47:15. இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகள் கிடைக்கும்.
52:22. மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
52:24. அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
56:17. அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்.
56:18. இன்பமான மது பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (சிறுவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.)
76:19. மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்.
83:25. முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
83:28. அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள்.