New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 05. இயேசுவும் குடும்பத்தாரும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
05. இயேசுவும் குடும்பத்தாரும்
Permalink  
 


4.   இயேசுவும்குடும்பத்தாரும்

ஏசுவின் மரணத்திற்கு 40 வருடம் பின்பு முதலில் வரைந்த மாற்கு சுவி கதையில் ஏசுவின் குடும்பம் என உள்ளது- மாற்கு6:3 :இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானேயாக்கோபுயோசேயூதாசீமோன் ஆகியோர் இவருடைய  சகோதரர் அல்லவாஇவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.

 

இதில் தாய் பெயர் மட்டுமே உள்ளது. இதே வசனத்தை மத்தேயு பயன்படுத்துகையில் ஏசுவை தச்சர் என்றதை மாற்றி தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? லூக்கா[ii]வோ இப்பகுதியினை தவிர்த்து விட்டு ஜோசப்பின் மகன் தானே என மாற்றுவார்.

 

மாற்கு 3 31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்என்று அவரிடம் சொன்னார்கள். 33அவர் அவர்களைப் பார்த்து, என்தாயும் என் சகோதரர்களும் யார்?”  என்று கேட்டு, 34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்.

சொந்த ஊரிலேயே அவர் தாயும் சகோதரரும் என்ற போது அவர்களை மதியாது ஸுற்றி உள்ள மக்களேர்களே என்பது சற்றே குழப்பம் தரும்.

இதோடு நான்காம் சுவி யோவானில் ஏசுவுடைய சகோதரர்கள்[iii] அவரை ஜெருசலேம் சென்று மக்கள் முன் இயங்க சொன்னார்கள், ஏசுவின் சகோதரர்கள் கூட ஏசுவிடம் நம்பிக்கை இல்லாது இருந்தனர் என உள்ளது.

 

 

 

யோவான் 7:  2யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.                                                                                                                                            யோவான் 19: 26 சிலுவையில் இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், அம்மா, இவரே உம் மகன் என்றார். 27பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய் என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். லூக்கா 11: 27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்என்று குரலெழுப்பிக் கூறினார். 28அவரோ, இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்றார்.   லூக்கா 2: 41ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள் 48... அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமேஎன்றார்.

 மாற்கு 3: 20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

யோவான் 2:  3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்றார். 4இயேசு அவரிடம், அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையேஎன்றார்.5இயேசுவின் தாய் பணியாளரிடம், அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்றார்.  12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர். திருத்தூதர் பணிகள் 1:  14அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

 



மத்தேயு13:55

[ii] லூக்கா 4:22

[iii] யோவான் 7:  2யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard