படைப்பை படிப்புவாசனை இல்லாத கும்பல்முன் எடுத்துப்போடுவது. அவன் மேல் தனிப்பட்ட வன்மத்தைக் கக்குவது. அவனுடைய எண்ணை கொடுத்து அதில் அழைத்து வசைபாடுங்கள் என அறைகூவுவது என்பதெல்லாம் இழிவின் உச்சம். நான் நம்பும் இந்துப்பண்பாட்டில் இத்தகைய கீழ்மைகளுக்கு இடமில்லை.

 

*

 

ஆனால் மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் மட்டும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று, மனுஷ்யபுத்திரன் வெறும் கவிஞர் அல்ல. ஓர் அரசியல்கட்சியின் பேச்சாளர். அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அக்கட்சியின் அரசியல் சார்ந்தவை. அவற்றை முன்வைக்கும் அவருடைய சுதந்திரத்தை அக்கட்சிதான் காக்கவேண்டுமே ஒழிய எழுத்தாளர்கள் அல்ல. அவர் தி.மு.க மேடையில் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும் தமிழ் இலக்கியவாதிகள் பின்னின்று காக்கவேண்டும் என்றால் அது இயல்வதல்ல. சென்றகாலத்திலும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்கள் அவர்கள் சொன்ன கருத்துக்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது வெறும் தெருமுனை அரசியல். அதில் இலக்கியவாதி செய்வதற்கேதுமில்லை. தி.மு.கவுக்காக கருத்தைச் சொல்லிவிட்டு இலக்கியவாதிகளிடம் மனுஷ்யபுத்திரன் ஆதரவு கோருவது எவ்வகையிலும் முறையல்ல. அதையும் ஓர் அரசியல்நடவடிக்கையாக மட்டுமே பார்க்கமுடியும். அதில் இலக்கியவாதிகள் பங்கெடுக்கவியலாது.

 

 

இரண்டாவதாக, எம்..எஃப்.ஹூசேய்ன் போலவோ எம்.எம்.பஷீர் போலவோ இந்து மெய்யியல் மீதோ, இந்து மரபு மீதோ மதிப்புகொண்டவர் என மனுஷ்யபுத்திரன் தன்னைச் சொல்லிக்கொள்ளமுடியுமா? இந்துமதத்தை அழிப்பதே முதல்நோக்கம் என்று முழங்கும் திராவிடர் கழக மேடைகளில் பேசுபவர் அவர். இந்துமதம் உலகின் மிகமோசமான ஒரு கொள்கை, கொடியநஞ்சு என நினைக்கும் தரப்பைச் சேர்ந்தவர் என தன்னை முன்வைப்பவர் அவர்.

 

 

அத்துடன் இந்துமத வழிபாடுகள் அனைத்தும் ஷிர்க் என்னும் இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவம் என்று நம்பும் இஸ்லாமிய மத அடிப்படைவாதியான ஜவஹருல்லா போன்றவர்களை தன் மேடைகளில் ஏற்றி தன் தரப்பினராக வெளிப்படையாக முன்வைத்தவர் அவர். அவரை இஸ்லாமிய அடையாளத்துடன் அவருடைய எதிர்த்தரப்பினர் பார்ப்பதற்கு வழியமைத்தவர் அவரே அல்லவா?

 

 

மனுஷ்யபுத்திரனுக்கு வரும் கீழ்த்தரமான வசைகளை புரிந்துகொள்ளமுடிகிறது, நான் மு.கருணாநிதி அவர்கள் நல்ல படைப்பாளி அல்ல என்ற கருத்தைச் சொன்னமைக்காக இதைப்போலவே கீழ்மையான சொற்களால் மாதக்கணக்கில் வசைபாடப்பட்டேன். மு.க அவர்களாலேயே மிரட்டல் கவிதை எழுதி எச்சரிக்கவும் பட்டேன். இது இங்கே வளர்க்கப்பட்டுள்ள சூழல். எவரும் விதிவிலக்கல்ல இதற்கு. தனிமனிதர்களாக, அமைப்புசாராமல் நின்றிருக்கும் எழுத்தாளர்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள். இந்த விஷயத்தில் அமைதிகாப்பதே சாதாரண எழுத்தாளர் இங்கே செய்யவேண்டியது. இங்குள்ள கும்பல்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் திராணி எந்த எழுத்தாளனுக்கு உண்டு? இந்த விவாதத்தால் மனுஷ்யபுத்திரனுக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம், அவருக்காக பேசும் எழுத்தாளன் அடைவது என்ன?

 

 

தொடர்ச்சியாக இந்துமதம் சார்ந்த வழிபாட்டுமுறைகள், இந்து அடையாளங்கள் மட்டும் குறிவைத்து சிறுமைப்படுத்தப்படும் சூழலில் இருந்து எழும் எதிர்வினை இது என மனுஷ்யபுத்திரன் புரிந்துகொள்ள மாட்டார் என்றாலும் அவருக்காகப் பேசுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எத்தனை காலமாக இந்துமதம்மீதும், இந்து மெய்யியல்மீதும்  கீழ்த்தர வசைபாடல் இங்கே நிகழ்கிறது. அதைச்செய்பவர்கள் மாற்றுமதங்களின் வெறியர்களுடன் கைகோப்பதற்குத் தயங்குவதுமில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக எழும் குரல்களிலேயே இந்துமதம் மேல் எத்தனை வசைகள், எத்தனை சிறுமைப்படுத்தல்கள். எத்தனை சாதியக்காழ்ப்பு. இதேபோல இவர்கள் பேசும் தரப்பை, இவர்களின் தலைமையை இழிவுசெய்து வசைபாடினால் இவர்கள் அதை ஒரு கருத்துத்தரப்பு என்று ஏற்பார்களா? ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் திரட்டி எடுத்த இந்த மூர்க்கம்தான் மறுபக்கம் எதிர்மூர்க்கமாக இன்று திரண்டுள்ளது. அது எவராலும் இன்று தவிர்க்கப்படக்கூடியது அல்ல, அதற்கு ஒரு மக்கள்பின்புலம் இன்று உருவாகியுள்ளது. ஆகவேதான் அதை திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். இவ்விஷயத்தில் திமுகவின் அதிகாரபூர்வ மௌனம் காட்டுவதும் அதைத்தான்.

 

 

மரபின் மூடநம்பிக்கைகளை, அதன் பழமைவாதத்தை, ஏன் மரபையே எதிர்க்கும் உரிமை எவருக்கும் உண்டு. முழுமையாக நிராகரிப்பதுகூட ஜனநாயகபூர்வமானதுதான். இந்துமதத்திற்குள்ளேயே கூட எல்லாவகையான எதிர்ப்புகளுக்கும் இடம் உண்டு. உண்மையில் ஒரு நவீன சமூகத்தில் மரபுக்கு எதிரான எதிர்ப்பு எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். பகுத்தறிவுசார்ந்த விமர்சனம் எப்போதும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எதிர்நிலையாக நின்றிருக்கவேண்டும். இல்லையேல் மதம் அமைப்பாகவும் ஆன்மிகம் வெற்றுநம்பிக்கையாகவும் சீரழியும். ஆனால் அவை தர்க்கபூர்வமாக, நல்ல நோக்கத்துடன் முன்வைக்கப்படவேண்டும் வசைபாடுதலுக்கும் சிறுமைப்படுத்தல்களும் நேர் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கும்.

 

 

கடைசியாக மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை. கவிதை என்பது கொஞ்சம் நுட்பமான விஷயங்களுக்குரியது. அன்றாட அரசியலின் செயற்கையான உணர்ச்சிகளுக்காக படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்துவது கவிதையைக் கொல்வதுதான்.  இத்தகைய சூழலில் அக்கவிதையின் இலக்கியத்தன்மை பற்றி பேசலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாகப் பேசவேண்டும். இத்தகைய மலினமான விவாதங்கள் வழியாக அந்த நாலாந்தர ஜோடனைக் கவிதை ஓர் இலக்கிய அடையாளமாக ஆகிவிடக்கூடும். அதை அடையாளம் காட்டுவது இலக்கியவிமர்சகனின் கடமை.

 

 

மனுஷ்யபுத்திரன் தன்  இயல்பான அகவெளிப்பாட்டுக்கு இந்துமதக் குறியீடுகளைப் பயன்படுத்தியமையால் இந்த எதிர்ப்பு வரவில்லை என்பதை நினைவுகொள்ளவேண்டும். அவர் அதை ஓரு முச்சந்தி அரசியலின் பகுதியாகவே கையாள்கிறார். அதற்குத்தான் முச்சந்தி எதிர்ப்பு உருவாகிறது. சமீபத்தைய அரசியல்கவிதைகளினூடாக அவர் தன்னுள் இருக்கும் எஞ்சிய கவித்துவத்தை கூறுபோட்டு விற்பதுபோலத் தோன்றுகிறது. உச்சகட்டமாக இதற்கு விலையாக அவர் எதிர்பார்ப்பது என்ன? ஒரு பதவியா?

 

 

உண்மையில் இன்றுபோல சிக்கலான ஒரு நிலை முன்பெப்போதும் வந்தததில்லை . ஒருபக்கம் இங்கே பகுத்தறிவுவாதிகள் மாற்றுமதவெறியர்களுடன் கைகோத்தபடி இந்துமதம் அழியவேண்டுமென கூக்குரலிடுகிறார்கள்.  மறுபக்கம் மதக்காவலர்களாக அரசியல்வாதிகள் வந்து நின்று கீழ்த்தரக் காழ்ப்பைக் கொட்டுகிறார்கள். . மதத்தை அரசியல்தரப்பாக அன்றி மெய்தேடலின் பாதையாக, பண்பாட்டு வெளியாகக் காண்பவர்கள் இவ்விரு சாராரின்  நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பினால் இருசாராராலும் வசைபாடப்படுவதே அவர்களுக்கு மிஞ்சும். ஆனாலும் அவர்களின் குரலும் எழுந்தாகவேண்டும். ஏனென்றால் இத்தகைய இறுக்கம் அறுதியாக  கருத்தியல்செயல்பாடுகளுக்கும் ஆன்மிகமானத் தேடலுக்கும்தான் ஊறுவிளைவிக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard