ஏசு, கிருஸ்து, மார்க்ஸ், லெனின்: இந்திய கம்யூனிஸ்டுகளின் போலி நாடகம்!
கேரளத்தில் கிருத்துவர்களும், கம்யூனிஸ்டுகளும்: செக்யூலரிஸம் பேசும் கம்யூனிஸ்டுகள், கேரளாவில் முஸ்லீம் லீக் மற்றும் கேரளா காங்கிரஸ் மற்றும் இதர கிருத்துவ-முஸ்லீம் உதிரிக் கட்சிகளுடமன் கூட்டு வைத்துக் கொள்ளத் தயங்குவதில்லை. கோழிக்கோட்டில் 20வது மாநில மாநாடு ஏப்ரல் 4 முதல் 9 வரை நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக, மாநில மாநாடு கொல்லத்தில் நடத்தப் படுகிறது. கிருத்துவர்களை தாஜா செய்ய, கம்யூனிஸ்டுகள் முயல்கிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது[1].
ஒரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள், நடுவில், ஒபாமா, மோடி, அத்வானி முதலியோர்!
ஏசு கிருஸ்து படங்கள் வைக்கப் பட்ட கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பந்தல்: பிப்ரவரி “பீடைல் காஸ்ட்ரோ[2], “முதலாளித்துவத்தை விட, கம்யூனிஸத்திற்கும், கிருத்துவத்திற்கும் 10,000 மடங்கு ஒப்புமைகள் உள்ளன”, என்று கத்தோலிக்கப் பாதிரிகளின் கூட்டத்தில் சொன்னதைத்தான் நான் இப்பொழுது குறிப்பிட்டுக் காட்டுகிறேன், அதனால், கம்யூனிஸ கண்காட்சியில், ஏசுகிருஸ்துவின் படத்தை வைத்ததைப் பற்றி பெரிதாக பிரச்சினை செய்யவேண்டிய அவசியம் இல்லை”, என்று கேரளாவில் 20வது மாநில மாநாட்டை ஆரம்பித்து வைத்த போது பிரகாஷ் காரத் சொன்னார்[3]. அவருடைய மனைவி, பிருந்தா, இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[4]. இந்த தம்பதியினர், கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் ஐந்து நடசத்திர ஹோட்டல்களில் தான் செலவழிப்பது வழக்கம். கம்யூனிஸ்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் பிரச்சினை உள்ளது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள் கிருஸ்துவின் படத்தை புகைப்பட கண்காட்சியில் மற்ற கம்யூனிஸ்டு தலைவர்களின் படங்களுடன் சேர்ந்த்து வைத்திருந்தனர். இதற்கு கிருத்துவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். “மார்க்ஸ் சரிதான்” என்ற தலைப்பிலும், “ஏசுவின் கடைசி போஜனம்” என்ற படத்திலும் ஏசுவைப் போன்ற உருவத்தில் பல இந்திய மற்றும் உலகத் தலைவர்களின் படங்களை வரைந்து வைத்தனர். ஏசுதான் “உலகத்தின் முதல் புரட்சியாளர்” மற்றும் “உயிர்த்தியாகி”[5] என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது[6].
மதத்தை எதிர்க்காத கம்யூனிஸ்டுகளாம்: கம்யூனிஸத்தில் மத எதிர்ப்பு இல்லை என்றாஸ்ல் யாராவது நம்புவார்களா? கேரளாவில் உள்ள அறிவுஜீவிகள் நம்புஆர்கள் போலிருக்கிறது. இதனால், கிருத்துவர்களை தாஜா செய்ய, “நாங்கள் மதத்திற்கு ஒன்றும் விரோதமானவர்கள் அல்லர், ஆனால் அடிப்படைவாதம், தீவிரவாதம் இவற்றை எதிர்ப்பவர்கள்”, பேசவேண்டியதாயிற்று. “தி ஹிந்து” தனக்கே உரிய பாணியில், கம்யூனிஸத்தில் திட்டம், கொள்கைகள் என்று செய்தி வெளியிட்டுள்ளது[7]. “இதன் பின்னால் ஏதோ சதி உள்ளது” என்று கூட பிரகாஷ் பேசியது வேடிக்கையாக இருந்தது[8].
விடுதலை இறையியலும், கம்யூனிஸ்டுகளும்: ஆனால், உண்மையில், “விடுதலை இறையியல்” போர்வையில் வேலை செய்யும் கிருத்துவர்கள் தாம், அத்தகைய படங்களை வைத்ததாக சொல்லப்படுகிறது. தென்னமெரிக்க / லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிஸம், ஏசுகிருஸ்துவை இணைத்துக் கொண்டு, “விடுதலை இறையியல்” போர்வையில் பரப்புகிறார்கள். பொதுவாக கம்யூனிஸத்தில் கடவுள் இல்லை. ஆனால், இந்த சித்தாந்தத்தில், கம்யூனிஸத்தில் ஏசுகிருஸ்து உண்டு. அவர் ஏ.கே.47 ஏந்தி கொண்டு, ஒரு போராளி போல சித்தரிக்கப் படுகிறார். அதற்கேற்றப்படி, பைபிளில் வருகின்ற, சில நிகழ்ச்சிகள் வேறுவிதமாக விளக்கம் அளிக்கப் படுகிறது. ஏசு, கோவிலில் எப்படி யூதர்களை, கயிற்றால் அடித்து விரட்டினாரோ, அது போல கம்யூனிஸ்டுகள் முதலாளிகளை விரட்டுவார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
வேதபிரகாஷ்
07-02-2012