பொய்சொல்லிவாழ்ந்தவனும்இல்லை, மெய்சொல்லிக்கெட்டவனும்இல்லை.தமிழன் எப்படிப்பட்டவன், அவன் எங்கு வாழ்ந்தான் என்றெல்லாம் சங்கப் புலவர்கள் நிறையவே சொல்லிவிட்டார்கள். அந்தப் புலவர்கள் பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் தந்த பாடல்கள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. அவர்கள் சொன்னது பொய் என்றால் அவர்கள் பெயரும், அவர்கள் தந்த தமிழும் இன்று வரை நிலைத்து நின்றிருக்குமா?
அவர்கள் தமிழன்திராவிடனேஎன்றுஒருக்காலும்சொல்லவில்லை.தமிழன்இப்படிப்பட்டவன், அவன் இப்படி வாழ்ந்தான், இந்தஇடத்தில் வாழ்ந்தான், அவன் நடை, உடை பாவனை இப்படிப்பட்டவை என்பதுபற்றி அவர்கள் சொன்னதெல்லாம், மற்ற ஆராய்சிகள் தரும் முடிவுகளோடு ஒத்துப் போகின்றன. நம் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள்பற்றிக் கிடைத்துள்ள கல் வெட்டுச்சான்றுகள், மற்றும் பலவித சான்றுகளுடன் ஒத்துப் போகின்றன. வழி வழியாகநம் நாட்டைப் பற்றி இருந்துவரும், சரித்திரம், புராணக்கதைகள், இதிகாசக் கதைகளுடனும்ஒத்துப் போகின்றன.
ஆனால் திராவிடக் கருத்து இவை எவற்றுடனும் ஒத்துப் போகவில்லை. பொய்யின் ஆயுசு புனையும் வரைதான். இன்று எல்லா ஆராய்ச்சியாளர்களும் திராவிடம் என்பது பொய், திராவிடன் என்று ஒரு இனமே இல்லை என்று அறிந்து, அதைக் கைவிட்டு விட்டார்கள்.
ஒரு ஆராய்ச்சிநடக்கிறது என்றால், அதிலும்தொல்பொருள் அகழ்வாராய்ச்சிஓரிடத்தில் நடக்கிறது என்றால்அது காட்டும் செய்திகள்,அந்தஇடம், அந்த செய்தி நடந்த காலம்ஆகியவை குறித்த மற்றைய ஆராய்சிகள், சான்றுகள்ஆகியவற்றுடன் ஒத்துப்போக வேண்டும். சிந்து சமவெளிமக்களே தமிழ் மக்கள், அவர்கள்அங்கிருந்து தமிழகம் வந்தனர்என்றால் அந்த செய்தி தமிழில்வழங்குகிற சான்றுகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
உதாரணத்திற்கு, கரூர் மியுசியத்திற்குக்கிடைத்துள்ளபழைய காசுகளில்ஒன்றைக் குறிப்பிடலாம். இதுஒருசெப்புக் காசு. இதன் ஒருபக்கம் வில்லும் அம்பும் இருக்கிறது.மறு பக்கம் ஒரு வீரன் உருவம்இருக்கிறது. இந்தக் காசும், இதில் உள்ள வீரன் உருவமும்அந்த நாள் ரோம் நாட்டு காசுகளைப்போலஉள்ளது. தமிழ் நாட்டில்கரூர்ப் பகுதியில் பழங்காலரோமானிய காசுகள் நிறையகிடைத்துள்ளன.தமிழகத்துக்கும் ரோமுக்கும்வர்த்தகத் தொடர்பு இருந்துவந்திருக்கிறதுஎன்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன.அதனால் இந்தக் காசுரோம நாட்டுக்காசுஎன்றே முடிவு கட்டஇடமிருக்கிறது.
ஆனால் இந்தக்காசில்அந்த வீரன் உருவத்துக்குக்கீழே, தமிழ்பிராம்மி (அந்தநாள் தமிழ் எழுத்து) எழுத்தில்'கொல்லிப் புறை" என்று எழுதிஉள்ளது. இந்தக் காசு அச்சடிக்கப்பட்டகாலத்தை விஞ்ஞான முறையில்கண்டு பிடித்துள்ளார்கள்.அதன்படி ஏறத்தாழ இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்காசை அச்ச்சடித்திருக்க வேண்டும்.இந்தக் காசு கிடைத்த இடம் கொல்லிமலை என்னும் பகுதி. கொல்லிப்புறை என்று எழுதி இருப்பதால்கொல்லி மலை சம்பந்தமாகத் தான்இருக்க வேண்டும் என்று தெரிகிறது.ஆனால் புறை என்பது யாரைக் குறிக்கிறது?
இங்குதான்நம் சங்க இலக்கியங்கள் அருமையாகவழி காட்டுகின்றன.கொல்லி மலையைப்பற்றி 18 இடங்களில் சங்க நூல்கள்பேசுகின்றன. கொல்லியை ஆண்டதலைவனாக வல்-வில்ஓரி என்னும்அரசனைப் பற்றி 7 இடங்களிலும், சேர அரசனைப் பற்றி 9 இடங்களிலும்சொல்லப்பட்டுள்ளன. இவர்களில்யார் இந்தக் காசை அச்சடித்திருப்பார்கள்? அல்லது வேறு ஒரு அரசர் இதைஅச்ச்சடித்திருப்பாரா? அல்லதுஇந்தக் காசு ரோம் நாட்டுக்காசுதானா என்றெல்லாம் கேள்விகள்வருகின்றன. அதாவது ஒரு தொல்பொருள் பற்றிய ஆராய்ச்சி என்றால், பல கோணங்களிலிருந்தும் ஆராயவேண்டும்.
கொல்லிமலையின்அரசனான வல்வில் ஒரியைப்பற்றி, தமிழில் சங்க நூல்கள்சொல்கின்றன. அவன் சிறந்தவீரன், அவனை யாராலும் வெல்ல முடியவில்லை.அப்படிப்பட்டவனைதிருக்கோவிலூர்மலையன் காரி என்பவன்போரில்வென்றான். அப்படி வென்று கிடைத்த கொல்லிமலையை, தன் நண்பனான சேர மன்னனானபெரும் சேரல் இரும்பொறைக்குத்தந்தான். பதிலுக்குஇந்த சேரமன்னன் காரியின் எதிரியான அதிகமானைத்தகடூரில் வென்றான்.இவை எல்லாம்சங்க இலக்கியம் சொல்லும் செய்திகள்.ஆனாலும்இவற்றின்மூலம் கொல்லிப் புறையாரைக் குறிக்கிறது என்னும் புதிர் விடுபடவில்லை.
இந்தப் புதிரை அவிழ்க்க மேலும்சில சான்றுகள் கிடைத்துள்ளன. கரூர் அருகில்உள்ள புகலூர் மலைப் பகுதியிலும்ஒரு கல்வெட்டுகிடைத்துள்ளது.இதில் பெரும் சேரல் இரும்பொறையைப்பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.இந்த அரசன்பெயர், பொறையன்என்றும் புறையன் என்றும் இருவிதமாகவும்குறிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்தச் சேர மன்னனுக்கு புறைஎன்ற பெயரும் இருந்தது தெரிகிறது. செப்புக்காசின் ஒருபுறம்சேரமன்னன் சின்னமான வில்-அம்புஇருப்பதாலும், மறுபுறம் கொல்லிப்புறை என்றும் இருப்பதாலும், இந்தக் காசைவெளியிட்ட அரசன்சேரன் தகடூர் எறிந்த கோப்பெரும்சேரல் இரும்பொறை என்று தெரிகிறது.ரோமானியசாயல் இருப்பதால்,ரோமானிய காசுகளைமுன் மாதிரியாகக்கொண்டு சேரன் இந்தக் காசைவடித்திருக்கிறான்என்றுதெரிகிறது. ஆனால் சங்கத் தமிழ்மூலம் ஓரி,காரி, இரும்பொறைபற்றி நாம் அறிந்திருக்கவில்லைஎன்றால் இந்தக் காசில் காணப்படும்எழுத்து ஒரு ரோமானிய அரசனைக்குறித்தது என்றே நாம் நினைத்திருப்போம்.அது மட்டுமல்ல, தமிழ் பிராம்மிஎழுத்தையேரோமானியர்களும் பின் பற்றினர்என்றும் சொல்லிக் கொண்டிருப்போம்.அந்த அடிப்படையில், திராவிடபிரமைக்குப் பதிலாக ரோமானியபிரமை பிடித்து, தமிழன் ரோம்நகரிலிருந்து வந்தவன் என்றும்சொல்லிக் கொண்டிருக்கலாம்!
இங்கு கவனிக்கவேண்டியதுஎன்னவென்றால்சிந்து சமவெளி ஆராய்ச்சி காட்டும்செய்திகளை நம்மிடையே இருந்துவரும்இலக்கிய ஆதாரத்துடனும், கல்வெட்டுபோன்ற பிற சான்றுகளுடனும்ஒப்பிட்டுத்தான் ஒரு முடிவுக்குவர வேண்டும். ஒரு பானை சோற்றுக்குஒருசோறு பதம் என்பது போலஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.இந்த செப்புக் காசு சொல்லும்கதை, சங்க இலக்கியங்கள் சொல்லும்கதைகள் கற்பனைக் கதைகள் இல்லைஎன்று தெரிவிக்கிறது அவை அன்று நடந்த உண்மைச்சரித்திரத்தைத்தான் சொல்லுகின்றன.அவற்றைப்பாடிய சங்கப் புலவர்கள் ஹோட்டலில் ரூம் போட்டு, கிக் ஏற்றிக் கொண்டு கற்பனை செய்து பாடவில்லை. அவர்கள் பாடிய ஒவ்வொரு சொல்லும் உண்மையே என்றும்தெரிகிறது. அவர்கள் சொல்லும் எல்லாச்செய்தியும் உண்மை என்று மெய்ப்பிக்கும் பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
அவர்கள் ஓரிடத்திலும், நாம் சிந்து நதிக் கரையிலிருந்துவந்தவர்கள் என்றுசொல்லவில்லை.நம்மை வாழ வைத்த ஆறு காவேரிஆறு,வைகை ஆறுஎன்று சொன்னார்களேதவிர சிந்து நதி நம்மை வாழவைத்ததாகச் சொல்லவில்லை. நாம்திராவிடர்கள் என்று சொல்லவில்லை.இந்தத் திராவிடர்களை ஆரியர்கள்விரட்டி அடிக்கவேஇவர்கள்புகலிடம் தேடி தற்போதைய தமிழகம்வந்தனர் என்று சொல்லவில்லை. சிந்துநதிநம்மை வாழ வைத்த நதியாகஇருந்திருந்தால், அதைப் பற்றி கனவு போலவாவதுஒரு பழம் கதையை புலவர்கள் எழுதிவைத்திருப்பார்கள். அப்படிச்செய்ய வில்லையே?
மாறாக, நம்வேர்கள் கடல் கொண்ட குமரியில்இருந்தது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்? அங்கு இருந்த கன்னி ஆறு எனப்படும்குமரி ஆறு பற்றியும், பஹ்ருளிஎன்னும் ஆறு பற்றியும் தான்சொல்லியுள்ளார்கள்.
இன்று இந்தியப்பெரும் கடல் என்று இருக்கும்பகுதியில் தமிழ் நிலம் நீண்டுபரவியிருந்தது. அங்கே தென்பகுதியில் ஆண்டவன் பாண்டியன்என்பதால், அவன் தென்னவன் என்றுஅழைக்கப்பட்டான். அந்தத் தென்னவன்வளர்த்ததுதான் இந்தச் சங்கத்தமிழ். மூன்று முறை கடல் கோள் கண்டு அந்த நிலம் படிப்படியாக கடலுக்குள் மறைந்து விட்டது.அதில் எஞ்சியது தான் இன்றையதமிழகம் என்பதுசங்கத் தமிழ்கூறும் சரித்திரம்.நாம் ஆராய்சியைமேற்கொள்ள வேண்டியது இந்தத்தென்கடல் பகுதியில்தான். வடக்கில்இல்லை.