ராமர் காலத்துக்கு முற்பட்ட யயாதியின் பிள்ளைகள் காலத்தில் ஆரிய- தஸ்யு போராட்டம் நடந்தது என்று பார்த்தோம். அதன் விளைவாக மேற்கு ஆசியாவுக்கும், ஆஃப்கனிஸ்தானத்தில் உள்ள காந்தஹார் பகுதியான காந்தாரத்துக்கும் விரட்டப்பட்ட மக்கள் யவனர்கள், மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் பார்த்தோம். இவர்கள் காலத்திற்குப் பிறகே சுமேரிய நாகரிகம் மற்றும் ஐரோப்பிய மக்களானகிரேக்க ரோமானியர்கள் காலமும் ஏற்பட்டது. இவை காலத்தால் பிந்தியவை என்று தொல் பொருள் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கிளைகளுள் மேற்கு ஆசியா நோக்கிப் பரவின மக்களிடையே ராம சரிதம் பரவியது. இன்றைய ஈரான் தொடங்கி இஸ்ரேல் வரை ராம நாமம் புழங்கியது. ராமல்லா என்னுமிடம் இன்றும்இஸ்ரேலில் இருக்கிறது. ஈராக்கில் ராமாதி, ராம்தியா என்னுமிடங்கள் இருக்கின்றன. இந்தப் பெயர்கள் கிருஸ்துவம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளன. ஈரான், ஈராக், சிரியா, லெபனான், இஸ்ரேல் போன்ற இடங்களிலும், ஸ்பானிஷ். லத்தீன் மற்றும் யூதர்மொழியிலும் ராம்ஜே, ராம்ஜூ, ராமிரேஜ், ரமீ, ராமி, ராமசெஸ் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணமாக உள்ளன.
இவற்றை தமிழன் திராவிடனா என்று அலசும் தொடரில் சொல்ல முக்கியக் காரணம் இருக்கிறது. மேலே கூறப்பட்ட இடங்கள், அவற்றுள் குறிப்பாக சுமேரிய நாகரீகம் இருந்த அரேபியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் திராவிடர்கள் என்று தமிழ் மக்களிடையே ஒருபுறம் பரப்பபட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக, சிந்து சமவெளிப் பகுதியின் வட மேற்குப் பகுதியில் அதாவது இன்றைய பலுசிஸ்தான் பகுதியில்கலத் என்னுமிடத்தில் வாழும் மக்கள் பேசும் ப்ரோஹி என்னும் மொழியில் திராவிட மொழிகள் என்று பெயரிடபட்டுள்ள தென்னிந்திய மொழிகளின் சாயல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த மக்கள் ஆரியப் படையெடுப்பு நடந்த பின்னும், அங்கேயே தங்கி விட்ட மக்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. ஆரியன் என்னும் எதிரி இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்னும் நிலையில் உள்ள திராவிட அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் அடிவருடிகள், ப்ரோஹி மொழியை ஒரு ஆதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள இடஙகளில் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவின் வட மேற்கே இருக்கும் சிவப்பு நிறப்பகுதி ப்ரோஹி பேசபப்டும் இடங்கள். இந்த மொழி கலத், பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இடங்களிலும், ஆஃப்கனிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் சில மக்களாலும் பேசப்படுகிறது.
இந்த காரணத்தால் அந்த மக்கள் எஞ்சி நின்ற திராவிடர்கள் என்று சொல்வது பொருந்தாது என்று காட்டவே அந்தப் பகுதிகளில் வேத மதக் கலாச்சாரமும், ’ராமன் விளைவும்’ எவ்வாறு பரவியிருந்தது என்று நாம் காட்டினோம்.