New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ப்ரீமேசனரி (FREE MASONARY)-சாத்தானிய சமுதாயம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ப்ரீமேசனரி (FREE MASONARY)-சாத்தானிய சமுதாயம்
Permalink  
 



ப்ரீமேசனரி ( FREE MASONARY ) - சாத்தானிய சமுதாயம்

 

- பயங்க

compas9.gif ப்ரீமேசனரி ( FREE MASONARY ) பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு கோணங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த பயங்கர இரகசிய சமுதாயத்தைப் பற்றிய பல்வேறு விடயங்கள் இதனைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராயப்படும்.


KNIGHT TEMPLARS  முதல் பண்டைய எகிப்து வரை. 
ப்ரீமேசனரி பற்றி எழுதும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய இந்த இரகசிய சமுதாயத்தின் ஆரம்பம் சிலுவை யுத்தம் வரை செல்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டாலும் இந்த இரகசிய சமுதாயத்தின் வேர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் வரை செல்கிறது.இது முதன்முதலில் இங்கிலாந்திலே அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலுவை யுத்தம் என்ற பேரில் பலஸ்தீனை மீட்க கிருஸ்தவர்கள் புறப்பட்டாலும் அதற்கு முக்கியமான காரணம் பொருளாதார ஆதாயமேயாகும்.ஏனெனில் சிலுவை யுத்தம் ஆரம்பிக்கும் போது ஐரோப்பா வறுமையிலும் தும்பத்திலும் புரண்டு கொண்டிருக்க இஸ்லாமிய மத்திய கிழக்கு அறிவிலும் செல்வத்திலும் செழித்து காணப்பட்டது என்பதே ஐரோப்பியர்களை இஸ்லாமிய உலகம் மீது வெகுவாக ஈர்க்க காரணமாக இருந்தது.

ஐரோப்பிய மன்னர்களின் இந்த பொருளாசையை பூர்த்தி செய்து கொள்ள அந்த மன்னர்கள் கிருஸ்தவ மதத்தின் பெயரில் சிலுவைப் போரில் குதித்தனர். ஐரோப்பிய மன்னர்களின் பொருளாசையை நிறைவு செய்து கொள்ள நடந்த போர்களில் சம்பந்தம் இல்லாமல் சிலுவைகள் பயன்பட்டன.

CouncilofClermont.jpg
council of clermont
   சிலுவை யுத்தத்தின் ஆரம்பகர்த்தா போப் ஏர்பன் II ஆவார்.கிருஸ்தவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த அமைதிவாதக் கோட்பாட்டை கைவிட்டு விட்டு 1095 இல் council of clermont இல் சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.சிலுவை யுத்தத்தின் வெளிப்படையான நோக்காமாக முன்வைக்கப்பட்டது முஸ்லிம்களின் கைகளிலிருந்து புனித பூமியை கைப்பற்றுவதேயாகும்.ஆனால் அதை தாண்டி பாரிய உள்நோக்கம் ஒன்று இருந்தது.இப்படி பிரகடனம் செய்யப்பட யுத்தத்துக்கு இரண்டு தொழில் முறை போர் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கில் சாதாரண மக்கள் சேர்த்துக் கொல்லப்பட்டனர்.

 
பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய போப் ஏர்பன் II இன் இந்த சிலுவை யுத்த பிரகடனத்துக்கு ஒரு காரணம் அவருக்கு போப் பதவி மேல் இருந்த ஆசையாகும் , இப்படி புனித பூமி கதையை மக்களிடம்ஸ் சொல்லி அவர் தனக்கு மக்களிடையே ஆதரவை திரட்டவே சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.இதன்மூலம் தனக்கு போட்டியாக உள்ள மற்ற பதியார்களை  மட்டம் தட்டப்பார்த்தார்.மேலும் ஐரோப்பிய அரசர்கள் இளவரசர்கள் உயர்குடியினர் என்போர் போப்பின் இந்த யுத்த பிரகடனத்தை சந்தோசமாக வரவேற்றனர்.இவர்கள் அனைவரினதும் நிலம் பிடிக்கும் நோக்கம் கிருஸ்தவ மதத்தின் பெயரில் யுத்தமாகா அரங்கேறியது.

 
University Of Illinois இன் பேராசிரியர் Donald Queller இன் கருத்துக்கு அமைய பிரெஞ்சு Knights களுக்கு அதிக நிலம் தேவைப்பட்டது,இத்தாலிய வியாபாரிகள் மத்திய கிழக்கு துறைமுகங்களில் தமது வர்த்தகத்தை விரிபுபடுத்த ஒரு தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தன,ஐரோப்பிய நாடுகளில் தாண்டவமாடிய வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாதாரண மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.இப்படி எல்லா காரணங்களும் இந்த யுத்தத்தை முன்னெடுக்கவே சார்பாக இருந்தது.சிலுவையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராசைக்கார யுத்தம் நடைபெற்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு மரணத்தை தழுவச் செய்தது.

emilesignol-thetakingofjerusalem.jpg
ஜெருசல முற்றுகையும் வீழ்ச்சியும்.

சிலுவை வீரர்களின் மிக நீண்ட கடினமான மற்றும் படுகொலைகள் கொள்ளைகள் நிறைந்த ரத்தவாடை எங்கும் அடித்த பயணத்தின் முடிவு 1099
புனித நகரான ஜெருசலத்தில் நிறைவு பெற்றது.ஐந்து வார முற்றுகையின் பின் ஜெருசலம் சிலுவை வீரர்களின் படைகளிடம் வீழ்ந்த்தது.சிலுவை வீரர்களிடம் வீழந்த புனித ஜெருசல நகரம் சின்னாபின்னமாகிப் போனது.அங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்தவத்துக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத முர்க்கக் குணமும் பொருளாசையும் நிறைந்த சிலுவை வீரர்களின் வாள்களுக்கு இரையானார்கள்.இவர்கள் புனித நகரை ஆக்கிரமித்து வெறும் இரண்டு நாட்களுக்குள் 40000 மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.இதன் பின்பு இந்த சிலுவை வீரர்கள் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்திலிருந்து Antioch வரை எல்லைகளைக் கொண்ட ஒரு லத்தீன் ராஜ்ஜியம் ஒன்றை அங்கு நிறுவினார்கள்.



THE KNIGHT TEMPLARS


vq5391x6templar.jpg
knights.jpg


The Templars அல்லது Soldiers Of Chirst அல்லது Soldiers Of Temple Of Solomon
இப்படி பல பெயர்கள் இவர்களுக்கு உள்ளன.ஆனால் பொதுவாக பாவிக்கப்படும் பெயர்தான் Knight Templars.இந்த இயக்கம் 1119 இல் அதாவது ஜெருசலம் சிலுவை வீரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்பே நிறுவப்பட்டது.இந்த இயக்கம் இரு பிரஞ்சு Knights களால் ஆரம்பிக்கப்பட்டது.Hugues De Payens மற்றும் Godfrey De Saint Omer என்ற இரு பிரெஞ்சு Knights களால் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் முதலில் சிறிய அளவிலேயே இயங்கியது,ஆனால் குறுகிய காலத்தில் அதன் வளர்ச்சி நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.இவர்கள் தங்களை "ஏழை வீரர்கள்" என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டனர்.ஆனால் நிலைமையோ வேறுவிதமாக  இருந்தது.இவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்,அதற்கு காரணமும் இருந்தது.ஜெருசல நகரம் சிலுவை வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன் பின் ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யாத்திரிகர்கள் புனித நகரை தரிசிக்க வந்தனர்.இந்த யாத்திரை முழுவதும் இந்த Knight Templars ஸின் கையிலேயே இருந்தது.இதனை கொண்டு அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கி.பி. 1162 இல் மன்னர் இரண்டாம் ஹென்றி ஜெருசலத்தில் உள்ள சிலுவை வீரர்களுக்கு உதவும் பொருட்டு மக்களிடம் வரி வசூலித்து வந்தார்.இப்படி வசூலிக்கப்பட்ட பெரும் தொகையானா பணம் Knight Templars ஊடாகவே வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.Knight Templars இதன்போது  நவீன வங்கி முறைக்கு அடித்தாளம் இட்டனர்.காசோலை மற்றும் கடன் முறைமைகள் இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.Micheil Bigent மற்றும் Richard Liegh என்ற இரு பிரித்தானிய வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய மத்தியகாலத்தில் முதலாளித்துவத்தை நிறுவியவர்கள் இந்த Knight Templars.கிருஸ்தவ மதத்தில் வட்டி தடை செய்யப்பட்டு இருந்தாலும் இவர்கள் தாங்களின் வங்கி முறைமைக்கு வட்டியை அடிப்படையக்கிக் கொண்டனர்.  

இஸ்லாமிய உலகின் தலைசிறந்த தளபதி சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால்  கி.பி.1187 இல் ஜெருசலம் சிலுவை வீரகளிடமிருந்து மீட்டப்பட்டது.Battle Of Hattin என்று அழைக்கப்படும் 1187 இல் நடந்த அந்தப் போரில் 17000 க்கும் மேற்பட்ட சிலுவை வீரர்கள் இறந்தனர்.இதில் Knight Templars க்கும் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இந்த போரில் Knight Templars க்கு கிடைத்த தோல்வி அவர்களுக்கு ஐரோப்பாவில் தமது ஆதிக்கத்தை பரப்ப ஒரு வாய்ப்பாக அமைந்தது.முதன்   முதலாக  இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நாடு பிரான்ஸ் ஆகும்,அதன் பின்பு ஒன்றன் பின்பு ஒன்றாக பல ஐரோப்பிய நாடுகள் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

Knight Templar ஸின் அரசியல்ரீதியாக எழுச்சி ஐரோப்பிய மன்னர்களின் உள்ளத்தில் ஒருவித அச்சத்தைக் கொடுத்தது.எழுச்சி பெற்றுவரும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க சில ஐரோப்பிய மன்னர்கள்  ஒரு  தருணம் வரும்வரை பார்த்திருந்ததனர்.ஜெருசலத்தில் Knight Templar ஸின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்கள் அங்கு இஸ்லாத்துக்கு முன் நிலவி வந்த விசித்திரமான போதனை முறைகளை கற்றுக்கொண்டுஅதனை வர்களின் நாளாந்த செயற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.இது கிருஸ்தவ மதத்துக்கு  முற்றாக  மாறு செய்வதாகவே இருந்தது.மேலும் இவர்கள் அந்த விசித்திரமான போதனை முறைகளுக்கு சடங்குகளும் ஏற்பாடு செய்துவந்ததாகவும் வதந்திகள் பரவின.

கடைசியாக, இப்படிப்பட்ட ஒரு தருணம் வரும்வரை காத்திருந்த ஐரோப்பிய மன்னர்கள் செயலில் இறங்கி அவர்களை அதிர்க்க ஆரம்பித்தனர்.1307 இல் பிரெஞ்சு மன்னர் பிலிப்பே லே பெல் Knight Templar சின் அங்கத்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.சிலர் இந்த கைதுகளிலிருந்து தப்பித்து கொண்டாலும் பலர் கைது செய்யப்பட்டனர்.மிக நீண்ட நாட்களாக தொடர்ந்த விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு Knight Templar இயக்க அங்கத்தவர்கள் குற்றவாளிகள்  என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் பல அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அதன் தலைவன் Jaques De Moley இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அடுத்த நிமிடமே பிரெஞ்சு அரச சபையாலும் தேவாலயத்தாலும் Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.அதோடு அவ்வியக்கம் இல்லாமல் போனது.

Knight Templar மீதான விசாரணையின் முடிவு அவ்வியக்கத்தின் முடிவாகவே அமைந்தது.அவ்வியக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது உண்மையில் மறைந்து அழிந்து விடவில்லை.1307 இல் இடம்பெற்ற திடீர் கைதுகளிலிருந்து தப்பிய சில Knight Templar இயக்க அங்கத்தினர்கள் தன இயக்கத்தின் செயற்பாடுகளை மிக ரகசியமாக செய்து வந்தனர்.பல்வேறு வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஐரோப்பிய நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.
பதினான்காம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆலயங்களின் அதிகாரத்தை மதிக்காத ஒரே ஒரு நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.இவ்வியக்கத்தினர் ஸ்கொட்டிஷ் மன்னன் ராபர்ட் தி ப்ரூஸ் (Robert The Bruce) இன் பாதுகாப்பின் கீழ் தம் கொள்கைகளை மீள்நிர்மானம் செய்து வந்தனர். 

Presentation1.jpg
King Robert The Bruce
Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது மரணிக்கவில்லை,அவர்களின் மாறுபட்ட தத்துவங்கள் கொள்கைகள் மற்றும் சடங்குகள் ப்ரீமேசநரி என்ற புனைப் பெயரில் தொடர்ந்தது நடந்துவந்தது.இன்றும் அது நடக்கிறது.இது மேற்கத்தைய பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard