New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரத்தத்தில் முளைத்த என் தேசம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இரத்தத்தில் முளைத்த என் தேசம்
Permalink  
 


ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 01

– Englightened Master

12088276_840088716112569_670252679686236


பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று பலர் பேசுகிறார்கள். இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே தீர்வாக இருக்கும். ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும், பரஸ்பர அன்பும், தேச பற்றும் இல்லாது போனால், அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும். மேலும் இந்த மூன்றும் இல்லாது போனால் பொருளாதார வளர்ச்சி என்பதே சாத்தியம் இல்லைதான்.

பாரதம் என்கிற இந்த தேசம் எத்தனை பழமையானது ? பழங்காலத்திலேயே எத்தனை உயர்ந்து இருந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் நம்மை அது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ஐரோப்பிய சமூகம் ஆதிவாசிகளாய் இருந்த காலத்திலேயே மிக உயர்ந்த விஞ்ஞானத்தை நம் வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. சிந்து சமவெளி நாகரீகம் பல்கலைகழகங்களையும், திட்டமிட்ட நகரங்களையும் உருவாக்கி வைத்திருந்த கால கட்ட‌த்தில் ஐரோப்பியர்கள் கற்களை உரசி தீ மூட்ட அறிந்திருந்தார்களா ? என்பது கூட சந்தேகமாக இருக்கிறது. யேசு பிறந்ததாய் வெள்ளையர்கள் குறிப்பிடும் காலத்திற்கு முன்பே உலகின் முதல் அனையாம் கல்லனையை கரிகால சோழன் கட்டி விட்டான். அறுவை சிகிச்சைகளும், வானியல் சாஸ்திரங்களும், இலக்கிய கோட்பாடுகளும், பலவிதமான தத்துவ நெறிகளும் புழக்கத்தில் இருந்து விட்டன. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.

பாரதம் அகண்டு பரவி இருந்தது. அதன் எல்லைகள் காந்தாரம் எனும் ஆப்கான் முதல் பர்மா மற்றும் தெற்கே இலங்கை வரை விரிந்து பரவி இருந்தது. பல பேரரசர்களும், சிற்றரசர்களும் அதை ஆண்டு வந்திருந்தாலும் தர்மமே அதனை இனைக்கும் சக்தியாக இருந்தது. யுத்தம் முதல், சாமான்ய நிகழ்வுகள் வரை தர்ம நெறிப்படியே நடத்தப்பட்டன. பஞ்சமோ, பட்டினி சாவுகளோ, பெருநோய்களின் தாக்கமோ பண்டைய பாரதத்தில் அறியப்படவில்லை.

ஆனால் என்ன நடந்தது அதன் பிறகு ? அற்புதமான நாடாக இருந்த பாரதம் எப்படி அடிமை நாடாக மாறியது ? அந்நியர்கள் எப்படி நமக்குள் உட்புகுந்தார்கள் ? என்னவெல்லாம் அவர்கள் செய்தார்கள் ? அந்நிய சதிகாரர்கள் இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓட வைத்த சரித்திர சம்பவங்களில் முக்கியமானவற்றை ஆதாரத்தோடு ஆராய்வோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 02

12115597_842261525895288_192103530462759
 
உலக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு மிக முக்கியமானதாக இருக்கிறது. அது ஏன் என்பதை இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கையில் நாம் அறிந்துக் கொள்ளலாம். பாரதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து துறைகளிலும் தலை சிறந்து விளங்கி இருந்த நிலையில். பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டில் கேட்கவும் வேண்டுமா ? பழம்பெருமை வாய்ந்த நம் தேசத்திற்கு என்ன நடந்தது என்று அறிவதற்கு நாம் கால இயந்திரத்தில் அமர்ந்து ஏழாம் நூற்றாண்டிற்கு பயனித்தாக வேண்டும்.

ஏழாம் நூற்றாண்டில் கிரேக்கம், எகிப்து, பாரசீகம், சீனா என மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரதம் நாகரீகத்தின் மிக உச்ச‌த்தில் இருந்தது. அது மட்டும் அல்ல, சிந்து சமவெளி நாகரீகம் தோன்றி 4000 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆரியப்பட்டா, வராஹமிஹிரர், திருவள்ளுவர், அகஸ்தியர், காளிதாஸர், சிஷ்ருதர், பரத்வாஜர், பாணினி, தொல்காப்பியர், என பல்வேறு ரிஷிகளும் மகான்களும் பல துறைகளில் தங்கள் பங்களிப்பை தந்து சென்று விட்டனர். இரண்டாம் புலிகேசி சாளுக்ய தேசத்தையும், நரசிம்மவர்மன் பல்லவ நாட்டையும் ஆண்டுக் கொண்டிருந்தார்கள். சோழப் பேரரசு மிகப்பெரும் அளவில் தெற்கே விரியத் தொடங்கிய காலம். பாரதத்தின் வடக்கு மேற்கு, கிழக்கு என விரிந்திருந்து, இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்த சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட முடிவடைந்த காலம் அது. தமிழ் இலக்கியங்களும், பண்பாடும், ஆன்மீகமும் செழித்து கொண்டிருந்த‌ காலம்.

உலகின் முதல் பல்கலைகழகமாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ராவல்பிண்டி (பாகிஸ்தான்) அருகே தொடங்கப்பட்ட "தக்ஷசீலா" பல்கலைகழகம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அது போலவே பொது ஆண்டு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட உலக புகழ் பெற்ற "நலந்தா பல்கலைகழகம்" இன்றைய பீகாரில் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 800 அடி நீளமும், 1600 அடி அகலமும் கொண்ட கட்டிடங்கள் அதில் இருந்தது, 30 ஏக்கர் பரப்பளவு் கொண்ட நலந்தா பல்கலை கழகம் உலகில் உள்ள இன்றைய நவீன பல்கலைகழகங்கள் அனைத்திற்கும் சவால் விடும் வகையில் அது இருந்தது.

குப்தர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த அந்த பல்கலைகழகம். ஏழாம் நூற்றாண்டில் சீனா, திபெத், மத்திய ஆசியா, கொரியா, இந்தோனேஷிய மற்றும் கிரேக்க மாணவர்கள் அதில் பயின்று வந்தார்கள். அதில் உள்ள நூலகம் ஒன்பது அடுக்குகள் கொண்டதாக இருந்தது என திபெத்திய யாத்ரீகர்கள் குறிப்பிடுகிறார்கள். இலக்கண‌ம், தர்க்க சாஸ்திரம், விஞ்ஞானம், வானியல் சாஸ்திரம், இலக்கியம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் உலகமெங்கும் இருந்து வந்து மாணவர்கள் பயின்றார்கள். அதன் நிர்வாகம் தனி ஒருவரால் இல்லாமல் ஒரு திறமையான நிர்வாக குழுவால் நிர்வகிக்கப்பட்டது.

பாரதம் இப்படி நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தான் மேற்கே கற்கால பழக்க வழக்கங்களோடு இருந்த‌ அரேபிய பாலைவனத்தில் ஒரு மிகப்பெரும் சூறாவளி மையம் கொண்டிருந்தது. அது உலகையே அழிக்கப் போகிறது என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடரும்....

படத்தில் : அழிக்கப்பட்ட நலந்தா பல்கலைகழக மாணவர் விடுதியின் மிச்சங்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 03

 

 

12079464_842533289201445_742430456009770



கிறிஸ்துவம் தோன்றுவதற்கு முன் பழமையான நாடுகளான கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, பாக்தாத், பாரசீகம் போன்ற நாடுகளில் பலவிதமான இறை நம்பிக்கைகள் இருந்து வந்தன. இந்தியாவை போலவே அவற்றிலும் வளமான பல தத்துவ கோட்பாடுகளும், தொன்மையான நம்பிக்கைகளும் காணப்பட்டன. இந்த பழமையான நம்பிக்கைகளை "பாகன்' கலாச்சாரம் என்று யூதர்களும், ஆரம்ப கால கிறிஸ்துவர்களும் அழைப்பது உண்டு.. அதாவது நாட்டுப்புறம், கிராமப்புறம், மூட நம்பிக்கைகள் என பலவிதமாக பொருள் தரும் வகையில் "பாகனிஸம்" என்று அவை அழைக்கப்பட்டன. மதமில்லாத இந்து தர்மத்தை எப்படி "இந்துயிஸம்" என்று அழைத்தார்களோ, அது பொலவே தனியொரு மதமில்லாத வழிபாடுகளை, நம்பிக்கைகளை, "பாகனிஸம்" என்று அழைத்தார்கள். கிறிஸ்துவம் ரோமாபுரி நகரங்களில் வேர் விடத் தொடங்கியதும் இந்த நம்பிக்கையாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். ஐரொப்பாவில் பலவிதமான சிலுவை போர்கள் தொடங்கப்பட்டு அவர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.

சரி அரேபியா ஏழாம் நூற்றாண்டில் எப்படி இருந்தது ?

தண்ணீர் துளியை கூட காண முடியாத ஒரு பிரதேசத்தில் விவசாயம் இருக்குமா ? மெதினாவை தவிர விவசாயம் வேறெங்கும் இல்லாத அந்த பிரதேச‌த்தில் வாழ்வாதாரமே கேள்வி குறியாக இருந்தது. மெக்கா மெதினா மட்டுமே நகரங்களாக இருந்தன. நிலையில்லாத மனற் பரப்பில், தனியொரு இடத்தில் மனிதர்கள் வாழ இயலாது. வேட்டையாடி உண்ண காடுகளும் இல்லை. மீன் பிடித்து வாழ ஆறோ, கடலோ இல்லை. என்னதான் செய்வார்கள் வாழ்வதற்கு ? திருடுவதும், கொள்ளையடிப்பதுமே அவர்களின் தொழிலாக இருந்தது. ஒன்றுபட்டு இருந்தால்தான் ஒரு ஆதிவாசி கூட்டம் மற்ற கூட்டத்தை கொளையடிக்க இயலும், பலைவன சோலைகளை கைப்பற்ற இயலும். மேலும் நாகரீகம் என்பதே இல்லாமல் இருந்த பிரதேசத்தில், பெண் எனப்படுவது காம இச்சையை போக்கும் ஒரு இயந்திரமாகவே கருத‌ப்பட்ட‌து. பெண்னை கண்களில் பார்த்தாலே கவர்ந்து சென்று வன்புணர்வு செய்துவிடும் நிலையே அந்த பாலைவனத்தில் நிறைந்திருந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் மற்றொரு கொள்ளைக் கூட்டத்தை சூரையாடும், தோற்ற‌வர்களை கொன்று எஞ்சியவர்களை அடிமையாக வைத்துக் கொள்ளும், பெண்களை கவர்ந்து பலரும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மெக்காவும், மதினாவும் மட்டுமே நாகரீகம் பெற்ற நகரங்களாக இருந்தன. மெக்காவில் இருந்த‌ காபா என்கிற இடத்தில் அல்லாவுக்கு பழமையான கோவில் ஒன்று இருந்தது. பழமையான‌ நம்பிக்கைப்படி அல்லா மற்றும் அவருடைய "அலத், மனத், அல்-உஜ்ஜா" (Allāt, Manāt and al-‘Uzzá. ) என்கிற‌ மூன்று பெண்கள் மற்றும் இதர கடவுளர்கள் என மொத்தம் 360 சிலைகள் அங்கு நிறுவப்பட்டு மெக்காவை சேர்ந்த மக்களால் வணங்கப்பட்டு வந்தன..

இந்த சூழ்நிலையில் தான் முகம்மது என்பவர் அரேபியாவில் பிறந்தார்.

தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 04

12144918_842914975829943_775830083640407
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த முகம்மது அவர்களை மாமன் தான் வளர்க்கிறார். வியாபாரியாய் தொழில் செய்கிறார். தன்னுடைய நாற்பதுகளில் அவர் அடிக்கடி அங்குள்ள மலைகளுக்கு சென்றதாகவும், பல நாட்கள் அங்குள்ள குகைகளில் அமர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அவரே குறிப்பிடுகிறார். "கேப்ரியல்" என்கிற தேவதை அங்கு அவரிடம் வந்து "நீ தான் இறைவனின் இறுதித் தூதன்", "கடவுள் ஒன்றுதானே தவிர வேறில்லை", "கடவுளிடம் முழுவதுமாக சரன் அடைவதே ஒரே வழி", "உருவ வழிபாடு செய்வது மிகப்பெரும் குற்றமாகும்" இப்படி பலவற்றை தன்னிடம் உரைத்ததாக முகம்மது குறிப்பிடுகிறார். இப்படி ஒரு தேவதை வந்து உண்மையில் கூறியதா ? என்றால் அதற்கு சாட்சி யாரும் இல்லை, முகம்மது அவர்களின் வார்த்தைகளே அதற்கு சாட்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதன் பின் சிலர் முகம்மதின் சீடர்களாக மாறுகிறார்கள். அவர்கள் முஸ்லீம்கள் என அழைக்கப்படுகிறார்கள். மெக்காவில் உள்ள குரோஷிய பழங்குடியினர் தங்க‌ளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் முகம்மது பொது ஆண்டு 622ல் தன் சீடர்களுடன் மெதினா செல்கிறார். மெதினாவில் உள்ள பல பழங்குடியினங்களை ஒருங்கினைக்கிறார். மெக்காவில் இருந்து பயனித்து வரும் யாத்ரீகர்களின் கூட்டத்தை பல முறை குறுக்கிட்டு செல்வங்களை கொள்ளை அடிக்கிறார். இதன் மூலம் பெரும் செல்வம் திரட்டப்படுகிறது. இதை வைத்து பத்தாயிரம் பேர் கொண்ட படையை உருவாக்கி மெக்காவின் மேல் போர் தொடுக்கிறார்.

நான்கு திசையில் ஒருங்கினைந்து பாயும் முகம்மதின் முஸ்லிம் படையை மெக்கா வாசிகளால் எதிர் கொள்ள இயலவில்லை. "இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சரனடைகிறீர்களா அல்லது உயிர் துறக்கிறீர்களா ? " என்று கேட்கிறார் முகம்மது. "மெக்காவில் உள்ள தெய்வங்களால் எங்களை காக்க இயலவில்லை ஆகையால் நங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சரனடைகிறோம்" என்கிறார்கள் மெக்காவாசிகள்.

அதன் பின் முகம்மது மெக்காவின் காபாவில் உள்ள‌ பாகன் கோவில்களை தாக்குகிறார். மெக்காவின் காபாவில் 360 தெய்வ சிலைகள் இருக்கின்றன. அவை வருடத்தின் ஒவ்வொரு நாளை குறிக்கின்றன (இந்திய பஞ்சாங்கத்தின் படியும் 360 நாட்களே என்பது குறிப்பிடத்தக்கது) முகம்மது அவற்றை சூரையாடுகிறார். அல்லாவின் மூன்று மகளின் ஒருத்தியாக கருஞ்சதுரக் கல்லில் பாகன்களால் வணங்கப்பட்ட அல்லத் (Al-Lat) ஐ மட்டும் உடைக்காமல் வைக்கிறார். அதுதான் இன்று காபா கல்லாக இஸ்லாமியர்களால் பாகன் வழக்கப்படி ஹஜ் மற்றும் உம்ராவின் போது முத்தமிடப்படுகிறது.

முகம்மது அவர்கள் இஸ்லாம் என்று புதிய ஒரு வழிமுறையை உருவாக்கினாலும், அது மிகப்பெரும்பாலும் பாகன்களின் வழிபாட்டு முறைகளையே கொண்டிருந்தது அது குறித்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 05

12079487_843279502460157_759616889982926

 
 முகம்மது அவர்களின் போதனைகள் பலவும் பல மதங்களின் கலவையாக இருக்கிறது. யூதர்களின் பழைய ஏற்பாட்டை முகம்மது அவர்கள் தன்னுடைய மார்கத்திற்கு முன்னோடியாக வைத்தது அனைவரும் அறிந்ததே, ஆனால் அரேபியாவின் பூர்விக மதமான பாகன்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் பின்பற்றப் படுகின்றன என்பது பலரும் அறியாதது. வஹாபிய கூட்டங்களால் பெரிதும் மறைக்கப்படுகின்ற உண்மை இது.. அவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.

அரேபிய பாகன்கள் ரமலான் மாதத்தன்று உணவருந்த மாட்டார்கள், தண்ணீர் குடிக்க மாட்டார்கள், உடலுறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதை சிறு மாற்றங்களுடன் பின்பற்ற வைத்தார் முகம்மது.

அரேபிய பாகன்கள் அல்லாவின் மகளான அல்ல‌த் ஐ தான் கருஞ்சதுர கல்லாக பாகன்கள் வழிபட்டார்கள். இந்த அல்லத்தின் உருவம் முதலில் அரேபியாவில் உள்ள தைஃப் எனும் இடத்தில் தான் வழிபடப்பட்டு வந்த‌து. இப்ன்-அல்-கல்பி (ibn-Al-Kalbi 819 CE) தன்னுடைய ‘The book of Idols’ எனும் புத்தகத்தில் இதை குறித்து தெளிவாக குறிப்பிடுகிறார். "அல்லத் தைஃப் நகரில் இருந்தது. அது ஒரு க்யூப் வடிவத்தில் இருந்த கல், அதற்கு யூதர்கள் பார்லி கஞ்சியை படைப்ப‌து வழக்கம். அந்த கருஞ்சதுர கல்லை "இப்ன் மலீக்" என்பவரின் பாதுகாப்பில் இருந்தது" இந்த கருஞ்சதுர கல் தான் பின்னர் தைஃபில் இருந்து மெக்காவில் நிறுவப்படுகிறது.

ஆனால் இது எப்படி புனைக்கப்பட்டது என்றால், ஆதாம் ஏவால் காலத்தில் சுவர்கத்தில் இருந்து ஒரு வெள்ளைக் கல் கீழே விழுந்ததாகவும், அது மனிதர்களின் பாவத்தை சுமந்து கருப்பாக மாறி விட்டதாகவும் சொல்லப்பட்டது. அதோடு இந்த காபாவானது ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயிலால் கட்டப்பட்டது என்று "அல்லா சொன்னதாக" குரானில் குறிப்பிடுகிறார் முகம்மது, ஆனால் அவரே 'ஷாஹி புகாரி'யில் வேறு விதமாக குறிப்பிட்டதாக 'அபு தார்' தெரிவிக்கிறார். உண்மையில் பாகன்களால் வழிபடப்பட்ட அந்த அல்லத் சிலைதான் இன்று காபாவாக உள்ளது என்பது பல அரேபிய வரலாற்று ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்ளும் ஒன்று.

காபாவுக்கும். ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது பாகன்களின் பாரம்பரிய சின்னம் என்று அரேபிய வரலாற்றை ஆய்வு செய்த எகிப்திய பேராசிரியர் டாக்டர் தஹா ஹுசைன் ( Dr. Taha Husayn) தெரிவிக்கிறார். முகம்மது அவர்களே காபா பாகன்களின் பாரம்பரிய சின்னம் என்பதால் அதை இடிக்க நினைத்ததாக ஒரு "ஹடித்" தெரிவிக்கிறது (Sahih Bukhari 1:3:128)

அடுத்து ஐந்து நேர தொழுகை சடங்கு எங்கிருந்து வந்தது என்றால் அதுவும் பாகன்களிடம் இருந்துதான். பாகன்கள் மெக்காவை நோக்கி ஐந்து முறை தொழுதார்கள். அது போலவே பாரசீக ஜொராஸ்ட்ரிய பழங்குடியினரோ ஐந்து முறை சூரியனை நோக்கி தொழுதார்கள். தொழுவதற்கு முன் அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்வார்கள். இதை அப்படியே நடை முறை படுத்தினார் முகம்மது நபி. சூரியனுக்கு பதில் இங்கே மெக்காவின் திசை வைக்கப்பட்டது.

அரேபிய பாகன்களின் முக்கிய கடவுளான ஹபல் (Hubal) சந்திர பிறையால் குறிக்கப்பட்டார். (படம் பார்க்க) அது முகம்மது அவர்கள் உருவாக்கிய‌ இஸ்லாமில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் காபா கல்லை ஏழு முறை சுற்றுவது பாகன்களின் சடங்குதான். இது உருவ வழிபாட்டை பின்பற்றும் இந்துக்கள் , பௌத்தர்கள் மற்றும் சமனர்களிடமும் உள்ளது. ஆனால் அருவ வழிபாட்டை போதிக்கும் முகம்மது ஏன் ஏழு முறை சுற்ற சொல்ல வேண்டும் ? ஏனென்றால் அவரே இந்த பாகன் நடைமுறையை பின்பற்றி வந்தார் என்பதே உண்மை.

இதை குறித்து அடுத்த பாகத்தில் மேலும் ஆராய்வோம்.
12079487_843279502460157_759616889982926


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 06

12122405_843419432446164_230775678551178


முகம்மது அவர்களே அரேபிய பூர்வீக மதமான பாகன்களின் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றினார், மற்றவர்களை பின்பற்ற வைத்தார் என்பதை பார்த்தோம். ஆகையால் இஸ்லாம் என்பது ஒரு முற்றிலும் மாறுபட்ட‌ மதம் என்பது போலவும், அதில் உள்ளது அனைத்தும் வித்யாசமானது என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க நினைப்பவர்களின் திட்டம் இதன் மூலம் முறியடிக்கப் படுகிறது.

மெக்காவை கைப்பற்றிய பின் முகம்மது அவர்கள் அரேபியாவில் உள்ள பல இடங்களை போரிட்டு பிடிக்கிறார். கிழக்கு அரேபியாவில் உள்ள பல பாகன் கோவில்களை தாக்கி அழிக்கிறார். மேற்கு அரேபியாவிலோ "தைஃப்" என்கிற நகரமே மிஞ்சி இருக்கிறது. அந்த நகரத்தினர் அவரிடம் சரனடைய முன்வந்தாலும், அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால் தான் அதை ஏற்றுக் கொள்வேன் என்கிறார். அங்குள்ள பாகன்களின் கோவில்களை அழிக்கவும் அவர் உத்தரவிடுகிறார்.

முகம்மது இதற்கு முன்பு யூதர்கள் வசிக்கும் "கைபரை" கைப்பற்ற தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள பல கோட்டைகளை பிடித்து பலரை கொடூரமாக கொன்றொழித்தார் என்றும், தன்னுடைய குடும்பம் முழுவதும் கொல்லப்பட்ட நிலையில் ஒரு யூதப் பெண் அவருக்கு உணவு பறிமாறுகையில் ஆட்டிறைச்சியில் விஷம் வைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முகம்மது அந்த விஷத்தின் வீரியத்தால் நோயுற்று இறப்பதாகவும் கூறுகிறார்கள்... யூத மற்றும் கிறிஸ்துவ அறிஞர்கள் பலர், முகம்மது இறை தூதராக இருந்திருந்தால் விஷம் அருந்தி மரணமடைவாரா ? மேலும் யூதப் பெண் விஷம் வைக்க போகிறாள் என்பதை ஏன் அவர் முன் கூட்டியே யூகிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்புகின்றன.

முகம்மது நபி அவர்கள் நல்லவரா அல்லது தீயவரா, அவரின் செயல்கள் நியாயமானதா, அநீதியானதா போன்றவை இந்த கட்டுரைக்கு அவசியமில்லாதது. அவர் உண்மையில் இறைதூதரா இல்லையா என்பதும் நமக்கு அவசியமில்லை. அவர் செய்ததாக சொல்லப்படுகிற பல கொடூர செயல்களை பட்டியல் இடுவதும் நம் நோக்கமல்ல. ஆனால் அவரை பின்பற்றுபவர்களாக சொல்லிக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட தீமையை இந்திய‌ நாட்டுக்கு ஏற்படுத்தினார்கள் என்பதே இந்த கட்டுரைக்கு மிக அவசிய‌மாகிறது. முகம்மதை பின்பற்றியவர்கள் அவரின் வாழ்வில் இருந்து பல செய்திகளையும், அவரின் போதனைகள் என்று சில கோட்பாடுகளையும் பின்பற்றினர். அதுதான் உலகின் வரலாற்றை மிக கொடூரமாக மாற்றியது அவற்றை குறித்து பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 07

12107272_843654789089295_537449928064285
 
 
 முகம்மது அவர்களின் மரணத்திற்கு பிறகு நான்கு கலீஃப்கள் அவருக்கு பின் ஆட்சி ஆண்டார்கள். ஒரு இஸ்லாமிய அரசன் "ஜிகாத்" என்கிற புனித போர் செய்து இஸ்லாத்தை, இஸ்லாம் அல்லாதவர்களிடம் கொண்டு செல்வது அல்லாவின் கட்டளை என அவர்கள் நம்பினார்கள். இதனால் ஒவ்வொரு கலீஃபின் ஆட்சியிலும் இஸ்லாம் பல நாடுகளுக்கு பெருகியது. பைஜான்டைன் (Byzantine ) மற்றும் பாரசீக பேரரசுகள் தங்களுக்குள் நெடுங்காலம் போர் புரிந்து அச்சமயத்தில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. மேலும் பைஜான்டைன் பேரரசு தங்கள் சாம்ராஜ்யத்தில் இருந்த சிரியா மற்றும் எகிப்தின் மீது கிறிஸ்துவத்தை தினித்து வந்தது அம்மக்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன. இதை பயன்படுத்திக் கொண்ட முஸ்லீம் படைகள் ஜிகாத் என்கிற புனிதப் போரை தொடங்கி பாரசீகத்தை தாக்கியது. வெறும் இருபதே வருடங்களில் முஸ்லீம் படைகள் சிரியா, பாரசீகம், எகிப்து என பல நாடுகளை விழுங்கியது.

அதன் பின் மூன்றாம் கலீஃபின் உறவினரான "முவையா"வின் (Muawiyah) ஜிகாதிய போர்களினால் "உமாயத் பேரரசு" என சிரியாவின் டெமாஸ்கஸை தலைநகராக கொண்டு அது விரிந்தது. வட ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் தென் மேற்கு பிரான்ஸ் வரை அது விரிந்தது. மற்றொரு புறம் பண்டைய பாரதத்தின் ஒரு பிரதேசமாக இருந்த ஆப்கான் மற்றும் சிந்து பிரதேசத்தை நோக்கியும் அது விரியத் தொடங்கியது.

முஸ்லீம் படை இத்தனை வேகமாக விரியக் கூடியதற்கு் முக்கிய காரணமாக ஜிகாத் இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஜிகாத் ஒரு மத ரீதியான நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. இறைவனின் கட்டளை எனும் பெயரில் போர் புரியும் போது ஒரு பெறும் உந்து சக்தி கிடைக்கிறது. மேலும் மதம் மாறிய மக்களை இது உடனுக்குடன் ஒன்றினைக்கிறது. மேலும் இப்படி போர் புரிவதினால் இறந்த பிறகு மறுமையில் சுவர்கமும், சுகபோகங்களும் கிடைக்கும் எனும் கோட்பாடு பலரை இதில் ஈடுபட தூண்டுகிறது என்கிறார்கள்.

போர் யுக்திகளில் முகம்மதுக்கு பின் வந்தவர்கள் அவரின் பல யுக்திகளை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு களம் இறங்கினார்கள். வெற்றியும் பெற்றார்கள். அதில் முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்.

முகம்மது அவர்களின் வாழ்க்கை நெறிப்ப‌டி போரில் ஏமாற்றுவதில் தவறில்லை என்று சில வஹாபிய மதகுருக்கள் "அல் தக்கியாவை" முன்வைக்கிறார்கள். முகம்மது அரேபியாவில் பொது ஆண்டு 627ல் "ட்ரெண்ச்" (Battle of the Trench) என்கிற போருக்கு ஆயத்தமாகிறார். "அல் அஹ்சப்" என்கிற பழங்குடியினர் அவருக்கு எதிராக அணிதிரள்கின்றனர். அதில் உள்ள "நைம் இப்ன் மசூத்" (Na'im ibn Mas'ud ) என்கிற ஒரு பழங்குடி நபர் மட்டும் முகம்மதோடு சேர்ந்து முஸ்லீமாக மதம் மாறுகிறார். இது அவரின் அல் அஹ்சப் பழங்குடியனருக்கு தெரியாது. முகம்மது, மசூதிடம், "மதமாறியதை நீங்கள் வெளிப்படுத்தாதீர்கள், அதை மறைத்துக் கொண்டு பழகுங்கள், எதிரிகளை பிரித்து துண்டாடுங்கள்" என்று அறிவுரை கூறுகிறாராம். அவர் பேச்சை கேட்டு மசூத், அந்த பழங்குடியினருக்கு தவறான அறிவுரைகளை கொடுத்து, எதிரிக‌ளுக்கு இடையே பகைமையையும், நம்பிக்கை இன்மையையும் வளர்த்து, அவர்களின் வளர்ச்சியை குன்ற செய்கிறாராம்.

மேலும் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 08

12088143_843726515748789_248654400595470 

 
இப்படி முகம்மது அவர்களின் வாழ்வில் நடந்ததாக பல சம்பவங்களை எடுத்துக் காட்டும் கலிஃபாக்கள், "அல் தாக்கியா" (Al Taqiyya - மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவது) மற்றும் கிட்மன் (Kitman - உதட்டளவில் மட்டும் நட்பு கொள்வது) போன்ற‌ கோட்பாட்டுகளை முன் நிறுத்துகிறார்கள். மேலும் கீழ்கண்ட "ஸூரத்துல்ஆல இம்ரான்" என்கிற 3வது ஸுராவில் 28வது வசனத்தில் (அல்லா சொன்னதாக) முகம்மது அவர்கள் குரானில் குறிப்பிடுவதை, பின் நாளில் பல இஸ்லாமிய கொள்ளைக்காரர்கள் படை வீரர்களுக்கு போதிக்கிறார்கள்.

3:28. முஸ்லீம்கள் (முஃமின்கள்) தங்களைப் போன்ற முஸ்லீம்களையன்றி, காஃபிர்களைத் தம் உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமானால் நீங்கள் அவ்வாறு நண்பர்களை போல் இருந்து கொள்ளலாம்.

இது குறித்து முகம்மது அவர்களின் கூட்டாளியாக இருந்த‌ அபு அத்-தர்தா (Abu Ad-Darda) கூறுகிறார், இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாதோரிடம் (காஃபிர்) முன் சிரித்து நடிக்க வேண்டும், ஆனால் மனதிற்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி காஃபிர் எனப்படும் முஸ்லீம் அல்லாதாரோடு போரிட்டு, மரணம் அல்லது மதம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை அவர்களை (காஃபிர்களை) ஏற்க வைப்பதே புனித போராக முகமதுக்கு பின்னும் பல ஆண்டுகள் நடைப்பெற்றது.

முகம்மது அவர்களின் விசுவாசத்தை பெற்றவரான‌ உமர், முகம்மது அவர்களுக்கு பின் முஸ்லீம்களை வழிநடத்துகிறார். அவர் "உலகில் உள்ள அனைத்து நூலகங்களையும் எரித்து விடுங்கள் எல்லாமே குரானில் இருக்கிறது. நமக்கு வேறு எந்த புத்தகமும் தேவையில்லை".என்று அவர் ஆனையிடுகிறார். இந்த அசுரத்தனமான மதவெறியோடு கூடிய சலாஃபிய எண்ணம்தான், இஸ்லாமியர்களாக மாறிய மக்களை வெறியடைய செய்து அலெக்சாண்ட்ரியா, எகிப்து, சிரியா, பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள உலகில் உள்ள நூலகங்களை முஸ்லீம் படையால் அழிக்க வைத்தது. இந்தியாவின் பழம்பெரும் நூலகமான தக்ஷ்சீலா மற்றும் உலகின் மிகப்பெரும் நூலகமான பீகாரில் இருந்த நலந்தாவையும் இந்த எண்ணமே எரிக்க வைத்தது. அதாவது குரானில் இல்லாதது உலகில் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்கிற வெறி பிடித்த எண்ணம்.

இப்படி உலகெங்கும் இஸ்லாம் பரவத் தொடங்கியதும், அந்த‌ நாடுகள் கீழ் கண்ட வகையில் பிரிக்கப்பட்டன.

தர் அல் இஸ்லாம் நாடுகள் என்பவை - எங்கெங்கு எல்லாம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஷரியத் சட்டத்தை அமல் படுத்தவும். முஸ்லீம்களுக்கு அனைத்து விதமான சலுகைகள் அளிக்கப்படவும் உறுதி செய்கிறது


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 09

– Englightened Master

12088069_844045909050183_734353649400088


உலகெங்கும் இஸ்லாம் பரவத் தொடங்கியதும், அந்த‌ நாடுகள் கீழ் கண்ட வகையில் பிரிக்கப்பட்டன ? தொடர்கிறது

தர் அல் ஹர்ப் - இதன் படி ஒரு நாட்டில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கின்ற நிலையில் அந்த நாடு தூய்மை இழந்ததாக கருதப்படுகிற‌து. ஆகையால் அந்த நாட்டு மக்களை (முஸ்லீம் அல்லாதவரை) மதம் மாற்ற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும். ஆனால் அந்த நாட்டை சேர்ந்த புனித நூலை பின்பற்றும் மக்கள் விரும்பினால் அந்த முஸ்லீம் அல்லாதோர் மீது "ஜிஸ்யா" எனப்படும் வரியை கட்டவைத்து அவர்களை சகித்துக் கொள்ளலாம்.

தர் அல் அம்ன் - மூஸ்லீம்கள் அதிகம் இல்லாத நாடுகளில், தங்கள் மதத்தை முஸ்லீம்கள் பின்பற்றும் உரிமையை இது குறிக்கிறது.

தர் அல் தாவா - முஸ்லீம்களே இல்லாத ஒரு நாட்டில் புதியதாக இஸ்லாமை கொண்டு செல்வது.

இப்படி ஒரு நாட்டில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை பொறுத்தே தங்கள் அனுகுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டார்கள். பெரும்பாலும் பிற‌ மத சகிப்புத்தன்மை என்பது முகமதிற்கு பின் வந்தவர்களுக்கு ஒரு யுக்தி ரீதியான அனுகுமுறையே தவிர, உள்ளத்திலிருந்து ஏற்படும் ஒரு உணர்வாக இல்லை. இதற்கும் முகமது அவர்களே முன்னோடியாக இருந்தார் என சிலர் குறிப்பிடுகிறார்கள்.

முகம்மது அவர்கள் மெக்காவை சேர்ந்த வெகு சில சீடர்களுடன் மெதினாவுக்கு செல்கிறார். மெதினாவில் உள்ள பழங்குடியினர் அவரை எதிர்க்கவில்லை. மெதினாவில் உள்ள பழங்குடி மக்கள் பலதரப்பட்ட பின்புலத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் யூதர்கள், வேறு சிலரோ அரேபிய பாகன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வேறு சிலர் வேறு பல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். முகம்மது இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கிறார். இந்த ஒருங்கினைப்பை அவர் "உம்மா" என்று அழைக்கிறார். அவரவர் அவரவரின் விருப்பம் போல நம்பிக்கைகளை பின் தொடரலாம் என்கிற சட்ட அமைப்பையும் ஏற்படுத்துகிறார். இந்த சட்ட அமைப்பின் மூலம் பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்களும் தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொள்ளவும், ஒருங்கினைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வழி வகை செய்கிறார். அது போலவே தங்களை போலவே பழைய ஏற்பாட்டினை பின்பற்றும் ஆப்ரகாமிய மதத்தவர்களுக்கு (யூத, கிறிஸ்துவ பழங்குடிகள்). அல்லாவும், முகம்மதும், சிறப்பு பாதுகாப்பை தருவார்கள் எனும் வகையில் "திம்மா கான்ட்ராக்ட்" ( dhimmah contract) என்கிற ஒரு ஒப்புதலை தருகிறார். இந்த திம்மா கான்ட்ராக்ட் தான் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ஒரு பாலமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்த திம்மா ஒப்புதல்படி இஸ்லாமியர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் சமமான உரிமைகளே அளிக்கப்படுகிறது. ஆனால் அதன்பின் மெக்காவின் மீது நடந்த போரில் வெற்றிப் பெற்று முகம்மது அவர்களின் படை பலம் பெற்ற பின் மாற்று மதத்தினரோடு அவர் ஏற்படுத்திய ஒப்பந்தங்களில், பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இஸ்லாமிய வழக்கப்படி மாற்று மதத்தினரும் "ஜகத்" எனும் வரியை செலுத்தியாக வேண்டும் என்று நிர்பந்திக்க‌ப்படுகிறது.

மெதினாவில் முகம்மது "உம்மா" என்று குறிப்பிட்டது அனைத்து மதத்தவரையும் அரவனைத்துக் கொள்ளும் "ஒன்றினப்பு குழுவாக" இருக்கிறது. இதில் பல மத பழங்குடியினரும் அடங்குவார்கள். ஆனால் மெக்காவை கைப்பற்றி குரோஷியர் பலரை முஸ்லீம்களாக மாற்றிய பின் உம்மாவில் சேர வேண்டும் என்றால் "கட்டாயம் முஸ்லீமாக மாறுவேன்" என்கிற உறுதி மொழி தர வேண்டும் என்று மாற்றி அமைக்கிறார் முகம்மது. இவ்விடத்தில் இஸ்லாம் என்பது பாகன்களிடம் இருந்து வேறுபடுவது மட்டும் அல்ல, அது யூத மற்றும் கிறிஸ்துவ மதங்களிடம் இருந்து வேறுபடும் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்பதை காட்டுகிறார் முகம்மது. அதாவது ஒரு நாட்டில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க‌ சட்டதிட்டங்களும் மாறும் என்பதை இது உணர்த்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 10

– Englightened Master

12088419_844506652337442_138681923484124



இத்தனைக்கும் குரோஷியர்கள் முகம்மது அவர்களை மெக்காவில் இருந்து விரட்டிய போதும், அவரை கொல்வதற்கு முயன்ற போதும் அவருக்கு அடைக்கலம் தந்து இன்முகத்துடன் வரவேற்றவர்கள் மெதினாவில் உள்ள யூத மற்றும் கிறிஸ்துவ பழங்குடியினரே. ஆனால் தன் படை அரேபியா முழுது பலம் பெற்று, தன்னுடைய இஸ்லாம் எனும் மார்கத்தை அரேபியாவில் நிலை நிறுத்தியதும், மாற்று மதத்தவர்களின் மத நம்பிக்கைகளை அவர் அனுமதிக்கவில்லை. பொது ஆண்டு 632ல் அரேபியா முழுதும் இஸ்லாமிய மயமாக்கப்பட்டதும், முகம்மது "பைஜான்டைன்" மற்றும் பாரசீக நாடுகளுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதுகிறார். இல்லையென்றால் ஜிகாத் ஒன்றுதான் வழி என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

சில மாதங்களிலேயே முகம்மது அவர்களின் மரணம் நேர்ந்துவிட, இஸ்லாமிய உம்மாவுக்கு (கூட்டனி அல்லது ஒன்றியம்) அபு பக்கர் தான் முதல் கலிஃபாவாக (தலைவர்) தேர்ந்தெடுக்க படுகிறார். அபுபக்கர் முகம்மதின் மாமனாரும், முகம்மது அவர்களின் இளம் வயது மனைவியுமான ஆயிஷாவின் தந்தை. இரண்டு வருடங்களே இவர் கலிஃபாக இருந்து நோய்வாய்பட்டு இறக்கிறார். அவருக்கு பின் கலிஃபாக பதவியேற்கிறார் 'உமர்'. இவர் பாரசீகம் வரை முஸ்லீம் தேசத்தை விரிவடைய செய்கிறார். இவரது ஆட்சியில் தான் கிட்டத்தட்ட 4050 நகரங்கள் கைப்பற்றப்பட்டன. முஸ்லீம் சாம்ராஜ்யத்தை பல வித மாகானங்களாக பிரித்து பல நிர்வாக அமைப்புகளை இவர் ஏற்படுத்துகிறார்.

முஸ்லீம் படை செய்த அராஜகத்தாலோ என்னவோ, மிகப்பெரும் பஞ்சம் அரேபியாவை தாக்குகிறது. பசியாலும் பட்டினியாலும் அரேபியாவில் பலர் உயிர் இழக்கிறார்கள். பலர் உணவில்லாமல் இடம் பெயர்கிறார்கள். உமர் சிரியாவில் இருந்தும் மற்ற பிரதேசங்களிலும் இருந்த உணவு பொருட்களை வரவழைக்கிறார். மெதினாவில் தினம் மாலை உணவு சாலைகள் நடத்தி பல ஆயிரம் மக்களை காப்பாற்றுகிறார். அரேபிய பஞ்சம் ஒருவழியாய் முடிவுக்கு வந்த நிலையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் கடுமையாக "ப்ளேக்" நோய் பரவுகிறது. சிரியா மாகான முஸ்லீம் படை தலைவர் அபு உபைதா (Abu Ubaidah) மற்றும் பல முக்கிய முஸ்லீம் படை தலைவர்கள் என 25000 பேருக்கு மேற்பட்ட‌ முஸ்லீம்கள் நோயால் இறக்கிறார்கள்.

இதன் பின் உமர் ஒரு நாள் பிருஸ் (Piruz Nahavandi) என்கிற ஒரு பாரசீக அடிமையால் மெதினாவில் கடுமையாக தாக்கப்படுகிறார். பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியதற்கு பழிக்கு பழி வாங்க பிருஸ் என்கிற அடிமையாக்கப்பட்ட அந்த வீரன் உமரை ஆறு முறை வயிற்றில் குத்தி காயப்படுத்துகிறான். தடுக்க வரும் பலரையும் வீழ்த்தி தானும் தற்கொலை செய்து கொள்கிறான். படுகாயப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு உயிரிழக்கிறார் உமர். உமரின் மரண அறிக்கை மிக உருக்கமானதாக கருதப்படுகிறது. அரேபிய பேரரசை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.

அதன் பின் மூன்றாவது கலிஃபாவாக 72 வயதான "உத்மன் பின் அஃபன்" (Uthman bin Affan) பொறுப்பேற்கிறார். இவரின் ஆளுமையில் கீழ் முஸ்லீம் படை ஆப்கான், சைப்ரஸ், லிப்யா, அஜ‌ர்பைஜான், ஆர்மீனியா போன்ற பிரதேசங்களை கைப்பற்றியது. மெதினாவில் முதல் முதலாக குரான் ஒரு புத்தக வடிவில் தொகுக்கப்பட்டது. தன்னுடைய 84வது வயதில் இவரும் கொல்லப்படுகிறார். அதற்கு முக்கிய காரணமாக அரேபியாவில் பெருகிய சட்டம் ஒழுங்கு பிரச்னை, முகம்மது அவர்களின் மனைவி ஆயிஷாவை இவர் பகைத்துக் கொண்டது மற்றும் தன்னுடைய உமய்யா குலத்தையே (Banu Umayya) சேர்ந்தவர்களையே இவர் ஆதிக்கம் செலுத்த விட்டது என பலவற்றை குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்

அரேபியாவில் வம்சம் அல்லது குலம் மிகவும் ஆதிக்கம் செய்து வந்தது. இதில் குரோஷிய வம்சம் அல்லது குலம் தான் மிக உயர்ந்தது என கருதப்பட்டது. இது ஆதாம், ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயில் என சொல்லப்பட்ட முன்னாள் ஆப்ரகாமிய மத இறை தூதவர்கள் பிறந்த வம்சம் என நம்பப்பட்டது.

மேலும் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 11

 

– Englightened Master

11251114_844944265627014_269884847322277 
 
முகம்மது அவர்களின் மரண‌த்திற்கு பின் குரோஷிய பழங்குடி இனத்தில் இருந்து மட்டுமே இஸ்லாமிய தலைவரை தேர்ந்தெடுப்பது என்று ஒரு நியதியை வகுத்தார்கள் முஸ்லீம் பிரதிநதிகள். முதல் மூன்று கலிஃபாக்களும் (தலைவர்கள்) மெக்காவை சேர்ந்த குரோஷிய பழங்குடியினர்தான். இவர்கள் பதவியை தவறான முறையில் கைப்பற்றிவிட்டனர், இவர்கள் கலீஃபாக இருக்க அருகதை அற்றவர்கள் என நான்காவது கலிஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மதின் மருமகன் "அலி" குற்றம் சாட்டினார். மேலும் அலி, முகம்மது அவர்களின் பனு ஹஷீம் ( Banu Hashim) என்கிற குலத்தை சேர்ந்தவர். அபு பக்கரோ, பனு தைம் (Banu Taym) என்கிற குலத்தை சேர்ந்தவர். முகம்மது அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்க‌ள் மட்டுமே இஸ்லாமிய கலிஃபாவாக தேர்ந்தெடுக்க தகுதியானவர்க‌ள் என்று அலி கருதினார்.

அபு பக்கரின் மகளும், முகம்மதின் இளம் வயது மனைவியுமான ஆயிஷா முதல் மூன்று கலிஃபாக்களால் ராணி போல் மரியாதை செய்யப்பட்டார். ஆனால் அலியோ முகம்மது அவர்களின் முதல் மனைவி கதிஜா ( Khadīja bint Khuwaylid) வின் மகள் ஃபாத்திமாவின் கணவர். இந்த அலியின் தந்தையான "அபு தலிப்" தான் முகம்மது அவர்களை வளர்த்தவர். அதனால் முகம்மதுக்கு பிறகு முதல் கலீஃபாக அலி தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நினைத்தார்கள். ஆனால் ஆயிஷாவுக்கும் இவருக்கும் இருந்த பகைதான் இவர் முதல் அல்லது இரண்டாவது கலீஃபாக வர இயலாமல் இருக்க ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாள‌ர்கள்.

ஆயிஷாவுக்கும் "சஃப்வான்" (Safwan bin al-Mu‘attal) என்கிற ஒரு அடிமை வாலிபனுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஒரு வதந்தி அரேபியாவில் பரவுகிறது. இதை காரணம் காட்டி மருமகன் அலி, முகம்மது அவர்களிடம் ஆயிஷாவை விவாகரத்து (தலாக்) செய்யுமாறு முறை இடுகிறார். முகமதோ தனக்கு இதுகுறித்து அல்லா விடம் இருந்து இறை செய்தி இறங்கிய‌தாகவும், ஆயிஷா கூறியது போல் காணாமல் போன நகையை மீட்பதற்காகதான் அவர் அந்த வாலிபனோடு சென்றதாகவும் அந்த வதந்தியை முகம்மது அவர்கள் முடித்து வைக்கிறார். இது Sahih al-Bukhari 5:59:462 மற்றும் Sahih Muslim 37:6673 குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஆயிஷாவுக்கும், அலிக்கும் பிரச்னை தொடங்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வாளாலும், வன்முறையாலும் பரவிய முஸ்லீம் படையில் இப்படி பலவிதமான உட்சண்டைகள் ஏற்படத் துவங்கின. ஒவ்வொருவரும் தங்கள் பழங்குடியின் மேல் உள்ள பற்றால் மற்றவர்களை வெறுக்கவும், பாரபட்சம் காட்டவும் தொடங்கினர். எந்த வன்முறையால் மாற்று மதத்தினரை சூரையாடினார்களோ, அந்த வன்முறை அவர்களுக்குள்ளேயே ஏற்படத் துவங்கியது. பல நாடுகளில் சூரையாடப்பட்ட செல்வ செழிப்பை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதிலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட துவங்கின. உலக சரித்திரத்தில் மிகப்பெரும் ரத்த ஆறை ஏற்படுத்தும் விதமாக மாமியார் - மருமகன் சண்டை துவங்கியது. அதுதான் முகம்மது அவர்கள் ஏற்படுத்திய இஸ்லாமிய "உம்மா"வை உடைத்து எறிந்தது.

மூன்றாவது காலிஃபா உத்மான் கொல்லப்பட்டு, பலநாட்கள் அழுகிய நிலையில் அவர் உடல் தூக்கி வீசப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அலிதான் என்று ிமுஸ்லீம் படை வீரர்களான "தல்ஹா" மற்றும் "ஜுபைர்" (Talha and Zubayr) கருதினார்கள். ஆயிஷாவின் ஆதரவோடு அவர்கள் அலியை தாக்குவதற்கு படை திரட்டினர். நான்காவது கலிஃபாக அலி தேர்ந்தெடுக்கப்பட்டது முறையற்றது என்றும் அவர்கள் கருதினார்கள். பெரும் படையோடு அவர்கள் அலியை தாக்குவதற்காக ஈராக்கிய நகரமான பஸ்ராவுக்கு (Basra) வருகிறார்கள். இந்த போர் தான் ஒட்டக போர் (Camel war) என்றும் பஸ்ரா போர் (Battle of Basra) என்றும் அழைக்கப்படுகிறது. பல ஆயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கும், முகம்மது ஏற்படுத்திய முஸ்லீம் ஒருங்கினைப்பான‌ "உம்மா" சிதைந்ததற்கும் மூல காரணம் இந்த ஒட்டக போர்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் தொடரும்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 12

– Englightened Master

1601570_845225188932255_6984944960838947


முஸ்லீம்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதற்கு ஆயிஷா-அலி விரோதமும், பழங்குடிகளிடம் இருந்த குல வேற்றுமைகளும் மட்டும் காரணமல்ல. ஜிகாத் போர்களால் கிடைத்த பெரும் செல்வமும், அழகிகளும், ஆளுமைகளும், அவர்களுக்கு இடையே பெரும் பொறாமை தீயை உண்டாக்கின. நாகரீகம் இல்லாத கொள்ளைக் கூட்டங்களாய் காலம் காலமாக இருந்த அரபிகள் பெரும் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதிகள் ஆன பின்பும் தங்கள் இயற்கை குணம் மாறாமல் இருந்தனர். ஒவ்வொரு கலிஃபாவுக்கும், ஒவ்வொரு பிராந்திய தலைவனுக்கும், முழு நேர தொழிலே போர் புரிவதும், மற்ற நாடுகளை அபகரிப்பதுமாகவே இருந்தது. மேலும் முகம்மது அவர்களின் உபதேசங்களை பலரும் பலவிதமாக எடுத்துக் கொண்டு தங்களுக்கு சாதகமான வகையில் பின்பற்ற தொடங்கினர்.

அல்-குரான் என்பது முகம்மது அவர்கள் தன்னுடைய 40 வயதில் தொடங்கி 23 ஆண்டுகள் வெளிப்படுத்திய வாசகங்களாகும். (அவருக்கு கேப்ரியல் எனும் தேவதை அல்லாவின் இறை வசனங்களை கூறியதாக அவர் தெரிவிக்கிறார்) முகம்மது அவர்கள் இறந்த பின் அவரோடு இருந்து பலர் அவற்றை எழுதியும் மனப்பாடம் செய்தும் வைத்துக் கொள்கின்றனர். பல நாடுகளை பிடித்து இஸ்லாமிய மயமாக்கல் செய்யப்பட்டதால் பல மொழிகளில் குரான் கொண்டு செல்ல‌ப்பட்டது.

மூன்றாவது கலீஃபாக பொறுப்பேற்ற உத்மன் பேராசையும், சுயநலமும், போகப் பிரியராகவும் இருந்தாலும் அவரின் முயற்சியால்தான் குரான் இன்றைக்கு இருக்கின்ற நிலையில் வடிவம் பெறுகிறது. உத்மன் ஜைத் (Zaid bin Thabit) என்பவரிடம் குரானை தன்னுடைய குரோஷிய நடையில் தொகுக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் உத்மன். முகம்மதோடு இருந்த சில நம்பகமானவர்களை இப்பணியில் அமர்த்துகிறார். அது தொகுக்கப்பட்டதும் அதை நான்கு புத்தகமாக நகல் எடுக்க வைக்கிறார். ஒவ்வொன்றையும் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நிலுவையில் உள்ள அனைத்து குரான்களையும் அழிக்க ஆனையிடுகிறார் உத்மன். "அல் முஷ்த்ஃப் அல் உத்மானி" (The Al-Mushaf Al-Uthmani) என்று அழைக்கப்படுகிற இந்த குரான் தொகுப்புதான் இப்போது புழக்கத்தில் உள்ள குரான். உத்மனின் இந்த செயலால்தான் குரான் பலவிதமாக இல்லாமல் ஒரே புத்தகமாக பின்பற்றப்படுகிறது என்று அவரின் ஆதரவாளர்களும், உத்மன் பல முக்கிய தகவல்கள் அழிவதற்கு காரணமாக இருந்துவிட்டார், அரிய தகவல்கள் பல அழிவதற்கு காரணமாகிவிட்டார் என விமர்சகர்களும் கூறுகிறார்கள்.

பல குரான்கள் ஒன்றுக்கொன்று முரனாக இருப்பதை வேண்டுமானால் உத்மன் தடுத்திருக்கலாம், ஆனால் அவர் திரட்டி தற்போது பின்பற்றப்படும் குரானே தனக்குள் முரன்படுவதை புதிதாக படிப்பவர்கள் உணரலாம்.

114 சுராக்களை (பகுதிகள்) கொண்ட குரானில் சில, முகம்மது அவர்கள் மெக்காவில் வெளிப்படுத்தியவை, சில மெதினாவில் வெளிப்படுத்தியவை. முகம்மது தொடக்கத்தில் மெக்காவில் இருந்த போது அவர் முதன்முதலில் வெளிப்படுத்திய குரான் வாசகங்கள் மிதமானவை. ஏனென்றால் அப்போது அவர் ஒரு சாதாரண பிரஜை. அப்போதிருந்த வாசகங்களில் முஸ்லீம்களுக்கு அல்லாவும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவரவர்களின் இறைவனும் முக்கியம் என்கிறார். அல்லாவைதான் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபட வேண்டும் என்று அப்போது அவர் கூறவில்லை. பிற்பாடு அவர் மெதினா சென்று ஒரு படையை முன்நின்று நடத்துபவராகவும், பலம் பொருந்தியவராகவும் உருவான‌ பின் "அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை கொன்றொழியுங்கள்" என்கிறார்.

மேலும் தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 13

– Englightened Master

  

12063364_845674722220635_570868257436142


முகம்மது அவர்கள் தொடக்கத்தில் மாற்று நம்பிக்கையாளர்களுடன் உடன்படிக்கை ஒப்பந்தம் செய்திருந்தார்.. ஆனால் அவர் பலம் பெற தொடங்கியதும், அல்லாவிடம் இருந்து ஒரு "வஹி" (இறை செய்தி) இறக்கி அதை திருப்ப பெற்றுக் கொள்கிறார். [ குரான் 9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (முஸ்லீம் அல்லாதவர்) செய்திருந்த உடன்படிக்கையை விட்டு நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர் ]

இப்படி பல இடங்களில் இறை செய்திக‌ள் இறங்குகின்றன. உள்ளூர் கோவில்களில் சில ஏமாற்று பேர்வழிகள் சாமி வந்து குறி சொல்வதாய் சொல்லி தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்வது போல் அல்லவா உள்ளது இது ?

இதோ இந்த‌ வசனத்தில் அல்லா பயங்கரமான கோபத்தோடு கட்டளை இடுவதாக வஹி இறக்குகிறார் முகம்மது

[குரான் 47:4. முஃமின்களே (முஸ்லீம்கள்) நிராகரிப்பவர்களை (இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்களை) நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து நீங்கள் அவர்களை வென்று விட்டால் அவர்களுடைய கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு உதவியும் செய்யாமல் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் இது இறை கட்டளையாகும் அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான் ]

மாற்று மதத்தவர்களை வெறித்தனமாக கொல்வதை இறைவனே ஆனையிடுவதாய் இந்த வசனத்தின் மூலம் காட்டுகிறார் முகம்மது. இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக மாற்று மதத்தவர்களையும், இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவர்களையும் கொலை செய்வதில் தவறே இல்லை என்பது உணர்த்தப்படுகிறது. மேலும் அப்படி கொலை புரிபவர்கள் கொல்லும் போது இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு அல்லா மறுமையில் முழு பயனையும் தருவான் என்பதாக அதே வசனத்தில் (47:4) தொடர்கிறார் முகம்மது. ["ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்"]

அடுத்து முகம்மது அவர்கள் அல்லாவோடு தன்னையும் சேர்த்து வஹி இறக்கிக் கொள்கிறார். அதாவது முகமதோடு போர் புரிபவர்களும் அல்லாவோடு போர் புரிபவர்களும் வேறு வேறில்லை என்று இந்த வஹியில் காட்டுகிறார் அல்லா. [ 5:33. "அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு" ]

இந்த இறைசெய்திகளால் ஏதும் அறியாத அரேபிய பாலைவன பழங்குடி கூட்டங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தி கிடைக்க பெறுகிற‌து. சகிப்புத் தன்மை என்பது சுத்தமாக அற்று போகிற‌து. தன்னுடைய ஒரு நம்பிக்கையை வன்முறையின் மூலமாக மற்ற நம்பிக்கையாளர்களின் மீது தினித்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஆளுமையையும் பெற்றுக் கொள்ளலாம். இது இறைவனின் ஆனை. இது வன்முறை இல்லை, அப்படியே இறந்தாலும் மறுமையில் பெரும் இன்பங்களை இது கொடுக்கக் கூடியது. இப்படி உறுதியாக நம்ப தொடங்கினார்கள்.

இது காட்டுத் தீ போல பழங்குடியினரிடம் பரவ தொடங்கியது. கரும்பு தின்ன கூலியா ? என்பது போல், பல நாடுகளை சூரையாடி செல்வமும், அழகிகளும் கிடைக்கப்பெற்றால் ? அதை இறைவனும் அங்கீகரித்தால் ? அப்படி செய்ததற்கு மறுமையிலும் இறைவன் பரிசு அளித்தால் ? யார் தான் வேண்டாம் என்பார்கள் ?

இதனால் தான் முகம்மது அவர்களின் மரண‌த்திற்கு பின்னும் முஸ்லீம் படை எல்லா நாடுகளுக்கும் பரவியது. மாற்று மதத்தினரை கொன்று குவித்தது. அடிமை படுத்தியது. வாளாலும், வன்முறையாலும் வளர்ந்தது.

மேலும் தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 14

– Englightened Master

12187814_846096158845158_533956824396507



பல இஸ்லாமிய பெரியவர்கள் முகம்மது அவர்கள் வன்முறையை விரும்பவில்லை, மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே அவர் பாடுபட்டார் என்கிறார்கள். ஏக இறை வழிபாட்டை விட்டு விட்டு, பலர் பலவிதமான குருட்டு நம்பிக்கைகளை கையாளத் தொடங்கியதால் அல்லாவின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்கிறார்கள். அதுவே அவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள். மேலும் இஸ்லாம் என்பது அமைதி மார்கமே, வன்முறையை அது ஒரு போதும் முன்நிறுத்தவில்லை என்கிறார்கள்.

குரானை படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இது ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குரானில் பல வசனங்களில் வன்முறை மட்டும் இல்லாமல் காலத்திற்கு ஒவ்வாத அரேபிய பழக்க வழக்கங்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒன்று உத்மான் தொகுத்து வழங்க வைத்த குரான் முகம்மது அவர்கள் கூறாத வசனங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது அது பல இடைச்செருககளை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் கூறுவது என்னவென்றால், குரான் இம்மி அளவு கூட இடைச்செருகல்கள் இல்லாதது என்பதே. ஆகையால் அதில் உள்ள வன்முறை வசனங்கள், பிற்போக்கான குறிப்புகள் அனைத்துமே முகம்மது அவர்களின் வெளிப்பாடுகளே என்பது தீர்மானமாகிறது.

குரானின் வசனங்கள் இப்படி இருக்கையில், அதை பின்பற்றுபவர்கள் பலரும் தங்கள் மனோநிலைக்கு ஏற்றவாறு அதை கையாளத் தொடங்கினார்கள். மேலும் பல நூற்றாண்டுகளுக்கு குரான் அரபி மொழியிலேயே இருந்துவிட்டதால் அரபி மொழி தெரியாமல் முஸ்லீமாக மாற்றப்பட்ட பலரும் அதை மனப்பாடமே செய்து வந்தார்கள். அவர்கள் அரபியர்கள் அதற்கு கூறிய விளக்கங்களையே சார்ந்து இருந்தனர். 9ம் நூற்றாண்டில் குரான் சிந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் 19ம் நூற்றாண்டில்தான் அது முதல் முதலில் இந்திய மொழியான உருதில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர்தான் மற்ற‌ இந்திய மொழிகளில் அது மொழிப்பெயக்கப்பட்டது. ஆக குரானை படித்து அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மதம் மாறினார்கள் என்கிற வாதம் ஏற்க முடியாததாகிறது.

குரானுக்கு அடுத்து மிக முக்கியமானதாக "சுன்னா" எனப்படும் முகம்மது அவர்களின் போதனைகள் இடம் பெறுகின்றன. இந்த போதனைகள் ஹடித்திலும், சிராவிலும் (முகம்மதின் சுயசரிதை) தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. முகம்மது அவர்களின் சீடர்களும், அவரோடு இருந்தவர்களும் இதை தொகுக்தார்கள். எப்படி வாழ வேண்டும் என்று நம்பிக்கையாளர்களுக்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது. குரானை ஏற்றுக் கொள்வது போல் இந்த "சுன்னா" தொகுப்புகளை முஸ்லீம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புக‌ளும் பல்வேறு விதமான‌ ஹடீத் தொகுப்புகளை ஏற்பதும், நிராகரிப்பதுமாக இருக்கின்றன‌. எந்த ஹடித்துகள் சிறந்தது ? எது தவறானது ? என்பதில் கருத்து வேறுபாடுகள் இவர்களுக்குள் மிக அதிகமாக காணப்படுகின்றன.

இதில் காலத்தோடு ஒவ்வாத மிக பிற்போக்கான கருத்துக்களை கொண்ட ஹடீத்துக்கள் வேறு பல புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. குரானோடு ஒத்துப் போகும் சுன்னாக்கள் தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று மேம்போக்காக சொல்லப்பட்டாலும், பல விஷயங்களில் எது குரானோடு ஒத்து போகிறது ? எது ஒத்து போகவில்லை என்பது மிகுந்த குழப்பத்தை இவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியே வருகிறது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, உத்மானின் படுகொலை மற்றும் அலி-ஆயிஷா பிளவால் ஏற்பட்ட ஒட்டகப் போரிற்கு பிறகு முஸ்லீம் படை பலவாறு பிளவு படத் தொடங்கியது. "தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்" என்பது போல், ஒவ்வொரு படையும் தாங்களே முஸ்லீம் படை என்பதாக சர்வ நாசத்தில் இறங்கியது.

மேலும் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 15

– Englightened Master

12065779_846689012119206_881514531589679



ஈராக்கை முஸ்லீம் படை பாரசீக பேரரசிடம் இருந்து கைப்பற்றியது என்று பார்த்தோம். அது போலவே சிரியாவை "பைஜான்டைன்" பேரரசிடம் இருந்து கைப்பற்றியது முஸ்லீம் படை. பாரசீகர்களுக்கும், பைஜான்டைன் பேரரசுக்கும் பல நூறு ஆண்டுகளாக‌ பிண‌க்கம் இருந்து வந்ததால் பாரசீககத்தை சேர்ந்த ஈராக்கியர்களுக்கு, முன்னாள் பைஜான்டைன் பேரரசை சேர்ந்த சிரியா மீது எப்போதுமே ஒரு வெறுப்பு இருந்தது. புதியதாக அலி தலைமையில் அமைய உள்ள இஸ்லாமிய பேரரசின் தலமையகம் தங்கள் நாட்டிலேயே ஏற்பட வேண்டும் என்று இரு தரப்பினர்களும் விரும்பினார்கள். அலி நான்காவது காலிஃபாக பொறுப்பேற்ற பிறகு அவரை ஈராக்கிற்கு வருமாறும் ஈராக்கில் உள்ள "குஃபா" நகரத்தை தலை நகராக கொள்ளுமாறும் ஈராக்கியர்கள் வற்புறுத்தினர். அலியும் சம்மதித்தார்.

மூன்றாம் கலீஃபா உத்மானின் பேரரசில் சிரியாவின் கவர்னராக இருந்த முவையா (Muawiyah) மிகச்சிறந்த போர் தளபதியாக இருந்தார். அவர் அலியை நான்காவது கலீஃபாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர் உமாயத் வம்சத்தை சேர்ந்தவர். உமாயத் அரசு என்று ஒன்றை அவர் தன்னிச்சையாக சிரியாவில் ஏற்படுத்துகிறார். இதனால் ஈராக்கிற்கும் சிரியாவுக்கும் பெரும் பிண‌க்கம் இருந்தது.

இதற்கிடையே மெக்காவுக்கு புனித பயனம் மேற்கொள்ள இருக்கும் ஆயிஷா உத்மனின் கொலை குறித்தும், அலி நான்காவது கலீஃபாக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கேள்வியுற்று அதிர்ச்சி அடைகிறார். உத்மானின் கொலைக்கு அலியும் அவரின் ஆதரவாளர்களும்தான் காரணம் என்று அவர் நினைத்தார். அலியை பெரிதும் வெறுத்த‌ ஆயிஷா, ஜுபைர் மற்றும் தல்ஹா (Zubair and Talha) என்கிற இரண்டு படை தளபதிகளுடன் அலியை நோக்கி "பாஸ்ரா" செல்கின்றனர். உத்மனை கொலை செய்தவர்களை பிடித்து உடனுக்குடன் அவரக்ளுக்கு அலி தண்டனை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் போர்தான் வழி என்று அலியிடம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

500 பேர் செய்த குற்றத்திற்காக ஐயாயிரம் பேரை நாம் பலி வாங்கிட‌ வேண்டாம் என்று அலி ஆயிஷாவை சமாதான படுத்தினார். ஜுபைர் மற்றும் தல்ஹாவையும் அலி சமாதானப்படுத்த‌ அவர்களும் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டு அங்கிருந்து திரும்பி செல்கின்றனர். ஆனால் உத்மனை கொன்றதாக சொல்லப்படும், ஈராக்கை சேர்ந்த 'குரா'க்களுக்கு (Qurra) இது பிடிக்கவில்லை. (குராக்கள் ஈராக்கில் உள்ள் குஃபாவை மையமாக கொண்ட பாலைவன நாடோடிகள் மூர்கர்கள். போர்புரிவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் உத்மன் கலீஃபான பின் அது மெல்ல குறைக்கப்பட்டது. இதனால் உத்மன் மீது இவர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பால் அவரை கொன்றார்கள் என சொல்லப்படுகிறது) இந்த குராக்கள் இரவோடு இரவாக அவர்கள் தங்கியிருந்த பந்தல்களுக்கு தீ வைத்தனர். மர்வான் (Marwan ibn al-Hakam) என்கிற சூழ்ச்சிக்காரர் விஷ அம்பை எய்தி தல்ஹாவை கொலை செய்கிறார். தன் பழங்குடியை தல்ஹா அவமதித்து விட்டு போரில் பாதியில் சென்றதாக இவ்வாறு செய்கிறார் மர்வான்.

பாஸ்ராவை சேர்ந்த கதி காப் இப்ன் (Qadi Kaab ibn Sur) எனும் பெரிய‌வர் குரானை கையில் ஏந்திக் கொண்டு ஒட்டகத்தில் மீது ஏறி முஸ்லீம்கள் மூஸ்லீம்களோடு போரிடுவதை தடுக்குமாறு ஆயிஷாவை கேட்டுக் கொள்கிறார். ஆனால் அலியின் படையில் இருந்து வந்த ஒரு அம்பினால் அவர் உயிர் பறிக்கப்படுகிறது. அலியின் படை ஆயிஷாவின் ஒட்டக இருக்கையை உடைத்தெறிய தயாராகுகிறது. ஆயிஷாவை காக்க வந்த புரட்சிப் படை வீரர்கள் அவரின் ஒட்டகத்தை சூழ்ந்து நிற்க, அவர்க‌ளின் தலைகளை வாள்களால் துண்டாடுகின்றனர் அலியின் வீரர்கள். ஆயிஷா அமர்ந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட, கீழே விழுகிறார் ஆயிஷா. அவர் அலியின் படையால் கைப்பற்றப்படுகிறார். ஆயிஷாவை மன்னிக்கும் அலி, அவரை தன் தம்பி அபி பக்கர் மூலமாக மெதினாவுக்கு அனுப்பி வைக்கிறார். போர் புரியாமல் சமாதானமாகி மெதினாவுக்கு திரும்பிய மற்றொரு தளபதி ஜுபைரும் வழியில் ஒரு வீரனால் கொல்லப்படுகிறார்.

மெதினாவை அடையும் ஆயிஷா அதன் பின் அரசாங்க விஷயங்களில் தலையிடுவதை நிறுத்தி விடுகிறார். ஆனால் ஒட்டகப் போருக்கு காரணமான மர்வானை மட்டும் அவர் மன்னிக்கவில்லை. நடந்து முடிந்த போர் முஸ்லீம்களை இனிமேல் சேரவே முடியாது என்கிற அளவிற்கு உடைத்து போடுகின்றது. அது முஸ்லீம் சரித்திரத்தையே மாற்றுகிறது.



-- Edited by Admin on Wednesday 10th of May 2017 06:34:45 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 16

– Englightened Master

 

12193768_847033628751411_192356523897175



அதன் பின் அலிக்கும், சிரியாவின் கவர்னராக இருந்த முவையாவுக்கும் பெரும் பிண‌க்கம் ஏற்பட்டது. இருவர் இடையே ஒரு கட்டத்தில் "சிஃபின்" எனும் இடத்தில் போர் மூண்டது (Battle of sifin). பல முஸ்லீம்களை அந்த‌ கொடூரமான போர் பலி வாங்கியது. இந்த போருக்கு பின் சமாதானத்திற்கு அலியும், முவையாவும் சம்மதித்தனர் அந்த சமாதானத்தை "குரா" நாடோடிகள் விரும்பவில்லை. அவர்கள் அலியிடம் இருந்து பிரிந்து "கர்ஜைட்கள்" எனும் பெயரில் ஒருங்கினைந்தார்கள். சில காலத்திற்கு பிறகு குஃபாவில் தொழுகை செய்துக் கொண்டிருந்த அலியை கர்ஜைடினர் கொன்றார்கள்.

அலியின் மரணத்திற்கு பின் முவையாவின் தலைமையில் ஏற்பட்ட "உத்மான் கலிஃபா" இரண்டாம் பகுதி கலீஃப் பரம்பரை எனக் கொள்ளப்படுகிறது. அதாவது முகம்மதுக்கு பின் முதல் கலீஃஃப் "ரசுதின் கலிஃபா" என அழைக்கப்படுகிறது. அதில் 1) அபு பக்கர் 2) உம்மர் 3) உத்மன் 4) அலி ஆகிய நால்வரும் இடம்பெறுகிறார்கள். அது முடிந்து விட்ட நிலையில், சிரியாவை தலைநகராக கொண்டு உத்மான் கலிஃபா, முவையாவின் தலைமையில் தொடங்கியது.. அதே வேளையில் அலியின் மகன் ஹசன் (Hasan ibn Ali) ஈராக்கின் குஃபாவை மையமாக கொண்டு ஆட்சி செய்தார். அவர் ஒரு தருனத்தில் முவையாவோடு சமாதான ஒப்பந்தமும் ஏற்படுத்தினார் அலியை முதல் "இமாமாக" கொண்ட ஆட்சி வழியை, ஷியாக்கள் "இமாம் பரம்பரை" என்று அழைத்தார்கள். அதன் பின் அலியின் இரு மகன்களான ஹசனும், ஹுசைனும் கொல்லப்பட்டது ஷியா மற்று சுன்னிகள் என முஸ்லீம் படைகளை பிரித்தது. ஹுசைன் கோரமாக கொல்லப்பட்டது இன்றள‌வும் "முகரம்" என்கிற பெயரில் ஷியாக்களால் நினைவு கூறப்படுகிறது.

ஹசனோடு சமாதான ஒப்பந்தத்திற்கு பின் பொது ஆண்டு 661ல் முவையா முறைப்படி கலிஃபாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பைஜான்டைன் பேரரசு நாகரீகத்தில் அரேபியர்களை விட மிக முன்னேறி இருந்ததால், அவர்களின் நிர்வாக அமைப்புகள்: மிக‌ சிறப்பாக வடிவமைக்கப் பட்டு இருந்தன. பைஜான்டைன் பேரரசின் கீழ் இருந்த சிரியாவை, முஸ்லீம் படை கைப்பற்றிய பின் முவையா அதன் நிர்வாகிகளையும், நிர்வாக அமைப்பையும் மாற்றாமல் வைத்திருந்தார். "காகஸ், பாரதத்தின் சிந்து பிரதேசம், மக்ரப் (Maghreb) மற்றும் இபீரியன் தீபகர்பம் என அது பறந்து விரிந்தது". உலக சரித்திரத்தில் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக அது விளங்கியது. கிறிஸ்துவ "பைஜான்டைன்" பேரரசோடு அது பல யுத்தங்களை புரிந்தது. சிரியாவை மையமாக கொண்டு உமயத் பேரரசு இருந்ததால், சிரியாவில் இருந்த பல கிறிஸ்துவர்கள் மீது அது மிதமான கொள்கையையே கொண்டிருந்தது. பல முக்கிய பதவிகளில் கிறிஸ்துவர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் முவையாவின் மனைவி மைசம் (Maysum) ஒரு "ஜெகோபைட் கிறிஸ்துவராக" இருந்ததால் சிரியாவில் இருந்த பல ஜெகோபைட் கிறிஸ்துவர்களின் ஆதரவை அது பெற்றிருந்தது. முவையா போரில் பல புரட்சிகளை செய்தார். இரும்பால் ஆன இயந்திரங்கள் உதவியுடன் கற்களை வீச வைக்கும் தொழில்நுட்பத்துடன் அவர் போர் புரிந்தது குறிப்பிடத் தக்கது.

முவாயத் கலீஃபைட் 661 முதல் 750 வரை ஆட்சி செய்தது. அதன் பின்னர் முகம்மதின் மாமாவின் வழி வந்த "அபாஸித் கலீஃபைட்" (Abbasid Caliphate) ஆட்சியை கைப்பற்றியது. அது பொது ஆண்டு 750 முதல் 1258 வரை ஆட்சி செய்தது. அபாஸித் கலீஃபைட் அனைத்து முஸ்லீம் நாடுகளையும் தன் வசம் கொண்டிருக்கவில்லை. அலியின் வழி வந்த ஷியாக்கள், அலியின் மனைவியும், முகம்மதின் மகளுமான ஃபாத்திமா பெயரில் "ஃபாதிமித் கலீஃபைட்" (Fatimid Caliphate) எனும் பேரரசை எகிப்தின் நகரமான கெய்ரோவை தலைநகராக கொண்டு அமைத்தார்கள். இந்த பேரரசு வட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் ஆட்சி செய்தது. இது தவிர ஆங்காங்கே பல குறு நில முஸ்லீம் சுல்தான்களும் உருவானார்கள்.

முகம்மதால் அவர்க‌ளால் தொடங்கப்பட்ட முஸ்லீம் படை இப்படி பல்வேறு வகையில் உடைந்தும், சிதைந்தும், உருமாறியும் பல நாடுகளை அடைந்தன. முஸ்லீம் படையில் இருந்த பல கூலிப்படைகளும், அடிமைகளும், இஸ்லாமிய ஜிகாத்தையும், குரானிய கோட்பாடுகளையும் தங்களின் சொந்த வழிமுறைகளில் கையாளத் தொடங்கினார்கள். விளைவு மிக பயங்கரமாக இருந்தது. குறிப்பாக அது இந்தியாவை வரலாறு காணாத வகையில் பாதித்தது. அதன் ஒரு தொடக்கம்தான் "முகம்மது பின் காசிம்" என்பவன் இந்தியாவின் சிந்து பிரதேசத்தை கைப்பற்றிய‌து

இந்த பதிவோடு இந்த தொடரின் அரேபிய பகுதி முடிந்தது. இனி அடுத்ததாக இந்திய பகுதி தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 17

– Englightened Master

12193712_848470585274382_646086303612703
 
ஏழாம் நூற்றாண்டில் இருந்து நாம் மீண்டும் கால சக்கரத்தில் அமர்ந்து நிகழ் காலம் வருவோம். தற்போது இந்தியாவில் எப்படிப்பட்ட மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது ? கோடிக்கணக்கான இந்துக்கள் சிந்திய ரத்தத்தில் முளைத்த இந்த தேசத்தில் இன்று நாம் படிக்கும் சரித்திரம்தான் என்ன ? உண்மையான வரலாற்றை பதிப்பதற்கு கூட ஊடகங்கள் தயாராக இல்லையே ? ஏன் இந்த நிலை ?

ஏனென்றால் உண்மை வரலாற்றை படித்துவிட்டால் பாரதீயர்கள் (அனைத்து மதத்தவர்களும்) தங்கள் ரத்த சரித்திரத்தை அறிந்து கொள்வார்கள். தங்கள் மூதாதையர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க கொல்லப்பட்டதையும், அச்ச உணர்வின் உச்சத்தில் மதமாற்றப்பட்டதையும் உணர்வார்கள். அந்த விழிப்புணர்வு இந்த தேசத்தின் பெரும்பாலான இந்துக்களை ஒன்று படுத்தி விடும். அந்த விழிப்புணர்வு ஒரு பெரும் இந்து எழுச்சிக்கு வழிவகுத்துவிடும். விளைவு அந்நிய சக்திகளால் நம்மை ஆளுமை செலுத்தி விட இயலாது.

ரத்தத்தில் முளைத்த இந்தியா எனும் தேசம் பிறப்பதற்கு முன் அதை ஆட்சி செய்து வந்த பிரிட்டீஷ் ஏகாதிபத்யம் இதை நன்கு அறிந்திருந்தது. இந்துக்கள் மத்தியில் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தன. பல ஆயிரம் சாதிகள், பல மொழிகள், பல பழக்க வழக்கங்கள், பலவிதமான சடங்குகள் என பலவும் இருந்தன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், மிக உயர்ந்த அறிவு செழுமையும், ஈடு இனையற்ற கலாச்சார தொன்மையும் அவர்களிடம் இருந்தது. அனைவரையும் ஒன்றினைக்கும் ஒப்பற்ற உந்து சக்தியாக அவர்களின் தர்மம் இருந்தது. இதனால் எதிர்காலத்தில் பாரதத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கக் கூடும், அதனால் பாரதம் எதிர்காலத்தில் உலகளாவிய் ஒரு ஆளுமையை செலுத்தக் கூடும் என அவர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பிரிட்டீஷ் அரசாங்கம் அகண்ட பாரதத்தை மதரீதியாக பிளக்க துனை நின்ற‌து. மீதம் இருந்த இந்தியா எனும் பிரதேசத்தை ஒரு போலியான சரித்திர பேழைக்குள் அது அடைத்து வைத்தது.

சரித்திரமே ஒரு தேசத்தின் அடையாளம், அளவுகோல், அங்கீகாரம். இதை உணர்ந்த‌ பிரிட்டீஷ் ஏகாதிபத்யம் இந்தியாவின் சரித்திரத்தை மறைத்தது, திரித்தது. அது செய்த கீழ்தரமான இந்த தந்திரத்தை சுதந்திரத்திற்கு பின் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்தார்கள். கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிடுகையில் பிரிட்டீஷார் எவ்வளவோ மேல் என்றே எண்ண தோன்றுகிறது. அறிவுஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மேதைகள் என பல முகமூடிகளில் முளைத்த இந்த பயங்கரவாத கம்யூனிஸ கும்பல், இந்துக்களை பலவிதங்களில் பிரித்தும், நம் சரித்திரத்தை பல விதங்களில் திரித்தும் சித்தரித்தனர்.

இஸ்லாமிய கொள்ளையர்களும், கொடுங்கோலர்களும், மதத்தின் பெயரால் வன்முறை புரியவில்லை, மாறாக அவர்கள் துருக்கிய காட்டுமிராண்டிகள், நாடோடிகள் என முஸ்லீம்களின் அராஜகங்களை அவை அழகாக திரையிட்டு மூடின. சுதந்திரத்திற்கு பின் போலி மதசார்பற்ற நிலையை நேருவும் அவரின் காங்கிரஸும் முன்நிறுத்தியதால், செக்யூலரிஸம் என்கிற பெயரில் இந்த கம்யூனிஸ முற்போக்கு எழுத்தாளர்கள் உமிழ்ந்த சரித்திரம் பெரிதும் போற்றப்பட்டது. உண்மை சரித்திரத்தை எழுதுவது மதவெறியை தூண்டுவது என்று கருதப்பட்டது. போலி சரித்திரத்தை எழுதினால் அது முற்போக்கு என சொல்லப்பட்டது. இந்துக்களுக்கு மத்தியில் உள்ள பிரச்னைகளையும் பிரிவினைகளையும் மிகைப்படுத்தி எழுதுவதில் மட்டுமே பல எழுத்தாளர்களும் சத்திய சீலர்களாக இருந்தார்கள்.

எது உண்மை எது பொய் என்று அறிய, நாம் மீண்டும் எட்டாம் நூற்றாண்டை நோக்கி பயனிப்போம். அகண்ட பாரதத்தின் மக்ரன், மேற்கு பஞ்சாப், பிரம்மநாபாத், முல்டன் போன்ற சிந்து பிரதேசங்களில் நிலவிய சூழ்நிலை என்ன ? முகமது பின் காசிம் படை எடுத்து வந்த நிலையில், பாரதம் எப்படி இருந்தது ? எனப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 18

– Englightened Master

 

12208402_849824965138944_323657330964165


எட்டாம் நூற்றாண்டின் உமாயத் பேரரசின் கலீஃபாக, "வலீத் பின் அப்துல் மலீக்" ( Walid Bin Abdul Malik) இருந்தார். முஸ்லீம் படையின் தாக்குதலில் இருந்து சில‌ புரட்சி படையினர் தப்பித்து பாரதத்தின் சிந்து பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இது உமாயத் பேரரசின் பார்வையை சிந்து பிரதேசம் நோக்கி திருப்பியது. (முஸ்லீம் படையின் கப்பல்கள் சிந்து பிரதேசத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகவும், அதனால் அதை தடுக்க படை அனுப்பியதாகவும் பாகிஸ்தானிய சரித்திரம் கூறுகிறது. கடற் கொள்ளையர்கள் சிலர் முஸ்லீம் பெண்களை கைது செய்ததாகவும், அவர்களை மீட்க‌ உமாயத் கவர்னர் படை அனுப்பியதாகவும் மேலும் சில பாகிஸ்தானிய/முஸ்லீம் சரித்திரங்கள் கூறுகின்றன)

சிந்து பிரதேசத்தை அச்சமயம் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட "புஷ்கரண பிராமண" வம்சத்தை சேர்ந்த அரசனான "ராஜா தஹீர் சென்" ஆண்டு வந்தார். முஸ்லீம் படைகள் கைபர் கணவாய் வழியாக வந்து சிந்து பிரதேசத்தை பல முறை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. முதலில் "உபைதுல்லா பின் பின்ஹான்" என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்புகிறார் வலீத். அது சிந்து ராஜா தஹீரால் விரட்டி அடிக்கப்ப‌டுகிறது. மேலும் ஒரு முயற்சியும் ராஜா தஹீரின் வீரமிக்க படையால் தோல்வியை தழுவுகிறது. இறுதியில் உமயத் பேரரசின் டெமாஸ்கஸ் (சிரியா) கவர்னராக இருந்த "ஹஜாஜ் பின் யூசஃப்" தன்னுடைய உறவினனான "முகம்மது பின் காசிம்" தலைமையில் ஆறாயிரம் குதிரை வீரர்கள் மற்றும் பல ஆயிரம் ஒட்டகங்களை கொண்ட ஒரு பெரும் படையை சிந்து பிரதேசத்தை நோக்கி அனுப்பி வைக்கிறான்.

பதினேழு வயதே ஆன காசிம் மிகச்சிறந்த வீரன், மற்றும் மதிநுட்பத்தோடு போரிடக் கூடியவன். ஏற்கனவே பாரசீகர்களோடு பல போர்களை திறம்பட நடத்தியவன். அவன் இம்முறை தாக்குதலை தெளிவாக திட்டமிட்டு பலுசிஸ்தான் வழியாக செல்லுகிறான். முஸ்லீம் படை 4ம் நூற்றாண்டில் சீனாவில் பயன்படுத்தப்பட்ட பெரிய கற்களை எறிய கூடிய இயந்திரங்களை தங்கள் வசம் கொண்டிருந்தது. அந்த இயந்திரங்களுக்கு சில மாறுதல்களை செய்து அவற்றின் மூலம் கோட்டைகளை தகர்க்க கூடிய‌ திறனையும் வளர்த்துக் கொண்டிருந்தது. பாரசீகர்கள் மற்றும் பைஜான்டைன் பேரரசுடன் மோதுகையில் இந்த இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் மிஞ்சனிக் (minjanique) எனும் இயந்திரம். நூறு கிலோ எடை கொண்ட கற்களை ஆயிரம் அடிக்கு வீசும் அளவிற்கு திறன் கொண்ட இந்த இயந்திரத்தை தன் வசம் கொண்டிருந்தான் காசிம்.

சிந்தி மொழியில் காஜி இஸ்மாயில் என்றவரால் இயற்றப்பட்ட "சச் நாமா" (Chach Nama), மற்றும் அரபியில் தரீக் இ சிந்த் என மொழிபெயர்க்கப்ப‌ட்ட சரித்திர புத்தகங்கள் காசிமின் படையெடுப்பு குறித்து விரிவாக கூறுகின்றன.

புறநகர் பகுதிகளை முதலில் கைப்பற்றும் முகம்மது பின் காசிம் அங்குள்ள ஜாட், மெட்ஸ் மற்றும் பூட்டோ (Jat, Meds and Bhutto) பழங்குடியினரிடம் ஜிகாதிய யுக்திகளை பயன்படுத்துகிறான். முஸ்லீம் படை அரேபியா மற்றும் பிற பகுதிகளில் செய்தது போல், "மதம் மாறுங்கள் அல்லது மடியுங்கள்" என்பதே முன் நிறுத்தப் படுகிறது. மேலும் தன் எதிரிகளின் ஒரு சாராரிடம் பொன்னும் பொருளும், பல சலுகைகளும் தருவதாக கூறி ஒப்பந்தம் பேசி ஒவ்வொரு பகுதியாக‌ தன் ஆளுமைக்கு கொண்டு வருகிறான். இப்படி கிட்டத்தட்ட 60 சதவீதம், ஒப்பந்தங்கள் மூலமாகவே சிந்து பகுதிகள் பலவற்றை கைப்பற்றி தன் படையின் பலத்தை வலுவாக்குகிறான் முகம்மது பின் காசிம்.

அடுத்து பஞ்சகோர் என்கிற நகரத்தையும் அதன் பின் அர்மபெல் நகரத்தையும் கைப்பற்றிய காசிம், மிக முக்கியம் வாய்ந்த‌ தெபல் (Debal) துறைமுகத்தை தாக்குகிறான். ஒரு மாதப் போருக்கு பின் முகம்மது பின் காசிமின் படை தெபல் நகரத்தை கைப்பற்றுகிறது. சிந்து பகுதியை சேர்ந்த படை வீரர்கள் மிக கொடுமையான முறையில் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்படுகிறார்கள். தெபலில் உள்ள பழமையான கோவில் "முகம்மது நபி" அவர்கள் ஆறாம் நூற்றாண்டில் பாகன் கோவில்களை மெக்காவில் அழித்தது போல் அவர் வழியில் சுக்குநூறாக்கப்படுகிறது. கோவிலின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டு படை வீரர்களுக்கு இடையே பங்கு போடப்படுகின்றன. அழிக்கப்பட்ட கோவிலின் இடத்தில் பெரும் மசூதிகள் கட்டப்படுகிறது. இன்றைய பாகிஸ்தானின், கராச்சி எனும் நகரம் அங்கு உருபெறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 19

– Englightened Master

12065969_850252841762823_477045192354929
 
தெபல் துறைமுகம் மற்றும் நகரத்தை கைப்பற்றிய பின் முகம்மது பின் காசிம் "நய்ருன் காட்" (Nayrun Kot -பாகிஸ்தானில் இருக்கும் இன்றைய ஹைதராபாத்) ஐ தாக்கினான். அங்கிருந்த உள்ளூர் மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவே இருந்தார்கள், அவ்வூரின் அரசர் "நைரன்" (King Nayrun) எளிதில் வீழ்த்தப்படுகிறார். அடுத்து "கஞ்சோ டேக்கர்" (Ganjo Takker ridge) எனும் மலை தொடர்களில் உள்ள வணிகர்களிடம் இருந்து வியாபார பொருட்களை கொள்ளை அடித்த காசிம், பல பழமையான கோவில்களை கொள்ளையடித்து, அவற்றை நபி வழியில் அழித்து மசூதிகளாக மாற்றினான். நய்ரூன் காட் முழுவதுமாக அழிக்கப்பட்டது. அதன் பின் சாதுசன் (Sadusan) எனும் இடத்தை கைப்பற்றினான் காசிம். அங்கும் பழமையான கோவில்கள் நபி வழியில் இடிக்கப்பட்டன‌, அந்த இடிபாடு பொருட்களை வைத்து மசூதிகள் கட்டப்பட்டன. பிடிபட்ட பெண்களும், மற்றவர்களும் அடிமையாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியோடு, உமயத் பேரரசின் கலீஃப் "ஹஜாஜுக்கு" அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் பின் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி சென்று, "பாட்டில் ஆஃப் ஜியார்" (Battle of jior) எனும் போரில் ராஜா தஹீரோடு போரில் ஈடுபடுகிறான் காசிம். ராஜா தஹீர் வீரத்துடன் போர்புரிகிறார். ஆனால் வலிமை மிக்க காசிமின் படையை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. போரில் அவர் வீர மரணம் அடைகிறார். அவரின் மனைவி அவருக்கு பின் படையை தலைமை தாங்கி போரிடுகிறார். தோல்வி உறுதி எனும் நிலையில் அவர் வேறு வழியில்லாமல் தன் பணிப்பெண்களோடு சேர்ந்து நெருப்பில் தன்னை மாய்த்து கொள்கிறார். கைப்பற்றப்பட்டால், இஸ்லாமிய சட்டப்படி அடிமையாக்கப்பட்டு விற்கப்படுவோம் என்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட ராஜா தஹீரின் 6000 சிந்து வீரர்கள் மிக கொடுமையான முறையில் கொல்லப்படுகிறார்கள். இன்றைய ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் படுகொலைகளை இது நினைவூட்டுகிறது. 

அவரின் ஒரே மகன் "ராஜா ஜெய் சிங்க்", "பாட்டில் ஆஃப் ப்ரஹ்னாபாத்" (Battle of Brahnabad) எனும் போரில், கடுமையாக போர் புரிந்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டு தப்பித்து ஓடுகிறான். "சிஸ்டன்", "பஹ்ராஜ்", "கட்ச்", "அரோர்", "கைரோஜ்" மற்றும் "ஜியார்" என அனைத்து பலுச்சிஸ்தான் மற்றும் சிந்து பகுதி நகரங்களும் உமாயத் பேரரசை சேர்ந்த முஸ்லீம் படையின் வசம் வீழ்கிறது. 

உயிர் பிழைத்திருக்கும் ஒவ்வொரு முஸ்லீம் அல்லாதவரும் ஜிஸ்யா எனப்படும் வரியை கட்ட நிர்பந்திக்க படுகிறார்கள். மிகவும் கேவலப்படுத்தப் படுகிறார்கள். ஒவ்வொரு முஸ்லீம் படை வீரனையும் உள்ளூர் மக்கள் மூன்று பகல் மற்றும் இரவுகள் உணவு உறைவிடம் தந்து உபசரித்தாக வேண்டும் என்று உத்தரவு இடப்படுகிறது. கட்டாய மதமாற்றம் ஊர் முழுவதும் நடை பெறுகிறது, மறுப்பவர்கள் மிகுந்த கிழ்தரமாக நடத்தப்ப‌டுகிறார்கள். முகம்மது பின் காசிமின் ஆட்சி, சரித்திர ஆய்வாளர் "யு டி தாகூர்" (U.T. Thakkur) அவர்களால் "சிந்து பகுதியின் இருண்ட சரித்திரம்" என்று அழைக்கப்படுகிறது. இனப்படுகொலை, பல பழமையான கோவில்கள் தகர்ப்பு, கூட்டு வண்புணர்வு என பல கொடுமைகள் முஸ்லீம் படையினால் அங்கு அரங்கேறுகிறியதுதான் அதற்கு காரணம். 

அடுத்து காசிம் அங்கிருந்து வடக்கில் உள்ள மேற்கு பஞ்சாபை நோக்கி படை எடுக்கிறான். "முல்தான்" நகரம் தான் அவனின் இலக்கு. அதை ராஜா கவுர் சிங்க் (Gour Singh) ஆள்கிறார். அவரிடம் மிகச்சிறந்த யானைப்படையும், காலாட்படையும் இருந்தன. 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 20

– Englightened Master

 

12187731_850635448391229_144297182039386

"மூலஸ்தானம்" என்று சமஸ்க்ருதத்தில் அழைக்கப்பட்ட அந்த நகரம் மத்திய ஆசியாவுக்கும், தெற்காசியாவுக்கும் நடுவே அமைந்திருந்ததால் மிக‌ முக்கியத்துவம் பெற்றிருந்தது. பண்டைய பாரதத்தின் மௌரிய‌ பேரரசாலும் அதன் பின் குப்த பேரரசாலும் ஆளப்பட்டு வந்த புராதன நகரம் அது. இந்து அரசர்களும், பௌத்த அரசர்களும் அங்கு ஆட்சி செய்து வந்தனர். அதன் பழமையான‌ கோவில்களுக்கு அரசர்களும், வணிகர்களும், குடிமக்களும் பெரும் செல்வங்களை பரம்பரை பரம்ப்ரையாக வழங்கி வந்தனர். அதனால் செல்வ செழிப்புடன் அது தங்க நகரம் என்று அது அழைக்கப்பட்டது. "சூரஜ் மந்திர்" என்று அழைக்கப்பட்ட புகழ்பட்ட சூரியனார் கோவில் அங்கு இருந்தது. அதற்குள் 6000 பேர் தங்கக்கூடிய வகையில் அது மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அது போலவே சூரிய குளம் (Suraj kunt) மற்றும் பிரகலாதபுரி என்கிற‌ விஷ்னுவின் நரசிம்மர் கோவிலும் அங்கிருந்தது.

மூலஸ்தானத்தை (இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரம்) பொது ஆண்டு 664ல் முதல் முதலாக முஸ்லீம் படையை சேர்ந்த "அல் மொஹலிப் இம்ன் அப் சஃப்ரா" (Al Muhallab ibn Abi Suffrah) பாரசீகத்திலிருந்து படை எடுத்து வந்து தாக்கினான். அவன், மூலஸ்தானம் வரை நுழைந்து, பெரும் கொள்ளை அடித்து தன்னுடைய கொரச்சான் (Khorassan) தலைநகரத்திற்கு திரும்புகிறான். ஆயிரக்கணக்கில் தன்னோடு போர் கைதிகளை அடிமைகளாக்கி பிடித்து சென்று அவர்களை மதம் மாற்றவும் செய்கிறான். அதே கால கட்டத்தில் "அப்துல் ரஹ்மான் பின் ஷிமுர்" (Abdul Ruhman Bin Shimur) எனும் மற்றொரு அரபு அமீர் "மெர்வ்" (Merv) நகரத்திலிருந்து படையெடுத்து வந்து தாக்கினான். அப்துல் ரஹ்மான் மூலஸ்தானம் வரை படையெடுத்து வந்து அங்கிருந்த 12000க்கு மேற்பட்டவர்களை மதமாற்றி சென்றதாக சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை இரண்டுமே ஒரு குறுகிய கால தாக்குதலாகவே இருந்தன.

அதன் பின் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்துதான் தற்போது முகம்மது பின் காசிம் மூலஸ்தானத்தை (முல்தான்) தாக்க படை எடுத்து வருகிறான். ஏற்கனவே சிந்து பகுதிகளை கைப்பற்றிவிட்ட காசிம் முல்தானை அடைந்தது அங்குள்ள பியாஸ் பகுதியை கடந்து முல்தானுக்குள் நுழைகிறான்.

ராஜா கௌரின் யானை படைகள் மிக சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும், காசிம்மின் படையை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. ராஜா "கௌர் தன் முல்டான் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள, காசிம் தன் மிஞ்சனாக் இயந்திரங்கள் உதவியுடன் கோட்டையை தகர்கிறான். ராஜா கௌர் வேறு வழியில்லாம் சரனடைகிறார். முஸ்லீம் படைகளின் சூரையாடலையும், மக்க‌ளை அடிமைகளாக பிடித்து செல்லும் பழக்கத்தையும் அறிந்த நாட்டு மக்கள், ஊர் புறங்களுக்கு சென்று ஒளிந்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் காசிமின் படையால் சுற்றி வளைக்கப் படுகிறார்கள்.

காசிம் அங்குள்ள நீர் ஓடைகளையும், நீர் வழித் தடங்களையும், வீரர்களை வைத்து திசை மாற்றியும், முடக்கியும் ஊருக்குள் போகாத வண்ணம் வற்ற வைக்கிறான். மக்கள் தண்ணீர் இல்லாமல் தாகத்தால் வேறு வழி இல்லாமல் சரணடைகிறார்கள், சிலர் பிடிபடுகிறார்கள். அவர்களில் போர் புரிய கூடியவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள், கோவில் அந்தனர்கள், அறங்காவலர்கள், உட்பட 6000 பேர் கட்டி இழுத்து செல்லப்படுகிறார்கள். பெண்கள் முஸ்லீம் படை வீரர்களின் காமப்பசியை தீர்க்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். கோவில் கருவூலங்களில் இருந்த பதினைந்து அடிக்கு பண்ணிரெண்டு அடி நீளமுள்ள பெட்டிகளில் இருந்து தங்க நகைகளையும், தங்கக் கட்டிகளையும் எடுத்து செல்கிறார்கள். பொது ஆண்டு 713ல் முல்தான் முழுவதுமாக முஸ்லீம் படைகளால் இப்படி வெல்லபப்ட்டு உமாயத் பேரரசுடன் இனைக்கப்ப‌டுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 21

– Englightened Master

12119003_853535311434576_778785432693024
 
 
இத்தனை கொடுஞ் செயல்களை புரிந்த முகம்மது பின் காசிம் நன்றாக வாழ்ந்தானா ? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கொடுங்கோலன் முகம்மது பின் காசிம் எப்படி இறந்தான் ?

முகம்மது பின் காசிமிற்கு பின்புலமாய் இருந்தவன் சிரியாவின் கவர்னராக இருந்த ஹஜாஜ் என்று பார்த்தோம். ஹஜாஜ் அப்போதைய கலீஃபாக இருந்த வலீத்தின் (Al-Walid ibn Abd al-Malik) விசுவாசத்தை பெற்றிருந்தான். அல் வலீத் கலீஃபாக இருந்த அந்த கால கட்டத்தில்தான் உமாயத் பேரரசின் பகுதிகள் மிகப்பெரிய அளவில் விரிந்து பரவியது. வட‌ ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் முதல் பாரதத்தின் சிந்து பகுதி வரை அது விரிந்து இருந்தது.

ஆனால் சிந்து மக்களின் சாபமோ என்னவோ கலீஃப் வலீத் துர்மரணம் அடைந்தார். கலீஃப் வலீத் இறந்தபின் அவரின் சகோதரர் "சுலைமான்" (Sulayman ibn Abd al-Malik) கலீஃபாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெமாஸ்கஸ் கவர்னர் ஹஜாஜை சுத்தமாக பிடிக்காது. ஹஜாஜை சுலைமான் கொல்ல வேண்டும் என நினைத்திருந்த வேளையில் அவன் அதற்கு முன்பே இறந்துவிடுகிறான். இதனால் ஹஜாஜிற்கு பதில் அவ‌ன் உறவினர்களை பழிதீர்க்க யொசித்தார் சுலைமான். ஹஜாஜின் உறவினனான‌ காசிமை, சிந்து பிரதேசத்தில் இருந்து திருப்பி எடுத்து ஈராக்குக்கு அனுப்பி வைத்தார். அப்போது ஈராக்கின் புதிய கவர்னரான பதவியேற்ற "சாலே பின் அப்துல் ரஹ்மானின்" சகோதரனை ஹஜாஜ் கொன்றிருந்த படியால் அவன் மீது வெறி கொண்டிருந்தான் "சாலே". ஹஜாஜிற்கு பதில் அவன் உறவினனான முகம்மது பின் காசிம்மை சிறையில் அடைத்து, கண்களை தோண்டி துன்புறுத்தி கொன்றதாக சொல்கிறார்கள் சரித்திர ஆய்வாலர்கள்.

ஆனால் "சாசாநாமா" புத்தகத்தின் பக்கம் 242-243 முகம்மது பின் காசிமின் மரணத்தை வேறு விதத்தில் குறிப்பிடுகிறது.

சிந்து ராஜா தஹீர் கொல்லப்பட்டதும், முஸ்லீம் படையின் வழக்கப்படி அவரின் இரண்டு பெண்களும் அடிமைகளாக்கப்பட்டு மற்ற பெண்களுடன் உமயத் பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அக்தர் பலூச் எனும் பாகிஸ்தானிய (டான் பத்திரிகை) எழுத்தாளர் இதை விவரிக்கிறார். ராஜா தஹீரின் இரண்டு பெண்களும் வலீத் பின் அப்துல் மலீக்கிடம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். சூர்யதேவி, பிரமிளாதேவி என்ற அந்த இரண்டு பெண்களும் மிக அழகாக இருந்தனர். அவர்களின் அழகில் மயங்கிய கலீஃப், அவர்களை அடைவதற்கு ஆசைப்பட்டார். எப்படியாவது அவர்களை அடைந்து விட வேண்டும் என்று அவர்களை நெருங்குகையில் ஒரு பெண் கூறினாள். "ஓ அரசரே நீங்கள் வாழ்க, நான் உங்களின் அடிமை, ஆனால் நான் உங்கள் படுக்கை அறையை அலங்கரிக்க அருகதை அற்றவள், ஏனென்றால் எங்களை மூன்று நாட்கள் வைத்து அனுபவித்து விட்டான். இது உங்கள் வழக்கமாக ஒருவேளை இருக்கலாம். ஆனால் அரசர்களுக்கு இது பொருந்தாது" என்றாள்.

இதை கேட்ட கலீஃப் மிகுந்த ஆத்திரம் அடைந்து, தன்னுடைய சொந்த கைகளினாலேயே எழுதுகோல் எடுத்து, மை தொட்டு எழுதி, முகம்மது பின் காசிம்மை உடனுக்குடன் எங்கிருந்தாலும் பச்சை தோலினால் கட்டி இழுத்து வருமாறு ஆனையிடுகிறார். இப்படி பதப்படுத்தப்படாத எருது தோலில் கட்டி இழுத்து வரப்பட்ட காசிம் வழியிலேயே முச்சு தினறி துடிதுடித்து இறந்து விடுகிறான். "காசிம் எங்களை தொடவில்லை, ஆனால் எங்கள் சிந்து பிரதேசத்தை அழித்து நாசப்படுத்தி, எங்கள் மக்களை கொன்று குவித்து, எங்கள் அரசை கைப்பற்றி, இளவரசிகளான எங்களை அடிமைப்படுத்தி சீரழித்த குற்றத்திற்காக இவ்வாறு பொய் சொல்லி அவனை பழி வாங்கினோம்" என‌ அரசரின் மகள்கள் பின்பு ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த இரண்டாவது கதை நம்புவதற்கு கடினமானதாகவே உள்ளது. முஸ்லீம் படைகளுக்குள் இருக்கும் ரத்த வெறி பிடித்த உட்சண்டையை மறைப்பதற்காகவும், முகம்மது பின் காசிம்மின் மீது ஒரு பரிதாபத்தை வரவழைக்கவும் இப்படி ஒரு கதை புனைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ, பல ஆயிரம் இந்துக்களையும், பௌத்தர்களையும் கொன்றொழித்து பலரை மதம் மாற்றி, பல இந்து பெண்களை கட்டாயமாக வன்புணர்வு செய்து முஸ்லீம் படைகளுக்கு பல வாரிசுகளை உண்டாக்கிய முகம்மது பின் காசிம் சிறு வயதிலேயே கொடூரமாக கொல்லப்பட்டது மட்டும் உண்மை. ஆனால் அவனோடு பாரதத்தின் மீதான கோர தாண்டவம் முடியவில்லை. பாரதத்தின் ரத்த சரித்திரத்தில் அது ஒரு ஆரம்பமாகவே இருந்தது.. அதன் பின் சரித்திரத்தில் எங்குமே பார்க்க இயலாத வகையில் கொடூரங்களை புரிந்த "கஜனி முகம்மது" எனும் கொடுங்கோலன், பாரதத்தை அதன் பின் தாக்கினான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 22

– Englightened Master

12227058_856070861181021_192701719518579



முகம்மது பின் காசிமிற்கு பிறகு பல முஸ்லீம் படை எடுப்புகள் பாரதத்தின் மீது நடந்த‌து. ஆனால் சிந்து அரசர் தஹீரின் மகன் ஜெய் சிங் தன் படையை வலிமையாக்கி மீண்டும் "பிரம்மானந்தம்" நகரத்தை கைப்பற்றினார். இதனால் அரேபிய படையின் விரிவாக்கம் சிந்து நதியின் மேற்கு கரை வரை மட்டுமே தடுத்து வைக்கப்பட்டது.

அதன் பின் ஜுனைத் (Junaid b. Abd Al Rahman Al Marri) என்பவன் சிந்து பிரதேசத்தின் கவர்னராக உமாயத் பேரரசால் பொது ஆண்டு 723 ல் நியமிக்கப்பட்டான். அவன் ஜெய் சிங்கோடு போரிட்டு சிந்து மற்றும் தெற்கு பஞ்சாபை கைப்பற்றினான். அந்த போரில் ஜெய் சிங் வீர மரணம் அடைந்தார். காஷ்மீரின் காங்க்ரா பள்ளத்தாக்கை பொது ஆண்டு 724 ல் தாக்கி அவன் கைப்பற்றினான். தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய தற்போதைய இந்திய மாநிலங்களின் சில‌ பகுதிகளை தாக்கி, அவற்றை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முயன்றான். இவை பொது ஆண்டு 725 முதல் 743 வரை நடந்ததாக கூறப்பட்டாலும், இவற்றை குறித்த சரியான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை., அப்போதைய குர்ஜாரா (குஜராத்) அரசர் "சிலுகா" (Siluka), முஸ்லீம் படையை எதிர்த்து போரிட்டு ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூரின் வடக்கில் இருந்து விரட்டி அடித்தார். அது போலவே, உஜ்ஜயினில் நடந்த யுத்தத்தில் முதலாம் நாகபட்டர் முஸ்லீம் படைகளை கடுமையாக தாக்கி ஓட வைத்தார்.

இதன் பிறகு முஸ்லீம் படையின் "அல் ஹக்கம்" என்பவன் (Al Hakam b. Awana Al Kalbi) சிந்து பகுதிகளை மீண்டும் பொது ஆண்டு 733 ல் பிடித்ததாகவும், பாரதத்திற்குள் ஊடுறுவி பல அரசர்களை வென்றதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அல் ஹக்கம் 739ம் ஆண்டு டெக்கான் பகுதிகளை கைப்பற்ற நினைக்கையில், சாளுக்கிய சக்ரவர்த்தி இரண்டாம் விக்ரமாதித்தனின் ஆளுமையின் கீழ் இருந்த "அவனிஜனஷ்ரய புலிகேசி" எனும் தளபதி, அவர்களை ஓட ஒட தாக்கி ராஜஸ்தான் பாலைவனம் வரை விரட்டி அடித்தார். இதனால் முஸ்லீம் படையின் ஆளுமை ராஜஸ்தானின் தார் (Thar) பாலைவனப் பகுதியின் மேற்கு எல்லைக்கு அப்புறத்தில் நிறுத்தப்பட்டது.

இத்தருனத்தில் பொது ஆண்டு 750ல், மேற்கே உமாயத் பேரரசில் ஒரு பெரும் புரட்சி வெடித்தது. உமாயத் பேரரசு அரேபியர் அல்லாதவர்களை மிகவும் பாரபட்சமாக நடத்தியதால் அந்த புரட்சி வெடித்தது. ஆட்சியும் ஆளுமையும் மிகப்பெரும்பாலும் அரேபியர்கள் கைவசமே இருந்தது. பேரரசில் பெரும்பான்மையாக அரேபியர் அல்லாத புதியதாக முஸ்லீமாக மாற்றப்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அவர்கள் மிக கீழ்தரமாக நடத்தப்பட்டனர். உமாயத் அரசு படையிலோ, அதிகாரத்திலோ அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தரப்படவில்லை. அரபிய பெண்களை மனமுடிக்க அரபிய அல்லாத முஸ்லீம்கள் தடைவிதிக்கப் பட்டு இருந்தனர். அரபியர்கள் போல் உடை உடுத்த கூட தடுக்கப் பட்டிருந்தனர். மேலும் உமாயத் பேரரசின் கவர்னராக இருந்த அல் ஹஜாஜ், அன்றைய கிழக்கு ஈரானின் (பாரசீக பகுதி) மொழியாக இருந்த க்வரேஜ்மியன் (Khwarezmian) மொழியை முற்றிலுமாக அழித்தான். அம்மொழியை பேசுபவர்களையோ, எழுதுபவர்களையோ, உடனுக்குடன் கொல்லுமாரு அவன் உத்தரவிட்டு அதை அழித்தது, பலரின் வெறுப்பை பெற்றுத் தந்தது. மேலும் பாரசீகத்தை கைப்பற்றிய நிலையில் பல ஆயிரம் ஜொராஸ்ட்ரியர்களை (Zoroastrian) கொல்லப்பட்டு, அவர்களின் இலக்கன மற்றும் பாரம்பரிய நூல்க‌ள் அழிக்கப்பட்டன. இது அவர்களுக்குள் உமாயத் பேரரசு மீது பெரும் வெறுப்பை உருவாக்கி இருந்தது .

உமாயத் பேரரசின் அரேபிய ஆளுமையை எதிர்த்து முகம்மது நபியின் சிற்றப்பாவான "அப்பாஸ்" என்பவரின் வழி வந்த "அப்பாஸித் வம்சம்" போர் கொடி தூக்கியது. உமாயத் பேரரசை மிகவும் வெறுத்த ஷியாக்கள் இதை ஆதரித்தார்கள். மதம் மாறினாலும் தங்களை ஒதுக்கி வைத்திருந்த உமாயத் பேரரசை, அரபியர் அல்லாத‌ சுன்னி முஸ்லீம்க‌ளும் ஆதரித்தார்கள். மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என எல்லாவற்றையும் அழித்த சகிப்புத் தன்மை இல்லாத உமாயத் பேரசை வெறுத்த பலவிதமான மக்களும் அந்த புரட்சியை ஆதரித்தனர், இதனால் பொது ஆண்டு 740 முத‌ல் இரண்டு ஆண்டுகள் முஸ்லீம்களுக்குள் கடும் சண்டை நடந்தது. அபாஸித்துகள் மிகச் சிறந்த பிரச்சாரத்தை உமாயத் பேரரசிற்கு எதிராக மேற்கொண்டு பல்வேறு மக்களை ஒருங்கினைத்தனர். இப்படி பலவகையில் பலம் பெற்ற அபாசித்துகள், உமாயத் பேரரசை பல போர்களில் வீழ்த்தி, உமாயத் அரச பரம்பரையை சேர்ந்த ஒவ்வொருவரையும் கொன்றொழித்து பேரரசை கைப்பற்றினர். அபாசித் பேரரசு பொது ஆண்டு 750 ல் நிறுவப்பட்டது அது பொது ஆண்டு 1258 வரை நீடித்தது. முஸ்லீம்கள் மட்டும் இல்லாமல் பல மதங்களை சேர்ந்தவர்களும் அதன் நிர்வாகத்தில் பங்கு பெற்றனர்.

உமாயத் பேரரசு வீழ்ந்ததால் அதன் வசமிருந்த ஆப்கான், சிந்து பகுதிகள் அபாசித் பேரரசின் தாக்குதலுக்கு ஆளாகி அதன் வசம் சென்றது. அதன் பிறகு அரேபியர்களுக்கும், -அபாசித் படைகளுக்கும் இடையே இந்த பகுதிகள் பல்வேறு முறை கைமாறின.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 23

– Englightened Master

12243093_858009247653849_557677719656237

பொது ஆண்டு 871ல், இன்றைய ஆப்கானிய காபூலை பிடித்தான் கிழக்கு ஈரானை சேர்ந்த "சஃபார்" (Ya'qub bin Laith as-Saffar) "சஃபார்" என்றால் செப்பு கொல்லன் என பொருள்படும். ஒரு செப்பு கொல்ல‌னாக தொடங்கி போர் படைவீரனாக மாறி பல தேசங்களை பிடித்தான் அவன். அதில் ஈரான், தஜிகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பண்டைய பாரத‌ பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். அவனது அரச பரம்பரை "சஃபாரித் அரசு" (Saffarid Dynasty) என்று அழைக்கப்பட்டது. அதிக வருடங்கள் நீடிக்காத அந்த "சஃபாரித் அரசை" பொது ஆண்டு 913ல் "சமானித் அரச ப‌ரம்பரை" ( Samanid Dynasty) கைப்பற்றியது.

"இஸ்மாயில் சமானி" (Ismail Samani) என்பவனின் தலைமையில் வந்த அந்த சமானிய படை வெறும் 20000 வீரர்களை மட்டுமெ கொண்டிருந்தது. ஆனால் 70000 வீரர்களை கொண்ட வலிமை மிக்க "சஃபாரிய" படையை தோற்கடித்தது. இத்தனைக்கும் "சமானிய படைகள்" வசம் கேடயங்களோ, வாள் போன்ற ஆயுதங்களோ இல்லை. ஆனால் அல்லாவுக்காக போர் புரிகிறோம் என்கிற உத்வேகம் அவர்கள் மத்தியில் தோற்றுவிக்கப் பட்டு இருந்தது. அதுவே வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதைய "அபாசித் கலீஃபாக" இருந்த "அல்முதாயித்" (Al-Mu'tadid ) சஃபாரிய‌ர்களை அங்கீகரிக்காமல், சமானியர்களை அங்கீகரித்ததும் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் இஸ்மாயில் சமானின் மத்திய ஆசிய தாக்குதல்கள் அவனுக்கு வீரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

அதன் பின் சில ஆண்டுகளில் சமானித் அரசின் அமீராக இருந்த "அப்த் அல் மாலிக்" ( Abd al-Malik) இறந்துவிட, அவருக்கு அடுத்து யார் ஆள்வது என்பதில் சர்ச்சை கிளம்பியது இதை மேற்கே புதியதாக‌ முஸ்லீம்களாய் மதம் மாறி இருந்த‌ துருக்கிய மக்களால் உருவாக்கப்பட்ட "கர்லுக்ஸ் படை" (Karluks) நன்கு பயன்படுத்திக் கொண்டது. கர்லுக்ஸ் படை, "கரகனித் அரசு" (Kara-Khanid) என்று ஒரு அரசை உருவாக்கி, சமானிய பகுதிகள் மீது போர் தொடுத்து கைப்பற்றினர்.

இந்த வாரிசு பிரச்னையை பயன்படுத்திக் கொண்டு, சமானத் பேரரசின் அடிமை தளபதியாக இருந்த "அல்ஃப் டிகின்" (Alp Tigin) தன்னுடைய ஆளுமையின் கீழ் இருக்கக் கூடிய ஒருவனை அமீராக‌ ஆட்சியில் வைப்பதற்கு தீர்மானித்தான். ஆனால் அதை சமானித் அமைச்சர்கள் ஆதரிக்காமல், "மன்சூர்" ( Mansur I ) என்பவனை நியமித்தார்கள். புதிய அமீரால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அல்ப் டிகின் "இந்துகுஷ்" மலைப்பகுதியின் தெற்கே படை எடுத்து சென்றான். அங்கு உள்ள ஆப்கானிய பகுதியான கஜ்னாவை (Ghazna) பொது ஆண்டு 962ல், லாவிக் (Lawik dynasty) அரசிடம் இருந்து கைப்பற்றினான்.

சமானித் அரசின் கீழ் கஜ்னியின் கவர்னராக தன் மருமகன் "செபுக் டிகினை" (Sebük Tigin) அமர வைத்தான் அல்ஃப் டிகின் சமானித் அரசு வீழ்ச்சி பெற துவங்கியதும், கஜ்னாவை தலைநகராக கொண்ட பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுயாட்சியை அறிவித்தான் செபுக் டிகின். இதன் மூலம் கஜ்னவித் பேர‌ரசு ( Ghaznavid Empire) உதயமாகியது.

கஜ்னவித் அர‌சு துருக்கிய வம்சத்தை சேர்ந்தது என்றாலும், அது பாரசீக (ஈரான்-ஈராக்) கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்களையே கொண்டிருந்தது. ஆகையால் அதை சிலர் பாரசீக சாம்ராஜ்யம் என்றும் கூறுவார்கள். செபுக் டிகினின் மரண‌த்திற்கு பிறகு அவனின் மகன் "இஸ்மாயில்" சிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஆனால் முஸ்லீம்களின் சரித்திரத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வான‌ சகோதர யுத்தம் அங்கும் தொடங்கியது. இஸ்மாயிலை பொது ஆண்டு 998ல் "கஜ்னி போரில்" (the Battle of Ghazni) அவன் சகோதரன்"மஹ்முத் கஜினி" வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினான். ஆட்சியை கைப்பற்றியதும் மேற்கே துருக்கிய "கரகனித்" அரசோடு அவன் ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டு எல்லைகளை நிர்னயித்துக் கொண்டான். அதன் பின் சிந்து பகுதிக‌ள் மற்றும் முல்டான் பகுதிகளை அவன் கைப்பற்றினான்.

"கஜினி முகம்மது" என்று அழைக்கப்பட்ட அந்த கொடுங்கோலனின் பார்வை செல்வ செழிப்பு மிகுந்த பாரதத்தின் பகுதிகள் மீது திரும்பியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 25

 

12346551_868040386650735_527512690081651

முகம்மது கஜினி பாரதத்தை வருடம் தோறும் தாக்க சபதம் எடுத்துக் கொண்டதற்கு மிக முக்கியமாக சொல்லப்படுவது அவனின் ரத்தத்தில் ஊறி இருந்த மதவெறியே !! முகம்மது நபி அவர்கள் எப்படி முஸ்லீம் படையின் தொடக்கத்தில் அரேபியாவில் இருந்த பாகன் நம்பிக்கையாளர்களின் கோவில்களை தேடி தேடி தாக்கி அழித்தாரோ அவ்வாறே பாரதத்தில் உள்ள இந்து காஃபிர்களின் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோவில்களை அழிக்க வேண்டும் என்பது ஒரு மதரீதியான உந்துதலாக அவனுக்கு இருந்தது. மேலும் காந்தாரம் போன்ற (இன்றைய ஆப்கானிஸ்தான்) விவசாயம் இல்லாத வற‌ண்ட மலைகள் நிறைந்த நிலப்பரப்பை கொண்டிருந்த அவனுக்கு செல்வ செழிப்பான பாரதத்தின் பகுதிகள் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்த செல்வ வளங்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தீராத வேட்கையாக அவனிடம் இருந்தது.

பொது ஆண்டு நவம்பர் 28, 1001 தன்னுடைய முதல் தாக்குதலை முகம்மது தொடங்கினான். இன்றைய பாகிஸ்தானில் பெஷாவரில் நடந்த‌ போரில், ஷாஹி வம்சத்தின் ஜெயபாலரோடு நடந்த யுத்தத்தில் முகம்மது கஜ்னி அவரை தோற்கடித்தான். தோல்வியை தாங்க இயலாமல் தன்னை தானே நெருப்பு மூட்டிக் கொண்டு ஜெயபாலர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயபாலரின் பல பகுதிகளை கைப்பற்றினான் முகம்மது. அதன் பின் அவன் கிழக்கே ஒவ்வொரு வருடமும் பாரதத்தை நோக்கி தன் சக்தி வாயந்த குதிரை படையை செலுத்தினான். 

பொது ஆண்டு 1006ல் அவன் மூலஸ்தானத்தை (முல்தான்) பிடித்தான். ஜெயபாலரின் மகனான ஆனந்த பாலாவை அவன் இடைஇடையே எதிர்கொண்டு போரிட்டான். பொது ஆண்டு 1008ம் ஆண்டு எட்டாவது முறையாக பாரதத்தை நோக்கி வந்த முகம்மது கஜ்னியை ஆனந்தபாலா பெரும் படையோடு தடுத்து நிறுத்தினார். தன் தந்தையின் தோல்வி மற்றும் மரணத்திற்கு பழி வாங்க அவர் மிகப்பெரும் படையை திரட்டி இருந்தார். அவரின் படை வெற்றி பெற்றுவிடும் என்கிற நிலையில் ஆனந்தபாலரின் துரதிஷ்டமோ என்னவோ, அவரின் மிகப்பெரிய படையின் முன்னே சென்றுக் கொண்டிருந்த யானை திடீரென மதம் பிடித்து பின் வாங்கி, தன் சொந்த படைகளையே மிதித்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. இது ஆனந்தபாலரின் படைக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை பயன்படுத்திக் கொண்ட கஜ்னியின் குதிரைப் படை ஆனந்தபாலரின் படையை கடுமையாக தாக்கி வெற்றிக் கொண்டது.

யானை திடீரென மதம்பிடித்து ஓடியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இரவோடு இரவாக ஆனந்தபாலரின் யானைக்கு ஆப்கானிய "அபின்" போதை மருந்துகளை கஜினியின் ஆட்கள் கொடுத்து விட்டிருந்தனர் என்பது ஒன்று. கஜ்னியின் படையை சேர்ந்த யாரோ ஒருவர் வீசிய 'நெருப்பு அம்பு' சரியாக யானையின் கண்களில் பட்டதுதான் காரணம் என்பது இரண்டு. எது எப்படியோ யானை மதம் பிடித்து பின்வாங்கி ஓடியதே போரில் தோற்றதற்கு காரணம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

இந்த போரின் வெற்றியின் மூலம் முகம்மது கஜ்னியின் கைவசம் 'ஷாஹி'களின் பிரதேசங்கள் வந்து சேர்ந்தன. அவனின் ஆளுமையும், ஆற்றலும் இதனால் அதிகரித்தது. அவன் பாரதத்தின் செழிப்பான பிரதேசங்களான இன்றைய பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தை நோக்கி திருப்பினான்.

– Englightened Master



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 26

12391398_868562729931834_236633003941799



இத்தருனத்தில் முகம்மது கஜ்னியால் எப்படி 18 முறை பாரதத்தை நோக்கி படையெடுத்து வர முடிந்தது என்பதை பார்க்க வேண்டும். 18 முறை அவன் படையெடுத்து வரும் வரை இந்து அரசர்கள் சகித்துக் கொண்டு இருந்தார்களா ? என்றும் சிலர் கேட்பதுண்டு.

முகம்மது கஜ்னி உட்பட முஸ்லீம் படையினர், திடீர் தாக்குதல்களை புரிபவர்களாக இருந்தார்கள். ஒரு ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு, அங்குள்ள மக்களை அடிமைகளாக பிடித்து சென்று விடுவார்கள். முஸ்லீம் படைகளை சேர்ந்த கலீஃபைட் ஆகட்டும், சுல்தான் ஆகட்டும், அமீர் ஆகட்டும், படையின் முன்நின்று போர் புரிபவர்களாக அவர்கள் இல்லை. பாரதத்தில் அவர்கள் இந்துக்களோடு போரிடுகையில் இந்துக்களின் தர்ம நெறிகளை நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் அவர்கள் அரசர்களைதான் குறி வைத்து தாக்குதல் நடத்துவார்கள். அரசன் வீழ்த்தப்பட்டால் அப்படை சரண் அடையும். தோல்வி அடையும் படை வீரர்களை பெரும்பாலும் தங்கள் படையில் அடிமைகளாக்கி சேர்த்துக் கொள்வார்கள். வேறு ஒரு அரசனை தாக்க செல்லும் போது, பிடிபட்ட வீரர்களை படையின் முன் வரிசையில் பகடைகளாக அனுப்புவார்கள். முன்னே செல்லும் பகடை வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் பலியாவார்கள். இதனால் எதிரி படைக்கும் பலத்த சேதம் ஏற்படும். எதிரி பலவீனமாகும் வேளையில் பின்னால் வரும் முஸ்லீம் படை வீரர்கள் எதிரியை கடுமையாக தாக்கி வெற்றிக் கொள்வார்கள்.

மற்றொரு பக்கத்தில் இந்திய அரசர்கள் போர்களில் முன்நின்று போரிடுவார்கள். அதுவே அவர்களுக்கு சத்திரிய லட்சனமாக இருந்தது. சதுரங்கத்தில் நடப்பது போல், பெரும்படையுடன் போருக்கு செல்லும் ஒரு அரசன் போரில் கொல்லப்பட்டால் அந்த போர் முடிவுக்கு வந்துவிடும். அரசன் என்பவன் ஒரு நாட்டின் ஆதார புருஷனாக கருதப்படுவதால் அரசன் இறந்த பிறகு அவனின் படை வீரர்கள் பெரும்பாலும் போரை தொடர்வது வழக்கமில்லை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த‌து போல் இந்துக்களின் போர் முறைகள் தர்ம நெறிகளை பின்பற்றுபவை. சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் மட்டுமே போர்கள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத சமவெளிகளிலேயே பெரும்பாலான போர்கள் நடைபெற்றன. மேலும் போர் என்பது திடீர் தாக்குதல்களாக இல்லாமல், மறைந்து தாக்கும் யுக்திகளாக இல்லாமல் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு இரு படைகள் மோதும் நிகழ்வுகளாகவே இருக்கும். இப்படிப்பட்ட எல்லா நியதிகளையும் தவிடு பொடியாக்கின‌ முஸ்லீம் படைகளின் நாகரீகமற்ற போர் யுக்திகள். 

உண்மையில் முகம்மது கஜ்னி படையெடுத்து வந்தான் என்று சொல்வதே தவறு என்பதே பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. முகம்மது கஜ்னியின் தாக்குதல்கள் பெரும்பாலும் ஒரு பிரதேசத்தை கொள்ளையடிக்க வரும் ஒரு கொளைக்காரனை ஒத்து இருந்ததே தவிர அது ஒரு முழுமையான போராக கொள்ள முடியாது. 

மேலும் 11ம் நூற்றாண்டில் பாரதத்தின் வடக்கு பிரதேசம் பேரரசுகள் எதுவும் இல்லாமல் பல‌ சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. மாமன்ன‌ன் ராஜ ராஜ சோழன் மற்றும் அவர் மகன் ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் அரசர்கள் தங்கள் கவனத்தை பாரதத்தின் தெற்கேயும், தென்கிழக்கிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொண்டிருந்தனர். பாரதத்தின் வடக்கே இருந்த குர்ஜர், ராஷ்ட்ரகூடர்கள், மற்றும் முஸ்லீம் கலீஃபைட்டின் விஸ்தரிப்பை தடுத்து நிறுத்திய "ப்ரதிஹாரா" எனும் பேரரசர்களும் மிகவும் பலம் இழந்து சிற்றரசர்களாக இருந்தார்கள். ராஜ்புட் பேரரசு உடைந்து போய் "சமந்தர்கள்" (Samanthas) எனும் பெயரில் சிற்றரசர்களாக சிதறிக் கிடந்தது. இது முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது..


– Englightened Master



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 27

261386_874924592628981_84174372693647621

வட மற்றும் மேற்கு பாரதத்தில் ஒரு பேரரசு இல்லாத நிலை முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. காஃபிர்களின் நாடான பாரதத்தின் மீது ஒவ்வொரு வருடமும் "ஜிகாத்" தொடுப்பேன் என்கிற அவனின் சபதத்திற்கு சாதகமான சூழ்நிலையே அப்போது இருந்தது

குதிரைகளில் மிக வேகமாக சென்று ஒரு இடத்தை தாக்குவது, கொளையடிப்பது, தீயிட்டு கொளுத்தியவாறு அவ்விடத்தை விட்டு அகலுவது என்பதே அவனின் யுக்தியாக இருந்தது.. இவ்வாறு மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கினான் கஜினி முகம்மது. "பஞ்சாப், நாகர்கோட், தனேசர், கனௌஜ், க்வாலியர் மற்றும் உஜ்ஜயின்" ஆகியவற்றை தாக்கி அழித்த‌ முகம்மது கஜினி, பஞ்சாபை மட்டும் தன்னோடு இனைத்துக் கொண்டு மற்றவ‌ற்றை தன்னுடைய ஆளுமையின் கீழ் வைப்பதற்கு சில அடிமை இந்து/பௌத்த சேனைகளிடம் ஒப்படைத்தான். இதன் மூலம் இந்துக்கள் இடையே பிரிவையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி இருந்தான். அவனின் படையில் சேர்வதே தங்களுக்கு பாதுகாப்பு என சில‌ உள்நாட்டு மக்கள் உணரத் தொடங்கினர். இதனால் முகம்மது கஜினியின் படை மேலும் பலம் பெற்றது. 

டிசம்பர் 1018 AD ஆம் ஆண்டு அவன் படை யமுனை நதியை கடந்து "புலந்தஷாஹர்" (Bulandshahar) எனும் இடத்தை அடைந்தது. கிட்டத்தட்ட "பத்து லட்சம் திர்ஹாம்களை" அவ்விடத்தில் வசூல் செய்தான் முகம்மது. அதன் பின் மதுராவில் உள்ள "மஹாபன்" எனும் இடத்தை அடைந்து தாக்குதலை மேற்கொண்டான்.
முகம்மது கஜ்னியின் செயலாளராக இருந்த "உத்பி" (Utbi) என்பவர் இதை குறித்து விரிவாக குறிப்பிடுகிறார். "காஃபிர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோட்டைகளை துறந்து விட்டு நதிகளை நோக்கி ஓடினார்கள். ஆனால் பலர் பிடிக்கப்பட்டார்கள். பலர் தப்பிக்க முயன்று முழ்கினார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதன் பின் சுல்தான் மதுராவில் உள்ள கோவில்களை (கிருஷ்ணர் பிறந்த‌ கோவில் உட்பட) நெருங்கினான். அவன் அங்கிருந்த ஐந்து ( 89,300 மிசல் எடையுள்ள) தங்க சிலைகளையும், 200 வெள்ளி சிலைகளையும் பெயர்த்து எடுக்க ஆனையிட்டான், வைரங்களும், வைடூரியங்களும் கைப்பற்றப் பட்டன. அதன் பின் சுல்தான், நாப்தா (naphthala) போன்ற எரிபொருள்களை பயன்படுத்தி கோவில்களை அடியோடு எரியூட்டி அழித்தான். இந்த சூரையாடல் கிட்டத்தட்ட 20 நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதன் பின் சுல்தான் "கனௌஜை" நோக்கி படையை திருப்பினான். கனௌஜில் 10000 கோவில்கள் இருந்தன. ஊமையாகவும் செவிடாகவும் இருந்த அந்த சிலைகளை கண்டு செய்வதறியாத‌ மக்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுல்தான் கோவில்களை சூரையாடவும், தப்பி ஓடியவர்களை அடிமையாக்கி சிறை பிடிக்கவும் ஆனையிட்டான். 

அடுத்து அவன் முஞ்ச் (Munj) பகுதியை தாக்கினான். அங்கிருந்த பிராமனர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை சண்டையிட்டார்கள். வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் முகம்மது கஜ்னியிடம் சிக்கி விடக் கூடாது என்று தங்கள் குழந்தைகளையும், மனைவிகளையும் தீயில் ஏற்றி தாங்களும் மடிந்தார்கள். அசி (Asi) எனும் நாட்டு அரசனும் முகம்மதை கண்டு தப்பி ஓடினான். சுல்தான் அவரின் ஐந்து கோட்டைகளையும் அடியோடு தரைமட்டமாக்க உத்தரவிட்டான். அதில் இருந்த பலர் உயிரோடு புதைக்கப்பட்டனர். பல வீரர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டனர்.
அதன் பின் ஷ்ரவா (Shrawa) எனும் நகரத்திற்கும் அதே விதி ஏற்பட்டது. கொளையடிக்கப்பட்ட பொருட்கள் கிட்டத்தட்ட நூறு ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. கிட்டத்தட்ட மதுராவில் மட்டும் ஐயாயிரம் பேர் அடிமைகளாக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டனர்.

இது போலவே "அல்பெருனி" (Alberuni) எனும் முகமதோடு சென்ற சரித்திர ஆய்வாள‌ர், இதை குறித்து தெளிவாக விவரிக்கிறார். "வட மேற்கு இந்தியாவை முகம்மது கஜ்னி தாக்கியதும் அவ்விடங்களை பஞ்சத்தை ஏற்படுத்தினான். இதன் மூலம் சிதறி ஓடிய இந்துக்களின் நாகரீகம் அழிந்தொழிந்தது. இதனால் தான் இந்துக்களின் அறிவியல் காணாமல் போய் எங்கள் கைகளுக்கு அப்போது எட்டாத "காஷ்மீர்" மற்றும் "பெனாரஸ்" போன்ற பகுதிகளுக்கு சென்றடைந்தது. இறந்து சடலங்களாக கிடந்த இந்துக்களின் சடலங்களை கூட ஆபரண அணிகல‌ன்களுக்காக விடாமல் தேடியது முஸ்லீம் படை. அல்லாவின் நண்பர்கள் நெருப்பையும், சூரியனையும் வழிபடும் இந்துக்களின் பினங்களை மூன்று நாட்கள் தேடி தேடி சலித்தெடுத்தார்கள். தங்கம், வெள்ளி, முத்துக்கள், வைரங்கள் என கிடைத்தவை எல்லாம் எடுத்தார்கள். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட "3 லட்சம்" திர்ஹாம்களாக இருந்தது. பிடிப்பட்ட இந்து அடிமைகள் 2 முதல் 10 திர்ஹாமிற்கு விற்கப்பட்டார்கள். இவை அனைத்தும் கஜ்னி நகரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. தொலை தூர நகரங்களில் பல வியாபாரிகள் கஜினிக்கு இதை வாங்குவதற்கு வந்தார்கள். "மவரௌன்", (Mawaraun-Nahr) "ஈராக்", "குரசான்" போன்ற நாடுகளை செர்ந்த வியாபாரிகள் இதை பெரிதும் வாங்கி சென்றார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தன. பிடிபட்ட இந்திய அடிமைகள் பல சந்தைகளில் விற்கப்பட்டனர்" 

அடுத்து சோமநாதர் கோவிலின் மீது முகம்மது கஜ்னியின் பார்வை திரும்பியது.
 

– Englightened Master


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 28


59720_875577739230333_805938074217962808


முகம்மது கஜ்னியின் வருடாந்திர ஜிகாதிய தாக்குதலினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது வடமேற்கு பாரதம். அவனின் கொடூர தாக்குதலினால் பல்வேறு இந்து சமூகங்கள் நிலைக் குலைந்தன. சிந்து பகுதியை சேர்ந்த "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் கட்டாய மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர். ஆனால் முஹம்மது கஜ்னியின் அழிவு பயனம் அதோடு நிற்பதாக தெரியவில்லை. அவனின் அடுத்த இலக்காக ரிக் வேதத்தில் குறிப்பிடப் பட்டதும், 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்றானதுமாக சோமநாதர் ஆலயம் இருந்தது. 

குஜராத்தின் சௌராஷ்டிர பகுதியில் இருந்த சோமநாதர் ஆலயம் மிக அற்புதமானதாகவும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் புராண காலத்தை சேர்ந்ததாகவும் இருந்த‌து. மிகப்பெரும் கோவிலாக திகழ்ந்த அதன் வளாகத்தில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது.

பொது ஆண்டு 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான "கோக்னா ரானா"வும் அடக்கம். முஹம்மது கஜ்னி சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை தன் கைகளாலேயே உடைத்து அதன் துண்டுகளை தன் கஜ்னி நகரில் இருந்த ஜாமியா மசூதியின் படிகட்டுகளிலும், தன் தர்பாரிலும் நடை பாதைகளில் பதிக்க செய்தான். மீதி இருந்த துண்டுகளை மெக்காவிற்கும் மெதினாவிற்கும் அனுப்பி அங்கு நடை பாதைகளில் பதிந்திட செய்தான்.. அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.

"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அவன் அழிப்பதனால், பல ஹிந்துக்கள் நம்பிக்கை தளர்ந்திடுவார்கள், அவர்களை முஹம்மதியர்களாய் எளிதாக மாற்றி விடலாம் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே தன் கைப்பட அழித்தான்"
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard