கிறிஸ்துவுக்கு பிரியமான விசுவாசிகளே மற்றும் தென்னிந்திய திருச்சபையின் அங்கத்தினர்களே, சபைக்கு தலையாய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம். இப்பொழுது சொல்லப்படுகின்ற காரியங்களை கவனமாக கேட்டு அதற்காக ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டுகிறோம்.
இன்றைக்கு நம்முடைய தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டவிரோதமான காரியங்களைக்குறித்து விரிவாக நாம் பார்ப்பதற்கு முன்பாக நம்முடைய வறலாற்றையும் ஒருசில மூல சட்டதிட்டங்களை குறித்தும் அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
நம்முடைய தென்னிந்திய திருச்சபையானது செப்டம்பர் திங்கள் 27ம் நாள் 1947ம் ஆண்டு தோற்றம் பெற்றது. ஆங்லிக்கன், மெதடிஸ்ட், பிரிஸ்பிட்டேரியன் மற்றும் பல தனித்துவ சபைகள் சார்ந்த கூட்டமைப்புதான் நம்முடைய தென்னிந்திய திருச்சபை. இந்த சபைபிரிவுகள் அனைத்தும் ஒரே சட்டத்திட்டங்களுக்க உட்பட்டு, ஒரே ஸ்தாபனமாக உலகில் முதன்முதவில் முன்மாதிரியாக மாறியது. அதென்னவென்றால் பேராயர் ஆளுகை முறைமை உடைய சபைகளும், பேராயர் இல்லாத சபைகளும் ஒன்றிணைந்து ஒரே சபை ஒரே விசுவாசம் ஒரே ஊழிய அமைப்பாய் மாறினது. இப்படிப்பட்ட ஐக்கியம் உலகில் எங்கும் தோன்றியதில்லை.
நம்முடைய முற்பிதாக்கள், சபைகளானது பேராயரின் வழிகாட்டுதலுக்கு உட்பட அனுமதித்திருந்தாலும், தலைமை பேராயர் (யுசஉh டீiளாழி) போன்ற தலைமைத்துவத்தை விரும்பவில்லை. ஆகவே மாடரேட்டர் எனும் பிரதம பேராயர் என்ற முறைமையை தென்னிந்திய திருச்சபை கடைபிடித்தது. ஆனாலும் மாடரேட்டர் எனும் பிரதம பேராயர் மற்ற பேராயர்களைக்காட்டிலும் விசேஷித்தவர் அல்ல, அவர் மற்ற பேராயர்கள் போலவே சமமானவர் ஆனால் அவர்களில் முதன்மையானவர்.
தென்னிந்திய திருச்சபையின் முழு அதிகாரமும் சினாட் (SYNOD) என்ற ஆடசிமன்றத்திகே உரியது. இந்த ஆட்சி மன்றம்தான் திருச்சபையின் சட்டதிட்டங்களை உருவாக்கி அவைகளை திருமண்டலங்களில் அமல்படுத்தும். சினாடைவிட பெரிய அதிகாரம் யாருக்கும் தென்னிந்திய திருச்சபையில் இல்லவே இல்லை. தென்னிந்திய திருச்சபையின் ஐக்கியத்தின் அடையாளமே இந்த சினாட்டதான், எந்த தனிநபரும் இந்த உரிமையையோ அதிகாரத்தையோ தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவே முடியாது.
தென்னிந்திய திருச்சபையின் உயர்ந்த பிரதினிதிகள் கொண்ட அமைப்புதான் இந்த சினாட். ஓவ்வொரு திருமண்டலமும் தங்கள் திருமண்டல பிரதிநிதிகளை, அதாவது ஆண்கள் பெண்கள் மற்றும் வாலிபர்கள் அடங்கிய லே மெம்பர்கள் மற்றும் சபை குருவானவர்கள் பேராயர் போன்றவர்களை சினாடுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. ஒவ்வொரு பேராயரும் இந்த சினாடில் அங்கம் வகிக்கின்றனர். இந்த லே ஆயர் பேராயர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகதான் இந்த மாமன்றம் உருவாக்கப்பட்டது. இந்த ஆட்சிமன்றத்துக்கு தலைமை வகிப்பவர் மாடரேட்டர் என்ற பிரதம பேராயராவார். இந்த மாமன்றத்திற்கு துணை மாடரேட்டர், பொதுசெயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சினாட் உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் ஓவ்வொருவரும் தென்னிந்திய திருச்சபை சட்டபுத்தகத்தினால் வகுக்கப்பட்ட (Constitution) கடமைகளைதான் பொறுப்பாக செய்யவேண்டும்.
ஆனால், கடந்த 70 ஆண்டுகளாய் நம்முடைய பிதாக்களால் ஜெபத்தினாலும் ஆலோசனைகளாலும் உருவாக்கப்பட்டு, காக்கப்பட்டுவந்த சட்டதிட்டங்கள் (Bye-Laws) இப்பொழுது மாடரேட்டர் தேவாசீர்வாதத்தினால் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது தன்னடைய கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்ட குழுவால்; 6 மாத்திற்கும் குறுகியகாலத்தில் 38 பக்கத்துக்கு புதிய சட்டங்கள் மாடரேட்டரின் விருப்பத்pற்குஏற்ப அவர் பதவியில் நீடிப்பதற்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நம்முடைய முற்பிதாக்களால் உருவாக்கப்பட்ட நீதியான மூலசட்டதிட்டங்கள் அனைத்தும் மாடரேட்டரின் பதவி ஆசையினால் அவருடைய ஆட்களால் திருத்தஙகளும் மாற்றங்களும் செய்யப்பட்டு தென்னிந்திய திருச்சபையாகிய ஐக்கிய திருச்சபையின் இயல்புத்தன்மையையே சீரழித்துவிட்டது.
மாடரேட்டரின் இந்த புதிய சட்டதிருத்தங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு மிகப்பெரிய சட்டதிருத்தங்கள் என்னவெனில்,
1. பேராயர் மற்றும் ஆயர்களின் பணி ஓய்வு 65 வயதிலிருந்து 67ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சட்டதிருத்தம் தற்போதைய மாடரேட்டர் தனது 65 வயது பூர்த்தியாவதற்கு ஒருசில மாதங்கள் முன்பு, அதாவது மார்ச் 2016ல்தான் மாற்றியுள்ளார்.
2. அதுமட்டுமல்ல அவர்களது அலுவலக பணிக்காலத்தை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக தனக்குத்தானே மாற்றிக்கொண்டார்.
மேலும் தனது அதிகாரத்தை மேம்படுத்த பல சட்டமுறைமைகளையும் மாறிறயமைத்துவிட்டார்.
இந்த சட்டதிருத்தங்கள் அனைத்தும் நம்முடைய உயரிய சட்டஅமைப்பான தென்னிந்திய திருச்சபையின் சினாடினால் இன்றுவரையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. ஆனால் மாடரேட்டரோ தன் கட்டுப்பாட்டிலுள்ள, அதிகாரமற்ற, ஒருசில ஜால்ராக்களைக்கொண்ட குழுவினால் (Working Committee) அங்கிகரிக்கப்பட்டது என்றும் இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆபத்தைவிளைவிக்கக்கூடிய இந்த மாற்றங்கள் ஒற்றுமையையும், நேர்மையையும், சீர்குலைக்கும் என்று அறிந்து பல திருமண்டல மன்றங்கள் (Councils) இத்தகைய மாற்றங்களை ஏற்கவில்லை. ஆனால் திருமண்டல பேராயர்கள் இத்தகைய சட்டதிருத்தங்களுக்கு ஆதரவளிக்க நிர்பந்திபக்கப்பட்டு, முடிவிலே மாற்றங்களும் புதிய துணைச்சட்டங்களும் பதிவேட்டில் (மினிட்ஸ் புத்தகத்திலும்) ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படடது. இந்த விஷயம் நாட்டின் நீதிமன்றங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதிய சட்டதிருத்தங்களை அமல்படுத்தகூடாதென ஆணையும் பெறப்பட்டுள்ளது,
ஆனால் மாடரேட்டரோ இதைப்பற்றி எதற்கும் கவலைப்படுவதாக இல்லை, தொடந்த்து ஒருபெரிய தொகையை சம்பளமாகவும், பெற்றுக்கொண்டிருக்கிகின்றார். ஒவ்வொரு திருமண்டலமும் அதனைசார்நத நிறுவனங்களும் மாடரேட்டரான தேவாசீர்வாதத்திற்கு லஞ்சத்தையும் பயணப்டிகளையும் அவ்வப்போது அளித்துவருகிறது.
பேராயர்கள் மற்றும் குருவானவர்களின் ஓய்வு வயதையும் 65திலிருந்து 67ஆக மாற்றம் செய்தது எப்படியிருக்கிறதென்றால், ஒரு நாயை சநதோஷப்படுத்த அதன்முன் எலும்புத்துண்டை வீசியது போலாகும். எலும்பை தின்ற நாய் விசுவாசமாய் எலும்பை கொடுத்தவருக்கு வாலாட்டுவதுபோல இதனால் பயன்பெறுகின்ற ஆயர்களும் பேராயர்களும் மாடரேட்டருக்கு ஜால்ராபோட ஆரம்பித்துவிட்டனர். இதை பயன்படுத்தி திருச்சபையின் இந்த சீரழிவான, நாசமான மாற்றங்கள் மூலம் மாடரேட்டர் தன்னை இப்படிப்பட்ட புதிய சட்டஙகள் மூலம் திருச்சபையில் தன்னுடைய செயலுக்கு முழு ஆதரவு இருக்கிறது என்றுசொல்லி நாடகமாடிக்கொண்டிருக்கிறார்.
இதில் கவனிக்கப்படவேண்டிய காரியம் என்னவென்றால், இந்த சட்டதிருத்தங்கள் மூலம் அவர் எல்லாதிருமண்டத்திற்கும் கண்காணிப்பாளராகவும், எநத்வொருதிருமண்டலத்தின் ஆலோசனை முடிவுகளையும் மாற்றியமைக்கும் வீட்டோ அதிகாரம்,படைத்தவராகவும், எல்லா பேராயர்களும் மாடரேட்டரின் வழிகாட்டுதலுக்கும் அதிகாரத்திற்கும் உட்படுகின்றவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். இதன் மூலம் மாடரேட்டரான தேவாசீர்வாததம் எல்லா பேராயங்களையும் தனிமனிதகட்டுப்பாட்டில் கொண்டுவந்து திருமண்டலத்தின் மூலசட்டங்களையும் முடிவுகளையும் அவமதித்தவராக ஆகிவிட்டார்.
தற்போது சட்டவிரோதமாக பதவியைபிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் மாடரேட்டர் தேவாசீர்வாதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்வாதிகாரியைப்போலவும், ஏகாதிபத்திய அரசனைப்போலவும், நிலப்பிரபுவைப்போலவும் செயல்படுகிறார். தென்னிந்திய திருச்சபைக்கும் திருமண்டல பேராயங்களுக்கும் திருமண்டல நிறுவனங்களுக்கும் அதனை சார்ந்தவர்களுக்கும் தன்னடைய சுய கட்டளைகளை பின்பற்றவும், ஆதரிக்கவும் அவருக்கு உடந்தையாக இருக்கவும் ஆட்டிவைக்கிறார். அதற்கு கைமாறாக இவருடைய ஆதரவாளர்களின் மோசடிகளுக்கெல்லாம் அரசியல் ஆதரவும் அளித்து வருகிறார்.
மாடரேட்டர் தேவாசீர்வாதம் தென்னிந்திய திருச்சபையினால் உதவிபெரும் ஓர் வேலைக்காரனே! அவர் தனக்கு நியமிக்கப்பட்ட காலத்தில் தனது வேலையை செய்து திருச்சபையின் சட்டத்திட்டங்களுக்கு பணிந்து தன்பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும். ஆனால் அவரோ இதை மறந்து தன்னை ஒரு சினிமா கதாநாயகனைப்போலவும் தென்னிந்திய திருச்சபையின் முதலாளியைப்போலவும், திருச்சபையின் அங்கத்தினர்களையெல்லாம் தரக்குறைவாகவும் நடத்துகிறார். தேவாசீர்வாதம் தற்போது திருச்சபை மற்றும் திருமண்டல நிறுவனங்களின் எல்லா நியமனங்களையும் (அப்பாய்ன்மெண்ட்கள்) மட்டுமல்லாது தன்னடைய ஒப்புதலில்லாது எந்தவொரு வேலையம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார். அவரது விருப்பங்கள் நோக்கங்கள் மற்றும் சொற்களே எல்லா சங்கங்களின் பதிவேடுகளிலும் பதிவாகின்றன. ஆனால், அவரும் அவரது உறவினர்களும் மற்றும் ஜால்ராக்ககளும் தவறான பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றனர். கோடிக்கணக்கான திருச்சபையின் காணிக்கைப்பணம் நீதிமன்ற செலவுகளுக்காகவும் தன்னையும் தன்பதவியையும் கர்பாப்றிறக்கொள்ளவும் செலவிடப்பட்டுள்ளது. திருச்சபையின் காணிக்கை பணமானது அன்பளிப்பாகவும், லஞ்சமாகவும் கோடிக்கணக்கில் விரையமாகிறது மேலும் தன்மீது வழக்குதொடுப்பவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு அவ்வழக்குகளை திரும்பப்பெறவும் நிர்பந்திக்கின்றார்.
திருச்சபையின் மூலசட்ட அமைப்பின்படி அவர் சினாடுக்கு உட்பட்டவராயும், சினாடின் முடீவுகளின்மேல் அதிகாரமற்றவராகவும்தான்; இருக்கவேண்டும். ஆனால் திருச்சபை அமைப்பின் புதிய சட்டதிருத்தங்கள் மாடரேட்டரை திருச்சபை சினாடின் அதிகாரத்திற்கு சமமாக்குகிறது. அதாவது, சினாடின் அனைத்துப்பணிகளும் மாடரேட்டரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தங்கள். அவரே சினாடு கூட்டங்களில் யார்பேச வேண்டும் என்பதையும், எவ்வளவு நேரம் பேசவேண்டும் மற்றும் எத்தனை முறை பேசவேண்டும் என்றும் நிர்ணயம் செய்கிறார். சினாடு கூட்டம் மாடரேட்டருக்கு சாதகமற்றதாகவோ அல்லது அவர் விருப்பத்திற்கு எதிராகவோ தோன்றினால் அதனை ஒத்திவைக்கவும் இவருக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறது. இதனால் தென்னிந்திய திருச்சபையானது மாடரேட்டர் எனும் தனிப்பட்ட மனிதருடைய கரங்களில் சிக்கி அவரே சபையின் எஜமானனாகவும் தலையாகவும் கிறிஸ்துவைப்புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரே திருச்சபையின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாகியாகவும் இருப்பார். அங்கே ஊழியத்திற்கோ, சுவிசேஷ ஊழியத்திற்கோ, திருமறையை போதிக்;கின்ற ஊழியத்திற்கோ இடமிராது. ஏறக்குறைய எல்லாப்பேராயர்களும் நிறுவனத்தலைவர்களும் இந்த ஊழல்வாதியான தேவாசீர்வாதத்தின் தவறான பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்களும் தேவாசீர்வாதமாகவே மாறிவிட்டனர்.
அநேகர் முட்டாள்தனமாக, ஜனவரி 2017ல் மாடரேட்டர் தேவாசீர்வாதம் பதவியிலிருந்ர் ஓய்வுபெற்றுவிடுவார் என்று எண்ணுகிறார்hகள். ஆனால் இந்த தீயமனிதன் தன்னடைய பலத்தினை தென்னிந்திய திருச்சபையில் கையாளும்வரை அவர் தன்னுடைய பதவியை அவ்வளவு எழிதாக விட்டுவிடவோ அல்லது இன்னொருவருக்கு அந்த பதவியை விட்டுக்கொடுக்கவோ மாட்டார்.
தற்போது மாடரேட்டர் அவரது ஜால்ரா பேராயர்களையெல்லாம் தன் கையில் வைத்துக்கொண்டு சாதி உணர்வினை திருச்சபைகளில் தூண்டிவிட்டு, பலசமுதாய மக்களைக்கொண்ட தென்னிந்திய திருச்சபையினரிடையே பிரிவினையை உண்டாக்கி, தலித் பண்டிகைகளினால் ஆயர்களை அங்கி உடையில் தெருவில் புறஜாதிகள் மத்தியில் நடனமாடவைத்துக்கொண்டிருக்கிறார். மேலும் பல சபைகளில் நாற்காலிகளையும் மரச்சாமான்களையும் ஒருவர்மீது ஒருவர்தூக்கி வீசும்படியான செயல்களையும் தூண்டிவருகிறார். அவர் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள நினைப்பதும் மற்றவர்களை ஏமாற்றி வழிநடத்துவதை பார்க்கும்போது சி.எஸ்.ஐ. விசுவாசிகளாகிய நமக்கு மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.
ஆகவே, கிறிஸ்துவுக்கு பிரியமான சி.எஸ்.ஐ. விசுவாசிகளே, மாடரேட்டர் தேவாசீர்வாதம் சினாடிலிருந்தும் தென்னிந்திய திருச்சபையிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படவும் வேண்டும் மற்றும் அவருக்கு சாதகமாக திருத்தப்பட்ட புதிய சட்டதிட்டங்கள் முழுவதும் நிராகரிக்கப்படவேண்டும். இதற்கு உங்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்து அவர் மீதுள்ள எதிர்ப்பினை சினாடு உறுப்பினர்களுகும் மற்றும் உயர்மட்டக்குழுவுக்கும் (Executive Committee) அனுப்பி அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய கேட்டுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.