New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்
Permalink  
 


http://brihaspathyam.blogspot.in/

பார் போற்றும் வருணன்

வருணன் மேய பெருமணல் உலகமும் என்கிறது தொல்காப்பியம். கடலும் கடல் சார்ந்த இடமுமான  நெய்தல் நிலக் கடவுள் வருணன். 

 
10308281_1891458571084167_85069334896606
 
சம்ஸ்க்ருத வேதங்களில் உயரிய இடத்தை பெற்றவன் வருணனே, பின்னர் அவ்விடத்தை இந்திரன் பெற்றான். முதலையையை வாகனமாக உடைய வருணன் மழை,கடல் ஆகியவற்றின் அதிபதி ஆவான். அஷ்டதிக் பாலகர்களில் வருணன் மேற்குக்கு உரியவன்.இந்துக்களின் பல திருவிழாக்கள் நதியோடு தொடர்பு உடையவை.  இது ஒருவகையில் வருண வழிபாட்டின் மிச்சமே.
download%2B%25282%2529.jpg
 
 
 

பாக்கிஸ்தானில் வருணன்

பாக்கிஸ்தானில் உள்ள சிந்து மக்கள் இன்றுவரை வருணனின் அவதாரமான ஜுலேலால் என்ற கடவுளை வணங்குகின்றனர். இவருக்கு சித்திரையில் திருவிழா நடக்கிறது. இதற்கும் இந்திரா விழாவுக்கும் தொடர்பு உள்ளதா என ஆராயவேண்டும். 
 
 
450px-Jhulelal_hindu_deity.jpg
 
 
 
                  பாகிஸ்தான் கராச்சியில் வருணனுக்கு கோவில் உள்ளது.
800px-Manora_Beach%252C_Karachi%252C_Pak
 

யுரேனஸ் வருணனா ?

கிரேக்கர்கள் யுரேனஸ் எனும் கடவுளை  வானத்தின் கடவுளாகப் போற்றினர். இந்த யுரேனஸ் என்கிற சொல் வருண என்பதில் இருந்து வருண -வரூனா  -ஊருன- யூரேன என்று திரிந்து உள்ளது.

 

ஸோராஷ்ட்ரியர் வணங்கும் வருணன் 

மேலும் ஸோராஷ்ட்ரிய மக்கள் வரீனா ,வரூகாஷா முதலிய பெயர்களால் வருணனை வணங்குகின்றனர் .
 
 
பௌத்த மதத்தில் வருணன் 
 
பௌத்த மதத்தில் 12 தேவர்களில் ஒருவனாக வருணனை வணங்கி வருகின்றனர். அங்கே அவர் பெயர் சுய்ட்டேன்.
 
 
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் சுய்ட்டேன் எனும் வருணனுக்கு கோவில் இன்றும் உள்ளது .
 
Tokyo_Suitengu_201604a.jpg
 
 
 
 


-- Edited by Admin on Thursday 4th of January 2018 09:10:03 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

உலகம் முழுவதும் போற்றப்பட்டவன் இந்திரன்

 

 




23812958262_0b0948951d_b.jpg





 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்கிறது தொல்காப்பியம். மருத நிலத்தின் இறைவன் இந்திரன் ஆவான்.ரிக் வேதத்தில் அதிகமான இடங்களில் புகழப்படுகின்றனவன் இந்திரனே. வஜ்ராயுதம் ஏந்தி, ஐராவதம் எனும் யானையில் அமர்ந்தவனாக அவன் காட்டப்படுகிறான். விருத்தாசுரன் எனும் அசுரனை வதைத்த பெரும் வீரன் என்று ரிக் வேதம் கூறுகிறது. 

lord-indra.jpg



 இந்திரத்வஜம் என்பது இந்திரனின் கொடியாகும்.சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை இந்துக்களுக்கான கொடியை உருவாக்க இந்திரனின் வஜ்ராயுதத்தை பொறித்து வந்தேமாதரம் என்று வங்கமொழியில் பதித்து கொடியை உருவாக்கினார்.

15319148_1887348131495211_43040644156823


இச்சிலை நேபாளத்தில் உள்ளது. இதில் உள்ளோர் இந்திரனும் அவன் மனைவி இந்திராணி ஆவார். இன்றளவும் நேபாளம் முதல் இலங்கை வரை இந்திரன், இந்திராணி என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கில் உள்ளதே!!!
அநேகமாக இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலரது தாத்தா, பாட்டி பெயரில் இந்திரன்இந்திராணி இருக்கலாம்.

15219983_1887353038161387_47713157493388



அகண்டபாரதத்தின் அடையாளம் இந்திரன்.
இது மங்கோலிய நாட்டு தபால்தலை (ஸ்டாம்).
இதில் உள்ளது இந்திரனின் வஜ்ராயுதம் ஆகும்.
இந்த ஆதாரங்களைக் கொண்ட அகண்ட பாரத தேசத்தின் கலாசார ஒற்றுமையை உணரலாம்

15319030_1887354284827929_17652376941695
 
 
தாய்லாந்து நாட்டின் மன்னர்களின் சின்னமாக உள்ள வஜ்ராயுதம்.
 
 
200px-Relief_of_King_Rama_VI%2527s_privy
 
 
இது வியட்நாமில் உள்ள இந்திரனின் சிலை.

இந்திரனை இந்திரவிழா எடுத்துத் தமிழர் வணங்கினர். இன்றளவும் நேபாளில் இந்திரவிழா கொண்டாடப்படுகிறது.அகண்டபாரதத்தின் தெய்வம் இந்திரன்.

15242010_1887348984828459_15206440784075
 
 
.


கேட்டை நக்ஷத்ரத்தின் மறுபெயர் ஜேஷ்ட (மூத்தது என்ற பொருளுடையது) (திருமணப் பத்திரிகைகளில் இன்றும் ஜேஷ்ட என்ற சொல் புழக்கத்தில் உண்டு).

ஜேஷ்ட நக்ஷத்ரத்தின் அதிதேவதை இந்திரன் என்றனர் நம் முன்னோர். அதே போல் கிரேக்கரும் அதை அந்தரஸ் என்றனர்...அதாவது இந்திரன் என்பது அவ்வாறு மருவியுள்ளது.இந்திரவழிபாடு உலகில் எல்லா இடங்களிலும் இருந்துள்ளது.

 போரில் வீரமரணம் அடைந்த ஆய் அண்டிரன் என்ற தமிழ் அரசன் வீரசுவர்க்கம் சென்ற போது இந்திரன் அவனை வரவேற்றதாக புறநானூற்றில் உள்ளது. கிரேக்கர்களின் ஆண்டிரஸ் கடவுளின் பெயர் ஆய் ஆண்டிரன் என்பதோடு ஒத்துப்போவது ஆய்வுக்குரியது.

மேலும் அண்டிரஸ் என்ற கிரேக்க மொழி சொல்லானது அண்ட் + ஏரிஸ் என்ற இரு சொற்களில் இருந்து உருவானது இதன் பொருள் ஏரிஸ் என்பதற்கு ஈடானது என்பதாகும். கேட்டை நக்ஷத்திரத்திற்கு அண்டிரஸ் என்ற பெயர் வர காரணம் அது ஏரிஸ் எனும் செவ்வாய் கிரஹத்தின் நிறத்தை ஒத்து உள்ளது. இதில் நாம் அண்டிரஸ் நக்ஷத்திரத்தினை இந்திரனோடும் செவ்வாய் கிரஹத்தை முருகனோடும் தொடர்பு செய்து பார்க்க வேண்டும். முருகனும் வஜ்ராயுதம் உடையவனே. தேவர் சேனையின்  தலைவன் அவனே. இது எதையோ குறிப்பால் உணர்த்துகிறது. 

 

15319216_1887352378161453_89494394062727
 
 
 

 

 
ஜாவாதீவுகளில் வணங்கப்படும் இந்திரன்- தன் வாகனமான ஐராவதத்தின் மேல் அமர்ந்துள்ளான்.
display-4257.jpg
 
பௌத சமயத்தில் சாகா என்ற பெயரில் வழங்கப்படும் இந்திரன்- 33 தேவர்களின் தலைவனாகக் கருதப்படுகிறான்.  வலப்பக்கம் ப்ரம்மன், இடப்பக்கம் இந்திரன்.
 
220px-Brahma_and_Indra.jpg
 
லாவோஸ் நாட்டில் இந்திரன் படம் உள்ள தபால் தலை
 
 
laos_indra_.jpg
திருக்குறளில் வரும் 'இந்திரன் வஜ்ராயுதம் பெற்ற' குறிப்பு.
 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் . அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 


பொருள்: அன்பில்லாதவர் சுயநலம் கொண்டு அனைத்தையும் தனதாக எண்ணுவார்... ஆனால் அன்புடையவரோ தன் எலும்பைக் கூட பிறர்க்காகத் தருவர்.
இதில் குறிப்பிடப்படுபவர் 'தன்னுடன் பகைத்துக் கொண்ட இந்திரன் இன்னலுற்ற போது... தன் முதுகெலும்பினைத் தந்து வஜ்ராயுதம் செய்ய உதவி... தியாகத்தின் சின்னமாகப் போற்றப்படும்...ததீசி மகரிஷி ' ஆவார்.
நம் பாரத தேசத்தில் அவரைப் போற்றி தபால் தலை வெளியிடப்பட்டது.
ஆயுர்வேத மருத்துவத்தில் இவரது கண்டுபிடிப்புகள் அளவிடற்கரியவை.

1306_Maharshi_Dadhichi.jpg

                                                   



                                                    கம்போடியா நாட்டுக் கோவிலில் உள்ள இந்திரன் சிலை.

indra-cambodia.jpg



பௌத மதத்தின் மூன்று முக்கியப் பிரிவுகளில் வஜ்ராயனம் என்பது ஒன்றாகும்.இதன் சின்னம் இந்திரனின் வஜ்ராயுதம். இந்த பிரிவினர் பயன்படுத்தவும் சமய பூஜை பொருட்கள், சின்னங்கள் அனைத்திலும் வஜ்ராயுதம் பொறிக்கப்பட்டுள்ளது.


Itsukushima_Jinsha_Bronze_Vadjras_and_Be



பூடான் நாட்டின் தேசிய சின்னத்தில் உள்ள இந்திரனின் இரட்டை வஜ்ராயுதம்.

Emblem_of_Bhutan.svg.png
 
 
 
கிரேக்கர்களின் தலைமை தெய்வமான ஜீயுஸ் இந்திரனுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.இருவரும் மின்னலை ஆயுதமாக உடையோரே.
sfondo_zeus_by_xxxnicknielxxx-d5wsx2o.jp


 

 

 

 

இவற்றுக்கெல்லாம் மேலாக இந்திரனின் வஜ்ரம் முதலில் வேதங்களில் குறிப்பிடப்படுகிறது, பின் பௌத மார்க்கமான வஜ்ராயணத்தின் சின்னமாகிறது. பௌத சமயம், வேத சமயம் உலகம் முழுதும் பரவியிருந்தன. இன்று கிருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிலுவை சின்னம் கூட வஜ்ராயண பௌதர்களின் சின்னத்தோடு மிகுந்து ஒத்துப்போவது ஆய்வுக்குரியது. வஜ்ராயுதமே சிலுவையாக திரிந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 

stock-photo-set-of-religious-crosses-and

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Cross-Symbol-Coloring-Page.jpg

 

Faith_Buddhism_Vajra.svg.png
Vajra6_zps061faa01.jpg
 
 
இந்திரன் தேவர்களின் தலைவன். அவனைத் தொல்காப்பியம் வேந்தன் என்கிறது. பாரதத்திலும், தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பல அரசர்கள் இந்திரனின் வஜ்ராயுதத்தைத் தம் சின்னமாகப் பயன்படுத்தினர்.
 இன்றும் கூட இங்கிலாந்து ராணி, போபாண்டவர் ஆகியோரது கிரீடத்தில் வஜ்ராயுதத்தையே உபயோகிக்கின்றனர். 
 ஆக ததீசி முனிவரின் முதுகெலும்பு வஜ்ராயுதமாக மாறி, 
வஜ்ரயாந பௌதத்தின் சின்னமாக மாறி இறுதியில் உலகையே ஆண்ட வல்லாதிக்க இங்கிலாந்து நாட்டு ராணியின் தலையை ஆள்கிறது என்று அறியும்போது ஆச்சரியம் தோன்றுகிறது. உலகம் முழுவதும் போற்றப்பட்டவன் இந்திரன்
 
BritishCrownJewels.jpeg
crowns-vector-40520.jpeg


20091111cnsbr00162-e1369901362228-1024x9
 
 
 
இவற்றுக்கெல்லாம் மேலாக சீக்கியர்களின் சின்னமான கந்த இந்திரா வஜ்ராயுதம் போலவே உள்ளது.
 
 
File:Sikh symbol.jpg
 
இன்றைய ஈரான் நாட்டுக்கொடியிலும் காணப்படும் சின்னம் இந்திர வஜ்ராயுதம் போலவே உள்ளது ஆய்வுக்கு உரியது.
 
 220px-Flag_of_Iran_%28official%29.svg.pn
 
 
இந்திரனின் வஜ்ராயுதம் வெவ்வேறு விதமாக பல கலாச்சாரங்களில் போற்றப்பட்டு வருகிறது.
 

சந்திரா பிந்தி சின்னம் 

0Indra.JPG
 
 
இந்திரன் தன நெற்றியில் சந்திரா பிந்தியை சூடியுள்ளான்.பொதுவாக இது சந்திரா ககுலத்தின்  சின்னமாக  உள்ளது . இதை வைஷ்ணவ சின்னம் என்றும் கூறலாம் 
 
Chandrabindu.png
 
சந்திரனின்  பிறையும் அதன் நடுவே பிந்தியும் அதாவது புள்ளியும் உள்ளன.வைஷ்ணவத்தின் நாமம் , சைவத்தின் பட்டை இரண்டுமே இதோடு தொடர்பு 
உடையவை 
 
 
main-qimg-9f9690ee704b5bdade10ff4729ec24
 
download%2B%25281%2529.jpg
 
download.jpg
 
இந்த படத்தின் மூலமாக சந்திர பிந்தியே பட்டை நாமம் இரண்டிற்கும் மூலம் என்பதை அறியலாம் .
 
tilakas.jpg
 
 
பிற்காலத்தில் இதுவே இஸ்லாமியர்களின் சந்த் சின்னத்திற்கு அடிப்படை. பிந்தி எனும் புள்ளி நக்ஷத்திரமாக மாறி இருக்கக்கூடும் .
 
download.png
 
 
சந்திரா பிறை சின்னமும் வாஜியாயுத சின்னமும் கூட ஒத்துப்போகின்றன .இது மஹாபலிபுர கற்கோவிலில் காணக்கிடைக்கும் இந்திரா வஜ்ராயுதமாகும் , நிலவின் பிறை போலவே உள்ளது 
 
IMG_3627.JPG
 
 
 
 
 
விவேகானந்தர் தம் சிஷ்யையான  சகோதரி நிவேதிதை இந்தியாவுக்கான  கொடியில் இந்திரா வஜ்ராயுதத்தை வைத்தார். மஹாகவி பாரதியார் தனது தாயின் மணி கொடி பாடலில் இவ்வாறு  எழுதுகிறார் 
 
இந்திரன் வச்சிர மோர்பால்-அதில் 
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால்

மந்திர நடுவுறத் தோன்றும் -அதன் 
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

 
 
 
 
இதில் இந்திர வஜ்ரம் , துருக்கரின் பிறை ஆகியவற்றை உடைய கொடியினை காட்டுகிறார் . அப்படியென்றால் இந்திரனின் வஜ்ராயுதம் பெற்றிருந்த செல்வாக்கை நாமே அறிந்து கொள்ளலாம் . 
 
 
download%2B%25284%2529.jpg
 
 
யோகாசனத்தில் வஜ்ராசனம் என்று ஓர் ஆசனம் உள்ளது இஸ்லாமியர்களின் தொழுகையில் அதே போன்று  அமரும் நிலை உள்ளது . அடிப்படையில் வஜ்ராசனம் முதுகை நேர்கோட்டில் வைக்கவும் முதுகு எலும்பை பலப்படுத்தவும் உதவும் ஆசனம், இந்திரனின் வஜ்ராயுதமே ததீசி மஹரிஷியின் முதுகெலும்பு ஆகும் , ஆக யோக மரபின் படி வஜ்ராயுதம் குண்டலினி சக்தியுடன் தொடர்புடையது என்று அறியலாம்.
 
 
download%2B%25284%2529.jpg
 
இது உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலின் உச்சியில் உள்ள சின்னமாகும் . மேலே உள்ள மஹாபலிபுர கோவிலில் உள்ளதை போன்ற பிறை சின்னமே உள்ளது .தாஜ்மஹால் ஹிந்து கோவிலாக இருந்து இருக்கலாம்.
 
440px-Hanuman_temple_spire_of_crescent_m
 
 
சில வட இந்திய கோவில்களில் இதே போன்ற பிறை சின்னம் உள்ளது குறிபிடத்தக்கது,
 
பிறை சின்னம்,  திருமண்-  நாமம் , சிறகை விரித்த கருடன் , வஜ்ராயுதம்  அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன 

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard