New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 32. சிந்து முதல் சோழன் வரை.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
32. சிந்து முதல் சோழன் வரை.
Permalink  
 


32. சிந்து முதல் சோழன் வரை.

 


ராமர் காலத்துக்கு முற்பட்ட யயாதியின் பிள்ளைகள் காலத்தில் ஆரிய- தஸ்யு போராட்டம் நடந்தது என்று பார்த்தோம். அதன் விளைவாக மேற்கு ஆசியாவுக்கும், ஆஃப்கனிஸ்தானத்தில் உள்ள காந்தஹார் பகுதியான காந்தாரத்துக்கும் விரட்டப்பட்ட மக்கள் யவனர்கள், மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் பார்த்தோம். இவர்கள் காலத்திற்குப் பிறகே சுமேரிய நாகரிகம் மற்றும் ஐரோப்பிய மக்களானகிரேக்க ரோமானியர்கள் காலமும் ஏற்பட்டது. இவை காலத்தால் பிந்தியவை என்று தொல் பொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கிளைகளுள் மேற்கு ஆசியா நோக்கிப் பரவின மக்களிடையே ராம சரிதம் பரவியது. இன்றைய ஈரான் தொடங்கி இஸ்ரேல் வரை ராம நாமம் புழங்கியதுராமல்லா என்னுமிடம் இன்றும்இஸ்ரேலில் இருக்கிறது. ஈராக்கில் ராமாதி, ராம்தியா  என்னுமிடங்கள் இருக்கின்றன. இந்தப் பெயர்கள் கிருஸ்துவம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளனஈரான், ஈராக், சிரியா, லெபனான், இஸ்ரேல் போன்ற இடங்களிலும், ஸ்பானிஷ். லத்தீன் மற்றும் யூதர்மொழியிலும் ராம்ஜே, ராம்ஜூ, ராமிரேஜ், ரமீ, ராமி, ராமசெஸ் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணமாக உள்ளன.
இவற்றை தமிழன் திராவிடனா என்று அலசும் தொடரில் சொல்ல முக்கியக் காரணம் இருக்கிறது. மேலே கூறப்பட்ட இடங்கள், அவற்றுள் குறிப்பாக சுமேரிய நாகரீகம் இருந்த அரேபியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் திராவிடர்கள் என்று தமிழ் மக்களிடையே ஒருபுறம் பரப்பபட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக, சிந்து சமவெளிப் பகுதியின் வட மேற்குப் பகுதியில் அதாவது இன்றைய பலுசிஸ்தான் பகுதியில்கலத் என்னுமிடத்தில் வாழும் மக்கள் பேசும் ப்ரோஹி என்னும் மொழியில் திராவிட மொழிகள் என்று பெயரிடபட்டுள்ள தென்னிந்திய மொழிகளின் சாயல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த மக்கள் ஆரியப் படையெடுப்பு நடந்த பின்னும், அங்கேயே தங்கி விட்ட மக்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. ஆரியன் என்னும் எதிரி இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்னும் நிலையில் உள்ள திராவிட அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் அடிவருடிகள், ப்ரோஹி மொழியை ஒரு ஆதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 
Brauhi.bmp

இந்தப் படத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள இடஙகளில் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவின் வட மேற்கே இருக்கும் சிவப்பு நிறப்பகுதி ப்ரோஹி பேசபப்டும் இடங்கள். இந்த மொழி கலத், பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இடங்களிலும், ஆஃப்கனிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் சில மக்களாலும் பேசப்படுகிறது.
இந்த காரணத்தால் அந்த மக்கள் எஞ்சி நின்ற திராவிடர்கள் என்று சொல்வது பொருந்தாது என்று காட்டவே அந்தப் பகுதிகளில் வேத மதக் கலாச்சாரமும், ராமன் விளைவும்’ எவ்வாறு பரவியிருந்தது என்று நாம் காட்டினோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ப்ரோஹி மக்களது மொழியை எடுத்துக் கொண்டால் அதில் 15 % அளவே திராவிட மொழிகளின் கலப்பு இருக்கிறது. திராவிட மொழிகளுக்கு உள்ள ஒற்றுமை காரணமாக அதைப் பேசும் மக்களும் ஒருவரே என்றால், உலகில்  88 நாட்டு மக்கள் பேசும் மொழிகளில் திராவிடக் கலப்பு இருக்கிறது. இமய மலைக்கு வடக்கில் எங்கோ இருக்கும் மங்கோலிய நாட்டில் பேசப்படும் மங்கோலிய மொழியிலும் தமிழ்ச் சொற்கள் உள்ளன. மத்திய ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டில் பேசப்படும்ஹங்கேரிய மொழியிலும் தமிழ் சாயல் இருக்கிறது. இந்த ஹங்கேரியப் பகுதி இருக்கும் மத்திய ஐரோப்பா, ஆரியர்கள் இருந்த பகுதிகள் என்று திராவிடவாதிகள் சொல்கிறார்கள். இதனால் சமஸ்க்ருதமே தமிழிலிருந்துதான் வந்தது என்று சொல்லும் ஒரு சாராரும் உள்ளனர்.
இந்த விவரங்களில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று நாம் பார்ப்பதற்காக இந்த வட பகுதியை, அதன் முந்தைய சரித்திரத்தை நாம் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது.
இதைத் தொடங்கும் முன் காலக் கட்டத்தை நாம் அறுதியிட வேண்டும். ஒரு சில நிகழ்ச்சிகள் நடந்த காலத்தை நம்மால் குறிக்க முடிந்தால், அவற்றை அடிப்படையாக வைத்து பிற நிகழ்ச்சிகளது காலத்தை நம்மால் நிர்ணயம் செய்ய முடியும்.
அப்படி அடிப்படைகளாக இருப்பவை, கலியுகம் தொடங்கிய காலமும், ராமன் வாழ்ந்த காலமும் ஆகும். பாரத சரித்திரத்தில் ராமன்கிருஷ்ணன் ஆகியோர்  காலம் விண்வெளி அறிவியலால் குறிக்கப்படக் கூடியவை.
கிருஷ்ணன் இறந்தவுடன் கலிகாலம் ஆரம்பித்தது. இது பிரபஞ்ச அளவில் சூரியன் நமது பால்வெளி நட்சத்திர மையத்தைச் சுற்றி வரும் மஹாயுகக் கணக்கில் வருவது. இந்தக் கலிகாலம் ஆரம்பித்தபோது ராகு, கேது நீங்கலாக பிற கிரகங்கள் சித்திரை மாதம் ஆரம்பிக்கும் மேட ராசியின் பூஜ்யம் பாகையில் ஒன்று  கூடின என்று பல வான சாஸ்திர நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணன் இந்த உலகை விட்டு நீங்கிய போது இந்த விண்வெளி அமைப்பு இருந்தது. இந்தக் குறிப்பு மட்டுமல்லாமல், மஹாபாரதப் போர்  ஆரம்பித்த போது இருந்த கோள் நிலைக் குறிப்புகளும், மற்றும் பிற இடங்களில் உள்ள குறிப்புகளும் இன்றைய அறிவியலால் ஆராயக் கூடியவை. இவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தும் உள்ளனர். அதன்படி மஹாபாரதப் போர் நடந்து 5000 வருடங்கள் ஆகி விட்டன.
தொடர்ச்சியாக காலம் காலமாக இந்த நாட்டில் பஞ்சாங்கம் எழுதப்பட்டு வருகிறது. அதிலும் கலியுகம் தொடங்கிய வருடம் துல்லியமாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தை, மஹாபாரதம், ஹரி வம்சம், பாகவதம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள கிருஷ்ணனது காலத்தைக் கொண்டும் சரி பார்த்துள்ளனர். அதன்படி கி.மு. 3102 ஆம் வருடம் கலியுகம் ஆரம்பமானது என்று தெரிகிறது.
அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு கலியுகம் ஆரம்பித்திருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்தக் காலக் கட்டத்தில்தான் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது.
இதே காலக் கட்டத்தில் நைல் நதிக் கரையில் எகிப்திய நகரிகம்ஆரம்பித்தது. ஈராக் பகுதியில் சுமேரிய நகரிகம் ஆரம்பித்தது.
இதே காலக்கட்டத்தில் நடந்த மஹாபாரதப் போரில் இந்தப் பகுதிகளிலிருந்த மக்களும் கலந்து கொண்டனர்.
போர் முடிந்து அமைதி திரும்பிய பின், ஆங்காங்கே இருந்த மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கின்றனர்.
அவற்றின் சுவடுகள் அகழ்வாராய்ச்சியில் இந்த நாகரிகங்களாகத் தெரிகின்றன.
எனவே மஹாபாரதக் காலம் ஒரு அடிப்படை.
அதற்கு முன் வருவது ராமனது காலம்.
ராமாயணத்தில் உள்ள கோள் நிலைகள் உண்மையானவை என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ராமர் கி-மு- 5114 இல் பிறந்தார் என்று ஆராய்ச்சியாளர் பட்னாகர்அவர்கள் காட்டியுள்ளார்.
அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் ராமன் வாழ்ந்திருக்கிறார். இந்தக் காலம் மற்றுமொரு அடிப்படை.
ஆரிய  தஸ்யு போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து வகை மக்கள், ராமனது தந்தையின் கொள்ளுத்தாத்தாவின் பிள்ளைகள்.
எனவே ஆரிய  தஸ்யு போராட்டத்தைப் பற்றி நாம் பேசும் போது 7000 வருடங்களுக்கு முந்தின காலத்தைப் பற்றிப் பேசுகிறோம்.
இந்த ஐவகை மக்களில் ஒருவர் கூட ராமன் வம்சாவளியில் சொல்லப்படவில்லை (பகுதி 13).
யயாதிக்குப் பிறகு நாபாகன் பட்டத்துக்கு வந்திருக்கிறார். அவரையும் யயாதியின் பிள்ளையாக வசிஷ்டர் ராமனது திருமணத்தின் போது சொல்கிறார். (வால்மீகி ராமாயணம் 1-7-42)
நாபாகன் இக்ஷ்வாகு குலத்தில் வருகிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யயாதியின் தகப்பன் நஹுஷன்.
அவன் இக்ஷ்வாகு பரம்பரையிலும் வருகிறான்.
அவனது முன்னோனாக வருபவன் புரூரவஸ்.
இவன் சந்திர குல அரசன் என்று புராணங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வருகிறது.
ஆனால் அவன் வழியில்வந்த நஹுஷன் சூர்ய குல இக்ஷ்வாகு வம்சத்தில் வருகிறான்.
இப்படி இரண்டு இடங்களிலும் வரவே குழப்பம் வருகிறது.
ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் ஆண், பெண் இருவருமே பல திருமணங்கள் செய்தனர். பல திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகள் யார் யாருக்குப் பிறந்ததோ அந்தந்த வம்சாவளியில் அரசுரிமை பெற்று ஆண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும், தங்கள் பெயரிலும் ஆட்சி, பரம்பரை என தனியாக ஸ்தாபித்துள்ளனர். இந்த விவரங்கள் அடிப்படையில் ஒருவரே இரு வேறு வம்சாவளியில் தனித் தனியாக குறிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்பது புலப்படுகிறது.
இன்றைக்கு இருப்பது போலத் திருமணச் சட்டங்கள் அந்தக் காலக் கட்டத்தில் இல்லை.
குறிப்பாக பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது என்று பல இடங்களில் சொல்லப்படுகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலை கண்டிப்புடன் கடைபிடிக்கப்படவில்லை. ஒரு பெண்ணே பலரை மணந்து பல குழந்தைகளைப் பெற்ற விவரங்கள் உள்ளன.
இதன் அடிப்படையில் காணும் கதைகளை திராவிடவாதிகள்  கேவலமாக விமரிசித்துள்ளனர்.
அவர்கள் ஒரு விவரத்தை அறிய வேண்டும்.
எந்த மன்னன் சங்கப் புலவர்களால் போற்றப்பட்டானோ,
எந்த மன்னன் சோழ மன்னர்களது குல விளக்காகக் கருதப்பட்டானோ,
அந்த மன்னான சிபிச் சக்கரவர்த்தி கேவலம் என்று சொல்லப்பட்ட முறையில் பிறந்தவன்.
அவன் பரம்பரையில் வந்தவர்களே சோழர்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிபியின் பிறப்பு கேவலமாக இருந்திருந்தால் அவனை அப்படிக் கொண்டாடியிருப்பார்களா?
இதனால் அந்த வழக்கம் அன்று கேவலமானதாகக் கருதப்படவில்லை என்றும், அப்படிக் கேவலமாகவே இருந்தாலும்,
பிறப்பினால் ஒருவனை மதிப்பீடு செய்யவில்லை,
அவன் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டுதான்  மதிப்பீடு செய்தனர்என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
பிறப்பால் சூத்திரன் போன்ற வர்ணங்கள் கருதப்படவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
இனி சிபியின் பிறப்பு எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆரிய- தஸ்யு போராட்டம் செய்த ஐவகை சகோதரர்களது தந்தையான யயாதி வாழ்ந்த காலத்தில் இது நடந்தது.
அப்பொழுது விஸ்வாமித்திர ரிஷியிடம் கவலர் என்பவர் பாடம் பயின்றார். அவர் விஸ்வாமித்திரரது மகனும் கூட.
படிப்பு முடிந்தவுடன் சந்தோஷமாக விஸ்வாமித்திரர் அவரை அனுப்பி வைத்தார்.
ஆனால் கவலர் அவருக்குக் குருதட்சிணை கொடுக்க விரும்பினார். விஸ்வாமித்திரர் தட்சிணை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் பிடிவாதமாகக் கவலர் தான் அவர் கேட்கும் தட்சிணையைத் தருவதாகக் கூறினார்.
இதனால் எரிச்சல் அடைந்த விஸ்வாமித்திரர்,
‘நான் கேட்கும் தட்சினையைக் கொடுக்க முடியுமா?
800 குதிரைகள் கொண்டு வா.
ஆனால் சாதாரண குதிரைகள் அல்ல.
காதுகள் மட்டும் கருப்பாக இருக்கும் அஸ்வமேதக் குதிரைகள் 800 -ஐக் கொடு”  என்றார்.
அப்படிபட்ட குதிரைகள் அதிகம் இல்லை.
பெரிய அரசர்கள் சிலர் மட்டுமே அப்படிப்பட்ட குதிரைகளை வைத்திருந்தனர். கவலருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அந்தக் காலக்கட்டத்தில் யயாதி மிகவும் பெயர் பெற்ற அரசனாக இருந்தான். ஆனால் அந்தச் சமயம் வானப்ப்ரஸ்தனாக காட்டில் ஆஸ்ரமம் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவனிடம் கவலர் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். யயாதியிடம் பொருள், குதிரை எதுவும் இல்லை. அதனால் இந்திரன் அருளால் தேவ கன்னிக்கும், தனக்கும் பிறந்த மாதவி என்னும் தன் மகளை அவரிடம் ஒப்படைத்து இவளை அத்தகைய குதிரைகள் கொண்ட அரசனிடம் திருமணம் செய்வித்து, நீங்கள் விரும்பிய குதிரைகளைச் சீதனமாகப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
அந்த நாளில் திருமணம் செய்ய விரும்பும் ஆண், தனம், சீர் போன்றவற்றைப் பெண் வீட்டாருக்குக் கொடுத்துத் திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் முடிந்து மகன்கள் பிறந்ததும், மீண்டும் அவள் கன்னித் தன்மை அடைவாள். அவளைத் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும்.
அவளுக்கு இந்தப் பூவுலகை ஆளும் திறன் படைத்த தலை சிறந்த நான்கு மகன்கள் பிறப்பார்கள் என்றும் வரம் கொடுத்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்தச் சம்பவம், பாண்டவர்கள் பிறப்பை நினைவூட்டுகின்றது.
அதைப் பர்றிப் பிறகு பார்ப்போம்.
மாதவியை, கவலர் இக்ஷ்வாகு குலத்து அரசனான ஹர்யாஸ்வன்என்பவனிடம் அழைத்துக் கொண்டு போனார்.
அவர் மாதவியை மணது கொள்ள சம்மதித்தார்.
ஆனால் காது மட்டும் கருப்பாக உள்ள அஸ்வமேத குதிரைகள் 200 மட்டுமே அவரிடம் இருந்தன.
இதைப் போல வேறு சில அரசர்களிடமும் 200 குதிரைகள் இருந்தன.
எனவே மாதவியை ஒவ்வொரு அரசருக்கும் மணம் முடித்து, ஒரு மகன் பிறந்த பின், அவள் கன்னிமையை அடைந்து மீண்டும் இன்னொரு அரசனை மணந்தாள்.


அப்படி அவள் மணந்த முதல் அரசன் இக்ஷ்வாகு குல ஹர்யாஸ்வன்.அவனுக்குப் பிறந்த மகன் வஸுமனஸ். அவன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினான்.
மாதவி இரண்டாவதாக மணந்த அரசன் திவோதாசன்.
முன்பு (பகுதி 23) பார்த்தோமே சுதாசின் தந்தையான திவோதாசன் அவன்தான் இவன்.
எந்த அரசன் சூத்திர அரசன் என்று இன்று தலித் இலக்கியம் படைப்பவர்கள் சொல்கிறார்களோ அவர்கள் சொல்லும் சுதாஸ் என்னும் பைஜவனனின் தந்தை ஒரு அக்ரிமெண்ட் மூலம் திருமணம் செய்தவன்.
அந்த அக்ரிமெண்ட்டின் படி அபூர்வமான குதிரகள் 200 ளைக் கொடுத்தவன். அப்படிப்பட்ட அபூர்வக் குதிரைகளைக் கொண்டவன் சூத்திர அரசனது தந்தை!
இந்த திவோதாசனுக்குப் பிறந்தவன் ப்ரதர்தனன் என்னும் தலை சிறந்த வீரன். இவன் பிறந்த பிறகு மாதவி மீண்டும் கன்னித் தன்மை பெற்று மூன்றாவதாகச் சென்ற அரசன் உசீனரன்.
இவனிடம் மாதவிக்குப் பிறந்த மகனே சிபி ஆவான்.
அந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன்.அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.
ஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.
அவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.
அவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
அப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள்என்றழைக்கப்பட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இதற்கு மேல் மாதவி கதையை நாம் மீண்டும் ஒரு பகுதியில் தொடர்வோம். இங்கு சிபியைப் பற்றி அறிவோம்.
சிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி!!
சிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.
அங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.
இன்றைக்கு அங்கு இருக்கும் மக்களுக்கு சிபியின் சரித்திரம் தெரியாது. இஸ்லாம் அவர்களை தன் பிடிக்குள் வைத்திருக்கிறது.
ஆனால் இந்த இடத்தை ஆண்டவன் சிபியே என்று காலம் காலமாகக் கூறப்பட்டு வந்திருக்கின்றது.
ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
புறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.
இந்த சிபி இருந்தது ராமனுக்கும் முற்பட்ட யயாதியின் காலத்தில்.
அவன் வாழ்ந்த காலத்தில் ஆண்களும், பெண்களும் பலருடன் குடும்பம் நடத்தி பிள்ளைகள பெறுவது சகஜமாக இருந்திருக்கிறது.
ஆனால் அவையெல்லாம் அங்கீகாரம் பெற்ற திருமணங்களே.
அந்த வகையில் சிபிக்கும் பல பிள்ளைகள் பிறந்திருக்கலாம்.
மஹாபாரதத்தில் சிபியின் வாரிசாக கபோதராமன் என்பவன் சொல்லப்படுகிறான்.
அவன் சிபி நாட்டுக்கு அரசனானான்.
சிபியின் மற்றொரு மகனான கோபதி என்பவனைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவன் பரசுராமனுக்கு பயந்து காட்டில் வாழ்ந்தான் என்று சொல்லப்படுகிறது.
சிபி வம்ச சௌவிர வம்சம் என்று அவன் பெயரால் உருவானது.
ஆனால் அவன் தந்தை போஜ வம்சம் என்று வருகிறது.
யயாதியின் மகள் தொடர்பால் சந்திர வம்சம் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் சோழர்கள் சூர்ய வம்சம் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். வேறு வேறு திருமணங்கள் மூலம் சூர்ய வம்சத் தொடர்பு கிட்டியிருக்ககூடும். ஆனால் சோழ வர்மன் தமிழ் நாட்டில் வந்தமர்ந்த பின் தொடர்சிசியாக வம்சாவளி சென்றிருக்கும்.
பொதுவாகவே தாய் வழித் தொடர்பு இருக்கும் போது சந்திர வம்சம்என்று அழைத்துக் கொண்டார்கள்.
தந்தை வழித் தொடர்பு இருக்கும் போது சூரிய வம்சம் என்று அழைத்துக் கொண்டார்கள்.
உதாரணமாக பாண்டியர்கள் தங்களை சந்திர வம்சம் என்று அழைத்துக் கொண்டார்கள். சோமசேகரக் கடவுளின் முடியில் இருக்கும் பிறை காரணமாக இந்தப்பெயர் வந்தது என்று குறிப்புகள் உள்ளான.
ஆயினும் மீனாக்ஷி அம்மையின் தொடர்புக்குப் பிறகே இந்த வம்சாவளிப் பெயர் தொடங்கியிருக்க வேண்டும்.
சோழர்கள் விஷ்யத்தில், சோழ வர்மனுக்கு முன்பே சோழ வம்சாவளி ஆரம்பித்து விடுகிறது என்பதைப் பகுதி 11 இல் பார்த்தோம்.
புகார் போன்ற நகரங்கள் என்றோ அமைக்கப்பட்டு அங்கு இக்ஷ்வாகு குல மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர். இவ்வாறு பாரதம் முழுவதும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்ததை இதன் மூலம் அறியலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிபி வாழ்ந்த காலத்தில், சிந்து நதிப் பகுதியில் ஆண்டிருக்கிறான்.
அவனும் வேத மரபைக் கடைப் பிடித்திருக்கிறான்.
சிந்து நதிப் பகுதியில் இருக்கவே அவன் வெளியிலிருந்து வந்தவன் இல்லை. அவனுக்கு முந்தின வம்சாவளி கங்கைக் கரையில், இக்ஷ்வாகு பரம்பரையில் ஆரம்பித்திருக்கின்றது.
Sibi-Kandahar.bmp

இந்தப் படத்தில் சிபி, காந்தஹார் (காந்தாரம்) பகுதிகளைக் காணலாம். மூன்றாவது அம்புக் குறி மெலிதான நீல நிறத்தில் செல்லும் சிந்து நதியைக் காட்டிகிறது. இந்த நதி கராச்சி அருகே கடலில் கலக்கிறது.
சிபி ஆண்ட அந்தப் பகுதியை ஒட்டி முன்னம் குறிப்பிட்ட ப்ரோஹி மொழி பேசும் மக்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படியென்றால் சிபி காலம் தொடங்கி அவர்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
தேவ பாஷை என்று சொல்லப்பட்ட சம்ஸ்க்ருதம் வேத மொழியாக இருந்திருந்தாலும், சாதாரண மக்கள் பேசும் மொழி சமஸ்க்ருதம் அல்ல.
சிபியின் காலத்துக்குப் பின் வந்த ராமனது காலத்தில், சீதை லங்கையில் சிறை வைக்கப்பட்ட பொழுது அவளைப் பார்த்த அனுமன் சிந்தித்தான்.
எந்த மொழியில் சீதையுடன் பேசலாம் என்று சிந்தித்தான்.
பண்டிதர்கள் பேசும் சமஸ்க்ருத மொழியில் பேசலாமா?
ஆனால் அப்படிப் பேசினால் ஒரு வானரம் சம்ஸ்க்ருதம் பேசுமா? பேசாது, எனவே இது ராவணனது தந்திரம்தான்.
ராவணனே வானர ரூபத்தில் வந்து பேசுகிறான் என்று சீதை நினைப்பாள். எனவே சாதாரண மனிதர்கள் பேசும் அர்த்தங்கள் நிரம்பிய மனுஷ்ய பாஷையில் அவளுடன் பேசலாம் என்று அனுமன் தீர்மானித்து, மதுரமான மனித பாஷையில் சீதையிடன் பேசத் தொடங்கினான் என்று வால்மீகி கூறுகிறார். (சுந்தர காண்டம் -19)
(தேவ பாஷையான சம்ஸ்க்ருதம் புழங்கிய அதே காலக்கட்டத்தில், பரவலாக மனிதர்களிடையே வேறு ஒரு பாஷை பேசப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது.)
hanuman+%2526+Sita.bmp
இது நடந்த இடம் இலங்கை.
இமயமலைச் சரிவில் உள்ள மிதிலையில் பிறந்து, அயோத்தியில் வாழ்ந்த சீதை, தென் பகுதி லங்கையில் சிறைப்பட்ட போது அவளுடன் ராவணன் சம்ஸ்க்ருதத்தில் பேசியிருக்கிறான் என்பது அனுமன் சொல்வதிலிருந்து தெரிகிறது.
அனுமன் இப்படி பேச முடிவு செய்ததற்கு முன் ராவணன் அங்கு வந்து சீதையிடம் பேசியதை அனுமன் கேட்டிருக்கிறான். எனவே ராவணன் சம்ஸ்க்ருதத்தில் பேசினான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
எவனை திராவிடன் என்று திராவிடவாதிகள் கொண்டாடுகிறார்களோ அவன் சமஸ்க்ருத நிபுணன்.
அவன் தமிழ் போன்ற பாஷையில் பேசவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆனால் அனுமன் சம்ஸ்க்ருதம் தவிர்த்து, வேறு ஒரு பாஷையில் பேசியிருக்கிறான்.
வட புலத்தில் வாழ்ந்த சீதைக்கு அந்த பாஷை தெரிந்திருக்கிறது.
ரிஷ்யமுக பர்வதத்தில், தென்னிந்தியாவில் வாழ்ந்த வானரமானஅனுமனுக்கும் அதே பாஷை தெரிந்திருக்கிறது.
ஆக, பாரதம் முழுவதும், வடக்கு தெற்கு என்னும் வித்தியாசம் இல்லாமல், சாதாரண மக்கள் பொதுவாக ஒரு பாஷையைப் பேசியிருந்தால்தான் இது சாத்தியமாகும்.
இது ராமன் காலத்தில் நடந்திருக்கிறது.
அவனுக்கு 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சிபி காலத்திலும் இந்த மனித பாஷை ஒன்று இருந்திருக்க வேண்டும்.
அந்த சிபி இருந்தது சிந்து நதி தீரம்.
அவனது சந்ததியான சோழ வர்மன் இருந்தது தமிழ் நாடு.
அங்கும், இங்கும் ஒரே பாஷைதானே மக்களுக்குள் இருந்திருக்க வேண்டும்?
ப்ரோஹி பாஷை வழங்கும் பகுதிகள் சிபியின் பகுதியைச் சார்ந்தவை.
ப்ரோஹி மொழியைப் பேசும் இன்றைய மக்கள் இரானிட் எனப்படும் இரானிய மக்கள் வம்சத்தில் வந்தவர்கள்.
இரானியர்களுக்கும் இவர்களுக்கும் மரபணு ஒற்றுமை இருக்கிறது.
இவர்களிடம் தமிழர்கள் சாயல் இல்லை.
இன்றைக்கு இருக்கும் இந்த மக்கள் அவர்கள் வாழும் அட்சரேகைப் பகுதியின்படி நல்ல நிறமாகத்தான் இருக்கிறார்கள்.
ஆரிய- தஸ்யு போர் முடிவில் இந்தப் பகுதி (அதாவது சிந்து நதிக்கு மேற்கே) மக்கள் கலந்திருக்கின்றனர்.
sibi+%2526+Brauhi.bmp

பாரதம் முழுவதும் வழங்கி வந்த மனித மொழி எனப்படும் அந்த மொழியின் மிச்சம் மீதி என்று இன்றும் அங்கு இருக்கிறது. சம்ஸ்க்ருதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கவே அங்கு அதை ஒட்டி பாஷைகள் பின்னாளில் எழுந்திருக்கின்றன.
ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் பேச்சு மொழியாக என்றும் இருந்திருக்கின்றது.
அந்த மனித பாஷை, பிற தென்னிந்தியப் பகுதிகளில் நாளடைவில், உருமாற்றம் அடைந்து, பிரிந்து இன்று ஒரே இனமாக திராவிட மொழிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்த மொழி சிபியிலிருந்து வரவில்லை.
பாரதம் முழுவதுமே இருந்திருக்கின்றது.
அனுமன் சொல்வதிலிருந்து இது தெரிகிறது.
ஆனால் காலப் போக்கில் வடக்கில் அதன் பயன்பாடு குறைந்திருக்கிறது. தெற்கில் அது நிலைத்து நின்றிருக்கிறது.
அதை வளர்க்க மன்னர்களும் பாடுபடவே சங்கத் தமிழாக அது சாகாவரம் பெற்றிருக்கிறது. இந்த மொழி தொடர்பான விவரங்களைப் போகப் போக மேலும் அறிவோம்.
ஆனால் இந்தப் பகுதியில் நாம் அறிய வேண்டியது, இடப் பெயர்வு மூலம் மொழி பெயரவில்லை.
7000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே மொழியாக தமிழ் பாரதம் முழுவதும் இருந்திருக்க வேண்டும்.
5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணன், இரண்டாம் சங்கத்தில் கலந்து கொண்டார் என்று இறையனார் அகப்பொருளில் நக்கீரர் கூறுகிறார்.
தமிழ் தெரியாமல் கிருஷ்ணன் கலந்து கொண்டிருப்பாரா?
இல்லை, தமிழ்ச் சங்கத்தில் உட்கார்ந்து அவர் சம்ஸ்க்ருதம் பேசினார் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறதா?
எனவே தமிழ் பாரதம் தழுவிய மொழியாக இருந்திருக்க வேண்டும்.
சிபி முதல், அதற்கப்பாலும் வாழ்ந்த பாரத மக்கள் அதைப் பேசியிருக்க வேண்டும்.
காலப்போக்கில் மொழி மாறியிருந்தாலும் சில வார்த்தைகளாவது அந்த மொழிகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் பல விதங்களிலும் தமிழ் மொழி பிற இடங்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றை இந்தத் தொடரில் காணலாம்.
இங்கு சிபியின் ராஜ்ஜியம் மேற்கொண்டு என்ன ஆனது என்று பார்ப்போம். சிபியின் காலத்திலோ அல்லது அவனுக்குப் பிறகோ யயாதியின் மகன்களுக்கிடையே போர் நடந்திருக்கின்றது. சிபி ராஜ்ஜியமும், யுத்தம் நடந்த இடத்தில் அமைந்திருந்தது. அந்தப் போரின் தாக்கம் சிபி நாட்டின் மீது இருந்திருக்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

போரின் முடிவாக ஒரு குழு மேற்கு ஆசியாவுக்குப் பரவியது. மற்றொரு குழு வடக்கு ஐரோப்பா நோக்கி, காந்தாரம் வழியாகச் சென்றிருக்கிறது என்று முன்பே பார்த்தோம்.
இது நடந்து 2000 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாபாரதப் போர் நடந்திருக்கிறது.
அந்தப் போரின் காலக்கட்டத்தில் சிபியில் சௌவிர வம்சம்தொடர்ந்திருக்கிறது.
அதை ஆண்டவன் ஜெயத்ரதன்.
இவன் கண் தெரியாத அரசனான திருதராஷ்டிரனது மருமகன்.
துரியோதனன் உள்ளிட்ட நூற்றுவரது ஒரே சகோதரியான துஸ்சலைஎன்பவளை மணம் புரிந்தவன்.
இவன் சில பொல்லாத செய்கைகளைச் செய்தவன்.
இவனுக்கும் பாண்டவர்களுக்கும் அதீதப் பகை.
போரில் அர்ஜுனன் கையில் மாண்டான்.
இவனுக்குப் பிறகு இவன் நாடு பாண்டவர்கள் ஆளுகைக்குள் வந்தது. ஆனால் அவனது மக்கள் வேத வழியில் நடந்தவர்களா என்பது கேள்விக்குறியே.
ஏனென்றால் பிற்காலத்தில் சிபி மக்கள் மாமிசம் சாப்பிட்டனர் என்றும், வேத வாழ்க்கைக்குப் புறம்பாக மிலேச்ச வாழ்க்கை வாழ்ந்தனர் என்றும் மஹாபாரதம் சொல்கிறது. அது மட்டுமல்ல, அவர்கள் வட ஐரோப்பா நோக்கி இடம் பெயர்ந்தும் இருக்கின்றனர்
இன்றைய தஜிக்ஸ்தான் பகுதிகளில் உள்ள ஓக்ஸஸ் என்னும் நதிப் பகுதிகளுக்கு இவர்கள் இடம் பெயர்ந்து இருக்கின்றனர்.
இந்த நதியை சக்‌ஷுஸ் அல்லது வக்‌ஷ் என்று பாரத நாட்டவர்கள் அழைத்திருக்கின்றனர். இந்த நதி பாரத நாட்டின் வட மேற்கு எல்லையாக இருந்திருக்கிறது.
கங்கைக்கு ஒப்பாக இந்த நதி மஹாபாரதம், புராணங்களில் சொல்லப்படுகிறது.
இந்த நதி தீரத்தில் யவனர்கள், சாகர்கள், காம்போஜர்கள் போன்றவர்களுட்ன் உஸீனரர்கள் (சிபியின் தந்தை உஸீனரர், இந்த வம்சாவளியினர்) வாழ்ந்தனர். இவர்கள் வாழ்க்கை மிலேச்ச வாழ்க்கை என்றும் மஹாபாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
chakshus+river+%2528Oxus%2529.bmp
இந்தப் படத்தில் அமூதர்யா என்று குறிக்கப்பட்டுள்ள கீழ்ப்புறம் உள்ள நீல நிற நதி சக்ஷுஸ் அல்லது வக்‌ஷ் நதி ஆகும். தற்காலத்தில் அமூதர்யா என்னும் பெயர் இதற்கு வழங்கி வருகிறது. முன்பு ஓக்சஸ் என்று அழைக்கப்பட்டது. 
இந்த ஓக்சஸ் நதி கிரேக்க சரித்திரத்தில் முக்கியமானது.
இன்று இங்கு வாழும் மக்கள் எல்லாம் ஐரோப்பியர்கள்.
ஆனால் இவர்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள். அவர்கள் பேசும் மொழியில், பழமைக் கதைகளில் பாரதக் கலாச்சாரத்தின் சாயல் இருப்பதில் வியப்பில்லை.
ஆனால் எங்கிருந்து எது உண்டானது என்பதில் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் குழப்பம் ஏற்படுத்தி விட்டனர்.
பாரதத்திலிருந்து கலாச்சாரம் பரவியதை நம் புராண , இதிஹாசங்கள் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதை இன்னும் செல்கிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard