New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிளின் குளறுபடிகள் PJ


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பைபிளின் குளறுபடிகள் PJ
Permalink  
 


இன்றைய கிருத்தவம் யாரால் ?

 

 பவுல் கண்ட புது மார்க்கமே கிறிஸ்தவம்

"கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அதுபுது உயிர்கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையைஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச்சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.” - (சங்கீதம்19:7,8)

 

பழையஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும் பிரமாணங்களும்மனிதனுக்கு நேர்வழிகாட்டும் என்று போதிக்கின்றன. கர்த்தரின் இந்தப் போதனைக்கு முரணாகப்பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம்பெற்றுள்ளது.

 "முந்தின கட்டளை பலவீனமுள்ளதும்பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும்பூரணப்படுத்தியதில்லை.” -                    

 (எபிரேயர் 7:18)

 முந்தையநியாயப் பிரமாணத்தை இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும்.இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபபூரணமானதன்று;பலவீனமானதுஎன்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளைக் கிறித்தவ உலகம் நம்புவதுதான் வேதனைக்குரியது.

 கர்த்தரின்உத்தரவாதத்தைக் கிறித்தவ உலகம் நம்பப் போகிறதாஅதைத் தள்ளுபடி செய்யும் பவுல் போதனையைஏற்கப் போகிறதாஎதை நம்பினாலும் பைபிள் இறை வேதமாகஇருக்க முடியாது என்பது தெளிவு.

 இனி பழையஏற்பாட்டின் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் எவ்வாறு முரண்படுகின்றனஎன்பதைக் காண்போம்.

 1) புனித நாளின் கடமைகள்:

  இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப் பற்றியும் அந்நாட்களில் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசக்கியேல்எண்ணாகமம் என்ற இரண்டு ஆகமங்கள்கூறுகின்றன. இரண்டு ஆகமங்களிலும் இந்த விஷயத்தில் அனேக முரண்பாடுகள்!

 "முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாதஅப்பம் புசிக்கும் ஏழு நாள் உற்சவமாகிய 'பஸ்காஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதிதனக்காகவும் தேசத்து ஜனம் அனைத்துக்காகவும் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளையைப்படைக்க வேண்டும். உற்சவ நாட்கள் ஏழிலும் அவன் கர்த்தருக்குத் தகனப் பலியாக பழுதற்றஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் அந்த ஏழு நாளும் தினந்தோறும் படைக்கவேண்டும். பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தினந்தோறும் படைக்கவேண்டும். போஜனப் பலியாக ஒரு காளையோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு ஆட்டுக்கடாவோடேஒரு மரக்கால் மாவையும் ஒரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்க வேண்டும்.ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியில் ஆரம்பமாகிற உற்சவத்திலும் அவன் அது போலவே ஏழுநாளும் பாவ நிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் போஜனப் பலிகளையும் எண்ணெயையும்படைக்க வேண்டும்." - (எசக்கியேல் 45:21-25)

 

பழுதில்லாதஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாக செலுத்த வேண்டும் என்றுஇங்கே கூறப்படுவதற்கு மாற்றமாக 'இரண்டு இளங்காளைகளையும் ஒருஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும்” என்று எண்ணாகமம் 28:19 கூறுகின்றது.

 

ஒரேஇனத்துக்கு ஒரே காலத்தில் இடப்பட்ட கட்டளையில் இந்த முரண்பாடு ஏன்பாவநிவாரணப் பலியாக ஒரு காளைமாட்டைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்குமாற்றமாக 'பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்த வேண்டும்” என்று எண்ணாகமம்28:20 கூறுகிறது.

 

"போஜனப் பலியாக ஒரு காளைஒரு மரக்கால் மாவுஒருஆட்டுக்கடாஒரு மரக்கால் மாவு,ஒருபடிஎண்ணெய் ஆகியவற்றைப் படைக்கவேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக'போஜனபலியாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும்ஆட்டுக்கடாவுக்காக பத்தில் இரண்டு பங்கையும் ஏழு ஆட்டுக்குட்டிகளில்ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும் படைக்க வேண்டும்” என்று எண்ணாகமம் 28:20 வசனம் கூறுகிறது.

 முதலாம்மாதம் பதினாலாந்தேதி செய்தது போலவே ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியிலும் பலியிடவேண்டும் என எசக்கியேலில் கூறப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்தில் ஏழாம் மாதம்பதினைந்தாம் தேதி பலியிட வேண்டியது பற்றி வேறு விதமாகக் கூறப்படுகின்றது.

 "ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்கு பரிசுத்த மகா சங்கம்.அன்று சாதாரண வேலை எதையும் செய்யலாகாது. ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும். நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான நிவேதனமாகப் பதின் மூன்றுஇளங்காளைகளையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்குஆட்டுக்குட்டிகளையும் தகன பலியிட வேண்டும்" என்று எண்ணாகமம்29:12 கூறுகிறது. இரண்டுக்கும் அனேக வித்தியாசங்கள்உள்ளன.

இவை தவிரஇந்த விஷயத்தில் இன்னும் பல தகவல்கள் முரண்பட்டுக் காணப்படுகின்றன. எண்ணாகமம்28,29அதிகாரங்களையும் எசக்கியேல்45,46 அதிகாரங்களையும்முழுமையாகப் படிப்போர்அவற்றைக் காணலாம்.

 இரண்டுமேகடவுளின் வார்த்தைகள் என்றால் இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது ஏன்அதுமட்டுமின்றி,அந்த அதிகாரங்களில் கூறப்படுபவற்றைச் செய்வதென்றால் ஒவ்வொருவருக்கும்ஐந்தாறு ஆட்டுப் பண்ணைகளும்ஐந்தாறு மாட்டுப் பண்ணைகளும் இருக்கவேண்டும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு இது கட்டுபடியாகாது என்பதையும்கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பைபிளின் குளறுபடிகள்
Permalink  
 


ஏசு சிலுவையில் அறையப்பட்டாரா ?

 

 

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

      

                       உலகின் மிகப் பெரிய மதங்களில்ஒன்றாகத் திகழும் கிறித்தவ மதத்தின் கொள்கை என்ன?

 

                   ஒருவன் கிறித்தவனாவதற்கு அவன் கொள்ள வேண்டியகொள்கை என்ன?
                    

        கர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம்என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள்எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்துஎல்லாவிதமான  கனி வகைகளையும் அங்கே கிடைக்கச்செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்;  ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்றுகட்டளை பிறப்பித்திருந்தார்.
                               
                      ஆதாமும் ஏவாளும் அந்தக் கட்டளையை மீறிதடுக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தனர். இதனால்அவர்கள் பாவிகளானார்கள். அவர்கள்பாவிகளானதால் அவர்களின் சந்ததிகளும் பாவிகளாகப் பிறக்கின்றனர்.
                              
                          எந்த ஒரு பாவம் செய்தாலும் அதற்குப்பாவ நிவாரணப் பலி கொடுக்க வேண்டும். ஆதாம் செய்த  பாவத்தின் காரணமாக மனிதர்கள்பாவிகளாகப் பிறப்பதால் மிகப் பெரும் பலியைக் கொடுத்தால் தான் அந்தப் பாவம் மனிதனை விட்டுவிலகும். அதற்காக இயேசு தன்னையே பலியிட்டு அனைவரின்பாவங்களுக்கும் பரிகாரம் தேடிவிட்டார்.
                        இயேசு நமக்காக தன் உயிரையே கொடுத்தார்என்று ஒருவன் நம்பினால் தான் பிறவிப் பாவம் விலகும்.இயேசு நமக்காகப் பலியானார்என்பதை யார் ஒப்புக் கொள்ளவில்லையோ அவரை விட்டு பிறவிப் பாவம் (ஜென்மப் பாவம்) நீங்காது.
                               
                      இந்தக் கொள்கையின் மீது தான்கிறித்தவம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
                      இக்கொள்கையை கர்த்தரோ இயேசுவோவழங்கவில்லை. இயேசுவுக்குப் பின் கிறித்தவ மதத்தில் இணைந்து கொண்ட பவுல் என்பவர் தான் இக்கொள்கையைஉருவாக்கினார். இது குறித்து தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

                       இக்கொள்கையை வகுத்த பவுல் கூறியதுபைபிளில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
                               
                       அப்படியிருந்தும் மரணமானது ஆதாம்முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப்  பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டு கொண்டதுஅந்த ஆதாம் பின்பு வந்தவருக்குமுன்னடையாளமானவன்.
                                                     ரோமர் 5:14

                       அன்றியும் நாம்பெலனற்றவர்களாயிருக்கும் போதே குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன்மரிக்கிறது அரிது;நல்லவனுக்காக ஒரு வேளை ஒருவன்மரிக்கத் துணிவான்.
                       நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்துநமக்காக மரித்ததினாலே தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். இப்படிநாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாகஅவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.நாம் தேவனுக்குச்சத்துருக்களாயிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனேஒப்புரவாக்கப்பட்டோமானால்ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
                                                                    ரோமர் 5:8-10.                      

              என்னவென்றால் கரத்தராகிய இயேசுவை நீஉன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்றுஉன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

                                                     ரோமர் 10:9

                                   வெள்ளாட்டுக்கடா இளங்காளை இவைகளுடையஇரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும்  ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.அதெப்படியெனில் காளைவெள்ளாட்டுக்கடா,இவைகளின்இரத்தமும் தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால் நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம்ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்குஉங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!                                   எபிரேயர் 9:12-14.
                             
                                   இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே அந்தச் சித்தத்தின் படி  நாம்பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.                                   எபிரேயர் 10:10.
                               
                                   இது தான் பவுல் உருவாக்கிய கிறித்தவமதத்தின் அடிப்படைச் சித்தாந்தம்.
                               
                                   இந்தக் கொள்கை இயேசுவும்அவருக்குமுன் சென்ற நீதிமான்களும் போதித்த கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது. மேலும்பகுத்தறிவுக்கும்உலக நடைமுறைக்கும் எதிராகஅமைந்துள்ளது.
                                     இந்தக் கொள்கைக்கும் இயேசுவுக்கும்ஏதாவது சம்மந்தம் உண்டா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் இக்கொள்கையைப் பரப்பும்கிறித்தவ மத குருமார்கள் நம்பிக்கைக்கு உரியவர்களா?
                                 இயேசுவின் வழிகாட்டுதலைப் பேணிநடப்பவர்களா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஏசு கடவுள் இல்லை - சொல்கிறது பைபிள்

 

 

கிருத்துவம்ஏசுவுடையதா? 
                   கிறித்தவர்களே நீங்கள்இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச்சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.
                                  அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக்கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர்கூறவில்லை.
               
                   மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்கவேண்டும் என்றே அவர் போதித்தார்.

                   கிறித்தவர்களுக்கு எதிரியாக இருந்துகிறித்தவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த சவுல் என்ற யூதர் பவுல் என்று தன் பெயரைமாற்றிக் கொண்டு கிறித்தவ மதத்தில் சேர்ந்து இயேசு போதித்த கொள்கைக்கு மாற்றமானகொள்கையை உருவாக்கினார். அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இயேசுவுக்கு எதிரானகொள்கையை கிறித்தவ மார்க்கமாக்கி விட்டார்.   பவுல் தனது முகமூடியைத் தானேகிழித்துக் காட்டுவதை பைபிளில் நீங்கள் காணலாம்.

                   இதோ பவுல் கூறுவதைக் கேளுங்கள்!
               
                
19.நான்ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்
               
                       20.யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக்கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக்கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.    

 

                       21.நியாயப் பிரமாணமில்லாதவர்களைஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

 

                       22.பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்எப்படியாகிலும்சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
        
                       23.சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.    
                                                                                    கொரி - 9: 19 - 23                   

இயேசு  கடவுளாக முடியுமா?

                       நித்தியமும்அழிவில்லாமையும்அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும்மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்! 
                   
                                                               (முதலாம் தீமோத்தேயு 1:17)
                  

                      கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாதுமற்றவர்களுக்குஅவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.
               
                   இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும்அமைந்திருந்தன இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின்நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்கமுடியாது. உயிர்தெழுந்த பின்பும் சீடர்களும் வேறு சிலரும் இயேசுவைக் கண்களால்கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர்கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
               
                   இயேசு உயிர்த்தெழுந்து அந்தநிலையிலேயே நீடிப்பதால் கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்தபின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதேஅவர்களையும் கடவுள் என்றோகடவுளின்குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்?
               என் அருமை கிருஸ்தவ சகோதரர்களேசிந்திப்பீர் ! உங்கள் மத போதகர்களால் , உங்கள் சிந்தனைக்கு போடப்பட்டுள்ள பூட்டைஉடைத்தெரிவீர் !



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பைபிளின் குளறுபடிகள் PJ
Permalink  
 


 

விதவைத்திருமணத்தை கேவலப்படுத்தும் பைபிள்

                   மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம்செய்ய உரிமை இருப்பது போல்,கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்யஅனுமதிக்கப்பட வேண்டும் என்றுஅறிவுலகம் எதிர்பார்க்கின்றது.
                   ஆண்பெண் இரு பாலாருமே இல்லற உறவில்தேவையுடையவர்களாகஉள்ளதால்ஒரு சாராருக்கு மட்டும் இந் உரிமை மறுக்கப்படக் கூடாது என்றுபாரபட்சமில்லாத சிந்தனையுடையவர்கள்எவரும் கருதுவர்.   கணவனால் கைவிடப்பட்டவளுக்கும் கணவனை இழந்தவளுக்கும் உலகம் முழுவதும் இந்த உரிமைவழங்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளும் கூட இந்த உரிமையைவழங்குகின்றன.

                   பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமைஇருந்தாக வேண்டும் என்பதில்உலகில் அறிவுடைய எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.
                   மொத்த மனித சமுதாயத்துக்கும்நியாயமாகத் தோன்றுகின்ற இந்தவிஷயம் பைபிளுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விதவா விவாகத்தை உறுதியாகமறுக்கின்றது. கடவுளின் கட்டளையாகவும்அது கூறப்படுகிறது.
                       நான் கர்த்தர்.கன்னிகையாயிருக்கபெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும்தள்ளப்பட்டவளையாகிலும் வேசியையாகிலும்,கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன்விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம்பண்ண வேண்டும்.                                          லேவியராகமம் 21:13,14
                                      
நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் ஏற்றுக்கொள்ளாத இந்தப்போதனையைபைபிள் போதிக்கின்றது. விதவைகளையும் கணவனால் கைவிடப்பட்டவளையும் வேசிகளின் நிலையில் வைத்துப்பார்க்கிறது பைபிள்.

                   ஒருத்தி விதவையாவதிலும்தள்ளப்படுவதிலும் அவளுக்குச் சம்பந்தமில்லை. கர்த்தருடைய விதிப்படியே அவள் விதவையாகிறாள். அந்த விதவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும்என்பது மனிதனை விட கடவுளுக்கு நன்றாகவே தெரிய வேண்டும். அப்படித் தெரியாதவன் கடவுளாக இருக்கமுடியாது.
                   எனவே நிச்சயமாக கடவுள் இது போன்றஅக்கிரமமான ஒருபோதனையைச்செய்திருக்க முடியாது. பெண்களை அடிமைப்படுத்திப் போகப் பொருளாகக்கருதியவர்கள் தாம் இது போன்றபோதனைகளைக் கடவுளின் பெயரால் செய்திருக்கமுடியும்.
                   தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையைத்திருமணம் செய்ய வேண்டும்என்று பைபிள் கூறுவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                                  "தன் ஜனம்" என்று கூறுவதன் மூலம்ஜாதி வித்தியாசத்தைப்பேணிக்காக்கிறது பைபிள். எல்லா ஜனமும் ஒரு ஜனம் என்று தான் கடவுள் கருதமுடியும். பல ஜனங்களாகப் பிரித்துஒவ்வொரு ஜாதியையும் தத்தமதுஜாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யச் சொல்வதன் மூலம் ஜாதி வேற்றுமையை,தீண்டாமையை பைபிள் ஆதரிக்கின்றது.
               
மாதவிடாயைப் பற்றி பைபிள்
                   மாதவிடாய் என்பது பெண்களுக்குஇயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை.மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. ஆனால் பைபிள்மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றிக் கூறுவது என்ன தெரியுமா?
                       
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும்.அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால  மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள்விலக்கமாயிருக்கையில் எதின் மேல்படுத்துக்கொள்கிறாளோஎதின் மேல் உட்காருகிறாளோஅதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன்வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும்அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள்உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்காலமட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள்தீட்டு அவன் மேல் பட்டது முண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான்.அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.                                லேவியராகமம் 15:19,24                   
               
                  
இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய்பற்றி பைபிள் இப்படிக்கூறுகிறது.தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு 'அந்த” நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதைஅறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
                                 
அவளைத் தொட்டாலும் தீட்டுஅவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டுஅந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டுஅவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டுஎன சங்கிலித் தொடர்போல் தீட்டு.
                                 இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும்கொடுமை வேறு என்னஇருக்கமுடியும்?"அந்த"நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போதுஅவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட கர்த்தர் உணரவில்லையா?
                  
கிறித்தவப் பெண்களே! இது உங்களைச்சிந்திக்கத் தூண்டவில்லையாகடவுள் இப்படிச் சொல்லியிருக்கமுடியாது என்பது அனுபவப்பூர்வமாகஉங்களுக்கு விளங்கவில்லையா?
                   
மேலும் கிறித்தவ உலகில் எந்தக்கிறித்தவராவது இதைக் கடைப்பிடித்து ஒழுக முடியுமா?  மொத்தஉலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின்கற்பனையில் தான் இது போன்ற கருத்துக்கள் உருவாயிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கேட்டும் கேட்காதவர்:

இயேசுவின் உயிர்த்தெழுதலை கிறித்தவ மதத்தில் திட்டமிட்டு நுழைத்தவர் பவுல் என்னும் சவுல் ஆவார். நியாய உணர்வும் சிந்தனைத் தெளிவும் உள்ள கிறித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். கிறித்தவர்களுக்கு ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் கிறித்தவ மார்க்கத்தில் இணைந்தது பற்றி பவுல் விளக்கும் போது அனேக இடங்களில் முரண்படுகிறார். பின்வரும் வசனங்களிலிருந்து அவற்றை அறியலாம். இங்கே "அவன்” என்று தம்மைப் பற்றியே பவுல் கூறுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்க!

"அவன் பிரயாணம் செய்து தமஸ்குவைச் சமீபித்த போது சடுதியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் அவனைச் சுற்றி பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். விழவே சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப் படுத்துகிறாய் என்று தன்னிடம் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு அவர்ஆண்டவரே! நீர்யாரென்று கேட்க அவர் நீ துன்பப் படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது நீ எழுந்து பட்ணத்துக்குள்ளே போ! நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனோடு பிரயாணம் செய்த மனுஷர் அந்தச் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பேச்சற்று நின்றுவிட்டார்." (அப்போஸ்தலர் 9:3-8)

"அப்படியே நான் போகையில் தமஸ்குவைச் சமீபித்த போது மத்தியான வேளையில் சடுதியாய் வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் என்னைச் சுற்றி பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். விழவே சவுலே! சவுலே! என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் நீர் யார்ஆண்டவரே என்றேன். அவர், நீ துன்பப் படுத்துகின்ற நசரேயன் இயேசுவே நான் என்றார். என்னோடிருந்தவர்கள் என்னிடம் பேசினவர் சத்தத்தைக் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே! நான் செய்ய வேண்டுமென்று கேட்க, ஆண்டவர் என்னிடம் நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ!. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டவைகள் எல்லாவற்றையும் குறித்து அங்கே உனக்கு சொல்லப்படும் என்றார்." (அப்போஸ்தலர் 22:6-10)

"தமஸ்குவுக்குப் போகும் போது மத்தியான வேளையில் ராஜாவே வழியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் என்னையம் என்னோடு பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். அதன் பிரகாசம் சூரிய பிரகாசத்திலும் அதிகம். நாங்ளெல்லோரும் தரையில் விழுந்த போது சவுலே! சவுலே! நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது உனக்கு கஷ்டமாம் என்று எபிரேயு பாஷையில் என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான் நீர் யார்ஆண்டவரே! என்றேன். அதற்கு ஆண்டவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது எழுந்து காழூன்றி நில்... (தொடர்ந்து சவுல் செய்ய வேண்டியவைகளை எல்லாம் கூறுகிறார்). " (அப்போஸ்தலர் 27:13-16)

அந்த சத்தத்தை தன்னோடு பிரயாணம் செய்தவர்களும் கேட்டதாக ஆரம்பத்தில் கூறுகிறார். அடுத்த இடத்தில் யாரும் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார். ஒரே நபர் கூறுகிற ஒரே விஷயத்தில் ஏன் தடுமாற்றம்?

பவுல் செய்ய வேண்டியவை தமஸ்கு நகரத்தில் கூறப்படும் என்று முதல் இரண்டு இடங்களில் கூறுகின்றார். மூன்றாவது இடத்தில் அங்கேயே அவை விளக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

ஒரு நபர்எழுதிய அப்போஸ்தலர் நடபடிகளில் ஏன் இந்த முரண்பாடு? இரண்டில் எது உண்மை? கிறித்தவ உலகம் அறியுமா?

சாத்தானின் கையில் பரலோக ராஜ்ஜியம் :

இயேசுவியின் சிலுவை மரணத்தில் மடடுமின்றி அதையொட்டி நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இயேசுவுடைய பன்னிரெண்டு சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுத்த தகவலில் முரண்பாடு உள்ளது போல் மற்றொரு சீடர் கூறும் போதும் பைபிள் முரண்படுகிறது. இயேசுவின் சீடர்களில் சீமோன் பேதுரு என்பவனும் ஒருவன்.

"யோனாவின் குமாரன் சீமோனே! நீ பாக்கியவான். மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். நான் உனக்குச் சொல்லுகிறதைக் கேள்! நீ பேதுரு (கற்பாறை என்று பொருள்) இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோக ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். பூலோகத்தில் நீ கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டதாகும். பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டதாகும் என்றார்." (மத்தேயு 16:17-19)

இயேசுவுக்கு அடுத்த இடத்தைப் பேதுரு பெற்றிருக்கிறார். இயேசுவின் சீடர்களில் அவரே சிறந்தவர் என்பதெல்லாம் இதிலிருந்து தெரிய வருகின்றது. இவ்வாறு இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் வழங்கப்பட்ட பேதுரு பற்றி இயேசு கூறியதாக மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

"அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நான் இடற ஏதுவாயிருக்கிறாய்; கடவுளுக்குரியவைகளைச் சிந்தியாமல் மனுஷனக் குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." (மத்தேயு 16:22,23)

இயேசு பேதுருவிடம் பரலோக ராஜ்ஜியத்தின் சாவியைக் கையில் கொடுத்து அடுத்த வினாடியே அவரைச் சாத்தான் என்று அழைக்கிறார்; நான் இடற ஏதுவாய் இருக்கிறாய் என்றும் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

"இயேசு அவனிடம் (பேதுருவிடம்) இந்த இரவிலேயே சேவல் கூவுகிறதற்கு முன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்." (மத்தேயு 26:34)

இயேசு கூறியவாறு பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததாக மத்தேயுவும் மற்ற சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இவ்வளவு உயர்வான அந்தஸ்துடையவர் அவர் நினைத்தபடியே பரலோகத்திலும் நடக்கும் என்றெல்லாம் உயர்வாகச் சொல்லப்பட்ட பேதுரு சாத்தான் என்றும் இயேசுவை மறுதலிப்பவர் என்றும் கூறப்படுவது ஏன்? கடவுளின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமா? சிந்தியுங்கள் கிறித்தவர்களே!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தலை, கால் புரியவில்லை

இயேசுவின் மீது ஒரு பெண் நறுமணத்தை ஊற்றிய சம்பவத்தை எல்லா சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இதிலும் ஏராளமான முரண்பாடுகள்!

"இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியான சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த பரிமளத் தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜனப் பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்." (மத்தேயு 26:6,7)

"பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டான் அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய் பந்தியிருந்தார். அந்த ஊரிலிருந்த பாவியான ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து வெள்ளைக்கல் பரணியில் பரிமளத் தைலம் கொண்டு வந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைக்கத் தொடங்கி தன் தலை மயிரினால் தொடைத்து அவர் பாதங்களை திரும்பத் திரும் முத்தமிட்டுப் பரிமளத்தைலத்தைப் பூசினாள்." (லூக்கா 7:36)

இவ்வாறு நறுமணத் தைலத்தைப் பூசிய நிகழ்ச்சி சீமோன் என்பவரின் வீட்டில் நடந்ததாக மத்தேயுவும் மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்காவோ பரிசேயரின் வீட்டில் அது நடந்ததாகக் கூறுகிறார்.

நறுமணத் தைலத்தை தலையில் ஊற்றியதாக மத்தேயுவும் மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்கா காலில் ஊற்றியதாகக் கூறுகிறார். அடக்கத்தைப் போதித்த இயேசு, காலில் தலை வைப்பதையும் தலைமயிரால் அவரது கால்களைத் துடைப்பதையும் அங்கீகரித்திருப்பாரா? என்பது ஒரு புறமிருந்தாலும் கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருத்தலாகாது என்பதற்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

உயிர்ப்பித்தலும் குணப்படுத்தலும்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்த நிகழச்சிகளை புதிய ஏற்பாடு பல இடங்களில் குறிப்பிடுகிறது. தலைவருடைய மகளை அவர் உயிர்ப்பித்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர்.

நாயீன் என்ற ஊரில் ஒலு வாலிபனை அவர் உயிர்ப்பித்தாக லூக்கா (7:11-15) கூறுகிறார்.

அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு லாசலு என்பனை அவர் உயிர்ப்பித்ததாக யோவான் (11:11-25) கூறுகிறார்.

ஆக மரணமடைந்த மூன்று நபர்களை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்று சுவிசேஷங்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆனால் பவுலோ இம்மூன்று நிகழச்சிகளையும் பொய் என்கிறார். இயேசுவுக்கு முன்னர் எவருமே மரித்தோரிலிருந்து உயிர் பெற்றதில்லை என்று சாதிக்கிறார்.

"அவரே திருச்சபை ஆகிய சரீரத்திற்குத் தலை. எல்லாவற்றிலும் முதல்வராகும் படி அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்." (கொலோசேயர் 1:18)

"அவனவன் தன் விரிசையில் உயிர்ப்பிக்கப்படுவான் முதற் பலனானவர் கிறிஸ்து." (முதலாம் கொரிந்தியர் 15:23)

"தீர்க்கதரிசிகளும் மோசேயுவும் முன்னமே சொல்லியிருந்தபடி கிறிஸ்து பாடுபட வேண்டியதென்றும் மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி..."(அப்போஸ்தலர் 26:23)

பவுல் கூறுவதை ஏற்றுக் கொண்டால் மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடுகின்ற மூவரை உயிர்ப்பித்த நிகழ்ச்சிகள் பொய்யாகின்றன. அவை இறைவேதமாக இருக்க முடியாது? மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் உண்மை என்றால் பவுலின் நிரூபங்கள் இறை வேதமாக இருக்கமுடியாது. இயேசு உயிர்த்தெழுந்ததும் கட்டுக் கதையாகின்றது. இரண்டில் எதை ஏற்றுக் கொண்டாலும் புதிய ஏற்பாட்டில் சரிபாதி அளவு இறை வேதமான இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றது.

காது கேட்கும் செவிடர்கள்

இயேசு கொன்னை வாயான ஒரு செவிடனை குணப்படுத்தியிருக்கிறார் என்று மாற்கு (7:31) கூறுகிறார். யோவானும் லூக்காவும் இதைப் பற்றிக் கூறவில்லை.

மத்தேயு இதைப் பற்றிக் கூறும் போது அப்பொழுது சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையர் முதலிய அனேகரைத் திரலான ஜனங்கள் அவர் பாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அவர்களை அவர் குணமாக்கினார். (மத்தேயு 15:30) என்று கூறுகிறார்.

இந்த நோயாளிகளும் இவர்களை அழைத்து வந்தவர்களும் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

"ஸ்திரீகள் பிள்ளைகள் தவிர நாலாயிரம் புருஷர்கள்” (மத்தேயு 15:39)

பெண்களையும் பிள்ளைகளையும் தவிர நாலாயிரம் பேர் என்று மத்தேயு கூறுகிறார். ஏறத்தாழ பெண்களும் அதேயளவுக்கு இருந்திருந்தால் எட்டாயிரம் பேர் என்று ஆகின்றது. சிறுவர்களும் ஏறத்தாழ அதேயளவு என்று வைத்துக் கொண்டால் மொத்தம் பன்னிரெண்டாயிரம் பேர் என்று ஆகின்றது.

பன்னிரெண்டாயிரம் பேரில் ஒரு நோயாளிக்குத் துணையாக இரண்டு பேர் வந்ததாக வைத்துக் கொண்டால் கூட நோயாளிகள் மட்டும் நாலாயிரம் பேர் இருந்துள்ளனர்.

இப்போது கிறித்தவ உலகம் ஆராய நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம்:-

சப்பாணிகள், ஊனர்கள், குருடர்கள், ஊமையர்கள் ஆகியோர் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். மிகப் பெரிய நகரங்களில் கூட இந்தக் குறைபாடு உடையவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள். மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் இத்தகையவர்கள் இருந்திருப்பார்களா?

இயேசு பல்லாயிரக்கணக்கான குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்கி இதே வேளையாகவே இருந்திருக்கும் போது ஒரு கொன்னை வாயுடைய செவிடனைக் குணப்படுத்தியதை பெரிய அற்புதமாக மாற்கு ஏன் குறிப்பிட வேண்டும்? ஒரு செவிடனைக் குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கூறிய மாற்கு பல்லாயிரம் செவிடர்களைக் குணப்படுத்திய அதி அற்புத நிகழ்ச்சியை ஏன் குறிப்பிடவில்லை?

இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மற்ற சுவிசேஷக்கார்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தேயு இஸ்டத்திற்குப் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.

இதன் காரணமாகவும் பைபிள் இறைவேதம் என்ற தகுதியை இழந்து விடுகின்றது என்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நாடு கடந்த பேய்

பேய் பிடித்த பெண்ணொருத்தியை இயேசு குணப்படுத்திய நிகழ்ச்சியை மத்தேயுவும் மாற்கும் கூறுகின்றனர். 'இவள் கிரேக்க ஸ்திரீ, சீரோபேனிக்கியா நாட்டாள்” என்று மாற்கு (7:25) கூறுகிறார். ஆனால் மத்தேயு "அந்தத் திசைகளில் குடியிருந்த கானா நாட்டு ஸ்திரீ ஒருத்தி அவரிடம் வந்து” (மத்தேயு 15:12) இறைவனுடைய வேதத்தில் இந்தச் சின்ன விஷயத்திலும் கூட முரண்பாடிருக்குமா?

சிஷ்ய கோடிகள்

இயேசுவுக்கு பன்னிரெண்டு சீடர்கள் இருந்ததை அனைவரும் அறிவார்கள். அவர்களில் சீமோன், அந்திரேயா என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அவ்விருவரும் எப்படிச் சீடர்களானார்கள் என்பதைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

"அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீயோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டார். இவர்கள் மீன் பிடிக்கிறவர்கள். கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள்! உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு அவரைப் பின்பற்றினார்கள்." (மாற்கு 1:16)

மத்தேயுவும் (4:18) இதே கருத்தில் எழுதியுள்ளார். இயேசுவின் அழைப்புக்குப் பின் அவ்விருவரும் அவருக்குச் சீடர்களானதாக மத்தேயுவும் மாற்கும் கூறுவதை, யோவான் மறுக்கிறார். சீடர்களானதற்கு வேறொரு கதை விடுகிறார்.

"மறு நாள் யோவானும் அவன் சீஷரில் இருவரும் நின்று கொண்டிருக்கும் போது நடந்து போகிற இயேசுவை அவன் உற்றுப் பார்த்து இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் சொன்னதை அவ்விரண்டு சீஷரும் கேட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி அவர்களை பின்னே வருகிறதைக் கண்டு அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் ரபீ நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்கு குரு என்று அர்த்தம். அவர், வாருங்கள் காண்பீர்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு அன்றைய தினம் அவரோடு தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறை பத்தாம் மணி வேளை. யோவான் சொன்னதைக் கேட்டு அவருக்குப் பின் சென்ற இருவரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா. அவன் முதலாவது தனது சகோதரன் சீமோனைக் கண்டுபிடித்து அவனிடம், மேசியாவைக் கண்டு கொண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவனை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனை உற்றுப் பார்த்து நீ யோவானின் மகன் சீமோன். நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்."(யோவான் 1:35-42)

அந்திரேயாவையும் அவன் சகோதரன் சீமோனையும் இயேசுவே அழைத்ததாகவும் இருவரும் ஒரே நேர்த்தில் இயேசுவின் சீடர்களானதாகவும் மத்தேயுவும் மாற்கும் கூறுகின்றனர். அந்திரேயா மட்டும் இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்ததாகவும் அதன் பிறகு அவன் சகோதரன் சீமோனை அழைத்து வந்து இயேசுவுக்கு சீடராக்கியதாகவும் யோவான் கூறுகிறார். பைபிள் இறைவனின் வார்த்தையென்றால், அதில் இத்தகைய முரண்பாடுகள் நிச்சயம் இருக்க முடியாது.

கழுதைச் சவாரி

இயேசு கழுதையில் சவாரி செய்த ஒரு நிகழ்ச்சியை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அதிலும் முரண்பாடு

"தம்முடைய சீஷரில் இருவரை அனுப்பி உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதனுட் செல்லும் போது ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் அது ஆண்டவருக்குத் தேவை என்று சொல்லுங்கள் என்றார்." (லூக்கா 19:30)

லூக்காவின் கருத்திலேயே மாற்கும் யோவானும் கூறுகின்றனர். ஆனால் மத்தேயு இதை வேறு விதமாகக் கூறுகிறார்.

"இயேசு சீஷரில் இரண்டு பேரை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். போனவுடனே அங்கே ஒரு கழுதையையும் அதனோடு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள். அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்” (மத்தேயு 21:1-2)

"சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்." (மத்தேயு 21:7)

கழுதைக் குட்டியின் மீது சவாரி செய்ய முடியுமா? கழுதையின் மீதும் குட்டியின் மீதும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியுமா? யார் வீட்டுக்க ழுதையையோ அவிழ்த்துக் கொண்டு வருமாறு இயேசு போதனை செய்திருப்பாரா? கழுதையில் ஏறவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது? என்பது போன்ற கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். அவர் அவிழ்த்துக் கொண்டு வரச் சொன்னது கழுதையையா? கழுதையையும் அதன் குட்டியையுமா? அவர் ஏறியது ஒரு கழுதையிலா? அல்லது இரண்டு கழுதைகளிலா? இறை வேதத்தில் ஏன் இந்தத் தகவல் முரண்பட்டு அமைந்துள்ளது என்பதை மட்டும் சிந்தியுங்கள் கிறித்தவ நண்பர்களே!

கடலில் விழுந்த பேய்கள்

இயேசு பேய்களை விரட்டியடித்த சம்பவத்தை மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர். அந்த நிகழ்ச்சிகளிலும் முரண்பாடுகள்!

"அவர் அக்கரையில் கதரேனர் நாட்டுக்கு வந்த போது பேய் பிடித்திருந்த இருவர் கல்லறைகளிலிருந்த வெளியேறி அவருக்கு எதிரே வந்தார்கள். அவர்கள் மிகக் கொடியவராய் இருந்தபடியால் எவனும் அந்த வழியாகச் செல்ல இயாலதிருந்தது. சத்தமிட்டுக் கூப்பிட்டு, தேவ குமாரனே எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்தவா இங்கே வந்தீர் என்றார்கள். அவர்களுக்குத் தூரத்தில் ஒரு பெரிய பன்றிக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது பேய்கள் நீர் எங்களைத் துரத்துவீரானால் அந்தப் பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொள்கின்றனர். அதற்கவர் போங்கள் என்றார். அவைகள் வெளியேறிப் பன்றிக்குள் போகவே, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து தண்ணீரில் மாண்டது." (மத்தேயு 8:28)

"பின் கலிலேயாவுக்கு கெரசேனர் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் கரை இறங்கவும் பேய்கள் பிடித்த அந்த ஊரான் ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நெடுநாளை வஸ்திரந்தரியாதவன். வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவன். அவன் இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து, இயேசு! உன்னதமான கடவுளின் குமாரனே எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதிருக்க உம்மை வேண்டிக் கொள்கின்றேன் என்று மிகவும் சத்தமிட்டுச் சொன்னான். அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டுப்போகும்படி அவர் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனைப் பிடித்து வந்தது. அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல் பண்ணப்பட்டிருந்ததும் கட்டுகளை முறித்துப் போட்டிருந்தான். பேய் அவனை வனாந்திரத்துக்குத் துரத்தியிருந்தது." (லூக்கா 8:26)

பேய்கள் இருக்கின்றனவா என்பதையும் இருக்கின்றன என்றால் மனிதனல்லாதவர்களிடம் அவை ஊடுருவுமா என்பதையும் பன்றிகள் கடலில் விழுந்து சாவதால் பேய்களும் செத்துவிடுமா என்பதையும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டோம். நாம் கேட்பது இயேசு விரட்டியது இரண்டு மனிதர்களிடமிருந்த பேய்களையா? அல்லது ஒரு மனிதரிடமிருந்த பேய்களையா? இந்த விஷயத்தில் மத்தேயுவும் லூக்காவும் முரண்படுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பிசாசின் சோதனை

இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர்.

வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார். (4:1-14).

முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார். (4:1-12)

கர்த்தர் இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் கர்த்தரே கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா?

திமிர்வாதம் பிடித்தவன்

திமிர்வாதம் பிடித்த வேலைக்காரனைக் குணப்படுத்திய அற்புத நிகழ்ச்சியைக் கூறும் போது லூக்காவும் மத்தேயுவும் முரண்படுகின்றனர்.

"அவர் கப்பர்நகூமுக்குச் சென்ற போது நூற்றுக்கதிபதி ஒருவன் அவரிடம் வந்து ஆண்டவனே! வீட்டில் என் வேலைக்காரன் திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான். அவர் நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்று அவனிடம் சொன்னார். நூற்றுக்கதிபதியோ ஆண்டவனே நீ என் வீட்டினுட் பிரவேசிக்க நான் தகுந்தவனல்ல. வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்." (மத்தேயு 8:5-9)

"அங்கே நூற்றுக்கதிபதி ஒருவனுடைய வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். எஜமானுக்கு அவன் அருமையானவன். அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொள்ளும்படி யூதரின் மூப்பரில் சிலரை அவரிடம் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடம் வந்து, நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் ஏற்றவன். அவன் நமது ஜனத்தை நேசிக்கிறான். ஒரு ஜெபாலயத்தையும் கட்டினான் என்று சொல்லி அவரை வருந்தி அழைத்தார்கள்." (லூக்கா 7:2-6)

வேலைக்காரனின் எஜமானனே இயேசுவிடம் வந்து முறையிட்டதாக மத்தேயு கூறுகிறார். யூதரின் முக்கியப் பிரமுகர்களை இயேசுவிடம் அனுப்பி வைத்ததாக லூக்கா கூறுகிறார். அவர்கள் அழைத்தவுடன் இயேசு புறப்பட்டு வீடு வரை சென்றதாகவும் அதன் பின் இயேசு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் வீட்டை அடைந்தததும் வீட்டுக்காரர் வேண்டாம் என்று கூறியதாகவும் லூக்கா (7:7) கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ இயேசு இடத்தை விட்டே புறப்படவில்லை என்று கூறுகிறார். இப்படி அனேக முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் பைபிள் இறை வேதமேயில்லை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

யோவானுக்குப் பயந்த மன்னன்!

"ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுள்ளவனென்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் பேசுவதைக் கேட்டு மிகவும் மனங்கலங்கியும் அவன் சொல்லை விருப்பத்தோடே கேட்டு வந்தான்.” (மாற்கு 6:20)

ஏரோது மன்னன் யோவானைக் கண்டு பயந்து, மதிப்பளித்து வந்ததாக இங்கே கூறப்படுகின்றது. இதற்கு நேர்முரணாக லூக்கா கூறுவதைக் கேளுங்கள்!

"ஏரோது சிற்றரசன் தன் சகோதரன் மனைவி ஏரோளியாவினிமித்தமாகவும் தான் செய்த மற்ற பொல்லாங்குனிமித்தமாகவும் யோவானாலே கண்டிக்கப்பட்ட போது தான் செய்த மற்றப் பொல்லாங்குகளோடும் கூட யோவானையும் காவலில் அடைத்து வைத்தான்.” (லூக்கா 3:19)

ஏரோது மன்னன் ஏவானுக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்தது உண்மையா? யோவானுக்குப் பயப்படாமல் அவனைச் சிறையில் அடைத்து வைத்தது உண்மையா? சிந்தியுங்கள் கிறித்தவர்களே!

இயேசு கூறிய உவமை

இயேசு பல சமயங்களில் உவமைகள் கூறி மக்களுக்குப் போதித்ததாக புதிய ஏற்பாடு கூறுகின்றது.

ஒரு எஜமான் ஒரு தோட்டத்தைச் சிலரிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, கனிகள் உற்பத்தியானதும் அதை வாங்கி வருமாறு தன் ஊழியரை அனுப்பினான். குத்தகைக்காரர்களோ ஊழியரைக் கொன்று விட்டனர். இந்த உவமையைக் கூறிவிட்டு இயேசு தன் சீடர்களிடம்,

"அப்படியிருக்க, திராட்சை தோட்டத்து எஜமான் வரும் போது குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்துவிட்டு ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறு குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.” (மத்தேயு 21:40)

"இப்படியிருக்க திராட்சைத் தோட்டத்து எஜமான் அவர்களை என்ன செய்வான்? அவன் வந்து இந்தக் குடியானவர்களை அழித்து மற்றவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார். அவர்கள் அதைக் கேட்டு ஐயோ, அப்படி வேண்டாம் என்றார்கள்.” (லூக்கா 20:15)

எஜமான் வந்து குடியானவர்களை அழிப்பான் என்று இயேசுவின் சீடர்கள் கூறியதாக மத்தேயு கூறுவதும் இயேசு கூறி சீடர்கள் ஆட்சேபித்ததாக லூக்கா கூறுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுள்ளதை உணரலாம். பைபிள் இறை வேதமில்லை என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இயேசுவின் சிலுவைப் பலி:

உலக மக்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தம்மையே பலியாக்கிக்கொண்டதாகக் கிறித்தவ உலகம் நம்புகின்றது. இந்த நம்பிக்கை பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

"அப்பொழுது இயேசு, பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சப்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.” (லூக்கா 23:46)

லூக்காவின் இந்த வசனம் கிறித்தவ நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. ஆனால் லூக்கா கூறுவது பொய் என்று மத்தேயும் மாற்கும் அடித்துச் சொல்கின்றனர். இயேசு தாமாகப் பலியாகவில்லை என்று கூறிக் குட்டை உடைக்கின்றனர்.

"ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்என்று அர்த்தம்.” (மத்தேயு 27:46)

"ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்என்று அர்த்தமாம்." (மாற்கு 15:34)

இயேசு பலியாக விரும்பவில்லை என்பதாகவும் எப்படியாது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் இந்த வசனங்கள் கூறுகின்றன. கிறித்தவக் கோட்பாடு, சிலுவைப் பலி யாவுமே கட்டுக் கதை என்பதையும் இவ்வசனங்கள் உறுதி செய்கின்றன.

இப்போது நாம் கேட்க விரும்புவது இயேசு விரும்பிப் பலியானாரா?
அல்லது பலிகடாவாக இழுத்துச் செல்லப்பட்டாரா? 
இரண்டில் எது சரி என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா?

பாவச் சுமை:

"பாவஞ் செய்கிறவனே சாவான். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமான் தன் நீதியை அனுபவிப்பான். துஷடன் தன் துஷ்டனத்தை அனுபவிப்பான்.” (எசக்கியேல் 18:20)

ஒருவனது பாவச் சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது. இந்தத் தத்துவம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இதை ஏற்றுக் கொண்டால் "அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர்; இயேசு வந்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார்” என்ற கிறித்தவக் கோட்பாடு அடிபட்டுப் போய்விடும். இதற்காகக் கிறித்தவ உலகம் வேதத்தில் கை வரிசையைக் காட்டியுள்ளது.

"பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று (கர்த்தர்) கூறினார்.” (யாத்திராகமம் 34:6)

இங்கே நான்கு தலைமுலை வரையிலும் கர்த்தர் விசாரணை செய்வார் என்று கூறப்படுகின்றது. நான்கு தலைமுறை மட்டும் தான் கர்த்தர் விசாரிப்பது என்பது கிறித்தவக் கோட்பாட்டை நிலை நிறுத்த உதவாது என்பதால் மேலும் ஒரு படி ஏறி, லூக்கா புதிய தத்துவம் கூறுகிறார்.

"இப்படிச் செய்வதினால் ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடவில் கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் உலகத் தோற்றம் முதல் சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளின் இரத்தமும் இந்தச் சந்ததியிடம் கேட்கப்படும் என்று தேவ ஞானம் சொல்லியிருக்கிறது. நிச்சயமாவே இந்தச் சந்ததியிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 11:50,51)

ஆதாமின் மகன் ஆபேல் கொலையுண்டது பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சந்ததியினர் விசாரிக்கப்படுவர் என்று இங்கே கூறப்படுகின்றது. இயேசு பாவங்களைச் சுமக்க வந்தார் என்பதை நிலைநாட்ட இவ்வாறு லூக்கா கூறினாலும் உண்மையில் அதற்கு முரணாகவே இவ்வசனம் அமைந்துள்ளது. இயேசு வந்த பின்பும் கூட ஆபேலின் கொலை பற்றி விசாரிக்கப்படும் என்றால் இயேசு எவரது பாவத்தையும் சுமக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

நாம் இங்கே கேட்க விரும்புவது என்னவென்றால், எவரது பாவத்தையும் எவரும் எப்போதும் சுமக்க முடியாது என்று எசக்கியேல் கூறுவது சரியா?

அல்லது ஒருவர் செய்த பாவத்தை அவரது சந்ததிகள் நான்கு தலை முறை வரை சுமக்க வேண்டும் என்று யாத்திராகமம் கூறுவது சரியா?

அல்லது ஒருவன் செய்த பாவத்தை அவனது சந்ததிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுமந்தாக வேண்டும் என்று லூக்கா கூறுவது சரியா?

அல்லது இம்மூன்றுக்கும் மாற்றமாக இயேசு எல்லோரின் பாவத்தையும் சுமந்து கொண்டார் என்று பவுல் உருவாக்கிய தத்துவம் சரியா?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குழப்பக் கணக்கு:

பென்யமீன்களுடைய குமாரர்களைப் பற்றி பைபிள் கூறுகின்றது. அவனுடைய குமாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் போதும் அனேக முரண்பாடுகள் உள்ளன.

"பென்யமீன் குமாரர் பேலா, பேகேர், யெதீகவேல் எனும் மூவர்." (முதலாம் நாளாகமம் 7:6)

"பென்யமீன் பேலா என்னும் தன் மூத்த குமாரனையும் அஸ்பேல் எனும் இரண்டாம் குமாரனையும் அகராகு என்னும் மூன்றாம் குமாரனையும் நோகா என்னும் நாலாம் குமாரனையும் ராபா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்." (முதலாம் நாளாகமம் 8:1,2)

ஒரே ஆகமத்துக்குள்ளேயே இரண்டு முரண்கள். ஒரு இடத்தில் மூன்று குமாரர்கள் என்றும் இன்னொரு இடத்தில் ஐந்து குமாரர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஐந்து குமாரர்கள் என்று குறிப்பிடும் இடத்தில் முதலில் கூறிய மூவருடன் வேறு இரண்டு பேர்களை சேர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. பேலா என்ற பெயர் மட்டுமே இரண்டு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. மற்ற பெயர்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் உள்ளன. கடவுளின் வேதம் இப்படிக் குழப்பலாமா?

மூன்று குமாரர்கள் என்றும் ஐந்து குமாரர்கள் என்றும் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்படும் பைபிள் இன்னொரு ஆகமத்தில் மேலும் முரண்படுகிறது.

"பென்யமீனின் குமாரர்பேலா, பேகர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், குப்பீம், ஆர்து என்பவர்கள்." (ஆதியாகமம் 46:21)

இங்கே பென்யமீனுக்கு பத்துக் குமாரர்கள் இருந்ததாகக் கூறுவதுடன் பேலா எனும் பெயரைத் தவிர மற்ற பெயர்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லதாக உள்ளது. இந்தப் பரம்பரைப் பட்டியல் அவசியம் தானா? இதைத் தெரிந்து ஆகப் போவது என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும். இந்தச் சிறிய எண்ணிக்கையை எண்ணிச் சொல்வதில் கர்த்தருக்கு -அல்லது கர்த்தரின் ஆவியால் உந்தப்பட்டவருக்கு இவ்வளவு குழப்பம் வர வேண்டுமா?

அது போல் சிலரது பரம்பரைப் பட்டியலை பைபிள் கூறுகின்றது. இரண்டு இடங்களில் ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன. முதலாம் நாளாகமம் 8:29-38 வரை கூறப்படும் பெயர்களையும், முதலாம் நாளாகமம் 9:35-44 வரை கூறப்படும் பெயர்களையும் பார்வையிடுவோர் இரண்டு இடங்களிலும் அனேகம் முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைக் காணமுடியும்.

இத்தனைக்குப் பிறகும் அது இறை வேதம் என்று எப்படி நம்ப முடியும்?

சாதாரணத் தகவல்களிலேயே குழப்பக் கூடிய புத்தகம், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று தான் எப்படி நம்ப முடியும்?

கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

செத்துப் பிழைத்த மிருகங்கள்:

"மறுநாளிலே கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.” (யாத்திராகமம் 9:6)

மோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர் சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது. இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரணாகவும் கூறுகின்றது.

"பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேiலைக்காரரையும் தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்." (யாத்திராகமம் 9:20,21)

பார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்?

அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்?

அம்மிருகங்களைக் கர்த்தர் அழித்து விட்டதாகக் கூறுவது சரியா?

கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா?

கடவுளின் தோல்வி:

மோசேக்குப் பின்னர் யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.

"... எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.” (யோசுவா 10:23)

"அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.” (யோசுவா 10:26)

எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர் மாண்டதும் கூறப்படுகின்றன.

ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!

"எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.” (யோசுவா 15:53)

யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?

கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42) எருசலேமுள்ளவர்களை வெல்ல

முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா?

இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தப்புக் கணக்கு:

யோசேப் எகிப்திலே ஆட்சி செய்து கொண்டிருந்த போது தந்தையையும் சகோதரர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் எகிப்துக்கு வரவழைத்தார். யாக்கோப்பு, யோசேப்பு, அவரது இரண்டு குமாரர்கள், யோசேப்பின் சகோதரர்கள், அவர்களின் புதல்வர்கள் அனைவருமே எழுபது பேர் தாம் என்று ஆதியாகமம் கூறுகின்றது.

"எகிப்திலே யோசேப்புக்குப் பிறந்த குமாரர் இரண்டு பேர். ஆக எகிப்துக்கு வந்த யாகோபின் குடும்பத்தார் எழுபது பேர்" (ஆதியாகமம் 46:27)

ஆனால் இது பற்றிப் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

"யோசேப்பு தன் தகப்பன் யாக்கோப்பையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் எழுபத்தைந்து பேர்.” (அப்போஸ்தலர் 7:14)

யோசேப்பையும் அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் என்று ஆதியாகமம் கூறுகின்றது. பவுலோ யோசேப்பையும் அவரது இரண்டு குமாரரையும் நீக்கிவிட்டு எழுப்பத்தைந்து என்கிறார். ஆதியாகமம் கூறுகிற படி பார்த்தால் யோசேப்பும் அவனது இரு குமாரர்களையும் சேர்க்காவிட்டால் அவர்கள் அறுபத்தி ஏழு பேர் தான். ஆனால் எட்டுப் பேர்களை அதிகப்படியாக பவுல் கூறுகிறார்.

வந்தவர்கள் எழுபதா? எழுபத்து ஐந்தா?

எழுபதில் மூன்றை நீக்கினால் அது எழுபத்தைதந்தாகுமா?

அறிவுக்குப் பொருந்தாத இந்தத் தப்பான கணக்கு இறை வேதத்தில் இடம் பெறலாமா?

அப்படி இடம்பெற்ற பின்பும் அது இறை வேதமாக இருக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறித்தவர்களிடம் எந்த விடையுமில்லை. முரண்பாடுகள் இத்தோடு நிற்கவில்லை; இன்னமும் தொடர்கின்றன.

இயேசு நீதிமான் இல்லையா?

பாவிகளாகப் பிறக்கும் எல்லா மனிதர்களின் பாவங்களையும் சுமப்பதற்காக இயேசு தம்மையே சிலுவையில் பலியிட்டுக் கொண்டார் என்பது கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று. இந்தக் கோட்பாடு பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

"நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல; சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதார பலி அவரே!” (யோவானின் முதலாம் நிரூபம் 2:2)

புதிய ஏற்பாட்டில் காணப்படும் இந்த அடிப்படைக் கொள்கையைப் பழைய ஏற்பாடு முற்றிலும் நிராகரிக்கின்றது

"துஷ்டன் நீதிமானை மீட்கும் கொருளாவான். நேர்மையானவனுக்குத் துரோகி பதிலாவான்." (நீதி மொழிகள் 21:18)

மனிதர்களில் யாரேனும் பலியிடப்பட வேண்டுமானால் துஷ்டனும் துரோகியுமே பலியிடப்பட வேண்டியவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இயேசு, எல்லா மக்களுக்கும் பலியிடப்பட்டதாக நம்பினால் அவர் நீதிமான் அல்லவென்று ஏற்படும்.

இயேசுவை நீதிமான் என்று நம்பினால் அவர்பலியிடப்பட்டதை நம்ப முடியாமல் போகும்.

இரண்டில் எதை நம்பினாலும் பைபிளின் ஒரு வசனம் பொய்யாகி விடும். பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சரியான சான்றாகும்.

பாதியும் மீதியும்:

காத் என்பவனின் புத்திரருக்குக் கடவுள் கொடுத்த நிலப்பரப்பைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

"கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, இன்று நீ மோவாபின் எல்லையிலுள்ள ஆர் நகரத்தைக் கடந்து போவாய். அம்மோனியரை நெருங்கும் போது நீ அவர்களை வருத்தப்படுத்த வேண்டாம். அவர்களோடு போர் செய்யவும் வேண்டாம். அம்மோனியரின் தேசத்தில் எதையும் உனக்குக் கொடேன். அதை லோத்தின் புத்திரருக்குச் சொந்தமாகக் கொடுத்து விட்டேனே." (உபாகமம் 2:17-19)

அம்மோனியர் தேசத்தில் எதையும் இவர்களுக்குக் கொடுக்கவில்லை. அது லோத்தின் குமாரருக்கு உரியது என்று இங்கே கூறியதற்கு மாற்றமாக "காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே, அவர்கள் வம்சங்களின் படி கொடுத்தவை இவைகளே. யாசேரும் கிலியாத்தின் சகல பட்டணங்களும் ரபாவுக்கு எதிரே இருக்கிற அரோவர் மட்டுமுள்ள அம்மோனியரின் பாதித்தேசமும்...” என்று யோசுவ (13:24,25) கூறுகிறது.

அம்மோனியரின் தேசத்தில் எதையும் தொடக் கூடாது என்று கூறியது கர்த்தரின் கட்டளையா?

அதில் பாதித் தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது கர்த்தரின் வார்த்தையா?

முரண்பட்ட இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிள் எப்படி இறை வேதமாக இருக்கமுடியும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வாட்டும் பஞ்சம்:

தாவீதின் காலத்தில் 'காத்” என்ற ஞான திருஷ்டிக்காரன் ஒருவன் இருந்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்ரவேலர்களின் அக்கிரமங்கள் எல்லை மீறிய போது மூன்று விதமான தண்டனைகளில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கர்த்தர், காத் எனும் ஞான திருஷ்டிக்காரன் மூலமாக தாவீதுக்கு சொல்லியனுப்புகிறார். இந்தச் செய்தியை இரண்டு ஆகமங்கள் முரண்பட்டுக் கூறுவதைக் கேளுங்கள்!

"தாவீதின் ஞான திருஷ்டிக்காரனாகிய காத் எனும் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்வைக்கின்றேன். அவற்றில் ஒன்றைத் தெரிந்து கொள். அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே 'காத்” தாவீதிடம் வந்து இதை அவனுக்குத் தெரிவித்து உமது தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வர வேண்டுமா? மூன்று மாதம் உமது சத்ருக்கள் உம்மைப் பிடிக்கத் தொடர நீ அவர்களுக்கு முன்பாக ஓடிப் போக வேண்டும். அல்லது உமது தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமா? " (இரண்டாம் சாமுவேல் 24:11,12,13)

அப்படியே காத் தாவீதினிடம் வந்து; 'கர்த்தர்உரைப்பதைக் கேள்! மூன்று வருஷத்துக்குப் பஞ்சம் வர வேண்டுமா? உன் பகைவரின் பட்டயம் உன்னைத் தொடரவே உன் சத்ருக்களால் மூன்று மாதச் சங்காரம் வேண்டுமா?... (முதலாம் நாளாகமம் 21:11,12)

ஏழு வருஷத்துப் பஞ்சமா? மூன்று வருஷப் பஞ்சமா?

கர்த்தரின் வார்த்தையில் தடுமாற்றம் வரலாமா?

இரண்டு தகவல்களில் எது உண்மை? எது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் உண்மையல்லாத மற்றொரு செய்தி இறை வேதத்தில் இடம்பெறலாமா?

எட்டு வயது ராஜாவுக்குப் பதினெட்டு வயது:

யோயாக்கீன் என்பவனைப் பற்றிய வரலாற்றை இரண்டாம் ராஜாக்கள் என்ற ஆகமமும் இரண்டாம் நாளாகமம் என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன. அதிலுள்ள முரணைப் பாருங்கள்.

"யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசாண்டான்." (இரண்டாம் ராஜாக்கள் 24:80)

"யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது அவன் மூன்று மாதமும் பத்து நாளும் அரசாண்டு..."(இரண்டாம் நாளாகமம் 36:9)

இங்குள்ள முரண்பாடுகளைக் கவனிப்பதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். யோயாக்கீம் என்பவரின் மகன் யோயாக்கீன். ஒரு எழுத்து தான் வித்தியாசம். மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டாம் ராஜாக்கள் 24:8 வசனத்தில் யோயாக்கீன் என்றே ஆங்கில பைபிள்களிலும் கத்தோலிக்க பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது

ஆயினும் வேதாகமச் சங்கம் 1982ல் வெளியிட்ட பைபிளில் மேற்கண்ட வசனத்தில் யோயாக்கீம் என்று தந்தையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட வசனங்களில் கூறப்படும் நபர் வெவ்வேறு நபர்கள்; ஒரு நபரல்ல என்று எவரும் வாதிடக்கூடும்.

முன் பின் வசனங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டு வசனங்களிலுமே யோயாக்கீன் என்பதே சரியானது என்று விளங்கலாம். இவர்வேறு அவர் வேறு என்று எவரேனும் வாதிட்டால் இரண்டாம் நாளாகமத்தில் 36:5ல் ' யோயாக்கீம் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது” எனக் கூறப்படுவதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

நாம் கேட்க விரும்புவது யோயாக்கீன் இராஜாவான போது அவனுக்கு பதினெட்டு வயதா? வெறும் எட்டு வயதா?

அவன் ஆட்சி செய்தது மூன்று மாதங்களும் பத்து நாட்களுமா? மூன்று மாதங்கள் மட்டுமா? இரண்டில் எது உண்மை?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தடுமாறும் ஜோடிகள்:

நோவாவும் அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.

"மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும் ஜாதி ஜாதியான மிருகங்களிலும் பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும் வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது..." (ஆதியாகமம் 6:19,20)

"பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்"  (ஆதியாகமம் 7:2,3

நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை? 

அதிசயமாய் தோன்றிய சந்ததி:

இதுவரை குறிப்பிட்ட குளறுபடிகளை எல்லாம்  விழுங்கி ஏப்பம் விடக்கூடிய மற்றொரு முரண்பாட்டைப் பாருங்கள்! 

"கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மிதியானிகளுடன் போர் செய்து சகல ஆண்களையும், கொன்று போட்டார்கள். அவர்களைக் கொன்று போட்டதுமின்றி, மிதியானிகளின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கெம், சூர், குர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பெயோரின் குமாரனாகிய பிலேயாமையும் கொன்று போட்டார்கள். அன்றியும் இஸ்ரவேலர் மிதியானிகளின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைப்பிடித்து அவர்கள் ஆடு, மாடுகள் யாவையும் சகல பொருட்களையும் கொள்ளையிட்டு அவர்கள் குடியிருந்த சகல ஊர்களையும் அவர்கள் பாளையங்கள் அனைத்தையும் அக்கினியால் சுட்டெரித்துத் தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த ஆட்கள், மிருகங்கள் அனைத்தையும் சேர்த்துச் சிறைப் பிடித்தவர்களையும் தாங்கள் பிடித்தவைகளையும் கொள்ளையிட்டவைகளையும் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அக்கரையில் மோவோபின் சமவெளிகளில் பாளையத்திலிருந்த மோசேயினிடத்துக்கும் ஆசாரியனாகிய எலியாசாரியினடத்துக்கும் இஸ்ரவேல் சபையாரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். மோசேயும் ஆசாரியனாகிய எலியாசாரும் சபையின் பிரபுகள் எல்லோரும் அவர்களைச் சந்திக்கப் பாளையத்திற்கு வெளியே எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரத்துக்குத் தலைவரும் நூற்றுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களிடம்:

பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா? பெயோரின் சந்ததியில் பிலெயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேலர்கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள் தானே? அதனால் கர்த்தரின் சபையில் வாதையும் நேரிட்டதே. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்! ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண் குழந்தைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்!... என்று சொன்னார்." (எண்ணாகமம் 31:7-18

மோசே எனும் தீர்க்கதரிசி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் கூடக் கொல்லுமாறு கூறியிருப்பாரா? அதுவும் கடவுளின் பெயரால் இதைக் கூறியிருப்பாரா? என்பதை நாம் இங்கே ஆட்சேபிக்கப் போவதில்லை.சிவிலியன்கள் மீது குண்டு மழை பொழியும் கொடிய ஃபாஸிஸ்டுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இது முன் மாதிரியாக இருந்து விட்டுப் போகட்டும்! முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இஸ்ரவேலர்கள் மிதியானியர் என்ற இனத்தவரின் அனைத்து ஆண்களையும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்று போட்டார்கள். அது மட்டுமின்றிப் புருஷ-சம்போகத்தை அறிந்த-(அந்தக் காலத்தில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்களோ-) அனைத்துப் பெண்களையும் கூட கொன்று விட்டனர். இதனால் கருவில் ஆண் குழந்தை இருந்து அது பிறகு பிறப்பதற்கும் இடமேயில்லை. 

சுருங்கச் சொல்வது என்றால் மிதியானியர் என்ற இனமே பூண்டோடு ஒழிந்தது. அந்த இனத்தில் ஒரு மனிதன் கூடத் தோன்ற இனி வழியே இல்லை. இந்த விபரங்களை மேலே கண்ட வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்!

"பின்னும் இஸ்ரவேலர்கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்யவே கர்த்தர் அவர்களை ஏழு வருடம் மிதியானியர்கையில் ஒப்புக் கொடுத்தார்" (நியாயாதிபதிகள் 6:1)

"இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும் ஆடு, மாடு, கழுதைகளையாகிலும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மிருகங்களோடும் தங்கள் கூடாரங்களோடும் வெட்டுக் கிளிகளைப் போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்களின் ஒட்டகங்களும் எண்ணி முடியாததாயிருக்கும்." (நியாயாதிபதிகள் 6:5)

ஆண் வர்க்கமே அடியோடு அழிந்துவிட்ட ஒரு சமுதாயம் திரும்பவும் எப்படி உருவாக முடியும்? எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் எப்படிப் பெருக முடியும்? கர்த்தர் வானிலிருந்து மிதியானியர் எனும் இனத்தவரை இறக்கினாரா? அல்லது கொல்லப்பட்டவர்களுக்குத் திரும்பவும் உயிர்கொடுத்தாரா? கடுகளவு அறிவிருந்தால் கூட இதை நம்ப முடியாதே!

ஆண்கள் இல்லாவிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சமுதாயம் திரும்பவும் உருவாக முடியாது. இங்கே இருநூறு ஆண்டுகளில் இந்த விந்தை நடந்துள்ளது. மோசேவுக்குப் பின் யோசுவா, யூதா, ஒத்னியேல், ஏகூத் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளே வந்துள்ளனர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகளே. இந்த 200 ஆண்டுகளுக்குள் அவர்கள் எண்ண முடியாத அளவுக்கு வளர்வது என்றால் விந்து வங்கியும், செயற்கை முறைக் கருவூட்டலும் அன்றைக்கு இருந்தது என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

செத்து விட்ட மலடி பெற்றுவிட்ட பிள்ளைகள்:

யாரேனும் செத்த பின்பு பிள்ளை பெற முடியுமா? முடியும் என்று பைபிள் கூறுகின்றது. மீகாள் என்பவள் மரணமடையும் வரை பிள்ளை பெறாமல் இருந்துவிட்டு மரணித்த பின் ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

"சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது" (இரண்டாம் சாமுவேல் 6:23)

"சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சில்லாயின் குமாரன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து..." (இரண்டாம் சாமுவேல் 21:8)

ஒரு ஆகமத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய குழப்பம். கிறித்தவ நண்பர்களே! இதன் பிறகும் பைபிளை இறைவேதம் என்று நம்பமுடியுமா?

இரு தாய் பெற்ற ஒரே பிள்ளை:

"...அபீயா யூதாவின் மேல் ராஜாவாகிய மூன்று வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர்மிகாயாள் அவள் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தி" (இரண்டாம் நாளாகமம் 13:1,2)

இந்த பைபிள் வசனம் அபீயா என்பவனின் தாயார் யார் எனக் கூறுகின்றது. ஊரியேலின் மகள் மிகாயாள் என்பதே அவனுடைய தாயாரின் பெயர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இதே ஆகமத்தில் வேறொரு இடத்தில் அவனது தாய்க்கு வெறு பெயர்கூறப்படுகின்றது.

"(ரெகோபெயாம்) அவளுக்குப் பிறகு, அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாதம் பண்ணினான். அவள் அவனுக்கு அபீயா, அத்தாயி, சிசா, ஷொலாமீத் என்பவர்களைப் பெற்றாள்." (இரண்டாம் நாளாகமம் 11:19)

இந்த வசனம் அபீயா என்பவன் மாகாள் என்பளின் குமாரன் என்று கூறுகின்றது. அபீயா என்பவன் மாகாளின் மகனா? மிகாயாளின் மகனா? இரண்டும் ஒரு பெண்ணுக்குரிய இரண்டு பெயர்கள் என்றெல்லாம் சமாளிக்க முடியாது. ஏனெனில் மாகாளின் தந்தை அப்சலோம் என்றும் மிகாயளின் தந்தை ஊரியல் என்றும் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இரண்டு தந்தையர்களுக்குப் பிறந்தவர்கள் ஒருவராக இருக்க முடியாது. ஒருவனுக்கு இரண்டு "தாய்கள்” இருக்கும் அதிசயத்தைப் பைபிளில் தான் காண முடியும்.

மேற்கண்ட 11:19 வசனம் இன்னொரு வசனத்துடனும் முரண்படுகின்றது. அதாவது மாகாள் என்பவள் அப்சலோம் என்பவனின் மகள் என இவ்வசனம் கூறுகின்றது.

"அப்சலோமுக்கு மூன்று குமாரரும் தாமார் என்று பெயர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள்” (இரண்டாம் சமுவேல் 14:27)

அப்சலோம் என்பவனுக்குத் தாமார் என்று ஒரு மகள் மட்டும் இருந்தததாக இவ்வசனம் கூறும் போது, முந்தைய வசனம் மாகாள் என்ற திடீர் மகளை அறிமுகம் செய்கிறது. முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள் தான் என்று முடிவு செய்யுமளவுக்கு மலிந்து கிடக்கும் முரண்பாடுகளை, குளறுபடிகளை உங்களுக்கு ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறோம்.

இதுதான் பைபிள்:

காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும் நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம். இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று; மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று:

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர் ஆரோக்கிய சாமி பேசும் போது, "தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது. இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார். (தினகரன்--மதுரை 1-12-93)

இதன் பிறகும் பைபிளை இறைவேதமென்று கிறித்தவர்களாகிய நீங்கள் நம்ப மாட்டார்கள் என்ற நம்புகிறோ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard