குர்ஆனும் விஞ்ஞானமும்
சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
Qur'an & Science Problem:
Are Sun and Moon subject to mankind?
குர்ஆன் 14:33 கீழ்கண்டவாறு கூறுகின்றது:
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (குர்ஆன் 14:33)
And He has made subject to you the sun and the moon, both diligently persuing their courses; and the night and the day has He (also) made subject to you. (Sura 14:33)
இவ்விரண்டு கோள்களும் எனக்கு வசப்படவில்லை. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் தங்கள் பாதையில் சுற்றிகொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இக்கட்டுரையை படிக்கும் எந்த வாசகருக்கும் சரி, இவ்விரு கோள்கள் வசப்பட்டு இருக்காது என்பதை நான் அறிவேன். ஆனால், பல்வேறு வகைகளில், குர்ஆன் சொல்லும் வாக்கியத்திற்கு எதிராக, மனிதர்கள் இவ்விரு கோள்களுக்கு வசப்பட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
சூரியனின் ஒளி பூமியின் மேல் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும் (பகல் மற்றும் இரவு) நம்முடைய வாழ்க்கையில் அதிக மாற்றத்தை உண்டாக்குகிறது, அதாவது நாம் அதன் மேல் ஆதாரப்பட்டு (வசப்பட்டு) இருக்கிறோம். இதுமட்டுமல்ல, சந்திரனின் ஈர்ப்பு காரணமாக சமுத்திரங்களில் அலைகளின் தீவிரம் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் சாதாரண நிலையிலும் இருக்கும். கடலோரங்களில் வாழும் மக்கள் சந்திரனின் இவ்விதமான ஈர்ப்பினால் ஏற்படும் கடல் அலைகளுக்கு வசப்பட்டு வாழ்கிறார்கள். அவர்கள் இதனை மாற்றமுடியாது, அதற்கு பதிலாக, அவைகளுக்கு ஏற்றாற்போல அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிகொள்கிறார்கள்.
மின் விளக்குகளின் (மின்சாரத்தின்) கண்டுபிடிப்பினால், சூரிய ஒளி இல்லாத நேரங்களில் (இரவு நேரங்களில்) மனிதன் ஓரளவிற்கு 'சூரிய ஒளிக்கு கட்டுப்பட்டு' இருக்கவில்லை என கூறலாம். இயற்கையாக உள்ள சூரிய ஒளிக்கு நிகராக ஓரளவிற்கு மனிதன் மின் விளக்குகளை கண்டுபிடித்துள்ளான் எனலாம். இப்படி இருந்தும், நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மின் விளக்குகளைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமே தவிர, நம்முடைய தற்போதைய தொழில் நுட்பங்களின் உதவி கொண்டு உலகம் முழுவதும் வெளிச்சமாக்கவோ, அல்லது இரவாக்கவோ முடியாது. ஆக, இன்னும் சூரியனும், சந்திரனும் நம்முடைய கட்டுப்பாட்டில் (நமக்கு வசப்பட்டு) இல்லை. அவைகள் நாம் சொல்வது போல கேட்பதில்லை, நாம் தான் அவைகள் சொல்கிறபடி கேட்கிறோம், அல்லது அவைகளுக்கு ஏற்றாற் போல நம்முடைய வாழ்வை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மனிதனின் நன்மைக்காக இறைவன் சூரியனையும், சந்திரனையும் வானத்தில் வைத்தார் என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவைகள் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன, செல்கின்றன என்றுச் சொல்வது உண்மை அல்ல. நாம் எந்த வகையிலும் அவைகளை கட்டுப்படுத்துவதில்லை, அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், குர்ஆன் சொல்வது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒரு கருத்தாக உள்ளது.
ஆங்கில மூலம்: Qur'an & Science Problem: Are Sun and Moon subject to mankind?
குர்ஆனின் இதர முரண்பாடுகளை படிக்கவும்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.