New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை- கா


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை- கா
Permalink  
 


 மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்!

ஜூலை 2, 2011

மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்!

கொலை வழக்கில் காதலி விடுதலை, காதலன் சிறையில்: டி.வி.,தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டவழக்கில் மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் டி.வி.,நடிகை மரியா மற்றும் கப்பல் படை ஜெரோம் மேத்யூ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும் , ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்.

முக்கோணக்காதல்டி.வி.தொடர்அதிபர்கொலைவழக்கில்கன்னடநடிகைவிடுதலை[1]: கன்னட நடிகை மரியா சூசைராஜ். இவர் கடற்படை அதிகாரியான எமிலி ஜெரோமை காதலித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளராக விளங்கிய நீரஜ் குரோவரை மரியா சந்தித்தார். நடிக்க வாய்ப்பு கேட்டார். இதில் இருவர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை மலாடில் உள்ள காதலி மரியாவின் வீட்டுக்கு ஜெரோம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 7 ந் தேதி சென்றார். அங்கே மரியாவின் படுக்கை அறையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் இருந்தார். இதைக்கண்டதும் ஜெரோமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இருவர் இடையே வாய்த்தகராறு மூண்டது. இது வலுத்தபோது, நீரஜ் குரோவரை ஜெரோம் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதையடுத்து அவரது உடலை காதலியுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி இரண்டு பைகளில் போட்டுக்கொண்டு காரில் தானே அருகிலுள்ள மானோர் என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று ஜெரோம் எரித்தார். இந்த முக்கோணக் காதல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குரூரமான கொலை: மரியா ஜெரோமுக்கு என்று தீர்மானித்திருந்தார்களாம். ஆனால், மரியா நீரஜுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள், ஜெரோம் கொச்சியிலிருந்து மரியாவின் வீட்டிற்கு வந்தபோது, மரியாவின் படுக்கையறையில் நீரஜ் இருந்ததைப் பார்த்ததும், கொதித்துப் போன ஜெரோம் அவனைக் குத்திக் கொலைசெய்து விட்டான். இதனை மறைக்க இருவரும் முயன்றுள்ளனர். இருவரும் சேர்ந்து தான் அவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிகிறது. மரியா மாலிற்கு (கடைக்கு)ச் சென்று கத்தி முதலியவற்றை வாங்கி வருகிறாள். கொலை நடந்த பிறகு, ராம் மூன்னூறு துண்டுகளாக வெட்டப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு வியப்பாக இருக்கிறது: இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பு துலக்கி நடிகை மரியாவையும், அவரது காதலர் ஜெரோமையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 30.06.2011 அன்று நீதிபதி எம்.டபிள்யூ. சந்த்வானி தீர்ப்பு வழங்கினார், தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது: “இந்த வழக்கில் நீரஜ் குரோவரை ஜெரோம்தான் கொலை செய்தார்என்பதற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளனஆனால் என்னகாரணத்திற்காக இந்தக் கொலை நடந்தது என்பதை அரசு தரப்பில்தெளிவுபடுத்தவில்லைஜெரோம் தனது பெற்றோரின்விருப்பத்துக்கு மாறாக மரியாவை திருமணம் செய்து கொள்ளநிச்சயித்துள்ளார்மரியா மூலமாக அவருக்கு நீரஜ் குரோவரைதெரிந்திருக்கிறதுஅவருக்கு அவர்களது உறவில் சந்தேகம்எழுந்திருக்கிறதுஎனவே தான் அவர் சம்பவத்தன்று மும்பைக்குவந்திருக்கிறார்இந்த சம்பவம் கண நேரத்தில் நடந்துமுடிந்திருக்கிறதுதான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ளபெண்ணுடன் இன்னொரு ஆண் இருப்பதை பார்க்கிறபோது எந்தஒரு ஆணும் அதிர்ச்சி அடையத்தான் செய்வார்கட்டுப்பாட்டைஇழக்கத்தான் செய்வார்அந்த சூழ்நிலையின் நிமித்தமாகஜெரோமும் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை.ஜெரோம்மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம்எதையும் தீட்டியிருக்க வாய்ப்பில்லை: “அதேபோன்று நீரஜைகொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லைஜெரோம்,மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டிஇருக்க வாய்ப்பில்லைஎனவே இருவர் மீதானகொலைக்குற்றச்சாட்டும் ரத்து செய்யப்படுகிறதுஜெரோம்நோக்கமின்றி நீரஜ் குரோவரை சாகடித்த வகையில் இந்தியதண்டனைச்சட்டம் பிரிவு 304(1)ன்படியும்சாட்சியங்களை அழித்தவகையில் அந்த சட்டத்தின் 201 வது பிரிவின்படியும் குற்றவாளி எனதீர்மானிக்கப்படுகிறதுமரியாவைப் பொறுத்தமட்டில்சாட்சியங்களை அழித்த வகையில் மட்டுமே குற்றவாளி ஆகிறார்”, இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.
தண்டனை ஒரு நாள் தள்ளி வைத்தாலும் முடிவில் ஒன்றும் மாற்றம் இல்லை: இருவருக்குமான தண்டனை விவரத்தை அறிவிப்பதை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் ஆர்.வி.கினி கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றார். எனவே இருவருடைய தண்டனை விவரம் 01.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும், ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஏமாற்றம் அடைந்த நீரஜின் பெற்றோர்கள்: 30.06.2011 அன்று தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த நீரஜ் குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். “இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்தவனுக்கு, இவ்வாறு தாராளமாகத் தன்டனையளிப்பது வெட்கப்படக்கூடிய, திகைப்பளிப்பதாக, தார்மீகத்தை மீறுவதாக, சமூகத்தில் ஒப்புக்கொள்ளமுடியாததாக உள்ளது. ஜெசிகா லால் திப்பைப் போலவே கொலையாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒரே குற்றத்திற்கு இருவர் வேறுமாதிரியாக தண்டனைக்குள்ளாவது சரியல்ல. நான் நிச்சயமாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்”, என்று தனது கருத்தை வெளியிட்டார்[2].

 

மகனை இழந்து வருந்திய தாயார்: குரோவரின் தாயார் (58) சொன்னதாவது, “தாமதமான தீர்ப்பு நீதியையே தாமதிக்க வைத்து வைத்துள்ளது. அந்நிலையில் மரியா சூசைராஜ் (தண்டனையின்றி வெளியே) நடந்து செல்வது எங்களால் தாங்கிக் கொள்ள முடிய இயவில்லை. செய்த கொலைக்கு அவள் தண்டனையை அனுபவிக்கவில்லை. என்னால் என் மகனை திரும்பப் பெறமுடியாது. ஆகவே இருவருமே திட்டமிட்டு என்னுடைய மகனைக் கொன்ற போது, இருவருமே தூக்கிலிட வேண்டும்”.

 

தண்டனைப் பெற்ற மகன் விடுதலையடைய விரும்பும் மற்றொரு தந்தை: அதே நேரத்தில் 10 வருட தண்டனைப் பெற்ற ஜெரோமின் தந்தை, எமிலி ஜெரோம்[3], “நான் என்னுடைய மகன் ஜெயிலிலிருந்து வெளிவர விரும்புகிறேன். ஆனால், அவன் யாதாவது செய்திருந்தால் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அவனுடைய தாயார் அவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பினாள். ஆனால் வக்கீல் மேல்முறையீடு செய்யவேண்டியிருக்கும் என்றார்”.

 

விடுதலைப் பெற்ற மரியாவின் ஆசை: மரியா சூசைராஜ் தான் முழுவதும் குற்றமற்றவள் என்று தீர்ப்பில் இருக்கவேண்டும் என்று விரும்பினாளாம். தன்னுடைய சகோதரன் ரிச்சர்ட் (32) என்பவனோடு வந்திருந்த மரியா, சகோதரி வெரோனிகாவுடன் தனது தந்தையைப் பார்க்க செல்வதாகக் கூறினாள். இந்த வழக்கினால், ஊடகங்களினால், தனது குடும்பம் பாதித்துள்ளதாக கூறினாள்[4]. ஜெரோமோ, தண்டனைக் குறைக்கப்படலாமா என்று நீதிபதியிடமே கேட்டானாம். ஆனால், மிகவும் குரூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால், தண்டனையௌக் குறைக்க முடியாது என்றாராம்[5].

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலையிலும் லாபம் தேடும் மனிதர்கள்: கொலை நடந்துள்ளது உண்மை, அதிலும் குரூரமாக உடல் 300ற்கும் மேலாக வெட்டப்பாட்டு, எரிக்கப்பட்டுள்ளது உண்மை. இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு தண்டனை, மற்றொருவருக்கு விடுதலை.தைந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் வர்மா, ஜேரோமை / மரியாவை  வைத்து படமே எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.

சர்ச்சில் பிரார்த்தனை: விடுதலையான, மரியா சர்ச்சிற்குச் சென்று, பிரார்த்தனை செய்துள்ளார்.  எப்படித்தான், இருவரை காதலித்தாள் அல்லது இன்னொருவனுடன் இருக்கும் போது, முன்னவன் பார்த்து விட்டான், இல்லை அவ்வாறு வரவழைத்து தீர்த்து விட்டார்களா, இல்லை ஒரு காதலனை இன்னொரு காதலன் கொன்று விட்டதும், மனம் மாறி ஒத்துழைத்தாளா……இவையெல்லாம் கர்த்தருக்கோ, தேவனுக்கோ தான் தெரியும் போலும். ஒரு வேளை பாவ மன்னிப்புக் கொடுத்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் போலும். பிறகு எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்! குறிப்பாக ராம்கோபால் வர்மாவிற்கு!

ஜெரோமும், ஜான் டேவிட்டும்: காதலை மட்டும் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், இரு கொலைகள், கொலை செய்த விதம், பிணத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அதிக அளவில், தாங்கள் கிருத்துவர்கள் என்று காட்டிக் கொள்ளும் தோரணை, பைபிளை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது, சர்ச்சில் முட்டிப் போட்டு வணங்குவது…………………இவற்றையெல்லாம் ஊடகங்களில் காட்டுவது முதலியவயும் விசித்திரமாக உள்ளது. ஜெசிகா லால் வழக்கை, இந்தியர்கள் பார்த்துள்ளதால், தீர்ப்பு பாரபட்சமாக இருப்பது நெஅன்றாகவே தெரிகிறது, மேலும் நீதிபதியே, குற்றவாளிகளுக்கு தூண்டுதல் போல பேசியிருப்பதும் அத்தன்மையைக் காட்டுகிறது. இனி, மேல்முறையீடு, அதன் முடிவு முதலியவை எப்படி இருக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard