New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு


Guru

Status: Offline
Posts: 24799
Date:
சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு
Permalink  
 


1.2 சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு

பழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப் போற்றுவர். சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும். இவ்விருவகை இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப் பெறுகிறது. அவ்விலக்கியங்கள் காட்டும் சிவ வழிபாட்டு நிகழ்வுகளில் குறிப்பிட்ட செய்திகள் மட்டும் இங்கே சுட்டிக் காட்டப் பெறுகின்றன.

    தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பாண்டிய நாட்டில்
தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடிச் சங்கத்தை நிறுவிப் பணி செய்த
காலம் சங்க காலம் எனப்படும். கடல் கொண்ட
தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், தற்பொழுது உள்ள
மதுரையிலும் மூன்று சங்கங்கள் இருந்தன. அவை முறையே
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பட்டன. 
கடைச்சங்கம் என்பது இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே 
நிலவியதாகும். அச்சங்கப் புலவர்களால்     பாடப்பெற்ற
பாடல்களைக் கொண்டவையே பத்துப் பாட்டு எட்டுத்தொகை
என்ற இலக்கியங்களாகும். அப்பாடல்களில் அக்காலத்தில்
வாழ்ந்த     தமிழ் மக்களது வாழ்வியல் நிகழ்ச்சிகள்
இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி கடவுள் 
கொள்கையாகும். கடவுள் கொள்கையில் தமிழ் மக்கள்
மேற்கொண்ட தெய்வ வழிபாட்டு நெறிமுறைகள் பிரிவின்றிக்
காணப் பெறுகின்றன.

    சங்க இலக்கியங்களில் ஒரு தெய்வ வழிபாடு என்பது
அன்றிப் பல தெய்வ வழிபாடுகள் காணப் பெறுகின்றன. மக்கள்
வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள்
முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சி
நிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்
நடத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்
இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்
நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்
நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத்
திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் 
தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய தெய்வங்களின்
வழிபாடுகள் சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன.
இத்தெய்வ வழிபாடுகளோடு பேய், பூதம், யமன் போன்ற
அச்சத்தைத் தருவதற்கு உரிய சக்திகளையும் தெய்வமெனக்
கொண்டு வழிபடும் செய்திகள் சங்க இலக்கியத்தில்
காணப்பெறுகின்றன.

    பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில்
பேய் என்பது 'அணங்கு' என்ற சொல்லால் குறிக்கப் பெற்று
வழிபடப் பெற்றமை காணப்படுகின்றது. “துணங்கையம்
செல்விக்கு     அணங்கு     நொடித்தாங்கு” (அடி.459).
பட்டினப்பாலையில் பேயின் வழிபாடு இடம் பெற்றதைக்
கீழ்வரும் அடி உறுதிப்படுத்துகிறது.

    “பிணம் தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்” (வரி. 260).

    பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில்
முருக வழிபாட்டின் வரலாறு அமைந்துள்ளது. கூற்றுவன்
எனப்படும் யமனைப் பற்றிய வழிபாடு சங்க இலக்கியங்களில்
பலவாறு காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் அமைந்த ‘மாற்றரும்
சீற்றத்து மாயிருங் கூற்றம்’ (பா. 51) என்பதனைக் காட்டலாம்.
இத்தகைய சிறு தெய்வ வழிபாட்டோடு இறந்தவர்களைப்
புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை வழிபடுகின்ற நடுகல்
வழிபாடும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும்,
திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன.
திருமாலின் வழிபாடு சிவ வழிபாட்டிற்கு ஒத்த நிலையில் சங்க
இலக்கிய நூல்கள் பலவற்றிலும் காணப் பெறுகின்றது. திருமாலின்
10 அவதாரச் செய்திகளைப் பற்றிய நிகழ்ச்சிகள் பலவாறாக இடம்
பெற்றுள்ளன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாட்டு 
முறைகள் நிலங்களின் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு தெய்வ 
வழிபாடாகக் காணப் பெறுகின்றன. இவ்வழிபாடுகளோடு சிவ
வழிபாடும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க அளவில்
தனிநிலை பெற்று விளங்குகிறது.

1.2.1 எட்டுத்தொகை நூல்களில் சிவ வழிபாடு

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ
வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ
வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும்
காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு
நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்
கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால்
குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான்.
அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை
என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான்,
ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,
ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்
பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,
மணிமிடற்றன், முக்கட் செல்வன்
 என்ற பெயர்களால்
அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண்
தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்
சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான்.
வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து
வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து
வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில்
தெரிகின்றது.

    மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்
எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப்
பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்
ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள்
ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும்
நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப்
பாடல்கள்     சிவபெருமானைப்     பற்றியனவே     ஆகும்.
இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப்
பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை
ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை
உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில்
அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன
மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’
என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் 
கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை
உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

    இவ்வாறு     உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு
சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை
நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்
இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட
நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்
சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

    மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்
             - (பரி.5, 25-27)

அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த
எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை
எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

    தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
    மணிமிடற் றண்ணல்      - (பரி. 9, 6-7)

ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த
செய்தியை,

    ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
                 - (கலி - 81)

    ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்
                 - (புற - 198)

 

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள்
என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை
அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்
குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள்
கூறுகின்றன.

    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக்
கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள்
எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக்
கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக
எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய
மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை
நாளில்     சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி
நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது
என்பதையும் அதனைச் செய்தவர்கள் அவிர்சடை முனிவர்கள்
என்பதையும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

    கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
    புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே
                 - (புறம் - 251)

 சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின்
வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன.
வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள்
நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.

    அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டு
நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்
34ஆம் பாட்டில்,

    கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
    கடவு ளாயினும் ஆக
    மடவை மன்ற வாழிய முருகே     (பா- 34)

என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப்
பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும்
சிவபெருமானின் மூத்த     பிள்ளையாகிய யானைமுகப்
பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம்
பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண் 
தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப்
பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை
அதற்குச் சான்றாகக் காட்டலாம்.

    இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்
பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்
சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

1.2.2 பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு

    பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு 
முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது
பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின் 
தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய
வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை
அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்
வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்ற 
செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில்
சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும்.
மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள்
குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன்
குன்றுதோறும்     ஆடுகின்றவன்     என்பதை     நக்கீரர்
திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன்
பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.

    திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின்
திருத்தலங்களில் செய்கின்ற     வழிபாட்டு     முறைகள்
சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய
வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது
போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே
தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது
பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப்
பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம்
சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது.

    மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள்
பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில்
கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள்
இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.

    சிறுபாணாற்றுப்படையில்,     “ஆலமர் செல்வற்கு
அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)
என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி
பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்
பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப்
பெற்ற செய்தி,

    கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
    ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428)

என்றும்     குறிக்கப்பெறுகின்றன.     அதுபோலப்
பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில்
அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை
நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை
வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக் 
கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

    கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
    முக்கோல் அசைநிலை கடுப்ப     (36-37)

என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின்
தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும்
வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

1.2.3 தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு

    ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற
மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட
இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்
இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ
வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும்
சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.
அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள்,
கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில்
தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது
காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப்
பிரித்து     அந்நிலங்களுக்குரிய     தெய்வங்களையும்
குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று
தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப்
பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள்
என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது.
எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை
புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக்
(ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய
வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று
தொடங்குகின்ற தொல்காப்பியச்    சூத்திரம்     இதற்கு 
எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு
தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில் 
குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய 
விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை 
எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில் 
கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு 
சிறப்பிடம் பெற்றது என்பதைக் கொடிநிலை, கந்தழி, வள்ளி
என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே 
என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய 
நிலையாமை     பற்றி     புறத்திணையில் காஞ்சித்திணை 
வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும், 
சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின் 
சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது
எனலாம்.

1.2.4 திருக்குறளில் சிவ வழிபாடு

    சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு
குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை
என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம்
பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன்
முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப்
புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும்
தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை”
(குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை
எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது
மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்"
என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை
உடையவன் என்பதை உணர்த்தும்.

    திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர்
உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை
வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல்
திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை
நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை”
(350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும்.
“மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய
பெரியோரை நினைவுபடுத்தும்.

    “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர்
சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ்,
போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை
வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர்
இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம்
சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும்.
இவ்வாறு திருக்குறளில் சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்
சுட்டிக் காட்டப் பெற்றுத் தொல் பழந்தமிழ்நாட்டு
வழிபாட்டுமுறை உணர்த்தப் பெறுகிறது.

   



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

1.2 சங்க இலக்கியத்தில் சிவன்
E
p2021aud.gif

 

பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.

1.2.1 தொல்காப்பியக் குறிப்பு

'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

 

காமஞ் சான்ற கடைக்கோட் காலை 
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி 
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
 

p2021aud.gif

(பொருள். கற்பியல்: 190)

 

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

 

 

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே 

p2021aud.gif

(பொருள். அகத்திணையியல் - 5)

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார். 

 

காமப்பகுதி கடவுளும், வரையார், 
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
 

p2021aud.gif

(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.

திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும். 

 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் 
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
 

p2021aud.gif

(பொருள், புறத்திணையியல் : 85)

''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

1.2.2 எட்டுத்தொகை

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள்அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகைஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.

சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

• கலித்தொகை 

 

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 

p2021aud.gif

(கலித்தொகை, 38)

 

(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் கிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....

இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)

கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ண்கதிர் தெறுதலின்

p2021aud.gif

(கலித்தொகை, 2)

(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன்= அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட,மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)

இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.

• புறநானூறு

உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,

 

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே..... 

p2021aud.gif

(புறம் :91)

(மிடறு - கழுத்து)

என்கிறார்.

பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.

 

நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன்

                                   

p2021aud.gif

(புறம் :166)

புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)

 ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
p2021aud.gif

என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.

(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)

அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.

சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.

1.2.3 பத்துப்பாட்டு

சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும்மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும்,தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.

 நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய் 

p2021aud.gif
(சிறுபாணாற்றுப்படை, 96-97)

 

(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)

இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.

மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. 

 நீரு நிலனுந் தீயும் வளியு 
மாக விசும்போ டைந்துடனியற்றிய 
மழுவாள் நெடியோன் தலைவனாக

p2021aud.gif
(453-455)

(வளி = காற்று, விசும்பு காயம்)

என்ற குறிப்பு வருகிறது.

இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. 



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

சிந்துவெளி நாகரிக கால புதைபொருள் ஆய்வின் வழி திராவிட நாகரிகம் பழமை வாய்ந்தது என்பதும் அங்கு சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே சங்கத்தமிழன் தினயே நடுகல்லை மட்டுந்தான் வணங்கினான் என்பதற்கில்லை. நடுகல் வழிபாடு கிரேக்க, உரோம நாகரிகங்களிலும் இருந்துள்ளன. உருவ வழிபாட்டிற்கு முன்னர் இத்தகைய நடுகல் வழிபாடு தோன்றியிருத்தல் கூடும். இலங்கையை ஆட்சி செய்த எல்லாள மன்னனுக்கு நடுகல் வைத்து வழிபட்டான் துட்டகாமினி என்பது மகாவம்சம் தரும் வரலாறு. எனவே நடுகல்வழிபாடு சங்க காலத்திற்குப் பின்னரும் இருந்துள்ளது. இன்றுங்கூட இணுவில் பிரதேசத்தில் இளந்தாரி என்னும் வீரனை நடுகல் வைத்து வழிபட்டு வருகின்றனர் அவ்வூர் மக்கள். ஆகவே சங்ககாலத்தில் மட்டுந்தான் நடுகல்வழிபாடு இருந்துள்ளது என்று ஆணித்தரமாகக் கூறவிளைவோர் சங்க இலக்கியங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்தறிதல் வேண்டும். 

இந்திய உபகண்டத்தில் தோன்;றிய வாழ்வியல் தத்துவம் அனைத்தையும் இணைத்து அதனை இந்து மதம் என்ற அடையாளமிட்டு ஒரு சமயமாகக் கருதுகின்றனர். ஆனால் இந்து மதம் என்று அதனை மதப்பிரிவினுக்குள் அடக்கிவிட இயலாதவாறு அதன் தத்துவம் வாழ்வியல் நெறியோடு இணைந்த மிக ஆழமான பல்வேறு நிலைகளையும் விளக்கி மனித ஈடேற்றத்திற்கு வழி சமைத்து நிற்கின்றது என்பதனைப் பல ஆய்வாளர்களும் அறிஞர்களும் எடுத்துரைக்கின்றனர். சுவாமி விவேகானந்தர், ரமணமகரி~p, ஸ்ரீராமகிரு~;ண பரமஹம்சர் போன்றோரின் விளக்கவுரைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இதனைப் பன்நெடுங் காலத்திற்கு முன்பே ஞானிகள், ரி~pகள் எனப்படும் அறிஞர்கள் எடுத்தியம்பியுள்ளர். அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை இன்னும் பகுத்துணரமுடியாத ஆழ்ந்த அறிவுக்கடலாக அது அகண்டு விரிந்து செல்லும் தன்மையுள்ளமையை ஆழமாக நோக்குமிடத்து அறியமுடிகின்றது. அறியமுடிகின்றது. இந்திய மண்ணில் தோன்றிய ஞானிகளின் அறிவாற்றலும், ஆழ்கடல் முத்தும் இன்னும் ஆய்ந்தறியப்படவேண்டிய மெய்ஞானமாக உள்ளமை கண்கூடு. 



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

 சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

 
s1.jpg
 
                                                                   சங்க இலக்கியத்தில் சிவன்
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு
அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை
என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான்,
ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,
ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்
பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,
மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால்
அழைக்கப் பெறுகிறான்


பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.
தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.

எட்டுத்தொகை
மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.’

என்பது அச்செய்யுள். இதன்கண், ‘இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப’ என்பதே இங்கு வேண்டுவது. இயன்ற - உலகத்தில் தோன்றியுள்ள, எல்லாம் பயின்று - எல்லாப் பொருள்களினுள்ளும் (உயிர் உயிரல் பொருளாகிய எல்லாப்பொருள்களினுள்ளும்) அந்தரியாமியாய் நின்று, அகத்தடக்கிய - அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள (வியாபகமாகவுள்ள), வேதமுதல்வன் என்ப - வேதத்தாலுணர்த்தப்படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர் என்பது அப்பகுதியின் கருத்தாகும்.  (விரிவு கருதிச் செய்யுள் முழுவதுக்கும் பொருள்


5. நீலமேனி வாலிழை பாகத்து 
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.                ஐங் க.வா. 1

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!             பதிற்றுப்பத்து க வா

ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
   வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
   நாக நாணா மலைவில் லாக
25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
   மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
   பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
   உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
   அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
   விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
   விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
   தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
   எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
   கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
   நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
   வசித்ததைக் கண்ட மாக மாதவர்
   மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
40 சாலார் தானே தரிக்கென அவரவி
   யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
   தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
   வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
   கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
   மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
   நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
   நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
   பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
50 பெரும் பெயர் முருக !                              பரி 5; 21-50

(பொருள்:  ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட,
வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும்,
வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும்,
பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை
ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்;
அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின்
அவியுணவை எற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய
பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய
அழகு (காமர் - அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம்
வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட
இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய,
"தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக
(புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்" என்பது தான் உண்மைப் பொருளாக
விளங்குவதால் "செய்வதற்கில்லை" என்று கூறி ஒதுக்காது,
அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று உருவினைக் கொண்டான்
ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு. அந்த நெருப்புருவத்தின் கருவினைப்
பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும்
அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம்
செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில்
அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட்
பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர்
வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத்
தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து
அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான
பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள்
அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர். மாசு மறு ஏதும் இல்லாத
கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை)
கருக்கொண்டனர்

குறிப்பு: இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது.
சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே
மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி
அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர்
என்பதும் இப்பரி பாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.)

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்             பரி 7, 1-4

 புங்கவம் ஊர்வோனும்                         பரி 8,2
ஆதிரை முதல்வனின் கிளந்த    நாதர் பன்னொருவரும்   பரி 8, 6
 மறு மிடற்று அண்ணல்                        பரி 8, 127

 இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு                              பரி 9, 1-7


ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
        தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
        கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
        மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:
5       படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
        கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
        கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
        மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
        பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
10      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
        கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
        தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
        முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
        என ஆங்கு
15      பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
        மாண் இழை அரிவை காப்ப,
        ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி          கலி க வா

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
        அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
        மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
        கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
5       உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
        சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
        ஏறு பெற்று உதிர்வன போல்                            கலி 2, 1-7

ஆன் ஏற்றுக் கொடியோன்                              கலி 26, 5
 இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல                   கலி 38; 1-5

சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ          கலி 101, 8
படரணி யந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்
குடர்கூளிக் கார்த்துவான்                                கலி 101, 21 - 26
கொலைவன் சூடிய குழவித் திங்கள்                     கலி 103, 15
எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை                    கலி 103, 25
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
        முக்கண்ணான் உருவே போல்                   கலி 104, 11-12
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி 105, 13

கோடுவாய் கூடாப்பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும் கொல்லோ - மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையான்                            கலி 142, 24-28

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
        இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,
        கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
        மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
5       மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,
        விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்
        இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
        அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
        பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
10      பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?
        கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
        'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
        உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
        உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
15      கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,
        'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,
        புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
        கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?
        ஆங்கு
20      அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த
        பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
        பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
        மை ஈர் ஓதி மட மொழியோயே!        கலி 150



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

 கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.            அகம் க வா

.... மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு                                        அகம் 141, 5-11
(கார்த்திகை விளக்கீடு -  திருநாளைக் குறிப்பது)

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ன மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த 
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.              புறம் க.வா.

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே                    புறம் 6. 17-18

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல                  புறம் 55,5

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று
அருங் கணிச்சி மணி மிடற்றோனும்                     புறம் 56, 1-2

12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே                                  புறம் 91, 5-7

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக                              புறம் 166, 1-9

 பத்துப்பாட்டு

வெள் ஏறு     
வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,  
உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,
மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்            திருமுருகு 151-154

திருமுருகாற்றுப்படை முழுமையும்

நீல நாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்                        சிறுபா 96 - 99


நீரும் நிலனும் தீயும் வளியும்  
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,   455
மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்      
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,   
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,     
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,      
அந்தி விழவில் தூரியம் கறங்க                         மதுரைக் 453-460

2. தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள்                                    மதுரைக்


20. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரியுண்டிக் கடவுள தியற்கையும்                       மலை



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

 பதினெண் கீழ்க்கணக்கு



முக்கட் பகவன் அடி தொழாதார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாதொழுகின்னா
சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு                  இன்னா நாற்பது க.வா.

கண் மூன்றுடையான் தால் சேர்தல் கடிதினிதே    இனியவை நாற்பது க.வா.

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து முழுதேத்தி           சிறுபஞ்சமூலம் க.வா.

அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வணங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
இறைபுரிந்து வாழுதல் இயல்பு.                  ஏலாதி க.வா.

வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.             கைன்னிலை க.வா.

 பிற நூல்கள்


மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு                       முத்தொள் க.வா.

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூ
பைங்கண்வெள் ளேற்றான் பால் கண்டற்றால் - எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்                              முத்தொள் 91


அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்
வெள்ளியம்பலத்து                                     சிலம்பு - பதிகம், 39-41

குழவித் திங்கள் இமையோர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும்                   சிலம்பு 2 38 - 39

பெரியோன் தருக திருநுதல் ஆக என                    சிலம்பு 2 41

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்                 சிலம்பு 5:69

திரிபுரமெரியத் தேவர் வேண்ட  
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்                சிலம்பு 6 40 - 43

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும்                   சிலம்பு 6 44 - 45

பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய                 சிலம்பு 11 72

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்                   சிலம்பு 11 128 - 129

கண்ணுதல் பாகம்                                      சிலம்பு 12 2

ஆனைத்தோல் போர்த்து                        சிலம்பு 12 8

புலியின் உரி உடுத்து                           சிலம்பு 12 8

கண்ணுதலோன்                                சிலம்பு 12 10

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து               சிலம்பு 12 55

நஞ்சுண்டு கறுத்த கண்டி                        சிலம்பு 12 57

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்             சிலம்பு

செஞ்சடை வானவன் அருளினில் விளங்கி
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்                     சிலம்பு

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்                 சிலம்பு

இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி                       சிலம்பு

சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன்              சிலம்பு 22 86 - 87

ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்           சிலம்பு 23 91

ஆலமர் செல்வன் மகன்                        சிலம்பு 24 15

நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்                  சிலம்பு 26 54 - 60

குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் க்டவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி        சிலம்பு 26 

சடையினர் விடையினர் சாம்பற் பூச்சினர்        சிலம்பு கால்கோட் காதை

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்            சிலம்பு - வேட்டுவவரி

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற நாக வோங்கிய
விமைய னாடிய கொட்டிச் சேதம்                சிலம்பு 28 67 - 75

இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து 
உமையொரு பாகத்து ஒருவனை                 சிலம்பு 28 102-103



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

சிலப்பதிகாரம்
கிறிஸ்துவுக்குப்பின் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலைஎன்னும் இரண்டு காப்பியங்களும் சிவபெருமானைக் குறிக்கின்றன. இந்திரவிழவூர் எடுத்தகாதையில் ''பிறவா யாக்கைப் பெரியோன்'' என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது (169-170).
சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனைக் குறிப்பதைக் கீழ்வரும் அடிகள் தெளிவாக உணர்த்துகின்றன
1.2.1 தொல்காப்பியக் குறிப்பு
'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.
 
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
 
 
(பொருள். கற்பியல்: 190)
 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.
 
 
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே 

 
(பொருள். அகத்திணையியல் - 5)
(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)
இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.
''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார். 
 
காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
 
 
(பொருள், புறத்திணையியல்: 81)
இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.
திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும். 
 
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
 
 
(பொருள், புறத்திணையியல் : 85)
''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.
1.2.2 எட்டுத்தொகை
அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.
காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள்அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகைஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.
சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
• கலித்தொகை 
 
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 
 
(கலித்தொகை, 38)
 
(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும்கிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகியஇறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....
இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)
கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?
தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ண்கதிர் தெறுதலின்
 
(கலித்தொகை, 2)
(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.
• புறநானூறு
உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,
 
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே..... 
 
(புறம் :91)
(மிடறு - கழுத்து)
என்கிறார்.
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.
மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
 
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்

                                   
 
(புறம் :166)
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)
 ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
 
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.
(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.
சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.
1.2.3 பத்துப்பாட்டு
சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும்பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும்இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
 நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய் 
 
(சிறுபாணாற்றுப்படை, 96-97)
 
(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)
இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.
மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. 
 நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடனியற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக

 
(453-455)
(வளி = காற்று, விசும்பு காயம்)
என்ற குறிப்பு வருகிறது.
இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

1-சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சி பயன்படுத்தும் தொடர் யாது?
மழுவாள் ஏந்தியவன் என்ற தொடர் சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2-சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சி பயன்படுத்தும் தொடர் யாது?
மழுவாள் ஏந்தியவன் என்ற தொடர் சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard