New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
காஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


காஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

Thanks Mr. Saravanakumar at https://www.facebook.com/profile.php?id=100002514108026&hc_ref=NEWSFEED&fref=nf

காஷ்மீர் என்றுமே பாரதத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்து வருகிறது...கஷ்யபரின் தேசம் [கஷ்யப‌புரா ] என்பதுதான் மருவி காஷ்மீர் என்றானது..

காஷ்மீரிகளுக்கு துன்பம் ஆரம்பித்தது இஸ்லாமிய படையெடுப்புக்கு பிறகுதான்... இஸ்லாமியர் அல்லாதவர்கள் அனைவரையும் துன்புறுத்தும் வேலை ஆரம்பித்தது ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில்தான்..அதுவரை இஸ்லாமியர்கள் ஹிந்துப்பெண்களை மணந்து பின்னர் ஹிந்துவாக மாறிவிடுவது சகஜமாக இருந்தது...இதை சகிக்க முடியாத ஜஹாங்கீர் ஹிந்துக்களை துன்புறுத்தத்தொடங்கினான் .பின்னர் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கொடுமை உச்சத்திற்கு சென்றது... ஹிந்துக்கள் காஷ்மீரில் வசிக்கவே முடியாத சூழ்நிலை உருவானது...

காஷ்மீரில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் , அங்கு ஜாதிப்பாகுபாடுகள் கிடையாது... அனைவருமே தங்களை அந்தணராகவே கருதிக்கொள்வர்...ஔரங்கசீப்பின் கொடுமைகளை சகிக்க இயலாத அந்தணர்கள் பஞ்சாப் சென்று அப்போதைய குருபீடத்தை அலங்கரித்த குரு தெஹ்ப‌கதூர் அவர்களிடம் சென்று தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர்.அவர்களின் முறையீட்டை கேட்ட குரு , உங்களில் மிகவும் உத்தமமான ஒருவர் தன்னை தியாகம் செய்தால் உங்கள் பிரச்சினைகள் தீரும் என்றார்... அப்படிப்பட்டவர் யார் என்று தெரியாமல் அந்தணர்கள் குழப்பம் அடைந்தனர்...அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான குரு தெஹ்பகதூர் அவர்களின் மகன் கோவிந்த் சிங் [ பின்னாளில் சீக்கிய தலைமைப்பீடத்தை அலங்கரித்த குரு கோவிந்த் சிங் ] தங்களை விட , உத்தமமான , புனிதமான மனிதர் வேறு யார் இருக்கிறார் அப்பா ? என்று கேட்டார்...

இதைக்கேட்ட குரு தெஹ்பகதூர் தானே சென்று ஔரங்கசீப்பீடம் பேச தீர்மானிக்கிறார்.... டெல்லி சென்று ஔரங்கசீப்பை சந்தித்த குரு தெஹ்ப‌கதூர் , ஔரங்கசீப்பிடம் சவால் விடுகிறார்... நீ என் ஒருவனை இஸ்லாமுக்கு மதம் மாறச்செய்துவிட்டால் ஒட்டு மொத்த பாரதமே இஸ்லாத்துக்கு மாறிவிடும் என்கிறார்....ஔரங்கசீப் குருதெஹ் பகதூர் அவர்களின் இரண்டு சீடர்களை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொல்கிறான்... நீ மதம் மாறாவிட்டால் உனக்கும் அதே கதிதான் என்கிறான்... சம்மதிக்காத குருதெஹ்ப‌கதூரை சிரச்சேதம் செய்கிறான்.,.அவரின் தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு தாயத்து விழுகிறது...அதற்குள் ஒரு செய்தி இருக்கிறது..அதில் '' நான் என்னை தியாகம் செய்து என் தர்மத்தை காப்பாற்றிவிட்டேன் '' என்று எழுதப்பட்டிருந்தது...

குரு தெஹ் ப‌கதூர் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களிடம் பெரும் எழுச்சி ஏற்படுகிறது...குரு கோவிந்த் சிங் தலைமையில் போரிட்ட சீக்கியர்களை ஔரங்கசீப்பால் வெல்லவே முடியவில்லை ..பின்னர் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் தலைமையில் நடந்த போர்களில் காஷ்மீர் வெல்லப்பட்டு ஹிந்துக்களின் வசமானது..

அப்போது காஷ்மீரில் வசித்த இஸ்லாமியர்கள் ஹிந்துமதத்திற்கு மாற முடிவெடுத்தனர்...அதை காஷ்மீர் அந்தணர்கள் ஏற்க மறுத்தனர்.. 70 அந்தணர்கள் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று அறிவித்தனர்... மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் '' மதம் மாறி , பசுவை உண்ட இவர்கள் ஹிந்து மதத்திற்கு திரும்புவதை நாங்கள் ஏற்க மாட்டோம் ...அப்படி ஒருவேளை இவர்கள் மதம் மாறுவதை நீங்கள் ஒப்புக்கொண்டால் , நாங்கள் ஏரியில் மூழ்கி உயிர்துறப்போம்... எங்கள் மரணத்திற்கு காரணமான உங்களை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும் '' என்றனர் .... பயந்துபோன ரஞ்சித்சிங் இஸ்லாமியர்கள் தாய் மதம் திரும்புவதை நிராகரித்தார்...

அவர்களை அப்படியே உயிரை விடும்படி சொல்லிவிட்டு , இஸ்லாமியர்கள் தாய்மதம் திரும்புவதை மஹாராஜா ரஞ்சித்சிங் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்... எப்படி குரு தெஹ்பகதூர் தன்னை தியாகம் செய்து தர்மத்தை காப்பாற்றினாரோ , அதுபோல தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தாலும் பரவாயில்லை... இஸ்லாமியர்கள் ஹிந்துக்களாக மதம்மாறுவதை தான் ஏற்றுக்கொள்வேன் என்று ரஞ்சித்சிங் அறிவித்திருந்தால் இன்று காஷ்மீர் அந்தணர்கள் இப்படி அகதிகளாக தேசம் முழுக்கம் அலையும் நிலை வந்திருக்காது... நாமும் இன்று காஷ்மீர் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமும் இருந்திருக்காது....



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: காஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


ஜின்னாவுக்கும் சரி , இதர பாகிஸ்தானியர்களுக்கும் சரி.. காஷ்மீர் முஸ்லீம்கள் மீது என்றுமே பெரிய மரியாதை கிடையாது....காஷ்மீர் முஸ்லீம்கள் ஹிந்துக்களின் சிறுநீரில் இருந்து பிறந்தவர்கள் என்று சொன்னவர் ஜின்னா..[ இது தெரியாமல்தான் அந்த அடிமுட்டாள்கள் பாகிஸ்தான் கொடியை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்...]

தேசப்பிரிவினை நேரம்...ஓரளவு இந்திய - பாக் எல்லைகள் உறுதியாகிவிட்டன...ஆனால் காஷ்மீர் மட்டும் எந்தப்பக்கமும் சேரவில்லை...அன்று காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்தவர் ஒரு ஹிந்து மன்னர் ..பெயர் ஹரிசிங்...காஷ்மீர் இஸ்லாமியர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தவர் ஷேக் அப்துல்லா , அங்கிருக்கும் ஹிந்துக்களை அடித்து விரட்டிவிட்டு , முழுமையான இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்கும் கனவு கொண்டவர்...

ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் இணைவதில் தயக்கம் இருந்தது..காரணம் அவருக்கு நேருவைப்பிடிக்காது...[ நேருவுக்கு ஷேக் அப்துல்லாவை பிடிக்கும் ] அப்போது ஹரிசிங்கின் ஆலோசகராக இருந்தவரின் மனைவி ஒரு பிரிட்டிஷ் பெண்மணி... அவர் மௌண்ட்பேட்டனுக்கு நெருக்கமானவர்...அந்த ஆலோசகர் காஷ்மீர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்....

காஷ்மீரை தாக்குவதற்கு இதுதான் நல்ல சமயம் என்று தீர்மானித்தார் ஜின்னா...நேரடியாக தாக்கினால் பிரச்சினை ஆகிவிடும் , ஆகவே பட்டானியர்கள் என்னும் பழங்குடியினரை காஷ்மீரை தாக்கும்படி உத்தரவிட்டார்...ஒவ்வொரு ஆயிரம் பட்டானியர்களுக்கும் ஒரு பாகிஸ்தான் கமாண்டர் தளபதியாக நியமிக்கப்பட்டனர்...னீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்லையடிக்கலாம் , கொலை செய்யலாம் , யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்...காஷ்மீரை ஆக்கிரமிப்பது மட்டும்தான் முக்கியம் என்று சொல்லி அனுப்பினர்....பட்டானியர்கள் காஷ்மீரை தாக்க ஆரம்பித்தனர்....

அப்போது இந்திய ராணுவத்தில் ஒரு சிக்கலான நிலைமை இருந்தது.... இந்தியா , பாகிஸ்தான் இரண்டு நாட்டு ராணுவங்க‌ளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர் ராணுவ அதிகாரிகளாக இருந்தார்கள்... பாகிஸ்தானின் ராணுவத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த வெள்ளையர்கள் ஜின்னாவின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள்.... ஆனால் இந்திய ராணுவத்தின் உயர்பொறுப்பில் இருந்த வெள்ளையர்களோ படேல் போன்ற தலைவர்களின் பேச்சை கேட்காதவர்களாகவும் , மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர்....

காஷ்மீருக்குள் புகுந்த பட்டானியர் கும்பல் வெறியாட்டம் ஆடியது...எல்லா வீடுகளும் , கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன‌... ஆண்கள் கொல்லப்பட்டனர் , பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்...ரத்த ஆறு ஓடியது... ஹரிசிங் செய்வதறியாது திகைத்தார்....இனி இந்தியாவின் துணையில்லாமல் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்தார்...இருந்தும் நேரு - ஷேக் அப்துல்லாவின் நட்பை நினைத்து தயங்கவும் செய்தார்.... இந்த நிலையில் ஒரு அதிசயம் நடந்தது.... மன்னர் ஹரிசிங்கை இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்கவைக்க ஒரே ஒருவரால்தான் முடியும் என்று நேரு நினைத்தார்...அவர்தான் அவர்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் பரமபூஜனீய கோல்வர்கர்...குருஜியை நேரில் சந்தித்த நேரு , ஹரிசிங்குடன் பேசி சம்மதிக்க வைக்கும்படி கேட்டுக்கொண்டார்...[ நிறையப்பேர் இன்றுவரை கோல்வல்கரை இவ்வாறு கேட்டுக்கொண்டது சர்தார் படேல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்...ஆனால் அப்படிக்கேட்டுக்கொண்டவர் நேரு என்பது ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.... ]

நேருவின் வேண்டுகோளை ஏற்ற குருஜி காஷ்மீர் சென்று மன்னர் ஹரிங்கை சந்தித்து இந்தியாவுடன் சேரும் முடிவை ஏற்க வைத்தார்...காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானது....பட்டானியர் கும்பலை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு வந்தது...ஆனால் இந்த நிலையிலும் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள மௌண்ட்பேட்டனும் ராணுவத்தின் உயர்பொறுப்பில் இருந்த வெள்ளையர்களும் சம்மதிக்கவில்லை... நடப்பது காஷ்மீர் மக்களின் கிளர்ச்சி ..அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடக்கினால் தவறாகிவிடும் என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தனர்....

அப்போது ஒரு கொடூரம் நடந்தது...காஷ்மீருக்குள் ஊடுருவிக்கொண்டிருந்த பட்டானியர்கள் , வழியில் இருந்த கிறித்தவ மடாலயம் ஒன்றை தாக்கினர்....அங்கிருந்த பாதிரியார்கள் உள்ளிட்ட அனைத்து கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்...கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்டனர்...சர்ச் சூறையாடப்பட்டது...

இதுவரை தர்மநியாயம் பேசிக்கொண்டிருந்த மௌண்ட்பேட்டனுக்கு இப்போது தர்ம சங்கடம் ஆகிவிட்டது....கொல்லப்பட்டவர்கள் கிறித்தவர்கள் ஆயிற்றே? ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் எகத்தாளம் பேசிக்கொண்டிருக்கலாம்...கிறித்தவர்கள் உயிர் விலைமதிப்பற்றது ஆயிற்றே? வேறு வழியில்லாமல் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள மவுண்ட்பேட்டன் உத்தரவிட்டார்...

ஆனால் அதற்குள் காஷ்மீரில் நிலவரம் கைமீறும் நிலைக்கு வந்துவிட்டது.... பட்டானியர் கும்பல் ஸ்ரீநகருக்கு மிக அருகில் வந்துவிட்டனர்...எந்த நேரத்திலும் விமான நிலையம் அவர்கள் கைக்குள் விழும் நிலை...... விமான தளத்தின் ஓடுபாதையோ , ராணுவ விமானங்கள் இறங்கும் அளவுக்கு இல்லாமல் பழுதடைந்து கிடந்தது....

இந்நிலையில் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ்....தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் ஓடுபாதையை போர்க்கால வேகத்தில் சீரமைத்து , இந்திய ராணுவ விமானங்கள் இறங்க வழி செய்துகொடுத்தனர்... நம் ராணுவம் ஸ்ரீ நகரில் இறங்கி பட்டானியர் கும்பலை ஓட ஓட விரட்டியது....

[ அவர்களை முழுமையாக விரட்டி அடிப்பதற்குள் நேரு மீண்டும் சொதப்பினார்.... படேல் மற்றும் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய அதிகாரிகளின் பேச்சைக்கேட்காமல் [ ஷேக் அப்துல்லா மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகியோரின் ஆலோசனையின் படி ] காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா வுக்கு எடுத்துச்சென்றார்.... போர் நிறுத்தம் ஏற்பட்டது... காஷ்மீருக்குள் குறிப்பிடத்தக்க தூரம் ஊடுறிவியிருந்த , பட்டானியர்கள் என்ற போர்வையில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் ராணுவம் அதே இடத்தில் நிலை கொண்டது... அந்த பகுதிதான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் ஆசாத் காஷ்மீர்..]

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தம் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காஷ்மீர் , நமக்கு தீராத தலைவலியாக மாறிப்போனது இப்படித்தான்....



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பாக் .ஆக்கிரமித்த பகுதி போக எஞ்சிய காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து செயல்பட‌ ஆரம்பித்தவுடன் ஷேக் அப்துல்லா மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்தார்... [ நேருவின் ஆதரவுடன் என்பதை சொல்லத்தேவையில்லை..]

காஷ்மீருக்கு சில விஷேச உரிமைகள் வேண்டும் என்று கேட்டார்..

1. காஷ்மீருக்கு என்று தனி கொடி வேண்டும்...

2. காஷ்மீர் முதல்வர் பிரதமர் என்று அழைக்கப்படவேண்டும்

3. இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் வாங்க வேண்டும்.,..

4. இந்தியாவின் இதர பகுதிகளைச்சேர்ந்த எவரும் காஷ்மீரில் எந்த சொத்தையும் வாங்கமுடியாது..

5. காஷ்மீரில் வசிக்கும் ஹிந்து காஷ்மீரி அல்லாத பெண்ணை மணந்துகொண்டால் அவர் காஷ்மீரி என்ற அந்தஸ்தை இழப்பார்...அதே சமயம் காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியப்பெண் பாகிஸ்தானி முஸ்லீம் ஒருவரை மணந்துகொண்டால் , அந்த பாகிஸ்தானி , காஷ்மீரியாக அறிவிக்கப்படுவார்....

அப்போது இந்திய அரசியல் சாசனத்தை இறுதி செய்யும் பணியில் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் அடங்கிய அரசியல் சாசன வரைவுக்குழு ஈடுபட்டிருந்தது...அம்பேத்கரிடம் சென்ற ஷேக் அப்துல்லா , மேற்படி சட்டங்களை இந்திய அரசியல் சாசனத்தில் இணைக்கும்படி கேட்டுக்கொண்டார்.... அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்பேத்கர் , நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்க எண்ணுகிறோம்... நீங்கள் பிரிக்க நினைக்கிறீர்கள்..இதற்கு நான் உடன்பட முடியாது என்று மறுத்துவிட்டார்....

அரசியல் சாசன வரைவுக்குழுவின் இன்னொரு உறுப்பினரான திரு. கோபால்சாமி அய்யங்கார் என்பவர்மூலம் மேற்படி ஷரத்துகளை அரசியல் சாசனத்தில் சேர்க்கும் பணியை வெற்றிகரமாக செய்துமுடித்தது நேரு - ஷேக் அப்துல்லா ஜோடி...அதுதான் பிரசித்தி பெற்ற‌ அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு...

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்புத்தகுதிகள் அதை இந்தியாவிடம் இருந்து பிரிக்கிறது... காஷ்மீர் பாரதத்துடன் ஒன்றிணைந்த பகுதி எனில் , அதற்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் ...குறிப்பாக காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் வாங்கவேண்டும் என்ற அநீதியை எதிர்த்து போர் முழக்கம்செய்தார் ஒரு மாபெரும் மனிதர்.... அவர்தான் பாரதீய ஜனசங்கத்தின் [ பின் நாளைய பாரதீய ஜனதா கட்சி ] நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி...

[ டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 ஜூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.

காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை...திரு. சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என்பது ஊரறிந்த ரகசியம்...]

திரு. முகர்ஜி அவர்களின் பலிதானம் காஷ்மீர் பற்றிய மக்களின் எண்ண ஓட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது... காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த நியாயமற்ற சலுகைக‌ள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டன...தனி கொடி , காஷ்மீருக்குள் நுழைய பர்மிட் போன்றவை ரத்து செய்யப்பட்ட‌ன... காஷ்மீர் முதல்வரை பிரதமர் என்ற அழைக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது...இவ்வாறாக அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை நீர்த்துப்போகும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து , காஷ்மீர் முழுமையாக இந்திய தேசிய நீரோட்டத்துடன் இணையும் தருவாயில் காஷ்மீரை மீண்டும் கொதிக்கும் பாத்திரமாக்கும் வேலையில் இறங்கினார் அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி...

காஷ்மீரில் தொடர்ந்து பிரச்சினைகள் நீடிப்பது தன்னுடைய அரசியலுக்கு நல்லது என்று நினைத்தார் இந்திரா.... இந்திராகாந்திக்கு என்று சில வக்கிரமான குணங்கள் உண்டு..தன்னுடைய அரசியல் எதிரிகளை வீழ்த்த , தேசநலனை மனதில் கொள்ளாமல் சில குறுக்குவழிகளை கையாள்வது அவரது சுபாவம்...பஞ்சாபில் இந்த வேலையில் இறங்கித்தான் பிந்தரன்வாலே என்ற பயங்கரவாதியை அவர் உருவாக்கினார்... காஷ்மீரில் அப்போது செயல்பட்டு வந்த தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க , பிரிவினைவாத சக்திகளை வளர்த்து விட ஆரம்பித்தார்.... காஷ்மீரில் உள்ள கல்விச்சாலைகள் , குறிப்பாக இஸ்லாமிய குழந்தைகள் பயிலும் மதரசாக்கள் மெல்ல மெல்ல ஜமாயத் ஏ இஸ்லாமி என்ற அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன... [ இந்த இடத்தில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது தமிழகத்திலும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன ] ..இன்று காஷ்மீரில் என்ற‌ பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பில் இருந்து உருவானதாகும்... அந்த ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பு தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது ஜமாயத் ஏ இஸ்லாமி ஹிந்த்என்ற‌ பெயரில்.... இங்கிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி , தௌஹீத் ஜமாத் போன்ற இயக்கங்களுக்கெல்லாம் ஜமாயத் ஏ இஸ்லாமி ஹிந்த் தான் தாய் அமைப்பு...[ இந்த அமைப்பு பாகிஸ்தானிலும் இருக்கிறது... இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இதற்கு அமைப்புரீதியான செயல்பாடு உண்டு ]

இந்த ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பின் கீழ் காஷ்மீரின் கல்விச்சாலைகள் கொண்டு வரப்படும் திட்டம் டெல்லியில் இருந்து செயல்படுத்தப்பட்டது...அவர்கள் தெளிவான செயல்திட்டத்துடன் களமிறங்கினார்கள்...அவர்களின் நோக்கம் , காஷ்மீரின் இயல்பான பண்பாட்டை சிதைத்துவிட்டு , அதை அரேபிய மயமாக்குவது... காஷ்மீரில் அதற்கு முன்புவரை ரிஷி - சுஃபி எனப்படும் இஸ்லாமிய முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது... ரிஷிகளாக இருந்து பின்னர் இஸ்லாத்துக்கு மாறிய சுஃபி எனப்படும் புனிதர்களையும் வழிபடும் முறை ...இது சுருக்கமாக காஷ்மீரியத் என்று அழைக்கப்படும்...[கிட்டத்தட்ட இதே முறைதான் தமிழகத்திலும் சிலகாலம் முன்பு வரை இருந்தது ]

இதை இன்னும் சற்று தெளிவாக விளங்கிக்கொள்வதென்றால் , சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை எடுத்துக்கொள்ளலாம்...அந்த மாநாட்டின் நோக்கம் என்ன? இந்திய இஸ்லாமியர்களை , இந்தியப்பண்பாட்டின் , இந்திய பழக்க வழக்கங்களில் இருந்து முழுமையாக பிரித்து , அவர்களை அரேபிய பண்பாட்டில் இணைப்பதுதான்...இப்படிச்செய்வது என்பது இஸ்லாமியர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரிப்பதன் முதல் படி.... அந்த வேலை காஷ்மீரில் மும்முரமாக நடக்க ஆரம்பித்தது..அதன் விளைவுகள் விரைவிலேயே தென்படத்துவங்கின...



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இதற்கிடையே , ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது.... பனிப்போரின் விளைவாக ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய ஆதரவு அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலைகளில் அமெரிக்கா மும்முரமாக இறங்கியது...கோடிக்கணக்கான டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து , ஆப்கானிஸ்தானின் அரசுக்கு எதிராக போராடும் முஜாஹிதீன் என்ற அமைப்பை உருவாக்கியது... [ நமக்கு நன்கு அறிமுகமான அல் - குவைதாதான் அது ] அல் - குவைதாவை உருவாக்க அமெரிக்கா வெள்ளமென கொட்டிய நிதியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இரண்டாக பிரித்தது... ஒரு பகுதி ஆப்கானிஸ்தானுக்கு..இன்னொரு பகுதி காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க என்று பிரித்துக்கொண்டது...

அதுவரை காஷ்மீரில் இயங்கி வந்த இந்திய விரோத அமைப்புகள் எதுவும் பயங்கரவாத அமைப்புகளாக மாறவில்லை...அவை தத்துவ ரீதியிலான , கருத்தியல் ரீதியிலான இந்திய விரோத அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வந்தன...சுருக்கமாகச்சொன்னால் இன்று தமிழகத்தில் இயங்கிவரும் தௌஹீத் ஜமாத், முஸ்லீம் முன்னேற்றக்கழகம் போன்ற அமைப்புகளைப்போல‌ என்று வைத்துக்கொள்ளலாம்... அந்த அமைப்புகளுக்கு அபரிமிதமான நிதியை அள்ளிவிட்ட பாகிஸ்தான் , அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து பயங்கரவாத இயக்கங்களாக மாற்றியது..

என்பதுகளின் இறுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு புது உத்வேகத்தை அளித்தது... நம்மால் சோவியத் ரஷ்யாவையே தோற்கடிக்க முடிந்ததென்றால் , ஏன் காஷ்மீர் ஹிந்துக்களை விரட்ட முடியாது...இங்கிருக்கும் ஹிந்துக்களை விரட்டிவிட்டு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை [ இஸ்லாம் இ முஸ்தஃபா ] ஏற்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள் ...

இதையடுத்து , 1988ல் , காஷ்மீரில் வசித்துவந்த ஹிந்துக்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் ஒரு எச்சரிக்கையை விடுத்தது... ஒன்று அவர்கள் இஸ்லாமியர்களாக மாறவேண்டும் ...அல்லது காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும்...கஷ்மீரில் இனி இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்க முடியும் என்று எச்சரித்தார்கள்...

இதையடுத்து , ஹிந்துக்கள் வேட்டையாடப்பட்டனர்...பெண்கள் , குழந்தைகள் , வயதானவர்கள் என்ற வித்தியாசமின்றி குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள்...கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து ஹிந்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்,... இரவோடு இரவாக பல ஹிந்து குடும்பங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன...

இரவு நேரம் ஏதாவது ஹிந்துவீட்டுக்குச்சென்று , அந்த குடும்பத்தலைவரை வெளியே அழைத்துச்செல்வது ...அடுத்த நாள் காலை அவரைக்கொன்று அந்த வீட்டின் முன்போடுவது , நெற்றியில் திலகமிட்டவர்களை பிடித்துச்சென்று நெற்றியில் பழுக்க காய்ச்சிய க‌ம்பியால் ஓட்டை போடுவது போன்ற கொடூரங்கள் நடக்க ஆரம்பித்தன... பணிக்கு சென்று திரும்பிய ஹிந்து நர்ஸ் ஒருவரை கடத்திச்சென்று அவரை ரம்பத்தால் நெடுக பிளந்து , அவரின் வீட்டின் முன்பாக கொண்டுபோய் போட்டார்கள்...

அவர்களின் திட்டம் இதுதான்...ஒரு இடத்தில் இருக்கும் ஒரு ஹிந்துகுடும்பத்தை கொலை செய்தால் அந்த இடத்தைவிட்டு பத்து ஹிந்து குடும்பங்கள் காலி செய்துவிட்டு சென்று விடுவார்கள்... அப்படியே நடந்தது... ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக காஷ்மீரை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.... முதலில் ஜம்முவுக்கு வந்தனர்,...பின்னர் டெல்லிக்கு வந்து , மிருகங்களை விட கேவலமான சூழ்நிலையில் வசிக்க ஆரம்பித்தனர்...அவர்களை நம் ஊடகங்கள் அழைத்த விதம்தான் அயோக்கியத்தனமானது ...அவர்களை புலம்பெயர்ந்தவர்கள் [ migrants ] என்று அழைத்தனர்...உண்மையில் அவர்கள் அகதிகள் [ refugees ] ...என்ன ஒரு அநியாயம் பாருங்கள்? அவர்கள் என்ன காஷ்மீரின் கிளைமேட் பிடிக்காமலா புலம் பெயர்ந்தார்கள்...? உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தேசத்தின் தலைநகரில் வந்து அடைக்கலம் புகுந்த மக்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைத்தார்கள்... இன்று மட்டுமல்ல ...என்றுமே இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்கள் இந்த லட்சணத்தில்தான் செயல்பட்டு வந்துள்ளன...

அப்போது அங்கு ஒரு மனிதர் இருந்தார்...அவர்தான் அப்போதைய காஷ்மீர் கவர்னர் திரு. ஜக்மோகன்...அவரால் இயன்றவரை தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஹிந்துக்களை பாதுகாக்க முயன்ரார்....அவர் , தான் எழுதிய My Frozen Turbulance in Kashmir என்ற புத்தகத்தில் , ஹிந்துக்களை நம் அரசியல் தலைமை எப்படி வஞ்சித்தது என்று விபரமாக விளக்கியிருப்பார்...ஒவ்வொரு ஹிந்துவும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் அது...

. பொதுவாக நம் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு...ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் கொடூரமாக கொல்லப்படும்போதெல்லாம் , அந்த சம்பவம் நடந்த உடன் கொடூரமான கொலை என்று கண்ணீர் வடிப்பார்கள்... அந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆனவுடன் [ ஹிந்துக்களின் மனதில் அந்த சம்பவம் மறக்க ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்தவுடன் ] அந்த கொலையை திரித்து , அதற்கு காரணமே ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பிப்பார்கள்... உதாரணம் கேரளத்தில் நடந்த மாப்ளா படுகொலைகள் ... அந்தகொடூர வன்முறையில் பல ஹிந்துக்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டனர்... கொஞ்ச காலம் ஆனவுடன் , அந்த பயங்கரத்தை நில உடமையாளர்களான ஹிந்துக்களை எதிர்த்து நிலமற்ற முஸ்லீம்கள் செய்த கிளர்ச்சி என்று திரித்தார்கள் மார்க்சிஸ்டுகள்...அதோடு மட்டுமல்ல அந்த படுகொலையில் ஈடுபட்ட கொலைகாரப்பாவிகளை விடுதலை வீரர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தது கேரளத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் அரசு...

காஷ்மீர் கொடூரத்தையும் அதேபோல கொஞ்ச காலம் கழித்து ஜக்மோகன் அங்கிருந்த ஹிந்துக்களுக்கெல்லாம் பணம் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் புளுக ஆரம்பித்தார்கள்...80களில் விபரம் அறிந்த வயதினர்களாக இருந்தவர்களுக்கெல்லாம் காஷ்மீரில் இருந்து ஹிந்துக்கள் எப்படி ஓடிவந்தார்கள் என்று தெரிந்திருக்கும்...அங்கிருந்த ஹிந்துக்கோயில்களையெல்லாம் இடித்து தள்ளி , ஹிந்து நாய்களே வெளியேறுங்கள், இந்திய நாய்களே வெளியேறுங்கள் என்றெல்லாம் சுவர்களில் எழுதியிருந்தார்கள்...அதுமட்டுமல்ல இதை விட மிக மோசமாக , '' பண்டிட்களே வெளியேறுங்கள்...உங்கள் பெண்களை இங்கு விட்டுச்செல்லுங்கள் '' என்றும் எழுதியிருந்தார்கள்... 36 ஹிந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன.... மசூதிகளில் இருந்து தொடர்ந்து வன்முறையைத்தூண்டும் அழைப்புகள் அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தன...ஜக்மோகன் இந்தக்கொடுமைகளையெல்லாம் தனி நபராக எதிர்த்து போராடிக்கொண்டிருந்தார்....

அப்போது தான் நேரு குடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வேலையில் இறங்கினார் ராஜீவ்காந்தி... அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மைனாரிட்டி அரசை மிரட்டி ஜக்மோகனை திரும்பப்பெறவைத்தார்...கேவலம் இஸ்லாமியர்களின் ஓட்டுக்களுக்காக ஹிந்துக்களுக்கு எதிராக அவர் இழைத்த மாபெரும் அநீதி அது...பாரததேசத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம் அது... காஷ்மீரில் நடைபெற்ற‌ இனப்படுகொலையை ஆதரித்த குற்றவாளியாகத்தான் ராஜீவை நாம் பார்க்கவேண்டும்..

இத்தனை கொடூரங்களும் நடந்து , அங்கிருந்த ஹிந்துக்களெல்லாம் முழுமையாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் கடும் முயற்சியாலும் , நம் ராணுவத்தின் தீவிரமான நடவடிக்கைக‌ளாலும் அங்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது... ஆனால் , இன்றுவரை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பவே முடியவில்லை...



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

காஷ்மீர் பிரச்சினையில் நாம் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் , இன்று காஷ்மீரில் நடப்பது நாளை தமிழகத்திலும் நடக்கலாம்... அவர்கள் மிக தெளிவான திட்டத்துடன் தான் களமிறங்கியிருக்கிறார்கள்...காஷ்மீரில் மட்டும் நாங்கள் வென்றுவிட்டோமென்றால் , இந்தியாவில் இன்னும் மூன்று இஸ்லாமிய தேசங்களை உருவாக்கிக்காட்டுவோம் என்று சவால் விடுகிறார்கள்...அவர்களின் இந்த லட்சியத்திற்கு துணைபோகக்கூடிய அமைப்புகள் நம் நாட்டிலேயே ஏராளமாக இருக்கின்றன...

2001 ம் ஆண்டு இந்தியா டுடே இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது... சிமி [ Student Islamic Movement of India ] எனப்படும் அமைப்பைப்பற்றிய கட்டுரை அது...இந்த சிமி ஜமாயத்தே இஸ்லாமி அமைப்பின் ஒரு கிளை...அந்த சிமி , இந்தியாவில் நான்கு இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவதை செயல்திட்டமாக கொண்டது ..அவை கான்பூர் , உஜ்ஜயினி , ஔரங்காபாத் மற்றும் மலப்புரம்.... இதில் மலப்புரம் [ கேரளா ] தென்னிந்தியாவிலும் , மீதி மூன்று வட இந்தியாவிலும் உள்ளன... இந்த நான்கு நகரங்களிலும் உள்ள தேசவிரோதிகளுடன் இணைந்து காஷ்மீரைப்போல பயங்கரவாதத்தை தூண்டி , இந்தியாவில் இருந்து இந்த பிரதேசங்களை துண்டித்து இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவதே அவர்களின் செயல்திட்டம்...

அவர்களைப்பொறுத்தவரை , அவர்களுக்கு அரசியல் பேதம் கிடையாது...இஸ்லாமியர் அல்லாத எல்லோருமே , அவர்கள் எந்தக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அவர்களின் எதிரிகள்தான்... அவர்களின் கொலைப்பட்டியலில் அத்வானியும் இருக்கிறார்.. மார்க்சிஸ்ட் கட்சியின் .ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் [சீக்கியர் ] இருக்கிறார்...சோனியாவும் [ கிறித்தவர் ] இருக்கிறார்...கொடுமை என்னவென்றால் இவர்களை மார்க்சிஸ்டுகளும் , காங்கிரசும் விழுந்து விழுந்து ஆதரிப்பதுதான் ... இஸ்லாமிய பயங்கரவாதிகளைப்பொறுத்தவரை அவர்கள் மிகத்தெளிவான , வெளிப்படையான செயல்திட்டங்களுடன் இருக்கிறார்கள்.,..அவர்கள் எதையும் மறைப்பதில்லை...காஷ்மீரை வென்றெடுத்தபின் இந்தியா முழுக்க நாங்கள் இதேபோன்ற இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவோம் என்கிறார்கள்...அதற்கான தெளிவான் கருத்தியல் , ரோட்மேப் அவர்களிடம் உள்ளது...

அவர்களின் திட்டம் இதுதான்..முதலில் ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பின் கிளைகளான தௌஹீத்ஜமாத் போன்ற அமைப்புகள் இந்திய இஸ்லாமியர்களை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து பிரித்து , அராபிய , வஹாபிய இஸ்லாத்துடன் இணைக்கும்...அப்படி இணைந்த இஸ்லாமியர்களிடம் இந்திய , ஹிந்து வெறுப்பு விதைக்கப்படும்...அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோக தயாராக இருப்பார்கள்...பின்னர் அப்படிப்பட்ட இஸ்லாமியர்களின் உதவியுடன் தங்கள் லட்சியத்தை வென்றெடுப்பது...

அவர்களின் கனவு இந்தியாவோடு முடிவதில்லை...உலகம் முழுக்க இஸ்லாமிய தேசமாக வேண்டும்...அதனால்தான் , தங்கள் போராட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை பயன்படுத்துகிறார்கள்...[ இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைவது அண்மையில் உறுதி செய்யப்ப‌ட்டது...]

சரி... கஷ்மீர் பயங்கரவாதத்துக்கு இந்திய அறிவுஜீவிகள் கூறும் காரணம் என்ன? அங்கு வேலைவாய்ப்பு குறைவு என்பதுதான்... [ அதற்கு காரணமே 370வது பிரிவுதான் என்பது வேறு விஷயம் ] உண்மை என்ன? காஷ்மீரை விட , ஜம்முவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்...ஆனால் ஜம்முவில் உள்ள இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை...ஒப்பீட்டளவில் வேலையில்லாத்திண்டாட்டம் குறைவாக உள்ள காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்...

1988ல் ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் செய்தித்தாள் ஒன்றில் காஷ்மீர் காவல்துறையின் உளவுப்பிரிவில் இருக்கும் சில முக்கிய அதிகாரிகள் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்கள்...'' மதிப்பிற்குரிய ஜிஹாதிகளே... நாங்கள் உங்களை காட்டிக்கொடுப்பதில்லை... உங்களை காட்டிக்கொடுப்பதாக நீங்கள் எங்களை தவறாக புரிந்துகொள்ள‌ வேண்டாம்...நாங்கள் என்றுமேஉங்களை காட்டிக்கொடுக்கமாட்டோம்...''...எதற்காக இந்த விளம்பரம்? பயங்கரவாதிகள் தங்களை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக....இதுதான் காஷ்மீரில் உள்ள நிலவரம்...

ஆக...இந்த பயங்கரவாதச்செயல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன... பிரச்சினை என்னவென்றால் , நாம் கொஞ்சகாலத்தில் இதையெல்லாம் மறந்துவிடுகிறோம்... இன்றைக்கு என்ன நடக்கிறது? காஷ்மீரில் நம் ராணுவம் பதிலடி கொடுக்கிறது....அதுகூட மிதமான பதிலடிதான்...பெல்லட் கன் தான் பயன்படுத்தப்படுகிறது...புல்லட் கன் பயன்படுத்தப்ப்டுவதில்லை.... ஆனால் இதற்கு எவ்வள்வு கடுமையான எதிர்வினைகள் நாடுமுழுக்க எழுகின்றன என்று பாருங்கள்...

நாம் [ பாஜகவினர்..] காஷ்மீரில் கொல்லப்பட்ட ஹிந்துக்களைப்பற்றி தமிழக ஹிந்துக்களுக்கு ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோமா? நாம் எங்காவது ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறோமா? இந்தந்த இடத்தில் ஹிந்துக்கள் இப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோமா? இல்லை... இன்று இணையதளத்தில் சென்றுபார்த்தால் காஷ்மீர் பண்டிட்கள் இதைப்பற்றி மிகவும் வருத்தப்பட்டு எழுதும் பதிவுகளை காணலாம்...காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி நாம் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை...? கேட்டால் , இங்குள்ள இஸ்லாமிய சகோதர்களின் மனம் புண்படும் என்கிறோம்...

சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஃப்ராங்க்காய்ஸ் காத்தியே என்னும் பிரஞ்சு அறிஞர் , ஔரங்கசீப் , தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளை ஒரு கண்காட்சியாக நடத்தினார்...அந்த கண்காட்சி துவங்கிய சிறிது நேரத்தில் அங்கு வந்த மனித நேய மக்கள் கட்சியைச்சேர்ந்த ஜவாஹிருல்லா , உடனடியாக அந்த கண்காட்சியை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்..அதையடுத்து அந்த கண்காட்சி மூடப்பட்டது..இத்தனைக்கும் அந்த கண்காட்சியில் ஔரங்கசீப் , தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகள் [ எந்தெந்த ஹிந்து கோயில்களை இடிக்கவேண்டும்...எப்படி மதமாற்றம் செய்யவேண்டும் , மதம் மாற மறுப்பவர்களை எப்படி தண்டிக்கவேண்டும் , ஜிசியா வரி எப்படி விதிக்கவேண்டும் போன்ற அறிவிப்புகள் ] தான் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன ..வேறு எதுவும் புதிதாக‌ சேர்க்கப்படவில்லை... இருப்பினும் அந்த கண்காட்சி தடை செய்யப்பட்டது ...காரணம் மத உணர்வுகள் புண்படுமாம்...

ஆனால் , இன்று என்ன நடக்கிறது? நம் ராணுவத்துக்கு எதிராக எப்படிப்பட்ட அவதூறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன? வேண்டுமென்றே ஐந்து வயது குழந்தைகளையெல்லாம் கொண்டுபோய் போராட்ட களத்தில் நிறுத்தி , பின்பு அந்த குழந்தைகள் காயமடைந்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள்... நாம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் , ஐந்து வயது குழந்தைக்கு போராட்டம் நடக்கும் இடத்தில் என்ன வேலை ? என்பதுதான்.... இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாம் ராணுவத்தின் மீது கல் எறிபவர்கள் மீது நடத்தப்படும் பதில் தாக்குதலில் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது நம் ராணுவ மருத்துவமணைகளில்தான்... இதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் ...ராணுவ மருத்துவமணையில்தான் சிறப்பான சிகிச்சை அளிப்படுகிறது என்று..தன்னை தாக்குபவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது நம் ராணுவம்....



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 காஷ்மீர் கற்றுத்தரும் பாடம் - திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

இந்த சிமி அமைப்பின் பின்னால் உள்ள அரசியல் பிரபலம் யார் தெரியுமா? வழக்கம்போல காங்கிரஸ்காரர்தான்... காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தான் அவர்..சிமி அமைப்பு தடை செய்யப்பட்டபோது , அதை நீக்கவேண்டும் என்று வாதாடியவர் சல்மான் குர்ஷித்.. பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒழித்த போலீஸ் உயர் அதிகாரி திரு. கே.பி. எஸ். கில் அவர்கள் ஒருமுறை , இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உள்ள பெரிய பிரச்சினை அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப வாதம்தான் என்றார்...

காஷ்மீரில் பயங்கர‌வாதம் வேரூன்றியதற்கு மிக முக்கிய காரணம் இந்த போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள்தான்...இவர்கள்தான் காஷ்மீரில் ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பிற்கு வாசலை திறந்துவிட்டவர்கள்..அதன்பின்பயங்கரவாதம் பரவுவதற்கான மனங்களை உருவாக்கியது ஜமாயத் எ இஸ்லாமி...

2006 ம் ஆண்டு சோனியா தலைமையிலான மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் 35 ஹிந்துக்கள் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டனர்...இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள்... எங்கோ எவனோ படம் எடுத்ததற்கு இங்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தார்கள் இஸ்லாமியர்கள்... நம் தேசத்தில் இத்தனை ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது ஏன் ஹிந்துக்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை?

அங்கேதான் இருக்கிறது நம் மதச்சார்பற்ற ஊடகங்களின் நரித்தனம்... நாம் முதலில் குறிப்பிட்டதைப்போல காஷ்மீரி பண்டிட்களை அகதிகள் என்று குறிப்பிடாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவது...பயங்கரவாதிகள் [ டெரரிஸ்ட்ஸ் ] என்று குறிப்பிடாமல் , மிலிட்டன்ட்ஸ் என்று குறிப்பிடுவது....ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் , தீவிரவாதிகள் ஹிந்துக்களை தூண்டிவிடப்பார்க்கிறார்கள் ,ஆகவே ஹிந்துக்கள் உனர்ச்சி வசப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதுவது போன்ற அயோக்கியத்தனங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன நம் ஊடகங்கள்...

2005 ம் ஆண்டு சுதந்திரதினத்தன்று காஷ்மீரில் ஐந்து ஹிந்துக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்...இதைப்பற்றி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் ஐந்து ஹிந்துக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்று செய்திவெளியிட்டனர்...ஆனால் தி ஹிந்து எப்படி செய்தி வெளியிட்டது தெரியுமா? கடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் காஷ்மீரில் ஏழு குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது...ஐந்து எப்படி ஏழானது? அதற்கும் காரணம் உண்டு..பொதுவாக செய்தித்தாள்கள் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்றுதான் செய்திவெளியிடும்.. அதற்கு முதல் நாள் பி.டி.சி என்ற அமைப்பைச்சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களையும்பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றிருந்தனர்...அந்த சம்பவத்தையும் , ஐந்து ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் ஒன்றாக சேர்த்து ஏழு குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது...ஆக , கொல்லப்பட்டவர்கள் ஹிந்துக்கள் ... கொன்றவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதை கவனமாக மறைத்துவிட்டார்கள்...

இந்த செய்தியை படிக்கும் எவருக்கும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றுதான் தோன்றும்..ஒரு ஹிந்து குடும்பம் கொல்லப்பட்டது என்று செய்தி வெளியானால் , நமக்கு ஒரு கோபமும் , ஆத்திரமும் தோன்றும்... அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் இவர்கள்...ஆனால் இதே ஊடகங்கள்தான் இப்போது நம் ராணுவம் காஷ்மீரில் வெறியாட்டம் ஆடுவதாக அனுதினமும் பிரச்சாரம் செய்கிறார்கள்...காரணம் அந்நிய தேசத்தில் இருந்து இவர்களுக்கு வந்து குவியும் பணம்தான்...ஆக , நம் ஊடகங்கள் நமக்கு எதிராகவே இருக்கிறார்கள்..ந‌ம் அறிவுஜீவிகளும் நமக்கு எதிராக இருக்கிறார்கள்...

இந்த நிலையில் நாம் என்ன செய்வது? காஷ்மீரில் நடக்கும் கொடூரங்களையும் , ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் நம் மக்களிடம் நாம் எடுத்துச்செல்லவேண்டும்... கண்காட்சிகள் வாயிலாகவும் , பொதுக்கூட்டங்கள் , கருத்தரங்கங்கள் மூலமாகவும் இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்....

ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்..... தி ஹிந்து என்று பெயர் இருப்பதால் மட்டும் அது நமக்கு ஆதரவான பத்திரிக்கை என்று நினைத்துவிடக்கூடாது..உண்மையில் அது Anti - Hindu...தேச நலனுக்கு எதிராக எந்த பத்திரிக்கை செயல்பட்டாலும் சரி , அவர்களை நாம் புறக்கணிக்கவேண்டும்...சென்னையில் , திருவல்லிக்கேணியிலும் , மயிலாப்பூரிலும் வசிக்கும் மக்கள் , ஒரே ஒரு மாதம் மட்டும் தேச நலனுக்காக , தேசவிரோத செய்திகளை வெளியிடும் தி ஹிந்து பத்திரிக்கையை நாங்கள் வாங்கமாட்டோம் என்று புறக்கணித்தால் போதும்...அடுத்த மாதத்தில் இருந்து , அது தேச பக்தியுள்ள நாளிதழாக மாறிவிடும்...

இனி , காஷ்மீர் விவகாரத்தில் இருந்து நாம் பெறவேண்டிய எச்சரிக்கை என்ன?

1920களில் லாகூரில் வசித்து வந்த ஒரு ஹிந்து குடும்பத்தை எடுத்துக்கொள்வோம்... அப்போது அவர்களிடம் யாராவது சென்று , இன்னும் இருபத்தைந்து வருடங்களில் நீங்கள் வசிக்கும் லாகூர் இஸ்லாமிய நாட்டின் ஒரு பகுதியாகிவிடும்... நீங்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு அகதிகளாக அடித்து விரட்டப்படுவீர்கள் என்று சொல்லியிருந்தால் அவர்கள் நம்பியிருப்பார்களா? நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்கள்..அப்படியெல்லாம் எதுவும் நடக்காது..இங்குள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் நல்லவர்கள்...எங்கள் நண்பர்கள். .,....அவர்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள்...

1960களில் கூட , காஷ்மீரில் வசித்து வந்த ஒரு ஹிந்து பண்டிட் குடும்பத்தினரிடம் போய் , இன்னும் இருபது வருடங்களில் நீங்கள் இங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டப்படுவீர்கள் என்று சொல்லியிருந்தால் அவர்களும் நம்பியிருக்கமாட்டார்கள்.. நாங்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக பழகிக்கொண்டிருக்கிறோம்..எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தாதீர்கள் என்று சொல்லியிருப்பார்கள்...

ஆனால் நடந்தது என்ன?

இன்று தமிழகத்தில் வசிக்கும் எந்த ஹிந்துவிடமும் போய் , இன்னும் கொஞ்ச நாளில் நாம் இங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டப்படுவோம் என்று சொல்லிப்பாருங்கள்... யாரும் ஏற்கமாட்டார்கள்... நாங்களும் இஸ்லாமியர்களும் மாமன் மச்சானாக பழகி வருகிறோம் என்பார்கள்... இதே மாதிரி சொல்லிக்கொண்டிருந்த லாகூர் ஹிந்துக்களும் , காஷ்மீர் பண்டிட்களும் பின்னாளில் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... நமக்கும் இஸ்லாமியர்களோடு மாமன் மச்சானாக பழகவேண்டும் என்று ஆசைதான்..அது நல்லதுதான்...ஆனால் உள்ளே ஒரு விஷ ஊற்று ஊறிக்கொண்டிருக்கிறது...அதுதான் அராபிய , வஹாபிய பய‌ங்கரவாத இஸ்லாம்... ஒட்டுக்காக , போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் இந்த பாம்புக்கு பாலூற்றி வளர்க்கிறார்கள்... அது நம்மை , நம் சந்ததியினரை வருங்காலத்தில் அகதிகளாக அலையவைத்துவிடும்... காஷ்மீர் நமக்கு கற்றுத்தரும் பாடம் இதுதான்....



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சரி...காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

முதலில் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பது போல , காஷ்மீர் முழுக்க பிரிவினைவாதம் எழுவதில்லை.... சொல்லப்போனால் , காஷ்மீரின் ஒரு பகுதியில் மட்டுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்...

உண்மையில் , காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பிரதேசம் மூன்று பிரிவுகளைக்கொண்டது... அவை ... ஜம்மு , லடாக் மற்றும் காஷ்மீர்....ஜம்முவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்... லடாக்கில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்...இஸ்லாமியர்கள் காஷ்மீர் பகுதியில் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளனர்...இன்னும் சொல்லப்போனால் , காஷ்மீர் பகுதியிலும் , மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிரிவினைவாத கோரிக்கை வலுவாக உள்ளது... ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த காஷ்மீரையும் பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்..

.

காஷ்மீர் பிரச்சினை பற்றி டாக்டர். அம்பேத்கர் அவர்களிடம் கேட்கப்பட்டது... அதற்கு அவர் காஷ்மீரை விடுங்கள் ..முதலில் ஜம்முவிலும் , லடாக்கிலும் உள்ள '' நம் மக்களை '' நாம் காப்பாற்ற வேண்டும் என்றார்...அவர் நம் மக்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிகிறதல்லவா?

ஜம்முவிலும் . லடாக்கிலும் உள்ள வளங்களை காஷ்மீர் ரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிக்கொண்டிருக்கிறது...2001ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் , மிக முக்கியமான ஒரு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்கள்......அது என்னவென்றால் காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண்டும் ...ஜம்மு , லடாக் மற்றும் காஷ்மீர்...இந்த மூன்றையும் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கவேண்டும்... இன்றைக்கும் தேசம் முழுக்க இருக்கும் தேசபக்தர்கள் அனைவரின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது...

ஏனென்றால் ஜம்மு மின்சாரத்தை , அதிகமாக உற்பத்தி செய்கிறது.... சுற்றுலா மூலம் பெரும் வருமானத்தை ஈட்டுகிறது... ஜம்மு தனியாக பிரிந்துவிட்டால் காஷ்மீர் வருமானமில்லாமல் திண்டாட நேரிடும்...அப்பொதுதான் காஷ்மீரில் உள்ள மடையர்களுக்கு புரிய ஆரம்பிக்கும்....இன்று என்ன நடக்கிறது..? . ஜம்முவில் வரும் வருமானத்தை காஷ்மீர் உறிஞ்சிக்கொழுத்து , நம் மீது கல்லெறிந்துகொண்டிருக்கிறது..[ .எல்லா காஷ்மீரிகளும் அல்ல...அங்குள்ள பிரிவினைவாதிகள்... ] இன்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இந்த தீர்வைத்தான் அன்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார்...


இந்தியாவுக்கு வந்த இட்சாக் ஷமீர் என்னும் இஸ்ரேலிய அரசியல்வாதி காஷ்மீரை நீங்கள் காப்பாற்றவேண்டுமானால் , அங்குள்ள மக்கள் தொகையின் இயற்கையை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்றார்...இத்தனைக்கும் அவர் அங்குள்ள ஒரு மிதவாத அமைப்பைச்சேர்ந்தவர்..

காஷ்மீரில் ஹிந்துக்கள் பெருமளவில் குடியேற்றம் செய்யப்படவேண்டும்...அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்...அது எந்த அரசாக இருந்தாலும் சரி...ஹிந்துக்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதி செய்யப்படுகிறதோ , அதைப்பொறுத்துத்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பது உறுதிசெய்யப்படும்... இதை செய்யும் பட்சத்தில் காஷ்மீர் முழுமையாக நம்மோடு இணையும்...

இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் முழுமையாக , விரைவாக முன்னேறும் பட்சத்தில் , பாக்.ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மக்களிடமும் அது மனமாற்றத்தை ஏற்படுத்தும்..அவர்களும் நம்மோடு இணையும் வாய்ப்பு ஏற்படும்..இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்...

அதே சமயம் , 1988ல் காஷ்மீரில் என்ன நடந்ததோ , அதுதான் தற்போது தமிழகத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.... அது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.. இதுதான் காஷ்மீர் நமக்கு கற்றுத்தரும் பாட



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard