அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 1 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
Prof.Rajam01
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின
முதல் கையேடு – 1
முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி …
ஆம் … பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய “இலக்கணம்” அனைத்துமே “கையேடு”களே.
20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே.
இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லும் கதைகளும், மொழி/சமூக/சமய வரலாறும் தலைமேல் வைத்துக் கும்பிடத்தக்கவை. இவற்றின் உண்மையான, அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் …
“இது தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டவில்லை; திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை.” “இதில்ஒலியியல்(phonology) சரியாயில்லை; ஒலியன்(phonetics) சரியாயில்லை” “இந்தச் சொல்லின் வேர்ச்சொல் இது; இதை இந்தப் பாதிரி புரிந்துகொள்ளவில்லை” … என்று களத்தில் இறங்காமல், மேலே சேறு படாமல், தந்தக் கோபுரத்தில் அமர்ந்துகொண்டு,வெதுப்பி(உரொட்டி) கிடைக்காவிட்டால் ‘ அணிச்சல்(இனிமா/cake)’ தின்னட்டும் என்ற வகையில் “திறனாய்வு” செய்கிறவர்களுக்கு இந்தக் கையேடுகளையும் அவை உருவான சூழலையும் நேரிய வகையில் புரிந்துகொள்ள இயலாது!
அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், சரியா! அவர்கள் சுற்றிச் சுற்றி வந்து குழப்பியடித்தால் கேளுங்கள்: “அம்மாமாரே, ஐயாமாரே, அந்தப் பாதிரிமார் நம் மொழிகளைப் படிக்க முயன்று துன்புற்ற அந்தக் காலத்தில்…அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்யாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?”
அன்றீக்குப் பாதிரியாரின் நூல்கள்: அறிமுகம்:
நம் தமிழருக்கு “முதல்” என்பதிலும் “கடைசி” என்பதிலும் மிகுந்த ஆர்வம்! முதல் பிள்ளை/தலைச்சன், கடைக்குட்டி; முதல் நூல், கடைசி நூல்; …இப்படி.
அதனால் எனக்கும் இந்த “முதல்” பற்றிய கிறுக்கு பிடித்துவிட்டது! இங்கே நான் சொல்லியிருப்பது தமிழில் ஒரு “முதல்” நூல்!
ஆமாம். “முதல்” என்ற நடப்பு நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.
இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறிய நூல் தமிழில், இரண்டாவதாக அச்சேறிய நூல் தமிழில் … இதெல்லாம் பற்றிப் பல வகை விளக்கங்களைப் பலரும் எழுதிவிட்டார்கள், பேசிவிட்டார்கள். அதெல்லாம் ஊர் முழுவதும் நாடு முழுவதும் இணைய முழுவதும் எதிரொலித்துக் கிடைக்கிறது. இனியும் நான் எழுதினால் பேசினால் அரைத்த மாவை அரைத்து விழுங்கிக் கக்குவது போல ஆகிவிடும்.
ஆனாலும் … அச்சேற்றப்பட்ட அந்த “முதல், இரண்டாவது” நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ஒரு “முதல்” கையேடு பற்றி இதுவரை யாரும் கண்டுகொண்டு, பேசி, பாராட்டியதாகத் தெரியவில்லை. எனவே நானே “முதல்” ஆளாக இதைச் செய்யத் துணிகிறேன்! )
இந்தக் கையேடு என்றிக்கு என்றிக்கியூசு/அன்றீக்கெ அன்றீக்கசு (Henrique Henriques; Anrique Anriquez) என்ற ஒரு போர்த்துக்கீசியப் பாதிரியாரால், தமிழ் மொழியைப் பிற போர்த்துக்கீசியப் பாதிரிமாருக்கு விளக்குவதற்காக, தாளில் (paper) கருப்பு மையில் கையால் எழுதப்பட்டது. இந்த முயற்சிக்கு உதவிய தாள்கள் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டன என்று கேள்விப்பட்டேன். அன்றீக்கு அடிகளார் கி. பி. 1548~1549-ஆம் ஆண்டுகளில் இந்தக் கையேட்டை உருவாக்கினார்.. நுணுக்கமாகப் பார்க்கவும் — இது உருவான காலம் 1548~1549. எனவே, அச்சில் ஏறிய தமிழ் நூல்களுக்கெல்லாம் இது முந்தியது!
பின்வரும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும்:
கார்த்திலா என்பதுவே கி.பி. 1554-இல் முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல் (Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554). இறைவணக்கம் பற்றியது. ஆனால் இது தமிழ் எழுத்தில் இல்லை, உரோமன் எழுத்தில். அச்சான இடமும் தமிழகம் இல்லை; போர்த்துக்கலில் இலிசுபன்(Lisbon) என்ற இடத்தில்.
முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல்கள் — தமிழ் எழுத்தில்; கொல்லத்திலும் கொச்சியிலும் தூத்துக்குடியிலும் எனப் பின்வருமாறு: தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio do Saluador, Quilon, 20 Febraruy, 1577) — கி.பி. 1577
கிரீசித்தியானி வணக்கம் (Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de Deos, Cochin, 14 November, 1579) — கி.பி. 1579
அடியார் வரலாறு (Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586) — கி.பி. 1586
நான் குறிப்பிடும் கையேடு (தமிழ் மொழியைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்குவது) — கி.பி. 1548~1549
இப்போது சொல்லுங்கள் — அயலவரால் எழுதப்பட்ட “முதல் தமிழ் நூல்” எது என்று!
இந்தக் கையேட்டை அன்றீக்கு அடிகளார் “Arte Da Lingua Malabar” என்று குறிப்பிட்டார். “மலபார் மொழியின் கருவி; மலபார் மொழிக்குத் திறவுகோல்” என்றும் இன்றைய நாட்களில் உருவாகிவரும் “30 நாட்களில் தமிழ்” போன்ற ஒரு கையேடு என்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.
இயேன் எயின்-Jeanne Hein
அண்மைக்கால முயற்சி:
அன்றீக்கு அடிகளாரின் இந்தக் கையேட்டைத்தான் ஓர் அமெரிக்கப் பெண்மணியும் (Jeanne Hein; இப்போது அகவை 94+) நானுமாகச் (V.S. Rajam; இப்போது அகவை 70+) சேர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளோம்.
thamizhkaiyedu01
எல்லாம் வல்ல இணைய அறிஞர்களே, அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய மொழியில் அந்தக் காலத் தமிழை (16-ஆம் நூற்றாண்டுத் தமிழை) விளக்கி அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய-தமிழ் எழுத்துகளில் எழுதிய பாதிரியாரின் கையேட்டைப் படித்துப் புரிந்துகொள்வது எளிதான வேலையில்லை, நம்புங்கள்! நம்ப முடியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை! அடம் பிடிப்பவர்கள் இருந்தால் … பழைய போர்த்துக்கீசியக் கையேட்டிலிருந்து ஒரு பத்துப் பக்கம் அனுப்பிவைக்கிறேன். அந்தப் பக்கங்களை அவர்கள் மனம் போன போக்கில் மொழிபெயர்த்துத் தமிழ்கூறு நல்லுலகை உய்விக்கலாம்!
பல பல ஆண்டுகளாக, பல பல இடையூறுகளுக்கு நடுவில், மிகவும் பாடுபட்டு உழைத்து இந்த நூலை இன்று வெளியிட்டிருக்கிறோம். இதைச் செய்யத் தேவையான பண உதவி எங்களுக்கு எங்கிருந்தும் இல்லை. அதுவும், கடைசி ஆண்டுகளில் (2009-2013) எல்லாமும் என் தனி முயற்சியும் என் கைச்செலவும்.
இதை ஆர்வர்டு பல்கலைக்கழகக் கீழ்த்திசை நூல்களில் ஒன்றாகச் சேர்த்து அச்சிட்டு உதவிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்துக்கும், குறிப்பாகப் பேராசிரியர் விட்சல் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
(தொடரும்)
http://mytamil-rasikai.blogspot.in/2013/03/1.html
pirar-karuvuulamஇலக்குவனார் திருவள்ளுவன்
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:35:56 PM
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:58:15 PM
உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில், பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை. ஒருவர் சொல்வது ஒருவருக்குப் புரியாத நிலை. அவர்கள் ஏன் வந்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெளிவாகத் தெரியாத நிலை.
இந்த நிலையில் … வந்து சேர்ந்த அயலவரைத் தயக்கமில்லாமல் தாரை தப்பட்டை முழக்கத்தோடு மாலை போட்டு வரவேற்றுத் தமிழக விருந்து கொடுத்து … “ஐயா, வந்தீர்களா?? பசியாறினீர்களா?” என்றா கேட்பீர்கள்?
அயலவனுடைய கால் தமிழ் மண்ணில் பட்டபோதே … வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற எல்லாமே தொடர்ந்திருக்கும், இல்லையா?
முதலில் வந்த அயலவரைத் தன்பால் ஈர்த்த தென்னகம் இரண்டு பெருஞ்சிறப்புடைத்து: தென்மேற்குக் கடற்கரைப் பக்கம் கருமுத்து (கருமிளகு/குறுமிளகு) + தென்கிழக்குக் கடற்கரைப் பக்கம் வெண்முத்து.
ஆழ்கடலிலிருந்து வெண்முத்துஎடுத்துத் தரும் உள்ளூர்த் தமிழ் மக்களுக்குப் (= பரவருக்குப்) பகைவர்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களைத் தங்கள் நாட்டு அரசரின் குடிமக்களாக மாற்றவேண்டும்; அதற்கு முன்னோடியாக அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவேண்டும். இதுவே அயலவராய் வந்த போர்த்துக்கீசியரின் எண்ணம்; குற்றமில்லை, நேரியதே.
அப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் போர்த்துக்கீசியப் பாதிரிமாரும் நம் மண்ணில் கால் வைத்திருக்கிறார்கள்.
அப்படி வந்த பாதிரிமார்கள் பலரில் முன்னுக்குத் தெரிந்த பெயர்கள் சில: ஃபிரான்சி சு சேவியர், கிரிமினாலி, அன்றீக்கு அடிகளார்.
ஃபிரான்சிசு சேவியர் நெடுநாள் தமிழகத்தில் தாக்குப் பிடிக்கவில்லை. அன்றீக்கு அடிகளாருடன் இன்னும் சில பாதிரிமாரை இருக்கச் செய்து வேறிடம் போய்விட்டார். பின்னும் தென்னகத் தொடர்பு விடவில்லை; கோவாவில் அவருடைய இறப்புடலின் கூறுகள் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. [நேரில் கண்டு வணங்கிய பேறு எனக்கும் உண்டு.]
அன்றீக்கு அடிகளாருடன் வந்த கிரிமினாலி அடிகளார் உள்ளூர்க் கலவரத்தில் கொலைப்பட்டார்.
அதன் பிறகு சேவியரின் மேற்பார்வையில் அன்றீக்கு அடிகளார் தமிழக முத்துக்குளித்துறையில் கிறித்துவ சமயம் பரப்பும் பணியைச் செய்யவேண்டிய நிலை.
கல்லையும் மண்ணையும் கும்பிட்டுக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவக் கோட்பாடுகளை எப்படி விளக்குவது?
இரண்டு பிரிவினரும் (தமிழர் + அயலவர்) தங்கள் உடல் உறுப்புகள் செய்யும் செயல்களைச் செய்து காட்டி, ஒவ்வொரு செயலையும் அடுத்தவர் எப்படிச் சொல்கிறார்கள் என்று காதால் கேட்டுத் தாங்களும் அப்படியே சொல்ல முயற்சி செய்யலாம்.
ஆனால் … உள்ளம் மட்டுமே உணர்ந்த இறைத் தத்துவங்களை எப்படி விளக்குவது?
காட்டாக … கிறித்துவக் கோட்பாடுகளான மும்மை, விழுமிய கருதுகோள் (Trinity, Immaculate conception) போன்றவற்றை உள்ளூர் மக்களுக்கு எப்படி விளக்கி அவர்களை நம்பச்செய்வது?
நம்மூர்க்காரர்களிடம் ஆயிரம் புராணக்கதைகள் இருக்கும்; மணிமேகலையின் ஆபுத்திரனைக் கேட்டுப் பாருங்கள். ஆனாலும் விழுமிய கருதுகோள்(‘Immaculate conception’) என்று ஒரு பாதிரியார் சொன்னபோது நம்மூர் ஆட்களுக்குப் புரிந்திருக்குமா? “ யோவ், யார் கிட்ட ஐயா, கதை விடுகிறாய்?” என்று நம்மூர் ஆட்கள் கேட்டிருப்பார்கள், இல்லையா? தொடர்ந்து … நம்பச் சொல்லிக் கசையடியும் கிடைத்திருக்கும், கலகமும் நடந்திருக்கும், இல்லையா?
இதற்காகவே உள்ளூர் ஆட்களை அரவணைத்து அவர்கள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும்.மொழிக்குள்ளே பண்பாடும் அடக்கம்.
அன்றீக்கு அடிகளாருக்கு இருந்த உதவியாளர் (interpreter) வேறு வேலை தேடிப்போய்விட்டார். [அந்த உதவியாளரும் ஒரு கலப்பில் பிறந்தவராகத்தானே இருந்திருப்பார்!]
அன்றீக்கு அடிகளாருக்குத் தமிழ்மொழியைத் தானே கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறித்துவப் போதனை செய்யும் பணியிலிருந்து சிறு ஓய்வு கேட்டுப் பெற்று, அல்லும் பகலுமாக உழைத்துத் தமிழைப் படித்தார்! பிறகு, தான் புரிந்துகொண்ட தமிழைத் தன்னைப் போன்ற பிற பாதிரிமாருக்கு விளக்குவதற்காகத் தன் மொழியில் எழுதிய கையேடுதான் ‘தமிழ்மொழிக் கருவி’ / Arte Da Lingua Malabar.
உள்ளூர் மக்களுடன் பழகி அவர்களுடன் பேசித் தனக்குப் புரிந்த தமிழைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியிருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் மொழியியல் ஆய்வாளருக்காக எழுதவில்லை! இந்த நிலையில் இவரைப்போய் … “நீர் ஏன் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டவில்லை? திருக்குறளைச் சுட்டிக் காட்டவில்லை? ஒலியனியலைச் சரியாகச் சொல்லவில்லை? … ” என்று குத்திக் குடைந்தால் … யாருக்கு இழப்பு?
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:37:17 PM
போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது.
கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம்.
நிற்க.
பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில் புழங்கிய தமிழைப் படித்துத் தான் புரிந்துகொண்டபடி அந்தத் தமிழைப் பிற பாதிரிமாருக்கு விளக்க வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இடையில் ஒரு பொதுக்களம் அமையவேண்டும். பொதுவான விளக்கமுறையும் தேவை. அதற்காக, இலத்தீன் மொழியின் இலக்கணம் இவருக்கு உதவுகிறது. இலத்தீன் இலக்கணக் கூறுகளின் வழியாகத் தமிழை விளக்குகிறார்.
தமிழ் எழுத்தும் ஒலிக்கும் முறையும், பெயர்ச்சொற்கள், பண்புப் பெயர்கள், வினைச்சொற்கள், சொற்றொடர் அமைப்பு … என்று பல தலைப்புகளில் எழுதுகிறார்.
தமிழ் ஒலிகளை விளக்கப் போர்த்துக்கீசிய எழுத்துகள் போதவில்லை; அதனால், சில வடிவங்களைத் தானே புதிதாக உருவாக்குகிறார்! அங்கே ஓர் ஓவியக் கலைஞனின் உள்ளம் வெளிப்படுகிறது! அப்படி உருவாக்கிய எழுத்துகளை நூல் முழுவதிலும் பயன்படுத்தவில்லை; பிற வகைச் சிக்கல்களைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்!
பெயர்ச்சொற்களை விளக்குவதில் சிக்கல் இல்லை. வினைச்சொற்களும் பண்புப் பெயர்களும் சிக்கல் தருகின்றன. “நல்ல” என்பதற்கும் “நல்லவன்” என்பதற்கும் இடையில் உள்ள வடிவ வேறுபாடும் கருத்து வேறுபாடும் குழப்பம் தருகின்றன!
வினையெச்சங்களும் வினைமுற்றுகளும் கால வேறுபாடு காட்டும்நுணுக்கம் குழப்பம் தருகின்றது.
தமிழில் இருக்கும் வடிவங்கள் தரும் குழப்பத்துக்கு மேல், இல்லாத வடிவைத் தேடும்போது வரும் குழப்பம் கொடுமையானது! தமிழில் “செயப்பாட்டு வினை”யைத் தேடுகிறார்; அது இங்கே இல்லை என்று புரிகிறது. ஆனாலும், இல்லாத கருத்தை விளக்க அவர் படும்பாடு புதுமை!
தமிழ்ச் சொற்றொடர் அமைப்பைச் சுருக்கமாகவே சொல்கிறார். “தமிழில் இப்படிச் சொல்கிறார்கள், இதை நாம் போர்த்துக்கீசியத்தில் இப்படிச் சொல்வோம்” என்று ஒப்பிட்டுச் சொல்வது மிக நல்ல முறை.
இயீன் ஃகைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கப் பெண்மணி, பங்குனி 04, தி.ஆ. 1950 / 1919-ஆம் ஆண்டு மார்ச்சு 17-ஆம் நாள் பிறந்தவர். மிக நல்ல முற்போக்கு எண்ணம் கொண்டவர். வியத்துனாம் போர்க்காலத்தில் எளியவர்கள் சார்பில் போராடியவர். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்தார்; பிறகு இல்வாழ்க்கை.
இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவியது எப்படி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயீன் அம்மையாரைக் கத்தோலிக்கப் பாதிரிமார் பற்றிய படிப்பில் ஈர்த்தது. யூதராகப் பிறந்த ஒருவர் (அன்றீக்கு அடிகளார்) சட்டப் படிப்பு (Cannon Law) படித்து, இயேசு அவையில் (Society of Jesus) சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றியது அவர் கவனத்தை ஈர்த்தது. மேற்கொண்டு அந்தப் பாதிரியைப் பற்றிப் படிக்கத் தொடங்கி, பல வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து, 1964-இல் அந்தப் பாதிரியின் வரலாற்றை எழுதத் தொடங்கினார்.
அப்போது, அந்தப் பாதிரி எழுதிய நூல்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார். பாதிரியின் ஒரு கையேடு (handwritten manuscript) பதிப்பிக்கப்படாமலே இருந்ததை அறிந்து, அந்தக் கையேட்டின் படி இருக்கும் இடத்தை (இலிசுபன், போர்த்துகல்) அணுகி அங்கேயிருந்து ஒரு படியை வாங்கி அதைப் படிக்கத் தொடங்கினார்.
ஆ, அப்போதுதான் வந்தது சிக்கல்!
சிக்கல் – 1
அன்றீக்கு அடிகளாரின் படைப்பு ஒரு கையேடு. பழங்காலப் (16-ஆம் நூற்றாண்டு) போர்த்துக்கீசியமும் பழங்காலத் (16-ஆம் நூற்றாண்டு) தமிழும் கலந்து எழுதப்பட்ட ஒன்று. பழங்காலத் தமிழைப் பழங்காலப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியது.
இயீன் அம்மையாருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்த இலத்தீன் மொழி ஓரளவு உதவி செய்தது. கணவர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததால் பிற பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. பல போர்த்துக்கீசிய அறிஞர்களைக் கலந்து பேசி ஒருவழியாக அந்தக் கையேட்டைப் புரிந்துகொண்டார். ஆனால் … பழைய தமிழ் குறுக்கிட்டது!
என்னுடன்தொடர்பு
1978-இல் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாவீது மெக்கால்பின் மூலமாக அங்கே முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்துகொண்டிருந்த என்னைப் பற்றி இயீன் அம்மையாருக்குத் தெரியவந்தது.
பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்ப்பதில் எனக்கு விருப்பம் இருக்குமா என்பதில் இயீன் அம்மையாருக்கு ஐயம். அதைப்பற்றி என்னைக் கேட்பதற்காகப் பிலடெல்ஃபியாவுக்கு வந்தார். தொல்காப்பியம்-பாணினி பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உடனே அவருடன் இணைந்து வேலை செய்ய ஒத்துக்கொண்டேன்.
அதன் பிறகு, நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர் ஊருக்குப் போவேன்; அவரும் அடிக்கடி நான் இருந்த ஊருக்கு வருவார். இப்படி இருவருமாக இணைந்து வேலை செய்து மொழிபெயர்ப்பை ஒருவழியாக 1980-இல் முடித்தோம்.
முடித்தோம் என்று எளிமையாகச் சொல்கிறேன். ஆனால், சிக்கலான சிக்கல்!
சிக்கல்-2
பாதிரியாரின் கையேடு பல இடங்களில் தெளிவாக இல்லை; தாளைப் பூச்சி அரித்த இடங்கள், மையின் கருப்புப் பூசல், அடித்தல் திருத்தல்கள், கொஞ்சம் போர்த்துக்கீசியம், கொஞ்சம் தமிழ் என்று இருக்கும் இடங்களே மிகுதி. “en” என்ற சொல் போர்த்துக்கீசியமா தமிழா என்று பார்த்தவுடனே சொல்லிவிட முடியாது! “chati” என்று எழுதப்பட்ட ஒரு சொல்லை எப்படிப் புரிந்துகொள்வது? சதி? சத்தி? சாதி? சாத்தி? சட்டி? சடி? சாடி? கதி? கத்தி? காத்தி? கடி? காடி? காட்டி? கட்டி? — இப்படிப் பல வகையிலும் நினைத்துப் பார்த்துத்தான் பாதிரியார் சொல்லவந்த கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்!
தமிழ் ஒலியைப் போர்த்துக்கீசிய எழுத்து வழியாகக் காட்டப்பட்ட இணைப்பைப் புரிந்துகொள்வது எளிமையாக இல்லை. பாதிரியின் கையேடு முழுவதையும் பற்பல முறைகள் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது! ஓரிடத்தில் உள்ள சொல்லுக்கு இன்னோர் இடத்தில் இருக்கும் சொல்லின் வடிவம் விளக்கம் தரும், இப்படி.
ஆனாலும் … “கூரைப்பாய் தோணிய்லெ இருக்கிது” “கோளி திண்டான்” என்று எங்கள் பாதிரி தந்த எடுத்துக்காட்டுகளைப் புரிந்துகொள்ளூம்போது கிடைக்கும் பெருமித மகிழ்வு இருக்கே … அதுக்கு இணையே இல்லை!!
இப்படியே எங்கள் முயற்சி தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள “அனைத்துலகத் தமிழ் ஆய்வுக்கூடம் (International Association of Tamil Research)” என்ற இடத்தில் எங்கள் நூலைப் பதிப்பிக்க இயீன் அம்மையார் விரும்பினார்.
அந்த ஆண்டு (1980) நான் என் முழுநேர ஆசிரியப் பணியைத் தொடரவேண்டி, இயீன் அம்மையாரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு மிச்சிகனுக்குப் புலம் பெயர்ந்தேன்.
1982-இல் மீண்டும் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பணிக்குத் திரும்பினேன்.
சிக்கல்– 3
1982-ஆம் ஆண்டில் செருமனியிலிருந்து ஒருவர் நம் பாதிரியாரின் கையேட்டைப் பதிப்பித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது! அதைக் கேட்டதும் இயீன் அம்மையார் ஊக்கம் இழந்தார்கள். நாம் செய்துவந்த வேலையை வேறு யாரோ ஒருவர் செய்து முடித்துவிட்டார், இனி நம் உழைப்புக்கும் செயலுக்கும் மதிப்பில்லை என்று போட்டது போட்டபடி … எங்கள் ஆய்வைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமும் ஊக்கமும் இழந்தார்.
என்னால் ஆனமட்டும் சொன்னேன்: “செருமனிப் பதிப்பாளர் நம் பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்க்கவில்லை. நம் முயற்சி மிகவும் வேறுபட்டது. ஊக்கம் இழக்க வேண்டாம்.“
1982-இலிருந்து புத்தக வேலையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே இயேன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக் குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும் என்னிடம் இருந்தன.
அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும் கிறித்துமசு வாழ்த்துகளும் மட்டுமே எங்கள் தொடர்பை வளர்த்தன. 2001-இல் என் அம்மா இறந்தபோது இயேன் அம்மையாரின் சொற்களே எனக்கு ஆதரவு. 1978-1988 ஆண்டுகளில் என் மகனைப் பிரிந்திருந்த காலத்திலும் இயேன் அம்மையாரே எனக்கு ஆறுதல். ஆனால் 1982-இலிருந்து புத்தகப் பேச்சு மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை.
2009-இல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்து மாநாட்டுக்குப் போகும் வழியில் என் மகனோடு சென்று அவரைப் பார்க்க விரும்பினேன். அவரும் “நீ எப்போது வருவாய் என்று காத்திருக்கிறேன், உன் மகனைப் பார்க்கவேண்டும்” என்றார். நான் புத்தக வேலைக்காகத்தான் வருவேன் என்றேன். சரி என்றார்! இந்தப் பேச்சு நடந்தது 2009 ஏப்ரலில். ஆனால், சரியான விமானத் தொடர்பு கிடைக்காததால் அவர் ஊருக்கு நாங்கள் போக முடியவில்லை.
2009 சூன், சூலை, ஆகத்து மாதங்களில் பேசியபோதெல்லாம் நான் அவரைப் பார்க்க வரவில்லை என்றும் என் மகனை அவருக்குக் காட்டாமல் வைத்திருக்கிறேன் என்றும் சொல்லி அன்போடு நொந்துகொண்டார்.
2009-இல் ஒரு முறை பேசியபோது உலகத்தோடு தொடர்பில்லாத முறையில் அவர் பேசிய மாதிரி தெரிந்து அதிர்ந்துபோனேன். பிறகு பேசியபோதெல்லாம் அதே நிலை. அப்போதுதான் மறதிநோய் (Alzhiemer’s disease) அவரைப் பீடித்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.
யாரோ அவர்களிடம் புத்தக வேலை செய்யவேண்டும் என்றால் பண உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதை மனத்தில் வைத்துக்கொண்டு நான் பேசியபோதும் யாரோ பணத்துக்காக அவரைத் தொல்லை செய்வதாக நினைத்துக் கூச்சல். மறதிநோய் முற்றிக்கொண்டே வந்தது.
பிறகு இயேன் அம்மையாரின் கணவர் என்னுடன் தொடர்புகொண்டு நாங்கள் எழுதிய எல்லாக் குறிப்புகளையும் எனக்கு அனுப்பிவைத்தார். அப்போது எனக்குக் கணி ணி அலுவலகத்தில் வேலை போய்விட்ட நிலை — நாங்கள் பலர் செய்துவந்த ஒரு செயல் திட்டம் கலைக்கப்பட்டு எங்கள் குழுவினருக்கு வேலை இல்லை.
மிகவும் நொந்துபோயிருந்தேன். மாத வருவாய் இல்லாத நிலையில் வீட்டை விற்க வேண்டிய நிலை வரலாம் என்று பழைய குறிப்பேடுகளையும் கட்டுரைகளையும் குப்பையில் போட நினைத்துக் கிளறிக்கொண்டிருந்த நேரம் 2010 உயிர்த்தெழு திருநாள்(Easter). ஏதோ உட்குரல் சொன்னது — இந்த முயற்சியைக் கைவிடாதே என்று. உடனே கடைக்கு ஓடினேன் அலகூடி(scanner) வாங்க! கடை அடைப்பு. மறுநாள் காலையில் போய் அலகூடி வாங்கி வந்து (அந்தச் செலவு மிகவும் பெரிய செலவு எனக்கு) எங்கள் கட்டுரைகளை மின்வருடத் தொடங்கினேன். நாங்கள் இந்தப் புத்தக வேலை தொடங்கிய காலத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி … இல்லை. பன்னாட்டு வணிகப் பொறி-ஐபிஎம் தட்டச்சுப்பொறி-யில் இயேன் அம்மையார் தட்டியதும் என் கையெழுத்துப் படிகளும் மட்டுமே! அனைத்துக் குறிப்பேடுகளையும் மின்னாக்கம் செய்வது பெரும்பாடு. அத்தனை ஆண்டுகள் பழசாகிப் போன தாட்களிலிருந்து கணினிக்கு எழுத்து ஏறுவதில் சிக்கல். அந்தச் சிக்கலைத் தாண்டி ஒருவழியாக 400+ பக்கங்களைக் கடைத்தேற்றினேன்!
அந்தப் பக்கங்களைப் படியெடுத்து(print பண்ணி) இயேன் அம்மையாரின் கணவருக்கு அனுப்பி, இதைத்தான் ஒரு புத்தக வடிவில் கொண்டுவரப்போகிறேன் என்று சொல்லி அவருக்கு ஊக்கம் கொடுத்தேன்.
இயேன் அம்மையாருக்கு அது புரிந்திருக்க வழியில்லை.
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:38:35 PM
2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி மும்முரமாகத் தொடங்கியது.
ஜீன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது.
ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.
சிக்கல் − 1
——————————
பாதிரியாரின் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கையெழுத்தை இந்தக் காலக் கணினிக்குள் கொண்டுவருவது பெரும்பாடாய் இருந்தது.
எனக்கு மிகவும் தேவையாக இருந்தது என்ன?
1. தமிழ் எழுத்தின் ஒற்றைக்கொம்பு. அதாவது, "கொ" என்ற வடிவில் முதலில் இருக்கும் கொம்பு மட்டும்.
2. "ர" என்ற எழுத்தில் நமக்கு வலதுபுறம் தெரியும் நெட்டைக் கோட்டின் கீழே நீட்சி இன்மை. அதாவது "கா" போன்ற நெடிலில் உள்ள துணையெழுத்துப் போல மட்டும்.
3. பழைய முறையில், 'யானைக்கொம்பு'டன் எழுதப்பட்ட "ணை, லை, ளை, னை" வடிவங்கள்.
4. பழைய முறையில் எழுதப்பட்ட "றா, னா" வடிவங்கள்.
ஏன் இந்தத் தேவை?
பாதிரியார் கொடுத்த எடுத்துக்காட்டுச் சொற்களை அவர் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தில் எழுதியதை அப்படியே காட்டத்தான்!
கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
கீழே உள்ளது பாதிரியாரின் கையேட்டில் ஒரு பக்கம்.
மேலே உள்ள பக்கத்தை இந்தக் காலக் கணினிக்குள் அகப்படுத்திய என் முயற்சி இங்கே:
இன்னும் சில பக்கங்கள்:
இதுபோலப் பல பல பக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை!
தமிழ் ஒருங்குறியெழுத்துக் கோவை (unicode), கணினியின் வகை (Windows, Apple Mac), போன்ற எல்லாமேஉதவியைவிடத் தடையைக் கூடுதலாகக் காட்டின.
மலேசியாவில் முத்து நெடுமாறனைக் கேட்டு அவருடைய தமிழ் ஒருங்குறி எழுத்துக் கோவையை வாங்கிக்கொண்டேன். அது மட்டும் போதவில்லை.
நண்பர் மணிவண்ணனிடம் பாதிரியாரின் கையேட்டுப் பிரதியிலிருந்து சில பக்கங்களைக் கொடுத்தனுப்பித் தமிழகத்தில் உதவி கிடைக்குமா என்று கேட்டேன்.
மருத்துவர் தி. வாசுதேவனின் (திரு. திவாஜியின்) மகனார் ஶ்ரீரமணசர்மா, மதுரை உதயசங்கர், வினோத் ராஜன் … எல்லாரும்உடனடியாக உதவி செய்ய முன்வந்தார்கள். ஆனால் அவர்கள் எனக்காக உருவாக்கிய எழுத்துக் கோவையைப் பயன்படுத்த இயலவில்லை -- என் கணினியில் அந்தக் கோவையைப் பயன்படுத்த சுற்றுவட்ட முயற்சி தேவையாக இருந்தது; அதற்கேற்ற நேரமும் காலமும் எனக்கில்லை.
ஆகவே, என்னிடம் இருந்த இரண்டு மூன்று வகைத் தமிழ் எழுத்துக் கோவையை ஒட்டிப்போட்டு எப்படியோ எனக்குத் தேவையான எழுத்துக் கோவையை உருவாக்கிக்கொண்டேன்.
சிக்கல் -- 2
-------------------
பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:52:51 PM
பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!
ஒருவருடைய கையேட்டுப் பிரதியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே!
சில பக்கங்களைப் பாருங்கள்:
இப்படியே, பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்த்ததோடு மட்டுமில்லாமல், புத்தக வடிவில் உருவாக்கும் முயற்சியும் தொடர்ந்தது.
சிக்கல் − 3
--------------------
புத்தகம் என்றால் ... பக்கங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அதுக்கு உரிய பொருளடக்கம் (Table of Contents), அடிக்குறிப்பு (foot notes), சொற்களைத் தேடும் குறிப்பு (Index) ... இன்ன பிற வேண்டும். அவற்றை ஒரு "புத்தக" வடிவில் கோக்க வேண்டும். அதுக்கு உரிய மென்பொருள் (word processing software) தேவை.
(தொடரும்)
-- Edited by Admin on Sunday 10th of May 2015 04:53:55 PM
ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.
எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் Henry Hoenigswald சொல்வார்: Index is the place where you should start when you want to read/use a book seriously.
இந்த இரண்டு பகுதிகளையும் மின்பொறியின் உதவி இல்லாமலே பழைய காலத்தில் எப்படித்தான் உருவாக்கினார்களோ! அதுவும் மின்விளக்கு வசதி இல்லாமல் பிற பல சிக்கல்களுக்கு நடுவில் அவர்கள் உருவாக்கிய நூல்களுக்காக நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது!
நிற்க.
சிக்கல் − 3
--------------------
புத்தகம் என்றால் ... பக்கங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அதுக்கு உரிய பொருளடக்கம் (Table of Contents), அடிக்குறிப்பு (foot notes), சொற்களைத் தேடும் குறிப்பு (Index) ... இன்ன பிற வேண்டும். அவற்றைப் பயனருக்காக வேண்டி ஒரு குறிப்பிட்ட வடிவில் கோக்க வேண்டும். அதுக்கு உரிய மென்பொருள் (word processing software) தேவை.
எனக்குத் தேவையான மென்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரணம்: ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்து உருவக் கோவைகள், பொருளடக்கம்+சொல் தேடும் குறிப்பு இவற்றை உருவாக்குவது, பிடிஎஃப் கோப்பு உருவாக்குவது.
ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த நைசஸ் மென்பொருள் (Nisus Software, Southern California)இந்தக் குறிப்பிட்ட முயற்சிக்கு உடனடியாக உதவவில்லை; பல கோளாறுகள்.
கோளாறுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் (Nisus Software, Southern California) தெரிவித்தேன். கோளாறுகளைச் சரி செய்து உதவினார்கள். நான் அவ்வப்போது தெரிவித்த கோளாறுகளைச் சரி செய்து, அதனாலேயே அப்போது இருந்த நைசஸ் மென்பொருளுக்கு அடுத்த பிரதியை (next version) உருவாக்கினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளூங்களேன்! வாழ்க நம் புத்தக முயற்சி என்று நினைத்து மகிழ்ந்தேன்.
இதோ, சில பக்கங்கள்:
சிக்கல் - 4
----------------
நைசஸ் மென்பொருள் நிறுவனத்தாரின் உதவியால் மகிழ்ச்சி ஒருபுறம்; புத்தக வெளியீட்டில் காலத் தாழ்ச்சி என்ற நிலையைமட்டுமே புரிந்துகொண்ட நார்வினின் (ஜீன் அம்மையாரின் கணவரின்) கவலை குறித்து என்னை வாட்டிய மனநோவு ஒரு புறம்.
நார்வினுக்குக் கணினி பற்றி ஒன்றுமே தெரியாது. கணினி தெரிந்த பிறருக்கும் நான் சொன்னது புரியவில்லை. எல்லாருக்கும் என்ன புத்தகம் என்று தெரிந்துகொள்வதில் மட்டும் ஓர் ஆர்வக் குடைச்சல்!
"யாரை நம்பி இந்த முயற்சியில் இறங்கினேன், போங்கடா போங்க" என்று நான்பாட்டுக்கு வேலை செய்துகொண்டேயிருந்தேன்.
சிக்கல் முடிவு -- புத்தக வெளியீடு -------------------------------------------
ஒரு நாள் நல்ல முடிவு கிடைத்து, ஒருவழியாக ஒரு பிடிஎஃப் கோப்பைப் பதிப்பகத்தாருக்கு அனுப்பிவைத்தேன்!
பதிப்பகத்தாரும் என் வேண்டுகோளின்படி ...புத்தகத்தின் ஒரே ஒரு படியை அவசர அவசரமாக ஜீன் அம்மையாருக்காகத் தயார் செய்து அனுப்பினார்கள். பிறகு பொதுமக்களுக்கான படிகளைத் தயார் செய்து வெளியிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி!
16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே "மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)" என்ற கையேடு. அது போர்த்துக்கீசிய மொழியில் தமிழை விளக்கி எழுதப்பட்டது. அதை ஜீன் அம்மையாரும் (Jeanne Hein) நானுமாகச் (V.S.Rajam) சேர்ந்து மொழிபெயர்த்து இப்போது வெளியிட்டிருக்கிறோம். இது தொடர்பாக ஜீன் அம்மையாரின் வேலை தொடங்கியது 1964-இல். பிறகு 1978-இல் என்னோடு சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலை தொடர்ந்தது. மொழிபெயர்ப்பு வேலை முடிந்தது 1982-இல். ஆனால் முழுப் புத்தகமாக வெளியிட உடனே இயலவில்லை, பல பல சிக்கல்கள். சிக்கல்களை முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.
ஒரு சில கருத்துகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
1. அன்றீக்குப் பாதிரியார் இந்தத் தமிழ்க் கையேட்டை உருவாக்கிய காலச் சூழ்நிலையைத் தெரிந்துகொள்ளலாம். அது தமிழக வரலாற்றில் ஒருகுத்துக்கல்.
2. தொல்காப்பியம், நன்னூல் போன்ற மரபிலக்கணங்களைத் தொடாமல் இலத்தீன் இலக்கணக்கூறுகளின் வழியே தமிழை விளக்கியிருப்பது முதல் முதலாக நமக்குத் தெரியவரும் புது முயற்சி. இந்த முயற்சியே பின்வந்த "அயலவர் படைத்த" தமிழ் இலக்கணங்களுக்கு முன்னோடி.
3. வடமொழிச் சார்பு மிகுதியும் இல்லாத தமிழை இந்தக் கையேடு விளக்குகிறது. மிகச் சில வடமொழிச் சொற்களே இந்தக் கையேட்டில் உள்ளன.
4. 16-ஆம் நூற்றாண்டில், தமிழக முத்துக்குளித்துறையில் தமிழ் எப்படி எழுதப்பட்டது, தமிழ்ச் சொற்கள் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்று இந்தக் கையேட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
5. சில தமிழ் ஒலிகளின் வழி, 16-ஆம் நூற்றாண்டுப்போர்த்துக்கீசியம் எவ்வாறு ஒலிக்கப்பட்டதுஎன்றும் தெரிகிறது என்று ஜீன் அம்மையார் சொன்னார்கள்.
6. 16-ஆம் நூற்றாண்டில் தமிழக முத்துக்குளித்துறையில் வாழ்ந்த மக்களைக் குறிப்பிடும் பெயர்ச் சொற்களை (இயற்பெயர் அல்லாத 'கொல்லன்' 'தட்டான்' 'நாசுவன்' ... போன்ற பெயர்ச் சொற்களை) அன்றீக்கு அடிகளார் வகைப்படுத்தியிருக்கும் முறையிலிருந்து ... "சாதி" "இனம்" "தொழில்" அடிப்படையில் அப்போது வழங்கிய பெயர்களை அயலவர்கள் எப்படிப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள் என்று தெரிகிறது. இதை எங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். "சாதி" என்ற தமிழ்ச்சொல்லை "caste" என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அந்தச் சொல்லுக்கு அடிப்படை போர்த்துக்கீசியச் சொல்லான "casta" என்பது இங்கே தெரிகிறது. மேற்குக் கடல் வழியே முதல் அயலவர் வந்த இடம் தென்னாடு; அவர்களுடைய சமயத்தைப் பரப்புவதற்காக வாழ்ந்து பழகிய இடம் தமிழகம். அங்கே அவர்கள் பார்த்துப் பழகிய மக்களை அவர்கள் வகைப்படுத்தியபோதுதானே இந்த "casta" என்ற கருத்து உருவாகியிருக்க வேண்டும்?
7. "கிறித்துவத் தமிழ்" என்ற ஒரு வகைத் தமிழ் உருவாகி வந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
We are happy to announce a new volume of the Harvard Oriental Series (vol.76):
---------------------------------------------------------------
Jeanne Hein & V.S. Rajam
The Earliest Missionary Grammar of Tamil.
Fr. Henriques' Arte da Lingua Malabar:
Translation, History and Analysis
---------------------------------------------------------------
This grammar represents the spoken language of the South Indian Paravar fisher community of the mid-16th century. It uses Latin grammatical categories to describe the 16th century Tamil. H. Henriques' effort shows how Tamil was heard and written by a 16th century Portuguese.
The original was written in an older form of Portuguese in southern Tamil Nadu in 1549. The co-authors, Jeanne Hein and V.S. Rajam, have translated the Arte Da Lingua Malabar into English. They have also given the political context for the grammar and a brief analysis of it.
We are grateful that the long-expected translation and study can now be issued, due to the passionate and sustained efforts of V.S. Rajam, who has edited and completed this work that had for long been left unfinished due to Jeanne Hein’s illness.
The book will be released in a week or two.
MW
> ============
> Michael Witzel
>witzel at fas.harvard.edu> <www.fas.harvard.edu/~witzel/mwpage.htm>
> Wales Prof. of Sanskrit &
> Director of Graduate Studies,
> Dept. of South Asian Studies, Harvard University
> 1 Bow Street,
> Cambridge MA 02138, USA
>> phone: 1- 617 - 495 3295, fax 617 - 496 8571;
> my direct line: 617- 496 2990
A progressive grammar of the Tamil language revised by A.C. Clayton. 5th ed. Madras : Christian Literature Society, 1942; reprinted 1976
Arden, A.H.: A progressive grammar of the Telugu language. [4th ed. Madras] Christian Literature Society [c1937, 1975 printing].
Arden, Albert Henry: A companion reader to Arden's progressive tamil grammar: Madras : Society for promoting Christian knowledge, 1914-
Beschi, Constantino Giuseppe (1680 - 1747), a Jesuit priest,
Author of many Tamil literary works: 'kotuntamizh ilakkanam' (a work of tamil grammar), 'paramathma kuruvin kathai' (a piece of prose fiction), a Tamil-Latin dictionary, centhamizh ilakkanam (a grammatical work in Latin), 'Vaaman cariththiram' (a text book), 'tonnul vilakkam'; caturakaraathi, a tamil lexicon, 'veda vilakkam' (a prose), 'pethakamaruththal', vEthiyar ozhukkam'
Beschi, C.G: A grammar of the high dialect of the Tamil language called centamil, translated from the original latin by Benjamin Guy Babington. Thanjavur : Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library, 1974.
Beschi, C.G.: The adventures of Gooroo Paramartan: a tale in the Tamul language: accompanied by a translation and vocabulary, together with an analysis of the first story. By Benjamin Babington. London, J.M. Richardson, 1822; Reprint Cleveland : The Clerk's Press, 1916
Beschi, C G: Viramamunivar iyarriya Kitteriyammal ammanai. Madras, 1977.
Caldwell, Robert (1814-1891)
scholar of comparative study of dravidian languages, author of 'A comparative grammar of Dravidian Languages (1856)
Caldwell, R,: A comparative grammar of the Dravidian, or, South-Indian family of languages, London : Harrison, 1856.; Reprinted London, K. Paul, Trench, Trubner & co., ltd., 1913.
Caldwell, R: A comparative grammar of the Dravidian or South-Indian family of languages, 3d ed. rev. and edited by J.L. Wyatt and T. Ramakrishna Pillai. Madras, University of Madras, 1961.
Danielou, Alain (1907-1994)
A French national who spent many years in India discovering indian culture (language, music,...) and authored many works including translations of the epics cilappathikaaram and manimekalai.
Danielou, A.: Shilappadikâram, The Ankle Bracelet, of Ilanko Adikal, Translation from the Tamil with the collaboration of R.S. Desikan New Directions, New York, 1965; Penguin Classics, India, 1993
Danielou, A.: Manimekhalai, The Dancer with the Magic Bowl, Translated from the Tamil with the collaboration of T.V. Gopala Iyer, New directions New York, 1989
Danielou, A.: The Way to the Labyrinth, Memories from east and west, New York: New Directions, 1987
Danielou, A.: Virtue, Success, Pleasure and Liberation, Traditional India's social structures, Rochester, NY: Inner Traditions International, 1993
Danielou, A.: The Myths and Gods of India: Rochester, NY: Inner Traditions International, 1991
Danielou, A.: While the Gods play, : Rochester, NY: Inner Traditions International, 1987
Danielou, A.: Fools of God, Translation of one of the Tales from the Ganges, Hanuman Books, Madras and New York 1988
Fabricius, Johann Philip (1711-1791)
authored tamil translation of Old Testament 'CaththiyavEda pusthakam', also New Testament translation in Tamil and a 'Malabar-English Dictionary' (in association with JC Breithaupt).
Fabricius, J P.: A dictionary, Tamil and English, based on Johann Philip Fabricius's "Malabar-English dictionary". 3d ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Publishing House, 1910,1933.
J. P. Fabricius's Tamil and English dictionary. Based on Johann Philip Fabricius's Malabar-English dictionary. 4th ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Pub. House, 1972.
Henriques, Padre Henrique (1520-1600)
Portugese Missionary, author of first Tamil-Portugese Dictionary, first to set up a tamil press and print books in tamil script; printed 'thambiran vaNakkam' (1578), 'krichittiyaaNi vaNakkam' (1579), and Flos Sanctorum (1586)
Hooper, John Stirling Morley
Hymns of the Alvars by J. S. M. Hooper ... Calcutta, Association Press; London, New York [etc.] Oxford University Press, 1929.
Jensen, Herman (1842 - )
Jensen, H., Rev.: A classified collection of Tamil proverbs , Madras : Methodist Episcopal Publ. House ; London : Trubner, 1897.; Reprinted New Delhi : Asian Educational Services, 1982
Jensen, H: A dictionary of Tamil proverbs, Delhi, India : Mittal Publications, 1988.
Jensen, H: A practical Tamil reading book for European beginners, Madras : Memorial Press, 1882.
Lap, M.A
Lap, M.A.: Vocabulaire tamoul francais : contenant les mots tamouls d'un usage plus frequent, avec leurs sens francais les plus usites, New Delhi : Asian Educational Services, 1984.
Lazarus, John
Lazarus, J.: Tamil grammar : designed for use in colleges and schools , Madras : Printed by Addison, 1878.
Lazarus, John, Rev.: A dictionary of Tamil proverbs : with an introduction and hints in English on their meaning and application , New Delhi : Asian Educational Services, 1991.
Murdoch, John (1819-1904)
Murdoch, J.: Classified catalogue of Tamil printed books. With introductory notices., Compiled by John Murdoch., Edited by M. Shanmukham, Reprinted with a number of appendices & supplement. [Madras] Tamil Development and Research Council, Govt. of Tamilnad [1968].
Murdoch, J: Indian missionary manual : hints to young missionaries in India, 4th ed., rev. and enl. London : J. Nisbet, 1895.
Murdoch, J.: Caste : its supposed origin: its history; its effects : the duty of government, Hindus, and Christians with respect to it; and its prospects. 3d ed. London ; Madras : Christian literature society for India, 1896.
Murdoch, J: The Mahabharata : an English abridgment with introduction, notes, and review, New Delhi : Asian Educational Services,1987.
Murdoch, J: The religious history of India : for educated Hindus / compiled from Monier-Willimas, Max Muller, Muir...& other writers by John Murdoch. London ; Madras : Christian Literature Society for India, 1900.
Murdoch, J: Review of caste in India : a compilation of the ideas of leading thinkers, viz. Muir, Max Muller, Sherring, Wilson, Monier Williams, and Cornish; with a new introd. by K. L. Sharma. Jaipur : Rawat Publications, 1977.
de Nobili, Robert (1577 - 1656)
Italian jesuit priest (aka thathuva pothakar ), author of 'nanopathecam', 'aathma nirunyam', 'anna nivaranam' and 'thivviyamanthirikai'
Percival, Peter
Christian Missionary who compiled numerous tamil proverbs (ca. 5000) in tamil and also translated the aphorisms of auvaiyar into English.
Percival, Peter, Tamil proberbs with their English translation, containing upwards of six thousand proverbs. Madras, Rigginbotham; London, H. S. King, 1877.
Percival, P, Percival's Tamil-English dictionary = Tamil-Ankila akarati, AES reprint. New Delhi : Asian Educational Services, 1993.
Pope, George Uglow (1820-1908)
Missionary of british origin, translated thirukural, thiruvaachagam and naaladiyaar into English, commentary on cilappathikaram, manimekalai and thEvAram; author of 'Tamil Poetical Anthology with grammatical notes and a vocabulary'.
Pope, G. U.: A compendious Tamil English dictionary, 7th ed. New Delhi : J. Jetley for Asian Educational Services, 1981.
Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.
Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981
Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.
Pope, G. U. : A handbook of the Tamil languages : a compendius Tamil-English dictionary, 7th ed. New Delhi : Asian Educational Services, 1981.
Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.
Pope, G. U.: Tamil heroic poems, translations, 1st ed. Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, Tinnevelly, 1973.
Pope, G. U.: Tiru-valluvar -The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar / With introduction, grammar, translation, notes (in which are reprinted C.J. Beschi's and F.W. Ellis' versions) lexicon and concordance by the Rev. G.U. Pope. London : W. H. Allen & co., 1886.
Pope, G.U.: The Tiruvacagam, or, Sacred utterances of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar : the Tamil text of the fifty-one poems, with English translation, introductions, and notes : to which is prefixed a summary... Oxford : Clarendon Press, 1900.
Pope, G.U.: The Naladiyar, or, Four hundred quatrains in Tamil / with introduction, translation, and notes, critical, philological, and explanatory, to which is added a concordance and lexicon [by] Rev. G.U. Pope. New Delhi : Asian Educational Services, 1984.
Pope, G.U.: Manikkavacakar aruliya Tiruvacakam. 1970. Series title: Madras University Tamil Department publication series ; 27.
A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett, and the late G. U. Pope, D.D. Printed by order of the Trustees of the British museum. London, British museum [etc.] 1909.
Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926
Pope, G. U: Longman's school history of India, by the Rev. G.U. Pope ... London, New York, Longmans, Green, and co., 1892.
Pope, G. U. : Pope's third Tamil grammar ... 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.
Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with... 2nd ed Madras : P.R. Hunt, 1859.
Rhenius, Charles Theophilus Ewald (1790-1838)
Rhenius, C T E. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853.
Schomerus, Hilko Wiardo (1879- )
Schomerus, H W.: Der Caiva-Siddhanta / H. W. Schomerus. New York : Garland Pub., 1980.; Series title: Oriental religions 9.
Schomerus, H W.: Arunantis Sivajnasiddhiyar : die Erlangung des Wissens um Siva oder um die Erlosung / unter Beifugung einer Einleitung und Meykantadevas Sivajnanabodha aus dem Tamil ubersetzt und kommentiert, Wiesbaden :Steiner, 1981.
Schomerus, H.W.: Indische erlosungslehren; ihre bedeutung fur das verstandnis des christentums und fur die missionspredigt, von lic. theol. , Leipzig, J.C. Hinrichs'sche buchhandlung, 1919.; Series title: Sachsische forschungs-institute in Leipzig.
Schomerus, H W.: Sivaitische Heiligenlegenden : (Periyapurana und Tiruvatavurar-purana) , aus dem Tamil ubersetzt,Jena : E. Diederichs, 1925.; Series title: His Texte zur Gottesmystik des Hinduismus ; Bd. 2.
Vinson, Julian (1843-1926)
French national, wrote tamil grammar in french, translated UVS's edition of 'civakacinthaamani' into french and also part of 'thirukural'.
Vinson, Julien: Manuel de la langue tamoule (grammaire, textes, vocabulaire): Paris Imprimerie nationale, E. Leroux, editeur, 1903; Reprinted New Delhi : Asian Educational Services, 1986.
Vinson, Julien : Le verbe dans les langues dravidiennes : tamoul, canara, telinga, malayala, tulu, etc., Paris : Maisonneuve et cie, 1878.
Vinson, Julien: Les religions actuelles, leurs doctrines, leur evolution, leur histoire,: Paris, A. Delahaye et E. Lecrosnier, 1888.
Winslow, Miron (1789-1864)
Author of 'A comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil', a corpus of 67000 words published in 1862.
Winslow, Miron, Rev. (assisted by competent native scholars: in part from manuscript materials of the late Rev. Joseph Knight, and others.) :A comprehensive Tamil and English dictionary of high and low Tamil, Madras : P.R. Hunt, American Mission Press, 1862.
Winslow, Miron,: Tamil-English dictionary, Reprint of 1862 edition/ ed. by Klaus Ludwig Janert. Wiesbaden : Steiner, 1977.
Winslow's English and Tamil dictionary = [Vinculovin Ankila-Tamil akarati by Rev. Winslow, L. Spaulding, revised, enlarged & romanized by C. Appaswamy Pillai, 3rd ed. New Delhi : Asian Educational Services, 1989.
Winslow, Miron,: A sketch of missions, or, History of the principal attempts to propagate Christianity among the heathen / by Miron Winslow. Andover, Mass. : Flagg and Gould, 1819.
Ziegenbalg, Bartholomaeus (1683 - 1719)
German missionary, compiled 'Malabar Dictionary' of ca. 40000 words, translated New Testament, compiled a poetical dictionary 'Lexicon Poeticum' a poetical dictionary of 17000 words.
Ziegenbalg, B: Genealogy of the South-Indian gods : a manual of the mythology and religion of the people of southern India, including a description of popular Hinduism, published in Madras : Higginbotham, 1869; Reprinted with notes and additions..,New Delhi : Unity Book Service, 1984.
Ziegenbalg, B: Grammatica damulica von Bartholomaeus Ziegenbalg, herausgegeben von Burchard Brentjes und Karl Gallus. Halle : Martin-Luther-Universitat Halle-Wittenberg, c1985.
Ziegenbalg, Bartholomaeus: Alte Briefe aus Indien : unveroffentlichte Briefe; hrsg. von Arno Lehmann. Berlin : Evangelische Verlagsanstalt, [1957].
அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த இணையதளத்தின் மூலமாக தமிழ் வேதாகமம் நம்முடைய கைகளில் எப்படி கிடைக்கப்பெற்றோம் என்று புத்தகங்கள் மூலமாக நாங்கள் கற்றுக் கொண்டதை நீங்களும் அறிந்து கொள்ளும் படியாக தேவன்; எங்களுக்கு அனுக்கிரகம் பாராட்டினதற்கு நன்றி செலுத்துகிறோம். ஏற்கனவே ஆறு பகுதிகள் வெளிவர கர்த்தர் கிருபை செய்தார். இதைப்படித்து நீங்கள் பயன் பெற தேவனை வேண்டுகிறோம்.
ஐக்கிய திருப்புதல் (அல்லது) பவர் திருப்புதல் நாம் தற்போது உபயோகிக்கும் திருப்புதல் இந்த ஐக்கிய திருப்புதலே. லுத்தரன் சபையாரைத் தவிர மற்ற சபையார் யாவரும் இந்த திருப்புதலையே பயன்படுத்துகின்றனர். பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்கு பரிசுத்த வேதாகமம் என்றால் இது ஒன்றே தெரியும். இதற்கு பின் வந்த எந்த மொழி பெயர்ப்பும் இதன் இடத்தை எடுக்க முடியவில்லை. இந்த ஐக்கிய திருப்புதல் எப்படி உண்டானது என்பதைப் பற்றி நாம் படிப்போம். பப்ரிசியஸ் திருப்புதலின் மொழிநடை திருப்தியில்லை, ரேனியஸ் திருப்புதல் மூலமொழியை சரியாய் தழுவவில்லை என்ற குறைபாட்டினிமித்தம் யாழ்ப்பாண வேதாகம சங்கம் இந்திய வேதாகம சங்கத்தின் அரைகுறை சம்மதத்துடன் பெர்சிவல் திருப்புதலை செய்து முடித்தது. பெர்சிவல் திருப்புதலையும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்த மொழிபெயர்ப்பில் மொழிநடை கடினமாயும், சமஸ்கிருத வார்த்தைகள் அதிகமாயுமிருக்கின்றன என்ற குறைபாடு எழுந்தது. எனவே எல்லாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றொரு மொழிபெயர்ப்பிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1853 ஜுன் மாதம் 20ம் தேதி சென்னை வேதாகம சங்கம் ஒரு தீர்மானம் எடுத்தது. ஆறு பேருக்கு மேற்படாத தமிழ் அறிஞரின் பெயர்களை ஒவ்வொரு மிஷனரியும் சிபாரிசு செய்து அனுப்ப வேண்டும். அதில் கூடுதலாக சிபாரிசு செய்யப்படும் ஆறு பேரை மொழிபெயர்ப்புக் கமிட்டியாக நியமிக்க வேண்டும். அவர்கள் இதுவரை வந்த எல்லா மொழிபெயர்ப்புகளையும் பயன்படுத்தி எல்லாரும் அங்கீகரிக்கக் கூடிய ஒரு மொழிபெயர்ப்பை செய்யவேண்டும். யாழ்ப்பாண சங்கம் ஒரு பிரதிநிதியை அனுப்ப கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வேதாகம சங்கத்தைச் சேர்ந்த பெட்டிட்(P;etitt) என்பவர் இந்த தீர்மானத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். எல்லா திருப்புதல்களையும் பயன்படுத்தாமல் பப்ரிசியஸ் ஐயருடைய திருப்புதலை திருத்தினால் போதுமானது. அதற்கு ஆறு பேர் அவசியமில்லை. ஒருவரை மட்டும் நியமித்தால் போதும் என்பதே அந்த தீர்மானம். சென்னை வேதாகம சங்கம் மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தல் 1855ல் சென்னை வேதாகம சங்கம் கூடி, பப்ரிசியஸ் திருப்புதலை ஆதாரமாகக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். மேலும் தகுதியான ஒருவரை மொழி பெயர்ப்பாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உதவியாளராக ஆறு பேரையும் நியமிக்க வேண்டும் என்றும், பகுதி பகுதியாக அச்சிட்டு மற்றவர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று தீர்மானித்தனர். நியமிக்கப்பட்ட கமிட்டி அங்கத்தினர்கள் தலைமை மொழிபெயர்ப்பாளர் பவர் ஐயர் (Bower) உதவியாளர்கள் 1.ட்ரூ(L.M.S) 2.வின்ஸ்லோ (A.M) 3.தாமஸ்(C.M.S) 4.ஜென்கின்ஸ் பிரதேட்டன்(S.P.G) 5.ராஜகோபால்(ஸ்காட்லாந்து சபை) 6.ஸ்டாக்ஸ் 1856 பிப்ரவரி 14ம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. 1858 ஏப்ரலில் பவர் ஐயர் வேலையை ஆரம்பித்தார். முதலாவது மத்தேயு, மாற்கு ஆகிய சுவிசேஷங்களை மொழிபெயர்த்து சபை பிரதிநிதிகளுக்கும் மற்றும் அநேகருக்கு அனுப்பினார். சபை பிரதிநிதிகள் எழுதிய திருத்தங்களை நன்கு ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டார். நான்கு சுவிசேஷங்களும், அப்போஸ்தல நடபடிகளும் மொழி பெயர்த்து முடிக்க அதிக நாட்களாயிற்று. முதல் ஆலோசனைக் கூட்டம் 1861 ஏப்ரல் 29ம் தேதி பாளையங்கோட்டையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தினமும் 9மணி நேரம் கூடி 6 வாரங்கள் ஆராய்ந்து பரிந்துரை செய்தனர். சபை பிரதிநிதிகளாய் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: 1.பவர் ஐயர் (சென்னை) 2.முன்ஷி முத்தையாப்பிள்ளை (பாளையங்கோட்டை) 3.கால்டுவல் ஐயர் (இடையங்குடி) 4.சார்ஜன்ட் ஐயர் (பாளையங்கோட்டை) 5.டிரேசி ஐயர் (மதுரை) மதுரையைச் சேர்ந்த டிரேசி ஐயரைத் தவிர மீதி நான்கு பேரும் தவறாமல் எல்லா ஆலோசனைக் கூட்டத்திலும் பங்குபெற்றனர். இன்னும் அநேகர் அவ்வப்போது கலந்து கொண்டாலும் மேற்கூறிய நான்குபேர் குறிப்பிடத்தக்கவர்கள். பவர் ஐயர் பவர் ஐயர் 1813ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தகப்பனார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இந்தியா வந்து இங்கேயே தங்கி விட்டார். 1832ல் இங்கிலாந்து சென்று லண்டன் மிஷனரி சங்க(L.M.S) இறையியல் கல்லூயில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1837ல் இந்தியா வந்து திரிப்பசூர் என்ற இடத்திலும் பின்பு சென்னை புரசைவாக்கத்திலும் ஊழியம் செய்தார். 1842ல் (S.P.G) சபையில் சேர்நது 1845ல் குருப்பட்டம் பெற்ற இவர் தஞ்சாவூருக்கு அருகில் ஊழியர் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவி அதற்கு “வேதியர் புரம்” என்று பெயரிட்டார். 1858ல் வேதாகம மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டார். அதை செய்து கொண்டிருக்கும் போதே 1864ல் வேப்பேரி ஆலயத்தில் குருவாக நியமிக்கப்பட்டார். 1872ல் திருச்சிக்கு மாற்றலானார். பின்பு திருநெல்வேலி சென்றார். பின்பு சென்னை வேப்பேரிக்கு வந்தார். 1877ல் லண்டனிலிருந்த ஆர்ச் பிஷப் ஆப் கான்டர்பரி (மகா அத்தியட்சர்) என்ற சபைத் தலைவர் இவருக்கு “இறையியல் கலாநிதி (Doctor of Divinity) என்ற பட்டத்தை கொடுத்தார். சென்னை சாந்தோம் சபைக்கு மாற்றப்பட்டார். இவர் கிரேக்கு, லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பகவத்கீதை, நன்னூல் ஆகிய புத்தகங்களை மொழி பெயர்த்தார். இன்னும் பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். பவர் ஐயர் 1885ம் ஆண்டு ஜூலை மாதம் குற்றாலத்தில் மரித்தார். முத்தையா பிள்ளை இவர் பாளையங்கோட்டை வைணவ குடும்பத்தை சேர்ந்த சங்கர நாராயணபிள்ளை என்பவருடைய மகன். புகழ்மிக்க “இரட்சணிய யாத்திரிகம்” என்ற கிறிஸ்தவ காப்பியத்தை எழுதிய வித்துவான். கிருஷ்ணபிள்ளை மேற்கூறிய சங்கர நாராயண பிள்ளையின் சகோதரன். முத்தையாபிள்ளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். 1857ல் இவரும் இவரது நண்பர் தனுக்கோட்டை ராஜுவும் கிறிஸ்தவரானபோது அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்தவரானால் குடுமிகளை வெட்டிவிடவேண்டுமென்று சார்ஜண்ட் ஐயர் கட்டளையிட்ட போது இவர்கள் இருவரும் குடுமியை வெட்ட மறுத்துவிட்டனர். முத்தையாபிள்ளை எழுதிய நூல்கள் “வேதாந்த சாரத்தின் மொழிபெயர்ப்பு”, “தேவமாதா வணக்கத்தவறு”, “கிறிஸ்தவர்களின் ஆசாரமும் குருமார் போதகமும்” ஆகியன ஆகும். ஜெபப்புத்தகம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டுமென்று தீர்மானம் ஆங்கிலேய சபையால்(Church of England) எடுக்கப்பட்டது. அந்த குழுவில் முத்தையா பிள்ளையும் ஓர் அங்கமாயிருந்தார். கால்டுவெல் ஐயர்(இடையன்குடி) கால்டுவெல் ஐயரும் ஐக்கிய திருப்புதல் மொழி பெயர்ப்பில் முக்கியப் பங்கு கொண்டார்.இவர் 1814ல் அயர்லாந்தில் பிறந்தார். ஸ்காட்லாந்திலிருந்த கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்று லண்டன் மிஷனரி சங்க (L.M.S) மிஷனரியாக 1838ல் (24 வயதில்)இந்தியாவிற்கு வந்தார். பல மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்ளும் நல்ல திறமை இவருக்கு இருந்தது. கப்பலில் இந்தியாவிற்கு பயணம் செய்யும்போதே தமிழைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இந்தியா வந்து தொடர்ந்து தமிழைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் இன்னும் பல மொழிகளையும் கற்றுக் கொண்டார். 1841ல் S.P.G சபையில் சேர்ந்து உதவிக் குருவாக பட்டம் பெற்று, அடுத்த வருடம் பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்டார். நீலகிரியிலிருந்து பாளையங்கோட்டைக்கு செல்ல குதிரையில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றபோது குதிரை நோய்வாய்பட்டது. எனவே அங்கிருந்த பாளையங்கோட்டை வரை நடந்தே வந்தார். அக்கால மிஷனரிகள் எவ்வளவு பாடுகளைச் சகித்தார்கள், எவ்வளவு தியாகம் செய்து ஊழியம் செய்தார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்கது. இவர் 1842ல் குருப்பட்டம் பெற்றார். திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் இடையன்குடி என்னும் கிராமத்திற்கு சென்று அங்கே தங்கி ஊழியத்தை ஆரம்பித்தார். அங்கிருக்கும்போது “திருநெல்வேலியின் பழைய சரித்திரம்” என்ற நூலை எழுதினார். 1856ல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian Language) என்ற மிகச்சிறந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.1856 முதல் 1941 வரை இந்த புத்தகம் 23 பதிப்புகளாக வெளிவந்தது என்பதிலிருந்து இந்தப் புத்தகத்தின் மேன்மையை அறியலாம். சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் மொழி வரவில்லை என்பதை மிகத்தெளிவாக எழுதி நிரூபித்தார். சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ்மொழியில் ஒரு சமஸ்கிருத வார்த்தைக் கூட வரவில்லை. தமிழ்மொழியிலிருந்து வார்த்தைகளை சமஸ்கிருதம் கடன் வாங்கிற்று என்றும், பிந்திய நாட்களில் தான் சமஸ்கிருதத்திலிருந்து வார்த்தைகளை தமிழ் கடன் வாங்கிற்று என்றும் தெளிவாக எழுதியுள்ளார். ஆரிய மொழிகளிலிருந்து தமிழ் முற்றிலும் வேறுபட்டது. தமிழ் மொழி துரேனிய, ஸ்கிதீய மொழிகளுடன் தொடர்புடையது எனவும் கால்டுவெல் ஐயர் எழுதினார். அந்நாட்களில் பேராயர் சென்னையிலிருந்தார். திருநெல்வேலி வட்டாரத்தில் சபைகள் அதிகமாக வளர்ந்து வந்தன. எனவே கால்டுவெல் ஐயர் உதவிப் பேராயராக நெல்லை பகுதிக்கென்று நியமிக்கப்பட்டார். இந்த வட்டாரத்திலிருந்த S.P.G சபைகளுக்கு இவர் மேற்பார்வையாளராக இருந்து பணியாற்றினார். இவர் இந்த பொறுப்பேற்ற ஆறு வருடங்களுக்குள் 12,000 பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டு சபையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கால்டுவெல் ஐயர் 1891ல் கொடைக்கானலில் மரித்தார். இவரது உடல் அவர் வாழ்ந்த இடையன்குடிக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சார்ஜண்ட் ஐயர் (பாளையங்கோட்டை) சார்ஜண்ட் ஐயரும் இந்த மொழிபெயர்ப்பில் மிக உதவியாக இருந்தவர். இவர் 1816ல் பிரான்ஸ் தேசத்திலுள்ள பாரிஸ் பட்டணத்தில் பிறந்தார். வாலிப வயதிலேயே இவர் பெரம்பூர் இறையியல் கல்லுரிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 1835ல் பாளையங்கோட்டைக்கு வந்தார். பின்பு இங்கிலாந்து சென்று இறையியல் படித்து பட்டம் பெற்று 1841ல் உதவிக் குருவாகவும், 1842ல் குருவாகவும் அபிஷேகம் பண்ணப்பட்டார். மறுபடியும் இந்தியா வந்து முதலாவது சுவிசேஷபுரத்திலும், பின்பு பாளையங்கோட்டையிலும் தங்கி ஊழியம் செய்தார். இவரின் ஊழியத்தின் மூலம் திருநெல்வேலி வட்டாரத்தில் கிறிஸ்தவ சபைகள் மிக வேகமாக வளர ஆரம்பித்தன. 1877ல் C.M.S சபைகளை மேற்பார்வை செய்ய உதவிப் பேராயராக நியமிக்கப்பட்டார். 1877ல் மட்டும் 10,000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். இவர் பல புத்தகங்களையும் எழுதினார். சார்ஜண்ட் ஐயர் 1889ல் பாளையங்கோட்டையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டார். வில்லியம் டிரேசி ஐயர்(மதுரை) வில்லியம் டிரேசி ஐயர் 1807ல் அமெரிக்காவிலுள்ள கெனட்டிகட் மாநிலத்தில் பிறந்தார். அண்டோவர், பிரின்ஸ்டன் ஆகிய நகர்களிலிருக்கும் இறையியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று 1836ல் குருப்பட்டம் பெற்றார். 1837ல் இந்தியாவிற்கு வந்தார். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில் தங்கி ஊழியத்தைத் தொடர்ந்தார். பல பள்ளிகளை நிறுவினார். திருமங்கலத்தில் இறையியல் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தார். இக்கல்லூரி 1845ல் பசுமலைக்கு மாற்றப்பட்டது. இங்கு அவர் 22ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய ஊழியத்தின் மூலம் சுமார் 8,000 பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். 32 சபைகளை நிறுவினார். 41 ஆண்டுகள் இந்தியாவில் இறைப் பணியாற்றினார். 1877ம் வருடம் நவம்பர் மாதம் டிரேசி ஐயர் மரித்தார். பவர் ஐயர், முன்ஷி முத்தையாப்பிள்ளை, கால்டுவெல் ஐயர், சார்ஜண்ட் ஐயர் இந்த நால்வரும் ஐக்கிய திருப்புதல் அல்லது பவர் திருப்புதலில் மிக முக்கிய பங்கு பெற்றிருந்தனர். அத்துடன் இவர்களுக்கு பலர் உதவியாக இருந்துள்ளனர். அவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 1.டாக்டர் ஸ்கடர் ஐயர், 2.ஸ்போல்டிங் ஐயர், 3.வின்ஸ்லோ ஐயர், 4.பேலிஸ் ஐயர், 5.டிப் ஐயர், 6.பிரதேட்டன் ஐயர், 7.பர்ஜஸ் ஐயர், 8.கில்னர் ஐயர், 9.கோல்ப் ஐயர், 10.இராஜகோபால் ஐயர், 11.லூயிஸ் ஐயர்.
அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த இணையதளத்தின் மூலமாக தமிழ் வேதாகமம் நம்முடைய கைகளில் எப்படி கிடைக்கப்பெற்றோம் என்று புத்தகங்கள் மூலமாக நாங்கள் கற்றுக்கொண்டதை நீங்களும் அறிந்துகொள்ளும்படியாக தேவன் எங்களுக்கு அனுக்கிரகம் பாராட்டினதற்கு நன்றி செலுத்துகிறோம். ஏற்கனவே ஏழு பகுதிகள் வெளிவர கர்த்தர் கிருபை செய்தார். இதைப்படித்து நீங்கள் பயன் பெற தேவனை வேண்டுகிறோம்.
புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1861ல் நடந்த கூட்டத்தில் நான்கு சுவிசேஷங்களையும், அப்போஸ்தலர் நடபடிகளையும் முன்பு கூறின நான்கு பேர்களும் பார்வையிட்டு முடித்தனர். பவர் ஐயர் பிரதிநிதிகளின் விருப்பம், எதிர்பார்ப்பை நன்கு அறிந்துகொண்ட படியினால், புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு புத்தகமும் மொழிபெயர்க்கப்பட்டு முடிந்தவுடன் அச்சிட்டு அதின் நகல்களை ஆலோசனைக் குழுவிலிருந்த அங்கத்தினர்களுக்கு அனுப்பினார். புதிய ஏற்பாடு முழுவதும் மொழி பெயர்த்து முடிக்கப்பட்டவுடன் இரண்டாம் கூட்டம் நடந்தது. இரண்டாம் கூட்டம் 1862ஜுன் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையும் இந்தக் கூட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது.(அந்நாட்களில் கொடைக்கானலை பழனி மலை என்று அழைத்தனர்). தினமும் 9மணி நேரம் கூடி வேலையை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 1.பவர் ஐயர், 2.முத்தையா பிள்ளை, 3.கால்டுவெல் ஐயர், 4.சார்ஜண்ட் ஐயர், 5.டிரேசி ஐயர். இவர்கள் தான் வழக்கமாக கூடுவார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூரிலிருந்த வந்த கோலப் ஐயரும் கலந்து கொண்டு பணியாற்றினார். மற்ற தமிழ் மொழிப் பெயர்ப்புகளை உதவிக்கு வைத்துக் கொண்டது போல தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழி பெயர்ப்புகளையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் தங்கள் ஆலோசனைகளாக எழுதினவைகளையும் பரிசீலித்துத் தேவையான திருத்தங்களை செய்தனர். யாழ்பாணத்து ஐயர்மார் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பினர். தரங்கம்பாடி லுத்தரன் ஐயர்மார் தங்கள் கருத்துகளை எழுதினர். இவர்கள் பவர் ஐயர் திருப்புதலை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள தயங்கினர். ஆனாலும் இந்தக் குழுவினர் சோர்ந்து போகாமல் யாவரும் விளங்கக்கூடிய தமிழ்நடையில் அதே சமயம் மூலமொழிகளை விட்டு விலகாமல் கவனமாக மொழிபெயர்ப்பு செய்தனர். ஆங்கில மொழி பெயர்ப்பை அதிகம் பயன்படுத்தினர். இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை யாழ்ப்பாண வேதாகம சங்கத்தார் மிக கவனமாக கவனித்துக் கொண்டிருந்தனர். தங்கள் திருப்புதலை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய திருப்புதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதில் ஆர்வமாயிருந்தனர். நான்கு சுவிசேஷங்களையும், அப்போஸ்தல நடபடிகளையும் மொழி பெயர்த்த பின் அதன் நகலை பவர் ஐயர் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். புதிய ஏற்பாட்டின் மீதி புத்தகங்களையும் மொழி பெயர்த்து அனுப்பினார். அவர்கள் சில திருத்தங்களை செய்து பவர் ஐயருக்கு அனுப்பி வைத்தனர். தரங்கம்பாடி ஐயர்மாரும் இந்த திருப்புதலை குறைகூறி எழுதினர். பப்ரிசியஸ் ஐயருடைய திருப்புதலுக்கு மேல் இன்னொரு மொழி பெயர்ப்பு அவசியமில்லை என்பது போல அவர்கள் கூறினர். இந்த எதிர்ப்புகளைக் கண்டு பவர் ஐயர் கமிட்டி சோர்ந்து போகவில்லை. யாவரும் ஏற்றுக் கொள் ளும் மொழி பெயர்ப்பு மிக அவசியம் என்பதை உறுதியாக நம்பின அயராது தங்கள் பணியை தொடர்ந்தனர். பழைய ஏற்பாடு 1864 ஜுலை 18ம் தேதி இது சம்பந்தமான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பவர் ஐயருக்கு உதவியாக கீழ்க்காணும் குருமார்கள் நியமிக்கப்பட்டனர். 1. டாக்டர் எம்.வின்ஸ்லோ 7. பி.ராஜகோபால் 2. ஜே.கில்னர் 8. டிரேசி 3. ஆர்.கால்டுவெல் 9. சிம்சோன் 4. ஈ.சார்ஜண்ட் 10. பேலிக்ஸ் 5. ஏ.டிப் 11. ஸ்கடர் 6. சி.எஸ்.கோலோப்
புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கும்போது கையாண்ட ஒழுங்கையே இதிலும் கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதாவது பப்ரிசியஸ் திருப்புதலை ஆதாரமாகக் கொண்டு பரிட்சை திருப்புதலை (பெர்சிவல்) உதவியாக வைத்து மொழி பெயர்க்க வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் மொழி பெயர்த்து முடிந்தவுடன் அதன் பிரதிகளை பிரதிநிதிகளுக்கு அனுப்பி ஆலோசனை பெற வேண்டும். எல்லா வேலையும் முடிந்தபின் யாவரும் ஓரிடத்தில் கூடி தேவையான திருத்தங்களை செய்யவேண்டும் என்பதே முன் தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கு. முதலாவது பஞ்சாகமம் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) சங்கீதங்கள், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்து அங்கத்தினர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதை அங்கீகரிக்க குற்றாலத்தில் ஓரு கூட்டத்தைக் கூட்டினர். பாளையங்கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் 1868 ஜுன் 24ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதிவரை பாளையங்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தினமும் 8 மணிநேரம் வேலை செய்தனர். இந்தக் கூட்டத்தில் பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு முழுவதும் சரி பார்க்கப்பட்டது. இவ்விதமாக 10 வருடமாய் அயராது உழைத்து இந்த மொழி பெயர்ப்பு வேலையை வெற்றியாய் முடித்தனர். யாழ்பாண வேதாகம சங்க பிரதிநிதிகளாக அதன் தலைவர் ஸ்போல்டிங் ஐயரும், அதன் செயலாளரான கின்னரும் சென்னை வந்தனர். 1869 ஏப்ரல் 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னை வேப்பேரியிலிருந்த பவர் ஐயர் வீட்டில் கூடி தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை கூடி பரிசீலித்தனர். முழு வேதாகமத்தையும் ஆராய நேரமில்லை. எனவே ஆதியாகமம் 1-19 அதிகாரங்களையும்,1-9 சங்கீதங்களையும் ஆராய்ந்து அதில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை சுட்டிக் காட்டி இதே திருத்தங்கள் முழு வேதாகமத்திலும் செய்யப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும் 468 திருத்தங்களும், ரோமரில்161 திருத்தங்களும் செய்யப்பட்டன. பவர் ஐயரும் யாழ்பாணத்தார் செய்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டார். இப்படியாக சென்னை, யாழ்ப்பாண சங்கத்தாருக்கிடையேயிருந்த தகராறு நீக்கப்பட்டது. ஐக்கிய திருப்புதல் திருத்தியமைக்கப்பட்ட இந்த ஐக்கிய திருப்புதல் கீழ்காணும் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. 1871ம் ஆண்டு இந்த ஐக்கிய திருப்புதல் சென்னை வேப்பேரியிலுள்ள கிறிஸ்தவ கல்வி அபிவிருத்திச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையாரைத்தவிர மற்ற சபையாரெல்லாம் ஏற்றுக்கொண்ட ஒரே திருப்புதல் இந்த ஐக்கிய திருப்புதலே. இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் இந்த ஐக்கிய திருப்புதலே. இந்த திருப்புதல் கடந்த 128 ஆண்டுகளுக்கு முன்புதான் வெளிவந்தது என்பது அநேக கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்த திருப்புதல் மற்றறெல்லாத் திருப்புதலைக் காட்டிலும் அதிகமாக நமது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட பல காரணங்கள் உண்டு. 1. எல்லா மிஷனரிகளும் இதில் ஒத்துழைப்புக் கொடுத்ததால் தமது சபையாருக்கு இதையே சிபாரிசு செய்தனர். 2. அக்காலத்தில் பல திருப்புதல்களிலிருந்த குறைகள் இந்த ஐக்கிய திருப்புதலில் நீக்கப்பட்டதால் இது எல்லாரையும் திருப்திபடுத்தக் கூடியதாக இருந்தது. 3. பவர் ஐயர் எல்லாருடைய ஆலோசனைகளையும் கேட்டு மொழிபெயர்ப்பு செய்ததால், அநேகர் இதை தாராளமாக ஏற்றுக்கொண்டனர். 4. ஐக்கிய திருப்புதலிலுள்ள தமிழ்நடை யாவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாயிருக்கிறது. 5. இந்த திருப்புதல் கிறிஸ்தவ தமிழில் எழுதப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மற்ற மொழி பெயர்ப்புகளில் சுத்த தமிழ் பயன்படுத்தப்பட்டாலும் ஏதோ பொதுவான நாவல் நடை காணப்படுகிறது என்பது பலருடைய கருத்து. அதாவது சுத்திகரிக்கப்படாத தமிழ்போல இருக்கின்றது. இதற்குப் பின்பு பல மொழி பெயர்ப்புகள் வந்தாலும் இந்த பவர் ஐயரின் ஐக்கிய திருப்புதலே இன்று வரை பெரும் பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தொடரும்...
அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த இணையதளத்தின் மூலமாக தமிழ் வேதாகமம் நம்முடைய கைகளில் எப்படி கிடைக்கப்பெற்றோம் என்று புத்தகங்கள் மூலமாக நாங்கள் கற்றுக் கொண்டதை நீங்களும் அறிந்துகொள்ளும்படியாக தேவன்; எங்களுக்கு அனுக்கிரகம் பாராட்டினதற்கு நன்றி செலுத்துகிறோம். ஏற்கனவே எட்டு பகுதிகள் வெளிவர கர்த்தர் கிருபை செய்தார். இதைப் படித்து நீங்கள் பயன் பெற தேவனை வேண்டுகிறோம்.
லார்சன் மொழி பெயர்ப்பு ஐக்கியத் திருப்புதலின் மேன்மையைப் பற்றிப் பார்த்தோம். அதற்கு முந்தின எல்லா மொழி பெயர்ப்புகளையும் விட இதுவே பொதுவாக எல்லா தமிழ் கிறிஸ்தவர்களாலும் இன்று வரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு என்பதை தெளிவாக ஆராய்ந்தோம். ஆனாலும் சுமார் 50 ஆண்டுகள் கழித்து வேறு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் எனப் பலர் உணர்ந்தனர். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. 1. மூல மொழிகளான எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிகம் தேர்ச்சி பெற்ற பண்டிதர்கள் பலர் எழும்பினர். மூல மொழியின் கருத்துக்கு ஏற்ற விதத்தில் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை என்று அநேகர் உணர்ந்தனர். 2. ஐக்கியத் திருப்புதலை மொழிபெயர்த்த குழுவில் முத்தையாபிள்ளை ஒருவர் தான் தமிழர். மற்றவர்களெல்லாம் தமிழ் கற்ற பிற நாட்டு மிஷனரிகளே. எனவே அவர்கள் தமிழ் நடையும் மொழிபெயர்ப்பும் பல குறைகளைக் கொண்டது என பலர் எண்ணினர். லுத்தரன் சபையினர் ஐக்கியத் திருப்புதலை ஏற்றுக்கொள்ளாமல் பப்ரிசியஸ் மொழி பெயர்ப்பையே பயன்படுத்தி வந்தனர் என்று முன்பே கூறினோம். எனவே லுத்தரன்சபையாரும் வேதாகம சங்கமும் சேர்ந்து இன்னொரு மொழி பெயர்ப்பை உண்டாக்க வேண்டும் என்று லுத்தரன் மிஷனைச் சேர்ந்த “ஹைடன் ரைக்” என்ற மிஷனரி வேதாகம சங்கத்திற்கு 1913ல் கடிதம் ஒன்று அனுப்பினார். ஐக்கிய திருப்புதலை பயன்படுத்தி வந்தவர்களுக்குள் பிலிப்ஸ் ஐயர் என்பவரும் ஐக்கியத் திருப்புதலில் திருத்தம் தேவை என்று வெளிப்படையாக கூற ஆரம்பித்தார். இவர் 1911 முதல் 1923 வரை பெங்களுரிலுள்ள இறையியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தமிழில் சிறந்த அறிவுடையவராக இருந்தார். சென்னை கிறிஸ்தவ பிரதிநிதிச் சங்கம் 1915 பிப்ரவரி 19ம் தேதி கூடியபோது பிலிப்ஸ் ஐயர் கீழ்காணும் காரணங்களை சுட்டிக்காட்டி ஐக்கியத்திருப்புதல் திருத்தப்பட வேண்டுமென்று வாதிட்டார். 1. ஐக்கியத் திருப்புதலில் (பவர் ஐயர் திருப்புதல்) பல பிழைகள் உள்ளன. 2. 1611ல் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில திருப்புதலையே தமிழ் ஐக்கியத் திருப்புதல் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்குப் பின்பு பல மூலச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளையே ஆதாரமாகக் கொண்டு மொழி பெயர்ப்பு செய்வது நல்லது. 3. ஐக்கியத் திருப்புதலின் தமிழ் சரியானதல்ல, உதாரணமாக வேதாகம பரிசுத்தவான்களை மரியாதையில்லாத வார்த்தைகளில் அவன், இவன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘ஆபிரகாம் போனான்’, ‘பவுல் வந்தான்’, ‘பேதுரு பேசினான்’ இப்படி ஒருமையில் பரிசுத்தவான்களை அழைப்பது சரியல்ல. 4.மூலமொழிகள் அறிந்த தமிழ் பண்டிதர்கள் பலர் உண்டு. எனவே அவர்களை பயன்படுத்தி மொழி பெயர்ப்பது நல்லது. இந்த கருத்துக்களை வேதாகம சங்கம் நன்றாக ஆராய்ந்து சபைத் தலைவர்களாக இருந்த மிஷனரிகளுக்கு எழுதி அவர்கள் கருத்துக்களை எழுதுமாறு கேட்டது. பலரும் பலவிதமாக எழுதினர். லுத்தரன் சபையாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திருப்புதல் அவசியமானாலும் அது ஒரு புதிய திருப்புதலாக இல்லாமல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஐக்கியத் திருப்பதலில் சில திருத்தங்களை மட்டும் செய்தால் போதும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. 1917 ஆகஸ்ட் மாதம் சென்னை வேதாகம சங்கம் ஐக்கியத் திருப்புதல் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து லண்டனிலுள்ள தாய் சங்கத்தின் ஒப்புதலுக்காக கடிதம் எழுதினது. 1917 நவம்பர் 7ம் தேதி லண்டன் தாய் சங்கம் சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதியது. 1918 அக்டோபர் 15,16 தேதிகளில் சென்னையில் வேதாகம சங்க மாநாடு கூட்டப்பட்டு அதில் கலந்து கொண்டவர்களே ஆலோசனைக் குழுவாக செயல்பட்டனர்.
ஆலோசனைக் குழுவினர்:
ஆங்கிலேய சபை G.பெரிய நாயகம், S.பரஞ்சோதி, S.G.மதுரம், E.A.E.மூர், M.D.தேவதாஸ், M.ஏசுவடியான். வெஸ்லியன் சபை C.H.மோனஹன், N.G.பொன்னையா. சுவீடன் மிஷன்: D.பெக்செல், N.சாமுவேல். டேனிஷ் மிஷன்: ஆண்டர்ஸன். யாழ்ப்பாண மிஷனரி K. முருகேசு தென்னிந்திய ஐக்கிய சபை J.S.சாண்ட்லர், V.சந்தியாகு, மாசிலாமணி, L.R.ஸ்கடர், F.கிங்ஸ்பெரி, G.E.பிலிப்ஸ், பவுல் அப்பொல்லோஸ். லுத்தரன் பிரதிநிதிகள பேராயர் ஹீமன், D.பெக்செல், G.தானியேல். சர்ச் மிஷென் D.பெரியநாயகம், S.G.மதுரம், C.P.ஞானமணி, திரு.அனுபூதியான்.
அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த இணையதளத்தின் மூலமாக தமிழ் வேதாகமம் நம்முடைய கைகளில் எப்படி கிடைக்கப்பெற்றோம் என்று புத்தகங்கள் மூலமாக நாங்கள் கற்றுக்கொண்டதை நீங்களும் அறிந்து கொள்ளும்படியாக தேவன்; எங்களுக்கு அநுக்கிரகம் பாராட்டினதற்கு நன்றி செலுத்துகிறோம். ஏற்கனவே ஒன்பது பகுதிகள் வெளிவர கர்த்தர் கிருபை செய்தார். இதைப் படித்து நீங்கள் பயன் பெற தேவனை வேண்டுகிறோம்.
தொடர்ச்சி…. 1925ல் மத்தேயு சுவிசேஷம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாற்கு, யோவான் சுவிசேஷங்களும், அப்போஸ்தல நடபடிகளும் வெளியிடப்பட்டன. இதன் தமிழ் மொழிநடையை எதிர்த்தோர் அதிகமாயினர். புகழ்பெற்ற கிறிஸ்தவ தலைவர் S.பரமானந்த ஐயர் ஐக்கியத் திருப்புதலே போதுமானது, இந்தத் திருப்புதல் அவசியமற்றது என வாதிட்டார். 1927ம் வருடம் ஏப்ரல் மாதம் புதிய ஏற்பாடு முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை வேதாகம சங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1028ம் ஆண்டில் புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டு வெளிவந்தது. லார்சன் ஐயருடைய இந்த மொழிபெயர்ப்பு பெரும்பான்மை கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இந்த மொழிபெயர்ப்பை வன்மையாய் எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் Y.சாமுவேல், E.S.யேசுவடியான். இவர்கள் இருவரும் நல்ல சமாரியன் என்ற மாதப் பத்திரிகையை நடத்தி வந்தனர். இந்தப் பத்திரிகையில் லார்சன் மொழிபெயர்ப்பை கடினமாய் எதிர்த்து எழுதி வந்தனர். இவர்கள் எழுதி வந்த விஷயங்களை ஒன்று திரட்டி “புதிய திருப்புதலை அச்சிடக்கூடாது, அதை உபயோகிக்கக்கூடாது என்பதற்கு ஒரு மனு”(The Revised Tamil Bible an Appeal Againsts its Publication and use) என்ற தலைப்பில் ஒரு ஆங்கிலப் புத்தகம் 1939ல் எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தை எழுதியவர்கள்: எட்வர்ட் ஏசுவடியான், S.G.மதுரம் ஐயர், S.பரமானந்த ஐயர், தங்கையா ஐயர், ஜியார்ஸ் வேதநாயகம் ஐயர். இவர்கள் லார்சன் மொழிபெயர்ப்பை எதிர்த்து எழுதிய முக்கிய குற்றச்சாட்டுகள்: 1.லார்சன் ஐயர் பழைய மொழிப்பெயர்ப்புக்களை திருத்தி எழுதாமல் ஒரு புதிய மொழிபெயர்ப்பை தன விருப்பம் போல் செய்துவிட்டார். ஐக்கியத் திருப்புதலிலுள்ள வச னங்கள், சொற்களை அதிகம் மாற்றிவிட்டார். புதிய பதங்களை உபயோகித்துள்ளார். முக்கிய பல சொற்களை விட்டுவிட்டார். 2.முன்பு மொழிபெயர்க்கப்பட்ட “ஐக்கியத் திருப்புதல்”(பவர் ஐயர் திருப்புதல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட வாசகம் (Textus Receptus) என்னும் கிரேக்க பிரதியையும், 1611ல் வெளியிடப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே அதுவே லார்சன் மொழிபெயர்ப்பை விடச் சிறந்தது. 3.லார்சன் மொழிபெயர்ப்பு வத்திக்கான் சுவடி (Codex Vaticans), சீனாய் சுவடி (Codex Sinaiticus) என்னும் மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த மூலப் பிரதிகள் சிறந்த மூலங்களல்ல. 4.லார்சன் மொழிபெயர்ப்பு வெஸ்ட் காட் அத்தியட்சரும், ஹோர்ட் என்பவரும் எழுதிய திருத்திய ஆங்கில மொழி பெயர்ப்பை தழுவி எழுதப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை எழுதிய கமிட்டியில் அங்கமாயிருந்தவர்களில் ஒருவர் இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலித்தவர்(Unitarian). எனவே லார்சன் மொழிபெயர்ப்பில் கோளாறு இருக்கிறது. 5.லார்சன்ஐயர் கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலித்த பிரான்சிஸ் கிங்ஸ்பெரி ஐயருக்கு பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தார். எனவே இவர் மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. 6.லார்சன் திருப்புதலில் யாழ்ப்பாண தமிழ் அதிகம் கலந்துள்ளது. தென்னிந்திய கிறிஸ்தவர்களின் தமிழ் நடைக்கு மாறுபட்டது இது. 7.லார்சன் திருப்புதலில் பயன்படுத்தப்பட்டுள்ள பதங்கள் கிறிஸ்து மார்க்க அடிப்படை சத்தியங்களை குழப்பிவிடக் கூடிய பதங்கள். கிறிஸ்துவின் தெய்வீகத்தையே மறுதலிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளில் பல ஆதாரமற்றவை என்று பலர் கூறினாலும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரித்தனர். பழைய ஏற்பாடு மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை அநேகர் எதிர்த்து வந்த போதிலும் வேலை தொடர்ந்து நடைபெற்று வந்தது. மொழி பெயர்ப்புக் கமிட்டியில் லைப்சிக் லுத்தரன் மிஷனைச் சேர்ந்த R.புரோலிக் ஐயர் (Frolich) என்பவரும் புதியவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலை முடிந்ததும் லார்சன் ஐயர் தன் நாடான டென்மார்க்கிற்கு போய்விட்டு 1928 ஜனவரியில் மீண்டும் சென்னைக்கு வந்தார். பிப்ரவரி மாதம் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை ஆரம்பித்தார். துரைச்சாமி பிள்ளையின் உடல் நலம் சென்னையில் ஒத்துவராததால் இருவரும் ஜூன் மாதம் மதுரை வந்து வேலையை ஆரம்பித்தனர். மதுரையும் அவருடைய ஆரோக்கியத்திற்கு ஒத்துவரவில்லை. எனவே பெங்களுர் சென்று வேலையை தொடர்ந்தார்கள். மொழிபெயர்ப்புக் கமிட்டியின் கடைசி கூட்டங்கள் சென்னையில் புரோலிக் ஐயருடைய வீட்டிலே 1932 அக்டோபர் 12 முதல் நவம்பர் 9ம் தேதிவரை நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி லார்சன் ஐயரின் 70ம் பிறந்தநாள். தமது வேலையை முடித்து டென்மார்க் சென்றார். அவருடைய மொழி பெயர்ப்பின் முழு வேதாகமும் 1936ல் அச்சிடப்பட்டு வெளிவந்தது. லார்சன் ஐயர் 1940ம் ஆண்டு ஜீன் மாதம் மரணமடைந்தார். லார்சன் ஐயரின் மொழிபெயர்ப்பின் சில வசனங்களை குறிப்பிடுகிறேன். சங்கீதம் 1:1-3 தெய்வ பயமற்றவர்களின் ஆலோசனையில் செல்லாமல் பாவிகளின் வழியிலே நில்லாமல் பரிகாசக்காரரோடு உட்காராமல் யெகோவாவின் பிரமாணத்தில் பிரியமாகி இரவும் பகலும் அவர் பிரமாணத்தைத் தியானஞ்செய்கிற மனிதன் பாக்கியவான். அவன் நீர்க்காலோரம் நடப்பட்ட மரம் போன்றவன். அது பருவகாலத்திலே கனிதரும். அதன் இலை உதிராது. அப்படியே அவன் செய்வதெல்லாம் சித்திக்கும். ரோமர் 8:38,39 மரணமோ ஜீவனோ, தெய்வ தூதரோ, துரைத்தனங்களோ, நிகழ்காரியங்களோ, வருங்காரியங்களோ, வல்லமைகளோ, உயர்வோ, தாழ்வோ வேறெந்த சிருஷ்டியானாலும் சரி, நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள கடவுளின் அன்பை விட்டு நம்மைப் பிரிக்க முடியாதென்று நிச்சயித்திருக்கிறேன். 1 கொரிந்தியர் 13:1-3 மனுஷ பாஷைகளையும் தெய்வதூதர் பாஷைகளையும் நான் பேசினாலும் அன்பு எனக்கு இராவிட்டால் சத்தமிடும் வெண்கலமும் ஓசையிடும் கைத்தாளமும் ஆய்விட்டேன். நான் தீர்க்கதரிசன வரத்தையுடையவனும் சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்தவனுமாயினும் மலைகளைப் பேர்க்கும் சகல விசுவாசமுள்ளவனாயினும் அன்பு எனக்கு இராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்குள்ள யாவற்றையும் நான் அன்னதானஞ் செய்தாலும் சுட்டெரிப்பதற்கு நான் என் சரிரத்தை ஒப்புக்கொடுத்தாலும் அன்பு எனக்கு இராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. லார்சன் மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணங்கள் 1.ஐக்கியத் திருப்புதல் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அதன் மொழி நடை தமிழ் கிறிஸ்தவர்களின் மொழியாகிவிட்டது. இந்தத் திருப்புதலின் வசனங்களை மக்கள் மனப்பாடமாய் அறிந்திருந்தனர். 2.நல்ல சமாரியன் பத்திரிகை லார்சன் ஐயர் திருப்புதலை எதிர்த்து எழுதியது நல்ல வரவேற்பைப் பெற்றது. 3.ஐக்கியத் திருப்புதலை செய்த பவர் ஐயர் பலருடைய கருத்துக்களைக் கேட்டு தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்து வந்தார். லார்சன் ஐயரும் அவருடன் வேலை செய்தவர்களும் இவ்விதம் நடந்து கொள்ள வில்லை. ஐக்கியத் திருப்புதலில் பலர் உதவினர். ஆனால் லார்சன் மொழிபெயர்ப்பு வெகு சிலரால் செய்யப்பட்டது. 4.தமிழ் கிறிஸ்தவ மக்கள் ஐக்கியத் திருப்புதலை எவ்வளவு பாராட்டி ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை லார்சன் கமிட்டியர் சரியாக உணராமல் நடந்து கொண்டனர். 5.லார்சன் மொழிபெயர்ப்புக் கமிட்டியர் சிறந்த தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மொழிநடையில் இருக்கவேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. இப்படி பல காரணங்களால் லார்சன் திருப்புதல் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அன்பானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த இணையதளத்தின் மூலமாக தமிழ் வேதாகமம் நம்முடைய கைகளில் எப்படி கிடைக்கப்பெற்றோம் என்று புத்தகங்கள் மூலமாக நாங்கள் கற்றுக்கொண்டதை நீங்களும் அறிந்துகொள்ளும்படியாக தேவன்; எங்களுக்கு அநுக்கிரகம் பாராட்டினதற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பகுதியோடு இது நிறைவு பெறுகிறது. மோனஹன் மொழிபெயர்ப்பு லார்சனுடைய மொழிபெயர்ப்பை திருத்துவது அவசியம் என்று திருநெல்வேலி மண்டல பேராயராயிருந்த ஸ்டீபன் நீல்(Stephen neill) 1939 பிப்ரவரி 13ம் தேதி சென்னை வேதாகம சங்கத்திற்கு ஓர் மடல் எழுதினார். இப்படி திருத்தும்போது பவர் ஐயர் மொழிபெயர்ப்பு நடையை பின்பற்ற வேண்டும் என்றும், லார்சன் பயன்படுத்திய ‘யெகோவா’ என்ற பதத்தை பயன்படுத்தாமல் பவர் ஐயர் பயன்படுத்திய ‘கர்த்தர்’ அல்லது ‘ஆண்டவர்’ என்ற பதங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை வேதாகம சங்கம் பரிந்துரை செய்தது. மோனஹன் மொழிபெயர்ப்புக்குழு அங்கத்தினர்கள்: C.H.மோனஹன் - மெதடிஸ்ட் சபை V.S.அசரியா - டோர்னக்கல் பேராயர் H.K.மோல்டன் (MOULTON) ஸ்டீபன் நீல்(நெல்லை பேராயர்)-ஆங்கிளிக்கன் சபை H.பேறம்(BJERRUM) - டேனிஷ் லுத்தரன் மிஷன் J.S.மாசிலாமணி - தென்னிந்திய ஐக்கிய சபை அருள் தங்கையா - கிறிஸ்தவ இலக்கிய சங்கம் S.தேவப் பிரசாதம் - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை இவர்களைப் பற்றி…. C.H.மோனஹன் மோனஹன் 1869ல் அயர்லாந்தில் பிறந்தார். டப்ளின் பல்கலைக்கழகத்தில் கிரேக்க, லத்தீன் மொழிகளைக் கற்று தேர்ச்சி பெற்றார். 1893ல் சென்னை வந்து ராயப்பேட்டையிலும், கிண்டியிலும் பணிபுரிந்தார். பின்பு நற்செய்திப்பணி செய்ய ஈக்காடு என்னும் இடத்திற்கு அனுப்பப்பட்டார். 1915ல் மெதடிஸ்ட் மிஷனின் சென்னை கிளைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்தான் பவர் ஐயர் திருப்புதலில் மாற்றங்கள் தேவை என்று முன்பு எழுதியவர். ஆனால் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்ய மெதடிஸ்ட் மிஷன் இவரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. லார்சன் மொழிபெயர்ப்பு கமிட்டியில் அங்கத்தினராயிருந்து உதவினார். 1940ல் மிஷன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த திருப்புதல் குழுவிற்கு தலைவராயிருந்து 1948ல் மொழிபெயர்ப்பு வேலையை முடித்து இங்கிலாந்து சென்றார். மோனஹன் 1951ம் ஆண்டு மரித்தார். V.S.அசரியா அசரியா 1874ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவரின் தந்தையும் குருவானவரே. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்றார். பல்லாண்டு சேவைக்குப்பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு LLD என்ற கௌரவ பட்டத்தை வழங்கிற்று. 1895-1905 ஆண்டுகளில் Y.M.C.A இயக்கத்தில் பணியாற்றினார். 1903ல் திருநெல்வேலி மிஷனரி சங்கத்தை ஸ்தாபித்தார். ஆந்திராவில் டோர்னக்கல் என்னும் ஊரில் மிஷனரி வேலை செய்ய pஇந்த சங்கத்தார் தீர்மானித்தனர். இவரும் அங்கே சென்று ஊழியம் செய்தார். சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். 1910ல் எடின்பரோவில் நடந்த மாபெரும் நற்செய்தி விழாவில் பங்கேற்றார். 1912ல் பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்டார். இந்திய வேதாகம சங்கம், கிறிஸ்தவ ஐக்கிய சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களுக்கு தலைவராக இருந்து சேவை செய்தார். தென்னிந்திய திருச்சபை(C.S.I) உருவாக இவர் அயராது பாடுபட்டார். டோர்னக்கல்லில் ஆரம்பிக்கப்பட்ட ஊழியத்தின் பலனாக சுமார் 2,30,000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். இவர் 1945ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மரித்தார். H.K.மோல்டன் மோல்டன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றவர். கிரேக்க மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர். இவர் பெங்களுர் வந்து 1932-1957 ஆண்டுகளில் அங்குள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். ஸ்டீபன் நீல் ஸ்டீபன் நீல் 1900 டிசம்பர் 31ல் இங்கிலாந்தில் பிறந்து 1922ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1924ல் இந்தியா வந்து பிற்பாடு 1939ல் திருநெல்வேலி பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்டார். இவர் 20 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1944ல் இங்கிலாந்து சென்றார். அநேக புத்தகங்களை எழுதியுள்ளார். பேறம்(BJERRUM) பேறம் டென்மார்க் தேசத்தில் பிறந்தார். ஹோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1904ல் இந்தியா வந்தார். இங்கு வருமுன்னரே சமஸ்கிருத மொழியை நன்கு கற்றிருந்தார். சென்னை வந்து தமிழ் கற்றார். கள்ளக்குறிச்சியில் ஊழியம் செய்தார். கடலூரிலுள்ள டேனிஷ் லுத்தரன் இறையியல் கல்லூரியில் 1922-24 ஆண்டுகளில் தலைவராகப் பணியாற்றினார். 1924-29 ஆண்டுகளில் பெங்களுர் கல்லூரியில் பணியாற்றினார். ஹிந்தி கற்றார். பின்பு புதுக்கோட்டை சென்று ஊழியம் செய்தார். 1946ல் டென்மார்க் சென்று 1950ல் காலமானார். J.S.மாசிலாமணி மாசிலாமணி 1878ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்தார். கல்கத்தாவிலுள்ள செராம்பூர் கல்லூரியில் பட்டம் பெற்றார். மதுரை பசுமலை இறையியல் கல்லூரியில் பல்லாண்டுகள் பணியாற்றினார். தமிழில் மிக தேர்ச்சியடைந்தவர். 1951ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி மரித்தார். அருள் தங்கையா அருள் தங்கையா 1902ல் பிறந்தார். திருமறையூர் இறையியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று 1933ல் குருவாக அபிஷேகம் பெற்றார். கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தில் (C.L.S) பல்லாண்டுகள் பணியாற்றினார். சென்னை வண்ணாரப்பேட்டை சபையில் குருவாகவும் பணியாற்றினார். தமிழ் மொழியில் சிறந்த அறிவு பெற்றிருந்தார். S.தேவப் பிரசாதம் தேவப் பிரசாதம் 1875ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். 1915ல் குரு பட்டம் பெற்று பற்பல லுத்தரன் சபைகளில் ஊழியம் செய்தார். 1926ல் பர்மாவிலுள்ள இரங்கூனில் பணி செய்தார். 1948ல் மரித்தார். புதிய ஏற்பாட்டு வேலை 1939ம் ஆண்டு மே மாதம் மொழிபெயர்ப்புக்குழு கொடைக்கானலில் முதலாவதாக கூடியது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் தடவையாக கூடினது. ஒவ்வொரு முறையும் கூடி பத்து நாட்கள் வேலை செய்தனர். மோனஹன் ஐயர் தலைமை வகித்தார். பேராயர் ஸ்டீபன் நீலும், திரு.அருள் தங்கையாவும் எழுதும் பணியில் உதவினர். கூட்டம் தொடங்குமுன் தனித்தனியே ஆராய்ச்சி செய்தனர். எல்லாரும் கூடி ஒவ்வொரு வசனத்தையும் சத்தமாய் வாசிப்பார்கள். அதைக் குறித்து கருத்துக்கள் இருந்தால் பகிர்ந்து கொள்வார்கள். மற்ற மொழிபெயர்ப்புகளையும் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வர். மொழிபெயர்ப்புக் குழு பின்பற்றிய சில விதிகள் படிப்பறியாத கிராமத்தானும் வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய மொழி நடையில் இருக்க வேண்டும். அதே சமயம் தரம் குறைந்த கொச்சை மொழி தவிர்க்கப்பட வேண்டும். தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பழக்கமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ‘கடவுள்’ என்ற பதத்தை பயன்படுத்த வேண்டும். பவர் ஐயர் பயன்படுத்திய ‘தேவன்’ என்ற வார்த்தையை லுத்தரன் சபையார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். 1940 பிப்ரவரி மாதம் முடிவதற்குள் நான்கு சுவிசேஷங்களும், அப்போஸ்தல நடபடிகளும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் ரோமர் நிரூபமும் முதலாம், pஇரண்டாம் கொரிந்தியரில் சில அதிகாரங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. 1940 செப்டம்பர் 6-16 தேதிகளில் கூட்டம் நடந்தது. நவம்பர் 7ம் தேதி மத்தேயு, மாற்கு அச்சடிக்க கொடுக்கப்பட்டது. 1941ல் பிப்ரவரியில் லூக்கா, யோவான், அப்போஸ்தல நடபடிகள் அச்சடிக்க கொடுக்கப்பட்டன. 1941 நவம்பர் மாதம் புதிய ஏற்பாட்டு வேலை முழுவதும் முடிந்தது. பழைய ஏற்பாடு எபிரேய மொழி நிபுணர் ஒருவரைத் தேட ஆரம்பித்தனர். புதிய ஏற்பாட்டு வேலை முடிந்தவுடன் மோல்டன் ஐயர் மொழிபெயர்ப்பு வேலையை விட்டுவிடத் தீர்மானித்தார். எனவே வேறு இரண்டு பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேக்ஸ் ஹண்டர் ஹாரிசன் இவர் புகழ்பெற்ற அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கற்று பட்டம் பெற்று, 1919ல் யாழ்பாணம் சென்று அங்குள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். 1931ல் பெங்களுர் இறையியல் கல்லூரிக்கு வந்து பணியைத் தொடர்ந்தார். 1937ம் ஆண்டு முதல் 1953வரை பெங்களுர் இறையியல் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றினார். 10 மொழிகளைக் கற்ற பண்டிதர் இவர். மார்க்கஸ் வார்ட் இவர் இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். மெதடிஸ்ட் மிஷன் சார்பாக pஇந்தியா வந்து 1936-55 ஆண்டுகளில் பெங்களுர் இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். மோனஹன் திருப்புதல் வேலையில் சில பிரச்சனைகள் எழும்பின. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு திருப்பும்போது அனுபவரிதியான பிரச்சனைகள் எழுவதுண்டு. ராமன் கத்தோலிக்க சபையினர் பேதுரு என்ற பெயரை ‘இராயப்பர்’ என்றும், யோவானை ‘அருளப்பர்’ என்றும், பவுலை ‘சின்னப்பர்’ என்றும் மொழி பெயர்த்திருந்தனர். இலங்கையில் செய்த மொழிபெயர்ப்பில் இயேசுஸ்கிறிஸ்துஸ், மத்தேயுவுஸ், பவுலூஸ் என்று திருப்பியிருந்தனர். இதில் எதைப் பின்பற்றி மொழிபெயர்ப்பது என்று மோனஹன் மொழிபெயர்ப்பு குழுவினர் குழம்பிப் போயிருந்தனர். வேதாகம புத்தகங்கள் எழுதப்பட்ட காலத்தில் அவைகளுக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பஞ்சாகமங்களை எழுதிய மோசே அந்த புத்தகங்களுக்கு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்று பெயரிடவில்லை. பிற்காலத்தில் தான் வேதாகம புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டன. பப்ரிசியஸ் ஐயர் திருப்புதலைப் பின்பற்றித்தான் பவர் ஐயர் வேதாகம புத்தகங்கள் பெயரை மொழிபெயர்த்திருந்தார். ஆனால் லார்சன் சில புத்தகங்களுக்கு புதிய பெயர்களை சூட்டினார். உதாரணமாக சங்கீதத்திற்கு ‘கீதகீதம்’ என்றும், உன்னதப்பாட்டிற்கு ‘பிரலாபப் பாடல்’ என்றும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு ‘தரிசனம்’ என்றும் லார்சன் மொழிப் பெயர்த்திருந்தார். இதில் எதைப் பின்பற்றுவது என்ற கேள்வி எழுந்தது. சில வார்த்தைகளுக்கு தமிழில் பல பதங்கள் இருந்தன. இதில் எதைப் பயன்படுத்துவது என்ற வினா எழுந்தது. உதாரணமாக ‘பொலிஸ்’ என்ற கிரேக்க வார்த்தை ‘ஊர்’ என்று 68 தடவையும், ‘நகரம்’ என்று 21 தடவையும், ‘பட்டிணம்’ என்ற 20 தடவையும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 12:21ல் ஏரோது சிங்காசனத்தில் ‘உட்கார்ந்தான்’ என்றா, ‘அமர்ந்தான்’ என்றா, ;வீற்றிருந்தான்’ என்றா மொழிபெயர்ப்பது என்று யோசித்தனர். பிஷப் அசரியா அவர்கள் ;வீற்றிருந்தான்’ என்று மொழிப் பெயர்க்க யோசனை கூறினார். இதுபோலவே சொற்களின் சந்தி, விகுதி, இடைநிலை, சாரியை ஆகியவை பற்றிய கருத்து வேறுபாடுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. உதாரணமாக ‘பிலிப்பின்’ என்றா ;பிலிப்புவின்’ என்றா மொழிபெயர்ப்பது; ‘கேட்ட போதோ’, ‘கேட்டபொழுதா’, ‘இதன்’, ‘அதன்’ என்று மொழிபெயர்க்க வேண்டுமா அல்லது ‘இதின்’, ‘அதின்’ என்று திருத்தவேண்டுமா என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. ‘மரியம்மாள்’ என்பது ‘மரியாள்’ என்றும், ‘மனிதன்’ என்ற வார்த்தை ‘மனுஷன்’ என்றும், கடவுளின் ராஜ்யம்’ என்றும், தேவனை ‘வெளிச்சம்’ என்று கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ‘ஒளி’ என்றும் மொழிபெயர்க்க தீர்மானித்தனர். பழைய ஏற்பாட்டு வேலை முன்னேற்றம் 1941 மே மாதம் 13-23 தேதிகளில் கோத்தகிரியில் பிஷப் அசரியாவுக்கு சொந்தமாயிருந்த வீட்டில் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது. சங்கீதம், நீதிமொழிகள், யோபு ஆகிய புத்தகங்களை இந்த நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சங்கீத புத்தகத்தின் பாதியை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது. அடுத்த கூட்டத்தில் சங்கீதத்தை முடித்து ஆதியாகமத்தை தொடர்ந்தனர். 1941ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பெங்களுர் இறையியல் கல்லூரியில் அடுத்த கூட்டம் நடந்தது. அடுத்து நவம்பர் 18-22 தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் கூட்டம் நடந்தது. 1942 ஜூன் 9-19 தேதிகளில் கொடைக்கானலில் அடுத்த கூட்டம் நடைபெற்றது. இந்த நாட்களில் இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எனவே மொழிபெயர்ப்பு வேலை எதிர் பார்த்த அளவு துரிதமாக நடைபெறவில்லை. 1944ல் பிஷப் நீல் தன் தாய்நாடான இங்கிலாந்திற்கு திரும்பி சென்றார். 1.1.1945ல் பிஷப் அசரியா தமது 71ம் வயதில் காலமானார். மொழிபெயர்ப்பு வேலை 1946ல் முடிவுற்றது. அச்சுவேலை சில ஆண்டுகள் நடைபெற்றன. 1948ல் மோனஹன் ஐயர் தாயகம் திரும்பினார். அவருக்கு அப்போது வயது 79. புதிய திருப்புதல் வேதாகமம் 1949ல் வெளியிடப்பட்டது. மறுபடியும் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் திருத்தங்கள் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் இன்னும் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது என பலரால் உணரப்பட்டது. எனவே இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு தலைவராக லுத்தரன் சபையை சேர்ந்த C.G.டில் (Carl gustav deihil) என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக H.K.மோல்டன், W.H.குர்ட், H.E.மில்லர், D.ராஜரிகம் P.சோதிமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பல திருத்தங்களை செய்தபின் 1954ல் புதிய திருப்புதல் வெளிவந்தது. தமிழில் நமக்கு வேதாகமத்தை மொழிபெயர்க்க உதவி செய்த எல்லா பரிசுத்தவான்களுக்காகவும் நன்றி செலுத்துவோம். தங்கள் தாய்மொழியில் வேதாகமம் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இன்னும் உள்ளனர் என்பது எவ்வளவு வேதனையானது. நம்முடைய தமிழ்மொழியில் இன்றுவரை வேதாகமம் இல்லாதிருந்தால் எப்படி இருந்திருக்கும்? எண்ணிப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தை கையில் எடுக்கும்போதெல்லாம் எழுதிய பரிசுத்தவான்களுக்கு நன்றி செலுத்துவோம். நமது மொழியில் மொழிபெயர்த்த நல்லவர்களுக்கு நன்றி கூறுவோம். தினமும் வேதம் வாசிப்போம். வேத வசனத்தின்படி நடக்கத் தீர்மானிப்போம். பிறருக்கு வசனம் கிடைக்க ஆவன செய்வோம். தற்போது மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஜெபிப்போம்.
நன்றி Pr. P. S. ராஜாமணி வேதாகமம் (தமிழ்) நமக்கு எப்படி கிடைத்தது? என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.
ஆசாரியர்கள் இவர்கள் தேவனால் ஜனங்களுக்காக தேவனுடைய சமூகத்தில் மன்றாடுவதற்கும் பலி செலுத்துவதற்கும் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் (1 பேது 2:9) 1. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், 2. கர்த்தருக்குரியவர்கள், 3. அவருக்கு பரிசுத்தமானவர்கள், 4. கர்த்தருக்கு பலி செலுத்துபவர்கள். தீர்க்க தரிசிகள் ஆண்டவர் ஜனங்களோடு பேசுவதற்கு அல்லது காரியங்களை வெளிப்படுத்துவதற்கு தீர்க்க தரிசியை பயன்படுத்தினார். தீர்க்கதரிசி என்றால் தீர்க்கமாக உறைத்தல் என்று பொருள். இவர்கள் மாமிசத்தின் படியல்ல கர்த்தருடைய ஆவியானவர் ஏவுகிற கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு தெளிவாக எடுத்து இயம்புகிறவர்கள். பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பிரபலமான யூதர்களின் ஒரு பிரிவுதான் பரிசேயர்கள். தேவனுக்கென்று உண்மையாக தங்கள் காணிக்கைகளையும் தசமபாகங்களையும் கொடுக்கிறவர்கள். மோசேயின் நியாயப்பிரமாணங்களை கைக்கொள்கிறேன் என்ற பெருமை இவர்களுக்கு அதிகமாக உண்டு. இவர்கள் உயிர்த்தெழுதல், தேவதூதன் மற்றும் ஆவியும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். பேசப்படுகிற அல்லது எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையை நம்புகிறவர்கள். இயேசுகிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரானவர்கள். அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினவர்கள். (மத் 12:14) செய்கைக்குதக்கதான பலன்கள் மற்றும் தண்டனை உண்டென்று நம்புகிறார்கள் மத்9:11-14, 12:1-8,16:1-12,23, லூக்11:37-44, அப் 15:5, 23:6-8. சதுசேயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பிரபலமான யூதர்களின் மற்றொரு பிரிவுதான் சதுசேயர்கள். இவர்கள் சமுதாயத்தில் நல்ல வசதியானவர்கள். எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையை நம்புகிறவர்கள். மேலும் சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள்(மாற்12:18, லூக்20:27, அப்23:8). இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும் அப்போஸ்தலருக்கும் எதிர்த்து நின்றவர்கள் (மத்21:12, மாற்11:15, லூக்19:47, அப்5:17,33) வேதபாரகர் இவர்கள் வேதத்தை கற்று அறிந்தவர்கள். பழைய ஏற்பாட்டில் எஸ்றா ஒரு வேதபாரகராக இருந்தார். (எஸ்றா 7:6,10-12, நெகே 8:1,4,9,1). ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள வேதபாரகர்கள் பரிசேயர்களோடு நெருங்கி இருந்தனர். இவர்கள் கர்த்தரின் வார்த்தையோடு சொந்த கருத்துகளையும் பாரம்பரியங்களையும் சேர்த்திருந்தார்கள். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு குற்றம் கண்டு பிடிக்கும்படியாக வந்தார்கள!” (மாற் 7:5-9 ). அவரை சிலுவையில் அறைவதற்கும் ஆதி சபையை துன்புறுத்துவதிலும். அவர்களுக்கு பங்கு இருந்தது. (அப் 4:5-7, 6:12), நீண்ட அங்கிகளை தரித்திருந்தவர்களாகவும் ஆலயத்தில் முதன்மையான இருக்கைகளை விரும்பினர். அப்போஸ்தலர் அப்போஸ்தலர் என்றால் அனுப்பப்பட்டவர் என்று அர்த்தம். அவருக்கு சாட்சியாக அவருடைய நாமத்தை அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் பொழுது விடிந்தபோது, அவர் (இயேசு கிறிஸ்து) தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.(லூக் 6: 13
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் உங்களை வாழ்த்துகிறேன். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதிலிருந்து புதிய வானம் புதிய பூமி (வெளி 21:1)வரை ஏழு காலங்கள் உள்ளன. ஓவ்வொரு காலங்களிலும் இரட்சிப்பின் செய்திகள் தேவன் ஏற்படுத்தினார். அந்த செய்தியை அங்கீகரிக்காமல் தோல்வியை தழுவும்பொழுது தண்டனைகளும் அங்கே நியமிக்கப்பட்டிருந்ததை வேதாகமத்திலிருந்து நாம் பார்க்க முடியும். இவைகளில் ஐந்து காலங்கள் நிறை வேறிவிட்டன. ஆறாவது காலத்தில் கடைசிப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஏழாவதும் கடைசியுமான ஆயிர வருட அரசாட்சி நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இவைகள் ஒவ்வொன்றையும் சுருக்கமாக கற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!. களங்கமில்லா காலம் பொருளடக்கம்: தேவன் ஆதாமையும், ஏவாளையும் படைக்கும் பொழுது அவர்கள் களங்கமில்லா தவர்களாகவும், நன்மை தீமை அறியாதவர்களுமாக படைக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தில் அவர்களை வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் ஆதி 2:15. இரட்சிப்பின் செய்தி: தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி 2:16,17 தோல்வி: ஆதி மனிதனோ கட்டளையை மீறி கீழ்படியாமல் அந்த கனியை புசித்தான் தண்டனை. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.ஆதி 3:23,24) மனசாட்சியின் காலம் பொருளடக்கம்: நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து வீழ்ச்சியடைந்த பின் மனிதன் நன்மை செய்வதும், தீமையை வெறுப்பதும் என்ற மனசாட்சி அவனுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதுவே மனசாட்சியின் காலம். “அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.(ஆதி 3:7) இந்த மனசாட்சியின் கால கட்டத்தில் எந்தவிதமான சட்டமும், பாடசாலைகளும் இல்லை. இரட்சிப்பின் செய்தி: நல்லதை செய்ய வேண்டும். தீமை செய்யக் கூடாது. (பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் ஆதி 3:22) தோல்வி: மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, ஆதி 6:5 தண்டனை: நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. ஆதி 7:11,12,23 மனித அரசாங்கம் பொருளடக்கம்: நடுங்கக்கூடிய பெரு வௌ;ளத்தினாலான தண்டனைக்குப் பின்பு 8 பேர் மீட்கப்பட்டனர். ஆண்டவர் பூமியை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்து ஆளும்படியாக நியமித்தார். ஆதி 9:1,2 இரட்சிப்பின் செய்தி : ஆண்டவரை விசுவாசி, பேழையை உண்டாக்கு. (ஆதி 6:16-18) தோல்வி: பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அபூளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆதி 11:4 தண்டனை: பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். ஆதி 11:9. வாக்குத்தத்ததின் காலம் பொருளடக்கம்: தேவனை துக்கப்படுத்தி பாபேல் கோபுரத்தை கட்டின சந்ததியில், தேவன் ஒரு மனிதனாகிய ஆபிராமை அழைத்து அவனோடு உடன்படிக்கை பண்ணினார். அநேக வாக்குதத்தங்கள் அபிராமுக்கும், அவன் சந்ததிக்கும் கிருபையாகவும் கொடுத்தார். அதே நேரத்தில் விசுவாசம், கீழ்படிதல் என்ற எல்கையை வைத்தார். (ஆதி 12:1-3, 13:14-17, 15:5, 26:3, 28:12-13) இரட்சிப்பின் செய்தி: கர்த்தருடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தல். (கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ ஆதி 12:1) தோல்வி: வாக்குதத்தங்களை விசுவாசியாமல் அவிசுவாசியாக மாறினார்கள். தண்டனை: இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு அடிமையாக்கப்பட்டார்கள் (யாத் 1:13-14) நியாயப்பிரமாண காலம் பொருளடக்கம்: மறுபடியும் கர்த்தருடைய கிருபை, உதவியில்லாத மனிதனுக்கு உதவி செய்யும்படி கடந்து வந்து எகிப்திலிருந்து அவர்களை மீட்டது. கர்த்தர் சீனாய் மலையிலே நியாயப்பிரமாண உடன்படிக்கையை மோசே மூலமாக ஜனங்களுக்கு கொடுத்தார். அதை செய்வதாக ஜனங்கள் உறுதியளித்தனர்.(யாத் 19:8) இரட்சிப்பின் செய்தி: கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொண்டு கீழ்படியுங்கள். (இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது யாத் 19:5) தோல்வி: வரலாற்றில் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் கர்த்தரை சோதித்து வீழ்ந்தார்கள். அநேக எச்சரிப்புகளுக்கு பின்பும் ஜனங்கள் பிரமாணத்தை கைக்கொள்ளவில்லை. தண்டனை: இஸ்ரவேலிலிருந்தும், யூதாவிலிருந்தும் ஜனங்கள் துரத்தப்பட்டார்கள். கொஞ்ச ஜனங்கள் நெகேமியா, எஸ்றா தலைமையில் திரும்பினார்கள். 2இராஜா 17:1-18, 2இராஜா 25:1-11 கிருபையின் காலம் பொருளடக்கம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியான படியினால் கிருபையின் காலத்தை நமக்கு தொடங்கி வைத்தார். அதாவது நியாயப்பிரமாணத்தின் படி தேவன் எதிர்பார்த்த நீதியை, இயேசு கிறிஸ்துவே நமக்காக பலியாகி அந்த நீதியை தந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்றவர்களுக்கு இரட்சிப்பும், நித்திய ஜீவனும் அவர் மூலமாக யூதர்களுக்கும், புற ஜாதிகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல எபே 2:8,9 கிருபையின் காலத்திலுள்ளவர்கள் தேவனை விசுவாசித்து இரட்சிக்கப்படுகிறவர்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.. இந்த சபையானது அவரடைய இரத்தம் சிந்தி சம்பாத்தியம் செய்யப்பட்டது அதாவது நமக்கு கிருபையாக இந்த சிலாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இரட்சிப்பின் செய்தி இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று அறிக்கை செய்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்க வேண்டும். (என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.ரோம 10:9) நியாயத்தீர்ப்பு: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை யாரெல்லாம் ஏற்றுக்கொண்டு சபைக்குள் வராமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டுள்ளது. (லூக் 17:26-30, லூக் 18:8, 2தெச 2:7-12, வெளி 3:15-16). முதல் காரியமாக இந்த காலத்தின் கடைசியிலே பரலோகத்திலிருந்து தேவன் மேக மீதில் வருவார். அப்பொழுது, கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.1தெச 4:16-17. இரண்டாவதாக சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிற்பாடு மனிதனுடைய சுயம் அழியும் படி தேவனால் நியமிக்கப்பட்ட அந்த 7 வருட குறுகிய கால உபத்திரவ காலம் நியமிக்கப்பட்டுள்ளது. (எரே30:5-7, தானி 12:1, செப் 1:15-18, மத் 24:21-22). ஆயிர வருட அரசாட்சி நியாயதீர்ப்புக்கு பிற்பாடு, இயேசு கிறிஸ்து பூமியில் இஸ்ரவேலை திரும்ப எடுத்து கட்டி ஆயிரம் வருடம் பூமியில் ராஜாதி ராஜாவாக ஆட்சி செய்வார். இதுவே ஆயிர வருட அரசாட்சி எனப்படும். அவருடைய வல்லமையின் சிங்காசனம் எருசலேமிலும், பரிசுத்தவான்களோடும், கிருபையின் காலத்தில் இரட்சிக்கப்பட்டவர்களோடும், கூடயிருக்கும் (ஏசா 2:1-4, ஏசா 11, சங் 15:14-17, வெளி 19:11-21, வெளி 20:1-6). எனக்கு அருமையானவர்களே இந்த கிருபையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோம் அவர் நம்மளை சபையில் சேர்த்து நம்மளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார்.
அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் உலகத்திலே வேறு யாருக்கும் நடக்க வில்லை என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் ஏற்கனவே இப்படிப்பட்ட காரியங்கள் நடந்திருப்பதும் அது நடப்பதற்குரிய காரியங்களும். இப்படிப்பட்ட காரியங்களை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக கர்த்தர் வேதாகமத்தின் மூலமாக கற்று கொடுத்துள்ளார். வேதாகமத்தை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். வேதாகமத்தின் சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் நாம் கற்றுக்கொள்ளும் பொழுது ஒரு ஒட்டு மொத்த கருத்து (common idea) கண்டிப்பாக தெரியும். பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியர் நம்முடைய தேவனே. 40 தேவனுடைய பிள்ளைகளை கொண்டு தேவன் எழுதினார். இது 66 புத்தகங்களை உள்ளடக்கியது. உலகத்தின் படைப்பும் அதற்கு பின்பு நடந்து கொண்டிருக்கிற மற்றும் நடக்கப்போகிற காரியங்கள் தெளிவாக பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆண்டவர் தேவ பிள்ளைகள் மூலமாக உணர்த்தின அல்லது தீர்க்கதரிசனம் உரைத்த அனைத்தும் அதினதின் காலக்கட்டத்திலே நடந்தது. 1. படைப்பு (ஆதி 1- 2) நம்முடைய ஆதி மனிதர் யார் என்று கேட்டால் இந்த உலகத்திலுள்ள எல்லாருக்கும் சட்... என்று ஞாபகம் வருவது ஆதாம் ஏவாள். இவர்களின் படைப்பைக்குறித்தும் அண்டசராசரங்களின் படைப்பையும் ஆதியாகமத்தில் பார்க்க முடியும். 2. பாவம் பிரவேசித்தல் (ஆதி 3) ஆண்டவரோடு உறவாடிக்கொண்டிருந்த மனிதன் தேவனுக்கு கீழ்படியாமல் பாவம் என்ற பள்ளத்தாக்கில் வீழ்ந்தான்.. இதுமுதற்கொண்டு பாவம் மனிதனுக்குள் பிரவேசித்தது. பாவம் மனி தனை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் சுவராக மாறியது. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசா59:2) அப்பொழுதே இரட்சகரைக்குறித்தும் வாக்குப்பண்ணப்பட்டது. (ஆதி 3:15) 3. நோவாவின் பேழை (ஆதி 6- 11) பெருகியது பெருகியது வௌ;ளம் போல ‘பாவம்’, நோவாவின் காலத்தில் ஜனங்கள் செய்த அதிக பாவத்தினிமித்தம் தேவனை மனம் கசக்கப்பண்ணினார்கள். தேவன் உலகத்தை அழிக்க முற்படும் பொழுது… ஒருவர் மாத்திரம் தேவனுடைய பார்வையில் கிருபைபெற்றார் அவர்தான் நோவா தாத்தா.. அவர் தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அவர் மூலமாக ஒரு பேழை உண்டாக்கப்பட்டது. அப்பொழுது அநேகருக்கு நீதியைக் குறித்து பிரசங்கித்தார் யாரும் அதை ஏற்றுக்கொண்டு பேழைக்குள் வரவில்லை 2பேது2:5 ஆகவே ஜனங்கள் மரணத்தை ருசிபார்த்தார்கள். இந்த பேழையானது இப்பொழுது உள்ள தேவ சபையை குறிக்கிறது. யாரெல்லாம் இதற்குள் வருவார்களோ அவர்கள் இயேசுகிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த அழிவுக்கு பிற்பாடு ஆண்டவர் நான் நீரினால் அழிக்க மாட்டேன் என்று சொல்லி வானவில் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இனி வானவில்லைப்பார்த்ததும் நோவின் பேழை ஞாபகத்திற்கு வரும்தானே! 4. பாஷைகள் எப்படி உருவானது? மேலும் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் தாம் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று சுய நோக்கத்தோடும் மற்றும் உருவாக்கிய ஆண்டவரை மறந்த படியினாலும் கர்த்தர் ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். அப்படியே அனேக பாஷைகன் தோன்றிற்று. எப்படி அநேக பாஷைகள் உலகத்தில் தோன்றிற்று என்று யாராவது கேட்டால் பதில் சொல்ல ஆயத்தமாகிவிட்டீர்களா! 5. ஆபிரகாம் அழைப்பு (ஆதி 12) விசுவாச தந்தை யார் என்றால் தெரியாதவரே இல்லை எனலாம். இந்த ஆபிரகாமைதான் (Abraham) இஸ்லாமிய மதத்தார் இப்ராகிம் (Ibrahim) என்று சொல்கிறார்கள் தேவன் இவரை தெரிந்துகொண்டு தெய்வீக அழைப்பைக்கொடுத்து ஆசீர்வதித்து இவருடைய ஜனங்களை தனக்கு சொந்த ஜனமாக அங்கீகரித்தார். தன்னுடைய நூறு வயதில் பிறந்த ஏக குமாரனாகிய ஈசாக்கையும் தேவனுக்கு பலிகொடுக்க தன்னை அர்ப்பணித்தபடியினால் இவருடைய விசுவாசத்தை கர்த்தர் கனப்படுத்தினார். ஆகவே நம்முடைய விசுவாசத்தின் தந்தையாக மாறினார். ஈசாக்குக்கு பிறந்த இரண்டு குமாரர்களான ஏசா மற்றும் யாக்கோபு.. இதில் கர்த்தர் யாக்கோபை தெரிந்து கொண்டு இஸ்ரவேல் என்று பேர் சூட்டினார்.. இப்படியாக இஸ்ரவேல் என்ற பெயர் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தது. 6. யோசேப்பு எகிப்துக்கள் பிரவேசித்தல (ஆதி 39-47) இந்த யோசேப்பின் சரித்திரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நிழலாட்டமாக இருப்பதை பார்க்க முடியும். யாக்கோபு(இஸ்ரவேல்) 12 குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் யோசேப்பை பகைத்தார்கள் அதில் யூதா என்பவன் வௌளிக்காசுக்கு விற்றுப்போட்டான். பாவமறியாதவனை பாவி என்று சிறைச்சாலையில் தள்ளினர். அவனோடு இரண்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவனுக்கு மீட்பு கிடைத்தது மற்றவனுக்கோ மரணம் கிடைத்தது. வேளை வந்தது பார்வோன் யோசேப்பை உயர்த்தி சகல அதிகாரங்களையும் அவனுக்கு கொடுத்தான். 7 ஆண்டுகள் பஞ்சம் வந்தது (மகா உபத்திரவகாலம்) உலகத்தில் அனைவரும் ஜீவன் தப்புவதற்கு யோசேப்புவினிடத்தில் சென்றார்கள்…. அங்கே இஸ்ரவேல் குடும்பத்தாரும் தஞ்சம் புகுந்தார்கள். இவ்வண்ணமாக ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்தம் நிறைவேறுகிறது. (அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். ஆதி 15:13) 7. மோசே ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டுவருதல் (யாத் 3-40) இஸ்ரவேலர்கள் 430 ஆண்டுகள் எகிப்திலிருந்து 25 லட்சமாக பெருகினார்கள். அங்கே யோசேப்பு இறந்த பிற்பாடு வேறே ராஜாக்கள் தோன்றி அவர்களை அடிமையாக்கினர்கள். அப்பொழுது மோசேயை கர்த்தர் ஏற்படுத்தி ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார். 40 ஆண்டுகள் இவர்கள் வனாந்திரத்தில் கால்நடையாக பயணித்தார்கள். புசிக்க மன்னாவையும் காடையும் கொடுத்தார். அதோடு மோசேக்கு நியாயப் பிரமாணம், வாசஸ்தலம் மற்றும் பணிமூட்டுகளின் மாதிரியையும் கொடுத்தார். அன்பானவர்களே எகிப்துக்கு ஏன் இஸ்ரவேல் மக்கள் சென்றார்கள் என்று புரிந்து விட்டதா? 8. யோசுவா கானானை சுதந்தரித்தல் 40 ஆண்டு பயணங்களுக்கு பிற்பாடு இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியைப்பிடித் தார்கள் அப்பொழுது மோசேக்கு பிற்பாடு கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தும்படியாக யோசுவாவை தெரிந்துகொண்டார். அவர்கள் யோர்தான் நதிவழியாக கடந்து எரிகோவைப் பிடித்து கானானுக்குள் பிரவேசித்தார்கள். யோசுவாவுக்கு பிற்பாடு தனிப்பட்ட தலைவர்களால் நியாயம் விசாரித்தார்கள் அவர்கள் நியாயாதிபதி என்று அழைக்கப்பட்டனர். 9. இராஜாக்களின் காலம் இஸ்ரவேல் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கர்த்தர் ராஜாக்களை ஏற்படுத்தினார். சவுல் முதல் இராஜாவாக இருந்தான், தாவீது மற்றும் சாலமோன் இராஜாக்களாக இருந்தார்கள். சாலமோனுடைய காலத்தில் தேவாலயம் கட்டப்பட்டது. பிற்பாடு இராஜ்யம் பிரிந்தது வடக்கு நாடு இஸ்ரவேல் என்றும் தெற்கு நாடு யூதேயா ஆக மாறியது. 10. இஸ்ரவேல் சிறைபிடிக்கப்படுதல் இஸ்ரவேல் (2ராஜா 12-25) சுமார் 200 ஆண்டில் 20 ராஜாக்கள் ஆண்டு எல்லாரும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து அடிமைகளாய் அசீரியர்களால் சிறைபிடிக்கப்ட்டு கொண்டுபோகப்பட்டனர். 11. யூதா சிறைபிடிக்கப்படுதல் யூதாவில் 19 ராஜாக்களும் ஒரு ராணியும் ஆளுகை செய்தனர். சிலர் கர்த்தருக்கு பிரியமாகவும் சிலர் பிரியமில்லாமலும் ஆட்சி செய்தார்கள். இவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டனர். சாலமோன் கட்டிய ஆலயம் சுட்டெரிக்கப்பட்டது 12. 70 ஆண்டுகள் பாபிலோனில் 2 நாளாகமம் 36:5-27 ன் படி யூதேயா ஜனங்கள் 70 ஆண்டுகள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தனர். தானியேல் இருந்ததையும் நாம் பார்க்க முடியும். மீதியர் மற்றும் பெருசியர் கையில் பாபிலோன் அகப்பட்டபின்பு யூதர்கள் எருசலேமுக்கு திரும்பினார்கள்.
13. எருசலேம் நோக்கி மூன்று குழுக்களாக மூன்று தலைவருக்கு கீழ் திரும்பினார்கள் Þ செருபாபேல் தேவாலயத்தை கட்டினார் Þ எஸ்றா ஆசாரியனாக வந்தார் Þ நெகேமியா எருசலேமின் அலங்கத்தை கட்டினார் 15. இடைப்பட்டகாலம் இந்த இடைப்பட்ட காலத்தில் யூதர்கள் திரும்பி தங்கள் நாட்டிற்கு வந்தாலும் மற்ற சக்கரவர்த்திகளின் பிடியில் இருந்தார்கள். இந்த சக்கரவர்த்திகளை குறித்து தானியேல் 2:31-45ல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். அவைகளை தனித்தனியே பார்ப்போம் 1. பாபிலோன் - கி.பி 500 ல் யூதர்கள் அடிமையாக 70 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள் (தானியேல் 2:37-38) 2. பெர்சியா- கி.பி 400ல் பெர்சியா (மீதியானி-பெர்சியன் சக்கரவர்த்தி) பாபிலோனை முற்றுகைப் போட்டார்கள் அப்பொழுது நெகேமியா யூதேயாவுக்கு திரும்பி வந்தார் 3. கிரேக்கர்-கி.பி 300 ல் மகா அலெக்ஸ்சாண்டரால் பெர்சியா முற்றுகைப் போட்டு முழு மேற்கைய நாடுகளையும் தனது 32 வது வயதில் பிடித்து இறந்தான் அப்பொழுது நான்கு ஜெனரலர்களால் பிரித்து ஆண்டார்கள்-மெக்கதோனியர், துர்க்கி, சிரியா, எகிப்து 4. ரோம்- கி.பி 50 ல் ஜூலியஸ் சீசர் உலக சக்கரவர்த்தியாக உருவெடுத்தார். கி.பி 44ல் கொல்லப்பட்டபின்பு அவருடைய மருமகனான அகஸ்துஸ் சீசர் எகிப்தின் கிளியோப் பட்ராவை மேற்கொண்டு பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். அந்தியோப்பின் மகனான ஏரோது யூதர்களுக்கு மேலாக அரசாள ரோம அரசால் ஏற்படுத் தப்பட்டது. ஏரோது ஆரம்பத்தில் யூதர்களோடு நல்ல அணுகுமுறையாக இருந்தான். ஆட்சி பீடத்திற்காக தன் மனைவியையும், பிள்ளைகளையும் கொலைசெய்தான் யூதாவை ஆட்சி செய்ய இயேசு பிறந்து விட்டார். ஆகவே 2 வயதுக்குட்பட்ட யூதர்கள் ஒவ்வொருவரையும் கொலை செய்தான். மத் 2:16 16. வந்தவராகிய மேசியா வாக்குதத்தத்தின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்கு இப்புவிக்கு ஒரு மனிதனாக பிறந்து வந்தார். அநேக அற்புத அடையாளங்களினால் தேவத்துவத்ததை வெளிப்படுத்தினார் இரத்தம்சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை… ஆகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலிக்கிடாவாக மாறினார். மூன்றாம் நாள் அவர் உயிர்தெழுந்தார். அவருடைய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு கிடைத்தது. 17. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை வாக்குதத்தத்தின்படி கடைசி காலத்திலே மாம்சமான யாவர்மேலும் ஆவியானவர் பொழிந்தருளப்படுவார் என்பதின்படி பெந்தெகோஸ்தே நாளில் ஆவியானவர் பலமாக பொழிந்தருளினார். இப்பொழுதும் அதே ஆவியானவர் பொழிந்தருளிகொண்டிருக்கிறார். 18. அப்போஸ்தலரின் ஊழிய பயணம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சீடர்களுக்கு கட்டளையிட்டதின்படி அவர்கள் சகல ஜாதிகளிடத்தில் சென்று சுவிஷேசம் அறிவித்தார்கள். அங்கே அநேகர் இரட்சிக்கப்பட்டனர், அற்புத அடையாளங்கள் நடந்தன. அநேக சபைகள் நிறுவப்பட்டது முதல் ஊழிய பயணம் (ஆப் 13-14) பவுலும் பர்னபாவும், மாற்கும் சீப்ரு மற்றம் கலாத்தியாவுக்கு மேற்கொண்டனர். இரண்டாவது ஊழிய பயணம் (ஆப் 16-18) ஆந்தியோகாவிலிருந்து பவுலும் சீலாவும் ஊழிய பயணம் மேற்கொண்டார்கள் மூன்றாவது ஊழிய பயணம் (அப் 19-21) எபேசுக்கு ஊழியம் 19. வருகிறவராகிய மேசியா வெளிப்பாடு அருமையானவர்களே வருங்காரியங்களையும் கடைசிகாலங்களின் வெளிப்பாடும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ரகசிய வருகையும், பகிரங்க வருகையும், நியாயத்தீர்ப்பும் மற்றும் ஆயிர வருட அரசாட்சியையும் வெளிப்படுத்தின சுவிஷேசத்தில் நாம் பார்க்க முடியும். இவைகளை படித்துக்கொண்டிருக்கும் போதே உங்களுக்கு வேதாகமத்தின் நிகழ்வுகள் புரிந்திருக்கும்.. தொடர்ந்து பரிசுத்த வேதாக்தை படிக்கும் பொழுது இன்னும் அநேக காரியங்களை விளங்கிக்கொள்ளலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழி பெயர்த்து உலகின் மூன்றில் ஒரு பகுதிக்கு கொடுத்து உதவியவர். இன்றைய மிஷனரி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர். அவரது சிறு வீட்டிலே செருப்பு செப்பனிடும் வாலிபனாகக் கண்டவர்கள் எவரும் அவரை இந்த அளவுக்கு எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வில்லியம் கேரி தீரச் செயலைச் செய்ய ஆரம்பித்து அதை விடாது தொடர்ந்து செய்து முடிப்பார். தீரச் செயல்களில் மிகவும் விருப்பம் கொண்டவர். ஒரு முறை ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் குருவிக் கூட்டை ஆராய்ந்து பார்ப்பதற்காக அவர் மரத்தில் ஏறிய போது அவர் வழுக்கி கீழே விழுந்தார். கரம், கால்களில் அடிபட்ட அவருக்குக் கட்டுகள் போட்டு அவரை அவரது தாயார் படுக்கையில் படுக்க வைத்தார். ஆனால் சிறுவனான கேரியினால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மறுபடியும் சென்று மரத்தில் ஏறி அந்தக் குருவியின் கூட்டைக் கையிலே கொண்டு வருவதை அவர் தாயார் கண்டார்கள். தனது பன்னிரண்டு வயதில் கேரி தன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். அவர் தந்தையார் செருப்புத் தைக்கும் செம்மான் ஒருவருக்கு உதவியாளனாக கேரியை பணிக்கு அமர்த்தினார். அவர் ஆத்மீகத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். ஆனாலும் ஓர் ஆலயத்தில் பாடகர் குழுவில் சேர்ந்து பாடல்களைப் பாடினார். ஒரு சிறந்த கிறிஸ்தவ குடும்பத்திலே அவர் பிறந்திருந்தாலும், தனது பாடகர் நண்பர்களுடன் சேர்ந்து பல சமயம் தவறாக ஆணை இடுவது, பொய் சொல்வது, கீழ்த்தரமான கதைகளை பேசுவது இவைகளில் அவர் விருப்பம் காட்டினார். வார்டு என்னும் வாலிபன் அவரோடு சக பயிற்சியாளனாக செருப்புக் கடையில் பயிற்சி பெற்று வந்தான். வார்டின் ஆழமான அசைக்க முடியாத கிறிஸ்தவ ஜீவியத்தின் நற்சாட்சி வில்லியம் கேரியினைத் தொட்டது. வில்லியம் அவ்வப்போது ஜெபிக்க ஆரம்பித்தார். ஒருமுறை வில்லியம் தன்னுடைய எஜமானனின் நாணயம் ஒன்றினை எடுத்துச் செலவழித்து விட்டு அதற்குப் பதிலாக ஓர் உடைந்த செல்லாத நாணயத்தை அதில் வைத்து விட்டார். ஆனால் அவருடைய எஜமான் அதைக் கண்டுபிடித்து எல்லாருக்கும் முன்பாகவும் அவரை அவமானப்படுத்தி விட்டார். இந்த அனுபவம் கேரி தன் இதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க நடத்தியது. வில்லியம் பாவத்தைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டார். இதை அறிந்த அவருடைய போதகர் அவரை அழைத்து இயேசுகிறிஸ்துவை தன் வாழ்க்கையிலே ஏற்றுக் கொள்வதின் மூலமாக மட்டுமே அவர் பிள்ளையாக முடியும் என்பதை அவருக்கு விவரித்தார். அது மட்டுமல்ல, நல்ல பிள்ளையாக வாழ்க்கை நடத்துவதோ, அல்லது ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்வதோ, ஒருவனை கிறிஸ்துவின் பிள்ளையாக மாற்றாது என்பதையும் அவருக்குத் தெளிவாக விவரித்தார். இவைகள் எல்லாவற்றையும் கேட்கக் கேட்க அவர் மிகவும் ஆழமாகத் தொடப்பட்ட படியினாலே மிகவும் அதிகமாகக் கதறி அழுதார். மனவேதனை அடைந்த அவர் முழங்காலில் நின்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்னுடைய உள்ளத்தில் வந்து என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் கழுவியருளும். இப்போது நான் உம்மை ஏற்றுக் கொள்;ள ஆயத்தமாக இருக்கிறேன் என்று கூறினார். அப்போதே இயேசுகிறிஸ்து அவருடைய இருதயத்தில் வந்தார். அவர் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டார். வில்லியம் புதிய செருப்புகளைத் தைப்பதும் பழையவைகளை பழுது பார்ப்பதுமான வேலையோடு நில்லாமல் இங்கிலாந்து தேசத்தில் உள்ள மோல்டன் என்னும் பட்டணத்தின் ஒரு சிற்றாலயத்தில் போதகராகப் பணி ஏற்றார். இயேசுகிறிஸ்துவின் இராஜ்யத்தை விரிவடையச் செய்வதே என்னுடைய முதன்மையான பணி என்றும், செருப்புகளை தைப்பதும், பழுது பார்ப்பதும் தன்னுடைய செலவுக்குதான் என்பார். அவர் செருப்புகளைத் தைத்துக் கொண்டிருக்கும் போது அவர் பக்கத்திலேயே ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார். இவ்விதமாக அவர் கிரேக்கு, இலத்தீன், எபிரெயர், பிரெஞ்சு, இத்தாலி, டச்சு மொழிகளைக் கற்றார். எபிரெய மொழியைக் கற்பதற்காக 15 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் முன் வந்தார். கேப்டன் குக் என்பவருடைய கடற் பயணங்கள் என்று சொல்லப்படும் ஒரு புத்தகத்தை வில்லியம் கேரி படித்ததன் மூலமாக தென்கடல் தீவுகளில் அநேகமாயிரம் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அந்நாட்களில் உணர்ந்தார். தானே ஒரு பெரிய உலகப் படத்தை வரைந்து அதைச் செருப்புத் தைக்கும் தன்னுடைய பட்டறையின் சுவற்றிலே மாட்டி வைத்து, அதில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் உள்ள மக்கள் தொகையையும் அந்த மக்களைப் பற்றிய குறிப்புகளையும் அதிலே குறித்து வைத்திருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் இத்தேசப்படத்திற்கு முன்பாக முழங்கால் படியிட்டு, அதிலே உள்ள கிறிஸ்து அல்லாத தேசங்களின் மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக ஜெபிப்பதின் மூலம் ஆண்டவருடைய நற்செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற ஒரு நிரந்தரமான பாரம் அவருடைய உள்ளத்திலே எழுந்தது. இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களுக்காக ஜெபிக்க ஒரு ஜெபக்குழுவை கேரி அமைத்தார். மேலும் மிஷனரி பணிகளுக்கான தேவைகள் பற்றி தன் உடன் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு இவைகளைப் பற்றி அவர் தொடர்ந்து எழுதினார். 1791-ம் ஆண்டு வில்லியம் கேரி போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார். பாப்டிஸ்து சபை போதகர்களுடைய ஆண்டு நிறைவுக் கூட்டம் ஒன்றில் 1792-ம் ஆண்டில் வில்லியம் கேரி ஆண்டவருடைய செய்தியைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார். கடவுளிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார். கடவுளுக்காக பெரிய காரியங்களை சாதிக்கப் பார் என்பதே அவருடைய செய்தியின் மையமாக இருந்தது. இந்தக் கருத்தே அவர் வாழ்க்கை முழுவதிலும் அவர் குறிக்கோளாகவும் மாறி விட்டது. இந்தக் கூட்டத்தின் விளைவாக பாப்டிஸ்து மிஷனரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்கம் உடனடியாக ஒரு மிஷனரியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் முன் வந்தது. இந்தியாவில் வில்லியம் கேரி கேரி ஒரு மிஷனரியாகச் செல்வதற்கான வழி இப்போது திறந்து விட்டது. ஆனால் எங்கு மிஷனரியாகச் செல்வது என்ற கேள்வி எழுந்தது. மேற்கு ஆப்பிரிக்கா அல்லது தென்கடல் தீவுகளுக்கு மிஷனரியாகச் செல்லலாம் என்ற எண்ணம் கேரியினிடத்தில் இருந்தது. ஆனால் ஆண்டவர் கேரிக்காக இந்தியாவைத் தம் மனதிலே வைத்திருந்தார். ஆகவே டாக்டர் தாமஸ் என்ற ஒரு மனிதனைக் கேரியைச் சந்திக்கும் படியாக அனுப்பினார். டாக்டர் தாமஸ் என்பவர் இந்தியாவில் இருந்தவர். இந்தப் பெருமகனாருடைய வாழ்க்கையின் மூலமாகவும் அதிகமாகக் கவரப்பட்ட கேரி இந்தியாவிற்கு மிஷனரியாக அவருடன் கூடச் செல்வதற்காக தீர்மானம் செய்து கொண்டார். பாப்டிஸ்து மிஷனரி சங்கத்தின் தலைவரும் இன்னும் அவரோடு சேர்ந்த ஒரு சிலரும் கேரியைத் தங்களுடைய ஜெபத்தாலும் பொருளாலும் தாங்குவதாக அவரிடத்தில் வாக்குறுதி கொடுத்தனர். வில்லியம் கேரி தன் குடும்பத்துடனும் டாக்டர் தாமஸீடனும் 1793-ம் ஆண்டு ஜீன் மாதம் 13-ம் தேதி கப்பல் ஏறினார். நீண்ட பிரயாணத்திற்குப் பின்பு நவம்பர் மாதத்தில் கல்கத்தாவில் வந்து pஇறங்கினார். கேரியோடு அவர் மனைவியும், 4 பிள்ளைகளும், அவருடைய மைத்துனியும் இருந்தார்கள். மிஷனரியாக கேரி இந்தியாவிற்கு வந்த போது அவர் 33 வயது நிரம்பியவராக இருந்தார். தனது நீண்ட கடற்பிரயாணத்திலேயே வில்லியம் கேரி வங்காள மொழியைக் கற்க ஆரம்பித்தார். பிறகு அவர் இந்துஸ்தானி, பாரசீகம், மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார். இந்தியா வந்து இறங்கிய உடனேயே அவர் இந்திய மக்களோடு வங்க மொழியில் பேசவும் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் வேத வசனங்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார். நிச்சயமாகவே ஆண்டவர் கேரியினைத் தம்முடைய உயர்ந்த திட்டத்திற்காக நடத்தினார். மொழிகளைக் கற்கும் வாஞ்சையை அவருக்குக் கொடுத்தார். இந்தியாவில் அவர் வாழ்ந்த முதல் வருடத்தில் அவருடைய குடும்பத்தின் மக்கள் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக நோய்வாய்ப்பட்டனர். அவருடைய அருமையான ஐந்து வயது மகன் பீட்டர் இறந்து போனான். இந்து, முஸ்லீம் வேலை ஆட்கள் புதைகுழி வெட்ட முன் வரவி;ல்லை. தன்னுடைய சுகவீனத்தில் ஏற்பட்ட பலவீனத்தோடு கேரி தாமாகவே புதைகுழி வெட்டினார். அந்தச் சமயத்தில் இரண்டு பேர் அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அதைக் கண்ட கேரி நன்றி பெருக்கோடு கண்ணீர் வடித்தார். தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சாயத் தொழிற்சாலையில் பொறுப்பாளராக கேரி வேலை செய்ய ஆரம் பித்தார். அதுமட்டுமல்ல, வேத வசனங்களை அச்சடிப்பதற்கு ஓர் அச்சுக் கூடமும் ஆரம்பித்தார். வியாபாரத் தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் குறுகிய காலத்தில் கேரி தனது வேலையை இழந்தார். தொடர்ந்து அவரது அச்சுக்கூடமும் தீக்கிரையானது என்றாலும் இச்சம்பவங்கள் கேரியை எந்த விதத்திலும் மனந்தளர்ந்து போகச் செய்யவில்லை. அவருடைய உள்ளத்தில் அடிக்கடி எழுந்த ஒரே கேள்வியானது, நான் எவ்வகையில் இந்தியாவுக்கு உதவ முடியும்? என்பதே கடவுள் கேரியை பயன்படுத்திய விதம் கேரி ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். அந்த ஊழியத்தின் முதல் கனியான கிறிஸ்னு பால் என்னும் ஒரு தச்சனுக்கு கேரி ஞானஸ்நானம் கொடுத் தார். ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு அநேக பாடு களைக் கடந்து வந்த போதிலும் கிறிஸ்னு பால் உண்மையான ஒரு கிறிஸ்தவனாக நிலைத்திருந்தான். அவன் வாழ்க்கையின் மூலமாக இன்னும் பலரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினான். 1798-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நான்கு பேர் வந்து கேரியோடு கூட ஊழியத்தில் பங்கு பெற்றார்கள். செராம்பூர் என்ற இடத்தில் அவர்கள் ஒரு பெரிய அருட்பணி மையத்தை ஏற்படுத்தினர். அங்கிருந்து pஇந்தியாவினுடைய பல பாகங்களுக்குச் சென்று கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள். ஆண், பெண்களுக்காகத் தனித்தனிப் பள்ளிகளை ஏற்படுத்தினர். சிறிய புத்தகங்களையும் வேத புத்தகங்களையும் அச்சிட ஒரு பெரிய அச்சுக்கூடமும் வைத்திருந்தனர். 1800-ம் ஆண்டு செராம்பூர் கல்லூரியினைக் கேரி நிறுவினார். மேலும் ஓர் அனாதை இல்லத்தையும் ஒரு தொழுநோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார். கேரி இந்தியாவில் ஊழியம் செய்த 22 ஆண்டு காலத்தில் 765 பேர் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத் தப்பட்டனர். கேரி மரிப்பதற்கு முன்னால் இந்தியாவில் 26 சபைகள் எழும்பின. கல்கத்தாவில் உள்ள அரசாங்கக் கல்லூhயில் கேரி வங்கமொழி பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் சமஸ்கிருதத்தையும் மராட்டியையும் கூட அவர் அதே கல்லூhயில் போதித்தார். 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவருடைய வருவா யில் பெரும் பகுதியை கடவுளுடைய ஊழியத்திற் கென்றே பயன்படுத்தினார். ஒரு சிறு பகுதியை மட்டும் தன் செலவுக்காக வைத்துக் கொண்டார். புதிய ஏற்பாடு முழுவதும் வங்காள மொழியில் 1800-ம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது. தனது மரணத் திற்கு முன்பாக இவர் புதிய ஏற்பாட்டை நாற்பதுக்கு மேலான மொழிகளிலும், இருபதுக்கு மேலான மொழி களில் முழு வேதாகமத்தையும் மொழி பெயர்த்திருந்தார். இதன்படி உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு வேதாகமத்தை மொழி பெயர்த்துக் கொடுத்தார். இவரது வேண்டுக்கோளுக்கிணங்க அரசாங்கம் இறந்த கணவனோடு அவனது மனைவியையும் உயிரோடு எரிக்கும் “உடன்கட்டை ஏறுதல்” என்னும் பழக்கத்தை எதிர்த்து, ஒரு சட்டத்தை இயற்றி அதற்குத் தடை விதித்தது. அது மட்டுமல்ல, உயிர்ப்பலியாக பச்சிளங்குழந்தைகளைக் கங்கை நதியிலே தூக்கி எறியும் பழக்கமும் தடை செய்யப்பட்டதற்கு இவரே காரணமாய் இருந்தார். இப்படியாக மாபெரும் சாதனைகளைப் புரிந்த கேரி தன்னை ஒரு பயனற்ற ஊழியன் என்றும், சிறிதளவே பயன்பட்டவன் என்றும் கூறினார். “நான் மறைந்த பின்பு கலாநிதி கேரியைப் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் கேரியின் இரட்சகரைப் பற்றியே பேச வேண்டும்” என்று தன்னுடைய இறுதி நாட்களில் தன்னைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடத்தில் கூறினார். வங்க மொழியில் புதிய ஏற்பாட்டில் 8-ம் பதிப்பினை அவர் முடித்த பின்பு தனது 72-ம் வயதில் “என்னுடைய வேலை முடிந்தது. ஆண்டவருடைய சித்தத்திற்குக் காத்திருப்பதை விட இதற்கு மேல் இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1834-ம் ஆண்டு ஜீன் மாதம் அவர் மரித்தார். அவருடைய உடல் தாம் நேசித்த இந்தியாவிலேயே இளைப்பாறுதலுக்காக அடக்கம் செய்யப்பட்டது. தன்னுடைய தாய் நாட்டிற்கு ஒரு முறை கூட திரும்பிச் செல்லாத படி 41 ஆண்டுகள் அவர் கடுமையாக இந்தியாவிலேயே உழைத்தார். அவருடைய திருப்பணியின் கனிகளானது இன்றும் நம்முடைய கண்களால் காணக் கூடிய நிலையில் உள்ளன. இவ்விதமாக திறம்பட அரியதோர் சேவையினைச் செய்த இவரை “இந்திய அருட்பணியின் தந்தை” என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகும்.
Jesuit missionary Fr Henrique Henriques (15201600) worked among the pearl fisheries people of South Indian coast between 1546 and 1600 -a little over half a century. He learned the local Tamil language as spoken by the Parathava community to make his conversion work easier. He had little knowledge of classical Tamil and its grammar. His goal was to instruct his missionary colleagues about the language spoken in the coastal area by the community and help in his mission. He wrote a book of grammar in Portuguese around 1549 CE and thus “ Arte da Lingua Malabar“ stands as the first linguistic connection between India and the West.
Jeanne Hein, an American scholar, had been studying the life of Henriques and the period of the Portuguese in India, with a view to understand the work of missionaries from 1964. She was stuck as she could not get much help in decoding Tamil. V S Rajam Ramamurthi had come to the US in 1975 to do her PhD in Pennsylvania and met Jeanne Hein in '78-'79. It was then that they collaborated on the project of translating the Tamil grammar book written in Portuguese into English. The translation was published in 2013. Jeanne, who died in 2013, did not know Tamil and Rajam, Portuguese. That the two managed to get the book to this shape is remarkable.
Arte da Lingua Malabar was first discovered by Fr Thaninayagam in his search for Tamil works of Europeans in South India. Jeanne acquired a microfiche of the same from Lisbon.
In Tuticorin, Henrique Henriques mastered the local language and worked hard to bring out a book of grammar for the language, as he believed that books of religious doctrines should be in local language. Henriques, apart from being the first to produce a dictionary (Tamil Portuguese), set up a Tamil press and printed books in Tamil script. The first book printed in Tamil script was “Thambiran Vanakkam“ (1578), a 16-page translation of the Portuguese “Doctrina Christam“. It was followed by “Kirisithiyaani Vanakkam“ (1579).
Rendering the Arte da meaningfully in English was not easy . For, Henrique took Tamil as he heard it spoken in the Parava villages and stretched it over the grammatical structure of Latin. In addition, when he Romanised Tamil, he did it in his language phonetics of 16th century .The document, at once, therefore becomes a product of Portuguese discovery relating to South India. As Caldwell records in his book “ A History of Tinnevelly“, the South Indian chieftains were interested in getting Arab steeds due to which Muslim traders were ruling the day in the coast.In fact the pearl fishermen were under their mercy as Muslims controlled the trade. The fishermen looked up to the newly arrived Portuguese who were stronger especially after they won the 14-years war at Vedalai in Kerala coast.
Joao de Cruz, a convert, persuaded the Paravas to become Christians so that the Portuguese would assist them. Eighty-five leading Paravas went to Cochin to seek Portuguese assistance and all of them were baptized and on return they were instrumental in converting a vast number into Christian fold. It was in this background that Henriques arrived in the coast to find that though converted the Paravas were following the traditions of their earlier faith.
To impart the knowledge of Christianity, language had to be learned and books written in local language.
Henriques worked for eight een years on writing the gram mar of Tamil as spoken in the coast so that Tamil material could be supplied in spreading the faith. He had no idea about Tamil grammar nor did he attempt to learn it.On the other hand, for the first time he devised a grammar for a language as spoken by the people he was dealing with and shaped a linguistic structure in India for Christianity .
Rajam has taken pains to show how he wrote the letters of the alphabet and their pronunciation. Since he himself spoke 16th century Portuguese, to understand his phonetics today , a specialist of the language of that day was necessary .To add to the confusion the Tamil dealt with was that of a community of 16th century of which even Tamils have very little knowledge. “We are examining a document which describes Tamil the way a foreigner heard it. I have not corrected errors except for minor changes,“ says Rajam.
(A former marine chief engineer , the author is a historian, writer and heritage enthusiast)
Jesuit missionary Fr Henrique Henriques (1520-1600) worked among the pearl fisheries people of South Indian coast between 1546 and 1600 -a little over half a century. He learned the local Tamil language as spoken by the Parathava community to make his conversion work easier. He had little knowledge of classical Tamil and its grammar. His goal was to instruct his missionary colleagues about the language spoken in the coastal area by the community and help in his mission. He wrote a book of grammar in Portuguese around 1549 CE and thus " Arte da Lingua Malabar" stands as the first linguistic connection between India and the West.
Jeanne Hein, an American scholar, had been studying the life of Henriques and the period of the Portuguese in India, with a view to understand the work of missionaries from 1964. She was stuck as she could not get much help in decoding Tamil. V S Rajam Ramamurthi had come to the US in 1975 to do her PhD in Pennsylvania and met Jeanne Hein in '78-'79. It was then that they collaborated on the project of translating the Tamil grammar book written in Portuguese into English. The translation was published in 2013. Jeanne, who died in 2013, did not know Tamil and Rajam, Portuguese. That the two managed to get the book to this shape is remarkable.
Arte da Lingua Malabar was first discovered by Fr Thaninayagam in his search for Tamil works of Europeans in South India. Jeanne acquired a microfiche of the same from Lisbon.
In Tuticorin, Henrique Henriques mastered the local language and worked hard to bring out a book of grammar for the language, as he believed that books of religious doctrines should be in local language. Henriques, apart from being the first to produce a dictionary (Tamil Portuguese), set up a Tamil press and printed books in Tamil script. The first book printed in Tamil script was "Thambiran Vanakkam" (1578), a 16-page translation of the Portuguese "Doctrina Christam". It was followed by "Kirisithiyaani Vanakkam" (1579).
Rendering the Arte da meaningfully in English was not easy . For, Henrique took Tamil as he heard it spoken in the Parava villages and stretched it over the grammatical structure of Latin. In addition, when he Romanised Tamil, he did it in his language phonetics of 16th century .The document, at once, therefore becomes a product of Portuguese discovery relating to South India. As Caldwell records in his book " A History of Tinnevelly", the South Indian chieftains were interested in getting Arab steeds due to which Muslim traders were ruling the day in the coast.In fact the pearl fishermen were under their mercy as Muslims controlled the trade. The fishermen looked up to the newly arrived Portuguese who were stronger especially after they won the 14-years war at Vedalai in Kerala coast.
Joao de Cruz, a convert, persuaded the Paravas to become Christians so that the Portuguese would assist them. Eighty-five leading Paravas went to Cochin to seek Portuguese assistance and all of them were baptized and on return they were instrumental in converting a vast number into Christian fold. It was in this background that Henriques arrived in the coast to find that though converted the Paravas were following the traditions of their earlier faith.
To impart the knowledge of Christianity, language had to be learned and books written in local language.
Henriques worked for eight een years on writing the gram mar of Tamil as spoken in the coast so that Tamil material could be supplied in spreading the faith. He had no idea about Tamil grammar nor did he attempt to learn it.On the other hand, for the first time he devised a grammar for a language as spoken by the people he was dealing with and shaped a linguistic structure in India for Christianity .
Rajam has taken pains to show how he wrote the letters of the alphabet and their pronunciation. Since he himself spoke 16th century Portuguese, to understand his phonetics today , a specialist of the language of that day was necessary .To add to the confusion the Tamil dealt with was that of a community of 16th century of which even Tamils have very little knowledge. "We are examining a document which describes Tamil the way a foreigner heard it. I have not corrected errors except for minor changes," says Rajam.
(A former marine chief engineer , the author is a historian, writer and heritage enthusiast)