New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகநானூறு AganaNuru

Guru

Status: Offline
Posts: 24778
Date:
அகநானூறு AganaNuru
Permalink  
 
A poem by: Nakkannaiyar, a female poet 
The text is belongs to second century B.C. or earlier.
666.png
  • பொதினி = இக்காலப் பழனிமலை
  • அது ஆறு முடிகளைக் கொண்டு விளங்கும் ஆனைமலை.
  • அதன் அரசன் முருகன்.
  • அவன் நெடுவேள் என்றும் வழங்கப்படுபவன். ஆவியர் குடி மன்னன். குதிரைமலை மக்கள் மழவர் தாக்கியபோது அவர்களை விரட்டியடித்தவன். வண்டு மொய்க்கும் தலைமாலை அணிந்தவன். வீரக்கழல் அணிந்தவன்.
மூங்கில் போன்ற என் தோள் வாடும்படி விட்டுவிட்டு அரிய பொன்னணிச் செல்வம் தேடிவர அவர் சென்றார்.
நார் இல்லாத விரிந்த கிளைகளை உடைய முருங்கை மரத்து நவிரல் வெண்ணிறப் பூக்கள் பேய்க்காற்று (சூரலம் கடுவளி) வீசும்போது கடல் பொங்குவது போலப் பொங்கும் காட்டு வழியில் அவர் சென்றார். வெயில் நெருப்பாக அடிப்பதால் மரங்கள் காய்ந்து நிழல் இல்லாமல் போன காடு அது. பாறைகள் காய்ந்து சூடேறிக் கிடப்பதால் அதில் இருக்கும் சுனைகள் நீரற்றுப் போயின. அப்பாறையில் விழும் மூங்கில்-நெல் பொரியும் காடு அது. அந்த வழியாகச் செல்பவர் யாரும் இல்லாததால் வழிப்பறி செய்வோரும் இல்லாமல் போன காடு அது. இத்தகைய காட்டுவழியில் அவர் சென்றுள்ளாரே.
என்ன செய்யலாம்?
 
பாடல் (சொல் பிரிப்புப் பதிவு)
 
1. பாலை
 
''வண்டு படத் ததைந்த கண்ணிஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய      5
கல் போல் பிரியலம்'' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழிசிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழசேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், 10
நிழல் தேய்ந்து உலறிய மரத்தஅறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மையயாவரும்
வழங்குநர் இன்மையின்வௌவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்றஅலங்கு சினை   15
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்பஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கிமுன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
 
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மாமூலனார் பாடல்
 
Agananuru love poem 1

You, my friend-maid! Would he have forgotten his words of assurance while on traveling through the forest to earn money?
He assured me we would never depart ever as the diamond fixed in ‘payn’ (a kind of shellac) to be shaped. The diamond shaping factory was situated in ‘Potini” village which was ruled over by the king “Murugan” by name who defeated the attackers from the region of ‘Kutirai’ (horse) mount. He was the king belongs to ‘Aviyar’ family. Village ‘Potini’ is situated at the side of ‘Potini’ hill one among six hills of ‘Anaimalai’.
Leaving my shoulder to become lean he went through the forest to earn wealth of gold. It was the season the heat of the sun burns the leaves of the tree fall and have no shadow in that area. As there are no passersby through the forest there is no theft also. He passes through such a dreadful forest.

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
2. குறிஞ்சி
தலைவியை நாடிப் பகலில் வந்த தலைவனிடம் தோழி சொல்கிறாள்.
 
நாட! உன் நாட்டில் விலங்குகளும் அவை நினைத்துப் பார்க்காத இன்பத்தை அடையும். அப்படி இருக்கும்போது நீ அடைய எண்ணிக்கொண்டு வந்த இன்பத்தை நீ அடைதல் உனக்குக் கடினமாகுமா? எளிதுதானே! இவளது தந்தையின் காவலர் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து வந்தால் இவள் இன்பத்தை நீ இரவிலும் பொறலாம். என்றாலும் ஒன்றை எண்ணிப்பார். வேங்கையும் பூத்துவிட்டது. நிலாவும் வளர்பிறையில் இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு இவள் இன்பத்தைப் பெறலாமே.
[1]
குறியா இன்பம், குறித்த இன்பம்
  • கொழுத்த இலையை உடைய வாழைமரப் பெருங்குலையில் நன்றாக முதிர்ந்த வாழைப்பழம் தானே உதிரும்.
  • தெவிட்டி உண்ணமுடியாமல் போன பலாச்சுளையும் கிடக்கும்.
  • இரண்டும் பாறையில் இருக்கும் ஆழமான சுனைநீரில் ஊறும். ‘தேறல்’ என்னும் கள்ளாக விளையும். அங்கு மேயும் கடுவன் என்னும் ஆண்குரங்கு அறியாமல் அதனை உண்ணும். மயக்கம் ஏறும். மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தள்ளாடும். இது எண்ணிக்கூடப் பார்க்காத நிலையில் அதற்குக் கிடைத்த குறியா இன்பம். இத்தகைய இன்பத்தைப் பிற விலங்கினங்களும் பெறும் நாட்டை உடையவன் தலைவன்.
  • குறியா இன்பத்தை விலங்கினங்களும் பெறும் நாட்டை உடைய தலைவன் குறித்த இன்பத்தை (நாடிவரும் இன்பத்தை)ப் பெறுவது கடினமா? இல்லையே.   
[2]
இவளுக்கும் ஆசை
  • விரும்பத்தக்க அழகும், மூங்கில் போன்ற தோளும் உடைய இவளும் உன்னைப்போலவே உன்னிடத்தில் பாயும் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியாதவளாக இருக்கிறாள்.
[3]
இரவில்
  • இவளது தந்தை இரவிலும் காவல்காரர்களை வைத்துக் காவல் புரிகிறான். அந்தக் காவல்காரர்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து இரவிலும் நீ வரலாம்.
[4]
ஆனாலும் ஒன்று.
  • வேங்கைப்பூ பூத்திருக்கிறது. (திருமணம் செய்யும் பருவகால அறிவிப்பு இது.) வெண்ணிலா காய்கிறது. (ஊர் பார்த்துவிடும்)
இதனையும் எண்ணிப்பார்.
 
பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
  
[1]
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனிஉண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடுஊழ் படு
பாறை நெடுஞ் சுனைவிளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது   5
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம்எளிதின்நின் மலைப்
பல் வேறு விலங்கும்எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?               10
[2]
வெறுத்த ஏஎர்வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும்இனையள் ஆயின்தந்தை
[3]
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியைபைம் புதல்   15
[4]
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
 
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.
கபிலர் பாடல்

Agananuru love poem 2

He approaches his lover to enjoy in daytime. Her friend-maid guide him politely enjoy her by getting married.
You, the Head of your area! Even the beasts are enjoying a kind of bliss in your area. The plantain fruits and broken jack fruit fell into pond in rock. The water of the pond becomes wine by fermentation. A male monkey drank the water and enjoys the sensitiveness of drunkenness. It is trembling after to climb on Sandal tree in which the pepper plant creeping. So the other beasts also enjoy. This is a kind of unconscious bliss. Having such a kind of country, it is easy to get enjoyment of intend.
Again, she with her complexion and bamboo like shoulders to hug is in her at most willingness to have enjoyment with you.   
This is daytime. You can get her enjoyment in night-time instead while the guards of her father sleeping. But there is also some difficulty because of brightness of moon-light. So watch the tree Vengai blossoms. It is the right time to marry her and enjoy.   

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard