தடுமாறும் ஜோடிகள்:
நோவாவும் அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.
"மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும் ஜாதி ஜாதியான மிருகங்களிலும் பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும் வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது..." (ஆதியாகமம் 6:19,20)
"பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்" (ஆதியாகமம் 7:2,3)
நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை?
அதிசயமாய் தோன்றிய சந்ததி:
இதுவரை குறிப்பிட்ட குளறுபடிகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடக்கூடிய மற்றொரு முரண்பாட்டைப் பாருங்கள்!
"கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மிதியானிகளுடன் போர் செய்து சகல ஆண்களையும், கொன்று போட்டார்கள். அவர்களைக் கொன்று போட்டதுமின்றி, மிதியானிகளின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கெம், சூர், குர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பெயோரின் குமாரனாகிய பிலேயாமையும் கொன்று போட்டார்கள். அன்றியும் இஸ்ரவேலர் மிதியானிகளின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைப்பிடித்து அவர்கள் ஆடு, மாடுகள் யாவையும் சகல பொருட்களையும் கொள்ளையிட்டு அவர்கள் குடியிருந்த சகல ஊர்களையும் அவர்கள் பாளையங்கள் அனைத்தையும் அக்கினியால் சுட்டெரித்துத் தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த ஆட்கள், மிருகங்கள் அனைத்தையும் சேர்த்துச் சிறைப் பிடித்தவர்களையும் தாங்கள் பிடித்தவைகளையும் கொள்ளையிட்டவைகளையும் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அக்கரையில் மோவோபின் சமவெளிகளில் பாளையத்திலிருந்த மோசேயினிடத்துக்கும் ஆசாரியனாகிய எலியாசாரியினடத்துக்கும் இஸ்ரவேல் சபையாரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். மோசேயும் ஆசாரியனாகிய எலியாசாரும் சபையின் பிரபுகள் எல்லோரும் அவர்களைச் சந்திக்கப் பாளையத்திற்கு வெளியே எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரத்துக்குத் தலைவரும் நூற்றுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களிடம்:
பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா? பெயோரின் சந்ததியில் பிலெயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேலர்கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள் தானே? அதனால் கர்த்தரின் சபையில் வாதையும் நேரிட்டதே. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்! ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண் குழந்தைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்!... என்று சொன்னார்." (எண்ணாகமம் 31:7-18)
மோசே எனும் தீர்க்கதரிசி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் கூடக் கொல்லுமாறு கூறியிருப்பாரா? அதுவும் கடவுளின் பெயரால் இதைக் கூறியிருப்பாரா? என்பதை நாம் இங்கே ஆட்சேபிக்கப் போவதில்லை.சிவிலியன்கள் மீது குண்டு மழை பொழியும் கொடிய ஃபாஸிஸ்டுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இது முன் மாதிரியாக இருந்து விட்டுப் போகட்டும்! முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.
இஸ்ரவேலர்கள் மிதியானியர் என்ற இனத்தவரின் அனைத்து ஆண்களையும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்று போட்டார்கள். அது மட்டுமின்றிப் புருஷ-சம்போகத்தை அறிந்த-(அந்தக் காலத்தில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்களோ-) அனைத்துப் பெண்களையும் கூட கொன்று விட்டனர். இதனால் கருவில் ஆண் குழந்தை இருந்து அது பிறகு பிறப்பதற்கும் இடமேயில்லை.
சுருங்கச் சொல்வது என்றால் மிதியானியர் என்ற இனமே பூண்டோடு ஒழிந்தது. அந்த இனத்தில் ஒரு மனிதன் கூடத் தோன்ற இனி வழியே இல்லை. இந்த விபரங்களை மேலே கண்ட வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்!
"பின்னும் இஸ்ரவேலர்கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்யவே கர்த்தர் அவர்களை ஏழு வருடம் மிதியானியர்கையில் ஒப்புக் கொடுத்தார்" (நியாயாதிபதிகள் 6:1)
"இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும் ஆடு, மாடு, கழுதைகளையாகிலும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மிருகங்களோடும் தங்கள் கூடாரங்களோடும் வெட்டுக் கிளிகளைப் போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்களின் ஒட்டகங்களும் எண்ணி முடியாததாயிருக்கும்." (நியாயாதிபதிகள் 6:5)
ஆண் வர்க்கமே அடியோடு அழிந்துவிட்ட ஒரு சமுதாயம் திரும்பவும் எப்படி உருவாக முடியும்? எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் எப்படிப் பெருக முடியும்? கர்த்தர் வானிலிருந்து மிதியானியர் எனும் இனத்தவரை இறக்கினாரா? அல்லது கொல்லப்பட்டவர்களுக்குத் திரும்பவும் உயிர்கொடுத்தாரா? கடுகளவு அறிவிருந்தால் கூட இதை நம்ப முடியாதே!
ஆண்கள் இல்லாவிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சமுதாயம் திரும்பவும் உருவாக முடியாது. இங்கே இருநூறு ஆண்டுகளில் இந்த விந்தை நடந்துள்ளது. மோசேவுக்குப் பின் யோசுவா, யூதா, ஒத்னியேல், ஏகூத் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளே வந்துள்ளனர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகளே. இந்த 200 ஆண்டுகளுக்குள் அவர்கள் எண்ண முடியாத அளவுக்கு வளர்வது என்றால் விந்து வங்கியும், செயற்கை முறைக் கருவூட்டலும் அன்றைக்கு இருந்தது என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா?