New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல்-ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் - சிவஸ்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல்-ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் - சிவஸ்
Permalink  
 


கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1 August 21, 2015 - சிவஸ்ரீ விபூதிபூஷண்

மூலம்: ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்
தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர்.  சாதியத்தின் கோரப் பிடியில் சிக்கியிருந்த சமுதாயத்தை அதனின்றும் விடுவிக்க வந்த விடிவெள்ளி.  வேதஞானமும் தெய்வ வழிபாடும் அனைத்து இந்துக்களும் உரிமையானவை என்று  ஆதாரபூர்வமாக நிறுவியர். தாழ்த்தப் பட்டுக் கிடந்த மக்களின் உரிமைகளுக்காகவும்  பெண்கல்விக்காகவும் முதற்குரல் எழுப்பியவர். கிறிஸ்தவ மதமாற்றங்களையும் மிஷநரிகளின் சூழ்ச்சிகளையும் நேரடியாக விமர்சித்தவர். ஸ்ரீநாராயண குரு, சுவாமிகளைத் தனது முதன்மையான ஆசானாகவும் வழிகாட்டியாகவும் கருதினார்.

மாபெரும் அறிஞரான சுவாமிகள் உரைநடையாகவும், கவிதையாகவும் மலையாளத்தில் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் ஒரு நூலை, ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சிவஸ்ரீ. விபூதிபூஷண். இந்த மொழியாக்கத்தினை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து பெருமையடைகிறது

- ஆசிரியர் குழு

ஆங்கிலமொழி பெயர்ப்பாளரின் அறிமுக உரை:

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்

கிறிஸ்துமதச்சேதனம்“, ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று.  இந்த நூலின் தனிச்சிறப்பு, கிறித்தவ மதத்தினை ஒரு ஹிந்துவின் நோக்கில் ஆராய்கிற நூல் என்பதாகும்..

கிறிஸ்தவ மதத்தினைக் கண்டித்து மலையாள மொழியில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.  மலைநாடாம் கேரளத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது, மிசனரிகள் ஏழைஎளிய மக்களை ஆசைகாட்டி மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்ட காலக்கட்டத்தில் மலைநாட்டின் ஆன்மிக விடிவெள்ளிகளில் ஒருவராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளால் — கிறிஸ்தவ மதத்தினை கேள்வி கேட்பதற்கே எந்த ஒரு ஹிந்துவும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில் — இந்த நூல் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில்  எல்லாமதங்களும் சமம்(எம்மதமும் சம்மதம்) என்ற எண்ணம் ஹிந்துக்களிடத்தில் மேலோங்கி இருந்தது. பின்னாளில் சர்வதர்ம சமபாவம் என்று இந்தக்கருத்து வழங்கப்பட்டது[ii]. மாற்றுமதத்தவர்கள் ஹிந்து தெய்வங்கள், வேத சாஸ்த்திரங்கள் ஆகியவற்றை இழிவுபடுத்தினாலும் கூட அவர்களைக் கேள்விக்கேட்கவோ மறுக்கவோகூட எந்த ஹிந்துவும் தயங்கியகாலம் அது. ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்தான் இந்தத் தேக்கநிலையை உடைத்து முதன்முதலில் கிறிஸ்தவமதத்தினை விமர்சித்தார்.

கிறிஸ்தவமதத்தினை விமர்சிப்பதற்கான தமது நோக்கத்தினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் இந்த நூலில் இப்படிக் கூறுகிறார்.

“தமது புனிதநூல்களை கடவுளின் வாக்காக எல்லாமதத்தவரும் கருதுகின்றனர். யாரேனும் கிறிஸ்தவமதத்தின் புனிதநூலை ஆராய்ந்து, அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, இவை பொய் என்று சொன்னால், அந்தமதத்தினர் இந்தநூல் கடவுளால் அருளப்பட்டது, கடவுளின் வேலை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது, கடவுளின் ஞானம் மனித அறிவைக்காட்டிலும் மேம்பட்டது, கடவுள் தன்னிச்சைப்படி நடக்கவல்லவர் என்றும் சொல்கிறார்கள்.

“அப்படியானால் எல்லா மதங்களையும் உண்மையானவை என்றும் சமமானவை என்றும்தானே கருதவேண்டும்?

“ஆனால் கிறித்தவர்கள் தங்கள்மதம் மட்டுமே உண்மையானது என்று கூறுகிறார்கள். அது தவறானாது. ஆகவே நாம் ஒவ்வொரு மதத்தினையும் ஆராய்ந்து, அதன் நல்ல அம்சங்களையும் தவறான அம்சங்களையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது”.

தனது முன்னுரையில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் சொல்கிறார் “கிறிஸ்தவப்பாதிரிகளும் அவர்களது ஊழியக்காரர்களும் ஹிந்துசமயம், தெய்வங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றை அடிப்படையில்லாமல் இழிவாக விமர்சிப்பதைக் கேட்கிறோம். அவர்களது வெளியீடுகளான அஞ்ஞானகுடாரம்(கோடாரி),  திரிமூர்த்தி லக்ஷணம்,  குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு போன்ற நூல்களையும் கண்டோம். அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளின் மக்களை தொப்பிகள், ஆடைகள் போன்றவற்றைத் தந்து, ஆசைகாட்டி, கிறிஸ்தவமதத்திற்கு மாற்றமுயல்வதையும் கண்டோம். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டும், ஒன்றும் செய்யாமல் வாளாவிருப்பது தர்மமாகாது”.

அந்தக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் வெறியாட்டம் எப்படி இருந்தது என்பதை சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர்[iii] பின்வருமாறு எழுதுகிறார்.

இன்றும் கோவிலுக்கு முன்னால் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம்

“கேரளத்தில் ஆங்கிலேய ஆட்சியின் வருகையோடு கிறிஸ்தவ மிஷனரி வேலைகள் வலுவடைந்தன. கோயிலுக்கு செல்லும் ஹிந்துக்களைத் தடுத்து நிறுத்தி, சாத்தானை[iv]வழிபடக் கோயிலுக்குப் போகாதீர்கள், இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுள் அவரை நம்புங்கள், கிறிஸ்தவமதத்தில் சேருங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இருந்தது. அன்று அவர்களைத் தடுக்கவோ, மறுக்கவோ, எதிர்க்கவோ எந்த ஒரு ஹிந்துவுக்கும் தைரியம் இல்லாமல் இருந்தது.  இந்தச்சூழலில்தான் ஸ்ரீலஸ்ரீசட்டம்பி சுவாமிகள் கிறிஸ்துமதச்சேதனம் என்ற இந்த அரிய நூலை ஷண்முகதாசன் என்ற புனைப்பெயரில் எழுதி வெளியிட்டார்”.

சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் மேலும் கூறுகிறார்.

“ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அறிவார்ந்த தமது சீடர்களில் சிலருக்கு இந்த நூலைக்கற்பித்து, அவர்களை சிறந்த சொற்பொழிவாளர்களாகவும் பயிற்றுவித்தார்.  கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பொதுவிடங்களிலும் கோயில்களிலும் கூடும் ஹிந்துக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது, சுவாமிகளின் இந்த சீடர்களும் கிறிஸ்தவத்தினை கண்டிக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். பின்னாளில் 1890க்குப்பிறகு சுவாமிகளின் இரு முக்கிய சீடர்கள் கேரளம்முழுவதும் பிரயாணம்செய்து கிறிஸ்துமதச்சேதனத்தில் உள்ளக் கருத்துக்களைப் பரப்பினார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தடுத்து முறியடிப்பதற்கு மிகச்சிறந்தவழி அவர்களது கிறிஸ்தவம் மட்டுமே உண்மையானமதம் என்ற கருத்தினை நிராகரிப்பதுதான் என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெளிவாக அன்றே உணர்ந்திருந்தார்.

இந்த நூலில் சுவாமிகள் கிறித்தவமதத்தின் ஆதாரக்கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, தமது ஆணித்தனமான மறுக்கவியலாத வாதங்களால் உடைத்தெரிகிறார். அவர்களின் புனித நூலிலில் இருந்தே மேற்கோள்களைக்காட்டி, ஜெஹோவாவும் இயேசுவும் தெய்வீகத்தன்மை அற்றவர்கள் என்று நிறுவுகிறார். மேலும் பைபிள் சில கைதேர்ந்தவர்களால் புனையப்பட்டக் கட்டுக்கதையென்றும் அவர் சொல்கிறார்.

இந்த நூலின் முடிவுரையில் எல்லா ஹிந்துக்களும் இந்த நூலை ஆழ்ந்து படித்து, கிறிஸ்தவம் எப்படி ஹிந்துசமயத்திடமிருந்து வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அடிகள் கூறுகிறார்.இந்த நூல் சொல்லும் அரிய பாடம் என்னவென்றால், எல்லா மதங்களும் சமம் என்ற ஹிந்துக்களின் சொலவடை ஒரு ஆதாரமற்ற புனைவு என்பதுதான். ஹிந்துக்கள் மட்டுமே இதை நம்புகிறார்கள். இதை யூதர்களோ, கிறித்தவர்களோ, அல்லது இஸ்லாமியரோ ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் மதம் என்றப் போர்வையில் இருக்கும் ஏகாதிபத்திய அரசியல் கருத்தியல்கள் என்பதை ஹிந்துக்கள் அனைவரும் உணரவேண்டும். ஹிந்துமதத்திலிருந்து ஒருவர் வெளியேறும்போது நமது எண்ணிக்கையில் ஒருவர் குறைகிறார் என்பதோடு நமது எதிரிகளில் ஒருவர் அதிகரிக்கிறார் என்பதும் உண்மை என்ற சுவாமி விவேகாநந்தரின் கருத்தினை அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டும்.

இன்றைய நமது சமயச்சூழல் இன்னும் படுமோசமாகவில்லை என்றாலுமகூட மோசமாகவே உள்ளது. மிஷனரிகள் இன்றும் ஹிந்துமதத்தினை எந்த ஆதாரமுமோ, தர்க்கமோ, நியாயமோ இன்றி இழிவாக விமர்சிப்பதுத் தொடர்ந்து நாம் பார்க்கமுடிகிறது. இந்த குழப்பமானக் காலக்கட்டத்தில் ஹிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கற்றறிந்த ஹிந்துக்களின் கடமையாகும். எளிய மக்கள் வறுமை, அறியாமை ஆகியவற்றில் மூழ்கியிருப்பது தொடரும்வரை அவர்கள் மிஷனரிகளால் ஏமாற்றப்படுவது தொடரத்தான் செய்யும். இந்த நூலைக்கற்பவர்களுக்கு இந்த் நூல் ஓர் அரணாகவும் மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான கருவியாகவும் பயன்பட்டு சனாதன தர்மமாம் தொல்நெறியைப் பாதுகாக்கும்.

– ஆங்கில மொழிபெயர்ப்பாளார்

 தமிழ்மொழிபெயர்ப்பாளனின் குறிப்புரை

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் சைவசித்தாந்த நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த அரியநூலைக் கண்டேன். தரவிறக்கம் செய்து வாசித்தேன்.

இந்த நூலில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் பயன்படுத்திருந்த தர்க்க நியாயமும், அவரது சைவசித்தாந்த நோக்கும், எனது உள்ளத்தில் ஒரு பெரும் தாக்கத்தினை உருவாக்கின. இந்த நூலின் சிறப்பு தத்துவார்த்தமாக வரலாற்று ரீதியாக இது கிறிஸ்தவத்தினை நிராகரிப்பதாகும். பதி, பசு, பாசம் ஆகிய மூன்றைப்பற்றி இயேசுமதம் என்னசொல்கிறது என்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உயர்வானவையோ சரியானவையோ அல்ல என்று சுவாமிகள் சொன்னபோது — அவருக்கு வயது நாற்பது கூட ஆகவில்லை என்று படித்தபோது — அவரது மேன்மை, மேதமை புலப்பட்ட்து.

இந்த நூலைத்தொடர்ந்து வாரம்தோரும் ஒரு பகுதியாக மொழிபெயர்த்து, நமது தமிழ் ஹிந்துவில் வெளியிட விரும்பினேன். அதற்கு இசைவளித்த ஆசிரியர் குழுவினர்க்கு நன்றி. அன்புக்குறிய வாசகர் பெருமக்கள் இதைப்படித்து விவாதிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

– சிவஸ்ரீ.விபூதிபூஷண்

குறிப்புகள்:

 இந்த நூலை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் 1890 இல் எழுதினார். இதற்கு முன்னர் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த கற்பனைக்கழஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் ஏசுமத நிராகரணம் என்ற நூலை எழுதினார். ஆனால் அந்த நூலின் ஒரு சிலபாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

[ii] சர்வதர்ம சமபாவம் என்பது வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ காணப்படும் ஒரு மந்திரம் அல்ல.ஆனால் இது பின்னாளில் மஹாத்மா காந்தி அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கோசமாகும்.

[iii] சுவாமி  வித்யானந்த தீர்த்த பாதர் எழுதிய ஸ்ரீ மத் தீர்த்தப்பாத பரமஹம்சர். தொகுதி I, அத்தியாயத்தலைப்பு “கிறிஸ்தவப்பாதிரிகளின் மதமாற்ற முயற்சிகள்”.

[iv] ஹிந்து தெய்வங்களை சாத்தான் என்று கிறிஸ்தவ மிசனரிகள் அன்றுமுதல் இன்றுவரை இழிவு செய்துவருகிறார்கள்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
RE: கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல்-ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் - சிவஸ
Permalink  
 


 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் முன்னுரை:

மஹாஜனங்களே! சாமானியரும் கிறிஸ்தவமதத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது இந்த நூலின் நோக்கமாகும். கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களது ஊழியர்களும் ஆதாரமில்லாமல் ஹிந்துமதத்தினையும், வேதங்கள், உபநிஷதங்கள் [ஸ்மிருதிகள்] போன்ற புனிதநூல்களையும் ஆதாரமில்லாமல் இழிவாக விமர்சித்துவருவதைக் கண்டும், கேட்டும் வருகிறோம். அவர்கள் ஹிந்துமதத்தினை இழிவுபடுத்தும் அஞ்ஞானக்குடாரம்(கோடாரி), திரிமூர்த்தி லக்ஷணம், குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு என்ற பெயரில் பலநூல்களை எழுதி வெளியிட்டுவருவதையும் கண்டோம். மேலும் அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளைச்சேர்ந்த மக்களை ஆசைகாட்டி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றி, அவர்களை நரகக்குழியில் தள்ளுகிறார்கள்.

மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று.  நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்.

இதைவிடப் போற்றுதற்குரிய புண்ணியகாரியம் ஏதுமில்லை என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

தவம், தானம், ஜபம், யக்ஞம், வேத அத்யயனம்(ஓதுதல்) ஆகியவற்றை உங்களுடைய சுயநலத்திற்காகச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! ஆனால் மிஷனரிகளின் மதமாற்றத்தினைத் தடுக்கும் உங்களதுசெயல்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பெரும் புகழைக் கொடுப்பதோடு, அறியாமையில் இருக்கும் மக்கள் கிறிஸ்தவப் படுபாதாளத்தில் விழுவதிலிருந்துக் காப்பாற்றவும் முடியும்.

ஹிந்து மலையாளிகளைக் கேட்கிறேன். உங்களுடைய சுயநலத்தைமட்டும் பார்த்தால் நீங்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகமாட்டீர்களா?hindu5

இனிமேலாவது கல்வியறிவுபெற்ற எல்லாக ஹிந்துக்களும் தமது செயலற்றத் தன்மையை விடுத்து, தமது அறிவு, ஆற்றல், செல்வம், ஆகியவற்றை கிறிஸ்தவ மிஷனரிகளின் தீயநடவடிக்கைகளைத் தடுக்கமுயல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு அணில்கூடத் தன்னால் இயன்றதைக் கொடுக்கிறது”. “மஹாலக்ஷ்மி நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கே அருள் புரிகிறாள்” என்ற முதுமொழிகளால் உத்வேகம்பெற்று, என்னிடம் குறைவான நிதியாதாரம் இருந்தாலும்கூட இந்த நூலை வெளியிடுகிறேன்.

கிறிஸ்துமதச்சேதனம் [கிறிஸ்தவமத நிராகரிப்பு] என்ற இந்த நூல் மதமாற்றத்தினைத்தடுக்கும் நமது உயரிய நோக்கினை அடைவதற்காக நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக அமைகிறது. பெரியோர்களே! உங்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கின்றேன். இந்தநூலில் என் கருத்துக்களிலும் வாதங்களிலும் காணப்படுகின்ற குற்றம் குறைகளைக் கண்டு, சுட்டிக்காட்டினால் அடியேன் பாக்கியம் அடைந்தவனாவேன்.

– ஷண்முகதாசன் [சட்டம்பி சுவாமிகள்]



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

பகுதி – 1

பதிஇயல்

இறைவன்

படைப்பின் நோக்கம்

ஓ கிறித்தவ போதகர்களே!

கர்த்தராகிய ஜெஹோவா உயிர்களையும் உயிரற்ற ஜடப்பொருள்களையும் கொண்ட இந்த உலகைப்படைத்தார் என்று உங்கள் பைபிள்[ii] கூறுகிறது. தர்க்க[iii] நியாயத்தின்படிப் பார்த்தால் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். படைப்பு என்பது ஒரு காரியமாக, விளைவாக இருப்பதால் அதற்குக் காரணமாக ஒருநோக்கம் இருந்தாகவேண்டும். அடிமுட்டாள்கூட ஒருநோக்கமும் இன்றி எந்தக்காரியத்தையும் செய்யமாட்டான். எனவே  உங்கள் கடவுளாகிய ஜெஹோவா உலகைப் படைத்தது ஏன்? அவரது படைப்பின் நோக்கம் என்ன? அது சுயநலமானதா? சுயநலமற்றதா? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

உங்கள் புனித நூலாகிய பைபிள் சொல்கிறது

நான் அவனைப்படைத்தேன் எனது மகிமைக்காகவே (ஈசையா 43:7).

ஜெஹோவாகிய தேவன் உலகைப் படைப்பதற்குமுன்னர் ஆன்மாக்கள் ஏதும் இல்லை என்பது கிறிஸ்தவர்களாகிய உங்களது நம்பிக்கை. எனவே படைப்பானது உலகம், மனிதர் ஆகியோரின் தோற்றத்திற்குமுன்னே இருந்த ஜெஹோவாவிற்கு மட்டுமே அது பயன் தருவதாக இருக்கவேண்டும். ஜெஹோவாவின் நோக்கம் சுயநலமானது என்பது இதனால் வெள்ளிடைமலை.

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஆதியில் ஆதாம் ஏவாள் என்ற அறிவற்ற இரு மூடமனிதர்களைப் படைத்தார் என்று உங்கள் புனிதநூலான பைபிள் சொல்கிறது. அவர்கள் வாழ்ந்த ஈடன் தோட்டத்தில்  பயனற்றதொரு மரத்தினைப் படைத்து அதன் கனிகளை உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு ஆணையிட்டார்.

தீய சக்தியாகிய சாத்தானை அழிக்காமல் உலகில் சுதந்திரமாக உலவ அவர் அனுமதித்தார். சாத்தான் அந்த அப்பாவி மனிதர்களைக் கெடுப்பதையும் தடுக்கவுமில்லை, உங்கள் ஜெஹோவா.

எனவே சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டு, மதிமயங்கிய ஆதிமனிதர்கள், தமது இன்பத்திற்காக, தம்மைப் படைத்தவனின் ஆணையைமீறி, அந்த மரத்தின் கனிகளை உண்டார்கள். தமது படைத்தோனின்  ஆணையினை மீறிய அவர்கள் தம்மைப் படைத்தவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகிப் பாவிகளானார்கள்.

அதன்பிறகு, ஆன்மாக்களைப்[iv]படைக்காமல், ஜெஹோவா ஆதிமனிதரின் சந்ததிகளாக ஆன்மாக்களைப் பிறக்கவிட்டார். படைத்தவனின் ஆணைக்கு கீழ்படியாமல் பாவத்தினைச் செய்த ஆதிமனிதர்களின் வழிவழியாக வந்தவர்களும் பாவிகளாயினர்[v]. பாவச்சுழலில் சிக்கிக்கொண்ட அவர்களுக்கு தமது பாவத்திலிருந்து இரட்சிப்பு அவசியமாகிறது[vi].

ஜெஹோவாவின் முதற்படைப்பானது பாவிகள் உருவாக வழிவகுத்ததால் அது இரட்சிப்புக்கும் மறைமுகமான காரணமானதாகத் தெரிகிறது.

பாவிகளை சோதிப்பதே அவர்களது மீட்புக்கு வழியாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. மனித ஆன்மாக்கள் தூய்மையானவையா, கடவுளுக்குக் கீழ்ப்படிபவையா, அல்லது தூய்மையற்றவையா, ஜெஹோவாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவையா என்பதை அறிவதற்காக, தீர்மானிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக, அவைகள் படைக்கப்பட்டன.

அவரது கட்டளைகளுக்கு பணிந்து நடக்கும் மனித ஆன்மாக்களுக்கு சொர்க்கமும், கீழ்ப்படிந்து நடவாதவர்களுக்கு நரகமும் கிடைக்கும். தூய மனித ஆன்மாக்கள் எல்லாப் புலனின்பங்களையும் சொர்க்கத்தில் தடையின்றி அனுபவிப்பார்கள். தூய்மையற்ற மனித ஆன்மாக்கள் நரகத்தில் எல்லையில்லாத துன்பத்தில் எப்போதும் மூழ்கித் துன்பத்தைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

மீளமுடியாத நரகத்தின் அச்சத்தில் ஜெஹோவாவிற்கு அஞ்சி நடுநடுங்கி மனித ஆன்மாக்கள் அவரது மகிமையை போற்றிப்புகழ் பாடுவார்கள். அவரது மகிமை அந்தப்புகழ்ச்சியால் ஒளிரும். அப்படிப்பட்ட புகழ்ச்சிக்காகவே தனது மகிமையை விளங்கச்செய்யவே, அவர் படைப்பை மேற்கொண்டார். ஆகவே ஜெஹோவாவின் படைப்பின் நோக்கம் அவரது சுயநலத்திற்காக மட்டுமே இருக்கமுடியும்.

தனது மகிமையை மீயுயர்வை மனிதர்கள் தெரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் தன்னைப் போற்றிப் புகழ்ந்து தொழவேண்டும் என்பதற்காக ஜெஹோவா முதற்படைப்பைச் செய்தார்.  மனிதர்கள் தன்னை மகிமைப் படுத்துவதற்காக, கனம் பண்ணுவதற்காக, ஜெஹோவா படைப்பினை மேற்கொண்டதால் முதற்படைப்புக்கு முன்னர் அவருக்கு மகிமை ஏதும் இருக்கவில்லை என்று தெரிகிறது. இதனை தனது குறைபாடாக அவர் கருதியிருக்கவேண்டும். தனதுப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்வதற்காகவே தனது முதற்டைப்பை அவர் நிகழ்த்தியிருக்கலாம்.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவாவின் மகிமைப் பூரணமானதா? முழுமையானதா?

அப்படி அது நிறைவாக படைப்புக்கு முன்னரே இருந்திருந்தால், அவர் அதனை அதிகரிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்காதே? அவரது மகிமை முழுமையாக இருந்திருந்தால் அவர் மனிதர்களைப் படைக்கவேண்டிய அவசியமே அவருக்கு இருந்திருக்காது அல்லவா?. எனவே ஜெஹோவா பூரணத்துவம் நிறைந்தவரும் அல்லர் சுயநலமற்றவரும் அல்லர்.

ஆன்மாக்களின் நலனுக்காக அவர் உலகைப் படைத்திருக்கவேண்டிய அவசியம் ஜெஹோவாவிற்கு இருந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. ஏனென்றால் முதற்படைப்பிற்கு முன்னர், உயிர்களோ ஆன்மாக்களோ இல்லை என்றல்லவா கிறிஸ்தவர்களாகிய நீங்கள்  நம்புகிறீர்கள். ஆகவே ஜெஹோவாவின் முதற்படைப்பின் நோக்கம் முற்றிலும் சுயநலமானதே.

மனித உயிர்களின் வாயிலாக தனது மகிமையைப் பிரகாசிக்கச் செய்வதற்காவே ஜெஹோவா முதற்படைப்பைச் செய்தார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் காரணமாகிய மகிமையின் பிரகாசமும் விளைவாகிய முதற்படைப்பும் ஒன்றையொன்று சார்ந்ததாகிவிடும். காரணத்தினைத்தான் விளைவு சார்ந்திருக்கவேண்டும். காரியத்தினை (விளைவு) காரணம் சார்ந்திருக்கக்கூடாது.  விளைவும் காரணமும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அன்யோன்யாஸ்ரயம் என்ற தர்க்கக் குற்றமாகும். ஆகவே அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதற்படைப்புக்கு முன்னரே தன்னுடைய மகிமையை உணர்வதற்கு அவர் மட்டுமே இருந்தார். அப்போதும் அவரது மகிமை முழுமையாகவே இருந்தது பிரகாசித்தது. ஆனால் அதை அறிவதற்குப் பாராட்டுவதற்கு கனம் பண்ணுவதற்கு யாரும் இல்லை. அதற்காகவே மனித உயிர்கள் படைக்கப்பட்டன என்று நீங்கள் வாதம் செய்யலாம். அப்படியாயினும் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா தனது பற்றாக்குறையையை உணர்ந்ததாலே தமது மகிமையைப் பிரகாசிக்கச் செய்யவே படைப்பினைச் செய்தார் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

தனது போதாமையை உணர்ந்ததாலும், அதனைப் போக்குவதற்கு முதற்படைப்பினை செய்ததாலும், அவர் எப்போதும் ஆனந்தமயமானவராகவோ அல்லது பரிபூரணராகவோ முழுமையானவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லையே!

தனது மகிழ்ச்சிக்காகமட்டுமே படைப்பைச் செய்த உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிற்கு விருப்பமும் வெறுப்பும் இருப்பதாகத்தான் தெரிகிறது. அவர் தனக்கு மகிழ்ச்சியளிப்பதை விரும்புவதும் அவ்வாறில்லாமல் இருப்பதை வெறுப்பதும் பற்றுதானே! விருப்பும் வெறுப்பும் மாயையின் தன்மைகளாகும். ஆகவே அவர் மாயையின் பிடியிலே சிக்குண்டவர் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

ஆதியில் ஜெஹோவாவிற்கு தனது பற்றாக்குறையைப் போக்குவதற்கு வழிதெரியவில்லை. எனவே அவருக்கு ஆதியந்தமில்லாத எல்லையற்ற ஞானமும் இல்லை என்பதும் கண்கூடு.

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஆரம்பத்திலே மனித உயிர்களைப் படைக்காததால், அவருக்குப் படைப்பாற்றலும் எப்போதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. படைக்கும் சக்தியையும் பின்னாளில்தான் வேறொருவரிடமிருந்தே பெற்றிருக்கவேண்டும். ஆகவே ஜெஹோவாவிற்கு இறைத்தன்மை இல்லை. மற்றவரிடம் படைக்கும் சக்தியைப்பெற்ற இவர் எப்படி மேலான தெய்வமாக இருக்கமுடியும்?

படைப்பாற்றலை மற்றவரிடமிருந்து கடன்பெற்ற ஜெஹோவா என்றும் மாற்றமில்லாதவரோ, முழுமையானவரோ, நிறைவானவரோ அல்லர்.  அவர் ஆதியந்தமில்லாதவரும் அல்லர். தனது மகிமையைப் பிரகாசிக்கச் செய்யவே படைப்பை மேற்கொண்ட அவர் எங்கும் நிறைந்தவரும் அல்லர். தனது மகிமையை விளங்கச் செய்ய மனித உயிர்களைப் படைத்து அவர்களைப் பாவமும் செய்யவைத்து, எப்போதும் மீள இயலாத துன்பம் நிறைந்த நரகத்தில் அவர்களைத் தள்ளும் அவர் நீதியற்றவர், கருணையற்றவர். அவர் எப்படி நல்லவராக இருக்கமுடியும்?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா எல்லாம் அறிந்தவர் (சர்வக்ஞர்) அல்லர். எந்த உயிர்கள் நல்லன, தூயவை, எவை தூய்மையற்றவை, தீயன என்பதைக் கட்டளைகளைக் கொடுத்து பரிசோதித்தே அவர் அறியவேண்டிய அவசியம் இருப்பதால், அவருக்கு எல்லாவற்றையும் அறியும் ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா எல்லாம் வல்லவரும் (சர்வபௌமர்) அல்லர். தானே ஆனந்தமயமானவரும் அல்லர். மனித உயிர்களைப் பாவிகளாக்காமல், துன்பமளிக்காமல் தன்னைப் போற்றச்செய்யும் ஆற்றல் அவருக்கு இல்லாததால் அவர் சர்வவல்லமை கொண்டவராக இருக்க வாய்ப்பே இல்லை.

பைபிளைப்படிக்கும்போது, ஜெஹோவாவை பற்றாக்குறை எண்ணம், துக்கம், பற்று, வெறுப்பு, குறுகிய அறிவு, வரம்புடைய ஆற்றல், அநீதி, கருணையின்மை ஆகிய குணங்களை உடையவராகவே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இவையெல்லாம் உள்ள ஒருவர் இறைவனாக இருக்கமுடியாது. சைவசித்தாந்த சாத்திரங்கள் இந்த குணங்கள் எல்லாம் ஆணவம், கன்மம்(கர்மம்), மற்றும் மாயை என்னும் மும்மலங்களால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்களுக்கே உண்டு என்று சொல்கின்றன. அப்படிப்பார்க்கும் போது உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா மும்மலங்களில் இருந்து இயல்பாகவே சர்வசுதந்திரராக இருக்கும் இறைவன் அல்லர்.

எமது சைவசித்தாந்த நோக்கிலிருந்து மேற்கண்ட குணாதிசயங்களை ஆராயும்போது அவர் ஒரு பசு, ஜீவான்மா என்றே புலனாகிறது.  தனது முந்தைய பிறவிகளில் செய்த கர்மங்களின் விளைவாக உடலெடுத்துப் பிறந்தவர், அறிவு, ஆற்றல் ஆகியவற்றில் அளவும் வரம்பும் உடையவர், இன்பத்தையும் துன்பத்தினையும் அனுபவிப்பவர், வாழ்வு முடிந்ததும் மரணமடைகிற சாமானிய மானுடர் என்பதே விளங்குகிறது.

முதற்படைப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிற்குப் படைக்கவேண்டும் எண்ணம் இருந்ததாக சில கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எந்த நோக்கமுமின்றியும் எப்போது, எங்கே, எப்படி, தனது படைப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அந்த முடிவு அவருடையது மட்டுமே என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இந்தவாதத்தினை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு எந்த ஆதாரத்தினையும் பைபிள் தரவில்லை. எனது மகிமையை வெளிப்படுத்துவதற்காகவே நான் மனிதனைப் படைத்தேன் என்ற பைபிளின் வசனத்திற்கு முற்றிலும் முரணாது, மாறானது இந்த வாதம்.

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா நெடுங்காலத்திற்கு முன்னரே எப்போது, எங்கே எப்படி உலகைப் படைக்கவேண்டும் என்பதனை முடிவு செய்திருந்தால், உலகில் நிகழும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கவேண்டுமே? அவர் தன்னிச்சைப்படியே மனிதர்களுக்கு பாவ புண்ணியத்தினைப் பாராமல் சொர்கத்தையோ நரகத்தையும் முடிவுசெய்பவராகவும் இருக்கவேண்டும் அல்லவா?

மனித உயிர்கள் மீட்புக்குத் தகுதியானவர்களா என்று பரிசோதிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லையே! அதனால் அவர்கள் சொர்க்கத்தினை அடைவதற்கு நம்பிக்கையோடு கடுமையாக உழைக்கச் சொல்லும் பைபிளும் வீணாய்ப்போகும். அதனை மனிதருக்கு வெளிப்படுத்திய ஜெஹோவாவின் விவேகத்திற்கும் அது இழுக்காகவும் ஆகிவிடுமே!

அற்பமானுடர்கள் எங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் படைப்பின் நோக்கத்தினைக் கேள்விக்கு உட்படுத்துதல் தகாது, அவரது செயல்கள் மனிதரின் தர்க்கநியாயத்திற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்டது என்று சில கிறிஸ்தவ அறிஞர்கள் வாதிடுகின்றார்கள்.

அநிஸ்ட்ப்பிரசங்கம் என்னும் தர்க்க நியாயப்பிழை குற்றம். இதனால் விளையும். தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று  நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே  நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?

உங்களுடைய விவிலியம் தெள்ளத்தெளிவாக ஜெஹோவா தனது மகிமையை விளங்கச்செய்யும் பொருட்டே உலகையும் மனிதரையும் படைத்தார் என்று சொல்கிறது. அப்படியிருக்க அவரது படைப்பின் நோக்கம் மனித அறிவுப் புலனுக்கு அப்பாற்பட்டது என்று எப்படி நீங்கள் சொல்லமுடியும்? எந்த மதத்தின் புனிதநூலும் மனிதரின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விடயங்களை கூறுவதில்லை என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியும்.

ஜெஹோவா தனது மகிமையை விளங்கச்செய்யவே மனிதரைப்படைத்தார் என்று பைபிள் சொல்வதால் அவரது படைப்பின் நோக்கத்தை சிற்றறிவுடைய மானுடர்களால் புரிந்துகொள்ள இயலாது என்று நீங்கள் சொல்வதைக்கேட்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. தன்னைப் பெற்ற தாயையே மலடி என்ற மகனின் மடமைதான் எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது.

கிறித்தவப் புனிதநூலான பைபிளில் கூறப்பட்ட ஜெஹோவாவின் முதற்படைப்பைப்பற்றிய ஆராய்ச்சியிலிருந்து அவரது படைப்பின் நோக்கம் மானுட சிற்றறிவுக்குப் புலனாகாது என்பது தவறு என்று தெளிவாகிறது. அவருடை படைப்பின் காரணம் தனது மகிமையை விளங்கச்செய்யும் அவரது சுயநல எண்ணமே என்பதும், படைப்புக்கு முன்னே இருக்காத ஆன்மாக்களின் நன்மைக்காக அவர் படைப்பினை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது.

அவருக்கு இறைவனுக்குறிய குணங்கள் ஏதும் இல்லை, அவர் சர்வபௌமரோ, சர்வக்ஞரோ, கருணாநிதியோ, நீதிமானோ அல்லர் — மாறாக அவர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் பந்திக்கப்பட்டு, சம்சாரசாகரமாகியப் பிறவிப் பெருங்கடலுள் அல்லலுரும் ஒரு ஆன்மாவாகியப் பசுவே என்பதும் தெரிகிறது.

(தொடரும்)

குறிப்புகள்:

 பைபிள் மொழிபெயர்ப்புகளில் அவர்களின் (யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அபிராஹாமியர்களுக்கு பொதுவான) படைத்தவனாகிய ஜெஹோவா தேவன், கர்த்தர், சர்வேஸ்வரன், என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். ஆனால் தேவன், கர்த்தர், இறைவன், ஈஸ்வரன், ஆகிய சமஸ்கிருதம் தமிழ் உள்ளிட்ட பாரதிய மொழிகளில் இறைவனுக்கு கடவுளுக்கு வழங்கும் பெயர்களெல்லாம் ஜெஹோவாவிற்குப்பொருந்தாது.

[ii]  கிறிஸ்தவர்களுடைய புனித நூலாகிய பைபிள் விவிலியம் என்றும் பரிசுத்த வேதாகமம் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்குகிறது.

[iii]  பாரதிய தத்துவ ஞான தரிசனங்கள், நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை,, வேதாந்தம் என ஆறாகும். இவை வேதத்தினைப் பிரமாணமாகக்கொள்வதால் வைதீக தரிசனங்கள் என்றும் ஆஸ்திக தரிசனங்கள் எனப்படுகின்றன.  இவற்றில் முதலிரண்டான வைசேஷிகம் மற்றும் நியாயம் ஆகியன தர்க்கம் என்று அழைக்கப்படுகின்றன. இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்கவல்லவை. தமிழில் தர்க்கம் அளவை என்றும் அழைக்கப்படுகிறது. பொருள்களின் தன்மைகளை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தர்க்கசாஸ்திர மேதைமை மிக அவசியமாகும். தர்க்கத்தினை பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு உபாயமாகக் கருதாத வேதாந்திகளும் சித்தாந்திகளும் வாதவிவாதங்களுக்கு அதனைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நம்முடைய தர்க்கசாஸ்திரத்தின் சிறப்பினை மேன்மையினை ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் இந்த நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. வேதாந்த சித்தாந்த நூல்களை வாசிக்கும்போதும் நம்முடைய முன்னோர்கள் தர்க்கசாஸ்திரத்தில் எவ்வளவு வன்மை படைத்திருந்தார்கள் என்று அறியலாம்.

[iv] கிறிஸ்தவர்கள் ஆன்மாக்கள் என்று சொல்வது மனிதர்களைத்தான். உயிர்கள் ஆத்மா/ஆன்மா  என்று பாரதிய சமயங்களும் தரிசனங்கள் உயிர் வாழ்கிற எல்லா தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதகளின் சக்தியை அழைப்பதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்களின் கருத்துப்படி மனிதருக்கு மட்டுமே ஆன்மாக்கள் உண்டு. மற்றவைகளுக்கு ஆன்மா இல்லை.

[v] இது முதல்பாவம் என்று கிறித்தவர்களால் அழைக்கப்படுகிறது.

[vi] ஆதிமனிதர்கள் தம்மைப் படைத்தவனுக்கு கீழ்ப்படியாமை பெரும் குற்றமாகவும். ஜெஹோவாவின் சாபத்திற்குக் காரணமாகவும் கருதும் கிறித்தவர்கள், அந்தப்பாவம் அவர்களின் சந்ததிகளையும் தொடர்வதாக நம்புகிறார்கள். அந்த சாபம் பாவம் ஆகியவற்றினால் கீழே வீழ்ந்துகிடக்கும் மனிதர்களை மீட்பதற்காகவே ஜெஹோவாவின் ஒரே குமாரனான ஜீஸஸ் கிரைஸ்ட் வந்தார். அவரே மீட்பர் அல்லது இரட்சகர். அவர் தாம் செய்யாத தவறுக்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப்பிறகு உயிர்த்தெழுதார் என்பது அவர்களது நம்பிக்கை. அவரை விசுவாசிக்கிறவர்கள், நம்புகிறவர்கள் அவரது திருப்பலியால், ரத்தத்தால் கழுவப்பட்டு தூய்மையடைவார்கள். பாவம் கழுவப்படும், சொர்கத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் இடம்பெறுவார்கள். மற்றவர்கள் யாராயினும் மீண்டுவரவே இயலாத துன்பம் நிறைந்த நரகில் உழல்வர் என்பது அவர்களின் கருத்து.  ஜீசஸ் வந்தார், வாழ்ந்தார், மாண்டார், எழுந்தார் அதை நம்பினால் சொர்க்கம் என்பதே நற்செய்தி என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைச்சொல்லி உலகம் முழுவதையும் கிறிஸ்தவத்தினைப் பரப்ப முனைகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பிசுவாமிகளின் கிறிஸ்துமதச்சேதனம்

பகுதி 1

பதிஇயல்

முதற்காரணமும் ஆதிமனிதரின் படைப்பும்

 முதற்காரணம்

ஓ கிறிஸ்தவப்பாதிரிகளே!

உங்கள் தேவனாகிய ஜெஹோவா சூனியத்திலிருந்து உலகைப்படைத்தார் என்று பைபிள் கூறுகிறது. காரணம் விளைவிற்குமுன்னே இருக்கவேண்டும் என்பது தர்க்க நியாயமாகும். முதற்காரணம், துணைக்காரணம் என்று தர்க்கசாஸ்த்திரப்படி காரணங்கள் மூன்று வகையாகும். விளைவு(காரியம்)  முதற் காரணத்துள்ளே மறைந்திருக்கும்.  நிமித்தக் காரணமும் துணைக்காரணமும் செயல்படும்போது காரியம் வெளிப்படும்.

உதாரணமாக ஒரு பானையை எடுத்துக்கொள்ளலாம். பானை, மண்ணிலே மறைந்திருக்கிறது. அது குயவரால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே மண்ணே முதற்காரணம் ஆகும். குயவன் நிமித்தக்காரணன் ஆவான். சக்கரம் மற்றும் அதை இயக்கும் கோல் ஆகியவை துணைக்காரணங்கள் ஆகும்.

உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள்,நிமித்தக்காரணத்தினை மட்டுமே கூறுகிறது. முதற்காரணத்தினையும் துணைக்காரணத்தினையும் சொல்லவில்லை. இது தர்க்க அறிவுக்கு ஒவ்வாததாகும்.

எங்கள் கர்த்தராகிய ஜெஹோவா கடவுள் எல்லாம் வல்லவர்.  ஆகவே அவர் சூனியத்திலிருந்தே எதையும் படைக்கவல்லவர் என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஆனால் அதுவும் அறிவுக்குப் பொருந்தாது. அனைத்தையும் சரியாக இடையூறின்று ஒழுங்காக இயங்கச்செய்வதே சர்வவல்லமையாகும். ஒரு செயலை ஒழுங்கில்லாமல் செய்வது வல்லமைத் தன்மையாகாது. உதாரணமாகக் கடுகில் மலையைப்புகுத்தும் அற்புதத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஒன்று, கடுகை மலையைவிடப் பெரியதாக்கவேண்டும், அல்லது மலையைவிடச் சிறியதாக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றையும் செய்யாது, கடுகில் மலையைப் புகுத்தமுடியாது. இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாது மலையைக்கடுகில் அடைக்கும் அருஞ்செயலைச் செய்ய இயலாததால் கடவுள் சர்வவல்லமை அற்றவராகி விடமாட்டார்.

அதேகடவுள் தன்னைப்போல இன்னொரு கடவுளைப் படைக்க  முடியாவிட்டாலோ அல்லது அவருக்குத் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாததாலோ சர்வவல்லமை இல்லாதவராகிவிடமாட்டார். அப்படித்தான் முதற்காரணத்திலிருந்து உலகைப்படைத்தாலும் கடவுள் தனது சர்வவல்லமையை இழந்துவிடமாட்டார். இந்த வாதத்தினை உங்களால் செரிமானிக்கமுடியாது என்பதை நான் அறிவேன்.

எங்கள் தேவனாகிய ஜெஹோவாவே முதற்காரணமும் நிமித்தக்காரணமும் என்று நீங்கள் வாதிடலாம்.  தர்க்க நியாயப்படி முதற்காரணமே விளைவாக(காரியம்) உருமாறுகிறது. வெள்ளைநிறத்து நூலைக்கொண்டு நெய்த துணி வெள்ளையாகவே இருக்கிறது. அதுபோல கடவுள் உலகிற்கு முதற்காரணமானால், உலகில் உள்ள உயிருள்ள(சேதன) மற்றும் சடப்பொருள்கள்(அசேதன) ஆகியவற்றின் இயல்புகள் அனைத்தும் அவருக்கும் இருக்கவேண்டும். முரண்பட்ட இருவகைத்தன்மைகள் ஜெஹோவாவிற்கு இருப்பது சாத்தியமில்லை.

ஜெஹோவாவாகிய உங்கள் தேவன் பாதி உயிருள்ளவராயும் மீதி உயிறற்வராக இருந்தால் அவருக்குப்பகுதிகள் இருந்தாகவேண்டும். பகுதிகள் உள்ள ஒன்று முதற்காரணமாக வாய்ப்பில்லை. காரியம்(விளைவு) மட்டுமே பகுதிகளைக் கொண்டிருக்கும் காரணத்திற்குப் பகுதிகள் இருக்காது என்பது தர்க்க நியாயமாகும். மண்ணுக்கு பகுதிகள் இல்லை ஆனால் அதனால் விளைந்த பானைக்குப் பகுதிகள் உண்டு. அதே போன்று நூலுக்குப் பகுதிகளில்லை ஆனால் துணிக்குப்பகுதிகள் உண்டு.

ஜெஹோவாகிய கிறிஸ்தவர்களின் தேவனின் படைப்பின் முதற்காரணத்தினைப்பற்றி ஆராயும்போது தெளிவாக அவருக்கு பரம்பொருளுக்குறிய இயல்புகள் ஏதும் என்பது புலனாகிறது.

 ஆதிமனிதரின் படைப்பு

ஓ கிறிஸ்தவப்பாதிரிகளே!

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா ஆதி மனிதரான ஆதாமையும் ஏவாளையும் பகுத்தறிவற்றவர்களாகப்படைத்தது ஏன்? அவர்களுக்குப் பகுத்தறிவு இருந்திருந்தால் தம்மைப் படைத்தவனின் கட்டளையைமீறி விலக்கப்பட்டப் பழத்தினை சாப்பிட்டிருக்கமாட்டார்களே? பகுத்தறிவு இருந்திருந்தால் தடைசெய்யப்பட்ட செயலைச் செய்யாமல் இருப்பது சரி என்றும் அதனை செய்வது தவறு என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா?  நல்லது எது? தீயது என்று அறியும் பகுத்தறிவை ஆரம்பத்திலே உங்கள் கர்த்தர் கொடுக்க மறந்தது ஏன்? அவரால் விலக்கப்பட்ட கனியை உண்டபின் அந்தப்பகுத்தறிவு வரவேண்டிய அவசியம்தான் என்ன?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஈடன் தோட்டத்தில் பயனற்றதொரு மரத்தைப் படைக்கவேண்டிய அவசியம் என்ன? அது இருந்த தோட்டத்திலே, ஆதாமையும் ஏவாளையும் உலவவிட வேண்டிய அவசியம்தான் என்ன?

ஒரு தந்தை அழகான விஷப்பழங்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டுவருகிறார். அதை சாப்பிடக்கூடாது என்று தனது குழந்தைகளுக்கு சொல்கிறார். அவர் இல்லாத சமயத்தில் அந்தப்பழத்தின் அழகிலும் நிறத்திலும் தூண்டப்பட்ட அக்குழந்தைகள் அதனைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். அதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுகிறார்கள்.

இந்தத் துன்பத்திற்கு யார் பொறுப்பு? இக்குற்றம் யாருடையது? தகப்பனாருடையதா, இல்லை ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தைகளுடையதா? பகுத்தறிவே இல்லாமல் மனிதரைப் படைத்து,அவர்களுக்கு அருகிலேயே தீயகனிதரும் மரத்தினைப் படைத்த ஜெஹோவா இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமல்லவா!

தடைசெய்யப்பட்ட பழத்தினை உண்டபின்னர் ஆதாமையும் ஏவாளையும் அழிக்காமல் விட்ட ஜெஹோவாவின் செயல் சரிதானா? அந்தப்பழத்தினை உண்டநாளிலேயே அவர்கள் மரணமடைந்திருக்க வேண்டுமல்லவா?  ஒருவேளை அவர் ஆதிமனிதர்களின் மீது கொண்ட கருணையால் மன்னித்துவிட்டார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் இவையெல்லாம் நடக்கப்போகிறது என்று எல்லாம் அறிந்த அவருக்கு இது தெரியாதது ஏன்? அவரை சர்வக்ஞர் என்றல்லவா நீங்கள் சொல்லுகிறீர்கள்!

ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே!அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா?  தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?

அப்படியல்ல, அந்த மரத்தின் பழத்திற்கு உண்மையில் பகுத்தறிவை வழங்கும் சக்தியில்லை, அது ஜெஹோவாவின் கட்டளைக்கு அவர்கள் கீழ்படிவது நல்லது என்றும் அதனை மீறுவது தீது என்பதனைக்காட்டும் குறியீடு என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்தவிளக்கத்திற்கு உங்கள் பரிசுத்த வேதாகமமாம் பைபிளில் எந்த ஒரு ஆதாரமும் இல்லையே? மாறாக உங்கள் புனித நூல் ‘விலக்கப்பட்டக் கனியை அவர்கள் உண்டதும் அவர்களது கண்கள் திறந்தன’ என்று தெளிவாக சொல்கிறதே!

சரி ஈடன் தோட்டத்தில் அந்தக் கண்திறக்கும் மரத்தை நட்டுவைத்த ஜெஹோவா அங்கே ஆதிமனிதர்களையும் உலவவிட்டு அதன் கனிகளை உண்ணவேண்டாம் என்று ஆணையிட்டது ஏன்? அவரதுக்கட்டளையை சிரமேற்கொள்வது நல்லது. அவரது ஆணைகளை மீறுவது தீயது என்று அவர்களுக்கு உணர்த்துவதே அவரது நோக்கம் என்று நீங்கள் வாதிடலாம். தனக்கோ மற்றவர்களுக்கோ பயனற்ற இந்தக்கட்டளையை அவர் போடுவதற்கு அவசியம் என்ன?

ஆதி மனிதர்களைப் படைக்கும்போதே ஜெஹோவா அவர்களுக்குப் பகுத்தறிவையும் கொடுத்திருந்தால்  அவர்களுக்கு அவர் தங்கள் கர்த்தர் என்றும், அவருக்குக் கீழ்பணிந்து நடத்தலே நல்லது என்றும் அவரது ஆணையைமீறுதல் தீது என்றும் தெரிந்திருக்குமே? கண்களைத் திறந்து, பகுத்தறிவைத் தரும் கனியைகொடுக்கும் மரத்தினைப் படைக்கும் அவசியம் அவருக்கு இருந்திருக்காதே!

ஆதிமனிதர்கள் தமது கட்டளைகளுக்குக் கீழ்படிகிறார்களா, இல்லையா என்பதை அறிவதற்காகத்தான் அந்த மரத்தினை ஜெஹோவா படைத்தார் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் முக்காலும் உணரும் ஆற்றல் அவருக்கு இல்லை என்று பொருள்படுமே உங்கள் ஜெஹோவா சர்வக்ஞர் அல்லரா?

ஜெஹோவா ஆதிமனிதருக்கு சுதந்திரமாக செயல்படும் உரிமையை அளித்திருந்தார். எனவே அவர்கள் செய்த தவறுக்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று நீங்கள் வாதாடலாம். ஒரு தகப்பனார் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரம் அளித்திருந்து அவர்கள் குற்றம் செய்தால் அதற்கு யார் பொறுப்பு? தந்தையா அல்லது பிள்ளைகளா? பகுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு சுதந்திரம் அளித்தது சரிதானா?

உங்களது தேவனால் தன்னைப்போல அச்சு அசலாகத் தனது சாயலில் படைக்கப்பட்ட மனிதனை ஏமாற்றுவதற்கும், அவர்களுக்குத் தீங்கு செய்வதற்கு சாத்தானால் எப்படி முடிந்தது? அப்படி சாத்தானால் ஆதி மனிதர்கள் ஏமாற்றப்படும்போது அங்கே எங்கும் நிறைந்தவராக நீங்கள் போற்றும் ஜெஹோவா இருக்கவில்லையா? அவர்கள் ஏமாற்றப்படுவதை சர்வக்ஞரான அவர் அறியவில்லையா? எங்கள் தேவன் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர் என்று நீங்கள் சொல்வது புனைந்துரையா?வெற்றுப்புகழுரையா? இல்லை முகஸ்துதிதானா?

சாத்தானின் ஏமாற்றும் நோக்கத்தினை எங்கள் கர்த்தர் அறிவார் ஆனால் அவனது தீச்செயலைத்தடுக்கவில்லை என்று நீங்கள்  வாதிடலாம். அவனது தவறான செயல்களை அவர் தடுக்காதது ஏன்? அவரது சர்வவல்லமை பொய்யானதா? என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தும் அவர் அதனை அனுமதித்திருந்தால் கருணையற்றவரா அவர்? கொடியவிலங்கிடம் அகப்பட்டு பிள்ளைகள் துன்புறுமானால் அவர்களின் தந்தை அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? தம் குழந்தைகளைக் காப்பாற்ற ஓடோடி வருவாரா இல்லையா? அப்படித் தமது பிள்ளைகளைக் காப்பாற்றவராத தந்தை ஒரு தந்தையா? எல்லா மனிதர்களுக்கும் எங்கள் ஜெஹோவா தந்தை என்று நீங்கள் சொல்வது சரிதானா?

ஜெஹோவாவின் நோக்கம் அப்போது சாத்தானை விட்டுவிட்டு பின்னர் தண்டிப்பதும்; மனிதனை அப்போது துன்புறவிட்டுவிட்டு, பின்னர் இரட்சிப்பதும் என்று நீங்கள் வாதாடலாம். அது விசித்திரமான செயலாகும்.  நோயையும் மருந்தையும் ஒரேசமயத்தில் ஒருவர் காசுகொடுத்து வாங்கினால் கைகொட்டி சிரிக்காதா உலகம்?

உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் சாத்தான் மனிதரின் மனதைக் கெடுத்தான் என்று சொல்கிறது. அதே பைபிள் தன்னால் படைக்கப்பட்ட தேவதை ஒன்று கெட்டுப்போய்விட்டதால் கர்த்தரால் சபிக்கப்பட்டு சாத்தானானது என்றும் சொல்கிறது. மனிதரின் புத்தியைக் கெடுக்க சாத்தான் இருந்தது என்றால் அந்த சாத்தானின் புத்தியைக்கெடுத்த தீயசக்தி யார்? அப்போது கர்த்தராகிய ஜெஹோவைத்தவிர யாரும் இல்லையே?

தேவதையின் புத்தியைக் கெடுத்தது ஜெஹோவாதானா?

சாத்தான் ஒரு பாம்பின் ரூபத்தில் வந்து ஏவாளின் மனதைக்கெடுத்தான், அதனால் எல்லாப்பாம்புகளையும் ஜெஹோவா சபித்தார் என்று பைபிளின் ஆதியாகமம் சொல்கிறது. அதேசமயம்  கடவுளின் ஆணையை மீறிப் பாவம் செய்யத் தூண்டிய சாத்தானுக்கு எந்த தண்டனையையும் அவர் கொடுக்கவில்லை என்றுவேறு தெரிகிறது. குற்றம் ஏதும் செய்யாத நிரபராதிகளான பாம்புகள் தண்டிக்கப்படுதல் நீதியா? பாவம் செய்த சாத்தானைத் தண்டிக்காத உங்கள் கர்த்தரின் நீதிமுறை சரிதானா? ஆதிமனிதர்கள் செய்த தவறுக்கு அவர்கள் சந்ததியினரையும் சேர்த்து சபித்தது சரிதானா? கர்த்தர் நீதிமான் என்று நீங்கள் சொல்வது சரிதானா?

“பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும்பாவிகளாக இருப்பதைக் கர்த்தர் அறிந்தார். அவர்கள் பாவஎண்ணங்களையே கொண்டிருப்பதைக் கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களை பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார் (ஆதியாகமம் 6:6-7).

தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே? ஜெஹோவால் படைக்கப்பட்ட சாத்தான் பாவம் செய்து அவரால் படைக்கப்பட்ட மனிதர்களையும் கெடுத்துப் பாவிகளாக்கிவிட்டான். அப்படியானால் சாத்தானின் குற்றங்களைப் பற்றித்தானே அவர் கவலைப்பட்டிருக்கவேண்டும்? ஆனால் அப்பாவி மனிதர்களைப்பற்றி அவர் துயருற்றதேன்? படைப்புக்குமுன்னரே இப்படிப்பட்டத் தவறுகள் நடக்கும் என்று அவருக்குத் தெரியாதா? அவர் எல்லாம் அறிந்தவர் என்றல்லவா நீங்கள் சொல்கிறீர்கள். தெரிந்திருந்தால் அவருக்குக் கருணையே இல்லையா? தெரிந்துகொண்டே துயர்ப்படுவது போல நடித்தாரா?

என்ன நிகழப்போகிறது என்று உறுதியாக அறிந்த ஒருவர் அதற்குத் தகுந்தபடித் திட்டமிட்டு செயல்படுவார் அல்லவா? அப்படியானால் உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் திட்டப்படியே எள்ளளவும் மாறாமல் அல்லவா எல்லாமே நடந்திருக்க வேண்டும். ஏடாககூடமாக ஏதாவது நடந்திருந்தால் உங்கள் கர்த்தர்தானே அதற்குப் பொறுப்பேற்கவேண்டும்? அப்படியானால் ஜெஹோவாவின் சர்வவல்லமையும் சர்வக்ஞதையும் பங்கமாகுமே?

அப்படியில்லை, கர்த்தராகிய ஜெஹோவாவின் சித்தப்படியே எல்லாமே நடந்தது, எதுவும் ஏடாகூடாமாக நடக்கவில்லை என்றுகூட நீங்கள் வாதிடலாம்.  அவ்வாறானால் முதல் பாவத்திற்கு ஆதிமனிதராகிய ஏவாளும் ஆதாமும் பொறுப்பு என்பது அநீதியாகாதா? உங்கள் தேவனே அதற்கு பொறுப்பல்லவா? உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள், எல்லாமே கர்த்தராகிய ஜெஹோவாவின் சித்தத்தின்படியே, முன்னரே அவர் முடிவுசெய்ததன்படியே நடக்கின்றன என்று சொல்வதைப் பாருங்கள்.

உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார்  —  (எபேசியர் 1:4).

 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மை தேர்ந்தெடுப்பதைப்பற்றி ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்;  ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம்  —  (எபேசியர்,1 :11).

“தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார்”  — (ரோமர் 8:27).

“தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார், அம்மக்களைத்தம் குமாரனைப்போல இருக்கும்படி செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற்பேறானவராய் இருக்கவேண்டும் என விரும்பினார்” —  (ரோமர் 8: 28).

“எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். அவர்களைத்தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமைப்படுத்தினார்”  — (ரோமர், 8:30),

“இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்று தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகு காலத்துக்குமுன்னரே தேவன் இத்திட்டத்தை வகுத்திருந்தார்”  —                                  (அப்போஸ்தலர் 2:23).

“சகோதர சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியாலும் உண்மையின்மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தினாலும்  இரட்சிக்கப்படுகிறீர்கள்”  –  (தெசலோனிக்கேயர் 2:13).

முதற் படைப்பைப் பற்றிய மேற்கண்ட ஆய்வு  ஜெஹோவாவின் திட்டப்படியே முதற்பாவம் நிகழ்ந்தது என்பது தெளிவு படுத்துகிறது.  ஜெஹோவாவின் தவறுக்கு ஆதிமனிதர்களையும் அவர்களது வம்சாவளிகளான மனிதக் குலத்தினை தண்டித்தல் அநீதி என்பதும் உறுதியாகிறது.

 ***   ***   ***



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

4.  ஜெஹோவின் துர்குணங்கள்

ஓ கிறிஸ்தவ போதகர்களே!

சவர்வவியாபகம் (எங்கும் நிறைந்த தன்மை), சர்வபௌமம்(சர்வவல்லமை), பெருங்கருணை, போன்ற தெய்வீக நற்குணங்களை, உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிடத்தில் இல்லாதவற்றை, அவரிடம் இருப்பதாக ஆதாரமின்றிக் கற்பிக்கிறீர்கள். இந்த கடவுட்தன்மைகள் ஏதும் அவருக்கு இல்லை என்பதை ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டோம். உங்கள் விவிலியத்தினைப்படித்தால் அவரிடத்திலே காணப்படும் துர்க்குணங்களை நீங்கள் மிகவசதியாக மறைத்துவிடுவது தெரிகிறது. எனவே உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் வசனங்களின் துணைகொண்டு உங்கள் கர்த்தராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களான பழிவாங்குதல். குரோதம், பொறாமை,  கொடூரம்,  முகஸ்துதியில் இச்சை, கவலைப்படுதல், நேர்மையின்மை ஆகியவற்றை ஒவ்வொன்றாக இங்கே நிரூபிப்போம்.

ஜெஹோவாவின் பொறாமை:

ங்கள் பரிசுத்த வேதாகமாகிய விவிலியத்தின் கீழ்க்கண்ட வசனங்கள் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா பொறாமைகொண்டவர், எரிச்சலுள்ளவர் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

“நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும்விசாரிக்கிறவனாயிருக்கிறேன்.

 (யாத்திராகமம் 20:5).

 “கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. ஆகையால் அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ளவேண்டாம்”.(

– யாத்திராகமம் 34:14).

ஜெஹோவாவின் கடும்கோபம்:

உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் கோபம் எந்த அளவிற்குக் கொடுமையானது என்பதைக் கீழ்க்கண்ட விவிலிய வசனங்கள் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.

“கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடும்கோபம் புறப்பட்டது, வாதை(ப்ளேக்) தொடங்கிற்று.

– (எண்ணாகமம் 16:46).

“பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த ஜனங்களைப் பார்த்தேன், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு!

– (யாத்திராகமம் 32:9-10).

ஜெஹோவாவின் பொறாமை

பின்வரும் நும் பரிசுத்த வேதாகம வசனங்கள் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா பொறாமை நிறைந்தவர் என்பதைப் பறைசாற்றுகின்றன.

“பின்பு தேவனாகிய கர்த்தர், ‘இதோ,  நன்மை-தீமை அறியத்தக்கவனாக  மனிதன் நம்மில் ஒருவனைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் கனியையும் எடுத்து உண்டால் என்றென்றென்றும் உயிரோடிருப்பான்,’ என்றார். ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.  ஆதாம் ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான்”

– (ஆதியாகமம் 3:22-23).

வானளாவிய கோபுரம் ஒன்றை மக்கள் கட்டமுயல்வதைக்கண்ட ஜெஹோவா அதனால் அவர்கள் பெரும்புகழ் பெறுவார்கள் என நினைத்தார். அதனால் அவர்களது ஒற்றுமையை சிதைத்தார். அவர்களை பூமி முழுதும் சிதறிப்போகச் செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தை கட்டிமுடிக்கமுடியாமல் போயிற்று என்றும் உங்கள் விவிலியம் சொல்லுவதை இங்கே நினைவுகூறுங்கள்.

– (ஆதியாகமம் 11).

ஜெஹோவாவின் கொடூரம்:

உங்கள் தேவனாகிய ஜெஹோவா எகிப்து தேசத்தில் இருந்த எல்லா தலைச்சன் ஆண்குழந்தைகளையும் கொன்றார் என்பதை யாத்திராகமம் இப்படிச் சொல்கிறது.

“மோசே ஜனங்களிடம், “கர்த்தர் இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாக செல்வேன். எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற் பேறான மகன் முதல், மாவரைக்கிற அடிமைப்பெண்ணின் முதற்பேறான மகன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள்கூட மடியும். கடந்த எந்தக்காலத்தைக்காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாக இருக்கும். வருங்காலத்தில் நடக்கக்கூடியதைக்காட்டிலும் அது கொடியதாக இருக்கும்”

— (யாத்திராகமம் 11: 4-7).

தனது மகிமையை விளங்கச்செய்யும் நோக்கத்தோடு ஜெஹோவா பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தினார், தனதுக் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் செய்தார். அவனையும் அவனது பெரும்படையையும் கடலில் மூழ்கடித்துக் கொன்றார்.

— (யாத்திராகமம் 14).

ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாதமுறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர்.

— (லேவியராகமம் 16: 1).

“மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவனது உடல் பாறையைப்போல இறுகியது. பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச்செய்தார்”.

(1 சாமுவேல் 25: 37-38).

மேலும் கர்த்தராகிய ஜெஹோவா இஸ்ரேலியருள்ளேயும் மற்ற சாதியினருள்ளேயும் கலகத்தைத் தோன்றச் செய்தார். அதனால் பலப்பலர் அழித்தொழிக்கப்பட்டனர் என்றும் பழைய ஏற்பாடு சொல்கிறது. இவையெல்லாம் உங்களுடைய கர்த்தராகிய ஜெஹோவா எவ்வளவு கொடூரமானவர் என்பதைச் சொல்லுகின்றன.

துதிவிரும்பி ஜெஹோவா:

பைபிளில் பல இடங்களில் தனது மகிமையை அதிகரிக்க உங்கள் தேவனாகிய ஜெஹோவா முயன்றது பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் அவர் புகழ்ச்சியை விரும்புகிறவர், முகஸ்துதிக்கு ஆசைப்படுபவர் என்பதைக் காட்டுகின்றன.

ஜெஹோவா துன்பத்திலிருந்து விடுபட்டவர் அல்லர்:

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா படைப்பினை முடித்தவுடன் மகிழ்ச்சியடைந்தார் என்றும் பின்னர் மனிதரின் பாவச்செயல்களைக் கண்டு மிகவும் வருந்தியதாகவும் பைபிள் சொல்கிறது. இது அவர் துன்பத்திலிருந்து நீங்கியவர் அல்லர் என்பதைக் காட்டுகிறது.

நேர்மையற்ற ஜெஹோவா:

பொய்களைச் சொன்ன ஆபிராஹாமையும் ஈசாக்கையும் தண்டிக்காமல், அவர்களின் கர்த்தராகிய ஜெஹோவா அவர்களை ஆசீர்வதித்தார் என்று பழைய ஏற்பாடு சொல்லுகிறது.

— (ஆதியாகமம் 22, 26).

சிப்பிராள் மற்றும் பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பொய் சொன்னபோதிலும், அவர்களை ஆசீர்வதித்தார்.

— (யாத்திராகமம்).

உங்கள் மெய்யான தேவனாகிய ஜெஹோவா இப்படிப் பொய்யை ஆதரிக்கலாமா? இதுதான் அவரது நேர்மையா?  பொய்சொல்வதை ஆதரித்தது மட்டுமல்ல, பொய்யைச் சொல்லும்படி ஆவியையும் ஏவிவிட்டிருக்கிறார் பாருங்கள், உங்கள் தேவன்!

“இறுதியில் ஒரு ஆவி வெளியேவந்து கர்த்தருக்குமுன் நின்றுகொண்டு சொன்னது. நான் தந்திரம் செய்வேன்,’ கர்த்தர், எவ்வாறு செய்வாய்,’ என்று கேட்டார். அதற்கு அவன், நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பிபொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்,’ என்றது. உடனே அவர், போய் ஆகாப்பை ஏமாற்று. நீ வெற்றி பெறுவாய்.’ என்றார்”

— (1 இராஜாக்கள் 22: 21-22).

ஒரு ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளைப் பொய்சொல்லச்செய்து ஆகாப்பையும் அவனது படையையும் அழித்த ஜெஹோவாவின் நேர்மையை என்னென்பது!

ஜெஹோவா துன்மார்க்கர்:

அண்டை அயலாரிடம் இரவலாக வாங்கி இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிப்போகச் சொல்லி இஸ்ரேலியரைத் தூண்டினார் ஜெஹோவா

— (யாத்திராகமம் 11).

தாவீது உரியாவைக் கொன்று, அவனது மனைவியான பத்சேபாளைக் கட்டாயப்படுத்தி மணந்துகொண்டபோது, உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா அவனை, நாத்தான் என்னும் தீர்க்கதரிசி மூலம் எப்படி மிரட்டுகிறார் பாருங்கள்.

“கர்த்தர் சொல்வது: “நான் உனக்கு எதிராகத் தொல்லைதர ஆரம்பிப்பேன். தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்துஉனக்கு மிகவும் நெருக்கமான ஒருவனுக்கு கொடுப்பேன், அம்மனிதன் உன் மனைவியரோடு படுப்பான், அதை எல்லோரும் காண்பார்கள்! நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தை செய்வேன் என்றார்,’ என்றான்.

— (2 சாமுவேல் 12: 11-12).[ii]

உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் துர்போதனையைப்பாருங்கள்:

“ஆண்டவர் ஓசேயாமூலமாகப் பேசியபோது, அவர் அவனை நோக்கி, நீ போய் விலைமகள் ஒருத்தியை சேர்த்துக்கொள்: வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு: ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது,’ என்றார்”

— (ஓசாயா 1:2).[iii]

உங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது  நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும்.

 பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகமான யாத்திராகமத்தினை முழுதும் படித்தால் ஒருபுறம் அற்புதங்களைச்செய்ய மோசேவுக்கு சக்தியளித்து அவர் மூலம் எகிப்தியமன்னன் பார்வோனை எபிரேயர்களை விட்டுவிடும்படி ஆணையிட்டாலும்  ஜெஹோவா அவனது மனதைக் கடினமாக்கி அவர்களை போகவிட மறுப்பதும் பலமுறை நிகழ்கிறது.

[ii]  கடவுள் செய்கிறகாரியமா இது? இல்லை பேசுகிற பேச்சா இது? கொடுமையிலும் கொடுமை.

[iii]  ஜனங்கள் வேசித்தனத்தில் மூழ்கியிருந்தால் தீர்க்கதரிசியையும் வேசித்தனத்தை மேற்கொள்ளும்படி போதிப்பது சரிதானா?.

[1] பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகமான யாத்திராகமத்தினை முழுதும் படித்தால் ஒருபுறம் அற்புதங்களைச்செய்ய மோசேவுக்கு சக்தியளித்து அவர் மூலம் எகிப்தியமன்னன் பார்வோனை எபிரேயர்களை விட்டுவிடும்படி ஆணையிட்டாலும்  ஜெஹோவா அவனது மனதைக் கடினமாக்கி அவர்களை போகவிட மறுப்பதும் பலமுறை நிகழ்கிறது.

[1]  கடவுள் செய்கிறகாரியமா இது? இல்லை பேசுகிற பேச்சா இது? கொடுமையிலும் கொடுமை.

[1]  ஜனங்கள் வேசித்தனத்தில் மூழ்கியிருந்தால் தீர்க்கதரிசியையும் வேசித்தனத்தை மேற்கொள்ளும்படி போதிப்பது சரிதானா?.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

4  கடவுளின் சாயல்

ஓ கிறிஸ்தவ போதகர்களே!

உங்கள் தேவனாகிய ஜெஹோவா மனிதனை தனது சாயலில் தன்னைப்போலவே படைத்தார் என்பதை உங்கள் பைபிள் கீழ்கண்டவாறு சொல்கிறது.

“பின்பு தேவன் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும், மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊறும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்”  — (ஆதியாகமம் 1:26-27).

உங்கள் கர்த்தர் உருவம் அற்றவரா? அல்லது உருவம் உடையவரா? அவருக்கு உருவம் இல்லாமல் இருந்தால் அவர் தன்னைப்போலப் படைத்த மனிதனுக்கும் உருவம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மனிதனுக்கு உருவம் இருப்பதால் அவரைப் படைத்த ஜெஹோவாவிற்கும் உருவம் இருக்கவேண்டும்.

இங்கே சாயல் என்பது உயிரைக் குறிக்கும் என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் உங்கள் ஜெஹோவா மனிதனின் உடலைப் படைத்தாரா, அவனது ஆன்மாவைப் படைத்தாரா, அல்ல இரண்டையும் படைத்தாரா என்ற கேள்வி எழும்.

உங்கள் பைபிள் தெள்ளத்தெளிவாகவே சொல்கிறது.

பிறகு, தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். தேவனாகிய கர்த்தர் தன் உயிர்மூச்சினை அவன் மூக்கில் ஊதினார். அதனால் மனிதன் உயிர்பெற்றான்.”  — (ஆதியாகமம் 2:7).

உங்கள் பைபிளின் இந்த ஆதியாகம வசனத்தின்படி மனிதனின் உயிர் ஜெஹோவாவின் சுவாச மூச்சு எனப்படுவதால், மனிதனின் உயிர் படைக்கப் படவில்லை என்றும், தனது சாயலில் அவரால் படைக்கப்பட்டது மனிதனின் உடல்தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

சாயல் என்பது அறிவு என்று நீங்கள் வாதிட்டால், விடயம் இன்னும் சிக்கலாகும். ஆதி மனிதன் அறிவே உருவாகப் படைக்கப்பட்டிருந்தால் அவன் பகுத்தறிவு உடையவனாக இருந்திருப்பானே. அவனுக்கு அறிவு விளங்கியிருந்தால் நல்லது எது, தீயது என்பதைப் பகுத்தறிந்திருப்பானே! அப்படிப் பகுத்தறிந்திருந்தால் தனது மனைவியின் தவறான கருத்தை ஏற்றிருக்கமாட்டானே? நிச்சயமாக அது நடந்திருக்க வாய்ப்பேயில்லை. எனவே சாயல் என்று சொல்லப்படுவது மனிதனின் உடலைத்தானே அன்றி, அவனது அறிவை குறிக்கவில்லை. மேலும், சாயல் என்பது அறிவைக் குறிப்பதாக இருந்தால், விலக்கப்பட்ட கனியை உண்பதற்குமுன் மனிதனுக்கு இருந்த அறிவுதான் ஜெஹோவாவிற்கும் இருந்திருக்கவேண்டும், அதற்குப் பின்னர் மனிதனுக்கு பகுத்தறிவு அவருக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தப் பகுத்தறிவும் ஜெஹோவாவிடம் இருந்தது என்று சொல்வீர்களானால் அது இயல்பாக அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. விலக்கப்பட்ட கனியை அவரும் உண்டிருக்கவேண்டும்.

“பகலிலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.”  – (ஆதியாகமம் 3:8).

உங்கள் தேவனாகிய ஜெஹோவா குளிர்ந்த வேளையை விரும்பியபடியால், அவர் வெப்பம் குளிர்ச்சி இன்பம் துன்பம் ஆகியவற்றைப்பகுத்தறிபவர் என்பது தெரிகிறது.

இன்னமும் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை சொல்ல்லலாம். ஆனால் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

மேற்கண்ட விவாதத்திலிருந்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு தெய்வீகத்தன்மைகள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆகவே அவருக்கு எபிரேய மொழியில் வழங்கப்படும் புகழ்மொழிகளான எலோஹிம் (மஹிமைவாய்ந்தவர், வழிபாட்டிற்குரியவர்), எலியொன் (ஆண்டவர், கடவுள்),  ஜெஹோவா (சுயம்பு,தான்தோன்றி, வாழும்தெய்வம்,மாறாதிருப்பவர்,ஆதியந்தமில்லாதவர்), ஷட்டை (மேலான பிரபு, நீதிபதி) ஆகியவை பொருந்தாது என்பது தெரிகிறது. மேலும் கிரேக்க மொழியிலே அவருக்கு வழங்கப்படும் தியோஸ் (கடவுள்), குரியோஸ் (படைத்தோன்) என்பவையும் அவருக்கு பொருந்தாது என்பதும் தெளிவாகிறது.

இயேசுவின் ஜீவிதம்

ஓ கிறிஸ்தவ போதகர்களே!

உங்களது கர்த்தராகிய இயேசுவும்கூட தெய்வீகத்தன்மை ஏதுமற்றவர் என்பதை நிரூபிப்போம்.

இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா?

இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படுகிற காலகட்டத்தில், ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் ஜோசபஸ் அற்புதங்கள் பல செய்த இயேசுவைப்பற்றி பதிவு செய்யாதது ஏனோ? மெய்யாகவே இயேசு அந்தக்காலத்தில் வாழ்ந்வராயிருந்து, செத்துப்போனவர்களை உயிர்ப்பிப்பது போன்ற பல அற்புதங்களை செய்திருந்தால் அவற்றை ஜோசபஸ் பதிவுசெய்யாமல் விட்டது ஏனோ? ஒருவேளை இந்த உண்மைகள் அவருக்குத்தெரியவில்லையோ?

ஜோஸஃபஸ்

அப்படியே வைத்துக்கொண்டாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பகல் இரவானதாக பைபிள் சொல்கிறதே அதையாவது அவர் பதிவுசெய்திருக்கவேண்டுமே? சரி அதைத்தான் அவர் தவிர்த்துவிட்டார் என்றால் அப்போது நிகழ்ந்த பூகம்பத்தை[பூமியதிர்ச்சி]யையாவது அவர் பதிவுசெய்திருக்கவேண்டுமே?

சரி அதைவிடுங்கள், பைபிளில் இயேசுவின் பிறந்தநாள், மாதம், தேதி ஆகியவைகள் குறிப்பிடப்படாதது ஏன்? இயேசுவின் பிறந்த நாளைவிட மிக முக்கியமானதாகக் கருதப்படும் – அவரை சிலுவையில் அறைந்த தேதியை பைபிளில் காணமுடியவில்லையே, அதற்கு என்ன காரணம்?

இயேசு பிறந்தபோது புதியதாக ஒரு நக்ஷத்திரம் தோன்றியதாக பைபிள் சொல்கிறதே. அதைக்கொண்டு அவரது பிறந்த திகதியைக் கண்டுபிடிக்கமுடியவேண்டுமே!இந்திய, சீன, பாரசீக, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த எந்த ஒரு வானவியல் அறிஞரும் அத்தகைய ஒரு நக்ஷத்திரம் தோன்றியதைப் பதிவுசெய்யவில்லையே!ஆகவே ஜீசஸ் அதாவது இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்தார், வாழ்ந்தார் என்பதை உறுதியாகக்கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது.

புனிதரா இயேசு?

இயேசு என்ற மனிதர் வாழ்ந்தார் என்றே கொண்டாலும், சாதாரணக் குழந்தைகளுக்கு மாறாக, சிறப்பான எதையும் அவரிடது பிறப்பிலிருந்து காணமுடிகிறதா?

ஒரு தாயின் கருவறையில் வளராமல் அவர் அயோனிஜராய்ப்பிறந்தாரா?

அவர் பிறந்தபோது உலப்புகழ்வாய்ந்த அற்புதம் ஏதேனும் நிகழந்ததா?

இயல்புக்கு மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட தலை, இரண்டுக்கு அதிகமான கைகளோடு அவர் பிறந்தாரா?

அவர் பிறந்தவுடன் எழுந்து நடந்தாரா, போதனை செய்யத்தான் ஆரம்பித்தாரா?

பசி, தாகம், உறக்கம் போன்ற இயற்கை உபாதைகள் ஏதும் இன்றி அவர் வளர்ந்தாரா?

சிசுக்கள் படுகொலை

அவரது பிறப்பு மிகவும் அமங்களமானதாக அமைந்திருந்தது. முதலில் அவரது தாய் மேரியின் கற்பு சந்தேகிக்கப்பட்டது. இரண்டாவதாக, இரண்டுவயதுக்கும் குறைவான மூவாயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டன. அதனால் அவர் பிறந்த பிராந்தியமே துயரத்தில் மூழ்கி இருளடைந்தது. ஆண்டவனின் திருக்குமாரரின் அவதாரம் மக்களைத் துயரத்தில் ஆழ்த்துமா, இல்லை அவர்களை ஆனந்தத்தில் மூழ்கவைக்குமா? நிச்சயமாக அவதாரங்கள் நிகழும்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியடைவார்களே அன்றித் துயரத்தில் மூழ்கமாட்டார்கள்.

ஆகவே, சாதாரண மனிதரைப்போலவே, தனது பூர்வஜன்ம வினைகளின்படியே,  யோனிஜராக ஒரு தாயின் கருவில் இருந்து பிறந்து, மக்களுக்கு துன்பம் விளைவித்தார். வளர்ந்து இறைப்பழி செய்தார், பல இடங்களில் அலைந்து திரிந்த அவர், தமது முப்பத்திமூன்றாவது வயதில், தமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, கொடும் வலியைத் தாளமுடியாது, புலம்பித் தவித்து மரணமடைந்தார். இவையெல்லாம், சாமானிய மனிதரையும்விடப் பாவப்பட்ட ஆன்மாதான் அவர் என்பதை நிரூபிக்கின்றன.

இயேசு சர்வக்ஞரா?

இயேசு எல்லாம் அறிந்த சர்வக்ஞரா? முக்காலமும் உணர்ந்தவரா? கீழ்க்கண்ட பைபிள் வசனத்தினைக் காணுங்கள்:

“எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்து கொள்ள முடியாது. இதைப்பற்றி குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவ தூதர்களுக்கும் கூடத்தெரியாது. பிதாமட்டுமே இதனை அறிவார்  — (மாற்கு 13:32}.

எல்லாம் அறிந்தவர் பிதாவாகிய ஜெஹோவா மட்டுமே என்பதை இந்த வசனம் தெளிவாக்குகிறது. தெய்வீகத்தன்மை, இயேசுவாகிய அவரது குமாரருக்கும் இல்லை என்றும் தெளிவுபடுத்துகிறது.

தெய்வீகத் தன்மையோடு  இயேசுவுக்கு பசி, தாகம், மற்றும் இதர பலவீனங்களோடு கூடிய மனிதத் தன்மையும் உண்டு.  இயேசு மனுஷகுமாரன் என்றும், தேவகுமாரன் என்றும் சொல்லப்படுவதால் சொர்க்கத்தில் உள்ள தேவதைகளுக்கும், மனிதகுமாரனுக்கும்தான் எல்லாம் அறிந்த தன்மை இல்லை, ஆனால் தேவகுமாரனாகிய இயேசுவுக்கு சர்வக்ஞதை உண்டு என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அதற்கு பைபிளில் ஆதாரம் ஏதும் கிடையாது.

இயேசுவுக்கு திரிகால ஞானம், சர்வக்ஞதை இல்லை என்பதை ஒத்துக்கொள்ளாமல், ஆதாரமில்லாமல் விவாதிப்பது மடத்தனம் என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்.

தேவகுமாரன் என்ற பதம் மேற்கண்ட பைபிள் வசனத்தில் இல்லை. எனவே அறியாமையை இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு சம்பந்தப்படுத்தமுடியாது என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் மனிதகுமாரன் என்ற பதமும் இதில் இல்லை.  ஆகவே அறியாமையை அதனோடும் தொடர்புபடுத்துவது சாத்தியமில்லை.

மேலும் இந்த பைபிள் வசனத்தில், கடவுள், மனிதன் என்ற இருபதங்களும் குமாரனோடு இணைத்துப் பயன்படுத்தப் படாததால், அறியாமையை இயேசுவின் மனிதத்தன்மையோடோ தெய்வீகத்தன்மையோடோ சம்பந்தப்படுத்துவது சாத்தியமாகாது. மாறாக, இயேசுவின் தன்மையோடுதான் அது சம்பந்தப்பட்டதாகக் கருதப்படவேண்டும். அப்படிக் கருதினால் தெய்வீகத்தன்மை, மனித்தத்தன்மை தவிர மூன்றாவது ஒருவகைத் தன்மையும் இருப்பதாக நாம் கருதவேண்டிவரும். ஆனால் அது பைபிள் வசனங்களுக்கு முரணானதாகும்.

ஆகவே, இயேசுவுக்கு திரிகாலஞானம், சர்வக்ஞதை, அதாவது எல்லாம் அறிந்ததன்மை இல்லை என்பது உறுதியாகவே தெரிகிறது. இந்தக் கருத்துக்கு ஆதரவாக மேலும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகிறேன்.

“அப்போது தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அது பழக்காலம் இல்லாதபடியால், அவர் அதனிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.”  — (மாற்கு 11:13).

இந்த பைபிள் வசனத்திலிருந்து இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் என்பதும், அதனால்தான் அவர் மரத்தின் அருகே சென்று, அதில் பழங்கள் உள்ளனவா என்று கண்டறிய வேண்டியிருந்தது என்பதும் புலனாகிறது. ஆகவே அவருக்கு அனைத்தையும் அறியும் திரிகாலஞானம் இல்லை என்பதும் உறுதியாகிறது. . .

இது இயேசு நிகழ்த்திக் காட்டிய உருவகக்கதை என்று நீங்கள் வாதிடலாம். அவர் தூரத்திலிருந்து  அத்திமரத்தைப் பார்ப்பது சொர்க்கத்திலிருந்து வளமையான ஜெருசலம் நகரத்தைக்காண்பதற்கும், அருகில் சென்று கனிகள் உள்ளனவா என்று காண்பது அவர் ஜெருசலத்துக்கு வந்து அங்குள்ள யூதர்களிடம் நீதி, கருணை, நம்பிக்கை ஆகிய நற்குணங்கள் இருக்கிறதா என்று தேடுவதற்கும், அவர் கனிகளைக் காணாமல் இலைகளைக்கண்டது, அவர்களிடம் வெற்றுசடங்குகளையும், நம்பிக்கை இன்மையையும் கண்டதன் உருவகமாகும் என்றும்  நீங்கள் வாதிடலாம்.

Jesus Curses the Fig Treeஇனிமேலும் கனிகொடவியலாமல் போகட்டும் என்று அவர் அந்த அத்திமரத்தை சபித்ததற்கு — இருந்த இடம் தெரியாமல் ஜெருசலம் அழிந்துபோகப்போகிறது என்பதற்கு உருவகமாகும் என்றும் நீங்கள் கூறலாம்.

உங்களது அந்த வாதம் கூட இயேசு சர்வக்ஞர் அல்லர் என்ற எமது கருத்தை வலுப்படுத்துவதாகவே அமையும். எல்லாம் அறிந்த தன்மை என்பது ஜெரூசலத்து யூதர்களைக் காணாமலே அவர்களது நற்குணமற்ற தன்மையை அறிதலாகும். அப்படியன்றி இயேசு ஜெருசலத்துக்கு வந்து, யூதர்கள் நீதி, நேர்மை, நம்பிக்கை இல்லாமல் போலிச் சடங்குளில் மூழ்கி இருப்பதைப் பார்த்து அறியவேண்டியிருந்திருக்கிறது. சொர்க்கத்திலிருந்தே அதை அவரால் அறியமுடியவில்லை. இதையெல்லாம் நேரில் வந்துதான் அறிவதுதான் சர்வக்ஞதை என்றால் எல்லா மனிதரையும் சர்வக்ஞர் என்றுதானே சொல்லவேண்டும்.

ஜெருசலத்தை சபித்த இயேசுவின் செயல் பெரும் அநீதியல்லவா?. யூதமக்களுக்கு நல்ல குணங்களான நம்பிக்கை, நேர்மை போன்றவற்றை அளிக்கவேண்டியது பரிசுத்த ஆவியின் கடமையல்லவா? அதைச் சரியாகச் செய்யத்தவறிய பரிசுத்த ஆவியைத்தானே இயேசு சபித்திருக்கவேண்டும்? கனிதரும் பருவமில்லாததால் பழங்கள் இல்லாமல் இலைகள்மட்டுமே நிறைந்திருந்த அத்திமரத்தை கனிகொடுக்கவில்லை என்று சபித்த இயேசுவின் செயல் விசித்திரத்தில் விசித்திரமன்றோ! சொர்க்கத்திலேயே இல்லாத சர்வக்ஞதை உலகத்துக்கு வந்தபின் இயேசுவுக்கு எப்படி வந்திருக்கமுடியும்?

குறிப்பு:

இயேசுவுக்கு மனிதத்தன்மையும், தெய்வீகத்தன்மையும் ஒரே சமயத்தில் இருந்தன என்பதைப் பெரும்பாலான கிறிஸ்தவ மதப்பிரிவுகள் நம்புகின்றன. ஒரேசமயத்தில் முழுமையான மனிதராகவும், தெய்வமாகவும் இயேசு விளங்குகின்றார் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

இயேசுவின் ஜீவிதம்

கிறிஸ்தவர்களின் பரம பிதாவாகிய ஜெஹோவாவிற்கு கடவுளின் உயர்தனித்தன்மைகள் ஏதும் இல்லை என்பதை பைபிள் வசனங்களை சான்றாகக்கொண்டு நிறுவிய ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் இயேசுவின் வாழ்வையும் ஆராய்ந்து அவரது வரலாற்றுத்தன்மை, புனிதத்தன்மை, எல்லாம் அறிந்த தன்மை, ஆகியவற்றையும் முற்றிலும் ஆதாரப்பூர்வமாக நிராகரித்ததை கடந்த பகுதிகளில் கண்டோம்.

இரட்சிப்புக்கு ஒரேவழி என்றும் இறைமகன் என்றும் கிறிஸ்தவர்கள் கருதும் இயேசு சர்வவல்லமை உடையவரா, சுதந்திரரா என்ற கேள்விகளுக்கு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் ஆதாரப்பூர்வமாக பதில் அளிக்கிறார். தெய்வீககுணங்கள் ஏதும் இயேசுவுக்கும் இல்லை என்று எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதை இந்தப்பகுதியில் அறிந்துகொள்ளுவோம்,  வாருங்கள் நண்பர்களே! … 

இயேசு சர்வவல்லமை உடையவரா? சுதந்திரரா? ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே! உங்களுடைய பரிசுத்தவேதாகமாகிய பைபிள் சொல்லுகிறது.

“அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்”

(லூக்கா 22:43).

“அந்நாள் முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்”

(யோவான், 11:53-54).

இந்த இரு விவிலிய வசனங்களும் உங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு சர்வவல்லமை இல்லை என்பதையும் அவர் சுதந்திரர் அல்லர் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன, இயேசு அமைதி சமாதானம் ஆனந்தம் நிறைந்தவரா? உங்களுடைய விவிலியம் சொல்கிறது.

“பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார்”.”

மத்தேயு 26:37).

இந்தவசனம் உங்கள் கர்த்தராகிய இயேசு அமைதியாக(சமாதானம்) இல்லை என்பதையும், துன்பத்தை சந்திக்கும் துணிவும் அவருக்கு இல்லை என்பதையும் காட்டுகிறது. அவருக்கு மகிழ்ச்சியில் இருந்த இச்சையையும், அவர் எப்போதும் ஆனந்தமானவராக இருந்தவர் அல்லர் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

இயேசு ஜெஹோவாவின் தாசரே?

இயேசுவைப்பற்றி ஜெஹோவாவாகிய உங்கள் தேவன், பரமபிதா சொல்லுவதைப் பாருங்கள்.

“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.”

(மத்தேயு 12:18).

இயேசுவே தன்னைப்பற்றி சொல்லுவதையும் காணுங்கள்.

“இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”

(லூக்கா 13:35)

இந்த இரு விவிலிய வசனங்களிலிருந்தும் இயேசு ஜெஹோவாவால் தெரிந்தெடுக்கப்பட்ட பணியாளர், ஆசீர்வதிக்கப்பட்டவர், விரும்பப்பட்ட தாஸர் என்பது தெளிவாகப் புலனாகிறது.

இயேசுவின் மரண பயம்!

“இயேசு: ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,’ என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.”

(லூக்கா 23:46).

“சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: ‘என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,’ என்று ஜெபம்பண்ணினார்.”

மத்தேயு 26:39).

மேற்கண்ட வசனங்களை இயேசுவே சொல்லியிருப்பதால் இயேசுவுக்கு மேலாக பிதாவாகிய ஜெஹோவா இருக்கிறார் என்பதும் அவரே இயேசுவின் காவலர் என்பதும், இயேசு கடவுள் அல்லர் என்பதும், இயேசுவின் விருப்பப்படி எதுவும் நடப்பதில்லை என்பதும், எது நடப்பதற்கும் இயேசு ஜெஹோவிடத்தில்தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பட்ட துன்பங்களைக்கண்டு யூதமக்கள் கேலியாகச் சிரித்தபோது மிகவும் உரத்தகுரலில் அவர் கீழ்க்கண்டவாறு புலம்பியதாக பைபிள் சொல்லுகிறது.

“ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு, ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”

மத்தேயு 27:46)

மேற்கண்ட விவிலிய வசனம் இயேசு ஒரு சாதாரண மனிதரைப்போன்றே மரணபயத்தில் கதறினார் என்பதும் அவர் ஜெஹோவா என்னும் சிறுதெய்வத்தின் தாஸர் என்பதால் அவரது பிரார்த்தனை பலிக்கவில்லை என்பதும் அவரது தெய்வம் அவரைக் கைவிட்டது என்பதும் தெளிவாகிறது .

இயேசுவால் தன்னிச்சையாக வரம் அருளமுடியுமா? செபத்தேயுவின் தாய் தனது குமாரர்களை ஆசீர்வதிக்கும்படி இயேசுவைப் பிரார்த்தித்தபோது இயேசு சொன்னதாக பைபிள் சொல்லுவது

“இயேசு அவர்களிடம், ‘மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை”,’ என்றார்”.”

மத்தேயு 20:23).

இதிலிருந்து இயேசுவுக்கு யாருக்கும் எந்த வரத்தினையும் அளிக்கும் அதிகாரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர் ஜெஹோவாவின் அடியவர் என்பதும், அவரது பணியை, அவரது ஆணையை, சிரமேற்கொண்டு செய்பவர் என்பதும், அவரது பெயராலே இவர் மஹிமையைப்பெற்றதும் தெளிவாகிறது. ஜெஹோவாவின் ஆணைப்படியே அவர் வாழ்ந்து தனது உயிரையும் அவரது காலடியில் அர்பணித்ததும் தெரிகிறது.

இயேசுவுக்கு தெய்வீக இயல்புகளோடு மனித இயல்புகளும் இருந்தன என்றும் மேற்கண்ட அவரது செயல்கள் அவரது மனித இயல்பின்பாற்பட்டது என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அந்த வாதத்தினை ஏற்கவியலாது.

உங்கள் பரிசுத்த வேதாகமாமாகிய பைபிளில் இயேசு ஞானஸ்நானம்பெற்றபோது ஒரு புறாவின் வடிவில் பரிசுத்த ஆவியானது அவருள் இறங்கி அவரை எங்கும் நிறைந்தவராக்கியது கூறப்படுகிறது. அவரை ஒரு தேவதூதன் சர்வவல்லமை உடையவராக்கியதும் அதிலே சொல்லப்படுகிறது. அவர் ஜெஹோவாவின் தாஸர், சேவகர், என்பதும் சொல்லப்படுகிறது.Mark 15 - The Crucifixion - Scene 03 - Nailed to the cross

அதேபோன்று, சிலுவையில் அறையப்பட்ட அவர், தனது உயிரைவிடும் தருவாயில் தனது தேவனை நோக்கி, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறியதும் கூறப்படுகிறது. இயேசுவுக்கு மனித இயல்புகளன்றி தெய்வீகத்தன்மைகள் இருந்திருந்தால் மேற்கண்ட எதுவுமே நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து, சாதாரண விடயங்களைப் போதித்து நடமாடிய ஒரு மனிதனை தெய்வீகபுருஷர் என்று நீங்கள் ஆதாரம் ஏதும் இன்றி சொல்கிறீர்கள். இதனை ஏற்க முடியாது.

இயேசு ஜெஹோவாவின் ஏககுமாரரா?

இயேசு தனது குமாரன், தான் அவரது பிதா என்ற ஜெஹோவாவின் பைபிள் வார்த்தைகளைக்கொண்டு இயேசுவுக்கு தெய்வீக இயல்புகள் உண்டு என்று நீங்கள் வாதாடலாம். இந்தவாதமும் கீழ்கண்ட காரணங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. யூதர்கள் இயேசுவை நோக்கி, “உம்மை தேவகுமாரன் என்று சொல்வதன் மூலம் நீ தெய்வக்குற்றம் இழைத்திருக்கிறாய்,” என்று குற்றம் சாட்டியபோது அவர் கொடுத்த மறுமொழியைப்பாருங்கள்.

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான், என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”

(யோவான் 10:34-35).

jesus and mary magdeleneதனது அடியார்களுள் ஒருவரான மகதலேனா மரியாளிடம் இயேசு சொன்னதையும் காணுங்கள்.

“இயேசு அவளிடம், ‘என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால், போய் என் சகோதரர்களிடம் நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்,’” என்றார்”.“

யோவான் 20:17).

இந்த வசனங்களிலிருந்து இயேசுவின் தேவனும் மற்றவர்களின் தேவனும் ஒன்று என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது. ஜெஹோவா இயேசுவுக்குமட்டுமன்று மற்ற யூதர்களுக்கும் தந்தை என்பதும் தெளிவாகிறது.

மேலும் உங்கள் தேவனாகிய ஜெஹோவாவே“இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்,’ என்றும் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற அவரது வாக்குகளை பைபிளில் பலவற்றைக்காணமுடிகிறது.

இயேசுவை தனது குமாரனாக அவர் சொல்வதும் ஒரு சம்பிரதாயப் பூர்வமானதாகத்தான் தெரிகிறது.

பைபிளில் பல இடங்களில் பலரை ஜெஹோவா தனது குமாரர் என்று சொல்லியிருப்பதால், இயேசு அவரது ஒரே குமாரர் என்பதை ஏற்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இயேசு ஜெஹோவாவால் குமாரனாக அழைக்கப்பட்டதால், அவர் தேவன்/கர்த்தர் என்று சொல்வீரானால், அவரால் குமாரர் என்று அழைக்கப்பட்ட அனைவரும் கர்த்தராக, தேவனாக இருக்கவேண்டும். ஜெஹோவாவால் தலைச்சன் பிள்ளை என்று அழைக்கப்பட்ட எப்பிராயீம் மூத்ததேவன் ஆகவும், கடைசியாக குமாரன் என்று அவரால் அழைக்கப்பட்ட இயேசு இளைய கர்த்தராகவும் கருதப்படவேண்டும். இப்படிப்பார்த்தால் பல கடவுள்களைக் கருதவேண்டிவரும்.

கன்னிப்பெண் பெற்றதால் இயேசு தெய்வமாகக்கூடுமா?

கன்னி மரியாள் தனது கணவனோடு கூடாமலேயே இயேசுவைப்பெற்றதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நீங்கள் வாதிடலாம்.

மரியாள் யோசேப்புடன் திருமணமானபின்னர் கருவுற்றதால் அவர்கள் இருவரும் கூடாமல் இயேசு பிறந்தார் என்று எப்படி உறுதியாக சொல்லமுடியும்? திருமணத்திற்குப்பிறகு பிரம்மச்சரியத்தை அவர்கள் இருவரும் அனுசரித்தனர் என்றால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள்வேண்டிய அவசியம்தான் என்ன?

“அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

(மத்தேயு 1:25).

“அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.”

(யோவான் 2:12).

யோசோப்பு மரியாள் முதற்பிள்ளையைப் பெறும்வரையிலும், அதற்குப்பிறகும் அவளோடு சேர்ந்து இருந்தார் என்பதும் தெரிகிறது. இருவரும் ஒரேவீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதும் புலனாகிறது. ஒன்றாக வாழ்ந்த அவர்கள் கூடவில்லை என்பதை நீங்கள் எப்படி உறுதியாகக் கூறமுடியும்? அவர்களே அப்படி சொல்லியிருந்தாலும் கூட தமது பெருமைக்காக அவர்கள் அப்படிக்கூறியிருக்கலாம் அல்லவா?

ஆகவே இயேசு கன்னிப்பெண்ணுக்கு. கனவனோடு கூடாமலே பிறந்தார் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பேயில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

இயேசு முதற்பாவத்தால் தீண்டப்படாதவரா?

ஓ கிறித்துவின் சீடர்களே!

உங்கள் வழிகாட்டியாகிய இயேசுவைப் பெருமைப் படுத்துவதற்காகவும், மகிமைப்படுத்துவதற்காகவும் அவர் வாழ்ந்தகாலத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு புனையப்பட்ட கதைகளை எப்படி நாங்கள் நம்புவது? கன்னிப்பெண்ணுக்கு இயேசு பிறந்தார் என்பது கட்டுக்கதையாக இருப்பதால், அவரை தெய்வீகப் புருஷர் என்றோ, தேவன் என்றோ, கர்த்தர் என்றோ சொல்லமுடியாது.

அவர் ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

வழிவழியாக, வம்சபாரம்பரியமாக வந்த பாவத்தினால் தீண்டப்படாமல் இயேசு பிறந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆதிமனிதனின் சந்ததிகள் அனைவரையும் முதல்பாவமானது தொடர்ந்து வழிவழியாகப் பற்றிச்செல்லும் என்பது ஜெஹோவாவாகிய உங்கள் கர்த்தரின் கட்டளையல்லவா?

ஆகவே அந்த தேவ ஆணையின்படி இயேசுவிடமும் அந்தப்பாவத்தின் தொடர்ச்சி உண்டு; ஏன் என்றால் ஆதாமின் பரம்பரையில் வந்த மரியாளின் பிள்ளைதானே அவர்? முதல் பாவத்தை பெண் ஆண் இருவரும் செய்ததால் அவர்களது வம்சபாரம்பரியத்தில் வந்த அனைவரையும் அது பீடிக்கும் என்ற தேவ ஆணையிலிருந்து இயேசுவுக்கு விதிவிலக்கு கிடைப்பது எப்படி சாத்தியமாகும்?

கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாதவராகத்தானே இருக்கமுடியும்? இயேசு தனது தேவனை சார்ந்திருந்தவரே! இயேசு தனது தந்தையாகிய ஜெஹோவாவின் கருணையையே அருளையே எப்போதும் நம்பியிருந்ததைப் பல்வேறு விவிலிய வசனங்கள் காட்டுகின்றன. “என் தேவனே! என்னைக்கைவிட்டீரே!” என்ற கதறலும், “பிதாவே, உம்முடைய கரங்களில் எனது ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்ற முடிவும், இயேசு தனது பிதாவையே சார்ந்திருந்தார் என்பதை நிறுவுகின்றன.

பல நூறுமுறைகள் விவிலியத்தைத் தேடினாலும் இயேசு எங்கும் தன்னை கர்த்தர் என்றோ, தேவன் என்றோ, தானே சொல்லிக்கொண்டதை காணமுடியவில்லை. அப்படியிருக்க, இயேசு கடவுள், கர்த்தர், தேவன் என்று நீங்கள் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?

இயேசு தன்னைக் கடவுள் என்று அழைத்துக்கொள்வதை விரும்பவில்லை என்று நீங்கள் வாதிடலாம்.

அப்படியானால் அந்தப்பொய்யை நீங்கள் திரும்பத்திரும்ப மொழிவது ஏன்? இயேசு மனுஷகுமாரனாகத் தன்னை கூறிக்கொண்டது ஏன்? சரி, இயேசு தன்னைப் பலமுறை மனுஷகுமாரன் என்று அழைத்துக்கொண்டது ஏன்? எந்த ஒரு மனிதனும் தன்னை மனிதகுமாரன் மனிதகுமாரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளுவதில்லையே! உங்களைக்கேட்டால் சிலர் அதற்கு சிறப்பான காரணம் உண்டு என்று சொல்வீர்கள்.

ஆம் அதற்கு சிறப்பான காரணம் இருக்கவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு தச்சரின் மகனான இயேசு, பாமரர்களைச் சேர்த்துக்கொண்டு, தான் தேவ குமாரன் என்றும், கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதுவன் என்றும் பிரச்சாரம் செய்தார்.

இதைக்கேட்ட யூதர்கள் கடுங்கோபம் கொண்டனர். தேவதூஷணம் செய்த இயேசுவை தண்டிக்கவிரும்பினர். இதை அறிந்த இயேசு தான் கைதுசெய்யப்படலாம் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சினார், பயந்துபோனார். தண்டனையிலிருந்து தப்பிக்கவே இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று பலமுறை அழைத்துக்கொண்டார். இதுதான் அந்த சிறப்பான காரணமாக இருக்கமுடியும்.

இயேசு பகைவர்களுக்கு அஞ்சி, அவர்கள் கைகளுக்கு அகப்படாமல் ஒளிந்துகொண்டிருந்ததற்கு பைபிளிலே பல ஆதாரங்கள் உள்ளன.

இயேசுவின் இரண்டாவது வருகை: தீர்க்கதரிசனமா, புனைவா?final judgement

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

உங்கள் புனிதநூலான விவிலியத்தில் இயேசு சொல்கிறார்

“மனிதகுமாரன் தமது தகப்பனின் மகிமையில் தேவதூதர்களோடு வருவார்; அப்போது, அவரவருடைய நடத்தைக்குத் தக்கதாக அவரவருக்குப் பலன் அளிப்பார். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கு நிற்கிறவர்களில் சிலர், மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதைப் பார்ப்பதற்குமுன் சாக மாட்டார்கள்”

(மத்தேயு 16:27, 28).

மேற்கண்ட பைபிள்வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.

இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?

அப்படியிருந்தால் அவர்கள் குறைந்தது 1890 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டுமே? யாரும் அவ்வளவுகாலம் வாழமுடியாது என்பதால் அவர்கள் அனைவரும் மரித்துப்போயிருக்கவேண்டும்.

ஆனால் இன்னும் உலகம் அழியவில்லை, நியாயத்தீர்ப்பு நாள் வரவும் இல்லை.

ஆகவே இயேசு நன்றாகக் கதையளந்திருக்கிறார் என்பதுதான் தெரிகிறது. அவரது தீர்க்கதரிசனம் பொய்யாகியிருப்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் புனைவுரையின் விபரீத விளைவு!

ஐரோப்பாவில் கிபி 1000 ஆம் ஆண்டில் பல கிறிஸ்தவர்கள் உலகின் அழிவைப்பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நம்பினார்கள். அது வெகுசமீபத்தில் நிகழவிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இதைக்கேட்டப் பலகிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் சென்று சரண்புகுந்தார்கள்.

சூரிய கிரகணத்தைக்கண்ட ஒரு ஐரோப்பிய படைத்தளபதி, “ஓ! உலகத்தின் இறுதி நெருங்கிவிட்டது, எனவேதான் சூரியன் கொஞ்சம்கொஞ்சமாக மறைகிறது. அதேபோன்று உலகமும் முடியப்போகிறது,” என்று சொன்னான். தனது படையோடு அஞ்சி நடுங்கி திக்குத்தெரியாமல் அல்லாடினான்.

அதேசமயத்தில் பலர் தமது சொந்தம்-பந்தம், சொத்துபத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலஸ்தீனத்தில் கூடினார்கள். தங்களைக் காப்பாற்றுவதற்கு அங்கே இயேசு எழுந்தருளுவார் என்று நம்பினார்கள். அந்தக்காலத்தில் சூரிய கிரகணமோ சந்திரகிரகணமோ நிகழ்ந்தால், ஐரோப்பிய மக்கள் வீடுகளைவிட்டுவிட்டு குகைகளில் ஒளிந்துகொள்ளுவது வழக்கம். வானியலும் புவியலும் தெரியாததாலும், இயேசுவின் தீர்க்கத்தரிசனத்தின்மீது எல்லையில்லாத நம்பிக்கைவைத்ததாலும்தான் இந்த துரதிர்ஷ்டமான நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.

அதே ஐரோப்பியக் கண்டத்தில் சில மிஷநரிகள், 1881இல் உலகத்தின் அழிவு சமீபத்துவிட்டதாகவும் இயேசுவின் இரண்டாவது வருகை நிகழப்போகிறது என்றும் சில உதிரிப்பத்திரிக்கைகளில் எழுதினார்கள். மக்களிடையே பீதியை உருவாக்க முனைந்தார்கள். பெரும்பாலான மக்கள் அதனை நம்பவில்லை என்றாலும், அந்த மிஷநரிகள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்கள்.

ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்தபடி எதுவும் நிகழவில்லை.

ஆம்! உலகும் அழியவில்லை.

அவர்களது மீட்பராகிய இயேசுவும் வரவில்லை. எழுந்தருளவில்லை!

இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகமுடியுமா?

மேற்கண்ட எமது வாதங்கள் தெள்ளத்தெளிவாக, சான்றாதாரங்களோடு இயேசு கடவுள் அல்லர், தெய்வீகத்தன்மைகள் ஏதும் அவருக்கு இருந்ததில்லை என்பதனை நிரூபித்திருக்கின்றன. ஆகவே, அவரை நம்புவதால் விசுவாசிப்பதால் இகத்திலும் (இவ்வுலகவாழ்வில்) சரி, பரத்திலும்(அவ்வுலகில்) சரி, எந்த நன்மையையும் யாரும் அடைந்துவிடமுடியாது என்பதும் புலப்படுகிறது .

இதைக்குறித்து இயேசுவே என்ன சொன்னார் என்று மத்தேயுவின் சுவிசேஷ வசனம் காட்டுவதைப்பாருங்கள்.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல், என்னை நோக்கி,: ‘கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள். அப்பொழுது, நான், ‘ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்,’ என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

(மத்தேயு, 7:21).

மேற்கண்ட வசனத்திலிருந்து இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று சொல்லுவதால் சொர்கத்துக்குப் போகமுடியாது என்பதும் புலப்படுகிறது.

இயேசு நல்லவர் என்று ஒருவன் சொன்னதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள்.

“அதற்கு அவர் ‘நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவரும் இல்லையே: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்,’ என்றார்.”

(மத்தேயு, 19:17).

இந்த ஒரு விவிலிய வசனம் போதாதா, இயேசு கடவுள் அல்லர் என்பதற்கு சான்றாக. வேறொரு விளக்கமும் தேவையில்லையே!

இயேசு கடவுள் அல்லர் என்று நிறுவுவதற்கு இதுபோதாது என்று நீங்கள் சொல்லக்கூடும். திரித்துவக்கோட்பாட்டை பைபிளிலிருந்து அதற்கு சான்றாகக் காட்டலாம். இயேசு அந்த மக்களின் மனதைப் புரிந்துகொண்டார் என்றும், அதனால் அவர்கள் இயேசுவைக் கடவுள் என்று ஏற்கவில்லை என்பதை உணர்ந்திருந்தார் என்றும், அவர்களுக்காக உரைத்தது இது என்றும் நீங்கள் வாதிடலாம்.

ஆனால் அதெற்கெல்லாம் உங்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் ஏதும் கிடையாதே!

ஒருக்கால் விவிலியமே உங்களது வாதத்திற்குச் சான்று பகர்ந்தாலும், மற்ற மனிதர்களின் மனதில் உள்ளதை உள்ளவண்ணம் அறியும் சக்தி இயேசுவுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட ஆற்றல் இயேசுவுக்கு இருந்ததற்கு உங்கள் புனிதநூலில் ஆதாரம் கிடையாது.

யூதாஸைத் தனது சீடனாக வைத்திருந்த அவர், அவன் பணம் வாங்கிக்கொண்டு தனது குருவையே காட்டிக்கொடுப்பான் என்பதை அறியவில்லையே? தனது சீடனே துரோகியாய்த் தன்னைப் பணத்துக்காகக் காட்டிக்கொடுத்ததை அறிந்த இயேசு மிகுந்த துயரத்துக்கு ஆளானார். காட்டிக்கொடுத்த துரோகியான யூதாஸை சபித்தார் என்றல்லவா உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் சொல்கிறது.

யூதாஸின் மனதில் இருந்ததை அவர் அறிந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காதே.

இதைப்போன்று பல நிகழ்வுகளை அவருக்கு அத்தகைய ஆற்றல் எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு உதாரணமாகக்காட்டலாம். அவற்றை இந்த நூலின் பின்பகுதியில் காண்போம்.

அன்பான நண்பர்களே! இந்தப்பகுதியிலே ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தனது ஆழ்ந்த தர்க்க அறிவின் துணைக்கொண்டு பைபிளை ஆராய்ந்து, மனிதர்கள் தமது பாவங்களைக்கழுவி சொர்க்கம் செல்வதற்கு ஒரே வழி ஆதிமனிதரின் முதல்பாவக்கறைபடியாத தேவகுமாரன் இயேசு என்ற கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை ஆதாரமற்றது என்று நிரூபிப்பதைக்கண்டோம். இயேசு சாமானிய மனிதர் ஜெஹோவாவின் பக்தர், விசுவாசி ஆனால் அசாதாரணமானவரோ அல்லது சர்வவல்லமையுடையவர், முக்திதாதா அல்லர் என்பதும் அவரால் இகபரசுகங்களை மானிடருக்கு அருளமுடியாது என்பவற்றையும் புரிந்துகொண்டோம். அடுத்தபகுதியில் இயேசு செய்ததாக சொல்லப்படுகிற அற்புதங்கள் போலியானவை என்பதை ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி எப்படி நிறுவுகிறார் என்பதைக்காண்போம்.

குறிப்புகள்:

[1] மரணபயம் இல்லாதவர்களே மஹான்கள், மரணத்தையே வென்றவர்கள்தான் ஞானிகள் என்பது பாரத நாட்டு சமயங்கள் சொல்லும் ஒரு அற்புதமான உண்மை. பாரத நாட்டின் வரலாறு நெடுகிலும் மரணத்தருவாயிலும் ஆனந்தமாக இருந்த பெரியார்களைக் காணமுடியும். மரணம் வருகின்றபோதும் தைரியமாக சிரித்துக்கொண்டே அதை எதிர்கொண்ட பாதத்தாயின் வீரப்புதல்வர்களைக் காணமுடியும். ஆனால் மரணத்தின்போது அழுதுபுலம்பிய ஒருவரை மரணத்தை வென்றார் என்று இந்தக்கிறிஸ்தவர்கள் புனைகிறார்கள். அதைவிடக்கொடுமையானது மரணத்தை வென்ற பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்கே உரிய ம்ருத்யுஞ்ஜயன் என்ற அம்ருத நாமத்தையும் இயேசுவுக்கு சூட்டி இந்த மிஷனரிகள் மதமாற்றமுயலும் புரட்டு!

[1]  உலகத்தின் இறுதி சமீபித்துவிட்டது, இயேசுவைச் சரணடையுங்கள்; செத்தாலும் பின்னால் உயிர்த்தெழுந்து, உடலெடுத்து, சொர்கத்துக்குபோய் தடையற்ற புலனின்பம் அனுபவிக்கலாம் என்று இன்றுவரை மிசனரிகள் சொல்லிவருகிறார்கள். பலமுறை பொய்த்துப்போன இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்தை சமீபத்தில் ஐரோப்பியரால் கொலைவெறிகொண்டு அழிக்கப்பட்ட அமெரிக்க செவ்விந்தியரின் மாய  நாகரிகத்தின் பஞ்சாங்கத்தைக்கொண்டு 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்ததை இங்கே நினைவு கூறலாம்.

[1]  இவ்வுலகில் இல்வாழ்வில் உள்ள மனிதன் இறையருளால் அறவழி நடந்து, பொருள் தேடி இன்பம் பெறலாம் என்பதும். பரம்பொருளின் மீது வைத்த பக்தியால், பிறதிபலன் இன்றி செய்யப்படும் நற்செயல்களால், யோகத்தால், மெய்யுணர்வாம் ஞானத்தால் பிறவிப் பெருங்கடலைக்கடந்து மீண்டும் பிறவாது ஆனந்தமயமான பேரின்பமயமான முக்தி அடையலாம் என்பது ஹிந்து சமயங்களுள் ஆஸ்திக நெறிகள் சொல்லும் கருத்தாகும். ஆனால் கிறிஸ்தவம் இயேசு இறைமகன், அவர் பரிசுத்த ஆவியால் கன்னிமரிக்குப்பிறந்து, மக்களின் பாவங்களை போக்க, குற்றம் செய்யாதிருந்தும் பலியானார், பின்னர் உயிர்தொழுந்தார். இதை யாரெல்லாம் நம்புகிறார்களோ விசுவாசிக்கிறார்களோ அவர்களே  நியாயத்தீர்ப்பு நாளன்று உயிர்த்தெழுந்து சொர்க்கம் சென்று, தடையற்ற புலனின்பங்களை நுகவார்கள் என்று நம்புகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 

இயேசுவின் ஜீவிதம்

இயேசுவின் அற்புதங்களும் அவரது தெய்வீகத்தன்மையும்

கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

இயேசு தனது ஜீவிதத்தில் அனேக அற்புதங்களை செய்தார். ஆகவே, அவர் கடவுளே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் செய்ததாகக் கூறப்படுகின்றவை மெய்யாகிலும் அதிசயங்களா? அற்புதங்களா? அருஞ்செயல்கள்தானா?

அதைச் சற்று ஆராயலாம், வாருங்கள்.

யார் அந்தச் சாத்தான்?

00 Satanமுதலாவதாக, இயேசு சாத்தானை வெற்றிகொண்டு அவனைத் தோற்கடித்த சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். யார் இந்தச் சாத்தான்? அவனைப் படைத்தது யார் என்ற கேள்விகளுக்கு உங்கள் பரிசுத்தவேதாகமாகிய விவிலியத்தில் பதில் தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. சில பைபிள் உரையாசிரியர்கள் படைப்புக்காலத்தில் ஜெஹோவா ஆயிரக்கணக்கான ஏஞ்சல்களைப் படைத்தார் என்றும் அவர்களுள் தனது கட்டளைக்குக் கீழ்படியாதவர்களை அவர் சபித்தார் என்கிறார்கள். சபிக்கப்பட்ட ஏஞ்சல்களுள் ஒருவனே இந்த சாத்தான் என்றும் அவர்கள் சொல்வதுண்டு.

இந்த உரையாசிரியர்கள் எங்கிருந்து இந்தப் புராணத்தைக் கண்டுபிடித்தார்கள்? இந்தத்தகவல்களின் மூலம் எது?  பைபிளிலில் இதைப்பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. இயேசுவின் தாயான மரியாளின் கணவர் யோசேப்புவின் கனவில் வந்ததுபோல் யாராவது ஏஞ்சல் வந்து இவர்களது கனவிலும் சொன்னதோ?

இயேசு, சாத்தான் — இவர்களில் வல்லமையானவர் யார்?

சாத்தானைப்பற்றிய இவர்களது கட்டுக்கதையை நம்பினாலும்கூட இயேசுவைக் கடவுள் என்று ஒப்பமுடியாது.     கடவுளின் சாபத்தால் சாத்தான் தனது ஏஞ்செல் நிலையிலிருந்து வீழ்ந்தான் அல்லவா? இயேசு கடவுளாக இருந்தால், சாத்தான் அஞ்சாமல் அவருக்கு அருகில் வருவதற்கு முடியுமா? இயேசுவைக் கண்டதுமே அவன் அஞ்சி நடுங்கி ஓடிப்போய் இருக்கவேண்டுமே! அல்லது, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி இருக்கவேண்டும் அல்லவா?.

நமது கிராமங்களில் பேய், பிசாசு, துஷ்ட ஆவிகளால், பீடிக்கப்பட்டவர்கள் மாடசாமி, கருப்பசாமி, ஐயனார், சங்கிலி பூதனார் போன்ற கிராமதேவதைகளின் சன்னிதிக்கு வரும்போது அவர்களைவிட்டு ஓடிவிடுவதைக் காணலாமே! சாமியாடிகளைக்கண்டால் மனிதரைப் பிடித்து ஆட்டும் பேய்கள் அஞ்சி நடுங்குவதைத்தானே காணமுடிகிறது?

இங்கே நிலமை இப்படியிருக்க, அங்கே சாத்தானுக்கு இயேசுவை பிடிப்பதற்கு எந்தவித அச்சமும் இருந்ததாக பைபிளிலிருந்து அறியமுடியவில்லை. சான்றாக கீழ்கண்ட வசனத்தைப்பாருங்கள்.

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடையக் குமாரனேயானால், இந்த கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” — (மத்தேயு, 4:1-4).

இதே நிகழ்வினை லூக்கா(4:1-13)வின் சுவிஷேசத்திலும் காணலாம்[ii].

      சாத்தான் இயேசுவைப்பிடித்து, பட்டினிபோட்டு, பல இடங்களுக்கு இழுத்து சென்று அலைக்கழித்தது, இந்த வசனங்களில் இருந்து தெளிவாகப் புலனாகிறது மேலும், இயேசுவுக்கு சாத்தானை தூரவிரட்டும் அளவிற்கோ, அல்லது தன்னிடம்   நெருங்குவதைத் தடுக்கும் அளவிற்கோகூட சக்தி இல்லை என்பதும் தெரிகிறது.

சாத்தான் உங்கள் தேவனைவிடவும் திறமையானவனா?

      மத்தேயுவின் சுவேஷேசத்தில்(4:1) இருக்கும் ‘அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டு போகப்பட்டார்,’ என்பதைச் சுட்டிக்காட்டி, எமது வாதத்தினை மறுக்கலாம்.

பரிசுத்த ஆவியின் அனுமதியின் பேரிலேதான், சாத்தான் இயேசுவைப்பிடித்து பரிசோதனை செய்தான் என்றும் நீங்கள் வாதிடலாம்.

அப்படியானால் வேறு சில வினாக்கள் அங்கே எழுகிறது.

  1. இயேசுவை வனாந்திரத்துக்கு அனுப்பி சாத்தானைக்கொண்டு பரிசோதிக்கவேண்டிய அவசியம் பரிசுத்த ஆவிக்கு வந்தது ஏன்?
  2. சாத்தான் இயேசுவைப் பரிசோதித்து, இவர் தேவ குமாரன் என்று சான்றிதழ் வழங்கினால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்று பரிசுத்த ஆவி எண்ணியதா?
  3. உங்களது திரித்துவக்கோட்பாட்டின்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்கிறீர்களே. அதன்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியன வேறுவேறு அன்று என்றே பொருள்படும். சுதன் சாத்தானால் சோதிக்கப்பட்டால் பிதாவும், பரிசுத்த ஆவியும்  சோதிக்கப்பட்டதாகத்தானே அர்த்தமாகிவிடும்?

   உங்கள் தேவனாகிய ஜெஹோவா, இயேசுவை சோதனை செய்வதற்கு சாத்தானை அனுமதித்தார் என்பது சாத்தான் அவரைவிட சக்திவாயந்தவன் என்பதை அவரே ஒத்துக்கொள்வதாகிவிடாதா? அன்றி, அவன் உங்கள் ஆண்டவரைக்காட்டிலும் சக்தி குறைந்தவனா இல்லையா என்று அவருக்குத்தெரியாதா?

ஆனால் ஒன்று தெரிகிறது — சாத்தானால் சோதிக்கப்பட்டால் மக்கள் இயேசுவை நம்புவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதே அது.

      சாத்தானுடைய சோதனைகள் என்னென்ன என்பதையும், அவற்றையெல்லாம் உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்யாகிலும் வெற்றிகொண்டாரா என்பதையும் ஆராய்வோம்.

வனாந்திரத்தில் இயேசுவின் உண்ணாவிரதம்:

இயேசுவுக்கு சாத்தான் வைத்த சோதனை நாற்பதுநாள் உண்ணாவிரதத்தில் தொடங்குகிறது. உண்ணாவிரதமிருந்த இயேசுவுக்குப் பசித்தது. அப்போது அவரிடத்திலே கல்லை அப்பமாக மாற்றும்படி சாத்தான் சொன்னான். அதனைச் செய்ய இயேசுவால் முடியவில்லை[iii].

இதுதானா பரிட்சையில் தேறும் லட்சணம்? வேறென்ன அவர் செய்தார்?

அவர், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை, தேவனின் வாய்மொழிகளாலும் வாழ்கிறான்,என்றல்லவா பதிலளித்தார்!

கல்லை அப்பமாக்காமல் இப்படி அவர் மடத்தனமாக பதிலளித்தது ஏன்? அவருக்குப் பசி இல்லை என்பதால் அவர் அப்படிப் பேசவில்லை என்று நீங்கள் பதில் கூறலாம். ஆனால் அவருக்குப் பசி எடுத்தது என்பதை, மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிஷேசங்கள் தெளிவாகச் சொல்லுகின்றனவே! — (மத்தேயு, 4:2).

அவர் பசியை வென்றுவிட்டார், ஆகவே அவருக்கு பசிக்கவில்லை, எனவே அவர் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் வாதிடலாம். வனாந்திரத்தில் அவருக்கு பசி ஏற்பட்டதாக பைபிள்சொல்வதால் உங்கள் வாதத்தை ஏற்கவியலாது.

தேவவார்த்தைகளால் மனிதனுக்குப் பசியாறும் என்ற இயேசுவின் கருத்து உண்மையாக இருந்தால் தேவவார்த்தைகளைப்  பயன்படுத்தி பசியாறி இருக்கலாமே?

இன்னொருசமயம், தனது பசிதீர்க்கக் கனிகொடுக்காத அத்திமரத்தைக்கண்டு அவர் கடும்கோபம்கொண்டு சபிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே!

ஆகவே, பசியில்லாததாலோ, பசியை வென்றுவிட்டதாலோ, அல்லது தேவவார்த்தையின் மகிமையால் பசியை வென்றுவிட்டதாலோ, இயேசு கற்களை அப்பமாக மாற்றவில்லை என்பது சரியாகாது. அப்படி மாற்றுவதற்கு எந்த தெய்வீக சக்தியோ மந்திர ஆற்றலோ அவருக்கு இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தேவாலய கோபுர உச்சியிலிருந்து இயேசு குதிக்கமறுத்தது ஏன்?

Jesus on piancle with satanசாத்தான் இயேசுவுக்கு வைத்த இரண்டாவது பரிக்ஷைதான் என்ன? சாத்தான் ஒரு தேவாலயத்தின் கோபுர உச்சிக்கு இயேசுவைக்கொண்டு சென்று, அங்கே இருந்து கீழே குதி, ஏஞ்சல்களான பிதாவின் ஏவலர்கள் காப்பாற்றுவார்கள்,என்றதுதான்[iv] இரண்டாம் சோதனை.

இந்தத்தடவையும் இயேசு எதையும் செய்யவில்லை.

உண்மை அவ்வாறு இருக்க, சாத்தானை ஏசு தோற்கடித்தார் என்று இன்னமும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?

சரி, சாத்தானுக்கு ஏதாவது பதில் சொன்னாரா, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து?

ஆமாம், அவர் சாத்தானை நோக்கி கர்த்தராகிய ஜெஹோவாவை பரிச்சயம் பண்ணிப்பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்வதாக சொன்னார். அபத்தத்திலும் அபத்தம் அல்லவா இது? சாத்தானின் சவாலை ஏற்று, இயேசு  கீழே குதித்திருக்கவேண்டுமே.

சகிப்புத் தன்மையால், பொறுமையால்தான், கோவில் விமான உச்சியிலிருந்து இயேசு தாழக்குதிக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம்.

இயேசு உண்மையிலே பொறுமையின் வடிவமாகவே எப்போதும் இருந்திருந்தால் யாரையும் கடிந்துகொண்டிருக்கமாட்டாரே! பல சமயம் அநியாயமாக சபிக்கவும் செய்திருக்கமாட்டாரே! பொறையுடைமையால் அல்ல, பயத்தினால்தான் இயேசு கோயிலின் சிகரத்திலிருந்து கீழே குதிக்கவில்லை.

பரிசுத்த ஆவியின் ஆணைப்படி சாத்தான் இயேசுவைப் பரிசோதித்தான்; அதனால் அப்படி அவர் செய்யவில்லை என்றுகூட நீங்கள் வாதிடலாம். அப்படியானால்கூட, பரிசோதிப்பது சாத்தானின் கடமை என்றால் — அதில் வெற்றிபெறுவது இயேசுவின் கடமை அல்லவா? அதைவிட்டு நழுவுவது சரியாகாது.

சாத்தானின் சோதனைகளை ஏமாற்றுவது, அதற்கு பதிலாக ஏதேதோ தத்துபித்தென்று அர்த்தமின்றி பேசுவது,  பரிசுத்த ஆவி மற்றும் பிதாவின் ஆணையை மீறுவதாகாதா?

ஜெஹோவாவின் பூரண அருள் இயேசுவுக்கு இருந்திருந்தால், சாத்தானின் சவாலை ஏற்று, ஏஞ்சல்கள் காப்பாற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கையோடு, கோயிலின் சிகரத்திலிருந்து அவர் கீழே குதித்திருக்கமுடியாதா? அல்லது அங்கிருந்து சாத்தானையாவது கீழே தள்ளியிருக்கமுடியாதா? அல்லது, தான் கீழே குதித்தது போன்றதொரு மாயத்தோற்றத்தைச் சாத்தானுக்குக் காட்டியிருக்கலாமே? இவை எதையும் செய்யவில்லையே, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!

மலையுச்சியில்  இயேசு நடுநடுங்கியது ஏன்?02 Temptation

இயேசுவைப்பிடித்து, பம்பரம்போல சுழற்றி, ஒரு மலையின் முகட்டுக்குகொண்டு சென்ற சாத்தான், உலகில் உள்ள எல்லா அரசுகளையெல்லாம் காட்டி, நீ எனக்கு முன் மண்டியிட்டால், இவை அனைத்தையும் உனக்குத் தருவேன், என்றான்.

அச்சத்தால் வெலவெலவென நடுநடுங்கிய இயேசு தத்துபித்தென்று உளறினார்[v].

சாத்தானை மெய்யாகிலும் இயேசு தோற்கடித்திருந்தால் அவரை வெற்றியாளர் எனலாம். மாறாக சாத்தான்தான் இயேசுவை  நடுநடுங்கவைத்து வெற்றிபெற்றிருக்கிறான் என்பதுதானே உண்மை?

ஆகவே, பிதா-சுதன்-பரிசுத்த ஆவியாகிய திரித்துவரும் சாத்தானைக்காட்டிலும் வல்லமைகுறைவானவர்கள் என்பது தெரிகிறது.

சாத்தானை வெல்லமுடியாதவர் எப்படிக் கடவுளாக இருக்கமுடியும்?

மேலும், எந்தக்கொடுமையும் செய்யாமல் இயேசுவைப் பாவமே என்று விட்டுவிட்ட சாத்தான், ஜெஹோவாவைவிடக் கருணையுள்ளவராகவே தெரிகிறார்.

பன்றிகளைத் தீயஆவிகளுக்கு இயேசு பலிகொடுத்தது முறையா?

   08 Pigs ஒருசமயம், சில தீய ஆவிகள் பிடிக்கப்பட்ட மனிதனை இயேசுவிடம் கூட்டிவந்து, ஆவிகளை விரட்டச்சொன்னார்கள். அவனை விட்டுவிட, ஆவிகள் இயேசுவிடம் ஆயிரம் பன்றிகளை பலியாகக்கேட்டன. தீயசக்திகளின் இந்த அநியாயமான பேராசையை நிறைவேற்றிக்கொள்ள  ஆயிரம் பன்றிகளைக் கடலில் மூழ்கடித்துக்கொன்றுவிட இயேசு சம்மதித்தார்[vi]. இரண்டாயிரம் பன்றிகளை இழந்துவிட்ட அதன் உரிமையாளர்க்கு எவ்வளவு பெரிய நஷ்டம் இது![vii]

இயேசுவின் தெய்வீக சக்திக்கு நேர்மைக்கு எவ்வளவு பொருத்தமான உதாரணம் இதுவென்று பாருங்கள்!

பசியால் சாபம்விட்ட இயேசு, தானே உண்ணாவிரதம் இருந்தாரா? 

ஒருசமயம் பசியின்வேகத்தில், தனக்குக் கனிகொடாத அத்திமரத்தை அழிந்துபோகும்படி சபித்தார் இயேசு என்பதை நாம் அறிவோம்.

அது உண்மையிலேயே ஒரு பெரிய அற்புதம்தான்! செயற்கரிய அருஞ்செயல்தான்!

மரங்கள் பூத்துக் காய்த்து கனிவதற்கும் பருவம் இருக்கிறதல்லவா? அப்படியே இருந்தாலும், கனிகளை  நாம் பறித்தால்தானே நமக்கு கனிகள் கிடைக்கும்?

நமக்கு பழங்கள் தேவையா, இல்லையா என்பதை மரம் எப்படி அறியும்? கடவுளின் நியதிப்படியேதான் பருவகாலங்களும், மரங்கள் பூப்பதும் காய்ப்பதும், காய்கள் கனியாவதும் நிகழ்கின்றன.

இயேசு மெய்யாகிலும் தேவனாக, தேவகுமாரனாக இருந்திருந்தால் அப்போது அவருக்கு கனிகிடைக்காதற்கு அவரேதான் காரணமாக இருக்கவேண்டும்!. அப்படியானால், தன்னைத்தானே  நொந்துகொள்ளாமல், குற்றமில்லாத அந்த அத்திமரத்தை ஏன் சபித்தார்?  தாளாத பசியால் ஆத்திரம் அடைந்து, சாபம்விட்ட இயேசுவின் செயல் சரிதானா?

ஒருநாள்கூடப் பட்டினியை, பசியைத் தாங்கமுடியாமல் அத்திமரத்துக்கு அழிந்துபோகக்கடவது என்று சாபம்விட்ட ஏசு, நாற்பது நாற்கள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி?

நிச்சயம் அது பொய்தான்.

ஏசுவால் பசியைத்தாங்கமுடியும், ஆனால் தனது மகிமையை சீடர்களுக்கு காட்டுவதற்காகத்தான் அத்திமரத்தை சபித்தார்,’ என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் அத்திமரத்தினைக் கனிகொடுக்கும்படி செய்திருந்தால், அது நிச்சயமாக அற்புதமாக இருந்திருக்கும். அது அனைவரது பசியையும் போக்கியிருக்கும். அதனால் அவரது சீடர்களுக்கு இயேசுவின்மீது இருந்த நம்பிக்கை இன்னும் உறுதியாயிருக்கும்.

சரியான காலத்தில் பொருத்தமான செயல்களைச் செய்வது இயேசுவுக்கே தெரியாத செயலாகத்தான் தெரிகிறது. அவர் நாற்பதுநாள்கள் உண்ணாவிரதம் இருந்தது உண்மையிலே நடந்திருந்தாலும், அது அவரது இச்சைப்படி  நிகழ்ந்திருக்கவாய்ப்பில்லை. சாத்தானின் காவலில், காட்டிலே சிறைப்பட்டு இருந்ததால், அவருக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை.  யாரும் உணவைக்கொண்டுவந்து கொடுக்காததாலும், உணவை அவரே தேடிக்கொள்ள முடியாததாலும் அவர் உண்ணாவிரதம் இருந்ததுதான் உண்மை.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 

நீர்மேல் நடத்தல் போன்றவை அற்புதங்களா?Jesus walks on water

இயேசு நீர்மேல் நடந்தார் என்று புதிய ஏற்பாடு சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் அது ஒரு அற்புதம் ஆகாது.

ஜலஸ்தம்பம் என்னும் இந்த செயல் சாமானியார்களாலும் தற்காலத்தில் நடத்தப்படுகிறது[viii]. தற்காலத்தில் செப்படிவித்தைக்காரர்கள், மாயாஜாலக்காரர்கள், மந்திரவாதிகள் போன்றோர் செய்யும் வித்தைகளை இயேசு அந்தக்காலத்தில் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மிகச்சாதாரணமான அவற்றை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.

 

இறந்துபோனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவனா?

     மரித்துப்போனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவன் என்று சொல்லுகிறீர்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் (26:23)[ix] மற்றும் வெளிப்படுத்தின விஷேசம் (1:5)[x] ஆகிய பைபிள்வசனங்கள் தெளிவாக மரித்தோரிலிருந்து எழுந்தவர்களில் இயேசுவே முதலானவர் என்று சொல்வதால் இயேசு செத்துப்போனவர்கள் யாரையும் உயிர்ப்பிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இயேசு மரித்தவர்கள் யாரையாவது உயிர்ப்பித்திருந்தால் அவர்களில் யாரவதல்லவா முதலாவதாக உயிர்த்தெழுந்த மனிதராக இருந்திருப்பார்கள்? மரித்து உயிர்த்தெழுந்தபின்னர் இயேசு வேறுயாரையும் உயிர்த்தெழச் செய்யவில்லையே! ஆகவே, உயிர்த்தெழுந்த மரித்தவர்களில் இயேசுதானே கடைசியானவராய் இருந்திருக்கவேண்டும்?

மரித்துப் போனவர்களில் — உயிர்த்தெழுந்தவர்களில் முதலானவர்தான் இயேசு; ஆனால், உயிர்த்தெழவைக்கப்பட்டவர் அல்லர் இயேசு, என்று நீங்கள் வாதிடலாம். இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்ட மரித்தவர்களும், உயிர்த்தெழுந்தவர்கள்தான் என்பதை யாராவது மறுக்கமுடியுமா? நேற்றிரவு இடியோசைகேட்டு விழித்துக்கொண்டேன் என்று ஒருவர் சொன்னால் அவரே விழித்ததாகத்தானே பொருள்? மரித்துப்போன ஒருவர் உயிர்த்தெழவைக்கப்பட்டாலும் அவர் உயிர்த்தெழுந்தவர்தானே?

 இயேசு தானே உயிர்த்தெழுந்தாரா?

அடுத்து நமக்கு எழும் சந்தேகம்,  இயேசு தனது சக்தியினாலேயே உயிர்த்தெழுந்தாரா என்பதுதான். நிச்சயமாக தனது சக்தியினாலே அவர் உயிர்த்தெழவில்லை. அவரது தேவனால்தான் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதைக்கீழ்கண்ட விவிலிய வசணங்கள் தெளிவுபடுத்துகின்றன:

“நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். — (ரோமர் 4:24).

“ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.”  — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15)

கொரிந்தியர் 15ல் காணப்படும் கீழ்கண்ட வசனங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் காரணம் என்பதை சொல்லவில்லை:

 “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?  மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே! — (கொரிந்தியர் 15: 12-13).

ஆனால், பின்வரும் வசனம் இயேசு அவரது தேவனாலே உயிர்த்தெழச்செய்யப்பட்டார் என்று தெளிவாகச் சொல்கிறது:

“மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.” — (கொரிந்தியர் 15:15).

இயேசு மரித்தவர்களில் உயிர்த்தெழுந்தவரில் முதலானவர் என்ற விவிலியத்தின் கருத்து மெய்யானதென்றால், அவர் மரித்தவர்களை உயிர்த்தெழச்செய்தார் என்று அதே விவிலியம் சொல்லுவது தவறானதாகத்தானே இருக்கமுடியும்?

குறிப்புக்கள்

  ஏஞ்சல் என்பதைத் தேவதை என்று மொழிபெயர்ப்பு செய்வது கிறிஸ்தவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஏஞ்சல் என்பதும், தேவதை என்பதும் வேறுவேறு. ஹிந்துப் புராணங்களில் சொல்லப்படும் தேவ, தேவதைகளுக்கு இருக்கிற சுதந்திரம், ஜெஹோவா என்ற யூததேவனின் அடிமைச் சேவகர்களான் ஏஞ்சல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. –(சிவஸ்ரீ).

[ii] இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாள்கள் முடிந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும்,” என்றான்.

அவர் பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து, “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும்,” என்று சொன்னான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே,” என்றார்.

பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் — (லூக்கா 4:1-13).

[iii] அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்,” என்றான். அவர் பிரதியுத்தரமாக “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4:1-4).

[iv] அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுப் போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4: 5-7).

[v] மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” என்று சொன்னான்.

அப்பொழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு 4:8-10).

[vi]  அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில்மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும் — (மாற்கு 5:13).

[vii]  ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை.  நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

[viii]  ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம் அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், என்பது வரலாறு — (சிவஸ்ரீ.).

[ix] “ தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான் — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:23).

[x] உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. — (வெளிப்படுத்தின விஷேசம் 1:5).



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 இயேசுவின் திருப்பலி

அன்புக்குரிய நண்பர்களே!
வணக்கம். கிறிஸ்தவர்களின் ஆண்டவராகிய ஜெஹோவா மற்றும் அவரது ஒரே திருக்குமாரனாகிய இயேசு ஆகியோருக்கு கிறித்தவப் பிரச்சாரகர்களால் இருப்பதாக கற்பிக்கப்படுகின்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றையும் பைபிளில் இருந்து தக்க ஆதாரங்களைக் சுட்டிக்காட்டி ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் நிராகரித்ததை கடந்த பகுதிகளிலே கண்டோம். இந்தப்பகுதியிலே கிறிஸ்தவத்தின் பாவவிமோசனமாக விடுதலைக்கு ஒரே வழியாக கற்பிக்கப்படுகிற இயேசுவின் திருப்பலி என்ற கோட்பாடு ஒரு புனைவு என்பதை எவ்வாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் எவ்வாறு நிருபிக்கிறார் என்பதைக்காண்போம்.

ஓ கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களே!
இயேசு எல்லா மனித உயிர்களின் பாவங்களைப் போக்குவதற்காக திருப்பலியாக மரித்தார் என்பதால் அவர் தேவன் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள். அப்படியானால் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன.
1. இயேசு எந்த தெய்வத்திற்கு பலி கொடுக்கப்பட்டார்?
2. அவரை அந்ததெய்வத்துக்கு பலியாக கொடுத்தவர்கள் யார்?
இயேசு பலியிடப்பட்டாரா?
இயேசுவை பலியிடும் எந்த ஒரு சடங்கும் யாராலும் நிகழ்த்தப்படவே இல்லை. அப்படி நிகழ்ந்ததற்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரங்கள் ஏதும் இல்லவே இல்லை. யூதர்கள் இயேசுவைப்பிடித்து அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனையாக அவரை அன்றைய ஆட்சியாளர்களான உரோமானிய அதிகாரிகளைக்கொண்டு கொல்வித்தனர். இதுதான் உண்மை. இயேசுவின் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்பது உறுதி.

இயேசு தலைமறைவானது ஏன்?
மெய்யாகவே இயேசு மனிதர்களின் பாவத்தை கழுவுவதற்காகப் பலியிடப்படுவதற்காக பிறந்திருந்தால், அவர் ஏன் யூதர்களுக்கு அஞ்சி வனாந்திரத்தில் மறைந்து ஓளிந்து வாழ்ந்தார்? பொதுவெளியில் யூதர்களோடு சுதந்திரமாக உலாவியிருக்கலாமே? அவர் யாருக்கும் அஞ்சி ஓடி ஒளிந்துகொள்ளவில்லை என்றால் ஏன் உங்களது விவிலியம் ஏன் கீழ்கண்டவாறு சொல்லவேண்டும்.
“ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்”(யோவான் 11:57).
யூதகுருமார்கள் இயேசுவைக் கைதுசெய்ய ஆணையிட்ட பின்னரும் அவரை யூதர்களால் பிடிக்கமுடியவில்லை. ஆகவே இயேசு யூதர்களுக்கு அஞ்சி, மறைந்துவாழ்ந்தது உறுதியாகிறது. கடைசிக்கட்டத்தில் அவரது பயம் அதிகமானது, நடுக்கம் அதிகரித்தது அதனால் அவர் மறைவிடத்தில் ஒளிந்துகொண்டார் என்பதும் விளங்குகிறது.

இயேசு மரணபயம் அற்றவரா?
மரணபயத்தினால் இயேசு ஓடி ஒளியவில்லை, மறைந்திருக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் யோவானுடைய சுவிசேஷம் ஏன் இப்படி சொல்லவேண்டும்?
“அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம் விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் எனப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்”(யோவான் 11:53-54).
“நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்குமுன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர்மீது கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து, அந்த தேவாலயத்தைவிட்டு விலகிப்போனார் (யோவான் 8:58-59)”.
லூக்காவின் சுவிசேஷம் கீழ்கண்டவாறு சொல்கிறது,
a-jesus-cliff“அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்திலிருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக்கொண்டுவந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்”(லூக்கா 4:29-30).
இயேசுவின் திருப்பலி பரமபிதாவின் திட்டமா?
இயேசு சிலுவைப்பாடுகளால் துயருற்று பாஸ்கா பண்டிகையன்று மரணிக்கவேண்டும் என்பது அவரது பிதாவாகிய ஜெஹோவாவின் திட்டம். அதை ஏற்றுக்கொண்டு இயேசுவும் அன்றே மரித்தார்.03 Jesus Crucifixtion
பாஸ்கா பண்டிகையின்போது இஸ்ரவேலர்களும் மற்ற பழங்குடிகளும் ஒன்றுகூடுவார்கள். அப்படிக்கூடும்போது இரட்சகராகிய இயேசு தமக்காக உலகில் பிறந்து, துன்பப்பட்டார், திருப்பலியானார் என்பதை அவர்கள் அனைவரும் அறியவார்கள்.
அப்படி அறிந்ததனால் நியாயத்தீர்ப்பு நாளிலே இயேசுவை எங்களுக்குத்தெரியாது என்று யாரும் சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலாது. பலர் அறியும்வண்ணம் இயேசுவின் திருப்பலி நிகழவேண்டும் என்பதற்காக பாஸ்கா பண்டிகைவரை அவர் மறைந்து வாழ்ந்தார் என்றுகூட நீங்கள் வாதிடலாம். ஆனால் உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிளில் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லையே!
நீங்கள் சொல்லுகிறபடி உலகம்முழுவதும் இயேசுவின் துயரப்பாடுகளை அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது பிதாவின் இச்சை என்றால், அந்த பாஸ்கா பண்டிகையின்போது நிகழ்ந்த இயேசுவின் மரணம் உலகம்முழுதும் அறியப்பட்டிருக்கவேண்டுமே. அப்போது உலகம்முழுதும் உள்ள மக்கள் அதனை அறிந்தனரா? இப்போது உலகில் உள்ள அனைவருக்கும் இது தெரியுமா? இல்லை, வருகின்ற காலத்திலாவது உலகம்முழுவதும் வாழ்கிற மக்கள் இதை அறிவார்களா? எண்ணற்ற மக்கள் இந்த உலகத்தில் இயேசு என்ற பெயரைக்கேட்காமலே இறந்துபோயினரே!
இன்னும் பலப்பலர் அதேபோல இயேசுவை அறியாமலேயே இறந்துபோகவும் வாய்ப்பு உண்டு. எனவே உங்கள் பரமபிதாவாகிய ஜெஹோவாவிற்கு அப்படிப்பட்ட திட்டமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது.
உங்கள் தேவனாகிய ஜெஹோவா இயேசுவாழ்ந்த பிராந்தியத்தில் உள்ளவர்கள் மட்டும் அவரது மரணத்தை அறியவேண்டும் என்று விரும்பியிருந்தால் உலகெங்கும் இயேசுவின் செய்தியை ஏன் பரப்புகிறீர்கள்?
இயேசு தனது பிதா குறித்த காலத்தில் துன்பப்பட்டு மரணம் அடையவிரும்பினார், அதற்கு முன்னர் மரணிக்க விரும்பவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தால், அந்தத் துன்பங்களையெல்லாம் அவர் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகிவிடுமே!
மேலும், பிதாவாகிய ஜெஹோவா இயேசு எப்போது துன்பப்படவேண்டும் என்று முன்னரே முடிவுசெய்திருந்தால், இயேசுவுக்கு அந்த வேளை வருவதற்குமுன் துன்பப்பட்டிருக்க அவசியம் இருந்திருக்காதே? அப்படியானால் அந்த வேளை வரும்வரை அவர் வனாந்திரத்தில் ஒளிந்து மறைந்திருக்கவேண்டிய அவசியம் என்ன?
தான் துன்புற்று மரணிக்கிற காலம் எது என்பது இயேசுவுக்கு தெரியாததால் அவர் மறைந்திருந்தார் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் துன்பங்களை அனுபவிப்பதற்கும் சிலுவையில் மரிப்பதற்கும் இயேசு சம்மதம் அளித்திருக்கவில்லை என்று அது பொருள்படுமே? இயேசு மனித உயிர்களின் மீட்சிக்காக தானே விரும்பி துன்புற்று மரணிக்கவில்லை என்பது தெளிவாகவே இவற்றிலிருந்து தெரிகிறது. அவரது விதியே அவரது துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றுமட்டும் புரிகிறது.
இயேசு பிதாவின் திட்டப்படி தான் துன்பப்படப்போகின்றேன் என்பதை அறிவார், ஆனால் தான் மரிக்கப்போகிற நேரத்தைமட்டுமே அவர் அறியமாட்டார். எனவே அவர் தலைமறைவாக இருந்தார் என்று நீங்கள் வாதிடலாம். இந்த வாதம்கூட அச்சத்தினாலே இயேசு தலைமறைவாக வாழ்ந்தார் என்பதை உறுதிப்படுத்திவிடும்.
இயேசுவுக்கு தான் மரிக்கப்போகிற நாள் சரியாகத் தெரிந்திருந்தால் அவர் யூதர்களால் பிடிக்கப்பட்ட நாளன்றைக்கு மறைந்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே? அதற்கு மாறாக யூதர்கள் அவரைப் பிடிக்கவந்தபோது அவர்களை எதிர்க்காமல், தப்பிக்க முயற்சிக்காமல் தம்மை கைதுசெய்ய அவர் அனுமதித்தார்.01 Jesus's arrest
அவர் ஏன் அப்படிச்செய்தார்? அவரிடம் இருந்ததாக நீங்கள் சொல்லும் மாயமாக மறைந்துபோகும் சக்தி என்னவாயிற்று?
தனது தந்தையின் ஆணைக்கு கீழ்படிவதற்காகவே மறைந்துவாழ்ந்த இயேசு பின்னர் யூதர்களிடம் சரணடைந்தார் என்று நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால், இயேசுவுக்கு தான் எப்போது மரணிக்கப்போகிறோம் என்பது தெரியாது என்று சொல்லிவிட்டீர்களே! இயேசு யூதர்கள் தம்மைக் கைதுசெய்ய முயன்றபோது அவர்களிடமிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதனாலே அவர் அதற்கு முயற்சிசெய்யவில்லை என்பதுதானே உண்மை?
அவரது பரமபிதாவாகிய ஜெஹோவா இயேசுவைப் பலியிட முடிவுசெய்திருக்கவில்லை, அதற்கான நாளையும் அவர் குறித்துவைத்திருக்கவில்லை, அதைப்பற்றி இயேசுவுக்கு எதுவும் தெரிந்திருக்கவும் இல்லை, அந்தமுடிவுக்கு எந்த சம்மதத்தையும் அவர் தனது பிதாவுக்குக் கொடுக்கவும் இல்லை.

இயேசு யூதாஸை சபித்தது தண்டித்தது சரியா?
02 Judasஇயேசுவுக்கு தாம் மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக மரிக்கப்போகிறோம் என்பது தெரிந்திருந்தால் அவர் மறைவிடத்தில் ஒளிந்திருக்கமாட்டார். அப்படி அவர் தனது பலிதானத்தை உணர்ந்திருந்தால், தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸை ஆசீர்வதிக்காமல் சபித்தது ஏன்?
“மனிதகுமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனிதகுமாரனைக் கொல்வதற்குக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார் (மத்தேயு 26:24).
தன்னைக்காட்டிக்கொடுத்த யூதாசின் துரோகத்துக்கு தண்டனையாக அவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைத்தான் இயேசு சொன்னார் அதில் சாபம் ஏதும் இல்லை என்று நீங்கள் வாதாடலாம்.
அப்படியானால் இயேசுவின் துன்பம், துயரம், மரணம் ஆகியவற்றை நிச்சயித்த அவரது பிதாவாகிய ஜெஹோவாவின்மீது இயேசுவின் சாபம் சென்றிருக்கவேண்டுமே? இயேசு தனது துன்பத்திற்கு மூலகாரணமாக இருந்த ஜெஹோவாவை விடுத்து, அதற்குக் கருவியாக இருந்த யூதாஸை சபித்ததற்குக் காரணம் அவர் அடைந்த ஆழ்ந்த வருத்தமாகத்தான் இருக்கமுடியும்!
எல்லாம் அறிந்தவரான இயேசு, தனது தெய்வீகத்தன்மையினாலே யூதாஸை சபித்தார் — அதன்மூலம் தீர்க்கசதரிசனமாக அவன் தன்னைக்காட்டிக்கொடுப்பதை உரைத்தார் என்றுகூட நீங்கள் வாதாடலாம். அந்தமாதிரி வருங்காலத்தில் நிகழ இருப்பதை முன்னமே கண்டு உரைக்கும் சக்தி இயேசுவுக்கு இருந்திருந்தால், யூதாஸைத் தனது பிரிய சீடனாக அவர் வரித்தது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இயேசு தனது துன்பங்களுக்குக் காரணமான யாரையாவது சபிக்கவேண்டும் என்றால் அதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஜெஹோவாவைத்தானே அவர் சபித்திருக்கவேண்டும்? அதைச் செய்யாமல் யூதாஸைச் சபித்த இயேசுவின் செய்கை, அவருக்கு தீர்க்கதரிசன சக்தி இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?

இயேசு பட்ட துன்பங்களுக்குக் காரணம் யார்?
இப்போது நமக்குமுன்னே உள்ள கேள்வி, இயேசு பட்ட வேதனைகளுக்குக் காரணம் என்ன என்பதுதான். இயேசுவின் துயர்ப்பாடுகளுக்கு யூதாசின் துரோகம் காரணமா? இல்லை, ஜெஹோவா என்ற தேவனின் திட்டம் காரணமா? இல்லை, இரண்டுமே காரணமா?
யூதாசின் துரோகம்தான் காரணம் என்றால் இயேசுவின் மரணம் மனிதகுலம் செய்த, செய்யவிருக்கின்ற பாவங்களுக்கான கழுவாய், திருப்பலி என்று சொல்லமுடியாது.
ஜெஹோவா என்ற உங்களது தேவனின் திட்டமே காரணம் என்றால், தேவனின் ஆக்ஞைபடி இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் பாவியாகக் கருதப்பட்டு, நரகத்தில் தள்ளப்பட்டிருக்ககூடாது. இரண்டுமே காரணம் என்றால், யூதாஸைத் தீயவன் என்றும் ஜெஹோவாவைத் தேவன், நல்லவன் என்றும் சொல்வது அநீதியானதாகும், அநியாயமாகும்.
மரணத்துக்கு அஞ்சி வனாந்திரத்தில் மறைந்திருந்த இயேசு தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப் பழிவாங்கும் நோக்கிலே சபித்தார். இதிலிருந்து இயேசு பாவங்களுக்கு கழுவாயாக இறக்கவில்லை, பலியிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.
நண்பர்களே! இந்தப் பகுதியில் இயேசுவின் திருப்பலி என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை ஆதாரமில்லாத புனைவு என்பதை ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதைக் கண்டோம். அடுத்த பகுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலும் ஒரு புனைவே என்பதைக் காண்போம்.

[தொடரும்]
==================

குறிப்புகள்:

i.  பைபிளின் புதிய ஏற்பாட்டின் எந்த ஒரு சுவிஷேசத்திலும், இயேசு எந்த தெய்வத்துக்கும் பலியிடப்பட்டதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை. பலியிடுவது என்பது ஒன்று இருந்தால் அது ஒரு தெய்வத்தின் முன்னிலையிலேயே, அதற்காகவே, அதன் பெயராலே அச்சடங்கு நிகழ்த்தப்படவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள பொதுவான விதியாகும்.
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாக் காலங்களிலும் ஆதாம்-ஏவாள் மற்றும் அவர்தம் வம்சாவழியினர் செய்த பாவங்ளுக்கு கழுவாயாக, தேவனின் ஒரே குமாரரான இயேசு, தூயவராக பாவத்தின் கறைபடியாதவராகத் தோன்றி, வாழ்ந்து துன்பப்பட்டு, செய்யாத குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டார் — அவரது மரணம் மனிதகுலம் செய்த பாவங்களுக்கான பலி என்பது கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பலி என்பது மனிதர்கள் தாம் செய்யும் பாவத்திற்கு கழுவாயாகப் பரிகாரமாகக் கருதப்படுவது, எல்லா நாகரிகங்களிலும் மக்கள் தொகுதிகளிலும் காணப்படும் ஒரு வழக்காறுதான். ஆனால் பலி ஒரு தெய்வத்துக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்.
ஆனால் இங்கே பாவம் இருக்கிறது, பலிப் பசுவாக ஜெஹோவா என்ற யூதரின் தெய்வத்தின் பிள்ளையே இருக்கிறார்.
சரி, தெய்வம் எங்கே? யூதர்களுக்கும் சரி, கிறிஸ்தவர்களுக்கும் சரி, ஒரே தெய்வம் ஜெஹோவாதான். வேறு தெய்வம் கிடையாது. அப்படியானால் ஜெஹோவாவுக்கு இயேசு பலியிடப்பட்டார் என்று கிறிஸ்தவர்கள் சொல்லமுடியுமா? நிச்சயம் சொல்லவே முடியாது. காரணம், அப்பனுக்கு பிள்ளையை பலிகொடுத்தால் அப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பது அபத்தம். அப்பனே பிள்ளையை பலிகொடுக்கத் திட்டமிட்டார் என்பது இன்னமும் அபத்தம்.

ii.  பலி என்று வரும்போது யார் எஜமானராக இருந்து பலியை நிகழ்த்துகிறார்கள் என்பதும் முக்கியம். அவர்களுக்கு பலிகொடுப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கும். பலியின் பயன் பலியை ஏற்பாடு செய்த யஜமானர்களையே சேரும். இதுவும் தெய்வங்களுக்கு கொடுக்கும் பலிகளைப்பற்றிய ஒரு பொது நியதிதான்.
இங்கே இயேசுவின் திருப்பலியை எடுத்துக்கொண்டால், இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்களின் குருமார்களா, அந்தக்காலத்தில் யூதர்களை ஆண்ட உரோமர்களா, அல்லது இதைத் திட்டமிட்ட ஜெஹோவாவா? யூதகுருமார்களே திட்டமிட்டு இயேசுவின் மீது குற்றம் சுமத்தி ரோமானிய அதிகாரியிடம் இயேசுவுக்கு தண்டனை வாங்கித்தந்தார்கள் என்பதை புதிய ஏற்பாடு சொல்கிறது. ஆகவே அவர்களுக்குத்தான் பலியின் பயன் சேரும் என்று கிறிஸ்தவர்களால் சொல்லமுடியாது. பலி ஜெஹோவா என்ற யூதர்களின் தேவனுக்கே சேரும் என்று சொல்லவும் முடியாது. காரணம், பலிகொடுப்பவரும் வாங்குபவரும் ஒருவராக இருக்கமுடியாது. தனக்குத்தானே ஒருவர் பலிகொடுத்துக்கொள்ள முடியாது. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இயேசுவின் பலிதானத்தின் பயன் பலிகொடுப்பதில் எந்தவித சம்பந்தமும் இல்லாத அவரது விசுவாசிகளுக்கு என்று கிறிஸ்தவ தேவஇயல் வாதிகள் சொல்லுவது தர்க்க அறிவுக்குப் பொருந்தவே பொருந்தவில்லை. அதைவிட பலிகொடுத்தால் பலிகொடுப்பதற்கு முன்செய்த பாவம் போகும் என்பதால், இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு பல நூறு ஆண்டுகளுக்குப்பின்னும் அவரது ரத்தம் மனிதர்களின் பாவங்களைப்போக்கும் என்ற நம்பிக்கையும் தர்க்க அறிவுக்கு முரணாகவே அமைகிறது.

iii.  மரணபயத்தினை வென்றவர்களே யோகிகள், ஞானிகள், மாவீரர்கள் என்பது பாரதப் பண்பாட்டில் காணப்படும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
மரணத்தை வெல்லுதல், மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதல் என்பதற்கெல்லாம்கூட மரணபயத்தை கடத்தல் என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். மரணபயத்தை வெல்லாதவர்களுக்கு, மரணத்தைவெல்லுதல் என்பது சாத்தியமில்லாதது. ம்ருத்யுஞ்ஜயர் என்ற வைதீக, சைவ கருத்தாக்கத்தினை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு புனைந்து ஏற்ற முனைகிறார்கள் (வேறு எதற்கு, நமது மதங்களை அழிப்பதற்குத்தான், ஜீரணம் செய்வதற்குத்தான்!). ம்ருத்யுஞ்ஜய இயேசுவே என்று கீர்த்தனங்கள் வேறு பாடுகிறார்கள். மரணத்தைக்கண்டு அஞ்சி, ஓடி ஒளிந்த ஒருவரை யோகி என்றும், ஞானி என்றும் ம்ருத்யுஞ்ஜெயர் என்றெல்லாம் கிறைஸ்தவர்கள் சொல்வது அபத்தமானப் முற்றிலும் அறிவுக்கு பொருந்தாத புனைவே!



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்னும் புனைவு

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசு தானே உயிர்த்தெழவில்லை, அவரது பிதாவாலே உயிர்த்தெழச்செய்யப்பட்டார் என்று முன்னர் வாதிட்டோம். அதற்குமாறாக ஜெஹோவா என்னும் யூததேவனும் இயேசுவை உயிர்த்தெழச்செய்யவில்லை, சிலுவையில் மாண்ட இயேசு, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழவே இல்லை என்பதை இங்கே நிருபிப்போம்.

இயேசுவின் உயிர்த்தெழுகையின் முக்கியத்துவம்

உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்ததன் முக்கியத்துவத்தைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதைப்பாருங்கள்.

கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்”–                                                    (கொரிந்தியர் 15:17).

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது கிறைஸ்தவத்தின் அடிப்படையான நம்பிக்கைகளுள் ஒன்று என்பதால் அதைப்பற்றி விரிவாக இன்னொரு நூலை எழுதுகிறேன். ஆகவே இங்கே மிகவும் சுருக்கமாக அதன் பொய்மைத்தன்மையை  நிறுவ முயல்கின்றேன்.

உயிர்த்தெழுந்ததற்கு நேரடி சாட்சிகள் உண்டா?

சிலுவையில் மரணித்த இயேசு உயிர்த்தெழுந்தது உண்மையா, இல்லை பொய்யா என்பதை உறுதிசெய்வதற்கு அந்தகாலத்தில் அந்த நிகழ்வைக் கண்டவர்களின் சாட்சியத்தை ஆராயவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா யூதர்களும் இயேசு உயிர்த்தெழுந்தது பொய் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

பைபிளிலே இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சுட்டப்படும் சான்றுகளைப்பார்க்கலாம்.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் நேரடியாகக் கண்டதாக எந்தவொரு அப்போஸ்தலரும் சொல்லவே இல்லை. அதற்குமாறாக, மற்றவர்கள் அதனைக்கண்டதாக சொன்னதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த பதினொரு அப்போஸ்தலர்களும் பின்னர் இயேசுவை நேரடியாகக் கண்டபோது அவரை வணங்கினார்கள். ஆனால் அவர்களுள்ளும் ஒரு சிலர் தாம் கண்டதை நம்பவில்லை.

“அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்”  — (மத்தேயு 28:17).

உயிர்த்தெழுந்தற்குப் பின்னர் இயேசுவைக் கண்ட அவரது பதினொரு சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் தாம் கண்டது இயேசுவையா என்று சந்தேகப்பட்டவர்களுள் அவரும் ஒருவரா என்பதை நாம் அறியமாட்டோம். உண்மையாகவே இயேசுவை அவர் கண்டிருந்தால், இயேசுவைக் கண்டேன் என்று அவர் சொல்லாதது ஏன்? ஆகவே மத்தேயுவும் கூட தாம் கண்ட மனிதர் இயேசுவா என்று சந்தேகப்பட்டவர்களில் ஒருவர் என்பது தெரிகிறது.

Image result for jesus resurrection clipartஅவர்கள் கண்டது இயேசுவைத்தானா, அல்லது வேறு ஒருவரையா? இயேசுவோடு பலகாலம் கூட இருந்தவர்கள், அவருக்கு சேவை செய்தவர்கள்கூட அவர் உயிர்த்தெழுந்ததை சந்தேகப்பட்டார்கள், அவர் உயிர்த்தெழுந்ததை நம்பவில்லை என்றால் 1890(தற்போது 2016) ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் நாங்கள் எப்படி அதை நம்புவது?   .

உயிர்தெழுந்த நிகழ்வின் முரண்பட்ட சித்திரங்கள்!

இயேசு உயிர்த்தெழுந்ததை குறிப்பிடும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நற்செய்தியாளர்கள், தமது சுவிசேஷங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட வகையில் அதனை விவரித்திருக்கிறார்கள். இயேசு எவ்வாறு உயிர்த்தெழுந்தார் என்பதைப்பற்றி அவர்களது சித்திரங்கள் தம்முள் முரண்படுகின்றன.

 “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல், எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்”.– யோவான் 20:1,

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம்நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்”.                           மத்தேயு 28:1,

ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து”  – மாற்கு 16:1-2.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்”.–        மத்தேயு 28:2

அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.  அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.–                  மாற்கு 16:4-5,

“அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்”.–                                           லூக்கா 24:4.

லூக்காவின் சுவிசேஷப்படி அவர்கள் மத்தேயு சொன்ன தேவதூதனையோ அல்லது மார்க் சொன்ன இளைஞனையோ காணவில்லை.

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்”.–                   யோவான் 20:11-12.

யோவானின் சுவிசேஷப்படி மகதலேனா மரியாள் ஒரு தேவதூதனையோ (மத்தேயு சொன்னபடி) அல்லது ஒரு இளைஞனையோ (மாற்கில் கண்டபடி), அல்லது இருவரையோ (லூக்கா சொன்னபடி) காணவில்லை.

கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்”.                    – லூக்கா 24:9,

நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்”                                      .– மாற்கு 16:8.

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு,வாழ்க, என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்”.                          – மத்தேயு 28:9.

ஆனால் யோவான்(20:14) சுவிசேஷ வசனப்படி மேரி மகதலேனா இயேசுவைத் தொடவில்லை அவர்தான் உயிர்த்தெழுந்து மீண்டுவந்த இயேசு என்பதை உணரவும் இல்லை.

       யோவானுடைய நற்செய்திப்புத்தகம் (20:15-19) உயிர்த்தெழுந்த இயேசுவை மேரி மகதலேனா முதன்முதலில் கண்டதாகக் கூறுகிறது[ii]. அதன் பிறகு அவரது 11 சீடர்களும் அவரைக்கண்டதாகவும் யோவான் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ (28:16-17) தனது சுவிசேஷத்தில் இயேசுவின் பதினொரு சீடர்களும் உயிர்த்தெழுந்த அவரை முதன்முதலாக கலிலேயாவாவில் சந்தித்ததாக சொல்லுகிறார்[iii].

இயேசு பெத்தானியாவிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று லூக்கா (24:50-51) சொல்லுகிறார். ஆனால் அவர் ஒலிவ மலையிலிருந்து சொர்க்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று அப்போஸ்தலர் (1:9-12)  அதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

மத்தேயுவின் (12:40)  சுவிசேஷத்தில் இயேசு மனிதகுமாரனாகிய தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) மூன்று பகல் மற்றும் மூன்று இரவும் இருப்பேன் என்று தீர்க்கதரிசனம் உரைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மாற்கின் (14:25-46) நற்செய்தியிலோ, அவர் கல்லறையில் ஒரு பகலும், இரண்டு இரவுகளும் வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

நான்கு சுவிஷேசக்காரர்கள் காட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய சித்திரத்தில் முரண்பாடுகள் காணப்படுவதால், அவர்கள் சொல்லும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதற்கில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிஷேசங்களும் புனைவு என்று மறுக்கப்பட்டபிறகு, நிராகரிக்கப்பட்டதற்குப்பிறகு, இயேசு மரணித்துப் பின் உயிர்த் தெழுந்தார் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உங்களிடம் ஏதும் உள்ளனாவா?

உயிர்த்தெழுந்தார் என்பதில் ஒற்றுமை ஆதாரமாகுமா?

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

நான்கு சுவிசேஷக்காரர்களுக்கிடையே இயேசு எவ்வாறு உயிர்த்தெழுந்தார், யார் அவரைக்கண்டார்கள் என்பதில் அவர்கள் தரும் மாறுபட்ட தகவல்களால் முரண்பாடு காணப்பட்டாலும், இயேசு உயிர்த்தெழுந்ததை ஏகமனதாக அவர்கள் அனைவரும் சொல்லுவதால் அது உண்மையே என நீங்கள் வாதாடலாம். ஆனால் உங்களுடைய அந்த வாதம் சரியானதன்று, நியாயமானதன்று, தர்க்கப்பூர்வமானதுமன்று.

ஒரு எளிய உதாரணம் கொண்டு இதை விளக்குகின்றேன்.

       திருவனந்தபுரத்தில் உள்ள ஆட்டகுளங்கரை என்னும் இடத்தில் ஒரு கடையின் மேஜையின் மீது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு வெள்ளைக்காகம் அமர்ந்திருந்ததைப் பார்த்ததாக ஒருவர் சொல்லுகிறார்.

அதே காலத்தில், அதே வெள்ளைக் காகம், வேம்பயம் என்ற ஊரில், குருப் என்பவரின் இல்லத்தில் கட்டிலின்மீது அமர்ந்து இருந்ததைக் கண்டதாக இரண்டாவமவர் சொல்கிறார்.

 மூன்றாவது நபரோ, அதே வெண்காக்கையை, அதேசமயம் சங்குமுகம் என்ற ஊரிலே பார்த்ததாகச் சொல்லுகிறார்.

கொட்டாரக்கரை என்னும் ஊரில் உள்ள பிரதான ஆலயத்தில் அந்த வெள்ளைக்காகத்தை அதே சமயம் கண்டதாக நான்காவதாக ஒருவரும் சொல்லுகிறார்.

இந்த நான்கு மனிதர்களும் வெள்ளைக்காக்கையைக் கண்டதாகச் சொன்னார்கள் என்பதற்காக வெள்ளைக்காக்கை இருப்பதை நம்புவீர்களா? அப்படி யாராவது சொன்னால் அவர்களைப்பார்த்துச் சிரிக்கமாட்டீர்களா?

இதைப்போன்றதுதான் நீங்கள் நம்புகிற, பரப்புகிற, இயேசுவின் உயிர்த்தெழுதலும். அது நம்பத்தக்கதன்று.

இயேசுவின் அற்புதங்கள் யாவும் கட்டுக்கதைகளே!

       இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் மெய்யாகிலும் தமது வாழ்நாளிலோ அதற்குப்பிறகோ நிகழ்த்தவில்லை என்பதை மேற்கண்ட எமது வாதங்களும், அதற்கான ஆதாரங்களும், நிரூபிக்கின்றன.  சாத்தானைத் தோற்கடித்தது முதல், உயிர்த்தெழுந்ததுவரை — பைபிளில் சொல்லப்படுகிற இயேசுவின் அற்புதங்கள் யாவும் வெறும் கட்டுக்கதைகள், ஆதாரமற்ற புனைவுகள் என்பதை எமது வாதங்கள் நிரூபித்திருக்கின்றன.

 Image result for jews mocking at blindfolded jesus clipartஇயேசுவைக் கைதுசெய்த யூதர்கள் அவரது கண்களைக்கட்டிவிட்டு, கேலிசெய்தனர். கன்னத்தில் அறைந்து, உம்மை அடித்தது யார் என்று கேட்டார்கள். அதற்கு அவரால் எந்த பதிலையும் சொல்லமுடியவில்லை. இயேசுவை சந்தித்தபோது மகிழ்ச்சி அடைந்த ஏரோது மன்னன் ஒரு அற்புதத்தை நிகழ்த்தவேண்டினான். அப்போதும் எந்த அற்புதத்தையும் அவர் நிகழ்த்தவில்லை.

சிலுவையில் அறையப்பட்டபின்னர் யூதகுருமார்களான பரிசேயரும், சதுசேயரும், மூப்பர்களும் இயேசுவைநோக்கி, நீவிர் உண்மையிலே இஸ்ரவேலின் ராஜாவானால் சிலுவையிலிருந்து இறங்கிவந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்! என்று அறைகூவல் விடுத்தனர். அப்போதும் இயேசுவால் சிலுவையிலிருந்து இறங்கிவந்து தன்னுயிரைக்காத்துக் கொள்ளமுடியவில்லையே!

மரக்கட்டையைப்போல எதையும் செய்யாமல்தானே இருந்தாரே இயேசு கிறிஸ்து!

இயேசு தன்மீது கல்லெறியப்பட்டபோதும், மலை முகட்டிலிருந்து தள்ளிக் கொலைசெய்ய முயற்சிசெய்யப்பட்டபோதும் அதிலிருந்து கள்ளத்தனமாகத் தப்பிச் சென்றதை ஓர் அற்புதமாக நீங்கள் சொல்லலாம். அப்படியானால் மறைந்து செல்லும் அந்தத் தெய்வீக ஆற்றலை சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு ஏன் பயன்படுத்தவில்லை? தன்னுயிரைத் தற்காத்துக்கொள்ள அவரால் முடியாதது ஏன்?  தன்னைப்பிடிக்கவந்த சேவகர்களிடமிருந்து தப்பித்து ஒளிந்துகொள்ளுவது இயேசுவுக்கு ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது. எனவேதான் மிகச் சாதூர்யமாக இயேவை அவர்கள் பிடித்துக் கைதுசெய்தனர்.

அந்த நாளில் தான் கைதுசெய்யப்படவேண்டும் என்று தமது தந்தையாகிய பரமபிதா முடிவு செய்திருந்தார், அதனாலேயே இயேசு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிசெய்யாமல் கைதானார் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் எல்லா மனிதருக்கும் தெய்வீக இயல்புகளோடு மானுடத்தன்மைகளும் இருக்கின்றன என்றே முடிவு செய்யவேண்டியிருக்கும். எல்லா மனிதர்களும் கடவுள் என்றுதான் நாம் கருதவேண்டும்.

அற்புதங்கள் செய்வோரெல்லாம் ஆண்டவரா?

 புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களில் காணப்படும் எல்லா அற்புதங்களையும் இயேசு செய்தார் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மோசே, ஜோசுவா, எலிசா, போன்ற — இயேசுவுக்கு முன் வாழ்ந்த யூததீர்க்கதரிசிகளும் பலப்பல அற்புதங்களை நிகழ்த்தியதாக பழைய ஏற்பாடு சொல்லுகிறது.

மேலும் பழைய ஏற்பாட்டின் யாத்திராகமத்தில் (7&8), ஜெஹோவாவின் அருளால் மோசே அற்புதங்கள் நிகழ்த்தியபோது — அதைப்போன்றும், அதனினும் விந்தையான சித்துவேலைகளை எகிப்திய மன்னனான பாரோவின் மந்திரவாதிகள் செய்து காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

யூதப்பெருந்தேவனான ஜெஹோவாவை நம்பாத அந்த எகிப்திய அரசவை மந்திரவாதிகள் கைத்தடியை பாம்பாக மாற்றுதல், தண்ணீரை இரத்தமாகச் செய்தல், தவளைகளை வரச்செய்தல் போன்று பல சித்துவேலைகளை பார்வோனின் முன்னிலையில் செய்ததாக யாத்திராகமம் (7 & 8) கூறுகிறது. கடவுளை நம்புவோரோ நம்பாதவரோ யார் வேண்டுமானாலும் அற்புதங்கள் என்று சொல்லப்படுகிறவற்றை, செப்படிவித்தைகளைச் செய்யமுடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது. அற்புதங்களை செய்வோரெல்லாம் கடவுளாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இயேசு தேவன் அல்ல என்பதும் புலப்படுகிறது.

மேலும் மத்தேயு (24:24) சுவிசேஷம் சொல்கிறது

ஏனெனில், கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்”.

எனவே, அற்புதங்கள் செய்கிறார்கள் என்பதற்காக யாரையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆனால், அத்தகையவர்களை கடவுளின் பக்தராகவோ அல்லது எதிரியாகக் கருதுவதில் தவறேதும் கிடையாது. பைபிளை ஆழமாக ஆராய்ந்து பார்க்கின்றபோது, இயேசுவைக் கடவுளென்று கருதுவதற்கு எந்தவோர் ஆதாரமும் அதில் கிடையாது என்பது தெளிவாகத்தெரிகின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

இயேசுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தது என்ன?

தர்க்கபூர்வமான வாதங்களின் மூலம் இயேசு தனது மரணத்திற்குப்பின்பு உயிர்த்தெழவில்லை என்பதை எடுத்துக் காட்டினோம். அவரது மரணத்திற்குப்பின்னர் நிகழ்ந்தது என்ன என்று பைபிள் கூறுவதை ஆராய்வோம்.

பாவிகள் அனைவரது உறைவிடமாக நரகம் (ஹெல்) இருக்கின்றது என்று பைபிள் கூறுகின்றது. அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி.

நரகத்திற்கு சென்றவர்கள் மீண்டுவருவதில்லை என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருப்பதால், நரகத்துக்குச் சென்ற இயேசு அங்கிருந்து வெளியேவந்திருக்க வாய்ப்பில்லை.

எமது இந்த வாதத்தினை யோவான் (20:17) வசனம் ஊர்ஜிதப்படுத்துகின்றது.

இயேசு அவளிடம், “என்னைத்தொடாதே, நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச்செல்லவில்லை,” என்றார் என்கிறது அந்த வசனம். சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது.

இயேசுவுக்கு சொல்லப்படும் பொருந்தாப் பெயர்கள்!

எனவே, புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிஷேசங்களில் இயேசுவுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் அவருக்கு எந்தவகையிலும் பொருந்தாதவையே!

  1. ஆண்டவர், தேவன் (யோவான் 20:28)[iv],
  2. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்தேயு 1:23)[v],
  3. என்றென்றைக்கும் சிம்மாசனம் உள்ள தேவன் (எபிரேயர் 1:8)[vi],
  4. இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5)[vii],
  5. நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவர் (1 திமோத்தேயு 1:19)[viii],
  6. நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதி, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா (1 திமோத்தேயு 6:15)[ix],
  7. தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்த தேவன் (1 யோவான் 3:16)[x],
  8. தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தேவன் (அப்போஸ்தலர் 20:28)[xi],
  9. மகாதேவன் (தீத்து 2:13)[xii],
  10. மாமிசத்திலே வெளிப்பட்ட தேவன் (1 தீமோத்தேயு 3:16)[xiii],
  11. மெய்யான தேவன், நித்திய ஜீவன் (1 யோவான் 5:20)[xiv],
  12. வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு (ஏசாயா 9:6)[xv],
  13. ஆதியிலே இருந்த தேவவார்த்தை (யோவான் 1:1)[xvi],
  14. கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜாவான ஆட்டுக்குட்டி (வெளிப்படுத்தின விசேஷம் 17:14)[xvii],
  15. கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் (லூக்கா 2:11)[xviii],
  16. இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)[xix],
  17. இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தர் (1 கொரிந்தியர் 8:6)[xx],
  1. மகிமையின் கர்த்தர் (1 கொரிந்தியர் 2:8)[xxi],
  2. மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருப்பவர் (ரோமர் 14:9)[xxii],
  3. வானத்திலிருந்து வந்த கர்த்தர் (1 கொரிந்தியர் 15:47)[xxiii],
  4. ஆல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் (வெளிப்படுத்தின விசேஷம் 22:13)[xxiv],
  5. சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் (வெளிப்படுத்தின விசேஷம் 3:14)[xxv],
  6. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா (வெளிப்படுத்தின விசேஷம் 19:16)[xxvi],
  7. எப்போதும் மாறாதவர் (எபிரேயர் 1:12)[xxvii],
  8. உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் (வெளிப்படுத்தின விசேஷம் 2:23)[xxviii],
  9. எல்லாவற்றிற்கும் முந்தினவர் (கொலோசெயர் 1:17)[xxix],
  10. எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர் (யோவான் 16:30)[xxx],
  11. சகலத்தையும் சிருஷ்டித்தவர் (கொலோசெயர் 1:16)[xxxi],
  12. சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)[xxxii],
  1. நித்திய பிதா (எசாயா 9:6)[xxxiii],
  2. ராஜா (எரேமியா 23:5)[xxxiv],
  1. அவரவருடைய கிரியைகளின்படி அவனவருக்கு அளிக்க பலன் அளிப்பவர்(வெளிப்படுத்தின விசேஷம் 22:12)[xxxv],
  2. பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ள மனுஷகுமாரன் (மத்தேயு 9:6)[xxxvi],
  3. இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்ப வல்லவர்(யோவான் 6-54)[xxxvii],
  4. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பவர் (எபிரேயர் 13:8)[xxxviii],
  5. முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் (வெளிப்படுத்தின விசேஷம் 22:13)[xxxix],
  6. உன்னதமானவர் (லூக்கா1:76)[xl],

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

இயேசுவை தேவன் என்று நிருபிக்க நீங்கள் செய்த பொய்யான, அறிவுக்கு முரணான வாதங்களையும் — நடக்காத அற்புதங்களுக்கு நீங்கள் காட்டிய ஆதாரங்களையும் பார்க்கின்றபோது — இவற்றையெல்லாம் வைத்து எந்தவொரு சாமானிய மனிதரையும் கடவுள் என்று நிரூபித்துவிடலாமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதுபோன்ற பொய்யான கட்டுக்கதைகளைத் தற்காலிக லாபம் ஈட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் உங்களது புனைவுகளைக் கேட்பவர்கள் அறிவில்லாமல் உங்களை நம்புவார்களா?   நிச்சயமாக இல்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

அன்பர்களே!

இந்தப்ப குதியில், கிறிஸ்தவர்களின் கர்த்தர் மீட்பர் என்று போற்றும் இயேசுவின் அற்புதங்களில் மிகமுக்கியமானதான அவரது உயிர்த்தெழுதல் தர்க்கப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளால் மறுக்கப்பட்டதைக் கண்டோம். இயேசு கிறிஸ்து செய்ததாக சொல்லப்பட்ட அற்புதங்கள் யாவுமே கட்டுக்கதை, புனைவு என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் நிராகரித்தனையும் கண்டோம். பைபிளில் அப்போஸ்தலர்கள் சொல்லும் இயேசுவின் துதிநாமங்களின் பொய்மை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளால் கட்டுடைக்கப்பட்டதையும் பார்த்தோம்.

அடுத்த பகுதி பதியியலின் நிறைவுப்பகுதியாக அமைகின்றது. அதில் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான நியாயத் தீர்ப்புநாள், பரிசுத்த ஆவி மற்றும் திரித்துவம் ஆகியவற்றினைக் கேள்விக்குட்படுத்தி நிராகரிப்பதைக்காண்போம்.

குறிப்புகள்:

யோவான்(20:14)  இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

[ii]  இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.  இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். 

வாரத்தின் முதல்நாளாகிய அன்றைய தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

 

[iii]   பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

[iv]  யோவான் (20:28) தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

[v] மத்தேயு (1:23)  “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்”.

[vi] எபிரேயர் (1:8) “ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது, “தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்”.

[vii]  ரோமர் (9:5) பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

[viii] தீமோத்தேயு (1:17)  “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்”.

[ix] தீமோத்தேயு (6:15) “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்”.

[x] யோவான் (3:16) “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”.

[xi] அப்போஸ்தலர் (20:28) “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்”.

[xii] தீத்து (2:13) “ நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது”.

[xiii]தீமோத்தேயு (3:16) “அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்”.

[xiv]யோவான் (5:20) “அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்”.

[xv]ஏசாயா (9:6) “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்”.

[xvi]யோவான் (1:1) “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”.

[xvii] வெளிப்படுத்தின விசேஷம் (17:14) இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

[xviii] லூக்கா (2:11} “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”.

[xix] வெளிப்படுத்தின விசேஷம் (1:8) “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்”.

[xx] கொரிந்தியர் (8:6)  “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்”.

[xxi] கொரிந்தியர் (2:8) “ அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே”.

[xxii] ரோமர் (14:9) “கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்”.

[xxiii] கொரிந்தியர் (15:47) முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

[xxiv] வெளிப்படுத்தின விசேஷம் (22:13) “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்”.

[xxv] வெளிப்படுத்தின விசேஷம் (3:14) “ லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது”.

[xxvi] வெளிப்படுத்தின விசேஷம் (19:16) “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது”.

[xxvii] எபிரேயர் (1:12) “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது”.

[xxviii] வெளிப்படுத்தின விசேஷம் (2:23) “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்”.

[xxix] கொலோசெயர் (1:17) “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது”.

[xxx] யோவான் (16:30) “நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்”.

[xxxi] கொலோசெயர் (1:16) “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”.

[xxxii] வெளிப்படுத்தின விசேஷம் (1:8) “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்”.

[xxxiii] நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம்அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[xxxiv]  எரேமியா (23:5) “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்”.

[xxxv]  வெளிப்படுத்தின விசேஷம் (22:12) “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது”.

[xxxvi]  மத்தேயு (9:6) பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

[xxxvii] யோவான் (6:54) “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்”.

[xxxviii] இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

[xxxix] வெளிப்படுத்தின விசேஷம் (22:13) “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்”.

[xl] லூக்கா(1:76)  நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
hai
Permalink  
 


 ஒரு வக்கிரத்தோடு தமிழரின் ஆதி வழக்கங்களை இழிவுபடுத்தவே ஆய்வுகள் என எழுதப்பட்டது.

போரிறிகு தென்புல வாழுநர் கடன் கொண்ட முதல் மகன்களை அனுப்ப தேவை இல்லை. அமாவாசை நாட்களில் தெய்வத்தைவிட முன்னோர் கடன் முக்கியம் அதாவது, தென்புஅல்த்தார் கடன் தெய்வ வணக்கத்தினும் முன்னுறிமை. பெற்றோர் இறந்தால் ஓராண்டு குல  தெய்வ கோவில் செல்லுதல் தடை. அதாவது தென்புலததர் கடன் தெய்வ வணக்கத்தினிமு முன் உரிமை, இதனாலேயே வள்ளுவரும்- தென்புலத்தார் தெய்வம் என வரிசையை தெளிவாய் கூறுவார்.

வள்ளுவர் உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழித்தல் போலும் பிறப்பு எனும் நம்பிக்கை கொண்டவர். 

இறைவனை அடைய வழி அவிசொரிந்து வேட்டல், ஆனால் அதை செய்துவிட்டு புலால் உண்டால் பயனில்லை, நீ புலால் தவிர்த்தால் தெய்வத்திற்கே சமமாவாய் என்றார்.

நாட்டிற்கு கேடு அறுதொழிலாளர் வேதம் மறத்தல் என்றார். 

தமிழரை இழிவு படுத்ததுவே  மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் தனி தமிழ் இயக்கம் எனும் வெறி.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
st
Permalink  
 


All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin 

 

"The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
கிறிஸ்துமதச்சேதனம்
Permalink  
 


கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11

 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

பகுதி 1

பதிஇயல்

சன்மானமும் தண்டனையும்: நியாயத்தீர்ப்பு

உலகம் அழியப்போகின்றது, அதன் முடிவு  நெருங்கிவிட்டது என்று இன்றுவரை கிறிஸ்தவ மிஷநரிகள் பிரச்சாரம் செய்துவருவதை நாம் அறிவோம்[1]. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான நியாயத்தீர்ப்பு என்பது உலகின் இறுதி என்ற அவர்களது பிரச்சாரத்தோடு தொடர்புடையது. இந்தக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் கிறைஸ்தவத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.

உலகின் இறுதியில் மாண்டுபோன மனிதர்கள் அனைவரும் தமது உடல்களோடு  உயிர்பெற்று எழுந்துவருவார்கள். அப்போது ஜெஹோவாவின் ஏககுமாரராகிய இயேசு தோன்றி மனித உயிர்களையெல்லாம் விசாரித்து நியாயத்தீர்ப்பு வழங்குவார். எவரெல்லாம் அவரை விசுவாசித்தார்களோ, அவர்கள் எல்லாப்புலன் இன்பங்களையும் தடையில்லாமல் அனுபவிக்ககூடிய வசதிகள் நிறைந்த ஹெவனுக்கு(சொர்க்கம்?) அனுப்பப்படுவார்கள். அவரை விசுவாசிக்காதவர்கள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஹெல்லில் (நரகத்தில்?) இடப்பட்டு மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள்.  நெருப்பு உடலைத் தகிக்கும் ஆனால் உடல் அழியாது துன்புற்றுக்கொண்டே இருக்கும். இறுதித்தீர்ப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என்னும் கிறிஸ்தவக்கொள்கையின் சாராம்சம் இதுதான்.

இதைக் கிறிஸ்தவர்கள் இன்றும் நம்புகின்றார்கள். விவரம் அறியாதவர்களை மதமாற்றும் கருவியாக மிஷநரிகளால் இந்தக்கோட்பாடு, காலம் காலமாகப்பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலகில் எப்படி வாழ்ந்தாலும் இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்பது பரவலான கிறைஸ்தவ நம்பிக்கையாக இன்றும் இருப்பதை நாம் காணமுடிகின்றது. 

இந்தப்பகுதியில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தர்க்கப்பூர்வமாக நியாயத்தீர்ப்பு என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாட்டினை நிராகரிப்பதைக் காண்போம்.  நியாயத் தீர்ப்புக்கோட்பாடு மட்டுமல்ல, ஜெஹோவா, இயேசு ஆகியோரின்  நீதிமான்மையும், தெய்வீக இலக்ஷணங்களும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி அவர்களால் கேள்விக்குட்படுத்தப்படுவதை இங்கே நாம் அறியலாம்…   

***

மரணித்த மனித உயிர்கள் உறைவது எங்கே?

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

உலகத்தின் முடிவில் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு நீதிபதியாகத் தோன்றுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்! அப்படியானால் இறுதித்தீர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை செத்துப்போன மனித உயிர்கள் எங்கே இருக்கும்? சொர்க்கத்திலா, நரகத்திலா, வேறெங்காவதா? மனித உயிர்கள்[2](Soul) வேறெங்கோ இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் ஆதாம், அபிரஹாம் போன்றோர்கள் நியாயத்தீர்ப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்று பைபிள் சொல்லுவது பொய்யாகிவிடுமே!

       மனித உயிர்கள் தமது உடல்களைப் பிரிந்தவுடன், மரணமடைந்தவுடன் சொர்க்கத்திற்கு சென்று இன்பத்தையோ அல்லது நரகத்தினை அடைந்து துன்பத்தையோ அனுபவிக்கும் என்றால் நியாயத்தீர்ப்பு நாளுக்கோ, அதில் இயேசுவின் விசாரணைக்கோ எந்தவித அவசியமும் இல்லையே! இன்னமும் நீங்கள் மனித உயிர்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும், நியாயத்தீர்ப்பு கட்டாயமானது என்று சொல்வீர்களா? அப்படியானால் ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்த மனித உயிர்கள் நரகத்துக்கும், நரகத்தில் அல்லலுற்ற மனித உயிர்கள் சொர்க்கத்துக்கும் செல்ல வாய்ப்புண்டா? அப்படியொரு வாய்ப்புமில்லாமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு என்பதே நோக்கமற்றதாக, பயனற்றதாக, பொருளற்றதாக ஆகிவிடுமே! மாறாக, ஏற்கனவே சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ சென்றவர்கள் அங்கேயே இருப்பார்கள். மற்றவர்கள் மட்டுமே இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னால், நியாயத்தீர்ப்பின் நியாயமே கேள்விக்குள்ளாகும். எப்படிப்பார்த்தாலும் நியாயத்தீர்ப்பு நாளிலே மனித உயிர்கள் இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படும் என்பது பொய்யானது, புனைவு, கற்பிதம்தான்!

நீதிபதியாக இயேசுவுக்கு தகுதியுண்டா?

Image result for judgement day cartoonநியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு ஒவ்வொரு மனித உயிரின் செயல்பாடுகளையும் ஆராய்வார் என்று உங்கள் பரிசுத்த வேதாகமமாகிய பைபிள் சொல்கின்றது. தாம் படைக்கப்படுவதற்கு முன்னர் பாவமோ புண்ணியமோ எதையும் அறியாத — செய்யாத மனித ஜென்மங்களில் சிலர் தமது வாழ்வில் துன்பத்தையே அனுபவிக்கவும், மற்றவர்கள் இன்பத்தையே துய்க்கவும் செய்கின்றனர். இதற்கெல்லாம் அவர்கள் யாரும் காரணமில்லை என்பதால் அவர்களைப்படைத்த இயேசுவேதான் அதற்குக் காரணமாக இருக்கமுடியும். அப்படியானல் இது ஓரவஞ்சனை அல்லவா! ஓரவஞ்சனையுள்ள ஒருவர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும்? நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு எந்தத் தகுதியும் இயேசுவுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே!

 நியாயத்தீர்ப்புக்கு  அடிப்படை பைபிள் என்பது நீதியா?

       இறுதித்தீர்ப்பு நாளில் எந்த சாஸ்த்திரத்தை அல்லது புனிதநூலைக்கொண்டு இயேசு மனித உயிர்களை நல்லவை, தீயவை என்று நிர்ணயிப்பார்? அவர் பரிசுத்த வேதாகமம் என்று உங்களால் சொல்லப்படும் பைபிளைத்தான் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்துவாரா? பைபிளிலே பல மாறுபட்ட பதிப்புகளும், முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அதில் எவற்றைக்கொண்டு அவர் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்று உங்களால் சொல்லமுடியுமா?

       கிறிஸ்தவர்களை விசாரிப்பதற்கு நியாயத்தீர்ப்பின் அடிப்படியாக பைபிள் இருக்குமென்றால், பைபிளைப்பற்றியே கேள்விப்பட்டிருக்காத மக்களை விசாரிப்பதற்கு எந்த நூலை இயேசு பயன்படுத்துவார்?

       கிறிஸ்துவையோ பைபிளையோ அறியாத மக்களை விசாரிப்பதற்கு நல்லது எது, கெட்டது எது, என்று சொல்லும் அவரவர் மனசாட்சியை இயேசு பயன்படுத்துவார் என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படியானாலும் அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று போதித்த அவர்களது மரபார்ந்த சாஸ்திரங்களைத்தான் அவர் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்தவேண்டும்?

       ஆகவே, இயேசு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விசாரிப்பதற்கு அவரவர் மனசாட்சியைப் பயன்படுத்துவார் என்று  நீங்கள் சொன்னால் பைபிள்மட்டுமே மெய்யான புனிதநூல் — மற்ற மதங்களின் சாத்திரங்கள் எல்லாமே பொய் என்ற உங்களது அடிப்படையான நம்பிக்கை, கருத்து, பிரச்சாரம் தவிடுபொடியாகிவிடுமே!

மாறாக, அனைவரும் பைபிளின் அடிப்படையிலே நியாயத்தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்படுவார்கள் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது இரக்கமற்ற அநீதியானதாகும். கிறிஸ்தவர் அல்லாதவர்களை, அவர்தம் வாழ்நாளில் அறியாத புனிதநூல் விதிக்கும்    நெறிமுறைகளின்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? ஆகவே, இயேசுவிடத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரணைசெய்து நீதிவழங்குவதற்கு பொதுவான சாத்திரமோ சட்டமோ இல்லை என்பதும் தெளிவு.

இறுதித்தீர்ப்பு நாளிலே தன்னை நம்பாத விசுவாசிக்காத மனித உயிர்களை ஹெல் [Hell] என்னும்  எரிநெருப்பிலே, நரகத்திலே தள்ளுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்களே! தாயின் கருவரையிலே மரித்துப்போன மனித உயிர்கள் பலகோடி இருக்குமே! பிறக்கும்போது இறந்த குழந்தைகளும் பலப்பல இருக்குமே! பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் எனப்பலப்பல மனிதர்கள் இருந்திருப்பார்களே!

கிறிஸ்தவமே வழக்கில் இல்லாத நாடுகளில், தமது சாஸ்திரங்களின்படி நேர்மையாக வாழ்ந்தவர்கள் பலப்பலர் இருந்திருப்பார்களே! இவர்களுக்கெல்லாம் இயேசுவையோ பைபிளையோ அறிவதற்கோ நம்புவதற்கோ, விசுவாசிப்பதற்கோ வாய்ப்பு எதுவுமே இருந்திருக்காதே! அப்படிப்பட்டவர்களை நரகத்தில் இடுதல் கொடுமையானது, அநீதியானது. அது ஆண்டவனின் செயலாகவும் இருக்கமுடியாது.

 பைபிளைப் படித்தபின்னும் கிறிஸ்தவரல்லாதவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். பைபிளில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள் என்றக்கருத்தை அவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். இயேவை நம்பவோ விசுவாசிக்கவோ அவர்கள் மறுத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் தமது மதப்பெரியார்கள் சொன்ன நெறிமுறைப்படி வாழ்ந்திருக்கலாம். அத்தகைய நல்ல மனிதர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களா, இல்லை எரிநரகத்தில் இடப்படுவார்களா? அவர்களுக்கு சொர்க்கம், நித்தியவாழ்வு கிடைக்கும் என்றால் இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்கு நரகம் என்ற உங்கள் பிரச்சாரம் பொய்யாகிவிடுமே!

 முதல்பாவத்துக்கு மூலவரான ஜெஹோவா நீதிபதியா?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா தூய்மையற்ற புலன்கள், மதம், மாத்சரியம் காமம், கோபம், போன்ற தீயகுணங்களோடுதானே மனிதர்களைப் படைத்தார்? அதே ஜெஹோவாதானே தன்னைத்தவிர வேறு யாராலும் பின்பற்றவே முடியாத சட்டங்களை அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்ட அளித்தார். அப்படிப்பட்ட உங்களது தேவன் அதே மனிதர்களைப் பாவிகள் என்று  நியாயத்தீர்ப்பு நாளிலே தீர்ப்பளிப்பது சரிதானா? நரகத்தில் தள்ளுவதும் முறையோ?

மனிதர்களைப் படைத்தபோதே அவர்களைத் தூய்மையற்றவர்களாக ஜெஹோவா என்னும் தேவன் படைக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் மனிதர்களிடத்தில் அசுத்தம் வந்தது எப்படி? அவர்கள் தூய்மையற்றவர்களானது எப்படி?

அந்த மனித உயிர்கள் முதல் பாவத்தினால் தீயகுணங்களைப் பெற்றனர் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஆதிமனிதர்கள் முதல் பாவத்தைச் செய்யக்காரணமான பேதமை, மடமை அவர்களுக்கு வந்தது எப்படி? எப்படிப் பார்த்தாலும் ஆதிமனித மனித உயிர்கள் தூய்மையற்றவர்களாகவே ஜெஹோவா என்ற உங்கள் தேவனால் படைக்கப்பட்டன என்பதாகத்தானே தெரிகின்றது?

 ஆதியில் — படைப்பின் ஆரம்பகாலத்தில் — எது எப்படி நிகழவேண்டும் என்று ஜெஹோவா விதிக்கவில்லை என நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஜெஹோவாவிற்கு முற்றறிவோ, ஞானமோ, அல்லது சர்வவல்லமையோ இல்லை என்பதாக அது பொருள் தந்துவிடும். ஜெஹோவாவிற்கு அத்தகைய வல்லமை இருந்திருந்தால் எது நடக்கவேண்டும் என்பதை அவர் ஆதியிலே நிச்சயம் செய்திருப்பார்! ஜெஹோவா நிச்சயித்தபடி ஆதிமனிதர்கள் நடந்துகொள்ளவில்லை, அவர்கள் வாழ்வு நகரவில்லை என்று நீங்கள் கூறினாலும் சர்வவல்லமை, சர்வக்ஞதை அவருக்கு இல்லை என்றே பொருள்பட்டுவிடும். ஆகவே ஜெஹோவாவின் சட்டப்படியே, திட்டப்படியே எல்லாம் நிகழ்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

  adam-and-eveஇவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு சிறு குழந்தைகூட ஜெஹோவாவோ அல்லது அவரது ஏகபுத்திரனான ஏசுவோ நீதிமான் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ளும். ஜெஹோவா ஆதிமனித மனித உயிர்களை தூய்மை அற்றவைகளாகப் படைத்தார்! அவர்களுக்கு அறிவைத்தரும் மரத்தைப்படைத்து, அதன் கனிகளை உண்ணாதே என்று உத்தரவிட்டார்! அவரேதான் அவர்களை ஆண்டவன் கட்டளையை மீறத்தூண்டிய சாத்தானையும் ஏற்கனவே படைத்திருந்தார்! ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன! மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா? தம்மைப் பின்பற்றாதவர்களை நரகத்தில் தள்ளுவார் என்பதும் அநீதியன்றோ! குற்றங்களுக்கு மூலகாரணரான ஜெஹோவாவே குற்றவாளிகள் என்று யாரையும் தண்டிப்பார் என்பதும் அநீதிதான்.

  இயேசுவை நம்பாமல் விசுவாசிக்காமல் இருப்பதே பாவம் என்றும் உங்கள் பைபிள் சொல்கின்றது. அதேசமயத்தில் இயேசு பிறப்பதற்கு முன்னரும் அதற்குப்பின்னரும் மனித உயிர்கள் செய்தபாவங்களுக்காக அவர் துன்புற்றார் என்றும் சொல்கின்றீர்கள். அப்படியானால் அவரை விசுவாசிக்காதபாவமும் இயேவைத்தானே சேரவேண்டும்? உலகில் தோன்றிய, தோன்றப்போகும் மனித உயிர்களின் பாவங்களையெல்லாம் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டார் என்றுதானே உங்கள் பரிசுத்தவேதாகமம் சொல்லுகின்றது? அப்படியானால் இயேசுவே அவர்கள் அனுபவிக்க வேண்டிய நரகத்துயரை அனுபவித்தாக வேண்டுமே! அப்படியிருக்க அவரை நம்பாத மனித உயிர்களை எரிநரகத்தில் அவர் இடர்ப்படவிடுவார் என்பது அநீதி அல்லவா?

இறுதித்தீர்ப்பைப்பற்றிய மேற்கண்ட தவறும் தண்டனையும் என்ற எமது விவாதமும் இயேசுவுக்கும் அவரது பிதாவாகிய ஜெஹோவாவுக்கும் கடவுளுக்குரிய தெய்வீகத்தன்மைகள், லக்ஷணங்கள் ஏதும் இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.

குறிப்புகள்:

[1] மாயன் காலெண்டரை வைத்து சமீபகாலத்தில் இவர்கள் செய்த பிரச்சாரத்தை, மதமாற்ற முயற்சிகளை நாம் இங்கே நினைவு கூறலாம். “உலகின் முடிவு நெருங்கிவிட்டது, இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குபோய் சுகமெல்லாம் அனுபவிக்கலாம். இல்லையேல் நரகத்தில் எரிந்துகொண்டே இருப்பீர்கள். கிறிஸ்தவராகுங்கள்!” என்பதே அவர்தம் பிரச்சாரம். 

[2]  Soul என்றக் கிறிஸ்தவக்கருத்துருவும் ஆன்மா, உயிர் என்ற பாரதியக்கருத்தும் வேறுபட்டவை. மனிதருக்குமட்டுமே மனித உயிர் உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஜெஹோவா ஆதியில் படைத்த மனிதர்களின் சந்ததியினரே மனித உயிர்கள். ஆகவே இங்கே மனித உயிர்கள் என்பது மனித உயிர்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல்
Permalink  
 


கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12


<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய

 கிறிஸ்துமதச்சேதனம்

தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

பகுதி 1

பதிஇயல்

 
 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் (1853 – 1924)

பரிசுத்த ஆவியின் கதையும் திரித்துவமும்

பரிசுத்த ஆவியின் கதை

எல்லாம் வல்ல தேவனுக்கு ஆவியின் துணை எதற்கு?

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

பரிசுத்த ஆவியானது ஜெஹோவாவிற்கு படைத்தல் தொழிலுக்கு உதவி செய்கின்றது என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஜெஹோவா என்னும் உங்கள் தேவன் சர்வவல்லமை உடையவராக இருக்கின்றபோது அவருக்கு மற்றவர்களின் துணை  அவசியமா? ஜெஹோவா எல்லாம் வல்லவர்தான், பரிசுத்த ஆவியானது அவருடைய செயல்பாடுகளுக்கு உதவிசெய்வதாக, ஒப்புதல்தருவதாக மட்டுமே இருக்கின்றது என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் அதற்கு உங்கள் விவிலியத்தில் ஆதாரம் ஏதும் இல்லையே!. பரிசுத்த ஆவியின் ஒப்புதலைப்பெற்றுத்தான் ஜெஹோவா செயல்படவேண்டும் என்பது ஆதாரப்பூர்வமானது என்றால் அவரது சர்வவல்லமை பங்கமாகுமே!

பரிசுத்த ஆவியானது பைபிளைத் தானே அருளாமல் தனது விசுவாசிகளைக்கொண்டு எழுதவைத்தது ஏன்?     இயேசுவைப் பெற்றப் பரிசுத்த ஆவி அவரை இயல்பாகவே தூய்மையானவராக ஞானம் நிறைந்தவராகப் படைக்காதது ஏன்? இயேசு குற்றமற்றவராக படைக்கப்பட்டிருந்தால் பின்னாளில் ஒரு புறாவைப்போல அவர் மீது பரிசுத்த ஆவி இறங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! (யோவான், 1:32). இயேசுவின் மீது அப்போது இறங்கிய பரிசுத்த ஆவி, அவர் சிலுவையிலே அறையப்பட்டு, துன்புற்று கதறியபோது அவரைக் காப்பாற்றாதது ஏன்? கன்னி மேரியின் மூலம் இயேசுவைப்பெற்ற அந்தப்பரிசுத்த ஆவி, மரணத்தருவாயில் அவர் என் பிதாவே! என் பிதாவே! என்று அழுது கதறி அழைத்தபோது அவரைக் காப்பாற்ற ஏன் வரவில்லை?

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

ஆதிமனிதரான ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் பாம்பின் வடிவிலே ஏமாற்றி தேவனாகிய ஜெஹோவாவால் தடை செய்யப்பட்ட கனியை உண்ணச்செய்தான். அதனால் பாம்புகள் எல்லாவற்றையும் ஜெஹோவா சபித்தார் என்று கூறுகின்றீர்களே! ஆனால் புறாவின் வடிவிலே இயேசுவின் மீது இறங்கிய அதே பரிசுத்த ஆவி எந்தப்புறாவும் மனிதர்களால் கொல்லப்படக்கூடாது! உண்ணப்படக்கூடாது என்று ஏன் ஆணையிடவில்லை? பாவம் செய்யத்தூண்டிய பாம்பின் இனத்துக்கு தண்டனை அளித்த தேவன், பரிசுத்தமானப் புறாவுக்கு ஏன் வரம் தரவில்லை?

ஜெஹோவாவுக்கு படைப்பில் துணைசெய்யும் உதவிபுரிந்தது பரிசுத்த ஆவி! கன்னிமேரியின் மூலம் இயேசுவைப்பெற்றதும் அதே தூய ஆவிதான்! இயேசுவின் மீது புறாவைப்போல இறங்கியதும் அதே ஆவிதான்! அந்த பரிசுத்த ஆவிக்கும் கடவுள்தன்மை ஏதும் இல்லை என்பது இங்கே தெளிவாகின்றது.

திரித்துவம் பைபிளில் உள்ளதா?

திரித்துவம் என்றப் பதம் பைபிளில் எங்கேயும் காணப்படவில்லை. ஜெஹோவாவை பரமபிதா, தேவன் என்று சொன்ன பைபிள் இயேசுவை அவ்வாறு குறிப்பிடவில்லை.

பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற பதங்கள் மூன்று இடங்களில் பைபிளில் குறிப்பிடப்படுகின்றன.  அவை

“பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்”(1 யோவான் 5:7).

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து”( மத்தேயு 28:19),

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்” (2 கொரிந்தியர் 13:14).

அந்த மூன்று வசனங்களில் முதலாவது தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள  பைபிளில் காணப்படுகின்றது. ஆனால் கிரேக்க மொழியில் உள்ள மூல பைபிளில் அதைக் காணமுடியவில்லை. ஆகவே இதனை இடைச்செருகல் என்று கருதி நடுநிலையான நேர்மையான ஐரோப்பியக் கிறிஸ்தவவியல் அறிஞர்கள் பலர் இதனை நீக்கிவிட்டார்கள். ஆகவே இதைப்பற்றி மேலும்  விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது வசனத்தில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்றோ அல்லது முன்றும் கடவுள் என்றோ, மூன்றும் சமம் என்றோ அல்லது மூன்றும் வணக்கத்திற்குரியவை என்றோ சொல்லப்பட்டிருக்கின்றதா? என்று கேட்டால் இல்லவே இல்லை! என்பது பதிலாக அமையும். இம்மூன்றும் கடவுள் என்றோ அல்லது தம்முள் சமமமானவை என்றோ வணக்கத்திற்கு உரியன என்றோ சொல்லப்படாததால் இவை மூன்றையும் கடவுள் தன்மைகளைக் கொண்ட திரித்துவமாக எப்படி உங்களால் கருதமுடியும்?

மூன்றாவது வசனம் கூட பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றே என்றோ, மூன்றும் சமம் என்றோ அல்லது மூன்றும் வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியன என்றோ சொல்லவில்லை. மேலும் இந்த வசனம் தேவன், இயேசு, பரிசுத்த ஆவி என்ற மூன்றையும் குறிப்பிடுகின்றதே அன்றி பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று சொல்லவில்லை. ஆகவே இந்தவசனம் திரித்துவக்கோட்பாட்டை நிராகரிப்பதாகவே அமைந்திருக்கின்றது. இம்மூன்றில் ஒன்று தேவன் மற்றவை தேவன் அல்ல என்பதாக இந்தவசனம் பொருள் படுகின்றது. கிறிஸ்து தேவன் அல்லர் ஆகவே அவரை திரித்துவத்துள் சேர்ப்பது சரியாகாது. ரெவரெண்ட் ஹென்றி லைர் என்ற பாதிரியார் எழுதிய திரித்துவத்தைப்பற்றியக் கட்டுரையை வாசிப்பது நல்லது(லைர் 1827).

திரித்துவம் புனைவுரையா? கட்டுக்கதையா?

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

கிறிஸ்தவத்தின் திரித்துவக் கோட்பாடு ஆதாரமற்றப் புனைவு, கட்டுக்கதை என்பதை பைபிளில் இருந்து மேற்கோள்களைக்காட்டி உங்கள் தேவன் ஒருவரே! மும்மைத்தன்மை என்ற திரித்துவம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை இங்கே நிரூபிப்போம்!

ஜெஹோவா என்ற உங்கள் தேவன் தான் ஒருவனே! ஒருவன் மட்டுமே என்பதை சொல்லுவதைக் கூறும் பைபிள் வசனங்களைப் பாருங்கள்.

“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்”(யாத்திராகமம் 20:3).

“நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்(உபாகமம்32:39).

“நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை(ஏசாயா45:5).

“அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.  அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். . மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்(யாத்திராகமம் :3:13-15).

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

நீங்கள் தேவகுமாரன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கின்ற இயேசுவே மேற்கண்ட ஜெஹோவாவின் வசனங்களை உறுதி செய்திருப்பதையும் ஜெஹோவா என்ற தனது தேவனுக்கு மும்மைத்தன்மை இல்லை என்பதையும் கவனியுங்கள்.

“ மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?  தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்(மத்தேயு 22:1-32).

ஒருவர் இயேசுவை நல்லவர் என்று சொன்னபோது அவர் அதை மறுதலித்து சொன்னது “7. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்”( மத்தேயு 19:17)..

 “அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை”(மாற்கு 12:32).

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்(யோவான் 14:28).

“இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்(அப்போஸ்தலர் 2:22).

இயேசுவும் ஜெஹோவாவும் வேறு வேறானவர்களே!

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

இயேசுவும் அவர் தனது பிதா என்று அழைத்த ஜெஹோவாவும் ஒன்றே என்று நீங்கள் சொல்கின்றீர்களே! ஆனால் கீழ்கண்ட பைபிள் வசனங்கள் இயேசுவுக்கும் ஜெஹோவாவாகிய உங்கள் தேவனுக்கும் பெருத்தவேறுபாடுகள் இருப்பதைச் சொல்கின்றனவே! அவருக்கும் ஜெஹோவாவுக்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் மனிதருக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாட்டினைவிடவும் அதிகமாகத்தெரிகின்றனவே!

  1. ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்(1 கொரிந்தியர் 11:3).

இதுபோன்ற பைபிள் வசனங்களைப்பற்றி விவாதித்தால் நூல் மிகப்பெரியதாய் விரியும் என்பதால் அதன் அத்தியாயங்களையும் வசனங்களின் எண்களை மட்டுமே கீழே தருகின்றேன்

யாத்திராகமம் 3:14,15 & 20:3;

உபாகமம் 4:39, 6:4, 32:39 & 5:7;

2 சாமுவேல் 7:22;

இராஜாக்கள் 19:19;

நெகேமியா 9:6;

சங்கீதம் 83:18, 36:10;

ஏசாயா 37:16, 37:27, 40:25, 41:4, 42:8, 44:68, 45:5-6, 45:21-22, 43:10-15;

ஓசியா 13:4;

யோவேல்  2:27;

மத்தேயு 19:17, 7:21, 12:32-34, 20:23, 26:39, 5-42;

யோவான் 17:3, 4:34, 5:38, 6:37, 20:17, 14:28;

1 தீமோத்தேயு 1:17, 24:5, 6:15-16;

யாக்கோபு 2:19;

வெளிப்படுத்தினவிஷேசம் 15:34;

கோலோசியர் 1:3.

மேற்கண்ட பைபிள் வசனங்களைப் பார்க்கும்போது திரித்துவக்கோட்பாடு என்பது பைபிளில் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆகவே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்ற உங்களது திரித்துவக்கோட்பாட்டை நீங்கள் இனிமேலாவது பயன்படுத்தாதிருப்பதே சாலச்சிறந்தது.

திரித்துவம்: தனித்தனியான மூன்றும் ஒன்றாயினவா?

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

ஒரு வாதத்திற்காக பைபிளில் திரித்துவக் கோட்பாடு(மும்மை) இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் கூட அது தர்க்கத்துக்கு பொருந்துகின்றதா என்று ஆராயவேண்டும்.

திரித்துவம் என்பதன் பொருள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒன்றே என்பதாகும். இங்கே மூன்றும் ஒன்றாக ஆகிவிட்டபின்னர் அவைத்தனித்தனியாக இருக்குமா? அல்லது ஒன்றாகமட்டுமே  நிலைபெற்று இருக்குமா? என்றக் கேள்வி எழுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 

மூன்றும் ஒன்றானப் பின்னரும் அவைத் தனித்தனியேயும் இருக்கின்றன என்றால் அது தர்க்க அறிவுக்கு முரணாகிவிடும். உதாரணமாக மூன்று மாதுளம்பழங்கள் ஒன்றாயினப் பின்னர் மூன்றாகவும்  நீடித்திருக்க வாய்ப்பு உண்டா? என்றால் அதற்கு சாத்தியமே கிடையாது! ஆகவே மூன்றும் ஒன்றே! என்று நீங்கள் சொல்வது அறிவுக்கு ஒவ்வாது! மூன்றும் ஒன்றாகிவிட்டால் மூன்றின் தனித்தனி இருப்பும் சாத்தியமற்றதாகிவிடும்!

இம்மூன்றும் ஒன்றானவை என்றால் அவற்றில் எது காரணம்? எது விளைவாகிய காரியம்? என்பதை  நாம் ஆராயவேண்டியிருக்கும். காரணத்தைத் தொடர்ந்தே எப்போதும் காரியம் என்ற விளைவு நிகழும் என்பதே தர்க்க  நியாயமாகும். ஆகவே இங்கே மூன்றாக இருந்தனவற்றை காரணமாகவே கருதவேண்டும். ஆரம்பத்தில் இல்லாதிருந்த விளைவு பின்னால் தோன்றியதாகக் கருதப்படல் வேண்டும். முதலில் இல்லாதிருந்த ஒன்று காரணமாக இருக்கமுடியாது. காரியமாக விளைந்தபின்னால் காரணமான ஒன்று அதேயாக முன்னிருந்ததுபோல் நிலைத்திருத்தல் சாத்தியமற்றது. எந்த ஒரு காரணமும் காரியத்தினை விளைவிக்கின்றபோது மறைந்து போகும் என்பதே தர்க்க நியாயமாகும்.

இந்தக் காரண-காரிய  நியாயத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் அழிந்தே ஒன்றாதல் சாத்தியம். மூன்றும் ஒன்றாக மாறின என்னில் மூன்றும் மறைந்து போயிருக்கவேண்டும். ஆகவே ஒன்றான இம்மூன்றும், ஒன்றானப்பின்னர் எப்போதும் நிலை பெற்றிருக்குமா? என்றக்கேள்வி இங்கே எழுகின்றது! இதற்கு நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக அமைகின்றது. விளைவும் கூட எப்போதும் நீடித்திருக வாய்ப்பில்லை. அந்த ஒன்றும் ஒரு சிலக்காலம் கழித்து மறைந்து இன்னொன்றாக மாறும் ஆகவே காரணமாகிய பிதா,சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மறைந்தது போலவே அவற்றின் விளைவான பிதா என்ற ஒற்றையும் நிச்சயமாகக் காணாமல் போகும் என்பதே உண்மை.

பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாயின என்பதில் இன்னொரு பெரும் தர்க்கப்பிழை, நியாயப்பிழை இருக்கின்றது. இம்மூன்றும் ஒன்றாக வேண்டும் என்றால் ஒரு சில மாற்றங்களை அடைந்தே அவை ஒன்றாதல் சாத்தியமாகும். மாறாமல் இம்மூன்றும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை.

ஒன்றானது  தனித்தனியான மூன்றானதா?

கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

ஜெஹோவா என்ற ஒன்று மூன்றானது ஆகவே அது ஒன்றாகவே இருக்கின்றது என்று என்று கூட நீங்கள் கூறலாம்! மூன்றானப் பின்னரும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கின்றது என்றும் நீங்கள் வாதாடலாம். ஆனால் அது தர்க்கப்பூர்வமானது அல்ல! ஒரு மாதுளம்பழம் ஒன்றாக இருந்துகொண்டே மூன்றுமாதல் சாத்தியமே இல்லாத ஒன்று அல்லவா? ஆகவே ஒன்று மூன்றானது என்ற உங்கள் கூற்றும் நிராகரிக்கத்தக்கதே! காரணக்காரிய நியாயத்தின் படியும் ஒன்று(தேவன்) காரணம், மூன்று (பிதா,சுதன், பரிசுத்தஆவி) விளைவு என்றால், ஒரு தேவன் அழிந்து மூன்றாக மாறுகின்றான் என்றேப் பொருள்படும். ஏற்கனவே நாம் கூறியபடி காரணம் அழிந்து தோன்றிய விளைவாகியக் காரியமும் காலப்போக்கில் அழிந்து போய்விடும். அந்தவகையில் உங்கள் திரித்துவமும் அழியக்கூடியதாகிவிடும்.

எல்லா மனிதர்களும் சிலத்தன்மைகளில் சமமாக ஒரேமாதிரியாக இருப்பதால் மனிதர் ஒன்று என்று சொல்லுவது போல பிதா சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் தனித்தனியானவை என்றாலும் அம்மூன்றும் சமமான ஆற்றல் உடையவை ஆகவே அவை ஒன்று என்றும் நீங்கள் வாதாடலாம். ஆனால் ஒரேமாதிரி சிலகுணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள் என்றாலும் இதரப் பலத்தன்மைகளில் அவர்கள் மாறுபடுவதால் அவர்களை ஒன்று என்று சொல்லமுடியாது.

பிதா,சுதன், ஆவி ஆகிய மூன்றும் எல்லாக்குணங்களிலும் ஒரேமாதிரி இருப்பதால் அம்மூன்றும் ஒன்றே என்று நீங்கள் வாதாடலாம். உங்களது அந்த வாதத்தையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் ஒரே மாதிரியாக எல்லாக் குணாதிசயங்களிலும் ஒத்ததாக இருக்கும் மூன்று வெள்ளி நாணயங்களையும் மூன்று என்றுதான் சொல்லமுடியுமே அன்றி ஒன்று என்று சொல்லமுடியாது? அதுமட்டுமல்ல, பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய முன்றும் அவற்றின் தன்மைகள், செயல்பாடுகள் போன்றவற்றில் ஒத்தத்தன்மை உடையவை என்று உங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தலும் சாத்தியமில்லை.

பிதாவாகிய ஜெஹோவா உலகைப்படைத்தார், ஆதிமனிதனையும் அவனது சந்ததிகளையும் பாவிகளாக சபித்தார், சப்பாத் என்ற விடுமுறை நாளன்று வேலை செய்யும் மனிதன் கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டும் என்று அவரே ஆணையிட்டார், தனது மூத்தோர்களைக் கொல்ல மறுத்தவனை ரகசியமாகக் கொல்லமுயன்றார், எகிப்தியர்களது சொத்துக்களை கொள்ளையடித்து செல்ல மோசேவுக்கு ஆணையிட்டார், மேசேயின் வழியாக யூதர்களுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார், படைப்புக்கு முன்னரே அவர் இருந்தார், பலிகளைப் பெறும்போது இயேசுவுக்கு இடப்புறத்திலே அமர்ந்திருந்தார், மேலும் இத்தகைய காரியங்கள் அனேகமானவற்றை செய்தார் என்று உங்கள் பைபிள் சொல்லுகின்றது.

இயேசுவோ தனது தேவதூஷணம், மற்றும் ராஜத்துரோகச் செயலுக்காக தண்டிக்கப்பட சிலுவையில் அரையப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் பிதா எனப்படும் ஜெஹோவாவின் வலப்புறத்தில் அமர்ந்தார்.

பரிசுத்த ஆவி கன்னி மரியாள் மேல் வந்து இயேசுவைப் பெறுவதற்கு காரணமாயிற்று. அது இயேசுவின் மீது ஒரு புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கியது.

மேற்கண்டத்தகவல்களில் இருந்து ஜெஹோவா, இயேசு, பரிசுத்த ஆவி ஆகிய மூன்றின் குணாதிசயங்களும் செயல்களும் வேறுவேறாக இருப்பது தெளிவாகத்தெரிகின்றது.

மூன்றுப் பொருள்கள் ஒன்றாவதும், ஒரு பொருள் மூன்றாவதும் அளவிற்குற்பட்ட எல்லைக்குட்பட்ட சடப்பொருள்களுக்கே அவசியமாகும். எல்லையற்ற, எங்கும் நிறைந்த பரவஸ்த்துவுக்கு, உள்பொருளுக்கு அது அனாவசியமாகும்.

ஒரு மூடியப்பாத்திரத்தில் நீர் நிறைந்திருக்கின்றது என்று கொள்வோம். அது இரண்டாகவோ அல்லது மூன்று பகுதிகளாகப்பிரிந்து மறுபடியும் ஒன்றாக மாறுதல் சாத்தியமா? அது இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிவதற்கு இடம் தேவைப்படுகின்றது. ஆகவே அதனால் பிரிவதும் மறுபடியும் சேர்வதும் சாத்தியமல்ல. எங்கும் நிறைந்த பூரணமான எல்லையற்ற பரவஸ்து(உள்பொருள்) தனித்தனிப் பொருட்களாகப் பிரிவதற்கு சாத்தியமோ அவசியமோ இல்லை. மாறுதலுக்குட்பட்ட செயலற்ற சடப்பொருளே பகுக்கப்படுவதற்கும் பிரிக்கப்படுவதற்கும் சேர்க்கப்பட்டு ஒன்றாவதற்கும் சாத்தியம் உள்ளது. ஒரு எல்லையற்ற சர்வவியாபகமான பரம்பொருள் தானே பலவாகப் பிரிவதற்கும் அவை சேர்ந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பே கிடையாது.

ஆகவே, பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒன்று என்பதும் அந்த ஒன்றே மூன்றும் என்பது தர்க்க நியாயத்திற்கு முரணானது.

திரித்துவத்தில் பூரணத்துவ தோஷம்: தயிரான பாலோ

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

உங்களது திரித்துவக்கோட்பாட்டை வேறொரு நோக்கிலே ஆராயலாம்!  முதலில் இரண்டுப்பொருட்கள் ஒன்றானப்பின்னரும் ஒன்றாகவே நிலைத்திருத்தல் சாத்தியமா என்பதை ஆய்ந்து அறியவேண்டும். அது சாத்தியமானால் மூன்றுப்பொருட்கள் ஒன்றானப்பின்னரும் மூன்றாயிருத்தலும் சாத்தியம் என்று சொல்லிடலாம்.

பால் தயிராவதுபோலவே பிதா சுதனானார் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது பரிணாமவாத நியாத்துக்கு முரணாகிவிடும். பால் தயிராகும்போது தயிர் மட்டுமே இருக்கின்றது. பாலும் தயிரும் ஒருங்கே இருப்பதில்லை. பால் மறைந்தே தயிராகின்றது. அதுபோலவே பிதா மறைந்து சுதனாகிய இயேசுவாக மாறியிருக்கலாம். அப்படியில்லாமல் பிதா பரலோகத்திலும் இயேசு மண்ணுலகிலும் ஒரேசமயத்தில் இருந்ததாகத்தான் பைபிள் சொல்கின்றது. இரு இடங்களில் காரணமும் காரியமும் ஒரேசமயத்தில் இருப்பது சாத்தியமானது அல்ல. பாலும் அதிலிருந்து உருவான தயிரும் இருவேறு இடங்களில் இருப்பது சாத்தியமில்லையே! ஆகவே இருவேறு இடங்களில் இருந்த இயேசு மற்றும் ஜெஹோவாவும் பாலும் தயிரும்போல ஒன்று என்று சொல்வது தர்க்க அறிவுக்கு நியாயத்துக்கும் பொருந்தாது.

இன்னொரு குறைபாடும் இந்த பாலும் தயிரும் உவமானத்திற்கு உண்டு. பால் அழிந்து தயிர் தோன்றுவதற்குக் காரணாமாக அமைகின்றது. அந்தத்தயிரும் அப்படியே நிலைபெற்று இருப்பதில்லை. அதுவும் அழிந்து வேறொன்று தோன்றுவதும் நடக்கிறது. அந்தவேறொன்று மறைந்து மற்றொன்றாக மாறுவது நடக்கின்றது. இந்தத்தொடர் நிகழ்வு முடிவிலியாய் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அதேபோல பிதா, மறைந்து சுதனானால், சுதன் மறைந்து வேறொருவராகலாம். அவர் மறைந்து வேறொருவரும் தோன்றலாம். இந்தநிகழ்வும் முடிவிலாதுத் தொடரும். அப்போது பிதாவும், சுதனும் கூட இருக்கமாட்டார்கள். அவர்கள் எந்த வடிவில் அப்போது இருப்பார்கள் என்பதையும் நாம் கணிப்பது சாத்தியமில்லை.ஆகவே பிதாவே சுதனாகிய இயேசுவாக பால் தயிராவதுப்போல மாறினார் என்ற உங்களது வாதம் ஒரு காலத்தில் பிதாவும் இல்லை சுதனும் இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற முடிவுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இன்னொருவகையிலும் நீங்கள் வாதாடலாம். பிதாவின் ஒருபகுதி சுதனாகிய இயேசுவானது, மற்றபகுதி பிதாவாகவே நிலைத்திருந்தது என்று நீங்கள் சொல்லலாம். பாலின் ஒருபகுதி தயிராக்கப்படுவதும் மறுபகுதி அப்படியே வைத்திருத்தலும் சாத்தியமாவதுபோல் இதுவும் சாத்தியமே என்றிடலாம். பிதாவின் ஒருபகுதி மாறுவதானால் அவர் மாறாத சத்தியம் என்ற உங்கள் கொள்கை பங்கமாகிவிடும். மேலும் பிதாவின் ஒருபகுதி சுதனாக மாறுமானால், அந்த மாறுதலுக்குக் காரணமான இயக்க விதிகளின் படி காலவெள்ளத்தில் மற்றப்பகுதியும் அப்படி மாறுவதற்கு சாத்தியம் உண்டு. தயிரானப்பால் மீண்டும் பாலாக மாறுவதில்லை. ஆகவே சுதனாக மாறியப் பிதாவும் மறுபடியும் பிதாவாவதும் சாத்தியமில்லை. ஒன்று இன்னொன்றாக மாறும் தொடர் நிகழ்வில் பிதா இன்னமும் இருக்கின்றார் என்பதேக்கூடப் பொய்யாகிவிடும்.

திரித்துவம்: மண்ணும் பானையும்போலா?

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

திரித்துவத்தை வேறொருக் கோணத்திலும் ஆராயலாம். பிதாவாகிய ஜெஹோவா சுதனாகிய இயேசுவாக மாறியபோது மண் பானையாகும்போது அழியாததுபோல மாறாது  இருக்கின்றார் என்று கூட நீங்கள் வாதாடலாம். பானையில் மண் இருப்பதுபோல இயேசுவில் ஜெஹோவாவும் இருக்கின்றார். பானை மண்ணாகவும் இருப்பதுபோல பிதா சுதனாகவும் இருக்கின்றார் என்ற வாதத்தையும் ஏற்கவியலாது. ஏனென்றால் பானையும் மண்ணும் ஒரே இடத்தில்தான் இருக்கவேண்டும். அவை இருவேறு இடங்களில் தனித்தனியாக் இருத்தல் சாத்தியமில்லை. பிதா பரலோகத்திலும் பிள்ளையான இயேசு மண்ணுலகிலும் இருப்பதாக பைபிள் சொல்வதால் மண் பானையாகின்ற உதாரணம் ஜெஹோவா இயேசுவும் ஒன்று என்பதற்குப் பொருந்தாது.

மண் தனது வடிவத்தில் மாற்றம் பெற்றேப் பானையாகின்றது. அப்படியே பிதாவும் மாற்றம் பெற்று சுதனாகிய இயேசுவாக மாறினார் என்று நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும். மண்ணானது பல மாற்றங்களை ஏற்றே பானையாக மாறுவதுபோலவே இயேசுவும் மாற்றமடைந்த ஜெஹோவாவின் பெயர் என்று கொள்ளலாமா? சாத்தியமில்லை.

பிதாவாகிய யஹோவாவும் சுதனாகிய இயேசுவும் வேறுவேறானவர் அல்லர் என்பதில் அனேகக்குற்றங்கள் உள்ளன. இயேசு முள் கிரீடத்தை அணிந்ததாக பைபிள் கூறுகின்றது! பிதாவும் அதை அணிந்ததாக சொல்லமுடியுமா?  சிலுவையில் அரையப்பட்டு இயேசு மரணித்தார்! அப்படியே பிதாவும் மரித்தாரா? தனது உயிரை விடும்போது இயேசு என் தந்தையே என் தந்தையே, என்னைக்கைவிட்டீரே என்று அழுது கண்ணீர்விட்டார். பிதாவும் அப்படியே அழுதாரா? அப்படியானால் அவரது பிதாவுக்கும் பிதா இருந்திருக்கவேண்டும். அவருக்கும் பிதா இருந்திருக்கவேண்டுமே! இந்த சுதன் பிதா, அவரது பிதா, என்பது முடிவிலாது தொடரவேண்டியிருக்கும். அப்படிக்கூறுவது அனாவஸ்த தோசம் என்ற தர்க்கப்பிழைக்கு இட்டுச்சென்றுவிடும்.

இயேசு மனிதரும் தேவரும் ஆவார். அப்படியே பிதாவையும் மனிதர் என்றிட முடியுமா? இயேசு மரியாளுக்குப்பிறந்தவர். அப்படியே பிதாவும் பெண்ணிடத்தில் பிறந்தவர் என்று சொல்லமுடியுமா? பரலோகத்தில் பிதாவின் வலதுபக்கத்தில் இயேசு அமர்ந்துள்ளார் என்று பைபிள் கூறுகின்றதே! இந்த இருவரும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும். இடதும்வலதும் வேறல்லவா?

மண்ணும் பானையும் போல பிதாவுமாக  இயேசுவும் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றீர்களே! மண் பானையாகத்தானே ஆவதில்லையே! குயவர்தானே அதைப் பக்குவப்படுத்திப் பானையாக்குகின்றார். பிதாவாகிய மண்ணை சுதனாகிய பானையாக்கிய குயவர் எங்கே? மண்ணை பானையாகவனையும் சக்கரமும் அதைசுழற்றும் கோலும் எங்கே! ஆகவே மண் பானைபோல ஜெஹோவாவும் இயேசுவும் ஒன்றே என்ற உங்கள் வாதமும் நிராகரிக்கத்தக்கதே.

திரித்துவம்: நிஜமும்  பிம்பமும் போலா?

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

பிதாவும் சுதனும் நிஜமும் நிழல்போல் வேறல்ல! ஒன்றே என்றுக்கூட நீங்கள் வாதாடலாம்! நீரில் தெரியும் சூரியனுடைய பிம்பம் சூரியனே என்பது போல இயேசு ஜெஹோவாவின் பிம்பம் என்று நீங்கள் கூறலாம். அந்த உங்களது விளக்கமும் தர்க்கப்பூர்வமானது அன்று! அறிவார்ந்தது அன்று! சூரியன் உண்மை ஆனால் அவரது நிழல் பொய்யானது. அப்படிப்பார்த்தால் பிதா உண்மையானவர் என்றும் நிழலாகிய இயேசு பொய் என்றும் பொருள் பட்டுவிடும்.   இயேசுவே பொய்யாகிப்போனால் இயேசுவின் பிறப்பும், சிலுவையில் அவர் மரணித்ததும், அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியதும், பரலோகத்தில் அவர் இருப்பதும், உலகின் முடிவில் நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு அவர் வருகிறார் என்று பைபிள் சொல்வதெல்லாமும் பொய்யாய்விடும். இந்தக்கதைகள் எல்லாம் பொய்யாகிவிடில் பைபிளும் பொய்யாகிவிடும்.

இன்னொரு பெரும் தர்க்கப்பிழையும் பிதாவும் சுதனும் நிஜம்-நிழல் என்ற வாதத்தில் இருக்கின்றது. எல்லைக்குட்பட்டப் பொருட்களுக்கே இந்த உதாரணம் பொருந்தும். எல்லையற்ற எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு இது பொருந்தாது! சூரியன் மேலே வானத்திலும்,  நீர் கீழே நிலத்திலும் இருக்கின்றன. இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. அகவேதான் வானத்தில் உள்ள சூரியன் நிலத்தில் உள்ள நீரில் பிம்பமாகத்தெரிகின்றது. சூரியன் எங்கும் நீக்கமற நிறைந்தவராய் இருந்தால் தண்ணீருக்கோ அல்லது அதில் நிழல்தெரிவதற்கோ வாய்ப்பே இல்லை. பிதா எல்லையில்லாதவர், எங்கும் நிறைந்தவர், முழுமையானவர், பரிபூரணர் என்றெல்லாம் நீங்கள் சொல்லுவதால், இயேசு பிதாவான யஹோவாவின் பிரதிபிம்பம் என்ற உங்கள் வாதம் அறிவுக்கு ஒவ்வாதது.

திரித்துவம்: கயிறும் பாம்பும்

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

பிதாவாகிய யஹோவாவும் சுதனாகிய இயேசுவும் கயிறும் பாம்பும் போல! வெளிச்சமும் கானல் நீரும் போல! முன்னவை உள்ளன, பின்னவை அவற்றின் தோற்றம் மட்டுமே என்று கூட நீங்கள் வாதாடலாம். இந்தவாதமும் கூட தர்க்கரீதியில் நிராகரிக்கத்தக்கதே!

பிதா கயிறு என்றால் இயேசு பாம்புபோல அதன் தோற்றம் என்று நீங்கள் கூறலாம். பாலைவனத்திலே கானப்படும் கானல் நீரும் கயிற்றிலே காணப்பட்ட பாம்பும் மாயத்தோற்றமே அன்றி உண்மையல்ல. அப்படியே இயேசுவும் பொய்யானத் தோற்றம் என்றே இந்த உவமானம் பொருள்தரும். பிதாவை அன்றி தனித்த எந்த ஒரு இருப்பும் இயேசுவுக்கு இல்லை என்றும் இது பொருள்தரும். மாயையான பாம்பு ஒரு பெண்ணின் கருவிலே பிறந்தது எப்படி? என்றக் கேள்வியும் இங்கே எழும். கானல் நீரும் கயிறிலே தோன்றிய பாம்பும் போலிருந்த இயேசுவின் ஜீவிதம் கூட பொய்த் தோற்றமாகவே கருதவும் வேண்டியிருக்கும்.  அத்தகைய இல்பொருளான ஒருவரது பெயராலே ஒரு மதம் எதற்கு? அப்படிப்பட்ட ஒரு மதம் சிலருக்குத் தேவைப்பட்டாலும் கூட அறிஞர்கள் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

திரித்துவம்: சூரியஒளி, நிறம் மற்றும் வெப்பம்

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

பிதா சுதன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியவற்றின் ஏகத்துவத்தை நிருபிப்பதற்காக வேறொரு உதாரணத்தை நீங்கள் சொல்கின்றீர்கள். சூரியனின் ஒளி, நிறம் மற்றும் வெப்பம் ஆகிய மூன்றைப்போல இம்மூன்றும் ஒரே பொருளின் மூன்றுத் தன்மைகள் என்பது உங்களது வாதமாகும்.

இதே வாதப்படி ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு, ஆறுக்கும் மேலானத் தன்மைகள் குணாதிசயங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக மண்ணை எடுத்துக்கொள்வோம். கடினத்தன்மை, மணம், சுவை, வடிவம், தொடுவுணர்வு, ஒலி, நிறம் எனப் பல்வேறு தன்மைகள் உள்ளன. நமது தேவைக்கு ஏற்ப இவற்றிலே எத்தனை குணங்களை வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நியாய விதியை எந்தப் பொருளுக்கும் பொருத்திப்பார்க்கலாம் பயன்படுத்தலாம். சூரியனிடத்திலே நீங்கள் சொன்னத் தன்மைகளைத்தவிற பல்வேறு குணாதிசயங்களையும் காணலாம். சூரியனுக்கு கோளவடிவம், பேரளவு, தொலைவு போன்று பல்வேறுத் தன்மைகளை நாம் கூறமுடியும். அப்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்றுதன்மைகள் எனக்கொண்டால் இம்மூன்றுத் தன்மைகளுடைய அந்தப்பொருள் எது? இம் மூன்றுத்தன்மைகளும் அவைகளைக்கொண்ட அந்தப்பொருளும் ஒன்றா வெவேறா?  ஒருவரது குணாதிசயங்கள் அவரை விட்டுவிட்டு தனித்து செயல்படுவது சாத்தியமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. நமது  நடைமுறை வாழ்வில் எந்த ஒரு பொருளும் அதன் தன்மைகளும் வேறுவேறல்ல என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.அப்படிப் பார்க்கும்போது ஒருவரது ஒரு குணாதிசயம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு மகவாகப்பிறந்து இன்பம் துன்பம் ஆகியவற்றை அனுபவத்து மரணிப்பது சாத்தியமா? என்றக் கேள்வி எழும். நிச்சயமாக இதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஆகவே பிதா, சுதனாகிய இயேசு மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று குணாதிசயங்கள் மூன்றுத்தன்மைகள் என்பது அறிவுப்பூர்வமானது அல்ல.

திரித்துவம்: ஹஸ்தம்-கரம்-பாணி போன்றா?

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

சிலக்கிறிஸ்தவ அறிஞர்கள் ஹஸ்தம், கரம் பாணி என்பனப் போல பிதா சுதன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்றே என்று வாதிடுகின்றார்கள். ஹஸ்தம் கரம் பாணி என்ற மூன்று சம்ஸ்கிருதப் பதங்களும் கை என்ற ஒரே மானுட அங்கத்தையேக் குறிக்கின்றது. அப்படியே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒரே பொருளின் மூன்று பெயர்களாக  நாமங்களாக அமைகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவி மூன்றும் ஒரே பொருளின் மூன்றுப்பெயர்களானால் அந்த மூன்றும் எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும். இம்மூன்றும் வேறுவேறு இடங்களிலே இருந்ததாக விவிலியம் சொல்லுவதால் ஹஸ்தம், கரம் பாணி மூன்றும் ஒன்று என்ற உவமை பிதாசுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்துக்குப் பொருந்தாது.

உடலும் உயிரும் போல மூன்றான ஒன்று

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

ஒரே மனிதன் உடலாகவும் (தேகம்) உயிராகவும்(ஆன்மா) ஒரே சமயத்திலே இருப்பது போல ஒன்றே மூன்றாக உள்ளது என்று நீங்கள் வாதிடலாம். ஆன்மாவும் தேகமும் ஒன்றுக்கொன்று முரணானத் தன்மைகளை உடையன. ஆன்மா அறிவுப்பொருள் எனில் உடலோ ஆன்மாவின் துணையின்றி அறியவல்லது அன்று. உடலுக்கு வடிவம் உண்டு. ஆன்மாவுக்கு உருவம் இல்லை. ஆன்மா அழிவற்றது ஆனால் உடலோ அழியக்கூடியது.

ஆனால் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும்  இறையான்மை, சர்வவியாபகம்(எங்கும் நிறைந்த தன்மை), மரணமில்லாத்தன்மை ஆகிய தேவத்தன்மைகளை உடையனவாகவே  நீங்கள் பேசுகின்றீர்கள். ஆகவே உடலும் உயிரும் போல ஒன்று என்ற உவமையும் திரித்துவத்துக்குப் பொருந்த்தாது. பிதா சுதன் ஆவி ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தேவன் என்று சொல்லுகின்ற நீங்கள்  உடலும் உயிரும் தனித்தனியே மனிதன் என்றும் சொல்லமுடியுமா? நிச்சயமாக சொல்லமுடியாது.

சுதனாகிய இயேசு சிலுவையிலே அறையப்பட்டு துன்புறும் வேளையில் பிதாவாகிய தேவன் அவரைக்கைவிட்டார் என்று பைபிளிலே இயேசுவே சொல்வதாக வருகின்றது. ஆகவே பிதாவும் சுதனும் ஒன்று என்பது உண்மையாகாது.

இயேசுவுக்கு யோவான் ஞானஸ்னானம் வழங்கியபோது பரிசுத்த ஆவியானது ஒரு புறாவைப்போல வானத்திலிருந்து இயேசுவின் மீது இறங்கியதாக புதிய ஏற்பாடு சொல்கின்றது. அவர் தான் பரமண்டலத்துக்கு ஏறிபோகும்வரை பரிசுத்த ஆவியை உங்களுக்கு அனுப்பமுடியாது என்று தனது சீஷர்களிடத்திலே கூறுவதும் பைபிளிலே சொல்லப்படுகின்றது. இயேசுவின் ஜீவிதத்தில்  நடந்ததாக சொல்லப்படும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பரிசுத்த ஆவியும் இயேசுவும் ஒன்றல்ல வேறுவேறு என்பதைக்காட்டுகின்றன. எனவே பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்பது தர்க்க அறிவுக்கு எள்ளளவும் பொருந்தாது.

இயேசு பரமண்டலத்துக்கு ஏறிப்போய் தனது பிதாவோடு சேரவில்லை என்பது புனைவு என்பதும் கிறிஸ்துவின் ஜீவிதம் என்ற அத்யாயத்திலே ஆதாரப்பூர்வமாக எம்மால் சொல்லப்பட்டது. கிறிஸ்து  நரகத்துக்கே சென்றிருப்பார் என்பதால் கிறிஸ்தவர்களை ஆசீர்வதிப்பதற்காக தூய ஆவியும் உலகத்துக்கு இறங்கிவரவே வராது என்பதே உண்மை. ஹெல் என்னும் நரகத்தை அடைந்தவர்கள் அதிலிருந்து மீண்டுவருவது சாத்தியமே இல்லை என்று பைபிள் சொல்லுவதால் இயேசுவாலும் அதிலிருந்து மீண்டு சொர்கத்துக்குப்போவதும் சாத்தியமே இல்லை. ஆகவே கிறிஸ்தவர்களே உங்களது எல்லா நம்பிக்கைகளும் வீணே!

மேற்கண்டவிவாதம் கிறிஸ்தவத்தின் மும்மணிகளான பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியவற்றுக்கு இறைத்தன்மைகள் ஏதும் இல்லை என்று நிரூபிக்கப்படுகின்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard