New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராமணர்கள் தமிழர்களா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பிராமணர்கள் தமிழர்களா?
Permalink  
 


 எங்கே நான் சென்றாலும், எந்த வலைப்பதிவைப் பார்த்தாலும், எந்த பின்னூட்டத்தைப் படித்தாலும், அனைவரும் எழுப்பும் ஒரு வினா இது. இதற்கு ஆதாரமாக அவர்கள் மேற்கோள் காட்டுவது ஆரிய படையெடுப்பும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளும். இந்த ஆரியன், திராவிடன் என்ற பாகுபாடுகள் எப்போது தொடங்கின? சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவையெல்லாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பின்பே தொடங்கின என்பது விளங்குகிறது. அதற்கு ஏற்றாற்போல் ஆராய்ச்சி முடிவுகள் என்று சொல்லப் பட்ட அனைத்தும் ஆரியர்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இந்தியாவினும் நுழைந்து தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தி உள்ளனர் என்பதையே வலியுறுத்தின. ஆங்கிலேயர்கள் எதை சொன்னாலும் நம்பிய நம் மக்களுக்கு ஆதாரம் என்று அவர்கள் சிலவற்றை காட்டிய பின் இதுவே வேதம் என்று ஆனது. மதத்தின் பெயரால் இந்து, முஸ்லீம் என்று பிரித்திருந்த பிரிட்டிஷாருக்கு, இந்துக்களைப் பிரிக்க இது பெரிதும் உதவியது.

முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி பின்பு ஆரியர் என்றால் பிராமணர்கள் என்றே நிலைபெற்றுள்ளது. ஆங்கிலேயர்கள் முதலில் ஆரிய பிரவேசம் பற்றி சொன்ன போது நம்பிய நம் மக்கள், இப்போது அது கட்டுக்கதை என்று நிரூபிக்கப் பட்டதை நம்ப மறுப்பது ஏன்? ஏனெனில் இந்த உண்மைகள் மக்களை சரியாக சென்றடையவில்லை. ஆரிய, திராவிட கட்டுக்கதைகளை தங்கள் சுய நலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கழகங்கள் இப்போது நிரூபிக்கப் பட்டுள்ள எதையும் ஏற்கவில்லை. மேலும் இவ்வுண்மைகள் மக்களை சென்றடையாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் இட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள், தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? எது உண்மை, எது பொய் என்று ஆராய்ந்து அறிவது அன்றோ பகுத்தறிவு. 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பொய்யை நம்புவோம், இப்போது நிரூபிக்கப்படும் உண்மையை நம்ப மாட்டோம் என்று சொல்வது பகுத்தறிவா இல்லை மூட நம்பிக்கையா?

சரி. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நமது வழக்கில் இந்த சொல் இல்லையா? இருந்திருக்கிறது. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் ‘மரியாதைக்குரிய’ என்ற பொருளுடன் புழக்கத்தில் இருந்திருக்கிறதே தவிர அது ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ‘திராவிட’ என்பதும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லே தவிர ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல் அல்ல. திராவிட நாடு என்பது இன்றைய தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கிய (தென்னிந்திய) பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே திராவிடர்கள் என்றால் தமிழர்கள் என்று ஊளையிடுவது நம் கழகக் கண்மணிகளின் அறியாமையையே காட்டுகிறது.

http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html

மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று முழுதாக படித்துப் பார்க்கவும். ஆரிய படையெடுப்பு என்று நம்பப்படும் அனைத்தும் முட்டாள்தனமான கட்டுக்கதைகள் என்பது அப்பட்டமாக விளங்கும். இன்றைய கழகங்கள் இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். காலங்காலமாய் கூறப்பட்டு, கழகத்தின் பெயரிலும் அடிப்படை கொள்கைகளிலும் இடம்பெற்ற ஒரு விஷயம் பொய்யாவது, பொய் என்று ஏற்றுக்கொள்ளப்படுவது கழகத்தின் அடிப்படையை, ஆணி வேரை அசைத்துப் பார்த்து விடும். இந்து மதம் முழுவதும் உருவ வழிபாடும், வேத பாராயணங்களும் நிறைந்துள்ளன. வேதங்களில் முதன்மையானதும், தொன்மையானதுமான ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, அதற்கு முன்னரே இந்து மதம் இருந்திருக்கிறது. இந்த வழிமுறைகளும் இருந்திருக்கின்றன. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழை விடவும் பழைமையான இந்த வேதங்களால தமிழ் கலாசாரம் பாதிப்படைந்து விட்டது எனும் இவர்களது குற்றச்சாட்டை நினைத்து விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாது.

சரி. ஆரியர்கள் தங்கள் கலாச்சாரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கே விதைத்து விட்டனர், அவற்றை அகற்ற வேண்டும் என்று அலறும் நண்பர்களே, அதே போல் இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் புகுத்திய கலாச்சாரங்களையும் அகற்ற வேண்டும் என்று வாதிடுவீர்களா? காலத்தார் அழியாத எத்தனையோ அருமையான ஹிந்து படைப்புகளை தகர்த்தேறிந்தது மொகலாயர்கள் தானே? வெள்ளை புடவையிலும், வானம் பார்த்து ஏய்ந்த பூமி போல் குங்குமமற்ற நெற்றியுடனும், பெண்ணுக்கழகாம் பொன் சற்றும் இல்லாத ஏழைக்கோலத்திலும்; விதவைகள் போல் மதத்தின் பெயரால் இந்தியப்பெண்களை திரிய விட்டது கிறிஸ்தவ மதம் தானே? பகுத்தறிவு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்றால் இவற்றையும் கண்டிக்க வேண்டாமா நமது அருமை கழகங்கள்? இதனை திரிபுவாதம் என்று சொல்லி திசை திருப்ப முயல வேண்டாம். இந்துக்களுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக நீங்கள் போடும் அனைத்துக்கூச்சல்களும் உங்கள் நடுநிலையற்ற தன்மையையே பறைசாற்றுகின்றன.

—எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே— 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முந்தைய பாகத்தில், பிராமணர்கள் தமிழர்களா, இல்லையா என்பதைப் பற்றியும், ஆரிய படையெடுப்பு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் அலசினோம். இந்த ஆதாரம் போதாது என்கின்றனர் சிலர். அவர்களிடம் ஆரிய படையெடுப்பை உறுதி செய்யும் ஆதாரங்களை நீங்கள் கொண்டு வாருங்கள் என்றால் பேச்சு, மூச்சைக் காணோம். எனது மறுமொழியில் சொன்னது போல், முன்பு ப்ளுட்டோ ஒரு கிரகம் என்று விஞ்ஞானிகள் சொன்ன போதும் நம்பினோம், இப்போது இல்லையென்று சொல்லும்போதும் நம்புகிறோம். ஆனால் இந்த ஆரியர்கள் விஷயத்தில் மட்டும் பழைய ஆதாரங்களை மட்டும்தான் நம்புவோம், இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மைகளை நம்ப மாட்டோம் என அடம்பிடிப்பது நியாய வாதமா, இல்லை துவேஷ வாதமா?

சரி. அப்படியே இவர்கள் சொல்வது போல் முதல் ஆராய்ச்சி முடிவுகளே உண்மை, இப்போது சொல்லப்பட்ட அனைத்தும் புரட்டு என்றே வைத்துக் கொண்டாலும், பிராமணர்கள் தமிழர்களே. ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தைக்கே அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் போது, பல்லாயிரங்காலமாக தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்களை தமிழர்கள் அல்லர் என்று சொல்வது விந்தையிலும் விந்தை.  மற்றவர்களுக்கு தமிழ்ப் பற்றில் பிராமணர்கள் எவ்விதமும் குறைந்தவர்கள் அல்லர். தமிழுக்கு பிராமணர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள் அளப்பரியன. அருந்தமிழ்த் தொண்டாற்றிய அந்தணர்களைப் பற்றி எழுத ஒரு WORDPRESS போதாது. பேய்மழையில் ஒரு துளி போல, சில இங்கே.

 சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர் என நான்கு முக்கிய சைவ பெரியவர்களில் மூவர் அந்தணர்கள். மாபெரும் புலவர் கபிலர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், காளமேகப் புலவர் முதல் பாரதி, கல்கி, சுஜாதா வரை அனைவரும் பிராமணர்களே. உ.வே.சா இல்லையெனில் இன்று நாம் போற்றக் கூடிய பல அறிய தமிழ் நூல்கள் நமக்கு கிடைத்து இருக்குமா? தன் சொந்த செலவில், ஊர் ஊராய்ச் சென்று ஓலைச் சுவடிகளை சேகரித்து திருத்தமாகப் பதித்து வெளியிட்டு ‘அழியாது காத்த அண்ணல். தமிழ் காத்த தெய்வம். தண்டமிழ் இலக்கியம் வழங்கிய வள்ளல்’ என்று பலராலும் போற்றப் பட்டவர் உ.வே. சாமிநாத ஐயர்.

பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப்பாலையும் இயற்றிய உருத்திரங்கண்ணனார். திருவிளையாடல் படைத்த பெரும்பற்றப் புலியூர் நம்பி. ‘நாடகவியல்’ என நாடகங்களுக்கு தமிழில் முதலில் இலக்கணம் வகுத்த சூரிய நாராயண சாஸ்திரியார். இவ்வளவு ஏன்? தமிழுக்கே இலக்கணம் எழுதிய அகத்திய மாமுனியே ஒரு அந்தணரே.

இவர்கள் மட்டுமல்ல, எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல், விளம்பரம் தேடாமல், தமிழைக் காட்டி பிழைப்பு நடத்த முயலாமல், பெரும் தமிழ்த்தொண்டு ஆற்றிய பிராமணர்கள் ஆயிரக்கணக்கானோர் இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர், இருப்பர். இவையெல்லாம் உண்மை இல்லை, என்று யாராலாவது மறுக்க இயலுமா இல்லை மறைக்கதான் இயலுமா?
தமிழ், தமிழ் என்று பேசி ஓட்டை வாங்கி விட்டு தன் வீட்டு பிள்ளைகளை இந்தி படிக்க வைக்கும் தலைவர்கள் தமிழர்களாம்!  ஆனால் அமெரிக்காவில் இருந்தாலும் தன் மக்கள் தாய்மொழியாம் தமிழைக் கற்க வேண்டும் என்று ஆர்வம் காட்டும் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையாம்!

தமிழை காட்டு மிராண்டிகளின் மொழி என்று ‘வர்ணித்த’ ஈ. வே. ராமசாமி இவர்களுக்கெல்லாம் தமிழ்ப் ‘பெரியார்’. ஆனால் அந்த தமிழை பேசும் பிராமணர்கள் எதிரிகள்.

வீட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது என எந்த பாஷை பேசிக்கொண்டு இருந்தாலும், கழகங்களில் இருப்பதால் அவர்கள் தமிழர்களாம்! அனைவரிடமும் தமிழில் பேசி, இறைவனை சமஸ்கிருதத்தில் வணங்கி, தன் சுலோகங்களின் முடிவில் தன் கோரிக்கைகளை தமிழிலேயே வைக்கும் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையாம். இவையெல்லாம் வெறும் துவேஷங்களேயன்றி வேறென்ன?

அஹமன்ருதாத் சத்ய மு பைமி (யஜுர்)
பொருள்: நான் பொய்யை உதறி விட்டு உண்மையை ஏற்பேனாக
——-  தொடரும், அகத்தெளிவு பிறக்கும் வரை —–

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Lakshminarayanan Says: 

ஏகலைவனுக்கு,

மீண்டும் நீங்கள் தடம் மாறி செல்கிறீர்கள். இங்கு நான் எழுப்பியுள்ள கேள்வி பிராமணர்கள் தமிழர்களா இல்லையா என்பதே. பிராமணர்கள் மாமா வேலை பார்த்தார்களா இல்லை நீங்கள் பார்த்தீர்களா என்பதல்ல. நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமாக உங்கள் மறுமொழியில் ஒரு வார்த்தை கூட இல்லை. நீங்கள் எங்களை திரிபுவாதம் செய்கிறோம் என்கின்றீர்கள், என்ன கொடுமை இது?

மன்னர்கள் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் பிராமணர்கள் உயர்பதவி வகித்தார்கள் என்றால் அவர்கள் மெத்தப் படித்திருந்தார்கள். அதனால் பதவியும், புகழும் கிடைத்தன. இதில் பிராமணர்களின் ஆக்கிரமிப்பு எங்கிருந்து வந்தது? மற்றவர்கள் கல்வி கற்கக் கூடாது என்று பிராமணர்கள் தடுக்கவில்லை. மற்றவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலில் நாட்டம் இருந்தது, பல்லாண்டு காலம் படித்து வரும் வருமானத்தை விட்ட, அன்றன்று கிடைக்கும் வருமானமே பெரிது என்று கிடைத்த வேலைகளை செய்து வந்தனர். இதில் பிராமணர்களின் குற்றம் என்ன இருக்கிறது? உண்மையில் ஒரு புறம் படித்த பிராமணர்களை தனது அலுவல்களுக்காக பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் அவர்களின் மேல் துவேஷைப் பரப்பிய பிரிட்டிஷார் பச்சொந்தியை விடவும் கீழ்த்தரமானவர்கள்.

அடுத்த வேலை கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும், ஒரு பிராமணன் தன் மகனை வேத பாட சாலைக்கோ அல்லது பள்ளிக்கோ அல்லவா அனுப்புகிறான். அந்த வைராக்கியம் உங்களுக்கு இல்லையென்றால் அதற்கு பிராமணர்கள் பொறுப்பா? உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். வேலை வாங்கிக் கொடுங்கள். அதை நீங்கள் செய்யத் தவறினால் அதற்கு பிராமணர்களை குற்றம் கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

ஆரிய மாயையினால் தமிழ் கலாசாரம் சிதைந்து விட்டது என்று பலரும் கூச்சல் இட்டதாலேயே நான் மொகலாய படையெடுப்பு மற்றும் கிருத்துவ திணிப்பு பற்றி சொல்ல நேர்ந்தது. வேதங்கள் சொல்லும் வழி முறை தமிழ் கலாச்சாரம் அல்ல என்றால், லுங்கி கட்டுவதும், பேண்ட் போட்டுக் கொள்வதும், பர்தா போட்டுக் கொள்வதும் தமிழ் கலாச்சாரமா? இங்கு கேள்வி கலாச்சாரத்தைப் பற்றியே தவிர மதத்தைப் பற்றி அல்ல.

சரி. இப்போது அனைத்து சலுகைகளும் கொடுக்கப் பட்ட பின் அதையாவது முழுமையாக பயன்படுத்துகிறீர்களா? இன்றும் 90 சதவீத இட ஒதுக்கீடு பணம் படைத்தவர்களால் தவறாக உபயோகப் படுத்தப் படுகிறதே தவிர, ஏழை மக்களை சென்றடையவில்லை. ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்ய விரும்பினால், சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை மக்களை, சாதி வேறுபாடின்றி படிக்க வையுங்கள். அதை விட்டு, பிராமணனை தூற்றித் திரிவதால், துவேசத்தை உருவாக்குவதைத் தவிர வேறொன்றும் பயனில்லை.

பி.கு: அனைத்து வேதங்களையும், மத வழிபாடுகளையும் தூற்றி விட்டு, நீங்கள் ‘ஹிந்து மதத்தில் பிறந்தேன்’ என்று சொல்லுவதுதான் மிகப்பெரிய நகைச்சுவையிலும் நகைச்சுவை. மனு ஸ்மிருதி பற்றி விளக்கமாக ஒரு பதிவில் உரைக்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஐயா,

ஆரியம்-திராவிடம் என்பது ஒரு கற்பனை.  இது இன்று மேலைநாட்டு அறிஞர்களாலேயே முழுதுமாக நிராகரிக்கப்பட்டு விட்டது.  அது குறித்து புரிந்துகொள்ளும் விவரமும்,  நேர்மையும் இல்லாத சில வெத்துவேட்டு ஈனப்பிறவிகள் தங்கள் காழ்ப்பு உணர்வுகளை பின்னூட்டங்களில் காட்டி தங்கள் தரத்தை வெளிக்காட்டுகிறார்கள்.  இவர்களை ஒதுக்கிவிட்டு மேலே செல்லுங்கள்.  இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

ஆரியர் படையெடுப்பு குறித்த எந்த ஒரு கதையும் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லையே!   அப்படியென்றால், திராவிடர்களை அடிமைப்படுத்தியவர்களோ,  அடிமைப்பட்டவர்களோ இதை ஏன் மறந்து போனார்கள்.

இப்படி ஆரியர் படையெடுப்பு நடந்தது பஞ்சாப் முதலிய வட மாநிலங்களிலாம்.  அப்படி என்றால் திராவிட நாகரீக சுவடுகள் அங்கு இல்லையே,  ஏன்?  அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனவா?

ஆரியர்கள்தாம் குதிரையை அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னது தப்பு என்று கர்நாடகா மற்றும் மகாராட்டத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிகள் காட்டி விட்டன.   இதையெல்லாம் இந்த மூடர்கள் அறிவார் இல்லை.

ஆரியர்கள் 5000 ஆண்டுக்கு முன் வந்து அடிமைப்படுத்திவிட்டார்களாம்.  5000 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த கூறு கெட்ட ஒரு இனமா திராவிட இனம்?  இவர்கள் இப்படிச்சொல்லி தங்கள் மூதாதையர்களை அவமானப்படுத்துகிறார்கள்!

சாதி சாதி என்று வெறி பிடித்து அலைவது இந்த ஆதிக்க சாதி திராவிடர்கள்தாம்.  கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றை பார்த்தால் எப்போதுமே கல்வியிலும்,  வியாபாரத்திலும் இந்த சாதிகளே ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்துக்கு முற்பட்ட கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை இந்த ஆதிக்க சாதி திராவிட இனத்தவர்கள்தாம் என்று வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன.   கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த அந்தணர் குலம் ஆங்கிலேயர்கள் வரவால் அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தயவு பெற்று பல பதவிகள் பெற்றார்கள்.   அப்போதெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடாத்த இந்த வெட்கங்கெட்ட பகுத்தறிவாளர்கள், மாறாக ஆங்கிலேய ஆட்சிக்கு அடிவருடி அடிமை சாசனம் தொடர வேண்டும் என்று நினைத்தார்கள்.  இவர்களா சுயமரியாதைக்காரர்கள்!

தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை.   தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது.  அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.

ஏனென்றால்,  தீண்டாமைக்கு முன்னோடிகள் கிருத்துவ மிஷனரிகளே.   கடந்த 50 வருடங்கள் முன் வரை கருப்பு அடிமைகளை வைத்திருந்து அந்த அடிமைத்தளை போக்கூடாது என்று போராடிய கிருத்துவ கூட்டம் இந்து மதத்தை குறை சொல்வதா? வெட்க்க்கேடு! 

எந்த ஒரு இந்து கடவுளும், வேதமும் தீண்டாமை சொன்னதில்லை.  மனு தர்மம் என்ற ஒரு புனைப்பு சாத்திரம் 800 ஆண்டுகளுக்கும் மேலாக புனைத்து எழுதப்பட்டதாக வரலாறு.  அந்த சாத்திரம் எப்போதும் இந்து கலாசாரத்தில் பின்பற்றப்படவில்லை.  மனு தரும வழியாக ஆட்சி புரியப்பட்டதாக எந்த ஒரு சரித்திரமும் இல்லை.  அப்படி இந்து மதம் புறக்கணித்த ஒரு ஒவ்வாத சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் இந்துமத அழிப்புக்கு பயன்படுத்தினார்கள்.  அந்த மனுதருமம் சொல்லும் பல நல்ல விஷயங்களை இவர்கள் என்றுமே பின்பற்றுவதில்லை. 

 கிருத்துவம் எப்போதும் வர்க்க சாதி அடக்குமுறையை ஆதரித்தே வந்துள்ளது.  ஏழு அடுக்கு சாதி அமைப்பு கொண்டதாக அவர்கள் மிஷனரிகள் கடந்த 50 ஆண்டுவரை போராடித்திரிந்தார்கள்.   சரித்திரம் தெரியாமல் இந்த தமிழர்கள் திராவிடம், பார்ப்பான், இந்துமதம் என்று சொல்லித்திரிகிறார்கள்.

இந்து மதம் தன் நாட்டார் வழிபாட்டுகளை எப்போதும் காத்தே வந்துள்ளது.  ஆனால், பிற மதங்கள் – இஸ்லாம், கிருத்துவம் – எப்போதும் தங்களின் ஆதிகால இறை வழிபாடுகளை அடையாளம் இல்லாமல் அழித்துவிடுகிறது.  பார்ப்பனீயம் என்று கத்தும் இந்த வெத்துவேட்டுகள் இப்படி கலாசார கொலை எழுப்பும் மற்ற ஆப்ரகாமிய மதங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

 இதே கரு.நா.நிதி பால் தினகரன் மறைவுக்கு மலர் வளையம் வைக்கிறார்.  அவர் மகன் ஸ்டாலின் ஆலேலூயா கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.  முடவன் நடக்கிறான், குருடன் பார்க்கிறான் என்று மூடநம்பிக்கையை வளர்க்கும் இந்த கிருத்துவ கூப்பாடுகளில் பகுத்தறிவு இருக்கிறதா, இல்லை கடமையைச்செய், பலன் தானே வரும் என்ற இந்து மதத்தில் பகுத்தறிவு இருக்கிறதா!  இவர் மகள் கனிமொழி அவர்களோ, பொட்டை அழித்துவிட்டு முஸ்லிமாக்களின் கூட்டத்தில் கஞ்சி சாப்பிடுகிறார்.

ஆனால், இவர்கள் 5000 ஆண்டுக்கு முன்னால் கைபர் இடுக்கில் வந்தான் பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.   என்ன ஒரு அபத்தம்!

நன்றி

ஜயராமன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  1. செந்தழல் ரவி Says:

    பிராமணர்கள் தமிழர்கள் அல்ல…

    அய்ரோப்பியன் தமிழன் அல்ல…அவன் வெள்ளையா இருக்கான்…
    ஆப்ரிக்கன் தமிழன் அல்ல…அவன் ரொம்ப கருப்பா இருக்கான்…முடியெல்லாம் சுருட்டை சுருட்டையா…
    சீனாக்காரன் தமிழன் அல்ல..அவன் குட்டையா மூக்கு சப்பையா இருக்கான்…
    பிராமணன் தமிழன் அல்ல…அவனும் வெள்ளையா இருக்கான்…அவன் ரஷ்யா ஓல்கா நதிக்கரையில் இருந்து நடந்துவந்தவன்..
    தமிழன் கருப்பாவோ, மாநிறமாவோ இருப்பான்…

    Race என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருக்கிறீங்க இல்லையா ? Difference Race will have different body structure and color.

  2. Lakshminarayanan Says:

    செந்தழல் ரவி அவர்களே, உங்களின் விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் :)

    பிராமணர்களில் கருப்பான ஆசாமிகளைத் தாங்கள் பார்த்தே இல்லை போலும். அதே போல் மற்ற பிரிவினரிலும் வெள்ளையாக உள்ளவர்களையும் பார்த்ததில்லை போலும். வெள்ளையா இருந்தா உடனே ரஷ்யாவா? தவறு என்று நிரூபணம் செய்யப்பட்ட ஆரியர்-திராவிடர் கருத்தை இன்னும் எத்தனை நாள்தான் சுமக்கப் போகிறீர்கள்?

    Race என்ற சொல்லை யாம் அறிவோம். People from different race may (will) have different body structure and color என்பதையும் யாம் அறிவோம். தாங்கள் திடீர்மாற்றம் என்று சொல்லப்படும் Mutation பற்றி சிறு ஆராய்ச்சி செய்வது நல்லது. ஒரே இனத்தில் வெவ்வேறு குணாதியங்களுடன் பிறக்கும் உயிர்களைப் பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. நியாண்டர்தால் என்று சொல்லப்பட்ட கருப்பு ஆதி மனிதனிலிருந்து வெள்ளை மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதையும் விளக்குகிறது. புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்குமா என்பது சந்தேகமே!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard