New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கக் கடவுளும், வள்ளுவக் கடவுளும்! திருப்பூர் கிருஷ்ணன்


Guru

Status: Offline
Posts: 24799
Date:
சங்கக் கடவுளும், வள்ளுவக் கடவுளும்! திருப்பூர் கிருஷ்ணன்
Permalink  
 


Tamil-Daily-News-Paper_2007366418839.jpg



குறளின் குரல் - 24

திருக்குறளின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். தெய்வத்தை வாழ்த்திப் போற்றித்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறள் என்கிற ஒப்புவமை அற்ற புனித நூலைத் தொடங்குகிறார். தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. ஆனால், நம் பழைய இலக்கியங்களில் தெய்வத்தை மறுத்துப் பேசும் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. மிக மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எந்தெந்த நிலப்பரப்புக்கு எந்தெந்த தெய்வம் என்று வகைப்படுத்தியுள்ளது. 

`மாயோன் மேயக் காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் 
வருணன் மேயப் பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.’


எனத் திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களுக்கான நிலப்பகுதியைத் தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுத்துப் பழந்தமிழர்கள் வழிபாடு நிகழ்த்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழம்புலவர் தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றிப் புகழ்கிறார்.  

`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே’ 


இந்தப் பாடலில் முருகக் கடவுளின் தோற்றம், கொடி, ஆயுதம் முதலிய அனைத்தும் சொல்லப்படுகின்றன. சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள நக்கீரர் எழுதிய `திருமுருகாற்றுப் படை’யும் முருகன் புகழ்பேசும் இலக்கியமே. இன்னும் சங்க இலக்கியத்தில் தென்படும் பக்திக் கூறுகள் பல. சங்க காலத்தை ஒட்டிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றியதாகத் திருக்குறள் பரவலாகக் கருதப்படுகிறது. `நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால்கடுகங் கோவை பழமொழி நானூறு இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பதூஉங் கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு’ என்கிற பழைய வெண்பா, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாக முப்பால் என்கிற திருக்குறளை வரிசைப்படுத்துகிறது. 

என்ன ஆச்சரியம்! சங்கப் பாடல்களில் தெய்வத்திற்கு இன்ன வடிவம், இன்ன நிலம் என்றெல்லாம் தெளிவான அடையாளம் கொடுக்கப்பட்டாலும் வள்ளுவரின் கடவுள் பற்றிய சிந்தனைகள் அப்படிப்பட்ட எந்த அடையாளமும் இல்லாமல் அமைந்து  நமக்கு அளவற்ற வியப்பைத் தருகின்றன. வள்ளுவர் கடவுளின் பெயரையோ, கடவுள் ஆணா பெண்ணா என்பதையோ, நெற்றிக் குறியையோ, கை ஆயுதத்தையோ, வாகனத்தையோ எங்குமே குறிப்பிடவில்லை. பொதுவாக அந்த தெய்வீக சக்தியின் பெருமைகளை மட்டுமே குறிப்பிடுகிறார். சங்கக் கடவுளுக்கும் வள்ளுவக் கடவுளுக்கும் தான் எத்தனை வேறுபாடு! கற்றலின் பயனே கடவுளைத் தொழுவதுதான் என்பது வள்ளுவரின் வலிமையான கருத்து. நாத்தழும்பேற நாத்திகம் பேசுவதை வள்ளுவம் ஒப்புக்கொள்ளவில்லை. 

`கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’


வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார். 

`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.’


கடவுளின் அந்த எட்டுக் குணங்கள் எவை? தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பொருளுடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பிலாத இன்பமுடைமை என அந்தக் குணங்கள் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளன. வள்ளுவர் எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. எனவே இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல் என்பதாக அந்த எட்டுக் குணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. 

மத நல்லிணக்கத்தைப் பற்றி உரத்துக் குரல் எழுப்பப்படும் இந்தக் காலத்தில் நாம் பின்பற்றத் தக்க சமயம் என்பது வள்ளுவர் கூறும் சமயமே. ஜாதிச் சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகிற இன்றைய தருணத்தில் வள்ளுவப் பேராசானே நமக்குச் சரியாக வழிகாட்டக் கூடியவர். அவர் சுட்டிக்காட்டும் கடவுளே நம் அனைவருக்கும் ஏற்புடைய கடவுள். `வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?’ - என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் கேள்விதான் எத்தனை தர்க்க பூர்வமானது! நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் வள்ளுவர் கூறும் லட்சிய சமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாக நம் சமயத்தைக் கொள்வது நல்லது. சமயச் சச்சரவுகளும் சண்டைகளும் வராதிருக்க வள்ளுவர் வகுத்த வழியே நல்ல வழி. சரியான வழி. வள்ளுவர் சமயம் கடந்த ஆன்மிகத்தையே பேசினாலும், ஒவ்வொரு சமயத்தாரும் வள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் எனக் கூற ஆசை கொண்டார்கள். வள்ளுவத்தில் இந்திரனைப் பற்றிய கதை வருகிறது. 

`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளோர் கோமான் 
இந்திரனே சாலும் கரி’

- என்ற குறளில் கெளதமர் அகலிகைமேல் இச்சை கொண்ட இந்திரனைச் சபித்த நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இதுபோன்ற குறள்களைக் காட்டி வள்ளுவர் இந்துவே என நிறுவ முயல்வோர் உண்டு. வள்ளுவத்தின் முதல் குறள்,

 `அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
 பகவன் முதற்றே உலகு!’ 


- என்பது. இதில் வரும் `ஆதிபகவன்` என்ற சொற்றொடர், சமணர்களில் முதல் தீர்த்தங்கரரின் பெயர். வள்ளுவம் எழுதப்பட்ட காலத்தில் பெரும் புரட்சிக் கருத்தாகக் கருதப்படக் கூடியது புலால் மறுப்பு என்கிற கோட்பாடு. 

`கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும் தொழும்!’ 


- என்கிறது வள்ளுவம். சைவ உணவு என்பது சமணர்களின் மேலான ஒரு கோட்பாடு. வள்ளுவம் சைவ உணவைப் போற்றுவதாலும் ஆதிபகவனைக் குறிப்பிடுவதாலும் வள்ளுவர் தங்கள் சமயத்தவராக இருக்க வேண்டும் எனச் சமணர்கள் கருதுகிறார்கள். சென்னை வந்தவாசி அருகே குந்த குந்தர் மலை என்றொரு சிறிய குன்று இருக்கிறது. அந்தக் குன்றின்மேல் சமணத் துறவியான குந்த குந்தருக்குச் சமாதி உள்ளது. அந்தக் குந்த குந்தரே வள்ளுவர் என்பது சமணர்களின் நம்பிக்கை. குந்த குந்தர் மலையை ஒட்டித் திருக்குறள் மணிமண்டபம் ஒன்று எழுப்பப்பட்டு அதில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப் போல் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தில் திருக்குறள் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சங்க காலத்தில் ஒரு தெய்வத்தை வழிபட்டவர்கள் மற்ற தெய்வத்தை வழிபட்டவர்களோடு சண்டை செய்ததில்லை. அவரவர் தெய்வம் அவரவருக்கு என வாழும் நல்லிணக்கப் போக்கு அன்று நிலவியது. 

ஆனால், இடைக்காலத்தில் சமயம் சார்ந்த சண்டைகள் ஏற்படத் தொடங்கிவிட்டதையும் அந்தச் சண்டைகளை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதையும் காண்கிறோம். அண்மைக்காலத்தில், கடந்தகால வரலாறுகளை ஆய்வுசெய்து சரித்திர நாவல்கள் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அன்றைய சமயச் சண்டைகளையும் கூடத் தம் புகழ் பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவலில் சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார். `நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். ஆனால், ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தானே?’ எனப் பெருமை பேசுகிறான் சைவன் ஒருவன். அதற்கு வைணவனான ஆழ்வார்க்கடியான் பதில் சொல்கிறான்: ‘‘ஆமாம். கெளரவர்கள் நூறுபேர். பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான்!’’ இடைக் காலத் தமிழகம் திருவள்ளுவரின் சமயங் கடந்த ஆன்மிக நெறியைப் பின்பற்றியிருந்தாலோ சங்க காலத்தைப்போல் சமய நல்லிணக்கத்தைப் போற்றியிருந்தாலோ இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. 

சைவர்கள் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார்கள் என்பது இடைக்காலத்தில் கிடைக்கும் செய்தி. அதை எட்டாயிரம் என்று கூறுபவர்கள் உண்டு. அல்லாமல் எண்ணாயிரம் என்ற பெயருள்ள கிராமத்தில் இருந்த சமணர்கள் என்று விளக்கம் தருபவர்களும் உண்டு. மதச் சண்டை காரணமாக ஒரே ஒரு சமணர் கழுவேற்றப் பட்டாலும் அது எப்படி ஆன்மிகமாகும்? கொலை செய்வதா ஆன்மிகம்? அடுத்த மதத்தவரையும் மனமாற நேசிக்கும் உயர்ந்த அன்பே ஆன்மிகம். மதங்களிலெல்லாம் சிறந்த மதம் அன்புதான்.

`அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்திலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் . 
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!’


- என்கிறது திருமூலரின் திருமந்திரம். தெய்வ சக்திக்கு வடிவம் கொடுத்து வழிபடுவது தவறல்ல. ஆனால்,  நாம் வழிபடும் அதே தெய்வ சக்திதான் பிற மதத்தவர்களால் வேறு வேறு வடிவத்தில் வழிபடப்படுகிறது என்பதையும் வடிவமே இல்லாமலும் வழிபடப்படுகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தண்ணீர் எந்தப் பாத்திரத்தில் இருக்கிறதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொண்டு அதே வடிவத்தில் காட்சி தருவது மாதிரிக் கடவுள் சக்தியும் தம் அன்பர்கள் விரும்பும் வடிவங்களை ஏற்கிறது என்பதே உண்மை. ராமகிருஷ்ண பரமஹம்சர், `மதங்களெல்லாம் நதிகள் மாதிரி. எல்லா நதிகளும் கடலிலேயே கலக்கின்றன. அதுபோல் எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற கடலிலேயே சென்று சேர்கின்றன!’ என மதங்களின் தத்துவப் பின்னணியை விளக்கினார். தாம் இந்து மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் உள்பட எல்லா மதங்களின் நெறியிலும் சாதனை செய்து அனுபூதி பெற்றவர் மகான் ராமகிருஷ்ணர்.

ஷீர்டி பாபா இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர். அவரைப் போன்றே இந்து முஸ்லீம் நல்லுறவுக்காகப் பாடுபட்ட இன்னொருவர் கபீர்தாசர். அவரை இந்துக்கள், முஸ்லீம்கள் என இருதரப்பினரும் திட்டினர். இப்படி உங்களைத் திட்டுகிறார்களே என்று கபீர்தாசரிடம் கேட்டதற்கு `என்னைத் திட்டுகிற விஷயத்திலாவது அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களே, அதுபற்றி எனக்கு சந்தோஷம்!’ என்றார் அவர்! அறிஞர் அண்ணாதுரை பெரியாரின் முழுமையான நாத்திகக் கருத்திலிருந்து மாறுபட்டு, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோட்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்த வரி திருமூலரின் திருமந்திரத்தில் வருகிறது. கடவுள் பற்றிய கருத்தைச் சொல்லி, அந்தக் கடவுளின் அடையாளங்களைக் குறிப்பிடாமல் விட்ட திருக்குறள், பெரும் படிப்பாளியான அண்ணாதுரையைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். 

திருமூலரின் கருத்து திருவள்ளுவரின் கருத்தோடு இணைந்து செல்லக் கூடியது. அண்ணா எடுத்துக்காட்டிய வரி திருமந்திரத்தில் இருந்தாலும் அந்தக் கருத்து திருமந்திரம் எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்னாலேயே திருக்குறளில் சொல்லப்பட்டுவிட்டது. ஆன்மிகத்தின் மிக வளர்ச்சி பெற்ற உயர்ந்த நெறியாக இன்று பலர் போற்றும் ஸ்ரீஅரவிந்த அன்னை நெறி, சமயம் கடந்த ஆன்மிகம் என்பதே. ஸ்ரீஅரவிந்தரும் ஸ்ரீஅன்னையும் சமயத்திற்கு விரோதமானவர்கள் அல்லர். ஆனால், சமயம் கடவுளை அடையும் ஒரு வழிதானே தவிர அந்த வழியே கடவுளாகாது என்பது அவர்கள் கருத்து. அவரவர் தத்தமது சமயம் என்ற வழிமூலம் பயணம் செய்து சமயம் கடந்த ஆன்மிகத்திற்கு வந்துசேர வேண்டும், அப்படி வந்துசேர்ந்து கடவுள் சக்தியை நம்மில் இறக்கிக் கொள்ளவேண்டும். 

மின்சக்தியைப் போல உலகெங்கும் பரவியிருக்கும் தெய்வ சக்தியைத் தூய தவ வாழ்வு மூலம் மனித உடலில் இறக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தங்கள் வாழ்வால் நிரூபித்தவர்கள் ஸ்ரீஅன்னையும் ஸ்ரீஅரவிந்தரும். ஆன்மிகம் பல்லாண்டுகளாகத் தழைத்து வளர்ந்தபிறகு அவர்கள் கண்டறிந்து சொன்ன  `மதங்கடந்த ஆன்மிகம்’ என்ற உயரிய கோட்பாட்டிற்கான விதையைத் தமிழில் மிகப் பழங்காலத்திலேயே வள்ளுவர் விதைத்துவிட்டார் என்பது தமிழர்கள் எண்ணிப் பார்த்துப் பெருமை கொள்ளத்தக்க செய்தி. வள்ளுவர் வகுத்த மதங்கடந்த ஆன்மிகக் கோட்பாடு தழைக்குமானால் ஜாதி மதச் சண்டைகள் நிகழ வாய்ப்பே இல்லை. 
 
திருப்பூர் கிருஷ்ணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
RE: சங்கக் கடவுளும், வள்ளுவக் கடவுளும்! திருப்பூர் கிருஷ்ணன்
Permalink  
 


கவியரசு கண்ணதாஸன் அவர்கள் கல்கி வார இதழில் 1975-ல் எழுதிய இந்து நாகரீகம் என்ற கட்டுரையில் இருந்து சில வரிகள்.

“முஸ்லிம்களும்,ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேறூன்றிய காலம் அது
.
அப்போதைய இந்து தன் உணர்வு குறைந்தவனானான்.

பிற மதத்தவரின் பழக்க வழ்க்கங்களால் கவரப்பட்டான்

.முஸ்லிம்களிடம் இருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக் கொண்டான்.

கிருஸ்துவர்களிடம் இருந்து விவஸ்த்தையற்ற கட்டுப்பாடற்ற சுகபோகங்களைக் கற்றுக் கொண்டான்.

தனக்கு என்று ஒரு நாகரீகம் இருப்பதை அவன் மறந்து போனான்.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரீகத்தை போதிக்கவில்லை.இந்து மதம் ஒன்றைத்தவிர.

சாப்பிடக் கூடியது எது,சாப்பிடக் கூடாதது எது என்பதில் இருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பது வரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது
.

இந்துவின் நாகரீகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது. அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது கணவனை தேவனாக்கியது,மனைவியை தேவியாக்கியது.

இந்துவின் குடும்பம் ஒரு கோவில்.அவன் தினமும் பூஜை செய்கிறான்.காரணம் அன்றைக்கு தன்னை புனிதப் படுத்திக் கொள்கிறான்.அவன் விபூதியை “திரு நீறு” என்கிறான்.திரு நாமத்தை ’திரு மண்,என்கிறான். அவற்றை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்கிறான். காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப், போகிறது. அல்லது மண்ணில் மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதன் மூலம் ‘சாகப் போகிற இந்த உடல் தவறு செய்யக் கூடாது’ என்று சத்தியம் பூணுவதற்காகவே.

அவன் நீராடி உடலைக் கழுவுகிறான்.பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான்.நான் சொல்வது நல்ல இந்துவை.இந்து சமுதாயம் மறந்துவிட்ட நாகரீகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.

நமது இந்து நாகரீகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.இந்து நாகரீகம் குழந்தை பிறந்தது முதல் சாகும் வரை அதற்கு வழிகாட்டுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

கிறிஸ்தவர்களின் உருவ வழிபாடு


கிறிஸ்தவர்கள் முதலில் இந்து மார்கத்தையும் கலாசாரத்தையும் குற்றம் கூறும் போது கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

1. இந்துக்கள் கற்கள்செடிமரம்புல்பூண்டுவிலங்குகளை வணங்குகிறார்கள். உருவவழிபாடு செய்கிறார்கள். பைபிளில் உருவவழிபாடு செய்யகூடாது என்று போட்டிருக்கிறது.

2. இந்துவில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் இருக்கின்றன. எதைக்கும்பிடுவது ?

3. கிறிஸ்தவத்தை தவிர எல்லா மதங்களும் சாத்தானை வழிபடுகிறது.

முதலில் இந்து மதம் கல்லை வழிபட சொல்கிறது என்று எங்கு எழுதப்பட்டு இருக்கிறது கூறுங்கள் ?? அதற்குமுன் அதில் உள்ள கருவையும் தத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். புரிவதற்கு இது வரை என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள். இயேசு நாதர் என்று தாடி வைத்த ஒருவரின் உருவத்தை தானே படத்திலும் போட்டோவிலும் காட்டுகிறீர்கள். சிலுவை என்பது என்ன கண்களுக்கு தெரியாத பொருளா ?அதற்கும் வடிவம் உருவம் இருக்கத்தானே செய்கிறது. அதை நீங்கள் ஏன் கழுத்திலும் சர்ச்சுகளிலும் வைத்திருக்கிறீர்கள். அதுவும் உருவவழிபாடு தானே ? முதலில் அடுத்தவருக்கு அறிவுரை கூறும் முன்னர் உங்களுக்கே அந்த அறிவுரை கூறிடுங்கள். சிலுவையையும்இயேசுநாதர் படங்கள்சிலைகளையும் முதலில் உடைத்தெறியுங்கள். அதில் உருவம் இருக்கிறதே. உங்களுக்கு புரியவில்லை என்றால் கூகுள் இமேஜில் சென்று ஜீஸஸ் கிரைஸ்ட் அல்லது கிராஸ் என்று தேடுங்கள். அதை அனைத்தையும் அழியுங்கள். உங்கள் சர்ச்சுக்கும் உருவம்இருக்கிறதே. நீங்கள் ஏற்றும் மெழுகுவர்த்தியில் எரியும் தீபத்திற்கும் உருவம் இருக்கிறதே. உங்கள் இயேசு நாதர் இவ்வுலகில் வாழ்ந்த போது அவர் என்ன பேய் பிசாசாகவா இருந்தார். அவருக்கும் உருவம் இருந்ததல்லவா ?

இந்து மதமும் கடவுளை கல்லாக படைக்கவில்லை. கடவுள் என்பவர் ஒருவரே. அது தான் மெய்யான தத்துவம். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று கூறும் போதுஅவருடைய விருப்பத்தினாலேயே இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு அசைவும் இருக்கிறது என்று பொருள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது தான் பொருள். அந்த கடவுள் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார் என்றால் ஒளியாகஉயிராகஅணுவாக என்று பல்வேறு பொருளாக உருவமாக இருக்கிறார். உங்களுக்கு இரண்டு கை இரண்டு கால்கள் என்று டிசைன் பண்ணியது யார் ஏன் சிலருக்கு நான்கு கைகளோடு குழந்தை பிறக்கிறது யாருடைய அனுமதியின் பேரில் இதெல்லாம் நடக்கிறது ?பரம்பொருள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவரே. அவருக்கு நம் முன்னோர்கள் கொடுத்த பெயர் சிவன். ஒவ்வொரு கடவுளின் உருவமும் கடவுள் தன்னைத்தானே பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு காட்டிய நிலையே. எல்லா உருவமும் ஒரே கடவுளையே குறிக்கிறது. இதை உணருவதற்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். கடவுளின் பல்வேறு நிலைகளை எளிதாக புரிந்து கொள்ள எடுத்து காட்டவே பல்வேறு உருவங்கள் உள்ளன. இறைவனுக்கு முடிவும் கிடையாது. தொடக்கமும் கிடையாது.

இந்த தத்துவத்தை உணர்த்த உங்களுக்கு ஓர் எடுத்து காட்டு தருகிறேன். உங்களுக்கு நன்றாக தெரிந்த அலுவலகத்தையே எடுத்தகொள்ளுங்கள். நான் உதாரணத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்து கொள்கிறேன். மைக்ரோசாப்ட் எப்படி இயங்குகிறது ஒரே ஒரு ஆளுடனா இல்லை. கிட்டதிட்ட எழுபதாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் CEO பில்கேட்ஸ் (தற்போது அவரில்லை. ஆனால் தெரிந்தவர் என்பதால் உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்.) அந்த 70000 பேரில் பல்வேறு மேலாளர்கள் இருப்பார்கள். மார்கெட்டிங்சேல்ஸ்வன்பொருள் வல்லுநர்கள்மென்பொருள் வல்லுநர்கள்டிசைனர்கள்டெஸ்டர்களாகிய பரிசோதகர்கள்ஆர்க்கிடெக்டுகள், HR, என்று எண்ணிலடங்கா பல்வேறு துறைகள் இருக்கும். அமெரிக்காவில் டிசைனர்கள் மாநாடு என்றால் பில்கேட்ஸ் சென்று கொண்டிருக்க மாட்டார். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை குறித்து அதாவது represent பண்ணி சில வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி அந்த வல்லுநர்களை குறிக்கும் போது இவர் தான் மைக்ரோசாப்ட் என்று மற்ற அலுவலககாரர்கள் குறிப்பர். இது போல் ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலைகள் இருக்கும். இவர்கள் 70,000 பேரும் ஒன்று சேர்ந்து இயங்கி தான் மைக்ரோசாப்ட் என்று ஒரு நிறுவனத்தையே இயக்குகிறார்கள். மைக்ரோசாப்ட் என்று ஒரே சொல்லில் இந்த 70,000 பேரும் அவகளுடைய வேலைகளும் ஆக்கங்களும் அடக்கம். இந்து மார்கத்திலும் இதே தத்துவம் தான். கடவுள் என்று கூறுவது மைக்ரோசாப்ட் என்று கூறுவதற்கு சமமாகும். நீங்கள் கூறும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த மைக்ரோசாப்டின் 70,000அங்கத்தினர் போல். என்ன அழகான தத்துவம்.

இன்னொரு உதாரணம். உங்கள் பெயரைச் சொன்னால் உங்கள் உடலை தரும் உருவத்தை தான் எல்லோரும் பார்ப்பார்கள். இது வெறும் உடல் தான். இந்த உடலில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன அத்தனை உறுப்பகளும் சேர்ந்து ஒன்றாக இயங்கினால் தான் நீங்கள் நீங்களாக இருந்து இப்போது இதை படித்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு உருவம். இப்படிதான் பிள்ளையார் முருகன் விஷ்ணு சக்தி என்று கூறினால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உருவம் நாம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் சிவன் என்னும் ஒரே பரம்பொருளில் அடக்கம். இந்த விளக்கத்தையும் பாருங்கள்.

http://www.aanmegam.com/hindu.htm

உங்கள் குழந்தைக்கு நீங்கள் எப்படி இந்த பரம்பொருளை காண்பிப்பீர்கள் ?. அவனால் எப்படி இதை உணர்ந்து கொள்ள முடியும் அவன் அதை சரியாக உணர்ந்திருக்கிறானா என்று உங்களுக்கு எப்படி தெரியும். அவனுக்கு அடையாளம் காட்டவே நாம் படைத்திருக்கும் ஓவிய சிவபெருமானும்கல்லில் வடித்த சிலையும். அது வெறும் கல் தான். ஆனால் உங்கள் கண்களை மூடிக் கொண்டு அந்த கல்லை மறந்துபரம்பொருளை நினைக்க வேண்டும். பரம்பொருளை தானாக யோசிக்க முடியாதவர்கள்சிந்திக்க கஷ்டப்படுபவர்களுக்கு துணை செய்யவே இந்த கல் சிலைகள். பரம்பொருளை உணர்ந்தவருக்கு கல் சிலைகள் எதற்கு இதனால் வீட்டிலிருந்தே கடவுளை வழிபடலாம். தொழில்நுட்ப பாஷையில் கூற வேண்டுமானால்இந்த கல் சிலைகள் Simulators, அதாவது சிமுலேட்டர்கள். சிமுலேட்டர்கள் கடவுள் அல்ல. முதன்முதலில் நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவன் எடுத்த எடுப்பிலேயே வாகனத்தை எடுத்து ஓட்டுவதில்லை. அவனுக்கு துணைபுரிய பொம்மை கார் போன்ற ஒன்றில் உட்கார்ந்து பழகுகிறான். அதில் அவன் உட்காரும் போது அவனுக்கு நிஜ காரில் உட்காருவது எப்படி இருக்கும் என்பதை அவன் உணர எளிதாக இருக்கும். இதுதான் விக்கிரக தத்துவம். கல் சிலைகள் சாமி அல்ல. இன்னொரு முறை அவ்வாறு யாராவது உங்களிடம் கூறினால் அவர்கள் அதிலிருக்கும் த்த்துவத்தை உணராது உரைப்பவர்கள். அது அவர்கள் தவறல்ல. நம் தத்துவங்கள்பல்லாயிரம் ஆண்டுகளாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து இன்று நம்மிடையே உள்ளது. ஒவ்வொன்றிலும் இருக்கும் தத்துவத்தையும் மகத்துவத்தையும் நாம் அறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதையும் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் யாரோ நான் தான் கடவுள் என்று கூறினால் அவர் பின்னே சென்று விடக்கூடாது. யாரோ சில இன வெறியர்கள் எழுதிய பைபிளை தூக்கி எறிந்து விட்டு நம்முடைய தத்துவங்களை படியுங்கள். அது பல்லாயிரமாண்டு மக்களால் உணரப்பட்டது. பலருடைய தாக்குதல்களையும் மீறி இன்றும் நமக்கு உதவி செய்வது. மேலும் படிக்க http://www.shaivam.org

அயல்நாட்டினர் நம் மக்களைத் திருடுகிறார்கள். தூங்கியது போதும். விழித்திடுங்கள். உண்மை உணர்ந்திடுங்கள். அவர்களின் பொய் முகத்திரை கிழித்திடுங்கள். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24799
Date:
Permalink  
 

1. நான் நம்பும் தொன்மக் கதையும் அந்த கதை கடவுளும் மட்டுமே இறைவன், அதை நிராகரிப்போர் இறை மறுப்பாளர் - கொல்லப் படலாம், நரகம் செல்வோர் என்போர் ஆஸ்திகப் போலிகள்.

2. தான் கடவுளை நம்புவர், ஆனால் இறை அறிதலைவிட முன்னோர் வழியில் கோவில்கள் சென்று, பூஜைகள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தந்து வாழ்பவர் கடைநிலை ஆத்திகர்கள்

3.கடவுளை நம்பியும், தான் பல்வேறு நூல்கள் கற்று, பல்வேறு பெரியோர்களின் சத்சங்கம் கேட்டு பெற்ற அனுபவத்தை  இறை அனுபவத்தை பிறருக்கு சொல்லியும், உதவியும் - அவர்களுக்காக பஜனை, பூஜைகள் செய்து வாழ்பவர்கள் உயர் நிலை ஆஸ்திகர்கள்

4. உலகைப் படைத்த கடவுளை ஏற்று, அவரை பற்றி சிந்தித்தும் மேலும் தான் பல்வேறு நூல்கள் கற்று, பல்வேறு பெரியோர்களின் சத்சங்கம் கேட்டு பெற்ற அனுபவத்தை  இறை அனுபவத்தை பிறருக்கு சொல்லியும், உதவியும்- அத்தோடு பிற சமயங்கள் சொல்வதும் உலகைப் படைத்தவரையே என அனைவரையும் சமமாய் ஏற்கும் மனநிலை உடையவர்கள் ஆன்மிகவாதிகள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard