ஏனென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதரவு தருவதாக அறிவித்தார். தேமுதிகவையும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, அவர்களின் ஆதரவை வாங்கித் தருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.இடைத்தேர்தல் பேச்சு ஆரம்பித்தவுடனேயே அதிமுக தலைமையை நேரடியாக தா.பாண்டியன் சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்புகிறது என்று தெரிவித்திருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. அதிமுக தலைமையோ தா.பாண்டியன் எதுவும் சொல்லமாட்டார் என்று தங்களது கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதற்கிடையே கண்துடைப்புக்காக புதன்கிழமை அன்று மாநில நிர்வாகி இந்திரஜித்தை வைத்து, அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மறுநாளான இன்றோ, மேலோட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி, இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று தா.பாண்டியன் அறிவித்துவிட்டார். பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் இதனை அவர் அறிவித்துள்ளார். அதிமுக உறவு வேண்டும் என்று நினைக்கும் அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காப்பாற்றி, அதற்கு பலம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கே சீட் வாங்க தெருவோரம் பல நாள் இரவு பகலாக காத்திருந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் என்ன பதில் சொல்வார் தா.பாண்யன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்




அதிகார துஷ்பிரயோகம், உறவினர்களுக்கு அனுகூலம் மற்றும் முறைகேடுகளுக்காக கேரள சட்டமன்றம் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சு தானந்தனைக் கண்டித்துள்ளது. வி.டி. சதீசன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கமிட்டி அச்சு தானந்தனின் மகன் வி.ஏ. அருண்குமார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தது. மனிதவள மேம்பாட்டுத்துறை பயிலகத்தின் முக்கிய பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அது. அப்பயிலகத்தில் கூடுதல் இயக்குனராக அருண்குமாரை நியமிக்க அச்சுதானந்தனும் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ. பேபியும் விதிகளை வளைத்தார்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் தகவல் தொழில்நுட்பப் பயிலகத்தின் அகாடமி இயக்குனராக அவர் பணியமர்த்தப்பட்டது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.











