New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1
Permalink  
 


இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1

 
http://tamilan1001.blogspot.in/2012/01/1.html 
அல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை.  எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.


சஹிஹ் முஸ்லிம்
1387
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்''என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்)  நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


1386
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து,"என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கின்றேன். என்னிடம்  யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும்  பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


 


இந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும்.  இது எப்போது சாத்தியம் ? அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்”  அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது? இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான்.  இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும்.  இந்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது.  இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.


15:19பூமியை நாம் விரித்து அதில் உறுதியான,  மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம். 


இந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்! .  


இந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது.  இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்? 
(ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )
(அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.) 


15:14இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).


[ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம்??!! . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா? இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் ? இதில் வேற தான் நினைத்தால் தான்  மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற,  இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது] 


(14. And even if We opened to them a gate to the heavens and they were to continue ascending through it (all day long).) (15. They would surely say (in the evening): "Our eyes have been (as if) dazzled (we have not seen any angel or heaven). Nay, we are a people bewitched.'') 


இதில் நாள் முழுவதும் எங்கே இருந்து ஏறிச்செல்வது. பூமிதான் சுற்றுமே?(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா?) அப்போ சுவர்க்கத்தின் வாசல் வேற எங்கோ அல்லவா போய் விடும்.  அல்லாவுக்கு பூமி சுற்றும் விஷயமே தெரியாது போல பாவம் அதனால் தான் ஏதேதோ உளறி விட்டு காஃபிர்களின் கண்டு பிடிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் பூமியின் மேலேயே சுத்திக்கொண்டு இருக்கிறான்.  அதே சமயத்தில் இந்த குரான் வசனங்களையும் , இத ஹதிசையும் , தட்டையான பூமி மற்றும் பூமியை சுற்றும் சூரியன் என்று முகமது/அல்லா நினைத்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள் சரியாக இருக்கும்.  இவை எல்லாமே முகமதுவின் உளறலே.   


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உலகத்தை படைத்தது ஆறு நாளா இல்லை எட்டு நாளா இல்லை இரண்டு நாளா?

குரானில் உள்ள வார்த்தைகளை அல்லா இறக்கினார்னு கப்ஸா விடுபவர்களே… அதனால குரான்ல எந்த முரண்பாடும் இருக்காதுன்னு சொல்லிக்குறவங்களே…

இதோ இன்னொரு முரண்பாடு உங்களுக்காக….

குரான்னின் 7:54 ஸூரா சொல்லுறதை படிச்சு பாருங்க…

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில்வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக (ப்படைத்தான்); படைப்பும், 

ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

இந்த ஸூராவுல உலகத்தை ஆறு நாளில் படைத்தான் அல்லான்னு சொல்லுறீங்க. ஒப்புக்கிறீங்களா? அல்லா ஆறு நாள்ள உலகத்தை படச்சிட்டானா? அப்புறம் மாத்தி பேசக்கூடாது சரியா….

இப்போ வாங்க அடுத்த ஸூராவுக்கு

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக. இப்போ என்ன சொல்றீங்க…

ஓ உலகத்தை படைக்கத்தான் ஆறு நாள் ஆச்சு. பூமியை இரண்டே நாளில் படைத்துவிட்டார்னு சொல்லப்போறீங்களா… வாங்க தொடர்ந்து படிப்போம்…

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.

41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இப்போவாது புரிஞ்சுதா? ஏழாவது ஸூரா படி உலகத்தைப் படைக்க அல்லாவுக்கு ஆறு நாள் ஆச்சு… (பைபிளில் இருந்து சுட்டது தான் இந்த கதையும்) நாற்பத்தி ஒன்றாவது ஸூரா படி பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள், (பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள் ஆச்சுன்னா, சூரியன், நிலா மற்ற கிரகங்கள், பால்வெளிவீதியை படைக்க எத்தனை வருஷம் ஆகியிருக்கும் அல்லாவுக்கு) பூமியில் அவற்றின் உணவுகைள நான்கு நாட்களில் நிர்ணயித்தான், அதாவது ஆறு நாள் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஏழு வானங்களை ஏற்படுத்த இரண்டு நாள்… மொத்தம் எட்டு நாள்… எல்லாம் அறிந்த அல்லா வந்து நபிகிட்ட சொல்லி இறக்கின குரானில் எவ்வளவு முரண்பாடு… படைத்த அல்லாவுக்கு கணக்கு தெரியலையா? இல்லை கதைவிடும் நபி அவர்களுக்கு கணக்கு தெரியலையா? ஏன் இந்த குழப்பம்… இதில் இருந்து குரான் கப்ஸா கதைன்னு ஒப்புக்கிறீங்களா?

(நன்றி இணையத்தில் சுட்டது)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard