New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போகப் போகத் தெரியும் – 1 திராவிட மாயை- சுப்பு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
போகப் போகத் தெரியும் – 1 திராவிட மாயை- சுப்பு
Permalink  
 


 

 

சந்திராவும் அபயாவும்

மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை எழுதியவர் குமரகுருபரர். இவர் குருநாதரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார். இறுதியில் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். மயிலாடு துறையைக் கடந்து குருநாதர் மாசிலாமணி தேசிகர் வாழும் தருமபுரி மண்ணை மிதித்த உடனேயே அவருடைய மனதிலிருந்த கேள்விகள் அகன்றன.

இந்தத் தகவலை

ஊரிற் குறுகினேன்; ஓர் மாத்திரையளவு
பேரிற் குறுகினேன் பின்

பண்டார மும்மணிக் கோவையில் அவரே எழுதினார். முதல் வரியில் வரும் குறுகினேன் என்பது அவ்வூரைச் சேர்ந்தேன் என்பதைக் குறிக்க. இரண்டாவது வரியில் வரும் ‘குறுகினேன்’ சொல்வது குறைந்தது என்பதை. சீவனாக இருந்த தான் ஒரு மாத்திரை குறைந்து சிவனாக ஆனேன் என்கிறார் குமரகுருபரர்.

சில சன்னிதிகளை அடைந்த உடனேயே கேள்விகள் புசுக்கென்று காணாமல் போய்விடும். ஆன்மிக ஆற்றலின் விளைவு அது.

நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. விஷயத்தை விலாவாரியாகச் சொன்னால்தான் ஓரளவாவது போய்ச் சேரும். ஆகவே மின்வெளிச் சிந்தனைகளாக வெளிப்படும் எனது கருத்தாக்கங்கள் போகப் போகத் தெரியும்…

இனி தினமலரிலிருந்து ஒரு செய்தி…

Chandra, Rajapalayam MLAராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.யான சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் சந்திரா போட்டியிட முடியாது. ஆதி திராவிடர் எனப் பொய்கூறி அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய பெயர் குளோரி சந்திரா. அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவர் கிறிஸ்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ முறைப்படிதான் சந்திராவுக்கும் அவரது கணவர் சூசை மாணிக்கத்துக்கும் திருமணம் நடந்தது. எனவே இந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை என்பது மனுவின் சாரம்.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன் சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தார். (பார்க்க:தினமலர், 03 டிசம்பர் 2008).

கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.

சில கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பகலில் மட்டும் பத்தினி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். என்னடா, மதத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக சேரநாட்டிலிருந்து இதோ ஒரு செய்தி.

Sister Abhaya murdered by a bishopகத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த அபயா என்ற கன்னிகாஸ்திரீ 1992ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார். ஒரு பாதிரியாருடன் வேறொரு கன்னிகாஸ்திரீ உறவுகொள்வதை அபயா பார்த்துவிட்டதால், அவர் தீர்த்துக் கட்டப்பட்டார் என்று சொல்லப் பட்டது. போலீஸ் விசாரணைக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஒத்துழைப்புத் தராததால் பொதுமக்களிடையே எதிர்ப்பு உருவானது. பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு, 16 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த வழக்கில் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ரகயில் என்ற பாதிரியார்களும் செஃபி என்ற கன்னிகாஸ்திரீயும் CBI போலீசாரால் கோட்டயத்தில் கைது செய்யப்பட்டனர்.

கேரளத்தைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் செய்தி இது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து’ என்ற சொலவடையை ‘பாவத்தையும் மன்னிப்பையும் பக்கத்தில் வைத்து’ என்று மாற்றிக் கொள்ளலாம்.

நம்முடைய அழகையும் ஐஸ்வர்த்தையும் திருச்சபை கடத்திக் கொண்டு போகிறதே, உயிரோடிருந்தும் நாம் ஊமையாகிவிட்டோமே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு வருகிறது ஒரு சேதி, அடுத்த தவணையில்…

மேற்கோள் மேடை:

“ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ ஒருமுறையாவது சேரித் தமிழர்களுக்காகச் சிறை சென்றதுண்டா?”

- தலித் முரசு, திங்களிதழ், தலையங்கம் 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: போகப் போகத் தெரியும் – 1 திராவிட மாயை- சுப்பு
Permalink  
 


 

 

எருமைத் தலையனுக்கு எக்ஸ்ட்ரா டைம்

எருமைத் தலையன் ஒருவன் ஏகமாக ஆடிக் கொண்டிருந்தான். தலையால் சிலரை முட்டினான்; வாலால் சிலரை அடித்தான்; கொம்புகளால் மலைகளைத் தூக்கியெறிந்தான்; கொழுப்பு மிஞ்சிவிட்டதால் அவன் சுற்றிச் சுழன்று வந்தான். அவனுடைய பாரத்தில் பூமி அதிர்ந்தது; மூச்சுக் காற்றின் வெப்பத்தில் மேகங்கள் கருகின.

ஆனால் தேவி அசரவில்லை. சிவந்த கண்களோடு சிரித்தபடியே அவள் பேசினாள். “ஓ மூடனே! சிறிது நேரம் நீ உறுமிக் கொண்டிரு. இன்னும் சிறிது நேரம்தான். அதற்குப் பிறகு தேவர்கள் ஆரவாரம் செய்வார்கள். நான் உன்னை அழித்து விடுவேன்” என்றாள் தேவி. பிறகு, மஹிஷாசுரவதம் நடந்தது என்கிறது தேவி மாஹாத்மியம்.

கொஞ்ச நேரம் ஓய்வு; பிறகு கொந்தளிப்பு. அதை யாரும் அடக்க முடியாது. அண்டப் பந்துகளின் ஆட்டம் போகப் போகத் தெரியும். தேவி மாஹாத்மியம் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.

சென்ற முறை, சேரநாட்டுச் செய்தி ஒன்றைப் பார்த்தோம். அபயா வழக்கை முதலில் விசாரித்த கேரளப் போலீஸ் அதிகாரியும் அப்போதே மர்மமான முறையில் இறந்துகிடந்தார் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. சிறுபான்மை முகமூடியை அணிந்து கொண்டு சிலர் செய்யும் அட்டகாசத்தின் ஒரு பகுதிதான் இது.

கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கில் ஆட்களை இறக்கி ராணுவ நடவடிக்கை போல நடத்தப்படும் மதமாற்ற முயற்சிகளைக் கண்டு நம்மில் சிலருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஒரு வர்த்தக இதழிலிருந்து ஒரு பகுதி.

ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தொடர் சுவருக்குள் சித்திரங்கள். தியாகு என்றழைக்கப்படும் தியாகராஜன் கல்லூரி மாணவராக இருந்த போதே படிப்பை உதறிவிட்டு நக்சலைட்டாக மாறினார். அந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்று ஒரு பண்ணையாரைக் கொலை செய்தார். பிறகு பிடிபட்டு ஆயுட்கைதி ஆனார். அவருடைய சிறை அனுபவங்கள்தாம் இந்தத் தொடர்.

தூக்குத் தண்டனைக் கைதிகளைக் கிறிஸ்துவ போதகர்கள் அணுகும் முறை பற்றியும், மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியும் விவரமாகச் சில பக்கங்கள் இதில் உண்டு. இங்கே அதைச் சுருக்கிக் கொடுத்துள்ளேன்:

கிறிஸ்துவ சகோதரிகள், போதகர்கள் வாராவாரம் சிறைக்கு வருவார்கள். சிறைக்கென்று ஒரு இந்து சாமியாரும், இஸ்லாமிய உலேமாவும் கூட உண்டு என்று சொல்வார்கள். பின்னவர் ரம்ஜான் சமயத்தில் மட்டும் வருவார். முன்னவர் தூக்கிலிடப்பட இருக்கும் இந்துவை ஒருமுறை வந்து பார்த்துப் போவார்.

ஆக கிறிஸ்தவர்கள்தான் ஏகபோகமாய் வந்து போவார்கள். பொதுவாக கிறிஸ்தவ சகோதரிகள் சிறைப்பட்டவர்களை, குறிப்பாக மரண தண்டனைக் கைதிகளை, எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களது அணுகுமுறையில் ஆன்மீகத்தைப் போலவே லெளகிகமும் இருக்கும். சிறைப்பட்டவர்களின் தேவைகள், குடும்பநிலை யாவற்றையும் தெரிந்துகொண்டு இயன்றவரை உதவுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் சிறை அலுவலரும் ரெமிஷன் கிளார்க்கும் ஒரு கோப்புடன் வந்தால் நம் புராணக் கதைகளின்படி எமனும் சித்ரகுப்தனும் பாசக் கயிறுடன் வருவதாகப் பொருள். யாரோ ஒருவருக்கு ஓலை வந்துவிட்டதென்று பீதி பரவும். எந்த அறையின் எதிரில் அவர்கள் நிற்கிறார்களோ அந்த அறைக்குரியவர் அன்றிலிருந்து பத்தாம் நாள் தூக்கிற்குப் போக வேண்டியதுதான்.

அன்று மாலை உள்ளே வந்த ஜெயிலரும் கிளார்க்கும் மாணிக்கம் செட்டியார் அறைக்கு எதிரில் நின்றார்கள். மறுநாள் மாலை எமனும் சித்ரகுப்தனும் மீண்டும் இவ்வளவு சீக்கிரம் வருவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வந்தார்கள். இந்த முறை சுப்பையா கவுண்டரின் அறை எதிரில் நின்று ‘வர்ர மாசம் ஏழாம் தேதி’ என்று சேதி சொன்னார்கள். அன்று இரவெல்லாம் கவுண்டரின் அறையிலிருந்து ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மாணிக்கம் செட்டியாரையும் சுப்பையா கவுண்டரையும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் வந்து பார்த்தார்கள். இறுதி அடக்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதற்கு முன்னதாக (உயிரோடிருக்கும் போதே) அவர்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதை நாசூக்காகத் தெளிவுபடுத்தினார்கள். நான் உட்பட மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க மரண தண்டனைக் கூடத்தின் தாழ்வாரத்தில் அந்த ஞானஸ்நானங்கள் நடந்தேறின. மாணிக்கம் செட்டியார் அந்தோனியாகவும், சுப்பையா கவுண்டர் பீட்டராகவும் பெயர் மாற்றம் பெற்றார்கள்.

ஏழாம் தேதி விடிவதற்குள் சுப்பையா கவுண்டரின் கொட்டடி திறக்கப்பட்டது. உள்ளேயே குளிக்கச் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து, பால் ரொட்டி சாப்பிடச் செய்து, ஜெபம் பண்ண நேரம் கொடுத்து, கைகளைப் பின்னால் வைத்து விலங்கு மாட்டி, இரண்டு பக்கமும் காவலர்கள் இழுக்காத குறையாக சுப்பையா கவுண்டரின் இறுதிப் பயணம் தொடங்கியது. “தோழர்களே! எனக்கும் மாணிக்கம் செட்டியாருக்கும் ஏற்பட்ட கதி உங்களில் யாருக்கும் ஏற்படக் கூடாது,” சுப்பையா கவுண்டர்தான் குரல் கொடுத்தார். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டதும் “கர்த்தரே, கர்த்தரே” என்று கூவினார் சுப்பையா கவுண்டர். முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி, கால்களைச் சேர்த்துக் கட்டினார்கள். அது கடைசி விநாடி.

கவுண்டரின் குரல் கடைசி முறையாக வீறிட்டு ஒலித்தது – “முருகா!”

Dr.Ramadossமேற்கோள் மேடை

“ஈழத்தமிழர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் இப்பிரச்னையை அமெரிக்கா எப்போதோ தீர்த்திருக்கும். ஆனால், அவர்களில் பலர் இந்துக்கள். எனவே, இந்தியாதான் உதவ வேண்டும்.”

~ டாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர், ஆதாரம்: தினமலர், 8.12.2008 பக்கம் 8.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

தலித்துகளுக்கு ஜீரோ இடஒதுக்கீடு

அந்த ஜோதிடரிடம் ஒரு கோளாறு உண்டு. கண் விழித்துச் சொப்பனம் காண்பவர் அவர். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரது வயதை ஊகித்து விடுவார். கிரகங்களை ஜாதகத்தில் நிறுத்தி உடனே பலன் சொல்லிவிடுவார். யாழ்ப்பாணத்து வீதிகளில் அவரது மிதியடிச் சத்தத்தைக் கேட்டாலே தெரு காலியாகி விடும். ‘கண்டால் எதையாவது சொல்லி வைப்பார். பெரும்பாலும் அது கெட்டதாகத்தான் இருக்கும்’ என்பது வெகுஜன அபிப்ராயம்.

Sadhu Appaduraiசாது அப்பாத்துரை என்ற மகான் மீது ஜோதிடருக்குக் கடுப்பு. ‘கிரகங்கள் ஞானியரை நெருங்க முடியாது’ என்று அப்பாத்துரை சொல்லியிருந்தார். இது ஜோதிடருக்குப் பொறுக்கவில்லை. அவர் அப்பாத்துரைக்கு நாள் குறித்துவிட்டார். அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டி ‘நீங்கள் மரணம் அடையும் வேளை நெருங்கிவிட்டது. உம்முடைய ஞானம் அப்போது வேலை செய்யாது’ என்று சொல்லிவிட்டார். அப்பாத்துரையிடம் ரியாக்ஷன் இல்லை.

அன்றிரவு ஜோதிடருக்குத் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்தவர் பொழுது விடிவதற்காகக் காத்திருந்தார். காலையில் அப்பாத்துரையின் வீட்டுக் கதவைத் தட்டினார். அப்பாத்துரை ஜோதிடரை வரவேற்றார். மீண்டும் நாள் குறிப்பு. அப்பாத்துரை எதுவும் பேசவில்லை. இது மறுநாளும் நடந்தது. அதற்கு அப்புறமும் தொடர்ந்தது….

ரகசியமாகத் தகவல் பரிமாறப்பட்டு விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. எல்லோரும் ஒருவிதக் கவலையுடன் இருந்தனர். அந்த நாளும் வந்தது. அன்றும் அப்பாத்துரையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது ஆனால் தட்டியவர் ஜோதிடர் அல்ல. ‘ஜோதிடர் அகால மரணம் அடைந்துவிட்டார்’ என்ற சேதியைக் கொண்டுவந்தவர் கதவைத் தட்டினார்.

மக்கள் அப்பாத்துரையிடம் இதுபற்றிக் கேட்டார்கள். “ஜோதிடத்தின் பலனுக்கு இலக்காக இங்கே யாரும் இல்லை. இது எவரும் இல்லாத வெளி” என்றார் அப்பாத்துரை.

கோடீஸ்வரக் கம்யூனிஸ்ட் நடத்தும் ஆங்கில நாளிதழ் முதல் பெரும்பாலான ஊடகங்களில் ஜோதிடர் பாணிதான் நிலவுகிறது. வடமாநிலத் தேர்தல்களின் முடிவு வந்தவுடன் இவர்கள் பா.ஜ.க.வுக்கு நாள் குறித்துவிட்டார்கள். இவர்கள் கட்டுரை எழுதும் காகிதங்களை எடைக்குப் போட்டால் கூட எடுப்பார் இல்லை.

மீடியாக்களின் கிறுக்குத்தனத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நம் கவனத்திற்கு உரியவர்கள் மைனாரிட்டிகள்.

இந்து மதத்தில் உள்ள சாதிவேறுபாடுகளைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ அமைப்புகளின் லட்சணம் என்ன என்று இப்போது பார்க்கலாம்.

இடஒதுக்கீடு விஷயத்தில் இவர்களின் நடைமுறை எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். அது நமக்கும் தெரியும். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி.

கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா?

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை அரசிடமிருந்து 100 சதவீதம் மானியமாகப் பெறும் கல்லூரிகளில் தலித் விரிவுரையாளர்கள் இருக்கிறார்களா?

தயவு செய்து நம்புங்கள். இல்லை என்பதுதான் பதில். அரசிடமிருந்து நிதிஉதவி பெறும் இந்த மைனாரிடி கல்லூரிகளில் ஒரு தலித்கூட வேலைக்குச் சேர்க்கப்படவில்லை.

பார்வைக்காகப் பட்டியலைக் கொடுதிருக்கிறேன். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, விரிவுரையாளர் பணியிடங்களும், அதில் தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையும் கொடுத்திருக்கிறேன். ஜூன் 2000 முதல் ஜூலை 2008 வரையிலான மானியமும் தரப்பட்டுள்ளது.

எண்கல்லூரிமானியம் (ரூ. கோடி)விரிவுரையாளர் பணியிடங்கள்தலித்பழங்குடியினர்
1.லயோலா கல்லூரி, சென்னை-3434.1214000
2.நியு காலேஜ், சென்னை-14.26.4314500
3.சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை-9639.9312400
4.காயிதே மில்லத் கல்லூரி, சென்னை11.673500
5.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை26.017500
6.ஜஸ்டிஸ் பக்ஷீர் கல்லூரி சென்னை-18 (SIET)32.567600
7.பெண்கள் கிறித்துவக் கல்லூரி, சென்னை19.995600
8.மெஸ்டன் கல்லூரி, சென்னை-143.32900
9.ஸ்டெல்லா மதுதுனா கல்லூரி, சென்னை3.24700
10.ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, சென்னை-353.38500
11.புனித கிறிஸ்டோபர் கல்லூரி, சென்னை3.891300
12.இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி19.228300
13.அப்துல் அக்கீம் கல்லூரி, மேல்விசாரம்22.288100
14.ஆக்ஸிலியம் பெண்கள் கல்லூரி, வேலூர்12.234600
15.பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி25.7610600
16.ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி36.3811600
17.சதகதுல்லா கல்லூரி, பாளையங்கோட்டை15.36500
18.புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை2.711200
19.ஸ்காட் கிறித்துவக் கல்லூரி, நாகர்கோவில்24.5911500
20.நாசரத் மார்கோசிஸ் கல்லூரி, நாசரத்11.714800
21.போப்ஸ் கல்லூரி, சாயர்புரம்12.434800
22.நேசமணி மெமோரியல் கல்லூரி, மார்த்தாண்டம்23.867400
23.ஹோலி கிராஸ் கல்லூரி, நாகர்கோவில்25.567800
24.ஜாமியா தருஸ்ஸலாம் கல்லூரி, உமராபாத்0.72700
25பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி, குன்னூர்6.983300

இராக் போருக்குக் கூட இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சொல்லும் சன் டி.வி. வீரபாண்டியன் என்ன சொல்லப் போகிறார்? இங்கிலாந்து டெஸ்டில் இந்தியா அடைந்த வெற்றிக்கும் இடஒதுக்கீடுதான் வழி வகுத்தது என்று சொல்லத் துடிக்கும் சோலையின் கருத்து என்ன? சுயமரியாதைச் சுடரொளி வீரமணியின் நிலைப்பாடு என்ன? இடஒதுக்கீட்டுக்காக அல்லும் பகலும் பாடுபடும் பிற தமிழகத் தலைவர்களின் நிலை என்ன? எஸ்ரா சர்க்குணமும் அப்துல் ரகுமானும் என்ன சொல்கிறார்கள்?

‘இத்தனை பேரை இழுத்தீர்களே? திருமாவளவன் பேரைச் சொல்லவில்லையே’ என்ற நியாயமான சந்தேகம் ஏற்படலாம். காரணமிருக்கிறது. அவர் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்.

thirumavalavanசிதம்பரம் கோவிலுக்கு வந்தவர் சட்டையைக் கழற்றி விபூதி அணிந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். ‘மசூதிக்குச் செல்லும்போது தொப்பி அணிகிறோம். தேவாலயங்களில் ஜெபத்தை ஏற்கிறோம். இவை மட்டும் சிலரால் முற்போக்கானவை என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராசர் கோவில் சந்நிதிக்குச் சென்றது பகுத்தறிவுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படுகிறது’ என்பது அவருடைய பதில்.

ரோமன் கத்தோலிக்க சபையில் இருக்கும் சாதிக் கொடுமைகளைக் கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 21 கிறிஸ்தவ ஆலயங்களை விடுதலைச் சிறுத்தைகள் இழுத்து மூடினர்.

புதுவை மாதாகோவில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் (19.03.2008) ‘மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவரே ஏசு என்பதால் திருமாவளவன்தான் ஏசு’ என்று அறிவிக்கப்பட்டது.

ஆகையால், திருமாளவன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். நம்மைப் பொறுத்தவரை சமூக ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்வதற்காக இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதுகிறோம். அதில் ஐயமில்லை.

மேற்கோள் மேடை

crossகடந்த தாது வருஷம் பஞ்சத்தின் போது பெரிய பெரிய அண்டாக்களில் கூழைக் காய்ச்சி வைத்துக் கொண்டு சாகக் கிடப்பவர்களை ஒரு கைக் கூழுக்குக் கிறிஸ்தவர்களாக்கினார்கள். மிஷன் பாதிரிகளைக் கொண்டு ‘கிறிஸ்தவர்களானால் நிறைப் பணம் தருகிறோம். பெரிய வேலைகள் கொடுக்கிறோம் என்று சொல்லச் செய்து ஏமாற்றி நடுத்தெருவில் திண்டாடச் செய்தார்கள்.
- பாரதியார் (பாரதி நினைவுகள் / யதுகிரி அம்மாள் / பக்கம் 60)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

 

கண்ணாடிக் குடுவைக்குள் காதல்

sadhuகங்கைக் கரையில் ரிஷிகேசம். அற்புதமான இடம். எத்தனையோ ஆச்ரமங்கள், மஹான்களின் உறைவிடம். அங்கே ஒரு யோகி. திடீரென்று பாலத்தில் நின்று கொண்டு, “ஐயோ! என் இடுப்பு தாங்க முடியாமல் வலிக்கிறதே! யாராவது வந்து ஓங்கி என்னிடுப்பில் உதையுங்களேன்! என் வலி தீர வேறு வழியேயில்லை” என்று கூவுகிறார். அவர் வேதனை எல்லோரையும் கலக்கியது. ஆனால் தினமும் தாங்கள் வணங்கும் அவரை, யார் உதைப்பார்கள்? அவரோ புரண்டு துடிக்கிறார். இவர்களோ செய்வதறியாது திகைக்கிறார்கள்.

எங்கிருந்தோ வந்தார் ஒருவர். ராணுவத்திலோ, காவல் துறையிலோ பணியாற்றுபவர் போலிருக்கிறது. அவர் இந்த யோகி படும் துயரத்தைக் கண்டார். அவரது ஓலத்தையும் கேட்டார். எந்தவித தயக்கமுமின்றி, தனது முரட்டு பூட்ஸ் காலால் ஓங்கி அந்த யோகியின் இடுப்பில் விட்டார் ஓர் உதை. அவ்வளவுதான்! அந்த யோகி வலி தீர்ந்து எழுந்து, ஒன்றுமே நடவாதது போல் விரைந்து சென்றுவிட்டார்.

உதைவிட்ட ஆள் என்னானார்? அந்தக் கணமே திடீரென்று யோகியாகி விட்டார். ஆம், அவர்தான் காரைச் சித்தர் என்ற பெயர் கொண்டு கனக வைப்பு என்ற நூலை எழுதியவர்.

-எல்லோர்க்கும் தந்தை இறைவன்/ரமணன்/ஆக்கம் வெளியீடு

அக்கம் பக்கத்தில் நடப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. தவத்திரு காளிதாஸ் சுவாமிகளின் பேட்டியையும் அதற்கான எதிர்வினைகளையும் இங்கே வாசிக்கலாம். கோவில் தீண்டாமை பற்றி சில எதிர்க்குரல்களும் ஆங்கு எழுந்துள்ளன.

தீண்டாமை கூடாது என்பதுதான் என்னுடைய கட்சி. ஆனால் தீண்டாமை குறித்து இங்கே நிலவும் சில மயக்கங்களைத் தெளிவு செய்ய விரும்புகிறேன்.

தொடுவது என்பது தீட்சை முறைகளில் ஒன்று. கங்கைக் கரையில் இருந்த யோகி அதைத் தொடப்படுவது என்று மாற்றிக் கொண்டார். ஆன்மிக வழி முறைகளில் இடம்பெறும் தொடுதலுக்கும் வாழ்க்கையில் அன்றாடம் உணரப்படும் தொடுதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதைப் பற்றி இந்த முறை பார்க்கலாம்.

யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்ற பழக்கத்தை சாதி அடிப்படையில் வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை. அதை எல்லாத் தளஙகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியதுதான். அதற்கான சாம, தான, பேத, தண்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

ஆனால் வழிபாட்டுத் தலங்களில் நடப்பது தீண்டாமை அல்ல. பூஜை செய்வோர் பக்தர்களிடமிருந்து விலகியிருப்பது ஆசாரத்தின் அடிப்படையில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் ஆண்களையெல்லாம் ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு பெண்கள் மட்டும் பகவதிக்குப் பொங்கல் வைக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஒரு வித்தியாசமான மரபு என்று கொள்ள வேண்டும். இது தீண்டாமை அல்ல.

விக்கிரகங்கள் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வழிபாட்டுக்குரியதாக ஆகின்றன. அந்த விக்கிரகங்கள் மூலமாக தெய்வம் செயல்படுகிறது என்பது மத நம்பிக்கை. விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்பவர் அந்த நேரத்தில் விலகி இருக்கிறார். இதற்கும் தீண்டாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூஜை செய்பவர் இன்ன சாதியாரைத் தொடுவேன் இன்ன சாதியரைத் தொடமாட்டேன் என்று வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை.

மற்றபடி தொடுவதால் வேதியல் மாற்றம் ஏற்படுமா, என்பது தளங்களில் ஏற்படும் தடுமாற்றம். அனுபவங்கள் எல்லாவற்றையும் அறிவியல் சாதனங்களால் அளக்க முடியாது. கண்ணாடிக் குடுவைக்குள் காதலை அடக்க முடியுமா? தாய்ப்பாசத்திற்குத் தரக் கட்டுப்பாடு உண்டா? கவிதைக்குத் தேவையான கலோரி எவ்வளவு?

எங்கே யார், எதை நுழைக்கிறார்கள் என்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் சிதம்பரம் நடராசர் சந்நிதியில் தேவாரம் பாட வேண்டுமென்று போராடிய வழக்கறிஞரைப் போல ஆகிவிடும். அந்த வழக்கறிஞர் ஒரு முஸ்லீம். தாழ்த்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்படுவது என்பது இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்று சிலர் பிரசாரம் செய்கிறார்கள். இது தவறு என்பதை பெரியோர்கள் விளக்கியுள்ளனர். இருந்தாலும் இந்தப் பொய்ப் பிரசாரம் ஓயவில்லை.

இந்து மதத்திற்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி உண்டு. அதற்கான உதாரணங்கள் இதோ:

திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோரின் தலைவராக இருந்த எம்.சி. ராஜா இதை எதிர்த்திருக்கிறார்.

பெரியார் திடலில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய திருமதி. சத்தியவாணிமுத்து ஈ.வெ.ராவிடம் “உங்கள் பேச்சு உங்கள் முன் வீற்றிருக்கும் ஒரு சில சமுதாய சீர்திருத்த கருஞ்சட்டை வீரர்களுக்குத்தான் உயர்வை அளித்துள்ளது. பார்ப்பனர்கள் எந்தத் தொல்லையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தருவது இல்லை. பார்ப்பனர் அல்லாதவர்களால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

– எனது போராட்டம்/டாக்டர். சத்தியவாணிமுத்து

சுயமரிதை இயக்கத்தின் முன்னணித் தலைவரைப் பற்றி நாளிதழ் ஒன்றில் கி.ஆ.பெ. விசுவநாதம் கட்டுரை எழுதினார். அந்தத் தலைவருக்கு ஏற்பட்ட கோபத்தில் வேலையாளை எட்டி உதைத்ததாகவும், அதில் வேலையாளின் பற்கள் இரண்டு உடைந்து விழுந்ததாகவும் எழுதினார். ஏழையின் பல்லை உடைக்கும் பகுத்தறிவு, பகுத்தறிவைப் பாராட்டி நிற்கும் தமிழ்ப் புலமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புத் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் ஜனார்த்தனன். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் (18.03.2008) இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சுரேஷ்ராஜன் பயனீட்டாளர்கள் பட்டியலில் சிலரைச் சேர்க்க வேண்டுமென்றார்; துணை ஆட்சியர் உடன்படவில்லை. கோபடைந்த அமைச்சர் துணை ஆட்சியரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சருடைய உதவியாளர் ஷேக் தாவூத் துணை ஆட்சியரைத் தாக்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.

மேற்கோள் மேடை:

கிறிஸ்தவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை. கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப் போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறிஸ்தவ சமயம் பரவுவதற்கு இடையூறாக இருப்பது இப்போதனையே.
(டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரி 1609ல் எழுதிய கடிதம்.)

– கிறித்தவமும் சாதியும்/ஆ. சிவசுப்பிரமணியன்/ காலச்சுவடு பதிப்பகம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 5. சரியும் விக்கெட்டுகளும் சாத்வீகப் பெரியாரும்

indrajit

ராட்சச மன்னனால் கட்டளையிடப்பட்ட இந்திரஜித்து தந்தையாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு யாகத் தலத்தில் முறைப்படி அக்கினியில் ஹோமம் செய்தான்…

 

அக்கினி பகவான் வெளிவந்து வலமாய் வரும் ஜ்வாலையோடு சுத்தப் பொன்னை நிகர்த்தவராய் ஹவிஸை நேரிலேயே வாங்கிக்கொண்டார்.

– எண்பதாவது சர்க்கம், யுத்த காண்டம் / வால்மீகி ராமாயணம்.

இறைவன் அறம் வளர்த்த அண்ணலாக அவதாரம் செய்தான். அவனுக்கு எதிரே ராவணனின் படை. அது அநீதியின் முகாம். தங்களுக்கு வலு ஏற்றுவதற்காக அவர்கள் செய்தது யாகம்; அதுவும் வேத முறைப்படி. மதச் சடங்குகளும் சண்டித்தனமும் ஒருபுறம் இருக்க, மனிதப் பண்புகளும் விலங்குகளும் இறையருளும் இன்னொரு பக்கமுமாக நடந்துதான் ராமாயண யுத்தம். இதில் யாரை ஆதரிப்பது என்ற தெளிவு இல்லாமல் தொடர்ந்து சேம்சைடு கோல் போடுபவர்கள்தாம் திராவிடக் கழகத்தினர். ராவணன் தரப்பு யாகம் வளர்த்தது என்பதை இவர்கள் மறைத்துவிடுகிறார்கள்.

இத்தகைய குளறுபடிகளையும் இந்த இயக்கத்தின் தலைவரான ஈ.வே.ரா.வின் முரண்பாடுகளையும் இப்போது பார்க்கலாம்…

Ramasami Naickerகலைஞர் தொலைக்காட்சியில் ஒரு காலை நேரத்தில் பேசினார் சுப. வீரபாண்டியன். அவர் ஈ.வே.ரா குறித்த தகவல் ஒன்றைக் கூறினார். திராவிடர் கழகம் நடத்திய கூட்டமொன்றில் யாரோ ஒருவர் ஈ.வே.ராவைக் கேள்வி கேட்டாராம். அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த ஈ.வே.ரா, தன்னை ஆதரித்துக் கைதட்டியவர்களைக் கண்டித்தாராம். கைதட்டலால் கேள்வி கேட்டவரின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்றாராம் அவர்.

அதாவது, பிறரது உணர்வுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து நடந்து கொண்டார் ஈ.வே.ரா. என்பதுதான் இந்த நிகழ்விலிருந்து அறிய வேண்டிய நீதி. இது நடந்திருக்கலாம். பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பை அன்று அவர் காட்டியிருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்து மற்றும் பேச்சுகளின் தொகுப்பை பார்த்தால் இந்த நிகழ்ச்சி அபூர்வமாகத்தான் தெரிகிறது.

சரிந்து விழும் பகுத்தறிவு இயக்கங்களைத் தூக்கி நிறுத்தச் சமீப காலமாக இப்படிச் சில கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. கேள்வி கேட்பதையே குறிக்கோளாக வைத்திருந்த ஈ.வே.ரா.வை கேள்விக்கு அப்பாற்பட்டவராக்கும் திட்டம் இது. இதற்கான அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதே இந்து எழுச்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

“நான்கு இளைஞர்களைச் சந்தித்தால் அதில் மூன்று பேர் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார்கள், நான்காமவர் மேல்மருவத்தூர் யாத்திரை போகிறார். இனிமேல் இங்கே நாத்திகம் எடுபடாது” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் திராவிடத் துண்டை தோளில் போட்டிருக்கும் தெற்கத்திக்காரர்.

ஆள் இல்லை என்றவுடன் ஆலாபனை மாறுகிறது. விக்கெட்டுகள் சரிவதால் விளையாட்டில் வேகம் குறைகிறது. கலகப் பெரியார் சாத்வீகப் பெரியாராக உருமாற்றம் அடைகிறார். இதைக் கண்டு தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சாத்வீகத் தோற்றத்திற்கு சரியும் விக்கெட்டுகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

தலைமைக்குத் தெரிந்த விவரம் தொண்டர்களுக்குத் தெரிய ஐம்பது ஆண்டு காலம் ஆகியிருக்கிறது. ஈ.வே.ரா.வின் பேச்சைப் பதிவு செய்த கவிஞர் கருணானந்தம் எழுதுகிறார்:

பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 01.07.1963 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரசாரம் பற்றிக் குறிப்பிட்டார். “நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர். என்று கூவிக் கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர் கூட மீதி இல்லை. அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டேன்” என்றார்.

– பக்கம் 387 / தந்தை பெரியார் / கவிஞர் கருணாநந்தம்

ஆய்வுப் பணிகளில் அக்கறை உள்ளவர்கள் சுப. வீரபாண்டியனின் பெரியாருக்கும் கவிஞர் கருணாநந்தத்தின் பெரியாருக்கும் உள்ள கால வேறுபாடுகளையும் கோளவேறுபாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கலாம். மற்றபடி மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை.

ஈ.வே.ரா. நம்பியது என்ன, அவரால் நடத்தப்பட்டது என்ன அவருடைய கொள்கை என்ன என்பதைப் பற்றி அறிய வரலாற்றின் சில பக்கங்களைப் பார்க்கலாம்.

மதுவிலக்கு தேசிய உணர்வு என்று காங்கிரஸ் கட்சியோடு கலந்திருந்த ஈ.வே.ராவுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது 1925ல். அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார் ஈ.வே.ரா. கட்சியின் ஆதரவோடு சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார் வ.வே.சு. அய்யர். இந்தப் பள்ளியில் உணவு வழங்கும் முறை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.

காங்கிரஸில் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் இந்த விஷயத்தில் சாதி அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி ஈ.வே.ரா, சாதி ஒழிய வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநித்துவ தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவு இல்லாததால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அவர் சுட்டிக்காட்டிய குறைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கலாம் என்பதே நம்முடைய கருத்து. இதுபற்றியும் சேரன்மாதேவி விவகாரம் பற்றியும் இன்னொரு முறை பார்க்கலாம். இப்போதைக்கு இந்தத் தடத்திலேயே போகலாம்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ.வே.ரா சமதர்மத்திற்குப் பாடுபடுவதே தன்னுடைய நோக்கம் என்றார். நீதிக்கட்சியோடு உறவு கண்டார்.

காங்கிரசுக்கு மாற்றாக ஈ.வே.ரா. தேர்ந்தெடுத்த நீதிக்கட்சியின் அரசியல் நிலப்பாடு பற்றி மார்க்சிய சிந்தனையாளர் அருணன் எழுதுகிறார்:

சொல்லளவில் மட்டுமல்ல செயலளவிலும் ஏகாதிபத்தியதாசனாகவே இயங்கி வந்தது நீதிக்கட்சி. அதுவும் எந்த அளவிற்கு என்றால் மிகக் கொடூரமான ரெளலட் சட்டத்தினை ஆதரிக்கும் அளவிற்கு. “சுட்டேன், சுட்டேன்; குண்டுகள் தீரும்வரை சுட்டேன்” எனக் கொக்கரித்தானே ஜெனரல் டயர் 1919 ஆம் ஆண்டு! அந்த ஜாலியன்வாலபாக் படுகொலையினை ஆதரித்து அறிக்கை விடும் அளவிற்கு! அதிலும் கட்சியின் சார்பில் அறிக்கை விட்டவர்கள் யார் தெரியுமா? இன்றைக்கும் “திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள்” என்று எவரை திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த தியாகராசச் செட்டியாரும், டி.எம். நாயரும்தான்.

– பக்கம் 19 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

நீதிக்கட்சியோடு உறவு கண்டதால் ஈ.வே.ராவின் கொள்கை நிறைவேறியதா? வைர மோதிரங்களையும், சரிகைத் தொப்பிகளையும் வயலில் இறக்கிவிட முடிந்ததா என்கிற கேள்விகளுக்கு விடை காண மீண்டும் அருணனைப் பார்ப்போம்:

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு பெரியார் தனது சமதர்ம கட்சியின் திட்டத்தை அனுப்பி வைத்து அதனை ஏற்றுக் கொள்ளும்படிக் கோரியிருந்தார். ஆனால் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தது போல் ஆலை அரசர்களாலும், மிட்டா மிராசுகளாலும் நிறைந்திருந்த நீதிக் கட்சியின் தலைமையால் சமதர்மக் கட்சியின் புரட்சிகரமான திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கே நடந்த விந்தை என்னவென்றால், பிராமணரல்லாதார் நலன் காத்தல் எனும் கோஷத்தோடு பாட்டாளி வர்க்கக் கோட்பாடுகளை முன்வைத்த பெரியார் நீதிக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை வெட்டிச் சுருக்கி மாற்றியமைத்து விட்டார். “இது சமதர்மக் கொள்கையின் அடிப்படை அம்சத்தையே கை கழுவுவதாகும்” என்று சிங்காரவேலர் பெரியாரைக் கண்டித்திருக்கிறார். “சுயமரியாதை இயக்கம், அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்றுகூட அவர் கூறியிருக்கிறார்.

பெரியாரின் இந்தத் தவறான பாதையைக் கண்டு வெறுப்புற்று இது “கோழைத்தனமான பின்வாங்கல்” என்று அவரைக் கண்டித்து ஜீவாவும், ராகவனும், நீலாவதியும், வல்லத்தரசும் பெரியாரிடமிருந்து விலகி “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்று தனிக் கழகத்தினை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி திராவிட இயக்கத்தினை ஒரு பாட்டாளி வர்க்க அடிப்படையில் நடத்திச் செல்ல நடந்த ஒரு முயற்சி அகால மரணம் எய்திவிட்டது.

– பக்கம் 39,40 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

மேலும் சில விவரங்களை அடுத்த முறை பார்க்கலாம். அதுவரை பொறுக்க முடியாத நண்பர்கள்

1) கண்ணில்பட்ட குடியரசு / முருக. இராசாங்கம் / குடந்தை செங்குயில் பதிப்பகம்
2) ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் / ம.வெங்கடேசன் / பாரதீய பார்வர்டு பிளாக்

ஆகிய புத்தகங்களைப் படித்துப் பயன் பெறலாம்.

மேற்கோள் மேடை:

உண்மைக்கும் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக தி.மு.க. வினருக்கும் உள்ள உறவு எப்பேர்ப்பட்டது என்பது நாடறிந்த விஷயம்.

– மன்னையாரின் நினைவுக்கு / குமுதம் தலையங்கம் / 24.01.1974 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

6. ஐயப்பன்மாரின் அதிர்வேட்டு

களவு, பொய், காமம், சினம் முதலான எல்லாக் குற்றங்களையும் ஒழித்தவர் அப்பூதி அடிகள்; வலிமை வாய்ந்த இல்லற வாழ்க்கையில் நின்றவர் அவர். வீட்டில் உள்ள முகத்தல் முதலான அளவைக் கருவிகளும் மைந்தரும் பசுக்களுடனே எருமைகளும் மற்றுமுள்ள எல்லாமும் திருநாவுக்கரசு நாயனார் திருப்பெயர் சூட்டி அழைக்கும் அந்த ஒழுக்க நெறியில் நின்றவர் அவர்.

1784, பெரியபுராணம் / வர்த்தமானன் பதிப்பகம்

தன்னுடைய பிள்ளைகளைப் பெரிய திருநாவுக்கரசு, சிறிய திருநாவுக்கரசு என்று பெயரிட்டு அழைத்தவர் அப்பூதி அடிகள். வெய்யிலின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தண்ணீர்ப் பந்தல்கள், இளைப்பாறுவதற்கு மடங்கள், நீராடுவதற்குக் குளங்கள் எல்லாவற்றையும் அமைத்தார் அப்பூதி அடிகள். குளத்தின் பெயர் ‘திருநாவுக்கரசு குளம்’, பந்தலின் பெயர் ‘திருநாவுக்கரசு தண்ணீர்ப் பந்தல்’. வேறு பெயரே அவரது எண்ணத்தில் இல்லை.

அப்பூதி அடிகள் அந்தணர். திருநாவுக்கரசர் அந்தணரல்லாதவர். சாதியோ வருணமோ இல்லாத சன்மார்க்க பூமி அவர்களுடையது. அன்பிற் சிறந்தோரை அனைவரும் தொழவேண்டும் என்பதே சிவமதத்தின் சிறப்பு.

பெரியார், பகுத்தறிவு என்று ஆராயத் தொடங்கி பெரிய புராணத்துக்கு வந்துவிட்டேனே என்று யோசிக்க வேண்டாம். காரணம் இருக்கிறது.

பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் எரிக்கச் சொல்லி உத்தரவு போட்டவர் ஈ.வே.ரா.

maraimalai adigalஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார். (தமிழ் – தி.மு.க.- கம்யூனிஸ்ட் / ச.செந்தில்நாதன்).

மறைமலை அடிகளின் நாட்குறிப்பில் (16.06.1928):

திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், ‘தமிழ்நாடு’ ஆசிரியர் திரு. சொக்கலிங்கள் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாயக்கர் நடத்திவரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர்.

என்று எழுதப்பட்டுள்ளது.

எதற்காகப் பெரிய புராணத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்டால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நந்தனாரை பிராமணர் ஒருவர் கொடுமைப்படுத்தியதாக ஈ.வே.ரா.வைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் மேடைதோறும் பேசுகின்றனர். இவர்களுடைய கருத்துக்கு ஆதாரம் எது என்று நாம் அறிய விரும்புகிறோம்.

gopalakrishnabharatiஊடகங்களின் கடாட்சத்தால் உருவானதுதான் பகுத்தறிவு இயக்கம் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ‘நந்தனார்’ என்ற திரைப்படம்தான் (எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்தது – 1942) அவர்களுடைய வாதத்திற்கு அடிப்படை. திரைப்படத்துக்கு எது ஆதாரம் என்று பார்த்தால் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனம்’.

ஆனால் சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இல்லாத விஷயத்தை கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிவிட்டார். நந்தனாரை அந்தணர் கொடுமை செய்தார் என்ற செய்தி பெரியபுராணத்தில் இல்லை; அது வெறும் கற்பனை. மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் எழுதிய ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ என்ற நூலைப் பார்க்கலாம்.

சிவபக்தியும் ராமபக்தியும் இருக்கும்வரை தமிழர்களைத் தடம் புரளச் செய்யமுடியாது என்று ஈ.வே.ரா.வுக்குத் தெரியும். கோடானுகோடி மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வழிபட்டுவரும் ராமனைக் கண்டாலே ஈ.வே.ரா.வுக்குக் கசந்தது.

ராமன் என்ற சொல்லுக்கு மகிமை இருக்கும்வரை தன்னுடைய கொள்கை விலை போகாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே “புனிதத் தன்மையைப் போட்டுடையுங்கள்” என்றார்; “மனிதப் பண்புகளை மறந்துவிடுங்கள்” என்றார்.

ஆனால் அவர் கணக்கு தப்பிவிட்டது. காலச்சக்கரம் வேறுவிதமாகச் சுழல்கிறது. பகுத்தறிவுத் தொண்டர்களைத் தேடிப்பார்த்தாலும் தென்படவில்லை. ராமசேது பிரச்சினையில் விமர்சனம் செய்த முதல்வர் கண்டனங்களைப் பார்த்தவுடன் கம்மென்று இருந்துவிட்டார். பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் “ராமரைப் பற்றி விவாதம் செய்யத் தயாரா?” என்று கேட்டார். இதுவரை பதில் இல்லை. இதுதான் இன்றைய யதார்த்தம்.

இதை இப்படியே விட்டுவிட்டு, காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வே.ரா.விடம் போகலாம். அன்றைய நிலையில் காங்கிரசுக்கு மாற்றாக இருந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?

‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரில் திராவிட இயக்கம்’ என்ற நூலில் பி.ராமமூர்த்தி எழுதுகிறார்:

நீதிக்கட்சி – அது தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம்வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரித்து நின்றது. அது ஜமீந்தார்கள் மற்றும் தரகு வியாபரிகளின் கட்சியாக இருந்தது.

(பக்கம் 20)

ஆங்கில அரசுக்கு ஆதரவாக உருவானதுதான் நீதிக்கட்சி என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். நீதிக்கட்சியின் சார்புடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:

சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், சி.நடேசன் ஆகிய பார்ப்பனரல்லாத பெருந்தலைவர்கள் (1916) தோற்றுவித்த இயக்கத்திற்குத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது என்றாலும் அந்த இயக்கம் நடத்தி வந்த ஜஸ்டிஸ் என்ற புகழ்பெற்ற ஏட்டின் பெயரையே கொண்டு அந்த இயக்கத்தை நீதிக்கட்சி என்று பரவலாக எல்லோரும் அழைக்கலாயினர்.

– பக்கம் 19 / திராவிட இயக்க வரலாறு / இரா.நெடுஞ்செழியன்

பிராமணரல்லாதார் இயக்கத்திற்கு அவசியம் இருந்ததா என்று கேட்டால் இருந்தது என்பதுதான் பதில். அன்றைய சூழலில் ஒரு சில காங்கிரஸ்காரர்கள் சாதி உணர்வோடு நடந்துகொண்டனர் என்பதற்கான சான்றுகள் பல உண்டு; உதாரணத்துக்கு ஒன்று.

இந்தியாவிலேயே முதன்முறையாக (1927) ஒரு பெண் உறுப்பினர் சட்டமன்றத்தில் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தக் காலத்தில் இசைவேளாளர் மரபைச் சேர்ந்த பெண்கள் கடவுள் பெயரால் தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. இவர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். நடைமுறையில் இவர்கள் வசதி படைத்தாரோடு தொடர்பு வைத்திருந்தனர்.

satyamurtiடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் (1927) ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ ஏற்படுத்துவதற்காகத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த எஸ். சத்தியமூர்த்தி இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்த்தார். மனித விடுதலையையும் பெண்களின் உரிமையையும் ஆதரித்துப் பாடிய பாரதியின் காலத்துக்குப் பிறகும் காங்கிரஸில் இத்தகைய குரல்கள் ஒலித்தன என்பது குறைபாடுதான்.

முத்துலட்சுமி / சத்தியமூர்த்தி விவாதத்தைத் திராவிடர் கழகத்தினர் தவறாமல் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் தேசிய எழுச்சிக்காகப் பாடிய பாரதியார் கருத்து என்ன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்; ‘ஈ.வே.ரா. தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் தொண்டர்கள் பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்’ என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிடுகின்றனர்.

சத்தியமூர்த்தியைக் காரணம் காட்டி பிராமணர்கள் மட்டுமே சாதி உணர்வோடு செயல்படுகிறார்கள் என்று சாதிக்கிறார்கள் திராவிடக் கழகத்தினர்.

ஆனால் தேவதாசிப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கூட பகுத்தறிவாளர்களின் இந்த வாதம் படுத்துவிடுகிறது. தங்களுடைய பிழைப்புக்கு ஆபத்து என்று கருதிய 7000 தேவதாசிகள் அப்பொழுதே சென்னையில் ஊர்வலம் நடத்தி இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தில் குறுக்குச் சுவர் எழுப்பி பிராமணர், பிராமணரல்லாதார் என்று பிரிப்பதே திராவிட கழகத்தின் நோக்கம். இந்தக் காரியம் இன்றுவரை கைகூடவில்லை. ஐயப்பன்மார் போடும் அதிர்வேட்டு முழக்கத்தில் பிரிவினைப் பேச்சு காதில் விழவில்லை.

சத்தியமூர்த்தியைப் பற்றிச் சொல்லும்போது ராஜாஜியைப் பற்றியும் சொல்ல வேண்டும். மத விஷயங்களில் ராஜாஜி ஒரு சீர்திருத்தக்காரர்.

rajajiராஜாஜி என்றழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி சேலத்தில் பிரபலமான வழக்கறிஞர். இவர் 1916ல் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்; 1917ல் சேலம் நகரசபையின் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜியைப் பற்றி எஸ்.எஸ். மாரிசாமி எழுதுகிறார்:

ராஜாஜி, சுவாமி சகஜானந்தாவை சேலத்தில் வரவேற்று சேலம் கல்லூரி முதல்வர் யக்ஞ நாராயண அய்யரை விருந்து கொடுக்கச் செய்தார். இவரும் விருந்தில் கலந்துகொள்ளவே மேல்ஜாதியினர் பரவலாக எதிர்த்தார்கள், ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள்.

ராஜாஜியின் கடும் உழைப்பாலும், பிரசாரத்தினாலும் தமிழ்நாடு கதர் உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்தக் கதரில் மூன்றில் ஒரு பாகம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி சரித்திரம் படைத்தது.

– பீஷ்மர் ராஜாஜி / எஸ்.எஸ். மாரிசாமி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

7. ஆறு பேரை அழைக்கிறேன்

Pasumpon Muthuramalinga Thevar

தேவரய்யா சட்டமன்ற உறுப்பினராக சென்னையில் இருந்த நேரம். சசிவர்ணத் தேவரை அழைத்து ‘பாண்டியனூருக்குப் போய் காவிப் புடவையில் சிவப்புப் புள்ளி வைத்தபடி வாங்கிட்டு வா’ என்கிறார். சசிவர்ணத் தேவருக்கோ குழப்பம். யாருக்காக வாங்கிவரச் சொல்கிறார் என்று.போய் இரண்டு புடவைகளை வாங்கி வருகிறார். டாக்ஸி பிடித்து நேரே வீட்டுக்கு வருகிறார். தங்கையான இந்திராணி அம்மையாரிடம் ஒரு அம்மாளை அழைத்துவரச் சொல்ல – அவரும் வயதான பெண்மணியை அழைத்து வருகிறார். அவர் வந்ததும் சாஷ்டாங்கமாக அந்த அம்மையார் காலில் விழுந்து வணங்குகிறார் தேவர். கொண்டு வந்திருந்த காவிப் புடவைகளையும், பணத்தையும் கொடுக்கிறார். அந்த அம்மையார் – வீர வாஞ்சிநாதனின் மனைவி. எப்போது அவர் வந்தாலும் பணம் கொடுக்கச் சொல்கிறார். அவரின் பென்ஷனுக்காகச் சட்ட மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்; பென்ஷன் கிடைக்கவில்லை.

 

ராமச்சந்திரன் / பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் / புதிய பார்வை.

விடுதலைக்குப் பிறகு வந்த காங்கிரஸ்காரர்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தனர் என்பதற்கு ‘வாஞ்சிநாதன் பென்ஷன்’ ஒரு உதாரணம். அதனால்தான் 67ல் விட்டதை அவர்களால் 2007லும் பிடிக்க முடியவில்லை.

இந்தத் தொடர் கொஞ்சம் தடத்திலிருந்து விலக வேண்டியிருக்கிறது. 6-ஆம் பகுதியில் எழுதப்பட்ட விஷயங்கள் குறித்து ஒரு மறுமொழி வந்திருக்கிறது. அதில் “ஊடகங்களின் கடாட்சத்தால் உருவானது திராவிட இயக்கம் என்று பொதுவாகச் சொல்லக் கூடாது. காங்கிரஸ் ஆதரவு திரைப்படங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிற பொருளில் யாழ்வாணன் என்ற நண்பர் எழுதியிருந்தார்.

அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, அடுத்த முறை தொடரை விட்ட இடத்தில் பிடித்துக் கொள்ளலாம்.

திரையுலகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவுக்கும், திரையுலகத்திற்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள உறவுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

காங்கிரஸ் ஆதரவு திரைப்படங்கள் அடக்குமுறையை மீறி வெளிவந்தவை. திராவிட இயக்கத் திரைப்படங்கள் சுதந்திர இந்தியாவின் உரிமையை முழுமையாகப் பயன்படுத்தியவை.

‘பராசக்தி’ திரைப்படம் தணிக்கைக் குழுவிடம் போனது 1952ல். அங்கே அந்தப் படத்திற்காகப் போராடிய தணிக்கைக் குழு உறுப்பினர் ஒரு காங்கிரஸ்காரர். படத்தைத் தணிக்கை செய்து வசனத்தை நீக்கினால் பதவி விலகிவிடுவேன் என்று அவர் மிரட்டினார். அவர் பெயர் மணிக்கொடி சீனிவாசன். காங்கிரசின் போராட்டங்களுக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தபோது அதில் சினிமாவின் பங்கும் இருந்தது. ஆனால் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களிடம் தலைமைப் பொறுப்பு தரப்படவில்லை; கதை வசன கர்த்தாக்களைக் காரியக் கமிட்டியில் சேர்க்கவில்லை. அரசியல் நிர்ணய சபையை அரிதாரத்தால் அலங்கரிக்கவில்லை.

திராவிட இயக்கத்தின் நடைமுறை என்ன? சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய முன்று முதலமைச்சர்கள் சினிமாவின் பின்புலம் உடையவர்கள். இதைத் தவிர கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர். ராதா என்று பட்டியலே இருக்கிறது. இது முக்கியமான வித்தியாசம்.

திரைப்படத் தொழில் வளர்ச்சியடையாத காலத்தில் அதில் தேசியக் கருத்துகள் இடம் பெற்றன. தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கான சுதந்திர இந்தியாவில் சினிமா விளைச்சலை அறுவடை செய்தவர்கள் அண்ணாவின் தம்பிகள்தான்.

காங்கிரசுக்குப் பயன்பட்ட திரைப்படங்கள் எவை? திராவிட இயக்கங்களுக்கு உதவிய திரைப்படங்கள் எவை? என்பதைக் கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம். என்னுடைய பதிலை சான்றாவணங்களாகவும் சாட்சியாகவும் கொடுக்கிறேன். அதற்காக ஆறு பேரை அழைக்கிறேன். அவர்கள் 1. தியோடர் பாஸ்கரன், 2. அறந்தை நாராயணன், 3. ராண்டார்கை, 4. வெங்கட் சாமிநாதன், 5. கண்ணதாசன், 6. எம்.ஜி.ராமச்சந்திரன்.

விடுதலைப் போரில் திரைப்படங்களின் பங்கு பற்றி தியோடர் பாஸ்கரன் கூறுகிறார். வெள்ளித்திரை கண்ட வெட்டுகள் / தினமணி சுதந்திரப் பொன்விழா மலர் / ஆகஸ்ட் 1997:

ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து (1919) நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. எல்லா ஊடகங்களிலும் தங்களது கருத்துக்களை தேசியவாதிகள் பரப்ப முற்பட்டனர். அவற்றில் பத்திரிகை, நாடகம், கிராமஃபோன், சினிமா ஆகியவையும் அடங்கும்.

எழுத்தறிவு குறைந்த சமுதாயத்தில் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்க முடியும் என்பதையும் சுதந்திரப் போராட்டத்துக்கு இச்சாதனம் பயன்படுத்தப்படும் என்பதையும் பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. சினிமா தணிக்கை எனும் கிடுக்கிப் பிடியை இறுக்கினார்கள். சென்னை திரையரங்குகளுக்கு தணிக்கைக் குழு இன்ஸ்பெக்டர்கள் சென்று ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் உள்ளனவா எனச் சோதித்தனர். பல படங்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டன.

கோகினூர் பிலிம்சாரின் ‘பக்த விதுரர்’ (1921) படம், பிரிட்டிஷாரின் கவனத்திற்கு வந்தது. இதன் கதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இந்திய தேசப்படத்திலிருந்து பாரதமாதா வருவது போன்று ஒரு காட்சி. விதுரருக்குப் பெயர் விதுர்ஜி. கதராடை அணிந்து காந்தி தொப்பியுடன் அவர் நூற்பது காட்டப்பட்டது. சிறையில் விதுர்ஜி வாடுவதுபோல் ஒரு காட்சி. வரிகொடா இயக்கம் பற்றிய கருத்துக்களும் படத்தில் காட்டப்பட்டன. மதுரை கலெக்டருக்கு வந்தது கோபம். படத்தைத் தடை செய்தார்…

ஆர்.எஸ்.டி.செளத்ரி இயக்கிய உக்கிரம் (1931) என்ற மெளனப்படம் சேலத்தில் திரையிடப்பட்டது. அதில் காந்திஜியைப் போன்றே உடை உடுத்தி கைத்தடியுடன் அஹிம்சை, தீண்டாமை ஒழிப்பு பற்றி பிரசாரம் செய்யும் ஒரு பாத்திரம். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் படத்தைத் தடை செய்தார்…

சென்னை ராஜதானியில் 1937-ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 1939 வரை பதவியில் இருந்தது. இந்தக் காலத்தில்தான் ‘மாத்ருபூமி’, ‘ஆனந்த ஆஸ்ரமம்’ முதலிய நாட்டுப் பற்றைப் போற்றும் படங்கள் வெளிவந்தன.

ஆரம்ப நாட்களில் நாடகங்கள் மூலமாகவே தேசிய உணர்வு ஊட்டப்பட்டது. கதர் உடையில் காந்திக் குல்லாவோடு எஸ்.ஜி. கிட்டப்பா மேடையில் தோன்றி கே.பி. சுந்தராம்பாள் துணையுடன் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடுவார். சங்கரதாச சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் பங்கு முக்கியமானது. இது பற்றி அறந்தை நாராயணன் எழுதுகிறார்.

தமிழ் சினிமாவின் கதை / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்:

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய ‘கதரின் வெற்றி’, ‘தேசியக் கொடி’, ‘பதிபக்தி’, ‘பம்பாய் மெயில்’ என்னும் நாடகங்கள் கருத்துப் பரப்பலை நோக்கமாகக் கொண்டவை….

கதர்க்கப்பல் கொடி தோணுதே – கரம்
சந்திர மோகனதாஸ் காந்தி இந்தியா சுதேசக் (கதர்)

எனத் தொடங்கும் பாடலை எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் என்னும் நாடக நடிகர் எந்த வேடத்தில் தோன்றினாலும் பாடுவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தார்…

நீதிக்கட்சி சென்னை மாநில அமைச்சரவைப் பொறுப்பில் இருந்தது (1928). பாரதி பாடல்கள் ஆங்கிலேயரின் தூண்டுதலால் தடைசெய்யப்பட்டதைக் கண்டித்துச் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகையில் தேசியம், தேசபக்தியில் அனா, ஆவன்னா கூடத் தெரியாத சென்னை அரசாங்கம் தனது அழுக்குக் கரங்களால் புனிதமான நூலை அசுத்தப்படுத்தியுள்ளது என்றார்.

பாரதி பாடல்களைத் தடைசெய்த நீதிக்கட்சியினர் திரைப்படங்களில் வெளிப்பட்ட ஆபாசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நாராயணன் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கிய லைலா – மிஸ்ரெல்லா நட்சத்திரம் (1931) என்ற படத்தில் வந்த நடிகைகள் மறைக்க வேண்டியதையெல்லாம் காட்டிவிட்டார்கள்; கமல்ஹாசனே பொறாமைப்படும் அளவுக்கு முத்தக் காட்சிகளும் இருந்தன. அதாவது கவர்ச்சிக்குத் தடை இல்லை. கருத்துக்குத் தடை உண்டு என்பது அந்த அரசின் கொள்கையாக இருந்தது.

காங்கிரஸ் ஆதரவு படங்களில் முக்கியமானது ‘தியாகபூமி’ (1939). ‘தியாகபூமி’ எழுத்தாளர் கல்கியின் பேனாவில் பிறந்தது; திரைப்படமாகவும் உருவானது.

சேரி மக்களுக்குச் சேவை செய்யும் பிராமண மிராசுதார், கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டும் நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இளம்பெண் என்று சுவையான கருத்துக் கோவை இந்தப் படம்.

திரைப்படம் தயாரிக்கப்படும் போதே ஆனந்த விகடனில் ‘தியாக பூமி’ தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு இதழிலும் பதினாறு பக்கங்கள் கொண்ட தனியான ஃபாரம், அதுவும் விலை உயர்ந்த கிளேஸ் காகிதத்தில். வாசகர்கள் அதைத் தனியாக எடுத்து பைண்டு செய்து கொள்ளலாம். திரைப்படத்தின் ஸ்டில்களையே பயன்படுத்தியது இதில் புதுமை.

விளைவு, தியாகபூமியின் கதாநாயகிக்காகக் கண்ணீர் விட்டு வெள்ளிக்கிழமை இரவுகளில் படுக்கைகளை நனைப்பது படிப்பறிவுள்ள தமிழ்ப் பெண்களின் விரதமானது.

‘தியாகபூமி’ திரைப்படத்திற்கு அரசு விதித்த தடைபற்றிக் கூறுகிறார் ராண்டார் கை / தி ஹிந்து / 21.03.08:

திரைப்படத்தைத் தடை செய்யும் அரசு ஆணை வந்தபோது தயாரிப்பாளர் கே. சுப்ரமணியமும் முதலீடு செய்த எஸ்.எஸ். வாசனும் அசராமல் இருந்தார்கள். கெயிட்டி திரையரங்கில் தொடர்ந்து இந்தப்படம் திரையிடப்பட்டது. எல்லாம் டிக்கட் இல்லாத காட்சிகள்; அனைவருக்கும் அனுமதி என்று செய்துவிட்டார்கள். லத்திகளை வீசிக் கொண்டு வரும் போலீஸ் படைக்குத் தலைவராக ஒரு அதிகாரி வந்தார்; திரையரங்கில் இருந்தவரிடம் தடை உத்தரவைக் கொடுத்தார். ‘உடனே நிறுத்த வேண்டும்’ என்றார். அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கேயே தடியடி நடத்தப்பட்டது. ஈவிரக்கமில்லாத வகையில் திரையரங்கின் உள்ளே தடியடி நடத்தப்பட்டது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை.

venkat-swaminathanகாங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு திரைப்படத் துறையினர் செய்த பணிகளைப் பார்த்தோம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைமை எப்படி நடத்தியது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைச் சொல்லப் போகிறவர் வெங்கட் சாமிநாதன் / வியப்பளிக்கும் ஆளுமைகள்:

துர்காபாய் தேஷ்முக், என்.எஸ். கிருஷ்ணனை காங்கிரஸ் கட்சி வட்டத்துக்குள் கொண்டு வந்து அவரை அக்காலத்தில் மேலவை உறுப்பினராக ஆக்க விரும்பி முயற்சிகள் மேற்கொண்டார். முதலில் துர்காபாய் தேஷ்முக் என்.எஸ். கிருஷ்ணனை, ஜவஹர்லால் நேருவிடம் அழைத்துச் சென்று ஒரு சம்பிரதாயச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜ் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கூத்தாடிகள் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுவதென்றால் காங்கிரஸ் கட்சியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதாக என்.எஸ். கிருஷ்ணன் காதுக்கு சேதி எட்டியதும் அவர் டெல்லி செல்வதை, நேருவைச் சந்திப்பதை, சட்டமன்றத் தேர்தலுக்கு நிற்பதை எல்லாவற்றையும் உதறிவிட்டார்.

காங்கிரஸில் இடமில்லாதவர்களை தி.மு.க ஏற்றுக் கொண்டது. சினிமா என்கிற தந்திர வித்தையை தி.மு.க. வினர் திறமையாகப் பயன்படுத்தினர். ஒலிபெருக்கிகளும் ஓசையும் ஊரை வளைத்துப் போட்டன. இதைப்பற்றிக் கண்ணதாசன் சொல்கிறார் / நான் பார்த்த அரசியல்:

தொழிலாளர்கள் அனைவருமே திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்கள் என்ன புரிந்து இந்தக் கட்சிக்கு வந்தார்கள் என்று கேட்டால் எதுவும் இல்லை. எதைச் சொல்லி அவர்களை இந்தக் கட்சி ஈர்த்தது? அதனுடைய மையக் கொள்கை என்ன? எதைச் சொன்னால் மற்ற கட்சிகள் அதே மாதிரி ஈர்க்க முடியும் என்று ஏதாவது ஒரு இலக்கணம் உண்டா என்றால் அதுவும் இல்லை…

அதற்குக் கவர்ச்சி ஊட்டுகிற வகையில் பின்னாலே நடிகர்களும் வந்து சேர்ந்தார்கள். சினிமா நடிகர்கள் ஈடுபட்ட உடனேயே அதற்குப் புதியதொரு கவர்ச்சி வந்தது. இந்தப் புரியாத விஷயங்களே சினிமாவிலும் வரத் தலைப்பட்டன.

M.G.Ramachandranதிரைப்படங்களால் தி.மு.க. வளர்ந்தது. தி.மு.க.வால் திரைப்பட வசூல் குவிந்தது. இதன் உச்சகட்டமாக உதித்தவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருடைய முத்திரை அழுத்தமாக விழுந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது (1967) அவர் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலே பரங்கிமலையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரைப் பார்க்க இரா.செழியன் வந்தார்.

அங்கே நடந்ததை எம்.ஜி.ஆரே சொல்கிறார் / நான் ஏன் பிறந்தேன்:

“என் உடல்நிலை பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு தன்னிடமிருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார். ‘என்ன இது’ என்றேன். ‘இந்தக் குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்க்ளுக்குத் தரப்படவிருக்கும் இலாகாக்களின் பெயர்களும் அடங்கியிருக்கின்றன’ என்று சொன்னார். நான் இரா.செழியன் அவர்களிடம் கேட்டேன் ‘என்னிடம் ஏன் காண்பிக்கிறீர்கள்’ என்று. அவர் சொன்னார் ‘அணணா அவர்கள் உங்களிடம் இதைக் காண்பிக்கச் சொன்னார்கள்’ என்று.”

தி.மு.க.வின் அதிகார மையத்தில் யாருக்கு மதிப்பு இருந்தது என்பதை அந்தக் காகிதக் குறிப்பு சொல்லிவிட்டது. இதோடு நண்பர் யாழ்வாணன் மனமாற்றம் அடைந்திருப்பார் என்று நம்புகிறோம்.

இனி, அடுத்த பகுதியில் வைக்கத்திற்குப் போகலாம்.

மேற்கோள் மேடை:

ராஜீவ் காந்தி ஒரு நல்ல தேச பக்தராக, மனிதாபிமானியாக முழு வளர்ச்சியை நோக்கி வளர்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் மனித வெடிகுண்டிற்கு அவர் பலியாக்கப்பட்டார். அதை என்றோ நடந்த ஒரு துன்பியல் நிகழ்ச்சியாக மறக்கும்படி, மரத்துப்போன மனம் படைத்தவர் சொல்லலாம். அது நன்றி கொன்ற செயல். எனவே

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’

என்று வள்ளுவர் எழுந்து நின்று முழங்குவது கேட்கிறது.

– தா. பாண்டியன் / ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

8. 

 

 

பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற பிரெஞ்சுக் கவிஞன்!

 

shah-jahan1ஷாஜஹான் தங்கியிருந்த ஆக்ரா கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டான். கோட்டைக் கதவுகள் அனைத்தையும் மூடும்படி ஷாஜஹான் உத்தரவு கொடுத்தான். ஒளரங்கசீப் விரும்பியதும் அதுவே.

 

ஏனெனில் ஆக்ரா நகரத்தின் உட்பகுதியில் குடிதண்ணீர் கிடையாது. நகரத்திற்கான குடிநீர் யமுனை ஆற்றிலிருந்து வரவேண்டும். ஒளரங்கசீப் தன் படையின் பெரும்பகுதியை நீர்க்கரையில் நிறுத்திக் கோட்டைக்குள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகமுடியாமல் செய்துவிட்டான்.

தந்தை ஷாஜஹான் சரணடைந்தான். அதற்கு முன்பு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை மகனுக்கு எழுதினான். “ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்குக் கூட நீர்க்கடன் செலுத்திகிறார்கள். முசல்மானாகிய நீ உயிரோடிருக்கும் தகப்பனாருக்கே குடிதண்ணீர் தர மறுக்கிறாய்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

 

பாரதி போற்றிய பன்னரும் உபநிடத நூல் / தி.சா.ராஜு / வானதி பதிப்பகம்

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த அரசனுக்கே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு புலப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களுக்கு மட்டும் பார்வைக் கோளாறு. அவர்களுக்கு ஹிந்து என்பதே இழிசொல்; இஸ்லாம் என்பதோ புண்ணிய பூமி. புண்ணிய பூமியில் போய்ச் சேரப் போவதாக வெகு காலமாக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தம்மை இஸ்லாமை அனுசரிப்பவர் என்றும் திராவிட சமயமும் இஸ்லாமும் ஒன்று என்றும் பெரியார் சொல்லியுள்ளார். சேலம் மாநாட்டில் பேசும்போது (1944), பாகிஸ்தானுக்கு உட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய ஆரியருடன் வாழக்கூடாது என்று அவர் கூறினார்.

 

பக்கம் 60 / பெரியார்? /அ.மார்க்ஸ் / பயணி வெளியீடு

இப்படியெல்லாம் அந்த மார்க்கத்தின் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினாலும் அவர்கள் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வெளியிடும் உணர்வு இதழில் (டிச.26, 2008-ஜன.1, 2009) பெரியார் இயக்கத்தவரை ‘போலி பகுத்தறிவுவாதிகள்’ என்று தலைப்பிட்டு அறைகூவல் விடும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி இதோ:

போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூட நம்பிக்கையானது உருவப்படத் திறப்புகளும், அதற்கான விழாக்களும்… உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்து வைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவு பூர்வமானதாக இல்லை…

 

பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும், அவரைப் பின்பற்றுவோர் கண்களை மூடிக் கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.

 

இஸ்லாத்தில் இவர்களைச் சேர்ப்பதாக இல்லை; இந்துக்களோடு இருக்கும் தொப்புள் கொடி உறவைத் தானாகவே அறுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். இவர்கள் கதை இப்படிக் கந்தலானதற்குக் காரணம் என்ன?

கொள்கையில் உள்ள கோளாறு முதல் காரணம். இருப்பதையாவது இறுகப் பிடித்துக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. உறுதியின்மை இரண்டாவது காரணம்.

அடாவடிகளை அறிக்கைகளாகவும், தவறான தகவல்களைத் தத்துவங்களாகவும் அரைகுறைப் படிப்பை அநுபூதியாகவும் கொண்டு வளர்ந்ததே ஈ.வே.ரா.வால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்.

மேடைப் பேச்சின் கவர்ச்சி, சினிமாவின் வீச்சு, ஆழமும் அகலமும் இல்லாத மொண்ணைத்தனமான எழுத்து ஆகியவை சேர்ந்த சரக்கு, துவக்கத்தில் படித்தவர்களையும் நாளடைவில் பாமரர்களையும் மயக்கியது. அந்த மேடைகளில் பொருள் ஏதும் இல்லாத பூச்சுவேலை அதிகம்.

“Everybody remains in a state of rest or of uniform motion in a straight line என்று ஏசுநாதரைப் பற்றி எழுதிய கவிதையில் பிரெஞ்சுக் கவிஞன் பெஞ்சமின் டிஸ்ரேலி கூறியதைப் போல…” என்று சொல்லி, நிறுத்தி சோடா குடித்துக் கொண்டார் கழகப் பேச்சாளர் ஒருவர். அவருடைய கன்னிப்பேச்சு அது. அவருக்கு எதிரே இருந்த மக்கள் தொகையில் அரை டவுசர்களே அதிகம். இடம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம்; ஆண்டு 1964.

இங்கிலாந்துப் பிரதமரை பிரெஞ்சுக் கவிஞராகவும் யூத மதத்தைச் சேர்ந்தவரை ஏசுவின் புகழை எழுதியவராகவும், நியூட்டனின் விதியை இலக்கியமாகவும் மாற்றும் ரசவாதம் கண்மணிகளிடம் உண்டு.

வார்த்தைப் பந்தல்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தைப் பற்றி இந்தத் தொடரில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். தொடரின் முந்தைய பகுதியில் ஊடகங்களின் பயன்பாடு பற்றி எழுதியிருந்தேன்.

நண்பர் மைத்ரேயா மறுமொழியாகக் கேட்கிறார் என்னுடைய தீர்மானத்திற்கு அடிப்படை என்னவென்று. அது இங்கே தரப்படுகிறது.

 

சுதந்திரம் பெற்ற பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கியது. சுதந்திர இந்தியாவின் தணிக்கைக் கொள்கைகளால் தி.மு. கழகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகளும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் திரைக்கு வந்தன.

 

விடுதலைக்குப் பின் தேசிய முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. நகரங்களைத் தாண்டி மின்சாரம் கிராமங்களுக்கும் செல்லத் தொடங்கியது. கிராமங்கள் மின்சார மயமாகத் தொடங்கியதும் டூரிங் டாக்கிஸ்களும் சினிமாப் படங்களைத் தூக்கிக் கொண்டு கிராமப் புறங்களுக்குள் பிரவேசித்தன. 1931-1947 ஆண்டுகளில் தரிசிக்க முடியாதிருந்த சினிமாப் படத்தைக் கிராம மக்கள் காணுகிற வாய்ப்புகள் உருவாகத் தொடங்கிய (1947-1956) காலத்தில் சினிமாவின் சக்தியைப் புரிந்தவர்களாகத் தி.மு.கழகத்தினர் விளங்கினர்.

 

தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நாராயணன் / நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

பட்டி தொட்டியெல்லாம் பாடல்கள் மூலம் பகுத்தறிவும் திராவிடமும் பரவி வந்த வேளையில் தேசியவாதிகள் என்ன செய்தனர்? காங்கிரஸ் ஆதரவுக் கலைஞர்களின் பங்களிப்பு என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள மீண்டும் அறந்தை நாராயணன்:

 

veerapandiya-kattabommanதேசியவாதியான நடிகர் பி.ஆர்.பந்துலு 1959-ல் தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை கேவா கலரில் படமாக்கி லண்டன் சென்று அதை டெக்னிகலராக மாற்றி வெளியிட்டார். சுதந்திரம் பெற்ற தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றியதோர் கதை 12 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தது.

 

சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜாவர் சீதாராமன் பானர்மென்னாகவும் நடித்தனர். எஸ்.வரலட்சுமி, பத்மினி ஆகியோரும் நடித்த இந்தப் படத்தின் கதை ஆலோசனைக் குழுத் தலைவராகத் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இருந்தார்.

‘பராசக்தி’, ‘மனோரமா’ படங்களில் நீளநீளமான வாக்கியங்களில் வசனம் பேசிய சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனில் சக்தி கிருஷ்ணசாமியின் வித்தியாசமான வசனங்களைப் பேசினார்.

“நீலவானிலே செந்நிறப் பிழம்பு! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன், சுட்டெரிக்கும் செஞ்சுடர்! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டமான இரத்த நிறப் பொட்டு…”

ஏராளமான பொருட் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார் பந்துலு. அவரே படத்தை இயக்கினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மன் பட்ட கஷ்டங்களை விட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சினிமா கட்டபொம்மன் அதிகச் சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது….

voc1961-ல் பந்துலு ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை வெளியிட்டடர். ஆங்கிலேயக் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கப்பல் கம்பெனி நடத்தி, அதனால் ஆட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகி சுதந்திரப் போராட்டத்தில் பங்கும் கொண்டு சிறை சென்று சிறையில் செக்கிழுத்த தியாகி வ.உ. சிதம்பரனாரின் கதை….

சுருங்கச் சொன்னால் எடுத்தவர்கள், நடித்தவர்கள், பார்த்தவர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தார்கள்.

ஆனால்-

வியாபாரக் கலை விஷம் போல மலிந்து வியாபித்துத் தமிழர் ரசனையை வக்கரிக்கச் செய்திருந்ததால் படம் வசூலில் வெற்றி பெறவில்லை. தேசியவாதி, காங்கிரஸ்காரர் பி.ஆர். பந்துலு நொடித்துப் போனார்…. வேடிக்கையொன்று சொல்லட்டுமா?

கேளிக்கை வரியை ரத்து செய்து குறைந்த கட்டணத்தில் அனைவரையும் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைப் பார்க்கச் செய்ய காங்கிரஸ் ஆட்சியாளருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் செய்யவில்லை.

1967-ல் ஆட்சிக்கு வந்த தி.மு. கழகம்தான் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது.

 

vanchi-maniyachiவாஞ்சிநாதன் குடும்பத்தாருக்கு காங்கிரஸ் அரசு பென்ஷன் தரவில்லை என்பதைச் சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். தி.மு.க். அரசுக்குத்தான் அந்தப் பெருமையும் கிடைத்து.

மக்களோடும் காங்கிரசுக்குத் தொடர்பில்லை; மக்கள் தொடர்புச் சாதனங்களோடும் நல்ல சகவாசம் இல்லை. அதனால்தான் மாநிலக் கட்சிகள் முன் மண்டியிடும் நிலைமை.

‘பராசக்தி’ படம் வெளிவருவதற்கு மணிக்கொடி சீனிவாசன் உதவினார் என்று எழுதியிருந்தேன். ஆதித்யா என்ற நண்பர் இந்தச் செய்தி கழக இதழ்களில் வரவில்லையே என்று கேட்கிறார். அதற்கு ‘அறிவாலயம்’தான் பதில் சொல்ல வேண்டும். அறிவாலயம் சொல்லாததை ‘தாயகம்’ சொல்கிறது. தாயகமும் மணிக்கொடி சீனிவாசனைப்பற்றி சொல்லவில்லை. ம.தி.மு.க. சார்பு உடையவரும் சிறந்த பத்திரிக்கையாளருமான திரு. க. திருநாவுக்கரசு எழுதிய திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும் என்ற நூலில் பக்கம் 56/57-ஐப் பார்க்கலாம்.

பராசக்தி படம் தணிக்கைக்குழுவின் முன் திரையிடப்பட்ட போது பெரியதொரு விவாதம் நடைபெற்றது. பல காட்சிகளை வெட்ட நினைத்த போது குழுவின் உறுப்பினராக இருந்த ‘சண்டே அப்சர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக வாதிட்டு பராசக்தியை வெளியிடத் துணை நின்றார். வாசகர்களின் திருப்திக்காக கணையாழி, செப்டம்பர் 2000 இதழில் ‘மணிக்கொடியின் பிதாமகர்’ என்ற தலைப்பில் சிட்டி.பெ.கோ. சுந்தரராஜன் எழுதிய கட்டுரையின் பகுதியைக் கொடுக்கிறேன்:

 

தணிக்கை அதிகாரியாக இருந்த சீனிவாசன் அனுமதித்த ஒரு படம் சர்ச்சைக்கு உள்ளாகித் திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது.

 

அதுதான் பகுத்தறிவு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘பராசக்தி’ என்ற படம்…

நமது கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் குறிப்பாக பார்ப்பனீயத்தையும் சாடும் முறையில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது என்று சிலரால் கருதப்பட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவில் அரசாங்க முறையில் அல்லாத தனிப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர், சீனிவாசனின் செயலைக் கண்டிக்கும் முறையில் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராஜாஜி கூடத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு இதுபற்றிப் புகார்க் கடிதம் எழுதியதாகச் சொல்லப்பட்டது. காஞ்சி பரமாசாரியாரும் படத்தின் தன்மையை அறிவதற்காக இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார். எதிர்த்தவர்கள் கருதியபடி படத்தில் ஆட்சேபகரமான அம்சங்கள் இல்லை என்று அவர்கள் தங்களுடைய கருத்தை மடாதிபதியிடம் தெரிவித்தார்கள்.

 

சினிமாவைப் பற்றிச் சொல்லும் போதே திரைப்படப் பாடல்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திரைப்படம் என்ற போர்முனையில் பாடல்களை எழில்மிகுந்த ஏவுகணைகள் என்று சொல்லலாம். பத்து ரீல்கள் செய்ய முடியாததை ஒரு பாடல் செய்துவிடும்.

பாட்டுப் புத்தகங்களின் அட்டையில் தி.மு.க. தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டன. வசனப் புத்தகங்களும் பெருமளவில் விற்கப்பட்டன. காந்தியத்திற்கு வெள்ளை என்றால் திராவிடர் இயக்கத்திற்குக் கறுப்பு; காங்கிரசுக்குக் கதர் என்றால் தி.மு.க விற்கு கைத்தறி என்று எதிர்மறையாகவே எல்லாம் நடந்தது.

மக்கள்தொகையில் ஒரு பகுதி நெசவுத் தொழில் ஜீவனமாகக் கொண்டிருந்த வேளையில் ‘சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி’ என்ற பாடலை எழுதியவர் பொதுவுடமைவாதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஆனால் இதைத் தி.மு.க.வினரே பயன்படுத்தினர்.

‘மலைக்கள்ளன்’ (1954) திரைப்படத்தின் கதை தேசியவாதியான நாமக்கல் கவிஞரின் எழுத்தில் உருவானது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., வசனம் மு.கருணாநிதி. இந்தப் படத்தில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற பாடல் இடம்பெற்றது. பாடலாசிரியர் நாமக்கல் கவிஞர். படம் வெளிவந்தபோது இந்த வரிகளை மேற்கோள் காட்டாத தி.மு.க. மேடைகளே இல்லை. இதே நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று உப்புச் சத்தியாகிரகத்தைப் பாடினார். அது எத்தனை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்?

‘திராவிடர் இயக்கத்தில் திரைப்படப் பாடல்களின் தாக்கம்’ என்று ஒரு புத்தகமே எழுதலாம்; வசனத்திற்கு இன்னொன்று.

மேற்கோள் மேடை:

 

ஹிந்து மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதும் இல்லை; எவரும் விலக்கப்படுவதும் இல்லை. ஒரு முஸ்லீமும் கிறிஸ்தவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து பிறக்கிறான். மற்ற மதங்களுக்கு அவன் மாறிப் போவது ஏதோ உத்யோகம் பார்க்க உடை மாறிப் போவது மாதிரிதான்.

 

 

– ஜெயகாந்தன் / ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

9. 

 

 

முத்துக்குமாரின் கடிதம்

nadi astrologyசோமசுந்தரம் பிள்ளை சாதாரண சோதிடர் அல்ல… அக்காலத்திலேயே அதிக வருமானமுள்ள பெரிய ‘நாடி சோதிடர்’. எங்கிருந்தோ எப்படியோ அடையப் பெற்ற சில அபூர்வமான ஓலைச்சுவடிகள் அவரிடமிருந்தன… அந்த ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது ‘கிரந்த லிபி’ எனப்படும் ஒருவகைத் தமிழ் எழுத்தாகும். அதனைப் படிப்பதற்கு முறையான பயிற்சி வேண்டும்… அவர் தனது கம்பீரமான குரலில் அந்தக் கவிதைகளை கணீர் என்று பாடுவார். அவர் பாடப்பாட ஏகாம்பரம் பிள்ளை என்ற உதவியாளர் அதனை எழுதுவார். சில நாட்களில் நானும் எழுதக் கற்றுக் கொண்டேன்.

ஒரு நாள் ஏகாம்பரம் பிள்ளை வராததால் நான் எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி வந்து பிள்ளையிடம் நோட்டுப் புத்தகமொன்றைக் கொடுத்து, “இதைப் பாத்து வைங்க அப்புறமா வரேன்” என்று சொல்லிப் போய்விட்டார்…

“இது நான் ஏற்கனவே பாத்த ஜாதகம்தான்” என்ற பிள்ளை, “இது அவங்க தம்பியோட ஜாதகம். இப்போ அந்தத் தம்பிக்கு குரு தசையில ராகு புத்தி நடக்குது. இதுதான் கடைசிப் புத்தி. இன்னும் ஒரு வருஷம் எட்டு மாசம் ஐம்பது நாள். அதுக்கப்புறம் புதன் புத்தி வருது. அதுலேர்ந்து இன்னும் நல்லாருக்கும். அந்தத் தம்பிக்கு ஏற்கனவே வாக்கு ஸ்தானத்துல ஞானகாரகன் (புதன்) இருக்கான். அதனால்தான் நல்லாப் பேசுது. சனிதிசை மொத்தம் 19 வருஷம். அது முடியிறதுக்குள்ளே அந்தத் தம்பி ஒரு உன்னதமான இடத்தைப் பிடிச்சிடும்” என்று சொன்னார்.

நாடி சோதிடர் என்னிடம் சொல்லியபடியே உன்னதமான ஓர் இடத்தைப் பிடித்த அந்த ஜாதகக்காரர் யார் தெரியுமா?

நான்கு முறை கோட்டையில் முதலமைச்சராகக் கோலோச்சிய கலைஞர் மு.கருணாநிதி.

– – பக்கம் 79, 80 / ஒரு கதை வசனகர்த்தாவின் கதை / ஆரூர்தாஸ் / மணிவாசகர் பதிப்பகம்

நம்மைப் பொறுத்தவரை கட்டங்களிலும் கணக்குகளிலும் அதிக ஈடுபாடு இல்லை. தெய்வ நம்பிக்கை உடையவர்களுக்கு சோதிடம் அவசியமில்லை என்பதே அடியேனுடைய கருதுகோள்.

ஆனால் நம்முடைய சகா ஒருவர் இதைப் படித்துவிட்டு ‘துல்லியமான கணிப்பு’ என்று பாராட்டினார்.

உங்கள் வசதிக்காக, தமிழக முதல்வர் பிறந்தது 03.06.1924-ல்; ஆரூர்தாஸ் குறிப்பிடும் நிகழ்ச்சி நடந்தது 1950ல் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். மற்றபடி உங்கள் செளகரியப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம்.

நம்முடைய உடன்பாடோ, ஜாதகக்காரரின் எதிர்நிலையோ இதில் முக்கியமில்லை. பெரும்பான்மையான மக்களுக்கு இத்தகைய விஷயங்களில் பற்று இருக்கிறது; அதை வலுப்படுத்தும் காரணங்களும் அங்கங்கே இருக்கின்றன என்பதைச் சுட்டவே ஆரூர்தாசின் அனுபவம் சொல்லப்பட்டது. சோதிடம் மற்றும் வானவியல் பற்றிச் சில விஷயங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்…

மேலை நாடுகளில் ‘பூமி சூரியனைச் சுற்றுகிறது’ என்று சொன்னவர்களைக் கட்டி வைத்து எரித்துவிட்டார்கள். 16ஆம் நூற்றாண்டுவரை இது பாதிரிமார்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

aryabhattaஆரிய பட்டர், வராஹமிஹிரர் போன்ற நம்மவர்கள் அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ‘பூமி சூரியனைச் சுற்றுகிறது’ என்று எழுதிவிட்டனர்.

‘சூரியன் உதிப்பதில்லை; மறைவதுமில்லை’ என்கிறது ரிக்வேதம்.

இந்து மதத்தில் நான்கு மறைகளுக்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆறு அங்கங்களில் சோதிடமும் ஒன்று.

இந்து மதத்தைச் சீரமைப்புச் செய்த ஆதிசங்கரர், ‘சங்கராச்சார்யம்’ என்ற சோதிட நூலை எழுதியிருக்கிறார்.

இனி வைக்கத்துக்கு வருவோம். வைக்கத்தில் (1924) ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக சகுனம் முதல் சனாதனம் வரை எல்லாம் ஆடிப் போய்விட்டது என்று வலுவான பிரசாரம் இங்கே நடக்கிறது. அது சரியல்ல என்று தெரிவிப்பதுவே இந்தத் தொடரின் நோக்கங்களில் ஒன்று. சரியல்ல என்றால் நியாயமானதல்ல என்று ஒருமுறையும் பொய்கலந்தது என்று ஒருமுறையும் சொல்லிக் கொள்ளவும்.

வைக்கத்தைப் பற்றி அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன? இரா. நெடுஞ்செழியன் எழுதியதிராவிட இயக்க வரலாறு / முதல் தொகுதி / பக்கம் 369 / 372:

கேரளத்தில் வைக்கம் என்ற ஊர், தீண்டாமைக் கொடுமைகளுக்கெல்லாம் தலைமை வகுத்து வந்தது. வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்த மாதவன் என்னும் ஈழ வகுப்பைச் சேர்ந்தவர் எக்காரணம் கொண்டும் வைக்கம் நான்கு மாடத்தீவுகளில் நடக்கக்கூடாது என்று அங்கிருந்த உயர்சாதியினர் தடுத்து வந்தனர்…

அந்தத் தெருக்கள் வழியே தீண்டத்தகாதவர்களை அழைத்துச் செல்லும் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் திரு. ஜார்ஜ் ஜோசப், திரு. கேசவமேனன், திரு. டி.கே. மாதவன், திரு. நீலகண்ட நம்பூதிரி போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். போராட்டம் துவங்கியவுடன் திரு. ஜார்ஜ் ஜோசப் உள்பட 19 தலைவர்கள், வரிசையாக அடுத்தடுத்து திருவாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தைப் போற்றிப் பாராட்டி அண்ணல் காந்தியடிகள் வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி வைத்தார்…

கேரளச் சிறையிலிருத்தபடியே திரு. ஜார்ஜ் ஜோசப், திரு. நீலகண்ட நம்பூதிரி ஆகிய இருவரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாருக்கு இரகசிய கடிதம் ஒன்றினை எழுதினார்கள். “தாங்கள் உடனே வைக்கம் வந்து அறப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தினதால்தான், கேரளத்துடைய மானமும், எங்களுடைய மானமும் காப்பாற்றப்படும்… உடனே புறப்பட்டு வரக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அழைப்பு விடுத்திருந்தனர்…

பெரியார் மறுநாளே வைக்கத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்… பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட ஈழவ மக்களை அழைத்துக் கொண்டு சமூகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் வைக்கத்தின் தெருவில் துணிந்து நடந்து செல்ல ஆரம்பித்தார். உடனே அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு, ஒரு திங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறை ஏகினர். பெரியார் சிறை சென்றவுடன் திரு. எஸ். ராமநாதன், கோவை. சி. அய்யாமுத்து, திருமதி. நாகம்மையார், திருமதி. கண்ணம்மாள் போன்றோர் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டுக் கைது செய்யப்பட்டுச் சிறைபடுத்தப்பட்டனர்.

ஒரு திங்கள் கழித்துப் பெரியார் அவர்கள் விடுவிக்கப்பட்டார்… பெரியார் அவர்கள் மீண்டும் வைக்கம் பகுதியில் நுழைந்தார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, ஆறு திங்களுக்குச் சிறை தண்டனையை ஏற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்…

1925 மார்ச் திங்களில் அண்ணல் காந்தியடிகள், அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்த வைக்கம் நகருக்கு வருகை தந்து பார்வையிட்டதோடு திருவாங்கூர் அரசியாரையும் கண்டு பேசினார். காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்றுத் திருவாங்கூர் அரசியார் ‘வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சாதிமத வேறுபாடு கருதாமல் எவரும் நடக்கலாம்’ என்ற ஆணையைப் பிறப்பித்தார்.

‘தீண்டாமை ஆன்மிக விரோதம்’ என்பது இந்த மண்ணில் எத்தனையோ மகான்களால் நிறுவப்பட்டுள்ள கொள்கை. பாரதியாரும் மகாத்மா காந்தியும் இதைச் சென்ற நூற்றாண்டில் செய்தனர். வைக்கம் போராட்டக்காரரின் வாரிசுகள் பாரதிக்குக் கொடுத்த இடத்தைப் பார்ப்போமா?

வைக்கம் சத்தியாகிரகம் நடந்து 60 வருடங்களுக்குப் பிறகு (1985) தமிழக அரசின் முயற்சியால் வைக்கத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அப்போது ‘துக்ளக்’ இதழில் ‘வைக்கம் சத்தியாகிரகம் சில உண்மைகள்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரைக்கு மறுப்பாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியால் எழுதப்பட்ட புத்தகம், காங்கிரஸ் வரலாறு, மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும். இந்தப் புத்தகத்தில் வீரமணி சொல்கிறார்
/ பக்கம் 15

பெரியாருடைய தொண்டர்கள் ஆதாரமில்லாமல் எதையும் பேசமாட்டார்கள். ஏதோ ‘வரலாற்று உண்மைகள்’ என்று மனம்போன போக்கிலே பேசமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது…

காங்கிரஸ் வரலாற்றிலிருந்து சுதந்திரப் போராட்டம் பற்றிய பல்வேறு நூல்களிலிருந்து பல செய்திகளை ஆதாரமாக இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இப்படிப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிற பகுத்தறிவுக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட கோவை.சி. அய்யாமுத்து எனது நினைவுகள் என்ற நூலில் எழுதுகிறார்:

வைக்கத்துப் போர்க் காலத்தில் நாயக்கரும் நானும் மோட்டாரிலும் படகுகளிலும் திருவாங்கூர் முழுவதும் பிரயாணம் செய்தோம்… நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க் கொண்டே வந்தே மாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவைகளை அவர் உரக்கப் பாடுவார்.

ஈ.வே.ரா. பாடியதைப் பற்றி அய்யாமுத்து சொல்வது மட்டுமல்ல, தொண்டர்கள் அனைவரும் பாரதி பாடல்களைப் பாடிய செய்தி ‘தி இந்து’ நாளிதழின் தொகுப்பிலும் வந்திருக்கிறது. The Hundred Years of the Hindu / பக்கம் 334.

ஆனால், பெரிய எழுத்தில் ஒரு ஆனால் போட்டுக் கொள்ளவும்.

நெடுஞ்செழியன் புத்தகத்தில் பாரதி பாடல்களப் பற்றிய இந்தச் செய்தி இல்லை.

வீரமணியின் புத்தகத்தில் பாரதி பாடல்களைப் பற்றிய இந்தச் செய்தி இல்லை.

சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் புத்தகத்திலும் இந்தச் செய்தி இல்லை.

கவிஞர் கருணானந்தம் எழுதிய தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற நூலிலும் இந்த செய்தி இல்லை.

சின்னக் குத்தூசி எழுதிய காந்தியடிகள் கட்டளைப்படி நடந்ததா வைக்கம் போராட்டம் என்ற நக்கீரன் கட்டுரையிலும் இந்தச் செய்தி இல்லை.

சுப.வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை.

பாரதி அன்பராக அறியப்படும் ஞாநி, ஜூனியர்விகடன் இதழில் எழுதிய ‘அவர்தாம் பெரியார்’ என்ற கட்டுரையிலும் இந்தச் செய்தி இல்லை.

மங்கள முருகேசன் என்ற ஆய்வாளர் மட்டும் இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.

பாரதிக்குப் பாதகமில்லை. வரலாறு, ஆதாரம் என்று நீட்டி முழக்குகிறவர்களுக்குத்தான் ஒரு முக்காடு தேவைப்படுகிறது.

பாரதியாரை இவ்வளவுபேர் மறந்து விட்டார்களே என்று கலங்க வேண்டாம். இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த இளைஞர் கொலுவை நல்லூர் கு. முத்துக்குமார் எழுதிய கடிதம் வெளிவந்திருக்கிறது. அந்தக் கடிதத்திற்கு அவர் வைத்த தலைப்பு

‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய்
என் தமிழ் சாதியை….’

இது பாரதியார் எழுதிய ‘தமிழச்சாதி’ என்ற கவிதையின் பாதிப்பு.

வைக்கம் விஷயம் பற்றி அடுத்த வாரம் மேலும் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

சேவை செய்யாமல், பரம ஏழையுடன் தன்னை இனங்காணாமல் இருப்பவருக்குத் தன்னையுணர்தல் சாத்தியமில்லை என்பது என் கருத்து.

– மகாத்மா காந்தி / யங் இந்தியா / 21.10.1926 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 10. வீரமணிக்கு உதவும் விஞ்ஞானக் கதை

tiscoஇந்தியாவின் தொழில் வளர்ச்சி, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்டது. போர்முனையில் பதுங்கு குழிகள் அமைப்பதற்கு மணல் மூட்டைகள் தேவைப்பட்டன. அதன் விளவாக இந்தியச் சணலின் விலை அதிகரித்தது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. ஆயுதங்களுக்காகவும் ரயில்வேயின் பயன்பாட்டுக்காகவும் இந்திய எஃகின் தயாரிப்பு கூடியது.

போருக்கு முந்தைய காலங்களில் ஆங்கிலேயர்கள் இந்திய எஃகின் தரத்தைப் பற்றிக் கேலி பேசினார்கள். அப்போது இந்திய ரயில்வேயின் தலைமைக் கமிஷனராக இருந்த சர் பிரடெரிக் அப்காட், “டாடா தொழிற்சாலையில் தயாராகும் தண்டவாளங்கள் மொத்தத்தையும் தன்னால் கடித்து விழுங்க முடியும்” என்று வீராப்பாகப் பேசினார். ஆனால் இது அதிகநாள் நீடிக்கவில்லை.

1914ல் மெசபடோமியா ரெயில்வேயிற்காக 2500 கி.மீ. அளவுக்கு டாடா நிறுவனம் தயாரித்த தண்டவாளங்கள் பிரிட்டிஷ்காரர்களால் வாங்கப்பட்டன. “அப்காட் தான் சொன்னபடி செய்திருந்தால் அவருக்கு அஜீரணம் ஏற்பட்டிருக்கும்” என்று டாடா தொழிற்சாலையில் பேசிக் கொண்டார்கள்.

– பக்.64 / இமாஜினிங் இந்தியா / நந்தன் நிலேகனி / பெங்குவின் பதிப்பகம்.

தொழிற்போட்டி சூடு பிடித்திருக்கும் இன்றைய சூழலில் ஜப்பானிய கார் கம்பெனிகள் டாடா எஃகைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் 50 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்து, 400 கோடி டாலர் வரும்படி டாடா ஸ்டீலுக்கு. இதை எழுதிக் கொண்டிருக்கும்போது டாடாவின் தயாரிப்பான ‘நேனோ கார்’ பற்றிய செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

bharatiநான் பாரதியாரை நினைத்துப் பார்க்கிறேன். “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே….” என்று பாரதி எழுதியது 1919ல். நவ இந்தியாவின் எழுச்சியை அகக்கண்ணால் கண்டவர் அவர். ‘சுதேசித் தொழிலுக்கு பிரிட்டிஷ் அரசு போட்ட முட்டுக்கட்டைகள்’ பற்றியும் பாரதி கட்டுரை எழுதியிருப்பதாக நண்பர் ஹரிகிருஷ்ணன் சொல்கிறார். பாரதியை நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்; அவர் தோய்ந்து பார்த்திருக்கிறார்.

பாரதியார் பாடல்கள் குறித்த பதிவு பகுத்தறிவாளர்களால் எப்படி இருட்டிப்பு செய்யப்படுகிறது என்பதை சென்ற பகுதியில் பார்த்தோம். பாரதிக்கு இருட்டடிப்பால் பாதகமில்லை என்பதையும் பார்த்தோம்.

“இந்தியாவிலேயே முதல் முறையாக மனித உரிமைகளுக்காக சமுதாய உரிமைகளுக்காக – போராட்டம் ஒன்று வெடித்தது என்று சொன்னால் – அது கேரளத்து ‘வைக்கத்’தில்தான் என்பது சமுதாயப் பார்வையோடு சரித்திரம் எழுதுபவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடியதாகும்.”

“வைக்கத்தில் தந்தை பெரியாரவர்கள் நடத்தியது மாபெரும் மனித உரிமைப் போராட்டம். பெரியார் அவர்கள் போராட்டம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னரே அதில் கலந்து கொண்டார் எனினும் அந்தப் போராட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டி – போராட்டம் வெற்றிபெறக் காரணமாக இருந்தவர்”

பக். 13

என்கிறார் கி.வீரமணி / காங்கிரஸ் வரலாறு – மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.

‘ஆலய நுழைவை அண்ணல் காந்தி செய்தார், காங்கிரஸ் முதலமைச்சர் இராஜாஜி சட்டமாக்கினார்; சி.பி. இராமசாமி திறந்து வைத்தார்’ என்றெல்லாம் பேசப்படுகிறதேயன்றி ஆலய நுழைவை நடைமுறைப்படுத்திப் போராட்டம் நடத்தியவர்கள் சுயமரியாதை இலக்கத்தவர்தாம் என்பதை மறந்து விடக்கூடாது.

பக்.228

என்கிறார் மங்கள முருகேசன் / சுயமரியாதை இயக்கம்.

மனித உரிமைகளுக்காக முதலில் போராடியது ஈ.வே.ரா.தான் என்று அடித்துப் பேசிகிறார் வீரமணி. அந்தப் பெருமையில் அடுத்தவருக்கு பாத்யதை கிடையாது என்று துடிக்கிறார் மங்கள முருகேசன்.

இந்த ஆவேசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் போராடியதில் ஈ.வேராவுக்கு தலைமைப் பீடம் உண்டா?

அவர் எச்சமயத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகவே இருந்தாரா? அனைத்துப் போராட்டங்களிலும் அவர் ப்ரசன்னமாக இருந்தாரா என்பதை நாம் ஆராயவேண்டும்.

இந்த உரிமைக்கு உரியவர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அவர்கள் சார்பாக அன்பு. பொன்னோவியம்.

அன்பு. பொன்னோவியம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பணி செய்தவர்; ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டவர்; பெளத்த நெறியில் அறிஞர்; பழங்குடி மக்களுக்காகப் பாடுபட்டவர். இவருடைய கட்டுரைகள் நிறைந்த நூல்: ‘உணவில் கலந்திருக்கும் சாதி’.

அன்பு.பொன்னோவியத்தின் காலத்திற்குப் பிறகு டிசம்பர் 2007ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அணிந்துரை கொடுத்திருக்கிறார்.

வீரமணிக்கு மறுமொழியாக அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுத்திருக்கிறேன்:

வைக்கம் போராட்டம், தாழ்த்தப்பட்டோருக்கும் ஈ.வேராவுக்கும் ஏற்பட்ட உரசல்கள் பற்றி இங்கே சொல்லப்படுகிறது.

1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து ‘முரசொலி’ பொங்கல் மலரில் கார்ட்டுன் வந்தது. அதற்கு எதிராக ‘நாத்திகம்’ வார இதழில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்திற்கு அன்பு.பொன்னோவியம் எழுதிய மறுமொழியும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

• பெரியார் ஈ.வேரா அவர்களக் காங்கிரஸ்காரராகவும் நீதிக்கட்சியினராகவும் சிறப்பிப்பார்கள்… காங்கிரசில் இருந்த ஐந்தாண்டுகளில் அவர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்று கூற ஒன்றுமில்லை. 1929 வரை தனித்தலைவர் இல்லாதிருந்த நீதிக்கட்சியை ஆதரித்த காலம் ஐந்தாண்டுகளிலும் அவரது தாழ்த்தப்பட்டோருக்கான பணிகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 1938ல் நீதிக்கட்சியில் பொறுப்பேற்று 1944ல் திராவிடர் கழகமாக மாறிய ஆறாண்டு கால வரலாற்றிலும் தாழ்த்தப்பட்டோருக்காகப் பேசினாரா போராடினாரா என்று சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
• நாடார் குல மக்களின் அத்தகைய நிலைக்கும் அவர்களது கோயில் நுழைவு போராட்டத்திற்கும் பெரியார் அவர்கள் போராடினார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியாது. நாடார் மக்களின் போராட்டம் 1871ல் தொடங்கி 1920ல் முடிவு பெற்றது. 1920ல்தான் பெரியார் அரசியலில் நுழைய நேரிட்டது.
• 1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதைத் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடினார் என்று மிகைப்படுத்துவது அதிகப்படியான கருத்தாகும். தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டத்தை பெரியார் ஏன் நடத்தவில்லை என்ற கேள்வியைத்தான் அது தோற்றுவித்தது.
• 1938 ஆகஸ்டில் சுயமரியாதைக் கூட்டம் ஒன்றில் தாழ்த்தப்பட்டோர் தலைவி. திருமதி. மீனாம்பாள் சிவராஜ் உரையாற்ற சிறிது காலம் தாமதமாக வர நேர்ந்தது. இடையில் மேடையில் இருந்தவர்கள் பேசவர இருப்பவர் சாதியைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். கொதிப்படைந்த மீனாம்பாள் சிவராஜ் சு.ம.காரர் என்றால் சுத்த மடையர் என்று சொல்லிவிட்டாராம்.
• பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களை சாடி பழித்துப் பேசியிருக்கிறார். 19.06.1947 பெரியார் பேச்சும் 24.04.1958 விடுதலை தலையங்கம் போன்றவைகளைய்ம் சான்றாகக் கூறலாம். அவை சில சமயங்களில் நேரிடையாகவும், சூசகமாகவும் இருக்கும்.

அன்பு. பொன்னோவியத்தின் வாதங்களைக் கேட்டோம். வைக்கம் விஷயம் இதோடு நிறைவு பெறாது. இன்னும் சிலரைச் சந்திக்க வேண்டும். அதை அடுத்த பகுதியில் வைத்துக் கொள்ளலாம்.

உள்ளே இறங்க இறங்க வரலாற்றின் பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதுவரை கொடுத்த விவரங்களே வீரமணிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும்.

பாரபட்சமின்றி செய்யப்படும் ஆய்வு அவருக்கு எதிராகவே இருக்கிறது. என்னதான் எதிராளி என்றாலும் யுத்த தர்மப்படி அவர் கையறு நிலையில் இருக்கும் போது நாம் கணை தொடுக்கக் கூடாது.

h.g.wellsசூழ்நிலையையும் ஆவணங்களையும் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அது அவருக்கு உதவக்கூடும். வீரமணிக்கு உதவக்கூடியது விஞ்ஞானக் கதை.

எச்.ஜி.வெல்ஸ் என்ற ஆங்கிலப் படைப்பாளி ‘டைம் மிஷின்’ என்ற புனைகதையை எழுதினார். கதைப்படி, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் அலெக்சாண்டர் ஹார்ட்டெகன். கடந்த காலத்திற்குப் பயணம் போகும் வாகனத்தைக் கண்டு பிடிக்கிறார் அவர். அவருக்கு ஒரு காதலியும் உண்டு.

அந்த வாகனம் கிடைத்தால் வீரமணிக்குப் பயன்படும். காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து தனது கட்சிக்கு இடையூறான விஷயங்களை அகற்றி விடலாமே.

மேற்கோள் மேடை:

sringeri acharyaபொது மக்களுக்காக இருக்கும் கிணறு, குளம், பிரார்த்தனைக் கூடங்கள் முதலியவற்றை இன்னார்தான் உபயோகிக்கலாம், இன்னார் உபயோகிக்கக் கூடாது என்று தடுக்கக் கூடாது. அது போன்று தடுப்பவர்களுக்குத் தண்டனை அளித்தாலும் தவறில்லை.

– சிருங்கேரி பீடம் சங்கராசாரியார்‚ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்
பக்.49 / ஜகத்குரு பதிலளிக்கிறார் / வித்யா தீர்த்த ஃபவுண்டேஷன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard