முறைகேடுகளை தடுக்க, மீண்டும் "இ பிளானிங்' திட்டத்தை செப்.,க்குள் கொண்டு வர, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முயற்சி எடுத்தார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சென்னை நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
புரோக்கர்கள் குறுக்கீடு, மண்டலங்களில் முறைகேடான அனுமதி, கூடுதல் கட்டணம் வசூல்
உள்ளிட்ட தொல்லையால், விண்ணப்பிக்கும் மக்கள், பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கவனிக்க தவறினால், அலைக்கழிப்பும், மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, வெப்சைட்டில், விண்ணப்பிக்கும், இ பிளானிங் திட்டத்தை, 2013 ஜன.,1ல் மாநகராட்சி செயல்படுத்துகிறது. இதன்மூலம், விண்ணப்பித்த ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்கும்.
சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட வரைபடம், மாநகராட்சி வெப்சைட்யில் அப் லோடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரிடம் இருந்து அனுமதி கேட்டு வரும் வரைபடங்கள், அங்கீகாரம் பெற்ற வரைபட வரைவாளர் மூலம், கம்யூட்டர் வழியாக சரிபார்க்கப்படும். உறுதி செய்த பின், செலுத்திய வேண்டிய கட்டணம் குறித்து, விண்ணப்பதாரருக்கு இ மெயில் அனுப்பப்படும்.
அதன் பின், விண்ணப்ப கட்டணம், கட்டட உரிமை ஆணை கட்டணம், கட்டட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், திட்டக்குழுமம் அபிவிருத்தி கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவு கட்டணம் ரூ.100 ஆகியவற்றை, மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற வேண்டும்.
அந்த ரசீதுடன், புளூ பிரின்ட் நகல் ஐந்து, பத்திரம் நகல், ரூ.20 ஸ்டாம்பு பேப்பரில் உறுதிமொழிப் படிவம், இடத்தின் நான்கு புறமும் தெரியும் வகையில் உரிமையாளர் நிற்கும் போட்டோ, உரிமையாளரின் பாஸ்போர்ட் போட்டோ இரண்டு ஆகியவற்றை இணைத்து, கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்காக, அவரது அலுவலகம் முன், விண்ணப்ப சேகரிப்பு பெட்டி க்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை, மைய நகரமைப்பு பிரிவினர் சரிபார்த்து, ஆவணங்கள் சரியாக இருப்பின், அனுமதி உத்தரவு வழங்கப்படும்.
வழக்கம் போல 'ஓபனிங்' நன்றாக தான் இருந்தது. ஆனால் 'பினிசிங்' படுமோசமாக உள்ளது. 'இ பிளானிங்' இல்லாமல் போய்விட்டது. மாதக்கணக்கில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். மீண்டும் புரோக்கர்கள் கட்டுப்பாட்டிற்கு கட்டட அனுமதி விவகாரங்கள் சென்றுள்ளன. இத்திட்டத்திற்கு உருவாக்கிய சிறப்பு அறை எந்நேரமும் பூட்டிக்கிடப்பதே அதற்கு சான்று. மோசமான இந்த முடிவால் முந்தைய ஆட்சியில் இருந்த விதிமீறல் அனுமதிகள், மீண்டும் தலைதுாக்கும்.