New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் ப


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் ப
Permalink  
 


அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது

ஜனவரி 18, 2012

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது

 எஸ். பி. முத்துராமன் மனு தள்ளுபடி: ஆயுத பூஜை அன்று தான் வேலை செய்யும் பொருட்கள் மீது மதிப்பு காட்டுகிறான், மரியாதை செய்கிறான். அது மற்றவர்களின் மனங்களையோ, செக்யூலரிஸத்தையோ பாதித்து விடாது[1], என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைப் பிரிவில், நீதிபதி ஆர். சுதாகர் மற்றும் அர்ணா ஜகதீஸன் கொடுத்த தீர்ப்பில், தனிமனிதர்கள் தங்களது உழைப்பிற்குதவும் கருவிகளை மரியாதை செய்வது நாட்டின் செக்யூலரிஸத்தை எதிர்ப்பதாகாது என்று எடுத்துக் காட்டி எஸ். பி. முத்துராமன் என்பவர் பதிவு செய்த மனுவை தள்ளுபடி செய்தார்கள்[2].

அனைத்து மக்களும் கொண்டாடும் விழாக்கள்: “தான் வேலை செய்யும் இடத்தில், தனிமனிதர்கள் தங்களது உழைப்பிற்குதவும் கருவிகளை மரியாதை ஆயுத பூஜை அன்று மதிப்பு காட்டுகிறான், மரியாதை செய்கிறார்கள். அது மதத்தைக் கடந்த விஷயமாகிறது. செருப்புத் தைப்பவர்கள், நெசவாளிகள், விவசாயிகள், ஓட்டுனர்கள், ரிக்‌சா ஓட்டுபவர்கள், தச்சர்கள், கடைக்காரர்கள், கணக்கெழுதுவபவர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், வீட்டில் உள்ள பெண்கள், என பற்பலர் இந்த வழுஇபாட்டை செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவஎர்கள் அல்லர். அதுபோலவே, சரஸ்வதி பூஜை அன்று, படிப்பு, அறிவு, எழுத்து முதலியவற்றிற்கு மரியாதை செய்யப் படுகிறது”.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
Permalink  
 


அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது: நீதிபதிகள், ”இந்த பூஜைகள் விடுமுறை நாட்களில் வருவதால், அரசே அந்த விழாக்களை அலுவலகங்களில் நடத்துகிறது என்றாகாது. தனிப்பட்டமுறையில், , தனிப்பட்ட மனிதர்கள் தங்களது அலுவலகத்தில் உபயோகப்படுத்தும் பொருட்கள், புத்தகங்கள், கோப்புகள் முதலியவற்றாஇ மரியாதை செய்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திற்குட்பட்டு செய்கிறார்கள். இது நாட்டின் செக்யூலரிசத் தன்மையை பாதிக்கிறது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் தென்படவில்லை,” என்று விளக்கினார்கள்[3].

கட்டுமானம் வேறு, வழிபாடு வேறு: 1993ல் அரசு வெளியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கையைச் சுட்டிக் காட்டி, அரசு அலுவலகங்களில் நடக்கும் மதவிழாக்களை தடை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருந்தார்.அதே மாதிரி, 1993ல் அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்களில் எந்த வழிபாடு அஎய்யும் கட்டுமானம்கச்ளையும் புதிதாகக் கட்டக் கூடாது அல்லது உள்ளவற்றை மாற்றியமைக்கக் கூடாது என்று கூறியிருந்தது. அதனை கடந்த மார்ச் மாதம் 2010ல், ஒரு மனுவை விசாரிக்கும் போது, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.  இதைப் பின்பற்றி தான், ஏப்ரல் 2010ல், அரசு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டது. இதற்கு நீதிமன்றம், முன்னது கட்டுமானத்தைப் பற்றியது, பின்னது தனிநபர் பூஜை / வழிபாட்டைப் பற்றியது. தனிமனிதருடைய கருத்துரிமை அரசியல் நிர்ணய சட்டத்தின் 25வது பிரிவில் அனுமதிக்கப்படுவதால், அதனைத் தடுக்க முடியாது. அவ்வாறு மனுதாரர் விண்ணப்பித்துள்ளபடி செய்தால்தான், பிரிவுகளில் உள்ள மக்களிடம் ஒற்றுமையைக் குலைப்பதாலக முடியும், “ என்று விளக்கம் அளித்தார்கள்[4].

வேதபிரகாஷ்

18-01-2012



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை-செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது
Permalink  
 




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard