New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரலாற்று இயேசு Vs கிருஸ்துவ இயேசு


Guru

Status: Offline
Posts: 24636
Date:
வரலாற்று இயேசு Vs கிருஸ்துவ இயேசு
Permalink  
 


http://vazikaati.blogspot.in/2011/12/vs.html

 
பைபிளை இறைவேதமாக ஏற்றுக்கொண்டுள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் “இயேசு உலகில் அவதரித்தார்” என்றும் “அவர் பல‌ அற்புதங்களை நிகழ்த்தினார்” என்றும் “மனிதர்களின் பாவமீட்சிக்காய்” சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர்.
 
 
எனினும் பைபிள் விபரிக்கும் இயேசு, கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ‘இயேசு’ என்ற பாத்திரம் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா? வாழ்ந்தவராயின் வரலாறு இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை மத, இன, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஆய்வுகள் செய்துள்ளனர்;  செய்துவருகின்றனர்.
 
 
இவ்வாறு “கிருஸ்துவ இயேசுவு“க்கும் “வரலாற்று இயேசு” வுக்குமிடையேயான ஒப்பீட்டு ரீதியான விபரங்களை தமிழில் தரும் நாம் இது பற்றிய தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஆதாரங்கள் அடிப்படையிலான மாற்றுக் கருத்துகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.
 
 
“வரலாற்று இயேசு” தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வாளர்களும் பல ஆய்வு நூற்களை வெளியிட்டுள்ளனர். அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக:
 
 
1.வரலாற்று இயேசு-  பேராசிரியர் கிரீபிலியூப்
 
2.நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவை நோக்கி- ப்ரூஸ்பர் அல்பிரீக்
 
3.இயேசு கிருஸ்து ஒரு மூடப்புராணம்- முன்னால் கிருஸ்துவ மதபோதகர் கைபூ
 
4.வரலாற்று இயேசுவைத் தேடி-  அல்பிரட்ஸ் பைஸ்டர்
 
5.கடவுளாய்ப் போன மனிதன்-  ஜீரார் மீஸாதியஃ
 
ஆகிய நூற்களைச் சுட்டிக்காட்டலாம்.
 
 
இவ்வாறு பைபிள் கூறும் “இயேசு கிருஸ்துவை” வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” தொடர்பில் மூன்று விதமான பிரிவினராகக் காணப்படுகின்றனர்.
 
 
1. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் வரலாற்றில் ஒரு போதும் வாழவில்லை என ஒரேயடியாக மறுத்துரைக்கும் சாரார்.
 
2. கிருஸ்துவம் கூறும் ”இயேசு” என்பவர் வரலாற்றில் வாழ்ந்த, அக்காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட புராணப் பாத்திரங்கள் பலதை வைத்து திருச்சபையால் சோடிக்கப்பட்ட ஒரு “கலவைப் பாத்திரம்” என்று கூறும் சாரார்.
 
3. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் ஏனைய ”தீர்க்கதரிசிகள்” போன்று சாதாரணமாக அற்புதங்கள் நிகழ்த்தி, உபதேசங்கள் செய்து வாழ்ந்த ஒருவரே அன்றி சுவிஷேசங்கள் சித்தரிப்பது போன்ற ஒரு பாத்திரம் அல்ல என்று கூறும் சாரார்.
 
 
இவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த, சிந்தனைப் பிண்ணனிகளைக் கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பைபிள் கூறும் இயேசுவை, கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு”வை நிராகரிக்கும் வகையில் முடிவுகளைக் கூறுவதற்கான முக்கிய காரணம் என்ன‌ என்பதையே இக்கட்டுரையில் நாம் அலச உள்ளோம்.
 
 
எனவே, பைபிள் கூறும் “கிருஸ்தவ இயேசு” பற்றிய விபரங்களை முதலில் பார்த்து விட்டு பின்பு “வரலாற்று இயேசு” பற்றி நோக்குவோம்.
 
 
கிருஸ்துவ இயேசு
 
 
கிருஸ்துவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிள், அதன் புதியஏற்பாடு “இயேசு” பற்றி பின்வரும் விபரங்களைத் தருகின்றது.
 
 
1.இயேசு பற்றிய, இயேசுவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நூற்றுக்கணக்கான “முன்னறிவுப்புகள்” பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இயேசு, யூத சமுதாயத்துக்கு மத்தியில் யூதமத போதனைகளை க்கடைப்பிடிப்பவராக, சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பவராக வாழ்ந்தார்.
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை அக்காலயூதர்கள் நன்கறிந்திருந்தனர்.
 
 
2.இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விஷேட நட்சத்திரத்தை அடையளங்கண்டு பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பாரசீகத்திலிருந்து (இன்றையஈரான்) ஞானிகள் வருகை தந்து இயேசுவை பணிந்து சென்றனர். (ம‌த்தேயு 2: 1-12)
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை பாரசீகர்கள் அறிந்திருந்தனர்.
 
 
3. பாரசீக ஞானிகளிடத்தில் இருந்து அக்கால ஆட்சியாளன் ‘ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமக்கள் அனைவரும்’ இயேசு பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.(மத்தேயு 2:3)
 
 
எனவே இயேசு பற்றிய விபரங்களை ஆட்சியாளனும் எருசலேம் மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
4. ஏரோது ராஜா “யூதர்களின் அரசன்” பிறந்து விட்டான் என்ற அச்சத்தின் காரணமாக “பெத்தலேகம்” மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான். ( மத்தேயு 2:16)
 
 
இக்கொலை நடவடிக்கையில் 14,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கிருஸ்துவ மூலங்கள் உறுதி செய்ய வேறு சிலரோ இத்தொகை 144,000ஆக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர்.
 
 
எனவே, இந்த நகரங்களில் வாழ்ந்தவர்கள், அக்குழந்தைகளின் குடும்பத்தார்கள், உறவினர்கள் என குறைந்தது கால் மில்லியன்-இரண்டரை இலட்சம் மக்களாவது இச்சம்பவத்தினால் இயேசு பற்றிய விபரங்களைஅறிந்திருந்தனர்.
 
 
5.இக்கொலை நடவடிக்கைக்குப் பயந்து இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்தனர். (மத்தேயு2: 14-15)
 
எனவே, எகிப்தியர்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
6.பின்பு, இயேசு பயணங்கள் பல மேற்கொண்டு இன்றைய பாலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் போதனைகள் செய்தார். இத்தகைய உபதேசங்களின் இறுதியில் ‘சுவிஷேச ஆசிரியர்கள்’ பெரும்பாலும் “அதிகமானவர்கள் இயேசுவை விசுவாசித்தனர்” என்று எழுதியுள்ளனர். (மத்தேயு4: 14 -15 மற்றும் 4: 23- 24)
 
 
எனவே, பலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசமக்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
7.இயேசு மக்களுக்கு பகிரங்க சொற்பொழிவுகள் ஆற்றியதுடன் யூதமதத்தலைவர்களுடன் சர்ச்சைப்படுபவராகவும், தேவாலயங்களுக்குள் நுழைந்து வியாபாரிகளின் பலகைகளை கவிழ்த்துப் போடுபவராகவும் இருந்தார்.(யோவான் 2:13-25)
 
எனவே, மத்தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
8.பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது அளவில் சுவிஷேசங்களில் கூறப்பட்டுள்ளன.
 
 
இது தொடர்பில் கலாநிதி வில்லியம் ஹாம்பல் என்பவர் தனது “வரலாற்று மற்றும் விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும்” என்ற நூலில் 302ம் பக்கம் முதல் 319ம் பக்கம் வரை பைபிள் கூறும் இயேசுவின் அற்புதங்களையும் அதை அறிந்தவர்களது எண்ணிக்கையையும் பட்டியலிட்டுள்ளார்.
 
 
கீழ்வரும் அட்டவனையினூடாக அதை நாமும் நோக்குவோம்.
 
 
தொடர் இலக்கம்
அற்புதம்
ஆதாரம்அறிந்தவர்களது எண்ணிக்கை
1
முப்பெத்தெட்டு வருட நோயாளியை இயேசு குணப்படுத்தல்யோவான்5: 5-9
200
2
பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தல்லூக்கா 1 7:12-14
1000
3
நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்மாற்கு 8: 1-‍ 9
4000
4
அதிக நோயாளிகளைக் குணப்படுத்தல்மாற்கு 1: 32-34
4000
5
இரண்டு மீன்கள், கொஞ்ச ரொட்டிகளை வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்யோவான்    7: 1-‍14
5000
6
கலீலியோ,யூதேயா,எருசலேம்,இதுமேயா,யோர்தானுக்கு அக்கரை திருசீதோன் பட்டணங்களின் அநேக நோயாளிகளக் குணப்படுத்தல்மாற்கு 3: 8-11
20,000
7
கலீலியோ கடலுக்கு கிழக்கு பகுதியில் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தல்.மத்தேயு     15: 29-31
20,000
8
இயேசு தடவியவர்கள் அனைவரும் குணமடைதல்மாற்கு 6: 53-56
40,000
9
இயேசுவின் பேரால் அற்புதங்கள் நிகழ்த்தும் 72பேரை இயேசு இரண்டிரண்டு பேராக நகரங்களுக்கு அனுப்பி வைத்தல்லூக்கா 10: 1-17
72,000
10
தீய ஆவியினால் பிடிக்கப்பட்டவனை இயேசு குணப்படுத்தல்மாற்கு 5: 2-15
அப்பகுதி மக்கள் அனைவரும்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

 
இவ்வட்டவணையின்படி ‘கலாநிதி வில்லியம் ஹாம்பல்’ அவர்கள் “இயேசுவின் காலத்தில் 20 இலட்சம் மக்கள் வசித்தார்கள் என்றிருந்தால் அதில் குறைந்தது 5% வீதமான மக்கள் அதாவது, ஒரு இலட்சம் பேர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டோ அல்லது கேள்விப்பட்டோ இருப்பார்கள்” என்ற முடிவுக்கு வருகிறார்.
 
 
சுருங்கக்கூறின், மருத்துவ வசதிகள் அதிகமில்லாத அன்றைய காலகட்டத்தில் சுவிஷேசங்களில் “ஒரு நடமாடும் வைத்தியசாலையாக”சித்தரிக்கப்படும் இயேசு பற்றிய விபரங்களை அதிகம் பேர் அறிந்திருந்தார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது.
 
 
இதனோடு சேர்த்து “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகின்றேன்” (யோவான்21:25) என்ற இறுதி சுவிஷேசத்தின் இறுதி வசனத்தையும் நாம் கவனத்திற்கொண்டால் பைபிள் கூறும் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” அக்காலமக்கள் அனைவரும் அறிந்துவைத்திருந்த ஒரு “ஜனரஞ்சகநாயகனாக” இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
 
 
9.இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்ற தீர்மானம் ரோமசக்கரவர்த்தியின் பிராந்திய ஆட்சியாளரான பிலாத்து என்பவரால் நிறைவேற்றப்பட்டது. (யோவான்18:29 – 19:16)
 
எனவே அரசஅதிகார அலுவலகர்கள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
10.பின்பு, பெருந்திரளான மக்கள் மத்தியில் பொது இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
 
எனவே, அப்பிராந்திய மக்கள் அனைவரும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
11.இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் மரணித்தவர்கள் கல்லறைகளில் இருந்து உயிர்த்தெழுந்து நகரங்களில் நுழைந்து அதிக மக்களுடன் பேசினர்.    (மத்தேயு 27:52-53)
 
எனவே, இயேசுவின் மரணத்தை அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
12.அவ்வேளையில், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு மலைகளும் பிளந்ததுடன் பூமியெங்கும் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (லூக்கா 23:44)
 
ஆக, பைபிளின் பிரகாரம் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” என்பவர் முதல் நூற்றாண்டில் பாமரர்கள், மதத்தலைவர்கள், மருத்துவர்கள், அரசஅதிகாரிகள், பௌதீகவியலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என சகல மட்டத்து மக்களாலும் பிராந்திய வேறுபாடு இன்றி அறியப்பட்ட “ஜனரஞ்சக நாயகனாக” இருந்தார் என்பதை நாம் நோக்கினோம்.
 
 
இனி “வரலாற்று இயேசு” வின் பக்கம் எமது பார்வையை திருப்புவோம்.
 
 
வரலாற்று இயேசு
 
 
பைபிளை இறைவேதமாக ஏற்றுள்ள கிருஸ்தவர்களது நம்பிக்கையின்படி ‘இயேசு’ என்ற பாத்திரம் அக்கால மக்கள் அனைவரும் அறிந்திருந்த ஒரு “ஜனரஞ்சகமான பாத்திரம்” என்பதை முதல் பகுதியில் நோக்கினோம்.
 
 
பைபிள் கூறும் பிரகாரம் சகல தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்டிருந்த இயேசு பற்றிய விபரங்கள், செய்திகள் அக்காலமக்களின், அப்பிரதேசவாசிகளின் இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்களில் குறைந்தது சில நூறு தடவைகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். ஏன் சில ஆயிரம் தடவைகள் என நாம் கூறினாலுங்கூட அது மிகையாகது.
 
 
இவ்வாறு சகல விதத்திலும் சகல தரப்பு மக்களிடமும் பிரபல்யமான “கிருஸ்துவ இயேசு” பற்றி அக்கால அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் என்ன வாக்கு மூலம் தருகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
 
 
1.சிறிய பிப்லினூஸ் (கி.பி 61- 124)
 
இரண்டாம் நூற்றாண்டில் கிருஸ்துவர்கள் இயேசு பற்றிப் பாடிய பக்திப்பாடல் ஒன்றின் ஒரு வரியை மாத்திரம் இவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பைபிள் கூறும் இயேசு பற்றி எந்தத் தகவலையும் இவர் தரவில்லை.
 
 
2.தாஸிதூஸ் (கி.பி 55 – 120)
 
“நீறோன் மன்னன் காலத்தில் ரோம் நகரில் ஏற்பட்ட தீவிபத்து பற்றியும் ‘கிருஸ்து’என்ற பேரில் இருந்து தோற்றம் பெற்ற கிருஸ்துவர்கள் பற்றியும்……” என்று போகிற போக்கில்,  உறுதியில்லாத வதந்திகள் என்ற வகையில் சில வரிகளை எழுதியுள்ளார்.
 
அது தவிர இவர் இயேசு பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை.
 
 
3. பெரிய பிலீனூஸ் / காயூஸ்பிலீன் (கி.பி 23-79)
 
மிகப் பெரும் இலத்தீன் வரலாற்றாசிரியரும் பௌதீகவியலாளருமான ‘பிலீனூஸ்’ அவர்கள் கி.பி 65-70 காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்து ஐந்து வருடகாலம் அங்கே தங்கியிருந்து பல்வேறு விடயங்களையும் மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.
 
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட “சாக்கடல் சாசனங்களுக்குச் சொந்தக்காரர்களான கும்ரான் குகைவாசிகள்” தொடர்பில் அன்று இவர் எழுதிய குறிப்புகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் பொருந்திப் போவது இவரது நுணுக்கமான வரலாற்றுப் பதிவுக்கு சான்று பகர்கிறது.
 
 
குறித்த “கும்ரான்” பகுதியில் இருந்து சில மைல்கள் தூரத்தில்தான் “கிருஸ்துவ இயேசு” வாழ்ந்த ,அற்புதங்கள் நிகழ்த்திய பிரதேசங்கள் காணப்படுகின்றன.
 
அத்துடன் பௌதீகவியலாளரான இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, மலைகள் பிளவுபட்ட சம்பவம், சூரிய கிரகணம் என்பன இவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
 
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், பௌதீகவியலாளருமான “பிலினூஸ்” அவர்கள் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
4.பீலூன் அலெக்ஸந்தரிய்யா (கி.மு 10-கி.பி 50)
 
அலெக்ஸந்தரிய்யாவில் வாழ்ந்த பிரபல்யமான யூத தத்துவவியலாளரான இவர் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் தொடர்பில் பலவிடயங்களை எழுதியுள்ளார்.
 
 
இயேசு காலத்து ஆட்சியாளன் “பிலாத்து” பற்றியும் குறிப்பிட்டுள்ள இவர் “யோவான் தனது சுவிஷேசத்தை எழுத முன்னரே “வார்த்தை” (லோகோஸ்) பற்றி பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
 
 
பழைய ஏற்பாட்டின் ஆரம்ப‌நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ள இவர் “கும்ரான் குகைவாசிகள்” பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்?.
 
ஒன்றுமில்லை”
 
 
5ஸின்கா / லூஸியூஸ் அனாயூஸ் (கி.மு 4- கி.பி 65)
 
ரோம இலக்கியவாதியும், தத்துவவியலாளருமான இவ்வறிஞர் பன்னிரண்டு தத்துவக் கட்டுரைகளையும், ஒரு வானியல் கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் எரிமலைகள், சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தி பௌதீகவியல் தொடர்பிலும் ஒரு நூலை எழுதியுள்ள இவர் ரோம சக்கரவர்த்தி ”நீறோன்” என்பவரது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
 
இவருக்கும் ஆரம்பகால கிருஸ்துவ போதகரான “பவுல்” என்பவருக்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டதாக ஒரு வரலாற்று வதந்தி நிலவினாலும் அக்கடிதங்கள் நாலாம் நூற்றாண்டில் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கிருஸ்துவ சமூகமே உறுதி செய்துள்ளது.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த “ஸின்கா” அவர்கள் இயேசு பற்றியோ அல்லது வானவியல் தொடர்பில் எழுதியவர் என்ற ரீதியில் “இயேசு பிறந்த போது தோன்றிய நட்சத்திரம்” பற்றியோ அல்லது பௌதீகவியலாளர் என்ற வகையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மலைகளின் பிளவு, சூரிய கிரகணம் பற்றியோ என்ன குறிப்புகளை தந்த்துள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
6யூஸ்த் (கி.பி 2 ம் நூற்றாண்டு)
 
இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தின் வட பகுதியில் இயேசு விஜயம் செய்த “கபர்நாகூம்” பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான இவர் “யூத ராஜாக்களின் வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய எந்த நூலும் இன்று எம்மத்தியில் இல்லை என்றாலும் இவரது நூற்களில் இருந்து பலவிடயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொனஸ்தாந்து நோபில் தலைமை கிருஸ்துவ மதகுருக்களில் ஒருவரான “பூதியூஸ்” என்பவர் எடுத்தெழுதியுள்ளார்.
 
இவரது மேற்கோள்களில் இயேசு பற்றி எமக்கு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
.சுபிதோன்/ ஜாயூஸ்திரான்கிலூஸ் (கி.பி 69 -140)
 
ரோம வரலாற்றை எழுதிய இவர் கி.பி 122 வரை ரோமச்சக்கரவர்த்தி “ஹாத்ரியான்” என்பவரது அந்தரங்க செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் 12 சீசரிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் கி.பி 39- 40 காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யத்துக்கெதிராக யூதர்கள் செய்த கிளர்ச்சியையும் விரிவாக எழுதியுள்ளார்.
 
இவ் வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி எந்த விபரங்களை எமக்குத் தருகிறார்?.
 
எதுவுமில்லை”
 
 
8.  யூஸிபியூஸ் பிலாபியூஸ் (கி.பி 38-100)
 
யூத வரலாற்றாசிரியரான இவர் எருசலேம் பகுதியில் பிறந்து யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் சண்டை மூண்டபோது கலீலியோவுக்கான ஆட்சிப்பிரதிநிதியாக பதவி வகித்தார். எருசலேம் நகர் கி.பி 70ம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரோமுக்குச் சென்ற இவர் யூதவரலாறு பற்றி 20 பாகங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். சுமார் 50 எழுத்தாக்கங்களுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார்.
 
 
இவரது நூல் ஒன்றில் இவர் “இயேசு பற்றிக் குறிப்பிடுவது போல்இவரை கிருஸ்துவாரச் சித்தரிக்கும் வகையில் சில பந்திகளை பிற்கால கிருஸ்தவர்கள் இடைச்செருகல் செய்துவிட்டனர்.
 
 
எனினும், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் குறித்த பந்திகள் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் என்பதிலும் யூஸிபியூஸ் அவர்கள் கிருஸ்தவர் அல்ல, யூதர்தான் என்பதிலும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
 
இவ்வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
9புளூதர்கஸ் (கி.பி 48-125)
 
கிரேக்க வரலாற்றாசிரியரான இவர் அணியிலக்கணம்,, கணிதம் ஆகிய துறைகளில் பல நூற்களை எழுதியுள்ளார். ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கல்வி, பண்பாடு, அரசியல், மதம் தொடர்பிலான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
இன்று காணப்படும் இவரது இரு நூற்களில் இயேசு பற்றி என்ன‌ தகவல்கள் காணப்படுகின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
10.சாக்கடல் சாசனச் சுருள்கள் (கி.பி 1ம் நூற்றாண்டு)
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச்சுருள்களின் சில ஆவணங்கள் இயேசு வாழ்ந்த பகுதியில், இயேசு வாழ்ந்த காலகட்டதில் எழுதப்பட்டதாக இருக்கின்றன.
 
இச்சுருள்களில் பைபிள் விபரிக்கும் இயேசு பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
 
எதுவுமில்லை”
 
 
*சாக்கடல் சாசனச் சுருள்கள் எவ்வாறு கிருஸ்துவர்களது மதநம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது என்பதை தனியாக ஒருகட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.
 
 
11.ஸ்த்ராபூன் (கி.மு 58- கி.பி 25)
 
கிரேக்க அறிஞரும், புவியியலாளருமான இவர் மனித இனங்களின் மூலம், அவர்களின் இடம்பெயர்வு, ஆட்சி உருவாக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.
 
இயேசு பற்றி இவர் என்ன கூறுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
12.ஜூபினால் (கி.பி 14 – 130)  மற்றும் லூகானூஸ் (கி.பி39- 65)
 
பிரபல்யமான ரோம இலக்கியவாதிகளான இவ்விருவரும் சில இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்கள்.
 
இவ்விருவரும் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்கள்?
 
ஒன்றுமில்லை”
 
 
இவ்வாறு வரலாற்றின் திரும்பிய திசைகள் எல்லாம் இயேசு பற்றிய தகவல்கள் குறித்து “ஒன்றுமில்லை”! ” ஒன்றுமில்லை”!! “ஒன்றுமேயில்லை”!!! என பதிலளிப்பது பைபிள் கூறும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” என்ற பாத்திரம் “வெறும் கற்பனைப் பாத்திரம்தான்” என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.
 
 
நாம் மேற்கண்டவாறு “முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூற்களிலும், ஆவணங்களிலும் இயேசு பற்றிய விபரங்கள் எதுவும் நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆய்வாளர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையே வரலாற்று ஆய்வாளர்கள் “ஒரு நூற்றாண்டின் மௌனம்” என்ற பரிபாஷயில்யில் சுட்டிக்காட்டுவர்.
 
 
அத்துடன் பைபிள் கூறும் “கிருஸ்துவ இயேசு”வின் போதனைகளைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எங்கே? அவர் பிறந்தபோதும் மரித்த போதும் ஏற்பட்ட பூகோள அடையாளங்களைக் கண்டவர்கள் எங்கே? இயேசுவின் அற்புதங்களைக் கண்டவர்கள், கேட்டவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் அனைவரும் எங்கே? இவர்களில் ஒருவர் கூடவா வரலாற்றுக் குறிப்புகளிலோ, ஆவணங்களிலோ, முதுசங்களிலோ, கல்வெட்டுகளிலோ இயேசு பற்றி எந்த ஒரு குறிப்பையும் எழுதவில்லை என்ற கேள்விக்கு கிருஸ்தவர்களிடம் எந்த பதிலும் இல்லை. பதிலளிக்கவும் முடியாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

திருச்சபைகள் வரலாறு- ஓர் விரைவுப் பார்வை

எகிப்தின் அலக்ஸன்டரிய்யா மாநிலத்தில் கிருஸ்தவ மதப்போதகர் "ஸகரிய்யாபத்ரஸ்" என்பவர் மிகப் பிரபல்யமான ஒருவராவார். அவர் எழுதிய "திருச்சபைப் பிளவுகள் வரலாறு" எனும் அறபி நூல் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேன்டிய முக்கிய நூலாகும். காலத்தின் தேவை கருதி அந்நூலின் சுருக்கத்தை தமிழில் தரும் நாம், தங்களது மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய ஆவலாய் உள்ளோம்.
 
இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு கிருஸ்தவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட மத ரீதியான கருத்து முரண்பாடுகள் தோன்றின. இவ்வாறு முரண்பாடுகள் தோன்றும் போதெல்லாம் உயர்நிலை பாதிரிகள் ஒன்று கூடி தங்களுக்கிடையே கருத்துக் கணிப்புகள் நடாத்தி புதிய சட்டத்தை அல்லது இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டனர்இவ்வாறு கூட்டப்படும் மாநாடுகளில் ஒன்றில், அனைவருக்கும் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்பட்டு ஒரு புதியசட்டம் உருவானது அல்லது கருத்துவேற்றுமை தோன்றி அதனடிப்படையில் ஒரு புதிய மதப்பிரிவு உருவானது.
இவ்வாறு வரலாறு நெடுகிலும் நடைபெற்ற திருச்சபைகள் மாநாடுகளை இருவகைகளாகப் பிரித்து நோக்கலாம்.
 
1.உலகளாவியமாநாடுகள்.
2.பிராந்தியமாநாடுகள்.
 
பிராந்திய ரீதியாகக் கூட்டப்பட்ட முதல் மாநாடாக ஜெருஸலம் நகரில்"போதகர் யாக்கோபு" என்பவர் தலைமையில் "யூதர்கள் அல்லாதவர்கள் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா?" என்பது தொடர்பில் நடந்த ஒன்று கூடலை குறிப்பிடலாம்.
 
இவ்வாறு இடம் பெற்ற பல்வேறு திருச்சபைகள் மாநாடுகளில் முக்கியமான சிலதையும் அவைகளில் விவாதித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
 
1.கி.பி 325 இல் "நீகியஹ்" வில் இடம் பெற்ற மாநாடு:
 
இயேசு கிருஸ்துவின் "கடவுள் தன்மை" தொடர்பில் ஏற்பட்ட!! கருத்து முரண்பாட்டை களைவதற்காக இம்மாநாடு கூட்டப்பட்டது. மதகுரு “ஆரியூஸ் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தோர் ‘இயேசு கடவுள் இல்லைஎனவும் ஏனையோர் ‘இயேசு கடவுள்தான் எனவும் வாதிட இறுதியில் கிருஸ்துவத்தை தழுவிய முதல் ரோமப்பேரரசன் "கொனஸ்தந்தன்"அக்காலத்தில் உலகளாவிய ரீதியில் காணப்பட்ட அனைத்து திருச்சபைகளையும் ஒன்று கூட்டினான். அதில் ‘இயேசு கிருஸ்துவின் கடவுள் தன்மை ஒப்புக்கொள்ளப்பட்டதுடன்" நீகாவிஹ்" நம்பிக்கைச் சட்டமும் வகுக்கப்பட்டது.!!
 
 
மதகுரு ஆரியூஸ்
 
2.கி.பி 381 இல் இடம்பெற்ற "முதலாவது கொனஸ்தாந்து நோபல் மாநாடு":
 
கொன்ஸ்தாந்து நோபலின் தலைமை மதகுரு "மெக்தினியூஸ்" என்பவர்"பரிசுத்த ஆவி என்பது தேவதூதர்கள் (மலக்குகள்) போல் படைக்கப்பட்டது” எனக் கருதிய போது இம்மாநாடு கூட்டப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
 
1.பரிசுத்த ஆவியைக் கடவுளாகக் கருதுதல்
2. ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த "நம்பிக்கைச்சட்டத்தில் "ஆம்பிதாவில் இருந்து தோற்றம் பெற்ற பரிசுத்த ஆவியை கடவுளாக நம்புகிறோம்......."என்ற இரண்டாவது பகுதியை இணைத்தல்.
 
இவ்வாறே ‘நீகியாஹ் மாநாட்டில் இயேசு கிருஸ்துவையும் "முதலாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாட்டில் பரிசுத்த ஆவியையும் கடவுளாகப் பிரகடனம் செய்ததன் மூலம் கிருஸ்துவத்தின் அடிப்படையான"திரித்துவத்தின்" இரு பிரதான பகுதிகள் கி.பி. 381இல் இணைக்பட்டன.
 
3.கி.பி. 431இல் இடம்பெற்ற "முதலாம் அப்ஸஸ் மாநாடு:
 
கொன்ஸ்தாந்து நோபல் தலைமை மதகுரு "நொஸ்தூர்" இயேசுவின் கடவுள் தன்மையை மறுக்க ஆரம்பித்து "மரியாள் கடவுளை பெற்றெடுக்கவில்லைஏனெனில் ஒரு உடல் மற்றொரு உடலையே பெற்றடுக்க முடியும். ஒரு ஆத்மாதான் இன்னொரு ஆத்மாவைப் பெற்றெடுக்க முடியும். எனவே, கன்னி மரியாள் கடவுளை அடையாளங்காட்டும் ஒருமனிதனையே பெற்றெடுத்தாள். ஆகவே, இயேசு யதார்த்தத்தில் ஒரு கடவுள் அல்ல. மாறாக, கடவுள் அருள் நிறம்பப் பெற்ற ஒரு மனிதர் அல்லது கடவுளின் உந்துதலால் செயற்பட்ட ஒரு பாவமற்றவர்" என்ற வாதத்தை முன்வைத்தார்.
 
இவ்விடயங்களை விவாதிக்க இம்மாநாடு கூட்டப்பட்டு அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
1.இயேசு ஒரே இயல்பையும் ஒரே நாட்டத்தையும் கொண்டவர். (அதாவது, பிரிக்க முடியாத கடவுள் இயல்பையும், மனித இயல்பையும் ஒரே நேரத்தில் கொண்டிருப்பவர். அதேபோல் பிரித்து நோக்கமுடியாத கடவுள் நாட்டத்தையும் மனித நாட்டத்தையும் கொண்டிருப்பவர்.)
 
2. கன்னி மரியாள் கடவுளையே பெற்றெடுத்தாள்இதனால் அவள் "கடவுளின் தாய்" என அழைக்கப்படுவாள்.
3. "ண்மையான ஒளியின் தாயே உம்மை துதிக்கிறோம்,             கடவுளின் தாயாகிய புனித கன்னியே உம்மைப் போற்றுகிறோம் ............" என ஆரம்பிக்கும் நம்பிக்கைச் சட்டத்தின்" முகவுரை இம்மாநாட்டிலேயே உருவாக்கி இணைக்கப்பட்டது.
 
இந்த இடத்தில் "ஒரே இயல்பு, ஒரேநாட்டம்" என்று குறிப்பிடப்படுவதன் விளக்கம் என்ன என்பதை நோக்குவது அவசியமாகும்.
 
1.இயல்பு (கடவுள் மற்றும் மனித இயல்பு)
இயேசு கிருஸ்து சாப்பிட்டார் என்றால் கிருஸ்தவர்கள் கருத்துப் பிரகாரம் சாப்பிட்டவர் கடவுளா? அல்லது மனிதனா? என்ற கேள்வி தோன்றும்.
இரு இயல்புக் கொள்கை கொண்டுள்ளோர் ‘கடவுள் இயேசு சாப்பிடவில்லை, மனித இயேசுவே சாப்பிட்டார் எனக்கூறுவர்.
இவர்கள்  "இயல்பு" என்பதை இயேசு அணியும்களையும் ஆடைபோல் கருதுகின்றனர். இயேசு சாப்பிடும் போது ‘மனிதஇயல்பு என்றும் அற்புதங்கள் நிகழ்த்தி நோயாளர்களைக் குணப்படுத்தும் போது ‘கடவுள்இயல்பு என்றும் கூறுகின்றனர்.
 
ஓர் இயல்புக் கொள்கையைக் கொண்டிருப்போர் "இரு இயல்புகளையும் பிரித்து நோக்கக்கூடாது. குறித்த ஒரு சம்பவத்தில் ஒரு இயல்பை மட்டும் குறிப்பிட்டு மற்றதை விட்டு விடக்கூடாது. இயேசு சாப்பிட்டார் என்றார் (கடவுள்மனிதன்என்ற வேறுபாடு இன்றி) சாப்பிட்டார் என்று மட்டுமே கூறவேன்டும் கடவுள் இயல்பும் மனிதஇயல்பும் (இயேசுவில்) ‘கலப்படைந்தது ‘ஒன்றிணைந்தது என்று கூறாமல் அவர் ஓர் இயல்பை மாத்திரம் கொண்டிருந்தார் என்று கருதுகிறார்கள்.
 
2. நாட்டம் (மனித மற்றும் கடவுள் நாட்டம்)
 
இவ்வாறே கிருஸ்துவர்களின் கருத்துப் பிரகாரம் இயேசு ஒரு இடத்துக்குப் போக விரும்பினால் (நாடினால்) கடவுள் என்ற வகையில் போக நாடினாரா அல்லது மனிதன் என்ற ரீதியில் போக விரும்பினாரா என்ற கேள்வியாகும்.
 
‘இயல்பு தொடர்பில் காணப்பட்டது போன்றே நாட்டம் தொடர்பிலும் ‘இரு வேறுபட்ட நாட்டங்கள் இயேசுவுக்கு இருப்பதாக ஒருசாராரும், ஒரேநாட்டம் மாத்திரம் இருப்பதாக மறுசாராரும் கருதுகின்றனர்.
 
இயேசுவின் ஓரியல்பு , ஈரியல்பு தொடர்பிலும் ஓரே நாட்டம், இருநாட்டங்கள் தொடர்பிலும் கிருஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் களைவதற்காக சில மாநாடுகள் நடாத்தப்பட்டு அதில் பின்வரும் மதப்பிரிவுகள் தோற்றம் பெற்றன:
 
4.கி.பி. 449 இல் இடம்பெற்ற "இரண்டாம் அப்ஸஸ் மாநாடு":
 
கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவர் "இயேசுவின் உடல் மூலக்கூறில் வேறுபட்டுள்ளதால் எமது உடல்கள் போன்றது கிடையாது. ஏனெனில், கடவுள் இயல்பு மனித இயல்பை மறைத்துவிட்டதுஅதாவது, இயேசுவில் கடவுள் தன்மை மனிதத் தன்மையுடன் கலந்துவிட்டது" என்று கூறினார்.
 
இதுவே, இன்று ள்ள கிருஸ்தவப் பிரிவுகளிடையே பெரும் கருத்து முரன்பாடுகள் தோன்றக் காரனமாக அமைந்தது.
 
இவ்விடயத்தை விவாதிக்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவரின் கருத்தை மறுத்து "இயேசுவின் கடவுள்தன்மை அவரது மனிதத் தன்மையுடன் கலப்போ, மாற்றமோ இன்றி ஒன்றினைந்துவிட்டது "என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். இதுவே இன்றைய ‘ஓர்தோடெக்ஸ்(வைதீகக்) கிருஸ்தவர்களது நம்பிக்கையுமாகும்.
 
எனினும், மேற்படி தீர்மானத்தை ரோமாபுரியின் பாப்பரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இத்தீர்மானத்தை மறுத்தவர்களுக்காக இதன் பிறகு "கல்கீதூனியா மாநாடு" என்ற பேரில் இன்னுமொரு மாநாடு கூட்டப்பட்டு அதில் "இயேசுவின் கடவுள் தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றிணையவில்லை” என்று தீர்மானிக்கப்பட்டது.
அதாவது ‘ஓர்தோடெக்ஸ் (வைதீகக்) கிருஸ்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் இயேசுவுக்கு இரு இயல்புகலும் இருநாட்டங்களும் உள்ளன என கருத்து உடன்பாடு கண்டனர்.
 
எனவேதான், ‘ஓர்தோடெக்ஸ்’ (வைதீகக்) கிருஸ்தவர்கள் கி.பி. 449 இல் நடந்த ‘இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டுக்குக்குப் பின் நடந்த எந்தத் திருச்சபைகள் மாநாடுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை .அவ்வாறே ஏனைய மதப்பிரிவுகள் இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டை அங்கீகரிப்பதில்லை.
 
5. கி.பி. 451இல் இடம்பெற்ற கல்கீதூன் மாநாடு:
 
(இதில் ஓர்தொடெக்ஸ் பிரிவினர் தவிர ஏனையவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.)
இம்மாநாட்டில் பின்வரும் இருதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.முந்தையமாநாட்டின் (இயேசுவின் கடவுள் தன்மை மனிதத்தன்மையுடன் கலந்துவிட்டது என்பது போன்ற) தீர்மானங்கள் இரத்து செய்யப்பட்டன.
2. இயேசுவுக்கு (கடவுள்மனிதன்என) ‘இருஇயல்பு நிலைகளும்‘இருநாட்டங்களும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளல்.
இதன் மூலம் கிருஸ்துவர்கள் இரு பெரும் பிரிவினராக தங்களுக்கிடையே பிரிந்துவிட்டனர்
 
1. ஓர்தொடெக்ஸ்பிரிவினர்: இவர்கள் இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலையும் ‘ஒரேநாட்டமும் மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர். அதாவது ‘இயேசுவின் கடவுள் பண்புகள் மனிதப்பண்புகளுடன் மாற்றமோ, கலப்போ இன்றி ஒன்றித்து விட்டதாகக ருதுகின்றனர். இன்றுவரை இப்பிரிவில் இருந்து குறிப்பிடத்தக்க எந்தபெரும் பிரிவுகளும் தோன்றவில்லை.
 
2.கத்தோலிக்கர்கள்: நாம் ஏலவே விளக்கியது போல் இவர்கள் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும் இருநாட்டங்களும்உள்ளதாகநம்புகின்றனர்.
 
எனினும் கி.பி 667 இல் கத்தோலிக்கர்களில் இருந்து "யோவான் மாறோன்"என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் பிரிந்து சென்று "இயேசுவுக்கு (கடவுள்மனிதன் என) ‘இரு இயல்பு நிலைகளும் ‘ஒரே ஒருநாட்டமும்மாத்திரம் இருக்கின்றது என்ற கருத்தைக் கொண்டதால் இதுதொடர்பில் கலந்தாலோசனை செய்ய மற்றுமொரு மாநாடு கூட்டப்பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

6. கி.பி.680 இல் இடம்பெற்ற "இரண்டாம் கொனஸ்தந்து நோபல்மாநாடு":

 
இம்மாநாட்டில் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும்’ ‘இருவகையான நாட்டங்களும்’ உள்ளன என (மீண்டும்) தீர்மானிக்கப்பட்டு "யோவான் மாறோன்" என்பவரைப் பின்பற்றிய ‘மாறோனியர்கள்’ "நிராகரிப்பாளர்கள்"என பிரகடனம் செய்யப்பட்டது.
 
இதனை தொடர்ந்து மாறோனியர்கள் லெபனான் மலையில் தஞ்சமடையும் வரை கத்தோலிக்கர்களால் தொடந்தும் விரட்டியடிக்கப்பட்டார்கள் இவர்களுக்கென லெபனானில் ஒரு   தலைமை மதகுருவும் இருந்தார். "மாறோனியர்கள்" என தனியாக அடையாளங்காட்டப்பட்ட இப்பிரிவினர் தனித்துவமாக செயற்பட்டனர். பின்னர் கி. பி.1182ம் ஆண்டு "தங்கள் பிரிவின் தனித்துவத்தைப் பேணிக்காப்பதுடன், ரோமாபுரியை தலைந‌கராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக நடப்பதாகவும்"  அறிவித்தனர்.
 
இவ்வாறு கிருஸ்தவர்களுக்குள் மூன்று மதப்பிரிவினர் தோற்றம் பெற்றனர்:
 
1.ஓர்தொடக்ஸ் பிரிவினர்: (இயேசுவுக்கு ஒரே இயல்புநிலை, ஒரே நாட்டம்).
2.கத்தோலிக்க பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள் , இருநாட்டங்கள்).
3.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள், ஒருநாட்டம் மாத்திரம்)
 
இவ்வாறு மூன்று பிரிவாகக் காணப்பட்ட கிருஸ்தவர்களுள், குறிப்பாக, கத்தோலிக்கர்களுல் ரோமாபுரியில் இருந்த தேவாலயத்திற்கும், கொனஸ்தந்துநோபலில் இருந்த தேவாலயத்திற்கும் இடையே "மகன் (சுதன்) எனும் அடிப்படையை நம்பிக்கைச் சட்டத்தில் இணைக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகியது.
 
"பரிசுத்த ஆவியானது பிதாவில் இருந்து தோற்றம்பெற்றது" என ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த "நம்பிக்கைச் சட்டத்தில்" ரோம தேவாலயம் ‘சுதனில்’ இருந்தும் என்ற வார்த்தையைச் சேர்த்து ‘பரிசுத்த ஆவியானவர்’பிதாவிலிருந்தும், சுதனில் (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர் என நம்பலானார்கள்.
 
இது தொடர்பில் ஆராய கொனஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர் கீழ்வருமாறு ஒரு மாநாட்டைக் கூட்டி ரோம தேவாலயத்தின் கருத்தை நிராகரித்துவிட்டனர்.
 
7. கி.பி. 879 இல் இடம் பெற்ற மூன்றாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாடு:
 
கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தால் கூட்டப்பட்ட இம்மாநாட்டில் ரோம தேவாலயத்தினருக்கு மாற்றமாக "பரிசுத்த ஆவியானது பிதாவிடம் இருந்து மாத்திரம் தோற்றம் பெற்றது" என தீர்மானித்தனர்.
 
இவ்வாறு கத்தோலிக்க மதப்பிரிவினர்:
1.மேற்குக்கத்தோலிக்கர் என்ற ரோமதேவாலயத்தினர்
2. ரோம ஓர்தொடக்ஸ் அல்லது கிழக்கு/கிரேக்க கிருஸ்தவர் என்ற கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர்.
 
ஆக இதுவரை தோன்றிய பிரிவுகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:
1..ஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலை, ஒரே நாட்டம்’  பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து’ மட்டுமே தோற்றம் பெற்றவர்.
2.கத்தோலிக்கபிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள்’ ‘இரு நாட்டங்கள்’ பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்தும் சுதனில்’ (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர்.
3. ரோமஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள் இருநாட்டங்கள்’. பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து’ மட்டுமே தோற்றம் பெற்றவர்.
4.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு ‘இரு இயல்புநிலைகள் ஒருநாட்டம்’ மாத்திரம்)
 
இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்குக்கும் வேறுபட்ட மதசட்டங்கள் உருவாகி தனித்துவமான மாநாடுகளும் நடைபெற்றன.
 
உதாரணமாக: ரோம கத்தோலிக்கர்களால் மாநாடுகளாக:
 
1.கி.பி. 1225 இல் இடம்பெற்று "ரோம கத்தோலிக்க பாப்பரசர் தேவாலயத்திற்கு பாவமன்ணிப்பு வழங்கும் உரிமை உள்ளதாகவும் அதைதான் விரும்புபவர்களுக்கு வழங்கமுடியும்" எனத் தீர்மானிக்கப்பட்ட "ரோம்" மாநாட்டையும்,
 
2. கி.பி. 1869 இல் இடம்பெற்று "பாப்பரசர் என்பவர் பாவங்கள்,தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்!!" எனத் தீர்மானம் எட்டப்பட்ட "ரோம்" மாநாட்டையும் குறிப்பிடலாம்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றம்:
 
ரோம கத்தோலிக்க தேவாலயம் அக்கால மன்னர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டது. இது அரசியல் அதிகாரத்துக்கும் மத அதிகாரத்துக்குமிடையிலான போட்டியாக உருவெடுத்து பாப்பரசரின் அதிகாரத்தை பலவீனமடையச் செய்தது.
 
இப் பலவீன நிலையை பயன்படுத்தி சில மத சீர்திருத்த இயக்கங்கள் தோன்றலாயின. அவைகளுள் பிரதானமானதாக "மார்டின்லூதர்"என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து தனியான திருச்சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட "புரொடஸ்தாந்து”  திருச்சபையாகும்.
 
 
"மார்டின் லூதர்"
 
கத்தோலிக்க பாதிரியாராகவும் ஜேர்மன் நாட்டில் "விட‌ன் பிரிஜ்" பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த கலைகளுக்கான பேராசிரியராகவும், ஒரு தேவாலயத்தின் பொறுப்பாளாராகவும் இருந்த ‘மார்டின் லூதர்’கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து அதற்கெதிராக செயற்படுவதாக அ றிவித்தார்.
 
பின்பு "பாப்பரசர் எனும் நிலை கடவுளின் மூலம் அல்ல” என்பதை அறிவித்தார். இதனால் பாப்பரசர் மார்டினை ரோமுக்கு அழைத்த போது பாப்பரசரை சந்திக்க மறுத்து தனது நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பிரச்சாரம் செய்த காரனத்தால் 1526 இல் பாப்பரசர் ‘மார்டின் லூதரை’குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரது நூற்கள் அனைத்தையும் எரித்து விடும்படி கட்டளையிட்டார்.
 
கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக ‘மார்டின் லூதர்’ தெரிவித்த பல ஆட்சேபனைகளுள் பிரதானமானதாக இரண்டைக்குறிப்பிடலாம்.
 
1."புனிதப்பலி" எனும் சடங்கை மறுத்தல்:
 
இச் சடங்கின் போது பாதிரி ஒருவர் ‘ரொட்டிகளில் ஒன்றை எடுத்து மத ஜெபங்களை உச்சரிக்கும் போது (கிருஸ்தவர்கள் நம்பிக்கைப் பிரகாரம்) அந்த ரொட்டியில் கர்தராகிய இயேசு கிருஸ்து முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார். அவ்வாறே பூசைக்கிண்ணத்தில் இருக்கும் மதுவும் கர்த்தரின் இரத்தமாக மாறிவிடுகிறது.
 
 
clip_image001.png1
எனவே, குறித்த ரொட்டியை தின்று மதுவையும், குடிப்பவரின் உடலில் இயேசு கிருஸ்து இடம்பிடித்து அவருக்கு நல்வழியைக்காட்டுவார் எனகிருஸ்தவர்கள் அனைவரும் நம்பி செய்துவரும் திருப்பூசையை ‘மாடின்லூதர்’ கடுமையாக விமர்சித்து மறுத்தளித்தார். (இன்று வரை புறொடஸ்டான்ட் தவிர ஏனயை பிரிவினர்கள் இப்பூசையை செய்து வருகின்றனர்)
 
2. பாவ மன் னிப்புப் பட்டயங்களை மறுத்தல்:
 
1517 ம் ஆண்டு பாப்பரசர் "பத்தாம் லியோ"  உலகம் முழுவதற்குமான பொது மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இதன் மூலம் அப்பட்டயமொன்றை விலை கொடுத்து வாங்குபவர் மன்னிப்புப் பெறலாம் என்றாகிவிட்டது. ரோம்நகரில் உள்ள புனித "பத்ரஸ்" தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியை திரட்டவே பாப்பரசர் மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார் என்பதால் ‘மார்டின் லூதர்’ இதையும் மறுத்துரைத்தார்.
 

 

 
 
           பாவ ன்னிப்புப் பட்டயம்
 
தேவாலயங்களும் பாப்பரசரும் கிருஸ்தவர்கள் மீது விதித்த கடுமையான வரிச்சுமையில் இருந்தும் அறிவியல் மற்றும் சிந்தனை மீது இவர்கள் செலுத்திய ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறவேண்டி அக்காலமக்கள் பலரும் புதிய பிரிவான புறொடஸ்டன்ட் இல் இணைந்து கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் திருச்சபைகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க அன்றைய புதிய உலகமான அமெரிக்காவுக்கு பெருமளவில் இடம்பெயர்ந்து அமெரிக்க சமூகத்தில் பெரும்பான்மையினர் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
 
மக்களை தனது கொள்கையின் பால் ஈர்க்க மார்டின் லுதர் மூன்று பிரதான வழிமுறைகளைக் கையாண்டார்.
 
1.தேவாலயங்களின் பேரில் பெருமளவு குவிந்திருந்த சொத்துகளை அபகரிக்கும்படியும் தேவாலயங்களை, மடங்களை பொதுமக்கள் பயனடையும் விதத்தில் பாடசாலைகளாக, வைத்தியசாலைகளாக மாற்றிவிடும்படி அக்கால அரசர்களை தூண்டி விடும் வகையில் நூல்களை வெளியிட்டார்.
 
2. "ஹேஷ்" ஆட்சியாளன் தனது முதல் மனைவி உயிருடன் இருக்கதான் விரும்பிய இன்னுமொரு பெண்ணை மணமுடிக்க விரும்பியபோது, இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் முடிக்க முடியும் என ‘மார்டின் லூதர்’ அனுமதித்ததுடன் அதற்கான புதியசடங்குகளையும் நடாத்த அனுமதித்ததன் மூலம் ஆட்சியாளரின் அன்பைப் பெற்றார்.
 
3.துறவறத்தினால் அவதியுற்றிருந்த பாதிரிகளையும், மதகுருக்களையும் தன் பக்கம் ஈர்க்கதானே முன்மாதிரியாக மாறி "கார்தரீன்" எனும் பெண் துறவியை பலவந்தமாக அடைந்து திருமணம் முடித்ததன் மூலம் அருட்தந்தை எனும் பதவியை அவமதித்ததுடன், தனது பொறுப்பிலிருந்த தேவாலயத்திலேயே குடும்ப வாழ்வில் ஈடுபட்ட ‘மார்டின் லூதர்’நோய்வாய்ப்பட்டு 1546 இல் மரணித்தார்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் அடிப்படைகள்:
 
1.விவிலியநூற்களே சட்டமூலாதாரமாகக் கொள்ளப்படுமே அன்றி பாப்பரசர்களின் போதனைகள் அல்ல.
 
2.விவிலியநூற்களை சொல்ரீதியாக விளக்கமளிக்கவேன்டுமே அல்லாமல் சிலேடை என்ற ரீதியில் விளக்களிக்கக்கூடாது.
 
3.மதகுருக்கள், பாதிரிகள் என்று மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கிருஸ்தவராலும் வேதநூலுக்கு விளக்கமளிக்க முடியும்.
 
இவ்வாறு தோற்றம் பெற்ற புரொடஸ்தாந்து பிரிவினரும்கூட ‘லூதரிகள்’, ‘மோர்மோனிகள்’ என பல்வேறுபட்ட உட்பிரிவுகளாக பிரிந்துவிட்டார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

 
ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும் ரோமன் கத்தோலிக்கருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:
 
1.கத்தோலிக்கர்கள் இயேசுவுக்கு (கடவுள், மனிதன்என) ‘இரு இயல்புநிலைகளும்’ ‘இரு நாட்டங்களும்’ உள்ளதாக நம்ப, ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ ‘ஒருஇயல்பு நிலையும்’ ‘ஒரு நாட்டமும்’ மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர்.
 
2.கத்தோலிக்கர்கள் பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவிலும், சுதனிலும்’ இருந்து தோற்றம் பெற்றவர் என நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினர் பிதாவில் இருந்து மட்டும் தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.
 
3.புனித பூஜையின் போது கத்தோலிக்கர்களிடத்தில் ‘அப்பம்’ மாத்திரம் வினியோகிக்கப்பட ஓர்தொடெக்ஸ் பிரிவினரிடத்தில் ‘அப்பமும் மதுபானமும்’ விநியோகிக்கப்படும்.
4. கன்னிமரியாள் ‘ஆதிபாவத்திலிருந்து நீங்கியவளாக’ பிறந்தாள் என கத்தோலிக்கர் நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ கன்னிமரியாள் ‘ஆதிபாவத்துடன் பிறந்ததாகவும்’ பரிசுத்தஆவியானவர் அவளை ஆதிபாவத்தில் இருந்து தூய்மைப்படுத்தியதாகவும் நம்புகின்றனர்.
 
5.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவுகளை விடவும் கன்னிமரியாளை அளவு கடந்து புகழ்ந்து ‘இயேசுவின் பலியில்’ அவளுக்கும் பங்கிருப்பதாகவும், அவள் மூலமகவே அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்படுவதாகவும் அவள் ‘பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவள்’ எனவும் நம்புகின்றனர்.
 
6.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவினருக்கு மாற்றமாக பாப்பரசர் தவறுகள்,பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர் என்றும் ரோம் நகரே உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் தலைமையகம் என்றும் நம்புகின்றனர்.
 
7. 1965 இல் இடம் பெற்ற வத்திக்கான் மாநாட்டில் கத்தோலிக்கர்கள் இயேசுவின் இரத்ததில் இருந்து ‘யூதர்கள் குற்றமற்றவர்கள்’ என அறிவித்தனர்!!.
 
ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும், புரொடஸ்தாந்துபிரிவினருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:
 
1.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகளும்’ ‘இரு நாட்டங்களும்’ உள்ளதாக நம்புகின்றனர்.
 
2. புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக பரிசுத்த ஆவியானவர் ‘பிதா மற்றும் சுதனில்’இருந்து தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.
 
3.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக மதகுருவிடம் பாவமன்னிப்பு தேடாமல், நேரடியாகவே கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கருதுகின்றனர்.
 
4..புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக புனித பூஜையையோ, ரொட்டி மற்றும் மது இயேசுவின் சதை இரத்தமாக மாறுகிறது என்ற சித்தாந்தத்தையோ நம்புவதில்லை.
 
5.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தின் சில பகுதிகளை நீக்கிவிட்டனர்.
 
6.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசு மீண்டும் இப்பூமிக்கு வந்து ஆயிரம் வருடம் ஆட்சிசெய்வார் என நம்புகின்றனர்.
 
7.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்குப் பின்பு மரியாள் வேறுபிள்ளைகளையும் பெற்றதாக நம்புகின்றனர்.
 
8.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக, பாப்பரசரின் அதிகாரத்தை மறுத்து சுவிசேசத்தை சொல் அடிப்படையிலேயே விளக்க வேண்டும், ஒவ்வொரு கிருஸ்தவருக்கும் சுவிசேசத்தை விளக்கும் உரிமை உண்டு என்றும் நம்புகின்றனர்.
 
9.‌புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளை மாத்திரமே பேணிவருகின்றனர்.
 
புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றமும் அதன் விளைவுகளும்:
 
பாப்பரசரின் அதிகாரத்தை நிராகரித்து கிருஸ்தவ மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்யும்விதமாக புரொடஸ்தாந்துபிரிவினரின் தோற்றம் அமைந்ததால் இப்பிரிவினர் மீது பாப்பரசர்கள் பல இலட்சக் கணக்கான மக்களை பலிகொண்ட யுத்தங்களைத் தொடுத்தார்கள். அவைகளுள்:
 
1.பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் சுமார் நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து கத்தோலிக்கர்களுக்கும், புரொடஸ்தாந்துபிரிவினருக்குமிடையே நடந்து வந்த யுத்தம்......
 

 

குறிப்பாக, 1572/08/24 அன்று பாப்பரசர் ப‌தின்மூன்றாம் ஜிரிகோரி என்பவரின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற "சென்பர்த்தோலோமோவ் (st.Bartholomew' s Day massacre) கொலைக்களத்தில் பண்டிகை தினமண்று கத்தோலிக்கர் புரொடஸ்தாந்து பிரிவினர் மீது தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கான மக்களை வெட்டியும் மரங்களிள் தூக்கிலிட்டும் கொலை செய்தார்கள்.
 
clip_image002.jpg
 
 
 

"சென்பர்த்தோலோமோவ் கொலைக்களம்” 

 
இதில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக புரொடஸ்தாந்து பிரிவினர் உறுதிசெய்ய கத்தோலிக்கர்களோ, தாங்கள் வெறும் இரண்டாயிரம் பேரைத்தான் படுகொலை செய்ததாக சமாளித்தார்கள்!!.
 
2.1536ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் அயர்லாந்தில் புரொடஸ்தாந்துசித்தாந்ததை திணிக்க முற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட யுத்தம் ‘பதினெட்டாம் நூற்றாண்டு வரை’ நீடித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது.
3. ஜேர்மனியில் 1618 முதல் 1648 வரை முப்பது ஆண்டுகளாக கத்தோலிக்கர்கலுக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த யுத்தகளங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
4. ஸ்பெயின் நாட்டில் 1936 முதல் 1939 வரை கத்தோலிக்கருக்கும் புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 6845கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட மூன்று இலட்சத்து ஆறாயிரம்மக்கள் உயிரிழந்தனர்.
 
அவ்வாறே புரோடஸ்தாந்து காலப்பகுதியில் அச்சுஇயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் விவிலியநூற்கள் பல்வேறுபட்ட மொழிகளில் பொழிபெயர்க்கப்பட்டன.  புரோடஸ்தாந்து சித்தாந்தப்படி விவிலியத்தை விளக்கும்உரிமை அனைத்து கிருஸ்தவர்களுக்கும் உள்ளது என்பதால் பலநூற்றாண்டு காலமாக மதகுருக்களின் கைகளில் தேவாலயங்களுக்குள் முடங்கிக்கிடந்த ‘பழையஏற்பாடு’ சகலரது கைகளிலும் கிடைக்கைக் கூடியநிலை உருவாகி ‘திருத்தூதுவர் வாழ்க்கை’ வரலாற்றை கொண்டிருந்த கிருஸ்தவ இலக்கியங்களில் ‘யூத,எபிரேய சித்தாந்தங்கள்’இடம்பிடிக்க ஆரம்பித்தன.
 
யூதர்கள் கர்த்தரின் விருப்பத்திற்குரிய சமுதாயத்தினர், ஆப்ரஹாமுடன் கர்த்தர் உடன்படிக்கை செய்து கொண்டகாலம் முதல் உலகம் அழியும்வரை பலஸ்தீன் யூதர்களின் பூர்வீகம், யூதர்கள் பலஸ்தீனத்தில், சியோனிஸ சாம்ராஜ்யத்தை உருவாக்கியதும் அங்கே இயேசு கிருஸ்து மீண்டும் தோன்றுவார் என்பது போன்ற யூதநம்பிக்கைகள் கிருஸ்துவ சமுதாயத்துக்குள் பரவ ஆரம்பித்தன.
 
இதுவே சுமார் 60%  புரோடஸ்தாந்து பிரிவினரைக் கொண்ட அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதற்கான மதரீதியான காரணமாவும் அமைந்துவிட்டன.
 
யஹ்வஹின் சாட்சியாளர்கள்:
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவின்'பென்ஸ்லபீனியா’ மாநிலத்தில் ‘ஷார்லஸ்ராசல்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கிருஸ்தவப் பிரிவே ‘யஹ்வஹின் சாட்சியாளர்கள்’(கடவுளின்சாட்சியாளர்கள்) என அழைக்கப்படுகிறார்கள்.
 
கிருஸ்தவப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் இவர்கள் இன,மொழி பேதமின்றி பலரையும் தங்கள் கொள்கையில் இணைத்துள்ளனர்.
"யஹ்வஹ்" எனும் கடவுளின் பெயர் விவிலியத்தின் மூலப்பிரதியில்7200இடங்களில் காணப்படுவதாகவும் மொழிபெயர்ப்பாளர்கள் அதை "கர்த்தர்" என திரிபடையச் செய்துவிட்டார்கள் என நம்பும் இப்பிரிவினர் ஏனைய பிரிவினர்களை கிருஸ்தவர்களாக அங்கீகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

முற்றுப்பெறாத சுவிசேஷமும் மூடி மறைக்கப்படும் உண்மைகளும்!

அபூ ஸைத் அல் அதரி
 abuzaidalathary@gamil.com
 
கிருஸ்தவர்களால் இறை வேதமாக நம்பப்படும் பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டின் முக்கிய சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிஷேசம்” பற்றிய மூடி மறைக்கப்படும் உண்மைகளை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன் வெளிக்கொணரும் நாம் இது பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.
 
இன்று உலகிலுள்ள கிருஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைபிளை இறைவேதமாக நம்புகின்றனர். குறிப்பாக இயேசு கிருஸ்துவின் வாழ்வு பற்றி பேசும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்போரால் எழுதப்பட நான்கு சுவிசேஷங்களும் இயேசுவின் சீடர்களால்  “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
 
மேற்படி கிருஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதா அல்லது யதார்த்ததிற்கும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கும் மாற்றமானதாக யாரோ பெயர் தெரியாத, முகவரி இல்லாதவர்களால் எழுதப்பட்டதா என்பதை நாம் இக்கட்டுரையில் ஆராயப் போவதில்லை!
 
மாறாக இந்நான்கு சுவிஷேசங்களும் கிருஸ்தவர்களது நம்பிக்கைப் பிரகாரமே மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்களாலேயே எழுதப்பட்டது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொணடாலும் கூட இந்நான்கிலும் மிக முதன்மையானதும் முக்கியமானதுமான சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிசேஷத்தில்  மிக மிக‌ பிற்பட்ட காலத்தில் அநாமோதய நபரால் எழுதப்பட்ட, இன்று காணப்படும் பழமையான, நம்பகமான(?) கையெழுத்துப்பிரதிகளில் கூட காணப்படாத சில வசனங்கள் எவ்வாறு பைபிளில் சேர்க்கப்பட்டு வேத வாக்கியங்கள் என்ற சாயம் பூசப்பட்டு கிருஸ்தவ மக்கள் ஏமாற்றப்பட்டார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையே இக்கட்டுரை ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்கிறது.
 
கட்டுரையின் மையக் கருவுக்குள் நாம் நுழைய முன் இரு முக்கிய அடிப்படைகளை புரிந்து கொள்வது விடயத்தின் ஆழ‌, அகலத்தை அறிந்து கொள்ள பெரிதும் துணை புரியும். அவைகளாவன:
 
1.தொலைந்து போன மூலப் பிரதிகள்:
 
புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக கிருஸ்துவர்கள் நம்பும் மூலப்பிரதிகள் இன்று நம் மத்தியில் கிடையாது. சரி மூலப்பிரதிகள் தொலைந்ததுதான் தொலைந்தது அம்மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட “இரண்டாம் தலைமுறைப் பிரதிகள்” ஆவது எம்மத்தியில் காணப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை! சரி,  மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட பிரதிகளின் பிரதிகளாவது (அதாவது மூன்றாம் தலைமுறைப் பிரதிகளாவது) இருக்கின்றதா? என ‘கண்ணில் விளக்கெண்ணை’ விட்டுக் கொண்டு தேடினாலும் ஊஹும் கிடையவே கிடையாது. மாத்திரமின்றி இன்னுமொரு படி கீழே இறங்கி வந்து மூலப்பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளாவது இன்று உலகில் காணப்படுகிறதா என்றால் ஊஹும் மருந்துக்குக் கூடக் கிடையாது!
 
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. அப்படியானால் கிருஸ்துவர்களால் வேதமாக, இறை வசனங்களாக நம்பப்படும் பைபிளில் எதுதான் இன்றைக்கு காணப்படுகிறது? என்ற கேள்வி எம் எல்லோருக்கும் எழுவது இயற்கையே! அதற்கான பதிலாக; மிக மிக பிற்பட்ட காலங்களில், பெரும்பாலும் பல நூற்றாண்டுகள் பிந்திய காலப்பகுதிகளில் எழுதப்பட்ட பிரதிகளே இன்று உலகில் காணப்படுகின்றன!
 
அவைகளாவது காணப்படுகிறதே என திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. காரணம் இவ்வாறு காணப்படும் பிரதிகளும் ஒன்றிலிருந்து இன்னுமொன்று பல்லாயிரம் இடங்களில் (எத்தனை இடங்களில் என எம்மால் மட்டிட முடியாதவாறு) அவைகளுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவ்வித்தியாசங்களின் எண்ணிக்கையை இலகுவாக சொல்வதென்றால் ஒப்பீட்டு ரீதியான பரிபாசையில் “இன்று எம்மிடமுள்ள பிரதிகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள் புதிய ஏற்பாட்டில் காணப்படும் மொத்த சொற்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.”
 
நாம் கருத்துச் சிதைவின்றி மேற் சொன்ன இவ்வுண்மையை கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தவரும் பைபிள் மூலப்பிரதிகள் ஆராச்சியாளருமான “ப்ரெத் டி எர்மான்” (BRAT D. EHRMAN) என்பவர் தனது “மிஸ்கோடிங் ஜீஸஸ்” (MISQUOTING JESUS) எனும் நூலின் முன்னுரையில் 10ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க 1.)
 
இவ்வாறு தங்களது வேதத்தின் மூலப்பிரதிகளை தொலைத்து விட்டு விழி பிதுங்கி நிற்கும் கிருஸ்தவ சமுதாயத்தவர்களின் கைகளின் உள்ள மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளின் “தராதரம்” என்ன என்பதைப் பார்க்கும் போது “முல்லா சூப் காய்ச்சிய கதை” தான் எமக்கு நினைவுக்கு வருகிறது! அக்கதை என்ன என்பதைப் பார்த்து விட்டு எமது தலைப்பை தொடர்வோம்.
 
ஒரு முறை நஸ்ருதீன் முல்லா சூப் காய்ச்சினார். சூப் வாசனையை மோப்பம் பிடித்த நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து “முல்லாவே நான் உங்கள் நண்பரல்லவா? எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க, அவருக்கு முல்லா சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றொருவர் அந்நண்பர் சென்றதும் முல்லாவிடம் வந்து முல்லாவே நான் உங்கள் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் என்றார். முல்லாவும் சரி போனால் போகிறது என அவருக்கும் சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றுமொருவரும் முல்லாவிடம் வந்து நான் உங்கள் நண்பரின் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க முல்லாவுக்கு வந்ததே கோபம். அவருக்கு சூப் காச்சிய சட்டியை கழுவிய தண்ணீரை முல்லா கொடுத்தார். அதை குடித்துப் பார்த்த அந்நபரோ; முல்லா, இது சூப் மாதிரி இல்லையே என்று கேட்க முல்லாவோ; அதற்கு “இது சூப் அல்ல சூப்புடைய சூப்புடைய சூப்பு” எனக் கூறி வந்தவரை வாயடைக்க வைத்தார்.
 
இக்கதையை நாம் நகைச்சுவைக்காக மட்டும் எழுதவில்லை மாறாக, மூலப்பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளையே தொலைத்துவிட்டு மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளையே வைத்திருக்கும் கிருஸ்துவர்களின் வேதமாகிய பைபிள், குறிப்பாக புதிய ஏற்பாடு “சூப்புடைய சூப்புடைய சூப்” பின் தரத்தில் தான் அமைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காகவும்தான் இதை எழுதினோம். இனி தலைப்புக்குள் வருவோம்.
 
2. மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவம்:
 
மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த அநாமோதய நபர்களின் கைச்சரக்கு கலக்கப்பட்டு அவைகளுக்கு “வேத வாக்கியங்கள்” என்ற சாயம் பூசப்பட்டது என நாம் முன்பு குறிப்பிட்டோம். இதன் பாரதூரத்தை, பயங்கரத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு கிருஸ்துவர்களுக்கு மத்தியில் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை, ஏனைய லூக்கா மற்றும் மத்தேயு எழுதிய சுவிஷேசங்களுக்கு மாற்கு எழுதிய சுவிஷேசம் எவ்வாறு மூலாதாரமாக அமைந்தது என்பதை நோக்குவது அவசியமாகும். அந்த வகையில்:
 
முதல் மூன்று சுவிஷேசங்கள்:
 
புதிய ஏற்பாட்டில் காணப்படும் முதல் மூன்று சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிஷேசங்கள் “Synoptic” என்று அறியப் படுகின்றன.  “Synoptic”  என்பதன் பொருள் “ஒன்றாகப் புரிந்து கொள்ளக்கூடியது” என்பதாகும். இம்மூன்று சுவிஷேசங்களுக்குமிடையே காணப்படும் பெருமளவான ஒற்றுமையால் மூன்றையும் ஒன்றிணைத்து கற்றுக் கொள்வது இலகுவானது என்பதனாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டது. இம்மூன்று சுவிஷேசங்களிலும் மாற்கு எழுதிய சுவிஷேசம் மிக முக்கியமானதாகும். அதைவிடவும் கூடுதலாக உலகில் காணப்படும் கிறிஸ்த்தவ நூற்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூல் மாற்கு எழுதிய சுவிஷேசம் என்றும் கூறமுடியும். ஏனெனில், மாற்கு எழுதிய சுவிஷேசம்தான் முதன் முதலில் எழுதப்பட்ட சுவிஷேசம் என அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
 
எனவே, இன்று எம்மிடையே உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிக முதன்மையானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான். இதன் பொருள் மாற்கு தான் முதன் முதலில் இயேசு பற்றி எழுதினார் என்பதல்ல. மாறாக, அக்காலத்தில் இயேசு பற்றி எழுதுவதற்கான ஆரம்பகால முயற்சிகள் காணப்பட்டாலும் எம்மிடையே இன்று உள்ள இயேசு பற்றிய நூல்களில் மிகப் புராதனமானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான்.
 
சுவிசேஷங்களின் மூலம்:
 
சுவிஷேசங்களின் மூலம் என்ன? அவை எதிலிருந்து எழுதப்பட்டது? என்பதை அறிந்துகொள்ள அச்சகங்களோ, அச்சடிக்கப்பட்ட நூல்களோ கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கரங்களால் மாத்திரம் மிகக் கஷ்டத்துடனும், கவனத்துடனும் புத்தகங்கள் எழுதப்படும் காலகட்டத்தில்தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. எனவே அக்காலத்தில் கரங்களால் எழுதப்பட்ட வெகு சில பிரதிகளே அன்று காணப்பட்டன. அவ்வாறெனில் மாற்கு தான் இம் மூன்று சுவிஷேசங்களில் முதன் முதலில் சுவிஷேசம் எழுதினார் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்.
 
இம் மூன்று சுவிஷேசங்களையும் நாம் வாசித்துப் பார்த்தால் இவைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவு ஒற்றுமைகளைக் காணலாம். இவைகள் ஒரேவிதமான சம்பவங்களை, ஒரேவிதமான வார்த்தைப்  பிரயோகங்களில் கொண்டுள்ளதையும் இயேசுவின் போதனைகள் ஒரே வசனப் நடையில் எடுத்தெழுதப்பட்டுள்ளதையும் கண்டுகொள்ளலாம்.
 
உதாரணமாக, மூன்று சுவிஷேசங்களிலும் உள்ள இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்ற சம்பவத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் (மாற்கு 6:30‍ 44, மத்தேயு 14:12 21, லூக்கா 9:10 17) ஒரே வகையான வார்த்தைகளில் ஒரே மாதிரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதை கானலாம்.
 
இதை இன்னும் தெளிவாக நோக்க, இயேசு பக்கவாதக்காரனை குணப்படுத்திய சம்பவத்தை எடுத்துக் கொண்டால் (மாற்கு 2:1-12, மத்தேயு 9:1-8, லூக்கா 5:17-‍‍26) என்ற பகுதிகள் ஒரே மாதிரி அமைந்துள்ளதுடன் அதில் “அப்போது இயேசு பக்கவாதக்காரனுக்கு சொன்னார்” என்ற வசனம் ஒரே இடத்தில் இடம் பெற்றுள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.
 
இவ்வாறு மூன்று சுவிஷேசங்களுக்கும் இடையே காணப்படும் தெளிவான ஒற்றுமை இரண்டு வகையான  எடுகோள்களுக்கு எம்மை இட்டுச் செல்கிறது.
 
1.மேற்படி மூன்று சுவிஷேசங்களும் ஒரே மூலத்தில் இருந்து தகவல்களைப் பெற்று எழுதப்பட்டது. அல்லது
 
2.இம் மூன்றில் ஒரு சுவிஷேசத்தை மூலமாகக் கொண்டு ஏனைய இரு சுவிஷேசங்களும் எழுதப்பட்டன.
 
இவ்விரண்டு எடுகோள்களில் எது சரியானது?
 
இதை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், மாற்கு எழுதிய சுவிஷேசம் 105 பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 93 பகுதிகள் மத்தேயுவினதும் 81 பகுதிகள் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். 4 பகுதிகள் மாத்திரம் மத்தேயுவினதும் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெறாமல் உள்ளன.
 
இதை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தால் மாற்கு எழுதிய சுவிஷேசம் மொத்தமாக 661 வசனங்களையும் மத்தேயுவின் சுவிஷேசம் 1068 வசனங்களையும் லூக்காவின் சுவிஷேசம் 1149 வசனங்களையும் கொண்டுள்ளன.
 
மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் உள்ள 661 வசனங்களில் 606 வசனங்களை மத்தேயு தனது சுவிஷேசத்தில் 51% வீதமாக உள்வாங்கியிருப்பதையும் லூக்கா 320 வசனங்களை 53% வீதமாக உள்ளடக்கியிருப்பதையும் நாம் அவதானிக்கிறோம்.
 
மேலும், மத்தேயு உள்ளடக்காத மாற்கின் வசனங்களில் 31 வசனங்களை லூக்கா தனது சுவிஷேசத்தில் உள்வாங்கியிருக்கிறார்.
 
ஆக மேற்படி ஒப்பீட்டு ரீதியான பார்வை மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதும் போது மாற்கு எழுதிய சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதினார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.
 
மேலும், நிகழ்வுகளை விவரிக்கும் முறையை எடுத்துக் கொண்டாலும் மாற்குவின் முறையையே மத்தேயுவும் லூக்காவும் பெருமளவில் பின்பற்றியுள்ளனர். மாற்குவின் விபரிக்கும் முறைக்கு மத்தேயு மாறுபடும் இடங்களில் லூக்காவும், லூக்கா மாறுபடும் இடங்களில் மத்தேயுவும் மாற்குடன் உடன்படுவது (அக்காலத்தைய இல‌க்கியத் திருட்டு என்பதற்கு அப்பால்) மத்தேயுவும், லூக்காவும் மாற்குவின் சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே வேறு சில விடயங்களையும் சேர்த்து தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பது நிரூபணமாகிறது.
 
இவ்வுண்மையை கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 13ம் 14ம் பக்கங்களில் எடுத்தெழுதியுள்ளார். (பார்க்க 2)
 
எனினும், நாம் ஏற்கனவே வலியுறுத்தியவாறு சுவிஷேசங்களை எழுதியவர்கள் ‘யார் என்றே அறியப்படாதவர்கள்’ என்றிருந்த போதிலும் கிருஸ்தவர்களது (மூட) நம்பிக்கைப் பிரகாரமே மாற்கு, மத்தேயு மற்றும் லூக்கா என்ற பெயர்களைக் குறிப்பிட்டோம் என்பதையும் அப்படி குறிப்பிட்டதன் நோக்கம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதே என்பதையும் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.
 
இக்கருத்தையே “மாற்கு தனது சுவிஷேசத்தை எழுதி பத்தில் இருந்து இருபது ஆண்டுகளுக்குள் மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பதில் அதிக‌ளவான (கிருஸ்துவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றார்கள். மத்தேயுவும் லூக்காவும்  ‘உண்மையில் இவைகளை எழுதியவர்கள் அடையாளமில்லாத நபர்கள்’ என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு “மாற்கு எழுதிய சுவிஷேசத்தை தங்களது சுவிஷேசங்களின் முக்கியதொரு மூலமாகக் கொண்டிருந்தார்கள்.” என ஷறோன் வார்னர் என்ற கிருஸ்துவ அறிஞர் தனது “அன் லொக்கிங் த மெஸேஜ் ஒஃப் த பைபிள்” என்ற நூலில் 75ம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.(பார்க்க 3)
 
புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் மட்டுமன்றி அவைகளின் பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளும் கூட இன்று எம்மத்தியில் இல்லை என்பதையும் இன்று உலகில் உள்ள பிரதிகள் மிகவும் பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான பிரதிகள் என்ற முதலாவது விடயத்தையும் மாற்கு எழுதிய சுவிஷேசம் இயேசுவின் வாழ்வு பற்றிக் கூறும் நான்கு சுவிஷேசங்களில் முதன்மையானதும் ஏனைய இரண்டு சுவிஷேசங்களுக்கு மூலாதாரமாகவும் திகழ்கிறது என்ற இரண்டாவது உண்மையையும் நினைவில் நிறுத்தியவர்களாக இக்கட்டுரையின் மையப் பகுதிக்குள் செல்வோம்.
 
மாற்கு எழுதிய முற்றுப் பெறாத சுவிஷேசம்
 
 
நாம் ஏலவே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் கிருஸ்துவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாக, இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களுக்கு மாற்றமாக முற்றுப் பெறாமல் முடிந்துள்ளது என்பது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் ஆணித்தரமான உண்மையாகும்.
 
இவ்வாறு முற்றுப் பெறாமல் முடிந்த சுவிஷேசத்தில் ஓரிரு வார்த்தைகளை அல்ல! ஓரிரு வசன‌ங்களையும் அல்ல! பிற்பட்ட காலத்தில் பெயர் முகவரி கூட தெரியாத நபர்களால் எழுதப்பட்ட மொத்தமாக பன்னிரண்டு வசனங்களை மாற்கு எழுதிய சுவிஷேசத்துடன் இணைக்கப்பட்டு அவைகளும் “வேத வாக்கியங்கள்”  என சாயம் பூசப்பட்டன.
 
இவற்றை சற்று விரிவாக நோக்கும் முன்பு சம்பந்தப்பட்ட வசனங்களை சற்று நோக்கிவிடுவது இக்கட்டுரையை தொடந்தும் வாசிப்பதற்கு துணை புரியும்.
இதோ மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப்பகுதியை அப்படியே தருகிறோம்.
 
 
8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்
(மத்தேயு 28:9- 10 யோவான் 20: 11- 18  லூக்கா 24:13- 35)
9. இயேசு வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதல் நாளே இயேசு மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார். ஒரு முறை ஏழு பேய்களை மரியாளை விட்டு இயேசு விரட்டினார்.
10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுது கொண்டிருந்தனர்.
11. ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். ஆனால் அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12.பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக  அவர் பார்ப்பதற்கு இல்லை.
13.இந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர்.எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்
(மத்தேயு 28:16- 20  லூக்கா 26: 36- 49 யோவான் 20:19- 23  அப்போஸ்தலர் 1:6- 8)
14.பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதன் நிமித்தம் அவர்களுடைய அவ நம்பிக்கையைக் குறித்தும்,  இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15.பின்பு அவர்களிடம், “உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்.
16.எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனொருவன் விசுவாசிக்கவில்லையோ  அவன் கண்டிக்கப்படுவான்.
17.விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்யமுடியும். அவர்கள் என்பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர்,
18.அவர்கள் எவ்வித துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றியோருக்கு கூறினார்.
19.சீஷர்களிடம் இவற்றைச் சொன்னபிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்.
20.அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வ‌து உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.
 
இதுதான் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப் பகுதி. இதில் கடைசி இரு பகுதிகளான “சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்” மற்றும் “இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்” என்ற பகுதிகளில் காணப்படும் 9 முதல் 20 வரையிலான பன்னிரெண்டு வசனங்களும் தான் பிற்பட்ட காலத்தில் அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டு மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன.
இதை விரிவாக நோக்கும்முன் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படும் அடிக்குறிப்பை அலசிவிடுவோம்.
 
நாம் மேலே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் எட்டாம் வசனத்துடன் முடிவடைந்து விடுகிறது. அவ்விடத்தில் ஒரு நட்சத்திர அடையாளத்தை இட்டு “சில பழைய கிரேக்க‌ பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.”  என ஓர் அடிக்குறிப்பைக் கொடுத்துள்ளார்கள்.
 
இதன் பொருள் என்ன? “சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்து விடுகிறது” என்றால் வேறு “பல கிரேக்க பிரதிகளில் புத்தகம் (அதாவது மாற்கு எழுதிய சுவிஷேசம்) தொடர்கிறது” என்று தானே அர்த்தம். ஆனால் உண்மை அவ்வாறல்ல. இங்குதான் கிருஸ்துவ மத குருக்களின் மாயாஜாலங்கள் மறைந்திருக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

இன்றுள்ள புதிய ஏற்பாட்டின் பிரதிகளின் “தராதரம்” பற்றி நாம் ஏற்கனவே தக்க ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருந்தோம். இவ்விடத்தில் மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பான பிரதிகளின் விபரத்தை சற்று விரிவாக  நோக்குவோம்.
 
1. இன்றுள்ள புதிய‌ ஏற்பாட்டுப் பிரதிகளில் மிகப் பழமையான பிரதியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட “ஸீனா” என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டகி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டதாக‌ நம்பப்படும் பிரதி காணப்படுகிறது.
அதில் மாற்கு எழுதிய சுவிஷேசம் 8ம் வசனத்துடன் முடிந்து விடுகிறது. (பார்க்க 4)
 
2. அவ்வாறே கி.பி நாலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப் படும் “வத்திக்கான் பிரதி” யிலும் மாற்குவின் சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே காணப்படுகிறது. (பார்க்க 5)
 
மேற்படி இரு பிரதிகளுமே காலத்தால் முந்தியதும் “ஓரளவு நம்பகமானதாக(?)” கருதப்படும் பிரதிகளுமாகும்.
 
இது அல்லாத வேறு பல பிரதிகளிலும் கூட சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது. உதாரணமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பைஸாந்த்தியப் பிரதி” ஜோர்ஜிய மொழியில் கி.பி 897 மற்றும் கி.பி 913 காலகட்டத்தில் எழுதப்பட்ட பிரதிகள் மற்றும் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட பிரதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 
இவ்வாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே அமைந்துள்ளது என்பதை ஆரம்பகால கிருஸ்துவ மத போதகர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூட மாற்கு எழுதிய சுவிசேஷத்தின் முடிவுரையை அறிந்திருக்கவில்லை என்பதை வைத்தும் எம்மால் உறுதி செய்ய முடியும்.
 
கிலெமன்ட் ஒஃப் அலக்ஸான்டரிய்யா” மற்றும் “ஒரிஜென்” என்பவர்கள் (மாற்குவின் முடிவுரையாகிய) இவ்வசனங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் “இஸிபியூஸ்” மற்றும் “ஜிறோம்” என்ப‌வர்கள் கூட தாங்கள் அறிந்திருந்த மாற்குவின் கிரேக்கப் பிரதிகளில் இம்முடிவுரை காணப்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளார்கள்” என “கிரேக்க புதிய ஏற்பாட்டின் விரிவுரை” என்ற நூலில் “புரூஸ் மெட்ஜெர்” எனும் கிருஸ்துவ மத போதகர் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க- 6)
 
இக்கருத்தையே “குர்ட் அலான்ட் மற்றும் “பர்பரா அலான்ட்” என்பவர்களும் தங்களது “புதிய ஏற்பாட்டின் மூல வாக்கியம்” என்ற நூலில் 292ம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். (பார்க்க-7)
 
ஆக உண்மை இவ்வாறு இருக்கும் போது மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளில் யாரோ இனந்தெரியாத அநாமோதய நபர்களால் எழுதப்பட்டு மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட கைச்சரக்கையே கிருஸ்தவர்கள் இன்று வேத வசனங்களாக நம்புகிறார்கள்.
 
இவ்வாறு நாம் ஏலவே தெளிவுபடுத்தியது போல், ஒன்றுக்கொன்று முரணான பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளிளை மாற்குவால் எழுதப்பட்ட சுவிஷேசம் தொடர்பில் நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல்வேறுபட்ட குழப்பங்களையும் பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
 
அவைகளாவன:
 
1.ஐந்தாம் ஆறாம்  நூற்றாண்டுகளில் எழுதப்பட “அலக்ஸாந்திரியப் பிரதி”ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘கிரேக்க மற்றும் இலத்தீன் பிரதிகள்’ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “தீடா” மற்றும் “டெல்டா” பிரதிகள் போன்றவைகளில் இன்றுள்ள பைபிளில் காணப்படுவது போல் நீண்ட முடிவுரை காணப்படுகிறது.
 
2.ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு “பரிஸ்” நகரில் இன்று வைக்கப்பட்டுள்ள, பிரதிகள் தொடர்பாக ஆய்வாளர்களால் (K) என அடையாளப்படுத்தப்படும் பிரதியில் இன்றைக்கு கிறிஸ்த்தவர்களின் கைகளில் உள்ள பைபிளில் காணப்படும் மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் முடிவுரையை விடவும் “சுருக்கமான முடிவுரை” யையே கானப்படுகிறது.
 
அதன் வார்த்தைகள் “But they reported briefly to Peter and those with him all that they had been told. And after this, Jesus himself sent out by means of them, from east to west, the sacred and imperishable proclamation of eternal salvation”
 
“எனினும், அப்பெண்கள் பேதுருவுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும், தங்களுக்கு சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக அறிவித்தனர். பின்னர் இயேசு அவர்களை மீட்சிக்கான நிரந்தரமும் புனிதமுமிக்க நித்திய அழைப்புடன் கிழக்கிலிருந்து மேற்குவரை அனுப்பி வைத்தார்.”
 
3.”சிரியப் பிரதி” மற்றும் பழைய “இலத்தீன் பிரதி” மற்றும் சில “எதியோப்பிய பிரதிகள்” என்பன நாம் ஏலவே சுட்டிக்காட்டிய “சுருக்கமான முடிவுரையையும், அதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள நீண்ட முடிவுரையையும் கொண்டுள்ளன.
 
இவ்வியடம் முற்றுப் பெறாத மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் முதலில் நாம் மேலே கூறிய “சுருக்கமான முடிவுரை” சேர்க்கப்பட்டு, அதற்கு பிற்பட்ட காலத்தில்தான் இன்று பைபிளில் உள்ள “நீண்ட முடிவுரை” சேர்க்கப்பட்டதுஎன்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறது.
 
4. பிற்காலத்தில் இலத்தீன் மொழியில் பூரணப்படுத்தப்பட்ட ” அலக்ஸாந்திரியப் பிரதியிலும்”, “அஃப்ராமிய்யாப் பிரதியிலும்”, “பீஸா பிரதியிலும்”, 15வது வசனம் வ‌ரை மாத்திரமே காணப்படுகின்றன‌.
 
5.”ஸுர்யானி பிரதிகளில்” 17 முதல் 20 வசனம் வரை மாத்திரம்காணப்படுகின்றன.
 
6.”ஹேர்குலிஸ் மற்றும் கிப்தி பிரதிகளில்” 20வது வசனம் மட்டும்காணப்படுகிறது.
 
7.”எதியோப்பிய மற்றும் சில கிப்தி பிரதிகளில் 12ம் வசனங்கள் வரை மட்டுமேகாணப்படுகின்றன.
 
8.ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “வொஷிங்டன் பிரதி”யில் இன்று காணப்படும் பைபிளில் உள்ள வசனங்களை விடவும் அதிக வசனங்கள்!! காணப்படுகின்றன. அவைகளாவன:
 
“And they excused them selves, saying, ‘This age of lawlessness and unbelief is under Satan, who does not allow the truth and power of God to prevail over the unclean things of the spirits [or, does not allow what lies under the unclean spirits to understand the truth and power of God]. Therefore reveal thy righteousness now — thus they spoke to Christ. And Christ replied to them, ‘The term of years of Satan’s power has been fulfilled, but other terrible things draw near. And for those who have sinned I was delivered over to death, that they may return to the truth and sin no more, in order that they may inherit the spiritual and incorruptible glory of righteousness which is in heaven.”
 
பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும், இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். என்ற வசனத்திற்குப் பிறகு:
 
“ஆவிகளின் தூய்மையில்லாதவைகள் மீது உண்மையும், கர்த்தரின் அதிகாரமும் பரவி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காத, சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நிராகரிப்பும், அத்துமீறலும் காணப்படும் காலம் இது” (அல்லது அசுத்த ஆவிகளின் கீழுள்ளவைகளை சத்தியத்தையும், கர்தரின் வல்லமையையும் விளங்க அனுமதிக்காத சாத்தானின் ……..) எனவேதான் உமது அதீத தேவையை கர்த்தர் இப்போது வெளிக் கொணர்ந்துள்ளார்” எனக் கூறி அவர்கள் மன்னிப்பு வேண்டினர்.
 
இவ்வாறே, அவர்கள் இயேசுவுக்கு பதிலளித்தார்கள். அதற்கு இயேசு “சாத்தானின் ஆதிக்கம், பலத்துக்குரிய ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. எனினும் அச்சமூட்டும் பயங்கர நிகழ்வுகள் நெருங்கிவிட்டன. பாவம் செய்தவர்கள் சத்தியத்தின் பக்கம் திரும்பி மீண்டும் பாவங்களின் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க மரனத்தின் பால் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் பரலோகத்தில் என்றும் கெட்டுவிடாத உண்மையான ஆன்மீக கீர்த்தியை அநந்தரமாக அடைவார்கள்” என பதிலளித்தார்.
 
அதனைத் தொடர்ந்து “பின்பு அவர்களிடம், உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்……” என்று கிறிஸ்த்தவர்கள் மத்தியில் இன்றுள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படுவது போல் வசனங்கள் தொடர்கின்றன.
 
மேற்கண்டவாறு மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவு பற்றிப் பார்த்த நாம் அதிலிருந்து பின்வரும் பெறுபேறுகளைப் பெறுகிறோம்.
 
1. பழைய நம்பகமான பிரதிகளில் மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது.
 
2.முற்றுப் பெறாமல் முடிவடைந்த சுவிஷேசத்தில் “சுருக்கமான முடிவுரை”ஒன்று இனந்தெரியாத யாரோ ஒருவரால் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டது.
3.”சுருக்கமான முடிவுரை”யில் திருப்திப்படாத வேறு யாரோ ஒருவர் இன்று நடைமுறையில் உள்ள “நீண்ட முடிவுரை” யை எழுதி மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்த்துவிட்டார்.
 
4. அந்நீண்ட விவுரையிலும் நாம் இலக்கம் 7 இல் கண்டவாறு “சில வசனங்கள் சேர்க்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரை” உருவாக்கப்படது. அல்லது அவ்வசனக்கள் நீக்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரையில்” இருந்து இன்றுள்ள “நீண்ட முடிவுரை “உருவாக்கப்பட்டது.
 
5. பல பிரதிகள் இன்றுள்ள “நீண்ட விரிவுரையை முழுமையாகக் கொண்டுள்ளாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு பிரதிகள் அடிப்படையில் நோக்கும் போது முடிவுரை இன்மை, “சுருக்கமான முடிவுரை”, (இன்று நடைமுறையில் உள்ள) நீண்ட முடிவுரை, “மிக நீண்ட முடிவுரை மற்றும் அரை குறை முடிவுரைகள் என்பன பிரதிகளில் காணப்படுவது –மாற்குவின் சுவிஷேசத்தில் இன்று காண‌ப்படும் முடிவுரை மாற்குவால் தான் எழுதப்பட்டது என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக தகர்த்து விடுகிறது.”
 
மேலும் இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களில் காணப்படும் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முடிவுரை மாற்குவால் எழுதப்பட்டதல்ல என்பது இன்னுமொருவகையிலும் நிரூபனமாகிறது.
 
மாற்கு எழுதிய சுவிஷேசம், 
 
8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. “அப்பெண்கள் தாங்கள் பார்த்த விடயத்தை யாரிடமும் எதையும் சொல்லவில்லை” என எட்டாவது வசனம் இடை நடுவில் நிற்க (பிற்காலத்தில் முகவரி இல்லாத நபரால் எழுதி சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட 10வது வசனமோ) 10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். என முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.
 
மாத்திரமின்றி, மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதியில் ஏழாம் வசனத்தில் 7. இயேசு கலீலியோவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள் என்றான். என ‘இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்ப்பார்கள்’ என்று உறுதி செய்ய,   முற்றுப் பெறாத முடிவுரையை எழுதிய நபரோ  வசனம் பன்னிரெண்டில். 12. பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர்நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். என “இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்க்கவில்லை (கலீலியோ) நகரத்திற்குச் செல்லும் வழியில் தான் பார்த்தார்கள்” என (நாலு வரிகளுக்குள்ளேயே)  முரண்பாடாக எழுதியுள்ளார்.
 
மேலும்மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் விரிவான எழுத்து நடையையும் நுணுக்கமான விபரிக்கும் முறையையும் (பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட) இன்றுள்ள முடிவுரையில் நம்மால் காண முடியாமல் அவசர அவசரமாக எழுதப்பட்டு முடிக்கப்பட்ட தோரணையில் அமைந்திருப்பது இன்று பைபிளில் உள்ள மாற்குவின் முடிவுரை உண்மையில் மாற்கு எழுதியது அல்ல என்பதற்கு மிகப் பெரும் ஆதாரமாக அமைந்துள்ளது.
 
இதை பல‌ கிறிஸ்த்தவ அறிஞர்கள் மற்றும் மதபோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
உதாரணமாக:
 
“திமோதி ஆர். கர்மோடி” எனும் கிருஸ்துவ ஆய்வாளர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம் கேள்விகளாக……” என்ற நூலின் 57வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
சட்டபூர்வமான மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள 9 தொடக்கம் 20வரையிலான வசனங்கள் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்படவில்லைமாறாக அவைகள் இரண்டாம் நூர்றாண்டில் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன என (கிருஸ்தவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றனர்.”( பார்க்க 8)
 
கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 17ம் பக்கத்தில் கீழ் வருமாறு கூறுகிறார்.
 
மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பில் மிக சுவாரசியமான விடயம் ஒன்றுள்ளது. சுவிஷேசத்தின் மூல வடிவில் 16:8 உடன் சுவிஷேசம் நின்றுவிடுகிறது. இரு காரணங்களால் எம்மால் அதை அறிந்து கொள்ள முடியும்.
 
1.சுவிஷேசத்தின் (16:9-20) வரையிலான வசனங்கள் எந்த ஆரம்பகால முக்கிய பிரதிகளிலும் காணப்படவில்லை.அவை பிற்காலத்தைய மட்டமான பிரதிகளில் மட்டுமே கானப்படுகின்றன.
 
2. (இரண்டுக்குமிடையிலான) கிரேக்க எழுத்து முறையும் வித்தியாசமானது. சுவிஷேசத்தை எழுதிய அதே நபரால்தான் முடிவுரையும் எழுதப்பட்டது எனக் கூற முடியாத அளவுக்கு வித்தியாசமானது…..(பார்க்க 9)
 
இதே கருத்தை கிருஸ்துவ இணையதளமான   http://www.christian-bible.com/Dialogue/Tests/test9.htm கீழ்வருமாறு உறுதி செய்கிறது:
 
Which gospel talks about handling snakes?
The earliest manuscripts of the gospel of Mark do not contain Mark 16:9-20, so the reference to handling snakes in these verses are not included in many translations of the Bible. In these versions of the New Testament, Mark 16 ends with verse 8. This is a significant different, for verse 8 reports that the women who discovered the empty tomb ran away in fear and did not tell anyone what they saw. In this ancient version of the gospel of Mark there is no report of a resurrection appearance by Jesus to his disciples. Thus, it seems likely that an editor added verses 9-20 in order to link the gospel story to the beginning of the church.
 
 ”பாம்புகளைக் கையாள்வது பற்றிப் பேசும் சுவிஷேசம் எது?”
 
“மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் காலத்தால் மிக முந்திய பிரதிகள் 16:9-20 வரையிலான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை. எனவேதான் பாம்புகளைக் கையாள்வது தொடர்பான ஆதாரம் பைபிளின் அதிக மொழி பெயர்ப்புகளில் காணப்படுவதில்லை. 16:8 வது வசனமே மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவாகும். அவ்வசனம் “கல்லறையை வெறுமையாகக் கண்ட பெண் அச்சத்தால் விரைந்தோடினாள். தான் கண்டதை யாருக்கும் சொல்லவில்லை” எனக் கூறுகிறது. மாற்கு சுவிஷேசத்தின் பழைய பிரதியில் “இயேசு உயித்தெழுந்ததும், தனது சீடர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்” என்ற செய்தி கிடையாது. எனவே, சுவிஷேசத்தின் கதையை திருச்சபையுடன் தொடர்புபடுத்த வேண்டி இன்றுள்ள முடிவுரையை யாரோ சுவிஷேசத்தில் சேர்த்து விட்டார் எனத் தோன்றுகிறது.
 
சுருங்கக் கூறின் கிருஸ்தவர்களால் மாற்கு எழுதிய சுவிஷேசம் என நம்பப் படும் சுவிஷேசத்தின் இன்றுள்ள முடிவுரை உண்மையில் மாற்குவினால் எழுதப்பட்டது அல்ல. மாறாக, அவை பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த பெயர்,முகவரி தொரியாத அநாமோதய நபரின் சொந்த கற்பனையேஎன்பதை  (1) பிரதிகளை ஒப்பு நோக்கியும் (2) ஆரம்ப கால கிருஸ்துவ மதகுருக்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இன்றுள்ள முடிவுரை பற்றி அறிந்திருக்கவில்லை என்பதைக் கொண்டும் (3) முற்பகுதிக்கும் முடிவுரைக்கும் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளைக் கொண்டும் (4) இருப‌குதிகளுக்குடையிலான வசன நடை வித்தியாசத்தைக் கொண்டும் (5) இறுதியாக கிருஸ்துவ அறிஞர்கள் ஆய்வாளர்கள் மற்றும் மத போதகர்களின் கூற்றுகளைக் கொண்டும் தக்க சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம்.
 
இது தொடர்பில் யாராவது மாற்றுக் கருத்துகளையோ, எதிர்வாதங்களையோ முன்வைத்தால் அவைகளை பரிசீலித்து அறிவுபூர்வமாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் பதில் தருவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் எவ்வாறு அநாமோதய நபரின் சொந்த கற்பனை சேர்க்கப்பட்டது என்பதை அறிந்த நாம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதி எவ்வாறு நீக்கப்பட்டது என்ற திடுக்கிட வைக்கும் உண்மையையும் “மாற்கு எழுதிய மர்ம சுவிஷேசம்” என்ற தலைப்பில் தக்க சான்றுகளுடன் இன்ஷா அல்லாஹ் இன்னுமொரு கட்டுரையில் நோக்குவோம்.
 
“தங்களது கரங்களால் நூலை எழுதி பின்பு அற்ப இலாபத்தை அடைய இது கர்த்தரிடம் இருந்து வந்தது எனக் கூறுவோருக்கு சாபம் உண்டாகட்டும்!! அவர்கள் கரங்களால் எழுதியவைகளுக்கும் (அதைக் கொண்டு) சம்பாதித்தவைகளுக்கும் சாபம் உண்டாகட்டும்”  (அல் குர் ஆன் 2:79)


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 
 
 
துணை நின்றவை………..
(1)

dsc034121
10 MISQUOTING JESUS

maybe I don’t need to come up with a fancy explanation for how the mustard seed is the smallest of all seeds when I know full well it isn’t. And maybe these “mistakes” apply to bigger issues. Maybe when Mark says that Jesus was crucified the day after the Passover meal was eaten (Mark 14:12; 15:25) and John says he died the day before it was eaten (John 19:14)—maybe that is a genuine difference. Or when Luke indicates in his account of Jesus’s birth that Joseph and Mary returned to Nazareth just over a month after they had come to Bethlehem (and performed the rites of purification; Luke 2:39), whereas Matthew indicates they instead fled to Egypt (Matt. 2:1922)— Maybe that is a difference. Or when Paul says that after he converted on the way to Damascus he did not go to Jerusalem to see those who were apostles before him (Gal. 1:1617), whereas the book of Acts says that that was the first thing he did after leaving Damascus (Acts 9:26)— maybe that is a difference.
This kind of realization coincided with the problems I was encountering the more closely I studied the surviving Greek manuscripts of the New Testament. It is one thing to say that the originals were inspired, but the reality is that we don’t have the originals—so saying they were inspired doesn’t help me much, unless I can reconstruct the originals. Moreover, the vast majority of Christians for the entire history of the church have not had access to the originals, making
their inspiration something of a moot point. Not only do we not have the originals, we don’t have the first copies of the originals. We don’t even have copies of the copies of the originals, or copies of the copies of the copies of the originals. What we have are copies made later—much later. In most instances, they are copies made many centuries later. And these copies all differ from one another, in many thousands of places. As we will see later in this book, these copies differ
from one another in so many places that we don’t even know how many differences there are. Possibly it is easiest to put it in comparative terms: there are more differences among our manuscripts than there are words in the New Testament. Most of these differences are completely immaterial and insignificant.
A good portion of them simply show us that scribes in antiquity.
(2)

dsc034121
dsc034121
dsc034121

(3)

dsc034121
dsc034121

(4)

dsc034121

(5)

dsc034121

(6)

dsc034121

(7)

dsc034121
dsc034121

(8)

dsc034121
dsc034121

(9)

dsc034121
dsc034121



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 இயேசு உண்மையில் வாழ்ந்தாரா விவ்லியக் க கிறிஸ்துவத் தொன்ம நாயகன் ஏசு பற்றிய கதைகளின் ஒரே தரவு மதப் பரப்ப இயற்றப்பட்ட புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் மட்டுமே. இயேசு உண்மையில் வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு பதில் இதில் இருந்து மட்டுமே எடுக்க இயலுமே தவிர மற்றபடியாக வழியில்லை.
ஏசு பற்றிய சுவிசேஷ கதைகளுள் முதலில் இயற்றப்பட்டது மாற்கு 70௮0 இடையே ஆரம்பவடிவில் உருவானது. மற்ற மூன்று சுவி கதைகளும் மாற்கை அறிந்து தன் வாசகர் குழுவிற்கு ஏற்றபடி மாற்றி திரித்து வரைந்தவை தான்.
ஏசு யார் என்பது பற்றிய கேள்விக்கு மாற்கில் தேடினால், தச்சர் ஏசு, மரியாளின் மகன்; ஏசுவிற்கு உடன்பிறந்த 4 சகோதரர்களும் சில சகோதரிகளும் எனச் சொல்கிறது, அவர் பெரும்பாலும் கலிலேயாவின் காப்பர்நகூமில் தங்கி இருந்தார் என்கிறது.
மாற்கு சுவி கதையை தழுவியும் ஒட்டியே இயற்றப்பட்ட மத்தேயு மற்றும் லூக்கா சுவிகளில் ஏசு பிறப்பு பற்றிய கதைகள் உள்ளன. அவஈ இரண்டும் முரண்பட்டு உள்ளதால் நாம் ஒன்று இணைத்து காண்போம்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard