New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1
Permalink  
 


இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1

November 26, 2009
ஜடாயு rss_icon16.jpg

 

arun_shourieருண் ஷோரி (1941-) இந்தியாவின் தலைசிறந்த அரசியல், சமூக சிந்தனையாளர்களில் ஒருவர். உலக வங்கி மற்றும் இந்திய அரசின் திட்டக் குழுக்களில் பொருளாதார நிபுணராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும், இந்திய அரசில் மத்திய அமைச்சராகவும் (1998-2004) ,  ”டைம்ஸ் ஆப் இந்தியா” மற்றும் ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். நேர்மையும், துணிச்சலும் கொண்ட உறுதியான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளுக்காகவும்,  கூர்மையான, சமரசமற்ற ஆய்வு நோக்கிற்காகவும் பெரிதும் மதிக்கப் படுபவர்.  சமகால இந்திய அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.  கிறிஸ்தவ மிஷநரிகள், மதமாற்றங்கள், அவற்றின் சமூக விளைவுகள் பற்றி அவர் எழுதியிருக்கும்  இரண்டு முக்கியமான நூல்கள் பற்றியும், அவை உருவானதன் பின்னணி பற்றியும் எடுத்துரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது 1994ஆம் ஆண்டின்  ஜனவரி மாதம்.  இந்தியாவின் தலையாய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு  (CBCI – Catholic Bishop’s Conference of India)  தனது 50வது ஆண்டு விழாவை விமரிசையாக்க் கொண்டாடிக் கொண்டிருந்தது.  கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல்பாடுகள் குறித்து “இந்துத் தரப்பின் மதிப்பீடு” என்ற வகையில் பேசுவதற்காக அருண் ஷோரி அழைக்கப் பட்டார். ஜனவரி-5ம் தேதி புணேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.  மிஷநரிகள் பற்றிய பொதுவான விஷயங்களைத் தொட்டுச் சென்ற ஷோரியின் உரைக்குப் பின், கலந்து கொண்டவர்கள் ஷோரியை நோக்கி பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப, அவை அனைத்திற்கும்  அவர் பதிலளித்தார். பின்னர், இந்த உரையை கத்தோலிக்க சபை தனது நினைவு மலரிலும் வெளியிட்டது.

இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் பணியைப் பற்றி ஒட்டுமொத்தமாக சுயமதிப்பீடு செய்து கொள்வதும் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இருந்தது. அதன்படி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் என்ற வகையில் இது தொடர்பான இரண்டு மையமான ஆவணங்கள் அருண் ஷோரியின் பார்வைக்கு வந்தன. ”இந்தியாவில் மதப்பிரசாரப் போக்குகளும், பிரசினைகளும்: CBCI  கள ஆய்வுகளின் அடிப்படையில்”  என்ற ஆவணம் அவருக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப் பட்டது. ”இந்தியாவில் நமக்காகத் திறந்திருக்கும் வழிகள்: நமது பொதுவான தேடல்கள்”  என்ற ஆவணம் கூட்டத்தின் போது அவருக்கு வழங்கப் பட்ட்து. இந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாகப் படித்தார் அருண் ஷோரி. கிறிஸ்தவ மிஷநரிகள் பற்றிய தனது புரிதல்  முழுமையானதாக இல்லையோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்ட்து.

உடனே இது தொடர்பான பல தரவுகளையும் தேடிப் பிடித்துத் தனது ஆய்வுகளைத் தொடங்கினார். அடிப்படையான கிறிஸ்தவ இறையியல், இந்தியாவில் கிறிஸ்தவம் பரவியதன் வரலாறு,  மெக்காலே, ட்ரெவிலியன் (Trevelyan),  ரிச்சர்ட் டெம்பிள் ஆகிய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகிகளின் எழுத்துக்கள் மற்றும் உரைகள்,  வரலாற்று/மொழி அறிஞர்கள் என்ற போர்வையில் உலவிய மாக்ஸ் முல்லர், மோனியர் வில்லியம்ஸ் போன்ற் திரைமறைவு மிஷநரிகளின் படைப்புகள், 1853ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ மத்த்தைப் பரப்புவது அரசின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்தி மிஷனரிகள் கொண்டு வந்த தீர்மானம், 1930 சைமன் கமிஷன் அறிக்கை, 1956ல் இந்திய அரசு நியமித்த நியோகி கமிட்டி மிஷநரிகளின் மோசடியான மதப்பரப்பல் செயல்பாடுகள் குறித்து அளித்த அறிக்கை.. இது போன்று இந்த விஷயம் தொடர்பான முதன்மை ஆதாரங்கள் (Primary sources) அனைத்தையும் அவர் அலசி ஆராய்ந்தார்.  இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் முதலியோர் இந்துத் தரப்பிலிருந்து வைத்த உறுதியான, ஆணித்தரமான எதிர்வினைகளையும் அவர் படிக்க நேர்ந்தது.  ஆனால் இந்தத் தொடக்க கால இந்து எதிர்வினைகள் பின்னாளில் தேய்ந்து மறைந்ததோடல்லாமல், சுதந்திர இந்தியாவில்,  முற்றிலும் மாறான நிலைப்பாடுகள் ஏற்பட்டு,  கற்றறிந்த இந்துக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மிஷநரிகளின் பாஷையையே தாங்களும் உரத்துப் பேசத் தொடங்கி விட்டனர் என்பதையும் அவர் தெளிவாகக் கண்டறிந்தார்.

இந்தத் தீவிர ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு புத்தகமாக எழுதினார். “இந்தியாவில் மிஷநரிகள் – தொடரல்களும், மாறுதல்களும், குழப்பங்களும்” (Missionaries in India:  Continuities, changes, dilemmas)  என்ற அந்த நூல் 1994ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.

அவரது மகன் விக்ரமாதித்யா குறைப் பிரவசமாக, பிறப்பின் போதே cerebral palsy என்ற  மூளை பாதிப்புடன் மன வளர்ச்சி குன்றிப் பிறந்த  போது ஏற்பட்ட பேரதிர்ச்சியும்,  பதினெட்டு வருடங்களாகத் தன் அன்பு மகனுடன் வாழ்வதும், வாழ்க்கையையும், உலகத்தையும் பற்றிய ஆழமான ஆன்மீகக் கேள்விகளையும், புரிதல்களையும் தன்னுள் ஏற்படுத்தியிருப்பதாக இந்த நூலின் முன்னுரையில் ஷோரி கூறுகிறார்.  பின்னாட்களில் அமைச்சராக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில் தன் மகனைப் பற்றி ஒரு தந்தைக்கே உரிய பெருமையுடனும், ஆழ்ந்த புரிந்துணர்வுடனும், ”My son is a dominant  influence on me” என்று ஷோரி குறிப்பிடிருந்தார். ஒரு அறிவுஜீவியாக மட்டுமே பெரும்பாலும் அறியப் பட்டிருக்கும் அருண் ஷோரியின் பாச உணர்வும், மனித நேயமும் அதே அளவு ஆழம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று வரை ஒரு நம்பிக்கையாளராக அல்லாமல், ஞானவாதியாகவே (agnostic) தொடரும் அருண் ஷோரி தனது ஆன்மிகத் தேடல்களின் ஊடாக கீதை,  உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட இந்து ஞான நூல்களையும், பிற மதங்களையும், காந்தியையும் ஆழ்ந்து பயின்றார்.    இருளில் மூழ்கியதாகவும், அழிக்கப் படவேண்டியதாகவும் கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து சித்தரித்து வந்த இந்து மரபுகளின் விசாலத் தன்மையையும், அழகையும், உன்னதத்தையும் கண்டறியும் புள்ளியில் இருந்தே இந்த நூலில் அவரது ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. Premises and Consequences  என்ற நூலின் முதல் பகுதியில் ஷோரி எழுதுகிறார் –

”இந்து மரபுகள் ..  எந்த அளவிற்கு பூரணமான பிரபஞ்ச தரிசனம் சாத்தியமோ, அதைத் தொட முயன்றன. (மதம் என்கிற) இந்த மகாசமுத்திரத்தை முதன் முதலில் ருசி கண்டவை இந்து தரிசனங்களே.  மரத்தை வழிபடும் பழங்குடியினரும்,  காளையை, யானையை, சிங்கத்தை, நாகங்களை வழிபட்டு வந்தவர்களும் இங்கே  “மிருக இயல்பாளர்கள்” என்று இழித்துரைக்கப் படவில்லை.   அவர்களது வழிபாட்டுக் கூறுகளும் மரியாதையுடன்  தெய்வீகக் கணங்களில் சேர்த்துக் கொள்ளப் பட்டன… இது ஒரு யுக்தியாகவோ, தந்திரமாகவோ செய்யப் படவில்லை,  மாறாக  இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை ஆழ்ந்து  அனுபவித்தறிந்த ஆன்மிக மெய்யுணர்வின் அடிப்படையில் முழுமையான புரிதலுடன் கூடியதாகவே இருந்தது… ஒவ்வொன்றும் மாறுதலுக்கும், சீரமைப்புக்கும் உட்பட்டது தான் என்பதை இயல்பான ஒரு விஷயமாகவே  இந்து மரபு கருதியது..  இதனால் விளையும் மோதல்களை  சமன்வயப் படுத்த மிக அழகிய சொல்லாடல்களையும் அது உருவாக்கியது” – Missionaries in India,  பக்கம் 41-42

”ஆனால் இது எல்லாவற்றையுமே மிஷநரிகள் திரிபுகளுக்கு உட்படுத்தி இழித்துரைத்தனர்.  இணைப்புத் தன்மையை  பிற  மதங்களை முழுங்குவதற்கான  குயுக்தி என்று கண்டித்தனர்;   முரணியக்கமாக விரிவடைந்து செல்லும் தத்துவ விவாதங்களை  வெற்றுக் கூச்சல் என்றனர்; கட்டற்ற சுதந்திரத் தன்மையை  ”கருத்து ரீதியான பலவீனம்” என்று கூறினர். உள்முகப் பட்ட ஞானத் தேடலை ”நோயுற்ற சுய வெறுப்பு” என்று ஏளனம் செய்தனர். சத்தியத்தை நோக்கிச் செல்லப் பல வழிகள் உண்டு என்று காட்டுவதை  வழவழாத் தன்மை என்று கேலி செய்தனர். எல்லையற்ற பரம்பொருளுக்கு எல்லையற்ற பல வடிவங்கள் உண்டு என்பதை “குழப்படி” என்று முத்திரை குத்தினர்.  கருத்துச் சுதந்திரம் என்பதற்கு  “கிறிஸ்தவ மதத்தை மேன்மையானதாகச் சித்தரிப்பதும், இந்து மதத்தை இழித்துரைப்பதும்” என்று பொருள் கண்டனர்.  …. மதமாற்றம் என்பது ஒரு செயல்பாடு மட்டுமல்ல, அது தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியே என்னும் வகையில் மதப் பரவலை நிகழ்த்தினர்.   ஆனால் ஒரு சுவாமி சிரத்தானந்தர் (ஆரிய சமாஜத் துறவி) கிள்ம்பி இந்துமதம் திரும்ப விழைபவர்களுக்காக  வழிமுறைகளை உருவாக்குவதைக் கண்டு “இதற்கு இந்து மத சம்பிரதாயங்களின் படி இடமே கிடையாது”  என்று தீவிர பிரசாரம் செய்தனர்! ” – Missionaries in India,  பக்கம் 43.

God is Truth

இந்த மிஷநரிகள் ஏன் இப்படிக் கருதுகிறார்கள், பேசுகிறார்கள்? இந்து தர்மத்தின் வளமையை அவர்களால் ஏன் உணர முடிவதில்லை?  அதன் பல்வேறு அழகிய பரிமாணங்களை அவர்களுக்கு ஏன் ரசிக்கத் தோன்றுவதில்லை? மகாத்மா காந்திக்கும், போலந்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பேராசிரியரான க்ரெசன்ஸ்கி (Krzenski) என்பவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் வழியாக இதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அருண் ஷோரி. அந்த சுவாரஸ்யமான உரையாடலில் காந்தி பல முறை தனது தார்மீக, சத்திய வாதங்களை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்கிறார். ஆனால் க்ரெசன்ஸ்கி “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்” என்பதையே பலவிதமாக மறுபடி மறுபடி கூறிக் கொண்டிருக்கிறார்.  ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்ற காந்திஜியின் பிரபல மேற்கோள் இந்த உரையாடலின் போது பேராசிரியரை நோக்கி அவர் கூறியதே ஆகும். (இந்த உரையாடல் முழுமையாக Missionaries நூலில் தரப்பட்டுள்ளது).   ஷோரி எழுதுகிறார் –

“அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை..  ஏனென்றால், கிறிஸ்தவத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான கருத்தும் அதுவே தான். ”வெளிப்படுத்தப் பட்ட”,  இறுதிநாள், இறுதித் தீர்ப்பை நம்புகிற எந்த ஒரு சித்தாந்தமும் – கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி,  மார்க்சிய-லெனினிய- மாவோயிசங்களும் சரி இந்த நிலைப்பாடு கொண்டவை தான்:  ஒரே சத்தியம்,  அது அந்த ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்ட்து..  அவனால், அவன் சார்பாக அந்த ஒரே புத்தகத்தில் அது பதிவு செய்யப் பட்டு விட்டது.  அந்த ஒரே நூலின் சொற்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளக் கடினமானவை (!!!) என்பதால்,  உலகம் அனைத்தும் அவற்றை நடைமுறைப் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடைத்தரகருக்கு, ஒரு “ஏஜென்ஸி”க்கு அடிணிய வேண்டும்.. அனைத்துலகமும்  இதை ஏற்றுக் கொள்ளும்  “இறுதி நாளில்”  தான் உலகனைத்தும் ஒளி உண்டாகும்; எனவே அந்த நாளை வரச் செய்ய வேண்டியது  ஏஜென்ஸியின் இன்றியமையாத கடமையாகிறது..  அந்த “ஒளி”  “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,  தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல,  தேவனின்  ஆணைக்கும்,  அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும்  (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”)  குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது.. ஆக,  இதிலிருந்து தெளிவாகப் புலனாவது என்னவென்றால், சர்ச் மதம் மாற்றியே ஆக வேண்டும்,  மாவோ புரட்சியை ஏற்றுமதி செய்தே ஆக வேண்டும்;  கொமெய்னி இறைத்தூதரை பலவந்தமாக அறிவித்தே ஆகவேண்டும்..  அவர்கள் யாரும் செய்யாமல் தப்பிக்கவே முடியாத கடமைகள் இவை”.   (Missionaries, பக்கம் 12).

இதைத்  தொடர்ந்து, ஏஜென்ஸியின் பரவலையும், வீச்சையும் நிரூபிக்கும்  பல ஆதாரபூர்வமான விவரங்களை ஷோரி அளிக்கிறார். ”உலகளாவிய கிறிஸ்தவத்தை நடத்திச் செல்ல வருடந்தோறும் 145 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகின்றன”  (1990களில்) என்று கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றே கணக்கிடுகிறது.  1989ம் வருட விவரங்களின் படி,  உலகெங்கும் 40 லட்சம் முழுநேரப் பணியாளர்கள், 1800 கிறிஸ்தவ டிவி மற்றும் ரேடியோ சேனல்கள், சுமார் 3 லட்சம் வெளிநாட்டு மிஷநரிகள், அவர்களைப் பயிற்றுவிக்க 1000க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள்…”  என்று போகிறது இந்தப் பழைய கணக்கு.

போர்ச்சுகீசிய காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு முக்கிய இலக்காக கிறிஸ்தவ வரைபடத்தில் இருந்து வருகிறது. 1986ல் வெளிவந்த  Mission Handbook: North American Overseas  என்ற ஆவணத்தின்படி, மொத்தம் ஒரு லட்சம்  மிஷநரிகள் (பாதிரியார்கள் போதகர்கள், மதப்பிரசாரகர்கள்) அந்த ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்தனர். 1971 முதல் 1983க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் முழுநேர மிஷநரி நிறுவன அமைப்புகளின் எண்ணிக்கை 420லிருந்து 2941 ஆக உயர்ந்தது. பின்வரும் வருடங்களில் மேன்மேலும் உயர்த்தத் திட்டம் தீட்டப் பட்டிருந்தது. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவர்களே இல்லாத இடங்களில் எல்லாம் கூட ஆயிரக்கணக்கில் சர்ச்களை நடுவதற்கான  திட்டமும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.  இத்தகைய பல விவரங்களை அருண் ஷோரி அளித்துச் செல்கிறார். தற்போதைய நிலவரங்களின் படி இந்தப் புள்ளி விவரங்கள் எவ்வளவு பூதாகரமாக வளர்ந்திருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கிறிஸ்தவ பிரசாரகர்களே ‘எண்ணிக்கை விளையாட்டு’ (game of numbers)  என்று எரிச்சலுடனும், சலிப்புடனும் குறிப்பிடும் இந்த வைரஸ்தனமான பரவல் எங்கெங்கெங்கு, எப்படியெல்லாம் விரியும் என்பதற்கு மிஷநரிகள் எந்தக் கட்டுப் பாடும் வைத்துக் கொள்ளவில்லை..  கிடைக்கக் கிடைக்க லாபம் என்ற கண்ணோட்டம் தான். வட அமெரிக்காவிலும்,  தென் அமெரிக்காலும், ஆசியாவிலும் மதப் பரவலுக்காக எந்த விதமான வன்முறையையும், பலவந்தத்தையும் பிரயோகிக்க மிஷநரிகள் தயங்கவில்லை என்பதை நிரூபிக்க மலை மலையாக ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன.  பஞ்சம் மற்றும் தட்டுப் பாடுகளின் போது,  மனந்திரும்புவர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கிறது என்றும் இவை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றன.

பார்க்க: ஆசியாவின்  காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷநரிகளும்

1823ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட “இந்தியாவின் மிஷன்கள்” (India and its Missions)  என்ற நூலில் உள்ள “பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்” (Spiritual Advantages of Famine and Cholera)  என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை ஷோரி எடுத்துக் காட்டுகிறார்.  இதில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்,

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது.  போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது.  நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை “வற்புறுத்தி அழைத்து வர”  (புனித லூக்காவின் சுவிசேஷம், 14.23) வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”  (Missionaries, பக்கம் 15).

நிறுவன கிறிஸ்தவத்தின் ஊடுருவல் யுக்திகள் சாதாரணமானவை அல்ல. எதிரெதிர் சக்திகள் என்று எண்ணப் பட்டவை கூட அதன் பரவலுக்கான மறைமுக உதவிகளாகவே இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை  ”வேலைப் பங்கீடு” (Division of Labour)  என்ற நூலின் இரண்டாம் பகுதியில் ஷோரி விவரிக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1
Permalink  
 


முகப்பு » சமூகம்பிறமதங்கள்புத்தகம்

இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-2

December 9, 2009
ஜடாயு rss_icon16.jpg

 

arun_shourie_missionaries_bookகாலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் அரசு நிர்வாகம், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இந்தியவியலாளர்கள் (indologists) எனப்பட்ட வரலாற்றாசிரியர்கள் இவர்கள் மூவரும் எப்படி தங்களுக்குள் வேலைப் பங்கீடு செய்து கொண்டனர் என்பதை Missionaries நூலின் இரண்டாம் பாகம் விரிவாகவே பேசுகிறது. இந்த மூன்று குழுக்களுக்கும் இடையில் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் வழிமுறைகள், செயல்பாடுகளைப் பற்றித் தான். தங்களது இறுதி இலக்கு என்ன என்பது பற்றி அவர்களிடையே எந்தக் குழப்பமும் ஐயமும் இல்லை – இந்தியாவின் பாவிகள் அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது, பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நீடித்து நிலைபெறச் செய்வது, இவை இரண்டுமே இந்த இலக்குகள்.

கீழ்க்கண்ட விஷயங்களில் மூன்று தரப்பினருமே முழுமையாக உடன்பட்டனர்:

1. இந்தியா அறியாமை, பாகுபாடுகள் மற்றும் பொய்மையின் கூடாரம்.

2. இந்த நிலைக்குக் காரணம் இந்துமதம்.

3. இந்துமதத்தை நடத்திச் செல்வதில் பிராமணர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. அதனால் இந்துமதத்தை வலுவிழக்கச் செய்ய, பிராமணர்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரங்கள் முடுக்கப் படவேண்டும்.

4. இந்த இந்திய மக்கள் இப்பேர்ப்பட்ட துயரத்தில் இருப்பதாலும், ஏசு ஊழியம் செய்ய நம்மை அறைகூவியிருப்பதாலும், இவர்கள் அனைவரையும் கிறிஸ்தவத்திற்கு இட்டுச் செல்வது நமது புனிதக் கடமையாகிறது.

5. புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும் (பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில் – “The walls of the mighty fortress ..” are to be “encircled, undermined and finally stormed by the soldiers of the cross”).

6. புனிதக் கடமையை நிறைவேற்ற சிறந்த வழி பிரிட்டிஷ் அரசு அதிகாரத்தை விரிவாக்குவதும், உறுதிப் படுத்துவதும், நீடிக்கச் செய்வதுமே ஆகும்,

7. அரசே கிறிஸ்தவ மதத்தை அதிகாரபூர்வமாகப் பரப்புமானால், அது குடிமக்களிடத்தில் கோபத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கும், அதனால், அரசு நடுநிலையைக் கடைப்பிடிப்பதாகவே தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும்.

8. ஆனால், அரசின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி அளிப்பது என்ற விஷயமே ஏராளமானவர்களைக் கிறிஸ்தவம் நோக்கி வரச் செய்யும். மேற்கத்திய கலாசாரத்தையும், ஐரோப்பா அடைந்து வரும் நவீன முன்னேற்றங்களையும் பற்றி கல்வி கற்கும் இந்தியர்கள் அறிய வருவதே போதும், இந்து மதத்தை அது தீர்த்துக் கட்டிவிடும், ஏனென்றால் ”அந்த மதத்தால் அறிவுபூர்வமான பரிசோதனையை ஒரு கணநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது”! (Its not a religion that can stand a “moment’s scrutiny”)

9. அதே போன்று, மிஷநரிகளின் பங்களிப்பும் பிரிட்டிஷ் அரசுக்கு முக்கியமானதாக இருக்கும். மதம் மாறியவர்கள் மட்டுமல்ல, தொடர்ந்த கிறிஸ்தவ மதப் பிரசாரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் அனைவரும் பிரிட்டிஷ் அரசின் ஆதரவாளர்களாகவும், அந்த அரசை நீடிக்க வைப்பவர்களாகவும் விளங்குவார்கள்.

10. அறிஞர்களின் பணியும் இதே அளவுக்கு முக்கியமானதாக இருக்கும். மிஷநரி அறிஞர்கள், அறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் மிஷநரிகள் – இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து இந்து மதத்தின் தீமைகள் அனைத்தையும் அம்பலப் படுத்தி, அதனை வேரறுப்பதில் உதவுவார்கள்.

11. இயல்பாகவே, மிஷநரிகள் கீழ்சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீது அதிகக் கவனம் செலுத்துவார்கள். இந்து சமூகத்தை இது பல கூறுகளாக்கும்.

12. அறிஞர்களின் ஆய்வுகள் இதே பணியை வேறு தளத்தில் செய்யும். இந்துமதத்தில் நடைமுறையில் இருக்கும் சிறு தவறுகளைக் கூட அவை பூதாகாரமாக்கும். மக்களிடத்தில் இருக்கும் சிறு பிணக்குகளில் இருந்து பெரிய சமூக மோதல்களுக்கான நியாயங்களை அவை உற்பத்தி செய்யும். இவ்வகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் உறுதித் தன்மைக்கு அவை வலு சேர்க்கும்.

Missionaries நூல் (பக்கங்கள் 58-62) ஒரு விரிவான பட்டியலாக இந்த விஷயங்களைக் கூறுகிறது. அதன் சுருக்கமான வடிவத்தையே மேலே அளித்துள்ளேன். இந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆதாரபூர்வமாக நூலில் ஷோரி விளக்கிச் செல்கிறார். இறுதியில் இப்படிக் கூறுகிறார் –

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பரவியது ஒருவகையிலான விபத்து; பிரிட்டிஷார்களே தயங்கினாலும் அப்போது இந்தியா இருந்த நிலையில் அவர்களை இழுத்துப் பிடித்து இந்தியர்களே ஆட்சி பீடத்தில் உட்கார வைத்திருப்பார்கள்” என்ற அளவில் தான் நான் பள்ளிப் பருவம் முதல் படித்துவரும் எல்லா வரலாறுகளும் கூறி வந்தன. எனவே, இப்படி ஒரு பட்டியலை யாராவது அளித்தால், இது பின் நிகழ்வுகளை வைத்து முன் தீர்மான்ங்களை வேண்டுமென்றே கட்டமைக்கும் விதமாக இருக்கிறது என்று தான் நானே கருதியிருப்பேன். ஆனால் அந்தக் கருத்து தவறு என்பதை நான் இந்த ஆய்வுகளில் மிக விரைவாகவே உணர்ந்து கொண்டேன்.. பிரிட்டிஷ் காலத்திய பிரதான அதிகாரிகள் மற்றும் முக்கிய அறிஞர்களின் எழுத்துக்களை ஒருமுறை படித்துச் செல்பவருக்கே எப்பேர்ப்பட்ட கச்சிதமான திட்டமிடுதல் இதில் இருந்தது என்று விளங்கும். அதோடு, அக்காலத்திய மிஷநரிகளின் சுற்றறிக்கைகள், மிஷநரி சொஸைட்டிகளின் ஆவணங்கள் இவற்றைப் படித்தால், இது தொடர்பான கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் தீர்ந்து விடும்”

christmas_in_india_during_british_rajசில முக்கிய ஆதாரங்கள் அவற்றின் மூல வடிவில் முழுமையாக இந்த நூலிலேயே தரப்பட்டிருக்கின்றன. பால்மெர்ட்ஸன் பிரபு, ஹாலிஃபாக்ஸ் பிரபு, சர் மேக்வர்த் யங் ஆகிய அதிகாரிகளின் விரிவான மேற்கோள்களும் இவற்றில் அடக்கம்.

நூலின் அடுத்த பகுதியின் பெயர் “வெற்றிடங்களை உருவாக்குதல், பின்னர் நிரப்புதல்” (Creating vacuums, filling them). பிரிட்டிஷ் காலனியர்களின் நோக்கங்களும், திட்டங்களும் இவ்வளவு தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இருக்கின்றன. அக்காலத்திய உரைகளையும், சான்றுகளையும் பார்த்தால் இவற்றில் மறைமுக எண்ணம் கூட இல்லை என்று தோன்றுகிறது. ஆயினும், இதைப் பற்றி இன்றைய இந்தியர்களின் கூட்டுப் பிரக்ஞையில் (collective consciousness) ஏன் எந்த உணர்வுமே இல்லை? என்று ஷோரி ஓரிடத்தில் கேட்கிறார். இதைப் படிக்கையில், ஹம்பியின் இடிபாடுகளை முன்வைத்து, இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அரசாட்சி இந்தியாவின் நாகரீகத்தை முற்றாக சீரழித்ததைப் பற்றிய வரலாற்றுப் பிரக்ஞை ஏன் இந்தியர்களிடம் இல்லவே இல்லை என்று இதே போன்றதொரு கேள்வியை வி.எஸ். நய்பால் தனது புகழ்பெற்ற கட்டுரை ஒன்றில் அலசுவது நினைவுக்கு வருகிறது.

இதற்குக் காரணம் என்ன? அந்த காலனிய திட்டங்கள், குறிப்பாக கல்வி தொடர்பானவை பெருமளவில் வெற்றியடைந்து விட்டன என்பதே. “ரத்தத்திலும் நிறத்திலும் மட்டுமே இந்தியர்களாகவும், ரசனைகளிலும் கருத்துக்களிலும் நெறிகளிலும் அறிவுத்தளத்திலும் முழுக்க ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு வர்க்கத்தினரை உருவாக்க வேண்டும்” என்ற மெக்காலேயின் திட்டம் தன் இலக்கில் தவறவில்லை. ”ஆனால், சுதந்திர இந்தியாவிலும் இத்தகைய நிலைமை தொடர்வதற்குக் காரணம் 40 வருடங்களுக்கும் மேலாக நாம் கடைப் பிடித்து வந்த வக்கிரமான மதச்சார்பின்மை கோட்பாடு. நமது தேசிய அடையாளத்தைப் பீடித்திருக்கும் மாசுகளை அகற்றும் வல்லமை வாய்ந்த ஒவ்வொரு கலாசார அம்சமும், இந்த வக்கிரத் தனம் உருவாக்கிய இரட்டைவேட அளவுகோலில் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உரியதாகவே சித்தரிக்கப் பட்டது” என்கிறார் ஷோரி. (Missionaries, பக்கம் x-xi)

சுதந்திர இந்தியாவில், கிறிஸ்தவ மிஷநரிகளின் மொழியிலும், வழிமுறைகளிலும் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர. அவர்களது கொள்கைகளும், இலக்குகளும் காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று அப்படியே தான் உள்ளன. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட இரு கிறிஸ்தவ ஆவணங்களை அலசுவதன் மூலம் ஷோரி இந்தக் கூற்றை முழுமையாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்.

1994 ஜனவரியில் புணேயில் ஷோரி ஆற்றிய உரைக்குப் பின் அங்கு வந்திருந்த மிஷநரிகள் அவரிடம் கேட்ட கேள்விகள், கட்டுரை ஆரம்பத்தில் நாம் பார்த்த மகாத்மா காந்தி உரையாடலில் அந்தப் போலந்து நாட்டு மிஷநரி கொண்டிருந்த அதே நிலைப்பாடுகளை அப்படியே கொண்டிருந்தன. இந்தக் கேள்வி பதில்களின் தொகுப்பே நூலின் கடைசி அத்தியாயம்.  ”நீங்கள் கான்வெண்டில் தானே படித்தீர்கள்? ஏசுவைப் பற்றிய எந்த அம்சம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று ஒரு பாதிரி கேட்கிறார். ”அவரது தியாகம், எதிராளிகளை மன்னிக்கும் தன்மை” இப்படி ஷோரி பொதுவாக பதில் சொல்கிறார். பாதிரி விடுவதில்லை, “அதுவல்ல நான் கேட்க வந்த்து, ஏசு ஒருவரே சத்தியமான ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று நீங்கள் உணர்ந்தீர்கள் தானே?” என்று மடக்குகிறார். ஷோரி கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி இப்படி தடாலடி முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாக சிரமப் பட்டு விளக்க வேண்டியதாகிறது.

கேள்விகள் ஏன் அப்படியே இருந்தன? ஏனென்றால் அவற்றை உருவாக்கிய அந்தக் காலனிய கிறிஸ்தவ மனம் மாறவேயில்லை, அப்படியே தான் இருக்கிறது. அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் சர்ச்சும், மிஷநரிகளும் மாறிவிட்டனர் என்று உறுதியளிக்க முயன்றனர். “எனவே, பழைய சரித்திரத்தை வைத்து மிஷநரிகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது சரியானதல்ல” என்று ஷோரியிடம் வாதாடினர்.

ஆனால், ஷோரி தான் இதனை நம்பவில்லை என்று இந்த நூலில் பதிவு செய்கிறார். உண்மையிலேயே மிஷநரிகள் மாறிவிட்டார்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்து சோதனைகளை அவர் பட்டியலிடுகிறார்.

முதலாவதாக, இந்தியாவைப் பற்றியும், இந்துமதம் பற்றியும் படு மோசமான, கீழ்த்தரமான அவதூறுகளை சர்ச் திட்டமிட்டுப் பரப்பியது என்பதை அது நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களையும், தான் மதம் மாற்ற விரும்புபவர்களையும், தனது இரண்டு மையமான கோட்பாடுகளைப் பற்றிய அறிவுபூர்வமான ஆராய்ச்சிகள் குறித்து சர்ச் எந்த அளவு பரிச்சயப் படுத்துகிறது என்பது தெரியவேண்டும். “பைபிள் கடவுளின் வசனம், அதில் எந்தத் தவறும் இல்லை” என்பதும் ”போப் எந்தத் தவறும் இல்லாதவர், அவற்றுக்கு அப்பாற்பட்டவர்” என்பதுமான அந்த இரண்டு மையமான கோட்பாடுகள்.

இன்றைக்கு அறிவியல் சிருஷ்டி, பரிணாமக் கோட்பாடு, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள தொடர்பு, உடல்-மனம் ஆகிய விஷயங்களைப் பற்றிய மிக ஆழமான, விரிவான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டு விட்டது என்ற விஷயத்தை மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் வெளிப்படையாகவே சர்ச் பேசுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள தனது விசுவாசிகளிடமும், மேய்ச்சல் ஆடுகளிடமும் இது பற்றி சர்ச் பேசுகிறதா என்பது மூன்றாவது பரிசோதனையாக இருக்கும்.

நான்காவது பரிசோதனை ”பிறமதங்களுடன் திறந்த மனதுடன் உரையாடுவது” பற்றிய தனது கொந்தளிக்கும் தவிப்புகளை எந்த அளவுக்கு சர்ச் தாண்டிச் செல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும். “பிற மதங்கள் முழுதாகப் பொய்யானவை அல்ல; அவற்றின் மூலமும் மோட்சம் அடைவது சாத்தியம்” என்று கடுப்புடனும், வெறுப்புடனும் வேறு வழியில்லாமலும் சம்பிரதாயத்திற்காக சர்ச் அறிக்கைகள் விடுகிறது. இந்த நிலை மாறி, சர்ச் உண்மையிலேயே பிற மதங்களை மதிக்கவும், ”சத்தியம் என்பது எந்தக் குழுவின் தனிச் சொத்தும் அல்ல, அது பல தளங்கள் கொண்டது, பல வழிகளில் அதனை அடையலாம்” என்ற இந்திய தத்துவத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யுமா என்பதைப் பொறுத்து இந்த சோதனை அமையும்.

arun_shourie_20090826ஐந்தாவதாக, முள்ளாகக் குத்தி உறுத்திக் கொண்டிருக்கும் மதமாற்றங்கள். ”பிற மதங்கள் மூலமும் இறைநிலை அடைவது சாத்தியம்” என்று சர்ச்சே அறிக்கை விடுகையில், மக்களை மந்தை மந்தையாக மதம் மாற்றுவதற்கு என்ன முகாந்திரம், அவசியம் இருக்கிறது? குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவிலும், மற்ற பகுதிகளிலும் சர்ச் செயல்படுத்தும் கீழ்த்தரமான மோசடிகள் மூலம் மதம் மாற்றுவதற்கு என்ன தேவை உள்ளது? இந்தப் புரிதலை ஏற்றுக் கொண்டு தனது சம்பிரதாயமான மதமாற்ற வெறியை சர்ச் முழுமையாக மட்டுப் படுத்துமா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த சோதனை அமையும்.

நூலின் இறுதியில், புணே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் அவர்களுக்குக் கசப்பான விஷயங்களையும் மிகவும் கண்ணியமாகவும், அமைதியான முறையிலும், பொறுமையுடனும் கேட்டுக் கொண்டிருந்த்தையும், பின்னர் அதே நிதானத்துடன் உரையாடியதையும் மறக்காமல் ஷோரி பதிவு செய்கிறார். ”அந்த நிகழ்ச்சி முழுவதும், என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போலவே நான் உணர்ந்தேன். மாறுபட்ட கருத்துக்களை நேர்கொள்வது எப்படி என்று அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

பிற்சேர்க்கையாக, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டு கிறிஸ்தவ ஆவணங்களும் அவற்றின் முழு வடிவிலும் தரப்பட்டுள்ளன.

Missionaries in India
By Arun Shourie
Paperback
List Price: Rs. 295
Publisher: South Asia Books ( 1998 Edition)
ISBN-10: 8172232705
ISBN-13: 978-8172232702

இப்புத்தகத்தை அமேசான்.காம் தளம் மூலமும் (வெளிநாடுகளில்), ஃப்ளிப்கார்ட்.காம் தளம்மூலமும் (இந்தியாவில்) வாங்கலாம். புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

ஷோரி விதந்தோதிய கண்ணியம், மிஷநரி பெருந்தன்மை எல்லாம் கூட அந்த அரங்கில், அந்தத் தருணத்திற்கு மட்டும் தான் என்பதை பின்வந்த நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டின. ஷோரி தன் கருத்துக்களை வெளியிலகிற்கு அறிவிக்கும் வகையில் புத்தகமாகவும் எழுதி அது வெளிவந்தவுடன், அவரை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்த கண்ணியமிக்க கனவான் ஃபாதர் அகஸ்டின் கஞ்சமலா தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். எல்லாப் பத்திரிகைகளிலும் உள்ள கிறிஸ்தவ நிருபர்கள், செய்தியாளர்கள் மூலமாக அருண் ஷோரிக்கும், இந்தப் புத்தகத்திற்கும் எதிரான கடும் பிரசாரத்தை அவர் முடுக்கி விட்டார். ஷோரியைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களும், இந்த நூலைப் பற்றிய தவறான, திரிக்கப் பட்ட தகவல்களும் எல்லா முக்கிய ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் பளிச்சிட வைக்கப் பட்டன.

ஹைதராபாத்தில் உள்ள பிரக்ஞா பாரதி என்ற சிந்தனையாளர்கள் அமைப்பு, Missionaries in India நூலைப் பற்றி வெளிப்படையாக பொதுத் தளத்தில் அருண் ஷோரியுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டு இந்தியாவின் பல திருச்சபைகளிலும் உள்ள தலைமைப் பாதிரியார்களுக்கும், ஆர்ச்பிஷப்புகளுக்கும் அழைப்பு விடுத்தது. அவர்களில் ஒருவர் கூட இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழித்து விட்டனர். ஃபாதர் அகஸ்டின் கஞ்சமலா ஒருவர் மட்டும் தான் முன்வந்தார். முதலில் ஷோரியின் நூலை மறுத்துத் தான் பேச வாய்ப்பளிக்க வேண்டும், அதன் பிறகே ஷோரி தன் விளக்கங்களை அளிக்கவேண்டும் என்ற அவரது நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

1994, செப்டம்பர் 4 அன்று இந்தப் பொது விவாதம் மக்கள் அரங்கில் நிகழ்ந்தது. ஃபாதர் கஞ்சமலா எழுப்பிய ஒவ்வொரு மறுப்புக்கும் விரிவான, ஆதாரபூர்வமான விளக்கங்களை ஷோரி அளித்தார். அருண் ஷோரியின் நூல் பற்றி மிஷநரிகளின் எதிர்வினைகளும், இந்த விவாதமும் எல்லாம் சேர்த்து முழுமையாக ஒரு புத்தகமாகப் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது – “Arun Shourie and his Christian critic”, Voice of India, New Delhi, 1995. பின்னர் Voice of India வெளியிட்ட History of Hindu-Christian encounters (AD 304 to 1996) என்ற நூலிலும் இது ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.

கிறிஸ்தவ மதமாற்றிகளுடனான அருண் ஷோரியின் உரசல்கள் இத்துடன் நிற்கவில்லை. ஆறு வருடங்கள் கழித்து, 2000ஆம் ஆண்டு, அவர் இதே விஷயத்தைப் பற்றி இன்னொரு புத்தகமும் எழுத நேர்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 armchaircritic on December 17, 2009 at 11:37 am

சமீபத்தில் தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடும் இரண்டு பேரை சந்தித்தேன். அவர்கள் கூற்றுப் படி அவர்கள் போராட்டத்திற்க்கு எதிரானவர்கள் இந்துக்கள் அல்ல. மிஷநரிகளே! இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அவர்கள் செய்யும் “இந்து மதத்தைப் போல வேறுபாடுகள் எங்களிடம் இல்லை. உங்களுக்கு சம உரிமை அளிக்கப்படும்” என்பது பொய் என்று வெட்ட வெளிச்சமாகி விடுமே என்கிற பயம்தான்!
அவர்கள் கூறிய மற்றொன்று மதம் மாறியவர்களுக்காக அளிக்கப்படும் டாலர் நன்கொடைகள் தங்களுக்கு கிடைப்பதில்லை ஒரிஸ்ஸா போன்ற இடங்களுக்கு மதம் மாற்றப் பயன்படுகிறது.
தலித் இந்துக்களுக்குதான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால் reconvert ஆகவும் தயார். எங்களுக்கு எதிர்காலம்தான் முக்கியமே தவிர பொய்யாக (ஏ)மாற்றிய மதம் அல்ல! இவ்வாறு கூறும் இவர்கள் very practical. Reconvert ஆனவர்கள் இப்போது MLAவாகவும் IAS அதிகாரிகளாகவும் ஆன கதையையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ருச்சிக் காரன் on October 29, 2009 at 6:48 pm

நாம் முக்கிய‌மாக‌ அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌ வேண்டியது பைபிளைத் தான்.

பைபிள் ஒரு காட்டுமிராண்டி க‌ட்டுக் க‌தை என்ப‌தை எளிதாக‌ நிரூபிக்க‌ முடியும்.

பைபிளுக்கு எந்த‌ ஒரு வ‌ர‌லாற்று ஆதார‌மும் கிடையாது. அறிவிய‌லுக்கு எதிராக‌ க‌ட‌லே இர‌ண்டாக‌ப் பிள‌ந்து நீர் சுவ‌ர் போல‌ நின்ற‌தாக, சிரிப்புக் க‌தைக‌ள் பல‌ உண்டு.

இந்த உலகத்தயே சுடு காடு ஆக்கும் விசக் கருத்துக்களை உருவாக்கி அதை பைபிள் என்ற பெயரிலே அமைத்து விட்டார்கள். இந்த பைபிளின் அடிப் படையிலே யூதர்கள் தங்கள் மதத்தை அமைத்தனர்.

அதக் காப்பி அண்ட் பேஸ்ட் செய்து, அதே விசக் கருத்துக்களை, தங்கள் மதத்திற்கும் அடிப் படையாக வைத்தன, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள்.

பைபிளின் காட்டு மிராண்டிக் கருத்துக்களாவன:

1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே

3) சிந்த‌னையைத் த‌டை செய்து அடிமை ஆக்குத‌ல்: யாரோ ஒருவர் கடவுளைப் பார்த்ததாக கதையை விட்டு, இந்த உலகிலே யாரும் கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சி செய்வதை தடை போட்டது பைபிளே!

4)க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது,

இத‌ன் மூல‌ம் பைபிள் என்ப‌து காட்டு மிராண்டிகளின் க‌ற்ப‌னையில் உருவான‌து என்ப‌தை நாக‌ரீக‌ம் தெரிந்த‌ எந்த‌ ம‌னித‌னும் புரிந்து கொள்வான்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்ப‌து போல‌ பைபிளை விட்டு யோவான பிடித்து என்ன‌ ப‌ல‌ன்.

ம‌னித‌த்துக்கு எதிரான‌ விசக் கருத்துக்களை அம்‌ப‌ல‌ப் ப‌டுத்த தேவையான‌ அருமையான‌ க‌ருத்துக்க‌ள் ந‌ம்மிட‌ம் உள்ளன‌.

சூரிய‌னைக் கையிலே வைத்துக் கொண்டு, டார்ச் லைட்டை தேடி அலைவ‌து போல‌ உள்ள‌து.

இ ந்து ம‌த‌த்தையும் ப‌ற்றி எல்லொரும் த‌வ‌றாக‌க் க‌ருதும்ப‌டி நாம் செய‌ல் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

Will be continued…….

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. வள்ளுவன் on October 30, 2009 at 12:15 am

    ஆசிரியர் அய்யாவிற்கு வணக்கம்,
    நீங்கள் சைவ சித்தாந்தத்தை பின்பற்றும் தமிழ் சைவர் என்று நான் அறிகிறேன். அதனால் இதை கேட்கிறேன். நான் சைவ சித்தாந்தத்தை பின்பற்றாவிட்டாலும், அம்மார்க்கத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் பற்றுடையவன்.

    மறைமலை அடிகளாருக்கு உங்கள் மார்கத்தில் இருக்கும் மதிப்பு எவ்வளவு? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அவர் ஒரு சைவத்துறவி ஆக இருந்தாலும், ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தார் அல்லவா? மேலும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் வைணவர்களின் வேலை என்றும், சைவர்களை ‘மதமாற்றம்’ செய்ய நடக்கும் சூழ்ச்சி என்றும் மறைமலை அடிகளார் பேசினார், அல்லவா??

    “The leader of the Self-respect movement is a Vaishnavite; his brother too, we come to understand, is a Vaishnavite who has converted many gullible Saivites to Vaishnavism. Their accomplices too are Vaishnavites. Some of the Justice Party leaders too are Vaishnavites. Moreover, not only are they Vaishnavites, they are also Telugu-speakers.”

    http://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal …

    ஈ.வே.ரா வைனவராக இருந்திருந்தால் ஏன் இராமன், இலக்குவன், கிருஷ்ணன் படங்களை காலனிகளால் அடித்தார்?? ஏன் எப்பொழுதும் அன்னை சீதையைப் பற்றி அவதூறாகவும், ஒரு பெண்ணை எவ்வளவுதூரம் கேவலப்படுத்த முடியுமோ, அதற்க்கு ஒரு படி மேலாகவும் பேசினார்? இதெல்லாம் மறை மலை அடிகலாருக்குத் தெரியாதா?

    மேலும், இளவழகனார் என்ற மறைமலை அடிகளின் சீடர் கூறியது:-

    “Saivism is not one iota different from the primary aim of the Self-respect movement. The Self-respect movement arose to dispel the illusion of Brahmanism form the Tamil people and infuse self-respect into them. Saivism also does the same. The Self-respect Movement detests the Aryan Brahmins. Saivism too doesn’t like the Aryan Brahmins one bit… The Self-respect movement wishes to uplift the depressed classes. That is also the basic idea of Saivism…. The Self-respect movement is against caste differences among the Tamil people. Saivism too emphasis the same point… when there are so many commonalities, why should Saivism and Saivite apostles be deprecated and condemned [by the Self-respect movement].”

    http://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal ….

    திராவிட இயக்கத்தைப் போலவே, சைவமும் அந்தணர்களை எதிர்ததாம்? அப்போ, ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப்பெருமான், நம்பியாண்டார் நம்பி இவர்களெல்லாம் யார் அய்யா? மேலும், மறைமலை அடிகளுக்காகவாவுது நாயக்கர் சைவத்தை கேவலப்படுத்தாமல் இருந்தாரா? ஏன் இராம, இலக்குவன் படங்களை காலனிகளால் அடித்ததுபோல விநாயகரின் படத்தையும் அடித்தார்? அப்பொழுது ஏன் மறைமலை அடிகள் தடுக்கவில்லை? விநாயகர் தமிழ் கடவுள் இல்லை எனும் ஆதாரமற்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! ஏன் எனில், அவ்வையாரில் தொடங்கி, நக்கீரர், நாயன்மார்கள் வழியாக, சமீப காலத்தில் வாழ்ந்த திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் வரை எவரும் விநாயகரை புறக்கணிக்கவில்லை!! அதோடு நில்லாது, சிதம்பரம் நடராஜர், ஸ்ரீரங்கம் அரங்கன் சிலைகள் என்று தூள் தூளாகுமோ அன்று தான் ‘திராவிடர்களுக்கு’ உண்மையில் விடுதலை என்று நாயக்கர் பேசியபொழுது, ஏன் மறை மலை அடிகள் கண்டிக்கவில்லை???

    மேலும், மறை மலை அடிகள் உண்மையான இந்துத் துறவியாக இருந்திருந்தால் ஏன் ஈ.வே.ரா கேட்டவுடன் அரும் பொக்கிஷமான இராமாயணத்தை அவதூறாக பெரியாருக்கு எழுதித் தந்தார்??? இப்படி எழுதி விட்டு பிறகு முருகனை துதித்தால், எப்படி அவன் அருள் புரிவான்?? தன் மாமனைப் பற்றி தரக்குறைவாக பேசிவிட்டு முருகனை வணங்கினால், அவன் மகிழ்ச்சி அடைவானா? அதுசரி, முருகன், சிவன் திராவிட கடவுள்கள், திருமால் ஆரியனின் சூழ்ச்சி என்று பேசுபவர்களிடம் என்னவென்று கூறுவது? இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் என்ன கூறுகிறார்? முருகனை எப்படி வர்ணிக்கிறார்??

    “முருகனே, செந்தில் முதல்வனே,
    மாயோன் மருகனே, ஈசன் மகனே ..
    ஒருகைமுகன் தம்பியே,
    நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான். ”

    நக்கீரருக்கு, அவ்வய்யாருக்கு, நாயன்மார்களுக்கு, கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு, மற்றும் வேதகால மகரிஷிக்களுக்குத் தெரியாததுவா மறைமலை அடிகளுக்குத் தெரிந்து விட்டது?????????

    சைவ சித்தந்தம் மட்டும்தான் சைவத்தின் ஒரே மார்க்கம் என்று நமது மக்கள் தவறாக நினைக்கிறார்கள். மிகப்பழமையான சைவம் குஜராத் மாநிலத்தில் தோன்றிய “பசுபதாயம்” ஆகும். இதுபோலவே காஷ்மீர் சைவம் (சொல்லப்போனால், காஷ்மீரில் சிவனைத்தவிர வேறு எந்த கடவுளையும் வழிபட்டதாக கேள்வி பட்டதுகூட இல்லை), சித்த சித்தாந்தம், சைவ அத்வைதம் போன்ற பல மார்கங்கள் உள்ளன. ஆனால், சைவத்தை இந்து சமூகத்திலிருந்து பிரிக்க நினைக்கும் கூட்டம் சொல்வது என்ன தெரியுமா:- “வீரசைவம் என்றழைக்கப்படும் லிங்காயதம் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே அவர்கள் இந்துக்களே அல்ல” என்பது. அவர்கள் வேதங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், அம்மார்கத்தை தோற்றுவித்த ஸ்ரீ பாசவண்ணரே ‘ஸ்மார்த்த கம்மே’ அந்தண சமூகத்தில் பிறந்து, சாதிகளினால் வெறுப்புற்ற சாதியற்ற மார்கத்தை தோற்றுவித்தார் என்று வரலாறு கூறுகிறது. இராமானுஜர், இராமானந்தர், சைதன்யா போன்றவர்கள்கூட தீண்டாமை, சாதிக்கொடுமையை எதிர்த்து போராடினார்கள். அதற்காக, அவர்கள் அந்தணர்கலையே எதிர்த்தார்கள், வெறுக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி??

    இந்துக்கள் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே வெற்றி இல்லை, வாழக்கூட முடியும். எனவே, நமக்குள் இருக்கும் இப்படியான பேதங்களை நாம் களையவில்லை என்றால், என்ன நடக்கும்??

    இறைவன்தான் அறிவான்!!!!!

     

 

தேவப்ரியா சாலமன் on October 30, 2009 at 8:05 am

சிலுவை வழிபாடு

இயேசுவின் படங்கள் அல்லது சர்ச்ச்னுள், வெளியில் சிலுவைகள் வைத்தல் என்பது உருவ பொம்மை வழிபாடுகளின் உச்சக் கட்டம்.

வரலாற்று ரீதியில் ரோமன் தண்டனை முறையில் துக்குமரம் என்பது சாரம் கட்டி உயரமான சாரத்தில் ரோம் ஆட்சிக்கு எதிரான போராளிகளை நிர்வாணமாக தொங்க விடுவர். விசாரணையின் போதான காயங்கள், பசி, கழுகு போன்ற தொந்தரவுகளில் கதறி கதறி 5-6 நாள் கழித்தே மரணம் வரும்.

நிர்வாணமாக குற்றவாளி படும் வேதனை கண்டு பொது மக்கள் ரோம் ஆட்சியை எதிர்க்க பயப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படை.

குற்றவாளி இறந்தாலும் அவருடைய கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு விழும் வரை பிண உடல்கள் தொங்கும். அதாவது தூக்குமரத்தில் மரண தண்டனை குடுக்குமிடம் கபாலதலம்- மண்டைஓடு புரளுமிடம் எனப்படும். இட்தண்டனையில் மரணம் ந்ன்பது சம்பவிக்க 2லிருந்து 10 நாள் வரை ஆகும்.

சர்ச் நடை முறையில் சிலுவைகள் தோன்றக் காரணம்- 4ம் நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தன் படைக் குழுவினருக்கு பெயர் எழுதுகையில் கிறுஸ்துவர் என எழுதியதின் சுருக்கம் கிரேக்கத்தில் சி-ரோ- இரண்டும் இணைய இன்றைய வடிவம் பெற்றது 6 அல்லது 7ம் நூற்றாண்டில் தான்.

ஆரம்பத்தில் சிரோ சிலுவை அருகில் ஆடு போடப் பட்டது, பின் இறக்கும் வாலிபன், பின் வாலிபன் சிலுவை மேல் வர இன்றைய வடிவம் பெற்றது. பரவலாக சர்ச்கள் சிலுவை பயன்பாடு 14-15ம் நூற்றாண்டு வாக்கில் தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1.  
    1. தேவப்ரியா சாலமன் on October 31, 2009 at 7:40 am

      Dear Christian –

      This is a view of a Noble price winner

      பைபிள்- தீயொழுக்கங்களின் கையேடு-நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர்
      October 29, 2009

      நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் ஹோஸே சரமாகோ பைபிளை தீயொழுக்கங்களின் கையேடு என்று உண்மையை உரைத்துள்ளார்

      இது சர்ச்சுகளிலும் ஸ்பெயினிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

      Nobel winner slams Bible as ‘handbook of bad morals’
      (AFP) – 22 hours ago
      http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jz7ZtcEKZzrizGRpwp7t77X41qrg
      LISBON — A row broke out in Portugal on Monday after a Nobel Prize-winning author denounced the Bible as a “handbook of bad morals”.

      Speaking at the launch of his new book “Cain”, Jose Saramago, who won the 1998 Nobel Prize for Literature, said society would probably be better off without the Bible.

      Roman Catholic Church leaders accused the 86-year-old of a publicity stunt.

      The book is an ironic retelling of the Biblical story of Cain, Adam and Eve’s son who killed his younger brother Abel.

      At the launch event in the northern Portuguese town of Penafiel on Sunday, Saramago said he did not think the book would offend Catholics “because they do not read the Bible”.

      “The Bible is a manual of bad morals (which) has a powerful influence on our culture and even our way of life. Without the Bible, we would be different, and probably better people,” he was quoted as saying by the news agency Lusa.

      Saramago attacked “a cruel, jealous and unbearable God (who) exists only in our heads” and said he did not think his book would cause problems for the Catholic Church “because Catholics do not read the Bible.

      “It might offend Jews, but that doesn’t really matter to me,” he added.

      Father Manuel Marujao, the spokesman for the Portuguese conference of bishops, said he thought the remarks were a publicity stunt.

      “A writer of Jose Saramago’s standing can criticise, (but) insults do no-one any good, particularly a Nobel Prize winner,” the priest said.

      Rabbi Elieze Martino, spokesman for the Jewish community in Lisbon, said the Jewish world would not be shocked by the writings of Saramago or anyone else.

      “Saramago does not know the Bible,” the rabbi said, “he has only superficial understanding of it.”

      The author caused a scandal in Portugal in 1992 with “The Gospel According to Jesus Christ.”

      The book depicted Jesus losing his virginity to Mary Magdalene and being used by God to control the world.

      Saramago quit Portugal at the time and moved to Lanzarote, in the Spanish Canary Islands.

       
    2. Christian on October 31, 2009 at 8:05 am

      //Why attack me personally, if I have misquoted Bible- Please quote and reply//
      திரு.தேவப்ரியா,
      நீங்கள் பைபிளை குறித்து சொல்லும் உங்கள் கருத்துகளுக்கு, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை அல்லது புத்தகத்தைதான் ஆதாரமாக வைக்கிறீர்கள். அதைத்தான் நான் குறிப்பிட்டு சொன்னேன்.
      நன்றி,
      கிறிஸ்டியன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1.  ram on October 31, 2009 at 3:50 pm

    ///என்வே பைபிளை விருப்பு வெருப்பின்றி ப‌டிக்கும் ப‌ல‌ரும்

    பைபிளைக் க‌ற்ப்பித்த‌வ‌ன் காட்டுமிராண்டி,

    பைபிளை ந‌ம்புப‌வ‌ன், மூளை ச‌ல‌வை செய்து கொண்ட‌ முட்டாள்,

    பைபிளை பர‌ப்பி இந்த‌ உல‌கில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்களை ந‌ச்சுக் க‌ருத்துக்களை உருவாக்கு ப‌வ‌ன் அயோக்கிய‌ன்,

    என்ற‌ முடிவுக்கு வ‌ருவ‌து ஆராய்ச்சியின், அறிவின் அடிப்ப‌டையில் தான்.

    இதை மேல் நாட்டு அறிங்க‌ர் டிரிக்ஸ் கார்ன‌ர் (Tirichs kaarnar) கூறியுள்ளார்///

    அந்த மேல் நாட்டு பெரியாரை நான் வாழ்த்துகிறேன்.

    மன்னாரு on November 2, 2009 at 1:21 am

    //மறைமலை அடிகளாருக்கு உங்கள் மார்கத்தில் இருக்கும் மதிப்பு எவ்வளவு? //

    எனுக்கு தெர்ஞ்சு பெர்ஸா ஒன்னியும் இல்ல வள்ளுவன்.

    //இதை ஏன் கேட்கிறேன் என்றால், அவர் ஒரு சைவத்துறவி ஆக இருந்தாலும், ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தார் அல்லவா?//

    ஆ..பின்ன? இப்டி இருக்க ஸொல்லோ எப்டி மருவாதி கெடெக்கும்?

    // மேலும், மறை மலை அடிகள் உண்மையான இந்துத் துறவியாக இருந்திருந்தால் ஏன் ஈ.வே.ரா கேட்டவுடன் அரும் பொக்கிஷமான இராமாயணத்தை அவதூறாக பெரியாருக்கு எழுதித் தந்தார்???//

    ஆங்! அது கேல்வி!…அதான் மேட்டரு. நாகபட்னம், திருவாரூரு, அந்த பக்கம்லாம் வேதாசலத்த “பாதிரி மைந்தன்” அப்டீன்னு தான் ஸொல்வாங்கோ. இன்னா…புர்ஞ்சுக்கினீங்களா?

    அப்பாலிகா வேற ஒரு மேட்டரும் கீது. இந்த சைவ சித்தாந்தத்த “தமிழ்”-ன்ற பேர்ல வடமொயிக்கு எதுரா திருப்பி இந்து மதத்துலர்ந்து பிரிக்க ஏஸ்து கிறுஸ்து பார்டீங்க ட்ரை பன்னிக்கினே இருந்தானுங்க. (இப்போவும் அது நடக்குது, அஆங்!). அப்போ ஒரு சில சைவ சாமியாருங்க அவுனுங்க கூட கூட்டு வச்சுக்கினானுங்க. அதுல மறமலயும் ஒரு பார்டி.

    அத்தொட்டு தான் அவுரு வேதாசலம்-ன்ற பேர மறைமலை அடிகள்-னு மாத்திக்கினாரு. அத்தோட வுட்டாரா? இல்லியே! இந்த திராவிட இன வெறியனுங்க கூட சேந்துக்குனு தமில் வர்ஸத்தையே மாத்திக்கினாரு. மாத்திப்புட்டு இன்னா ஸொன்னாரு? தை மாஸம் தான் தமில் வர்ஸம் பொறக்குதுன்னு வுடான்ஸு வுட்டாரு. தை மாஸம் இங்கிலீஸுல ஜனவரியாங்காட்டி…கிறுஸ்து இஸ்டைல்ல கிரெகரி கால்ண்டர் கீது பாத்யா….அத்தோட ஸொம்மா சப்புனு ஒட்டிக்கும்.

    மறமல தமில் வர்ஸத்த மாத்துனது யார் பேர்ல? திருவள்ளுவர் பேர்ல! இந்த கிறுஸ்து பார்டிங்க திருவள்ளுவரயே திருட ட்ரை பண்ணானுங்க. அத்தொட்டு அவுருக்கு ஞான ஸ்னானம் கூட செஞ்சுட்டானுங்க. தாமஸும் அவுரும் மைலபூர்ல ஒன்னா வாழ்ந்தாங்கோ…மெரினா பீச்சாங்கறைல வாக்கிங் போனாங்கோ. அப்போ தாமஸ் கைல நெறைய விஸயம் கத்துக்குனு, பைபில்லேந்து பல மேட்டர எட்துக்குனு வள்ளுவனாரு திருக்குறள் எயுதிக்கினாரு. திருவள்ளுவர் கிறுஸ்து, திருக்குறள் கிறுஸ்துவ வேதம் அப்டீனெல்லாம் டுபாகூர் வுட்டுகுனு திரியறானுங்க அயோக்கியனுங்க.

    அட பாருங்க..ட்ராக் மாறி போயிட்டேன். மேட்டருக்கு வரேன். நம்ம கலிஞரு இன்னா செஞ்சாரு? மறமல பேர ஸொல்லி தமில் வர்ஸத்த மாத்திகினாரு. ஏன்? அவுரும் கிறுஸ்து பார்டிங்க கூட கூட்டு. அவுரும் கிறுஸ்து பார்டிங்க எடுக்கப்போற தாமஸ் சினிமா தொவக்க விழாவுல கலந்துக்குனாரு. அந்த படத்துல திருவள்ளுவர கிறுத்துவரா காட்றத்துக்கு ப்ளான் போட்டுகறானுங்கோ கிறுஸ்துவனுங்கோ.

    கட்ஸீல ரிஜல்ட் இன்னான்னா….மறமலைலேந்து…கலிஞர் வரெக்கும் கிறுத்துவ கூலிங்களாத்தான் இருக்காங்கோ.

    இன்னா…அல்லாரும் தெர்ஞ்சுக்குனீங்களா?

    வர்டா…

    மன்னாரு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து, கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்
Permalink Reply Quote 
More indicator.png


இந்து, கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்

 

மூலம்: சீதாராம் கோயல் [1]
மொழியாக்கம்: ஜடாயு

(1)
பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்க காலத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திய அருண் ஷோரி வரையிலான இந்துக்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை மதக் கொள்கைகளை (dogma) விவாதத்தால் தகர்ப்பதிலும், மிஷநரி செயல்பாடுகள் பழிக்கத் தக்கவை என்று நிறுவுவதிலும் சளைக்காமல் தங்கள் எழுத்துக்களையும், சக்தியையும் செலவழித்திருக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ சமயவாதிகளின் (theologians) ஆணவப் போக்கிலும், கிறிஸ்தவ மிஷநரிகளின் தீவிர மனப்பான்மையிலும் இதனால் ஒரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் இந்த அடிப்படை மதக்கொள்கை ஒருபோதும் விவாதத்திற்கான பொருளாக இருந்ததில்லை. பொதுவான தர்க்க விதியின்படி, உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை மறுக்க முடியாமலும் போகலாம்; அதை நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. 33 CEல் (பொது சகாப்தம் 33ஆம் வருடத்தில்) அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு யூதரை, யூதேயா எனும் ஊரில் வைத்து, ரோமானிய கவர்னர் ஒருவர் சிலுவையில் அறையச் செய்தாராம். சிலுவையில் அறையப்பட்ட அந்த யூதரே வரப்போகிற எல்லா மனிதர்களின் பாவங்களையும், எல்லா காலங்களிலும் சுமக்கிறாராம். இதை எப்போதாவது, யாராவது நிரூபித்திருக்கிறார்களா? தங்களின் ஒரே ரட்சகர் அந்த மனிதர் மட்டுமே என ஏற்றுக்கொள்பவர்கள் சந்தோஷம் பொங்கும் நிரந்தர சொர்க்கத்திற்குப் பயணிப்பார்கள் என்றும், மற்றவர்களெல்லாம் நிரந்தர நரகத்தில் தீயில் வெந்துகொண்டிருப்பார்கள் என்றும் யாராவது நிரூபித்திருக்கிறார்களா? அப்படி யாரும் நிரூபிக்காவிட்டாலும், (நம்புபவர்கள் சொர்க்கத்திற்கும், மற்றவர்கள் நரகத்திற்கும் போகக் கடவார்கள் என்கிற) இந்த அறைகூவலும், வாக்குறுதியும், அச்சுறுத்தலும் உண்மையில்லை என்று மறுத்துரைப்பது தர்க்கரீதியாக முடியாததாக உள்ளது.

எவ்வளவு தான் அலங்காரமான சமயவாத வளவளா போதனைகளைப் பரப்பினாலும், பெரும் நிறுவனங்களைக் கட்டமைத்து, அவற்றையே ஆயுதமாகச் செலுத்தி, மற்றவர்களை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் மறைமுக உத்தி என்பதற்கு மேல், இந்த மதக்கொள்கையில் வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை. எனவே, இந்த கிருத்துவ மதக் கொள்கைகளுக்கு அவமதிப்பு என்கிற பொருத்தமான நிராகரிப்பை மட்டும் வழங்கிவிட்டு தங்களுக்கிடையே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மிஷநரி கட்டமைப்புக்கள் மீதுதான் இந்துக்கள் கவனம் செலுத்தவேண்டும், இப்போதாவது.

இந்தக் கட்டமைப்புகளை இயக்கும் நிறுவனமயமான கிருத்துவத்தின் ஒரே நோக்கம் இந்து சமுதாயத்தையும், கலாசாரத்தையும் அழித்து, இந்துக்களின் தாய்மண்ணாகிய இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதகமான, பாதகமான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அந்த நிறுவனம் யுக்திகளை வகுத்துக் கொண்டேயிருக்கிறது. காசு தரும் எஜமானர்களுக்காக தங்கள் திறமைகளை விபசாரம் செய்யும், கபடங்களை வார்த்தை ஜாலங்களால் அலங்காரம் செய்யும் அறிவுஜீவி கிரிமினல்களை கணிசமான அளவில் உருவாக்கி, அது வேலை வாங்குகிறது. (இப்படியிருக்கும்) இந்தியச் சூழலில், இந்த குயுக்திகள் சமய விளக்கங்களாக விளம்பரம் செய்யப்படுவதும், இத்தகைய கிரிமினல்கள் சமய அறிஞர்களாக முன்நிறுத்தப்படுவதும், இந்த சமூக விரோதக் கும்பலின் உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து இந்துக்களின் கவனத்தை சிதறடித்து விடக்கூடாது.

இந்துமதமும், கிறிஸ்தவமும் இங்ஙனம் எதிர்ப்படுவதை, மோதிக் கொள்வதை இரு மதங்களுக்கிடையில் நிகழும் உரையாடலாக எண்ணுவது இந்துக்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய தவறு. ஏனெனில் கிறிஸ்தவம் ஒரு “மதமாக” என்றுமே இருந்ததில்லை; வேட்டையாடி அழிக்கும் தன்மை கொண்ட எதேச்சாதிகார சக்திகளில் ஈடு இணையற்றது அது என்று அதன் நெடிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனால், சிந்தனையாலும் செயல்முறையாலும் ஒன்றை ஒன்று விலக்கக்கூடிய இரண்டு மார்க்கங்களுக்கு இடையேயான போர் என்று தான் இந்த எதிர்ப்படுதலைக் கருத இடமுள்ளது. கீதையின் மொழியில் (அத்தியாயம் 16) சொல்வதென்றால், இது தெய்வத்தன்மைக்கும், அசுரத்தன்மைக்கும் இடையே நிகழும் போர். சம்பிரதாயமான வரலாற்று மொழியில் சொல்வதென்றால், வேத நெறிக்கும் (Vedic), விவிலிய நெறிக்கும் (Biblical) இடையேயான போர்.

இந்த இரு நெறிகளையும், முன் நடத்திச் செல்லும் இவற்றின் மூலங்கள் பற்றிய ஆய்வுக்குள் இப்போது போக வேண்டாம். அது பற்றி வேறொரு இடத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன் [2]. அவை எந்த வகையான நடத்தைகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.


_42227158_diwali_2.jpg


வேத நெறி, மனிதன் தன்னை அறிதலிலும், உணர்தலிலும் கருத்துச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதாவது அறவழியிலும், ஆன்மிகத்திலும் மேன்மையடைய வேண்டும். இதற்காக தவம், யோகம், தியானம், ஞானம், பக்தி என்று பல வழிமுறைகளை அது வளர்த்தெடுத்திருக்கின்றது. ஒரு சாதகன் தனது தார்மீக, ஆன்மிக மனநிலைக்குப் பொருந்துமாறு (ஆதாரம்), எந்தவொரு வழிமுறையையும் தேர்வு செய்து அதைக் கைக்கொள்ளலாம் (அதிகாரம்). (குணத்தாலும், மனத்தாலும் வேறுபட்டிருந்தாலும்) அனைவருக்கும் ஒரே ஒரு மருந்துச் சீட்டுத்தான் என்பது கிடையாது. (நிறுவனமயமான) ஒரு மத நம்பிக்கையின் கட்டுப்பாட்டிற்குள்ளே (மனிதரை) திணிக்கும் வற்புறுத்தல் மற்றும் ஆசைகாட்டுதல்கள் கிடையாது. மேலும், மற்றவர்களுக்கு எதிராக, தாக்குதலுக்காக அணிதிரள வேண்டும் என்பது நிச்சயம் கிடையாது.


crusades.jpg


இதற்கு மாறாக, விவிலிய நெறி, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை திருத்தவேண்டும் என்று போதிக்கிறது. “ஒரே சத்திய வழி”க்கு சாட்சியம் கூறிய மாத்திரத்தில், ஒருவர் உயர்ந்த மனித ஜீவனாக ஆகிவிட்டதாக நம்பப் படுகிறார். அவர் மற்றவர்களது “ரட்சிப்பு”க்கு வழிகாட்டத் தகுதிபெற்றவராகவும் ஆகிவிட்டார்! அதன் பிறகு தேவைப்படும் பயிற்சியெல்லாம் - செயற்குழுக்களையும், கட்டமைப்புக்களையும் உருவாக்கி களத்தில் எப்படி இறங்குவது, மற்றவர்களைநிர்ப்பந்தம், மோசடி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எப்படியெல்லாம் மதம் மாற்றுவது, வழிக்கு வர மறுப்பவர்களை எப்படி கொல்லவோ, சீரழிக்கவோ அல்லது கறைபடுத்தவோ செய்வது, இதெல்லாம் தான்.

சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தின் பல சமயத் துறைகளை (schools) வேத நெறியானது உலகிற்கு அளித்திருக்கிறது. இவற்றைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள்ளும் சரி, மற்றும் வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடத்திலும் சரி, அமைதியையும், சமாதானத்தையுமே கடைப் பிடித்து வந்துள்ளனர். ஆனால் விலிலிய நெறியில் இருந்து உதித்த கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம் மற்றும் நாசிசம் போன்ற சமயங்கள் கொலை மற்றும் அழிப்பையே தங்கள் முக்கிய வழிமுறைகளாகக் கொண்டவை. இவைகள் தங்கள் உட்குழுக்களுக்குள்ளும், தங்களுக்கிடையிலும் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மற்ற மக்களுடனும் வன்முறை மோதல்களையே உருவாக்கியுள்ளன.

(2)
 
இந்து கிறிஸ்தவ எதிர்ப்படுதல்களின் வரலாற்றை குறிப்பிட்ட ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த எல்லா காலகட்டங்களிலும், கிறிஸ்தவ மிஷநரிகள் “கிறிஸ்தவக் கடவுள் ஒருவரே உண்மை, ஏசு ஒருவரே ரட்சகர், இந்துக்கள் இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப் படவேண்டும்” என்ற அடிப்படை மதக் கொள்கையில் அப்படியே தான் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் வழிமுறைகளையும், சொல்லாடல்களையும், மாறும் சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொண்டேயிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்துமதக் காவலர்கள் கிறிஸ்துவ போதனைக்கும், மிஷநரி வழிமுறைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களினால், பின்வரும் கட்டங்களில் இந்துக்களின் எதிர்ப்புணர்வு தொய்வடைகிறது அல்லது ஒரேயடியாக மறைந்து விடுகிறது. கிறிஸ்தவம் வெற்றியடைந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டு முன் நகர்கிறது.


crusader.jpg


முதல் காலகட்டம் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் போர்ச்சுகீசியக் கொள்ளையர் வருகையில் தொடங்குகிறது. குறிப்பாக, இந்தக் கொள்ளையர்களின் குலகுருவான (patron saint) பிரான்சிஸ் சேவியரின் வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவம் தனது உண்மையான முகத்துடன் தரிசனம் தருகிறது. அதன் மொழி அதன் ஐரோப்பியத் தாயகத்தில் இருந்தது போன்றே கரடுமுரடாகவும், அதன் வழிமுறைகள் அதே குரூரத்துடனும் இருக்கின்றன. திக்கற்ற இந்துக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். அவர்கள் செய்த புண்ணியம், இந்தக் காலகட்டம் நெடுநாள் நீடிக்கவில்லை. கோவா மற்றும் சில சிறிய மாகாணங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தோல்விடையடைகின்றனர். விதிவிலக்காக பாண்டிச்சேரி மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வேறுசில இடங்களில் பிரெஞ்சுக்காரர்களின் குறுகிய காலச் செயல்பாடுகள் தவிர்த்து, பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐரோப்பிய அரசுகளுக்கு கிறிஸ்தவப் பரப்புதலுக்கு அவ்வளவாக நேரமிருக்கவில்லை.

இரண்டாவது காலகட்டம், 1813ல் மராட்டியர்களின் இறுதித் தோல்விக்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலூன்றுவதில் தொடங்குகிறது. பிரிட்டிஷார் மிஷநரி செயல்பாடுகளுக்கு மறைமுக ஊக்கம் தந்தாலும், அவர்களது நேரடி வழிமுறைகளை அனுமதிக்கவில்லை. ஆயினும் மிஷனரிகளின் மொழி அதே வக்கிரத்துடன் தான் இருக்கிறது. சிறிது காலம், குறிப்பாக வங்கத்தில் கிறிஸ்தவம் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறது. மகரிஷி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் அறைகூவல் மற்றும் இந்து சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சியுடன் இந்தக் காலகட்டம் முடிவடைகிறது. கிறிஸ்தவம் தீவிர பின்னடைவை சந்திக்கிறது.


preaching-at-hindu-festival.jpg


மூன்றாவது காலகட்டம் மகாத்மா காந்தியின் பிரவேசத்தைத் தொடர்ந்து, அவரது “சர்வமத சமரசம்” என்ற கோஷத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவ மிஷநரிகள் (தாக்குதல் நிலைப்பாட்டிலிருந்து) தற்காப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளப் பட்டு, தங்கள் மொழியை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வசைச்சொல் வாயர்களாக இருந்த விஷமிகள், நாவில் சர்க்கரை தடவிக் கொண்ட நாகங்களாக மாறுகின்றனர். அழுக்குக் கந்தல் கட்டிய பிச்சைக்காரன் தனது விலையுயர்ந்த ஆடையணிகளை செல்வந்தர்களுக்கு தானம் செய்வதாக வாக்களித்தால் எப்படியிருக்கும்? அதே பாணியில், இப்போது அவர்கள் இந்துக்களிடம் “தங்கள் ஆன்மீகச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக” (share their spiritual riches) புறப்படுகின்றனர். 1938ல் தாம்பரம் மாநாட்டில், அகில உலக மிஷநரி கவுன்சில் (International Missionary Council) கிறிஸ்தவ இறையியலை இந்திய சூழலுக்காக மாற்றியமைப்பதாக முடிவெடுப்பதுடன் இந்தக் காலகட்டம் முடிவடைந்தது.

சுதந்திரத்தின் வருகையுடன் தொடங்கிய நான்காவது காலகட்டம், கிறிஸ்தவத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்துக்களை மதமாற்றுவதற்கான கிறிஸ்தவ உரிமை அரசியல் சட்டத்தாலேயே உறுதி செய்யப் படுவதாக சொல்லப் பட்டது. 17 ஆண்டுகளாக தேசிய அரசியலை வியாபித்திருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒவ்வொரு இந்து விரோத கருத்தியலையும், எல்லா இந்து விரோத இயக்கங்களையும் மதச்சார்பின்மை என்கிற பொய்மைத் திரையிட்டு ஊக்குவித்து வளர்த்தார். அதற்குப் பின்வந்த அரசுகள் “இந்து மதவாதம்” ஒரு பெரும் அச்சுறுத்தல் என்று பயங்காட்டுவதைத் தொடர்ந்து செய்துவந்தன. தங்களது வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் பற்றி மெல்லிய ஆட்சேபம் தெரிவிப்பவர்களைக் கூட இந்து மதவாதிகள், வெறியர்கள், “இந்து நாசிகள்” என்று கூட கிறிஸ்தவ மிஷநரிகள் வசைபாடக் கூடிய நிலை உருவாயிற்று. எல்லாவிதமான “மதச்சார்பற்றவர்களும்” இந்த கோஷ்டி கானத்தில் இணைய முன்வந்தனர்.

கிறிஸ்தவத்தை பூரணத்துவமாக முன்வைத்தல் (Fulfilment), கிறிஸ்தவத்தை இந்திய மயமாக்குதல் (Indigenisation), பரலோகத்திற்குப் பதிலாக “மோட்சம்” (Liberation), பிற மதங்களுடன் உரையாட முன்வருதல் (Dialogue) இப்படியாகப் பட்ட சமயக் கோட்பாட்டு ஜல்லிகள் “வளர்த்தெடுக்கப் பட்டு” செயலில் இறக்கப் பட்டன. மிஷநரி கட்டமைப்பு பல்கிப் பெருகி எங்கும் நிறைந்ததாயிற்று. இந்தியாவின் சரித்திரம் முழுவதிலும், கிறிஸ்துவத்திற்கு இது போன்றதொரு நல்லகாலம் எப்போதும் வாய்த்ததில்லை. கிறிஸ்தவம் இந்தியாவின் ஒரு தொன்மையான சமயம் போன்று அங்கீகரிக்கப் பட்டு, தனது கூட்டத்தைப் பெருக்கவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் முழு உரிமை பெற்றதாக ஆகிவிட்டிருந்தது. இந்தப் பேரிசைக் கூச்சலுக்கு நடுவே ஒலித்தவை ஒருசில சுருதிபேதங்கள் மட்டுமே : 1953ல் லண்டனிலிருந்து வெளிவந்த கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும், மேற்கத்திய ஆக்கிரமிப்பும்” என்கிற அரிய நூல், 1956ல் மத்தியப் பிரதேச அரசால் வெளிக் கொணரப்பட்ட நியோகி கமிட்டி அறிக்கை, 1978ல் ஓம் பிரகாஷ் தியாகியால் கொண்டுவரப்பட்ட “மத சுதந்திரம்” பற்றிய மக்களவைத் தீர்மானம்.

இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஐந்தாவது காலகட்டம் நாடு தழுவிய இந்து எழுச்சியுடன் தொடங்கியது எனலாம். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஹரிஜனங்கள் இஸ்லாமுக்கு ஒட்டுமொத்தமாக மதமாற்றப் பட்டது, இஸ்லாமிய மதவெறி மற்றும் வன்முறையின் மீட்சி, பஞ்சாபிலும், காஷ்மீரிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் வளர்ந்த தீவிரவாதம் இவையே இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். பல வருடங்களாக முக்கியமான இந்து சமுதாய பிரசினைகளை ஒருவித உறைந்த மனப்பான்மையுடன் பார்த்துக் கொண்டிருந்த சங்க பரிவாரம் 1984 மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் படுதோல்வியைக் கண்டு திடுக்கிட்டு, தன் இந்து அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்தது. அதன் விளைவாகத் தோன்றியது ராமஜன்மபூமி இயக்கம். இஸ்லாமிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு சக்திகளின் பரவலைத் தடுப்பது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. இருப்பினும், இந்த இயக்கத்தைக் கண்டு அதிகமாகக் கவலைப் படவும், கூப்பாடு போடவும் தொடங்கியவை கிறிஸ்தவ மிஷநரிகள் தான்! சக்திவாய்ந்த கிறிஸ்தவ ஊடகங்கள் மேற்குலகம் முழுவதும் இந்துக்கள் சிறுபான்மையினரை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டி நாசி அரசை அமைக்கப் பார்க்கிறார்கள் என்று கத்திக் கூச்சலிட்டு, பெரும்புயலைக் கிளப்பின. அந்தப் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக அடங்கிய பாடில்லை. எப்போது அடங்கும்? யாருக்கும் தெரியாது.

சுட்டிகள்:

[1] 1997ல் எழுதப் பட்ட The Sunshine of Secularism என்ற நீண்ட கட்டுரையின் முதல் பகுதியின் மொழியாக்கம் இது. Pseudo-secularism, Christian Missions and Hindu Resistance என்ற நூலிலிருந்து.

[2] Sita Ram Goel, Defence of Hindu Society, Third revised edition, Voice of India, New Delhi, 1994.

ஆசிரியர் சீதாராம் கோயல் பற்றிய அறிமுகம் இங்கே.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

June 17, 2009
ஜடாயு rss_icon16.jpg

 

ஜூன் 12ம் தேதி, மும்பையில் இந்து, கிறிஸ்த மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு முக்கியமான மத உரையாடல் (inter faith dialogue) நிகழ்வு நடைபெற்றது.

mumbai-meet

photo courtesy: The Times of India

இதில், இந்துத் தரப்பிலிருந்து காஞ்சி காமகோடி பீடம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவிகளான சுவாமி நிகிலேஷ்வரானந்தர் மற்றும் சுவாமி வாகீசானந்தர், ”வாழும் கலை” அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சுவாமி சிதானந்த சரஸ்வதி (பரமார்த்த நிகேதன், ரிஷிகேசம்), பிரம்மகுமாரிகள் ராஜயோக அமைப்பின் தலைவர் தாதீ ஜானகி, வேங்கடாசாரியார் சதுர்வேதி சுவாமி (ஸ்ரீ ராமனுஜர் மிஷன், சென்னை), சுவாமி விஷ்வேஷ்வரானந்த கிரி (சன்யாச ஆசிரமம், ஹரித்வார்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவத் தரப்பிலிருந்து ஜீன் லூயி பியரி டுரான் (வாத்திகன் போப் அரசின் அங்கமாக உள்ள மத உரையாடல்கள் கவுன்சிலின் தலைவர்) , பெட்ரோ லோபஸ் குவிண்டானா (இந்தியாவில் வாத்திகன் அரசின் தூதர்), கார்டினல் ஆஸ்வால்டு கிராசியாஸ் (மும்பை) மற்றும் ஆர்ச்பிஷப்கள் ஃபெலிக்ஸ் மாகாடோ (நாசிக்), தாமஸ் டாப்ரே (புனே), ராஃபி மஞ்சாலி (வாராணசி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கத்தோலிக்க திருச்சபையின் செயல்பாடுகளில் “மத உரையாடல்” (inter-faith dialogue) என்பதும் ஒன்று. ஊடகங்களில் இது கிறிஸ்தவத்தின் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றுவதாகவும், பிறமதத்தவர்களுடன் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் நல்லிணக்கத்துடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாகவும் பெரிய அளவில் விளம்பரப் படுத்தப் படும். ஆனால் இதன் உண்மையான நோக்கம் கிறிஸ்தவம் அல்லாத மற்ற மதங்களையும் உண்மையானவை என்று அங்கீகரிப்பதோ அல்லது நேர்மையான, திறந்த மனதுடனான உரையாடலை நிகழ்த்துவதோ அல்ல. மாறாக, கிறிஸ்தவ மதமாற்ற வியூகங்கள் வகுக்கப் பட்டு, செயல்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் அதற்கான சூழல் மற்றும் களம் எப்படியிருக்கிறது, அதனால் உருவாகும் சமூக மோதல்கள், எதிர்பாராத விளைவுகள் இவற்றை எப்படி சமாளிப்பது ஆகிய விஷயங்களில் வத்திகனுக்குத் தேவையான விவரங்களைத் திரட்டுவதும், எதிர்த் தரப்பின் பலம், பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும் தான் உண்மையான நோக்கங்கள். இதை போப் மற்றும் வத்திகன் வட்டாரங்களே தங்கள் விசுவாசிகளுக்குப் பலமுறை தெளிவு படுத்தியிருக்கின்றனர்.

பார்க்க: இந்து கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்

- சீதாராம் கோயல் கட்டுரை, தமிழில்

வெகுஜன பொதுப் புத்தியில் கிறிஸ்தவம் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தைக் கட்டமைக்கவும் இத்தகைய “உரையாடல் கூட்டங்கள்” உதவும் என்பதால் கத்தோலிக்க திருச்சபை முனைந்து இத்தகைய கூட்டங்களை நடத்தி வருகிறது. வழக்கமாக இத்தகைய கூட்டங்கள் கத்தோலிக்க சர்ச் அல்லது அமைப்புகளின் வளாகங்களிலேயே நடைபெறும். ஆனால் இந்தியாவில், மும்பைத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான, ஆறுமுகன் பெயரில் அமைந்த ஷண்முகானந்தா ஹால் என்ற புகழ்பெற்ற அரங்கத்தில் தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, இத்தகையதொரு உரையாடல் கூட்டத்தினைக் கூட்டுவதற்கு கத்தோலிக்க திருச்சபை அழைப்பு விடுத்தது” என்று வாத்திகன் பிரதிநிதி தனது அறிமுக உரையில் கூறினார். இந்தியாவில் நடைபெறும் கிறிஸ்தவ மதப் பிரசாரங்கள், மதமாற்றங்கள் பற்றி அவருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை, பாவம்.

ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் நிலைப்பாட்டை முன்வைத்து ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆற்றொழுக்குப் போன்ற ஹிந்தியில் அருமையாக உரையாற்றினார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது உரையின் சாராம்சம், அறிக்கையாக வழங்கப் பட்டது. அந்த அறிக்கையின் மையமான கருத்துக்கள் –

[1] ஒரு மாதம் முன்பு இயேசு பிறந்ததாகக் கருதப் படும் ஜெருசலம் நகரில், இஸ்ரேல் நாட்டின் பிரதான யூத மதகுருவுடன் இதே போன்றதொரு உரையாடல் கூட்டத்தில் போப் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின் முடிவில், போப் அவர்களும், யூத மதகுருவான ரபி யோனா மெட்சர் அவர்களும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரபி, கத்தோலிக்க திருச்சபை யூதர்களிடையில் மதப்பிரசாரங்களும் மதமாற்றங்களும் செய்யாது என்று போப் உறுதியலித்திருப்பதாகக் கூறி அதற்கு நன்றி தெரிவித்தார். அதே மேடையில் போப் அவர்களும் அமர்ந்திருந்தார், மறுப்பு ஏதும் சொல்லவில்லை, அதனால் அவருக்கு இதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. இதே போன்றதொரு உறுதிமொழியினை இந்துக்களுக்கும் போப் அளிக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

[2] இத்தகைய கூட்டங்களுக்குப் பின், இதில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்துக்களைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால் கூட்டம் நடத்துவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இந்து உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமாட்டோம் என்று சர்ச் இந்துக்களுக்கு உறுதியளிப்பதோடு, அதைப் பின்பற்றவும் செய்யாவிட்டால், இத்தகைய கூட்டங்களால் ஒரு பயனும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

[3] மறைந்த போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் உலகம் முழுவதையும் கிறிஸ்தவ மயமாக்குவதே ஏசுவின் “இரண்டாம் வருக்கான” ஆயத்தம் என்றும், அதற்காக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாக் கண்டம் முழுவதும் சிலுவையை வேரூன்ற வைப்பதே வாத்திகனின் குறிக்கோளும், செயல்திட்டமும் ஆகும் என்றும் 1999ஆம் ஆண்டு தன் இந்திய வருகையின் போது குறிப்பிட்டார். அப்படியானால், கிறிஸ்தவம் என்ற மதமே இல்லாத காலத்தில், உலகத்தைக் கிறிஸ்தவமயமாக்க சர்ச்சுகளும், திருச்சபைகளும் இல்லாத காலத்தில், ஏசுவின் முதல் வருகைக்கான காரண காரியம் என்ன என்பதை போப் அவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.

பார்க்க: கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

(கந்தமால் மற்றும் குஜராத் கலவரங்கள் பற்றி விசாரிக்க அமெரிக்க அரசு சார் அமைப்பான USCIRF இந்தியாவிற்கு வருகை தரப்போவதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்து கீழ்க்கண்ட கருத்து தெரிவிக்கப் பட்டது).

[4] அமெரிக்க மத சுதந்திரக் கண்காணிப்பு கமிஷன் (USCIRF – US Commission on International Religious Freedom) என்ற அமைப்பை , இந்த தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடும் வெளிநாட்டு அரசின் கருவியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த அமைப்பு இந்தியாவிற்கு வருகை புரியவும், இந்த நாட்டின் மத சுதந்திரம் பற்றி மதிப்பீடு செய்யும் முகமாக மக்களுடன் உரையாடவும் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம். உள் தலையீட்டு நோக்கத்துடன் வரும் இந்த அமைப்பினை அனுமதிக்கக் கூடாது. நம் நாட்டின் உள்விவகாரங்களில் இத்தகைய தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

[5] சர்ச்சுகளுக்காகவும், கிறிஸ்தவ குழுக்களுக்காகவும் மிகப் பெரிய அளவில் நன்கொடைப் பணம் “சேவைப் பணிகளுக்காக” என்ற பெயரில் இந்த தேசத்துக்குள் வந்து கொண்டிருக்கிறது என்பதனை நாங்கள் அறிவோம். இந்தப் பணம் சுகாதாரம், கல்வி முதலிய சமூக நலப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப் பட வேண்டும்; மதமாற்றங்களுக்காகச் செலவிடப் படக் கூடாது. சேவை நிறுவனத்தை எந்த மதத்தினர் நடத்துகின்றனர் என்று பாராமல், சேவை செய்யும் அனைத்து அமைப்புகளுக்கும் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப் படவேண்டும் என்று இந்த உரையாடல் கூட்டத்தில் முன்மொழிகிறோம். ஒரு பொது நிதியை உருவாக்கி, இந்தப் பணத்தைப் பகிர்ந்தளித்து, அதன் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டியும் நிறுவப் படவேண்டும்.

[6] கிறிஸ்தவ மிஷநரிகள் இந்துக்களை மதமாற்றுவது எளிதாகி வருவது போலத் தோன்றுகிறது. அதனால், அனைத்து இந்து அமைப்புகளும், சங்கங்களும் ஒன்றிணைந்து இந்துக்களிடையே புரிதலை உருவாக்கவும், மதமாற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும் பணியாற்ற வேண்டும்.

[7] இந்து தர்மம் இயல்பாகவே பன்முகத் தன்மை கொண்டது. அதனால் பல்வேறு வகையான மார்க்கங்களும், மரபுகளும் இந்த மண்ணில் ஒன்றையொன்று அழிக்கவெண்டும் என்ற தேவை இல்லாமல் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்து தர்மம் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் மதங்களையும் செழித்து வளரச் செய்திருக்கின்றது; அதுவே தர்மத்தின் வழி. மற்ற நாடுகளிலிருந்து இந்த மண்ணிற்குள் வந்திருக்கும் மற்ற மதங்களும் இந்த முக்கியமான இலக்கணத்தை மதிக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் தேசியத்தனமையைக் குலைக்கவோ, அழிக்கவோ கூடும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்து தர்மமும் சரி, இந்து மக்களும் சரி, இந்தத் தேசத்தைத் தங்கள் இல்லமாகக் கொள்ள கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும், பார்சிக்களையும், யூதர்களையும் வரவேற்கின்றனர். அதே நேரத்தில், இந்த மதங்கள் எங்கள் மதத்தை அழிக்கவோ அல்லது மத உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்து மதங்களும் பரஸ்பரம் மரியாதையுடனும், சமநிலையுடனும், நம்மை ஒரு தேசமாகப் பிணைக்கும் தேசிய உணர்வுடன் வாழவேண்டும் என்பதையே நாங்கள் விழைகிறோம். இந்த தேசிய உணர்வே முதன்மையானதாக இருக்கவேண்டும்.
[8] கிறிஸ்தவ சர்ச்சுகளும், அமைப்புகளும் மதம் மாறுபவர்களின் நோய்களையும், உடல் பிரசினைகளையும் தீர்த்து வைப்போம் என்று வெளிப்படையாகப் பிரசாரங்கள் செய்வதனை நாங்கள் அறிவோம். இது 1954-ஆம் வருடத்திய இந்திய மருந்துகள் சட்டப் படி (DRUGS AND MAGIC REMEDIES ACT) குற்றமாகும். இந்தக் குற்றம் புரிபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
[9] அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், மத்தியக் கிழக்கு தேசங்கள், இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில், அந்த நாடுகளின் அரசுகளும், மரியாதைக்குரிய மதநிறுவனங்களும் இணைந்து, தங்கள் தேசிய கலாசாரத்தின் ஊற்றுமுகமாக விளங்கக் கூடிய மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியுடன் கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தியாவில் மட்டும் தான், மதம்-தவிர்த்த, ஆன்மிகம்-தவிர்த்த ”மதச்சார்பின்மை” என்று பெயரிடப்பட்ட ஒரு ஜந்துவை, அதிகாரபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் வளர்ப்போம் என்று நாம் தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

மதச்சார்பின்மை என்பது நிர்வாகத்திற்கான ஒரு முக்கியத்தேவை தான். ஆனால் அதுவே இந்த தேசத்தின் ஆன்மா ஆகிவிட முடியாது. இந்த தேசத்தின் ஆன்மா இந்து தர்மத்திலும், ஆன்மிகத்திலும் தான் இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து, இந்த தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாப்போம் என்பதில் உறுதியுடன் நிற்குமாறு நமது அரசையும், அனைத்து முக்கிய மத நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

[10] இலங்கையின் புத்த மகாசங்கமும், புத்த அமைப்புகளும் அந்த நாட்டின் அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

[11] கலாசார உள்ளீடு (inculturation) என்ற மதப்பிரசார யுக்தியின் கீழ், வேதம், ஆகமம், ரிஷி, ஆசிரமம், ஓம் போன்ற பற்பல இந்து மத கலைச் சொற்களையும், வாசகங்களையும், சின்னங்களையும் இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும். எங்கள் சமூகத்தில் தளர்ந்த நிலையில் இருக்கும் சில மக்களை மதமாற்றத்திற்காகக் குறிவைத்து அவர்களை ஏமாற்றும் செயல் தான் இது என்பதில் ஐயமில்லை. மேலும், இது இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிப்பதாகவும், காயப் படுத்துவதாகவும் இருக்கிறது. சில சர்ச்சுகள் வேதங்கள், உபநிஷதங்கள், கீதை, புராணங்கள் இவற்றிலுள்ள பகுதிகளைத் திருடிச் சேர்த்து ”புதிய இந்திய பைபிள்” என்று ஒரு பைபிளை உருவாக்கியிருப்பதாகவும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த பைபிள் பிரதிகள் பொதுச் சுற்றில் இருந்தால் அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இந்திய அரசு இந்தப் பிரசினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard