New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் இந்த முகமது ?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
யார் இந்த முகமது ?
Permalink  
 


http://veil-of-muhammad.blogspot.in/

யார் இந்த முகமது ?

 
உனது கடவுள் உன்னைக் கைவிடவில்லை, உன்னை வெறுக்கவும் இல்லை. உனது வருங்காலம், உனது கடந்த காலத்தைவிட மிகச்சிறப்பாகவே இருக்கும். வெகு விரைவில் கடவுள் உநக்கு கொடுப்பதினால் நீ திருப்தி அடையப் போகிறாய். நீ அனாதையாய் இருப்பதைக் கண்டுகொண்டு உனக்கு அடைக்கலம் தரவில்லையா ? நீ அங்கும் இங்கும் குறிப்பிட்ட நோக்கம் இன்றி சுற்றிக்கொண்டிருக்கும் போது உனக்கு வழிக்காட்டவில்லையா ? உனக்கு எதுவாகிலும் மிகவும் தேவைப்படும் போது, உனக்கு அதைக் கொடுத்து உன்னை வளம் பெறச் செய்ய வில்லையா? ) * குர்-ஆன் சுரா 93: வசனம் 3-8
இனி நாம் முகம்மதிவின் கதையிலிருந்து ஆரம்பிப்போம். அவரது வாழ்க்கையைப்பற்றி சற்று சோதனை செய்வோம். அவர் யார், அவருடைய எண்ணங்கள் தான் என்ன ? இந்த அத்தியாயத்தில், ஏன் கோடிக்கணக்கானவர்கள் அவரை அப்படியே கடவுளாகவே எண்ணி வழிப்படுகின்றார்கள் என்று விசாரணை செய்து, அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கவனிப்புக்குரியவைகளைப் பற்றி சுருக்கமாய் தணிக்கை செய்வோம். உண்மையில் இஸ்லாம் என்றாலே, முகம்மதுத்துவம் என்றால் மிகையாகாது. முஸ்லிம்கள் சொல்வதெல்லாம் அல்லாவைத்தவிர வேறு எவரையும் வழிபாடு செய்வதில்லை என்றே, ஆனால் வழக்கு முறையில் முஸ்லிம்கள் முகம்மதுவைத்தான் உண்மையில் தொழுகிறார்கள். அதையே முகம்மதுவும் எதிர்பார்த்தார்.

ஏனெனில் , அல்லா என்னும் முகம்மதினால் உண்டாக்கப்பட்ட முகம்மதின் மாற்று வடிவம் தான், மறு பெயர் தான். ஒருவர் கண்ணிலும் படாத ஆனால் அவர் பெயரைச் சொல்லி மற்றவரை சப்பி உறிஞ்சும் கைப்பாவையே தவிர, உண்மையான ஒரு நபரும் இல்லை. இஸ்லாம் என்பது முகம்மதுவினுடைய தனித்தனையின் பண்புகள் சார்ந்த ஓர் இயக்கமரபுதான். இனி, நாம் அவர் எவ்வாறு குரானில் தானே அதிகாரத்துடன் ஆணையிட்டு சொன்னதையும், மேலும், அவருடைய தோழர்களும், மனைவிமார்களும் அவரை எவ்வாறு தங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் என்றும் பார்ப்போம்.

மற்றும், அவர் எவ்வாறு ஓர் சாதரணமாக எல்லோராலும் கைவிடப்பட்ட மதபோதகராயிருந்து, உண்மையான நடப்பில், பத்து ஆண்டுகளில், முழு அரேபியாவை ஆளும் சக்தி படைத்தவரானார் என்பதையும், பிறரைப் பிரித்து அவர்களைத் தன்வசப்படுத்தினார், எவ்வாறு பிறர் மனதில் தேசத்துரோக செயலையும், வெறுப்புணர்ச்சியையும் உண்டாக்கி, மற்றவர் மீது போர் தொடுக்கத் தூண்டினார, எவ்வாறு படையெடுப்பு, கற்பழித்தல், சித்திரவதை, கொலை கொள்ளை ஆகியவற்றை செய்து இவ்வாறு துன்புற்றவர் மனதை, மேன்மேலும் அச்சுறுத்தி, அவர்களை அடிபணியச்செய்தார் என்றும் பார்ப்போம், பிறகு சமுதாயக் கொலைகளைச் செய்து, வஞ்சகத்தில், தணியாத வெறியுடன், அதையே திட்ட மிட்டுச் செய்யும் தந்திரமாக கையாண்டார் என்பதையும், இச்செயல்களையே இன்றைய பல முஸ்லிம்கள் அதே திட்டமாக எவ்வாறு செயல் படுத்திகிறார்கள் என்றும் தெரிந்துக் கொள்வோம்.

இந்நாள் முஸ்லிம்களும் அன்று அவர்களது நபிநாகயம் எவ்வாறு செயல்பட்டாரோ அவ்வாறே செய்கின்றனர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முகம்மதின் பிறப்பும், குழந்தைப் பருவமும்

 

கி.பி. 570 ஆவது வருடத்தில் அமீனா என்ற விதவைப் பெண், அரேபியா நாட்டில் உள்ள மெக்காவில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அம்மகவை, 'குத்தம்' எனப் பெயரிட்டாள். ( ஹலாபி என மற்றொரு பெயரும் உண்டு ). முகம்மது அல்லது புகழுக்குரியவர் என்ற பெயரை தனது 53வது வயதில் மதிஈனாவுக்கு குடிபெயர்ந்த பின் தானே சூட்டிக் கொண்டார். அப்பெயராலயே இன்றும், மிக பிரசித்தமாக அழைக்கப்படுகிறார். தனக்குப் பிறந்த ஒரே குழந்தையை ஆறாவது மாதத்தில், பாலைவனத்தில் வசிக்கும் ஓர் பெண்ணிடத்தில் அமீனா கொடுத்து விட்டாள்.

சிலப் பணக்கார அரேபிய பெண்மணிகள் சிலதடவை தங்களது சிறுக் குழந்தைகளுக்கு தாப்பால் சுரக்கும் தாதிகளை கூலிவேலைக்கு அமர்த்துவது உண்டு. இச்செயல் அவர்களைக் குழந்தகளைப் பேணும் பணியிலிருந்து சற்று விலக்கி, அடிக்கடி இன்னுமொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு பண்ணும். பல குழந்தைகளுக்குத் தாயானால், அவர்களுக்கு அரேபிய சமூகத்தில் தனி அந்தஸ்து ருந்தது. ஆனால், அமீனாவோ ஒருக் குழந்தைக்குத் தாயான ஏழை விதவை. முகம்மதுவின் தந்தை அபுதுல்லா இறந்துப் போன ஆறாவது மாதத்திற்கும் முகம்மது பிறந்தார். பிறரிடம் தான் பெற்ற குழந்தையைக் கொடுத்து தனியாகவே வளர்த்து வரும் இந்தப் பழக்கம் அவ்வளவு நடைமுறையிலும் இல்லை. உண்மையில், முகம்மதிவின் முதல் மனைவி கதீஜா, மெக்காவிலேயே மிகவும் செல்வம் செறிந்தவர், மேலும் தனது முதல் திருமணங்களின் வழியாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாயிருந்தாலும், அவருக்கு முகம்மதின் மூலமாக பிறந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து, ஒன்பது குழந்தைகளையும் ஒன்றாகவே வளர்த்து வந்தாள்.

ஏன் அமீனா எதற்காகத் தனது ஒரேக் குழந்தையை பிறர் வளர்த்துவர எப்படிக் கொடுத்திருக்க முடியும். முகம்மதுவின் தாயின் அந்த முடிவைப் பற்றி, மிகக் குறைவான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன.

முகம்மதுவின் தாய் அமீனாவுடைய மன உணர்வு நிலையைப் பற்றி சொல்ல வேண்டுமானால், தக்கு புதிதாகப் பிறந்த குழந்தை முகம்மதுக்கு, ஏன் தனது தாய்ப்பல் கொடுக்கவில்லை என்பது எல்லோருக்கும் ஓர் ஆவலைத் தூண்டும் தகவலாகும். அவர் பிறந்தவுடன் அக்குழந்தையை அவரது மாமனான அபூ லஹாபின் வேலைக்காரி தூய்பாவிடம் பேணத் தந்து விட்டாள் ( அபூ லஹாபையும், லஹாபின் மனைவியையும் ஒருங்கே சபித்தார் முகம்மது பிற்காலத்தில் - குரான் சுரா 111 ) ஏன் அமீனா தனது குழந்தையைப் பேணவில்லை என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை. இவை எல்லாமே நமது அனுமானம் தான். இவ்வளவு சிறு வயதிலே விதைவையானது குறித்து, மகிழ்ச்சியற்ற மனச்சோர்வா அல்லது கணவனை இழந்த துக்கமா அல்லது அடுத்து கிடைக்கும் மறுமணத்திற்குத் தடங்கலாக இருக்கலாமோ என்ற உணர்வா ? 

குடும்பத்தில் சாவு, மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மனச்சோர்வை உண்டாக்கலாம். ஒரு மணமான பெண்ணின் மனநிலை பாதிப்பை அதிகரிக்கவல்ல வேறு பல காரணங்களாவன்: தனி வாழ்க்கை, இறந்துவிட்ட கணவனால் உண்டாக்கப்பட்ட கருவினால் கவலை, மிக இளவயதில் தாம்பத்ய உடலுறவு திடீரென நின்றுவிட்டதனால் ஏற்பட்ட உடல்பசி ஏக்கம், பணமுடையினால் பிரச்சனை, சிறுவயதில் தாய்மை அல்லது வருங்காலம் எப்படி வாய்க்குமோ என்ற கலக்கம் முதலியன். அமீனவோ, தன் கணவனை இழந்து, அப்போது தனியான வாழ்வும், வறுமையுடனும், மேலும் மிக இளமையுடன் இருந்தாள். இந்த தகவலின் பேரில், அவள் மனச் சோர்வுக்கு உட்பட வேண்டிய நபர் தானே. மனச்சோருவ்ம் ஒரு மணமான விதைப் பெண்ணுக்கு வயிற்றில் வளரும் சேயுடன் இருக்க வேண்டிய உணர்விலும், மேலும், குழந்தைப் பிறக்கும் அவளது மனநிலை பாதிக்கப்பட ஒரு காரணமாகலாம். 

மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் அது கர்ப்பிணிகளின் கருவை நேராகவே பாதிக்க முடியும். அக்குழந்தைகள் மிகவும் எளிதில் கோபம்  கொள்பவராயும்,மிகவும் சோம்பேறியாகவும் ஆகலாம். அப்படிப் பிறந்த குழந்தைகள் சற்று வளர்நந்து சிறுவர்களாக வளரும் போது கற்பதில் மெதுவாகவும், உணர்ச்சிகளை பிரதிபலிக்க மறுமொழி கூறாமலும், அவர்களே வலுவில் எவரையும் தாக்குவதில் விளைவுகளினாலும் ஏற்படும் பிரச்சனைகளாலும் பாதிக்கப்படலாம்.

தொடரும் ....

பின் குறிப்புகள் :
1. ஒரு மரபுப் பிரிவினரின் கூற்றுப்படி முகம்மதுவின் உண்மைப் பெயர் குத்தாம் ஆகும். அவர் ஹலாபி என்றும் அழைக்கப்பட்டார். அவர் தமது 53ம் வயதில் மெதினாவுக்கு இடம்பெயர்ந்த போது தன் பெயரை முகம்மது என மாற்றிக் கொண்டார். அதாவது புகழுக்குரியவர் என்று அர்த்தமாகும்.

2. முகம்மதுவுக்கு கதிஜா மூலம் நான்கு மகள்களும், இரு மகன்களும் இருந்தனர். மகங்களின் பெயர் காசிம், அப்த் அல் மெனாஃப் ( மெனாஃப் என்பது குரேசிகளின் தெய்வங்களில் ஒன்று ). ஆனால் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே இறந்துவிட்டனர். அவரின் மகள்களும் பருவமடைந்து மணந்துக் கொண்டனர் ஆனால் அவர்களும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். அவரின் இளையப் புத்திரி பாத்திமாவுக்கு இரு மகன்கள் இருந்தனர். பாத்திமாவும் முகம்மது இறந்து ஆறு மாதங்களில் இறந்துவிட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நண்பரே எடுத்ததுமே 
பவுன்சர் போடுரீங்க.இந்த பதிவின் புத்தகத்தின் ஆங்கில மூலம் படித்திருக்கிறேன்.சில சந்தேகங்கள்.
/1. ஒரு மரபுப் பிரிவினரின் கூற்றுப்படி முகம்மதுவின் உண்மைப் பெயர் குத்தாம் ஆகும். அவர் ஹலாபி என்றும் அழைக்கப்பட்டார். அவர் தமது 53ம் வயதில் மெதினாவுக்கு இடம்பெயர்ந்த போது தன் பெயரை முகம்மது என மாற்றிக் கொண்டார். அதாவது புகழுக்குரியவர் என்று அர்த்தமாகும்./
அ).திரு முகமதுவின் பெயர் குரானில் நான்கு இடங்களில் மட்டுமே'முகமது 'என்றே அழைக்கப் படுகின்றார்.
3:144,33:40 ,47:2 ,48:29 நான்கு சுராக்களுமே மதினாவில் [ஹிஜ்ராவிற்கு பிற] இறங்கிய வசனங்கள்.கணக்கு சரிதான்.குத்தாம்&ஹலாபி என்று பெயர் கூறுவத்ற்கு ஆதாரம் அளிக்க முடியுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

sharfu - தோழரே ! நான் ஒன்றும் பொய் பெயரில் எழுதவில்லை. நானும் உங்களைப் போல இஸ்லாமில் பிறந்து வளர்ந்து பின்னர் அதனை வெறுத்து வெளியேறியவன் தான். இலங்கையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து - தற்சமயமும் தென் கிழக்காசிய நாடொன்றில் வசித்து வருகின்றேன் .

இங்கு நான் எழுதப் போவது குப்பையும் அல்ல, எனது பெயர் போலியுமல்ல ..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முகம்மதின் இளம்பருவம் : தாயாரின் மரணம்

 
முகம்மது முன்பின் தெரியாதவர்களின் சூழ்நிலையில் வளர்ந்தார். தான் வளரும் போது யாருடன் வாழ்ந்தாரோ, அவர்கள், தன்னைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அறிந்திருந்தார். தன் தாய் வருடத்தில் இருமுறை தன்னைப் பார்க்க வந்தாலும், ஏன் சொந்த தாய் தன்னை விரும்பவில்லை என ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

முகம்மது ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவருக்குப் பாலூட்டி வளர்த்த தாதி ஹலீமா அறுபது ஆண்டுக்குப் பிறகு சொன்ன தகவல் : முக்ம்மது வசதி இல்லாத ஓர் ஏழை விதவையின் அனாதைக் குழந்தை. பண்க்கார வீட்டுக் குழந்தை எவரும் ஹலீமாவுக்கு கிடைகவில்லை. ஆகவே எதோ உபரியாக வரும் கொஞ்ச வருமானத்தையும் உதறித்தள்ள அவள் விரும்பவில்லை என்றே கடைசியில் குழந்தையைப் பேண ஒப்புக் கொண்டாள். இச்சொல்லுலும் செயலில் அவள் குழந்தையை எவ்வாறு வேண்டா வெறுப்பாக கவனித்திருப்பாள் எனத் தெரிகிறதல்லவா ? முக்கியமாக அவருடைய குணநலத்தை நன்கு உருவாக்கப் பட வேண்டிய சிறு குழந்தைப் பருவத்தில், அன்பு காட்டாத வளர்ப்புக் குடும்பத்துடன் இருந்தது பற்றி அவருக்கு மனத்தாக்கம் இருந்திருக்கலாமோ ?

முகம்மது தனிமையான குழந்தை. கற்பனை உலகத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு, கூட யாரும் இல்லாத தனது நண்பர்களோடு கற்பனை உலகில் பேசிக் கொண்டிருப்பார் என ஹலீமா கூறினாள். உலகில் அன்பு என்பதையே உண்மையாக உணரமுடியாதா, யாராவது அன்புக் காட்டமாட்டார்களோ என ஒரு குழந்தையின் மனதில் ஏற்பட்ட ஏக்கத்தின் பிரதிபலிப்பு இப்படித்தான் இருக்குமோ ?

முகம்மதின் மனநலனைப் பற்றி அவர் தாதிக்குக் கவலை உண்டாகி அமீனாவிடம் அவரது ஐந்தாவது வயதில் திரும்ப எடுத்துச் சென்றாள். அமீனாவுக்கு வேறு கணவனும் கிடைக்காதத்தினால் குழந்தையை திரும்ப ஏற்றுக் கொள்ள முதலில் விரும்பவில்லை, பிறகு ஹலீமா அமீனாவிடம் முகம்மதுவின் விபரீதமான நடத்தையைப் பற்றியும், முகம்மதின் மனக்கற்பனையின் விலைகளையும் கூறினாள். இபின் இஷாக் ஹலிமாவின் வார்த்தைகளில் கூறுவது :

ஹலீமாவின் சொந்த மகன் என்னிடம் சொன்னது : '' இக்குழந்தைக்கு எதோ தாக்கிவிட்டதாகத் தெரிகிறது, ஆகவே இத்தாக்கத்தின் பின்விளைவுக்கு முன் இவனை அவன் குடும்பத்தில் சேர்த்துவிடு''. இவனை ஏதாகிலும் பேய் பிசாசு பிடித்துவிட்டதா என முகம்மதின் தாய் அமீனா என்னை வினவினாள். நான் பதில் சொல்லும் வரை என்னை விடவில்லை. அதற்கு 'ஆம்' என்றேன். (1)

குழந்தைகள் தங்களது படுக்கையின் கீழ் பூதங்கள் இருப்பது போல நினைப்பதும், அதைப் பற்றி தங்கள் கற்பனை நண்பர்களிடம் கூறுவதும் சாதரணமானது தான். ஆனால் முகம்மதின் வழக்கில் ஏதோ ஆபத்தான விபரீதம் போல் இருக்கின்றது. '' இவனை எதோ தாக்கிவிட்டது'' என ஹலீமாவின் கணவர் கூறினார். இந்த தகவல் முக்கியமானதாகும்.

பல வருடங்களுக்குப் பிறகு, முகம்மது தனது குழந்தைப் பருவ அனுபவங்களை சொன்னார். ஓர் விளிம்பு உயர்ந்த தங்க தாம்பாளம் நிறைய பனிக்கட்டிகளை நிரப்பி வெள்ளை உடுப்பில் இரு மனிதர்கள் என்னிடம் வந்தனர். என்னைத் தூக்கிப் போய், என் உடம்பைப் பிளந்து, எனது இதயத்தை எடுத்து அதையும் உடைத்து, அதிலிருந்து ஓர் கருப்பு ரத்தக்கட்டியை எடுத்து மிகத்தூரத்தில் தூக்கி எறிந்தனர். பிறகு பனிக்கட்டியினால் என் இதயம், உடலைக் கழுவி சுத்தப்படுத்தினர். ( 2 )

புத்தியில் அசுத்தங்கள் ரத்தக்கட்டிகளாக இதயத்தில் இருக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக நாம் அறிவோம். பாபங்கள் ரண சிகிச்சையினாலும் நீக்க முடியாது, சின்னக் குழந்தைகளுக்கு பாபம் என்பதே கிடையாது, மேலும் பனிகட்டி கழுவுவதற்கு ஒரு நல்ல சாதனமுமல்ல. இந்த முழுக்கதை நிச்சயமாக மனபிரமையின் இட்டுக்கட்டின சுத்தமான கற்பனையே. 

தற்போது முகம்மது தன் தாயுடன் சேர்ந்து இருந்தாலும், அது அதிக நாள் வரை நீடிக்கவில்லை. ஒரு வருடம் கழித்து அமனா காலமானாள். முகம்மது அவளைப் பற்றி அதிகம் கூறவில்லை. அவள் இறந்து, 53 வருடங்களுக்குப் பிறகு முகம்மதின் முதிய வயதில் மெக்காவை வென்றதும், மெக்கா மதீனாவுக்கு நடுவில் இருக்கும், அப்வாவில் உள்ள அமீனாவின் உடலை அடக்கம் செய்த கல்லறைக்கு வருகை தந்தார். ' இது என் தாயின் கல்லறை, கடவுள் இங்கு வர என்னை அனுமதித்தார், நானும் அவளுக்காக பிரார்த்தனை செய்யக் கேட்டேன், ஆனால் அதற்கு கடவுள் அனுமதி எனக்கு கிட்டவில்லை. ஆகவே, அவளை நினைவில் கொண்டேன். அவளின் மென்மையான நினைவு வந்ததும், தன்னை மீறிய சோகத்தால் அழுதேன். ( 3 ) 

ஏன் கடவுள் அவருடைய தாயாருக்காக பிரார்த்தனை செய்ய அனுமதிக்கவில்லை ? அவள் இறந்த பின்னரும் மன்னிப்புக்குத் தகுதி ஆகாதவளா ? புரியவில்லை. என்னதான் ஆனாலும் தாயல்லவா ? நேரிடையாக கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது தன் தாயை முகம்மதால் மன்னிக்க முடியவில்லை. மறக்க முடியாத மனதிலிருந்து பழைய ரணங்கள் குணமாகாததினால், மனம் நொந்து அவர் தன் தாயை அன்பு செலுத்தாத கொடூரப் பெண்மணியாகவே நினைந்து மிகவும் வெறுத்தார்.

தொடரும் ....
1. Sirat Ibn Ishar, page 72. Ibn Ishaq ( Pronounced Is-haq, Arabic for Isaac ) was a Muslim historian, born in Medina approximately 85 years after Hijra ( 704. died 768 ). ( Hijra is Muhammada's Immigration to Medina and the beginning of the Islamic calendar ), He was the first biographer of Muhammad and his war expeditions. His collection of stories about Muhammad was called  '' Sirat-al-Nabi '' ( Life of the Prophet '' ). The book is lost. However, a systematic presentation of Ibn Ishaq's material with a commentary by Ibn Hisham ( d.834 ) in the form of recension is available and translated into English. Ibn Hisham, admitted that he has deliberately omitted some of the stories that were embarrassing to Muslims. Part of those embarrassing stories were salvaged by Tabari, ( 838 -923 ) one of the most prominent and famous Persion historians and a commenrator of the Qu'ran.

2. W.Montgomery Watt: Translation of Ibn Ishaq's biograpphy of Muhammad (p.36)

3. Tabaqat Ibn Sa'd p.21. Ibn Sa'd ( 784 - 845 ) was a historian, student of al Waqidi. He classified his story in eight categoris, hence the name Tabaqat ( categories ). The First iis on the life of Muhammad ( Vol. 1 ), then his wars ( Vol. 2), his campanions of Mecca ( Vo/ 3), his companions of Medina (Vol. 4), his grand children, Hassan and Hussein and other prominent Muslims ( Vol. 5), the followers and the companions of Muhammad  ( Vol. 6), his later imporatan followers ( Vol. 7 ) and some early Mulsim women ( Vo. 8 ). The quotes from Tabaqat used in this book are taken from the Persian translation by Dr. Mahmood Mahdave Damghani. Publisher Entesharat-e Farhaand Va Andishesh. Tehran, 1382 solar hijra ( 2003 AD ).


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அருமையான நடை
இபின் இஷாக்,வாகிதி,தபரி மூவரின் எழுத்துகள் அக்கால கட்டத்தில் அதிகம் எதிர்க்கப்[விமர்சிக்க] படவில்லை,தடை செய்யப் படவில்லை என்றே தோன்றுகிறது.ஒருவேளை தடை செய்யப் பட்டு இருந்தால் இப்போது கிடைத்திருக்காது.இப்போதைய பிரச்சாரகர்கள் இம்மூவரின் எழுத்துகள் பலமற்ற ஹதிதுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்று ஏற்றுக் கொள்வதில்லை.
சில சமயம் ஆதார பூர்வ ஹதிதுகளிலும் சில உண்மைகள் வெளிப்பட்டு விடுகின்றன.இத்னையும் ஹதிதுகளை திருப்பி சோதித்து நீக்க வேண்டும் என்னும் குர‌ல் எழுவது இத்னால்தான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard